1 00:00:11,678 --> 00:00:15,182 வழங்குபவர் டேவிட் அட்டன்பரோ 2 00:00:16,517 --> 00:00:21,563 எந்த காலத்திலும் ஆச்சரியத்தை உண்டாக்ககூடிய, அதே சமயம் பிரபலமான ஒரு விலங்கு 3 00:00:22,105 --> 00:00:26,318 இருந்துள்ளது என்றால் அது நிச்சயமாக டைனோசர் தான். 4 00:00:27,361 --> 00:00:29,613 டிரைனோசரஸ் ரெக்ஸ். 5 00:00:30,656 --> 00:00:35,202 நம் அனைவரிடத்திலும் கற்பனையைக் கிளரும் ஒரு விலங்கு அது. 6 00:00:35,285 --> 00:00:38,247 அது எந்த மாதிரி விலங்காக இருந்தது? 7 00:00:38,330 --> 00:00:41,542 பார்க்க எப்படி இருந்தது? எப்படி வாழ்ந்தது? 8 00:00:41,625 --> 00:00:45,587 இப்போது, விஞ்ஞான ஆய்வுகள் இதற்கெல்லாம் விடையளிக்கிறது. 9 00:00:45,671 --> 00:00:47,923 இது டி. ரெக்ஸ்சைப் பற்றியது மட்டும் இல்லை, 10 00:00:48,006 --> 00:00:51,343 அதன் கூடவே வாழ்ந்த மற்ற விலங்கினங்களைப் பற்றியதும் தான். 11 00:00:51,426 --> 00:00:58,016 மேலும் இப்போது வந்துள்ள இமேஜிங் தொழில் நுட்பம் அவற்றையெல்லாம் உயிர் பெற்று எழச்செய்கிறது. 12 00:01:01,436 --> 00:01:05,440 பூமி கிரகம், 66 மில்லியன் வருடங்களுக்கு முன். 13 00:01:13,949 --> 00:01:17,494 இராட்சஸ பறவைகளால் வானமெல்லாம் நிறைந்திருந்தது. 14 00:01:20,038 --> 00:01:24,084 கடல்களிலோ, பூதாகாரமான ஊர்வனங்கள் ஆழத்தை ரோந்து சுற்றி வந்தவண்ணம் இருந்தன. 15 00:01:26,128 --> 00:01:29,256 மற்றும் நிலத்திலோ, அனைத்து வகையான டைனோசர்களும், 16 00:01:30,465 --> 00:01:33,218 உயிர் வாழ போராட்டத்தைச் சந்திக்கின்றன. 17 00:01:39,391 --> 00:01:45,689 டைனோசர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட உலக்கதைப் பற்றி இப்போது நமக்கு பல தகவல்களும் கிடைத்துள்ளன. 18 00:01:49,651 --> 00:01:52,196 இது அவற்றின் கதை தான். 19 00:02:05,167 --> 00:02:10,631 காடுகள் 20 00:02:14,468 --> 00:02:20,224 தென்னமெரிக்க காடுகளில் தான் உலகின் மிக உயர்ந்த மரங்கள் சில இருக்கின்றன. 21 00:02:24,603 --> 00:02:28,023 அவை சுமார் 300 அடிகளுக்கும் மேல் உயர்ந்து வளரக்கூடியவை. 22 00:02:33,570 --> 00:02:36,573 ஆனால் இங்கும் சில ராட்சஸ விலங்குகள் உள்ளன. 23 00:03:01,098 --> 00:03:03,433 தாவர வகைகளை-உண்ணும் டைனோசர்கள். 24 00:03:11,108 --> 00:03:13,694 இவை ஆஸ்ட்ரோபொசைடன். 25 00:03:14,278 --> 00:03:16,738 அவை 80 அடி நீளம் இருக்கும். 26 00:03:27,499 --> 00:03:30,043 அதோடு அவை மாபெரும் பசியுணர்வை உடையவை. 27 00:03:32,838 --> 00:03:36,758 அவற்றின் பற்கள் மெல்லுவதற்கு பயன்படுவதில்லை, 28 00:03:37,342 --> 00:03:39,011 அவை வெட்டுவதற்கு தான் பயன்படுகின்றன. 29 00:03:44,349 --> 00:03:50,522 இதைப் போன்ற ஒரு மந்தை, தினமும் பத்து டன் தாவரங்களை உண்ணக்கூடியவை. 30 00:03:55,402 --> 00:04:01,450 கிளைகளின் நுணியில் முளைக்கும் இளம் கொழுந்துகளை இவை விரும்பி உண்ணும். 31 00:04:03,035 --> 00:04:06,872 ஆனால், தங்களைவிட அதிக உயரம் உடைய மரங்களைக் கண்டால், 32 00:04:06,955 --> 00:04:08,498 அவை கவலைக் கொள்வதில்லை. 33 00:04:21,386 --> 00:04:25,933 அவற்றின் பெரும் எடையைக் கொண்டும், 8-அங்குல பருமன் உள்ள மார்பெலும்பையும் 34 00:04:26,016 --> 00:04:29,144 பயன்படுத்தி, மரங்களை வீழ்த்திவிடுகின்றன. 35 00:05:03,095 --> 00:05:04,263 வெற்றி. 36 00:05:07,432 --> 00:05:10,477 ஆனால் எப்போதுமே காடுகளில் வாழ்க்கை போராட்டம் தான். 37 00:05:12,271 --> 00:05:15,399 குறிப்பாக புதிய இடம் உருவாகும்போது. 38 00:05:33,333 --> 00:05:36,211 வெளிச்சத்தைப் பெற, தாவரங்கள் போட்டிப் போடுகின்றன... 39 00:05:38,255 --> 00:05:42,467 மற்றும் பல வழிகளையும் உபயோகித்து, ஆதிக்கம் செலுத்த முற்படுகின்றன. 40 00:05:51,852 --> 00:05:55,063 அந்த அடர்ந்த புதரில் உள்ள இடைவெளி, விரைவில் மூடப்படுகிறது. 41 00:06:01,153 --> 00:06:05,782 பூமியின் நிலப்பரப்பில், முக்கால்வாசி தாவரங்களும், மரங்களும் வளர்கின்றன. 42 00:06:09,870 --> 00:06:13,832 இந்த வரலாற்றிற்கு முந்தைய கிரகம், ஒரு பசுமையான கிரகம். 43 00:06:18,086 --> 00:06:21,882 பல வகையான டைனோசர் இனங்கள் காடுகளில் வசிக்கின்றன. 44 00:06:25,052 --> 00:06:29,890 டிரைசெரடாபஸ், வட அமெரிக்காவின் மிகப் பெரிய டைனோசர்களில் ஒரு வகை. 45 00:06:35,646 --> 00:06:38,065 அவை 26 அடி நீளம் வளரக்கூடியவை. 46 00:06:43,111 --> 00:06:47,866 அவற்றின் தலைபாகத்தில் அலங்காரத்தைப் போலுள்ள கொம்புகள், சண்டையின் போது அவற்றை பாதுகாக்கின்றன. 47 00:06:52,246 --> 00:06:54,665 ஆனால் தாவரங்களுக்கும் தற்காப்பு உத்திகள் உள்ளன. 48 00:07:00,337 --> 00:07:02,005 நச்சுத்தன்மை கொண்ட விஷங்கள். 49 00:07:09,721 --> 00:07:12,724 இவை குறிப்பாக இளம் விலங்குகளுக்கு ஆபத்தாக அமைகின்றன. 50 00:07:15,936 --> 00:07:20,774 தாயின் எடையில் 2 சதவீதம் தான் குட்டியின் எடையாக இருக்கும். 51 00:07:23,861 --> 00:07:28,198 தாவரங்களின் நச்சுத்தன்மை அவற்றை மிகவும் நோய் உறச் செய்யும். 52 00:07:38,959 --> 00:07:43,088 ஆனால் டிரைசெரடாபஸுக்கு இது போன்ற விஷங்களை சமாளிக்க ஒரு வழி உள்ளது. 53 00:07:44,965 --> 00:07:47,092 அதற்கு ஒரு மாற்று மருந்தைப் பயன்படுத்துகின்றன. 54 00:07:54,057 --> 00:07:59,104 இது கிடைக்கும் ஒரு இடம், ஒரு குகைக்குள் உள்ளது, அதனால் அவ்வப்போது அவை சென்று வருகின்றன. 55 00:08:14,786 --> 00:08:19,124 எனினும், இந்த இளம் விலங்கு, இதற்கு முன் இங்கு வந்ததே இல்லை. 56 00:08:41,897 --> 00:08:44,232 பல்லாயிரம் ஆண்டுகளாக ஒரு நிலத்தடி ஆற்றினால் உருவாக்கப்பட்ட 57 00:08:44,316 --> 00:08:49,363 ஒரு பாதையின் வழியே, அவை தங்களுக்கான வழியைக் கண்டறிய வேண்டும். 58 00:09:09,800 --> 00:09:13,178 இப்போது அவை ஒளி எட்டாத இடத்திற்கு சென்றுவிட்டன. 59 00:09:15,806 --> 00:09:17,641 எதுவும் பார்க்கமுடியாத இருள். 60 00:09:23,146 --> 00:09:25,983 அந்த குட்டி, தன் குடும்பத்தின் அருகிலேயே இருக்க வேண்டும். 61 00:09:34,741 --> 00:09:36,243 ஆனால் ரொம்ப நெருக்கமாகவும் வரக்கூடாது. 62 00:09:56,889 --> 00:10:01,101 ஒரு தவறான திருப்பம் கூட, ஆபத்தாக முடியும். 63 00:10:40,432 --> 00:10:44,394 இறுதியில், அந்த மந்தை, அவை சென்று அடையவேண்டிய இடத்தை அடைகின்றன. 64 00:10:54,821 --> 00:10:59,535 இது தான் அந்த மாற்று மருந்து: ஒரு விசேஷ களிமண். 65 00:11:02,621 --> 00:11:07,751 இவை நக்கும் களிமண் என்று அழைக்கப்படுகின்றன, அவ்வப்போது இங்கு அது புசிக்கப்படுகின்றது. 66 00:11:28,188 --> 00:11:30,190 ஆனால் யாரையோ காணவில்லையே. 67 00:11:36,613 --> 00:11:38,240 அதனுடைய குட்டி எங்கே? 68 00:12:06,351 --> 00:12:08,729 இந்த கன்றுகுட்டிக்கு அதிர்ஷ்டம் தான். 69 00:12:24,786 --> 00:12:27,331 அதன் வயிற்று குடற்பையில் களிமண் ஒட்டிக்கொண்டால், 70 00:12:27,414 --> 00:12:32,503 அது உண்ணும் தாவர இலைகளில் உள்ள நச்சுத் தன்மையிலிருந்து அதற்கு பாதுகாப்பு கிடைக்கும். 71 00:12:37,508 --> 00:12:42,054 விரைவில் அவை யாவும் மீண்டும் காட்டிற்குள் சென்று, சூரிய ஒளியைப் பெறும். 72 00:12:47,309 --> 00:12:50,354 உண்மையில், மிகக் குறைவாகவே சூரிய ஒளி 73 00:12:50,437 --> 00:12:53,524 அந்த அடர்ந்த காடுகளின் தரையைத் தொடுகின்றது. 74 00:12:55,567 --> 00:12:56,693 பாட்டகோனியாவில், 75 00:12:56,777 --> 00:13:01,156 அடர்த்தியான புதர்கள் இடைவெளியில்லாமல் நூற்றுக்கணக்கான மையில்களுக்கு வளர்ந்துள்ளன. 76 00:13:04,701 --> 00:13:09,414 ஆனால், இடையிடையே, மர்மமான இடைவெளிகள் காணப்படுகின்றன, இங்குள்ளது போல. 77 00:13:28,475 --> 00:13:35,107 இது 12-அடி உயரமுள்ள, இரண்டு-டன் எடையுள்ள, ஒரு கார்னோடாரஸ் செய்த வேலை. ஒரு ஆண். 78 00:13:39,862 --> 00:13:43,574 இந்த இடத்தை சுத்தம் செய்ய அதற்கு நெடு நேரமாகியிருக்கிறது. 79 00:13:46,285 --> 00:13:50,372 அதோடு அதை அப்படியே சுத்தமாக வைத்திருக்க அதை கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். 80 00:13:58,005 --> 00:14:01,884 பெண் விலங்குகளுக்கு தன் திறனைக் காட்ட, அமைக்கப்பட்ட மேடை அது. 81 00:14:05,220 --> 00:14:08,807 எல்லாம் தயாரான பின், அதை அறிவிக்கிறது. 82 00:14:22,321 --> 00:14:24,156 அதன் சத்தம் எல்லாம் குறைந்த ஒலியில் இருப்பவை 83 00:14:24,239 --> 00:14:27,284 அதனால் அடர்த்தியான தாவர புதர்களில் அந்த ஒலிகள், உயர் சுருதியில் இருக்கும் ஒலிகளை விட, 84 00:14:27,367 --> 00:14:29,494 இன்னும் வேகமாகச் செல்லக்கூடியவை. 85 00:14:53,143 --> 00:14:56,230 இறுதியாக, ஒரு பெண் விலங்கு வருகிறது. 86 00:15:04,196 --> 00:15:07,824 ஆண் விலங்கை விட, பெண் விலங்கு இன்னும் பெரிதாகவும், வலிமையுள்ளதாகவும் இருக்கிறது. 87 00:15:22,214 --> 00:15:25,509 இப்போது, எப்படியாவது, அந்த பெண் விலங்கை அது கவர வேண்டும். 88 00:15:30,305 --> 00:15:33,016 அதற்கு இந்த ஒரு வாய்ப்பு தான் கிடைக்கலாம். 89 00:15:36,645 --> 00:15:38,689 பெண் விலங்கு, ஆண் விலங்கை கூர்ந்து கவனிக்கிறது. 90 00:15:42,901 --> 00:15:44,778 ஆண் விலங்கு அதைக் கவர வேண்டுமெனில், 91 00:15:45,529 --> 00:15:49,032 மிகவும் சிறப்பான ஒரு வழியில் தான் அதைச் செய்ய முடியும். 92 00:15:59,710 --> 00:16:03,881 அதற்கு பெரிய கொம்புகளோ அல்லது அட்டகாசமான வாலோ இல்லை. 93 00:16:06,216 --> 00:16:11,263 ஆனால், உபயோகமில்லாத, இரண்டு சிறிய கரங்கள் உள்ளன. 94 00:16:15,434 --> 00:16:18,812 அந்த இரண்டு கரங்களின் கீழ் பகுதியில் உள்ள நீள்கோள மூட்டைக் கொண்டு, 95 00:16:18,896 --> 00:16:22,566 அந்த ஆண் விலங்கால், அவற்றை தனித்தனியாக இயக்க முடிகிறது. 96 00:16:51,595 --> 00:16:52,721 இன்று வெற்றி கிடைக்கவில்லை. 97 00:17:00,020 --> 00:17:03,398 அதை இன்னும் எப்படி சிறப்பாக செய்திருக்க முடியும்? யார் அறிவார்கள்? 98 00:17:08,694 --> 00:17:12,366 இப்போதைக்கு, மீண்டும் குப்பையை அகற்றும் வேலையை தான் செய்ய வேண்டும். 99 00:17:20,582 --> 00:17:23,001 இது கிழக்காசியா. 100 00:17:27,422 --> 00:17:31,677 இந்த மலைக்காடுகளில், இலையுதிர் காலம் விரைவாகவே வந்துவிடுகிறது. 101 00:17:37,516 --> 00:17:40,853 இந்த சமயத்தில் தான் பல மரங்கள், பழங்களைத் தருகின்றன. 102 00:17:44,857 --> 00:17:49,987 அதில் மிகவும் மதிப்புள்ளவையாக உள்ளவை, கிங்கோ மரத்தின் கொட்டைகள் தான். 103 00:17:56,952 --> 00:18:01,498 கொரித்தோராப்டர்ஸ் என அழைக்கப்படும் டைனோசர்களுக்கு அவை விருந்தாகின்றன. 104 00:18:06,211 --> 00:18:09,256 இவற்றுக்கு இறக்கைகள் இருந்தபோதிலும், அவை பறப்பதில்லை. 105 00:18:13,552 --> 00:18:17,389 இவை பெரும் அளவில் விழுந்துள்ள இந்தப் பழங்களை கண்டுபிடித்துள்ளன. 106 00:18:18,974 --> 00:18:22,978 ஆனால் இது போன்ற சேர்க்கை, அழையா விருந்தாளிகளின் கவனத்தை ஈர்க்கும். 107 00:18:28,358 --> 00:18:33,447 கியான்ஜியோசரஸ், இது ஆசியக் காடுகளின் பிரதான வேட்டை விலங்கு. 108 00:18:40,829 --> 00:18:43,832 இது ஒரு பெண் விலங்கு, 30 அடிக்கும் மேல் நீளமானது. 109 00:18:48,587 --> 00:18:53,091 அது ஒரு கொரித்தோராப்டரைப் பிடிக்க வேண்டும் என்றால், அதன் அருகில் செல்ல வேண்டும். 110 00:19:01,183 --> 00:19:03,143 இங்கே ஒளிய அதிக மறைவு இல்லை. 111 00:19:08,232 --> 00:19:12,361 ஆனால் அதன் இரை, இது இருப்பதை இன்னும் கவனிக்கவில்லை. 112 00:20:02,494 --> 00:20:04,037 தோற்றுவிட்டது. 113 00:20:04,121 --> 00:20:05,873 ஆனால், உண்மையில், பெரும்பாலும் வேட்டைகள், 114 00:20:05,956 --> 00:20:10,252 வாழ்க்கை வரலாற்றில், தோற்கத் தான் செய்கின்றன. 115 00:20:18,343 --> 00:20:20,596 பருவக் காற்று வலுவாகி வர, 116 00:20:20,679 --> 00:20:25,726 இந்த மிதவெப்பக் காடுகளில் உள்ள பல மரங்களின் இலைகள் உதிர ஆரம்பிக்கின்றன. 117 00:20:29,688 --> 00:20:32,274 குளிர்காலம் மிக துன்பமானதாக இருக்கும். 118 00:20:38,155 --> 00:20:43,160 இருப்பினும், வேட்டை விலங்குகளுக்கு ஒரு சூறாவளி, சிறியதொரு வாய்ப்பை உருவாக்கித் தருகிறது. 119 00:20:45,746 --> 00:20:47,247 அந்த பெண் விலங்கு மீண்டும் முயற்சிக்கிறது. 120 00:20:51,710 --> 00:20:57,341 இருளில் அது அவ்வளவு தெளிவாக காணப்படவில்லை, மற்றும் காற்றின் சுழற்சி கவனத்தை திருப்புகிறது. 121 00:21:48,642 --> 00:21:50,811 இது 80 பவுண்டு பரிசு. 122 00:21:53,981 --> 00:21:57,985 அதுவும் குளிர்காலம் நெருங்குவதால், அதன் மதிப்பு இன்னும் கூடுகிறது. 123 00:22:06,618 --> 00:22:08,662 வட அமெரிக்கக் காடுகளில், 124 00:22:09,246 --> 00:22:14,626 காட்டு வாசிகளுக்கு இன்னொரு வருடாந்திர தொல்லையும் உண்டு. 125 00:22:24,928 --> 00:22:28,974 மின்னலின் தாக்குதலால் தீ பிடித்துவிட்டது. 126 00:22:38,150 --> 00:22:43,363 அது பரவும்போது, வெப்பம் 2000 டிகிரீ ஃபாரன்ஹீட்டுக்கும் மேல் அதிகரிக்கிறது. 127 00:22:57,628 --> 00:23:01,048 பல நூறு அடிகள் வரை, அந்த நெருப்பு காற்றில் எழுவதை பார்க்கலாம். 128 00:23:16,146 --> 00:23:17,814 பெரும்பாலான விலங்குகள் ஓடிவிடுகின்றன. 129 00:23:19,942 --> 00:23:24,154 ஆனால் இந்த எட்மோன்டோசாரஸோ, ஒரு குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும். 130 00:23:26,573 --> 00:23:28,242 குடும்பத்தை விட்டுவிட முடியாது. 131 00:23:30,327 --> 00:23:35,791 இப்போது நெருப்பு அவற்றை எட்டுவதற்கு முன் வெளியேறி, முடியும் வரை காத்திருக்க வேண்டும். 132 00:23:47,302 --> 00:23:50,264 இது ஒரு பெரிய நாசம் போல தோன்றலாம். 133 00:23:57,312 --> 00:24:01,316 ஆனால் ஆச்சரியமாக, சில தாவரங்கள் 134 00:24:01,400 --> 00:24:04,027 எரிந்தால் தான் அவற்றின் வாழ்க்கை சுழற்சி முடிவடையும். 135 00:24:08,240 --> 00:24:12,911 பைன் மரங்களின் கோன்கள் திறப்பதற்கும், அவற்றின் விதைகள் வெளியே வருவதற்கும்... 136 00:24:15,372 --> 00:24:17,249 இந்த தீவிரமான வெப்பம் தேவைப்படுகிறது. 137 00:24:28,260 --> 00:24:31,597 தீ அணைந்து சில மணி நேரங்களுக்குள்ளேயே, 138 00:24:33,348 --> 00:24:36,101 விலங்குகள் திரும்பி வரத் தொடங்குகின்றன. 139 00:24:39,980 --> 00:24:42,316 வண்டுகள் தான் முதலில் வருகின்றன. 140 00:24:45,736 --> 00:24:47,696 அவை முட்டையிட ஆரம்பிக்கின்றன. 141 00:24:49,156 --> 00:24:52,618 அவை பொறித்து வெளியே வரும்போது, அந்த புழுக்கள், தங்கள் முதல் விருந்தாக 142 00:24:52,701 --> 00:24:56,121 முடிவேயில்லாத பட்ட மரங்களை உண்ண ஆரம்பிக்கின்றன. 143 00:25:06,757 --> 00:25:10,260 இந்த அட்ராசிரெப்டர் ஒரு சந்தர்ப்பவாதி. 144 00:25:18,227 --> 00:25:21,939 உணவு கிடைக்கும்போது, விரைவாக வந்து எடுத்துக்கொள்ளும். 145 00:25:27,152 --> 00:25:29,530 அதோடு இங்கே வேறு ஒன்றும் கிடைக்கிறது. 146 00:25:40,332 --> 00:25:42,960 புகை என்பது பூச்சிக்கொல்லி... 147 00:25:47,214 --> 00:25:51,218 அது விலங்கிடம் ஒட்டிக்கொண்டிருக்கும் ஒட்டுண்ணிகளை ஒழிக்க உதவும். 148 00:25:57,224 --> 00:25:59,351 ஆனால், மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 149 00:26:15,450 --> 00:26:18,537 இது ஒரு இரண்டு டன் எடையுள்ள அன்கைலோசர். 150 00:26:23,083 --> 00:26:26,920 தீ அணைந்த பின் உண்ண தகுதியான ஒன்று அதற்கும் கிடைக்கிறது. 151 00:26:36,096 --> 00:26:37,181 கரிக்கட்டை. 152 00:26:39,766 --> 00:26:45,230 அதன் வயிற்றுக் குடலில் உள்ள பல தாவர நச்சுக்களை எல்லாம் ஒன்றிணைத்து, அவற்றை செயலிழக்கச் செய்யும். 153 00:26:57,242 --> 00:27:01,246 பெண் எட்மோன்டோசாரஸ் காட்டை விட்டு வெளியேறுகிறது. 154 00:27:08,337 --> 00:27:12,716 எப்படியோ, அந்த பெண் விலங்கு தன் இரு குட்டிகளையும் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து வந்துவிட்டது. 155 00:27:27,189 --> 00:27:32,486 காட்டின் தாவரங்கள் புத்துயிர் பெறும் வரை, வேறு புதிய பசுமையிடங்களை தேடி அடையவேண்டும். 156 00:27:42,329 --> 00:27:46,750 காட்டுத் தீ அரிதாக இருக்கும் இடங்களிலும் கூட, மரங்கள் நீடூழி வாழ்வதில்லையே. 157 00:27:47,292 --> 00:27:52,422 அவை இறந்தபின், முற்றிலும் வேறுபட்ட ஒரு உயிரினத்திற்கு அவை உணவாகின்றன. 158 00:27:57,636 --> 00:28:02,057 அதில் சில, இரவில், விசித்திரமான வகையில் கண்ணில் படுகின்றன. 159 00:28:05,936 --> 00:28:08,313 காட்டுத் தரையில்... 160 00:28:11,525 --> 00:28:13,527 காளான்கள் உருவாகின்றன... 161 00:28:15,487 --> 00:28:17,739 அதோடு அவை ஒளிரவும் ஆரம்பிக்கின்றன. 162 00:28:25,831 --> 00:28:30,919 அவற்றின் திசுக்களின் ஆழத்தில் ஏற்படும் ரசாயன விளைவுகளால் ஒளியை உருவாக்குகின்றன. 163 00:28:35,048 --> 00:28:37,968 ஆனால் அவை ஏன் அப்படிச் செய்கின்றன என்பது மர்மம் தான். 164 00:28:41,597 --> 00:28:44,266 ஒருவேளை அந்த ஒளியால் பூச்சிகள் ஈர்க்கப்பட்டு, 165 00:28:44,349 --> 00:28:47,728 அதன் மேல் உட்காருவதால், காளான்களின் நுண்துகளை பரப்ப உதவுகின்றன. 166 00:28:56,236 --> 00:28:58,322 இங்கே, மத்திய ஆசியாவில், 167 00:28:58,405 --> 00:29:03,076 காட்டில் இரவுகளில், வினோதமான ஓசைகள் கேட்கும். 168 00:29:09,791 --> 00:29:12,753 மாபெரும் சாரோபாடுகள் உறங்குகின்றன. 169 00:29:19,259 --> 00:29:22,054 அவற்றின் தலையிலும் கழுத்திலும் காற்று பைகள் உள்ளன, 170 00:29:22,137 --> 00:29:26,350 அவை, எடையை குறைக்க உதவுகின்றன, ஆனால் குறட்டை சத்தத்தை பெருக்குகின்றன. 171 00:29:30,979 --> 00:29:33,398 ஆனால் எல்லோருமே உறங்கவில்லை. 172 00:29:37,569 --> 00:29:42,783 உருவத்தில் சற்றே சிறியதாக உள்ள விலங்குகளுக்கு பகலைவிட இருளில் பாதுகாப்பு அதிகம். 173 00:29:45,661 --> 00:29:50,791 இந்த தெரிஜீனோசாரஸ்கள் ஆறு மாதங்களுக்கு முன் தான் முட்டையிலிருந்து வெளியே வந்தன. 174 00:29:55,879 --> 00:30:00,634 இப்போது இவை வெறும் மூன்றடி நீளம் தான், அவற்றின் முழு வளர்ச்சியில், இது வெறும் பத்து சதவீதம் தான். 175 00:30:03,387 --> 00:30:08,892 அவற்றின் கால் நகங்கள் கத்திகளைப் போல் இருந்தாலும் சாலாட் கொடுக்க உதவும்... 176 00:30:12,521 --> 00:30:15,315 ஏனெனில் அவை தாவர உண்ணிகள். 177 00:30:18,151 --> 00:30:23,907 எனினும் இந்த காட்டில் எங்கு தேடுவது என்பதை அறிந்தால், எல்லா வகையான உணவும் கிடைக்கும். 178 00:30:26,076 --> 00:30:27,077 தேன். 179 00:30:29,371 --> 00:30:33,125 மேல் கிளைகளில் உள்ள தேன்கூட்டிலிருந்து தேன் ஒழுகுகிறது. 180 00:30:36,837 --> 00:30:41,091 தரைவாசிகளின் கைக்கு எட்டாத உயரத்தில் தான் தேனீக்கள் அவற்றின் கூட்டை வழக்கமாக உருவாக்கும். 181 00:30:42,801 --> 00:30:45,262 ஆனால், இது மற்றதைவிட கீழே உள்ளது. 182 00:30:47,764 --> 00:30:49,766 அதோடு அதை விடமுடியாத அளவிற்கு நன்றாக உள்ளது. 183 00:31:08,410 --> 00:31:13,790 மற்ற டைனோசர்களைப் போல் இல்லாமல், தெரிஜீனோசாரஸ்களால் மரமேற முடியும். 184 00:31:19,004 --> 00:31:21,798 அவை வல்லுனர்கள் இல்லாத போதிலும். 185 00:31:55,791 --> 00:32:01,839 சீற்றமடைந்த தேனீக்கள், ஒரு பறக்கும் வடிவத்தை உருவாக்கி, தொல்லைத் தருபவர்களை விரட்டுகின்றன... 186 00:32:08,387 --> 00:32:10,222 அல்லது அவை விளைவுகளை சந்திக்க வேண்டும். 187 00:32:39,543 --> 00:32:42,254 நன்றாக வளர்ந்த ஒரு தெரிஜீனோசாரஸ். 188 00:32:47,634 --> 00:32:53,098 அது தோற்றத்தில் மிகப்பெரியது, சுமார் 30 அடி உயரமும், ஐந்து டன் எடையும் உள்ளது. 189 00:33:13,118 --> 00:33:16,496 இந்த விலங்கைத் தடுக்க, தேனீக்களால் எதுவும் செய்ய முடியாது. 190 00:33:35,015 --> 00:33:37,476 கடைசியில், ஒரு சின்ன விருந்து. 191 00:33:39,478 --> 00:33:42,564 அதோடு இன்னும் சில கொட்டுகளும். 192 00:33:57,871 --> 00:34:03,126 பகல் பொழுதானாலும், இந்த அடர்ந்த காடுகளின் அடிதளத்தில் இருள் சூழ்ந்து தான் உள்ளது, 193 00:34:03,210 --> 00:34:05,546 ஐரோப்பாவில் உள்ள இந்த காட்டைப் போல. 194 00:34:09,174 --> 00:34:12,844 எந்த விதமான விலங்கும் வித்தியசப்படுத்திப் பார்ப்பது கடினமானது தான். 195 00:34:18,934 --> 00:34:20,811 இருப்பினும், அவை எல்லா இடத்திலும் உள்ளன. 196 00:34:26,233 --> 00:34:29,485 டெல்மாட்டோசாரஸ் தனது பாதுகாப்பை உடைத்து வெளியே வருவதே இல்லை. 197 00:34:39,413 --> 00:34:42,123 அதோடு, அதே காணப்படாத... 198 00:34:46,043 --> 00:34:47,420 ஜால்மோஸீஸ். 199 00:34:49,965 --> 00:34:53,302 மிகப் பழமையான டைனோசரின் வம்சா வழியில் வந்தது தான் அது. 200 00:34:56,929 --> 00:35:00,809 அவற்றின் பாதுகாப்பிற்கான எஞ்சியுள்ள காடுகளில், இந்த காடும் ஒன்று. 201 00:35:04,771 --> 00:35:10,944 எழு அங்குலம் உயரமுள்ள, குட்டி ஜால்மோஸ்கள் பல வேட்டை விலங்குகளுக்கு தீனியாகிவிடும். 202 00:35:11,695 --> 00:35:14,740 ஆனால், தீனிகளும் எதற்கும் குறைந்தவையல்ல... 203 00:35:16,533 --> 00:35:18,327 அதனால் அவை ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 204 00:35:48,524 --> 00:35:52,694 ஹெட்ஜேகோடேரிக்ஸ் 15 அடி உயரம் இருக்கும். 205 00:36:03,247 --> 00:36:07,918 உண்மையில் அது ஒரு டேரோசர், இறக்கையுடன் உள்ள ஊர்வன தான், 206 00:36:08,001 --> 00:36:12,965 அது இங்கு மரங்களுக்கு இடையில் தேடும் போது, அதன் இறக்கைகளை கெட்டியாக மடித்து வைக்கணும். 207 00:36:25,227 --> 00:36:30,858 இந்த காடுகளில் அதிக அளவிலான சிறு உயிரனங்கள் இருப்பதால், இது வேட்டையிடமாகிறது. 208 00:36:38,991 --> 00:36:42,035 இது ஐரோப்பாவின் தென்கோடி மூலையில் உள்ளது. 209 00:37:09,521 --> 00:37:12,691 இருப்பதிலேயே மிகவும் கனமான பறக்கும் விலங்கு இதுதான், 210 00:37:12,774 --> 00:37:17,738 அதோடு, 30 அடி அகலமான தன் ராட்சஸ இறக்கைகளை 211 00:37:17,821 --> 00:37:20,199 அதனால் வேறெங்கும் விரிக்க முடியாது. 212 00:37:29,583 --> 00:37:34,296 காடுகளின் பல நிரந்தர வாசிகள் இங்கு அடிக்கடி வருவார்கள்... 213 00:37:37,841 --> 00:37:40,928 ஏனெனில் கடலின் சாரல் அந்த தாவரங்கள் மீதெல்லாம் படுகிறது, 214 00:37:41,762 --> 00:37:44,681 அதன் மூலம் தேவையான உப்பு கிடைக்கிறது. 215 00:38:10,707 --> 00:38:15,754 இங்கே, சாரோபாடுகள் ஒன்றை ஒன்று சந்திக்கலாம், குடும்ப பந்தகளை புதுப்பிக்கலாம்... 216 00:38:18,632 --> 00:38:20,634 புதியவற்றை உருவாக்கலாம். 217 00:38:34,565 --> 00:38:38,485 ஆனால் இந்த ஹெட்ஜேகோடேரிக்ஸ்களுக்கு, கடற்கரை ஒரு தாவும் மேடை தான். 218 00:38:54,001 --> 00:38:57,754 நம் வரலாற்றிற்கு முந்தைய கிரகத்தில் மற்ற எந்த இடத்தையும் விட 219 00:38:57,838 --> 00:39:02,509 எங்கு உயிரினங்கள் வகைவகையாகவும், அதிக அளவிலும் பெருகுகின்றனவோ, 220 00:39:02,593 --> 00:39:07,181 அந்த காட்டிற்கு, அதன் இறக்கைகள் அதனை இட்டுச் செல்லும். 221 00:39:22,112 --> 00:39:25,115 இந்த கதைகளுக்குப் பின்னால் உள்ள விஞ்ஞானத்தை அறிய, 222 00:39:25,199 --> 00:39:29,995 உடனே, Prehistoric Planet இணையதளத்தை அணுகவும். 223 00:40:57,624 --> 00:40:59,626 தமிழாக்கம் அகிலா குமார்