1 00:00:29,240 --> 00:00:32,800 லா டெம்ப்லான்சா 2 00:01:46,840 --> 00:01:48,840 மிகவும் வருந்துகிறேன், த்ரினிடாட். 3 00:01:50,520 --> 00:01:52,440 சாந்தோஸ் இல்லாவிடில், 4 00:01:53,600 --> 00:01:55,160 இங்கே இருந்திருக்க மாட்டேன். 5 00:01:58,040 --> 00:02:01,800 பல ஆண்டு முன் சுரங்கத்திலிருந்து நீங்கள் அவனை வெளியேற்றினதை சொன்னன். 6 00:02:05,040 --> 00:02:08,680 நீங்கள் அவனுக்கு கொடுத்த வாழ்வின் ஆண்டுகளை சாந்தோஸ் மறக்கவில்லை. 7 00:02:13,120 --> 00:02:14,680 அவனது நட்பு 8 00:02:16,040 --> 00:02:18,760 அந்த கடன்பட்டதை விட அதிகம். 9 00:02:23,560 --> 00:02:26,080 இறைவன் துணையோடு் செல்லுங்கள், திரு. மாவுரோ. 10 00:03:05,880 --> 00:03:08,200 அந்த இந்தியன் கொலையாக எப்படி அனுமதித்தாய்? 11 00:03:08,960 --> 00:03:11,440 காவல்துறை அதை விசாரிக்கும் என்பது தெரியாதா? 12 00:03:11,960 --> 00:03:14,320 நாம் சேருவதற்கு நீதான் பரிந்துரைத்தாய். 13 00:03:15,480 --> 00:03:17,680 என்னைப் போலவே நீயும் பொறுப்பு. 14 00:03:20,760 --> 00:03:22,080 நீ சொல்வது தவறு. 15 00:03:22,640 --> 00:03:24,880 இதற்கு முன் உன்னை நான் பார்த்ததே இல்லை. 16 00:03:32,640 --> 00:03:36,320 மேடம், மரியாதையுடன், எனக்கு சேர வேண்டிய பணம் கொடுக்கவில்லை. 17 00:03:37,120 --> 00:03:39,360 அந்த கனவானிடம் கணக்கை தீர்க்கவும். 18 00:03:40,120 --> 00:03:41,560 மன்னிக்கவும். 19 00:03:55,120 --> 00:03:56,880 உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும். 20 00:03:58,120 --> 00:04:00,960 -எனக்கு ஆர்வம் இல்லை. -கேட்டால் வரும். 21 00:04:01,640 --> 00:04:03,000 ஆனால் முதலில்... 22 00:04:15,400 --> 00:04:17,200 உமது தந்தை இருக்குமிடம் தெரியும். 23 00:04:42,760 --> 00:04:44,040 எட்வர்ட்? 24 00:04:46,160 --> 00:04:47,240 இனெஸ். 25 00:04:54,240 --> 00:04:55,480 அது நீயா? 26 00:04:56,680 --> 00:04:58,760 ஆம். நான் தான். 27 00:05:02,240 --> 00:05:03,560 எனக்கு புரியவில்லை. 28 00:05:06,640 --> 00:05:07,920 அமரவும். 29 00:05:25,560 --> 00:05:27,000 எனக்கு மிகவும் வயதாகிவிட்டது. 30 00:05:27,800 --> 00:05:29,920 ஆண்டுகள் கடந்துவிட்டன. 31 00:05:32,360 --> 00:05:34,360 உமக்கு இப்போது மூன்று மகள்கள் உள்ளனர். 32 00:05:37,520 --> 00:05:38,840 ஆம். 33 00:05:40,880 --> 00:05:42,440 மகள்கள் நினைவிருக்கிறார். 34 00:05:47,400 --> 00:05:48,640 நாம் எங்கு இருக்கிறோம்? 35 00:05:52,400 --> 00:05:53,720 கன்னி மடத்தில். 36 00:05:54,800 --> 00:05:55,920 ஏன்? 37 00:06:01,040 --> 00:06:02,880 நான் கன்னியாஸ்திரி ஆனேன் 38 00:06:04,280 --> 00:06:06,040 நீங்கள் சோலை மணந்த பிறகு. 39 00:06:08,320 --> 00:06:10,040 சோலை மணந்தீர், நினைவிருக்கிறதா? 40 00:06:10,440 --> 00:06:12,000 ஆம், நிச்சயமாக நினைவிருக்கிறது. 41 00:06:15,920 --> 00:06:17,680 அவள் என் இடத்தைப் பிடித்தாள். 42 00:06:18,280 --> 00:06:19,480 இல்லை. 43 00:06:21,640 --> 00:06:23,240 நீ அவளை குறை சொல்லக்கூடாது. 44 00:06:25,400 --> 00:06:28,920 நான் சோலை என் மனைவியாக தேர்வு செய்தேன். 45 00:06:30,160 --> 00:06:32,680 உன் உணர்வுகளை ஒருபோதும் கருதவில்லை. 46 00:06:38,640 --> 00:06:40,200 நான் மிகவும் வருந்துகிறேன். 47 00:06:48,840 --> 00:06:50,360 என்னை மன்னிக்க முடியுமா? 48 00:07:16,120 --> 00:07:17,920 -காலை வணக்கம். -காலை வணக்கம். 49 00:07:18,000 --> 00:07:19,040 என் நண்பா லாரியா! 50 00:07:19,120 --> 00:07:22,080 கனவான்களே, அப்பாவை மன்னிக்கவும், ஆனால் தகுந்த நேரம் அல்ல. 51 00:07:22,160 --> 00:07:24,360 கவலை வேண்டாம், என்னை பார்த்தால் மகிழ்வார். 52 00:07:24,560 --> 00:07:26,480 கனவான்களே, சொன்னது கேட்கவில்லையா? 53 00:07:26,560 --> 00:07:28,120 நல்ல செய்தி கொண்டு வருகிறோம். 54 00:07:28,640 --> 00:07:31,200 முழு சொத்தையும் வாங்க தயாராக இருக்கிறோம். 55 00:07:31,280 --> 00:07:34,520 -வீடு, தொழிற்சாலை, திராட்சைத் தோட்டங்கள். -ஒப்பிய விலையில். 56 00:07:42,600 --> 00:07:44,360 இது நல்ல நேரம் அல்ல. 57 00:07:45,400 --> 00:07:47,920 உங்களை வெளியேறச் சொல்ல வேண்டும். 58 00:07:52,720 --> 00:07:54,800 ஒருவேளை தவறாக புரிந்து கொண்டீர்கள். 59 00:07:54,880 --> 00:07:57,720 முடிவு எடுத்துள்ளார், அவர்களிடம் பணம் இருக்கிறது. 60 00:07:58,040 --> 00:08:01,840 இந்த பிராந்தியத்தில் நீண்ட காலமாக இது மிகப்பெரிய விற்பனை. 61 00:08:02,880 --> 00:08:06,240 வலியுறுத்துகிறேன். இது நல்ல நேரம் அல்ல. 62 00:08:16,280 --> 00:08:18,480 பாருங்கள், திரு. மாவுரோ... 63 00:08:19,160 --> 00:08:21,600 இப்படி ஒரு சந்தர்ப்பம் எளிதில் கிட்டாது. 64 00:08:22,120 --> 00:08:24,760 அந்த பெண் கேட்ட பணம் கொடுக்க தயாராக உள்ளனர். 65 00:08:26,200 --> 00:08:27,760 போங்கள் என்றேன். 66 00:08:29,360 --> 00:08:30,920 அப்பா சொன்னதை கேட்டீர். 67 00:08:31,920 --> 00:08:35,000 அவர் விருப்பத்தை மதியுங்கள். தயவுசெய்து போங்கள். 68 00:08:46,840 --> 00:08:48,960 குடிபெயர்ந்தவரை நம்பியிருக்கக் கூடாது. 69 00:08:49,280 --> 00:08:51,760 நிலையற்றது, இறுமாப்புத்தனமான மக்கள். 70 00:08:51,880 --> 00:08:55,480 அனைவரும் அமைதியாக இருந்தால்... இவ்விஷயத்தை கவனித்து கொள்வேன். 71 00:09:10,520 --> 00:09:12,040 நீ பிறந்தபோது... 72 00:09:13,880 --> 00:09:18,240 உன் அம்மா உன் பெயரைத் தேர்ந்தெடுத்தாள். நிக்கொலாஸ். 73 00:09:19,240 --> 00:09:21,320 ஆசாபங்கமாக இருந்திருப்பேன். 74 00:09:21,520 --> 00:09:22,960 இல்லை. 75 00:09:24,400 --> 00:09:26,360 மிகவும் பெருமை அடைந்திருப்பாள். 76 00:09:28,000 --> 00:09:29,520 நான் சுயநலவாதி. 77 00:09:31,440 --> 00:09:33,840 மரியானாவிற்கும் எனக்கும் எல்லாம் செய்தீர்... 78 00:09:35,600 --> 00:09:37,400 அதை ஒருபோதும் பாராட்டவில்லை. 79 00:09:38,760 --> 00:09:40,280 மகனே... 80 00:09:44,080 --> 00:09:48,760 சில நேரங்களில் ஒரு நல்ல சூடு தேவை 81 00:09:49,160 --> 00:09:51,520 விஷயங்களை முன்னோக்க. 82 00:09:55,640 --> 00:09:57,400 நீ தெரசாவை நேசிக்கவில்லை என்றால், 83 00:09:58,320 --> 00:10:00,720 அவளை மணக்க வேண்டியதில்லை. 84 00:10:03,080 --> 00:10:05,000 உன் மனதை பின்பற்று. 85 00:10:06,960 --> 00:10:09,240 எப்போதும் சொந்த பாதையில் நடந்து செல். 86 00:10:10,760 --> 00:10:12,720 உனக்கு என் ஆசீர்வாதம் உண்டு. 87 00:10:22,280 --> 00:10:24,880 அவரை விவேகத்துடன் கொண்டு போவது முக்கியம். 88 00:10:25,400 --> 00:10:26,760 இருட்டாகும் வரை காக்கவும். 89 00:10:27,720 --> 00:10:29,720 பக்க கதவு வழியாக வெளியேறவும். 90 00:10:29,880 --> 00:10:31,360 யார் கண்ணுக்கும் படாது. 91 00:10:31,440 --> 00:10:32,760 கவலைப்பட வேண்டாம். 92 00:10:34,280 --> 00:10:35,400 இனெஸ்... 93 00:10:42,120 --> 00:10:43,600 உன் மனமாற்றத்திற்கு காரணம்? 94 00:10:51,320 --> 00:10:54,000 மானுவெல் மற்றும் எட்வர்ட் இருவராலும். 95 00:10:56,760 --> 00:10:58,120 நீ எட்வர்டுடன் பேசினாயா? 96 00:10:59,640 --> 00:11:00,880 சுருக்கமாக. 97 00:11:04,240 --> 00:11:07,400 அடையாளம் கண்டுகொண்டாரா? அவர் என்ன சொன்னார்? 98 00:11:09,000 --> 00:11:10,560 அது ஒரு கணம் மட்டுமே. 99 00:11:15,280 --> 00:11:16,720 அவர் உன்னையும் நினைத்தார். 100 00:11:18,400 --> 00:11:19,800 உங்கள் மகள்கள். 101 00:11:26,240 --> 00:11:27,360 நன்றி. 102 00:11:31,240 --> 00:11:32,520 நீ வெளியேற வேண்டும். 103 00:11:33,800 --> 00:11:35,520 எனது கடமைகளைத் தொடர வேண்டும். 104 00:11:37,320 --> 00:11:38,400 நிச்சயமாக. 105 00:11:46,720 --> 00:11:50,040 என் மகள்களுக்கு இனெஸ் பெரியம்மாவை பார்க்க ஆர்வம் தெரியுமா? 106 00:11:52,360 --> 00:11:53,760 ஒருவேளை என்றோ ஒரு நாள்... 107 00:11:57,560 --> 00:11:58,680 ஒருவேளை. 108 00:12:03,200 --> 00:12:04,240 கவனித்துக் கொள். 109 00:12:05,360 --> 00:12:06,560 நீயும். 110 00:12:28,720 --> 00:12:29,840 காலை வணக்கம், லூயிஸ். 111 00:12:29,920 --> 00:12:32,840 காலை வணக்கம். திரு. ஃபடூ உமக்காக காத்திருக்கிறார். 112 00:12:33,440 --> 00:12:34,520 நன்றி. 113 00:12:48,880 --> 00:12:50,520 மாவுரோ, இங்கே என்ன செய்கிறாய்? 114 00:12:50,960 --> 00:12:53,880 ஃபடூ இடமிருந்து எனக்கொரு செய்தி வந்தது. மற்றும் நீ? 115 00:12:54,520 --> 00:12:55,640 எனக்கும்தான். 116 00:12:55,880 --> 00:12:58,640 மாவுரோ, சாந்தோஸ் இறந்ததற்கு மிகவும் வருந்துகிறேன். 117 00:12:58,840 --> 00:13:00,280 ஒரு வழியாக வந்தீர்களா. 118 00:13:00,920 --> 00:13:02,120 திரு. ஃபடூ, 119 00:13:02,960 --> 00:13:05,040 இது எதைப் பற்றியது சொல்ல முடியுமா? 120 00:13:06,320 --> 00:13:08,000 என்னுடன் வாருங்கள். 121 00:13:21,320 --> 00:13:22,920 இங்கே என்ன செய்கிறார்கள்? 122 00:13:23,440 --> 00:13:25,440 என்னை பாதுக்காப்பதாக வாக்களித்தீர். 123 00:13:25,520 --> 00:13:28,840 எங்கள் முன்னிலையில் உனக்கு எந்த ஆபத்தும் வராது. 124 00:13:29,840 --> 00:13:32,240 இந்த சிக்கலை ஒரேடியாக தீர்க்க போகிறேன் 125 00:13:32,320 --> 00:13:34,560 இரு தரப்பு விளக்கத்தையும் கேட்டு. 126 00:13:35,320 --> 00:13:36,680 இது நியாயமானது. 127 00:13:38,760 --> 00:13:41,120 நான் புதிதாக சொல்ல எதுவுமில்லை 128 00:13:41,200 --> 00:13:42,840 ஏற்கனவே உமக்கு விளக்கியதில். 129 00:13:43,880 --> 00:13:48,120 கௌரவமான குடும்ப பெண்ணின் வாக்கை சந்தேகிப்பதை நான் வருந்துகிறேன். 130 00:13:49,120 --> 00:13:52,160 அப்படியானால் திரு. லாரியாவை விளக்க அனுமதிப்போம். 131 00:13:55,680 --> 00:13:57,840 நீங்கள் இருவரும் நம்புகிறீரா, 132 00:13:58,120 --> 00:14:01,320 ஹவானாவில் எனது தாளாளர் திரு. ஹுலியான் கலாஃபாட்டின் 133 00:14:01,480 --> 00:14:04,360 முழு நம்பிக்கையை பெற்றுள்ள நான் 134 00:14:04,760 --> 00:14:07,800 இந்த பெண் கூறும் அந்த மோசக்காரன் என்று? 135 00:14:08,560 --> 00:14:12,440 ஆயினும்கூட, திருமதி கோரோஸ்டிசா உம்மை பின்தொடர்ந்து கடல் கடந்தார். 136 00:14:12,520 --> 00:14:13,960 எங்களை நம்பச் சொல்கிறீரா 137 00:14:14,040 --> 00:14:16,680 அவர் காரணமில்லாமல் அவ்வாறு செய்தார் என்று? 138 00:14:16,840 --> 00:14:20,440 சரியாக சொன்னீர். இந்த பெண்ணுக்கு நியாயமே கிடையாது. 139 00:14:21,080 --> 00:14:23,600 என் மகனின் உயிரையும் ஆபத்தில் ஆழ்த்தினாள். 140 00:14:24,160 --> 00:14:25,720 அது உண்மையா? 141 00:14:30,080 --> 00:14:31,880 அதற்கு நான் பொறுப்பல்ல. 142 00:14:35,320 --> 00:14:38,440 இதை பற்றிய உங்கள் கருத்து என்ன, திருமதி கிளேடன்? 143 00:14:43,240 --> 00:14:46,520 வெளிப்படையாக இருப்பதை தவிர எனக்கு வேறு வழி இல்லை. 144 00:14:47,200 --> 00:14:50,960 என் உறவினர் மனைவியின் மன ஆரோக்கியம் மோசமடைந்துள்ளது. 145 00:14:51,240 --> 00:14:52,600 என்ன சொல்கிறீர்கள்? 146 00:14:52,680 --> 00:14:54,440 அவளுடைய வெறித்தனம், 147 00:14:54,520 --> 00:14:57,080 யதார்த்தத்தைப் பற்றிய கருத்தை சிதைக்கிறது. 148 00:14:57,960 --> 00:15:02,360 மேலும், என்னிடம் டாக்டர் இசாசியின் மருத்துவ சான்றிதழ் உள்ளது 149 00:15:02,440 --> 00:15:04,840 இவளின் மன கோளாறு பற்றி விளக்குகிறது. 150 00:15:06,000 --> 00:15:10,720 அதனால்தான் திரு. லாரியாவும் நானும் அவளை கவனிக்க முடிவு செய்தோம். 151 00:15:11,080 --> 00:15:12,480 அது பொய்! 152 00:15:12,640 --> 00:15:15,560 என்னைப் பூட்டி பிணைக் கைதியாக வைத்திருந்தனர். 153 00:15:16,480 --> 00:15:18,640 அவள் நடத்தைக்கு கவனம் செலுத்த வேண்டாம். 154 00:15:19,080 --> 00:15:20,760 சொல்வதறியாமல் சொல்வாள். 155 00:15:21,520 --> 00:15:25,080 ஒருவேளை தனிமையில் சில நொடிகள் கிடைத்தால், அவளுடன் பேசி 156 00:15:26,200 --> 00:15:27,600 உறுதியளிக்கக்கூடும். 157 00:15:28,040 --> 00:15:30,360 -நிச்சயமாக. -ஆமாம், கண்டிப்பாக. 158 00:15:40,800 --> 00:15:44,560 வேடிக்கை போதும். நீ நாளை ஹவானா திரும்புகிறாய். 159 00:15:46,080 --> 00:15:47,360 செல்லவில்லை என்றால்? 160 00:15:48,000 --> 00:15:51,000 நாங்கள் அதிகாரிகளுடன் பேசி தெரிவிக்க வேண்டி வரும் 161 00:15:51,080 --> 00:15:53,600 சாந்தோஸ் ஹ்வெசோஸின் மரணத்தில் உன் பங்கு பற்றி. 162 00:15:53,680 --> 00:15:56,720 நான் யாரையும் கொல்லவில்லை. அது ஆலன். 163 00:15:57,760 --> 00:16:01,240 நீதிபதி யாரை நம்புவார்? ஒரு ஆங்கிலேயனையா, உன்னையா? 164 00:16:05,960 --> 00:16:09,400 உண்மையில் மானுவெல் மருத்துவ சான்றிதழில் கையெழுத்திட்டானா? 165 00:16:09,480 --> 00:16:13,040 மானுவெல் அதை ஒருபோதும் செய்ய மாட்டான். இது என் ஆடை ரசீது. 166 00:16:17,320 --> 00:16:19,560 -உதவியதற்கு நன்றி. -பரவாயில்லை. 167 00:16:22,120 --> 00:16:24,760 -நான் மன்னிப்பு கேட்க விரும்பினேன். -நானும். 168 00:16:26,360 --> 00:16:27,480 நானும். 169 00:16:31,520 --> 00:16:33,520 இன்று வாங்குபவர்களை மறுத்தேன். 170 00:16:36,000 --> 00:16:37,240 ஏன்? 171 00:16:40,640 --> 00:16:42,960 நீ அந்த வாய்ப்பை விட்டிருக்கக்கூடாது. 172 00:16:43,040 --> 00:16:44,520 இது முடிந்த கதை. 173 00:16:47,440 --> 00:16:49,400 இவை ஹெரெஸில் எனது கடைசி நேரங்கள். 174 00:16:54,600 --> 00:16:55,880 இன்று புறப்படுகிறாயா? 175 00:16:56,040 --> 00:16:57,480 எனக்கு வேறு வழியில்லை. 176 00:16:57,560 --> 00:17:00,360 எங்கிருந்தாலும், ஆலன் தன்னால் முடிந்ததை செய்வான் 177 00:17:00,440 --> 00:17:02,480 என் மகள்களின் பரம்பரை சொத்தை பறிக்க. 178 00:17:02,560 --> 00:17:04,480 எட்வர்டும் நானும் மறைய வேண்டும். 179 00:17:08,640 --> 00:17:10,080 எனவே நீ எங்கே போகிறாய்? 180 00:17:10,720 --> 00:17:14,200 போர்ச்சுகலுக்கு. போர்டோவில் சில நண்பர்கள் உள்ளனர். 181 00:17:14,640 --> 00:17:16,280 பாதுகாப்பாக இருப்போம். 182 00:17:17,880 --> 00:17:19,520 இது விடைபெறுதல். 183 00:17:23,080 --> 00:17:25,800 மெக்ஸிகோவில் சொல்வார்கள் விடைபெறுகிறேன் என்றால் 184 00:17:26,560 --> 00:17:28,760 மீண்டும் ஒருவரை ஒருவர் பார்ப்பார் என. 185 00:19:01,280 --> 00:19:03,080 இங்கே. வாக்குறுதியின் படி. 186 00:19:09,960 --> 00:19:12,640 உனக்கு சுதந்திரம் அளிக்கும் கடிதம். 187 00:19:15,440 --> 00:19:17,240 அவ்வளவு ஆச்சரியப்பட வேண்டாம். 188 00:19:17,560 --> 00:19:19,280 நான் வாக்களித்தேன், இல்லையா? 189 00:19:20,200 --> 00:19:21,480 ஓ, மேடம். 190 00:19:22,560 --> 00:19:25,280 நீங்கள் அதை மதிப்பீர்கள் என எதிர்பார்க்கவில்லை. 191 00:19:26,160 --> 00:19:27,480 நானும் தான். 192 00:19:30,960 --> 00:19:34,240 நீ ஹவானா அடைந்தவுடன், ஒரு வழக்கறிஞரிடம் செல். 193 00:19:35,800 --> 00:19:37,320 அதை தொலைத்து விடாதே. 194 00:19:39,800 --> 00:19:43,400 இப்பொழுது செல். நாம் வெவ்வேறு கப்பலில் பயணிப்போம். 195 00:19:44,920 --> 00:19:46,240 அது ஏன்? 196 00:19:48,640 --> 00:19:50,320 என் மனம் மாறாதிருக்க. 197 00:19:51,440 --> 00:19:52,680 அதற்காக. 198 00:19:56,720 --> 00:19:59,160 கேட்கவில்லையா? போ, என் கண்முன்னே நிக்காதே! 199 00:20:15,000 --> 00:20:16,440 திருமதி கரோலா... 200 00:20:19,720 --> 00:20:22,080 விதி நம்மை ஹவானாவில் ஒன்று சேர்த்தால்-- 201 00:20:22,160 --> 00:20:24,160 கவலைப்படாதே, அது நடக்கப்போவதில்லை. 202 00:20:25,760 --> 00:20:27,760 நாம் சஞ்சரிக்கும் சமூகம் வெவ்வேறு. 203 00:20:38,720 --> 00:20:40,160 அது நடந்தால், 204 00:20:40,880 --> 00:20:43,000 என்னை மதிக்க உம்மிடம் கேட்க மாட்டேன், 205 00:20:44,400 --> 00:20:46,320 என்னிடம் பேசக்கூட தேவையில்லை... 206 00:20:49,720 --> 00:20:53,640 ஆனால் என்னை தெரியாததை போல் முகம் திருப்ப வேண்டாம். 207 00:20:59,240 --> 00:21:00,400 நன்று. 208 00:22:41,560 --> 00:22:43,040 இங்கே என்ன செய்கிறாய்? 209 00:22:43,720 --> 00:22:45,120 யார் நீ? 210 00:22:46,880 --> 00:22:48,880 ஏய்! உன்னைத்தான்! 211 00:22:49,560 --> 00:22:51,800 நீ எப்படி இங்கு நுழைந்தாய்? ஏய்! 212 00:23:02,240 --> 00:23:03,440 நாம் போகவேண்டும். 213 00:23:08,680 --> 00:23:09,880 நீ போகலாம். 214 00:23:15,240 --> 00:23:17,640 -என்ன செய்கிறாய்? -உன் வேலையை பார். 215 00:23:26,800 --> 00:23:27,800 போ! 216 00:24:21,360 --> 00:24:22,720 திரு. மாவுரோ. 217 00:24:22,960 --> 00:24:24,200 திருமதி கிளேடன்? 218 00:24:24,440 --> 00:24:27,400 காடிஸுக்குப் புறப்பட்டார் அவரது ஆங்கில ஊழியர்களுடன். 219 00:24:30,760 --> 00:24:32,080 நன்றி. 220 00:25:59,760 --> 00:26:01,520 கன்னி மடம் தீ பிடித்து எரிகிறது. 221 00:26:04,040 --> 00:26:06,120 -என்ன நடந்தது? -எவருமறியார். 222 00:26:06,520 --> 00:26:10,840 தேவாலயத்தில் தொடங்கிருக்கலாம், இப்போது கன்னியாஸ்திரியரின் அறைகளுக்கு பரவின. 223 00:26:11,040 --> 00:26:13,720 மாவுரோ, உன் உதவி தேவையானதால் உன்னிடம் வந்தேன். 224 00:26:16,160 --> 00:26:17,360 சோல்! 225 00:26:17,920 --> 00:26:18,920 வா. 226 00:27:04,560 --> 00:27:06,320 -ஸிஸ்டர்! -நன்றி. 227 00:27:07,520 --> 00:27:11,040 தண்ணீர்! உதவவும். தயவு செய்து, உதவவும். 228 00:27:17,600 --> 00:27:20,360 வீணடிக்க நம்மிடம் நேரமில்லை! சீக்கிரம்! 229 00:27:23,000 --> 00:27:26,040 உதவுங்கள்! யாராவது உதவுங்கள்! 230 00:27:28,160 --> 00:27:29,840 தண்ணீர்! 231 00:27:37,880 --> 00:27:39,840 ஸிஸ்டர்! ஸிஸ்டர். 232 00:27:52,480 --> 00:27:53,560 எட்வர்ட் எங்கே? 233 00:27:55,040 --> 00:27:56,920 அவரை அடைய முயற்சித்தேன், ஆனால்... 234 00:27:57,640 --> 00:27:59,080 இன்னும் அறையில் உள்ளாரா? 235 00:27:59,920 --> 00:28:01,600 மன்னிக்கவும், சோல். 236 00:28:02,160 --> 00:28:03,400 சாவியை கொடு. 237 00:28:06,680 --> 00:28:08,360 நீ அங்கு செல்ல முடியாது. 238 00:28:09,200 --> 00:28:10,840 அவரைக் கண்டுபிடிக்க வேண்டும். 239 00:28:13,280 --> 00:28:14,880 உயிருடன் இருக்க வாய்ப்பில்லை. 240 00:28:15,280 --> 00:28:16,840 சாவியை கொடு. 241 00:28:37,320 --> 00:28:38,720 சொலேடாட்! 242 00:29:00,920 --> 00:29:02,560 தயவு செய்து உதவி செய்யவும்! 243 00:29:06,040 --> 00:29:07,800 -கொஞ்சம் தண்ணீர். -தண்ணீர். 244 00:29:17,680 --> 00:29:19,040 சொலேடாட்! 245 00:29:25,800 --> 00:29:27,800 -எட்வர்ட்! -சோல்! 246 00:29:41,600 --> 00:29:42,960 இங்கிருந்து போக வேண்டும்! 247 00:29:43,040 --> 00:29:44,600 அவர் இல்லாமல் போக மாட்டேன். 248 00:30:07,920 --> 00:30:09,120 -போகலாம். -இல்லை. 249 00:30:10,440 --> 00:30:12,920 -போகலாம், போகலாம். -இல்லை. 250 00:30:33,680 --> 00:30:34,640 எட்வர்ட்! 251 00:30:40,960 --> 00:30:42,440 கவனம்! 252 00:31:09,040 --> 00:31:10,200 எட்வர்ட். 253 00:32:00,400 --> 00:32:02,680 எட்வர்ட், நாம் செல்ல வேண்டும். 254 00:32:15,600 --> 00:32:16,800 எட்வர்ட், போகலாம். 255 00:32:17,080 --> 00:32:18,320 அன்பே சோல்... 256 00:32:22,160 --> 00:32:23,280 எட்வர்ட்! 257 00:32:23,680 --> 00:32:25,840 சொல்வதைக் கேள், என் புத்தி போகும் முன். 258 00:32:25,920 --> 00:32:27,440 -என் தைரியம் போகும் முன். -நேரம் இல்லை. 259 00:32:27,520 --> 00:32:28,960 நான் சொல்வதை கேள்! 260 00:32:30,840 --> 00:32:32,680 நான் உன்னுடன் வரப் போவதில்லை. 261 00:32:35,440 --> 00:32:37,240 இனி சுமையாக இருக்க மட்டேன். 262 00:32:38,280 --> 00:32:40,440 -என்னை மன்னித்துவிடு. -என்ன? 263 00:32:43,680 --> 00:32:46,000 உன்னை எவ்வளவு நேசிக்கிறேனென தெரியும். 264 00:32:46,160 --> 00:32:47,760 இல்லை! நிறுத்தும்! 265 00:32:48,000 --> 00:32:49,120 இல்லை! 266 00:32:50,040 --> 00:32:51,920 என்னை மிகவும் சந்தோஷப்படுத்தினாய். 267 00:32:59,400 --> 00:33:00,880 எட்வர்ட்! 268 00:33:13,080 --> 00:33:14,560 இல்லை! 269 00:33:16,680 --> 00:33:18,160 இல்லை! 270 00:35:19,160 --> 00:35:21,200 பதறாதீர், ஸிஸ்டர். 271 00:35:43,680 --> 00:35:45,640 என் கண்ணே, தைரியமாக இரு. 272 00:35:48,800 --> 00:35:52,640 உனக்கு என்ன தேவை பட்டாலும் நாங்கள் உனக்காக இருக்கிறோம். 273 00:35:54,040 --> 00:35:55,960 -என் அன்பே. -நன்றி. 274 00:36:05,520 --> 00:36:07,760 -என் ஆழ்ந்த அனுதாபங்கள். -நன்றி. 275 00:36:11,520 --> 00:36:13,160 இங்கிலாந்து திரும்புகிறாயா? 276 00:36:14,160 --> 00:36:16,760 கூடிய விரைவில். எட்வர்டை அடக்கம் செய்ய வேண்டும். 277 00:36:17,080 --> 00:36:18,480 ஆலனையும். 278 00:36:19,000 --> 00:36:21,520 என் மகள்களுக்கு நான் தேவைப்படுவேன். 279 00:36:25,320 --> 00:36:27,960 இவ்வாறு நிகழ்ந்ததற்கு மிகவும் வருந்துகிறேன். 280 00:36:28,040 --> 00:36:29,200 அறிவேன். 281 00:36:31,560 --> 00:36:32,760 மாவுரோ. 282 00:36:36,360 --> 00:36:38,200 நீ எதுவும் சொல்ல வேண்டியதில்லை. 283 00:37:17,120 --> 00:37:18,640 நீங்கள் நலமா? 284 00:37:21,600 --> 00:37:24,200 மெக்ஸிகோக்கு திரும்பும் நேரம் வந்து விட்டது. 285 00:37:27,120 --> 00:37:32,120 கரூஸ் கடனை ஒருபோதும் திருப்ப முடியாது என்று ஏற்றுக்கொண்டாலும். 286 00:37:35,400 --> 00:37:36,680 அப்படி தேவையில்லை. 287 00:37:38,800 --> 00:37:40,920 உங்களிடம் எவ்வளவு பணம் மீந்தது? 288 00:37:41,640 --> 00:37:44,040 திருமதி உர்சுலா கொடுத்தது மட்டுமே. 289 00:37:47,080 --> 00:37:50,120 உமது மகளின் மாமியாருக்கு நல்ல முதலீடு வேண்டும், அல்லவா? 290 00:37:53,160 --> 00:37:54,640 இப்போது உங்களிடம் உள்ளது. 291 00:37:56,520 --> 00:37:59,160 சுரங்கத்திலிருந்து உம்மால் சம்பாதிக்க முடிந்தால், 292 00:37:59,560 --> 00:38:02,360 கைவிடப்பட்ட திராட்சைத் தோட்டத்திலிருந்தும் பெறலாம். 293 00:38:02,840 --> 00:38:05,640 இந்த வணிகத்தைப் பற்றி எதுவும் தெரியாது, மகனே. 294 00:38:06,000 --> 00:38:07,120 கற்றுக்கொள்வீர்கள். 295 00:38:10,040 --> 00:38:11,400 அப்பா... 296 00:38:20,160 --> 00:38:22,200 வேறேதாவது தொடங்க வேண்டிய நேரம் இது. 297 00:38:24,840 --> 00:38:26,440 நீயும், மரியானாவும்? 298 00:38:26,680 --> 00:38:28,880 மரியானாவும் நானும் வாழ்வோம். 299 00:38:29,320 --> 00:38:32,080 எங்கள் சொந்த கால்களில் நிற்கும் நேரம் இது. 300 00:38:35,600 --> 00:38:36,800 அப்பா... 301 00:38:39,600 --> 00:38:41,920 நீங்கள் சிறந்த தந்தையாக இருந்தீர்கள். 302 00:38:43,560 --> 00:38:46,280 இப்போது நாங்கள் உங்களை கவனித்துக்கொள்ளும் நேரம். 303 00:39:44,840 --> 00:39:46,640 வீடு எல்லாம் உங்களுடையது. 304 00:39:48,640 --> 00:39:50,640 நீங்கள் அதில் வாழலாம், 305 00:39:51,400 --> 00:39:53,120 அல்லது அதை எரிக்கலாம். 306 00:39:53,640 --> 00:39:55,160 விரும்பியதைச் செய்யவும், 307 00:39:55,200 --> 00:39:59,280 ஏனென்றால், அப்பா பட்ட கடன் ஒருபோதும் செலுத்தப்படாது. 308 00:39:59,840 --> 00:40:01,560 எனவே அவன் எங்கே? 309 00:40:01,960 --> 00:40:06,440 உம்மை போன்றவரிடம் கையாள்வதை விட அவருக்கு முக்கியமான காரியங்கள் உள்ளன. 310 00:40:06,840 --> 00:40:08,600 உங்கள் தந்தை எவ்வளவு இழிவானவர், 311 00:40:09,200 --> 00:40:11,080 உங்களையும் கவனித்துக் கொள்ளவில்லை 312 00:40:11,880 --> 00:40:13,640 உங்கள் பரம்பரை சொத்தையும். 313 00:40:22,160 --> 00:40:24,160 லாரியா இங்கே இல்லையென்றால்... 314 00:40:26,560 --> 00:40:28,680 அவன் ஒரு கோழை என்பதால் தான்! 315 00:40:31,120 --> 00:40:34,120 அவனுக்கு தைரியம் இல்லை என்னை கண்ணோடு கண் பார்த்து 316 00:40:35,160 --> 00:40:37,120 அவனது தோல்வியை ஏற்றுக்கொள்ள. 317 00:40:38,560 --> 00:40:40,320 லாரியா! 318 00:40:42,160 --> 00:40:43,760 மாறாக. 319 00:40:45,200 --> 00:40:47,200 அவர் விரும்பும் இடத்தில் உள்ளார். 320 00:40:48,880 --> 00:40:52,640 சொத்தை விட எங்களுக்கு மதிப்பானதை எங்கள் தந்தை தந்தார். 321 00:40:54,320 --> 00:40:56,200 ஒரு வாழ்க்கை பாடம். 322 00:40:57,400 --> 00:40:59,400 அவரைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறோம். 323 00:41:03,920 --> 00:41:05,920 இப்போது, அனுமதித்தால்... 324 00:41:07,560 --> 00:41:09,680 கனவான்களே, கடவுள் உம்மை மன்னிக்கட்டும். 325 00:41:20,120 --> 00:41:21,880 நடக்கட்டும், பசங்களா! 326 00:41:52,400 --> 00:41:54,080 இதோ பாட்டில், ஐயா. 327 00:41:55,680 --> 00:41:57,160 நன்றி. 328 00:42:03,200 --> 00:42:05,400 -காலை வணக்கம். -பெண்மணிக்கு பொட்டலம். 329 00:42:21,680 --> 00:42:22,960 உள்ளே வரவும். 330 00:42:24,960 --> 00:42:26,960 ஸ்பெயினிருந்து பொட்டலம், மேடம். 331 00:42:32,640 --> 00:42:34,800 அந்த தரகு கட்டணம் ஏற்றுக்கொள்ளலாகாது. 332 00:42:35,640 --> 00:42:37,760 இது நிலையான கட்டணம், திருமதி கிளேடன். 333 00:42:38,640 --> 00:42:40,520 அது உண்மை இல்லை என அனைவரும் அறிவோம். 334 00:42:52,200 --> 00:42:54,600 எங்களால் சிறந்த சலுகையை வழங்க முடியும். 335 00:42:55,320 --> 00:42:56,560 அற்புதம். 336 00:43:02,400 --> 00:43:04,360 உம்மிடம் இருக்கும்போது என்னை அணுகவும். 337 00:43:43,840 --> 00:43:47,480 இரண்டாவது பிழியலிலிருந்து சாறு வந்துதும் எனக்கு தெரிவி. 338 00:44:25,760 --> 00:44:27,520 நல்வரவு, சொலேடாட். 339 00:44:29,000 --> 00:44:30,200 நன்றி. 340 00:44:33,720 --> 00:44:35,800 இந்த வாழ்க்கை உனக்கு நன்கு பொருத்தம். 341 00:44:38,880 --> 00:44:40,680 நீ நன்றாக உணர்கிறாயென நம்புகிறேன். 342 00:44:41,200 --> 00:44:44,720 என் மகள்களும் வியாபாரமும் இழப்புகளைச் சமாளிக்க உதவியது. 343 00:44:46,120 --> 00:44:47,440 அது நன்று. 344 00:45:00,240 --> 00:45:01,880 உன் பரிசு கிடைத்தது. 345 00:45:04,600 --> 00:45:05,880 வாழ்த்துக்கள். 346 00:45:07,160 --> 00:45:09,360 ஒரு மகத்தான அறுவடை செய்துள்ளாய். 347 00:45:13,880 --> 00:45:17,320 உன்னை போன்ற நிபுணர் சொல்வது, ஒரு பாராட்டு. 348 00:45:23,480 --> 00:45:25,320 உனக்காக ஒரு முன்மொழிவு உள்ளது. 349 00:45:28,560 --> 00:45:30,800 என் கவனம் இன்னும் ஷெர்ரி வணிகத்தில். 350 00:45:30,880 --> 00:45:33,120 இங்கிலாந்து போட்டியாளராக உயர்கிறது. 351 00:45:33,520 --> 00:45:36,000 ஆஸ்திரேலிய ஷெர்ரி உள்ளது, இத்தாலிய ஷெர்ரி... 352 00:45:36,440 --> 00:45:38,560 தென்னாப்பிரிக்க ஷெர்ரியும் இருக்கிறது. 353 00:45:40,360 --> 00:45:42,640 அதற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? 354 00:45:44,400 --> 00:45:46,880 நீ இப்போது மது தயாரிப்பாளர்களின் பகுதி. 355 00:45:47,120 --> 00:45:49,080 நாம் அனைவருக்கும் கூட்டாளிகள் தேவை. 356 00:45:51,800 --> 00:45:53,840 நமக்கு தெரியும் ஸ்பானிய அஞ்சல் 357 00:45:53,960 --> 00:45:57,320 ஐரோப்பா முழுவதிலும் மிகவும் திறமையான ஒன்றாகும். 358 00:45:58,640 --> 00:46:00,120 சொல்ல வருவது என்னவெனில்... 359 00:46:02,480 --> 00:46:07,200 வர்த்தக ஒப்பந்தத்தை கடிதம் மூலம் செய்திருக்கலாமே? 360 00:46:11,240 --> 00:46:12,560 செய்திருக்கலாம். 361 00:46:14,400 --> 00:46:16,720 நீயும் மெக்ஸிகோக்கு திரும்பியிருக்கலாம். 362 00:46:17,560 --> 00:46:19,760 மெக்ஸிகோவில் இனி எனக்கு எதுவும் இல்லை. 363 00:46:39,960 --> 00:46:42,320 இது மீண்டும் இயங்குவது ஆறுதலளிக்கிறது. 364 00:46:50,240 --> 00:46:52,080 எவ்வளவு காலம் கடந்தாலும், 365 00:46:53,520 --> 00:46:55,600 இது என் வீடு என்று இன்னும் உணர்கிறேன். 366 00:47:01,440 --> 00:47:03,280 இது என்றும் உன் வீடு தான். 367 00:47:31,520 --> 00:47:33,880 லா டெம்ப்லான்சா - மரியா டுவென்யாஸ் எழுதிய பனைக்கதையை அடிப்படையாகக் கொண்டது 368 00:49:24,160 --> 00:49:26,160 வசனங்கள் மொழிபெயர்ப்பு ஸதீஷ் ஐயங்கார் 369 00:49:26,240 --> 00:49:28,240 படைப்பு மேற்பார்வையாளர் கல்பனா ரகுராமன்