1 00:00:11,721 --> 00:00:15,976 வழங்குபவர் டேவிட் அட்டன்பரோ 2 00:00:16,560 --> 00:00:21,606 எந்த காலத்திலும் ஆச்சரியத்தை உண்டாக்ககூடிய, அதே சமயம் பிரபலமான ஒரு விலங்கு 3 00:00:22,148 --> 00:00:26,361 இருந்துள்ளது என்றால் அது நிச்சயமாக டைனோசர் தான். 4 00:00:27,404 --> 00:00:29,656 டிரைனோசரஸ் ரெக்ஸ். 5 00:00:30,699 --> 00:00:35,245 நம் அனைவரிடத்திலும் கற்பனையைக் கிளரும் ஒரு விலங்கு அது. 6 00:00:35,328 --> 00:00:38,290 அது எந்த மாதிரி விலங்காக இருந்தது? 7 00:00:38,373 --> 00:00:41,585 பார்க்க எப்படி இருந்தது? எப்படி வாழ்ந்தது? 8 00:00:41,668 --> 00:00:45,630 இப்போது, விஞ்ஞான ஆய்வுகள் இதற்கெல்லாம் விடையளிக்கிறது. 9 00:00:45,714 --> 00:00:47,966 இது டி. ரெக்ஸ்சைப் பற்றியது மட்டும் இல்லை, 10 00:00:48,049 --> 00:00:51,386 அதன் கூடவே வாழ்ந்த மற்ற விலங்கினங்களைப் பற்றியதும் தான். 11 00:00:51,469 --> 00:00:58,059 மேலும் இப்போது வந்துள்ள இமேஜிங் தொழில் நுடபம் அவற்றையெல்லாம் உயிர் பெற்று எழச்செய்கிறது. 12 00:01:01,980 --> 00:01:05,901 பூமி கிரகம், 66 மில்லியன் வருடங்களுக்கு முன். 13 00:01:13,992 --> 00:01:17,537 இராட்சஸ பறவைகளால் வானமெல்லாம் நிறைந்திருந்தது. 14 00:01:20,081 --> 00:01:24,127 கடல்களிலோ, பூதாகாரமான ஊர்வனங்கள் ஆழத்தை ரோந்து சுற்றி வந்தவண்ணம் இருந்தன. 15 00:01:26,171 --> 00:01:29,299 மற்றும் நிலத்திலோ, அனைத்து வகையான டைனோசர்களும், 16 00:01:30,508 --> 00:01:33,261 உயிர் வாழ போராட்டத்தைச் சந்திக்கின்றன. 17 00:01:39,434 --> 00:01:45,732 டைனோசர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட உலக்கதைப் பற்றி இப்போது நமக்கு பல தகவல்களும் கிடைத்துள்ளன. 18 00:01:49,694 --> 00:01:52,239 இது அவற்றின் கதை தான். 19 00:02:05,085 --> 00:02:09,296 கடற்கரைகள் 20 00:02:09,381 --> 00:02:12,884 இன்லாண்ட் பெருங்கடலிலன் தெற்கு முக கடற்கரை, 21 00:02:12,968 --> 00:02:14,970 வட அமெரிக்காவை பிரிக்கும் இடம். 22 00:02:23,311 --> 00:02:27,107 அந்த இடத்தின் கொடூர வேட்டை மிருகத்தின் தடங்கள் உள்ளன. 23 00:02:32,612 --> 00:02:36,533 ஒரு டிரைனோசரஸ் ரெக்ஸ் தண்ணீரில் இறங்கி உள்ளது. 24 00:02:39,869 --> 00:02:43,164 காற்று நிரம்பிய எலும்புகள், மற்றும் வலிமையான பின்னங்கால்கள் 25 00:02:43,248 --> 00:02:46,418 ஆகியவற்றின் மூலம், டி. ரெக்ஸினால் சிறப்பாக நீந்த முடிகிறது. 26 00:02:52,424 --> 00:02:58,638 தன் குட்டிகளுடன் போய் கொண்டிருக்கும் ஒரு வளர்ந்த ஆண் விலங்கு தான் இது. 27 00:03:02,267 --> 00:03:06,479 ஒரு பயணத்தில் தன்னைத் தொடரக்கூடிய அளவிற்கு வளர்ந்து விட்ட அந்த குட்டிகளோடு 28 00:03:06,980 --> 00:03:10,984 அந்த கடற்கரையை ஒட்டியிருக்கும் பல தீவுகளில் ஒன்றுக்கு, இவை போகின்றன. 29 00:03:34,466 --> 00:03:38,845 தூரம் குறைவுதான், ஆனால் ஆபத்துகளுக்கு குறையில்லை. 30 00:03:44,309 --> 00:03:45,727 ஒரு மொசாசர். 31 00:03:45,810 --> 00:03:49,981 இந்த ராட்சஸ கடல் ஓணான், கிட்டத்தட்ட டைர்னோசரை விட இரண்டு மடங்கு பெரியது 32 00:03:50,065 --> 00:03:52,484 மற்றும் அதன் எடையோ 15 டன்களுக்கும் அதிகமாக இருக்கும். 33 00:04:03,161 --> 00:04:05,622 இந்த கிரகத்தில் அதுவே மிகப் பெரிய வேட்டை விலங்கு. 34 00:04:13,797 --> 00:04:17,007 வழக்கமாக மொசாசர்கள் ஆமைகளை உணவாக உண்ணக்கூடியவை தான். 35 00:04:19,344 --> 00:04:23,557 ஆனால் இந்த குறிப்பிட்ட வகை, கொறித்து சாப்பிட வசதியாக இருக்கும். 36 00:04:33,900 --> 00:04:36,570 ஒரு வயது வந்த டி. ரெக்ஸ், தண்ணீரில் இருந்தாலும், 37 00:04:36,653 --> 00:04:39,322 தன்னைத் தானே நன்றாக காத்துக்கொள்ளும் திறமை உடையது. 38 00:04:43,827 --> 00:04:45,912 ஆனால் அதன் குட்டி, இதன் அருகிலேயே தான் இருக்க வேண்டும். 39 00:05:30,373 --> 00:05:34,002 டிரைனோசரஸ் ரெக்ஸ், 15 குட்டிகளை ஈன்றால் அதில் குறைந்தது மூன்றில்-இரண்டு குட்டிகள் 40 00:05:34,085 --> 00:05:38,215 முதல் வருடத்திலேயே அழந்து விடுகின்றன. 41 00:05:45,597 --> 00:05:48,225 இப்போது அவற்றில் நான்கு குட்டிகளே உள்ளன. 42 00:05:57,776 --> 00:06:01,196 இந்த தீவு, பாதுகாப்பையும், ஏராளமான உணவையும் கொண்டுள்ளது. 43 00:06:02,113 --> 00:06:05,825 மிகப் பெரிய இரண்டு-டன் எடையுள்ள ஆமைகள் இங்கு வந்து ஓய்வு எடுத்துக் கொள்கின்றன. 44 00:06:10,163 --> 00:06:12,832 இந்த ஆமைக்காகத் தான், அந்த ஆண் விலங்கு இங்கு வந்துள்ளது. 45 00:06:17,254 --> 00:06:21,174 அது இறந்துவிட்டது, அந்த டைர்னோசருக்கு அந்த அழுகும் உடலின் நாற்றம் வந்துவிட்டது. 46 00:06:33,019 --> 00:06:35,438 அந்த அழுகிக்கொண்டிருக்கும் ஆமையின் அடிவயற்றை மட்டும் எடுக்க முடிந்தால், 47 00:06:35,522 --> 00:06:39,109 அதற்கு சுமார் 2000 பவுண்டுகளுக்கும் மேலான இறைச்சி சுலபமாக கிடைத்துவிடும். 48 00:06:54,791 --> 00:06:58,587 இயற்கையாகவே, டி. ரெக்ஸின் தாடைகள் மிகவும் வலிமையானவை. 49 00:07:00,714 --> 00:07:04,509 அதோடு கடிக்கும்போது, அது ஐந்து டன்கள் அழுத்தம் கொடுத்து கடிக்கக்கூடும். 50 00:07:06,469 --> 00:07:12,017 அந்த குட்டிகளும் ஆவலாக சுவைக்க காத்திருக்கின்றன, ஆனால் அந்த ஆண் அதை பகிர தயாராக இல்லை. 51 00:07:12,601 --> 00:07:15,520 தங்களுக்குத் தேவையான உணவை அவையே வேட்டையாட கற்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. 52 00:07:18,106 --> 00:07:21,151 எனினும், அந்த கடற்கரையில் அதிகமான உணவு கிடைக்கும் எனத் தோன்றவில்லை. 53 00:07:27,574 --> 00:07:31,953 ஆனால், மாலைப் பொழுது வர, வர, எல்லாமே மாற ஆரம்பிக்கின்றன. 54 00:07:38,043 --> 00:07:43,506 புதைந்திருக்கும் முட்டைகளிலிருந்து ஆமைக் குட்டிகள் வெடித்து, வெளியேறி, நீருக்கு ஓடுகின்றன. 55 00:07:55,268 --> 00:07:59,272 இந்த இளம் டி. ரெக்ஸ் குட்டிகள், மிக சிறப்பான பயிற்சிக்கூடத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. 56 00:08:06,112 --> 00:08:10,116 வெடித்து வெளியேறும் குட்டி ஆமைகள் தான், இந்த தொழில் பழகும் விலங்குகளுக்கு சரியாக இருக்கும். 57 00:08:19,042 --> 00:08:23,004 எந்த வேடனுக்கும் குறுகுறுப்பு மிக அவசியம். 58 00:08:40,020 --> 00:08:42,440 கற்பதற்கு ஏராளமாக இருக்கிறது. 59 00:08:55,662 --> 00:09:00,375 பெரியது மற்றும் குட்டி இருவருக்கும் போதுமான அளவில் இங்கு உணவு கிடைக்கும். 60 00:09:09,676 --> 00:09:11,303 மேலும், எதுவுமே கிடைக்கவில்லை என்றாலும், 61 00:09:11,386 --> 00:09:14,764 மற்றவருடைய உணவை திருடி சாப்பிடலாமே. 62 00:09:35,785 --> 00:09:37,078 பூமி எங்கும், 63 00:09:37,162 --> 00:09:43,168 அதிக ஆழமில்லா கடற்கரைகள் சுமார் 25 மில்லியன் சதுர மைல்கள் பரப்பளவில் விரிந்து இருக்கின்றன. 64 00:09:43,251 --> 00:09:46,171 அது மிகப்பெரிய கண்டத்தையும் விட அதிகமானது. 65 00:09:48,215 --> 00:09:51,009 அதுவும், நீரில் உள்ள போஷாக்கு நிறைந்த உணவு, 66 00:09:51,092 --> 00:09:53,720 இவற்றுக்கு இந்த இடத்தை மிக முக்கியமான இடமாக உருவாக்கி உள்ளது. 67 00:09:59,935 --> 00:10:02,145 கரையோரங்களில் எல்லாம், 68 00:10:02,229 --> 00:10:06,650 போஷாக்கு நிறைந்த ஆகாரம், ஆழ்கடலிலிருந்து வருகின்றன, அவை உயிர்களுக்கு உணவாகின்றன. 69 00:10:09,402 --> 00:10:12,697 குறிப்பாக இங்கே அதிக செழிப்புள்ள வடக்கு அட்லான்டிக் கடலில், 70 00:10:12,781 --> 00:10:16,785 கூட்டம் கூட்டமாக மீன்கள் கடற்கரைக்கு மிக அருகில் வருகின்றன. 71 00:10:26,670 --> 00:10:32,384 இந்த இடங்களில் ஒரு குறிப்பட்ட வகை விலங்கு செழித்து, வசிக்கும் காலனிக்களை உருவாக்குகின்றன. 72 00:10:37,556 --> 00:10:40,600 பறக்கும் ஊர்வனங்கள். டெரோசர்கள். 73 00:10:41,518 --> 00:10:46,398 இங்கு வட ஆப்பிரிக்க கடற்கரைகளில், அந்த இனத்தின் ஏழு வகைகள் காணப்படுகின்றன. 74 00:10:49,192 --> 00:10:53,780 அவை இங்கு இரைத் தேடி வந்து, உண்டு, ஓய்வெடுத்து, தங்கள் குட்டிகளை வளர்க்கின்றன. 75 00:10:56,658 --> 00:11:00,453 டெதிட்ராகோகள் தரையில் இருப்பதற்கு வேண்டிய ஆற்றலை பெற்றிருக்கின்றன 76 00:11:00,537 --> 00:11:04,749 அதோடு அவை இங்கு கூடு கட்டுவதோடு மட்டுமல்லாமல், அவற்றின் குஞ்சுகளையும் பாதுகாக்கின்றன. 77 00:11:10,005 --> 00:11:12,966 அதோடு அவற்றின் குஞ்சுகளுக்கு நிச்சயமாக பாதுகாப்பு தேவைப்படுகிறது. 78 00:11:17,554 --> 00:11:20,599 கத்தியைப் போல மூக்குடைய பாஸ்பேடோட்ராகோ. 79 00:11:28,106 --> 00:11:31,902 பாதுகாப்பில்லாத குட்டிகளை பறித்து சாப்பிடும் வாய்ப்பைத் தேடிக் கொண்டே, 80 00:11:31,985 --> 00:11:35,572 இங்குள்ள ஒன்பது-அடி-உயரமுள்ள ஒரு வேட்டை விலங்கு, இந்த காலணிகளை எப்போதும் சுற்றி வரும். 81 00:11:41,786 --> 00:11:45,957 ஆனால் சில வகையான டெரோசர்கள், நிலத்தில் வாழ்வதற்கு சரியாக பரிணாம வளர்ச்சி அடையவில்லை. 82 00:11:46,041 --> 00:11:49,502 அவற்றுக்கு சற்றே வேறுவிதமான கூடுகட்டும் உத்தி உள்ளது. 83 00:11:52,464 --> 00:11:56,635 வேட்டை விலங்குள் அவ்வளவாக வராத இடத்தில் தான், அவை கூடு கட்டும். 84 00:11:58,011 --> 00:12:00,889 இது போன்ற தனித்து நிற்கும் உச்சிகள், மிகப்பொருத்தமானவை. 85 00:12:03,475 --> 00:12:07,687 டெரோசர்களின் முட்டைகள், சொரசொரப்பாகவும், எளிதில் காய்ந்து போகக்கூடியதாகவும் இருக்கும், 86 00:12:07,771 --> 00:12:09,981 ஆகையால் அவை மூடப்பட்டிருக்க வேண்டும். 87 00:12:11,691 --> 00:12:15,904 இந்த கடல்பாசிகளுக்கு கீழே, ஏதோ அசைகிறதே. 88 00:12:22,202 --> 00:12:25,872 சில அங்குலங்கள் உயரமே உள்ள, ஒரு சின்ன அல்சியோன் குட்டி இது, 89 00:12:25,956 --> 00:12:28,250 அதன் எடை, இரண்டு அவுன்சுகளுக்கும் குறைவு தான். 90 00:12:34,047 --> 00:12:37,467 சுமார் இரண்டு மாதங்களுக்கு முன், இவற்றின் தாய்மார்கள் இந்த முட்டைகளை இங்கு விட்டுச் சென்றன. 91 00:12:51,565 --> 00:12:54,568 ஒன்றுக்கு ஒன்று கூவி அழைத்துக் கொள்வது, முட்டைகள் பொறிப்பதை ஒருங்கிணைக்கிறது. 92 00:12:55,610 --> 00:12:58,113 பெரும் எண்ணிக்கைகளில் பாதுகாப்பு உள்ளது. 93 00:13:02,617 --> 00:13:05,495 அவற்றின் முதல் உந்தல், மலை ஏறுவது தான். 94 00:13:29,394 --> 00:13:33,315 நூற்றுக்கணக்கான கூடுகளிலிருந்து வெளிவந்த குட்டிகள் எல்லாம் மலை உச்சியில் இணைந்து, 95 00:13:33,398 --> 00:13:35,650 தங்கள் முதல் பறக்கும் அனுபவத்திற்கு தயாராகின்றன. 96 00:13:44,159 --> 00:13:46,411 ஆனால் அவற்றின் இறக்கைகள் இன்னும் சரியாக வளரவில்லை. 97 00:13:47,662 --> 00:13:51,082 நெடு விரலின் எலும்புகள், அவற்றின் இறக்கை சவ்வுக்கு உறுதியான தெம்பைக் கொடுத்து, 98 00:13:51,166 --> 00:13:56,171 முதலில் நீட்டி பின்னர் இணைந்து நிற்க வேண்டும், அதற்கு சில மணி நேரம் எடுத்துக் கொள்ளும். 99 00:13:59,090 --> 00:14:00,884 ஆனால் அவற்றால் எப்போதும் இங்கே இருக்க முடியாது. 100 00:14:08,350 --> 00:14:12,270 அவற்றின் எலும்புகள் மிகவும் இலகுவானவை, கிட்டத்தட்ட 90 சதவிகிதம் காற்றிற்கு ஏற்றவை, 101 00:14:12,354 --> 00:14:15,815 அதனால் பறக்க ஆரம்பிப்பதற்கு கொஞ்சம் முயற்சியே போதும். 102 00:14:18,652 --> 00:14:21,696 இருந்தாலும், பறக்கும் பயிற்சிகள் தேவைதான். 103 00:14:23,073 --> 00:14:26,034 அதை சரியாகச் செய்ய ஒரே சந்தர்ப்பம் கிடைக்கும் 104 00:14:26,117 --> 00:14:28,078 அதுவும் முதல் முறையாக பறக்கும்போது. 105 00:14:35,669 --> 00:14:39,506 அந்த மலையின் செங்குத்து உச்சிகள், காற்றை மேல் எழும்பச் செய்கின்றன, அதுவும் உதவியாக இருக்கும். 106 00:14:39,589 --> 00:14:43,718 எனவே, அங்கு ஒன்று கூடி இருப்பது, அடிக்கும் காற்றை சமாளித்து, 107 00:14:43,802 --> 00:14:45,929 நிலப்பரப்பை நோக்கிச் செல்ல சாதகமாகவே அமையும். 108 00:14:49,391 --> 00:14:52,602 ஆனால் எந்த குட்டியுமே குதிக்க தயாராக இல்லை. 109 00:14:59,693 --> 00:15:04,906 எப்படியோ, கடைசியில் ஒரு இளம் குஞ்சு அதைச் செய்து மற்றவற்றை பின்தொடரச் செய்கிறது. 110 00:15:44,821 --> 00:15:47,490 அவை, கடற்கரைக்கோ அல்லது அங்குள்ள அந்த காலனிகளை நோக்கிப் போகவில்லை. 111 00:15:47,574 --> 00:15:52,078 அதற்கும் அப்பால் உள்ள அந்த பனிமூட்ட காடுகளுக்குள் அவை போக வேண்டும். 112 00:16:00,795 --> 00:16:02,255 பார்பரிடாக்டைலஸ். 113 00:16:02,964 --> 00:16:06,927 வலிமையான, வேட்டையாடும் டெரோசர்கள், சாதாரணமாக, அவை மீன்களை உண்பவை. 114 00:16:07,719 --> 00:16:10,680 ஆனால் இந்தக் குஞ்சுகள், மிகவும் சுவையாக இருப்பவை, அவற்றை விட்டுவிட முடியாது. 115 00:16:19,856 --> 00:16:24,945 தப்பிக்கும் வழிகளில் ஒன்று, இறக்கைகளை மடித்துக் கொண்டு, அப்படியே விழுவது. 116 00:16:32,077 --> 00:16:36,039 ஆனால் உயரம் குறைந்தால் அவற்றுக்கு அந்த காடுகளை அடைவதில் சிரமம் ஏற்படும். 117 00:17:13,159 --> 00:17:15,411 காலனியல் மோதி இறங்கிவிட்டது ஒன்று. 118 00:17:15,495 --> 00:17:18,540 புதிதாக வெளியே வந்த குஞ்சுகளுக்கு அது மிக ஆபத்தான இடம். 119 00:17:42,814 --> 00:17:46,651 அந்த முதல் தலைமுறைக் குஞ்சுகளில் ஒன்று, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது... 120 00:17:49,195 --> 00:17:51,489 இன்னும் சரியான திசையில் தான் போய் கொண்டிருக்கிறது. 121 00:18:10,508 --> 00:18:11,760 சரணாலயம். 122 00:18:14,596 --> 00:18:18,975 மீதமுள்ள குஞ்சுகளில், மிகச் சிலதே இவ்வளவு தூரம் வருகின்றன. 123 00:18:21,853 --> 00:18:23,021 ஆனால் அவற்றிற்கோ, 124 00:18:23,104 --> 00:18:28,318 ஒரு டெரோசருக்குத் தேவையான உணவு மற்றும் இருக்க இடம், எல்லாமே அந்தக் காடு தருகிறது. 125 00:18:31,029 --> 00:18:34,449 அடுத்த ஐந்து வருடங்களுக்கு, இதுதான் அவற்றின் வீடாகும். 126 00:18:35,659 --> 00:18:38,954 அதன் பின், அவை வளர்ந்து, மற்ற பெரிய பறவைகளுடன் சேர்ந்து, 127 00:18:39,037 --> 00:18:41,915 ஆழ்கடலில் மீன் பிடிக்கச் செல்லும். 128 00:18:52,467 --> 00:18:57,222 ஆழ்கடலில் மீன் பிடித்து வாழ்நாட்களை கழிக்கும் சில கடல் வாழ் விலங்குகளும் 129 00:18:57,305 --> 00:19:01,726 இந்த கடற்கரைக்கு அவ்வப்போது வர வேண்டும், ஒரு குறிப்பிட்ட காரணத்துக்காக. 130 00:19:03,520 --> 00:19:07,691 தண்ணீருக்குள் மூழ்கியிருக்கும் கண்டமான ஜீலான்டியாவில், 131 00:19:07,774 --> 00:19:10,277 ஒரு நீண்ட பயணம் முடிவிற்கு வந்து கொண்டிருக்கிறது. 132 00:19:11,444 --> 00:19:13,780 இவை தான் துரங்கிசார்கள், 133 00:19:13,863 --> 00:19:17,701 முப்பது அடியுள்ள ராட்சஸ கடல் ஊர்வன வகை. 134 00:19:24,916 --> 00:19:29,421 இந்த பெண் விலங்குடன் வருவது ஆறுமாதமான அதன் குட்டி. 135 00:19:34,301 --> 00:19:38,263 அதிகபட்சமாக, அது இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை, ஒரே ஒரு குட்டி தான் போடும். 136 00:19:38,346 --> 00:19:39,973 அது ஒரு பெரும் முதலீடு தான், 137 00:19:40,056 --> 00:19:44,144 அதுவும் அதன் மூலமாகத்தான் தாய்கும் குட்டிக்கும் உள்ள அந்த உறவு மிக முக்கியமானதாகிறது. 138 00:19:55,113 --> 00:20:00,118 இந்த குறிப்பிட்ட வளைகுடாவிற்கு தன் குட்டியை பல மைல்களுக்கு அப்பாலிலிருந்து அழைத்து வந்துள்ளது. 139 00:20:12,172 --> 00:20:13,590 மேலும் அவை தனித்தும் இல்லை. 140 00:20:14,174 --> 00:20:17,886 தென் பசிஃபிக் ஆழ்கடலில் இருக்கும் துரங்கிசார்களும் இங்கே வருகின்றன. 141 00:20:34,319 --> 00:20:40,033 பெண்களை ஈர்க்க, ஆண்களும் இங்கே ஒன்று கூடுகின்றன. 142 00:20:46,915 --> 00:20:51,628 ஆனால் இப்போதைக்கு, காதல் என்பது, அந்த பெண்ணின் எண்ணத்தில் முன்னுரிமை பெறவில்லை. 143 00:20:56,508 --> 00:21:00,595 சில இடங்களில் மட்டுமே கிடைக்கும் ஒரு பொருள் இந்த வளைகுடாவில் உள்ளது. 144 00:21:17,237 --> 00:21:22,200 கடினமான, உருண்டையான, வழவழப்பான கூழாங்கற்கள் இங்கு கிடைக்கின்றன. 145 00:21:24,744 --> 00:21:29,332 அவை நதியின் ஓட்டத்தினால் உருவாக்கப்பட்டவை, ஆனால் அவற்றை கண்டுப்பிடிப்பது கடினம். 146 00:21:36,548 --> 00:21:40,051 இருப்பினும், இங்கே, நீர்வீழ்ச்சிக்கு கீழே இருக்கும் அந்த குளத்தில், 147 00:21:40,135 --> 00:21:41,636 அவை நிறைந்து கிடக்கின்றன. 148 00:21:41,720 --> 00:21:44,222 அதிலிருந்து துரங்கிசார்கள் தங்களுக்கு வேண்டியதை எடுத்துக் கொள்ளலாம். 149 00:21:50,020 --> 00:21:52,314 அதன் பின் அவை, வியக்கத்தக்க ஒன்றைச் செய்கின்றன. 150 00:21:52,981 --> 00:21:54,316 அவை அந்த கூழாங்கற்களை விழுங்குகின்றன. 151 00:21:56,192 --> 00:22:01,740 அந்த கூழாங்கற்கள் அதன் எடையை அதிகரிக்கவும், இரைப்பை கற்களாகவும் பயன்படுகின்றன. 152 00:22:01,823 --> 00:22:05,619 இரைப்பைக்கற்கள் அவற்றின் வயிற்றிலேயே தங்கிவிட்டு 153 00:22:05,702 --> 00:22:08,038 வாயால் மெல்ல முடியாத உணவை அரைத்துவிடும். 154 00:22:16,338 --> 00:22:17,589 ஒரு இளம் விலங்கிற்கு, 155 00:22:17,672 --> 00:22:21,343 முதல் முறை, கூழாங்கற்களை விழுங்குவது எளிதான காரியமல்ல. 156 00:22:22,385 --> 00:22:24,429 அதற்கு பயிற்சி தேவை. 157 00:22:27,390 --> 00:22:33,021 ஆனால், அதே சமயம், அதன் தாய்க்கு, ஆண்களில் ஒரு பொருத்தத்தைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பைத் தருகிறது. 158 00:23:13,937 --> 00:23:17,315 அந்த குட்டிக்கு, கடைசியில், வெற்றி கிடைத்துவிட்டது. 159 00:23:22,654 --> 00:23:25,198 இப்போது, தனக்கு வேண்டியதை அதனால் விழுங்க முடியும். 160 00:23:25,282 --> 00:23:29,327 அதோடு, அது வளரும் போதும், இங்கு மீண்டும் வந்து இன்னும் கற்களை எடுத்துக்கொள்ளும். 161 00:23:35,917 --> 00:23:39,045 இப்போது அந்தக் குடும்பம் இந்த கடற்கரையை விட்டு வெளியேறி, 162 00:23:39,129 --> 00:23:41,381 மீண்டும் கடலுக்குள் இரை தேடச் செல்லும் நேரம் வந்துவிட்டது. 163 00:23:41,464 --> 00:23:43,842 அதோடு, இளம் துரங்கிசாருக்கு, 164 00:23:43,925 --> 00:23:47,470 வயது வந்த பிராயத்தை தொடுவதற்கு, அது ஒரு முக்கியமான படியாகும். 165 00:23:58,481 --> 00:23:59,774 தென் ஐரோப்பாவில், 166 00:23:59,858 --> 00:24:02,736 அட்லான்டிக் ஆழ்கடல் டெதிஸ் பெருங்கடலுடன் கலக்கும் பகுதியில், 167 00:24:02,819 --> 00:24:06,656 கடலோர உயிரினங்களின் எண்ணிக்கை, மிகப் பெரிய அளவில் வித்தியாசங்களுடன் காணப்படுகிறது. 168 00:24:09,034 --> 00:24:13,371 கடலின் அளவு உயர்ந்து வருகிறது என்றால், அதன் பொருள், எண்ணற்ற தீவுகள் நீருக்குள் மூழ்கியிருக்கின்றன 169 00:24:13,455 --> 00:24:16,875 அவை கடற்பாசிகளாலும், கிளிஞ்சல்களாலும், மற்றும் பவளங்களாலும் மூடப்பட்டுள்ளன. 170 00:24:27,010 --> 00:24:31,264 இந்த ஆழமற்ற கரைகளில், உள்ளே வரும் சூரிய ஒளியை, பவளங்கள் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்கின்றன, 171 00:24:31,348 --> 00:24:35,268 தங்களுக்குள் உண்டாகும் திசுக்களில் வளரும் ஒருவகை பாசியுடன் கூட்டுறவை உண்டாக்குகின்றன. 172 00:24:43,944 --> 00:24:48,573 கடலின் சுழற்சியில் மிதந்து வரும் மிகச்சிறிய உணவு துகள்களை சேகரிக்கின்றன. 173 00:25:05,131 --> 00:25:09,594 கற்பாறைகளின் மேல் இது போன்ற வகைவகையான கடல் வாழ் உயிரினங்கள் ஒட்டிக்கொள்கின்றன. 174 00:25:14,391 --> 00:25:18,395 ஆனால் அதில் ஒரு பாறை மட்டும் எதுவும் இல்லாமல் மழுங்கிக் காணப்படுகிறது. 175 00:25:21,565 --> 00:25:25,569 அதற்கு அப்பால், ஆழமான சறுக்கிய நிலப்பரப்பும், ஆழ் கடலும் 176 00:25:25,652 --> 00:25:28,280 கடல் வாழ் வேட்டை விலங்குகளுக்கு வீடாகிறது... 177 00:25:43,920 --> 00:25:47,549 மற்றும் ஜாக்கிரதையாக இல்லாத மேல்மட்ட மீன்களுக்கு ஆபத்தான இடமாகிறது. 178 00:26:14,659 --> 00:26:19,039 ஆனால் இந்த பிக்னோடான்ட் மீனுக்கு பயப்பட அவசியமே இல்லை. 179 00:26:20,332 --> 00:26:24,753 இதுதான் ஹாஃப்மன்ஸ் மொசாசர், ஆழ்கடலின் மிக பயங்கரமான வேட்டை விலங்கு. 180 00:26:25,337 --> 00:26:29,216 எனினும் அது இங்கு இரை தேடி வரவில்லை. அது வந்திருப்பது சுத்தம் செய்து கொள்வதற்கு. 181 00:26:34,888 --> 00:26:40,518 மொசாசர்கள் ராட்சஸ ஓணான்கள் தான், அவற்றுக்கு ஓணானைப் போல் வெட்டப்பட்ட நாக்கும், மற்றும் 182 00:26:40,602 --> 00:26:44,439 இனச்சேர்க்கை காலங்களில், ஓணானைப் போலவே பல நிற தோலும் இருக்கும். 183 00:26:47,108 --> 00:26:50,612 இப்போது, பழைய சருமத்தை களைய வேண்டும். 184 00:27:02,415 --> 00:27:04,376 சிறப்பாக காட்சியளிக்க வேண்டிய நேரம் வரும்போது, 185 00:27:04,459 --> 00:27:08,088 உடல்-முழுவதிலும் உள்ளதை சுறண்டி எடுத்துவிடுவது தான் நல்லது. 186 00:27:18,974 --> 00:27:23,395 மீன்களும், செம்மீன்களும் அதனுடைய உடலிலிருந்து விழும் சருமப்பகுதியை உண்டு விடும். 187 00:27:39,202 --> 00:27:43,832 மேல் பகுதிக்கு வருவது, இந்த கடல் வாழ், காற்று-சுவாசிக்கும் ஓணான், 188 00:27:43,915 --> 00:27:46,126 நுரையீரலை நிரப்பிக் கொள்ளவும், 189 00:27:47,460 --> 00:27:49,838 ஒய்வெடுக்கவும் உதவுகிறது. 190 00:28:06,938 --> 00:28:08,148 ஒரு எதிரி. 191 00:28:08,231 --> 00:28:10,942 இன்னும் இளைய ஆண், ஆளுமைப் பகுதியைப் பெற சவால் விடுகிறது. 192 00:28:37,135 --> 00:28:40,680 வயதான ஆணுக்கு எடை அதிகம், 15 டன்களுக்கும் மேல் உள்ளது. 193 00:28:40,764 --> 00:28:43,183 ஆனால் எதிரியோ, நுணுக்கமானவன். 194 00:28:56,655 --> 00:29:01,243 இதைப் போல சமமான திறனை உடையவை சண்டையிடும் போது, அவை பயங்கரமாக இருக்கக்கூடும். 195 00:29:03,620 --> 00:29:07,499 மொசாசர்கள், எதிரிகளின் உடைந்து நொறுங்கிய பற்கள் அவற்றின் மண்டையோடுகளுக்குள் பதிந்து 196 00:29:07,582 --> 00:29:09,376 இருப்பதோடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 197 00:29:16,508 --> 00:29:18,593 வயதான ஆண், மூச்சிழுத்துக் கொள்கிறது. 198 00:29:26,601 --> 00:29:28,937 இப்போது சூழல் அதற்கு சாதகமாக உள்ளது. 199 00:29:34,067 --> 00:29:37,487 தன் எதிர்யை கீழே இழுத்து அதை மூழ்கடிக்க முடியும். 200 00:30:24,326 --> 00:30:26,870 வயதான ஆணுக்கு வெற்றி கிடைத்துவிட்டது. 201 00:30:27,704 --> 00:30:31,958 இன்னும் சிறிது காலத்திற்காவது இந்த ஆழமில்லாப் பகுதி அதனுடைய ஆளுமையில் தான் இருக்கும். 202 00:30:40,217 --> 00:30:44,971 வட அமோரிக்காவின் கடற்கரையோரம் ஒரு பிறை நிலா தெரிகிறது. 203 00:30:49,684 --> 00:30:56,107 அதைத் தொடரும் அமைதியான, இருண்ட இரவுகளில், ஒரு அரிய, அழகிய நிகழ்வு நடக்கிறது. 204 00:31:04,783 --> 00:31:08,828 இன்றிரவு, ஆழத்திலும், ஒளியிருக்கிறது. 205 00:31:21,841 --> 00:31:25,887 மிளிரும் அம்மோனைட்டுகள், பாதாளத்திலிருந்து மேலே எழுகின்றன. 206 00:31:34,813 --> 00:31:38,942 அம்மோனைட்டுகள் என்பன மொல்லஸ்குகள், அவை ஆக்டொபஸ், ஸ்குவிட் வகையோடு தொடர்புள்ளது. 207 00:31:39,651 --> 00:31:43,947 இந்த வகை ஸ்காஃபிடிட்ஸ் மனித கையளவு தான் இருக்கும். 208 00:31:52,163 --> 00:31:55,917 வாரக் கணக்கில் அவையெல்லாம், கரையோர ஆழங்களில் கூடி வந்துள்ளன. 209 00:32:02,382 --> 00:32:06,845 ஆழத்தில் இந்த ஒளி, பிளாங்டனை உணவாக உட்கொள்ள அவற்றை ஈர்க்க உதவலாம். 210 00:32:07,554 --> 00:32:11,016 ஆனால் இன்று இரவு, அது வேறு ஒரு விஷயத்திற்கு பயன்படுகிறது. 211 00:32:13,643 --> 00:32:17,105 அவை மேல் மட்டத்திற்கு வந்திருப்பது இனச்சேர்க்கைக்காக. 212 00:32:17,188 --> 00:32:21,151 விரைவில், ஒவ்வொரு பகுதியிலும் ஆயிரக் கணக்கில் அவை கூடியிருப்பதை பார்க்க முடிகிறது. 213 00:32:34,331 --> 00:32:39,753 அக்கம்பக்கத்தல் இருப்பவற்றை தூண்டி விடுகிறது, அதை அடுத்தும் செய்ய,உயிரியல் ஒளிர்வை உண்டாக்குகின்றன. 214 00:32:49,095 --> 00:32:51,723 அவற்றின் நரம்பு மண்டலம் மிகவும் சிக்கலானது, 215 00:32:51,806 --> 00:32:55,268 அவை ஃபோட்டோசைட்டுகள் எனும் ஒளி-உண்டாக்கும் செல்களை கட்டுப்படுத்துகின்றன. 216 00:33:04,236 --> 00:33:09,115 பெரும் பெண்விலங்குகளைச் சுற்றி இருக்க, ஆண்களுக்குள் அடித்துக் கொள்கின்றன. 217 00:33:10,659 --> 00:33:16,623 காட்சியிலிருந்து கிடைக்கும் துப்புகளிலிருந்து எது சிறந்தது, எது தகுதியானது என தெரியும். 218 00:33:21,503 --> 00:33:25,966 ஜோடிகள் பிணைந்து சுற்றிக் கொள்ளும்போது, அவை ஒளி காட்சிகளை ஒருங்கிணைக்கின்றன. 219 00:33:32,597 --> 00:33:37,060 ஆணினால் அவளுடைய தாளத்தை துல்லியமாக ஈடுகொடுக்க முடியவில்லை எனில், மறுக்கப்படுவான். 220 00:33:42,148 --> 00:33:44,359 ஆனால் இங்கே சிறப்பான ஒருங்கிணைப்பு உள்ளது. 221 00:33:47,737 --> 00:33:51,992 இந்த ஜோடி இப்போது, முட்டையிட்டு, அடுத்த தலைமுறையை உருவாக்க உதவும். 222 00:33:57,455 --> 00:33:59,040 இனச்சேர்க்கைக்குப் பின், 223 00:33:59,124 --> 00:34:02,711 பெண்கள் அனைத்தும் ஆழமில்லா கரையோரங்களுக்குச் சென்று தங்கள் முட்டைகளை வெளியேற்றும். 224 00:34:11,595 --> 00:34:13,722 செபலோபாட்களில் பெரும்பாலும் நடப்பது போல, 225 00:34:13,805 --> 00:34:17,224 இனச்சேர்க்கை தான் அவற்றின் குறுகிய வாழ்வின் கடைசிச் செயல். 226 00:34:22,856 --> 00:34:27,110 காலை விடிவதற்குள், இந்த ஒளி விளக்குகள் எல்லாம் மங்கி இறந்திருக்கக்கூடும். 227 00:34:37,495 --> 00:34:41,499 இந்த அற்புதமான இரவு தான் அவற்றின் கடைசி இரவு. 228 00:34:54,596 --> 00:34:58,975 பூமியெங்கும், கரையோரங்கள், எண்ணற்ற விலங்குகளுக்கு இனச்சேர்க்கைக்காகவும், குட்டிகளை வளர்க்கவும், 229 00:34:59,059 --> 00:35:04,898 அவற்றுக்கு இரை தேடவும், உன்னதமான இடங்களாக அமைகின்றன. 230 00:35:11,988 --> 00:35:14,449 ஜீலாண்டியாவின் ஆழமற்ற கரையோரங்களில், 231 00:35:15,367 --> 00:35:19,162 மீண்டும் பெரும் கூட்டங்களாக துரங்கிசர்கள் குழுமியிருக்கின்றன. 232 00:35:34,010 --> 00:35:39,558 அவை தங்களுக்கு இருக்கும் நான்கு ஃபின்களையும் கொண்டு, சிரமமில்லாது, எளிதாக பயணிக்கின்றன 233 00:35:39,641 --> 00:35:43,019 இரைத் தேடவும், கோடைகாலத்தில் இங்கு வந்து குழுமவும். 234 00:35:44,938 --> 00:35:47,857 அவ்வப்போது, அவை தண்ணீருக்கு மேல் வந்து காற்றை சுவாசித்துச் செல்கின்றன 235 00:35:47,941 --> 00:35:51,278 பின்னர் தொடர்ந்து தங்கள் கடலுக்குள்ளான பயணத்தைத் தொடர்கின்றன. 236 00:36:00,078 --> 00:36:04,457 ஆனால் ஒரு பெண் மட்டும் தன் வழக்கமான நளினத்துடன் நீந்தவில்லை. 237 00:36:05,709 --> 00:36:10,922 அவளும், அவளுடைய இரண்டு-வயது குட்டியும் மற்ற உறுப்பினர்களை விட பின் தங்கி உள்ளனர். 238 00:36:14,843 --> 00:36:17,679 மிகவும் சிரமத்துடன் நகர்கிறது. 239 00:36:20,098 --> 00:36:23,226 அதை யாரும் கவனிக்காமல் இல்லை. 240 00:36:26,396 --> 00:36:30,025 கைகைஃபிலு, ஒரு பயங்கரமான வேட்டை விலங்கு. 241 00:36:35,864 --> 00:36:39,993 இந்த சிரமப்படும் பெண் அதன் கவனத்தை ஈர்க்கிறாள். 242 00:36:43,705 --> 00:36:47,375 இன்னும் ஆழமாக நீந்திச் செல்வது அவளுக்கு பாதுகாப்பைத் தரலாம். 243 00:36:53,215 --> 00:36:57,761 அந்த குட்டிக்கு, மொசாசரை திசைத் திருப்பும் முயற்சி, ஆபத்தாக முடியலாம். 244 00:36:59,679 --> 00:37:01,848 ஆனால், அதனால் கொஞ்சம் அவகாசத்தைப் பெறலாம். 245 00:37:07,312 --> 00:37:10,774 தாயும் குட்டியும் முற்றிலும் தனியாக இல்லை. 246 00:37:21,534 --> 00:37:23,995 இந்த விலங்குகள் உறவுகளாக இருக்கலாம், 247 00:37:24,079 --> 00:37:28,667 மேலும் அந்த கைகைஃபிலுவை விரட்டுவது அவை அனைத்திற்குமே நல்லது தான். 248 00:37:53,191 --> 00:37:57,737 இது தான் அந்த பெண் விலங்கின் சிரமத்திற்கு காரணம். 249 00:37:58,780 --> 00:38:00,323 அவள் கர்ப்பமாக இருக்கிறாள். 250 00:38:24,890 --> 00:38:28,643 இப்போது, கிட்டத்தட்ட ஒன்றரை வருட கால கர்ப்பத்திற்கு பிறகு, 251 00:38:29,519 --> 00:38:30,812 குழந்தை பிறக்கிறது. 252 00:38:36,902 --> 00:38:41,740 பத்தடிக்கும் மேல் நீளம், கிட்டத்தட்ட தாயின் பாதி நீளம் உள்ளது. 253 00:38:42,407 --> 00:38:45,660 மிகப் பெரிய குட்டிகளில் ஒன்று. 254 00:38:53,710 --> 00:38:58,590 அது தண்ணீரின் மேல் வந்து தன் முதல் மூச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். 255 00:39:19,819 --> 00:39:24,199 இந்த இளம் துரங்கிசார் 80 வருடங்களுக்கு வாழலாம். 256 00:39:26,243 --> 00:39:28,954 இப்போது, குடும்பத்தின் ஆதரவுடன், 257 00:39:29,037 --> 00:39:32,040 அது வேட்டை விலங்காக மீண்டும் தன் இடத்தைப் பெறலாம்... 258 00:39:35,126 --> 00:39:38,004 அதுவும் பூமியின் மிக போஷாக்கான வாழ்விடமான, 259 00:39:39,130 --> 00:39:44,052 வரலாற்றிற்கு முந்தைய கிரகத்தின், கடற்கரையைச் சுற்றியுள்ள கடல்களில். 260 00:39:59,276 --> 00:40:01,820 Prehistoric Planetல் அடுத்து வருவது, 261 00:40:01,903 --> 00:40:07,284 வறுத்தெடுக்கும் பாலைவனங்களில் ராட்சஸ டைனோசர்கள், ஒரு துணைக்காக சண்டையிடுவது. 262 00:40:08,243 --> 00:40:09,661 அதோடு பூமியெங்கும், 263 00:40:09,744 --> 00:40:14,583 தனித்துவமான சில உயிரினங்கள், மிகக் கொடுமையான சூழல்கள் நிலவும் இடங்களில், 264 00:40:14,666 --> 00:40:17,878 பிழைப்பதற்கு தங்களுக்குத் தெரிந்த தந்திரத்தை உபயோகிக்கின்றன. 265 00:40:18,879 --> 00:40:21,923 இந்த கதைகளுக்குப் பின்னால் உள்ள விஞ்ஞானத்தை அறிய, 266 00:40:22,007 --> 00:40:26,469 உடனே, Prehistoric Planet இணையதளத்தை அணுகவும். 267 00:41:54,516 --> 00:41:56,518 தமிழாக்கம் அகிலா குமார்