1 00:00:13,055 --> 00:00:16,099 இந்தத் தொடரில் இடம் பெறும் சம்பவங்களும் கதாப்பாத்திரங்களும், முற்றிலும் கற்பனையே. 2 00:00:16,183 --> 00:00:18,769 மறைந்தவர்களுடனோ நிகழ்காலத்தில் வாழ்பவர்களுடனோ ஒற்றுமை காணப்பட்டால், 3 00:00:18,852 --> 00:00:19,937 அது தற்செயலாக நிகழ்ந்ததே. 4 00:00:29,154 --> 00:00:32,741 அதன் நடுவுல ரேடியோ ஆக்டிவ் இனிஷியேட்டர் இருந்தாலும், 5 00:00:33,575 --> 00:00:35,786 கருப்பொருளை பாதுகாப்பா கையாள முடியும். 6 00:00:36,495 --> 00:00:38,247 அது ஒரு பேஸ்பால் மாதிரிதான். 7 00:00:38,747 --> 00:00:41,208 ஆனால் ஒருங்கிணைக்கப்பட்ட வெடிக்கும் கதிர்வீச்சுகளைப் போன்ற 8 00:00:41,792 --> 00:00:43,877 உயர் அழுத்தத்திற்கு உட்படுத்தப்படும்போது, 9 00:00:45,045 --> 00:00:48,090 அது அபாரமான சேதத்தை விளைவிக்கக்கூடிய ஆற்றல் உள்ளது. 10 00:01:14,241 --> 00:01:16,034 நாளைக்கு அந்த சோதனையை செய்து முடித்துவிட்டால், 11 00:01:16,118 --> 00:01:18,287 உலகில் ஒவ்வொரு அரசும் உங்களிடம் உள்ள வலிமையை உணர்வார்கள். 12 00:01:23,125 --> 00:01:25,961 டாக்டர் பீட்டர்சன், இந்த பரிசிற்கு, ஈரானிய மக்கள் உங்களுக்கு நன்றியுடன் இருப்பார்கள். 13 00:01:35,679 --> 00:01:39,892 நாளைய தினம் பரிசோதனை தளத்திற்கு போகும் முன், இறுதி பரிசோதனைகளை செய்துவிடுகிறேன். 14 00:01:41,268 --> 00:01:44,980 இந்த இடம் அவ்வளவு பாதுகாப்பானதில்லை என சகோதரர் கமலி நினைக்கிறார். 15 00:01:45,063 --> 00:01:48,358 எனவே நாங்கள் அதை எடுத்துச் செல்லும் நேரத்தை முன்னதாகவே வைத்துக்கொள்ள தீர்மானித்துவிட்டோம். 16 00:01:49,610 --> 00:01:51,028 என்ன? இல்லை, இல்லை, இல்லை. 17 00:01:52,070 --> 00:01:53,238 நாம் இன்னும் தயாரா இல்லை. 18 00:01:53,322 --> 00:01:54,823 நாம தயாராதான் இருக்கோம், அயத்துல்லா. 19 00:01:54,907 --> 00:01:56,992 இல்லை, இல்லை. உங்களுக்குப் புரியலை. 20 00:01:57,075 --> 00:01:58,285 இன்று. 21 00:02:00,370 --> 00:02:01,914 நீங்க இந்த வெடிகுண்டை இன்று வேறு இடத்திற்கு மாற்றணும். 22 00:02:03,332 --> 00:02:06,168 டாக்டர் பீட்டர்சன், உங்களுக்கு வேறு ஒரு இடத்தில் இன்னும் முக்கியமான பணி உள்ளது. 23 00:02:17,012 --> 00:02:18,430 எனக்குப் புரியுது. 24 00:02:18,514 --> 00:02:19,598 அப்போ சரி. 25 00:02:23,852 --> 00:02:24,853 அதை என்னிடம் கொடுங்கள். 26 00:02:51,713 --> 00:02:53,841 நீ செய்யவேண்டியதை எல்லாம் செய்தயா? 27 00:02:57,928 --> 00:02:58,804 ஆம். 28 00:03:59,907 --> 00:04:03,911 டெஹ்ரானுக்கு வெளியில் உள்ள லவசனில் 29 00:04:15,547 --> 00:04:16,923 வெடிகுண்டு அதற்குள்ளே இருக்கா? 30 00:04:17,007 --> 00:04:20,844 காஸிமி கடத்திய பாகங்கள், சுரங்கப் பாதைகளுக்குள் இருப்பதாக அமெரிக்கர்கள் டிராக் செய்திருக்காங்க. 31 00:04:20,928 --> 00:04:23,931 இவை டெஹ்ரானின் மெட்ரோ சிஸ்டத்தின் கூடுதல் பகுதிகள்தான். 32 00:04:24,014 --> 00:04:25,349 அவை, ம்ம், இன்னும் முடியவில்லை. 33 00:04:25,933 --> 00:04:28,143 இந்த சுரங்கப் பாதைகள் வழக்கமான மெட்ரோ சுரங்கங்களுக்கும் அடியில் உள்ளன, 34 00:04:28,227 --> 00:04:29,144 ஆகையால் மிகவும் பாதாளத்தில் உள்ளன. 35 00:04:29,228 --> 00:04:30,312 அவற்றை துளைக்கவே முடியாது. 36 00:04:30,395 --> 00:04:32,523 பாலைவனத்துக்குள்ள, அணுகுண்டு பரிசோதனையை செய்ய, வேற இடத்துக்கு 37 00:04:32,606 --> 00:04:34,900 அவங்க வெடிகுண்டை இடமாற்றம் செய்யப் போவதாக, சிஐஏ தகவல் தந்துவிட்டது. 38 00:04:34,983 --> 00:04:38,237 ஏதாவது வாகனங்களைப் பார்க்கும் வரை அனைத்து நுழைவாயில்களையும் நாங்க கண்காணிச்சுட்டு இருப்போம். 39 00:04:38,987 --> 00:04:39,988 அதுக்கு அப்புறம்? 40 00:04:40,072 --> 00:04:41,615 அவங்க தரை மட்டத்துக்கு வந்தபிறகு, 41 00:04:41,698 --> 00:04:43,992 அவங்களை பரிசோதனை தளத்துக்குப் போகும் வழியிலேயே ஒரு டிரோனைக் கொண்டு, போட்டுதள்ளிவிடுவோம் 42 00:04:45,202 --> 00:04:46,828 எனவே நகரத்துக்கு வெளியேதான் தாக்குதல் நடக்கும், இல்லையா? 43 00:04:47,496 --> 00:04:50,624 ஆயிரக்கணக்கில் சாதாரண குடிமக்கள் வாழும் இடத்தில் இந்த வெடிகுண்டை வெடிக்க வைக்க முடியாது. 44 00:04:51,834 --> 00:04:53,293 அப்படிச் செய்ய முடிந்தால். 45 00:05:00,634 --> 00:05:03,637 அதைப் போட்டுக்கொள். நீ மீண்டும் சிறைக்குப் போகப் போற. 46 00:05:42,050 --> 00:05:44,094 ஈரானிலிருந்து பீட்டர்சனின் மகளுக்குக் கால் வருகிறது. 47 00:05:44,595 --> 00:05:45,762 அதன் மூலத்தைக் கண்டுபிடியுங்கள். 48 00:05:47,347 --> 00:05:48,932 பீட்டர்சன்தான் மகளை அழைக்கிறார். 49 00:05:55,022 --> 00:05:58,317 ஹை, இது ஜென். நான் முடிந்தவரை சீக்கரமாக உன்னை அழைக்கிறேன். 50 00:06:01,570 --> 00:06:04,406 நான் அனுப்பிய மெஸ்ஸேஜுகளை நீ கேட்டாயா எனத் தெரியவில்லை. 51 00:06:07,326 --> 00:06:09,161 இதை நீ புரிந்துகொள்வாயா என்றும் எனக்குத் தெரியவில்லை. 52 00:06:11,997 --> 00:06:13,665 அதோடு, எனக்கு இன்னும் அதிக நேரம் இல்லை. 53 00:06:15,042 --> 00:06:18,587 என் எண்ணமெல்லாம் ஈரானில்தான் உள்ளது என்று நான் உன்னிடம் ஒரு முறை சொல்லியிருக்கிறேன். 54 00:06:20,881 --> 00:06:23,383 உன் மனம் இங்குதான் இருப்பதாக நீ கூறினாய். 55 00:06:24,760 --> 00:06:26,887 பீட்டர்சனின் மகள் ஈரானில் இருந்திருக்காளா, என்ன? 56 00:06:30,432 --> 00:06:32,267 அந்த வரிகள் உனக்கு நினைவிருக்கா? 57 00:06:34,686 --> 00:06:39,107 "என்ன எழுதி வச்சுருக்கோ அதிலிருந்து ஒருவனால எப்படி தப்பிக்க முடியும்?" 58 00:06:42,736 --> 00:06:45,155 "அவனுடைய விதியிலிருந்து அவன் எப்படி தப்பியோட முடியும்?" 59 00:06:50,077 --> 00:06:51,620 இதை ஏன் அவர் தன் மகளிடம் சொல்கிறார்? 60 00:06:52,496 --> 00:06:54,206 அவர் அவளிடம் சொல்லை. 61 00:06:56,875 --> 00:06:57,960 அவர் என்னிடம் பேசுகிறார். 62 00:07:01,547 --> 00:07:03,841 நான் சீக்கிரமே உன்னை சந்திப்பேன் என நம்புகிறேன். 63 00:07:05,175 --> 00:07:06,635 நம் அனைவரின் நன்மைக்காகவும். 64 00:07:18,814 --> 00:07:20,065 சிக்னல் இன்னும் ஆக்டிவாக இருக்கு. 65 00:07:20,482 --> 00:07:21,650 சிக்னலின் லொகேஷன் தெரிந்துவிட்டது. 66 00:07:21,733 --> 00:07:22,860 லவசன்ல உள்ள ஒரு வில்லாவிலிருந்து... 67 00:07:22,943 --> 00:07:25,445 நம்ம இலக்கு வெடிகுண்டுதான், அந்த விஞ்ஞானி இல்ல. 68 00:07:26,780 --> 00:07:27,823 தமார். 69 00:07:31,410 --> 00:07:33,078 நாம போகணும். 70 00:07:37,624 --> 00:07:39,251 ஐஆர்ஜிசி கவுண்ட்டர் இன்டெலிஜென்ஸ் தலைமையகம், டெஹ்ரான் 71 00:07:40,669 --> 00:07:42,462 இடமாற்றத்துக்கு எல்லாம் தயாரா இருக்கா? 72 00:07:42,546 --> 00:07:43,672 - ஆமாம், சார். - ஆமாம், சார். 73 00:07:55,142 --> 00:07:56,310 அவள் பதில் சொல்லவில்லை. 74 00:07:58,145 --> 00:08:00,105 அவள் அந்த விஞ்ஞானியின் போனை டிராக் செய்யறா. 75 00:08:00,606 --> 00:08:02,357 அவள் லவசனில் உள்ள அந்த வில்லாவிற்கு போகலாம். 76 00:08:07,362 --> 00:08:08,864 டாக்டர். தயவுசெய்து வாருங்கள். 77 00:08:40,437 --> 00:08:41,980 அவர் சென்றுகொண்டிருக்கிறார். 78 00:08:42,063 --> 00:08:45,317 அவர் லவசனிலிருந்து நகரத்துக்குப் போறார் என்றால், குப்பையா வழியாகத்தான் போவார். 79 00:08:46,485 --> 00:08:47,694 அவங்க அங்கே போகும் முன் நம்மை அங்கு சேர்த்துவிடு. 80 00:08:55,577 --> 00:08:57,287 பாரு, அந்த மையத்துல ஏதோ நடக்குது. 81 00:08:57,371 --> 00:08:58,956 டேனியேலா, எனக்கு சாட்டிலைட் படங்களை காட்டு. 82 00:09:01,208 --> 00:09:02,709 நம்மால டிரக்கின் உள்ளே பார்க்க முடியுமா? 83 00:09:03,043 --> 00:09:04,670 ஐஆர் மோடு 84 00:09:04,753 --> 00:09:06,630 அதுல ஈயப்பூச்சு இருக்குன்னு இன்ஃப்ராரெட் காட்டுது. 85 00:09:06,713 --> 00:09:08,507 அது ரேடியோ ஆக்டிவ் கழிவா இருக்கலாம். 86 00:09:08,590 --> 00:09:10,926 அதுக்கு ஒரு சிவிலியன் துணை வண்டியும் இருக்கு. எல்லாமே சாதாரணமாகத்தான் தோணுது. 87 00:09:11,009 --> 00:09:13,637 அதை தொடர்ந்து பார்த்துட்டே இரு. அதை உன் கண்களில் இருந்து அகற்றாதே. 88 00:09:16,515 --> 00:09:18,767 அந்த டிரக் மற்றும் துணை காரின் படம் கிடைச்சிருக்கு. 89 00:09:29,736 --> 00:09:30,821 அனுப்பி வை. 90 00:09:54,887 --> 00:09:56,513 அந்த காரில் என்ன பிரச்சினை? 91 00:09:57,097 --> 00:09:58,098 திற. 92 00:09:58,724 --> 00:09:59,683 தலையை குனிய வேண்டும். 93 00:10:07,357 --> 00:10:08,483 போ. 94 00:10:20,204 --> 00:10:23,457 - பாரு. அப்படி செய்ய வேண்டிய அவசியமில்லை. - உங்களை நம்பாததற்கு மன்னிக்கவும். 95 00:10:35,427 --> 00:10:39,056 நான் சொல்வதைக் கேளுங்க. அவங்க போர்க்கணையை இடமாற்றம் செய்யறாங்க. 96 00:10:39,139 --> 00:10:40,224 நாம அதைக் கண்டுபிடிக்கணும். 97 00:10:40,307 --> 00:10:42,809 நீங்கதானே அவங்களுக்கு அதை உருவாக்கினீங்க, இப்போ எங்களை அதைக் கண்டுபிடிக்கணும்னு... 98 00:10:42,893 --> 00:10:44,269 அது வெடிக்கப் போகுது. 99 00:10:48,690 --> 00:10:51,276 - உங்களுக்கு எப்படித் தெரியும்? - ஏன்னா நான்தான் அதை புரோகிராம் செய்தேன். 100 00:10:52,361 --> 00:10:56,073 இன்று மதியம் 12:00 மணிக்கு வெடிக்கும்படி வெடிகுண்டை தயாராக அமைத்துள்ளேன். 101 00:11:03,247 --> 00:11:04,998 இன்னும் இரண்டு மணிநேரம் கூட இல்லையே. 102 00:11:06,124 --> 00:11:07,125 ஏன் இப்படிச் செய்தீர்கள்? 103 00:11:07,209 --> 00:11:09,044 கடந்து இரண்டரை வருடங்களாக 104 00:11:09,795 --> 00:11:12,214 அவர்களுக்கு ஒரு வெடிகுண்டைத் தருகிறேன் எனபதாக நம்ப வைத்துள்ளேன். 105 00:11:12,798 --> 00:11:14,383 ஆனால் அதை நானே அழித்துவிடக்கூடியதாகத்தான் அதை உருவாக்கினேன். 106 00:11:14,466 --> 00:11:17,177 அந்த புரோகிராம் முழுவதையுமே நான் நிரந்தரமாக அழித்துவிட முடியும். 107 00:11:17,761 --> 00:11:20,472 - லேபிலேயே வெடிக்கும்படி செய்வதாக இருந்தது. - இதை நம்பவே முடியலை. 108 00:11:20,556 --> 00:11:22,224 அது சரியாக வேலை செய்திருக்கும். 109 00:11:22,307 --> 00:11:24,268 அந்த சுரங்கங்களின் ஆழம், வெடிப்பின் அதிர்வுகளைத் கட்டுப்படுத்தியிருக்கும். 110 00:11:24,351 --> 00:11:25,853 சரி, அதன் கதிர்வீச்சுகள் என்னவாகும்? 111 00:11:25,936 --> 00:11:29,189 அதன் கதிர்வீச்சுகள்... அவை இருப்பதால் அவர்கள் செய்வதை மறைக்க முடியாமல் போகும். 112 00:11:30,440 --> 00:11:33,485 அப்போது அவர்களுக்கு நகரத்தைக் காலி செய்ய வைப்பதைத் தவிர வேறு வழியின்றி போகும். 113 00:11:33,569 --> 00:11:36,405 - நீங்கள் எப்படி அதை உறுதியாகச் சொல்ல முடியும்? - ஏனென்றால் நான்தான் அதற்கான விதிகளை எழுதினேன். 114 00:11:37,155 --> 00:11:40,075 அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்பதை உலகமே நன்றாக புரிந்துகொள்ளும். 115 00:11:40,742 --> 00:11:42,661 அவங்க மக்களுக்கு அது புரிந்திருக்காதே. 116 00:11:42,744 --> 00:11:44,621 நீங்க எவ்வளவு பேரை கொன்றிருப்பீர்கள்? 117 00:11:46,957 --> 00:11:48,876 நான் கணக்கிட்டு வைத்துள்ளேன். 118 00:11:49,835 --> 00:11:51,837 அதில் உயிரிழப்பானது... 119 00:11:53,005 --> 00:11:53,922 ஏற்கக்கூடியதாக இருந்திருக்குமா? 120 00:11:54,840 --> 00:11:56,842 நீங்க என்னை எகத்தாளமா பார்க்க வேண்டாம். 121 00:11:56,925 --> 00:11:58,802 ஒரு மாற்றம் நடக்காமல், இங்கே எவ்வளவு ஈரானியர்கள் 122 00:11:58,886 --> 00:12:01,805 அவர்களுடைய அரசாங்கத்தாலேயே கொல்லப்படப் போகிறார்கள்? 123 00:12:04,892 --> 00:12:07,352 எனவே, நாங்கள் உங்களைக் காப்பாற்றிய பிறகு, கைதானது, திரும்பப் போனது, 124 00:12:07,436 --> 00:12:10,272 நீங்கள் செய்த அனைத்தும், எல்லாமே நீங்க திட்டமிட்டு செய்ததுதானா? 125 00:12:10,355 --> 00:12:12,608 ஒரு தடவை ஆரம்பித்துவிட்டால், அதை முடித்துவிட்டுதானே வெளியேற முடியும். 126 00:12:13,734 --> 00:12:15,110 நீங்கள் இதை நிறுத்த முடியுமா? 127 00:12:18,197 --> 00:12:20,240 ஆம். என்னால முடியும். 128 00:12:21,909 --> 00:12:23,493 ஆனால் உங்க உதவி தேவைப்படும். 129 00:12:29,291 --> 00:12:30,375 தமாரின் தொடர்பு கிடைத்துவிட்டது. 130 00:12:31,585 --> 00:12:33,754 உன்னால அந்த போர்க்கணைக்கு உபாயம் காண முடிந்ததா? அதை இடமாற்றம் செய்கிறார்கள். 131 00:12:33,837 --> 00:12:35,422 நான் சொல்வதைக் கேளு, நீ... 132 00:12:35,506 --> 00:12:38,342 யூலியா, இந்த வெடிகுண்டு வெடிக்க இன்னும் இரண்டு மணிநேரம் கூட இல்லை. 133 00:12:40,010 --> 00:12:40,844 உனக்கு எப்படித் தெரியும்? 134 00:12:40,928 --> 00:12:42,095 பீட்டர்சன் எங்களுடன்தான் இருக்கிறார். 135 00:12:42,179 --> 00:12:44,348 அவர் டெஹ்ரான் நேரம் மதியம் 12:00 மணிக்கு அதை வெடிக்கும்படியாகச் செய்திருக்கிறார். 136 00:12:45,766 --> 00:12:48,310 டெஹ்ரான் 137 00:12:48,393 --> 00:12:50,437 என்ன? அவர் குண்டை ஆக்டிவேட் செய்துவிட்டாரா? 138 00:12:50,521 --> 00:12:51,647 பொறு. 139 00:12:52,689 --> 00:12:53,649 இன்னொரு டிரக் வருது. 140 00:12:54,983 --> 00:12:56,360 என்ன நடக்குது? 141 00:13:03,992 --> 00:13:06,119 ஒரு நிமிடம்... இது அந்த டிரக்கில்லை. 142 00:13:06,203 --> 00:13:07,412 அதைப் போல ஆறு இருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. 143 00:13:07,496 --> 00:13:09,289 அனைத்தும் ஈயம் பூசி, துணை வண்டியுடன் உள்ளன. 144 00:13:10,999 --> 00:13:12,501 அவங்க வேண்டுமென்றே போலி வண்டிகளை பயன்படுத்தறாங்க. 145 00:13:12,584 --> 00:13:15,420 டிராஃபிக்குல இந்த வண்டிகளை அடையாளம் காணுவது கஷ்டம். 146 00:13:16,046 --> 00:13:17,965 நகரத்தின் டிராஃபிக் சிஸ்டத்தை ஹேக் செய்யுங்க. 147 00:13:18,048 --> 00:13:19,925 நாம அவங்களை உடனடியாக நிறுத்தணும். 148 00:13:20,008 --> 00:13:23,136 அந்த வெடிகுண்டைப் பற்றி உனக்குத் தெரிந்ததை எல்லாம் நீ என்னிடம் சொல்லணும் 149 00:13:23,220 --> 00:13:25,013 அதோட இப்போதே அந்த நகரத்தை விட்டு வெளியேறும் வழியைப் பாரு. உடனே! 150 00:13:25,514 --> 00:13:26,515 பெலிக்கன், உங்களுக்கு அது கேட்குதா? 151 00:13:26,598 --> 00:13:29,101 டிராஃபிக் விளக்குகள், வட்டங்கள், பொதுப் பணிகள், உங்களால் எதனுள் நுழைய முடிந்தாலும் சரி. 152 00:13:35,357 --> 00:13:36,400 சார்? 153 00:13:37,526 --> 00:13:39,903 அந்த டிராஃபிக் சிஸ்டத்தில் என்னவோ நடக்கிறது. 154 00:13:46,785 --> 00:13:48,704 பாரு. டிராஃபிக் நெரிசல். 155 00:14:03,844 --> 00:14:06,013 வெடிகுண்டின் லொகேஷன் பற்றி தகவல் உண்டா? 156 00:14:06,847 --> 00:14:08,891 அவர்கள் அனைவரையும் தீர்த்துக் கட்டுவது சாத்தியமா? 157 00:14:08,974 --> 00:14:10,726 எங்களுடைய சில சாட்டிலைட்டுகள் இப்போது ஆஃப்லைன் ஆகப் போகின்றன. 158 00:14:10,809 --> 00:14:14,062 அதோடு, எப்படியானாலும், நகர்ந்துகொண்டிருக்கும் ஆறு டிரக்குகளை டிராக் செய்வது கடினம். 159 00:14:14,146 --> 00:14:16,273 நாம அந்த ரிஸ்க்கை எடுத்துக்க முடியாது. எல்லாத்தையும் டிராக் செய்தே தீரணும். 160 00:14:16,356 --> 00:14:18,525 நாம சரியான டிரக்கை கண்டுபிடிச்சதும், அதை செயலிழக்கச் செய்திடுவோம். 161 00:14:19,610 --> 00:14:21,486 என்ன? அதை நகரத்துக்குள்ள செய்ய முடியாது. 162 00:14:21,570 --> 00:14:23,822 அது மிக பயங்கரமாக இருக்கும். மக்கள் ஆயிரக்கணக்கில் இறப்பார்கள். 163 00:14:25,073 --> 00:14:27,492 நான் சொல்வதைக் கேளு. பல வருடங்களாக ஒரு பொய்யைச் சொல்லிக்கொண்டு, 164 00:14:27,576 --> 00:14:30,370 உலகத்தையே ஏமாத்திட்டு இருக்கும் ஒருவரின் வார்த்தையை நம்பி, 165 00:14:30,454 --> 00:14:32,539 இஸ்ரேலின் பாதுகாப்பை நான் ஆபத்தில் தள்ள முடியாது. 166 00:14:32,623 --> 00:14:35,751 நாம எந்த டிரக்குன்னு கண்டுபிடிக்க முடியலைன்னா, நாம உடனடியா நகரத்தை காலி செய்யணும். 167 00:14:36,418 --> 00:14:40,005 ஈரான் நமக்கு எதிராகப் பயன்படுத்தக்கூடிய ஒரு அணு ஆயுதத்தைப் பெறும் வாய்ப்பு இருந்தால், 168 00:14:40,088 --> 00:14:42,925 என்னைப் பொறுத்தவரை, இந்த டிரக்குகள் எதுவும் டெஹ்ரானை விட்டு வெளியேற கூடாது. 169 00:14:43,008 --> 00:14:46,011 - இந்த வெடிகுண்டு வெடித்தால்... - அது டெஹ்ரானிலேயே வெடிப்பதுதான் நல்லது. 170 00:14:46,094 --> 00:14:49,640 நீ யார் என்பதையும், யார் பக்கம் இருந்து போராடுகிறாய் என்பதையும் நினைவில் கொள். 171 00:14:52,309 --> 00:14:53,644 நீ நாசமா போக. 172 00:15:25,008 --> 00:15:26,593 நாம் எந்த டிரக் என்று அடையாளம் காணவில்லை எனில், 173 00:15:26,677 --> 00:15:29,012 நகரத்தின் மையத்தில் ஒரு அணு குண்டு வெடிக்கப் போகிறது. 174 00:15:31,557 --> 00:15:32,808 நாம கண்டுபிடிப்போம். 175 00:15:32,891 --> 00:15:35,352 ஆனால் நாம அதை கண்டுபிடித்து, அதைப் பற்றி ரிப்போர்ட் செய்தால், 176 00:15:36,937 --> 00:15:38,230 மொசாட் அதை தாக்குவாங்க. 177 00:15:39,857 --> 00:15:43,694 ஒண்ணு அணு குண்டு வெடிப்பா இருக்கலாம், இல்ல டெஹ்ரானின் மத்தியில் பயங்கர குண்டாக வெடிக்கலாம். 178 00:15:47,865 --> 00:15:49,241 இல்லை, இல்லை, இல்லவேயில்லை. 179 00:15:49,324 --> 00:15:50,784 இப்போது அதைத் தடுப்பது நம் கையில் இருக்கு. 180 00:15:52,327 --> 00:15:53,912 நமக்கு அது எந்த டிரக்குன்னுகூட தெரியாது. 181 00:15:53,996 --> 00:15:56,331 அந்த ரெஜீம்லகூட, எவ்வளவு பேருக்கு இது தெரிந்திருக்கும்? 182 00:15:56,415 --> 00:15:57,541 வெகு சிலருக்குத்தான் தெரிந்திருக்கும். 183 00:16:01,962 --> 00:16:03,213 ஒருவருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். 184 00:16:17,436 --> 00:16:18,270 சரி, சார். 185 00:16:18,729 --> 00:16:20,022 ரிப்போர்ட் பண்ணு. 186 00:16:20,981 --> 00:16:23,150 நாம அந்த டிரக்கின் பின்னாடி மெதுவா போறோம். 187 00:16:23,233 --> 00:16:25,402 இன்னும் உத்தரவுக்கு காத்திருங்க. 188 00:16:25,819 --> 00:16:27,321 வேகமா போங்க. 189 00:16:27,404 --> 00:16:28,405 சரி, சார். 190 00:16:51,094 --> 00:16:52,679 நீங்க நஹீதைப் பார்க்க விரும்பினால், 191 00:16:52,763 --> 00:16:55,599 யார் கண்ணிலும் படாம, அந்தக் கட்டடத்தை விட்டு வெளியேற, உங்களுக்கு 192 00:16:55,682 --> 00:16:57,643 சரியா மூன்று நிமிடங்கள் அவகாசம் தரேன். 193 00:17:14,409 --> 00:17:16,703 அடடே, அடடே... ஹலோ, திரு கமலி. 194 00:17:17,204 --> 00:17:19,580 நான் ஒரு மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்ய விரும்பினேன் 195 00:17:19,665 --> 00:17:21,666 உங்கள் மனைவியைப் பற்றி பேசுவதற்கு. 196 00:17:21,750 --> 00:17:24,795 இதுதான் அதற்கான நேரமா? எனக்கு வழியை விடு! 197 00:18:07,671 --> 00:18:11,008 அமைதியாக இருங்க. எதுவும் சொல்லாதீங்க. என்னுடன் வாங்க. வாங்க. 198 00:18:12,885 --> 00:18:14,553 கார்ல ஏறுங்க. நகருங்க. 199 00:18:20,392 --> 00:18:21,310 உள்ளே ஏறுங்க. 200 00:18:22,603 --> 00:18:24,229 நஹீத் இங்கே இருக்கான்னு சொன்ன. 201 00:18:24,813 --> 00:18:26,982 அவள் சொல்வது போல செய்யுங்க. நம்ம எல்லோருக்கும் அதுதான் நல்லது. 202 00:18:33,864 --> 00:18:34,990 பக்கத்துலயே இரு. 203 00:18:41,747 --> 00:18:46,043 அனுப்பு, கீழ்காணும் விவரப்படி உள்ள ஒரு காரைத் தேடுங்க. ஆம். 204 00:18:50,339 --> 00:18:51,924 நீ சொல்வதை நான் எதுக்காக நம்பணும்? 205 00:18:52,007 --> 00:18:53,258 அவள் பொய் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? 206 00:18:53,342 --> 00:18:54,843 ஏன்னா அவள் உண்மையே பேசறதில்லை. 207 00:18:54,927 --> 00:18:56,094 இதுல அப்படி இல்லை, ச்சே. 208 00:18:56,178 --> 00:18:58,555 அவள் மொசாட்டின் ஆணைகளை மீறி, உங்களை தொடர்புகொண்டிருக்கிறாள். 209 00:18:58,639 --> 00:19:01,225 நாம எந்த டிரக் என்று அடையாளம் காணவில்லை எனில் அவர்கள் வெடிகுண்டை வெடிக்க விட்டுவிடுவார்கள். 210 00:19:02,392 --> 00:19:04,186 அதை அடையாளம் கண்டால் என்னவாகும்? 211 00:19:04,937 --> 00:19:06,313 நான் அவர்களிடம் அதைச் சொல்ல மாட்டேன். 212 00:19:08,273 --> 00:19:12,986 நீங்கள் சொல்வது சரியானால், அந்த புரோகிராமில் உள்ள ஒரு ஈரானிய விஞ்ஞானி அதை நிறுத்திவிடலாம். 213 00:19:13,070 --> 00:19:16,865 இல்ல. அந்த வெடிகுண்டை அணுக எனக்கு அனுமதி தேவை. அதை கைப்படத்தான் செய்யவேண்டும். 214 00:19:16,949 --> 00:19:18,408 அதுவும் நான்தான் அதைச் செய்யணும். 215 00:19:19,409 --> 00:19:21,036 மேலும் நமக்கு ஒரு மணிநேரம் கூட இல்லை. 216 00:19:22,788 --> 00:19:23,789 பாருங்க. 217 00:19:24,289 --> 00:19:27,251 உங்களுக்கு டெஹ்ரான் மீதுள்ள நேசத்தில் சந்தேகமேயில்லை அதே போலத்தான் என் நேசமும், சந்தேகம் வேண்டாம். 218 00:19:28,418 --> 00:19:30,462 இந்த நகரத்திற்காகவும், அதில் வசிக்கும் அனைவருக்காகவும். 219 00:19:33,549 --> 00:19:34,883 நஹீதுக்காக. 220 00:19:38,095 --> 00:19:39,471 அவள் இன்னும் இந்த நகரத்தில்தான் இருக்கிறாளா? 221 00:19:40,889 --> 00:19:42,432 நீங்க அந்தப் போர்க்கணை இருக்கும் இடத்திற்கு எங்களை அழைத்துச் சென்றால், 222 00:19:43,350 --> 00:19:45,435 நான் அவர்களை அழைத்து உங்களிடன் ஃபோனைத் தருகிறேன். 223 00:19:50,732 --> 00:19:52,109 ஆனால் முதலில், பிளீஸ். 224 00:20:02,911 --> 00:20:04,162 ஹலோ, சார். 225 00:20:04,246 --> 00:20:06,790 நான் கமலி பேசுகிறேன். நீ இப்போது இருக்கும் லோக்கேஷன் எது? 226 00:20:06,874 --> 00:20:10,043 லாலே புலவார்டுல தான் இந்த டிரஃபிக் நெரிசல்ல சிக்கிட்டு இருக்கோம். 227 00:20:12,671 --> 00:20:14,631 நாம அதை கண்ணுக்குப் படாத இடமா, மறைவான இடத்துக்குக் கொண்டு போகணும். 228 00:20:14,715 --> 00:20:19,261 அவங்களை வடக்கு திசையில் ஷாஹ்ரானைக் கடந்து, சுலுகுன் ரோடை நோக்கிப் போகச் சொல்லுங்க. 229 00:20:24,683 --> 00:20:25,684 கமான், சொல்லுங்க. 230 00:20:27,311 --> 00:20:30,063 அந்த ஓட்டுநரிடம் அதை சுலுகுன் ரோடுக்குக் கொண்டு போகச் சொல்லு. 231 00:20:30,147 --> 00:20:32,024 அதோட, இப்போதிலிருந்து என் ஃபோனைத் தவிர வேற எந்த அழைப்பையும் எடுக்காதே. 232 00:20:32,107 --> 00:20:34,735 நம்ம தொடர்புல அத்துமீறல் ஏற்பட்டிருக்கு. நம்மை கண்டுபிடிச்சுட்டாங்க. 233 00:20:35,903 --> 00:20:36,778 சரி, சார். 234 00:20:38,989 --> 00:20:40,908 நாம நெருங்கிட்டு இருக்கோம். 235 00:20:44,244 --> 00:20:45,245 கேட்டுகிட்டு இருக்கேன். 236 00:20:45,746 --> 00:20:50,167 குறிப்பிட்டிருந்த வண்டி டிராஃபிக் கேமராவுல தென்பட்டது. 237 00:20:50,250 --> 00:20:53,170 ஷாஹ்ரான் சாலே, வடக்கு திசையில... 238 00:20:53,921 --> 00:20:54,838 நன்றி. 239 00:20:59,927 --> 00:21:02,846 எனவே, நீங்க ஈரானை நேசிப்பதாகச் சொன்னது, 240 00:21:04,389 --> 00:21:06,433 நீங்க லாரிஜானியிடம் சொன்னது, 241 00:21:08,185 --> 00:21:09,520 எல்லாம் வெறும் பொய்தானா? 242 00:21:12,231 --> 00:21:16,401 த ரெஜீம் செய்த அனைத்தையும் நான் 20 ஆண்டுகளா பொறுத்துகிட்ட பிறகு... 243 00:21:18,487 --> 00:21:20,948 நீங்க கண்ணாடில உங்களைப் பார்த்து, நாம தியாகம் செய்த எல்லாமே, 244 00:21:21,031 --> 00:21:24,076 நம் திருமணத்தை காப்பாத்துறதையும்விட மேலா கருதிய ஒன்று, 245 00:21:25,827 --> 00:21:28,664 மகள், சந்தோஷம், இதையெல்லாம் 246 00:21:28,747 --> 00:21:30,666 தியாகம் செய்த அந்த ஒரு நோக்கம்... 247 00:21:33,001 --> 00:21:34,628 தவறானதுன்னு உணர்ந்ததுண்டா? 248 00:21:38,048 --> 00:21:39,800 நான் ஏதாவது செய்ய வேண்டியிருந்தது. 249 00:21:45,389 --> 00:21:46,557 இந்த தமார் எங்கே போய் தொலைந்தாள்? 250 00:21:46,640 --> 00:21:48,183 அவள் ஃபோனை சுவிச் ஆஃப் செய்துட்டாள். 251 00:21:51,520 --> 00:21:54,022 அலி, அந்த டிரக் சரியான பாதையில போகலை. 252 00:21:54,106 --> 00:21:56,275 நாம சீக்கிரமா அதை திரும்பி வரச் சொல்லணும். கமலி எங்கே? 253 00:21:56,358 --> 00:21:58,360 அவரைக் கூப்பிடு, கூப்பிடு. சீக்கிரம். 254 00:21:59,319 --> 00:22:01,488 அதேநேரம், அந்தத் திசையில படைகளை அனுப்பு. 255 00:22:05,492 --> 00:22:07,578 நமக்கு கிடைத்துள்ள சாட்டிலைட் படங்களின்படி, ஒரு டிரக் நகரத்துக்கு வெளியே போகுது. 256 00:22:07,661 --> 00:22:08,704 நான் உடனை அதை அடிக்க ஆணையிடுகிறேன். 257 00:22:09,538 --> 00:22:11,248 இத்தாமார், உனக்கு புரியுதா? 258 00:22:11,915 --> 00:22:12,791 புரிந்தது. 259 00:22:14,126 --> 00:22:16,587 ல்வோர்ட், நான் உனக்கு இலக்குகளுக்கான எண் குறிப்புகளை அனுப்பி வைக்கிறேன். 260 00:22:19,965 --> 00:22:21,300 இலக்கைப் பார்த்தவுடன் ரிப்போர்ட் செய்யவும். 261 00:22:23,260 --> 00:22:25,762 வெகு சீக்கிரமாக, அனைத்து யூனிட்டுகளும் சுரங்கத்தை நோக்கிச் செல்லவும். 262 00:22:26,889 --> 00:22:28,724 செப்பா வண்டிகள் போவது தெரிகிறது. 263 00:22:28,807 --> 00:22:29,933 அவங்க கமலியைத் தேடுறாங்க. 264 00:22:30,559 --> 00:22:32,060 தமார் ஒருவேளை அவருடன் டீல் எதுவும் போட்டிருந்தால்... 265 00:22:32,561 --> 00:22:34,229 - சொல்ல முடியாது, அவள்... - எனக்கு அவளைத் தெரியும். 266 00:22:34,938 --> 00:22:36,565 அவளுடைய ஈரானிய பற்று, இப்போது அதிகமாகிவிட்டது. 267 00:22:36,648 --> 00:22:37,649 அது அவளை கழித்துவிட அதுவே காரணம். 268 00:22:43,989 --> 00:22:45,616 உங்க பாதுகாப்பு அத்துமீறப்பட்டுள்ளது. 269 00:22:45,991 --> 00:22:48,243 எதிரியின் தாக்குதல் நடக்க வாய்ப்பு இருக்கு. 270 00:22:49,036 --> 00:22:51,163 முன்னாடி வரும் அந்த சுரங்கப் பாதைக்குள்ள போயிடுங்க. 271 00:22:52,539 --> 00:22:54,541 - சார்? - என் ஆணைப்படி செய்யுங்க. 272 00:22:55,959 --> 00:22:57,085 சரி, சார். 273 00:23:01,048 --> 00:23:01,965 எனக்குக் காட்டு. 274 00:23:03,634 --> 00:23:06,345 சார், நாம் டிரக்கின் தொடர்பை இழந்துவிட்டோம். 275 00:23:06,428 --> 00:23:07,930 ஸ்பெஷல் யூனிட்டுகள் அந்த இடத்தை நோக்கிப் போகின்றன. 276 00:23:08,013 --> 00:23:09,723 முட்டாள்களே. 277 00:23:20,734 --> 00:23:21,735 சீக்கிரமா. 278 00:23:38,961 --> 00:23:40,796 அந்த டிரக் சுரங்கத்துக்குள்ள போயிடுச்சு. நமக்கு படங்கள் கிடைக்கலை. 279 00:23:41,755 --> 00:23:43,549 எனக்கு அந்த சுரங்கத்திலிருந்து வெளியேற வழியிருப்பதாகத் தெரியலை. 280 00:23:44,049 --> 00:23:46,844 அது கைவிடப்பட்ட ஒரு ரோடு புராஜெக்ட்டைப் போல தோணுது. 281 00:23:46,927 --> 00:23:48,554 அதைப் பின்தொடர்ந்து ஒரு கார் போகுது. 282 00:24:06,029 --> 00:24:09,533 இது என்ன குப்பைமேடு? இது ஏதோ நல்லதாகத் தெரியலையே. 283 00:24:11,952 --> 00:24:13,328 கமலியைக் கூப்பிடு. 284 00:24:14,496 --> 00:24:16,039 சுவிச் ஆஃப் ஆகியிருக்குப் போல. 285 00:24:29,845 --> 00:24:31,638 ஒரு கார் வருது. வெளியேறு! 286 00:24:45,068 --> 00:24:46,403 அங்கேதான். 287 00:25:33,534 --> 00:25:35,285 ஒருவழியா. 288 00:26:44,146 --> 00:26:45,522 அவளைக் கூப்பிடு. 289 00:26:45,606 --> 00:26:47,941 நீ சொன்னது போல, நஹீதைக் கூப்பிடு. 290 00:26:56,158 --> 00:26:57,367 ரிசெப்ஷன் இல்லை. 291 00:27:00,996 --> 00:27:04,249 - அதை எங்கிட்ட கொடு. - நான் பார்த்துக்கறேன். 292 00:27:15,052 --> 00:27:17,513 ச்சே, இன்னும் 12 நிமிடங்களுக்கும் குறைச்சலாதான் இருக்கு. 293 00:27:19,056 --> 00:27:20,557 சீக்கிரம் உன் பையை எடு. 294 00:27:24,394 --> 00:27:25,771 நாம வெடிகுண்டை இழக்க முடியாது. 295 00:27:27,105 --> 00:27:29,191 அலி, சீக்கிரம். விமானப் படையை அனுப்புங்க. 296 00:27:38,283 --> 00:27:41,119 டிரோன்கள் தாக்கத் தயாரா இருக்கு. அந்த இலக்கிலிருந்து பத்து நிமிடங்கள். 297 00:27:42,746 --> 00:27:44,665 அந்த லொக்கேஷனுக்கு செப்பா ஏற்கனவே யூனிட்டுகளை அனுப்பியாச்சு. 298 00:27:44,748 --> 00:27:46,458 அவங்களை முதல்ல போக, நாம விடக் கூடாது. 299 00:27:46,542 --> 00:27:48,919 நாம டிரோன்களை அந்த சுரங்கத்துக்குள்ள அனுப்பணும். 300 00:27:49,002 --> 00:27:50,546 ஈரானிய விமானப் படை இப்போது ஹெலிகாப்டர்களை அனுப்பியிருக்காங்க. 301 00:27:50,629 --> 00:27:52,339 நம்ம டிரோன்களை அடையாளம் கண்டுபிடிச்சுடுவாங்க என்கிற ஆபத்து இருக்கிறது. 302 00:27:52,422 --> 00:27:53,465 ச்சே. 303 00:27:58,512 --> 00:28:00,556 சார், ஹெலிகாப்டர் ஏற்கனவே கிளம்பிடுச்சு. 304 00:28:03,559 --> 00:28:05,394 நீ அவங்களைப் பார்த்துக்கறயா, நான் மேலே ஏறுகிறேன்? 305 00:28:05,477 --> 00:28:07,062 நீ என்மேல சந்தேகப்படறயா? 306 00:28:13,443 --> 00:28:16,321 சரி. ஒன்பது நிமிடங்கள் இருக்கு. உன்னால முடியும். 307 00:28:16,405 --> 00:28:19,575 ஞாபகம் வச்சுக்கோ, நீ சிஸ்டத்தை அணுகும்போது அந்த ஃபயரிங் செட்டை எச்சரிக்கக் கூடாது. 308 00:28:19,658 --> 00:28:22,578 எனக்கு முதன்மை அனுமதி இருக்கு. என்னால பாதுகாப்பு விதிமுறைகளை பார்க்க முடியுது. 309 00:28:23,579 --> 00:28:26,707 இல்ல, இல்ல. பொறு, பொறு. அந்த சிஸ்டம் தற்காப்பு உடையது. 310 00:28:26,790 --> 00:28:30,627 அதுக்கு ஒரு மறைந்த அதிகாரம் வழங்கும் விதிமுறை இருக்கு, எட்டு வினாடிகளுக்கு பின் ரீசெட்டாகும். 311 00:28:32,045 --> 00:28:33,297 நீ இதை சாதிக்கப் போகிறாய். 312 00:28:36,091 --> 00:28:37,551 உனக்கு அந்த பைப்பாஸ் கிடைச்சுதா? 313 00:28:38,343 --> 00:28:39,428 உங்களுக்குத் தெரியாதுன்னு சொல்றீங்களா? 314 00:28:40,012 --> 00:28:41,430 உன் உதவி எனக்குத் தேவைன்னு சொன்னேனே. 315 00:28:50,480 --> 00:28:52,482 இலக்கிலிருந்து ஆறு நிமிடங்கள், 15 வினாடிகள். 316 00:28:56,403 --> 00:28:58,906 டயக்னோஸ்டிக் அப்டேட்டுக்கு, ஒரு தற்காலிக கோரிக்கை வைக்க முடியும். 317 00:28:59,531 --> 00:29:01,491 ஆனால் நான் மீண்டும் மீண்டும் அதை புதுப்பிச்சுட்டே இருக்கணும், 318 00:29:01,575 --> 00:29:03,035 அதனால ஒரு தவறு நேர்ந்தாலும்... 319 00:29:03,118 --> 00:29:04,703 தவறு செய்யாதே, தமார். 320 00:29:05,287 --> 00:29:07,122 நான் செய்ய வேண்டியதைச் செய்ய எனக்கு அவகாசம் கிடைக்கும்படி செய். 321 00:29:11,710 --> 00:29:13,462 நாம அந்த நகரத்தைக் காப்பாத்த வேண்டுமானால்... 322 00:29:50,123 --> 00:29:51,250 நஹீத். 323 00:29:51,792 --> 00:29:52,876 நீ எங்கே இருக்க? 324 00:29:54,211 --> 00:29:56,004 ஃபராஸ்... 325 00:29:56,088 --> 00:29:58,465 நீ எங்கே இருக்கன்னு தெரிஞ்சுக்க விரும்பினேன். 326 00:30:01,802 --> 00:30:04,137 இந்த ஃபோனை வைத்து என்னை அழைக்க அவள் உங்களை அனுமதிச்சாளா? 327 00:30:06,557 --> 00:30:08,225 நீ இன்னும் நகரத்துலதான் இருக்கயா? 328 00:30:08,934 --> 00:30:10,602 நான் எங்கே இருக்கேன் என்பது பிரச்சினை இல்லை. 329 00:30:11,562 --> 00:30:12,855 நான் பாதுகாப்பா இருக்கேன். 330 00:30:13,689 --> 00:30:16,066 இல்லை. நீ பாதுகாப்பா இல்லை. 331 00:30:16,525 --> 00:30:18,569 ஃபராஸ், நீங்க என்னை தேடி வரக் கூடாது. 332 00:30:19,695 --> 00:30:20,696 பாரு... 333 00:30:22,155 --> 00:30:24,449 உன்னை தேடி வராம என்னால எப்படி இருக்க முடியும்? 334 00:30:27,411 --> 00:30:28,871 நஹீத், என் அன்பே. 335 00:30:28,954 --> 00:30:31,707 ஃபராஸ், கேளுங்க. 336 00:30:32,875 --> 00:30:34,501 நீங்க புரிஞ்சுக்கணும். 337 00:30:35,878 --> 00:30:37,963 எனக்கு ஒரு வாய்ப்பு இருந்தது, 338 00:30:39,006 --> 00:30:41,258 இருக்கணுமா, போகணுமான்னு முடிவு செய்ய. 339 00:30:42,176 --> 00:30:44,136 உங்களுக்கும் அந்த வாய்ப்பு இருந்தது. 340 00:30:46,513 --> 00:30:48,473 ஈரானா, நானா என்று தீர்மானிக்க. 341 00:30:48,557 --> 00:30:51,560 நான் உன்னையும் ஈரானையும் சேர்த்து காப்பாற்ற முயற்சிக்கிறேன். 342 00:30:57,316 --> 00:31:01,278 உங்களால முடியாத ஒன்றை நான் உங்ககிட்ட கேட்டு இருக்கக் கூடாது. 343 00:31:02,237 --> 00:31:03,739 ஆகையினால், 344 00:31:04,656 --> 00:31:06,033 இப்போதிலிருந்து நீங்க சுதந்திரமா இருக்கலாம். 345 00:31:06,116 --> 00:31:07,034 நஹீத். 346 00:31:11,205 --> 00:31:12,539 ஃபராஸ். 347 00:31:17,961 --> 00:31:20,005 உங்களுக்கு அது கேட்டதா, ஃபராஸ்? 348 00:31:20,088 --> 00:31:21,089 அவங்க வந்துட்டு இருக்காங்க. 349 00:31:21,673 --> 00:31:24,676 நீங்க இங்கே எந்த விஷயத்துல கூட்டு சேர்ந்திருந்தாலும் சரி, அது முடிஞ்சுபோச்சு. 350 00:31:24,760 --> 00:31:26,428 இவர்கள் பயங்கரவாதிகள். 351 00:31:28,764 --> 00:31:30,432 அவங்க நகரத்தை அழிக்க விரும்புறாங்க. 352 00:31:31,183 --> 00:31:32,684 நான் இதை நம்பணும்னு எதிர்பார்க்காதீங்க, ஜென்ரல். 353 00:31:32,768 --> 00:31:34,102 என்னுடன் வாக்குவாதம் செய்யாதே! 354 00:31:34,478 --> 00:31:35,979 அங்கேயே இருங்க. 355 00:31:36,063 --> 00:31:37,189 நாம அவங்களைத் தடுத்து நிறுத்தணும். 356 00:31:37,272 --> 00:31:38,482 என்னை சுடு... 357 00:31:39,983 --> 00:31:41,193 இல்லன்னா, எனக்கு உதவி செய். 358 00:31:43,237 --> 00:31:44,363 அங்கேயே இருங்கன்னு சொன்னேன்! 359 00:31:51,578 --> 00:31:55,249 சரிதான், சீக்கிரம் போ. நமக்கு நான்கு நிமிடங்கள்தான் இருக்கு. 360 00:31:58,669 --> 00:31:59,670 ஃபராஸ்! 361 00:32:02,130 --> 00:32:03,215 ஃபராஸ்! 362 00:32:04,174 --> 00:32:05,676 ஃபராஸ், ஏதாவது குழப்பாமா? 363 00:32:06,844 --> 00:32:08,595 ஃபராஸ், நான் பேசுவது கேட்குதா? 364 00:32:09,388 --> 00:32:10,681 நான் உன்னை நேசிக்கிறேன். 365 00:32:33,912 --> 00:32:36,498 இது ஸ்வோர்ட். நாங்கள் இலக்கை நோக்கி போகிறோம். 366 00:32:36,582 --> 00:32:38,208 இலக்கை அடைய டிரோன்களுக்கு இன்னும் ஐந்து நிமிடங்கள் உள்ளன. 367 00:32:38,792 --> 00:32:40,127 செப்பா சூழ்ந்துகிட்டு இருக்காங்க... 368 00:33:16,288 --> 00:33:18,498 யூனிட்டுகள் அனைத்தும் சில நிமிடங்களில் வந்துவிடும். 369 00:33:22,252 --> 00:33:23,378 அது முடிந்துவிட்டதா? 370 00:33:24,129 --> 00:33:26,882 இவ்வளவு ஆன பிறகு நான் உன்னை சும்மா விட்டிடுவேன்னு நினைச்சயா? 371 00:33:28,091 --> 00:33:29,343 முடிந்துவிட்டதா? 372 00:33:32,596 --> 00:33:35,974 கிட்டத்திட்ட. நாம வெடிக்கறதை நிறுத்த இன்னும் நேரம் தேவை. 373 00:33:36,558 --> 00:33:38,143 என்னை ஏமாத்தப் பார்க்கிறாயா? 374 00:33:39,061 --> 00:33:40,729 ஆயுதத்தை செயலிழக்க செய்துவிட்டயா? 375 00:33:42,564 --> 00:33:43,565 மாட்டேன். 376 00:33:44,316 --> 00:33:47,027 பாரு, அதைக் கடந்து செல்ல இன்னும் ஒரே ஒரு விதிமுறைதான் இருக்கு. 377 00:33:47,611 --> 00:33:48,695 சரியா? ஒன்றுதான். 378 00:33:48,779 --> 00:33:50,781 அதுக்கு அப்புறம் உன்னுடைய வெடிகுண்டு உனக்கே கிடைச்சுடும். 379 00:33:53,450 --> 00:33:54,618 அப்படின்னா அதைச் செய். 380 00:33:55,369 --> 00:33:57,663 நீ இவ்வளவு அக்கறை கொண்டுள்ள மக்களுக்காக. 381 00:34:00,707 --> 00:34:01,959 கிட்டத்தட்ட மதியம் ஆகிடுச்சு. 382 00:34:18,976 --> 00:34:20,811 ஆனால் அதுக்கு முன்னாடி நீ இவளை போக அனுமதிக்கணும். 383 00:34:22,728 --> 00:34:26,315 அவளைப் போக அனுமதி கொடு, இல்ல நான் வெடிப்பதை நிறுத்த மாட்டேன், எல்லோரும் இறக்கலாம். 384 00:34:26,942 --> 00:34:28,277 என்னால இதைத் தனியா செய்ய முடியும். 385 00:34:29,610 --> 00:34:32,906 அவளைப் போகவிடு, உன்னுடைய அருமையான வெடிகுண்டு உனக்கே கிடைக்கும். 386 00:34:36,952 --> 00:34:37,995 போ. 387 00:34:43,667 --> 00:34:46,420 என் மகளைக் கண்டுபிடிப்பாய்தானே? 388 00:34:48,130 --> 00:34:50,007 இங்கே என்ன நடந்ததுன்னு அவகிட்ட சொல்லிடு. 389 00:34:51,300 --> 00:34:52,885 நிஜமா என்ன நடந்ததுன்னு சொல்லு. 390 00:35:08,275 --> 00:35:09,943 நான் உன்னை சும்மா விடமாட்டேன். 391 00:35:10,027 --> 00:35:10,861 புரியுதா? 392 00:35:11,361 --> 00:35:13,071 நீ உயிருடன் தப்பவே முடியாது. 393 00:35:15,741 --> 00:35:16,575 இப்போது போ! 394 00:35:30,756 --> 00:35:31,798 செய். 395 00:35:32,299 --> 00:35:34,551 சீக்கிரம். கிட்டத்தட்ட நேரம் ஆயிடுச்சு. 396 00:35:59,910 --> 00:36:01,995 - என்ன நடந்தது? - செப்பா இங்கே வந்துட்டாங்க. 397 00:36:03,789 --> 00:36:05,040 தப்பிக்க எனக்கு ஒரு வழி தெரியும். 398 00:36:17,010 --> 00:36:18,220 எனவே, அடுத்தது என்ன நடக்கும்? 399 00:36:19,638 --> 00:36:23,225 நீ அந்தப் போர்க்கணையைக் காப்பாத்தி, ஹீரோங்குற உன் பெயரைக் காப்பத்தலாம். 400 00:36:24,726 --> 00:36:26,311 அதெல்லாம் நடக்கும்னு நினைக்கிறயா? 401 00:36:26,854 --> 00:36:30,148 குழு ஏ, குழு ஏ, ஜாக்கிரதையா சுரங்கத்தின் வாயிலை அணுகவும். 402 00:36:30,232 --> 00:36:31,775 உனக்குப் புரியாது. 403 00:36:32,776 --> 00:36:34,111 இது என்னைப் பற்றியது இல்லை. 404 00:36:34,987 --> 00:36:36,655 இது என் நாட்டைப் பற்றியது. 405 00:36:37,197 --> 00:36:38,740 குழு பி, கண்காணிங்க. 406 00:36:39,241 --> 00:36:40,325 கன்ஃப்ர்ம் செய்ய முடியுமா? 407 00:36:41,285 --> 00:36:44,621 எனக்கு ஈரான்தான் எல்லாத்துக்கும் மேலா முக்கியம். 408 00:36:46,832 --> 00:36:47,875 நிஜமாவா? 409 00:36:53,130 --> 00:36:54,673 இன்னும் 90 வினாடிகளில் டிரோன்கள் இலக்கை அடையும். 410 00:36:56,258 --> 00:36:58,594 ஆனால் உன் மனைவி? நஹீத்? 411 00:37:05,017 --> 00:37:06,435 பாரு, தமாருக்குத் தெரிந்திருந்தது. 412 00:37:07,519 --> 00:37:10,606 அவளுக்குத் தெரியும், நீ சுரங்கத்தைவிட்டு நஹீதுடன் பேச போவன்னு தெரியும். 413 00:37:10,689 --> 00:37:12,024 நீ என்ன சொல்ற? 414 00:37:14,067 --> 00:37:15,444 அது முடிந்துவிட்டது. 415 00:37:17,070 --> 00:37:18,030 நீ என்ன செய்யற? 416 00:37:23,202 --> 00:37:25,579 அது தான் நமக்கான ஒரே வாய்ப்புன்னு அவளுக்குத் தெரியும். 417 00:37:28,040 --> 00:37:29,625 உன் கையைக் கொடு. 418 00:37:29,708 --> 00:37:30,834 வா. 419 00:37:34,796 --> 00:37:36,131 நீ நலமா இருக்கயா? 420 00:37:43,680 --> 00:37:46,183 வா, போகலாம். நமக்கு 30 வினாடிகள் இருக்கு. 421 00:37:59,780 --> 00:38:01,573 இலக்கை அடைய இன்னும் இருபது வினாடிகள். 422 00:38:03,951 --> 00:38:05,369 முதல் யூனிட் உள்ளே போகிறது. 423 00:38:10,624 --> 00:38:13,293 "அவனுடைய விதியிலிருந்து அவன் எப்படி தப்பியோட முடியும்?" 424 00:38:20,217 --> 00:38:21,260 நீ என்ன செய்திருக்க? 425 00:38:21,885 --> 00:38:23,387 நம் இருவருக்குமே நல்லதைச் செய்துள்ளேன். 426 00:38:41,113 --> 00:38:42,281 அது வந்து... 427 00:38:43,115 --> 00:38:45,409 வழக்கமான வெடிகுண்டு. அணுகுண்டில்ல. 428 00:39:17,024 --> 00:39:18,692 அதுதான் மையப் பகுதியா? 429 00:39:20,027 --> 00:39:21,612 அதை வெளியே எடுத்துட்டோம். 430 00:39:41,215 --> 00:39:42,424 யூலியா... 431 00:39:43,175 --> 00:39:44,593 அதன் மையப் பகுதி என்னிடம் உள்ளது. 432 00:39:48,305 --> 00:39:49,598 அவள் சாதிச்சுட்டாள். 433 00:40:03,445 --> 00:40:04,613 இப்போ என்ன? 434 00:40:11,036 --> 00:40:12,329 நாம நகரணும். 435 00:42:03,815 --> 00:42:05,817 தமிழாக்கம் அகிலா குமார்