1 00:00:09,343 --> 00:00:10,511 அட, அதைப் பிரி. 2 00:00:14,056 --> 00:00:15,349 அடக் கடவுளே. எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. 3 00:00:15,432 --> 00:00:16,975 - யே. - இது ரொம்ப சூப்பரா இருக்கு. 4 00:00:17,059 --> 00:00:19,561 "கரெக்டா இதே மாதிரி ஷூஸை எங்களுக்கு வாங்கி கொடுங்க"னு நீ எங்களுக்கு ஈமெயில் அனுப்புனப்பவே, 5 00:00:19,645 --> 00:00:21,313 எங்களுக்கு இந்த யோசனை வந்திருச்சு. 6 00:00:21,855 --> 00:00:24,316 - நன்றி. - ஹாப்பி பர்த்டே, செல்லமே. 7 00:00:25,108 --> 00:00:26,109 - நாங்க உன்னை நேசிக்கிறோம். - நன்றி. 8 00:00:26,193 --> 00:00:27,653 - நான் போய் இதப் போட்டுப் பாக்குறேன். - ஹாப்பி பர்த்டே. 9 00:00:27,736 --> 00:00:28,987 சரி, போட்டுப் பாரு. 10 00:00:30,822 --> 00:00:31,949 ஹாப்பி பர்த்டே அன்புடன் - ஜேசன் 11 00:00:32,031 --> 00:00:33,492 "ஹாப்பி பர்த்டே. அன்புடன், ஜேசன்." 12 00:00:33,575 --> 00:00:34,576 அன்பு முத்தங்களுடன், அம்மா 13 00:00:34,660 --> 00:00:37,829 என் பாலிசி இதுதான். ஒரு வார்த்தையை தேர்ந்தெடுத்தா வாழ்க்கை முழுக்க அதையே தான் பயன்படுத்தணும். 14 00:00:37,913 --> 00:00:39,206 விதிவிலக்கே கிடையாது. 15 00:00:39,289 --> 00:00:41,750 இப்படி பண்றதால உனக்கு நிறைய நேரம் மிச்சமாகும், என்னை நம்பு. 16 00:00:41,834 --> 00:00:43,252 - ரொம்ப புத்திசாலி. - ஆமா, கண்ணா. 17 00:00:43,877 --> 00:00:46,004 சரி, அப்போ நான் பார்னெட்டுக்குக் கிளம்புறேன். 18 00:00:46,088 --> 00:00:47,506 ஓ, ஆமா. உன் பிளேஸ்மென்ட்டா? 19 00:00:47,589 --> 00:00:49,174 ஆமா, நிஜமாவே நான் அதை ரொம்ப ஆவலா எதிர்பார்க்கிறேன். 20 00:00:49,258 --> 00:00:50,759 - அப்படியா? - இந்தப் பாடப்புத்தகங்கள் போர் அடிச்சிருச்சு. 21 00:00:50,843 --> 00:00:53,762 நான் வெளில நிஜ உலகத்துக்குப் போய் உண்மையாவே ஏதாவது மாற்றம் செய்யணும்னு நினைக்கிறேன். 22 00:00:53,846 --> 00:00:55,055 - உனக்குத் தெரியுமா? - என்ன வழக்கு? 23 00:00:55,138 --> 00:00:57,266 பொருட்களை சேர்த்து வைக்கிற வியாதி உள்ள பெண். 24 00:00:57,349 --> 00:00:59,142 ஆமா, அதாவது, அவங்க கூட எனக்கு ஒரு மணிநேரம் கொடுத்தா போதும், 25 00:00:59,226 --> 00:01:01,311 அவங்க வீட்டை ஒரு டேனிஷ் ஆர்கிடெக்ட் வீடு மாதிரி மாத்திடுவேன். 26 00:01:01,395 --> 00:01:03,981 இல்ல, எல்லாத்தையும் சரி பண்ண முடியும்னு நினைச்சுட்டு அங்க நேரா உள்ள போயிடாத. 27 00:01:04,063 --> 00:01:08,277 ஜே, சில நேரங்கள்ல நீ உலகத்துல ரொம்ப ஒரு ஆண் கர்வத்தோட நடந்துக்குற. 28 00:01:09,111 --> 00:01:10,153 நன்றி. அது ஒரு நல்ல பாராட்டுதான். 29 00:01:10,779 --> 00:01:11,822 சரி. 30 00:01:12,906 --> 00:01:15,826 விக் எங்கே? அவர் தான் பிரின்ஸுக்கு அவளோட முதல் டிரைவிங் கிளாஸ் எடுக்குறதா இருந்தது. 31 00:01:15,909 --> 00:01:17,953 நான் அவருக்கு ஃபோன் பண்ணி, அவர் எங்க இருக்காருன்னு கேட்போம். 32 00:01:21,456 --> 00:01:22,958 - ஹலோ? - ஹலோ, விக்டர் ராஸ் ஹேண்டிமேன். 33 00:01:23,041 --> 00:01:24,042 அப்பா 34 00:01:24,126 --> 00:01:26,461 நார்த் லண்டன் அப்புறம் வெஸ்ட் எசெக்ஸ்லேயே நம்பர் ஒன் ஹேண்டிமேன் பிசினஸ். 35 00:01:26,545 --> 00:01:29,256 - நான் யார்கிட்ட பேசிட்டு இருக்கேன்? - நான் டோரீன் பேசுறேன். 36 00:01:29,339 --> 00:01:32,301 - சரி, டோரீன். நீங்க யாரு, செல்லம்? - நான் விக்டரோட பிஏ. 37 00:01:32,384 --> 00:01:35,470 சரி, நாங்க… நாங்க… விக்கைத் தொடர்புகொள்ளப் பாக்குறோம், டோரீன். 38 00:01:35,554 --> 00:01:36,763 சரி. உங்ககிட்ட எங்க ஆப் இருக்கா? 39 00:01:36,847 --> 00:01:38,849 உங்க ஆப்பா? இல்ல. 40 00:01:38,932 --> 00:01:41,768 எங்களைத் தொடர்புகொள்ள ஆப் தான் ரொம்பச் சுலபமான வழி. 41 00:01:41,852 --> 00:01:43,270 - சரி. சரி. - சரி. சரி. 42 00:01:43,353 --> 00:01:44,396 நான் உங்களைக் கொஞ்சம் ஹோல்டுல வைக்கிறேன். 43 00:01:44,479 --> 00:01:46,481 - நன்றி, டோரீன். - என்ன நடக்குது? 44 00:01:47,482 --> 00:01:48,525 - உங்களுக்கு என்ன தோணுது? - சூப்பர். 45 00:01:48,609 --> 00:01:50,319 - பிரமாதமா இருக்கு. - நல்லா இருக்குல? 46 00:01:50,402 --> 00:01:53,155 - தாத்தா காரை பார்க் பண்ணுறதாச் சொன்னாரு. - நீ எப்படி அவர்கிட்ட ஃபோன்ல பேசின? 47 00:01:53,238 --> 00:01:55,407 - நான் ஹோல்டுல இருக்கேன். - ஆமா, நீங்க ஆப் மூலமா பேசணும். 48 00:01:55,490 --> 00:01:57,117 - கண்டிப்பா. - நம்பவே முடியல. 49 00:01:57,201 --> 00:01:58,368 இதோ வந்துட்டாரு. 50 00:01:59,745 --> 00:02:02,039 ஓ, ஆமா. அதப் பத்தி முழுசா மறந்துட்டேன். 51 00:02:03,123 --> 00:02:06,210 இன்னைக்கு மதியம் ஆபீஸ்ல இருக்குற கெர்ரி ஒரு மியூசிக் ஈவென்ட் பண்றா. 52 00:02:06,293 --> 00:02:07,669 அதாவது, அது கண்டிப்பா மொக்கையா தான் இருக்கும், 53 00:02:07,753 --> 00:02:10,589 ஆனா நான் போய் கெர்ரிக்கு சப்போர்ட் பண்ணணும். 54 00:02:10,672 --> 00:02:12,925 - ஆமா, அருமை. நானும் அதுக்கு வர்றேன். - ஓ, சரி. 55 00:02:13,008 --> 00:02:16,094 ஆனா, உன்னோட அந்த ஒர்க் பிளேஸ்மென்ட் வேலையில நீ ரொம்ப பிஸியா இருப்பல? 56 00:02:16,178 --> 00:02:17,888 இல்ல. இல்ல, இல்ல, என் பிளேஸ்மென்ட்… 57 00:02:17,971 --> 00:02:19,556 - அதுக்குள்ள நான் வேலையை முடிச்சிடுவேன். - அப்படியா? 58 00:02:20,265 --> 00:02:21,266 சூப்பர். 59 00:02:23,519 --> 00:02:25,229 - ஹாய். - அட, இதோ வந்துட்டாரு. 60 00:02:25,312 --> 00:02:27,606 - சரி, இந்த டோரீன் யாரு? - என் பிஏ. 61 00:02:27,689 --> 00:02:29,775 உங்க பிஏ-வா? உங்களுக்கு எப்பத்துல இருந்து பிஏ இருக்காங்க? 62 00:02:29,858 --> 00:02:32,027 அது எனக்குச் சரியாத் தெரியல, 63 00:02:32,110 --> 00:02:34,071 வேணும்னா நீ டோரீன்கிட்ட கேட்டுப் பாக்குறியா? 64 00:02:34,154 --> 00:02:36,365 - வேணாம். - சரி, நாம கிளம்பலாம். 65 00:02:36,448 --> 00:02:40,118 தாத்தா, நம்ம கிளாஸ் முடிஞ்சதும் என்னை பியூட்டி பார்லருக்கு கூட்டிட்டுப் போக நேரம் இருக்குமா? 66 00:02:40,202 --> 00:02:42,120 நானும் கேட்டும் பிறந்தநாளுக்காக ஃபேஷியல் பண்ணிக்கப் போறோம். 67 00:02:42,204 --> 00:02:43,539 - ஆமா, போலாம். - நன்றி. 68 00:02:43,622 --> 00:02:45,290 ஆனா நீ இந்த விஷயத்தை எல்லாம் டோரீன்கிட்ட சொல்லி பெர்மிஷன் வாங்கணும். 69 00:02:45,374 --> 00:02:46,583 நானும் இப்போ கிளம்புறேன். 70 00:02:46,667 --> 00:02:47,668 - சரியா? - கேளு. 71 00:02:47,751 --> 00:02:50,629 ஒருவேளை பிளான் மாறி உன்னால வர முடியலன்னா, நிஜமாவே பரவாயில்ல. 72 00:02:50,712 --> 00:02:52,589 இல்ல, நான்… வரத்தான் விரும்புறேன். அதுக்காக ஆவலா காத்திருக்கேன். ஆமா. 73 00:02:52,673 --> 00:02:55,259 நீ கெர்ரியைப் பத்தி அவ்வளவு சொல்லியிருக்க, அவளைப் பாத்தா நல்லா இருக்கும். 74 00:02:55,342 --> 00:02:57,177 நேர்ல பாத்துட்டா நல்லாயிருக்கும். சரி. 75 00:02:57,261 --> 00:02:59,972 - லவ் யூ. பை, எனக்காக வேண்டிக்கோ. - சரி, லவ் யூ. பை. 76 00:03:06,728 --> 00:03:08,605 த ஒயிட் லயன் - கெர்ரி ஹாவல் வியாழன், 24 அக்டோபர் 77 00:03:10,566 --> 00:03:11,567 கேம்டென் லாக் 78 00:03:28,625 --> 00:03:33,630 சரி, இவங்கதான் ஹாரியட் ஜேம்ஸ். 73 வயசு, எல்லா பொருட்களையும் சேர்த்து வைக்கிற வியாதி உள்ளவங்க. 79 00:03:33,714 --> 00:03:35,007 - சரி. - இதனால வர்ற சுகாதார கேடு, 80 00:03:35,090 --> 00:03:37,009 தீ விபத்து அபாயம் பத்தி அக்கம் பக்கத்தினர் புகார் செஞ்சிருக்காங்க. 81 00:03:37,092 --> 00:03:40,387 இது நம்மோட ஆறாவது விசிட். இப்பதான் ஆரம்பிச்சிருக்கோம். 82 00:03:40,470 --> 00:03:42,848 சரி, இதச் சொல்லியே ஆகணும், நான் இதுக்காக ரொம்ப ஆவலா இருந்தேன். 83 00:03:42,931 --> 00:03:44,975 இது ரொம்ப ஒரு திருப்தியான வேலை. 84 00:03:45,058 --> 00:03:47,477 ஆமா, சில நேரங்கள்ல எனக்குப் பாடணும் போல இருக்கும். 85 00:03:49,062 --> 00:03:50,063 மன்னிச்சிடுங்க. 86 00:03:50,147 --> 00:03:51,899 சரி, உள்ள போறதுக்கு முன்னாடி. 87 00:03:51,982 --> 00:03:54,902 நான் ஒரு நல்ல சோஷியல் ஒர்க்கர் ஆகுறதுக்கு உங்ககிட்ட ஏதாவது டிப்ஸ் இருந்தா சொல்லுங்க, 88 00:03:54,985 --> 00:03:56,653 நான் ரொம்ப சந்தோஷப்படுவேன். 89 00:04:01,533 --> 00:04:03,285 - அவங்க உங்களுக்கு ஏதாவது குடிக்கக் குடுத்தா… - வந்து… 90 00:04:03,368 --> 00:04:06,246 - …பிளாக் காஃபி கேளுங்க. பால் காஃபி வாங்காதீங்க. - வேணாம். 91 00:04:06,330 --> 00:04:07,664 அப்புறம் தண்ணி கொதிக்கிறதை நீங்களே கவனிங்க. 92 00:04:07,748 --> 00:04:08,874 - கவனிங்க. - ஆமா. 93 00:04:08,957 --> 00:04:10,584 நான் இத எழுதிக்க மாட்டேன். 94 00:04:12,169 --> 00:04:15,088 சரி. நாம டக்குனு உள்ள போயிட்டு வந்துடலாம். 95 00:04:15,172 --> 00:04:17,423 ஏன்னா நான் திரும்ப "சேவிங் லைவ்ஸ் ஆன் த ஃப்ரண்ட் லைன்"-ஐ போய் பாக்கணும். 96 00:04:17,507 --> 00:04:18,926 நிச்சயமா. நீங்க அதப் பாக்கணும்தான், ஆமா. வாவ். 97 00:04:19,009 --> 00:04:21,220 நீங்க… ரொம்பப் பிரமாதம். நான்… உங்ககிட்ட சொல்லணும்னு நினைச்சேன். 98 00:04:21,303 --> 00:04:24,139 அது நான் என் ஃபோன்ல பாக்குற ஒரு ரியாலிட்டி ஷோ, ஆஸ்திரேலிய தீயணைப்பு வீரர்களைப் பத்தினது. 99 00:04:24,223 --> 00:04:25,807 - ஆமா, கேக்க நல்லா இருக்கு. - ஆமா. 100 00:04:27,684 --> 00:04:30,062 ஹலோ, ஹாரியட், திரும்பவும் கிறிஸ்ஸிதான் வந்திருக்கேன். 101 00:04:30,687 --> 00:04:32,898 சரி. இன்னைக்கு என் கூட ஒருத்தர் வந்திருக்காரு. 102 00:04:32,981 --> 00:04:34,358 யாரு அது? எனக்கு ஆம்பளைங்க யாரும் வேணாம். 103 00:04:34,441 --> 00:04:37,319 இல்ல, எங்களுக்கும் வேணாம் தான். ஆனா நாங்க இருக்குறவங்களை வச்சு சமாளிக்குறோம். 104 00:04:37,903 --> 00:04:38,987 இவர் கொஞ்சம் ஓவர் ஆர்வமா இருக்குற ஆளு. 105 00:04:39,071 --> 00:04:40,739 அதனால இந்த ஈரமான சூழல்லயும் இவர் நல்லா சமாளிப்பார். 106 00:04:41,698 --> 00:04:44,493 - என் ஷூவைக் கழட்டட்டுமா, ஹாரியட்? - இல்ல, அதப் போட்டுட்டே இருக்குறதுதான் நல்லது. 107 00:04:44,576 --> 00:04:46,161 - போட்டுட்டே இருக்கவா? - ஆமா. 108 00:04:46,245 --> 00:04:48,330 - ஓ, சரி. சரி. - சரி, உள்ளே போலாம். 109 00:04:48,413 --> 00:04:49,748 - சரி. - நன்றி. 110 00:04:49,831 --> 00:04:50,916 இல்ல, நானும் உள்ள வரேன், ஹாரியட். 111 00:04:50,999 --> 00:04:53,293 - இல்ல, வேணாம். - ஹாரியட். சரி, மன்னிச்சிடுங்க. வழிவிடுங்க. 112 00:05:02,094 --> 00:05:04,012 நீங்கள் எந்த மாதிரியான மனைவி, இந்தத் தேர்வை எழுதி தெரிந்துகொள்ளுங்கள். 113 00:05:04,096 --> 00:05:05,430 வீட்டை சுத்தமா வைத்திருப்பீர்களா? 114 00:05:09,476 --> 00:05:11,562 சில நேரங்களில் 115 00:05:11,645 --> 00:05:13,730 உங்கள் துணைவரைத் தவிர வேறு யார் மீதாவது உங்களுக்கு ஈர்ப்பு இருக்கிறதா? 116 00:05:16,441 --> 00:05:17,985 நிக்கி! 117 00:05:18,068 --> 00:05:20,028 - நீ நல்லாத்தானே இருக்க? - ஆமா. 118 00:05:20,112 --> 00:05:23,156 ஹொண்டுராஸ்ஸைப் பயண இடமாத் தேர்ந்தெடுக்குற முடிவை லாயர்ஸ் அதிகாரப்பூர்வமா கைவிட்டதா கேள்விப்பட்டேன். 119 00:05:23,240 --> 00:05:25,784 ஆமா. அது கஷ்டமா இருக்கு. 120 00:05:26,618 --> 00:05:29,538 - அது நல்ல யோசனைன்னு நிஜமாவே நினைச்சேன். - அது உனக்குத் தெரிய வாய்ப்பு இல்ல. 121 00:05:30,747 --> 00:05:32,374 பிணைக்கைதிகள் பத்தி ஏதாவது தகவல் வந்ததா? 122 00:05:32,457 --> 00:05:34,084 தூதரகம் திறந்ததும் நமக்கு இன்னும் நிறையத் தகவல்கள் கிடைக்கும். 123 00:05:34,710 --> 00:05:36,962 - சரி. - ஹே, முயற்சி பண்ணிப் பாக்குறதுல தப்பில்லயே. 124 00:05:38,130 --> 00:05:39,923 அந்தத் தாவரவியல் பூங்கா ரொம்ப நல்லா இருக்கு. 125 00:05:40,007 --> 00:05:41,091 - உண்மைதான். - ஆமா. 126 00:05:43,802 --> 00:05:45,304 நீ வர்ற பிளான்லதான் இருக்கியா? 127 00:05:45,387 --> 00:05:47,639 ஆமா. ஆமா, ஆமா, கண்டிப்பா. 128 00:05:48,348 --> 00:05:49,850 - அங்கே பார்ப்போம். - ஆமா, அங்கே பார்ப்போம். 129 00:05:49,933 --> 00:05:51,101 மிஸ் பண்ண மாட்டேன். 130 00:05:58,609 --> 00:05:59,610 ஆமாம் 131 00:05:59,693 --> 00:06:01,445 உங்கள் முடிவுகளைப் பாருங்கள்! 132 00:06:05,240 --> 00:06:06,950 23% நீங்கள் ஒரு மோசமான மனைவி!!! 133 00:06:11,955 --> 00:06:13,248 அவர் போயிட்டாரா? 134 00:06:14,958 --> 00:06:16,001 ஆமா. 135 00:06:17,294 --> 00:06:19,922 - அவர் ரொம்ப கோபமா இருந்தார், இல்லயா? - ஆமா. 136 00:06:20,506 --> 00:06:23,008 அவ்வளவு கோபமா இருக்குறவங்க நிஜமாவே ரோட்டுக்கு வரக் கூடாது. 137 00:06:23,759 --> 00:06:24,968 ஆனா, அவன் நடைபாதையிலதான் இருந்தான். 138 00:06:26,220 --> 00:06:27,513 கடைசியில இல்ல. 139 00:06:27,596 --> 00:06:29,932 - அவன் மேல வண்டி மோதாம இருக்கத்தான் அவன் பாத்தான். - ஆமா, மோதிக்காம போயிட்டார். 140 00:06:30,015 --> 00:06:32,643 அதான் இங்க முக்கியமான விஷயம்னு நான் நினைக்கிறேன். 141 00:06:35,437 --> 00:06:37,105 ஜோஷுவா ஆல்ட்பேக் ஹேர் & பியூட்டி 142 00:06:39,733 --> 00:06:43,654 சரி, கேட் இன்னும் ரிப்ளை பண்ணல. அவங்க நேரா அங்கேயே வந்துடுவாங்கன்னு நினைக்கிறேன். 143 00:06:44,530 --> 00:06:47,324 சரி, அப்போ, நான் இங்கேயே காத்திருக்கேன். 144 00:06:47,824 --> 00:06:49,284 என்ன, நீங்க இங்கேயே உட்கார்ந்திருக்கப் போறீங்களா? 145 00:06:50,953 --> 00:06:52,120 - ஆமா. - இல்ல, ஆனா, நாங்க… 146 00:06:52,204 --> 00:06:53,413 நாங்க ஃபேஷியல் அப்புறம் மேனிக்யூர் பண்ணிக்கப் போறோம். 147 00:06:53,497 --> 00:06:55,415 குறைஞ்சது ரெண்டு மணிநேரமாவது ஆகும். 148 00:06:55,499 --> 00:06:57,000 நான் இங்கேயே இருப்பேன். 149 00:06:57,084 --> 00:06:58,335 சரி. 150 00:06:58,418 --> 00:07:00,754 - நீங்க ரேடியோ கேட்கப் போறீங்களா? - இல்ல. 151 00:07:00,838 --> 00:07:03,507 - சரி, உங்ககிட்ட ஏதாவது புக் இருக்கா? - இல்ல. 152 00:07:03,590 --> 00:07:06,718 அப்போ நீங்க சும்மா ரோட்டை பாத்துக்கிட்டே இங்கேயே உட்கார்ந்திருக்கப் போறீங்களா? 153 00:07:06,802 --> 00:07:08,011 ஆமா. 154 00:07:08,762 --> 00:07:09,763 நீங்க சோகமா இருக்கீங்களா? 155 00:07:11,431 --> 00:07:12,432 நான் ரொம்பத் திருப்தியா இருக்கேன். 156 00:07:12,516 --> 00:07:14,101 சரி, நீங்க இங்க சும்மா வேடிக்கை பாத்துட்டு உட்கார்ந்திருக்கீங்கன்னு 157 00:07:14,184 --> 00:07:15,978 தெரிஞ்சும், நான் எப்படி அங்க ஜாலியா இருக்க முடியும்? 158 00:07:16,061 --> 00:07:18,480 அதுக்குத்தான் நான் குளோவ் பாக்ஸ்ல ஒரு சாத்துக்குடி வச்சிருக்கேன். 159 00:07:19,189 --> 00:07:21,066 இன்னும் ஒரு 40 நிமிஷத்துல நான் அதைச் சாப்பிடுவேன். 160 00:07:21,149 --> 00:07:22,401 ஆமா, அது கொஞ்ச நேரத்தை ஓட்டும். 161 00:07:22,484 --> 00:07:23,861 ஆமா. 162 00:07:39,751 --> 00:07:43,755 சரி, செல்லம், எனக்கு இந்த சப்போர்ட் பிளான் மேல 163 00:07:43,839 --> 00:07:45,924 உங்களோட ஒரு கையெழுத்து மட்டும் வேணும். 164 00:07:46,008 --> 00:07:48,677 - இல்ல, நான் இதுல கையெழுத்துப் போட மாட்டேன். - நீங்க சொல்றது சரிதான். 165 00:07:48,760 --> 00:07:53,557 அப்படினா, நான் உங்களை இந்த ஃபார்ம்ல கையெழுத்துப் போடச் சொல்லலாமா, அதாவது, நீங்க அந்த ஃபார்ம்ல 166 00:07:53,640 --> 00:07:55,475 கையெழுத்துப் போட மாட்டீங்கன்னு இதுல கையெழுத்துப் போடணும். 167 00:07:55,559 --> 00:07:58,979 அப்புறம் இது நாம இப்போ பேசிட்டு இருக்கோம் என்பதற்கான ஒரு கன்பர்மேஷன். 168 00:07:59,730 --> 00:08:00,731 சரி. 169 00:08:04,860 --> 00:08:05,861 இதோ முடிஞ்சுடுச்சு. 170 00:08:05,944 --> 00:08:11,241 மிக்க நன்றி. சரி, இது உங்க காப்பி. இதை வச்சுக்கோங்க. 171 00:08:11,867 --> 00:08:14,411 - நன்றி. - இது என்னோட காப்பி. 172 00:08:14,494 --> 00:08:16,330 சரி. சரி. 173 00:08:16,413 --> 00:08:19,416 அப்போ, இன்னைக்கு நாள் முழுக்க ஜாலியா இருங்க. 174 00:08:22,002 --> 00:08:23,504 சாரி, என்ன… என்ன நடக்குது? 175 00:08:24,463 --> 00:08:27,299 சாரி, ஏன்… நாம ஏன் கிளம்புறோம்? நாம இன்னும் எதுவுமே பண்ணலையே. 176 00:08:27,382 --> 00:08:29,468 இல்ல, அவங்க ஃபார்ம்ல கையெழுத்துப் போடல. 177 00:08:29,551 --> 00:08:32,304 இல்ல, ஆனா இதையெல்லாம் சரி பண்றதுக்கு நாம என்ன பண்ணப்போறோம்? 178 00:08:32,386 --> 00:08:35,515 இன்னும் ரெண்டு தடவை அவங்க கையெழுத்துப் போட மறுத்துட்டா, நாம தெரபி வழிகளைச் சொல்லுவோம், 179 00:08:35,599 --> 00:08:36,642 அதையும் அவங்க மறுப்பாங்க. 180 00:08:36,725 --> 00:08:39,144 அப்புறம், எல்லா முயற்சிகளையும் எடுத்த பிறகு, ஒரு சம்பவ அறிக்கை மற்றும் 181 00:08:39,227 --> 00:08:41,647 பாதுகாப்பு மதிப்பீட்டோடு எல்லாத்தையும் ஆவணப்படுத்துவோம். 182 00:08:41,730 --> 00:08:43,565 அப்புறம் நாம ஒரு புதிய சப்போர்ட் பிளான் உருவாக்குவோம், 183 00:08:43,649 --> 00:08:46,610 அதை சோஷியல் ஒர்க்கர் மேலதிகாரி கிட்ட கொடுத்துக் கையெழுத்து வாங்குவோம். 184 00:08:46,693 --> 00:08:48,111 சரி. சரி. 185 00:08:49,238 --> 00:08:51,156 இங்க இருக்குறதெல்லாம் நம்ம ஃபார்ம்ஸ் மட்டும் தானான்னு நமக்கு உறுதியாத் தெரியுமா? 186 00:08:51,240 --> 00:08:53,575 ஒருவேளை நாம வர்றதுக்கு முன்னாடி இந்த வீடு காலியா இருந்திருக்குமோ. 187 00:08:53,659 --> 00:08:56,161 ஹே, இங்க பாருங்க, நாம உள்ள போய் திரும்ப ஒரு தடவை முயற்சி பண்ணுவோம். 188 00:08:56,245 --> 00:08:58,997 ஹே, நான் நிறைய பொருட்களைச் சேர்த்து வைக்கிறவங்களைப் பத்தின கேஸ் ஸ்டடி படிச்சிருக்கேன்… 189 00:08:59,623 --> 00:09:00,874 அப்படியா? ஏன் முன்னாடியே சொல்லல? 190 00:09:00,958 --> 00:09:02,334 அப்போ நான் உங்களை இங்கேயே விட்டுடட்டுமா? 191 00:09:02,417 --> 00:09:03,502 - அப்புறம் நான் கிளம்புறேன். - இல்ல. 192 00:09:03,585 --> 00:09:06,505 இதுக்கு நடுவுல எப்பவும் ஒரு பெரிய மனக்காயம் இருக்கும். 193 00:09:06,588 --> 00:09:10,634 அது என்னன்னு கண்டுபிடிச்சுட்டா, நாம அவங்களுக்கு உதவலாம். 194 00:09:10,717 --> 00:09:12,261 அப்புறம், இப்போதான் இந்த வாசனைக்கு நான் கொஞ்சம் பழகிருக்கேன். 195 00:09:12,344 --> 00:09:15,264 இப்போ நாம கிளம்பிட்டா, அடுத்த முறை வரும்போது நான் திரும்பவும் பழக வேண்டியிருக்கும், அதனால… 196 00:09:15,347 --> 00:09:17,349 - இல்ல. - ஹாரியட். 197 00:09:21,436 --> 00:09:24,064 அட்லாண்டிக் எனக்கு செட் ஆகுற இடமா இருந்ததில்ல. 198 00:09:24,147 --> 00:09:26,859 கலாச்சார ரீதியா பாத்தா கடல் ஒரு பயனற்ற இடம். 199 00:09:27,484 --> 00:09:29,194 ஆனா இப்போ நீங்க ஒரு பாலைவனத்தைக் கடக்க விரும்புறீங்களா? 200 00:09:29,278 --> 00:09:32,281 ஆமா, அட்டகாமாவை. குதிரையில போய்க் கடக்கணும். 201 00:09:32,364 --> 00:09:33,740 நீங்க எதுவுமே கத்துக்கலையா? 202 00:09:34,283 --> 00:09:35,534 நேர்மாறா சொல்லணும்னா. 203 00:09:35,617 --> 00:09:38,120 என்னால ஒரு கடலைக் கடக்க முடியல. கடலுக்கு நேர் எதிர் எது? 204 00:09:38,203 --> 00:09:40,873 நீங்க எதையாவது ஒன்னைத் தாண்டிக்கிட்டே இருக்கிறதை நிறுத்துறீங்களா? 205 00:09:40,956 --> 00:09:42,499 ஒருவேளை இது என் லெதர் வேலையைத் தடுக்குமோன்னு நீ பயந்தா, 206 00:09:42,583 --> 00:09:44,418 - அப்படி எதுவும் நடக்காது. - சரி, போதும். 207 00:09:44,501 --> 00:09:48,005 ஸ்காட், நீங்க இதை இதோட நிறுத்தணும். என்னால இதுக்கு மேல தாங்க முடியாது. 208 00:09:48,088 --> 00:09:51,049 என்னால இதுக்கு மேல எந்த ப்ராஜெக்ட்டையும் தாங்க முடியாது. எனக்கு இது போதும். 209 00:09:51,133 --> 00:09:52,384 நீ என்ன சொல்ல வர்ற? 210 00:09:52,467 --> 00:09:53,886 சொல்லப்போனா, இது பார்க்குக்கு போற வழி இல்ல. 211 00:09:53,969 --> 00:09:55,596 நான் உங்களை பார்க்குக்குக் கூட்டிட்டுப் போகல. 212 00:09:56,180 --> 00:09:58,140 உங்களுக்காக என்கிட்ட ஒரு புது ப்ராஜெக்ட் இருக்கு. 213 00:09:58,223 --> 00:10:02,144 நீங்க அதுல முழுமையா உங்களை ஈடுபடுத்திக்கிட்டா, 214 00:10:02,227 --> 00:10:07,149 அது உங்களைச் சுத்தி இருக்குற மக்களோட வாழ்க்கையில பெரிய மாற்றத்தை உண்டாக்கும். 215 00:10:07,774 --> 00:10:08,817 அது என்ன? 216 00:10:10,694 --> 00:10:13,155 சரி, ஸ்காட், நீங்க ஏன் தெரபிக்கு வந்திருக்கீங்க? 217 00:10:14,323 --> 00:10:15,324 என் மனைவிக்காக. 218 00:10:21,872 --> 00:10:24,124 ஹலோ? இதோ இருக்காங்க. 219 00:10:24,208 --> 00:10:26,084 இப்பவும் நான் உங்க ஃபார்ம்ஸ்ல கையெழுத்துப் போட மாட்டேன். 220 00:10:26,168 --> 00:10:29,296 நாம அந்த ஃபார்ம்ஸைப் பத்தி அப்புறம் பேசுவோமே? நாம சும்மா… 221 00:10:31,632 --> 00:10:33,008 கொஞ்ச நேரம் பேசலாமா? 222 00:10:33,842 --> 00:10:35,219 நீங்களும் நானும், ம்? 223 00:10:35,302 --> 00:10:37,471 பாருங்க, எனக்குப் புரியுது. 224 00:10:37,554 --> 00:10:40,724 இது எவ்வளவு கஷ்டம்னு எனக்குத் தெரியும். உண்மையாவே தெரியும், ஆனா… 225 00:10:42,184 --> 00:10:43,977 இவன் என்னைத் தொட்டுட்டான்! இது ஒரு தாக்குதல். 226 00:10:44,061 --> 00:10:45,687 - ஆமா, ஃபார்ம் எடுக்கத்தான்… - அந்தப் பாழாய்ப்போன ஃபார்ம்ஸ்லாம் வேணாம்! 227 00:10:45,771 --> 00:10:47,689 இது ஒண்ணும் தாக்குதல் இல்ல. அப்படி இல்லன்னு உங்களுக்கே தெரியும். 228 00:10:47,773 --> 00:10:49,358 - நீங்க வலியில இருக்கீங்கன்னு தோணுது. - ஆமா, இருக்கேன் தான்! 229 00:10:49,441 --> 00:10:52,110 இல்ல, உங்க கை வலி இல்ல. மன வலி. 230 00:10:52,194 --> 00:10:54,821 - யாரு இந்த முட்டாள்? - இவர்… இவர் ஒரு புக் படிச்சிருக்காரு. 231 00:10:54,905 --> 00:10:57,449 பாருங்க, இங்க சில பிரச்சனைகள் இருக்குன்னு நாங்க கவலைப்படுறோம், சரியா? 232 00:10:57,533 --> 00:11:00,369 உங்க உடல்நலம் அப்புறம் நல்வாழ்வு சம்பந்தமான விஷயங்கள். 233 00:11:00,452 --> 00:11:03,956 அப்புறம் ஹாரியட், அதையெல்லாம் ஒண்ணா சேர்த்துப் பாக்கும்போது, கூடவே சில… 234 00:11:04,039 --> 00:11:06,375 அடக் கடவுளே, எனக்கு 73 வயசாகுது. நீங்க எப்போதான் 235 00:11:06,458 --> 00:11:08,794 - இதை முடிக்கப் போறீங்க? - உங்க வீட்டுல ரொம்ப அதிகமான பொருட்கள் இருக்கு! 236 00:11:08,877 --> 00:11:10,462 - யாரு சொன்னா? - முதல்ல உங்க பக்கத்து வீட்டுக்காரங்க. 237 00:11:10,546 --> 00:11:12,464 அப்படினா, நான் அவளைப் பத்தி ஒரு புகார் கொடுக்கணும். 238 00:11:12,548 --> 00:11:13,674 அவ பாக்க ரொம்பப் பெருசா இருப்பா. 239 00:11:13,757 --> 00:11:15,509 எங்களால அந்த மாதிரி விஷயங்கள்ல எல்லாம் தலையிட முடியாது, இல்லயா? 240 00:11:15,592 --> 00:11:18,011 ஏன் முடியாது? உடல்நலம் அப்புறம் நல்வாழ்வைப் பத்திப் பேசுங்க. 241 00:11:18,095 --> 00:11:19,638 பாருங்க, ஒண்ணு சொல்றேன்… நான் சொல்றதைக் கேளுங்க. 242 00:11:19,721 --> 00:11:22,683 நாம ஏன் இங்க இருக்குற கொஞ்சப் பொருட்களை, இந்த வழியில இருக்குறதை மட்டும்… 243 00:11:22,766 --> 00:11:25,060 - கொஞ்சம் ஒதுக்கி வைக்கக்கூடாது? - வேணாம்… நான் பண்ண மாட்டேன்… 244 00:11:25,143 --> 00:11:27,104 அதனால, ஏதாவது அவசர நிலை ஏற்பட்டா உங்களால உள்ள வரவும் 245 00:11:27,187 --> 00:11:30,649 வெளிய போகவும் முடியும்னு தெரிஞ்சுக்கிட்டு இந்த இடத்தை விட்டு போனா, எனக்கு நிம்மதியா இருக்கும். 246 00:11:30,732 --> 00:11:32,609 நான் இதை இங்க வைக்கிறேன். 247 00:11:37,865 --> 00:11:38,866 சரி. 248 00:11:39,908 --> 00:11:40,993 அப்போ, எல்லாம் முடிஞ்சுதா? 249 00:11:43,704 --> 00:11:45,414 மன்னிச்சிடுங்க, நான்… நிஜமாவே… 250 00:11:45,497 --> 00:11:47,583 நான் இந்த ஃபோனை எடுத்தாகணும். இது… சீக்கிரம் பேசிட்டு வந்துடுறேன். 251 00:11:47,666 --> 00:11:48,792 ஹலோ? 252 00:11:48,876 --> 00:11:49,877 ஹாய், இது நான்தான். 253 00:11:51,545 --> 00:11:53,130 நான் ஃபோன் பண்ண காரணமே, 254 00:11:53,213 --> 00:11:55,674 நீ கெர்ரியைச் சந்திக்கிறதுக்கு முன்னாடி, 255 00:11:56,550 --> 00:11:58,468 நான் உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்னு நினைச்சேன். 256 00:11:58,552 --> 00:12:00,137 செல்லம், மன்னிச்சிடு, என்னால இப்போ பேச முடியாது. 257 00:12:00,220 --> 00:12:03,390 ஆனா என்னால அந்த நிகழ்ச்சிக்கு வர முடியும்னு தோணல. 258 00:12:04,558 --> 00:12:05,559 சரி. 259 00:12:06,727 --> 00:12:07,978 அது வருத்தமான விஷயம் தான். 260 00:12:10,397 --> 00:12:11,899 எப்படி? ஒண்ணும் பிரச்சனை இல்லயே? 261 00:12:11,982 --> 00:12:14,526 நான் நினைச்சதை விடக் கொஞ்சம் அதிக நேரமாகுது. இங்க ஒரே பிரச்சனையா இருக்கு. 262 00:12:14,610 --> 00:12:17,029 ஓ, நிஜமாவா? ஒரு நல்ல விஷயம் கூட இல்லயா? 263 00:12:18,572 --> 00:12:20,240 விடுதலை 27 ஆண்டுகளுக்குப் பிறகு மண்டேலா விடுதலை ஆனார் 264 00:12:20,324 --> 00:12:21,825 வந்து, நெல்சன் மண்டேலா விடுதலையாகிட்டாரு. 265 00:12:24,995 --> 00:12:29,374 அப்புறம் நான் அந்த செஸ்னா 172 ஸ்கைஹாக் ஓட்டக் கத்துக்கிட்டேன், 266 00:12:29,458 --> 00:12:32,211 அது ஒரு சிங்கிள் என்ஜின், ஃபிக்ஸட் விங் ஏர்கிராஃப்ட். 267 00:12:32,294 --> 00:12:35,756 அப்போதான், ஒரு முழுமையான அங்கீகாரம் பெற்ற ஸ்கூபா இன்ஸ்ட்ரக்டர் ஆகுறதுக்கு 268 00:12:35,839 --> 00:12:38,675 வெறும் ஆறு வாரம் தான் ஆகும்னு நான் தெரிஞ்சுக்கிட்டேன், அதனால… 269 00:12:38,759 --> 00:12:40,344 ஆனா நீங்க ஏன் இதையெல்லாம் செஞ்சீங்கன்னு நினைக்கிறீங்க? 270 00:12:40,427 --> 00:12:43,972 அதாவது, எனக்கு… எப்பவுமே நிறையப் பொழுதுபோக்குகள் இருக்கும். 271 00:12:44,056 --> 00:12:46,016 நான் அப்படிப்பட்ட ஒரு ஆளு தான். 272 00:12:46,099 --> 00:12:49,102 அப்போ அது யாரு ஸ்காட்? நீங்க யாரு? 273 00:12:49,186 --> 00:12:52,105 உங்களுக்குத் தெரிஞ்ச மாதிரி, நான் பல முகங்கள் கொண்டவன். 274 00:12:52,856 --> 00:12:56,276 நான்… நான் ஒரு கவிஞன். ஒரு சிற்பி. 275 00:12:56,360 --> 00:12:59,530 நான் NVQ தரத்துல சிலைகள் செய்வேன், நானே செக் பண்ணிப்பேன். 276 00:12:59,613 --> 00:13:02,199 - நான்… - இல்ல, இல்ல, இல்ல. நீங்க என்ன செஞ்சீங்கன்றது இல்ல. 277 00:13:02,282 --> 00:13:03,450 நீங்க யாருன்னு சொல்லுங்க. 278 00:13:03,534 --> 00:13:06,328 ஏன்னா இந்த ப்ராஜெக்ட்ஸ் எல்லாம், உங்களைத் திசைதிருப்புற விஷயங்களாத் தோணுது. 279 00:13:07,079 --> 00:13:10,832 எதிலிருந்து உங்களை திசை திருப்பிக்கணும்னு நீங்க நினைக்கிறீங்கன்னு எனக்கு ஆச்சரியமா இருக்கு. 280 00:13:11,750 --> 00:13:13,544 ஒருவேளை உங்களிடமிருந்தேவா? 281 00:13:14,586 --> 00:13:15,754 என்கிட்ட இருந்தா? 282 00:13:15,838 --> 00:13:19,258 உங்க கூடவே நீங்க நேரம் செலவிடுறதிலிருந்து. நிஜமா நீங்க யாரோ, அதாவே இருக்கிறதிலிருந்து. 283 00:13:22,886 --> 00:13:23,929 அப்போ அது யாரு? 284 00:13:24,972 --> 00:13:25,973 நீங்களே சொல்லுங்க. 285 00:13:44,116 --> 00:13:45,951 ஏதோ சின்னத் தகவல்பரிமாற்றக் குறைபாடு நடந்திருக்குன்னு நினைக்கிறேன். 286 00:13:46,827 --> 00:13:48,662 - அவ மறந்துட்டாளா? - இல்ல. 287 00:13:49,621 --> 00:13:53,000 நான்தான் தப்பு பண்ணிட்டேன். அவங்களுக்கு மெசேஜ் பண்ணி ஞாபகப்படுத்த மறந்துட்டேன், அதான்… 288 00:13:55,878 --> 00:13:57,421 மூணு விதமான மனுஷங்க இருக்காங்க. 289 00:13:58,338 --> 00:14:00,382 உடனே கேட்டா, அதை விட அதிகமாவே இருப்பாங்கன்னு தோணுது. 290 00:14:02,301 --> 00:14:04,678 சில பேர் ஃபுல் சார்ஜ் ஆன கார் பேட்டரி மாதிரி, 291 00:14:05,304 --> 00:14:06,597 அவங்களை நீ நம்பலாம். 292 00:14:07,764 --> 00:14:10,559 சில பேர் சார்ஜ் இல்லாத கார் பேட்டரி மாதிரி, 293 00:14:10,642 --> 00:14:12,519 அதுவும் பரவாயில்ல, ஏன்னா அவங்களை நீ சும்மா தவிர்த்துடலாம். 294 00:14:13,854 --> 00:14:17,482 ரொம்ப ஆபத்தான மனுஷங்க இந்த பாதி சார்ஜ் இருக்குற பேட்டரிங்க தான்… 295 00:14:18,525 --> 00:14:21,987 ஏன்னா அவங்க உனக்கு ஒரு நம்பிக்கையை கொடுப்பாங்க, நீயும் அவங்களை நம்புவ, 296 00:14:22,779 --> 00:14:24,948 ஆனா முக்கியமான நேரத்துல அவங்க உன்னை கைவிட்டுடுவாங்க. 297 00:14:26,533 --> 00:14:29,536 கடைசியில நீ பிரெக்கான் பீக்கன்ஸ்ல தவிச்சுப்போய் நிப்ப. 298 00:14:35,417 --> 00:14:37,878 ஒருத்தர் எந்த மாதிரியான மனுஷன்னு நாம எப்படித் தெரிஞ்சுக்க முடியும்? 299 00:14:40,005 --> 00:14:44,259 உங்ககிட்டயே கேட்டுக்கோ, "உன் கூட நான் பிரெக்கான் பீக்கன்ஸ்க்கு வருவேனா?"ன்னு. 300 00:14:48,096 --> 00:14:49,598 நீங்க ஒரு தனி பாட்காஸ்ட் ஆரம்பிக்கணும். 301 00:14:49,681 --> 00:14:51,808 நீ ஆரம்பிக்காத. நான் பிஸியா இருக்கேன். 302 00:14:51,892 --> 00:14:52,935 கண்டிப்பா பண்ணணும். 303 00:14:55,187 --> 00:14:56,855 ஜோஷுவா ஆல்ட்பேக் ஹேர் & பியூட்டி 304 00:15:00,192 --> 00:15:01,318 உங்களோட ஸ்கின் கேர் பிளான் என்ன? 305 00:15:02,694 --> 00:15:04,696 முகத்தைக் கழுவ நீங்க எதைப் பயன்படுத்துவீங்க? 306 00:15:04,780 --> 00:15:08,325 எதுவும் இல்ல. ஷாம்பு போடும்போது அது அப்படியே முகம் வழியா ஓடும், அவ்வளவுதான். 307 00:15:22,965 --> 00:15:24,967 ரொம்ப அதிகமா ஸ்கிரப் பண்ணாதீங்க. 308 00:15:25,050 --> 00:15:28,053 இலவச மருந்து வாங்கும்போது நான் ஐடி காட்ட வேண்டிய நிலைமை வரக்கூடாதுன்னு நினைக்கிறேன். 309 00:15:32,140 --> 00:15:33,976 ஒரு கட்டத்துல எல்லாம் அளவுக்கு மீறிப் போயிடும். 310 00:15:34,059 --> 00:15:35,894 ஒருத்தர் ரொம்ப நாளா கஷ்டப்பட்டுட்டு இருக்கும்போது, 311 00:15:35,978 --> 00:15:37,437 நாம ஏதாவது செஞ்சே ஆகணும். 312 00:15:39,147 --> 00:15:42,609 ஆமா. இல்ல, இந்தத் தெரபி எனக்கு நிஜமாவே நல்லதா இருக்கும்னு நான் நினைக்கிறேன். 313 00:15:43,861 --> 00:15:46,321 சரி. அப்புறம் ஸ்காட்டுக்கும் கூடவா? 314 00:15:46,405 --> 00:15:47,823 - ஒண்ணு சொல்லவா? - அது வந்து… 315 00:15:47,906 --> 00:15:51,159 - ஓ, ஆமா. ஆமா, ஸ்காட்டுக்கும் தான். - ஆமா. 316 00:15:51,243 --> 00:15:53,120 சரி, எதுவா இருந்தாலும், நன்றி. என்னை அழைச்சதுக்கு ரொம்ப நன்றி. 317 00:15:53,203 --> 00:15:54,872 ஓ, ஆமா. அது பரவாயில்ல. 318 00:15:54,955 --> 00:15:57,499 சொல்லப்போனா… நான் உன்கிட்ட ஒண்ணு சொல்லணும். 319 00:15:58,458 --> 00:15:59,543 ஹே! நிக்கி! 320 00:15:59,626 --> 00:16:00,627 ஹலோ! 321 00:16:10,971 --> 00:16:12,431 கெர்ரி, இவள் என் சகோதரி கரேன். 322 00:16:12,514 --> 00:16:13,932 - ஹே. - ஹலோ. 323 00:16:15,017 --> 00:16:16,018 வந்ததுக்கு நன்றி. 324 00:16:16,602 --> 00:16:19,104 இல்ல, இல்ல, பரவாயில்ல. நிஜமாவே இதை எதிர்பார்த்துட்டு இருக்கேன்… 325 00:16:19,188 --> 00:16:20,355 எதிர்பார்த்துட்டு இருக்கேன். 326 00:16:20,981 --> 00:16:22,232 அதை ஆவலா எதிர்பார்க்கிறேன். 327 00:16:23,108 --> 00:16:25,194 அதாவது, நான் அதைப் பாக்குறேன், அப்புறம் முன்னாடி பாக்குறேன்… 328 00:16:25,277 --> 00:16:26,737 ஆவலா எதிர்பார்க்கிறேன்! 329 00:16:28,739 --> 00:16:30,282 உண்மையாகத்தான். 330 00:16:35,579 --> 00:16:37,289 இப்போ நடந்ததெல்லாம் என்னது? 331 00:16:37,372 --> 00:16:38,790 எனக்கு என் கூட வேலை பாக்குறவனை ரொம்பப் பிடிச்சிருக்கு. 332 00:16:40,709 --> 00:16:41,877 சூப்பர். 333 00:16:42,878 --> 00:16:46,131 நான் சும்மா இது போயிடும்னு நினைச்சேன், ஆனா ஒரு மாசமாயிடுச்சு. 334 00:16:46,715 --> 00:16:48,675 - ஏதாவது நடந்ததா? - என்னது? இல்லவே இல்ல! 335 00:16:48,759 --> 00:16:50,344 நிச்சயமா அப்படி எதுவும் நடக்கல. 336 00:16:53,347 --> 00:16:54,765 சாரி, நீ என்ன ஏமாந்துட்டியா? 337 00:16:54,848 --> 00:16:56,517 - அது வந்து கொஞ்சம் அப்படிதான், ஆமா. - கரேன்! 338 00:16:56,600 --> 00:16:59,019 அது கொஞ்சம் ஜாலியா இருந்திருக்கும்ல. 339 00:16:59,102 --> 00:17:01,188 இப்போதெல்லாம் எனக்குக் கிடைக்குற ஒரே காசிப் ஸ்டீவிகிட்ட இருந்துதான், 340 00:17:01,271 --> 00:17:03,398 அதுவும் பெரும்பாலும் எந்தக் குழந்தைகளுக்கு இன்னும் படிக்கத் தெரியலன்றதைப் பத்திதான். 341 00:17:03,482 --> 00:17:05,150 எனக்கு ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கு. 342 00:17:06,401 --> 00:17:08,904 சும்மா வேடிக்கை பாக்குறதுல தப்பில்லை. 343 00:17:08,987 --> 00:17:10,614 ஆனா நீ அதை ருசி பாக்கக் கூடாது. 344 00:17:11,823 --> 00:17:14,159 ஆனா நான் அவனை அப்படியே கடையை விட்டு வெளில தூக்கிட்டுப் போயிடுவேன். 345 00:17:14,242 --> 00:17:16,203 சரி, சரி. இது கண்டிப்பா எனக்கு உதவியா இல்ல. 346 00:17:17,329 --> 00:17:20,290 அவனுக்கும் என்னைப் பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன், அதான் ஒரு மாதிரி ஆபத்தா தோணுது. 347 00:17:22,416 --> 00:17:24,252 கடவுளே, திடீர்னு நான் கல்யாணம் ஆனவள் என்ற உணர்வு அதிகமாயிடுச்சு. 348 00:17:25,253 --> 00:17:27,548 அவன் மேல இருக்கிற ஈர்ப்பை குறைக்க நானே முயற்சி பண்ணிட்டு இருக்கேன். அது… 349 00:17:27,631 --> 00:17:29,216 ரொம்பக் கஷ்டமா இருக்கு. 350 00:17:29,299 --> 00:17:32,678 ஆமா. அவன்கிட்ட பிடிக்காத விஷயம்னு எதுவும் இல்லையே. 351 00:17:38,100 --> 00:17:40,060 நாம இன்னும் ஒரு தடவை முயற்சி பண்ணலாமா? ப்ளீஸ்? 352 00:17:40,143 --> 00:17:43,397 இங்க சில வழிமுறைகள் இருக்கு, இன்னைக்கு நம்மால முடிஞ்சதை எல்லாம் நாம செஞ்சுட்டோம். 353 00:17:43,480 --> 00:17:46,692 ஆனா இந்த ஃபார்ம்ஸ் எதுவும் நிஜமான பிரச்சனைக்குத் தீர்வாகாது. 354 00:17:46,775 --> 00:17:48,068 - ஆகுமா? - ஆமா, ஆமா. 355 00:17:48,151 --> 00:17:49,611 நம்ம எல்லாருக்கும் இந்த அரசு நடைமுறைகள் பிடிக்காது. 356 00:17:49,695 --> 00:17:51,446 ஆனா இந்த நடைமுறைகள் இல்லாத இடங்கள்லயும் நான் வேலை பார்த்திருக்கேன், 357 00:17:51,530 --> 00:17:53,532 என்னை நம்புங்க, அது இல்லாதப்போதான் அதோட அருமை புரியும். 358 00:17:54,491 --> 00:17:57,077 அதோடு, இன்னும் அஞ்சு நிமிஷம் ஆனா, நான் இந்த வீட்டு பாத்ரூமைப் பயன்படுத்த வேண்டிய நிலைமை வரும், 359 00:17:57,160 --> 00:17:59,162 அது ஒரு கொடூரமான கனவு மாதிரி இருக்கும், அதனால… 360 00:17:59,788 --> 00:18:00,789 நன்றி. 361 00:18:06,962 --> 00:18:09,590 கிறிஸ்ஸி, கொஞ்சம் நில்லுங்க. நில்லுங்க! அங்கேயே நில்லுங்க. ஒரு நிமிஷம். 362 00:18:09,673 --> 00:18:12,342 இங்க பாருங்க. இந்த மாதிரி வழக்குகள் எல்லாம் ஒரு புதைமணல் மாதிரி, சரியா? 363 00:18:12,426 --> 00:18:15,095 நீங்க ரொம்ப ஆழமா போகாம மேலோட்டமா இருக்கணும். 364 00:18:15,179 --> 00:18:17,598 நீங்க ரொம்ப உள்ள இறங்குனா, அப்படியே மூழ்கிடுவீங்க. 365 00:18:19,308 --> 00:18:20,809 - அந்தத் குப்பைத் தொட்டிகளையாவது பாக்கலாமா? - என்னது? 366 00:18:20,893 --> 00:18:23,896 அவங்களுக்கு வேணாம்னு தெரியுற விஷயங்களை எடுத்துட்டுப் போவோம். அதைப்பத்தி என்ன நினைக்கிறீங்க? 367 00:18:23,979 --> 00:18:26,440 - சரி, ஆகட்டும். - வாங்க. 368 00:18:26,523 --> 00:18:27,816 சரி. 369 00:18:27,900 --> 00:18:29,735 - எங்க போறீங்க? - நான் அந்த அவுட்டோர் ஃபார்ம்ஸை எடுத்துட்டு வரேன். 370 00:18:29,818 --> 00:18:30,944 அடக் கடவுளே. 371 00:18:31,653 --> 00:18:35,073 எல்லாரும் கவனியுங்க. கெர்ரி ஹாவல்லுக்காக பலத்த கைத்தட்டல் கொடுங்க. 372 00:18:37,242 --> 00:18:38,619 எல்லாரும் வந்ததுக்கு ரொம்ப நன்றி. 373 00:18:39,161 --> 00:18:40,495 இவர் என் நண்பர். 374 00:18:41,288 --> 00:18:46,835 சரி, நாம முதல்ல ஒரு… காதல் பாட்டோட ஆரம்பிப்போம். 375 00:18:47,794 --> 00:18:49,046 அதோட பேரு, 376 00:18:50,130 --> 00:18:51,798 "அலுவலகத்திலுள்ள பெண்." 377 00:18:53,884 --> 00:18:55,052 அது நீதான். 378 00:19:01,850 --> 00:19:04,353 உலகம் குளிராகத் தோன்றும்போது 379 00:19:05,270 --> 00:19:07,564 எனக்கான வழியை நான் கண்டடைவேன் 380 00:19:08,357 --> 00:19:13,987 நீ சொல்லும் மென்மையான பேச்சின் ஒலியில் 381 00:19:14,988 --> 00:19:18,492 ஒரு விடியலைப் போல 382 00:19:18,575 --> 00:19:20,911 அது இரவை உடைக்கிறது 383 00:19:21,703 --> 00:19:27,751 நீதான் என் இதயத்தின் மிகச் சிறந்த ஒளி 384 00:19:37,177 --> 00:19:38,178 யோ 385 00:19:38,262 --> 00:19:40,180 அவளை அவள் மேஜையில் பார்த்தேன் 386 00:19:40,264 --> 00:19:42,808 அவளைப் பார்க்க ரொம்ப நன்றாக இருந்தது! 387 00:19:42,891 --> 00:19:45,769 நான் சொன்னேன், "என்ன விஷயம், பெண்ணே? நாம் அன்று சுண்டெலிகளோட ஜாலியாக இருந்தோமே" 388 00:19:45,853 --> 00:19:47,646 கீச், கீச்! அவள்தான் எல்லாவற்றையும் கவனித்துக்கொள்கிறாள் 389 00:19:47,729 --> 00:19:50,399 விற்பனையை அவள் ஒரு சுத்தியலைப் போலக் கையாளுகிறாள், ஆனால் நான் ரொம்ப கூலா இருக்கேன் 390 00:19:50,482 --> 00:19:53,277 எந்த அழுத்தமும் இல்லை, எந்த டிராமாவும் இல்லை அவளிடம் அந்தத் தனித்தன்மை இருந்தது 391 00:19:53,360 --> 00:19:55,028 அது வந்து, அந்த ஒரு ராணி போன்ற பொலிவு 392 00:19:55,112 --> 00:19:56,655 நகங்கள் கச்சிதம், அவளிடம் ஒரு கெத்து இருந்தது… 393 00:19:56,738 --> 00:19:58,574 சொல்லப்போனா அவன் என் தங்கச்சியோட நண்பன். 394 00:19:58,657 --> 00:20:00,909 தலை நிமிர்ந்து நடப்பவள் எதற்கும் சளைத்தவள் இல்லை 395 00:20:00,993 --> 00:20:02,202 தலைவி போன்ற ஆற்றல் 396 00:20:02,286 --> 00:20:04,538 அவள் இப்படித்தான் கலக்குகிறாள் அவள்தான் எல்லாவற்றையும் கவனித்துக்கொள்கிறாள்… 397 00:20:05,747 --> 00:20:06,748 ஹாரியட். 398 00:20:07,875 --> 00:20:09,918 ஹாய். ஒரு நல்ல செய்தி. 399 00:20:10,002 --> 00:20:12,045 நாங்க உங்களுக்காக உங்க குப்பைத் தொட்டிகளை சுத்தம் பண்ணப் போறோம். 400 00:20:12,129 --> 00:20:13,672 - யாரோட தொட்டிகள்? - உங்களோடது தான். 401 00:20:13,755 --> 00:20:15,591 நீ வீட்டை விட்டு எதையும் வெளில கொண்டு போக முடியாது. 402 00:20:15,674 --> 00:20:17,759 - உனக்கு அனுமதி கிடையாது. - இல்ல, இது டிரைவ்-வேயில் இருக்கு, 403 00:20:17,843 --> 00:20:18,969 வீட்டுக்குள்ள இல்ல. 404 00:20:19,052 --> 00:20:20,429 - வழி விடு. - எங்க போறீங்க? 405 00:20:21,597 --> 00:20:22,681 - வந்து… - எங்கே… 406 00:20:22,764 --> 00:20:23,765 ஹாரியட்? 407 00:20:26,560 --> 00:20:27,561 அவங்க என்ன… 408 00:20:33,358 --> 00:20:35,527 நாசமாய் போச்சு. அவங்க இங்க என்ன விளையாட்டு காட்டுறாங்களா? 409 00:20:40,616 --> 00:20:41,742 ஹாரியட். என்ன இப்படி பண்றீங்க! 410 00:20:41,825 --> 00:20:43,827 ஹாரியட் செல்லம். பாருங்க, நாம பழைய நிலைமைக்கே போயிட்டு இருக்கோம். 411 00:20:43,911 --> 00:20:45,662 ப்ளீஸ், இங்க பாருங்க! எனக்குத் தெரியும், எனக்குப் புரியுது. 412 00:20:45,746 --> 00:20:47,080 நாங்க வர்றது உங்களுக்குப் பிடிக்கலன்னு தெரியும், 413 00:20:47,164 --> 00:20:49,416 ஆனா நீங்க எங்களுக்கு ஒத்துழைக்கலனா, அவங்க இங்க நேரா வருவாங்க, 414 00:20:49,499 --> 00:20:52,628 எல்லாத்தையும் எடுத்துட்டுப் போவாங்க, ஏன் உங்களையும் கூட இங்கிருந்து கூட்டிட்டுப் போவாங்க. 415 00:20:53,295 --> 00:20:55,881 ஆனா நீங்க ஒத்துழைப்பு கொடுக்குறீங்கன்னு நாங்க காட்டுனா, 416 00:20:55,964 --> 00:20:57,174 அவங்களைத் தடுத்து என்னால சமாளிக்க முடியும். 417 00:20:57,257 --> 00:20:59,259 இந்த இடத்துல இருக்குற எதையாவது, ஏதாவது ஒண்ணையாவது 418 00:20:59,343 --> 00:21:00,719 நீங்க தயங்காம தூக்கிப் போட முடியுமா? 419 00:21:02,596 --> 00:21:04,515 ஹாரியட், வெறும் பேனா மட்டும் கொடுத்தா போதாது. 420 00:21:04,598 --> 00:21:06,141 ப்ளீஸ். ஏதாவது உருப்படியான பொருளைக் கொடுங்க. 421 00:21:06,225 --> 00:21:10,020 இந்த பேனாவை வச்சுத்தான், என் காலினை கடைசி முறையா, ஆஸ்பத்திரியில இருந்து கூட்டிட்டு வந்தேன். 422 00:21:12,314 --> 00:21:14,441 அவர் இறக்குறதுக்கு ரெண்டு வாரத்துக்கு முன்னாடி. 423 00:21:15,734 --> 00:21:17,569 அவர் ரொம்பச் சீக்கிரமே போயிட்டாரு. 424 00:21:18,445 --> 00:21:19,780 அவருக்குள்ளேயே எல்லாம் முடிஞ்சுடுச்சு. 425 00:21:19,863 --> 00:21:22,950 அவங்களுக்கு அதுல இஷ்டம் இல்ல, ஆனா நான் அவரை அங்க சாக விடத் தயாரா இல்ல, 426 00:21:23,033 --> 00:21:25,661 அவருக்குப் பிடிச்ச பொருட்களோட அவர் இங்கேயே இருக்கலாம்ன்றப்போ அங்க எதுக்கு இருக்கணும். 427 00:21:28,080 --> 00:21:30,874 எனக்கு இப்பதான் புரியுது. அப்போ இதெல்லாம் அவரோட பொருட்கள். 428 00:21:30,958 --> 00:21:33,335 சரி, சரி. சரி. 429 00:21:34,419 --> 00:21:36,129 அவர் இறந்து எவ்வளவு காலம் ஆச்சு? 430 00:21:36,213 --> 00:21:38,006 - எட்டு வருஷம். - எட்டு வருஷம். 431 00:21:40,759 --> 00:21:43,011 சும்மா தெரிஞ்சுக்கக் கேக்குறேன், அவர் இன்னும்… இன்னும் இங்க… 432 00:21:43,095 --> 00:21:44,638 கோல்டர்ஸ் கிரீன் தகன மைதானம். 433 00:21:45,264 --> 00:21:46,265 கடவுள் அவரை ஆசிர்வதிக்கட்டும். 434 00:21:46,348 --> 00:21:48,851 - எங்களுக்குக் கல்யாணம் ஆகி 40 வருஷம் ஆச்சு. - 40 வருஷமா? வாவ். 435 00:21:48,934 --> 00:21:50,978 ஒவ்வொரு பொருள்லயும் அவரோட ஞாபகம் இருக்கு. 436 00:21:52,980 --> 00:21:54,606 பேனாவை வச்சுக்கோங்க. வச்சுக்கோங்க. 437 00:21:55,232 --> 00:21:57,901 ஆனா முக்கியமில்லாத பொருட்கள் எதையாவது நீங்க யோசிச்சீங்கன்னா, நான் அதை எடுத்துட்டுப் போயிடுவேன், 438 00:21:57,985 --> 00:22:00,612 அப்பதான் முக்கியமான பொருட்களை உங்களால வச்சுக்க என்னால உதவ முடியும். 439 00:22:02,990 --> 00:22:04,825 இல்ல. இதை எடுத்துக்கோ. 440 00:22:06,660 --> 00:22:08,996 நான் எல்லாத்தையும் ரொம்ப கெட்டியா பிடிச்சு வச்சிருக்கேன். 441 00:22:09,079 --> 00:22:12,332 - அது அவர் மாதிரிதான். ஆனா அது அவர் இல்ல. - இல்ல. 442 00:22:12,416 --> 00:22:13,625 இது வெறும் பேனா தான். 443 00:22:16,587 --> 00:22:20,632 யாரும் இதையெல்லாம் தாண்டிப் பாக்குறது இல்ல. யாரும் என்னை கவனிச்சதில்ல. 444 00:22:23,218 --> 00:22:24,595 ஆனா நீ கவனிச்ச. 445 00:22:26,555 --> 00:22:27,681 நன்றி. 446 00:22:27,764 --> 00:22:30,893 இல்ல, வந்து… நான்தான் நன்றி சொல்லணும். 447 00:22:40,235 --> 00:22:43,530 ஹே, எதையும் மனசுல வச்சுக்காதீங்க, சரியா? வெற்றிகள் எப்பவுமே சின்னதாத்தான் இருக்கும், 448 00:22:43,614 --> 00:22:45,407 அதனால நீங்க அதை அனுபவிக்கக் கத்துக்கணும். 449 00:22:45,490 --> 00:22:48,118 எனக்குத் தெரியும். ஆமா. நான் பண்ணுவேன். 450 00:22:49,244 --> 00:22:51,121 பிரமாதம்! நான் இதத் தொலைச்சுட்டதா நினைச்சேன். 451 00:23:01,381 --> 00:23:02,883 ஃப்ளோரசன்ட் விளக்குகள் ஆனா நீ அதை விடப் பிரகாசமாக இருக்கிறாய் 452 00:23:02,966 --> 00:23:04,343 ஆபீஸ் நாற்காலிதான் சிம்மாசனம் இதை விடச் சிறந்தது எதுவும் இல்லை 453 00:23:04,426 --> 00:23:06,303 ஒரு முறை மெதுவாகச் சுற்று உன் சுற்றுவட்டப்பாதையில் என்னை இழுத்துக்கொள் 454 00:23:06,386 --> 00:23:08,180 உலகம் மௌனமாகிறது அதை வற்புறுத்தத் தேவையில்லை 455 00:23:09,890 --> 00:23:10,891 அந்த அருவருப்பு உணர்வு எப்படி இருக்கு? 456 00:23:10,974 --> 00:23:12,392 ஆமா, எங்களுக்குள்ள எதுவும் இல்ல. 457 00:23:12,476 --> 00:23:15,812 அப்புறம், ஒருவேளை நான் மறந்துட்டா என்ன பண்றதுன்னு, இதை ரெக்கார்ட் பண்ணி வச்சிருக்கேன். 458 00:23:15,896 --> 00:23:17,439 என் மூளையில் சிக்கிக்கொண்டது… 459 00:23:23,195 --> 00:23:25,739 ஹலோ? ஸ்காட்? 460 00:23:30,577 --> 00:23:31,578 என்ன பண்ணிட்டு இருக்கீங்க? 461 00:23:34,414 --> 00:23:36,708 ஏன் உங்க ப்ராஜெக்ட்ஸ் எல்லாத்தையும் தூக்கிப் போடுறீங்க? 462 00:23:36,792 --> 00:23:38,126 என் வாழ்க்கை ஒரு போலியான பிம்பம். 463 00:23:38,210 --> 00:23:39,878 மன்னிச்சிடுங்க, அதுக்கு என்ன அர்த்தம்? 464 00:23:39,962 --> 00:23:44,550 மூலாதாரமே இல்லாத ஒரு விஷயத்தோட வெளிப்பாடு. 465 00:23:45,676 --> 00:23:51,974 இதெல்லாம் நான் சும்மா உருவாக்கிய ஒரு ஸ்காட், ஏன்னா… 466 00:23:53,976 --> 00:23:55,060 நான் பயந்திருந்தேன். 467 00:23:56,186 --> 00:23:58,897 இதையெல்லாம் தாண்டி அடியில எனக்குப் பிடிச்ச ஒரு ஸ்காட் இல்லையோன்னு எனக்குப் பயம். 468 00:24:03,777 --> 00:24:05,070 ஆனா நான் இப்போ என்னையே நேருக்கு நேர் சந்திச்சுட்டேன். 469 00:24:05,153 --> 00:24:06,655 திறமை மிக்க வங்கியாளர் நீங்கள் வெறுக்க விரும்பும் மனிதர் 470 00:24:07,906 --> 00:24:10,534 இப்போ நான் சிம்ப்ளி "ஸ்காட்" தான். 471 00:24:12,494 --> 00:24:15,163 அது நீங்க ஆரம்பிச்ச அந்த பாடி-கேர் பிராண்டோட பேரு இல்லையா? 472 00:24:15,247 --> 00:24:16,915 சிம்ப்ளி ஸ்காட் ஹேண்ட் சோப் 473 00:24:19,918 --> 00:24:21,336 இன்னும் ஒரு பிம்பம் தான். 474 00:24:24,923 --> 00:24:27,467 நான் இப்போ முழுமையா நானாகவே இருக்கேன். 475 00:24:29,636 --> 00:24:33,891 நானாக மாறின பிறகு நான் சொல்ல விரும்புற முதல் வார்த்தை இதுதான்: 476 00:24:35,475 --> 00:24:38,604 "என் அன்பே, உனக்கு என்னைப் பிடிக்கும்னு நான் நம்புறேன்." 477 00:24:41,398 --> 00:24:43,734 ஸ்காட் ஃப்ரீ 478 00:24:46,153 --> 00:24:47,946 நீ அவரை உடைச்சுட்டன்னு எனக்குப் புரியுது. 479 00:24:49,573 --> 00:24:52,659 ஆமா. இது நல்லதுதான். இப்போ சமாளிக்குறது சுலபம். 480 00:25:06,089 --> 00:25:08,008 சேவிங் லைவ்ஸ் ஆன் த ஃப்ரண்ட் லைன் 481 00:25:09,676 --> 00:25:10,761 ஹலோ! 482 00:25:11,303 --> 00:25:12,471 ஹாய். 483 00:25:13,180 --> 00:25:14,681 உன் பிளேஸ்மென்ட் எப்படி இருந்தது? 484 00:25:19,019 --> 00:25:20,646 இந்த அரசாங்க நடைமுறைகளால நான் நொந்து போயிட்டேன்னு நினைக்கிறேன். 485 00:25:20,729 --> 00:25:22,064 - என்ன, அதுக்குள்ளயா? - ஆமா. 486 00:25:22,147 --> 00:25:24,525 பாதி நாள்தான் ஆகுது. நீ இன்னும் முழுமையா தகுதி கூட ஆகல. 487 00:25:24,608 --> 00:25:28,320 இந்த வேலை எனக்கு செட் ஆகும்னு தோணல, நிக்கி. நான் ஒண்ணும் பென்னி கிடையாது, அப்படி வச்சுக்கோயேன். 488 00:25:28,403 --> 00:25:29,446 நிச்சயமா இல்ல. 489 00:25:29,947 --> 00:25:32,282 இப்போ இல்ல. ஆனா ஒரு நாள் நீ அப்படி ஆவ. 490 00:25:32,366 --> 00:25:34,743 - நீ அப்படி நினைக்கிறியா? - ஆமா. 491 00:25:34,826 --> 00:25:37,204 நான் சும்மா யார் மேலயும் காதல்ல விழல, தெரியுமில்ல. 492 00:25:39,748 --> 00:25:42,209 - நீ எப்படி இருக்க? உன் ராத்திரி எப்படிப் போச்சு? - அருமையா இருந்தது, சூப்பர். 493 00:25:42,292 --> 00:25:45,087 - எனக்குத் தேவைப்பட்ட அதே மாதிரியே இருந்துச்சு. - அப்படியா? நல்லது, அவ நல்லா பாடினாளா? 494 00:25:45,170 --> 00:25:47,548 இல்ல! ரொம்பக் கொடூரம். மகா மட்டம்! 495 00:25:47,631 --> 00:25:50,259 உண்மையாச் சொல்லணும்னா, என் வாழ்க்கையிலயே நான் பார்த்த மகா மட்டமான விஷயம் அதான். 496 00:26:08,986 --> 00:26:13,365 என் பிறந்தநாளில் நீங்க என்னைப் பத்தி நினைச்சிருக்கீங்களா? 497 00:26:31,967 --> 00:26:35,262 த மண்டேலா லெகஸி 498 00:26:35,345 --> 00:26:36,346 உங்கள் முடிவுகளைப் பாருங்கள்! 499 00:26:36,430 --> 00:26:38,015 முடிவுகள் 92% நீங்கள் ஒரு நல்ல மனைவி!!! 500 00:27:42,621 --> 00:27:44,623 வசனங்கள் மொழிபெயர்ப்பு மேனகா மணிகண்டன்