1 00:00:24,441 --> 00:00:28,445 அது கொடுவாள் பூனைகளின் குடும்பம். 2 00:00:36,036 --> 00:00:40,624 பல லட்ச வருடங்களாக அவை, பனிப்படலங்களால் மூடப்பட்ட வடக்கில் தழைத்தன. 3 00:00:43,752 --> 00:00:47,297 ஆனால் இந்தத் தருணத்தில், அவை உணவின்றி தவிக்கின்றன. 4 00:00:52,052 --> 00:00:56,974 இந்தப் பள்ளத்தாக்குகளில், இந்த விலங்குகள் வேட்டையாடும் இரை, அரிதாகி வருகின்றன… 5 00:01:00,143 --> 00:01:02,563 ஏனென்றால், காலநிலையில் வெப்பம் இன்னும் அதிகரித்து வந்ததுள்ளதால், 6 00:01:03,188 --> 00:01:06,942 அந்த விலங்குகள், புதிய புல்வெளிகளைத் தேடிச் செல்லும் கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றன. 7 00:01:10,654 --> 00:01:13,740 இன்றைக்கு, அவற்றுக்கு நல்ல காலமாக இருக்கலாம். 8 00:01:17,911 --> 00:01:21,999 தெற்கே புதிய பாதையைத் தேடி, அதோ வருகிறது ஒரு கம்பளி யானைக் கூட்டம். 9 00:01:37,931 --> 00:01:42,436 இவ்வளவு வலிமை நிறைந்த உயிரினங்களை தாக்குவது, பெரும் ஆபத்தானது. 10 00:01:45,772 --> 00:01:47,691 ஆனால் அவற்றுக்கு வேறு வழியில்லை. 11 00:01:51,403 --> 00:01:54,448 பனிப்படல யுகம், முடியப் போகிறது. 12 00:01:56,408 --> 00:02:02,289 இந்த பூமியின் வெப்பநிலை அதிகரிப்பதால், இங்குள்ள அனைத்து சூழல்களும் மாறி வருகின்றன. 13 00:02:06,418 --> 00:02:10,964 பனியின் பரப்பளவு குறைவதால், நிலப்பரப்பில் தண்ணீர் மீண்டும் கிடைக்கிறது 14 00:02:11,632 --> 00:02:14,259 அதோடு, காட்டு விலங்குகளும் செழிக்கின்றன. 15 00:02:19,097 --> 00:02:21,183 அவற்றுக்குப் பழக்கமான சூழல் முடிந்து வருவதை 16 00:02:21,266 --> 00:02:24,019 பனிப்படல யுகத்தின் ஆதிக்க விலங்குகள் சந்திப்பதோடு… 17 00:02:25,979 --> 00:02:28,273 அந்தச் சூழலில் உயிர் பிழைக்கப் போராடுகின்றன. 18 00:02:47,125 --> 00:02:50,754 பெரும் உருக்கு 19 00:03:02,391 --> 00:03:06,311 வர்ணனையாளர் டாம் ஹிடில்ஸ்டன் 20 00:03:08,689 --> 00:03:11,483 இந்தப் பூனைகள் அவற்றின் நகர்வை செய்கின்றன. 21 00:03:13,485 --> 00:03:15,404 அவர்களுக்கு மிகப் பெரிய ஆபத்து எது? 22 00:03:15,904 --> 00:03:17,656 ஒரு மாபெரும் ஆண் கம்பளி யானை. 23 00:03:28,834 --> 00:03:31,253 வலிமையான ஆனால் கணிக்க முடியாத விலங்கு. 24 00:04:10,292 --> 00:04:14,922 அந்தப் பெண் பூனைக்கு அடிபட்டுள்ளது, ஆனால் மற்றப் பூனைகள் விட்டுக்கொடுக்கத் தயாராகயில்லை. 25 00:04:19,176 --> 00:04:22,346 உலகின் இந்தப் பகுதியில், வெப்பம் அதிகரித்து வரும் காலநிலையினால் 26 00:04:22,429 --> 00:04:24,014 இடம் பெயர்ந்து செல்லும் பாதைகள் மாறி வருகின்றன. 27 00:04:25,432 --> 00:04:29,937 கடற்கரையில், அதன் பாதிப்புகள் வியப்பூட்டுவதாக உள்ளன. 28 00:04:34,066 --> 00:04:37,736 உலோகங்கள் நிறைந்த பனிப்படலங்கள், பெரும் அளவில் விழுந்து, 29 00:04:37,819 --> 00:04:41,031 ஆழமில்லாத கடலில் உள்ள சத்துப் பொருட்களால் நிரப்புகின்றன. 30 00:04:50,290 --> 00:04:56,380 ஒரு கடல் பசுக்களின் குடும்பம் இங்குள்ள செழிப்பான 'கெலப்' எனும் கடல்பாசியை உண்ண வந்துள்ளது 31 00:04:57,631 --> 00:04:59,758 உருகி வரும் நீரினால் அது நிரப்பப்படுகிறது. 32 00:05:11,144 --> 00:05:15,899 பனிப்படல யுகத்தின் ராட்சஸ விலங்குகள், மான்வாட்டிக்களின் இனத்தைச் சேர்ந்தவை… 33 00:05:18,443 --> 00:05:21,280 ஆனால் ஒரு திமிங்கிலத்தின் அளவு பெரியதாக உள்ளது. 34 00:05:27,244 --> 00:05:29,496 கெல்ப் தான் அவை மிகவும் விரும்பும் உணவு. 35 00:05:31,748 --> 00:05:35,586 ஆனால் அது ஆழம் அதிகமில்லாத கடற்கரை நீரில்தான் வளரும்… 36 00:05:37,504 --> 00:05:40,966 எனவே அங்கே உண்பது ஆபத்தாக முடியலாம். 37 00:05:48,223 --> 00:05:52,019 கடலின் நீர்மட்டம் குறையும்போது, நீர்விலங்குகள் கரையில் சிக்கிக்கொள்வது வழக்கம்தான். 38 00:05:55,230 --> 00:05:58,275 எடை கூடுதலாக இருப்பதால், தண்ணீர் இன்றி வலம் வருவது அதற்கு சிரமம். 39 00:05:59,818 --> 00:06:05,324 மேலும் அன்றைய தினம், கடற்கரையில் இருப்பதற்கு நல்ல நாள் இல்லை. 40 00:06:17,127 --> 00:06:19,296 ஒரு குறுகிய-முகக் கரடி. 41 00:06:21,340 --> 00:06:24,635 போலார் கரடியைவிட, சுமார் 227 கிலோ அதிக எடை உள்ள விலங்கு. 42 00:06:25,636 --> 00:06:28,013 அதைவிட மிகக் கொடுமையானதும் கூட. 43 00:06:41,860 --> 00:06:46,865 டைனோசர் காலத்திற்குப் பிறகு, இதுவே பூமியில் வாழ்ந்த பெரிய விலங்குகளில் ஒன்றாக இருக்கலாம். 44 00:06:53,664 --> 00:06:55,415 அதற்கு ஒரு வாசனை கிடைத்துள்ளது. 45 00:07:14,142 --> 00:07:16,144 இதுபோன்ற ஒன்றை அது, இதற்கு முன் கண்டதில்லை. 46 00:07:20,732 --> 00:07:23,235 ஆனாலும் அது உணவைப் போலவே வாசனை வருகிறது. 47 00:07:27,114 --> 00:07:29,241 எல்லாம் ஒரே குழப்பமாக உள்ளது. 48 00:07:50,095 --> 00:07:54,600 ஒரு குறுகிய-முகக் கரடி, பெரும்பாலான விலங்குகளை கிழித்து சாப்பிடக்கூடியது. 49 00:08:00,022 --> 00:08:01,815 நல்லவேளையாக கடல் பசுவிற்கு, 50 00:08:01,899 --> 00:08:06,069 அதன் ஒரு அங்குல தடிமன் உள்ள சருமம் அதற்குப் பாதுகாப்பாக அமைகிறது. 51 00:08:14,411 --> 00:08:18,081 கரடியின் தாக்குதல் ஒரு சிறிய சச்சரவுதான். 52 00:08:21,919 --> 00:08:25,339 அல்லது அது ஒரு வரவேற்கும் பிராண்டலாகவும் இருக்கலாம். 53 00:08:31,136 --> 00:08:33,347 கடல் நீர் மீண்டும் உள்ளே வருகிறது. 54 00:08:35,849 --> 00:08:37,100 விரைந்து வருகிறது. 55 00:08:41,063 --> 00:08:44,566 உணவு கிடைக்கும் வாய்ப்பு, கரடிக்கு இப்போது கைநழுவிப் போய்கொண்டிருக்கிறது. 56 00:09:05,420 --> 00:09:08,465 இப்போது குடும்பத்துடன் மீண்டும் ஒன்று சேரும் நேரம் வந்துவிட்டது. 57 00:09:10,425 --> 00:09:13,762 அது இனியும் சாப்பிடுவதற்கு ஏராளமாக மீதம் இருக்கிறது. 58 00:09:22,104 --> 00:09:27,985 பனி உருகுவதால் கடற்கரையில் சத்தான கெல்ப்பின் அளவு அதிகரித்து, கடல் பசுக்களின் உணவாகிறது… 59 00:09:31,613 --> 00:09:33,866 பல பனிப்படல யுகத்தின் பெரும் விலங்குகளுக்கு 60 00:09:35,534 --> 00:09:37,953 வாழ்க்கை இன்னும் சிரமமாகி வருகிறது. 61 00:09:54,678 --> 00:09:58,015 பல்லாயிரம் மைல்கள் தெற்கே வாழும் விலங்குகளுக்கு, 62 00:09:58,807 --> 00:10:04,855 வெப்பம் அதிகரித்து வரும் இந்த காலநிலை, புள்வெளிகளை ஒரு அபாயகரமான இடமாக மாற்றுகிறது. 63 00:10:14,823 --> 00:10:20,162 ஒரு கொலம்பிய கம்பளி யானை, இரவில் கூட இங்கு பாதுகாப்பாக உணவு உண்ணலாம். 64 00:10:29,713 --> 00:10:31,798 ஆனால் சூரியன் உதித்துவிட்டாலோ… 65 00:10:38,430 --> 00:10:41,600 இந்த மாபெரும் விலங்கிற்கும் ஆபத்துதான். 66 00:11:13,757 --> 00:11:15,884 தார் நிறைந்த ஒரு ஏரி. 67 00:11:24,518 --> 00:11:28,522 அது பூமியின் அடித்தளத்திலிருந்து, மேலே தரை மட்டத்திற்கு வருகிறது. 68 00:11:30,691 --> 00:11:35,362 அது குளிர்ந்துள்ள போது, இறுகியிருப்பதால், நடப்பதற்கு பாதுகாப்பானதாக இருக்கிறது. 69 00:11:37,281 --> 00:11:40,075 எனினும், வெப்ப நிலை உயர்ந்து 64 டிகிரி செல்சியஸை அடையும்போது… 70 00:11:42,077 --> 00:11:45,747 அது ஒட்டிக்கொள்ளும் பசையுள்ள ஒரு மரணப் பொறியாக மாறிவிடுகிறது. 71 00:11:50,043 --> 00:11:52,838 இன்று அது ஒரு புதிய விலங்கை பலியாக்கியுள்ளது. 72 00:12:35,714 --> 00:12:40,552 வட அமெரிக்காவைச் சேர்ந்த கொடுவாள் பூனைகள், மிகச் சிறந்த வேட்டை விலங்குகள். 73 00:12:43,430 --> 00:12:47,518 ஆனாலும், சுலபமாகக் கிடைக்கும் ஒரு உணவை, அவை மறுக்காது. 74 00:12:56,985 --> 00:13:01,823 சூரியன் இன்னும் எழவில்லை, எனவே அந்த தார், காலுக்கு அடியில் கெட்டியாக உள்ளது, 75 00:13:39,278 --> 00:13:40,863 டயர் ஓநாய்கள். 76 00:13:42,739 --> 00:13:46,034 கொடுவாள் பூனைகளின் மிக கடுமையான எதிரிகள். 77 00:13:51,415 --> 00:13:55,460 எலும்புகளை நொறுக்கக்கூடியக் தாடைகளைக் கொண்டு, கூட்டமாக வேட்டையாடும் விலங்குகள் அவை. 78 00:14:14,897 --> 00:14:19,776 அவற்றுக்கு வாய்ப்பு கிடைத்தால், குட்டிகளைக் கொன்றுவிடும். 79 00:14:33,290 --> 00:14:36,960 கொடுவாள் பூனைகளும் டயர் ஓநாய்களும் நிகரான போட்டி தான். 80 00:14:40,631 --> 00:14:44,426 ஆனால் இந்த தார் அனைத்தையும் மாற்றிவிட்டது. 81 00:14:52,434 --> 00:14:58,190 சக்திவாய்ந்த மோப்பத் திறனைக் கொண்டு இந்த டயர் ஓநாய்கள் ஒரு பாதுகாப்பான பாதையை தேடுகின்றன. 82 00:15:36,520 --> 00:15:39,064 குட்டிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையில்… 83 00:15:45,404 --> 00:15:48,991 அந்த சூழலிலிருந்து விடுபட அந்தத் தாய் விலங்கிற்கு தைரியம் வருகிறது. 84 00:16:05,215 --> 00:16:07,885 அதன் குடும்பமும் அதற்கு உதவ முடியாமல் தவிக்கின்பறன. 85 00:16:16,310 --> 00:16:21,064 பனிப்படல யுகத்தில் ஆயிரக்கணக்கான உயிர்களை இந்த தார் குழிகள் பலிவாங்கியுள்ளன. 86 00:16:22,566 --> 00:16:26,195 இந்தக் குடும்பத்திற்கு அதிர்ஷ்டம் இருந்துள்ளது. 87 00:16:32,034 --> 00:16:34,661 உலகெங்கும் வெப்ப நிலை அதிகரிக்கும் வேளையில், 88 00:16:34,745 --> 00:16:40,000 பனிப்படல யுக புல்வெளிகளிலும் வாழ்க்கை முற்றிலுமாக மாறி வருகிறது. 89 00:16:42,169 --> 00:16:44,546 இந்த பனிக்கலைமான்கள் எப்படியோ சமாளிக்கின்றன. 90 00:16:47,758 --> 00:16:53,180 ஆனால் இந்த மெகாலோசிரோஸ்களுக்கு, உயிர் பிழைப்பது மிகவும் சிரமமாக உள்ளது… 91 00:16:55,516 --> 00:16:58,852 அது ஒரு ராட்சஸ பனிப்படல யுக மான். 92 00:17:15,410 --> 00:17:18,872 அது செழிப்பதற்கு, திறந்தவெளி நிலப்பரப்பு தேவை. 93 00:17:22,000 --> 00:17:24,586 ஆனால் நிலப்பரப்பில் மீண்டும் தண்ணீர் வரத் தொடங்கிய பின், 94 00:17:25,671 --> 00:17:29,174 மீண்டும் காடுகள் ஆக்கிரமிக்கின்றன. 95 00:17:36,390 --> 00:17:42,479 இதற்கு எக்காலத்திலும் கண்டிராத மிகப் பெரிய கொம்புகள் உள்ளதென்ற கர்வம். 96 00:17:44,898 --> 00:17:47,401 பன்னிரெண்டு அடி அகலம். 97 00:17:55,117 --> 00:17:58,704 இனப்பெருக்கக்காலத்தின் போது, அவை இருந்தால் ஒரு துணையைப் பெற உதவியாக இருக்கும். 98 00:17:59,830 --> 00:18:03,417 ஆனால் வருடத்தின் இந்தப் பருவத்தில் அவை ஒரு சுமையாக உள்ளன. 99 00:18:12,885 --> 00:18:14,887 குகை கழுதைப்புலிகள். 100 00:18:20,184 --> 00:18:25,022 தோற்றத்தில் ஓநாயை விட இரு மடங்கு பெரியது, அதி பயங்கரமாக வேட்டையாடக்கூடிய விலங்குகள். 101 00:18:25,772 --> 00:18:28,692 இந்த மாபெரும் விலங்குகளை அவை பல்லாயிரமாண்டுகளாக வேட்டையாடி வருகின்றன. 102 00:18:36,575 --> 00:18:38,493 மெகாலோசிரோஸ் மிக வேகமாகச் செல்லக்கூடிய விலங்குகள். 103 00:18:39,328 --> 00:18:44,333 ஒரு முறை ஓட ஆரம்பித்தால், மணிக்கு 50 மைல் வேகத்தை அவற்றால் அடைய முடியும். 104 00:18:51,006 --> 00:18:54,510 முதலிலேயே வேகமாகத் தொடங்கினால், அந்த ஆண் விலங்கு, கழுதைப்புலிகளைத் தோற்கடிக்கலாம். 105 00:19:01,558 --> 00:19:03,185 ஆனால் அவை எளிதில் விட்டுவிடுவதில்லை. 106 00:19:04,686 --> 00:19:06,939 அவற்றிடம் பல காலமாக கையாண்டு வந்த உத்தி ஒன்றுள்ளது. 107 00:19:07,523 --> 00:19:10,734 அந்த இரை விலங்கை ஓடுக்கொண்டே இருக்கும்படி செய்து, அதற்கு பக்கத்திலேயே இருந்து… 108 00:19:11,276 --> 00:19:13,779 அதற்கு அவகாசமே கொடுக்காமல் பார்த்துக்கொண்டால்… 109 00:19:15,072 --> 00:19:17,115 அதை களைப்புற செய்யலாம். 110 00:19:22,037 --> 00:19:24,456 அவை எதிர்பார்க்கும் முன்னரே அது நடக்கலாம். 111 00:19:31,296 --> 00:19:33,924 அதற்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது. 112 00:19:53,151 --> 00:19:54,236 பாதுகாப்பு… 113 00:19:56,905 --> 00:19:58,240 இப்போதைக்கு. 114 00:20:07,666 --> 00:20:09,293 பனிப்படலங்கள் உருகும்போது, 115 00:20:09,877 --> 00:20:13,213 பூமியின் வளிமண்டலத்தில் ஈரப்பதம் இன்னும் அதிகரித்து வருகிறது. 116 00:20:15,007 --> 00:20:16,884 இங்கே பூமியின் வெப்பமண்டலத்தில், 117 00:20:16,967 --> 00:20:20,971 வடக்கைவிட, காடுகள் மிக வேகமாகப் பெருகி வருகின்றன. 118 00:20:21,847 --> 00:20:24,850 அதோடு, விசித்திரமான விலங்குகள் அவற்றில் நிரம்பி உள்ளன… 119 00:20:28,437 --> 00:20:30,355 இந்த டென்ரெக் எனப்படும் பாலூட்டியைப் போல். 120 00:20:32,608 --> 00:20:34,776 அவை பூச்சிகளை உண்ண விரும்புகின்றன… 121 00:20:36,695 --> 00:20:38,864 பறவையின் முட்டைகளையும். 122 00:20:42,117 --> 00:20:46,038 ஆனால் இந்த முட்டை, அதனால் கையாள முடியாத அளவு பெரியது. 123 00:20:51,168 --> 00:20:55,130 இதுவே எக்காலத்திற்கும் மிகப் பெரிய முட்டை. 124 00:20:56,173 --> 00:21:00,677 அந்த முட்டை, எக்காலத்திலும் மிகப் பெரிய பறவையின் முட்டை தான் அது. 125 00:21:03,555 --> 00:21:05,557 அது ஒரு யானைப் பறவை. 126 00:21:08,185 --> 00:21:12,940 அவற்றின் கழுத்தில் தொங்கும், பளிச்சென்ற சடைப் போன்ற வாட்டில்கள், துணை தேட உதவும். 127 00:21:18,111 --> 00:21:22,032 இந்த மாபெரும் விலங்கு இப்போது தந்தையாகப் போகிறது. 128 00:21:28,121 --> 00:21:30,457 ஆனால் ஏதோ தவறு நேர்ந்துவிட்டது. 129 00:21:34,253 --> 00:21:36,338 அதன் குட்டி, வெளியே வர தாமதமாகிறது. 130 00:21:38,006 --> 00:21:39,758 இப்போதே நேரம் கடந்துவிட்டது. 131 00:21:44,847 --> 00:21:47,933 யானைப் பறவைகள் அனைத்தும் ஒரே சமயத்தில் முட்டையிட்டு, ஒரே சமயத்தில் 132 00:21:48,016 --> 00:21:50,811 குஞ்சுகள் பொறிக்கும்படி செய்கின்றன. 133 00:22:05,200 --> 00:22:09,371 அந்தக் கூட்டம் ஒன்று சேர்ந்து நடந்து செல்கின்றன. 134 00:22:16,253 --> 00:22:21,091 ஒரு டன் எடை உள்ளபோது, பறப்பது சாத்தியமில்லையே. 135 00:22:27,598 --> 00:22:30,267 யாருக்கும் பின்தங்கிவிடுவதில் விருப்பமில்லை. 136 00:22:33,437 --> 00:22:36,273 ஆனால் இந்த குஞ்சை அவசரப்படுத்த முடியவில்லை. 137 00:22:54,875 --> 00:22:56,919 நீர்நிலைகள் உள்ள கோடைகால இருப்பிடத்தை நோக்கி 138 00:22:57,002 --> 00:23:00,339 மற்ற பறவைகள் ஏற்கனவே பயணத்தைத் தொடங்கிவிட்டன. 139 00:23:19,983 --> 00:23:23,070 ஆனால் இந்தப் பெண் குஞ்சிற்கு இன்னும் நடையே தடுமாறுகிறது. 140 00:23:40,128 --> 00:23:45,592 அடுத்த ஒன்பது மாதங்களுக்கு அந்த ஆண் பறவைதான் இந்த குஞ்சுக்கு உணவளித்துக் காப்பற்றும். 141 00:23:52,683 --> 00:23:55,519 அவை அந்த அணிவகுப்புடன் சேர்ந்துகொள்ள வேண்டும். 142 00:24:09,658 --> 00:24:13,078 யானை பறவைகள் ஒன்றாகச் சேர்ந்து பயணிப்பதற்கு ஒரு காரணம் உண்டு. 143 00:24:17,374 --> 00:24:20,419 காடு மிகவும் ஆபத்தான இடம். 144 00:24:27,885 --> 00:24:30,470 தாமதமாக வருபவர்கள் இரையாவதற்கு முதல் இலக்காகின்றன. 145 00:24:51,325 --> 00:24:53,076 மிகப் பெரிய ஃபோஸா. 146 00:24:56,079 --> 00:25:00,459 அது விரைவாகவும், கவனமாகவும், மறைந்திருந்துத் தாக்கும் ஒரு வேட்டை விலங்கு. 147 00:25:09,343 --> 00:25:12,179 சிற்றுண்டி புசிக்க இது நேரமில்லை. 148 00:26:05,023 --> 00:26:08,402 அணிவகுப்பு தன் இலக்கை அடைந்துவிட்டது. 149 00:26:10,946 --> 00:26:12,865 இங்கு மழை மீண்டும் வந்துவிட்டது… 150 00:26:14,283 --> 00:26:16,285 நீர்நிலைகள் உருவாகியுள்ளதால்… 151 00:26:17,703 --> 00:26:21,456 அனைத்து விலங்குகளுக்கும் உண்ண உணவும், குடிக்க நீரும் தாராளமாகக் கிடைக்கிறது. 152 00:26:30,340 --> 00:26:32,676 ஆனால் பின்னால் தாமதமாக வருபவற்றின் கதி என்ன? 153 00:26:43,520 --> 00:26:47,649 கடைசியாக பொறிந்து வந்த குஞ்சு கூட வந்து சேர்ந்துவிட்டது. 154 00:26:56,867 --> 00:27:02,206 இந்த நீர்நிலங்கள் பெருகுவதால், அவற்றின் எண்ணிக்கையும் ஒவ்வொரு வருடமும் அதிகரிக்கின்றன. 155 00:27:05,375 --> 00:27:10,881 பனியின் பெரும் உருக்குக் காலம், யானைப் பறவைகளுக்குப் பொற்காலத்தின் ஆரம்பாக அமைந்தது. 156 00:27:13,133 --> 00:27:18,972 ஆனால் அந்த பெரும் ஆண் மானிற்கு, அதன் உலகம் கிட்டத்தட்ட அழிகிறது. 157 00:27:24,353 --> 00:27:29,358 ஒரு காட்டில், 12 அடி கொம்புகள் ஒரு பெரும் ஆபத்து. 158 00:27:44,540 --> 00:27:49,211 ஆற்றின் கீழ்பகுதியில், கழுதைப்புலிகளுக்கு அதைக் கடக்க, ஒரு இடம் கிடைத்ததுள்ளது. 159 00:28:27,666 --> 00:28:28,792 மாட்டிக்கொண்டது. 160 00:29:20,761 --> 00:29:23,430 அதிசயமாகத் தப்பித்து ஓடுகிறது. 161 00:29:33,148 --> 00:29:36,735 அதன் கொம்புகளை களைந்துவிட்டதால், தப்பியது. 162 00:29:42,866 --> 00:29:46,328 அடுத்த இனப் பெருக்கக் காலத்திற்கு முன்னர், ஒரு புதிய ஜோடி கொம்புகள் முளைத்துவிடும். 163 00:29:49,206 --> 00:29:55,546 ஆனால் அதைப் போன்ற விலங்குகளுக்கும், கழுதைப்புலிகளுக்கும், கெடு நெருங்குகிறது. 164 00:30:05,806 --> 00:30:11,019 அந்த கொடுவாள் பூனைகள் அந்த கம்பளி யானைக் கூட்டத்தை கடந்த இரு தினங்களாகத் தொடர்கின்றன. 165 00:30:21,405 --> 00:30:24,157 அவற்றின் பொறுமை பலனளிக்கிறது. 166 00:30:32,082 --> 00:30:33,375 அந்த ஆண் விலங்கு, 167 00:30:33,458 --> 00:30:38,046 கொடுவாள் பூனைகளின் முதல் தாக்குதலில் அடிப்பட்டதால், அது பின்தங்கி வருகிறது. 168 00:30:46,471 --> 00:30:47,931 அது தாக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. 169 00:30:54,271 --> 00:30:58,358 பூனைகளின் உலகத்தில், இந்தப் பெண் பூனையின் இனம், தனித்தன்மை உடையது. 170 00:30:59,943 --> 00:31:02,654 அதற்கு ஒரு சிங்கத்தின் பலமும்… 171 00:31:05,365 --> 00:31:08,243 சிறுத்தைப் புலியின் புத்திக் கூர்மையும் உள்ளது. 172 00:31:47,324 --> 00:31:50,661 அந்தப் பூனைகள் இன்னொரு குளிர்காலத்திற்குத் தாக்குப்பிடிக்கும். 173 00:31:58,710 --> 00:32:01,505 கம்பளி யானைக் கூட்டமும் தான். 174 00:32:10,013 --> 00:32:12,015 ஆனால் அவற்றின் உலகம் மாறி வருகிறது. 175 00:32:17,104 --> 00:32:20,816 பனிப்படல யுகத்தில் உருவான ஒரு புதிய வேட்டை விலங்கு, 176 00:32:21,650 --> 00:32:24,987 இந்த பூமியின் அனைத்து மூலைகளிலும் பரவி வருகிறது. 177 00:32:26,321 --> 00:32:31,076 அந்த கதை இப்போதுதான் ஆரம்பித்துள்ளது. 178 00:32:37,833 --> 00:32:41,879 Prehistoric Planet பனிக்கு அடியில் 179 00:32:45,257 --> 00:32:48,260 பனிப்படல யுகத்தில் ராட்சஸ பாலூட்டிகள் தான் ஆதிக்கம் செலுத்தின. 180 00:32:52,347 --> 00:32:56,685 ஆனால் கிட்டத்தட்ட அவை அனைத்துமே, பனி காலத்தின் பெரும் உருக்கு காலத்தில் அழிந்தன. 181 00:32:59,813 --> 00:33:02,274 அப்போது வாழ்ந்த மாபெரும் விலங்குகள் 182 00:33:02,357 --> 00:33:06,945 முற்றிலுமாக இப்போது அழிந்துவிட்டன என்பது நம்ப முடியாமலும், விசித்திரமாகவும் உள்ளது. 183 00:33:08,197 --> 00:33:09,781 அவற்றுக்கெல்லாம் என்னவாயிற்று? 184 00:33:11,450 --> 00:33:12,534 ஏன் அப்படி ஆயிற்று? 185 00:33:14,703 --> 00:33:19,499 அந்த ராட்சஸ விலங்குகள் அனைத்தும் எங்கே போயின? 186 00:33:19,583 --> 00:33:22,836 அதற்கான சில பதில்கள், ஆச்சரியமான ஒரு இடத்தில் உள்ளது. 187 00:33:23,754 --> 00:33:24,796 லாஸ் ஏஞ்சலெஸ். 188 00:33:26,256 --> 00:33:31,678 நீங்கள் எல்ஏ வந்து அங்கே உள்ள பெரும் சாலைகளின் வலையைப் பார்த்தால், 189 00:33:31,762 --> 00:33:34,306 அது இவ்வளவு பனிப்படல யுகத்தின் மிகச் சிறந்த பதிவுகள்… 190 00:33:34,389 --> 00:33:35,974 டாக்டர் எமில் லிண்ட்சே துணை சேர்க்கையாளர் 191 00:33:36,058 --> 00:33:38,352 …நிறைந்த இடங்களில் ஒன்றாக இருக்கும் எனத் தோன்றாது. 192 00:33:39,269 --> 00:33:41,772 ஆப்பிரிக்க சவானா புல்வெளிகள் அதீத வளர்ச்சியடைவதைப் போல. 193 00:33:43,398 --> 00:33:46,318 பெரும்பாலானவர்கள், தொல்லுயிர் அறிவியலாளர்கள் ஆகும் நோக்கத்துடன் எல்ஏக்கு வருவதில்லை. 194 00:33:46,401 --> 00:33:48,862 ஆனால் எங்களில் சிலர் அப்படி வருகிறோம். 195 00:33:48,946 --> 00:33:50,447 அதற்காகவே நான் இங்கு வந்துள்ளேன். 196 00:33:51,657 --> 00:33:55,285 இங்கு ஒரு ஆச்சரியமான இடம் இருப்பதால்தான் எமிலி இங்கு வந்துள்ளார். 197 00:33:55,369 --> 00:34:01,291 அது லா பிரியா தார் பிட்ஸ் என்று அழைக்கப்படும் ஒரு தார் குளம். 198 00:34:02,543 --> 00:34:07,047 லா பிரியா தார் பிட்ஸ்தான் பனிப்படல யுகத்தின் புதைபடிவங்களுக்கான மிகச் சிறந்த இடம். 199 00:34:08,090 --> 00:34:10,926 எங்களுக்கு சுமார் ஐம்பது லட்சத்திற்கும் மேலான புதைப்படிவங்கள் கிடைத்துள்ளன… 200 00:34:11,009 --> 00:34:12,386 லா பிரியா தார் பிட்ஸ் மற்றும் அருங்காட்சியகம் லாஸ் ஏஞ்சலெஸ் 201 00:34:12,469 --> 00:34:16,681 …அதோடு, நாங்கள் தோண்டும் போதெல்லாம், தினம்தோறும் புதிய புதைப்படிவங்கள் கிடைக்கின்றன. 202 00:34:18,934 --> 00:34:21,018 இந்த தார் குளங்கள் 203 00:34:21,103 --> 00:34:25,482 அங்கே உயிருடன் நடந்து வரும் எதையும் சிறைப்படுத்தி வைத்து, 204 00:34:25,565 --> 00:34:29,360 பாதுகாத்து, சேகரித்து, எங்குமே இல்லாத அளவிற்கு 205 00:34:30,362 --> 00:34:34,949 பனிப்படல யுகத்தின் புதைப்படிவ எச்சங்களின் பெட்டகமாக விளங்குகிறது. 206 00:34:43,917 --> 00:34:48,755 வியக்கத்தக்க வகையில் லா பிரியா-வில் புதைப்படிவங்களின் எச்சங்கள் உள்ளன. 207 00:34:48,839 --> 00:34:50,090 இந்தத் தளத்திலிருந்து… 208 00:34:50,174 --> 00:34:51,675 டாக்டர். விக்டோரியா ஹெர்ரிட்ஜ் பரிணாம உயிரியலாளர் 209 00:34:51,757 --> 00:34:53,552 …கிடைத்துள்ள எலும்புகளின் எண்ணிக்கை, மிகவும் ஆச்சரியமானது. 210 00:34:54,344 --> 00:34:58,348 சுமார் 3000 கொடுவாள் பூனைகளின் எச்சங்கள் கிடைத்துள்ளன. 211 00:34:58,849 --> 00:35:00,517 5000 டயர் ஓநாய்களின் எச்சங்கள். 212 00:35:01,310 --> 00:35:04,730 இது புதைப்படிவங்களின் அலாவுதீன் குகை என்றே கூறலாம். 213 00:35:06,231 --> 00:35:10,652 இதில் வினோதமான விஷயம் என்னவெனில், புதைப்படிவ பதிவுகள் திடீரென நின்றுவிடுகிறது… 214 00:35:11,945 --> 00:35:15,532 ஏதோ திடீரென அந்த விலங்குகள் எல்லாம் பூமியிலிருந்து மறைந்து போனது போல் உள்ளது. 215 00:35:17,826 --> 00:35:20,579 நாங்கள் ரேடியோகார்பன் நுட்பத்தைப் பயன்படுத்தி, எலும்பின் காலத்தை நிர்ணயித்து 216 00:35:20,662 --> 00:35:24,041 துல்லியமாக அவை எப்போது மறைந்தன என்றும் கண்டிபிடிக்க முடிகிறது. 217 00:35:25,209 --> 00:35:28,962 இதில் ஆச்சரியம் என்னவேனில், பெரும்பாலான விலங்குகளின் வகைகள் 218 00:35:29,046 --> 00:35:31,673 கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் மறைந்துள்ளன. 219 00:35:31,757 --> 00:35:37,179 அவை அனைத்துமே சுமார் 13000 வருடங்களுக்கு முன் மறைந்துவிட்டு, பின்னர் காணப்படவேயில்லை. 220 00:35:38,555 --> 00:35:43,185 பரந்த நிலப்பரப்புகளில் கூட்டம் கூட்டமாக ஏராளமான 221 00:35:43,268 --> 00:35:46,480 பனிப்படல யுக உயிரினங்கள் நிரம்பி வழிந்தன, திடீரென சுவடில்லாமல் மறைந்துவிட்டன. 222 00:35:47,606 --> 00:35:50,859 இந்த விலங்குகளின் மறைவு, "இது திடீரென நடக்கக் காரணம் என்ன?" 223 00:35:50,943 --> 00:35:53,654 என்று நம்மை யோசிக்க வைக்கிறது. 224 00:35:53,737 --> 00:35:56,156 பனிப்படல யுகத்தின் கடைசியில் காலநிலை மாற்றம் என்பது 225 00:35:56,240 --> 00:35:58,784 மிக விரைவாக நிகழ்ந்தது என்பது ஒரு காரணம். 226 00:35:59,493 --> 00:36:04,998 வெறும் சில ஆயிரம் ஆண்டுகளிலேயே கலிஃபோர்னியாவின் வெப்பநிலை பத்து டிகிரி கூடிவிட்டது. 227 00:36:05,082 --> 00:36:07,084 மரங்களில் பாதி, அழிந்துவிட்டன. 228 00:36:07,167 --> 00:36:09,962 ஒவ்வொரு முறையும் பல தசாப்தங்களுக்கு வறட்சி நீண்டு நின்றது. 229 00:36:10,838 --> 00:36:14,174 அதனால் விலங்குகளால் அவ்வளவு விரைவாக 230 00:36:14,258 --> 00:36:18,720 காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றங்களை செய்துகொள்ள முடியவில்லை என்றும் இருக்கலாம். 231 00:36:21,849 --> 00:36:26,061 ஆனால் லா பிரியா ஆய்வுகள், இன்னொரு விஷயத்தையும் காட்டியுள்ளது. 232 00:36:27,354 --> 00:36:32,067 பக்கத்தில் இருந்த ஒரு ஏரியில் இருந்து கோர் சாம்பிள்களை சேகரித்த அந்த அணி, 233 00:36:32,150 --> 00:36:36,446 அந்தக் காலகட்டத்தில் சுற்றுச்சூழலில் நடந்தவற்றை புரிந்துகொள்வதற்காக, ஆய்வு செய்ய ஆரம்பித்தனர். 234 00:36:36,530 --> 00:36:41,952 ஆச்சரியமாக அதிலிருந்து தெரிந்தது என்னவெனில், கரி பொருள், பெரும் அளவு அதிகரித்திருந்தது. 235 00:36:43,871 --> 00:36:46,623 ஒரு புதிய விலங்கு களத்தில் இறங்கியிருந்தது. 236 00:36:47,624 --> 00:36:51,420 அதோடு, ஒரு நாசகரமான புதியதொரு சக்தியும் உருவாகிறது. 237 00:36:56,300 --> 00:36:59,011 நெருப்புதான் மனிதர்கள் கண்டுபிடித்த மிக சக்திவாய்ந்த கருவி. 238 00:36:59,720 --> 00:37:05,642 உணவை சமைக்கவும், இரவில் வெளிச்சம் கிடைக்கவும், வேட்டையாட நிலத்தை சுத்தமாக்கவும் தீ பயன்படுகிறது. 239 00:37:06,476 --> 00:37:13,150 இந்த இடத்திற்கு வந்து வசித்தபோது அது முற்றிலும் தீ பற்றிக்கொள்ளக் கூடிய இடமாக உள்ளது. 240 00:37:14,151 --> 00:37:16,570 மக்கள் அதைப் பத்த வைக்க ஒரு மூலத்தை கொண்டு வருகிறார்கள். 241 00:37:18,238 --> 00:37:20,282 பல்லாயிரம் வருடங்களில் 242 00:37:20,365 --> 00:37:24,203 அதற்கு நிகராகத் தீ பற்றிய சம்பம் எங்குமே பதிவாகவில்லை. 243 00:37:25,787 --> 00:37:27,456 அது ஒரு வெடி வெடித்தது போலிருந்தது. 244 00:37:27,956 --> 00:37:30,167 அது சுற்றுச்சூழலை முற்றிலுமாக அழித்து, சிதைத்துவிட்டது… 245 00:37:30,250 --> 00:37:31,502 டாக்டர் எல்லா கில்பர்ட் காலநிலை விஞ்ஞானி 246 00:37:31,585 --> 00:37:34,046 …அதனால் அங்கு வசித்த விலங்குகள், உயிர் பிழைக்க மிகவும் கஷ்டப்பட்டன. 247 00:37:35,631 --> 00:37:40,636 இந்த தீ பிடித்த சம்பவங்கள் வேண்டுமென்றே மூட்டப்பட்டனவா, விபத்தா எனத் தெரியவில்லை, 248 00:37:41,178 --> 00:37:43,847 எனினும் அவை விலங்குகளின் வசிப்பிடங்களை அழித்துவிட்டன. 249 00:37:44,765 --> 00:37:48,060 அத்துடன், நம் முன்னோர்களின் வேட்டையாடும் திறமைகளும் சேர்ந்துகொண்டதால், 250 00:37:49,019 --> 00:37:51,063 அது அழிவிற்கான ஒரு புயலாகவே அமைந்தது. 251 00:37:52,022 --> 00:37:53,065 பூமி எங்கும், 252 00:37:53,148 --> 00:37:57,194 காலநிலையின் மாற்றம் மற்றும் மனிதர்களின் நடவடிக்கைகள் இரண்டும் சேர்ந்து 253 00:37:57,945 --> 00:38:01,323 பெரும்பாலான பனிப்படல யுகத்தின் ராட்சஸ விலங்குகளை அழித்துவிட்டன, 254 00:38:02,032 --> 00:38:04,868 அதுவே நாம் இன்று காணும் உலகிற்கு வழிவகுத்தது. 255 00:40:28,971 --> 00:40:30,973 தமிழாக்கம் அகிலா குமார்