1 00:00:01,043 --> 00:00:04,086 இந்த தொடரில் இடம்பெறும் சம்பவங்களும் கதாபாத்திரங்களும் முற்றிலும் கற்பனையே. 2 00:00:04,171 --> 00:00:06,757 மறைந்தவர்களுடனோ அல்லது நிகழ்காலத்தில் வாழ்பவர்களுடனோ ஒற்றுமை காணப்பட்டால் 3 00:00:06,840 --> 00:00:07,925 அது தற்செயலாக நிகழ்ந்ததே. 4 00:03:39,803 --> 00:03:41,096 பெட்டி. 5 00:03:42,264 --> 00:03:44,892 என் அழகே, என் குழந்தையே. 6 00:03:44,975 --> 00:03:46,852 நீங்க அம்மாகிட்ட கூட இப்படி பேசுறதில்லையே. 7 00:03:46,935 --> 00:03:48,103 உளறாதே, மகனே. 8 00:03:48,187 --> 00:03:51,398 அது பாதுகாப்பா மீண்டும் வில்லாவிற்கு வந்து சேருவதை மட்டும் பார்த்துக்கோ. 9 00:03:51,982 --> 00:03:54,276 நான் காவல் பாதுகாப்புடன் மோட்டர் பைக் ஊர்வலத்தோட தான் வரமுடியும், 10 00:03:56,361 --> 00:03:58,864 அதை ஓட்டுவதற்கு நான் வேறு யாரையும் நம்ப மாட்டேன். 11 00:04:02,326 --> 00:04:03,410 தெரியுமில்ல... 12 00:04:03,493 --> 00:04:05,662 பார்ட்டிக்கு சில பெரிய புள்ளிகள் வரப்போறாங்க, அதனால நீ அதுல எல்லாரோடும் கலந்துகிட்டு 13 00:04:05,746 --> 00:04:08,415 பேசினால் நல்லாயிருக்கும். 14 00:04:10,918 --> 00:04:12,878 -என்னது விஷயம்? -ஒண்ணுமில்லை. 15 00:04:14,505 --> 00:04:17,507 உன் வயசுல நான் ஏற்கனவே கர்னல் ஆகிட்டேன். 16 00:04:17,591 --> 00:04:19,134 கல்யாணம் பண்ணி இரண்டு... 17 00:04:19,218 --> 00:04:20,886 அப்பா, சும்மா இருங்க. 18 00:04:20,969 --> 00:04:22,471 நாம இதைப்பத்தி ஏற்கனவே பேசிட்டோம். 19 00:04:22,554 --> 00:04:24,890 இன்னும் சில விஷயங்களில் எனக்கு நல்ல புரிதல் கிடைக்கணும். 20 00:04:24,973 --> 00:04:28,101 இன்னும் புரிந்து கொள்ள என்ன இருக்கு? நீ ஏற்கனவே வளர்ந்த மனிதன் ஆகிட்டியே. 21 00:04:28,185 --> 00:04:29,770 -பாரு... -இல்ல, இல்ல. 22 00:04:29,853 --> 00:04:31,605 சண்டை வேண்டாம். இன்னிக்கு வேண்டாம். மறந்துடுங்க. 23 00:04:31,688 --> 00:04:33,690 சண்டையா? யாரு சண்டைப் போட்டாங்க. 24 00:04:33,774 --> 00:04:34,858 காசிம். 25 00:04:37,069 --> 00:04:38,445 எப்படி இருக்கீங்க, அம்மா? 26 00:04:38,529 --> 00:04:39,571 ரொம்ப பதட்டமா இருக்கேன். 27 00:04:40,489 --> 00:04:43,200 என் பார்ட்டியை உங்க முட்டாள்தனத்தால சொதப்பிடாதீங்க. 28 00:04:45,452 --> 00:04:47,371 சொல்லு, உன்னுடைய நண்பர்கள் யாரெல்லாம் வர்றாங்க? 29 00:04:47,454 --> 00:04:50,749 வழக்கம் போல, ஃபார்சத், ஷெர்வின், அவன் தம்பி, இன்னும் கொஞ்சம் பேர். 30 00:04:50,832 --> 00:04:53,043 செக்யூரிட்டிகிட்ட அவர்கள் பெயர்களை அனுப்ப மறந்துவிடாதே. 31 00:04:54,294 --> 00:04:57,047 -யாஸமன் விஷயம் என்ன ஆச்சு? -ஓ, வேண்டாம். 32 00:04:57,130 --> 00:05:00,175 அம்மா, அதைப் பத்தி இப்போ ஆரம்பிக்காதீங்க. 33 00:05:00,259 --> 00:05:01,927 வேறு யாராவது இருக்காங்களா? 34 00:05:02,010 --> 00:05:04,304 -இருக்கலாம். -நிஜமாவா? 35 00:05:04,388 --> 00:05:05,472 சொல்லு, யார் அது? 36 00:05:05,556 --> 00:05:07,099 இருக்கலாம்னு தான் சொன்னேன், அம்மா. 37 00:05:07,182 --> 00:05:09,101 இப்போதைக்கு எதுவும் உறுதியா சொல்ல முடியாது. 38 00:05:11,436 --> 00:05:13,981 -கவனமா இரு, என்ன? -கவலைப் படாதீங்க. 39 00:05:19,194 --> 00:05:20,195 ஜாக்கிரதையா இரு, என்ன? 40 00:05:20,279 --> 00:05:21,780 கவலைப் படாதீங்க. 41 00:05:59,484 --> 00:06:01,028 அலி கொலை செய்யப்பட்டுளான். 42 00:06:03,906 --> 00:06:05,866 இன்னிக்கு காலையிலே, அவனுடைய காருலே, 43 00:06:06,408 --> 00:06:07,910 மார்புல சுடப்பட்டு இறந்ததை கண்டுபிடிச்சிருக்காங்க. 44 00:06:07,993 --> 00:06:09,286 ஆராக்கில். 45 00:06:13,081 --> 00:06:15,042 -ஆராக்குலயா? -அந்த ஊரைச் சேர்ந்தவன் தானே அவன். 46 00:06:15,125 --> 00:06:16,919 அவன் பெற்றோர் இன்னும் அங்கு தான் வசிக்கிறார்கள். 47 00:06:18,003 --> 00:06:19,922 எப்போதாவது அவங்களப் பத்தி உங்களிடம் சொல்லியிருக்கானா? 48 00:06:20,506 --> 00:06:21,757 இருக்கலாம். 49 00:06:23,258 --> 00:06:24,676 எனக்கு சரியா நினைவில்லை. 50 00:06:24,760 --> 00:06:27,137 இறப்பதற்கு முன் அவர்களை இரண்டு முறை அழைக்க முயற்சித்திருக்கிறான் போலயிருக்கு. 51 00:06:28,764 --> 00:06:32,684 அலி தற்கொலை செய்துக்கொள்பவன் போல உங்கிட்ட ஏதாவது பேசவோ அல்லது வேறு எதுவும் செய்தானா? 52 00:06:32,768 --> 00:06:33,936 இல்ல. எதுவுமில்ல. 53 00:06:35,479 --> 00:06:38,607 அவனுடைய துப்பாக்கி அவன் கையில் இருந்தது. அந்த துப்பாக்கியிலிருந்து தான் அந்த குண்டும் வந்தது. 54 00:06:39,233 --> 00:06:40,859 ஆனால் ஏதோ ஒண்ணு இடிக்குது. 55 00:06:41,985 --> 00:06:43,403 அவன் நேர்மையானவன். 56 00:06:43,487 --> 00:06:45,572 அவன் எதுக்காக தற்கொலை செய்துக்கணும்? எதனால? 57 00:06:47,574 --> 00:06:48,867 எனக்குத் தெரியலையே. 58 00:06:49,743 --> 00:06:51,119 ஆனால் சொல்ல முடியாது. 59 00:06:53,163 --> 00:06:54,623 நேத்திக்கு இரவு இங்கு வந்திருந்தானா? 60 00:07:00,671 --> 00:07:02,631 ஆமாம், எனக்கு உடம்பு சரியாயில்லை. 61 00:07:02,714 --> 00:07:05,425 நான் எப்படியிருக்கேன்னு பார்க்க வந்தான். 62 00:07:06,552 --> 00:07:08,220 எங்க போறான்னு உங்களிடம் சொன்னானா? 63 00:07:10,931 --> 00:07:12,224 அவன் வீட்டுக்குப் போறான்னு நினைச்சேன். 64 00:07:13,267 --> 00:07:14,434 நீங்க இரண்டு பேரும் எதைப் பத்தி பேசுனீங்க? 65 00:07:17,020 --> 00:07:18,188 எதுவுமில்லை. 66 00:07:18,897 --> 00:07:20,190 சும்மா, சாதாரணமான பேச்சு தான். 67 00:07:20,899 --> 00:07:22,943 கொஞ்சம் வேலையைப் பத்தி. 68 00:07:23,026 --> 00:07:24,444 அதுக்கப்புறம் நீங்க இங்கேயே இருந்துட்டீங்களா? 69 00:07:24,528 --> 00:07:25,696 நிச்சயமா. 70 00:07:26,613 --> 00:07:27,823 நான் எங்க போவேன்? 71 00:07:29,783 --> 00:07:31,535 நான் இன்னும் பலவீனமாத் தான் இருக்கேன், தெரியுமா? 72 00:07:37,332 --> 00:07:38,625 ஃபராஸ். 73 00:07:43,505 --> 00:07:45,549 அவனை காப்பாத்த நினைக்காதீங்க. 74 00:07:46,175 --> 00:07:48,385 உங்களுக்கு எதுவும் தெரியும்ன்னா, அதைச் சொல்ல, இது தான் சரியான நேரம். 75 00:07:49,761 --> 00:07:51,513 எதுவும் தொந்தரவு இருந்ததா? 76 00:07:52,931 --> 00:07:54,224 நிஜமா, எனக்கு எதுவும் தெரியாது. 77 00:07:56,268 --> 00:07:57,519 எதுவுமே தெரியாது 78 00:08:03,317 --> 00:08:06,111 பெட்டி பேமனின் கேராஜிலே நிறுத்தப்பட்டிருக்கு. அந்த லீச்சை கனெக்ட் செய்யறனே. 79 00:08:06,195 --> 00:08:07,863 அதுக்கு அப்புறம் அந்த வண்டி நம்ம முழு கட்டுப்பாட்டில வந்துடும். 80 00:08:11,867 --> 00:08:13,869 அதை செய்தபின், ஏதாவது சாக்கு சொல்லிட்டு வெளியே வந்துடு. 81 00:08:13,952 --> 00:08:15,120 செப்பா அங்கு வந்து செக்யூரிட்டி செக் செய்யும் முன் 82 00:08:15,204 --> 00:08:17,331 நீ அந்த இடத்தை விட்டு வந்துடணும். 83 00:08:41,188 --> 00:08:43,357 ஏய். தாமதமானதுக்கு மன்னிக்கவும். 84 00:08:43,440 --> 00:08:45,526 பரவாயில்லை. காத்திருப்பதும் நல்லதுக்கு தான். 85 00:08:48,737 --> 00:08:49,821 உள்ள வா. 86 00:08:49,905 --> 00:08:51,698 -கூலா எதுவும் சாப்பிடுறயா? -சரி, சாப்பிடறேன். 87 00:08:55,452 --> 00:08:56,662 போ. 88 00:09:05,796 --> 00:09:08,257 அடடே. அழகான இடம். 89 00:09:08,340 --> 00:09:09,675 ஆம், அது தான். 90 00:09:10,300 --> 00:09:11,552 இருந்தாலும், பழைய இடத்தை நான் ரொம்ப மிஸ் செய்யறேன். 91 00:09:12,219 --> 00:09:13,762 -எல்ஏலையா? -வெனிஸிலே. 92 00:09:14,346 --> 00:09:15,681 கடற்கரைக்குப் பக்கத்திலேயே. 93 00:09:16,974 --> 00:09:18,767 இந்த மாதிரி அட்டகாசமாக இருக்காது... 94 00:09:20,561 --> 00:09:21,770 ஆனால் அது என் வீடு. 95 00:09:59,433 --> 00:10:00,809 வா. வந்துடு. 96 00:10:01,310 --> 00:10:02,519 சியர்ஸ். 97 00:10:09,526 --> 00:10:10,611 எங்க அம்மா சொல்லுவாங்க 98 00:10:10,694 --> 00:10:12,696 யார் ஒருவர் தன் வீட்டைவிட்டு ஒரு முறை பிரிந்து போறாங்களோ 99 00:10:12,779 --> 00:10:14,239 அவங்களுக்கு அப்புறம் வீடே இருக்காதுன்னு. 100 00:10:14,323 --> 00:10:15,490 எனக்குத் தெரியாது. 101 00:10:16,366 --> 00:10:18,952 சில நாட்களுக்கு முன், நான் அவங்க சொல்றதை ஒத்துகிட்டு இருப்பேன். 102 00:10:33,800 --> 00:10:36,970 -ஏன் இத்தனை நேரம் ஆகுது? -நீயே உள்ள வந்து செய்து பார்க்குறியா? 103 00:10:37,054 --> 00:10:38,764 கவனமாச் செய். நமக்கு நேரம் கிடையாது. 104 00:10:38,847 --> 00:10:40,807 நீ என்னோட பேசுவதை நிறுத்தினால், நான்... 105 00:10:52,069 --> 00:10:53,320 என்ன? 106 00:10:53,862 --> 00:10:55,155 ஒண்ணும் இல்லை, நான் வந்து... 107 00:10:55,781 --> 00:10:57,366 கொஞ்சம் நிதானமாப் போகலாம். 108 00:10:58,033 --> 00:11:01,995 அதுவுமில்லாம, உங்க பெற்றோரை பார்க்கப் போகும்போது ஆடையெல்லாம் கசங்கி இருக்கக்கூடாது. 109 00:11:02,871 --> 00:11:04,122 அது நல்லாயிருக்காது. 110 00:11:16,093 --> 00:11:18,846 ச்சே. நாம சொதப்பிட்டோம். 111 00:11:18,929 --> 00:11:20,472 அது பரவாயில்லை. அது கிட்டத்தட்ட கிடைத்து விட்டது. 112 00:11:20,556 --> 00:11:22,224 இல்ல, முட்டாளே. யாஸமன் அங்கே வந்திருக்கா. 113 00:11:30,649 --> 00:11:32,150 கதவைத் திற. நீ உள்ள இருக்கன்னு எனக்குத் தெரியும்! 114 00:11:40,075 --> 00:11:41,326 பேமன்? 115 00:11:42,619 --> 00:11:43,787 பேமன்! 116 00:11:45,622 --> 00:11:46,790 பேமன்? 117 00:12:02,181 --> 00:12:03,724 அங்கிருந்து வெளியேறு! என்ன நடக்கும்ன்னு சொல்லவே முடியலை. 118 00:12:03,807 --> 00:12:04,808 ஆனால் என் வேலை இன்னும் முடியலையே! 119 00:12:04,892 --> 00:12:07,311 அதெல்லாம் பரவாயில்லை. வெளியே வா. உடனே! 120 00:12:07,394 --> 00:12:08,645 நாசமாப் போச்சு. 121 00:12:10,981 --> 00:12:13,066 பேமன், என்னை எவ்வளவு காலம் தான் இப்படி உதாசீனப்படுத்துவீங்க? 122 00:12:13,567 --> 00:12:15,235 இதை நிறுத்துங்க! 123 00:12:17,487 --> 00:12:19,156 எவ்வளவு தைரியம்! இவள் இங்கே என்ன செய்கிறாள்? 124 00:12:19,239 --> 00:12:20,908 -உனக்கு என்ன ஆச்சு? -நீங்க இரண்டு பேரும் இங்க என்ன செய்யறீங்க? 125 00:12:20,991 --> 00:12:22,784 -நீ இங்க என்ன செய்யற? -மோசக்காரி! 126 00:12:22,868 --> 00:12:24,453 -நாம இருவரும் ஒண்ணா இருப்போன்னு சொன்னயே. -யாஸமன். 127 00:12:24,536 --> 00:12:27,164 என் பெற்றோர்கிட்ட நம்ம உறவைப் பத்தி சொல்லலாம்ன்னு சொன்னயே. 128 00:12:27,247 --> 00:12:29,208 நீ உன் பாடுக்கு இங்கு வந்து நுழைய முடியாது! 129 00:12:29,291 --> 00:12:30,626 நான் வேற என்ன செய்திருக்கணும்? 130 00:12:30,709 --> 00:12:33,629 நான் உனக்கு ஃபோன் செய்தேன், குறுந்தகவல் அனுப்பினேன், உங்கிட்டேர்ந்து பதிலே இல்லை! 131 00:12:35,214 --> 00:12:37,090 -நீ என்ன அப்படி பார்க்குற? -அவளை விட்டு விடு. 132 00:12:37,174 --> 00:12:38,884 உன் பார்ட்டிக்கு நீ அவளை அழைச்சிருக்குயா? 133 00:12:39,593 --> 00:12:41,053 என்னை இப்படி மோசம் செய்யாதே, பேமன். வேண்டாம். 134 00:12:41,136 --> 00:12:42,429 யாஸமன், அமைதியா இருங்க. 135 00:12:42,513 --> 00:12:44,806 -என்னைத் தொடாதே, மோசக்காரி! -ஏய்! 136 00:12:45,682 --> 00:12:46,892 உனக்கு என்ன கிறுக்கா? 137 00:12:46,975 --> 00:12:48,101 நான் அவளை சும்மா தொட்டேன், அவ்வளவுதான்! 138 00:12:48,185 --> 00:12:49,561 -நீ நலமா? -நான் நல்லாயிருக்கேன். 139 00:12:50,562 --> 00:12:53,232 ச்சே. 140 00:12:53,315 --> 00:12:54,608 -வேண்டாம்... -ஆமாம், போ! 141 00:12:54,691 --> 00:12:56,068 அவள் சொன்னது எதையுமே நான் வாக்கு கொடுக்கலை. 142 00:12:56,151 --> 00:12:58,362 பாருங்க, உங்க இருவருக்கும் இடையில் நடப்பது பத்தி எனக்குத் தெரியாது. நீங்க முடிவு செய்யுங்க. 143 00:12:58,445 --> 00:12:59,655 அவள் பார்ட்டியைப் பத்தி தெரிஞ்சுகிட்டாள், அது... 144 00:12:59,738 --> 00:13:01,573 அவளிடம் பேசுங்க. ரொம்ப கோபமா இருக்காங்க. 145 00:13:02,115 --> 00:13:05,035 அதுக்கு அப்புறம் நான் உடனே உன்னை கூப்பிடுறேன், சரியா? நாம அங்க போய் சரி செய்துக்கலாம். 146 00:13:11,208 --> 00:13:13,418 தொடர்பு இருக்கா? 147 00:13:15,671 --> 00:13:16,672 மிலாத்? 148 00:13:18,006 --> 00:13:20,175 -இல்ல. -என்ன? என்ன எழவு இது? ஏன் இல்லை? 149 00:13:20,759 --> 00:13:22,469 ஏன்னா, அது ரொம்ப ஆபத்தானது. 150 00:13:23,428 --> 00:13:27,724 பரவாயில்லை. நானே அதை செய்துக்குறேன். 151 00:13:28,767 --> 00:13:32,104 மார்ஜனைக் கூப்பிடு. நான் பார்ட்டிக்குப் போறேன்னு அவங்ககிட்ட சொல்லு. 152 00:13:43,740 --> 00:13:44,867 நீ என்ன நினைக்குற? 153 00:13:44,950 --> 00:13:46,243 அது ரொம்ப ரொம்ப ஆபத்தானது. 154 00:13:46,326 --> 00:13:48,829 அந்த லீச்சு வைக்க காரணமே, அவள் அங்கு இருக்க வேண்டாம் என்பது தான். 155 00:13:48,912 --> 00:13:51,248 இல்லை, லீச்சு அங்க வச்சதுக்குக் காரணம் முஹமடியைக் கொல்வது தான் 156 00:13:51,331 --> 00:13:53,250 அதோடு அதை ஒரு விபத்தைப் போல தோற்றுவிக்கத்தான். 157 00:13:53,333 --> 00:13:56,003 தமார் அங்கு இல்லாமல் இருந்தால் அது ஒரு போனஸ் தான். 158 00:13:56,086 --> 00:13:57,629 இன்றிரவே, வட கொரியர்களுடன் முஹமடி 159 00:13:57,713 --> 00:13:59,464 ஒரு ஒப்பந்தத்தை கையெழுத்திட இருக்கிறார். 160 00:14:00,048 --> 00:14:02,467 அதனால, நீ இத்தனை நாள் கையில வச்சிருந்த சாதகமான திட்டத்தை செயல்படுத்தும் நேரம் இது. 161 00:14:02,551 --> 00:14:04,303 அவளை வெளியே கொண்டு வருவது தான் பிரச்சினை. 162 00:14:04,386 --> 00:14:06,305 அவள் அதை செய்து முடிச்சதுக்கு அப்புறம் அவள் சுலபமான இலக்காகி விடுவாள். 163 00:14:06,972 --> 00:14:08,932 அது எங்களுக்கு பரவாயில்லை. 164 00:14:12,895 --> 00:14:13,896 சூனியக்காரி. 165 00:14:22,738 --> 00:14:24,114 என்ன வேண்டும் உனக்கு? 166 00:14:24,198 --> 00:14:25,490 எங்களுக்கு உங்க உதவி தேவை. 167 00:14:30,287 --> 00:14:31,747 என் உதவியா? 168 00:14:31,830 --> 00:14:33,874 நான் என் கையாலேயே உன்னை கொலை செய்யாதது உன் பாக்கியம். 169 00:14:33,957 --> 00:14:35,918 என்னை தொடுவதற்கு முன்னாடியே நீங்க இறந்து போவீங்க. 170 00:14:50,015 --> 00:14:52,392 உங்க கூட்டாளியைப் பத்தி கேள்விப்பட்டேன், ரொம்ப வருத்தமாயிருக்கு. 171 00:14:52,976 --> 00:14:56,772 தற்கொலை செய்து கொண்டவங்க விட்டுட்டுப் போறவங்களுக்கு ரொம்ப கஷ்டமா தான் இருக்கும். 172 00:14:57,272 --> 00:14:58,690 அவர்கிட்டேர்ந்து இன்னும் என்ன வேண்டும்? 173 00:14:58,774 --> 00:15:02,152 நாம முன்னாடியே ஒத்துகிட்டது தான். அவருடைய நேரடி ஒத்துழைப்பு. 174 00:15:03,111 --> 00:15:05,864 இல்லைன்னா, இந்த படங்கள் எல்லாம் உங்க பாஸுக்கு அனுப்பப்படும். 175 00:15:06,698 --> 00:15:10,285 அதோடு, இப்போ ஆராக்குல இருப்பது, திரும்பவும் டெஹ்ரான் வந்துவிடும். 176 00:15:17,167 --> 00:15:19,795 வச்சுக்கோ. அப்படி செய்தால் தான் எளிது. 177 00:15:33,183 --> 00:15:34,643 ஒருவேளை அவன் அழைக்காமல் இருக்கலாம். 178 00:15:35,435 --> 00:15:36,728 அவன் கண்டிப்பா கூப்பிடுவான். 179 00:15:39,606 --> 00:15:40,816 நீ அவரிடம் சொன்னது உண்மையா? 180 00:15:42,651 --> 00:15:43,694 என்னது? 181 00:15:43,777 --> 00:15:46,738 அது தான், யார் ஒருவர் தன் வீட்டைவிட்டுப் போறாங்களோ அவங்களுக்கு அப்புறம் வீடே இருக்காதுன்னு சொன்னயே. 182 00:15:50,242 --> 00:15:51,243 எனக்குத் தெரியாது. 183 00:15:51,326 --> 00:15:52,870 ஏன்னா, எனக்கென்னவோ இது உன்னுடைய தந்திரங்களில் ஒண்ணுன்னு தோணுது. 184 00:15:55,372 --> 00:15:57,457 அதாவது, உண்மையோட மிக நெருக்கமா இருக்கிற பொய்யை சொல்வது. 185 00:16:00,043 --> 00:16:01,628 என்னால இதுக்கு மேலே இதையெல்லாம் பொறுத்துக்க முடியலை. 186 00:16:01,712 --> 00:16:04,089 பாரு, இது தான் நான். 187 00:16:04,173 --> 00:16:06,341 நான் ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ கனவு காணவேயில்லை. 188 00:16:06,425 --> 00:16:07,926 நான் அதுக்கு ஆசைப்படவும் இல்லை. 189 00:16:08,010 --> 00:16:11,013 இதுல தந்திரம் எதுவும் இல்லை. எனக்கு எது தெரியுமோ, அதை செய்ய முயல்கிறேன். 190 00:16:11,096 --> 00:16:12,890 -நீ தான் ரொம்ப சிறப்பானவள். -இல்லை, நான் அப்படியில்லை! 191 00:16:14,224 --> 00:16:15,350 நான் சிறப்பானவள் இல்லை. 192 00:16:16,101 --> 00:16:18,979 ஏன்னா ஒரு ஏஜென்டாக, நான் ரொம்ப கேவலமான தவறை செய்துட்டேன். 193 00:16:21,982 --> 00:16:23,650 என் இலக்குடன் காதல் கொண்டேன். 194 00:16:26,570 --> 00:16:28,947 நான் தான் உன்னை இதுல இழுத்துவிட்டேன், அதுக்காக வருத்தப்படுகிறேன். 195 00:16:31,033 --> 00:16:32,034 ஆனால், உண்மையாக... 196 00:16:33,869 --> 00:16:35,245 என்னையும் மீறி அது நடந்தது. 197 00:16:37,456 --> 00:16:38,957 ஏன்னா நான் உன்னை காதலிக்கிறேன். 198 00:16:42,503 --> 00:16:45,130 நான் உன்னை காதலிக்கிறேன், அதனால உனக்கு எதுவும் கெடுதல் நடக்கக்கூடாதுன்னு நினைக்கிறேன். 199 00:16:56,391 --> 00:16:58,393 -ஹே. -ஹே. 200 00:16:58,477 --> 00:16:59,770 இது திரு. கமலி. 201 00:16:59,853 --> 00:17:01,563 அவர் தான் செக்யூரிட்டிக்குப் பொறுப்பு. 202 00:17:02,397 --> 00:17:04,733 என் தந்தையின் இடம், "மிக உயர்ந்த பாதுகாப்பு" உள்ள இடம். 203 00:17:04,816 --> 00:17:06,609 அதனால தான் அவங்க இவ்வளவு கெடுபிடி செய்யறாங்க. 204 00:17:07,194 --> 00:17:10,446 இதை சுருக்கமாகவும், நேரடியாகவும் வைத்துக் கொள்வதாக திரு. கமலி சொல்லியிருக்கார். 205 00:17:10,531 --> 00:17:11,531 இல்லையா? 206 00:17:12,281 --> 00:17:13,367 கண்டிப்பாக. 207 00:17:14,076 --> 00:17:15,327 வழக்கமா கேட்குற கேள்விகள் தான். 208 00:17:16,161 --> 00:17:17,371 என்னோடு வாங்க, தயவுசெய்து. 209 00:17:36,932 --> 00:17:38,100 தமார் ராபின்யான். 210 00:17:39,685 --> 00:17:41,895 என் நோக்கம் தான் என்னன்னு நீங்க யோசிக்கிறீங்க, இல்லையா? 211 00:17:42,896 --> 00:17:45,566 நீங்க எதுவும் செய்ய நினைத்திருந்தால், இதுக்குள்ளேயே அதை செய்திருப்பீங்க. 212 00:17:45,649 --> 00:17:46,775 இருக்கலாம். 213 00:17:47,359 --> 00:17:49,027 இல்லை, எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்குன்னு காட்ட நினைத்திருக்கலாம். 214 00:17:49,945 --> 00:17:51,905 ஒருத்தனை இவ்வளவு தூரம் தான் சோதிக்க முடியும். 215 00:17:54,074 --> 00:17:56,076 என் கூட்டாளி, அலி, உங்களை பின் தொடர்ந்தான். 216 00:17:57,911 --> 00:17:58,912 கிட்டத்தட்ட. 217 00:18:00,372 --> 00:18:01,665 உங்களை பிடிச்சுட்டான். 218 00:18:02,958 --> 00:18:04,168 என்ன ஆச்சு அவனுக்கு? 219 00:18:05,794 --> 00:18:09,464 இவ்வளவு கோபமா. அதை கவனமா பார்த்துக்கங்க. 220 00:18:09,548 --> 00:18:10,883 எனக்கு ஒரு அத்தை இருந்தார். 221 00:18:12,050 --> 00:18:13,260 உங்களுக்கு அவரை நினைவிருக்கு. 222 00:18:14,553 --> 00:18:16,096 நீங்க அவரை கைது செய்தீங்க, அப்புறம் தூக்குல தொங்கவிட்டீங்க. 223 00:18:16,180 --> 00:18:18,724 அது யாருடைய தப்பு? நீங்க தான் அவரை இதுக்குள்ள இழுத்து வந்தீங்க. 224 00:18:18,807 --> 00:18:21,101 -அவங்க நிரபராதி. -யாருமே நிரபராதியில்லை! 225 00:18:21,185 --> 00:18:22,769 உனக்கு எது நடந்தாலும், அதுக்கு நீங்க தான் பொறுப்பு. 226 00:18:22,853 --> 00:18:23,854 நான் என்ன செய்யணுமோ அதைச் செய்றேன், 227 00:18:23,937 --> 00:18:25,814 என் நாட்டைக் காப்பாத்தவும், அதை நாசப்படுத்துறவங்ககிட்டேர்ந்து அதை காப்பத்தவும். 228 00:18:25,898 --> 00:18:27,274 அப்போ அதைச் செய்! 229 00:18:34,531 --> 00:18:40,162 எனக்கு, ம்ம், கைதாவதைப் பத்தியெல்லாம் பயமில்லை, 230 00:18:40,245 --> 00:18:41,413 சாவு கூட எனக்கு பயமில்லை. 231 00:18:42,539 --> 00:18:44,249 என் மனைவி மட்டும் இல்லைன்னா, நான்... 232 00:18:49,213 --> 00:18:50,297 இன்னொரு பக்கம், 233 00:18:51,548 --> 00:18:52,883 தன் கடமையும் கௌரவமும் இல்லைன்னா, 234 00:18:53,759 --> 00:18:55,761 ஒரு மனிதனுக்கு வேறு என்ன தான் இருக்கு? 235 00:19:00,224 --> 00:19:04,019 நான் உன்னோடு சேர்ந்துகிட்டேன்னா, நான் வாழ்ந்த வாழ்க்கை முழுக்க பொய் ஆகிவிடும். 236 00:19:04,102 --> 00:19:05,521 அது உண்மையில்லை. 237 00:19:07,689 --> 00:19:11,443 நானும் இங்கே தான் பிறந்தேன். என் குடும்பமும் இங்கே இருந்தவங்க தான். 238 00:19:12,027 --> 00:19:16,240 எங்க மொழி, கலாச்சாரம் எல்லாம். நான் காதலிக்கும் ஆளுகூட இந்த இடத்தை சேர்ந்தவர்தான். 239 00:19:17,241 --> 00:19:19,451 சில தருணங்கள் வரும், அதுல இந்த தருணமும் ஒண்ணு, 240 00:19:19,535 --> 00:19:21,954 எதிர்த்து நிற்பது தான் நம் கடமையும், கௌரவமும் என்பதாக. 241 00:19:22,037 --> 00:19:24,873 ஜெனரல் முஹமடி நம்ம நாட்டை எங்கே கொண்டு போகிறார்ன்னு பார்க்கிறீங்க இல்லையா. 242 00:19:28,961 --> 00:19:30,921 இவ்வளவு இளம் வயசுல, தன்னம்பிக்கையோட இருக்கிற ஒரு ஏஜென்ட். 243 00:19:31,630 --> 00:19:33,131 வாக்குச் சாமர்த்தியத்தோடு, 244 00:19:33,215 --> 00:19:38,554 ஒரு உளவு அதிகாரியையே, தன் நாட்டுக்குத் துரோகம் செய்யச் சொல்லி வலியுறுத்துகிறாய். 245 00:19:40,973 --> 00:19:43,559 என்னை அவ்வளவு மட்டமாவா எடைப்போட்டுட்ட? 246 00:20:01,994 --> 00:20:03,579 எனவே? எல்லாம் நலமா? 247 00:20:08,041 --> 00:20:09,710 எல்லாம் நலம். 248 00:20:10,919 --> 00:20:11,920 ஜாலியா இருங்க. 249 00:20:43,452 --> 00:20:45,537 நீங்க ஃபோனை உபயோகப் படுத்துவது பத்தி சந்தோஷம். 250 00:20:45,621 --> 00:20:47,039 நான் இதைச் செய்யணும்ன்னா, 251 00:20:47,122 --> 00:20:50,292 நீங்க அதை செய்யப் போவதில்லைன்னு எனக்கு உறுதிமொழி கொடுக்கணும். 252 00:20:50,375 --> 00:20:51,543 நீங்க என்ன சொல்லறீங்க? 253 00:20:51,627 --> 00:20:54,046 -இது உங்களுடைய ஒரு சூழ்ச்சின்னா... -அப்படி இல்லை. 254 00:20:54,129 --> 00:20:55,881 -அது நடக்கப்போகுது. -நடக்கணும். 255 00:20:55,964 --> 00:20:59,218 ஏன்னா நான் பிடிபட்டேன்னா, நீங்களும் சேர்ந்து தான் பிடிபடுவீங்க. 256 00:21:13,732 --> 00:21:15,901 எனவே, இந்த இடத்துல தான் நீங்க சுதந்திரமா உங்க காருல போவீங்களா? 257 00:21:16,401 --> 00:21:18,153 இந்த நாட்டிலே இது ரொம்ப நல்ல ஒரு இடம். 258 00:21:19,655 --> 00:21:20,656 தயாரா? 259 00:21:59,444 --> 00:22:01,989 ஹே, சினா. என் ஆவணங்களைப் பார்க்கணுமா? 260 00:22:02,072 --> 00:22:06,201 இல்லை, சார். ஆனால் அவங்களுடையதைப் பார்க்கணும். உங்க ஆவணங்களைத் தாங்க, தயவுசெய்து, மேடம். 261 00:22:06,994 --> 00:22:08,078 மன்னிக்கணும். 262 00:22:11,623 --> 00:22:12,791 நன்றி. 263 00:22:17,588 --> 00:22:19,131 மிஸ். அன்சாரி, உங்க பர்ஸையும் செக் பண்ணணும். 264 00:22:21,008 --> 00:22:22,009 என்னது? 265 00:22:22,092 --> 00:22:25,429 சினா, விடு, என்ன? அவங்கள ஏற்கனவே செக் பண்ணிட்டாங்க. 266 00:22:25,512 --> 00:22:29,224 நாளைக்கு உன்னை ஆஃப்கான் எல்லைக்கு மாத்த வேண்டாமில்ல, மாத்தணுமா? 267 00:22:29,308 --> 00:22:31,935 இல்லை, சார். நீங்க போகலாம். இந்த நாள் நல்லதாகட்டும் சார். 268 00:22:32,019 --> 00:22:33,270 பை. நன்றி. 269 00:22:46,909 --> 00:22:48,410 அது என்னது? 270 00:22:52,748 --> 00:22:54,416 என்னால நம்பவே முடியலை. 271 00:22:55,667 --> 00:22:56,752 என்ன? 272 00:22:56,835 --> 00:22:58,253 இன்னொரு காரை செய்திருக்கார். 273 00:23:00,714 --> 00:23:01,715 அடேங்கப்பா. 274 00:23:01,798 --> 00:23:04,426 இதைப் பார்க்கையில், பெட்டி ஒரு சுமையைத் தூக்கிட்டுப் போற கழுதை மாதிரியில்ல இருக்கு. 275 00:23:04,510 --> 00:23:06,011 இந்த காருல என்னை கண்டிப்பா தோற்கடிச்சிடுவார்! 276 00:23:06,094 --> 00:23:08,430 பேமனா? என் செல்வமே! 277 00:23:09,139 --> 00:23:10,265 நீ இங்க வந்திருக்கன்னு சொன்னாங்க. 278 00:23:10,349 --> 00:23:12,601 உன்னை பார்த்ததுல ரொம்ப சந்தோஷம், கண்ணா. 279 00:23:14,561 --> 00:23:17,064 உங்களைப் பார்த்ததிலும் எனக்கு சந்தோஷம். நான்தான் ஃபாத்திமே. 280 00:23:17,147 --> 00:23:19,441 ரொம்ப சந்தோஷம், மேடம். நான் லேலா. 281 00:23:19,525 --> 00:23:22,611 -இரான் உனக்கு நல்லதைதான் செய்திருக்கு. -அம்மா. 282 00:23:22,694 --> 00:23:27,032 ஆனால் என்னது இது? அப்பா இந்த புது காரைப் பத்தி எதுவுமே சொல்லலையே. 283 00:23:27,115 --> 00:23:28,951 அவர் அதுல தீவிரமா வேலை செய்திருக்கார். 284 00:23:29,034 --> 00:23:32,246 அவர் காதல் வயப்பட்டிருக்கார். அதை சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் ஓட்டுவார். 285 00:23:33,872 --> 00:23:36,792 எப்படியெல்லாம் நேரத்தை வீண் செய்றாங்க பார்த்தாயா? 286 00:23:38,126 --> 00:23:41,797 வாங்க. நம்ம விருந்தினர்களை எல்லாம் போய் நல்லபடியா வரவேற்போம். 287 00:23:43,257 --> 00:23:44,424 வேகமா. 288 00:23:47,469 --> 00:23:48,637 வாங்க. 289 00:23:48,720 --> 00:23:50,430 எல்லோரும் உன்னைப் பார்க்கத் துடிக்கிறாங்க, பேமன். 290 00:23:50,514 --> 00:23:52,724 எனவே, கொஞ்சம் அக்கறையா இருந்து, யார் பெயரையும் மறக்காம பார்த்துக்கோ. 291 00:23:54,977 --> 00:23:56,603 எவ்வளவு அழகான வீடு. 292 00:23:57,938 --> 00:23:59,314 இதோட டிசைன் அசத்தலா இருக்கு. 293 00:24:00,023 --> 00:24:01,900 உனக்கு இந்த விஷயத்துல நல்ல ரசனை இருக்கு. 294 00:24:02,484 --> 00:24:03,569 உங்க அத்தைகள் எல்லோரும் அங்க இருக்காங்க. 295 00:24:04,820 --> 00:24:06,363 -ஆமாம். -ஹலோ. 296 00:24:06,446 --> 00:24:11,869 இதோ வந்துட்டான், பேமன்! பக்கமா வா, அத்தை உன்னை கட்டிக்குறேன். வாப்பா. 297 00:24:12,661 --> 00:24:14,496 -பேமன், எப்படியப்பா இருக்க? -அத்தை, இது என் தோழி லேலா. 298 00:24:14,580 --> 00:24:15,956 -ஹலோ. -லேலா, இது தான் என் அத்தை, ஃசோரே. 299 00:24:16,039 --> 00:24:18,750 அட, "தோழியா". ஹே. எப்படி இருக்கம்மா? 300 00:24:19,418 --> 00:24:21,545 நீ ரொம்ப அழகா இருக்குயே. 301 00:24:22,337 --> 00:24:24,214 -மிஸ். லேலா. -ரொம்ப சந்தோஷம். 302 00:24:24,298 --> 00:24:26,049 ஹலோ, செல்லம். வாங்க. 303 00:24:26,133 --> 00:24:27,509 தயவுசெய்து, சௌகரியமா இரும்மா. 304 00:24:33,348 --> 00:24:35,475 ்அவர் வந்துவிட்டார். ஜெனரல் இங்க வந்துட்டார். 305 00:24:37,561 --> 00:24:40,397 நான் போய் காசிமுக்கு ஹலோ சொல்லிட்டு வரேன், காவலாளிகள் அனுமதிச்சால். 306 00:24:59,041 --> 00:25:00,250 ஒரு பிரச்சினை இருக்கு. 307 00:25:01,627 --> 00:25:05,881 முஹமடி பெட்டியை ஓட்டவில்லை. இன்னொரு டிரிஃப்ட் காரை செய்திருக்கிறார். 308 00:25:07,424 --> 00:25:09,092 முஹமடி நாசமாப் போக. 309 00:25:11,178 --> 00:25:13,055 சரி. பாரு, நல்ல விஷயம் என்னன்னா, 310 00:25:13,138 --> 00:25:14,806 இந்த கார்கள் எல்லாமே வழக்கமான ஜப்பானிய கார்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவைதான். 311 00:25:14,890 --> 00:25:16,975 அதனால, குறிப்பாக நான் அதுல செய்த மாற்றங்களுக்குப் பிறகு, லீச்சை அந்த காருல 312 00:25:17,059 --> 00:25:18,977 பொருத்துறதில் எந்தவித பிரச்சனையும் இருக்காது. 313 00:25:19,061 --> 00:25:21,063 நீ அங்க போனவுடன் அந்த கிரில்லின் படங்களை எனக்கு அனுப்பு. 314 00:25:21,146 --> 00:25:22,189 நான் போய்கிட்டு இருக்கேன். 315 00:25:48,215 --> 00:25:51,468 புரியுது. நல்ல வேளை. இது கொஞ்சம் எளிமையான இன்ஸ்டல்லேஷன். 316 00:26:12,781 --> 00:26:14,491 -இது இணையதளத்தில் இருக்கா? -தேடுது. 317 00:26:18,203 --> 00:26:19,705 கார் இருக்கு, கவனமாக. 318 00:26:22,040 --> 00:26:23,834 -மிலாத்? -இன்னும் தேடுது. 319 00:26:24,960 --> 00:26:26,044 வாங்க, வாங்க. 320 00:26:28,881 --> 00:26:30,174 நீங்க அதை எடுத்துக்கங்க. 321 00:26:31,884 --> 00:26:33,886 ஒ, நல்லது. 322 00:26:35,345 --> 00:26:36,805 நீங்க எனக்கு கொஞ்சம் உதவுங்க. 323 00:26:37,556 --> 00:26:38,599 என்ன ஆச்சு? 324 00:26:38,682 --> 00:26:43,020 என் காது தோடை தொலைச்சுட்டேன் இங்க வர்றப்போது. இதே மாதிரி இருக்கும். 325 00:26:44,646 --> 00:26:47,107 அது காருக்குள்ள விழுந்திருக்கும். 326 00:26:52,946 --> 00:26:54,072 எங்கே தொலைத்தீர்கள்? 327 00:26:55,866 --> 00:26:57,034 அது அங்க தான் எங்கேயோ இருக்கணும். 328 00:27:02,873 --> 00:27:04,249 எனக்கு எதுவும் தென்படவில்லையே. 329 00:27:05,792 --> 00:27:07,878 கிடைச்சுடுச்சு. ஆம். ஐபி கிடைச்சுடுச்சு. 330 00:27:08,879 --> 00:27:10,047 தொடர்பும் உறுதியா இருக்கு. 331 00:27:11,006 --> 00:27:12,633 அது இங்க இல்லை... 332 00:27:14,384 --> 00:27:16,345 அவங்க எங்க போட்டாங்கன்னு யாருக்குத் தெரியும். 333 00:27:17,137 --> 00:27:18,597 இது என்னது? 334 00:27:19,765 --> 00:27:20,891 நான் கண்டுபிடிச்சுட்டேன். 335 00:27:22,809 --> 00:27:26,480 நல்லவேளை! நீங்க எல்லோரும் என்னை காப்பாத்திட்டீங்க. 336 00:27:27,064 --> 00:27:28,357 மிகவும் நல்லது. 337 00:27:28,440 --> 00:27:29,608 மிக்க நன்றி. 338 00:27:39,493 --> 00:27:41,078 இதை வெளியே எடுத்துட்டு போ. 339 00:27:41,161 --> 00:27:42,287 லேலா, கண்ணே. 340 00:27:43,038 --> 00:27:46,792 இங்க தான் இருக்கயா! நான் உன்னை தேடிட்டு இருந்தேன். 341 00:27:49,294 --> 00:27:51,421 அவன் திரும்பி வீட்டுக்கு வந்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு. 342 00:27:52,172 --> 00:27:53,549 எனக்கு நல்லா புரியுது. 343 00:27:55,259 --> 00:27:57,052 நீயும் உன் தாயும் ரொம்ப நெருக்கமானவங்களா? 344 00:27:59,054 --> 00:28:02,182 ரொம்ப நெருக்கம். அவங்கள பிரிந்து இருப்பது ரொம்ப கஷ்டமா இருக்கு. 345 00:28:02,850 --> 00:28:04,768 அவங்க கத்தாருல இருக்காங்க. 346 00:28:04,852 --> 00:28:06,270 பேமன் உன்னை அழைச்சுட்டு வந்ததுல ரொம்ப சந்தோஷம். 347 00:28:08,480 --> 00:28:10,148 இங்க வருவதுல ரொம்ப உற்சாகமா இருந்தார். 348 00:28:10,232 --> 00:28:11,942 அதை கேட்கவே சந்தோஷமா இருக்கு. 349 00:28:12,025 --> 00:28:14,361 உங்கிட்ட சொன்னான்னான்னு தெரியாது, 350 00:28:14,444 --> 00:28:17,531 ஆனால் அவனுக்கு இரானுக்குத் திரும்பி வருவதுல அவ்வளவு இஷ்டம் இல்லை. 351 00:28:23,829 --> 00:28:26,164 எல்லாம் சரியாப் போகும். 352 00:28:27,082 --> 00:28:28,917 பேமன் ரொம்ப அன்பான, புத்திசாலியான பையன். 353 00:28:30,460 --> 00:28:31,920 உன்னை தேர்ந்து எடுத்துட்டானே. 354 00:28:32,421 --> 00:28:34,381 அதுவே நல்ல ஆரம்பம் தான். 355 00:28:36,675 --> 00:28:37,801 நீங்க ரொம்ப அன்பானவங்க. 356 00:28:38,927 --> 00:28:40,596 நாம வெளியே போகலாமா? 357 00:28:43,807 --> 00:28:45,267 நான் இதோ வந்து விடுகிறேன். 358 00:28:46,351 --> 00:28:47,519 கழிப்பறை எங்க இருக்கு? 359 00:29:08,540 --> 00:29:10,626 தயவுசெய்து அனைவரும் இங்கு கவனிக்கவும். 360 00:29:10,709 --> 00:29:13,754 நீங்க அனைவரும் எங்களுடன் இங்கு இருப்பதில் எங்களுக்கு ரொம்ப சந்தோஷம், 361 00:29:13,837 --> 00:29:16,089 இன்னிக்கு எங்கள் அருமை மகன் பேமன், 362 00:29:16,173 --> 00:29:17,799 மீண்டும் தாயகம் வந்து, வீடு திரும்பியதைக் கொண்டாட இருக்கிறோம். 363 00:29:20,552 --> 00:29:22,137 பேமன், என் மகனே, இங்க வா. 364 00:29:23,680 --> 00:29:26,058 பேமன் ரொம்ப சிறப்பா வெளிநாட்டுலே வாழ்ந்திட்டிருந்தார், 365 00:29:26,141 --> 00:29:30,312 ஆனால், நாட்டுப்பற்றுடன் வீடு திரும்பி குடும்பத்துடன் இருக்க முடிவு செய்துள்ளார், 366 00:29:30,395 --> 00:29:33,357 அதோடு புரட்சிப்படைக்கும் தன்னாலானதை செய்ய இருக்கிறார். 367 00:29:39,238 --> 00:29:41,323 அவங்க தலைமுறை தான் நம்ம எதிர்காலம். 368 00:29:42,032 --> 00:29:44,493 ஆனால் மூத்தவர்களாகிய நாம் அவ்வளவு சீக்கிரம் எங்கும் போய் விட மாட்டோம். 369 00:29:44,576 --> 00:29:49,039 உண்மையில், நாட்டின் சேவையில் இருக்கும் பளுவினால் இந்த உரைக்கூட சிறிதாக வைத்துக்கொள்கிறேன். 370 00:29:49,957 --> 00:29:51,458 நிச்சயமா யாரும் வருத்தப்படமாட்டீங்கன்னு தெரியும். 371 00:29:53,210 --> 00:29:56,755 என் செல்வம் பேமன் சிறுவனாக இருந்தபோதே, கார்கள் மீது அவனுக்கு மோகம். 372 00:29:56,839 --> 00:29:57,923 அது கிடைத்தவுடன் 373 00:29:58,006 --> 00:30:00,676 உங்க எல்லோருக்கும் தெரியும். 374 00:30:01,927 --> 00:30:02,928 அவற்றை கொண்டு வாங்க. 375 00:30:05,097 --> 00:30:08,600 நாம் செய்யும் கார்கள், அதிகமான வேகத்தையும் வலிமையையும் உடையவை, 376 00:30:08,684 --> 00:30:11,562 நம் நாட்டின் சிறப்புக்கு இது ஒரு சான்று. 377 00:30:16,066 --> 00:30:18,026 உங்களில் சிலருக்கு பெட்டியைத் தெரியும். 378 00:30:18,819 --> 00:30:20,779 ஆனால் இங்கே நம்மகிட்ட புதுசா ஒன்று இருக்கு. 379 00:30:21,905 --> 00:30:24,408 அதன் பெயர் ஷார்ஃஜத். 380 00:30:25,951 --> 00:30:27,828 நீ அதைப் பத்தி என்ன நினைக்கிறாய், பேமன்? 381 00:30:28,704 --> 00:30:31,623 அந்த காரை வைத்து என்னை தோற்கடிக்க முடியும்னு நினைக்கிறயா. 382 00:30:32,916 --> 00:30:34,376 ஆனால், மகனே... 383 00:30:35,544 --> 00:30:37,838 இது உன்னுடைய கார். 384 00:30:39,047 --> 00:30:40,048 என்ன? 385 00:30:40,132 --> 00:30:43,635 எனவே, இந்த தடவை, நீ என்னிடம் தோற்க சாக்கு எதுவும் சொல்ல முடியாது! 386 00:30:44,261 --> 00:30:45,470 நான் உங்களை நேசிக்கிறேன். நன்றி. 387 00:30:50,934 --> 00:30:53,020 இங்கே உள்ள நம்ம நண்பர்கள் ஒரு டிரோனை விடப்போகின்றனர், 388 00:30:53,103 --> 00:30:55,063 நாமே சொந்தமா நம்ம இராணுவ தொழிற்சாலையில செய்தது, 389 00:30:55,147 --> 00:30:58,525 அதனால நீங்க எங்களை இப்போ நடப்பதை இங்க இருந்தபடியே திரையில பார்க்கலாம். 390 00:30:59,276 --> 00:31:00,527 ஆக இப்போ தொடங்கலாம்! 391 00:31:01,862 --> 00:31:03,071 ஒரு பிரச்சினை உள்ளது. 392 00:31:03,155 --> 00:31:05,073 நீ அந்த டிரோனைப் பத்திப் பேசுறன்னா, அது ஒரு பொருட்டே இல்லை. 393 00:31:05,157 --> 00:31:07,367 நான் சிக்னலோட பூட்டியிருக்கேன். அது என்ன பார்க்குதோ, அதை நானும் பார்க்கலாம். 394 00:31:07,451 --> 00:31:09,745 காரை மாத்திட்டாங்க. 395 00:31:09,828 --> 00:31:11,455 முஹமடி தான் பெட்டியை ஓட்டப் போகிறார். 396 00:31:12,414 --> 00:31:13,916 கவனமா போய் வா. 397 00:31:23,634 --> 00:31:25,093 சரியா? போகலாம்! 398 00:31:25,177 --> 00:31:26,512 நான் வருகிறேன். 399 00:31:36,313 --> 00:31:37,564 மார்ஜனைக் கூப்பிடு. 400 00:31:38,065 --> 00:31:39,650 இதனால நமக்கு என்ன லாபம்? 401 00:31:39,733 --> 00:31:41,818 இதனால நாம முஹமடியின் காரை கட்டுப்படுத்த முடியாதுன்னு அர்த்தம். 402 00:31:41,902 --> 00:31:43,070 சரி, பாருங்க. 403 00:31:44,446 --> 00:31:45,781 நான் டிரோனோடு ஒட்டப் போகிறேன். 404 00:31:47,115 --> 00:31:48,659 கார்கள் கிளம்பிவிட்டன. 405 00:32:50,888 --> 00:32:54,808 எதுவும் யோசனை தோணுதா? இப்போது தான், வழக்கத்துக்கு மாறாக யோசிக்கணும். 406 00:33:26,840 --> 00:33:28,008 கிடைச்சிடுச்சு... 407 00:33:28,717 --> 00:33:31,470 நான் பேமனின் காரை உபயோகப்படுத்தி, அவருடைய காரை மோதி, விளிம்பிலிருந்து தள்ளிவிடலாம். 408 00:33:31,553 --> 00:33:32,554 என்ன? 409 00:33:33,055 --> 00:33:34,389 மிலாத், உனக்கு கிறுக்கு பிடிச்சிடுச்சா? 410 00:33:36,600 --> 00:33:37,643 செய்யாதே, மிலாத். 411 00:33:37,726 --> 00:33:39,770 -யூலியா, உங்களுக்கு புரியுதா? -ஆம். 412 00:33:47,819 --> 00:33:48,862 மிலாத், பண்ணாதே. 413 00:33:48,946 --> 00:33:51,114 பணையக் கட்டணம் ரொம்ப அதிகம், வெற்றிக்கு வாய்ப்பு ரொம்ப குறைச்சல். 414 00:33:51,198 --> 00:33:52,449 -என்ன செய்யட்டும்? -மிலாத், 415 00:33:52,533 --> 00:33:54,826 நீ இதை வெற்றியுடன் செய்ய முடியும்னு உனக்கு நம்பிக்கை இருக்கா? 416 00:33:54,910 --> 00:33:57,204 மிலாத், நான் உன்னை கெஞ்சிக் கேட்டுக்குறேன், இதைச் செய்யாதே. 417 00:33:57,287 --> 00:34:00,415 உனக்கேத் தெரியும், அந்த சிஸ்டம் அதுக்கு டிசைன் செய்யப்படலைன்னு. வீணா பேமன் உயிர் போகும். 418 00:34:07,840 --> 00:34:09,550 -மிலாத்? உனக்கு நம்பிக்கை இருக்கா... -இருக்கு. 419 00:34:09,632 --> 00:34:10,926 ஆமாம். ஆம், எனக்கு நம்பிக்கை இருக்கு. 420 00:34:11,009 --> 00:34:12,636 மிலாத், நான் இதை நடக்க விடமாட்டேன். 421 00:34:15,222 --> 00:34:16,598 மார்ஜன், நீங்க என்ன நினைக்கிறீங்க? 422 00:34:16,681 --> 00:34:18,391 நமக்கு இது போல இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்காது. 423 00:34:19,643 --> 00:34:21,770 சரி. மேலே செயல்படலாம். 424 00:34:21,853 --> 00:34:23,063 மிலாத், உனக்குப் புரியுதா? 425 00:34:23,146 --> 00:34:24,523 ஆமாம், நான் செய்துகிட்டிருக்கேன். 426 00:34:24,606 --> 00:34:26,024 மிலாத், நான் சொல்றதைக் கேளு. 427 00:34:26,108 --> 00:34:27,943 நான் சொல்றதைக் கேளு. உன்னிடம் தான் பேசுறேன். 428 00:34:28,025 --> 00:34:29,027 செய்யாதே... 429 00:34:30,487 --> 00:34:31,989 நான் சொல்றது கேட்குதா? 430 00:34:37,034 --> 00:34:38,579 பிரேக் செயலற்று போனது 431 00:34:40,789 --> 00:34:42,248 இதோ இப்போ ஆரம்பம். 432 00:34:47,545 --> 00:34:48,880 ச்சே! 433 00:34:49,380 --> 00:34:52,259 நான் முஹமடியை தவற விட்டுட்டேன். அடுத்த வளைவில் அவரை தள்ளப் பார்க்குறேன். 434 00:36:53,005 --> 00:36:55,007 தமிழாக்கம் அகிலா குமார்