1 00:00:12,012 --> 00:00:13,013 ஹே. 2 00:00:15,015 --> 00:00:16,015 ஜேசன். 3 00:00:18,268 --> 00:00:19,269 ஜேசன். 4 00:00:20,270 --> 00:00:21,522 ஜேசன். 5 00:00:23,232 --> 00:00:24,608 நீ முழிச்சிட்டியா? 6 00:00:25,108 --> 00:00:26,485 - என்ன? - இல்ல, நான்… 7 00:00:26,568 --> 00:00:27,569 நான்… நான் கிளம்புறேன். 8 00:00:29,196 --> 00:00:31,281 வேலைக்குக் கிளம்புறதுக்கு முன்னாடி உன்னைப் பாக்கணும்னு தோணுச்சு. 9 00:00:31,365 --> 00:00:33,659 ஏன்? நீ என்னை எப்பவும் பாத்துட்டுத்தானே இருக்க. 10 00:00:35,077 --> 00:00:36,119 சரி, நீ தூங்கு. 11 00:00:36,203 --> 00:00:37,871 சரி. நான் தூங்கப் போறேன். 12 00:00:40,958 --> 00:00:43,544 இன்னைக்கு ஆபீஸ்ல சமீபத்திய விற்பனை கணக்கைப் பாக்கப் போறோம். 13 00:00:44,628 --> 00:00:46,421 ஹொண்டுராஸ் விற்பனை 18% அதிகமாயிருக்கு. 14 00:00:46,922 --> 00:00:48,215 ஹொண்டுராஸ் என் ஐடியாதான். 15 00:00:48,298 --> 00:00:49,299 அது நல்ல விஷயமா? 16 00:00:49,383 --> 00:00:51,051 ஆமா, நான்தான் சொன்னேனே. 17 00:00:51,552 --> 00:00:54,263 அங்க மக்கள் விடுமுறைக்கு வர்றது ரொம்பக் கஷ்டம். 18 00:00:54,346 --> 00:00:55,597 நிறையக் கொலைகள் நடக்கும். 19 00:00:55,681 --> 00:00:57,015 - வாவ். ரொம்ப நல்ல விஷயம். - வாவ். 20 00:01:03,981 --> 00:01:06,984 இந்த புது வேலையில இவ்வளவு சீக்கிரம் கிளம்புறது எனக்குப் பிடிக்கவே இல்ல. 21 00:01:08,026 --> 00:01:10,070 உன் கூட கழிக்கிற அந்த காலை நேரங்களை நான் மிஸ் பண்றேன். 22 00:01:11,446 --> 00:01:14,199 பசங்க ஒரு மணிநேரம் சீக்கிரமா எந்திரிக்க சம்மதிப்பாங்கன்னு நினைக்கிறியா? 23 00:01:14,283 --> 00:01:16,118 அப்படி நடக்கும்னு எனக்குத் தோணல, இல்ல. 24 00:01:16,201 --> 00:01:18,912 இப்போ கேட் கூட இருக்குறதால, நாம ஒரு ஒருமித்தக் குடும்பமா இருக்கோம்னு 25 00:01:18,996 --> 00:01:21,748 பிரின்சஸ் அப்புறம் டைலருக்குக் காட்டுறது ரொம்ப முக்கியம்னு நினைக்கிறேன். 26 00:01:21,832 --> 00:01:22,958 பாரு, இதப்பத்தி நாம ஏற்கனவே பேசிட்டோம். 27 00:01:23,750 --> 00:01:25,794 எதப்பத்தியும் கவலைப்படாம இருப்போம், நேரம் வரும்போது பாத்துக்கலாம். 28 00:01:25,878 --> 00:01:27,254 - சரியா? - சரி. 29 00:01:32,509 --> 00:01:33,635 இன்னைக்கு ராத்திரி பீட்ஸா பார்ட்டி வச்சுக்கலாமா? 30 00:01:33,719 --> 00:01:35,596 - நாம நாலு பேர் மட்டும்? நமக்கு பீட்ஸா பிடிக்கும். - நிக்… சரி. 31 00:01:35,679 --> 00:01:37,389 - அதை ஏற்பாடு பண்ண முடியும்னு தோணுது, சரி. - சரி, சூப்பர். 32 00:01:37,472 --> 00:01:39,183 - இப்போ நீ தூங்கு. - பை. 33 00:01:54,072 --> 00:01:55,407 கேம்டன் லாக் 34 00:02:17,513 --> 00:02:18,931 ஏன் இன்னும் துடுப்பு போட்டுட்டு இருக்கீங்க? 35 00:02:19,014 --> 00:02:21,308 அமெரிக்காவுக்குப் போகும்போது என் கை நோஞ்சான் மாதிரி இருக்கக்கூடாது. 36 00:02:21,892 --> 00:02:24,394 அட்லாண்டிக் கடலையே கடந்து வந்தவன் மாதிரி என் கை இருக்கணும். 37 00:02:25,229 --> 00:02:26,480 - இந்தாங்க. - நன்றி. 38 00:02:26,563 --> 00:02:28,106 புரோட்டீன் ஷேக் அப்புறம் முட்டை பொடிமாஸ். 39 00:02:28,190 --> 00:02:30,108 இன்னும் 15 நிமிஷத்துல குடிச்சிடுறேன். 40 00:02:30,192 --> 00:02:31,735 இன்னைக்கு ஒரு மைல்தான் போயிருக்கேன். 41 00:02:31,818 --> 00:02:33,320 ஆனா நீங்க மணிக்கணக்கா துடுப்பு போட்டுட்டு இருக்கீங்களே. 42 00:02:33,403 --> 00:02:35,072 பலமான எதிர் காத்து என்னைப் பின்னாடி தள்ளிடுச்சு. 43 00:02:35,906 --> 00:02:37,491 - என்ன காத்து? - நான் இருக்க வேண்டிய இடத்துல 44 00:02:37,574 --> 00:02:39,493 பலமான காத்து வீசுது. இதோ அஸோரஸ் தாண்டிய உடனே. 45 00:02:39,576 --> 00:02:40,869 வட அட்லாண்டிக் பெருங்கடல் 46 00:02:41,537 --> 00:02:43,330 ஆனா, ஸ்காட், நீங்கதான் அங்க இல்லயே. 47 00:02:43,413 --> 00:02:44,456 எனக்குத் தெரியும். 48 00:02:44,540 --> 00:02:45,832 நான் அட்லாண்டிக் கடல்ல நிஜமாவே 49 00:02:45,916 --> 00:02:48,544 பயணம் பண்ண மாதிரி இருந்தா தான், என்னால நிம்மதியா பொய் சொல்ல முடியும். 50 00:02:50,379 --> 00:02:51,380 யாரது? 51 00:02:51,922 --> 00:02:52,923 நான் நாடியாவை வர வேணாம்னு சொல்ல மறந்துட்டேன். 52 00:02:53,006 --> 00:02:55,717 சரி, இங்கயே இருங்க இல்லன்னா அவ உங்களைப் பார்த்துடுவா. 53 00:02:56,969 --> 00:02:58,345 சத்தம் போடாம துடுப்பு போடுங்க. 54 00:02:58,428 --> 00:02:59,805 ஹலோ? 55 00:03:03,058 --> 00:03:04,268 ஹாய், நாடியா. 56 00:03:04,351 --> 00:03:06,603 பரவால்ல. இன்னைக்கு வீட்டைச் சுத்தம் பண்ண வேண்டியதில்லை. 57 00:03:06,687 --> 00:03:08,188 ஏன்? நான் சுத்தம் பண்றது நல்லா இல்லயா? 58 00:03:08,272 --> 00:03:10,732 இந்த வாரம்… நான் சுத்தம் பண்ணிக்கிறேன். 59 00:03:12,609 --> 00:03:14,987 நீ விக்டர் கோக்லியுஷ்கின் மாதிரி ஜோக் பண்ற. 60 00:03:15,070 --> 00:03:17,406 - அவர் யாருன்னு எனக்குத் தெரியாது. - அவர் ஒரு நகைச்சுவையான மனிதர். 61 00:03:17,489 --> 00:03:19,658 அரசாங்கத்தைக் கிண்டல் பண்ணிப் பேசுவாரு. 62 00:03:19,741 --> 00:03:21,159 அவர் ஆத்மா சாந்தியடையட்டும். 63 00:03:22,411 --> 00:03:23,829 ஸ்டீவிதான் காரணம். 64 00:03:23,912 --> 00:03:25,080 அவளுக்கு உடம்பு சரியில்ல. 65 00:03:25,163 --> 00:03:26,415 என் செல்லக் குட்டிக்கா? 66 00:03:26,999 --> 00:03:28,125 ஸ்டீவி… 67 00:03:28,208 --> 00:03:29,793 அவளுக்குத் தொற்று இருக்கு. 68 00:03:29,877 --> 00:03:31,295 எனக்கு அதப்பத்திக் கவலையில்ல. நான் அவகிட்ட போறேன். 69 00:03:31,378 --> 00:03:33,380 ஸ்டீவி, நான் உனக்கு ஐஸ் குளியல் தயார் பண்றேன். 70 00:03:33,463 --> 00:03:34,840 அவ நல்லா தூங்கிட்டு இருக்கா. 71 00:03:34,923 --> 00:03:36,800 அந்த ஹூவர் மிஷின் சத்தம் கேட்டா அவ முழிச்சுடுவா. 72 00:03:36,884 --> 00:03:38,844 நான் கையாலேயே குப்பையை எடுத்துடுறேன். 73 00:03:38,927 --> 00:03:40,971 இல்ல, நாடியா. பரவாயில்ல. 74 00:03:41,054 --> 00:03:42,931 அவளுக்கு உடம்பு சரியானதும் உன்னைக் கூப்பிடுறோம். 75 00:03:44,099 --> 00:03:45,100 எனக்குச் சம்பளம் தருவீங்களா? 76 00:03:46,643 --> 00:03:48,312 ஆமா, கண்டிப்பா தருவோம். 77 00:03:49,271 --> 00:03:50,272 அப்போ சரி. 78 00:03:58,697 --> 00:04:00,574 எல்லாரும் ஏன் அவங்க சாப்பாட்டுல பேர் எழுதி வச்சிருக்காங்க? 79 00:04:01,283 --> 00:04:02,409 தஹினி. 80 00:04:02,993 --> 00:04:04,786 நான் உன் தஹினியைத் திருட மாட்டேன். 81 00:04:04,870 --> 00:04:06,496 அங்க ஆச்சரியக்குறிகள் வேற இருக்கு. 82 00:04:07,497 --> 00:04:08,665 ஹொண்டுராஸ் விஷயத்தை என்னால இன்னும் நம்பவே முடியல. 83 00:04:08,749 --> 00:04:10,250 ரொம்பப் பிரமாதமான வேலை. 84 00:04:10,918 --> 00:04:11,919 நன்றி. 85 00:04:12,836 --> 00:04:14,213 சும்மா ஒரு சின்ன முன்னேற்றம்தான். 86 00:04:14,880 --> 00:04:15,923 இல்ல, அது சூப்பர். 87 00:04:16,005 --> 00:04:17,673 அவ்வளவு கொலைகள் நடக்குமாம். 88 00:04:19,551 --> 00:04:21,595 நாங்க அந்த நகரங்களை "பரபரப்பானது"ன்னு சொல்லுவோம். 89 00:04:21,678 --> 00:04:24,056 ஆனா தொழில்துறையில அதுக்கு "நிறைய கொலைகள்"னு அர்த்தம் போல. 90 00:04:24,598 --> 00:04:26,850 உண்மையை சொல்லணும்னா, மாயன் காலத்து இடங்கள் உண்மையாவே சூப்பரா இருக்கும். 91 00:04:26,934 --> 00:04:27,935 சோஜர்னா டிராவல் 92 00:04:28,018 --> 00:04:29,019 நீ… அங்க போயிருக்கியா? 93 00:04:29,978 --> 00:04:34,733 நான் மெக்சிகோவுல ஒரு பழைய ஜீப்பைச் சரி பண்ணி மத்திய அமெரிக்கா முழுக்கச் சுத்திப் பார்த்தேன். 94 00:04:34,816 --> 00:04:36,610 - அது ரொம்பப் பிரமாதம். - உனக்குக் காட்டுறேன் பாரு. 95 00:04:40,989 --> 00:04:42,115 அது யாரு? 96 00:04:42,866 --> 00:04:45,285 - சாண்டிகோ. - சாண்டிகோ. 97 00:04:45,369 --> 00:04:48,330 பெலீஸ்ல இருந்தப்போ ஒரு நாய்க்குட்டியா அவனைத் தத்தெடுத்தேன், அப்புறம் அவன் என் கூடவே வந்துட்டான். 98 00:04:49,498 --> 00:04:51,834 அவனோட முகத்துல உன் முகத்தை வச்சு அப்படியே கொஞ்சணும்னு தோணல? 99 00:04:51,917 --> 00:04:53,293 நிச்சயமா. 100 00:04:58,632 --> 00:04:59,633 நிச்சயமா. 101 00:05:01,844 --> 00:05:06,056 சரி, இவர்தான் டெஸ்? டெஸ் தானே? ஆமாவா? 102 00:05:06,139 --> 00:05:08,517 சரி. அது ஒரு பெயர் மாதிரி இல்ல, ஆனா பரவாயில்ல. 103 00:05:09,142 --> 00:05:10,561 அவர் எலி பிடிப்பவர். 104 00:05:10,644 --> 00:05:12,020 இங்க எலிங்க இருக்குற மாதிரி தெரியுது. 105 00:05:12,688 --> 00:05:15,065 ஆமா, அது ஏன்னு தெரியல. ஒருவேளை இங்க இருக்குற பொண்ணுங்க 106 00:05:15,148 --> 00:05:17,860 தினமும் சாப்பிடுற அந்த ஆயிரக்கணக்கான பலகாரங்கள்தான் காரணமோன்னு தோணுது… 107 00:05:19,236 --> 00:05:20,612 அதுவும் பிளேட் இல்லாம சாப்பிடுவாங்க. 108 00:05:21,196 --> 00:05:22,656 பொண்ணுங்களுக்கு எப்போவுமே பலகாரங்கள்னா ரொம்பப் பிடிக்கும். 109 00:05:23,365 --> 00:05:25,075 சரி, டெஸ், நீங்க எலி மேல மட்டும் கவனம் செலுத்துங்க. 110 00:05:28,871 --> 00:05:29,872 என்ன பண்ணப் போறீங்க? 111 00:05:30,539 --> 00:05:31,832 ஸ்னாப்கோர்9X. 112 00:05:31,915 --> 00:05:33,584 எலி உள்ள போகும், விஷத்தைச் சாப்பிடும்… 113 00:05:34,543 --> 00:05:35,752 வெடிச்சுடும். 114 00:05:36,420 --> 00:05:38,714 அப்படின்னா உங்களால அதைச் சும்மா… வேற எங்கயாவது கொண்டு போய் விட முடியாதா? 115 00:05:38,797 --> 00:05:40,382 அதாவது, சும்மா இடத்தை மட்டும் மாத்தி விட முடியாதா? 116 00:05:40,465 --> 00:05:42,384 அதை வெடிக்க வைக்கிறதுதான் கட்டுப்படியாகும். 117 00:05:43,343 --> 00:05:44,720 சரி, இல்ல. நீங்க சொல்றதுலயும் நியாயம் இருக்கு. 118 00:05:53,979 --> 00:05:55,772 - ஹாய். - சரியா? 119 00:05:55,856 --> 00:05:57,524 இன்னைக்கு ராத்திரி நடக்கப்போற மிக்சர் பார்ட்டிக்கு வர்றீங்களா, மிஸ்டர் ராஸ்? 120 00:05:57,608 --> 00:05:59,443 திரும்பவும் சொல்றேன், என் பெயர் ஜேசன். 121 00:05:59,526 --> 00:06:00,944 மிஸ்டர் ராஸ் இல்ல. 122 00:06:01,028 --> 00:06:03,697 அப்புறம் இல்ல. என்ன பார்ட்டி? எனக்கு யாரும் பார்ட்டிக்கு தகவல் சொல்லலயே. 123 00:06:03,780 --> 00:06:06,366 - வாட்ஸ்அப் குரூப்ல தகவல் போட்டிருந்தாங்களே. - நான் அந்த குரூப்பை மியூட் பண்ணி வச்சிருக்கேனே. 124 00:06:06,450 --> 00:06:08,535 ஒவ்வொரு அஞ்சு நிமிஷத்துக்கும் மெசேஜ் வந்துட்டே இருக்கு, மண்டையே வெடிச்சிரும் போல. 125 00:06:08,619 --> 00:06:12,372 சரி, அடுத்த தடவை உங்களுக்காக நியூஸ் ஏஜென்ட் கடையோட ஜன்னல்ல ஒரு சின்ன கார்டு ஒட்டிடுறோம். 126 00:06:12,456 --> 00:06:14,333 அப்புறம், நீங்க எப்பவும் வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்துக்கிட்டு 127 00:06:14,416 --> 00:06:16,084 வெளியே நிக்கிற, சந்தேகப்படக் கூடிய கார்களையே 128 00:06:16,168 --> 00:06:17,461 - பாத்துட்டு இருப்பீங்கன்னு நினைக்கிறோம். - சரி. 129 00:06:17,544 --> 00:06:18,545 உங்களுக்கு விருப்பம் இருந்தா வாங்க. 130 00:06:18,629 --> 00:06:22,341 ஆனா அங்கே வயசானவங்க மாதிரி டீசன்டா டிரஸ் பண்ணிட்டு, பிஸ்கட் பாக்கெட்லாம் கொண்டு வந்திடாதீங்க. 131 00:06:22,424 --> 00:06:24,051 சரி. இந்த கிண்டல் எல்லாம் வருஷம் முழுக்கத் தொடருமா? 132 00:06:24,134 --> 00:06:25,302 - நீங்க இங்க இருக்குற வரைக்கும் ஆமா. - அப்படியா? 133 00:06:26,053 --> 00:06:27,638 சரி, இப்போ நமக்கு "தியரிஸ் அண்ட் மாடல்ஸ்" கிளாஸ் இருக்கா? 134 00:06:27,721 --> 00:06:31,642 இல்ல, இது "அப்ரோச்சஸ் அண்ட் மெத்தட்ஸ்". "தியரிஸ் அண்ட் மாடல்ஸ்" செவ்வாய்க்கிழமை முடிஞ்சுடுச்சு. 135 00:06:31,725 --> 00:06:32,935 இன்னைக்கு செவ்வாய்க்கிழமைன்னு நினைச்சேன். 136 00:06:33,018 --> 00:06:34,603 உங்க மாத்திரை டப்பால கிழமையெல்லாம் எழுதி வைக்கலையா? 137 00:06:34,686 --> 00:06:37,064 சரி, உன்னோட நக்கல் மொக்கையாகிட்டே போகுது அதை மட்டும் தெரிஞ்சுக்கோ. 138 00:06:42,778 --> 00:06:43,862 படங்கள் 139 00:06:43,946 --> 00:06:47,032 ஸ்னாப்கோர் எலிப் பொறி 140 00:06:50,577 --> 00:06:51,870 நம்பர் 1 - ஸ்னாப்கோர்9X 141 00:06:54,623 --> 00:06:56,500 ஸ்னாப்கோர்9X. 142 00:06:56,583 --> 00:06:58,752 சந்தையிலேயே இதுதான் மிகச் சிறந்த எலிப் பொறி. 143 00:06:59,336 --> 00:07:00,379 ஈர்க்கும். 144 00:07:03,298 --> 00:07:04,383 சிக்க வைக்கும். 145 00:07:06,176 --> 00:07:07,177 அழிக்கும். 146 00:07:09,221 --> 00:07:11,431 ஸ்னாப்கோர்9X. 147 00:07:26,196 --> 00:07:29,366 என்னால எப்படி ஒரு கிளீனரா இருக்க முடியும், ஸ்காட்? 148 00:07:29,449 --> 00:07:32,995 ஆமா, என்கிட்ட இருக்குற எல்லாமே பிராண்டட் துணிங்க. 149 00:07:33,579 --> 00:07:35,539 இந்தச் சட்டையை டிரை-கிளீன் கூட பண்ண முடியாது. 150 00:07:35,622 --> 00:07:37,624 இது ஒரு தடவை அழுக்கானா, அப்படியே தூக்கிப் போட வேண்டியதுதான். 151 00:07:39,042 --> 00:07:40,502 நீங்க என்ன பண்றீங்க? 152 00:07:40,586 --> 00:07:41,920 'செல்ஃப்-டான்' மேக்கப் போடுறேன். 153 00:07:42,004 --> 00:07:44,631 - ஐயோ, கடவுளே. - எனக்கு 'ரோவர்-டான்' லுக் வேணும், 154 00:07:44,715 --> 00:07:48,302 அப்புறம், பாதாள அறையில ஒளிஞ்சுட்டு இருக்குறதால என் நிறமே கொஞ்சம் வெளுத்து போச்சு. 155 00:07:49,219 --> 00:07:50,304 இருங்க. 156 00:07:50,387 --> 00:07:53,015 இது என்னோட செலீக் ஹைட்ரேட்டிங் செல்ஃப்-டானிங் ஃபேஸ் கிரீமா? 157 00:07:53,891 --> 00:07:55,767 உங்க கால்ல போடுறதுக்கா இதை எடுத்தீங்க? 158 00:07:57,269 --> 00:07:59,188 இது ஒரு டப்பா இருபதாயிரம் ரூபாயா! 159 00:07:59,980 --> 00:08:01,064 இதை என்கிட்ட கொடுங்க! 160 00:08:02,691 --> 00:08:05,068 பாத்ரூம்ல இருக்குற புது டப்பாவை எடுத்துப் பயன்படுத்தாதீங்க, 161 00:08:05,152 --> 00:08:06,361 ஏன்னா நான் இப்பதான் அதை வாங்கினேன். 162 00:08:09,198 --> 00:08:10,782 இது பாத்ரூம்ல இருந்த அந்தப் புது டப்பாவா? 163 00:08:11,408 --> 00:08:12,701 இல்ல. 164 00:08:37,808 --> 00:08:38,809 இங்க வந்துடுங்க! 165 00:08:42,898 --> 00:08:43,899 ஹாய்! 166 00:08:46,735 --> 00:08:48,362 எல்லாருக்கும் இன்னைக்கு நாள் எப்படி இருந்தது? 167 00:08:50,197 --> 00:08:51,281 பிரின்சஸ்? 168 00:08:52,074 --> 00:08:53,534 என்ன? ஓ, ஆமா, நல்லா இருந்தது. 169 00:08:53,617 --> 00:08:54,618 - அப்படியா? - ஆமா. 170 00:08:55,744 --> 00:08:56,995 நீ என்ன பண்ண? 171 00:08:57,079 --> 00:08:59,540 ஒண்ணு சொல்லவா? என் சோஷியல் மீடியாவுல எல்லாமே இருக்கு. 172 00:08:59,623 --> 00:09:01,333 அதுல பார்த்தீங்கன்னா உங்களுக்கு டக்குனு புரிஞ்சிடும். 173 00:09:02,334 --> 00:09:03,502 அது சரி. 174 00:09:03,585 --> 00:09:06,713 சரி. பீட்ஸா பார்ட்டிக்கு யாரெல்லாம் ஆர்வமா இருக்கீங்க? 175 00:09:07,923 --> 00:09:10,425 டைலர், உனக்கு என்ன பீட்ஸா வேணும்னு நீயே தேர்ந்தெடுக்குறியா? 176 00:09:10,509 --> 00:09:11,844 நான் டின்னருக்கு பார்பரா வீட்டுக்குப் போறேன். 177 00:09:11,927 --> 00:09:13,345 அடக் கடவுளே. அவன்கிட்ட கொஞ்சம் சொல்லுங்களேன்? 178 00:09:13,428 --> 00:09:14,429 இது ரொம்ப கொடுமையா இருக்கு. 179 00:09:14,513 --> 00:09:16,807 - பார்பரா. - அது அவளோட பெயர். 180 00:09:16,890 --> 00:09:17,891 உன் பெயர் பிரின்சஸ். 181 00:09:17,975 --> 00:09:20,060 சரி, பசங்களா. ரொம்ப நன்றி. 182 00:09:20,644 --> 00:09:22,479 அவளுக்கு ஏதாவது செல்லப் பெயர், நடுப் பெயர் இருக்கா நாம கூப்பிடுறதுக்கு? 183 00:09:22,563 --> 00:09:24,439 - இல்ல. - நான் 'பாப்ஸ்' னு கூப்பிடலாம்னு நினைக்கிறேன். 184 00:09:24,523 --> 00:09:25,732 - ஜேஸ். வேணாம். - அதைவிட மோசமா இருக்கு. 185 00:09:25,816 --> 00:09:28,193 அப்போ சரி. நாம எல்லாரும் அதுக்கேத்த மாதிரி மாறிக்க வேண்டியதுதான், இல்லயா? 186 00:09:28,277 --> 00:09:29,444 இது ரொம்பக் கேவலமா இருக்கு. 187 00:09:29,528 --> 00:09:31,363 இது ஒன்னும் கேவலம் இல்ல. பாப்ஸ்னு கூப்பிடுறது தான் கேவலம். 188 00:09:31,446 --> 00:09:33,115 - பிரின்சஸ்னு கூப்பிடுறது தான் கேவலம். - அப்புறம் நீ? 189 00:09:33,198 --> 00:09:34,700 சின்ன… வெஜ்ஜி சுப்ரீம். இது நல்லா இருக்கு. 190 00:09:34,783 --> 00:09:38,161 ஓ, இல்ல, மன்னிச்சிடுங்க. அம்மாவோட புது வீட்டை டெக்கரேட் பண்ண அவங்களுக்கு உதவப் போறேன். 191 00:09:38,245 --> 00:09:40,330 அவங்களுக்கு ஒரு சூப்பரான கம்யூனிட்டி கிடைச்சிருக்கு. 192 00:09:40,998 --> 00:09:41,999 அது என்னது? 193 00:09:42,082 --> 00:09:44,126 அது இந்த மாதிரி கலை ஆர்வம் இருக்குறவங்க தங்குற இடம் 194 00:09:44,209 --> 00:09:47,254 அப்புறம் இந்த விவாகரத்தாகி கஷ்டப்படுற மத்தவங்களும் 195 00:09:47,337 --> 00:09:49,381 ஒன்னாச் சேர்ந்து ஒரு சமூகமா வாழ்ற ஒரு இடம். 196 00:09:49,464 --> 00:09:50,924 - சூப்பர். - ஆமா. 197 00:09:51,425 --> 00:09:53,510 - நான் இப்போவே கிளம்பணும்னு நினைக்கிறேன். - சரி. சரி. ஆமா. 198 00:09:53,594 --> 00:09:55,679 - சரி, நல்லா ஜாலியா இரு. - பை. 199 00:09:55,762 --> 00:09:57,306 - பை. - பை-பை. பை. 200 00:09:58,557 --> 00:10:00,225 நீ அவங்ககிட்ட பிளானைப் பத்திச் சொல்லலையா? 201 00:10:00,309 --> 00:10:02,561 மன்னிச்சுடு. என்ன பண்றது? அவங்களுக்குத்தான் ஏற்கனவே வேற பிளான் இருக்கே. 202 00:10:02,644 --> 00:10:03,645 ஜேஸ், இப்படித்தான் இது ஆரம்பிக்கும். 203 00:10:03,729 --> 00:10:05,606 - இப்படித்தான் நாம அவளை இழப்போம். - எனக்குத் தெரியல, நிக். 204 00:10:05,689 --> 00:10:07,524 ஒரு சமயம் கேட் கிளம்பிடுவாள்னு நீ கவலைப்படுற. 205 00:10:07,608 --> 00:10:08,942 இப்போ அவ இங்கே இருக்குறத நினைச்சு கவலைப்படுற. 206 00:10:09,026 --> 00:10:10,527 சரி. சரி. 207 00:10:11,695 --> 00:10:13,280 சரி. இந்தா. உனக்கு என்ன பீட்ஸா வேணும்னு தேர்ந்தெடு. 208 00:10:16,408 --> 00:10:17,409 என்ன? 209 00:10:17,492 --> 00:10:19,203 இன்னைக்கு ராத்திரி காலேஜ்ல ஒரு மிக்சர் பார்ட்டி இருக்கு. 210 00:10:19,286 --> 00:10:20,454 இதப்பத்தி உன்கிட்ட சொன்னேனே. 211 00:10:20,954 --> 00:10:23,040 - அப்படியா? - இது ரொம்ப நாளா கேலண்டர்ல இருக்கே. 212 00:10:23,123 --> 00:10:24,166 - அப்படியா? - ஆமா. 213 00:10:25,834 --> 00:10:26,835 ஆமா. 214 00:10:26,919 --> 00:10:28,879 நான் கிளம்பணும். நான் சைக்கிள்ல போறேன். 215 00:10:28,962 --> 00:10:30,547 - சரி. - நான் சீக்கிரமா வந்துடுவேன், சரியா? 216 00:10:30,631 --> 00:10:32,174 - சரி. சரி. - ஐ லவ் யூ. என்னை மன்னிச்சுடு. 217 00:10:32,257 --> 00:10:34,092 - சரி. பை, செல்லம். பை-பை. - சரி. பை. 218 00:10:34,176 --> 00:10:36,136 - ஐ லவ் யூ. கவனமா போ. - பை. சரி. 219 00:10:48,941 --> 00:10:50,108 காலேஜ் மிக்சர் 220 00:10:51,193 --> 00:10:52,861 நம்பவே முடியல! 221 00:10:54,905 --> 00:10:55,989 1 செவ்வாய் - டைலர் ஹைஜினிஸ்ட் மாலை 3:45 222 00:11:04,540 --> 00:11:06,083 கேம்டென் 223 00:11:23,475 --> 00:11:24,726 ஹாய், மிஸ்டர் ராஸ். 224 00:11:24,810 --> 00:11:25,811 என்னை ஜேசன்னு கூப்பிடு. 225 00:11:25,894 --> 00:11:27,729 இதெல்லாம் என்னது? 226 00:11:27,813 --> 00:11:29,189 இன்னைக்கு பெருசா ஏதோ நடக்கும்னு எதிர்பார்த்தேன். 227 00:11:29,273 --> 00:11:31,233 இது பெருசுதான். இங்க ஒரு ஜிக்ஸா ரேஸ் நடக்குது. 228 00:11:31,316 --> 00:11:35,153 ஜிக்ஸா ரேஸ் ஒண்ணும் ஒரு பெரிய பார்ட்டி இல்ல, சரியா? 229 00:11:35,237 --> 00:11:36,405 - உனக்கு ஒண்ணுமில்லயே? - இந்தாங்க. 230 00:11:38,115 --> 00:11:39,241 இல்ல. நான் ஒன்னும் செக்யூரிட்டி இல்ல. 231 00:11:39,324 --> 00:11:41,243 - இல்ல, நான் சும்மா… - சரி. 232 00:11:43,537 --> 00:11:45,205 சரி, ஒரு பெரிய பார்ட்டினா எப்படி இருக்கணும்? 233 00:11:45,289 --> 00:11:46,623 எனக்குத் தெரியல. பழைய காலத்து நைட் மாதிரி. 234 00:11:46,707 --> 00:11:49,126 வந்து, வெறித்தனமா குடிக்கிறது அப்புறம் டான்ஸ் ஆடுறது 235 00:11:49,209 --> 00:11:51,420 அப்புறம் ஒரு சண்டை, வீட்டுக்கு வர்ற வழியில ஒரு கபாப். பாருங்க… 236 00:11:52,379 --> 00:11:54,339 இல்ல. திரும்பவும் சொல்றேன், நான் செக்யூரிட்டி இல்ல. 237 00:11:54,423 --> 00:11:56,300 நான் ஒரு மாணவன். எனக்குத் தெரியும். அது… 238 00:11:56,383 --> 00:11:58,385 நான் இதைப் போட்டுருக்கிறதுனாலதான். நான் சைக்கிள்ல வந்தேன். 239 00:11:58,468 --> 00:12:00,220 - உங்ககிட்ட ஹெல்மெட் கூட இல்லையே. - ஹெல்மெட். 240 00:12:00,304 --> 00:12:01,680 உங்க தலைமுறைக்கு என்னதான் ஆச்சு? 241 00:12:01,763 --> 00:12:04,474 ஹெல்மெட் போடுங்க, டாக்டர்கிட்ட போங்க, சன்ஸ்கிரீன் பயன்படுத்துங்க. 242 00:12:04,558 --> 00:12:06,143 ஐயோ சாமி, உங்களை நீங்களே பாத்துக்கோங்க. 243 00:12:06,226 --> 00:12:08,020 ஆமா, என்னவோ. இருங்க பசங்களா. ஐடியைக் காட்டுங்க. 244 00:12:09,354 --> 00:12:10,898 சரி, சரி. கிளம்புங்க. ஜாலியா இருங்க. 245 00:12:10,981 --> 00:12:12,566 எல்லாரும் வாங்க. 246 00:12:12,649 --> 00:12:14,651 இன்னைக்கு ராத்திரி சூப்பரா பார்ட்டி பண்ணுவோம். யாருக்கெல்லாம் ஷாட்ஸ் வேணும்? 247 00:12:15,277 --> 00:12:16,278 - சரி. - கண்டிப்பா. 248 00:12:16,361 --> 00:12:17,654 வாங்க போலாம்! 249 00:12:17,738 --> 00:12:21,074 எனக்கு ஒரு வீட்கிராஸ் ஷாட், ஒரு இஞ்சி அப்புறம் ஒரு மஞ்சள் ஷாட் கொடுங்க. 250 00:12:21,575 --> 00:12:22,784 அப்புறம் ஒரு கிளாஸ் ஸ்டெல்லா பீர். 251 00:12:22,868 --> 00:12:24,161 - சரி. - நன்றி. 252 00:12:24,244 --> 00:12:26,330 ஜாலி! இன்னொரு கார்னர் பீஸ் கிடைச்சுடுச்சு. 253 00:12:29,291 --> 00:12:30,667 கடவுளே. 254 00:12:30,751 --> 00:12:33,212 ராஜயோகம் தான் போல இருக்கு. 255 00:12:33,295 --> 00:12:38,425 ஆனா முதல்ல, கார்ல் ரொம்ப ஒரு இக்கட்டான நிலைமையில இருக்குற மாதிரி தெரியுது, ஜென்னா அப்புறம் மெல்… 256 00:12:55,025 --> 00:12:56,026 வாங்க பசங்களா. 257 00:12:56,109 --> 00:12:58,070 நாம ஒழுங்கா ஒரு ரவுண்ட் போவோம், என்ன? 258 00:12:58,153 --> 00:12:59,613 இன்னைக்கு நான் சீக்கிரமா வீட்டுக்குப் போகணும். 259 00:12:59,696 --> 00:13:01,323 அட என்ன? உன்னோட அந்த நன்றி உணர்வு டைரியை அப்புறம் பாத்துக்கலாம். 260 00:13:01,406 --> 00:13:03,867 உண்மையில, நீ நன்றியோட இருக்கேன்னு சொல்லிக்கிற 261 00:13:03,951 --> 00:13:06,620 இந்த வாழ்க்கையையே அனுபவிக்கலன்னா அப்புறம் அந்த டைரி இருந்து என்ன பயன்? 262 00:13:06,703 --> 00:13:08,789 உண்மையில அது என் கிராட்டிட்யூட் டைரி இல்ல. 263 00:13:09,915 --> 00:13:10,916 அது என்னோட தூக்கப் பதிவு டைரி. 264 00:13:11,667 --> 00:13:12,793 அதனால எனக்கு நிஜமாவே நல்ல பலன் கிடைக்குது. 265 00:13:12,876 --> 00:13:14,127 பாரு, நான் பொதுவாச் சொல்ல விரும்பல, 266 00:13:14,211 --> 00:13:16,630 ஆனா உங்க தலைமுறை ஆளுங்க ஒவ்வொருத்தரும் தற்பெருமை பேசுறவங்க தான். 267 00:13:16,713 --> 00:13:18,590 ஏன்? ஏன்னா நாங்க எங்களை நல்லாப் பாத்துக்குறோம் என்பதாலா? 268 00:13:18,674 --> 00:13:20,592 அதேதான். அது ஒரு மாதிரி எரிச்சலா இருக்கு. 269 00:13:21,093 --> 00:13:22,678 உங்க கூட இருந்தா ஒரு ஜாலியே இல்ல. சரி, உங்க உடம்பை 270 00:13:22,761 --> 00:13:24,847 கோயில் மாதிரிப் பாத்துக்கிட்டா எப்படி ஜாலியா இருக்க முடியும்? 271 00:13:24,930 --> 00:13:27,099 ஒண்ணு சொல்றேன், உங்க உடம்பு கோயில் இல்ல, அது ஒரு வாடகை கார் மாதிரி. 272 00:13:27,182 --> 00:13:29,852 கொஞ்ச நாளைக்குத்தான் உங்ககிட்ட இருக்கும். அதனால அத வச்சு எவ்வளவு தூரம் போக முடியுமோ போவோம், ம்? 273 00:13:29,935 --> 00:13:32,771 உண்மையில, நீங்க எல்லாரும் 103 வயசுல தனியாத் தான் சாவப் போறீங்க, 274 00:13:32,855 --> 00:13:35,315 உங்களோட அந்த 'கட் பாக்டீரியா' கூட்டத்தோட. 275 00:13:41,655 --> 00:13:42,990 இப்போ ப்ளூ லைட் ஆஃப் பண்ற நேரம். 276 00:13:43,073 --> 00:13:44,116 நண்பா. 277 00:13:45,534 --> 00:13:49,204 உங்களில் ரொம்ப கெத்தான ஆளு கூட 90-கள்ல 'நெர்ட்' மாதிரி தான் இருந்திருப்பான் தெரியுமா? 278 00:13:49,288 --> 00:13:52,291 ஆமா, நான் என் கட் பாக்டீரியா பத்தித் தான் அதிகமா யோசிப்பேன். 279 00:13:53,041 --> 00:13:54,626 சரி. நாம ஒரு ரவுண்ட் போவோம். 280 00:13:54,710 --> 00:13:55,711 இப்போ தான் நீ சரியாப் பேசுற. 281 00:13:58,672 --> 00:14:00,257 - காஃபின் நிறுத்துற நேரம். - சரி. 282 00:14:00,340 --> 00:14:01,925 நாம எஸ்ஸ்பிரெசோ மார்டினி குடிக்க மாட்டோம் தானே? 283 00:14:02,009 --> 00:14:03,093 ஆமா, குடிக்க மாட்டோம். 284 00:14:03,594 --> 00:14:05,470 உங்க ஃபோனை என்கிட்ட கொடுங்க. அது வாழ்க்கைக்கு கவனச் சிதறலா இருக்கு. 285 00:14:05,554 --> 00:14:08,182 இப்பவே சொல்லிடுறேன், நான் தண்ணி குடிக்க அரை மணிநேரத்துக்கு ஒருமுறை அலாரம் அடிக்கும். 286 00:14:08,265 --> 00:14:10,809 தண்ணி குடிக்க இது ஞாபகப்படுத்தணும்னு அவசியம் இல்ல. இப்போ நான் இருக்கேன்ல. 287 00:14:10,893 --> 00:14:11,894 நாம இதைக் குடிக்கலாம். 288 00:14:20,736 --> 00:14:21,862 சாதாரண வேலை தான். 289 00:14:24,448 --> 00:14:27,034 - சரி. அப்புறம் பாப்போம். - ஆமா, அப்புறம் பாக்கலாம். 290 00:14:48,680 --> 00:14:49,848 ஹாய். 291 00:14:51,308 --> 00:14:52,309 நீ இங்க என்ன பண்ற? 292 00:14:52,392 --> 00:14:55,646 நாளைக்குள்ள சில வேலைகளை முடிக்க வேண்டி இருந்துச்சு, அதான். 293 00:14:55,729 --> 00:14:57,773 - நீ என்ன பண்ற? - ஆமா, எனக்கும் அதேதான். 294 00:14:57,856 --> 00:14:59,608 - ஆமா. - சரி நான் வேலையைப் பாக்குறேன். 295 00:14:59,691 --> 00:15:01,443 சரி. நானும்தான். 296 00:15:08,492 --> 00:15:09,493 சரி. நன்றி. 297 00:15:09,576 --> 00:15:12,829 ஒரு பெரிய பார்ட்டிக்கு முதல் விதியே, நாம குடிக்கப் போற இடத்தை சரியா தேர்ந்தெடுக்கணும். 298 00:15:12,913 --> 00:15:13,997 ஆடம்பரம் எதுவும் வேணாம். 299 00:15:14,081 --> 00:15:16,208 என்ட்ரி பீஸ், இந்த பந்தாவெல்லாம் வேணாம். 300 00:15:16,291 --> 00:15:19,211 இல்ல. ஒரு பெரிய பார்ட்டின்றது பெரிய கலாச்சார விஷயம் இல்ல. 301 00:15:19,294 --> 00:15:22,339 இது மக்களுக்கானது. மக்கள் கூட்டம் அதிகமா இருக்குற இடமா இருக்கணும். எல்லாரும் சமம். 302 00:15:22,422 --> 00:15:25,133 எப்பவுமே ரொம்ப கெத்தா இருக்குற கூட்டத்தைத் தேடிப் போகாதீங்க. 303 00:15:25,759 --> 00:15:28,303 - குறிக்கோளை முழுசா அடைஞ்சுட்டோம். - அடடா. 304 00:15:30,931 --> 00:15:33,058 ஏன் ஏதோ கஷாயத்தை குடிக்குற மாதிரி குடிக்கிறீங்க? 305 00:15:33,725 --> 00:15:35,143 ஏன்னா இதோட சுவை ரொம்ப கேவலமா இருக்கு. 306 00:15:36,061 --> 00:15:39,398 ஆனா முதல்ல போதை மண்டையில ஏறணும், அப்போதான் நைட்டு முழுக்க தாங்கும். 307 00:15:39,481 --> 00:15:41,316 என்னை நம்புங்க. அப்புறம் நீங்களே எனக்கு நன்றி சொல்லுவீங்க. 308 00:15:41,400 --> 00:15:42,693 இது உண்மையாவே சூப்பரா இருக்கும். 309 00:15:43,735 --> 00:15:44,736 ஆமா. 310 00:15:45,696 --> 00:15:47,114 அவ்வளவுதான். அப்படியே குடிங்க. 311 00:15:47,197 --> 00:15:48,824 என் 20 வயசுல இதுதான் என் காலை உணவா இருந்தது. 312 00:15:50,576 --> 00:15:52,578 இது ரொம்பப் பிரமாதமா இருக்கப் போகுது! 313 00:16:04,131 --> 00:16:06,341 இது… இது உன்னோடதா? 314 00:16:07,509 --> 00:16:08,969 இல்ல, அது பரவாயில்ல. நிக்கி, வேணாம். நானே வர்ரேன்… 315 00:16:09,052 --> 00:16:10,888 - பரவாயில்ல. - இல்ல, வேணாம். 316 00:16:12,055 --> 00:16:13,140 தி ஒயிட் லயன் கெர்ரி ஹாவல் 317 00:16:13,223 --> 00:16:14,224 நீ இசைக் குழுவுல இருக்க. 318 00:16:15,517 --> 00:16:16,894 ஆமா. ஆமா. 319 00:16:18,103 --> 00:16:19,521 வந்து, இல்ல. நான் மட்டும்தான். 320 00:16:21,106 --> 00:16:22,691 வேற எங்கயும் இதைப் பிரிண்ட் எடுக்க முடியாது. 321 00:16:23,400 --> 00:16:25,235 அப்போ, அதுக்காகத்தான் நீ இங்க வந்திருக்க, அப்படித்தானே? 322 00:16:26,069 --> 00:16:28,530 ஆமா. ஆபீஸை இதுக்காகப் பயன்படுத்தக் கூடாதுன்னு எனக்குத் தெரியும். 323 00:16:29,698 --> 00:16:30,866 இந்த ரகசியத்தைக் காப்பாத்துவியா? 324 00:16:34,578 --> 00:16:36,205 வால்ட் 47 325 00:16:36,288 --> 00:16:39,082 சரி. 90-களோட சிறந்த விஷயமே, கேமரா ஃபோன் கிடையாது. 326 00:16:39,166 --> 00:16:41,752 அதனால நீங்க கெத்தா காட்டிக்கணும்னு அவசியம் இல்ல. உங்களை நீங்களே மறந்துடலாம். 327 00:16:42,252 --> 00:16:44,171 சரி. கவனிங்க, டான்ஸ் ஃப்ளோர் ரூல்ஸ் இதுதான், சரியா? 328 00:16:44,254 --> 00:16:45,547 ஒண்ணு இறங்கி ஆடணும் இல்லன்னா ஓரமா போயிடணும். 329 00:16:46,131 --> 00:16:49,134 மனசார, முழு வீச்சோட ஆடுங்க. இங்க யாரும் யாரையும் தப்பா நினைக்க மாட்டாங்க. 330 00:16:50,052 --> 00:16:52,763 அப்புறம் அந்த மியூசிக் ட்ராப் வரப்போ, கையை மேல தூக்கணும், சரியா? 331 00:16:53,931 --> 00:16:54,973 இதோ வருது. 332 00:16:55,933 --> 00:16:57,434 ரெடியா இருங்க. 333 00:16:58,060 --> 00:17:00,187 இதோ வருது. இன்னும் ஒரு நிமிஷத்துல. 334 00:17:01,146 --> 00:17:02,147 இதோ வருது. 335 00:17:20,207 --> 00:17:21,208 அப்படித்தான்! 336 00:17:26,839 --> 00:17:28,674 நீ இதையெல்லாம் எடுத்ததை மத்தவங்க கவனிக்க மாட்டாங்களா? 337 00:17:28,757 --> 00:17:30,592 மாட்டாங்க, ஏன்னா நான் இதை என் லாக்கர்ல ஒளிச்சு வைப்பேன், 338 00:17:30,676 --> 00:17:31,760 நாளைக்குக் காலைல சீக்கிரமா வந்து, 339 00:17:31,844 --> 00:17:34,221 - திரும்ப அங்கேயே வச்சிடுவேன். - சரி. 340 00:17:34,304 --> 00:17:36,181 நான் படிச்ச வரைக்கும், அடிப்படைப் பிரச்சனையைத் தீர்க்காம 341 00:17:36,265 --> 00:17:38,267 அந்த எலிகளை விரட்ட முடியாது. 342 00:17:38,350 --> 00:17:40,686 அப்புறம் அந்த அடிப்படைப் பிரச்சனைகள்ல ஒண்ணு, 343 00:17:40,769 --> 00:17:43,063 யாரோ ஒருத்தர் எல்லா எலிப் பொறிகளையும் ஒளிச்சு வைக்கிறதா? 344 00:17:43,939 --> 00:17:46,775 இருக்கலாம். ஆமா, ஆமா. இது நியாயமே இல்ல. 345 00:17:46,859 --> 00:17:49,111 தினமும் இந்த ஆபீஸ்க்கு மக்கள் அவங்க நாய்களை கூட்டிட்டு வர்றாங்க, 346 00:17:49,194 --> 00:17:51,572 அதுங்க பாட்டுக்கு அங்கங்க நக்கிட்டு, எல்லாத்தையும் மோந்துட்டு இருக்கு. 347 00:17:51,655 --> 00:17:53,323 ஆனா ஒரு சுண்டெலி கூட என் கால்ல ஏறி வந்து, 348 00:17:53,407 --> 00:17:54,992 என் மடியில முகத்தை வச்சது இல்ல. 349 00:17:55,075 --> 00:17:56,118 இது விலங்குகள் மேல காட்டுற பாரபட்சம். 350 00:17:56,785 --> 00:17:57,786 அதனால… 351 00:18:00,581 --> 00:18:01,582 நீ என்ன பண்ற? 352 00:18:02,416 --> 00:18:03,584 நான் ஒண்ணும் பாரபட்சம் பாக்குறவன் இல்ல. 353 00:18:06,837 --> 00:18:09,089 - அங்க இன்னொன்னு இருக்கு. - சரி. 354 00:18:09,882 --> 00:18:12,426 சரி, நீ எப்பத்துல இருந்து ஒரு சமூக சேவகி ஆகணும்னு ஆசைப்பட்ட? 355 00:18:12,509 --> 00:18:13,760 அது ஒரு பெரிய கதை. 356 00:18:13,844 --> 00:18:16,096 ஆமா, என் வீட்ல கூட ரெண்டு பெரிய கதைகள் இருக்கு. 357 00:18:19,933 --> 00:18:21,185 நான் முன்னாடி ஒரு காப்பகத்துல இருந்தேன். 358 00:18:21,935 --> 00:18:24,646 அதனால நீங்க பரிதாபப்பட்டுத் தலையச் சாச்சு என்னைப் பார்க்க வேண்டாம். 359 00:18:24,730 --> 00:18:26,064 இல்ல. கண்டிப்பா. நீ சொல்றது சரிதான். 360 00:18:26,773 --> 00:18:28,609 அப்போ எனக்கு பெருசா நண்பர்கள் யாரும் இல்ல. 361 00:18:28,692 --> 00:18:30,194 அந்த நேரத்துல தான் எனக்கு 'ஹார்சஸ்' மேல ஆர்வம் வந்துச்சு. 362 00:18:30,277 --> 00:18:31,278 என்னது, அது… 363 00:18:32,237 --> 00:18:33,697 ஹெராயின் மாதிரியா? கஞ்சாவா? 364 00:18:33,780 --> 00:18:36,950 - இல்ல, நிஜமான குதிரைகள். - நிஜமான குதிரைகள், சரி. சொல்லு. 365 00:18:37,034 --> 00:18:39,286 அப்போ அங்க ஒரு சமூக நல அதிகாரி இருந்தாங்க. 366 00:18:39,369 --> 00:18:40,579 அவங்கதான் என்னைப் பாத்துக்கிட்டாங்க. 367 00:18:41,163 --> 00:18:43,540 வாரா வாரம் நான் குதிரை சவாரி போறதுக்கு ஒரு வழியை ஏற்படுத்திக் கொடுத்தாங்க. 368 00:18:44,208 --> 00:18:47,252 மத்த பசங்க கூட சேர்த்து ஒவ்வொரு சனிக்கிழமையும் அவங்க என்னைக் கூட்டிட்டுப் போவாங்க. 369 00:18:47,336 --> 00:18:48,629 நான் மட்டும் என்னோட பி.இ உடையில இருப்பேன். 370 00:18:49,213 --> 00:18:51,215 - குதிரைகளுக்கு என்னைத்தான் ரொம்பப் பிடிக்கும். - எனக்கு அதுல சந்தேகமே இல்ல. 371 00:18:52,424 --> 00:18:55,511 அப்புறம் ஒரு நாள், அங்கிருந்த ஒரு பெண் என்கிட்ட ஒரு கவரைக் கொடுத்து, 372 00:18:55,594 --> 00:18:56,762 அதை அந்த சமூக நல அதிகாரிகிட்ட கொடுக்கச் சொன்னாங்க. 373 00:18:56,845 --> 00:18:58,889 - சரி. - நான் அதைத் திறந்துப் பார்த்தேன். 374 00:18:58,972 --> 00:19:01,016 அது ஒரு பில். அந்த அதிகாரி பேருல இருந்தது. 375 00:19:01,600 --> 00:19:02,809 அங்க எந்த அரசுத் திட்டமும் இல்ல. 376 00:19:03,644 --> 00:19:04,853 - அவங்கதான் பணம் கட்டியிருக்காங்க. - சரி. 377 00:19:04,937 --> 00:19:06,396 ரெண்டு வருஷமா ஒவ்வொரு வாரமும் பணம் கட்டியிருக்காங்க. 378 00:19:06,480 --> 00:19:08,565 ஆஹா. நீ அவங்ககிட்ட என்ன சொன்ன? 379 00:19:08,649 --> 00:19:09,816 நான் எதுவும் சொல்லல. 380 00:19:10,734 --> 00:19:11,735 அவங்களும் எதுவும் சொல்லல. 381 00:19:12,569 --> 00:19:13,946 நாங்க அப்படியே தொடர்ந்தோம். 382 00:19:15,948 --> 00:19:17,991 எது எப்படியோ, எனக்கும் யாருக்காவது அப்படி இருக்கணும்னு ஆசை. 383 00:19:18,575 --> 00:19:19,868 இந்தச் சமூக நல அதிகாரி… 384 00:19:21,036 --> 00:19:23,789 அவங்க பேரு பென்னி இல்லையே? 385 00:19:23,872 --> 00:19:25,457 இல்ல, காலி. 386 00:19:26,208 --> 00:19:27,793 - யாரு பென்னி? - இல்ல, அது வந்து… 387 00:19:28,502 --> 00:19:30,462 எங்களுக்கும் ஒரு காலி இருந்தாங்க. 388 00:19:32,381 --> 00:19:34,007 சரி, இதப் பத்திப் பேசுனது போதும். வா போலாம். 389 00:19:34,508 --> 00:19:35,926 நாம போய் கொஞ்சம் எஸ்ஸ்பிரெசோ மார்டினி குடிப்போம். 390 00:19:36,677 --> 00:19:39,221 - பாரு, அது அங்க இருக்கு. - அதுக்கு பசிக்குது போல. 391 00:19:41,974 --> 00:19:45,102 ஜினேட்டோட ஹலூமியை டேனோட ஸ்வீட் சில்லி சாஸ் கூடச் சேர்த்துச் சாப்பிட்டுப் பாரு. 392 00:19:45,185 --> 00:19:46,186 சரி. 393 00:19:49,147 --> 00:19:50,148 சரி… 394 00:19:51,733 --> 00:19:52,734 என்ன நடக்குது? 395 00:19:53,318 --> 00:19:54,403 ஏதும் பிரச்சனை இல்லயே? 396 00:19:54,486 --> 00:19:55,487 நீ என்ன சொல்ல வர்ற? 397 00:19:55,571 --> 00:19:58,365 நடுராத்திரியில ஆபீஸ்ல உட்கார்ந்து, உன் பையில ஒரு மூட்டை எலிப்பொறியை வெச்சுக்கிட்டு 398 00:19:58,448 --> 00:20:00,367 நாம எலிகளை வேடிக்கை பாத்துட்டு இருக்கோம் 399 00:20:00,450 --> 00:20:01,910 எனக்கு எலின்னா ரொம்பப் பிடிக்கும். 400 00:20:03,620 --> 00:20:05,998 அதாவது, யாராவது அதுங்களைப் பாத்துக்கணும்ல? 401 00:20:07,165 --> 00:20:09,209 நிஜ உலகம் எப்படி இருக்கும்னு தெரியாம, சும்மா… 402 00:20:10,210 --> 00:20:13,338 வெள்ளந்தியா அதுங்க பாட்டுக்கு சுத்திட்டு இருக்கு. 403 00:20:14,173 --> 00:20:16,425 அதுங்களுக்கு அந்த ஆபத்தெல்லாம் தெரியாது, இல்லயா? 404 00:20:16,508 --> 00:20:19,344 தலைக்குக் கலர் அடிச்சதுனாலயே அவங்க பெரிய ஆளாயிட்டதா நினைச்சிட்டு இருக்காங்க. 405 00:20:19,428 --> 00:20:21,680 நீ வெறும் எலிகளை சொல்ற மாதிரி தெரியல. 406 00:20:24,516 --> 00:20:27,477 எங்க பசங்களோட பெத்த அம்மா திரும்ப வந்துட்டாங்க, 407 00:20:28,395 --> 00:20:30,397 அதப் பத்தி என்னைத் தவிர வேற யாரும் கவலைப்படுற மாதிரியே தெரியல. 408 00:20:30,480 --> 00:20:32,691 அப்போ நீ ரொம்ப தனிமையா உணர்ற மாதிரித் தெரியுது. 409 00:20:32,774 --> 00:20:34,735 அவளைப் பத்தி எனக்கு எப்பவும் தப்பான எண்ணங்களாவே வருது. 410 00:20:35,319 --> 00:20:36,570 அது அவ்வளவு மோசமா இருக்காதுன்னு நினைக்கிறேன். 411 00:20:36,653 --> 00:20:38,322 நேத்து ராத்திரி அவ மேல என் காரை ஏத்திட்ட மாதிரி கனவு கண்டேன். 412 00:20:38,405 --> 00:20:40,240 - சரி… - இல்ல. 413 00:20:40,324 --> 00:20:41,533 ப்ளீஸ் சிரிக்காதே. 414 00:20:41,617 --> 00:20:44,286 நல்ல மனுஷங்க, கனவுல கூட அப்படி ஒரு விஷயத்தை யோசிக்க மாட்டாங்க. 415 00:20:47,706 --> 00:20:49,958 கெர்ரி, இவள்… யாருன்னு எனக்குத் தெரியும். 416 00:20:50,667 --> 00:20:52,085 நம்மை அவ மேல காதல் வயப்பட வைப்பாள், 417 00:20:52,169 --> 00:20:54,171 அவளால அதைக் கையாள முடியாது, உடனே பதட்டமடைவாள், 418 00:20:54,254 --> 00:20:55,547 அப்புறம் கிளம்பிப் போயிடுவாள். 419 00:20:55,631 --> 00:20:58,884 அவளால பிரச்சனை வரும்னு நான் மட்டும்தான் நினைக்கிறேன்னு எனக்குத் தோணுது. 420 00:20:59,468 --> 00:21:02,304 அவளுக்கு ஏதாவது சுற்றுலா போக பிடிக்குமா? 421 00:21:02,387 --> 00:21:04,223 ஒருவேளை ஹொண்டுராஸுக்கு? 422 00:21:04,306 --> 00:21:07,434 ஏன்னா அவ போறதுக்கு ஏத்த மாதிரி சில பரபரப்பான நகரங்கள் எனக்குத் தெரியும். 423 00:21:07,518 --> 00:21:09,728 "சில பரபரப்பான நகரங்கள்." 424 00:21:13,815 --> 00:21:15,817 உண்மையில நான் வேற ஒரு மனுஷியா இருந்திருந்தா 425 00:21:16,777 --> 00:21:19,863 கொஞ்சம் நல்லா இருந்திருக்குமோன்னு தோணுது. 426 00:21:19,947 --> 00:21:22,074 உன்னை நீயே ரொம்ப மட்டமா நினைச்சுக்கிற போல, சரியா? 427 00:21:22,157 --> 00:21:23,867 அதாவது, என்னைப் பத்தி எனக்குத் தெரியாதா என்ன? 428 00:21:23,951 --> 00:21:24,952 நான் நான்தான். 429 00:21:25,035 --> 00:21:26,870 உன்னைப் பத்தி ஏதாவது ஒரு நல்ல விஷயத்தைச் சொல்லு. 430 00:21:26,954 --> 00:21:27,955 கெர்ரி. 431 00:21:28,038 --> 00:21:30,916 உன்னைப் பத்தி ஏதாவது ஒரு நல்ல விஷயம் சொல்லு. அட சொல்லு. 432 00:21:32,793 --> 00:21:36,672 சமைக்கும்போது சரியான அளவுல பாஸ்தா போடுறதுல நான் ரொம்ப கெட்டிக்காரி. 433 00:21:36,755 --> 00:21:38,799 சரி. ஒரு வழியா ஆரம்பிச்சுட்ட. 434 00:21:38,882 --> 00:21:39,883 ஆமா. 435 00:21:40,509 --> 00:21:43,554 ஏன்னா உன்னைப் பத்தித் தெரியாத எங்கள மாதிரி ஆளுங்களுக்கு நீ பார்க்க… 436 00:21:45,389 --> 00:21:46,640 ரொம்ப சூப்பரா தெரியுற. 437 00:21:51,270 --> 00:21:53,063 சரி, எனக்கு ஏதாவது இனிப்பு வேணும். 438 00:21:54,773 --> 00:21:56,942 பாட் கிட்ட கொஞ்சம் கேசரி இருக்கும்னு நினைக்கிறேன். 439 00:22:04,700 --> 00:22:06,076 - ஐயோ. - என்னாச்சு? 440 00:22:09,162 --> 00:22:10,289 நாம ஒன்னை எடுக்காம விட்டுட்டோம். 441 00:22:11,540 --> 00:22:13,333 ஐயோ. 442 00:22:13,417 --> 00:22:14,918 - அது… - எனக்குத் தெரியல. 443 00:22:17,004 --> 00:22:18,964 - நான் அதை எடுக்கவா… - ஆமா. ஆமா, ஆமா, ஆமா. 444 00:22:29,224 --> 00:22:30,225 அது… 445 00:22:30,809 --> 00:22:31,810 வெடிச்சுடுச்சு. 446 00:22:33,562 --> 00:22:36,648 ஒண்ணு சொல்லவா? இது நிஜமாவே கொஞ்சம் ஜாலியாத்தான் இருந்துச்சு. 447 00:22:36,732 --> 00:22:39,860 சரி, இப்போ மணி 11:15 தான் ஆகுது. நாம வேற எங்கயாவது போலாமா? 448 00:22:39,943 --> 00:22:40,944 எனக்கு ரொம்ப களைப்பா இருக்கு. 449 00:22:41,028 --> 00:22:42,779 ஒரு கபாப்பாவது சாப்பிடுவோம். வாங்க. சரியா? 450 00:22:42,863 --> 00:22:44,656 கபாப் சாப்பிடணும். அப்போதான் இந்த ராத்திரி முழுமையடையும், சரியா? 451 00:22:44,740 --> 00:22:47,826 உங்களைப் பத்தி நீங்களேயே நிறையத் தெரிஞ்சுக்கலாம், உண்மைகள் எல்லாம் தெளிவா புரியும். 452 00:22:47,910 --> 00:22:49,244 கபாப் கடைதான் பழைய காலத்து தெரபி சென்டர். 453 00:22:49,328 --> 00:22:51,705 எனக்கு நிஜமான தெரபிக்கு காசு கொடுக்க எங்க அப்பா அம்மா இருக்காங்க. 454 00:22:51,788 --> 00:22:52,789 அப்படியா? 455 00:22:54,917 --> 00:22:56,084 உங்க ஃபோன் எல்லாம் வேணுமா? 456 00:22:56,960 --> 00:22:57,961 சரி. 457 00:22:59,171 --> 00:23:00,506 - சரி. வந்து… - நன்றி, மிஸ்டர் ராஸ். 458 00:23:00,589 --> 00:23:02,257 - சரி, பத்திரமா வீட்டுக்குப் போங்க, சரியா? - சரி. 459 00:23:02,341 --> 00:23:03,592 - குட் நைட். - பை. 460 00:23:04,593 --> 00:23:08,263 - என்ன நடக்குது? இங்க என்ன நடக்குது? - என்ன? ஒண்ணுமில்ல. ஒண்ணும் நடக்கல. 461 00:23:08,347 --> 00:23:10,933 மக்கள் தங்களை மறக்க ஃபோன் மட்டும் தான் வழின்னு இல்லன்னு உங்களுக்குத் தெரியும்ல? 462 00:23:11,725 --> 00:23:13,852 உங்களுக்கு எதுக்கு இப்போ ஒரு பெரிய பார்ட்டி நைட்டு தேவைப்பட்டது? 463 00:23:16,355 --> 00:23:18,649 நாம இங்க ஒருத்தரை நினைவுகூர வந்திருக்கோம்… 464 00:23:19,191 --> 00:23:20,192 எலி. 465 00:23:22,319 --> 00:23:23,946 நண்பன், சக ஊழியன்… 466 00:23:25,531 --> 00:23:26,907 அப்பா. 467 00:23:29,243 --> 00:23:32,955 அந்த எலி எப்பவுமே ஒரு சிரிப்போடும் கிண்டலோடும்தான் இருக்கும், 468 00:23:33,038 --> 00:23:36,291 அது எந்த மாதிரியான எலினா… 469 00:23:36,375 --> 00:23:39,419 மன்னிச்சிடு, அது ஒரு நல்ல எலின்னு சொல்லச் சொல்ல, வருத்தம்தான் இன்னும் அதிகரிக்கும். 470 00:23:39,503 --> 00:23:40,504 புரிஞ்சது. 471 00:23:43,882 --> 00:23:45,843 உண்மையில அது ஒரு மாதிரி தொல்லை புடிச்ச ஒரு எலி. 472 00:23:45,926 --> 00:23:47,427 - அப்படியா? நிஜமாவா? - ஆமா. 473 00:23:48,178 --> 00:23:49,179 எங்கயாவது பார்ட்டிக்கு போனா, 474 00:23:49,263 --> 00:23:52,391 அது ரொம்ப விலை உயர்ந்த ஒயின் கொண்டு வந்ததா எல்லார்கிட்டயும் சொல்லிட்டே இருக்கும். 475 00:23:52,474 --> 00:23:53,559 அப்புறம் எப்பவும், 476 00:23:53,642 --> 00:23:56,395 "நான் கொண்டு வந்த ஒயினை ஏன் கொஞ்சம் குடிச்சுப் பாக்கலாமே? அது ரொம்ப நல்லா இருக்கும்"னு சொல்லும். 477 00:23:56,478 --> 00:23:57,938 உண்மையில… அது தேவையே இல்ல. 478 00:23:58,021 --> 00:24:00,899 நாம எல்லாரும் நண்பர்கள்தான், யாரும் விலை உயர்ந்த பாட்டில் கொண்டு வரச் சொல்லவே இல்ல, 479 00:24:00,983 --> 00:24:02,359 - அதனால… - அதேதான். 480 00:24:02,442 --> 00:24:05,904 அப்புறம் ஏதாவது விசேஷங்களுக்குக் கூப்பிட்டா, எப்பவும் தன் குழந்தையை கூட்டிட்டு வரும். 481 00:24:06,655 --> 00:24:08,574 நாம எதுவும் சொல்லவும் முடியாது. கண்டிப்பா. 482 00:24:08,657 --> 00:24:11,243 ஆனா மனசுக்குள்ள, "அட விடுப்பா, இப்போ இதுக்கு என்ன அவசியம்?"னு தோணும். 483 00:24:13,328 --> 00:24:14,371 அப்போ செத்தது நல்லதுதான். 484 00:24:27,342 --> 00:24:28,343 - உனக்கு ஒண்ணுமில்லயே? - இல்ல. 485 00:24:30,429 --> 00:24:31,430 நாம வந்து… 486 00:24:32,431 --> 00:24:34,892 நம்மால முடிஞ்ச வரைக்கும் முயற்சி பண்றோம், ஆனா ஒரே ஒரு நிமிஷம் கவனத்தைச் சிதறவிட்டாலும், 487 00:24:34,975 --> 00:24:38,478 அப்புறம் நடக்கிற விஷயத்தைத் திரும்ப மாத்தவே முடியாது. 488 00:24:41,940 --> 00:24:43,483 - மன்னிச்சிடு. - அதெல்லாம் வேணா. 489 00:24:47,696 --> 00:24:49,781 - நான்… எனக்கு ஒரு வேலை… - சரி. சரி. 490 00:24:50,282 --> 00:24:51,658 - நிச்சயமா. ஹே, நிக்கி? - சரி. 491 00:24:53,660 --> 00:24:54,953 உனக்கு வர விருப்பம் இருந்தா… 492 00:24:57,414 --> 00:24:58,582 கண்டிப்பா வர்றேன். ஆமா. 493 00:24:58,665 --> 00:25:01,293 - அப்படியா? - ஆமா. நன்றி. 494 00:25:01,376 --> 00:25:02,377 சூப்பர். 495 00:25:03,754 --> 00:25:04,755 அது… 496 00:25:13,388 --> 00:25:14,389 கபாப்ஸ் 497 00:25:14,473 --> 00:25:16,808 - அவங்க திடீர்னு உங்க வீட்டுக்கு வந்துட்டாங்களா? - திடீர்னு வந்துட்டா. 498 00:25:17,601 --> 00:25:20,479 அப்புறம், கவனி, இது கஷ்டம்னு எனக்குப் புரியுது, 499 00:25:20,562 --> 00:25:23,774 ஆனா நிக்கி இப்போ ரொம்ப பதட்டத்துல இருக்கா. 500 00:25:23,857 --> 00:25:26,235 இந்த உறவு சகஜமாகுற வரைக்கும் நாம கொஞ்சம் அவகாசம் கொடுக்கணும். 501 00:25:26,318 --> 00:25:28,987 ஒவ்வொரு நொடியும் இதையே யோசிச்சுட்டு இருக்கக் கூடாது, 502 00:25:29,071 --> 00:25:32,449 இது எப்ப வெடிக்கும்னு ஒரு பட்டாசு ஃபேக்டரி மாதிரி காத்துட்டு இருக்கக் கூடாது. 503 00:25:33,033 --> 00:25:36,411 அப்புறம், என் மச்சான் அட்லாண்டிக் கடல்ல படகு ஓட்டிட்டு இருக்கார. 504 00:25:36,495 --> 00:25:40,374 காணாம போன அம்மா, வருத்தமா இருக்குற மனைவி அப்புறம் அட்லாண்டிக் கடல்ல இருக்குற மச்சான். 505 00:25:40,457 --> 00:25:41,834 ஒரு பெரிய பிரச்சனைதான். 506 00:25:41,917 --> 00:25:44,086 பாரு, கண்டிப்பா பிரின்சஸ் அவ அம்மாகூட நேரம் செலவிடத்தான் நினைப்பா. 507 00:25:44,169 --> 00:25:46,421 பெத்த அம்மா. அது அவளோட அம்மா. அதுக்காகவாவது நினைப்பாள். 508 00:25:46,505 --> 00:25:47,631 எது எப்படியோ, அது… 509 00:25:48,465 --> 00:25:49,842 இது எனக்கு ரொம்ப மன அழுத்தமா இருக்கு, 510 00:25:49,925 --> 00:25:52,594 அப்புறம் எனக்கு… இதப் பத்தி என்ன பண்றதுன்னே தெரியல. 511 00:25:53,345 --> 00:25:55,556 அந்த இன்ஸ்டாகிராம் பொண்ணுங்க மாதிரி மத்தவங்க மேல பழி போட்டு 512 00:25:55,639 --> 00:25:57,224 புலம்புறதை நிறுத்த முயற்சி பண்றீங்களா? 513 00:25:57,307 --> 00:25:59,393 அதாவது, இது நிக்கிக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும்னு உங்களுக்குப் புரியுதுல்ல? 514 00:25:59,476 --> 00:26:00,727 - ஆமா. - நீங்க அவங்களுக்குத் துணையா இருக்கீங்களா? 515 00:26:00,811 --> 00:26:02,187 - நான் எப்பவும் அவ கூடவே இருக்கேனே. - நிஜமாவா? 516 00:26:02,271 --> 00:26:04,690 ஏன்னா நீங்க இப்போ நடுராத்திரியில ஒரு கபாப் கடையில இருக்குற மாதிரி தெரியுது. 517 00:26:06,024 --> 00:26:09,778 ஏன்னா இதுவே ஒரு ரெண்டாவது அப்பா வந்திருந்தா, இப்போ என் முன்னாடி நின்னுட்டு 518 00:26:09,862 --> 00:26:13,907 "அன்புதான் எல்லாம்"னு தத்துவம் பேசுற இந்த அமைதியான மனுஷனை நான் பார்த்திருக்கவே மாட்டேன். 519 00:26:13,991 --> 00:26:16,159 அதுக்கு பதிலா, ரெண்டு கலைமான்கள் கொம்பால முட்டிக்கிற மாதிரி சண்டையே நடந்திருக்கும். 520 00:26:16,243 --> 00:26:17,786 ஒண்ணு சொல்லவா? பிரின்சஸ் அவ ரூம்ல ஹாரி ஸ்டைல்ஸ் போஸ்டரை 521 00:26:17,870 --> 00:26:20,163 ஒட்டுனப்போ கூட எனக்கு ஒரு மாதிரி பொறாமையா இருந்தது. 522 00:26:20,664 --> 00:26:22,666 பதட்டத்துல ஒரு வெல்வெட் ஜாக்கெட் வாங்கிட்டேன். 523 00:26:22,749 --> 00:26:26,420 இல்ல, அவளோட 18-வது பிறந்தநாள் பார்ட்டியில, நீங்க அந்த ஆளுகூட 524 00:26:26,503 --> 00:26:27,838 மல்லுக்கட்டிக்கிட்டு இருப்பீங்க. 525 00:26:28,922 --> 00:26:31,175 நானா இருந்தா, பிரின்சஸுக்கும் அவ தோழிகளுக்கும் ஃப்ரீயா காபி வாங்கித் தர, 526 00:26:31,258 --> 00:26:35,804 அந்த உருப்படாத, கழுத்துல டாட்டூ குத்துன பாரிஸ்டா அப்பாவைப் பார்த்து மயங்கப் போற நாளுக்காக 527 00:26:35,888 --> 00:26:37,639 இப்பவே அவகிட்ட நல்ல பேரை சேர்த்து வெச்சுப்பேன். 528 00:26:38,223 --> 00:26:39,641 பாரு, இதான் விஷயம். இப்போ நடக்குறது தான். 529 00:26:40,142 --> 00:26:42,644 இதுதான் இந்த கபாப் கடையோட மேஜிக். 530 00:26:43,353 --> 00:26:44,980 நீ கூட இங்க வந்தா ரொம்ப புத்திசாலியா பேசுற. 531 00:26:45,564 --> 00:26:46,982 ஒண்ணு சொல்லவா? நாம வாரத்துக்கு ஒருமுறை இங்க வரலாம். 532 00:26:47,065 --> 00:26:48,192 - வேணாம். - இதப் பத்திப் பேசலாம். 533 00:26:48,275 --> 00:26:51,153 - உங்களுக்கு சரியாப் புரியலன்னு நினைக்கிறேன். - நீ ஒருநாள் ஒரு அருமையான காலியா… 534 00:26:52,321 --> 00:26:54,323 வருவ. கண்டிப்பா வருவ. 535 00:26:56,700 --> 00:26:58,744 - நண்பா. - என்ன? 536 00:26:58,827 --> 00:27:00,704 இங்க பீட்ஸா ஏதாவது கிடைக்குமா? 537 00:27:05,167 --> 00:27:07,211 ஹே. எழுந்திரு. 538 00:27:08,253 --> 00:27:09,630 மணி என்ன? 539 00:27:10,130 --> 00:27:11,507 6:30. 540 00:27:12,799 --> 00:27:14,259 நீ பீட்ஸா மார்னிங்கை மிஸ் பண்ற. 541 00:27:29,566 --> 00:27:31,026 மோசம். 542 00:28:23,662 --> 00:28:26,665 அலுவலகத்திலுள்ள பெண் 543 00:29:21,720 --> 00:29:23,722 வசனங்கள் மொழிபெயர்ப்பு மேனகா மணிகண்டன்