1 00:00:01,043 --> 00:00:04,086 இந்த தொடரில் இடம் பெறும் சம்பவங்களும் கதாப்பாத்திரங்களும், முற்றிலும் கற்பனையே. 2 00:00:04,171 --> 00:00:06,757 மறைந்தவர்களுடனோ அல்லது நிகழ்காலத்தில் வாழ்பவர்களுடனோ ஒற்றுமை காணப்பட்டால், 3 00:00:06,840 --> 00:00:07,925 அது தற்செயலாக நிகழ்ந்ததே. 4 00:00:35,160 --> 00:00:39,790 மார்ஜன் மோன்டாசெமி, கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட் 5 00:00:39,873 --> 00:00:42,251 மருத்துவ கோப்பு: ஃபராஸ் கமலி 6 00:01:16,451 --> 00:01:17,828 நீ வெளியே போறியா? 7 00:01:22,916 --> 00:01:25,294 -நல்லா தூங்கினாயா? -தூங்கலை. 8 00:01:28,463 --> 00:01:29,715 நீ ஜிம்முக்குப் போறியா? 9 00:01:32,134 --> 00:01:33,635 ஆமாம், அது தான் நம்ம திட்டம். 10 00:01:33,719 --> 00:01:36,138 நான் வஹீதின் வீட்டுக்கு சீக்கிரம் போகணும். நமக்கு நேரம் இல்லை. 11 00:01:36,221 --> 00:01:37,764 நேத்து நடந்தது ஒரு பொருட்டில்லையா? 12 00:01:38,682 --> 00:01:41,727 கவலைப்படாதே. எல்லாத்தையும் கவனிச்சுட்டேன். நாம மாட்டாம தப்பிச்சுட்டோம். 13 00:01:41,810 --> 00:01:43,562 தமார், நாம இங்கிருந்து வெளியேறணும். 14 00:01:43,645 --> 00:01:46,064 சரியா? வஹீதும் வேண்டாம், மொசாடும் வேண்டாம். நாம போகணும். 15 00:01:47,191 --> 00:01:49,651 -என்ன? -நாம முதல்ல போட்ட திட்டப்படி போகலாம். 16 00:01:50,360 --> 00:01:52,863 சரியா? வான்கூவருக்கு ஓடி போய்விடலாம், இதெல்லாம் மறந்திடலாம். 17 00:01:52,946 --> 00:01:55,782 -மிலாத், அது அவ்வளவு சுலபமில்லை. -தமார், நான் ஒரு ஆளை கொன்னிருக்கேன். 18 00:01:56,491 --> 00:01:58,076 அதுவும் யாரோ இல்ல, ஒரு நண்பனை. 19 00:01:58,660 --> 00:01:59,828 நாம வாழ்க்கையை நடத்த உதவியா இருந்தவனை. 20 00:01:59,912 --> 00:02:02,497 -வேற வழி இல்லையே. -அதனால் என்ன வித்தியாசம் வந்திருக்கும்? 21 00:02:02,998 --> 00:02:06,168 அவன் உயிரோட இருந்தான், இப்போ இறந்துட்டான், அதோட நான் என் கையால அவனை கொன்னுட்டேன்! 22 00:02:06,752 --> 00:02:07,836 என் கைகளாலேயே! 23 00:02:11,131 --> 00:02:12,466 சரியா போகும். 24 00:02:31,276 --> 00:02:34,154 அதைப் பத்தி பேசலாம், சரியா? இப்போ அமைதியா இரு. 25 00:02:35,531 --> 00:02:37,366 பிறகு அதைப் பத்தி பேசலாம், சரியா? 26 00:02:37,449 --> 00:02:39,660 இங்கேயே இரு. 27 00:02:41,662 --> 00:02:43,372 நான் ஜிம்முக்குப் போகணும். 28 00:02:44,498 --> 00:02:46,667 -சரி. -சரி. 29 00:03:28,667 --> 00:03:29,835 என் அன்பே... 30 00:03:31,545 --> 00:03:33,297 தயவுசெய்து... 31 00:03:34,464 --> 00:03:36,049 அவங்கள நல்லபடியா நடத்து. 32 00:03:36,800 --> 00:03:37,801 இப்போவே போதும். 33 00:03:39,595 --> 00:03:40,679 என் அன்பே, 34 00:03:42,347 --> 00:03:43,891 உனக்கு இது ஒருவேளை உதவலாம். 35 00:03:46,685 --> 00:03:48,187 உனக்கு வேணும்னா உதவலாம். 36 00:03:49,563 --> 00:03:52,774 நீ என்கிட்ட இருப்பதுக்கு பதிலா, இன்னொருத்தர கொண்டுவந்து என்னை காண்காணிக்கிற. 37 00:03:59,239 --> 00:04:01,533 அது அவங்களாதான் இருக்கும். நீ போய் கதவை திறக்கிறாயா? 38 00:04:01,617 --> 00:04:04,536 நீ தானே அவங்கள வரச்சொன்ன. நீயே போய் கதவை திற. 39 00:04:05,120 --> 00:04:06,330 நஹீத்... 40 00:04:15,547 --> 00:04:17,132 திரு. கமலி? 41 00:04:19,009 --> 00:04:22,053 -நீங்க யாரு? -நான் மார்ஜன் மோன்டாசெமி. 42 00:04:22,554 --> 00:04:25,807 நான் இங்க வந்திருப்பது, தி வெட்டரன்ஸ் மென்ட்டல் ஹெல்த் இன்ஸ்டிட்யூடின் சார்பில். 43 00:04:26,934 --> 00:04:29,811 உங்க மனைவி, நஹீதுக்காக. 44 00:04:30,395 --> 00:04:31,605 சரிதானே? 45 00:04:34,441 --> 00:04:35,734 -தயவுசெய்து, வாங்க. -நன்றி. 46 00:05:36,962 --> 00:05:39,506 உங்க வீடு ரொம்ப அழகா இருக்கு. 47 00:05:39,590 --> 00:05:41,592 அது நஹீதின் பெற்றோர்களுடையது. 48 00:05:41,675 --> 00:05:46,013 முன்னாடி நாங்க இருந்த குடியிருப்பை விட்டு வரவேண்டியிருந்தது. 49 00:05:46,096 --> 00:05:48,348 சரி, நல்லது, இங்கயாவது வர முடிந்ததேன்னு கடவுளுக்கு நன்றி சொல்லுங்க. 50 00:05:49,516 --> 00:05:50,517 ஆமாம். 51 00:05:57,065 --> 00:06:00,694 நான் அந்நிய தேசத்தவளுங்கிறதால நீங்க யோசிக்கிறீங்கன்னு நினைக்கிறேன். 52 00:06:01,236 --> 00:06:03,614 வழக்கமா இங்க நிறைய பிரிட்டிஷர்களை சந்திப்பதில்லை. 53 00:06:03,697 --> 00:06:04,990 உண்மைதான். 54 00:06:05,073 --> 00:06:08,410 இரானுக்கும் இங்கிலாந்திற்கும் இடையே ஸ்நேகம் எதுவும் இல்லையே, இருக்கா என்ன? 55 00:06:08,493 --> 00:06:10,537 வந்து, என் கதையில், இருந்தது. 56 00:06:10,621 --> 00:06:13,373 என் கணவர், ஹாஸனை, நான் பாரீஸில் சந்தித்தேன். 57 00:06:13,457 --> 00:06:16,543 நான் அங்கு படித்துக்கொண்டிருந்தேன், அவரும் அங்கு படித்து வந்தார். 58 00:06:16,627 --> 00:06:18,545 நாங்க திருமணம் செய்துகிட்டு, இங்க வந்துட்டோம், 59 00:06:19,463 --> 00:06:20,923 அப்புறம் நான் திரும்பி காதல் வயப்பட்டேன், 60 00:06:21,632 --> 00:06:23,217 இந்த முறை இரானோடு. 61 00:06:23,300 --> 00:06:26,386 தப்பா நினைக்கலைன்னா, உங்க கணவர் என்ன செய்தார்? 62 00:06:26,470 --> 00:06:29,890 அவர் ஒரு மனோதத்துவ நிபுணர். அவர் 13 ஆண்டுகளுக்கு முன் இறந்துட்டார். 63 00:06:30,390 --> 00:06:31,642 என் ஆழ்ந்த அனுதாபங்கள். 64 00:06:31,725 --> 00:06:32,726 நன்றி. 65 00:06:33,769 --> 00:06:35,938 அவர் சிறப்பானவர். 66 00:06:36,438 --> 00:06:37,439 நிச்சயமாக. 67 00:06:38,023 --> 00:06:41,527 அவர் இறந்த பின்னும் நீங்க இங்கேயே தங்கிவிட நினைச்சீங்களா? 68 00:06:42,361 --> 00:06:43,654 இரான் தான் என் வீடு. 69 00:06:49,243 --> 00:06:53,830 நீங்க இங்க வந்ததுல நஹீதுக்கு மகிழ்ச்சியில்லை. 70 00:06:53,914 --> 00:06:55,791 ஆமாம், நான் அவருடைய கோப்பை படிச்சேன். 71 00:06:56,291 --> 00:06:58,877 அவங்க வீட்டுக்குள்ள ஒரு அந்நியர் வந்தால் 72 00:06:58,961 --> 00:07:01,004 அவங்க கவலை கொள்வது இயற்கைதானே. 73 00:07:01,922 --> 00:07:05,884 ஆனால் அவங்களுக்கு எப்படியாவது உதவ வழியை கண்டுப்பிடிக்கலாம்னு நம்பிக்கையோட இருக்கேன். 74 00:07:05,968 --> 00:07:10,973 உண்மையில, நான் தைரியமா உங்ககிட்ட ஒண்ணு சொல்லலாமா? 75 00:07:11,557 --> 00:07:14,893 நீங்க எங்கள தனியா விட்டீங்கன்னா அது தான் சிறந்ததுன்னு நான் நினைக்கிறேன். 76 00:07:16,395 --> 00:07:21,650 உங்க மனைவியை நான் பாதுகாப்பா பார்த்துக்குவேன், திரு. கமலி. 77 00:07:32,953 --> 00:07:34,413 அவன் நண்பர்கள் எல்லோரையும் பார்த்தாயா? 78 00:07:40,836 --> 00:07:42,921 பேமனும், வஹீதும். இது எங்க எடுத்தது? 79 00:07:43,005 --> 00:07:45,966 நகரத்துல ஒரு உணவகத்துல. கேஷ். 80 00:07:46,049 --> 00:07:49,428 வஹீத் தான் சொந்தக்காரன். பேமன் வழக்கமா இரவுகளை அங்கு கழிப்பான். 81 00:07:50,387 --> 00:07:51,597 நல்வாழ்த்துகள். 82 00:08:00,981 --> 00:08:03,734 ஹலோ. அட, இந்த விருந்தினரப் பாருங்கப்பா! 83 00:08:03,817 --> 00:08:06,486 -நீ வந்தது எனக்கு சந்தோஷம். -அழைச்சாங்க, அதனால வந்தேன். 84 00:08:06,570 --> 00:08:08,238 வா, நான் உனக்கு சுத்தி காட்டறேன். 85 00:08:10,115 --> 00:08:11,366 உனக்கு ஒரு ஷேக் தரட்டுமா? 86 00:08:11,450 --> 00:08:13,452 வேண்டாம், நன்றி. 87 00:08:15,829 --> 00:08:17,706 அவங்க பேருல குற்றச்சாட்டு இல்லங்குறது மட்டும் இல்ல, 88 00:08:17,789 --> 00:08:22,628 அவங்க தான் பிடிஎஸ்டி பிரிவை வெட்டீரன்ஸ் இன்ஸ்டிட்யூட்டிலே போருக்குப் பின் நிறுவினாங்க. 89 00:08:22,711 --> 00:08:26,548 அதன்படி அவங்க உயர் பதவியில் இருக்கும் புரட்சிப் படையினரை சிகிச்சை செய்ய அனுமதி உண்டு. 90 00:08:27,382 --> 00:08:31,553 அவங்க சுகாதார மந்திரியோட, அப்புறம் சிகிச்சை தந்த சில அயடோல்லாகளோடயும் எடுத்த படங்கள் இருக்கு. 91 00:08:31,637 --> 00:08:33,847 -ஏன் அவங்கள சந்தேகப்படறீங்க? -அவங்க மேற்கத்திய நாட்டை சேர்ந்தவங்க. 92 00:08:33,931 --> 00:08:38,477 நான் இப்போ திரும்பி வேலைக்கு சேர்ந்தவுடனே அவங்க என் வீட்டு வாசல்ல வந்து நிக்கறாங்க. 93 00:08:38,559 --> 00:08:40,270 அந்த இன்ஸ்டிட்யூட்டிலே என்ன சொன்னாங்க? 94 00:08:40,354 --> 00:08:45,734 அவங்கள போல திறமைப் படைத்த ஒருவர் சிகிச்சை தராங்களேன்னு நன்றியோட இருக்கணும்னாங்க. 95 00:08:45,817 --> 00:08:48,695 எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை, பாஸ். நான் இங்க பார்க்கிறதன் படி, 96 00:08:48,779 --> 00:08:49,613 அவங்க சொல்றது சரிதான். 97 00:09:12,761 --> 00:09:14,429 நீங்க அங்க என்ன பார்க்கறீங்க? 98 00:09:15,639 --> 00:09:17,933 தெரு எதிரே உள்ள பூங்கா. அழகா இருக்கு. 99 00:09:18,809 --> 00:09:21,019 நஹீத், உங்கள சந்திக்கிறதுல சந்தோஷம். 100 00:09:21,520 --> 00:09:22,521 நான் மார்ஜன். 101 00:09:24,022 --> 00:09:26,400 -உங்கள சந்திக்கிறதுல மகிழ்ச்சி. -எனக்கும். 102 00:09:27,109 --> 00:09:30,404 நாம ஆரம்பிக்கிறதுக்கு முன், நான் கழிப்பறைக்கு போகலாமா? 103 00:09:31,613 --> 00:09:33,907 அந்த ஹால்வழியின் கடைசியில் இருக்கு, இடது பக்கமா. 104 00:09:33,991 --> 00:09:35,033 நன்றி. 105 00:09:36,410 --> 00:09:37,494 நன்றி. 106 00:10:35,594 --> 00:10:39,515 பல வருடங்களுக்கு முன்னாடி, நான் ஒரு அழகான பெண்ணுக்கு வைத்தியம் செய்தேன் 107 00:10:39,598 --> 00:10:44,019 அவளுடைய குடும்பம் மொத்தமும் ஒரு பயங்கரமான விபத்துல இறந்துட்டாங்க. 108 00:10:45,479 --> 00:10:48,023 அவங்க லார் வரைக்கும் காரில் போனபோது, கார் குப்புற விழுந்திடுச்சு. 109 00:10:49,274 --> 00:10:50,692 அனைவரும் இறந்துட்டாங்க. 110 00:10:51,276 --> 00:10:52,486 அவளைத் தவிர பாக்கி எல்லோரும். 111 00:10:53,111 --> 00:10:55,531 அந்த தருணத்திலிருந்து, அவள் பேசுவதை நிறுத்திவிட்டாள். 112 00:10:56,198 --> 00:10:58,492 என்னால் முடிந்தது எல்லாத்தையும் நான் முயற்சி செய்து பார்த்துட்டேன். 113 00:10:58,575 --> 00:11:02,955 அவளுக்கு பிடிச்ச புத்தகங்களை பிடிச்சேன், நான் ஆட்டமெல்லாம் ஆடினேன்... 114 00:11:03,997 --> 00:11:09,795 இருந்தாலும் அவள் பேசவே மாட்டாள், நான் என்ன தெரபி அவள் மேலே முயற்சித்தாலும் சரி. 115 00:11:10,879 --> 00:11:15,884 ஒரு நாள் நான் என் அலுவலகத்துக்குள் நுழையும் வரை, 116 00:11:17,386 --> 00:11:21,181 நான் உட்காரும் முன்னர், அவள் பெரிதாக 117 00:11:21,974 --> 00:11:24,393 "மார்ஜன், ஜாக்கிரதை!" என கத்தினாள், 118 00:11:25,936 --> 00:11:28,146 மன்னிக்கணும், உங்கள பயமுறுத்திட்டேன். 119 00:11:30,399 --> 00:11:32,734 ஆனால் நீங்க என்ன ஆச்சுன்னு பார்த்தீங்கன்னா 120 00:11:32,818 --> 00:11:35,612 நான் உட்கார இருந்த அந்த நாற்காலி உடைந்து இருந்துச்சு, 121 00:11:36,280 --> 00:11:38,782 அந்த குழந்தை அதை கவனிச்சு என்னை எச்சரிக்கை செய்தாள். 122 00:11:40,492 --> 00:11:45,622 அந்த நாளிலிருந்து, அவளுக்குள்ள ஏதோ ஒண்ணு திறந்தது. 123 00:11:45,706 --> 00:11:47,541 உடனே எல்லாம் இல்ல, ஆனால்... 124 00:11:48,125 --> 00:11:50,335 கொஞ்சம் கொஞ்சமா... 125 00:11:51,420 --> 00:11:53,172 அவள் திரும்பி பேச ஆரம்பித்தாள். 126 00:11:57,968 --> 00:12:00,429 நீங்க ஏதாவது எங்கிட்ட பகிர விரும்புறீங்களா? 127 00:12:02,931 --> 00:12:04,141 உண்மையா சொல்லணுமா? 128 00:12:04,224 --> 00:12:05,559 கண்டிப்பாக. 129 00:12:07,769 --> 00:12:10,147 நீங்க இங்க வருவதே எனக்கு பிடிக்கலை. 130 00:12:11,607 --> 00:12:12,608 சரி. 131 00:12:14,693 --> 00:12:16,111 அப்போ நான் ஏன் இங்க வந்தேன்? 132 00:12:17,487 --> 00:12:21,450 ஏன்னா என் கணவர், நீங்க இங்க வந்து என் மேலே ஒரு கண் வச்சுக்கிறது நல்லதுன்னு நினைத்தார், அதனால. 133 00:12:22,075 --> 00:12:25,871 வழக்கமா இப்படி தான் நடக்குதா? உங்களுக்கும் சேர்த்து அவர் தான் முடிவெடுப்பாரா? 134 00:12:27,289 --> 00:12:29,750 எனக்கென்னவோ எப்போதும் அப்படி இருந்ததில்லைன்னு தோணுதே. 135 00:12:31,168 --> 00:12:32,169 நான் நினைப்பது சரிதானா? 136 00:12:37,216 --> 00:12:39,885 அந்த சம்பவம் நடந்ததிலிருந்து இப்படி தான் இருந்திருக்கு. 137 00:12:41,512 --> 00:12:44,515 எனவே, இப்போ உங்களுக்கு நீங்களே தீர்மானிக்க ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு. 138 00:12:46,433 --> 00:12:49,686 நான் இங்க இருக்க வேண்டாம்னா, ஒரே ஒரு வார்த்தை சொல்லுங்க. 139 00:12:50,437 --> 00:12:52,689 நான் இங்க வந்திருப்பது உங்களுக்கு, உங்க கணவருக்காக இல்லை. 140 00:13:11,625 --> 00:13:13,168 எது உங்க பலவீனமான கால்? 141 00:13:13,252 --> 00:13:14,378 இது தான். 142 00:13:14,878 --> 00:13:18,257 பாரு, உன் ஆரம்ப நிலைக்கு, உன் பலவீனமான காலை முன்னாடி போடு. 143 00:13:18,340 --> 00:13:20,509 -சரி. -அப்போ... 144 00:13:24,972 --> 00:13:26,348 -இப்படியா? -மீண்டும். 145 00:13:29,726 --> 00:13:31,019 இன்னும் கடினமா. 146 00:13:33,313 --> 00:13:34,940 -நன்றி. -பிரச்சினையில்லை. 147 00:14:26,742 --> 00:14:28,577 ஏய் பாரு, பெண்ணே. 148 00:14:28,660 --> 00:14:30,621 ஏய். 149 00:14:30,704 --> 00:14:32,414 என்ன ஆச்சு, பெண்ணே? இங்க வா. 150 00:14:35,167 --> 00:14:36,251 வந்து சாப்பிடு. 151 00:14:39,588 --> 00:14:40,589 ஹலோ? 152 00:14:40,672 --> 00:14:42,216 இப்போதான் அந்த டீலரின் பக்கத்து வீட்டிலிருந்து எனக்கு ஃபோன் வந்தது. 153 00:14:42,299 --> 00:14:43,842 யாரோ அவன் அபார்ட்மெண்டில் இருக்குறாங்கன்னு. 154 00:14:44,676 --> 00:14:46,261 நான் பக்கத்துல தான் இருக்கேன். 155 00:14:46,887 --> 00:14:48,680 அந்த பக்கத்து வீட்டுகாரங்களோட குடும்ப பேரு என்ன? 156 00:14:48,764 --> 00:14:50,057 அலிநிஜாட். 157 00:14:50,140 --> 00:14:51,350 நன்றி. 158 00:15:40,607 --> 00:15:42,943 இங்க வா. இங்க வா, 159 00:15:43,527 --> 00:15:46,113 ஹலோ, நான் விசாரணைக் குழுவிலிருந்து வருகிறேன். 160 00:15:59,418 --> 00:16:00,836 மன்னிக்கணும், யாரு நீங்க? 161 00:16:08,886 --> 00:16:11,889 மன்னிக்கணும், ஐயா. அந்த அபாரட்மெண்டுல இருந்தவன் கீழே தான் போயிருக்கான். 162 00:16:19,021 --> 00:16:21,398 நாம ஒரு டிரைவ் போயிட்டு வரலாம், என்ன? 163 00:16:34,912 --> 00:16:36,163 -ஹலோ, அலி. -சொல்லுங்க. 164 00:16:37,206 --> 00:16:40,292 இங்கிருந்து இப்போது தான் ஒரு கார் போகவிருந்தது. 165 00:16:40,375 --> 00:16:44,213 பின்னாடி பிளேட் எண்ணை பதிவு செய்துகொள்: 76-பி-765. இரான் 90. 166 00:16:44,296 --> 00:16:47,466 எழுபத்து-ஆறு... இரான் 90. 167 00:16:47,549 --> 00:16:49,009 தயவுசெய்து அதை போலீஸுக்கும் அனுப்பிவிடுங்க. 168 00:16:49,927 --> 00:16:51,011 புரியுது. 169 00:16:51,094 --> 00:16:52,930 திருமதி. மோன்டாசெமி விஷயத்துக்கு வருவோம். 170 00:16:53,013 --> 00:16:54,348 நான் சிலவற்றை இன்னும் ஆழமா விசாரித்தேன். 171 00:16:54,431 --> 00:16:55,516 ஒருவேளை பெரிய விஷயமாக இல்லாம இருக்கலாம், 172 00:16:55,599 --> 00:17:00,479 ஆனால் சமீபத்துல அயன்தெகான் மருத்துவமனையில பிடிஎஸ்டி பிரிவில் கன்சல்டிங் செய்யறாங்க. 173 00:17:01,313 --> 00:17:03,273 நான் லிங்க்கை அனுப்பி வைக்கிறேன். 174 00:17:03,357 --> 00:17:04,816 கண்டிப்பா. 175 00:17:04,900 --> 00:17:06,359 நல்ல வேலை செய்தாய், அலி. 176 00:17:13,825 --> 00:17:16,203 டாக்டர். மார்ஜன் மோன்டாசெமி, முன்னணி நிபுணர் 177 00:17:16,286 --> 00:17:18,664 பிடிஎஸ்டி நோயாளிகளிக்கு சிகிச்சை அளிப்பதில் தேர்ந்தவர் 178 00:17:29,842 --> 00:17:31,635 அது அவர் தப்பு இல்லை. 179 00:17:32,970 --> 00:17:34,888 அவர் வேலைக்கு திரும்பிப் போக தான் வேண்டும். 180 00:17:35,389 --> 00:17:36,807 அது அவரைவிட முக்கியமானது. 181 00:17:38,225 --> 00:17:41,353 அவர் முடியாதுன்னு சொல்லியிருக்கலாம், இல்லயா? 182 00:17:42,646 --> 00:17:45,023 காசிம் முஹமடிகிட்ட சொல்லமுடியுமா? 183 00:17:45,107 --> 00:17:46,441 அவர் முகத்தைப் பார்த்து? 184 00:17:50,028 --> 00:17:54,116 அந்த விமானிக்கு அப்படி ஆனபின், உடனே அவரை வேலைக்கு நியமிச்சுட்டாங்க... 185 00:17:54,199 --> 00:17:55,951 மார்ஜன் மோன்டாசெமி, கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட், இரண்டாவது மாடி 186 00:17:56,034 --> 00:17:59,663 ...முஹமடியே நேருல இங்க வந்து ஃபராஸ்சை வேலைக்கு வரும்படி கூப்பிட்டார். 187 00:18:01,206 --> 00:18:02,583 அவரால எப்படி முடியாதுன்னு சொல்லமுடியும். 188 00:18:04,168 --> 00:18:06,545 நிச்சயமா அந்த ஆளுகிட்ட முடியாது. 189 00:18:35,282 --> 00:18:37,576 அந்த ஆளைப் பத்தி இன்னும் சொல்லுங்க. 190 00:18:56,678 --> 00:18:58,805 இன்னிக்கு இதோடு முடிச்சுக்கலாம்னு நினைக்கிறேன். 191 00:18:59,890 --> 00:19:01,141 சரி, கண்டிப்பாக. 192 00:19:01,642 --> 00:19:05,062 நல்லா போயிகிட்டிருக்கு. நீங்க தைரியமான பெண்மணி, நஹீத். 193 00:19:06,188 --> 00:19:07,940 முக்கியமா நினைவுகொள்ள வேண்டியது 194 00:19:09,024 --> 00:19:13,946 இந்த அறைக்குள்ள நாம என்ன பேசுகிறோமோ அது நம் இருவருக்குள்ள மட்டும்தான் இருக்கணும். 195 00:19:24,122 --> 00:19:25,874 மார்ஜன் மோன்டாசெமி கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட் 196 00:19:27,876 --> 00:19:30,337 ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் கிளினிக்கல் சைக்காலஜியில் பிஹெச்டி 197 00:19:49,147 --> 00:19:53,569 மன்னிக்கணும். கழிப்பறையை நான் திரும்பி உபயோகிக்கலாமா? 198 00:19:55,153 --> 00:19:56,280 கண்டிப்பாக. 199 00:19:56,363 --> 00:19:57,364 நன்றி. 200 00:20:09,001 --> 00:20:10,586 நேரலை 201 00:20:26,476 --> 00:20:29,688 உன் புதிய தோழி அந்த பன்ச்சிங் பேகை கிட்டதட்ட கிழித்துவிட்டாள். 202 00:20:29,771 --> 00:20:31,690 உத்திகளை சொல்லி கொடுத்ததுக்கு நன்றி, செல்லம். 203 00:20:31,773 --> 00:20:32,858 உன்ன சந்திச்சதில் சந்தோஷம். 204 00:20:33,483 --> 00:20:35,235 -நல்ல எஜாய் பண்ணுங்க. -சரி. 205 00:20:37,779 --> 00:20:40,073 எனவே நீ என் மதிப்புமிக்க அக்குவா பைகளை கிழிக்கிறாயா? 206 00:20:40,157 --> 00:20:41,325 அவை உனக்கு என்ன தீங்கு செய்தன? 207 00:20:42,367 --> 00:20:44,578 ஒரு பெண்ணுக்கு தன்னைத் தானே பாதுகாத்துக்க தெரியணும். 208 00:20:45,329 --> 00:20:46,663 அப்படியா. 209 00:20:47,789 --> 00:20:52,085 எனவே நான் இப்போ உன்னை சாப்பிட கூப்பிட்டா ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணுமா? 210 00:20:56,173 --> 00:20:58,634 -கண்டிப்பாக. -அதை கவனத்தில வச்சுக்குறேன். 211 00:21:01,136 --> 00:21:02,221 நீங்க முதலில். 212 00:21:19,530 --> 00:21:22,074 நியாவரண் பிளாடினம் 213 00:21:38,006 --> 00:21:40,717 மன்னிக்கணும் சார், இது பெண்கள் நேரம். நீங்க உள்ள வர முடியாது. 214 00:21:40,801 --> 00:21:42,678 மன்னிக்கணும் மேடம். நான் என் தங்கையை அழைத்துச் செல்ல வந்தேன். 215 00:21:42,761 --> 00:21:44,221 அவ ஃபோனை எடுக்க மாட்டேங்கிறா. 216 00:21:44,304 --> 00:21:45,639 அவளுக்கு கிக்பாக்ஸிங்க் வகுப்பு இருந்தது. 217 00:21:45,722 --> 00:21:47,558 அந்த வகுப்பு முடிந்து அரை மணி நேரம் ஆகுது. 218 00:21:47,641 --> 00:21:49,434 நீங்க செக் செய்ய முடியுமா, தயவுசெய்து? 219 00:21:49,518 --> 00:21:51,228 லேலா அன்சாரி. வஹீதின் விருந்தினர். 220 00:21:51,311 --> 00:21:52,604 அது யார் என்று எனக்குத் தெரியாது. 221 00:21:52,688 --> 00:21:55,274 நான் செக்யூரிட்டியை கூப்பிடுவதுக்கு முன்னாடி போயிடுங்க. 222 00:22:03,824 --> 00:22:05,033 செல்லமே? 223 00:22:06,869 --> 00:22:09,913 இது என்னது? அதை வச்சுகிட்டு என்ன செய்யணும்னு தெரியுமா? 224 00:22:11,748 --> 00:22:12,875 இதோ. 225 00:22:25,053 --> 00:22:27,264 இதைப் பார்த்தா உணவகம் மாதிரி இலல்லையே. 226 00:22:27,347 --> 00:22:29,141 சரி, இது உணவகத்தைவிட ரொம்ப நல்லயிடம். 227 00:22:30,309 --> 00:22:31,310 நீ முதல்ல உள்ள போ. 228 00:22:34,396 --> 00:22:35,397 வருக. 229 00:22:36,982 --> 00:22:38,108 சௌகரியமா இருந்துக்கோ. 230 00:22:38,734 --> 00:22:40,194 நமக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வரேன். 231 00:22:43,739 --> 00:22:47,492 என்னிடம் இந்தியன், தாய், ஃபிலிப்பீனோ உணவு வகைகள் எல்லாம் இருக்கு. 232 00:22:48,243 --> 00:22:49,661 எது வேணும்னாலும் செய்வேன். 233 00:22:49,745 --> 00:22:50,871 எதுவும். 234 00:22:51,580 --> 00:22:53,373 இந்த வீடு முழுவதும் என்னுடைய டிசைன் தான் தெரியுமா. 235 00:22:54,791 --> 00:22:56,376 மாடியில இருக்கிற பெய்ண்டிங்களை அப்புறமா உனக்கு காட்டறேன். 236 00:22:56,460 --> 00:22:57,461 மெஹ்தி 237 00:23:05,177 --> 00:23:06,512 நான் வஹீதின் வீட்டில் இருக்கேன். கவலை வேண்டாம். 238 00:23:13,769 --> 00:23:15,896 நீ என்ன சொல்லற? நாம அதை சுவைக்கலாமா? 239 00:23:16,396 --> 00:23:17,397 கண்டிப்பா. 240 00:23:18,273 --> 00:23:19,399 உன் சந்தோஷத்துக்காக, லேலா. 241 00:23:28,033 --> 00:23:29,368 சொந்த ஜிம்மை ஆரம்பிக்கும் கனவு எப்போதுமே உங்களுக்கு உண்டா? 242 00:23:29,451 --> 00:23:31,912 இல்ல, இல்ல. ஜிம் ஒரு தற்காலிக அமைப்பு தான் எனக்கு. 243 00:23:32,412 --> 00:23:35,374 எனக்கு ரியல் எஸ்டேட்டிலே போகணும்னு ஆசை. கொஞ்ச தூரம் தள்ளி ஒரு இடத்தை பார்த்திருக்கேன். 244 00:23:35,457 --> 00:23:36,750 இப்போ அதுக்கு விலையே கிடையாது... 245 00:23:37,709 --> 00:23:40,087 ஆனால் நான் அதை ஒரு ரத்தினக் கல்லாக்குவேன், உன்னைப் போல. 246 00:23:45,717 --> 00:23:47,010 உனக்கு பசியில்லையா? 247 00:23:47,845 --> 00:23:51,098 -நீங்களே இதை செஞ்சீங்களா? -இல்ல, இங்க இருக்கிற பணிப்பெண் செய்தாள். 248 00:23:51,181 --> 00:23:53,392 எப்போதும் வீட்டுல தான் சாப்பிடுவீங்களா? வெளியே போவது கிடையாதா? 249 00:23:53,475 --> 00:23:56,270 அந்த உணவகம் என் குடும்பத்த சேர்ந்தது தான். நான் எப்போதும் வெளியே போறதுண்டு. 250 00:23:56,353 --> 00:23:58,522 -அட, ஆமாம். யாஸமன் சொன்னார். ஆமாம். -ஆம். கெஷ். 251 00:23:58,605 --> 00:23:59,940 -அப்படியா. -உனக்கு அங்க போகணுமா? 252 00:24:03,193 --> 00:24:04,653 வா, போகலாம். இன்னிக்கு மாலை போகலாம். 253 00:24:04,736 --> 00:24:06,238 நிறைய பேரு வருவாங்க. ரொம்ப நல்லாயிருக்கும். 254 00:24:07,698 --> 00:24:10,117 -சரி, ஆம். நல்லாயிருக்கு. -சரி. ஹம்ம். 255 00:24:13,453 --> 00:24:15,622 நீ சிரிக்கிறப்போ நிஜமாவே ரொம்ப அழகா இருக்க. 256 00:24:20,961 --> 00:24:22,629 நான் இப்போ வர்றேன். நீ சாப்பிடு. 257 00:24:26,800 --> 00:24:28,051 லேலா! 258 00:24:29,094 --> 00:24:30,637 -லேலாவை கூப்பிடு! -நீ இங்க என்ன செய்யற? 259 00:24:30,721 --> 00:24:32,181 லேலா! லேலா! 260 00:24:34,892 --> 00:24:37,186 -நீ இங்க என்ன செய்யற? -லேலாவை கூப்பிடு! 261 00:24:37,269 --> 00:24:39,104 லேலா! லேலா! 262 00:24:39,646 --> 00:24:40,814 நான் அவளைக் கொண்டு போகிறேன். 263 00:24:40,898 --> 00:24:42,858 -நீ இங்க என்ன செய்யற? -நானும் அதையே தான் கேட்கிறேன். 264 00:24:42,941 --> 00:24:44,318 நீ என் கால்களை எடுக்கவேயில்லை. போகலாம் வா. 265 00:24:44,401 --> 00:24:47,404 நீ என்ன குடிச்சிருக்கியா இல்ல போதையில இருக்கியா? வெளியே போ இங்கிருந்து. 266 00:24:47,487 --> 00:24:49,448 -வா போகலாம், நான் உன்னோட பேசணும். -பேசணுமா? 267 00:24:49,531 --> 00:24:51,909 போகலாம், வா. லேலா! 268 00:24:51,992 --> 00:24:54,119 -இங்க என்னவோ மாதிரி நின்னுட்டிருக்க... -போகலாம் வா! 269 00:24:54,203 --> 00:24:56,205 சிக்கா! ஆ, ச்சே. 270 00:24:56,288 --> 00:24:58,207 -இது என்ன கண்றாவி? -சிக்கா, இங்க வா. 271 00:24:58,290 --> 00:25:00,751 அவளை எடுத்துக்கோ! இவை எல்லாம் இத்தாலிய மஞ்சங்கள்! 272 00:25:00,834 --> 00:25:02,961 உனக்கு இருக்கிற சொத்தைவிட இரண்டு மடங்கு மதிப்பு உள்ளது, முட்டாளே! 273 00:25:03,045 --> 00:25:04,421 நீ, நீ வெளியே போய் தொலை! 274 00:25:04,505 --> 00:25:06,340 நான் காருல விளக்கி சொல்றேன். வா போகலாம். 275 00:25:06,423 --> 00:25:07,591 -இல்ல. -லேலா. 276 00:25:07,674 --> 00:25:10,427 வேண்டாம், நீ அவனோட போகலாம். அவனை வர வச்ச, இல்ல? 277 00:25:10,511 --> 00:25:13,388 -சற்று பொறு. நான் அவனை கூப்பிடலயே. -நீ இங்க இருப்பது அவனுக்கு எப்படி தெரியும்? 278 00:25:14,306 --> 00:25:18,352 நான் உன்னை அழைக்கிறேன், நல்ல விதமா நடத்துறேன், நீ என்னடான்னா உன் அண்ணனை கூப்பிடறயா? 279 00:25:18,435 --> 00:25:20,479 நான் உன்னை ஏதாவது செய்து விடுவேன்னு பயப்படறயா? 280 00:25:20,562 --> 00:25:22,564 நான் எங்க இருக்கேன்னு இப்போதான் கேட்டான். 281 00:25:22,648 --> 00:25:23,649 போய் தொலை. 282 00:25:24,358 --> 00:25:26,318 -வஹீத்... -வெளியே போறயா இல்லையா! 283 00:25:31,865 --> 00:25:34,076 நீ என்ன பண்ணியிருக்கன்னு உனக்குப் புரியுதா? 284 00:25:34,993 --> 00:25:36,370 உனக்கு என்ன ஆச்சு? 285 00:25:36,870 --> 00:25:37,996 அது யாருடைய நாய்? 286 00:25:38,914 --> 00:25:40,249 அது பாபாக்கோட நாய். 287 00:25:41,542 --> 00:25:43,377 கவலைப் படாதே. எல்லாம் நான் ஏற்பாடு பண்ணிட்டேன், சரியா? 288 00:25:45,838 --> 00:25:46,922 என்ன ஏற்பாடு? 289 00:25:48,090 --> 00:25:51,134 நீ எல்லாத்தையும் நாசம் பண்ணிட்ட. இன்னிக்கு இரவு அவன் நண்பர்களை பார்க்க கூப்பிட்டான். 290 00:25:51,218 --> 00:25:54,471 அந்த ஆளுங்களோட எல்லாம் நீ இனிமே போக வேண்டாம், சரியா? அதெல்லாம் முடிஞ்சுது. ஏறு. 291 00:26:09,862 --> 00:26:11,196 அதை திற. 292 00:26:11,780 --> 00:26:12,865 அந்த பையை திறந்து பாரு. ஆகட்டும். 293 00:26:20,497 --> 00:26:23,166 -அதென்ன பாபாக்கோடதா? -இல்ல, அது தான் நாம இங்கிருந்து தப்பிக்க வழி. 294 00:26:23,250 --> 00:26:26,086 நாம இப்போ எல்லைக்கு போறோம், போய் நம்மள கடத்தி விடறவங்கள தேடுறோம். 295 00:26:26,170 --> 00:26:28,964 நீ வீட்டுல தான் இருந்திருக்கணும். நீ உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க? 296 00:26:29,047 --> 00:26:32,092 நான் நம்மள காப்பத்த பார்க்கறேன்! முட்டாள்! காப்பாத்துறேன். போறோம். 297 00:26:32,176 --> 00:26:34,636 நான் சொல்றத ஒரு வினாடி கேளு. அப்படி எல்லாம் நடக்காது. 298 00:26:34,720 --> 00:26:37,389 ஒரு நிறுவனத்தோட இணைஞ்சு வேலை செய்யறோம். நாம போறதப் பத்தி தனியா முடிவு செய்ய முடியாது. 299 00:26:37,472 --> 00:26:39,600 முதல்ல, நான் எந்த நிறுவனத்தையும் சேர்ந்தவன் இல்லை. 300 00:26:39,683 --> 00:26:42,895 இரண்டாவதாக, நீ இந்த கண்றாவியில நம்மள இழுத்து விடுவதுக்கு முன், ஆரம்பத்துல 301 00:26:42,978 --> 00:26:45,063 என்ன திட்டம் போட்டோமோ அப்படியே செய்வோம். 302 00:26:45,147 --> 00:26:47,524 -நான், நாம தப்பிக்க வழி செய்யறேன். -தப்பிக்க வழியே கிடையாது! 303 00:26:48,233 --> 00:26:51,612 நீ இதை சொதப்பிவிட்டால், உன்னை நான் காப்பாத்துறது கஷ்டம். உனக்குப் புரியுதா? 304 00:26:52,529 --> 00:26:53,530 நமக்கு ரொம்ப அதிகமா விஷயம் தெரியும். 305 00:26:53,614 --> 00:26:54,656 பார்த்து ஓட்டு! 306 00:27:22,559 --> 00:27:23,560 அப்படியா? 307 00:27:23,644 --> 00:27:25,312 திரு. ஃபராஸ், நீங்க விசாரிச்சீங்களே, அந்த கார், 308 00:27:25,395 --> 00:27:27,231 நகரின் வடக்குல இன்டஸ்ட்ரியல் பார்க்குல பார்த்திருக்காங்க. 309 00:27:27,314 --> 00:27:29,483 நான் உங்களுக்கு இடத்தை அனுப்பறேன். 310 00:27:30,150 --> 00:27:31,276 நன்றி. 311 00:27:32,361 --> 00:27:34,279 வேகமா போ, அவன் தப்பிக்கறான். 312 00:27:42,746 --> 00:27:43,747 போ, இன்னும் வேகமாப் போ! 313 00:27:57,052 --> 00:27:58,512 வழியை விட்டு தள்ளிப் போ! 314 00:27:58,595 --> 00:28:00,180 இங்கே இடது பக்கம் திரும்பு. 315 00:28:07,229 --> 00:28:08,313 போ! 316 00:28:31,128 --> 00:28:33,130 சிக்கா! சிக்கா! 317 00:28:40,429 --> 00:28:41,805 அவளை விடு. 318 00:28:41,889 --> 00:28:43,765 நாம இப்போ போகணும். உடனே. 319 00:29:19,176 --> 00:29:20,844 இங்க யாரும் இல்லை. 320 00:29:48,121 --> 00:29:49,164 வாயை மூடு! 321 00:29:51,458 --> 00:29:54,127 தூரப் போ, தொல்லப்பிடிச்சதே! 322 00:29:56,421 --> 00:29:57,840 சாவு! தள்ளிப்போ! 323 00:31:09,786 --> 00:31:12,915 சரி. ஆம், நன்றி. சரி. 324 00:31:33,435 --> 00:31:34,436 அந்த கால் எப்படி போச்சு? 325 00:31:37,523 --> 00:31:38,524 நான் பொய் சொன்னேன். 326 00:31:39,900 --> 00:31:41,485 நீ இன்னிக்கு வீட்டை விட்டு வெளியே போகலைன்னு சொன்னேன். 327 00:31:45,489 --> 00:31:46,907 எப்படி இருக்கு உனக்கு? 328 00:31:48,408 --> 00:31:49,451 கண்றாவியா இருக்கு. 329 00:31:51,411 --> 00:31:53,622 தமார், நாம இருவரும் எப்படியாவது தப்பிக்கணும்னு விரும்பினேன். 330 00:31:55,207 --> 00:31:56,208 தெரியும். 331 00:31:58,377 --> 00:32:00,462 ஆனால் நாம ஒரு தடவை இதுல இறங்கிட்டா, வெளியே வர முடியாது. 332 00:32:01,296 --> 00:32:02,297 அப்படியில்லை. 333 00:32:03,841 --> 00:32:06,009 இவ்வளவு தூரம் போகும்னு நினைக்கலை, தெரியுமா? 334 00:32:11,723 --> 00:32:12,724 மன்னிக்கணும். 335 00:32:14,059 --> 00:32:16,061 நம்மள இதுக்குள்ள இழுத்துவிட்டேனேன்னு வருத்தமா இருக்கு. 336 00:32:19,273 --> 00:32:20,941 நான் உன்னை இருக்க விட்டிருக்கக்கூடாது. 337 00:32:22,317 --> 00:32:24,027 -நான் இங்க இருக்கிறது உனக்கு பிடிக்கலையா? -அப்படியில்ல. 338 00:32:26,530 --> 00:32:28,115 இல்ல, எனக்கு நீ இங்க வேணும். 339 00:32:30,367 --> 00:32:31,827 நீ என் கூட இருக்கணும். 340 00:32:38,083 --> 00:32:40,043 அவங்க சிக்காவை சுட்டு தள்ளிட்டாங்க, எழவு. 341 00:32:41,545 --> 00:32:42,546 உனக்குத் தெரியும்... 342 00:32:44,965 --> 00:32:46,508 என் வாழ்க்கை முழுக்க... 343 00:32:48,969 --> 00:32:51,096 தேவையா இருந்தபோதெல்லாம், அவங்களுக்குத் தேவையானதை 344 00:32:52,389 --> 00:32:53,765 எல்லாம் எடுத்துக்கிட்டாங்க. 345 00:32:54,975 --> 00:32:56,518 எனக்கு முக்கியமா இருந்த எல்லாத்தையும். 346 00:32:58,562 --> 00:32:59,813 அப்போ எனக்கு தெரிஞ்சுது... 347 00:33:01,815 --> 00:33:04,067 எனக்கு இங்க வாய்ப்பே இல்லைன்னு. 348 00:33:07,821 --> 00:33:09,031 இது தான் உனக்கு கிடைத்த வாய்ப்பு. 349 00:33:15,454 --> 00:33:16,455 தமார்... 350 00:33:18,123 --> 00:33:20,417 எங்கிட்ட எதுவுமே இல்லை. 351 00:33:22,419 --> 00:33:23,712 யாரும் இல்லை. 352 00:33:24,296 --> 00:33:25,589 எனக்கு நீ மட்டும் தான் இருக்க. 353 00:33:52,824 --> 00:33:53,992 அற்புதமான வாசனை! 354 00:33:54,493 --> 00:33:56,203 திடீருன்னு எனக்கு சோர்வாகவே இல்லை. 355 00:33:56,286 --> 00:33:58,997 வீட்டுக்கு வருக, திரு. கமலி. 356 00:33:59,540 --> 00:34:02,125 ஆஷ் ரெஸ்டேயா? ஏதாவது கொண்டாட்டமா? 357 00:34:02,209 --> 00:34:03,210 குறிப்பா எதுவும் இல்லை. 358 00:34:03,293 --> 00:34:06,672 -உங்கிட்ட மன்னிப்பு கேட்கதான் எல்லாம் செய்தேன். -எதுக்கு, கண்ணே? 359 00:34:07,714 --> 00:34:08,882 நீ சரியாத்தான் சொன்ன. 360 00:34:09,466 --> 00:34:12,177 மார்ஜன் மாதிரி ஒருவர் தான் எனக்குத் தேவையாக இருந்தது. 361 00:34:13,971 --> 00:34:16,389 கண்ணே, நீ மன்னிப்பு கேக்குறதுக்கு எல்லாம் எதுவும் இல்லை. 362 00:34:16,473 --> 00:34:17,891 இருக்கே. 363 00:34:17,975 --> 00:34:21,978 உன் மேல நான் ரொம்ப கடுமையா நடந்துக்கிட்டேன், உன் மேல பழி சுமத்திட்டேன். 364 00:34:22,062 --> 00:34:26,483 உண்மையில, நீ என் கூட இருக்கிறதே எனக்கு சந்தோஷம். 365 00:34:32,781 --> 00:34:35,242 அடடே. நம்பவே முடியலை! 366 00:34:35,324 --> 00:34:39,913 எனக்கு ரொம்ப பசிக்குது. நான் போய் கை கழுவிட்டு வரேன். 367 00:34:40,581 --> 00:34:43,792 நன்றி, இது ரொம்ப சிறப்பு. சிறப்பா இருக்கு. 368 00:34:44,918 --> 00:34:47,545 -ஹலோ? -திரு. கமலி. 369 00:34:47,629 --> 00:34:49,797 -நான் இடைஞ்சல் செய்கிறேனா. -இல்லவேயில்லை. 370 00:34:49,882 --> 00:34:53,886 நான் கூப்பிட்ட காரணம் என்னன்னா, நாளைக்கு நஹீதோட என் பணியை தொடர விரும்புறீங்களான்னு தெரிய. 371 00:34:55,012 --> 00:34:56,013 அதில என்ன தடையிருக்கும்? 372 00:34:56,679 --> 00:34:58,932 வந்து, நான் அந்நியருன்னு உங்களுக்கு ஒரு அச்சம் இருந்ததே. 373 00:34:59,641 --> 00:35:01,852 சரி, என் கவலைகள் எல்லாம் இப்போ பறந்து போச்சு. 374 00:35:02,603 --> 00:35:07,232 நான் வீட்டுக்கு வந்தப்போ, என் மனைவி சந்தோஷமா, இளைப்பாறி இருந்தா. 375 00:35:07,733 --> 00:35:10,694 அதோடு, நீங்க இருவரும் நல்ல கூட்டு ஆகிட்டிங்க போலும். 376 00:35:11,278 --> 00:35:12,529 அதை கேட்க சந்தோஷமாக இருக்கு. 377 00:35:13,030 --> 00:35:16,200 இருந்தாலும், என்னை நம்ப முடியாதுன்னு நீங்க பயந்தது போல் தான் இருக்கு. 378 00:35:16,283 --> 00:35:17,534 ஏன் அப்படி சொல்றீங்க? 379 00:35:18,035 --> 00:35:20,204 என் கிளினிக்கை இன்னிக்கு யாரோ உடைச்சு உள்ள வந்திருக்காங்க. 380 00:35:20,287 --> 00:35:24,249 கேமராக்கள்ல பதிவாகி இருக்கிற அந்த நபர் பார்க்க உங்கள போலவே தான் இருக்கிறார். 381 00:35:26,168 --> 00:35:27,961 அது நீங்களா இருக்க வழி இருக்கா என்ன? 382 00:35:31,048 --> 00:35:33,425 ஆமாம். அது நான் தான். 383 00:35:33,967 --> 00:35:34,968 எனக்குப் புரியுது. 384 00:35:35,052 --> 00:35:37,554 கண்டிப்பாக, நான் புகார் செய்ய மாட்டேன். 385 00:35:38,430 --> 00:35:40,682 ஆனால், இந்த சூழ்நிலையிலே, துரதிர்ஷ்டவசமா, 386 00:35:40,766 --> 00:35:43,602 -நான் எப்படி தொடர்வதுன்னு எனக்குத் தெரியலை... -பொறுங்க. தயவுசெய்து. 387 00:35:45,187 --> 00:35:46,980 நான் மன்னிப்பு கேட்கிறேன். 388 00:35:48,065 --> 00:35:50,901 என் மனைவிக்கு நடந்தது என்னையும் பாதிச்சிடுச்சு, 389 00:35:50,984 --> 00:35:56,240 அதிலும், ஒரு அந்நிய பெண்மணி, ஒரு வடக்கத்திப் பெண், என் வாசலில் வந்து நின்னா, 390 00:35:57,241 --> 00:35:59,701 கேள்விகள் எழத் தானே செய்யும். இல்லையா? 391 00:35:59,785 --> 00:36:02,287 நீங்க என்னுடன் நேரடியா பேசியிருக்கணும். 392 00:36:02,371 --> 00:36:04,706 நீங்க சொல்வுது சரிதான். என்னை மன்னிச்சிடுங்க. 393 00:36:06,375 --> 00:36:09,086 திரு. கமலி, உங்க மனைவிய இந்த தெரபி குணப்படுத்தணும்னா, 394 00:36:09,169 --> 00:36:11,255 நானும் நீங்களும் ஒருவரை ஒருவர் நம்ப கத்துக்கணும். 395 00:36:11,338 --> 00:36:13,173 இல்லைனா, நான் முன்னேற முடியாது. 396 00:36:13,257 --> 00:36:17,135 உங்களுக்கு எங்கிட்ட உள்ள அந்த சங்கடம், உங்க ஒப்புதலுக்கு தடையா இருக்கலாம். 397 00:36:17,219 --> 00:36:20,973 -சூப் சில்லுன்னு ஆகுது. -நான் வரேன். உண்மையா. ஒரு வினாடியில. 398 00:36:26,395 --> 00:36:30,607 டாக்டர். மோன்டாசெமி, நீங்க நாளை வருவதை நான் விரும்புகிறேன். 399 00:36:31,316 --> 00:36:33,068 கடமைப்பட்டிருக்கிறேன். 400 00:36:34,319 --> 00:36:35,320 நல்லது. 401 00:36:56,091 --> 00:36:58,135 -மெஹ்தி, பாபாக்கின் நண்பன். -அதனால? 402 00:36:58,969 --> 00:37:01,013 நான் எவ்வளவு செய்யறேனோ, அதுல உனக்கு 10 சதம். 403 00:37:01,096 --> 00:37:02,264 இருபது சதம். 404 00:37:02,973 --> 00:37:04,099 பதினைந்து. 405 00:37:05,726 --> 00:37:06,810 டீல். 406 00:37:36,757 --> 00:37:37,966 இங்கேயே இரு. 407 00:37:39,676 --> 00:37:42,221 -இங்க என்ன செய்யற? -ஹலோ, வஹீத். 408 00:37:42,304 --> 00:37:45,015 -வெளியே போயிடு. -நான் மன்னிப்பு கேட்க வந்திருக்கேன். 409 00:37:45,098 --> 00:37:48,310 நீயே வெளிய போறியா அல்லது செக்யூரிட்டிய கூப்பிட்டு வெளியே தள்ளட்டுமா. 410 00:38:01,615 --> 00:38:02,950 ்அவங்க பாபாக்கை கண்டுபிடிச்சிட்டாங்க. 411 00:38:04,159 --> 00:38:05,202 அவன் இறந்துட்டான். 412 00:38:06,328 --> 00:38:07,955 என்ன சொல்ற, பாபாக் இறந்துட்டானா? 413 00:38:08,038 --> 00:38:09,164 எப்போ இறந்தான்? 414 00:38:09,248 --> 00:38:11,583 அவன் உடலை ஷௌஷுல தூக்கிப் போட்டுட்டு போயிட்டாங்க. 415 00:38:11,667 --> 00:38:13,710 ஏதாவது போதை மருந்து டீல் மோசமா போயிருக்கும். 416 00:38:13,794 --> 00:38:16,797 ஆனால் எனக்கு அந்த இடம் தெரியும். அவன் அங்க வேலை செய்ய வாய்ப்பே இல்லை. 417 00:38:31,353 --> 00:38:33,063 நான் போறேன். 418 00:38:33,146 --> 00:38:34,356 ஜாலியா இரு, லேலா. 419 00:38:36,358 --> 00:38:37,359 ஹை. 420 00:38:39,528 --> 00:38:40,779 அந்த கார் என்ன ஆச்சு? 421 00:38:40,863 --> 00:38:42,614 நான் சொன்னா நீங்க நம்ப மாட்டீங்க. 422 00:38:42,698 --> 00:38:44,157 எங்கிட்ட செக்யூரிட்டி கேமரா படம் இருக்கு. 423 00:38:44,825 --> 00:38:46,368 மிலாத் கஹானி மாதிரியே இருக்கிற ஒருத்தன் 424 00:38:46,451 --> 00:38:49,413 நியாவரண் பிளாடினம்ங்கிற ஜிம்முக்குள்ள போக முயற்சி செய்திட்டிருந்தான். 425 00:38:49,496 --> 00:38:52,332 பிரச்சினை என்னன்னா என்னால அந்த இடத்திலிருந்து எந்த வித தகவலும் பெற முடியலை. 426 00:38:52,416 --> 00:38:53,417 ஏன் முடியலை? 427 00:38:53,500 --> 00:38:55,294 அங்க இருக்கிற நிறைய வாடிக்கையாளர்கள் பெரிய இடத்துக்காரங்க. 428 00:38:55,377 --> 00:38:57,379 அந்த இடத்துக்கு சொந்தக்காரன் வஹீத் நெமாத்தி. 429 00:38:57,462 --> 00:38:58,755 நெமாத்தியா? 430 00:38:58,839 --> 00:38:59,840 அந்த குடும்பத்தை சேர்ந்தவனா? 431 00:38:59,923 --> 00:39:02,050 நமக்கு மேலிடத்திலிருந்து ஒப்புதல் தேவை. 432 00:39:02,926 --> 00:39:04,928 நாளைக்கு அதை கவனிச்சுக்கலாம். அற்புதமான வேலை. 433 00:39:05,012 --> 00:39:06,054 போய் படுத்துக்கோ. 434 00:39:06,138 --> 00:39:07,472 நன்றி, பாஸ். 435 00:39:07,556 --> 00:39:08,557 நல்லது. 436 00:39:34,374 --> 00:39:35,375 அனைவருக்கும்... 437 00:39:36,543 --> 00:39:39,338 இது லேலா, நம் விருந்தினர், அவர் லாஸ் ஏஞ்சிலெஸிலிருந்து இங்கு வந்திருக்கார்! 438 00:39:42,341 --> 00:39:43,800 ஷெர்வின், இடம் கொடு. 439 00:39:46,970 --> 00:39:47,971 எனக்கு ஒரு கோப்பை எடுத்து வா. 440 00:39:54,436 --> 00:39:55,812 பேமன்! 441 00:39:57,397 --> 00:39:59,525 உன் ஃபோனை ஒரு நிமிடம் தள்ளி வச்சுட்டு பேசுறத நிறுத்து. 442 00:40:00,150 --> 00:40:01,860 வந்து, மன்னிக்கணும் சார். 443 00:40:02,945 --> 00:40:06,657 -சியர்ஸ்! -சியர்ஸ்! 444 00:41:29,031 --> 00:41:31,033 தமிழாக்கம் அகிலா குமார்