1 00:00:07,007 --> 00:00:08,050 நாங்கள் திருமணம் செய்யும் போது 2 00:00:08,132 --> 00:00:15,057 “எனவே முடிவாக, நிக்கியும் ஜேசனும், பிரின்சஸ் மற்றும் டைலருக்கு பொருத்தமானவர்கள் இல்லை 3 00:00:15,140 --> 00:00:16,225 என நினைக்கிறேன்.” 4 00:00:18,519 --> 00:00:19,811 அது விரிவாக இருந்தது. 5 00:00:20,687 --> 00:00:22,439 பாரு, அது மோசம் இல்லை. அது... 6 00:00:22,523 --> 00:00:25,108 ஜேஸ், நீ அதைப் படிக்கத் தொடங்கிய போது இருண்டுவிட்டது. 7 00:00:25,192 --> 00:00:27,069 -அதை அவள் நீதிமன்றத்தில் சொல்வாளா? -ஆமாம். 8 00:00:27,653 --> 00:00:30,405 -ஆமாம். -என்னால் நம்ப முடியவில்லை. 9 00:00:30,489 --> 00:00:32,491 -ஆமாம். -அதற்கு என்ன அர்த்தம்? 10 00:00:32,573 --> 00:00:34,535 அப்படியென்றால், நமக்கு குழந்தைகள் கிடைக்க மாட்டார்களா? 11 00:00:34,618 --> 00:00:36,578 நம்முடையவர்களாக இருந்தால் தானே தொலைப்பதற்கு? இன்னும் அப்படியில்லை. 12 00:00:37,246 --> 00:00:39,206 இன்று விசாரணையில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். 13 00:00:40,415 --> 00:00:42,543 மூன்று மாதங்களுக்கு முன்னால், குழந்தைகள் கிடைப்பார்கள் என நினைத்தேன். 14 00:00:42,626 --> 00:00:46,755 நமக்கு திருமணமாகும் என்றும், இதே வீட்டில் வாழ்வோம் என்றும் நினைத்தேன். 15 00:00:46,839 --> 00:00:48,674 -இப்போது... -திருமணம் செய்துகொள்வதில் இருந்து 16 00:00:48,757 --> 00:00:50,801 நம்மை எதுவும் தடுக்காது. சரியா? நமக்கு வீடு இல்லாமல் போனாலும் கூட. 17 00:00:50,884 --> 00:00:53,262 வெளியிடங்களில் நடக்கும் திருமணங்கள் எனக்கு பிடிக்கும், எனவே... 18 00:00:53,345 --> 00:00:58,851 எனக்கு ஒரு காட்சி தோன்றியது, தெரியுமா? குழந்தைகள் இங்கு இருப்பது போல. 19 00:00:59,476 --> 00:01:00,310 அது... 20 00:01:02,312 --> 00:01:05,147 அவர்களை தொலைக்க மாட்டோம் என்று நம்புவோம். ஹே. 21 00:01:07,609 --> 00:01:08,902 குழந்தைகள் இல்லாமல் திருமணம் இல்லை. 22 00:01:08,986 --> 00:01:10,696 நீ கிறிஸ்துமஸ் பற்றி யோசிக்கிறாய், பரவாயில்லை. 23 00:01:11,530 --> 00:01:13,866 -உனக்கு டீ வேண்டுமா? -ஆமாம், வேண்டும். 24 00:01:22,749 --> 00:01:23,750 என்ன தெரியுமா? 25 00:01:29,173 --> 00:01:31,133 -நாம் செய்யலாம். -எதைச் செய்யலாம்? 26 00:01:32,009 --> 00:01:33,010 திருமணம் செய்யலாம். 27 00:01:33,093 --> 00:01:34,261 என்ன? 28 00:01:34,344 --> 00:01:35,429 நாம் திருமணம் செய்துகொள்ளலாம். 29 00:01:36,013 --> 00:01:39,349 ஏற்கனவே இதைப்பற்றி பேசிவிட்டோம். நான் தான் சரி என்று சொன்னேனே. 30 00:01:39,433 --> 00:01:40,601 இது ஓட்டுநர் உரிமம் போன்றதல்ல. 31 00:01:40,684 --> 00:01:43,729 -மறுபடியும் விண்ணப்பிக்க வேண்டாம். -இல்லை, இன்றே திருமணம் செய்யலாம். 32 00:01:45,522 --> 00:01:47,357 -என்ன சொல்கிறாய்? -நாம் திருமணம் செய்துகொள்ளலாம். 33 00:01:47,441 --> 00:01:49,610 குழந்தைகள் இருக்கும் போதே நாம் திருமணம் செய்துகொள்ளலாம். 34 00:01:50,360 --> 00:01:53,572 ஏன் கூடாது? மூன்று மாதங்களுக்கு முன் நான் வாங்கிய லைசென்ஸ் என்னிடம் இருக்கிறது. 35 00:01:54,865 --> 00:01:56,533 உண்மையாகச் சொல்கிறாயா? 36 00:01:56,617 --> 00:01:59,494 அவர்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். இல்லையா? 37 00:02:00,787 --> 00:02:05,083 இதுதான் கடைசி நாளாக இருக்க... அதை விடு. நான் முட்டாள்தனமாக பேசுகிறேன். 38 00:02:07,002 --> 00:02:08,586 அதை விடு. பரவாயில்லை. 39 00:02:10,297 --> 00:02:11,465 சரி. 40 00:02:12,549 --> 00:02:13,550 உண்மையாகவா? 41 00:02:14,510 --> 00:02:16,553 -ஆமாம். செய்யலாம். எனக்கு ஆசை தான். -அப்படியா? 42 00:02:16,637 --> 00:02:19,139 -அப்படியா? சரி. -எனக்கும் விருப்பம் தான்! 43 00:02:19,223 --> 00:02:21,558 ஆனால் மாலை 3:30 மணிக்கு விசாரணை இருக்கிறது. 44 00:02:21,642 --> 00:02:24,186 3:30க்கு முன்பாக, ஒரு திருமணத்தை எப்படி ஏற்பாடு செய்வது? 45 00:02:24,269 --> 00:02:26,188 நமக்கு இரண்டு உதவியாளர்கள் இருக்கிறார்கள், இல்லையா? 46 00:02:27,606 --> 00:02:30,609 ஆமாம். ஆமாம், இல்லை. நான் காத்திருக்கிறேன். 47 00:02:31,610 --> 00:02:35,322 எழுந்திருங்கள்! இருவரும், எழுந்திருங்கள்! 48 00:02:36,698 --> 00:02:39,159 செல்லங்களே, உங்களுக்கு உற்சாகமாக இருக்கா? 49 00:02:39,243 --> 00:02:40,827 -இல்லை. -இல்லை. 50 00:02:41,912 --> 00:02:43,580 -சரி. -சரி. சரி, புரிந்தது. 51 00:02:45,040 --> 00:02:46,917 -ஆமாம். -இன்று நாங்கள் திருமணம் செய்யப்போகிறோம்! 52 00:02:47,000 --> 00:02:49,253 சரி, சரி. அதை வைத்துக் கொள். நாங்கள் வாங்கிக்கொள்கிறோம். மிக்க நன்றி. 53 00:02:49,336 --> 00:02:51,213 பிரமாதம். கேளு, எமிலியும் பாலும் பிரிந்துவிட்டதால், 54 00:02:51,296 --> 00:02:53,131 மதியம் 1:30 மணிக்கு ஒரு இடம் இருக்கிறது! 55 00:02:53,215 --> 00:02:54,424 -சரி! -சரி! 56 00:02:55,634 --> 00:02:56,969 சரி, யாருக்கு என்ன பொறுப்பு? 57 00:02:57,052 --> 00:02:58,512 -உடைகள்! -மற்றும் உணவு! 58 00:02:58,595 --> 00:02:59,596 அப்படியென்றால், சரி. 59 00:02:59,680 --> 00:03:02,349 நீ உடைகளை பார்த்துக்கொள். நீ உணவை பார்த்துக்கொள். 60 00:03:02,432 --> 00:03:07,062 எதற்காக காத்திருக்கிறோம்? போய் திருமணம் செய்துகொள்ளலாம்! 61 00:03:07,145 --> 00:03:08,856 வாருங்கள், குழந்தைகளே. பல் தேய்க்கலாம். 62 00:03:12,401 --> 00:03:15,863 உடைகளா? உடைகள் தான் முக்கியம். 63 00:03:17,322 --> 00:03:18,323 எல்லாம் சரியாகிவிடும். 64 00:03:19,700 --> 00:03:20,701 கேம்டென் லாக் 65 00:03:34,756 --> 00:03:36,884 சரி. நம்மை சந்திப்பதாக உன் அப்பா சொன்னார். 66 00:03:36,967 --> 00:03:38,635 நல்லது. சிறப்பு. மோதிரங்கள் வாங்க, 67 00:03:38,719 --> 00:03:39,970 நம்மிடம் பணம் இல்லை, 68 00:03:40,053 --> 00:03:41,847 போய் வாங்கிக்கொள்ள போதிய நேரமில்லை... 69 00:03:41,930 --> 00:03:42,931 எனக்கு மோதிரங்கள் பற்றி அக்கறை இல்லை. 70 00:03:43,015 --> 00:03:44,308 -அது முக்கியமில்லை. -சரி, நல்லது. 71 00:03:44,933 --> 00:03:45,934 இதோ வந்துவிட்டோம்! 72 00:03:47,769 --> 00:03:50,105 இது திருமணத்திற்காக என்று சொல்லாதே. இரண்டு மடங்கு விலை சொல்வார்கள். 73 00:03:50,189 --> 00:03:51,857 சரி. உள்ளே, வாருங்கள். 74 00:03:53,609 --> 00:03:55,068 -ஹாய். -ஹாய். 75 00:03:56,445 --> 00:03:59,323 எதிர்பாராத விதமாக, ஒரு இறுதிச்சடங்கு இருக்கிறது. 76 00:03:59,406 --> 00:04:00,407 வருந்துகிறேன். 77 00:04:00,490 --> 00:04:02,326 அதனால், சீக்கிரமாக எங்களுக்கு மலர்கள் வேண்டும். 78 00:04:02,409 --> 00:04:04,620 -கண்டிப்பாக. சரி. -மகிழ்ச்சியான அழகான மலர்கள், 79 00:04:04,703 --> 00:04:06,705 ஏதாவது இருக்குமா? 80 00:04:08,165 --> 00:04:11,084 -அவர் அதை விரும்பி இருப்பார். -கண்டிப்பாக. சரி. 81 00:04:11,168 --> 00:04:14,588 எல்லி? இவருக்கு கொஞ்சம் ஹெல்லெபோர்கள் காட்டுகிறாயா? 82 00:04:14,671 --> 00:04:15,881 -நன்றி. -சரி. 83 00:04:20,469 --> 00:04:21,470 நீங்கள் நலமா? 84 00:04:21,553 --> 00:04:24,348 ஆமாம். நலம். மிக்க நன்றி. சரி. நலம் தான். 85 00:04:24,431 --> 00:04:25,849 எல்லாம் விரைவாக நடந்தது என கேள்விப்பட்டேன். 86 00:04:25,933 --> 00:04:29,686 ஆமாம். ஒரு மணி நேரம் முன்னர் தான், எனவே... 87 00:04:32,064 --> 00:04:35,484 -அது அமைதியாகவாவது இருந்ததா? -இல்லை. இல்லை. குழந்தைகள் அலறினார்கள். 88 00:04:35,567 --> 00:04:38,070 உண்மையில், இதைப்பற்றி கொஞ்ச நாட்களாகவே யோசித்துக் கொண்டிருந்தோம், 89 00:04:38,153 --> 00:04:40,239 அதனால், இது உண்மையில் 90 00:04:40,739 --> 00:04:41,823 நன்றாக இருந்தது. புரிகிறதா? 91 00:04:41,907 --> 00:04:43,367 தயவு செய்து, அவளிடம் பேசுவதை நிறுத்து. 92 00:04:43,450 --> 00:04:45,869 -இது பொருத்தமாக இருக்கும். நன்றி. சரி. -சரி. 93 00:04:48,664 --> 00:04:52,084 சரி, அவற்றின் விலை 45 டாலர். 94 00:04:52,167 --> 00:04:56,505 சரி. இறுதிச் சடங்கிற்கு ஏதாவது தள்ளுபடி உண்டா? 95 00:04:57,256 --> 00:04:58,882 40 டாலர் வாங்கிக் கொள்ளட்டுமா? 96 00:04:58,966 --> 00:04:59,967 ஓ, சரி. நல்லது. 97 00:05:02,553 --> 00:05:05,389 சரி, மலர்கள் தயார். 98 00:05:05,472 --> 00:05:08,767 சரி. இப்படித்தான். இதோ. நாம் போகலாம்! போகலாம்! 99 00:05:13,647 --> 00:05:16,191 அதோ இருக்கிறார். ஹலோ! 100 00:05:16,275 --> 00:05:18,443 -ஹலோ! -ஹாய். 101 00:05:19,695 --> 00:05:22,823 நன்றி, விக். நாங்கள் தனியாக வருகிறோம், உங்களை அங்கே சந்திக்கிறோம். 102 00:05:22,906 --> 00:05:25,617 சரி, இவர்கள் இருவரும் உடை மற்றும் உணவிற்கு பொறுப்பு. 103 00:05:25,701 --> 00:05:28,287 -இல்லை, அவன் உணவிற்கு, நான் உடைகளுக்கு! -இல்லை! நான் உணவிற்கு, அவள் உடைகளுக்கு! 104 00:05:28,370 --> 00:05:30,747 நாம் செய்வது புரியவில்லை, ஆனால் தொடர்ந்து, அதைச் செய்யலாம். 105 00:05:30,831 --> 00:05:31,999 -வாருங்கள். -சரி, நீங்கள் இருவரும். சரி. 106 00:05:32,082 --> 00:05:34,209 -பை! -சரி. ஆக... 107 00:05:34,293 --> 00:05:37,087 சரி, இல்லை. ஜேஸ், திருமணத்திற்கு முன் நான் உன்னை பார்க்கக்கூடாது. 108 00:05:37,171 --> 00:05:38,547 -அது துரதிருஷ்டம். -நீ என்ன சொல்கிறாய்? 109 00:05:38,630 --> 00:05:39,923 நாம் நாள் முழுதும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோமே. 110 00:05:40,007 --> 00:05:42,050 இல்லை. காலை 9:00 மணியில் இருந்து நான் கண்ணை குறுக்கிப் பார்தததால், 111 00:05:42,134 --> 00:05:44,011 எனக்கு தலைவலிக்கிறது, ஆதலால் நாம் பிரிந்து போகலாம். 112 00:05:44,094 --> 00:05:47,222 நான் சென்று, நீலமானது, 113 00:05:47,306 --> 00:05:49,016 கடன் வாங்கியது, புதுசு மற்றும் பழையது என அனைத்தையும் வாங்குகிறேன். 114 00:05:49,099 --> 00:05:50,893 அந்த வரிசை கேள்விப்பட்டதில்லை, ஆனால் வாழ்த்துக்கள். 115 00:05:50,976 --> 00:05:54,104 -எல்லோரையும் அழைக்கிறாயா? -கவலைப்படாதே. நான் அழைக்கிறேன். 116 00:05:54,188 --> 00:05:55,606 -கண்ணைத் திறந்து பார். -மன்னித்துவிடு! 117 00:05:55,689 --> 00:05:57,232 -வேண்டாம்! -நீ கண்ணைத் திறந்து பார். 118 00:05:58,525 --> 00:05:59,902 ஒரு மணி நேரத்தில் உன்னை அங்கே சந்திக்கிறேன். 119 00:05:59,985 --> 00:06:01,361 -சரியா? -சரி. பை! 120 00:06:07,117 --> 00:06:10,078 மதியம் 1:30க்கு திருமணம், 3:30க்கு விசாரணை. 121 00:06:10,162 --> 00:06:13,916 எனக்கு அவ்வளவு நேரம் இல்லை, எனவே எதுவானாலும் பரவாயில்லை. 122 00:06:13,999 --> 00:06:15,542 இல்லை, நான் தேடிக் கொண்டு வருகிறேன். 123 00:06:18,086 --> 00:06:19,588 -மாசெல் டோவ். -நன்றி. 124 00:06:19,671 --> 00:06:21,590 -ஸ்காட், எனக்கு அவசரம். -உனக்கு ஒரு கவிதை எழுதியிருக்கிறேன். 125 00:06:21,673 --> 00:06:26,303 ஓ, சரி. சரி. அது அற்புதமான விஷயம். 126 00:06:26,386 --> 00:06:27,596 -இல்லையா? ஆமாம். -ஆமாம். 127 00:06:27,679 --> 00:06:33,101 நான் எழுதுவதை நிறுத்திவிட்டேன் என்று சொல்லலாம். இது தான் கடைசி. 128 00:06:34,269 --> 00:06:37,481 இதை வைத்துக் கொள். படிப்பதற்கு பரிந்துரைக்கிறேன். 129 00:06:37,564 --> 00:06:39,233 காதல் என்றால் என்ன? ஸ்காட் ஃபில்பர்ட் எழுதியது 130 00:06:39,316 --> 00:06:42,945 விவால்டி மற்றும் கோக்நாக் சேர்த்துக்கொள். 2005க்கு முந்தையது வேண்டாம். 131 00:06:43,946 --> 00:06:45,113 டோஸ்ட் பற்றி பேசும் போது, 132 00:06:45,197 --> 00:06:49,243 நீயே உருவாக்கிய கிளாசில் இருந்து டோஸ்ட் செய்வதை விட 133 00:06:49,326 --> 00:06:51,328 சிறந்த விஷயம் வேறில்லை. 134 00:06:51,828 --> 00:06:55,541 ஸ்காட், நீ கிளாஸ் உருவாக்க கற்றுக் கொண்டதை நான் குறிப்பிடுவேன். 135 00:06:56,166 --> 00:06:57,334 நீ அப்படி செய்ய வேண்டாம். 136 00:06:57,417 --> 00:06:58,502 புரிகிறது. 137 00:07:00,546 --> 00:07:01,672 சரி. 138 00:07:03,799 --> 00:07:04,925 கிடைத்துவிட்டது. 139 00:07:10,264 --> 00:07:13,225 -இதெல்லாம் என்ன? -என் காதணிகள். கடன் வாங்கனேன். 140 00:07:13,308 --> 00:07:15,143 இவை என்னுடையவை. நீ திருடி விட்டாய். 141 00:07:15,894 --> 00:07:18,188 -இல்லவே இல்லை! -கரேன், எவ்வளவு நாட்களாக இதை வைத்திருந்தாய்? 142 00:07:18,272 --> 00:07:19,273 என்னால் நம்ப முடியவில்லை. 143 00:07:19,356 --> 00:07:21,483 -நான் உன்னை கேட்டுக்கொண்டே... -நீ தேவதை போல இருக்க வேண்டும். 144 00:07:31,869 --> 00:07:34,496 பேச்சை மாற்ற அப்படி சொன்னாய், ஆனாலும் எனக்கு கவலை இல்லை. 145 00:07:39,543 --> 00:07:41,170 கவிதையை சத்தமாக படிக்காதே. 146 00:07:41,253 --> 00:07:42,838 இதில் கீட்ஸின் ஐந்து வரிகள் இருக்கின்றன. 147 00:07:42,921 --> 00:07:45,549 சரி. இது கடன் வாங்கப்பட்டதாக இருக்கட்டும். 148 00:07:46,466 --> 00:07:47,759 புதியது ஏதாவது வேண்டும். 149 00:07:59,479 --> 00:08:00,731 ஏதாவது புதியது. 150 00:08:01,899 --> 00:08:03,525 சரி, சரி, இதோ இருக்கிறது. 151 00:08:14,244 --> 00:08:15,871 பிடிக்கவில்லை. எல்லாம் ஒரே மாதிரியாக இருக்கிறது. 152 00:08:16,538 --> 00:08:18,916 மோதிரங்கள் எனக்கு பிடிக்கும். ஆனால், பெரிய விஷயங்கள் தான் ரொம்ப பிடிக்கும். 153 00:08:18,999 --> 00:08:20,542 சின்ன விஷயங்கள் பிடிக்காது. 154 00:08:20,626 --> 00:08:22,002 கள்ளத்தொடர்பு வைக்காமல் இருப்பதா? 155 00:08:22,586 --> 00:08:26,256 இன்னும் கொஞ்சம் செலவு செய்ய விரும்பினால், எங்களிடம் 18 காரட் இருக்கிறது. 156 00:08:27,799 --> 00:08:31,595 ஆஹா, மிக அழகு, இல்லையா? ஆமாம். எடை நன்றாக இருக்கிறது. 157 00:08:32,179 --> 00:08:33,889 சரி... வேண்டாம். அது ரொம்ப அதிகம். 158 00:08:33,972 --> 00:08:36,558 ஆமாம். நீ சொல்வது சரி. அவளுக்கு மோதிரமே வாங்காதே. 159 00:08:36,642 --> 00:08:40,562 ஒரு புத்தக டோக்கணும், பபிள் பாத்தும் கொடு. அது போதும். 160 00:08:42,188 --> 00:08:43,941 சரி தான். அவளுக்கு இது ஏற்றது தான். எனவே, நான்... 161 00:08:44,024 --> 00:08:45,984 தவணை முறைகளில் பணம் செலுத்தலாமா? 162 00:08:46,068 --> 00:08:48,529 -அதிகபட்சம் இப்போது கொடுத்துவிட்டு... -மன்னிக்கவும். 163 00:08:48,612 --> 00:08:50,948 -...மீதி அடுத்த மாதம் கொடுக்கலாம்... -அது முடியாது. 164 00:08:51,573 --> 00:08:53,242 சரி. பரவாயில்லை. 165 00:08:53,325 --> 00:08:55,327 -அவை தான் வேண்டும். -என்னிடம் போதிய பணம் இல்லை, சரியா? 166 00:08:55,410 --> 00:08:57,204 -மீதத்தை நான் தருகிறேன். -என்ன? வேண்டாம். 167 00:08:57,287 --> 00:09:00,040 நான்தான் பணம் தரவேண்டும். அதற்காக தான் மூன்று வாரமாக, நெருக்கடி நேரத்தில் பணம் சம்பாதித்து, 168 00:09:00,123 --> 00:09:03,001 இந்த மோதிரங்களின் ஐந்தில் நான்கு பங்கை சம்பாதித்தேன். அதாவது... 169 00:09:03,085 --> 00:09:06,964 நீயே அவற்றை வாங்குகிறாய். எனக்கு பிறகு திருப்பிக் கொடு. வா. 170 00:09:07,589 --> 00:09:10,551 சில நூறு ரூபாய்களை, என் ஒரே நண்பனுக்காக ஒரு மாதத்திற்கு கடன் கொடுக்கிறேன். 171 00:09:11,635 --> 00:09:13,637 வேண்டாம். என்னால் முடியாது. வேண்டாம். 172 00:09:16,431 --> 00:09:17,683 ஜேசன்... 173 00:09:20,060 --> 00:09:21,270 சரி என்று சொல்லு. 174 00:09:22,896 --> 00:09:25,440 -வேண்டாம். வேண்டாம், நண்பா. -ஹே... 175 00:09:27,818 --> 00:09:28,944 சரி என்று சொல்லு. 176 00:09:31,947 --> 00:09:32,948 சரி. 177 00:09:49,214 --> 00:09:51,425 -எல்லாம் கிடைத்ததா? -ஹலோ. 178 00:09:51,508 --> 00:09:53,093 கிட்டத்தட்ட. எல்லோரையும் அழைத்தாயா? 179 00:09:53,177 --> 00:09:54,887 ஆமாம். மெசேஜ் அனுப்பினேன், எனவே... 180 00:09:54,970 --> 00:09:56,722 இதை செய்ய, கரேனுக்கு எட்டு மாதங்கள் ஆகிவிட்டது. 181 00:09:56,805 --> 00:09:58,599 நாம் ஒரு காலைப் பொழுதிலேயே செய்துவிட்டோம். நான் காபிக்காக நின்றேன். 182 00:09:58,682 --> 00:10:00,267 அடுத்த ஒலிம்பிக்ஸை நாம் நடத்த வேண்டும், அன்பே. 183 00:10:02,186 --> 00:10:04,229 மற்ற மணப்பெண்களை விட நான் என் கையில் நிறைய எழுதி வைத்திருக்கிறேன். 184 00:10:04,313 --> 00:10:05,355 மலர்கள் - கரேன் - தலைமுடி - இசை 185 00:10:05,439 --> 00:10:07,733 -இதெல்லாம் என்ன? -இசை. ஆமாம். ஆனால் பரவாயில்லை. 186 00:10:07,816 --> 00:10:09,985 காலையில் நமக்கு எப்படியும் இசைக்குழு கிடைத்திருக்காது, இல்லையா? 187 00:10:10,068 --> 00:10:11,236 இல்லை... 188 00:10:19,703 --> 00:10:21,997 பதிவு அலுவலகம் 189 00:10:26,251 --> 00:10:29,338 இது பைத்தியக்காரத்தனம்.என் ஒரே மகன், நீ இதை இப்படி செய்கிறாய். 190 00:10:29,421 --> 00:10:30,547 மன்னிக்கவும், அம்மா. 191 00:10:30,631 --> 00:10:33,467 எனக்கு தயாராக நேரமே இல்லை. நான் பிரிட்ஜ் கிளப்பில் இருந்தேன். 192 00:10:33,550 --> 00:10:35,093 நீங்கள் அழகாக இருக்கிறீர்கள், சாண்ட்ரா. 193 00:10:35,177 --> 00:10:38,430 சரி, என் நண்பர்களை வெறுக்கிறேன், அவர்களை வெறுப்பேற்றுவதற்காக அலங்காரம் செய்கிறேன். 194 00:10:39,473 --> 00:10:41,433 இருவரும் இங்கே வாருங்கள். 195 00:10:45,771 --> 00:10:50,192 வணக்கம், வணக்கம். சீரியோ? ஹரிபோ? வழக்கமானது. புளிப்பு. 196 00:10:51,527 --> 00:10:52,611 நான் புளிப்பு சாப்பிடுகிறேன். 197 00:10:52,694 --> 00:10:53,695 நல்ல தேர்வு. 198 00:10:54,655 --> 00:10:56,490 -ஹாய். ஹாய். -ஹலோ, ஜென். 199 00:10:56,990 --> 00:10:58,951 -சரி, நம்மால் முடியும். -நிக்கி. 200 00:10:59,034 --> 00:11:01,411 அடடா! ஜென்! 201 00:11:03,789 --> 00:11:06,041 மன்னித்துவிடு. எனக்கு வேர்க்கிறது. நான் யோகாவில் இருந்து வருகிறேன். 202 00:11:06,124 --> 00:11:08,460 -என் டவல் மீது தான் உட்காருவேன். -நிறுத்து. 203 00:11:09,545 --> 00:11:10,963 டிங்கிளை அழைத்து வந்தேன். பரவாயில்லையா? 204 00:11:11,046 --> 00:11:12,756 -அட, பரவாயில்லை. -அவளது காதலனையும் கூட. 205 00:11:12,840 --> 00:11:14,299 ஹே. 206 00:11:14,383 --> 00:11:16,260 அவன் நல்லவன். நாங்கள் நண்பர்கள். 207 00:11:16,343 --> 00:11:18,095 ஜென், உன்னை... ஐந்து நாட்களுக்கு முன் 208 00:11:18,178 --> 00:11:20,013 நான் பணி நீக்கம் செய்ததால், நீ வரமாட்டாய் என்று நினைத்தேன். 209 00:11:21,014 --> 00:11:22,391 அட, நான் அதை மறந்தே போயிட்டேன். 210 00:11:22,975 --> 00:11:25,227 இல்லை, எனக்கு நடந்த மிகச் சிறந்த விஷயம் அது. 211 00:11:25,310 --> 00:11:27,312 டிங்கிளும், நானும் சேர்ந்து வியாபாரம் தொடங்கினோம். 212 00:11:27,396 --> 00:11:29,439 -அதை ஜிங்கிள் என்று பெயரிட்டுள்ளோம். -ஓ, கடவுளே, அருமை. 213 00:11:29,523 --> 00:11:31,316 -என்ன வியாபாரம்? -கட்டுமான மற்றும் கூரை பொருட்கள் 214 00:11:31,400 --> 00:11:33,151 கொண்டு வரும் ஒரு ஆன்-சைட் டெலிவரி சேவை. 215 00:11:35,195 --> 00:11:36,697 சரி! அது சிறப்பான விஷயம் தான்! 216 00:11:39,533 --> 00:11:40,659 கடவுளே, பதற்றமாக இருக்கிறது. 217 00:11:40,742 --> 00:11:41,994 பதறாதே. 218 00:11:42,494 --> 00:11:45,080 பொருட்கள் பற்றிய தகவல் இல்லாதது பெரிய சவால் தான், 219 00:11:45,163 --> 00:11:47,207 ஆனால் வெளியில் இருந்து ஆட்களை அமர்த்தி பணம் கிடைக்கும் வழிகளில் 220 00:11:47,291 --> 00:11:48,750 மெதுவாக விரிவடைகிறோம். 221 00:11:48,834 --> 00:11:51,420 சரி. சரி. அது, சற்று உறுதி கொடுக்கிறது. 222 00:11:52,629 --> 00:11:55,215 அட, நீ எங்கே போனாய்? பத்து நிமிடத்தில் தொடங்குகிறது. 223 00:11:57,801 --> 00:12:02,890 என்ன? உடைகளை அவர்கள் தேர்ந்தெடுக்க வைத்தாய். இதோ உன்னுடையது. 224 00:12:10,689 --> 00:12:13,734 அம்மா நமக்குக் கொடுத்த அந்த பழைய புத்தகங்களை அவர்களிடம் படிக்க கொடுத்திருக்கக் கூடாது. 225 00:12:13,817 --> 00:12:15,152 அதில் இனவெறி பகுதிகளை மறைத்து 226 00:12:15,235 --> 00:12:17,863 பாலின பகுதிகளை அப்படியே விட்டு விட்டாள். 227 00:12:17,946 --> 00:12:20,157 பரவாயில்லை. நாம் சரியான இடத்தில் இருக்கிறோம். 228 00:12:21,491 --> 00:12:22,492 கொஞ்சம் இதைப் பிடி. 229 00:12:23,827 --> 00:12:26,079 நன்றி. இப்போது மணி என்ன? 230 00:12:26,496 --> 00:12:28,457 மதியம் 1:30. நாம் சீக்கிரம் போகலாம். 231 00:12:39,301 --> 00:12:40,469 வா. இதை செய்யலாம். 232 00:12:53,774 --> 00:12:57,528 பாலுக்கு ஆந்தைகளைப் பிடிக்கும். ஆனால், எமிலிக்கு பிடிக்காது. 233 00:12:58,403 --> 00:13:00,572 அதனால் தான், ரத்து செய்தார்கள். 234 00:13:01,698 --> 00:13:02,699 போகலாமா? 235 00:13:02,783 --> 00:13:03,825 சரி. 236 00:13:10,749 --> 00:13:12,167 -ஹலோ. -ஹலோ. 237 00:13:12,251 --> 00:13:14,378 -இது ஒரு தைரியமான முடிவு, இல்லையா? -இல்லையா? 238 00:13:14,461 --> 00:13:15,462 ஆம். 239 00:13:19,675 --> 00:13:21,927 -அவள் பூக்காரி என்று தப்பாக நினைக்கிறாள். -ஆமாம். 240 00:13:22,010 --> 00:13:24,763 அந்த ஒட்டகச்சிவிங்கி எதற்காக என்று எங்களுக்குத் தெரியவில்லை, ஆனால்... 241 00:13:25,472 --> 00:13:26,557 ஹே, அப்பா! வாருங்கள்! 242 00:13:26,640 --> 00:13:28,225 -சரியா? -ஆமாம். 243 00:13:30,394 --> 00:13:32,020 -அழகாக இருக்கிறாய். -நன்றி. 244 00:13:34,022 --> 00:13:35,357 -நீ நலமா? -ஆமாம். 245 00:13:59,464 --> 00:14:00,465 இவற்றை நீயே வைத்துக்கொள். 246 00:14:04,011 --> 00:14:06,346 நாம் விசித்திரமாகிவிட்டோம் என நினைக்கிறேன். 247 00:14:09,808 --> 00:14:11,518 -மன்னித்துவிடு. -இல்லை. 248 00:14:13,270 --> 00:14:15,981 இல்லை, இது நான் கற்பனை செய்தவாறே இருக்கிறது. 249 00:14:19,276 --> 00:14:23,030 மக்களே, இங்கே நாம் வந்திருப்பது... 250 00:14:23,113 --> 00:14:25,741 -விரைவாக. -...எமிலி மற்றும் பாலின் விரைவு திருமணத்திற்காக 251 00:14:25,824 --> 00:14:26,909 -நிக்கி மற்றும் ஜேசன். -மன்னிக்கவும். 252 00:14:26,992 --> 00:14:31,830 நிக்கி மற்றும் ஜேசன். அவர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னர். 253 00:14:32,956 --> 00:14:35,334 நீங்கள் ஒருவருக்கு ஒருவர் ஏதாவது சொல்வீர்கள் என்று நினைக்கிறேன். 254 00:14:35,417 --> 00:14:36,585 ஆமாம். 255 00:14:36,668 --> 00:14:38,879 -ஆமாம், சரி. சரி. -சரி, நீ சொல்லு. 256 00:14:40,255 --> 00:14:41,507 நிக்கி. 257 00:14:42,341 --> 00:14:44,968 -நாம் சந்தித்த கணத்தில் இருந்து... -சரி. 258 00:14:45,052 --> 00:14:47,137 -...எப்போதுமே உன்னுடைய... -சரி. 259 00:14:47,221 --> 00:14:48,597 -சரி, புன்னகையை... -சரி. 260 00:14:48,680 --> 00:14:51,683 ...உன் துடிப்பு, முடிவில்லாத மகிழ்ச்சி, கருணை, தைரியம், புரிந்து கொள்ளுதல், அனுதாபம், 261 00:14:51,767 --> 00:14:53,519 மற்றும் நகைச்சுவை உணர்வை நான் விரும்பினேன். 262 00:14:53,602 --> 00:14:54,937 அடக் கடவுளே. 263 00:14:55,020 --> 00:14:56,188 நிக்கி, நீங்கள் சொல்ல... 264 00:14:56,271 --> 00:15:01,610 நம்பிக்கையான, காதல் ததும்பும், கௌரவமான, ஜாலியான நபர். நீ சிரிக்கும் போது அழகாக இருக்கிறாய். 265 00:15:03,111 --> 00:15:04,112 முகம். 266 00:15:05,864 --> 00:15:06,865 -சரி. -பரவாயில்லை. 267 00:15:06,949 --> 00:15:09,159 -ஒருவரை ஒருவர் எப்படி உணர்கிறோம் என்று தெரியும். -ஆமாம். 268 00:15:11,537 --> 00:15:15,332 ஜேசன், நீ நிக்கியை உன் மனைவியாக ஏற்றுக் கொண்டு, 269 00:15:16,416 --> 00:15:17,960 உன் வாழ்க்கையை பகிர்ந்து கொண்டு, 270 00:15:18,043 --> 00:15:22,798 எதிர்காலம் எப்படி இருந்தாலும், அன்பு செலுத்தி, அவளுக்கு நிம்மதியும், ஆதரவும் கொடுப்பாயா? 271 00:15:23,715 --> 00:15:24,716 நிச்சயம் கொடுப்பேன். 272 00:15:25,300 --> 00:15:27,719 நிக்கி, நீ வந்து... 273 00:15:27,803 --> 00:15:28,887 நிச்சயம் கொடுப்பேன், ஆமாம். 274 00:15:31,098 --> 00:15:35,102 மணமகளும், மணமகனும் மோதிரம் மாற்றிக்கொள்வது பழங்கால மரபு. 275 00:15:35,769 --> 00:15:37,062 நாங்கள் மோதிரம் மாற்றப் போவதில்லை. 276 00:15:38,689 --> 00:15:40,774 இதோ. ஆம். 277 00:15:40,858 --> 00:15:43,068 -ஜேசன்! -நல்லது, நண்பா. 278 00:15:46,196 --> 00:15:47,197 இதோ. 279 00:15:47,990 --> 00:15:49,491 இது சரியான அளவா? 280 00:15:53,620 --> 00:15:54,621 ஆமாம். 281 00:15:57,332 --> 00:15:59,209 -அது சரியான அளவா தெரியவில்லை. -சரி. 282 00:16:01,003 --> 00:16:07,801 சரி. நீங்கள் பதிவேட்டில் கையெழுத்திட்டால், திருமணம் முடிந்துவிடும். 283 00:16:15,851 --> 00:16:20,189 இல்லை, இரு. மன்னிக்கவும், நான் சரியான ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். 284 00:16:21,565 --> 00:16:24,985 அடக் கடவுளே. சரியானவற்றை சொல்ல எனக்குத் தெரியாது. 285 00:16:25,068 --> 00:16:27,571 சந்தோஷத்தைப் பற்றி எப்போது பேசினாலும், சரியான முட்டாளாக தோன்றுகிறது. 286 00:16:27,654 --> 00:16:28,655 அப்படித்தானே? 287 00:16:36,246 --> 00:16:41,710 சந்தோஷமாக இருப்பது என்பது மற்றவர்கள் நம்மை முட்டாளாக நினைத்தாலும் கவலைப்படாமல் இருப்பது. 288 00:16:44,505 --> 00:16:46,423 எனவே, நான் அதை சொல்லப் போகிறேன். 289 00:16:49,760 --> 00:16:51,094 நான் அளவு கடந்த காதலில் இருக்கிறேன். 290 00:16:52,888 --> 00:16:54,431 மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். 291 00:17:14,284 --> 00:17:15,285 சரி. 292 00:17:18,079 --> 00:17:20,040 நாம் எமிலி மற்றும் பால் இல்லை என அவர்களிடம் சொல்ல வேண்டுமா? 293 00:17:20,123 --> 00:17:22,626 -வேண்டாம், நான் ஆந்தையோடு படம் எடுக்க வேண்டும். -சரி. ஜாக்கிரதை. 294 00:17:26,421 --> 00:17:27,464 அப்படித்தான். 295 00:17:56,451 --> 00:17:57,536 அவளை முத்தமிடு. 296 00:17:59,204 --> 00:18:00,706 சரி, அறைக்குப் போங்கள். 297 00:18:05,419 --> 00:18:07,504 -வாழ்த்துக்கள். அற்புதம். -நன்றி. 298 00:18:07,588 --> 00:18:10,507 செய்தி என்னவென்றால், உனக்காக நான் கொஞ்சம் பணம் சம்பாதித்திருக்கிறேன். 299 00:18:10,591 --> 00:18:11,717 -அப்படியா? -ஆமாம். 300 00:18:11,800 --> 00:18:13,468 ஒன்றை விற்றேன். 301 00:18:14,219 --> 00:18:17,890 சிறு புத்தக வெளியிடும் நிறுவனம். உண்மையில், இவ்வளவு ஆனந்தமாக உணர்ந்ததில்லை. 302 00:18:18,724 --> 00:18:21,268 சிறப்பு. பசிக்கிறது. 303 00:18:21,518 --> 00:18:23,896 -அது திருமணத்திற்காகவா? -இல்லை, அது ஒரு பர்கர் வேன். 304 00:18:26,231 --> 00:18:27,566 வா, போகலாம். 305 00:18:27,649 --> 00:18:31,486 ஹே, குழந்தைகளே. இதைப் பார்க்க நீங்கள் இருந்தது எங்களுக்கு மகிழ்ச்சி. 306 00:18:31,570 --> 00:18:34,031 கொஞ்ச நேரம் ஜான் மற்றும் ஜில்லியோடு நீங்கள் இருக்க வேண்டும், சரியா? 307 00:18:34,114 --> 00:18:37,201 நாங்கள் போய் நீதிபதியை பார்க்கிறோம். சரியா? 308 00:18:37,284 --> 00:18:42,289 எது நடந்தாலும் நாங்கள் உங்களை நேசிக்கிறோம் என்று தெரிந்துகொள்ளுங்கள். 309 00:18:43,582 --> 00:18:46,001 -நாங்கள் உங்களை நேசிக்கிறோம். -மிக அதிகமாக. 310 00:18:46,710 --> 00:18:48,504 -மிக அதிகமாக. வாருங்கள்! -வாருங்கள். 311 00:18:52,216 --> 00:18:55,677 நண்பர்களே. ஹாய். இப்போது பேசலாமா? 312 00:18:55,761 --> 00:18:58,180 உங்கள் திருமண பரிசை கொடுக்க நான் மறந்துவிட்டேன். 313 00:18:59,097 --> 00:19:02,643 எனவே, இதை இங்கே வைக்கிறேன். 314 00:19:03,685 --> 00:19:04,895 சரி, வா. நாம் போகலாம். 315 00:19:04,978 --> 00:19:07,022 -அம்மா, இதையும் மஃபின்களையும் எடுத்துச்செல்வீர்களா? -சரி, செய்கிறேன். 316 00:19:07,773 --> 00:19:09,149 நிக்கி. வா, அன்பே. 317 00:19:09,233 --> 00:19:10,275 சரி. மன்னிக்கவும். 318 00:19:13,195 --> 00:19:15,697 -என்ன செய்கிறீர்கள்? -நாங்களும் உங்களோடு வருகிறோம். 319 00:19:23,121 --> 00:19:26,708 இந்தாருங்கள், நண்பா. உங்களுக்கு என்ன வேண்டும், நண்பா? 320 00:19:26,792 --> 00:19:28,210 சால்மன் டெரின் இருக்கிறதா? 321 00:19:29,294 --> 00:19:31,588 இப்போது தான் இருந்த ஒன்றையும் விற்றேன், நண்பா. 322 00:19:32,798 --> 00:19:33,799 அரன்சினி பால்ஸ்? 323 00:19:33,882 --> 00:19:36,552 ஸ்காட், என்ன செய்கிறாய்? வா! 324 00:19:54,736 --> 00:19:55,904 நமக்கு நேரம் இருக்கிறதா? 325 00:19:55,988 --> 00:19:57,197 உங்களால் முடியும். 326 00:20:04,746 --> 00:20:05,831 அவளைக் காணோமே. 327 00:20:05,914 --> 00:20:06,915 நீதிமன்ற அறை 328 00:20:08,709 --> 00:20:09,877 அவள் இங்கு இல்லை போலிருக்கிறது. 329 00:20:09,960 --> 00:20:11,461 ஒருவேளை அவள்... 330 00:20:12,462 --> 00:20:15,716 சரி. அவள் மனம் மாறி இருப்பாளோ? 331 00:20:17,843 --> 00:20:19,553 இல்லை, எனக்கு அப்படி தோன்றவில்லை. 332 00:20:20,137 --> 00:20:21,805 -ஹலோ. -ஹலோ. 333 00:20:25,809 --> 00:20:29,313 -புரியவில்லை. அவள் ஏன் நம்மை வெறுக்கிறாள்? -சரி. இப்போது அது பற்றி தெரிந்துவிடும். 334 00:20:33,525 --> 00:20:34,943 இது தான் அந்த நேரம். 335 00:20:35,027 --> 00:20:37,779 ஆமாம். ஆமாம், இது தான். 336 00:20:40,657 --> 00:20:42,075 -வா. -சரி. 337 00:20:43,785 --> 00:20:45,537 குடும்ப நீதி மன்றம் நடக்கிறது 338 00:20:45,621 --> 00:20:46,788 காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 339 00:20:46,872 --> 00:20:49,666 சரி, யார் வந்து இருக்கிறார்கள்? 340 00:20:50,667 --> 00:20:51,877 ஜேசன் ராஸ். 341 00:20:51,960 --> 00:20:53,629 ஆமாம், நன்றி. நீதிபதி அவர்களே. 342 00:20:54,838 --> 00:20:58,675 இந்த குழந்தைகள் எங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை சிறப்பாக விளக்க 343 00:20:58,759 --> 00:21:02,054 நான் சில காலமாக யோசித்துக்கொண்டு இருக்கிறேன். 344 00:21:02,137 --> 00:21:06,183 மேலும், அவர்கள் எங்களை எவ்வளவு மாற்றி இருக்கிறார்கள் என்றும். 345 00:21:07,226 --> 00:21:09,853 எனக்கு சொல்ல தோன்றுவதெல்லாம், நான் சிறுவனாக இருந்தபோது, 346 00:21:09,937 --> 00:21:13,649 என் அப்பா கால்சட்டையும், பட்டன் வைத்த மேல்சட்டையும் கடற்கரைக்கு அணிவார். 347 00:21:13,732 --> 00:21:16,985 அவர் அங்கே, மந்திரக்கோல் வைத்த மந்திரவாதி போல நின்றிருந்தார், 348 00:21:17,069 --> 00:21:20,322 அவர் அதை தனியாக சென்று, வாங்கி வந்தார் என்று எனக்குத் தெரியும். 349 00:21:21,073 --> 00:21:22,908 அவர்கள் அதை 12 வாரத்தில் செய்தார்கள். 350 00:21:24,117 --> 00:21:25,661 இன்று நாங்கள் திருமணம் செய்துகொண்டோம் 351 00:21:26,537 --> 00:21:29,456 ஏனென்றால் அவர்கள் இல்லாமல் அதை செய்ய எங்களால் முடியவில்லை. 352 00:21:31,959 --> 00:21:35,963 உண்மையில், அவர்கள் இல்லாமல் இனி எதையும் செய்ய எங்களுக்கு விருப்பம் இல்லை. 353 00:21:38,882 --> 00:21:41,468 இதை தான் நான் சொல்ல விரும்பினேன். 354 00:21:44,429 --> 00:21:48,976 சரி. நன்றி. நான் பெயர்களை சரி பார்த்தேன், அவ்வளவுதான். 355 00:21:50,018 --> 00:21:51,019 ஓ, சரி. 356 00:21:51,103 --> 00:21:53,230 எனவே, ஜேசன் ராஸ்? 357 00:21:53,313 --> 00:21:55,983 அது நான் தான், நீதிபதி அவர்களே. இப்போது தான் பேசினேன். நன்றி. 358 00:21:56,733 --> 00:21:58,735 -நிக்கி நியூமன். -நான் தான். 359 00:21:58,819 --> 00:22:00,529 மற்றும் திருமதி. பெவர்லி ரீட். 360 00:22:00,612 --> 00:22:01,864 நான் தான். 361 00:22:01,947 --> 00:22:05,868 சரி. நாம் இங்கே பிரின்சஸ் மற்றும் டைலருக்காக வந்திருக்கிறோம். வந்தவர்களுக்கு நன்றி. 362 00:22:05,951 --> 00:22:09,788 திருமதி. ரீட் ஒரு குடும்ப விஷயத்தை சொல்ல விரும்புகிறார். சரியா? 363 00:22:09,872 --> 00:22:11,748 -ஆமாம். -திருமதி. ரீட். 364 00:22:22,759 --> 00:22:24,261 அடடே, அவள் நிறைய பேப்பர் வைத்திருக்கிறாள். 365 00:22:31,435 --> 00:22:34,897 அவர்களிடம் வீடு இல்லை, பணம் இல்லை, சூதாடும் பழக்கம் இருக்கிறது. 366 00:22:34,980 --> 00:22:37,816 மன்னிக்கவும், அந்தப் பணம் முதலீடு செய்யப்பட்டது. சூதாடப்படவில்லை. 367 00:22:37,900 --> 00:22:40,527 அவனது குடி பழக்கம் போல, இதுவும் ஒருவித போதை தான். 368 00:22:40,611 --> 00:22:42,571 அவனுக்கு குடிப்பழக்கம் கிடையாது. 369 00:22:42,654 --> 00:22:45,199 என்னவென்றால், அவன் தான் எப்போதும் என்னை... 370 00:22:47,201 --> 00:22:49,369 அவனுக்கு குடிப்பழக்கம் கிடையாது. 371 00:22:49,453 --> 00:22:52,206 பிரின்சஸிற்கு குளிருக்கு இதமான ஆடை கொடுப்பதில்லை. அவளது மேலாடை திறந்திருக்கிறது. 372 00:22:52,289 --> 00:22:54,583 அப்ஜெக்சன், நீதிபதி அவர்களே. அவளது ஜம்பர் தடியாக இருக்கும். 373 00:22:54,666 --> 00:22:56,001 டைலர் கையுறைகளை அணிவதில்லை. 374 00:22:56,084 --> 00:22:57,920 மன்னிக்கவும், இல்லை, அவை குளிராக ஆகக்கூடாது என்பதால் 375 00:22:58,003 --> 00:22:59,630 அவன் வெளியிடங்களில் அணிவதில்லை. 376 00:22:59,713 --> 00:23:04,510 இவன் மோசமாக கார் ஒட்டுவான். ஒரு இத்தாலியன் போல. குடிப்பழக்கத்தினால் இருக்கலாம். 377 00:23:04,593 --> 00:23:06,720 -சரி. மன்னிக்கவும்... -உட்காருங்கள். 378 00:23:06,803 --> 00:23:10,057 -இது கவிதை போட்டி இல்லை. -ஆனால், நாங்கள் நல்லவர்கள். 379 00:23:10,140 --> 00:23:12,434 அவர்கள் ரொம்ப நல்லவர்கள்! கடுமையாக நடந்துகொள்ள மாட்டார்கள். 380 00:23:12,518 --> 00:23:16,021 நாங்கள் கடினமானவர்கள் தான்! நான் டாட்டூ கூட போட்டிருக்கிறேன். 381 00:23:17,272 --> 00:23:18,273 அப்படியா? 382 00:23:19,107 --> 00:23:21,693 மன்னிக்கவும், என்ன சொல்வது என்று தெரியாமல் எழுந்து நின்றுவிட்டேன். 383 00:23:22,778 --> 00:23:24,780 சரி, இது ரொம்ப பிரமாதமாக நடக்கிறது. 384 00:23:24,863 --> 00:23:27,824 -அவர்களிடம் இந்த குழந்தைகளை கொடுக்க வேண்டாம். -ஏன் அப்படி? 385 00:23:29,993 --> 00:23:34,373 ஏற்கனவே என் மகளை இழந்துவிட்டேன். இவர்களையும் இழக்க நான் தயாராக இல்லை. 386 00:23:39,044 --> 00:23:41,171 அதுதான் நாங்களும் விரும்புகிறோம் என்று நினைக்கிறீர்களா? 387 00:23:53,392 --> 00:23:57,688 நாம் இருக்கைகளில் அமர்ந்து, சற்று ஓய்வு எடுக்கலாம். 388 00:24:10,617 --> 00:24:11,994 அவள் நம்மை வெறுக்கவில்லை. 389 00:24:14,872 --> 00:24:16,081 அவர்களை அதிகமாக நேசிக்கிறாள். 390 00:24:20,085 --> 00:24:22,921 ஹே! இதோ. 391 00:24:26,466 --> 00:24:28,093 நான் கழிவறைக்கு போகிறேன், அன்பே, சரியா? 392 00:24:46,987 --> 00:24:49,114 இப்போதே. குழந்தைகளே! 393 00:24:50,908 --> 00:24:53,410 இந்த குழந்தைகளை இழப்பது எவ்வளவு கடினம் என்று எனக்குத் தெரியும். 394 00:24:54,995 --> 00:24:57,456 இனி யாரும் யாரையும் இழக்கப் போவதில்லை. 395 00:24:59,416 --> 00:25:01,793 அவர்கள் நம்முடையவர்களாக இருக்க மாட்டார்கள். 396 00:25:03,670 --> 00:25:05,005 நீங்கள் அவர்களின் வாழ்வில் இருக்க வேண்டும். 397 00:25:05,589 --> 00:25:08,717 டைலர்! நான் என்ன சொன்னேன்? நான் என்ன சொன்னேன், டைலர்? 398 00:25:08,800 --> 00:25:11,678 நீங்கள் இரண்டாவது பயங்கரமான பாட்டியாக தான் இருப்பீர்கள். 399 00:25:14,848 --> 00:25:15,891 அது! நீங்கள் தான் அது. 400 00:25:16,391 --> 00:25:19,228 அவர்களுக்காக என் மகள் எதை விரும்பி இருப்பாள் என்று நான் யோசிக்க வேண்டும். 401 00:25:23,357 --> 00:25:25,275 எனக்குத் தெரியவில்லை. எனக்கு... 402 00:25:30,572 --> 00:25:32,991 -நிக், நாம் உள்ளே போக வேண்டும், அன்பே. -சரி. 403 00:25:41,208 --> 00:25:48,048 நீங்கள் உள்ளே வந்து, விரும்பியவற்றை சொல்லுங்கள். 404 00:25:51,885 --> 00:25:55,848 ஏனென்றால் நீங்கள் அவர்களின் பாட்டி, உங்கள் விரும்பப்படி செய்யலாம். 405 00:26:02,563 --> 00:26:03,564 இதோ. 406 00:26:05,315 --> 00:26:08,652 நான் என்ன சொன்னேன்? அமைதியாக இருங்கள். 407 00:26:10,112 --> 00:26:13,407 சரி. நாம் எல்லோரும் சற்று ஓய்வு எடுத்தோம். 408 00:26:15,409 --> 00:26:17,452 திருமதி. ரீட் தொடர விரும்புகிறார். 409 00:26:18,161 --> 00:26:19,162 ஆமாம். 410 00:26:29,423 --> 00:26:31,884 எங்கள் வீட்டிற்கு வெளியே நாங்கள் 411 00:26:35,220 --> 00:26:38,974 அவள் இதை விரும்பி இருப்பாள் போலும். 412 00:26:39,850 --> 00:26:40,851 என் மகள். 413 00:26:43,520 --> 00:26:47,024 அதனால் தான் அவளை பிரின்சஸ் என்று அழைத்தாள். 414 00:26:48,317 --> 00:26:50,652 ஏனென்றால், இளவரசிகள் காப்பாற்றப்படுவார்கள். 415 00:26:58,619 --> 00:26:59,995 அவர்களைப் பார்த்துக் கொள்வார்கள். 416 00:27:45,040 --> 00:27:46,124 நாம் கைகளை கீழே போடலாம். 417 00:27:46,208 --> 00:27:48,335 நமது நம்பிக்கைகள் நொறுங்கிவிட்டது போல தோன்றுகிறது. 418 00:27:48,418 --> 00:27:49,419 இங்கே வாருங்கள்! 419 00:27:50,003 --> 00:27:51,296 இது ஒரு மகள்... மற்றும் மகன்! 420 00:27:51,380 --> 00:27:52,923 ஜாலி! 421 00:27:53,131 --> 00:27:54,132 அன்பே. 422 00:27:54,800 --> 00:27:55,843 ஒட்டகச்சிவிங்கிகள் கனமானவை! 423 00:28:03,600 --> 00:28:06,019 சிறிது நேரத்திற்கு அங்கே கடினமாக இருந்தது. ஆமாம். 424 00:28:06,603 --> 00:28:07,604 பெவ். 425 00:28:09,356 --> 00:28:11,441 -வந்து எல்லோரையும் சந்தியுங்கள். -அது முடியாது, செல்லம். 426 00:28:11,525 --> 00:28:13,402 -இல்லை, நீங்கள் வர வேண்டும். -மாட்டேன். 427 00:28:17,865 --> 00:28:19,783 சரி. சரி, பரவாயில்லை. 428 00:28:22,286 --> 00:28:23,453 சிறப்பு. 429 00:28:23,537 --> 00:28:24,746 நன்றி. 430 00:28:24,830 --> 00:28:27,249 எல்லோரும் பாருங்கள், இவர் தான் பெவ். 431 00:28:27,332 --> 00:28:28,876 ஹலோ, பெவ்! ஹாய், பெவ். 432 00:28:28,959 --> 00:28:31,670 -பெவ், இவர்கள் தான் எங்கள் குடும்பம். -ஹலோ, மக்களே. 433 00:28:56,028 --> 00:28:57,029 ஆக, இது தான். 434 00:28:58,488 --> 00:29:00,240 -தொடக்கத்தின் முடிவு. -ஆமாம். 435 00:29:01,283 --> 00:29:05,037 இப்படித்தான் எல்லாம் இருக்கும் என்று நினைக்கிறேன். 436 00:29:08,081 --> 00:29:10,375 இந்த இடத்தில் அவர்களை வளர்க்க முடியாதது வருத்தமாக இருக்கு. 437 00:29:12,169 --> 00:29:14,421 -நாம் எங்கே போகப் போகிறோம்? -தெரியவில்லை. 438 00:29:14,505 --> 00:29:18,884 தெரியவில்லை, ஆனால் உன்னோடு ஒவ்வொரு படியிலும் நான் இருப்பேன். சரியா? 439 00:29:22,804 --> 00:29:25,098 எல்லாவற்றையும் பெட்டிகளில் அடுக்க வேண்டும். 440 00:29:25,182 --> 00:29:26,099 சரி. 441 00:29:26,183 --> 00:29:29,269 -வாழ்த்துக்கள். பிறகு சந்திக்கலாம். -நல்லது. நீ வேடிக்கையானவன். 442 00:29:31,897 --> 00:29:36,109 -ஜேஸ். நீ இப்படித்தான் சாவியை மறுக்கிறாய். -இவை என் சாவிகள் இல்லை. 443 00:29:36,193 --> 00:29:38,195 -என்னுடையவை பாக்கெட்டில் இருக்கின்றன. -இவை என் சாவிகளும் இல்லை. 444 00:29:38,278 --> 00:29:40,364 -நீ போலி சாவி செய்தாயா? இல்லையா? -இல்லை. 445 00:29:49,122 --> 00:29:50,123 அவை வேலை செய்கின்றன. 446 00:29:50,207 --> 00:29:51,208 விசித்திரம் தான். 447 00:29:51,291 --> 00:29:53,418 உங்களுக்கு நேரம் இருக்கும் போது வாடகை பற்றி பேசலாம். 448 00:29:54,920 --> 00:29:58,131 வீட்டை விற்றதில் கொஞ்சம் பணம் கிடைத்தது, எனக்கு தொடர்ந்து பணம் தேவை. 449 00:29:58,632 --> 00:30:01,426 அதாவது, லாரனுக்கு 21 வயதாகும் போது நீங்கள் வெளியேற வேண்டும். 450 00:30:01,927 --> 00:30:02,970 ஃபிரெட்டி. 451 00:30:03,053 --> 00:30:04,638 பாரு, வழக்கமாக மக்கள் போன பிறகுதான் 452 00:30:04,721 --> 00:30:07,808 நான் அவர்களை எவ்வளவு நேசிக்கிறேன் என்று புரிந்து கொள்வேன். 453 00:30:08,851 --> 00:30:12,521 எனவே, இருவரும் இப்போது இருக்கும் இடத்திலேயே இருப்பது நல்லது என நினைக்கிறேன். 454 00:30:14,731 --> 00:30:15,941 அசத்திட்ட, நண்பா. 455 00:30:16,024 --> 00:30:18,986 பார்த்தாயா? மோசமானவன் இல்லை. 456 00:30:21,446 --> 00:30:23,574 வாடகைகள் சில காலமாக மாறாமல் இருக்கின்றன, 457 00:30:23,657 --> 00:30:25,617 எனவே நீங்கள் சற்று அதிகமாக எதிர்பார்க்கலாம். 458 00:30:30,831 --> 00:30:31,957 சரி, இது விசித்திரமாகிறது. 459 00:30:32,040 --> 00:30:34,293 மாதம் ஒன்றாம் தேதி வாடகை கொடுக்க வேண்டும், சரியா? 460 00:30:36,003 --> 00:30:37,171 அதாவது... 461 00:30:55,522 --> 00:30:58,233 இருண்ட மூலைகள் கரேன் நியூமனின் நாவல் 462 00:31:06,575 --> 00:31:09,036 நிதி மேம்படுத்தல் நிதி பற்றிய தகவல் 463 00:31:09,995 --> 00:31:12,581 ஃபாரடே புத்தகங்கள் வெளியீட்டு நிறுவனம் நிலைகுலைகிறது. 464 00:31:17,085 --> 00:31:19,922 ஷேரன் தாமஸ் ஆடம்ஸ் 465 00:31:22,966 --> 00:31:24,468 கைதட்டல் 466 00:31:24,551 --> 00:31:26,053 யோசனைகள் 467 00:31:26,136 --> 00:31:27,638 சிரிப்பு 468 00:31:27,721 --> 00:31:33,393 காய்ந்த பொருட்கள் - புதிய காய்கறி டப்பாவில் அடைக்கப்பட்ட உணவுகள் 469 00:31:58,168 --> 00:31:59,169 அம்மா! 470 00:32:02,881 --> 00:32:04,216 -அம்மா! -அம்மா! 471 00:32:07,594 --> 00:32:08,595 அடக் கடவுளே. 472 00:32:09,638 --> 00:32:11,014 அது நான் தான். 473 00:32:11,098 --> 00:32:12,474 ஆமாம். 474 00:32:14,726 --> 00:32:17,396 சரி, குழந்தைகளே. வருகிறேன். 475 00:33:17,664 --> 00:33:19,666 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்