1 00:00:09,718 --> 00:00:12,930 நான் பெவ்வின் கணினியைச் சரி செய்துவிட்டேன் என டைலரிடம் சொல்கிறாயா? 2 00:00:12,930 --> 00:00:14,097 சரி. 3 00:00:15,974 --> 00:00:17,309 அடடே. 4 00:00:17,309 --> 00:00:20,729 பெவ் டேட்டிங் இணைய தளத்தில் இருந்திருக்காங்க. ஜேஸ்? 5 00:00:20,729 --> 00:00:23,232 பெவ் டேட்டிங் இணைய தளத்தில் இருந்தது உனக்குத் தெரியுமா? 6 00:00:23,815 --> 00:00:25,025 அவங்களுக்கு நல்லது தானே? 7 00:00:25,901 --> 00:00:26,902 பார். 8 00:00:28,445 --> 00:00:30,405 நான் இரவு நேர டேட்டிங்கிற்காக ஏங்குகிறேன். 9 00:00:31,823 --> 00:00:34,826 ஒன்றாக நேரம் செலவிட நம்மிடம் அந்த உற்சாகம் இருக்கிறதா என்ன? 10 00:00:35,619 --> 00:00:37,120 ஒருவரை ஒருவர் பற்றி புது விஷயங்களைக் கண்டுபிடிக்க. 11 00:00:37,120 --> 00:00:40,791 பதிமூன்று வருடங்கள் சேர்ந்திருக்கும் உறவில் உன்னை பற்றி இப்போது புதிதாக ஏதும் கண்டுபிடிப்பேனா? 12 00:00:40,791 --> 00:00:43,085 அதாவது, அது நன்றாக இருந்தால், நீ ஆரம்பத்திலேயே இதைப் பற்றி பேசியிருப்பாய். 13 00:00:43,085 --> 00:00:44,211 ஜேசன். 14 00:00:44,211 --> 00:00:47,506 சரி. இன்றிரவு பீட்ஸா சாப்பிடலாம் அல்லது வேறு எங்காவது போகலாம், சரியா? 15 00:00:47,506 --> 00:00:50,342 இல்லை, நாம் இருவரும் சேர்த்து நேரம் செலவிடுவதைப் பற்றிப் பேசுகிறேன். 16 00:00:50,342 --> 00:00:52,594 அதாவது, வெளியே எங்காவது போவது. 17 00:00:52,594 --> 00:00:54,054 - வெளியேவா? - ஆமாம், வெளியே. 18 00:00:54,054 --> 00:00:57,808 ஏன்? நாம் வெளியே போவதே யாரையாவது சந்தித்து, அவர்களோடு இருக்கத்தானே. 19 00:00:57,808 --> 00:00:59,434 நாம் அதைச் செய்துவிட்டோம். நாம் வெற்றி பெற்றோம். 20 00:00:59,434 --> 00:01:01,270 இதுதான் நம் பரிசு. நாம் வெற்றியாளர்கள். 21 00:01:01,270 --> 00:01:03,605 தோற்றவர்களுடன் வெளியே செல்ல எனக்கு விருப்பம் இல்லை. இருக்கட்டும், பரவாயில்லை. 22 00:01:04,772 --> 00:01:07,818 ஒன்று சொல்லட்டுமா, போன முறையை விட இந்த முறை மெதுவாகத்தான் அதை அறைந்து சாத்தினாள். 23 00:01:07,818 --> 00:01:09,778 - இது நல்ல முன்னேற்றம், நிக். - அவளுக்கு ஏதோ பிரச்சினை. 24 00:01:09,778 --> 00:01:14,783 நேற்று நான் டீ குடிக்கும் போது, “ஆ” என்று சொல்லிவிட்டேனாம், அதற்காக என் மேல் கோபப்பட்டாள். 25 00:01:14,783 --> 00:01:17,077 - என்ன? - நான் டீ குடித்து “ஆ” என்று சொன்னேன், 26 00:01:17,077 --> 00:01:21,290 அது, “தேவையற்றதாம்”, “நடிப்பாம்.” 27 00:01:21,832 --> 00:01:23,125 சரி. 28 00:01:23,125 --> 00:01:24,585 ஓ, சரி. இதோ வந்துவிட்டாள். 29 00:01:25,586 --> 00:01:26,712 நீ நன்றாக இருக்கிறாயா? 30 00:01:26,712 --> 00:01:27,921 - ஆம். - சரி. 31 00:01:33,427 --> 00:01:35,053 ஐயோ. 32 00:01:35,053 --> 00:01:37,222 ஜேஸ், ஜேஸ், இங்கே வா. 33 00:01:37,222 --> 00:01:40,392 - இங்கே வா. இங்கே வா. - ஏன்? இப்போது என்ன? 34 00:01:41,310 --> 00:01:44,646 - அவருக்கு மெசேஜ் வந்திருக்கு. அட. - அப்படி இருக்காது. 35 00:01:44,646 --> 00:01:46,940 - அவங்க யாரையோ சந்திக்கவிருந்திருக்காங்க. - ஐயோ. 36 00:01:46,940 --> 00:01:48,192 இன்றிரவு. 37 00:01:48,192 --> 00:01:51,862 ஆனால் அவங்க இறந்துவிட்டதால், அவங்களால் போக முடியாது. 38 00:01:51,862 --> 00:01:54,281 ஓ, ஆமாம். எனக்குத் தெரியும், ஆமாம். சரிதான். 39 00:01:54,281 --> 00:01:56,366 - பாவம் ஜார்ஜ். - நாம் அவருக்கு பதில் அனுப்பணும், அல்லவா? 40 00:01:56,366 --> 00:01:58,076 - இல்லை, என்ன செய்கிறாய்? - அவருக்குத் தெரியப்படுத்தணும். 41 00:01:58,076 --> 00:02:00,787 நாம் அப்படி செய்ய கூடாது. எவ்வளவு மெசேஜ் அனுப்பி இருக்கிறார்கள் என்று பார். 42 00:02:00,787 --> 00:02:04,499 அவர்களுக்கு ஒருவரை ஒருவர் நன்றாக தெரியும். “ஹே. அவங்க இறந்துவிட்டாங்க” என பதில் எழுத முடியாது. 43 00:02:04,499 --> 00:02:05,584 சரி... 44 00:02:05,584 --> 00:02:08,044 நாம் நேராகச் சென்று அவரிடம் தெரிவிக்க வேண்டும். 45 00:02:10,214 --> 00:02:12,758 - இப்போது என்ன செய்கிறாய்? அது என்ன? - நான்... டேட்டை உறுதி செய்கிறேன். 46 00:02:12,758 --> 00:02:15,093 - நீ என்ன செய்கிறாய்? - அவனை அப்படியே விட முடியாது. 47 00:02:15,093 --> 00:02:17,513 நீ இறந்தவளைப் போல நடிக்கிறாய், நீ உண்மையில் ஒரு பேய்தான். 48 00:02:17,513 --> 00:02:19,097 ஓ, ஜேஸ், நீ வரவேண்டியது இல்லை. 49 00:02:21,141 --> 00:02:23,101 அவர் நம்மை செரஃபினாவிற்கு அழைத்துச் செல்கிறார். 50 00:02:42,287 --> 00:02:43,288 கேம்டென் லாக் 51 00:03:00,389 --> 00:03:03,559 உண்மை என்னவென்றால், விநியோகச் சங்கிலி இப்போது மிகவும் சிக்கலாக உள்ளது. 52 00:03:03,559 --> 00:03:05,686 கலவை-மாசுபடுதல், அதைத் தடுக்கவே முடியாது. 53 00:03:06,478 --> 00:03:08,230 அதாவது, உணவுப் பெயரிடல். 54 00:03:08,230 --> 00:03:10,941 வந்து, பொது சுகாதாரத்தை விட 55 00:03:10,941 --> 00:03:14,987 பொறுப்பு வரம்பில் அது ஒரு பயிற்சி, நோக்கத்தின் எதிர்நிலை. 56 00:03:16,530 --> 00:03:18,532 எப்படியும், உங்களுக்கு இந்தக் கட்டுரையை அனுப்புகிறேன். 57 00:03:21,159 --> 00:03:24,079 அடக் கடவுளே! யார் பென்குவினை வீட்டில் அவிழ்த்துவிட்டது யார்? 58 00:03:24,079 --> 00:03:27,207 யாராவது பென்குவின் போலீஸை கூப்பிடுங்க... நீயா? 59 00:03:28,083 --> 00:03:29,501 எங்கு போயிருந்தீர்கள்? 60 00:03:29,501 --> 00:03:32,379 தோட்டத்தில் நடக்கப் போயிருந்தேன், ஆனால், சற்று சோர்வாகி விட்டேன். 61 00:03:32,379 --> 00:03:35,424 தெரியும். ஒரே முறை முழு இடத்தையும் சுற்றி வர முடியாது, அல்லவா? 62 00:03:36,258 --> 00:03:40,220 உனக்கு அது தெரியும்தானே, ஸ்டீவி? இது நம் பழைய வீடு போல அல்ல. 63 00:03:40,220 --> 00:03:41,597 தோட்டத்தில் நடக்கப் போனால், 64 00:03:41,597 --> 00:03:43,724 நீ தண்ணீர் கொண்டு போகணும், ஒருவேளை நீ தொலைந்து கூட போகலாம். 65 00:03:43,724 --> 00:03:44,933 சரி. 66 00:03:44,933 --> 00:03:46,977 அன்பே, பூமி தினத்தின் பொருட்டு நீ உற்சாகமாக இருக்கிறாயா? 67 00:03:47,561 --> 00:03:49,188 ஞாபகமிருக்கட்டும், எலெக்ட்ரிக் காரை எடுத்து செல்லுங்கள். 68 00:03:49,897 --> 00:03:52,149 ப்ளீஸ், எண்ணெய் நிறுவனத்திற்கு வேலை செய்வது பற்றி அவர்களிடம் சொல்ல வேண்டாம். 69 00:03:52,774 --> 00:03:54,568 உங்களிடம் பெரிய வீடு இருப்பது. அல்லது விடுமுறை பற்றி. 70 00:03:55,319 --> 00:03:57,696 அல்லது 2010-க்கு முன் நீங்கள் பெருமைப் படக்கூடிய, 71 00:03:57,696 --> 00:03:59,031 எதையும் இப்போது சொல்ல வேண்டாம். 72 00:03:59,823 --> 00:04:00,824 அப்படியே ஆகட்டும். 73 00:04:06,413 --> 00:04:08,665 ஆம், அப்படித்தான். வலது பக்கம் செல்லுங்கள். 74 00:04:08,665 --> 00:04:10,876 சீக்கிரம். ஒன்று, இரண்டு. ஒன்று, இரண்டு, நாம் பயின்றது போல. 75 00:04:13,003 --> 00:04:14,087 கேரட் குச்சி? 76 00:04:14,713 --> 00:04:15,881 இப்போது மணி 10.30 தான் ஆகிறது. 77 00:04:15,881 --> 00:04:17,798 ஆம், இன்றைக்கான உணவை சீக்கிரமே சாப்பிட விரும்புகிறேன். 78 00:04:17,798 --> 00:04:19,343 பிறகு மீதம் உள்ள நாளை ஆசுவாசமாக கழிக்கலாம். 79 00:04:19,343 --> 00:04:20,511 நான் ஒரு கேள்வி கேட்கலாமா? 80 00:04:21,011 --> 00:04:24,515 நீயும் ஹேலியும் அடிக்கடி வெளியே போவீர்களா, அதாவது, இரவு டேட்டிங் போல? 81 00:04:25,182 --> 00:04:26,517 - வெளியேவா? - ஆமாம், வெளியே. 82 00:04:26,517 --> 00:04:29,228 - நாங்க ஏன் வெளியே போகணும்? நாங்க சிங்கிள் இல்லை. - அதேதான். 83 00:04:29,228 --> 00:04:31,063 உறவுகொள்ளத்தான் மக்கள் வெளியே போவார்கள். 84 00:04:31,063 --> 00:04:33,023 அவர்கள் என்ன சொன்னாலும், அது உறவுகொள்ள தான். 85 00:04:33,524 --> 00:04:35,442 மக்கள் பானை செய்வதில் ஈடுபாடு காட்டுவதாக நினைக்கிறீர்களா? 86 00:04:35,442 --> 00:04:38,987 அட, உறவுகொள்வதற்காகத்தான் மக்கள் பானை செய்யும் வகுப்பிற்குச் செல்கிறார்கள். 87 00:04:39,488 --> 00:04:41,782 பால் சொம்பு செய்ய முடிந்தால், அது கூடுதல் வெகுமதி. 88 00:04:41,782 --> 00:04:43,700 பாரு, இப்போது பப்புகளில் சோஃபா போடுகிறார்கள். 89 00:04:43,700 --> 00:04:46,828 அப்படியென்றால், வெளியே செல்வதை, உள்ளேயே இருப்பதைப் போல காட்ட முயற்சி செய்கிறார்கள். 90 00:04:46,828 --> 00:04:50,290 அதாவது... சரி, சரி. நான் ஹேலியுடன் உள்ளே உட்காரப் போகிறேன். 91 00:04:50,290 --> 00:04:52,543 நாங்கள் பேசுவதை நிறுத்த, நாங்கள் கோட் போட்டுக் கொண்டு, 92 00:04:52,543 --> 00:04:54,586 தெருவில் நடந்துச் சென்று, பேருந்தில் ஏறி... 93 00:04:54,586 --> 00:04:56,630 அந்தப் பேருந்தில் 20 நிமிடங்கள் உட்கார வேண்டும், 94 00:04:56,630 --> 00:04:59,132 நாங்கள் ஏறிய இடத்தில் இருந்து, மூன்று மைல் தொலைவிற்கு அப்படியே உட்கார்ந்து, 95 00:04:59,132 --> 00:05:00,300 திரும்பப் பேசத் தொடங்க வேண்டுமா? 96 00:05:00,300 --> 00:05:01,552 அது ஒரு அற்பமான யோசனை. 97 00:05:01,552 --> 00:05:04,054 - போதனை. - மேலும், எனக்கு நிறைய கடன் இருக்கு, 98 00:05:04,054 --> 00:05:06,181 நான் முடிந்த வரை உள்ளேயே இருக்க விரும்புவேன். என் பணத்துக்கும் உரிய மதிப்பு இருக்கும். 99 00:05:06,181 --> 00:05:07,599 - புரிகிறது, நண்பா. - இங்கே பாருங்க. 100 00:05:07,599 --> 00:05:10,477 ஆம், ஆம், செல்! ஆம், ஜார்ஜ் பையா! 101 00:05:10,477 --> 00:05:12,938 போ! அதைப் பற்றித்தான் சொன்னேன். 102 00:05:12,938 --> 00:05:14,731 நண்பா? மன்னிக்கவும்... நண்பா? மன்னிக்கவும், ஹாய். 103 00:05:14,731 --> 00:05:16,733 எங்கள் பசங்க இதில் சேர ஏதும் வாய்ப்பு இருக்கிறதா? 104 00:05:16,733 --> 00:05:19,903 இல்லாவிடில் தளத்தில் குழந்தைகளை வெறித்துப் பார்க்கும் இரண்டு பெரியவர்கள் போல் இருப்போம். 105 00:05:19,903 --> 00:05:21,196 - நான் சொல்வது புரிகிறதா? - ஆம், கேளுங்கள், 106 00:05:21,196 --> 00:05:22,781 அவர்களிடம் ஒன்றிணையாதவர்களை தனிக் குழுவாகப் பிரிக்கக் கேட்டேன் 107 00:05:22,781 --> 00:05:23,991 ஆனால், அவர்கள் செய்யவில்லை. 108 00:05:23,991 --> 00:05:27,327 நாங்கள் ஏற்கனவே ஒருங்கிணையாதவர்களைத் தனிக் குழுவாகப் பிரித்துவிட்டோம். 109 00:05:27,327 --> 00:05:28,662 “குழந்தைகள்” என்று அழைக்கிறோம். 110 00:05:29,955 --> 00:05:31,331 சரி, டைலர், தியோ. எழுந்திருங்கள். போவோம். 111 00:05:31,331 --> 00:05:33,333 சரி, அவ்வளவுதான். ஆம். போங்க, பசங்களே. 112 00:05:33,333 --> 00:05:35,419 - லில்லி, ஜார்ஜ். - இதோ. 113 00:05:35,419 --> 00:05:36,670 போ, மகனே. 114 00:05:36,670 --> 00:05:37,921 ஜாலியாக இரு. 115 00:05:39,131 --> 00:05:40,883 சரி, பசங்களே. தொடங்குவோம். ஒன்று கூடுங்கள்! 116 00:05:40,883 --> 00:05:42,467 அது முழு நேரம். அருமை. 117 00:05:43,760 --> 00:05:45,971 - வாங்க, பசங்களே. - அவ்வளவுதான், டைலர். ஆம், ஸ்ட்ரெச் பண்ணு. 118 00:05:45,971 --> 00:05:47,222 ரொம்ப எச்சரிக்கையாக இருக்க முடியாது, தம்பி. 119 00:05:47,222 --> 00:05:48,682 அருமை, மகனே. 120 00:05:51,059 --> 00:05:52,477 த பாக்ஸ் 121 00:05:55,898 --> 00:05:57,149 - ஹாய் - ஹாய். 122 00:05:57,858 --> 00:05:59,109 கேட் ரீட் இங்கு இருக்காங்களா? 123 00:05:59,109 --> 00:06:02,279 - உங்களிடம் முன்பதிவு இருக்கிறதா? - இல்லை, உண்மையில், எனக்கு அது தேவையில்லை. 124 00:06:02,279 --> 00:06:03,238 நான் அவங்க மகள். 125 00:06:03,238 --> 00:06:06,033 என்னுடைய ஐந்து வயதில் என்னை விட்டுச் சென்றாங்க, அது ஏன் என்று எனக்குத் தெரியணும். 126 00:06:07,576 --> 00:06:08,577 சரி. 127 00:06:09,203 --> 00:06:10,412 கேட்? 128 00:06:10,412 --> 00:06:11,496 பொறு. ஒரு நொடி. 129 00:06:14,917 --> 00:06:16,877 சரி. பரவாயில்லை. 130 00:06:18,003 --> 00:06:19,338 நான் இவற்றை மட்டும் எடுத்துக்கொள்கிறேன். 131 00:06:19,338 --> 00:06:20,714 இனிய நாளாக அமையட்டும். 132 00:06:25,886 --> 00:06:26,929 கேட் ரீட் சிகை அலங்காரக் கலைஞர் 133 00:06:29,848 --> 00:06:31,558 கேட் ரீட் தோட்ட நிலையம் 134 00:06:35,938 --> 00:06:37,648 வைல்ட் ஸ்வான்ஸ் 135 00:06:39,775 --> 00:06:40,692 இல்லை, இது எரிச்சலூட்டுகிறது. 136 00:06:40,692 --> 00:06:42,778 சரி, வேறு எப்படி விழுங்குவது என்று எனக்குத் தெரியவில்லை. 137 00:06:42,778 --> 00:06:43,904 நிச்சயமாக, இது எரிச்சலூட்டுகிறது. 138 00:06:47,991 --> 00:06:49,618 - அழகாக இருக்கு. - ஆம். 139 00:06:55,999 --> 00:06:57,918 - நியாயமான விலைதான். - விலை அதிகம். 140 00:06:59,419 --> 00:07:00,504 அட, என்ன. வாங்கு. 141 00:07:00,504 --> 00:07:03,215 இல்லை, அதைத் திரும்ப உடுத்தவே மாட்டேன். 142 00:07:06,593 --> 00:07:08,846 - நான் உன்னை ஒன்று கேட்கலாமா? - கேளு. 143 00:07:08,846 --> 00:07:10,806 நீயும் ஸ்காட்டும் எவ்வளவு நேரம் சேர்த்து இருப்பீர்கள்? 144 00:07:10,806 --> 00:07:13,809 - வாரத்திற்கு நான்கு அல்லது ஐந்து மாலைப் பொழுது. - உண்மையாகவா? 145 00:07:14,893 --> 00:07:17,145 இப்போதெல்லாம் நாங்கள் எப்போதாவதுதான் ஒரே அறையில் இருப்போம். 146 00:07:17,145 --> 00:07:20,065 ஆம். நினைவில்கொள், எங்கள் வீடு, உன் வீட்டை விடப் பெரியது. 147 00:07:20,566 --> 00:07:22,651 உன் வீட்டிலேயே நீங்கள் வெவ்வேறு அறையில் இருந்தாலும், 148 00:07:22,651 --> 00:07:23,986 நாங்கள் ஹாலின் எதிரெதிர் பக்கம் இருப்பதைவிட, 149 00:07:23,986 --> 00:07:25,779 நீங்கள் நெருக்கமாகத்தான் இருப்பீர்கள். 150 00:07:25,779 --> 00:07:29,241 ஆம். இல்லை, அந்த விதத்தில் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். 151 00:07:40,294 --> 00:07:42,045 சரி. நான் இதை வாங்கப் போகிறேன். 152 00:07:43,672 --> 00:07:47,176 நான் இதை வாங்கி, லேபிளை கிழிக்காமல், திங்கட்கிழமை திருப்பிக் கொடுத்துவிடுவேன். 153 00:07:47,968 --> 00:07:51,346 வேர்க்கக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். இன்றிரவு என் குழந்தைகளைப் பார்த்துக்கொள்கிறாயா? 154 00:07:51,346 --> 00:07:53,182 - என்ன? - ப்ளீஸ். 155 00:07:53,182 --> 00:07:54,766 அவர்களுக்கு அது தேவையா என்ன? 156 00:07:54,766 --> 00:07:56,310 வந்து, அவர்கள் வளர்ந்துவிட்டார்கள். 157 00:07:56,810 --> 00:07:58,812 இப்போது ஸ்டீவி தன் பள்ளி சீருடையைத் தானே இஸ்திரி போடுகிறாள். 158 00:07:59,313 --> 00:08:01,690 தன் பற்களைத் தானே பராமரித்துக்கொள்கிறாள். 159 00:08:01,690 --> 00:08:03,525 ஆம். நீ சொல்லிவிட்டாய். 160 00:08:05,194 --> 00:08:06,695 பிரின்சஸ் இப்போது மனதளவில் பலவீனமாக இருக்கிறாள், 161 00:08:06,695 --> 00:08:09,031 இப்படி இருக்கும் போது, தனியாக இருக்கணும் என நினைக்கிறாள். 162 00:08:09,031 --> 00:08:11,158 ஆனால், அவள் அப்படி இருக்கக் கூடாது என எனக்குத் தெரியும், கரேன். 163 00:08:13,660 --> 00:08:15,370 - சம்மதிக்கிறேன். - ஆம். 164 00:08:16,622 --> 00:08:18,707 ஆக, இரவு டேட்டிங்கிற்கு, ஜேசன் உன்னை எங்கே அழைத்துச் செல்கிறாரா? 165 00:08:18,707 --> 00:08:21,001 இல்லை. ஜேசன் இல்லை. ஜார்ஜ். 166 00:08:23,045 --> 00:08:24,046 ஜார்ஜா? 167 00:08:26,381 --> 00:08:28,050 ஆம், கண்டிப்பாக ருசியாகத்தான் இருக்கு. 168 00:08:30,177 --> 00:08:32,804 அடுத்த முறை பார்மின்ஜானோ-ரேஜியானோவை சாப்பிட்டுப் பாரு. 169 00:08:33,472 --> 00:08:36,390 அது திடமான ருசியைத் தருவதாக நான் நினைக்கிறேன், சரியா? 170 00:08:36,390 --> 00:08:39,852 ஆனால், உன் மசாலா அற்புதமாக இருக்கு. 171 00:08:41,980 --> 00:08:43,565 - இன்று உன் நாள் நன்றாக இருந்ததா? - ஆமாம். 172 00:08:43,565 --> 00:08:44,691 அப்படியா? 173 00:08:44,691 --> 00:08:46,360 உனக்குப் பிடித்த பகுதி எது? 174 00:08:47,236 --> 00:08:49,238 நான் உலகத்தை வரைந்தது. 175 00:08:49,238 --> 00:08:51,198 அட, சரிதான். சரி, என்னிடம் காண்பி. 176 00:08:51,198 --> 00:08:54,493 நாம் ஃபிரிட்ஜில் அதை ஒட்டலாம், அல்லவா? 177 00:09:01,458 --> 00:09:02,543 ஹே. 178 00:09:04,670 --> 00:09:07,339 இது என்னது? 179 00:09:12,052 --> 00:09:13,512 - என்னைப் பின்தொடருங்கள். - சரி. 180 00:09:15,764 --> 00:09:17,349 மிகவும் ஆவலாக இருக்கிறேன். 181 00:09:18,725 --> 00:09:21,186 - நான் பயங்கரமாகத் தெரிகிறேனா? - பொறு. இது எனக்குத் தெரியும். 182 00:09:21,186 --> 00:09:23,188 - என் உடை உனக்குப் பிடித்திருக்கா? - நீ... ஆமாம். 183 00:09:23,188 --> 00:09:25,023 இந்த உடையில் எனக்கு எப்போதுமே உன்னைப் பிடிக்கும். 184 00:09:26,608 --> 00:09:29,736 ஹலோ, ஆம், ஜார்ஜ் என்ற பேரில் முன்பதிவு இருக்க வேண்டுமே? 185 00:09:30,988 --> 00:09:33,907 - இருக்கு. என்னைப் பின்தொடருங்கள். - சரி, நன்றி. 186 00:09:36,618 --> 00:09:38,662 ஜேஸ். அவரைப் பாரேன். 187 00:09:39,955 --> 00:09:42,499 நம் டேட்டிங்கிற்கு அவர் எப்படி உடை அணிந்து வந்திருக்கிறார் என்று பாரேன். 188 00:09:42,499 --> 00:09:44,209 திரும்பச் சொல்கிறேன், இது நம் டேட்டிங் அல்ல. 189 00:09:46,211 --> 00:09:49,006 ஹலோ, ஜார்ஜ். பெவ்வைச் சந்திக்க இங்கு வந்தீர்களா? 190 00:09:49,673 --> 00:09:51,008 ஹே, ஹலோ. 191 00:09:51,800 --> 00:09:54,761 உன் புகைப்படம் உன் அழகிற்கு நியாயம் சேர்க்கவில்லை என நான் சொல்லலாமா? 192 00:09:54,761 --> 00:09:58,765 இல்லை. நன்றி. இல்லை, நான் பெவ்வின் தோழி, நிக்கி. 193 00:09:58,765 --> 00:10:00,100 அவங்களால் வர முடியாது. 194 00:10:01,393 --> 00:10:03,395 ஆம், அவங்களால் வர முடியவில்லை... 195 00:10:04,104 --> 00:10:06,398 வருந்துகிறேன், ஜார்ஜ். பெவ் இறந்துவிட்டாங்க. 196 00:10:07,816 --> 00:10:09,860 ஆனால், இன்று காலைகூட அவள் எனக்கு ஈமெயில் அனுப்பினாள். 197 00:10:10,944 --> 00:10:14,781 நான்தான் இந்த டேட்டிங்கை உறுதிப்படுத்தினேன்... ஏன்னா நேரில் இதை உங்களிடம் சொல்ல விரும்பினோம். 198 00:10:14,781 --> 00:10:15,949 மிகவும் வருந்துகிறேன். 199 00:10:16,700 --> 00:10:17,701 அவள் இறந்துவிட்டாளா? 200 00:10:17,701 --> 00:10:19,411 - ஆமாம். - இரண்டு வாரங்களுக்கு முன், நண்பா. 201 00:10:19,411 --> 00:10:20,537 ஆம். ஆம், அவங்க இறந்துட்டாங்க. 202 00:10:20,537 --> 00:10:25,167 சரி... எங்களுடைய வயதிற்கான, வாழ்வின் உண்மை. 203 00:10:25,834 --> 00:10:29,087 அதனால்தான் நான் ஒரு வாரத்துக்குள்ளேயே எப்போதும் சந்திப்பை உறுதி செய்வேன். 204 00:10:29,588 --> 00:10:31,256 - உங்கள் ஷாம்பெயின், சார். - என்னுடன் சேர்ந்து கொள்கிறாயா? 205 00:10:31,965 --> 00:10:32,799 அது... 206 00:10:32,799 --> 00:10:34,426 இல்லை, நாங்கள் கிளம்ப வேண்டும். 207 00:10:34,426 --> 00:10:37,054 அழகான பெண்கள் அருந்துவதற்காகவே ஷாம்பெயின் தயாரிக்கப்படுகிறது. 208 00:10:37,054 --> 00:10:38,972 ஐயோ. 209 00:10:38,972 --> 00:10:40,807 இப்போது, நான் சற்று சோர்வாக இருக்கிறேன். 210 00:10:41,308 --> 00:10:45,145 இங்கு புகைப் பிடிக்கக் கூடாது, ஆனால் நீ நெருப்பு மூட்டிவிடுவாய் போல. 211 00:10:46,522 --> 00:10:47,356 சரி. 212 00:10:47,356 --> 00:10:49,149 சரி, சரி. ஒரு ரவுண்ட் மட்டும் குடிக்கிறேன். 213 00:10:50,484 --> 00:10:51,485 பெவ்விற்காக. 214 00:10:51,485 --> 00:10:53,737 - பெவ். - நான்... எடுத்துக்கொள்ளவா... 215 00:10:53,737 --> 00:10:56,198 ஜேஸ், போய் ஒரு நாற்காலி கொண்டு வா. கடினமாக நடந்துகொள்ளாதே. 216 00:10:57,032 --> 00:10:58,283 நான் எங்கு போவது? 217 00:10:58,784 --> 00:11:01,620 சரி. அரை மணிநேரத்தில் பீட்ஸா வரும், பிள்ளைகளே. 218 00:11:01,620 --> 00:11:02,579 சரி. 219 00:11:02,579 --> 00:11:05,582 டைலர். இந்தளவு தூரத்திலிருந்து பார்த்தால், உன் கண்கள் கெட்டுவிடும். 220 00:11:06,166 --> 00:11:07,084 சரி. 221 00:11:09,169 --> 00:11:10,003 நன்றி. 222 00:11:10,003 --> 00:11:12,047 பரவாயில்லை. சரி, நாம் என்ன செய்வது? 223 00:11:12,881 --> 00:11:15,676 கடவுளே. எனக்குத் தெரியாது. நான் குழந்தைகளைப் பார்த்துக்கொண்டு ரொம்ப காலம் ஆகிவிட்டது. 224 00:11:17,469 --> 00:11:19,054 அதாவது, போன முறை நாங்கள் மில்க் ஷேக் செய்தோம், 225 00:11:19,054 --> 00:11:21,014 மற்றும் கூடத்தில் போர்வை கோட்டை கட்டினோம். 226 00:11:21,014 --> 00:11:23,225 நீங்கள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நான் குழந்தை அல்ல. 227 00:11:23,225 --> 00:11:24,393 இல்லை, பரவாயில்லை. 228 00:11:25,644 --> 00:11:28,730 என் மகளை பிடிக்கும்தான், ஆனால், சில சமயம் ஐந்து வயது இல்லாதவருடன் பேசுவது நல்லா இருக்கும். 229 00:11:28,730 --> 00:11:31,984 மொசார்ட் தன் முதல் சிம்ஃபனியை ஐந்து வயதில் எழுதினார், எனவே... 230 00:11:31,984 --> 00:11:35,320 சரி, மொசார்ட்தான் நம் எல்லா பிரச்சினைக்கும் காரணம். 231 00:11:37,614 --> 00:11:39,658 ஐந்து வயது என்பது கடினமான வயதா? 232 00:11:39,658 --> 00:11:42,995 இல்லை. வளர்ந்தவர்களுடன் பேசுவது நன்றாக இருக்கும் என்றுதான் சொல்ல வந்தேன். 233 00:11:46,957 --> 00:11:47,958 நீ நலமா? 234 00:11:52,045 --> 00:11:56,383 - சரி, அது வந்து... - ஐந்து வயதில் அம்மா என்னை விட்டுச் சென்றார். ஆம். 235 00:11:57,676 --> 00:11:58,677 சரி. 236 00:12:04,808 --> 00:12:09,938 எப்போதாவது நீ யாரிடமாவது பேச விரும்பினால், என்னிடம் பேசு, நான் யாரிடமும் சொல்ல மாட்டேன். 237 00:12:11,607 --> 00:12:14,693 எனக்கு ஞாபக மறதி அதிகம், அதோடு நண்பர்களும் குறைவு. 238 00:12:16,820 --> 00:12:17,821 சரி. 239 00:12:25,287 --> 00:12:26,538 அதை அங்கே என்னவென்று அழைப்பார்கள்? 240 00:12:26,538 --> 00:12:28,081 - இதையா? - ஆமாம். 241 00:12:28,790 --> 00:12:30,250 இது ஸ்வெட்ஷர்ட். 242 00:12:31,376 --> 00:12:34,004 சரி. சௌகரியமானது. 243 00:12:34,004 --> 00:12:35,255 ஆமாம். 244 00:12:35,255 --> 00:12:37,841 இது போன்ற ஒன்றை நான் அணிந்திருக்கிறேன் என நினைக்கிறேன். 245 00:12:38,467 --> 00:12:39,801 நான் கொலோனாஸ்கொபி செய்திருந்தேன் 246 00:12:39,801 --> 00:12:43,096 அப்போது, நான் மயக்க நிலையில் இருந்தபோது என் மகள் இதை எனக்கு மாட்டிவிட்டாள். 247 00:12:47,476 --> 00:12:48,644 - சரி, நாம்... - ஹலோ. 248 00:12:48,644 --> 00:12:50,229 நாங்கள் கிளம்ப வேண்டும், சரிதானே? 249 00:12:50,229 --> 00:12:53,649 இந்த அருமையான மாலை நேரத்திற்காக, உங்கள் இருவருக்கும் நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 250 00:12:54,149 --> 00:12:56,693 இதையாவது செய்ய முடிந்ததை நினைத்து நான் மகிழ்ச்சியடைக்கிறேன். 251 00:12:56,693 --> 00:12:59,363 ஓ, ஜார்ஜ், வேறு ஏதாவது திட்டம் போட்டிருந்தீர்களா? 252 00:12:59,905 --> 00:13:01,448 இது டேட்டிங்க் என்று நினைத்தாயா? 253 00:13:01,448 --> 00:13:04,243 ஓ, என் அன்பே, என் மருந்து வேலை செய்யத் துவங்கியது. 254 00:13:06,912 --> 00:13:09,665 - சரி, நேரமாகிறது, எனவே... - ஜார்ஜ். 255 00:13:09,665 --> 00:13:12,501 - இடம் குறைவாக இருப்பதற்கு மன்னிக்கவும். - சரி. 256 00:13:12,501 --> 00:13:13,836 என்னை எங்கே கூட்டிச் செல்கிறீர்கள்? 257 00:13:17,631 --> 00:13:20,342 இந்த மருள்மாலையில் நீ அப்படியே ஜொலிக்கிறாய், அன்பே. 258 00:13:20,342 --> 00:13:23,011 - மணி 5:30தான் ஆகிறது. - கண் புரையில் இருக்கும் நல்ல விஷயமே 259 00:13:23,011 --> 00:13:27,391 அவை விஷயங்களை ஹாலிவுட்டின் பொன்னான காலம் போல பளபளப்பாக காட்டும். 260 00:13:27,975 --> 00:13:28,892 முட்டாள்! 261 00:13:28,892 --> 00:13:29,893 நீங்கள் வாகனம் ஓட்டணும் தானே, நண்பா? 262 00:13:29,893 --> 00:13:32,479 வாழ்க்கையைத் தேடி, நாம் மரணத்தை நெருங்கி வருகிறோம். 263 00:13:38,944 --> 00:13:39,862 என்ன, நீ... 264 00:13:40,654 --> 00:13:42,364 லண்டனிலுள்ள எல்லா கேட் ரீட்டையும் நீ போய் பார்த்தாயா? 265 00:13:42,364 --> 00:13:44,491 இல்லை, ஒரு பரிசோதனை செய்தேன். 266 00:13:45,284 --> 00:13:47,870 அது நன்றாக போகவில்லை. ஒரு பெண்ணின் பாட் மிட்ஸ்வாவை கெடுத்துவிட்டேன். 267 00:13:50,706 --> 00:13:51,707 ஏன் இப்போது செய்கிறாய்? 268 00:13:51,707 --> 00:13:54,001 அதாவது, இவ்வளவு காலத்திற்கு பிறகு. 269 00:13:54,668 --> 00:13:56,753 பெவ் இறந்தபோது அவங்க வருவாங்க என நினைத்தேன். 270 00:13:58,046 --> 00:13:59,548 அவங்க வரவில்லை என்றதும், இனி வர மாட்டாங்க, நான்தான் 271 00:13:59,548 --> 00:14:00,799 அவங்களை கண்டுப்பிடிக்கணும் என்றும் அறிந்தேன். 272 00:14:00,799 --> 00:14:02,551 ஜேசனிடமும் நிக்கியிடமும் சொன்னாயா? 273 00:14:02,551 --> 00:14:04,469 இல்லை, நிக்கி மிகவும் வருத்தப்படுவாங்க. 274 00:14:04,469 --> 00:14:06,847 அவள் எப்பவுமே அப்படித்தான். 275 00:14:07,556 --> 00:14:11,185 நீ அதைவிட்டு வெளியே வர வேண்டும். திருவிழா கோலத்தில் இருக்கும் இடத்தில் வாழ்வது போல. 276 00:14:11,185 --> 00:14:14,646 இல்லை, எப்படியோ எல்லாம் முடிந்துவிட்டது, என்னால் அவங்களை கண்டுப்பிடிக்க முடியலை. 277 00:14:17,357 --> 00:14:19,610 ஓ, பிரின்சஸ். இங்கே வா. 278 00:14:25,532 --> 00:14:26,950 சரி, நான் என்ன செய்யணும்? 279 00:14:30,537 --> 00:14:32,497 {\an8}டான்ஸ் ரிவொலி பால்ரூம் கிளப் 280 00:14:35,209 --> 00:14:36,627 மீண்டும் வருக, சார். மேடம். 281 00:14:38,545 --> 00:14:41,131 மன்னிக்கவும், சார். பால் நடனத்தில் கலந்துகொள்ள உங்களிடம் ஜாக்கெட் இருக்க வேண்டும். 282 00:14:41,131 --> 00:14:42,216 என்னிடம் அது இல்லை. 283 00:14:42,216 --> 00:14:46,386 தகுந்த ஆடையில்வராத விருந்தினருக்கு நாங்கள் ஒரு ஜாக்கெட் வைத்திருக்கிறோம். 284 00:14:57,064 --> 00:14:59,816 நான் அணிந்திருந்த ஆடையைவிட இது நன்றாக இருக்கிறதா? 285 00:14:59,816 --> 00:15:00,901 ஆமாம். 286 00:15:00,901 --> 00:15:02,569 - ஆம். - ஓ, ஆமாம். ரொம்பவே. 287 00:15:02,569 --> 00:15:03,654 நன்றாக உள்ளது. 288 00:15:11,078 --> 00:15:13,622 பெரியோர்களே தாய்மார்களே, உங்கள் ஜோடியை மேடைக்கு அழைத்து வாருங்கள். 289 00:15:13,622 --> 00:15:15,499 குயிக்ஸ்டெப் தான் அடுத்த நடனம். 290 00:15:24,383 --> 00:15:25,425 சியர்ஸ், நண்பா. 291 00:15:38,105 --> 00:15:39,565 பதறாதே. சரி. 292 00:15:39,565 --> 00:15:42,317 - குயிக்ஸ்டெப் ஆடுவது கஷ்டம். - அப்படியா? 293 00:15:45,612 --> 00:15:46,613 அவர் மிகவும் இனிமையானவர். 294 00:15:46,613 --> 00:15:50,075 - அவர் ஜெர்மனிக்கு எதிரான ஜோக் சொன்னார். - ஆனால் அவர் முரண்பாடாக சொன்னதாக நினைக்கிறேன். 295 00:15:50,576 --> 00:15:52,327 - அவர் சாடையாக பேசினார் என நினைக்கிறேன். - சரி. 296 00:15:52,327 --> 00:15:53,579 ஜேஸ், அவர் ஹீல் ப்ரொடெக்டர்களை கொண்டு வந்தார். 297 00:15:53,579 --> 00:15:56,206 இதுவரை அவர் சந்திக்காத ஒரு பெண்ணிற்காக அவர் ஹீல் ப்ரொடெக்டர்களை கொண்டு வந்தார். 298 00:15:56,999 --> 00:16:00,127 அந்த நம்பிக்கை. அந்த அர்ப்பணிப்பு. 299 00:16:00,127 --> 00:16:03,255 முன்பு டேட் என்பது ஒரு நிகழ்வாக இருந்தது. நாம் ஒரு நபரை ஈர்ப்போம். 300 00:16:03,255 --> 00:16:05,174 இது ஈர்ப்பதைப் பற்றிய விஷயம் தானே? 301 00:16:05,174 --> 00:16:09,344 நம்மை ஈர்த்தவர் எவராக இருந்தாலும் நம்முடன் உறவுகொள்ளதான் முயற்சி செய்வார். 302 00:16:09,344 --> 00:16:10,345 - இல்லை. - ஆமாம். 303 00:16:10,345 --> 00:16:13,015 அடுத்தவரைச் சிறப்பாக உணர வைப்பதே உண்மையான ஈரப்பாகும். 304 00:16:13,015 --> 00:16:14,433 நான்... 305 00:16:15,017 --> 00:16:16,685 என்ன? என்ன நடந்தது? 306 00:16:16,685 --> 00:16:18,395 - இது ஒரு வால்ட்ஸ். - அப்படியென்றால் போ. 307 00:16:29,031 --> 00:16:30,073 அவள் திருமணமானவள் என கேள்விப்பட்டேன். 308 00:16:43,212 --> 00:16:45,589 - நன்றி. - பரவாயில்லை. 309 00:16:50,093 --> 00:16:53,388 ஆம்! அதேதான். வெளியே கேட்கும் அளவிற்கு மூச்சுவிட வேண்டிய அவசியமில்லை. 310 00:16:53,388 --> 00:16:54,515 எனக்குத் தெரியும். 311 00:16:55,015 --> 00:16:56,558 அவள் என்ன செய்கிறாள் என்றே புரியவில்லை. 312 00:17:02,064 --> 00:17:03,774 உன் கையில் வியர்வை அதிகமாக உள்ளது. 313 00:17:03,774 --> 00:17:05,317 அது, நீங்கள் அழுத்திப் பிடிப்பதால்தான். 314 00:17:05,317 --> 00:17:08,612 உனக்கு இவ்வளவு வியர்வை வரவில்லை என்றால், நான் அப்படி செய்ய மாட்டேன். 315 00:17:08,612 --> 00:17:11,323 முதலில் கோழி வந்ததா அல்லது முட்டை வந்ததா என்ற நிலைக்கு வந்துவிட்டோம், சில்வி. 316 00:17:12,824 --> 00:17:15,160 ஜார்ஜ் எப்படி கட்டளைகளையிடுகிறார் என்று பாரேன். 317 00:17:16,078 --> 00:17:18,288 என்னவொரு மென்மையான ஆதிக்கம். 318 00:17:20,040 --> 00:17:23,794 - அவர் நடனமாடுவது போல உறவுகொள்வார். - சரி. 319 00:17:29,591 --> 00:17:30,592 என்ன? 320 00:17:31,134 --> 00:17:32,261 எதுவுமில்லை. 321 00:17:33,053 --> 00:17:36,181 - சரி, நீ ஏதாவது சொல்ல நினைத்தால்... - நாம் வீட்டிற்குச் செல்வோமா? 322 00:17:58,328 --> 00:17:59,246 ஜார்ஜ்? 323 00:18:01,498 --> 00:18:03,959 ஜார்ஜ்? நாம் நின்றுவிட்டோம். 324 00:18:05,544 --> 00:18:07,379 சரிதான். வீட்டிற்கு வந்துவிட்டோமா? 325 00:18:07,379 --> 00:18:10,090 இல்லை, வண்டி நின்றுவிட்டது என நினைக்கிறேன். 326 00:18:11,175 --> 00:18:12,885 இது வழக்கமான விஷயம்தான். 327 00:18:16,847 --> 00:18:17,848 அவர்... 328 00:18:21,852 --> 00:18:24,146 நான் உன்னிடம் ஜப்பானியர்களைப் பற்றிய என் கோட்பாட்டை சொன்னேனா? 329 00:18:34,573 --> 00:18:37,159 ஹேய். நீ ஏன் தூங்கவில்லை? 330 00:18:40,537 --> 00:18:45,167 உனக்கு ஒன்றுமில்லையே? விளக்கை எறிய விடவா? எனவே, இருட்டு கொஞ்சம் குறைந்து விடுமே? 331 00:18:46,293 --> 00:18:48,629 காலநிலை அவசரம் என்றால் என்ன? 332 00:18:49,838 --> 00:18:51,089 அதை எங்கே கேள்விப்பட்டாய்? 333 00:18:53,550 --> 00:18:55,469 {\an8}இனிய பூமி தின வாழ்த்துகள் இந்த பூமி தினத்தன்று நீங்கள் என்ன செய்வீர்கள்? 334 00:18:59,806 --> 00:19:02,518 விளக்கைப் போட்டால், அது விலங்குகளுக்கு ஆபத்தானது. 335 00:19:02,518 --> 00:19:04,228 இல்லை, பரவாயில்லை என நினைக்கிறேன். 336 00:19:07,064 --> 00:19:08,065 சரி. 337 00:19:08,732 --> 00:19:09,733 சரி, கேளு. 338 00:19:09,733 --> 00:19:12,194 நீ அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. 339 00:19:12,194 --> 00:19:14,863 இதெல்லாம் சரியாக உள்ளதா என பார்ப்பதற்கு வெளியேரொம்ப நிறைய பேர் 340 00:19:14,863 --> 00:19:17,658 - கடினமாக உழைக்கிறார்கள். - நீங்கள்? 341 00:19:20,327 --> 00:19:23,205 நாம் எல்லோரும் நிறைய முயற்சியை செய்யப் போகிறோம். 342 00:19:23,789 --> 00:19:27,209 வெள்ளப்பெருக்கு வரும்போது, விலங்குகள் மூழ்கிவிடுமா? 343 00:19:30,003 --> 00:19:31,213 உனக்கு கதை படித்து காட்டட்டுமா? 344 00:19:32,464 --> 00:19:35,884 சரியா? சரி. என்ன உள்ளது? 345 00:19:36,677 --> 00:19:38,637 {\an8}“ஹூ டுக் மை ட்ரீ”. சரி. 346 00:19:40,681 --> 00:19:41,849 த ஸ்க்விரெல் ஹூ... 347 00:19:42,724 --> 00:19:43,892 த லாஸ்ட் போலார் பெர் 348 00:19:44,476 --> 00:19:45,394 சரி. 349 00:19:48,105 --> 00:19:49,565 நான் போய் மிஸஸ் டிக்கி விங்கிள்-ஐ எடுக்கவா? 350 00:19:50,148 --> 00:19:54,027 சரியா? போருக்கு முன்பு உள்ள கதையை வாசிப்போமா? சரியா? சரி. 351 00:20:16,341 --> 00:20:17,509 சரி. 352 00:20:19,094 --> 00:20:20,262 என்னால் தனியாகத் தள்ள முடியாது. 353 00:20:20,262 --> 00:20:21,555 அவருக்கு 76 வயதாகிறது. 354 00:20:22,139 --> 00:20:23,432 உன்னால் தள்ள முடியும் என நினைத்தேன். 355 00:20:23,432 --> 00:20:25,392 இல்லை, நான் தள்ள மாட்டேன். அழுக்காகிவிடுவேன். 356 00:20:25,392 --> 00:20:26,476 அப்போ சரி. 357 00:20:28,061 --> 00:20:31,690 சரி. சரி, இரவு முழுவதும் இங்கேயே அமர்ந்திருப்போமா? 358 00:20:32,399 --> 00:20:35,027 நீங்கள் என்னுடன் நேரம் செலவழிக்க வேண்டியிருக்கும். அதற்கு மன்னிக்கவும். 359 00:20:35,027 --> 00:20:36,111 கெட்ட கனவு. 360 00:20:37,905 --> 00:20:41,450 ஜார்ஜ்? ஜார்ஜ், உங்களது காது கேட்கும் கருவியை கொஞ்ச நேரத்திற்கு நிறுத்த முடியுமா? 361 00:20:41,450 --> 00:20:44,620 - நாங்கள்... கொஞ்சம் பேச வேண்டும். - சரி, நிச்சயமாக. 362 00:20:46,538 --> 00:20:48,040 இப்போது நீ பேசுவது எனக்குக் கேட்காது, அன்பே. 363 00:20:49,833 --> 00:20:50,876 இரவில் நாம் பார்த்துகொள்ளக் கூட இல்லை. 364 00:20:50,876 --> 00:20:53,170 ஹேய், வந்து... நான் கொஞ்சம் வேறு சிந்தனையில் இருந்திருக்கலாம், 365 00:20:53,170 --> 00:20:57,382 ஆனால், உண்மையாகவே முயற்சி எடுத்தவருடன் நேரம் செலவழித்தது நன்றாக இருந்தது. 366 00:20:57,382 --> 00:21:00,636 நான் அழகாகவும், வசீகரமாகவும் இருப்பதாக, மக்கள் என்னிடம் சொல்வார்கள் தெரியுமா? 367 00:21:00,636 --> 00:21:02,804 ஆமாம், நீ உயரமாக இருப்பதால், பெண்கள் குழப்பமடைகிறார்கள். 368 00:21:02,804 --> 00:21:04,139 அதோடு நான் முயற்சியும் எடுத்தேன். 369 00:21:04,139 --> 00:21:06,183 சோஃபாவில் உட்கார்ந்து, இடது பக்கமாக தலையை திருப்புவது ஒன்றும் 370 00:21:06,183 --> 00:21:07,809 முயற்சி எடுப்பது என்றாகிவிடாது, ஜேஸ். 371 00:21:07,809 --> 00:21:09,978 அங்கே தங்கி, கதகதப்பாக இருப்பது உனக்கு பிடிக்கும் என நினைத்தேனே? 372 00:21:09,978 --> 00:21:11,772 - என்ன சொல்கிறாய்? - ஆம், எனக்கு பிடிக்கும்தான். 373 00:21:12,439 --> 00:21:13,690 நிச்சயமாக எனக்கு பிடிக்கும், ஆனால்... 374 00:21:14,775 --> 00:21:18,820 அந்த வீடு, அதில்... முன்பெல்லாம், நாம் இருவர் மட்டுமே இருப்போம். 375 00:21:18,820 --> 00:21:21,615 இப்போது அந்த வீட்டில் உள்ள பொருட்கள் போல ஆகிவிட்டோம். 376 00:21:21,615 --> 00:21:24,243 நாம் மீண்டும் இருவராகும்படி, வேறு இடத்திற்கு செல்ல வேண்டும். 377 00:21:24,243 --> 00:21:27,871 நம்மை சாதாரண மனிதர்களாக உணர வைக்கும் இடத்திற்குச் செல்ல வேண்டும். 378 00:21:27,871 --> 00:21:31,041 நான் ஏதோ ஒரு பின்னணி இசை அல்ல, ஜேஸ். 379 00:21:32,000 --> 00:21:36,588 - நீ என்னை பார்க்கும்படி விரும்புகிறேன். - அட, இந்த வார்த்தைகள்தான், நிக்கி. 380 00:21:37,506 --> 00:21:38,507 சரி. 381 00:21:39,258 --> 00:21:41,426 ஜார்ஜ்? ஜார்ஜ், நீங்கள் உங்களுடைய... 382 00:21:45,472 --> 00:21:48,559 நான் உங்களுக்கு குறுக்கே வந்துவிட்டேனோ என தோன்றுகிறது. நான் உதவலாமா? 383 00:21:48,559 --> 00:21:51,103 இல்லை, வேண்டாம், நண்பா, ஆனால் நன்றி. 384 00:21:51,103 --> 00:21:54,773 லிண்டாவுடன் எனக்கு திருமணமாகி 43 ஆண்டுகள் ஒன்றாக இருந்தோம். எனக்கும் சில விஷயங்கள் தெரியும். 385 00:21:55,566 --> 00:21:57,150 லிண்டாவிற்கு என்ன ஆச்சு, ஜார்ஜ்? 386 00:21:57,985 --> 00:21:59,695 நான் அவளை இழந்துவிட்டேன். அவள் இறந்துவிட்டாள். 387 00:22:01,738 --> 00:22:02,865 ரொம்ப வருத்தப்படுகிறேன், ஜார்ஜ். 388 00:22:02,865 --> 00:22:03,949 வருந்துகிறேன், நண்பா. 389 00:22:05,325 --> 00:22:06,785 எப்படி சந்தித்தீர்கள் எனசொல்லுங்கள். 390 00:22:17,254 --> 00:22:19,840 நாங்கள் 13 ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்தோம். 391 00:22:21,258 --> 00:22:22,259 அப்புறம்... 392 00:22:23,844 --> 00:22:28,515 நாங்கள் முத்தமிட்ட முதல் முறையே, “அவ்வளவுதான்” என நினைத்தேன். 393 00:22:29,808 --> 00:22:32,144 “இனி நான் நிர்வாணமாகப் பார்க்கப் போகும் கடைசி மனிதர் இவர்தான்.” 394 00:22:34,563 --> 00:22:36,481 அந்த நேரத்தில் நான் வேறு ஒருவருடன் பழக்கத்தில் இருந்தேன், 395 00:22:36,481 --> 00:22:38,275 எனவே, எனக்கு அதே எண்ணம் தோன்றவில்லை. 396 00:22:38,275 --> 00:22:39,735 சரி. சரி, ஜேஸ், சரி. 397 00:22:39,735 --> 00:22:42,362 - நீ... - அவள் மீது ரொம்ப ஆர்வத்தில் இருந்தேன், ஜார்ஜ். 398 00:22:42,863 --> 00:22:44,698 அப்படி ஒரு அதிகப்படியான ஆர்வம். 399 00:22:44,698 --> 00:22:46,575 அதாவது, அவளைப் பற்றிய அனைத்தையும் அறிய விரும்பினேன். 400 00:22:46,575 --> 00:22:48,785 அவளுடைய இரத்த வகை என்ன என்பதை அறிய விரும்பினேன். 401 00:22:48,785 --> 00:22:52,998 பாப்ரிக்கா எனக்கும் இவளுக்கும் ஒரே மாதிரி சுவைத்ததா என அறிய விரும்பினேன். 402 00:22:54,291 --> 00:22:57,336 அவளுடைய தொடக்கப் பள்ளி வகுப்பறையின் அமைப்பை அறிய விரும்பினேன். 403 00:22:59,922 --> 00:23:01,548 அப்புறம் இப்பவும் அவள் மீது ஆர்வத்துடன் இருக்கிறேன். 404 00:23:02,716 --> 00:23:03,717 அவளை சார்ந்த அனைத்திலும். 405 00:23:05,010 --> 00:23:07,429 அதாவது, கையெழுத்தைக்கூட நான் அவ்வளவு விரும்பினேன். 406 00:23:10,182 --> 00:23:12,809 சரி. நல்லது. 407 00:23:14,478 --> 00:23:17,314 இப்படி ஒருவர் நம் வாழ்வில் இருப்பது ஒரு ஆசீர்வாதம். 408 00:23:26,365 --> 00:23:27,366 ஆமாம். 409 00:23:29,535 --> 00:23:33,455 ஆனால் எப்போதும் உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கணும் என்ற கவனத்திலேயே இருக்க மாட்டேன். 410 00:23:33,455 --> 00:23:34,915 ஏனென்றால்... 411 00:23:37,167 --> 00:23:38,544 நீ இப்போது ஒரு உணர்வு. 412 00:23:40,504 --> 00:23:42,005 என்ன மாதிரியான உணர்வு? 413 00:23:43,799 --> 00:23:45,259 இதமான ஒளி போல. 414 00:23:59,231 --> 00:24:01,483 இப்போது, இந்த காரைத் தள்ள எனக்கு உதவ முடியுமா? 415 00:24:01,483 --> 00:24:04,528 இல்லை, முடியாது. எனது உடை பாழாகிவிடும். 416 00:24:05,362 --> 00:24:07,406 லேபிளை உள்ளே வைத்திருக்கிறேன். அதைத் திருப்பித் தரப் போகிறேன். 417 00:24:07,406 --> 00:24:08,615 என்ன? எதற்காக? 418 00:24:08,615 --> 00:24:12,369 ஏனென்றால், நான் இதை மீண்டும் அணிய மாட்டேன், இல்லையா? 419 00:24:12,369 --> 00:24:13,453 சரி பார்ப்போம். 420 00:24:15,289 --> 00:24:17,249 பொறு, இல்லை, நீ என்ன... ஜேஸ்? 421 00:24:17,249 --> 00:24:18,584 எதற்காக இப்படிச் செய்தாய்? 422 00:24:18,584 --> 00:24:21,253 நீ இதை அணியும்படி நாம் பார்த்துக்கொள்வோம். சரியா? 423 00:24:24,047 --> 00:24:25,048 சரி. 424 00:24:30,429 --> 00:24:31,555 சரி, அப்படின்னா, வாயேன். 425 00:24:33,557 --> 00:24:34,474 சரி. 426 00:24:34,474 --> 00:24:35,559 - தயாரா? - சரி. 427 00:24:35,559 --> 00:24:39,188 - தயாரா? ஒன்று, இரண்டு, மூன்று, போ. - சரி. இரண்டு, மூன்று... 428 00:24:39,188 --> 00:24:40,522 தள்ளு. இதோ. 429 00:24:41,190 --> 00:24:42,858 - ஆன் பண்ணுங்கள்! - சரி. 430 00:24:42,858 --> 00:24:44,860 தயாரா? செல்வோம்! 431 00:24:44,860 --> 00:24:46,945 வந்துவிட்டோம். கிளம்புங்கள், கிளம்புங்கள். 432 00:24:49,698 --> 00:24:51,617 என்ன... விளையாடுகிறீர்களா? 433 00:24:51,617 --> 00:24:56,455 சரி, இரவு உணவிற்கு செரஃபினாவில் சாப்பிட்டு, பிறகு நடனமாட ரிவொலி பால்ரூமிற்கு செல்வோம்! 434 00:25:13,931 --> 00:25:15,974 பால் 435 00:25:18,227 --> 00:25:20,062 அன்புள்ள பெவ், நாளை இரவு நீ வர விரும்புகிறாயா? 436 00:25:20,062 --> 00:25:21,897 ஐயோ. 437 00:25:50,384 --> 00:25:52,427 அன்புள்ள பால், உங்களைச் சந்திக்க ஆவலாக இருக்கிறேன் 438 00:25:53,720 --> 00:25:55,013 கிரிஸ் - டேவ் - கிரஹாம் - டிம் 439 00:25:55,013 --> 00:25:56,640 அடச்சே, பெவ். 440 00:26:00,727 --> 00:26:03,689 {\an8}மன்னிக்கவும் அவங்க இறந்துவிட்டாங்க 441 00:26:07,109 --> 00:26:08,277 டேவுக்கு விரைவான பதில் 442 00:26:08,277 --> 00:26:09,361 கிரஹாமுக்கு விரைவான பதில் 443 00:26:09,361 --> 00:26:10,445 டிம்மிற்கு விரைவான பதில் 444 00:26:28,964 --> 00:26:32,092 கேரன் அவர்களுக்காக போர்வையால் ஒரு கோட்டையைக் கட்டிக் கொடுத்ததை என்னால் நம்ப முடியவில்லை. 445 00:26:33,802 --> 00:26:36,054 பதின்ம வயதினருக்கு என்ன நடக்கிறது என்றே அவளுக்குத் தெரியவில்லை. 446 00:26:36,763 --> 00:26:37,723 எதுவுமே தெரியவில்லை. 447 00:27:41,286 --> 00:27:43,288 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்