1 00:00:06,216 --> 00:00:09,511 சிசேமே வொர்க் ஷாப் வழங்கும் 2 00:00:10,762 --> 00:00:13,848 டின் கேர்ள், தயவுசெய்து கொடு. எனக்கு அந்த டிரைவ் வேண்டும். 3 00:00:13,932 --> 00:00:15,433 எனக்கு உண்மை தெரிந்தாக வேண்டும். 4 00:00:16,351 --> 00:00:17,686 இது கண்டிப்பாக தேவையா? 5 00:00:18,270 --> 00:00:23,400 சரி. எங்களை மாயாவியிடம் அழைத்து சென்ற உடனேயே தருகிறேன். உண்மையான மாயாவியிடம். 6 00:00:23,400 --> 00:00:24,484 நல்ல யோசனை. 7 00:00:24,985 --> 00:00:26,528 இது தான் மூளையைப் பயன்படுத்துவது. 8 00:00:27,028 --> 00:00:29,281 சண்டை போடாமல் இருக்கலாமா? எனக்கு சண்டை பிடிக்காது. 9 00:00:29,281 --> 00:00:32,324 சரி, நல்லது. உங்களை மாயாவியிடம் அழைத்துப் போகிறோம். 10 00:00:33,535 --> 00:00:35,120 நான் அவரை தொடர்பு கொள்ள வேண்டும். 11 00:00:35,120 --> 00:00:38,290 இங்கேயே இருங்கள், நகராதீர்கள். இதோ வருகிறோம். 12 00:00:42,252 --> 00:00:43,670 என்ன செய்கிறாய்? 13 00:00:43,670 --> 00:00:45,714 பாரு, திரைப்படத்தில்... -இது திரைப்படம் அல்ல. 14 00:00:45,714 --> 00:00:48,383 தெரியும், ஆனால் இப்போது அது முக்கியமில்லை. 15 00:00:48,383 --> 00:00:50,927 திரைப்படத்தில், மாயாவி ஒரு ஆண், இல்லையா? 16 00:00:51,011 --> 00:00:53,138 அவனுக்கு உண்மையாக சக்தி கிடையாது. -அதனால்? 17 00:00:53,138 --> 00:00:56,641 எனவே, மாயாவியிடம் அவர்கள் பேசுவதாக நாம் ஏமாற்ற வேண்டும். 18 00:00:56,725 --> 00:00:57,809 இது நன்றாக இருக்கிறது. 19 00:00:58,393 --> 00:01:02,272 ஆனால், மாயாவி போல நடிக்க யாரை தேர்ந்தெடுப்பது? 20 00:01:03,398 --> 00:01:04,815 இதோ சமீர் அடிக்கிறான். 21 00:01:04,900 --> 00:01:08,862 இட்ரிஸ் அதை தடுத்துவிட்டான். ஆம். 22 00:01:10,447 --> 00:01:11,740 இப்போது என்ன? 23 00:01:28,590 --> 00:01:30,383 பேய் எழுத்தாளர் 24 00:01:30,467 --> 00:01:32,719 உன் உதவி தேவை. -மன்னியுங்கள். என்னால் முடியாது. 25 00:01:32,719 --> 00:01:34,763 ஆலிவரின் யுஎஸ்பி டிரைவை டின் கேர்ள் எடுத்துக்கொண்டாள். 26 00:01:35,472 --> 00:01:38,558 பொறு. என்ன யுஎஸ்பி டிரைவ்? -அது ஒரு பெரிய கதை. 27 00:01:38,642 --> 00:01:41,061 ஆமாம். அந்த ஆவி ஒரு பேனா எடுத்து, “நீதியை பெறவும்” என எழுதியது. 28 00:01:41,061 --> 00:01:43,438 ஆலிவரின் மேஜை மேலே அழகான நியாய தராசு இருந்தது, 29 00:01:43,438 --> 00:01:45,398 மற்றும் அந்த செஸ் காயின் வைத்து... -சார்லி. 30 00:01:45,982 --> 00:01:49,486 சரி. “நீளமான கதை” என்றால் நீளமான கதை சொல்ல வேண்டியதில்லை. புரிந்தது. 31 00:01:49,486 --> 00:01:51,696 இருந்தாலும்... நீ உதவுவாயா? 32 00:01:51,780 --> 00:01:52,989 என்னோடு விளையாடு, சமீர். 33 00:01:53,073 --> 00:01:55,659 எனக்கும் ஆசை தான், ஆனால் என் தம்பியோடு இருக்கிறேன். 34 00:01:55,659 --> 00:01:56,743 அவன் தான் எனக்கு முக்கியம். 35 00:01:57,702 --> 00:01:59,871 மன்னிக்கவும், எனக்கு... நேரமில்லை. 36 00:01:59,955 --> 00:02:01,581 நேரத்தை நீயே உண்டாக்கலாம். 37 00:02:02,666 --> 00:02:05,043 இட்ரிஸை கவனிப்பது, அல்லது உன்னுடைய எந்த வேலையிலும் நாங்கள் உதவுகிறோம். 38 00:02:05,043 --> 00:02:06,127 எது வேண்டுமானாலும். 39 00:02:07,837 --> 00:02:10,757 மிக்க நன்றி, ஆனால் நீங்கள் ஏன் அப்படி செய்ய வேண்டும்? 40 00:02:10,757 --> 00:02:12,842 ஏனென்றால் இதில் நீ ஒரு முக்கிய அங்கம். 41 00:02:12,926 --> 00:02:17,347 அவள் சொல்வது சரி. நம் மூவரால் மட்டும்தான் இந்த கதாபாத்திரங்களை பார்க்க முடியும், 42 00:02:17,347 --> 00:02:21,643 நாம் குழுவாக வேலை செய்ய ஆலிவர் விரும்புகிறார். ஒரு காரணத்திற்காக நம்மை தேர்ந்தெடுத்துள்ளார். 43 00:02:21,643 --> 00:02:23,019 தயவுசெய், சமீர். 44 00:02:23,103 --> 00:02:25,814 அந்த யுஎஸ்பி டிரைவ்வில் இருப்பது முக்கியமானதாக இருக்க வேண்டும். 45 00:02:25,814 --> 00:02:29,609 இந்த பேயை எப்படி உங்களால் நம்ப முடிகிறது? 46 00:02:29,693 --> 00:02:32,654 சமீர், பந்தைப் போடு. எனக்கு போர் அடிக்கிறது. 47 00:02:32,654 --> 00:02:35,532 சரி, நண்பா. தயாரா? இதோ பார்! 48 00:02:45,584 --> 00:02:48,169 அவரை நம்பலாம் என்று ஆலிவர் இப்படித்தான் சொல்வார் போல. 49 00:02:50,255 --> 00:02:53,758 சரி, ஆலிவர். ஒப்புக்கொள்கிறேன். என்ன திட்டம்? 50 00:02:53,842 --> 00:02:54,843 கிராமப் புத்தகங்கள் 51 00:02:54,843 --> 00:02:58,638 சரி, சமீர், நீ ஒரு சிறு வேடத்தில் நடிக்க போகிறாய். 52 00:02:58,722 --> 00:03:00,765 ஒரு அமைதியான அறை, சில விளக்குகள், 53 00:03:00,849 --> 00:03:05,937 ஒரு டிஸ்கோ பால், நியாவின் லேப்டாப், ஒரு மைக் இவையெல்லாம் நமக்கு தேவை. 54 00:03:06,021 --> 00:03:09,357 மூளை, இதயம் மற்றும் 55 00:03:09,441 --> 00:03:11,943 தைரியம் போன்ற ஒரு விஷயமும் நமக்குத் தேவை. 56 00:03:14,321 --> 00:03:15,322 டெஸ்ட். 57 00:03:17,449 --> 00:03:18,658 டெஸ்ட். 58 00:03:19,159 --> 00:03:20,160 தைரியம் 59 00:03:20,160 --> 00:03:23,330 என்ன நினைக்கிறாய்? -குதிரை டிராஃபியில் தைரியம் அடங்கி இருக்கா? 60 00:03:24,372 --> 00:03:26,041 அது ஒரு ஆபத்தான விளையாட்டு. 61 00:03:26,666 --> 00:03:29,628 என் அக்காவிடம் நிறைய டிராஃபிகள் இருந்தன, எதை எடுப்பது என்று எனக்குத் தெரியாது. 62 00:03:29,628 --> 00:03:32,631 வேறு யோசனை இருக்கிறதா? -இது வேலைக்காகும் என்று நினைக்கிறேன். 63 00:03:32,631 --> 00:03:35,967 சிறப்பு. இந்த திரை சிலைக்குப் பின்னால் சமீர் என் கணினியோடு மறைந்து இருக்கலாம். 64 00:03:38,261 --> 00:03:41,264 இவை எல்லாவற்றையும் சமாளிக்க, வேறு ஒரு நல்ல வழி வேண்டும். 65 00:03:41,348 --> 00:03:42,724 சற்று சிறப்பான வழி, சரியா? 66 00:03:49,481 --> 00:03:50,774 நாம் தயார் என நினைக்கிறேன். 67 00:03:50,774 --> 00:03:52,484 நான் அவர்களை அழைத்து வருகிறேன். வாழ்த்துக்கள்! 68 00:04:04,454 --> 00:04:07,916 வணக்கம். நான் தான் அந்த மாயாவி. 69 00:04:09,501 --> 00:04:12,295 நான் மூளையைத் தேடி வந்திருக்கிறேன், அரசரே. 70 00:04:12,379 --> 00:04:15,549 அவர் அரசன் இல்லை. ஒரு மாயாவி. -பார்த்தீர்களா? இதற்குத்தான் எனக்கு மூளை தேவை. 71 00:04:16,132 --> 00:04:19,886 மேலும், முடியும் என்றால், எனக்கு தைரியம் தேவை. 72 00:04:19,970 --> 00:04:22,514 உனக்கு எது வேண்டும் என்று எனக்குத் தெரியும். நான் மாயாவி. 73 00:04:22,514 --> 00:04:25,100 எனக்கு எல்லாம் தெரியும். 74 00:04:25,976 --> 00:04:28,478 ஆமாம். மன்னிக்கவும், உங்களை அவமதிக்க நினைக்கவில்லை. 75 00:04:28,562 --> 00:04:31,398 ஓ, சிறப்பு. நான் என்ன செய்துவிட்டேன். -அமைதி! 76 00:04:31,398 --> 00:04:33,358 உங்களின் ஆசைகளை நிறைவேற்றுகிறேன். 77 00:04:33,942 --> 00:04:37,988 சிங்கமே, இந்த தைரிய டிராஃபியை எப்போதும் உன்னோடு வைத்துக்கொள். 78 00:04:37,988 --> 00:04:40,949 ஆபத்தின் போது நீ தைரியமாக இருக்கிறாய் என்பதை இது காட்டும். 79 00:04:44,369 --> 00:04:47,122 ஒரு குதிரை மீது சவாரி செய்வது தைரியமான செயல். 80 00:04:48,748 --> 00:04:51,334 நீங்கள் சொல்வது சரி, குறிப்பாக ஒரு சிங்கமாக இருக்கும்போது. 81 00:04:51,960 --> 00:04:52,961 அதேதான். 82 00:04:53,545 --> 00:04:55,380 சோளக்காட்டு பொம்மை, இதோ மூளை. 83 00:04:56,506 --> 00:04:57,507 நன்றி. 84 00:04:57,591 --> 00:04:59,551 ஹிப்போகேம்பஸை நீ தவறாக சொல்லி இருக்கிறாய். 85 00:05:02,220 --> 00:05:03,221 சரி... 86 00:05:04,431 --> 00:05:09,352 பார்த்தாயா? நீ புத்திசாலி என்று நிரூபிப்பது தான், என்னுடைய நோக்கம். 87 00:05:09,436 --> 00:05:11,021 நீ தவறை கண்டுபிடித்துவிட்டாய். 88 00:05:11,021 --> 00:05:15,191 அப்புறம், டின் கேர்ள், உனக்கு உன்னுடைய சொந்த இதயம். 89 00:05:17,527 --> 00:05:19,613 உனக்கு பிடித்து இருக்கிறதா? 90 00:05:19,613 --> 00:05:21,072 இது எனக்காக இல்லை. 91 00:05:21,156 --> 00:05:23,783 எனக்கு இதயம் தேவையே இல்லை. ஆனால் என் தோழிக்கு தேவை. 92 00:05:23,867 --> 00:05:25,952 இருந்தாலும் நன்றி. அவளிடம் கொடுத்து விடுகிறேன். 93 00:05:27,203 --> 00:05:28,705 வருகிறேன்! இதோ வந்து விட்டேன். 94 00:05:40,258 --> 00:05:41,509 பின்னாடி யார் இருக்கிறார்கள்? 95 00:05:42,302 --> 00:05:43,386 யாரோ ஒரு ஆளு. 96 00:05:43,470 --> 00:05:46,723 இல்லை, இல்லை. அது சமீர். 97 00:05:47,599 --> 00:05:48,725 யார் அந்த சமீர்? 98 00:05:48,725 --> 00:05:51,019 அதாவது, யார் அந்த சமீர்? 99 00:05:51,019 --> 00:05:53,230 சரி. உனக்கு இப்போது உண்மை தெரிந்துவிட்டது. 100 00:05:54,105 --> 00:05:57,692 சமீர் தான் மாயாவி, ஆனால் நீ யாரிடமும் சொல்லக்கூடாது. 101 00:05:57,776 --> 00:05:59,194 நல்ல முயற்சி. 102 00:05:59,194 --> 00:06:01,613 ஏன், நியா? 103 00:06:02,113 --> 00:06:03,615 உனக்குப் புரியவில்லை. 104 00:06:03,615 --> 00:06:06,910 நாங்கள் ஏமாற்றவில்லை. எங்களுக்கு அந்த யுஎஸ்பி டிரைவ் தேவை. 105 00:06:06,910 --> 00:06:08,203 நான் என்ன நினைக்கிறேன் தெரியுமா? 106 00:06:09,454 --> 00:06:11,081 நீங்கள் சூனியகாரியோடு வேலை செய்கிறீர்கள். 107 00:06:16,002 --> 00:06:18,088 இரு, அவள் எங்கே? 108 00:06:21,967 --> 00:06:23,635 டின் கேர்ள்! இரு! 109 00:06:24,761 --> 00:06:27,222 எதற்காக பொறுக்க வேண்டும்? நீங்கள் இன்னும் கொஞ்சம் பொய் சொல்லவா? 110 00:06:39,401 --> 00:06:40,694 உதவி! 111 00:06:42,195 --> 00:06:43,405 உங்களுக்கு இப்போது சந்தோஷம் தானே? 112 00:06:43,405 --> 00:06:44,948 இல்லை, நிச்சயமாகக் கிடையாது. 113 00:06:45,448 --> 00:06:46,741 நாம் அவளை மறுபடியும் கொண்டு வர வேண்டும். 114 00:06:47,325 --> 00:06:49,452 சரி. இனிமேல் பொய் சொல்ல மாட்டோம். 115 00:06:50,662 --> 00:06:51,830 மாயாவி என்று ஒருவர் கிடையாது. 116 00:06:52,664 --> 00:06:53,707 என்ன? 117 00:06:53,707 --> 00:06:54,791 ஆனால் அப்படி இருக்க முடியாதே? 118 00:06:54,791 --> 00:06:58,461 என் நிழலைப் பார்த்தே, என் வாழ்நாள் முழுவதும் பயப்படப் போகிறேன் என்று சொல்கிறாயா? 119 00:07:00,380 --> 00:07:02,799 பார், நாங்கள் உங்களிடம் பொய் சொல்லியிருக்கக் கூடாது. 120 00:07:03,300 --> 00:07:04,301 அது தவறு தான். 121 00:07:04,968 --> 00:07:07,929 ஆனால், தயவுசெய்து எங்களை நம்புங்கள். நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம். 122 00:07:08,513 --> 00:07:12,517 யுஎஸ்பி டிரைவில் தான் நீ ஆஸுக்குத் திரும்பவும், மர்மத்தைக் கண்டுபிடிக்கவும் உதவும் தகவல்கள் 123 00:07:12,601 --> 00:07:13,810 இருக்கும் என நினைக்கிறோம். 124 00:07:13,894 --> 00:07:15,061 என்ன சொல்கிறீர்கள்? 125 00:07:15,145 --> 00:07:18,857 நாமெல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து டின் கேர்ளைக் காப்பாற்ற வேண்டும். நீங்களும் உதவுவீர்களா? 126 00:07:18,857 --> 00:07:21,526 வந்து, எங்களுக்கு வேறு வழி கிடையாது. 127 00:07:21,610 --> 00:07:23,236 சரி. உங்களுக்கு என்ன வேண்டும்? 128 00:07:23,320 --> 00:07:25,572 நீங்கள் இருவரும் பல்கலைக்கழகத்திற்குப் போய், 129 00:07:25,572 --> 00:07:28,116 அந்தக் குரங்குகளைத் தேடிப் பார்க்கலாமே? 130 00:07:28,617 --> 00:07:31,328 அவளை அங்கே கொண்டு போயிருக்கலாம். -நிச்சயம். நல்ல யோசனை. 131 00:07:31,328 --> 00:07:32,537 எங்களுக்கு வாழ்த்துச் சொல்லுங்கள். 132 00:07:34,748 --> 00:07:36,333 நாம் என்ன செய்ய வேண்டும்? 133 00:07:37,876 --> 00:07:39,878 கொஞ்சம் முன்பே, இதைச் செய்திருக்க வேண்டும். 134 00:07:41,379 --> 00:07:42,589 புத்தகத்தைப் படிக்க வேண்டும். 135 00:07:43,965 --> 00:07:45,800 அவள் சூனியக்காரியை ரொம்ப கோபப்படுத்தி விட்டாளே? 136 00:07:46,301 --> 00:07:49,679 இது நன்றாக இருக்கப்போகிறது. ஆவலாக இருக்கிறேன்! -ஆமாம். 137 00:07:49,763 --> 00:07:51,848 நான் இங்கே சும்மா நின்று கொண்டு இருக்கப் போவதில்லை. 138 00:07:52,432 --> 00:07:54,476 தாராளமாகத் தண்ணீரில் குதி. துருப் பிடிக்கட்டும். 139 00:07:54,476 --> 00:07:56,311 அதைப் பற்றி நான் எழுதுகிறேன். அது சிறப்பாக இருந்தது. 140 00:08:02,943 --> 00:08:04,694 இதுவரை, இவ்வளவு வேகமாக புத்தகத்தைப் படித்ததில்லை. 141 00:08:04,778 --> 00:08:05,779 ரோட் டு த விசார்ட் 142 00:08:05,779 --> 00:08:06,905 விறுவிறுப்பான புத்தகம். 143 00:08:06,905 --> 00:08:08,114 இது மிகவும் நன்றாக இருக்கிறது. 144 00:08:08,740 --> 00:08:12,452 அந்த டின் கேர்ளைப் பற்றி கவலைப்படாமல் இருந்தால், இதை ரொம்பவே ரசித்திருப்பேன். 145 00:08:12,452 --> 00:08:15,413 இதை நம்ப முடியவில்லை. அந்த டின் கேர்ள் நம்மிடம் இருந்து எதையோ மறைக்கிறாள். 146 00:08:15,497 --> 00:08:16,748 நீ என்ன சொல்கிறாய்? 147 00:08:16,748 --> 00:08:18,959 அந்த சூனியக்காரிக்கும், டின் கேர்ளுக்கும் பெரிய சண்டை வந்திருக்கிறது. 148 00:08:19,459 --> 00:08:21,419 அதுவரை அவர்கள் நண்பர்களாகத் தான் இருந்திருந்தனர். 149 00:08:22,003 --> 00:08:23,672 எதற்காகச் சண்டை? 150 00:08:23,672 --> 00:08:25,590 தெரியாது. நான் இன்னும் அந்தப் பகுதிக்கு வரவில்லை. 151 00:08:30,804 --> 00:08:32,264 நாங்கள் அந்தக் குரங்குகளைப் பார்த்தோம்! 152 00:08:32,847 --> 00:08:36,601 நாங்கள் அங்கே... 153 00:08:38,395 --> 00:08:39,395 என்னுடைய முதுகு. 154 00:08:40,145 --> 00:08:41,356 பல்கலைக்கழகமா? 155 00:08:41,940 --> 00:08:43,692 சரி. நாம் போகலாம், சிங்கமே. 156 00:08:44,359 --> 00:08:46,319 எந்த இடத்தில் அந்தக் குரங்குகளைப் பார்த்தீர்கள்? 157 00:08:46,403 --> 00:08:48,363 அதோ அங்கே! 158 00:08:48,947 --> 00:08:50,073 நீர் வாழ் உயிரினங்களின் மையம். 159 00:08:50,949 --> 00:08:53,118 சூனியக்காரி, டின் கேர்ளை உள்ளே இருக்கும் நீச்சல் குளத்துக்குக் கூட்டிப் போயிருக்கலாம். 160 00:08:53,118 --> 00:08:54,202 ஆனால் அவள் துருப்பிடித்து விடுவாளே. 161 00:08:54,286 --> 00:08:56,997 அதே தான். அதைத்தான் அவள் விரும்புகிறாளோ என்னவோ. 162 00:08:56,997 --> 00:08:58,081 வாருங்கள். 163 00:09:02,210 --> 00:09:03,420 அதோ அவள் அங்கே இருக்கிறாள்! 164 00:09:22,147 --> 00:09:23,189 அது யார் என்று பார். 165 00:09:23,273 --> 00:09:24,524 உனக்கு என்ன வேண்டும்? 166 00:09:24,608 --> 00:09:26,109 எனக்கு என்ன வேண்டும் என்று நீ நினைக்கிறாய்? 167 00:09:26,818 --> 00:09:29,946 நீ எனக்குச் செய்ததற்கு, நீ தண்டிக்கப்பட வேண்டும். 168 00:09:30,447 --> 00:09:34,242 டின் கேர்ள் அந்தச் சூனியக்காரிக்கு என்ன செய்தாள்? -தெரியவில்லை. நான் இன்னும் படிக்கிறேன். 169 00:09:34,826 --> 00:09:37,120 நானா? நீ தான் எல்லாவற்றையும் ஆரம்பித்தது. 170 00:09:37,120 --> 00:09:39,623 நீ கெட்டவள். உனக்கு என்ன தேவை என்று உனக்குத் தெரியுமா? ஒரு இதயம். 171 00:09:40,790 --> 00:09:44,878 உன்னைத் தண்ணீரில் தூக்கிப் போட்டு, நீ துருப்பிடிப்பதைப் பார்க்கப் போகிறேன். 172 00:09:45,462 --> 00:09:48,256 செய்துகொள். இது எல்லாம் உன் தவறு தான் என்பதை அது ஒன்றும் மாற்றாது. 173 00:09:48,340 --> 00:09:51,593 அவளுடைய தவறு என்ன? சமீர், சீக்கிரம்! 174 00:09:51,593 --> 00:09:54,137 நீ என்னிடம் கத்துவதை நிறுத்தினால், நான் இன்னும் வேகமாகப் படிப்பேன்! 175 00:09:57,807 --> 00:09:59,059 இதோ வந்துவிட்டது. 176 00:09:59,059 --> 00:10:01,311 அவளைத் தூக்கி உள்ளே போடு! 177 00:10:01,311 --> 00:10:03,813 நான் ஏதாவது செய்ய வேண்டும். நான் தைரியமாக இருக்க வேண்டும். 178 00:10:03,897 --> 00:10:07,776 சிங்கமே, நீ ஒரு ராஜா. நீ ஒரு ராஜா. நீ... 179 00:10:07,776 --> 00:10:09,527 ஹே! அவளைத் தனியே விடு! 180 00:10:11,071 --> 00:10:13,990 பொன்னிறத் தொப்பி! இதன் மூலம் தான் அந்த குரங்குகளை அவள் கட்டுப்படுத்துகிறாள். 181 00:10:14,074 --> 00:10:16,993 அடடா. நாம் இப்போது சுதந்திரமாகிவிட்டோம். -இந்த வேலை பயங்கரமாக இருந்தது. 182 00:10:17,077 --> 00:10:19,913 அதை என்னிடம் திருப்பிக் கொடு. நீ தண்ணீருக்குள் போகிறாய். 183 00:10:19,913 --> 00:10:21,039 நான் போனால், நீயும் போவாய். 184 00:10:21,039 --> 00:10:23,750 சூனியக்காரி ஈரமாக மாட்டாள். உருகிவிடுவாள். 185 00:10:30,215 --> 00:10:31,550 ஜாக்கிரதை! 186 00:10:50,110 --> 00:10:51,945 அது ரொம்பவே பயங்கரமாக இருந்தது. 187 00:10:54,030 --> 00:10:55,490 புத்தகத்தைப் படித்து முடித்துவிட்டேன். 188 00:10:55,991 --> 00:10:57,325 என்ன நடக்கிறது என எனக்குத் தெரியும். 189 00:10:58,535 --> 00:10:59,703 என்ன? 190 00:11:04,666 --> 00:11:07,502 இதெல்லாம் ஒரு பார்ட்டியில் தான் ஆரம்பித்தது என நம்பவே முடியவில்லை. 191 00:11:08,044 --> 00:11:09,045 என்ன ஆச்சு? 192 00:11:09,629 --> 00:11:11,882 எமரல்ட் லேக்கில் ஒரு பெரிய பார்ட்டி நடந்தது, 193 00:11:11,882 --> 00:11:16,344 என்னைத் தவிர எல்லோரும் அழைக்கப்பட்டிருந்தனர், நீதான் என்னை அழைக்கவில்லையே. 194 00:11:16,428 --> 00:11:18,471 நீ தண்ணீரில் உருகி விடுவாய் என்பதால் தான் உன்னை அழைக்கவில்லை. 195 00:11:19,055 --> 00:11:20,223 நீ சொல்வதிலும் அர்த்தம் இருக்கிறது. 196 00:11:20,307 --> 00:11:24,561 பழிவாங்குவதற்காக, நீ அவளை டின் கேர்ளாக மாற்றிவிட்டாயா? 197 00:11:26,104 --> 00:11:27,188 இதிலும் கூட அர்த்தம் இருக்கிறது. 198 00:11:27,272 --> 00:11:29,566 தன் பாடத்தைக் கற்றுக் கொண்டதும், அவளை பழைய நிலைக்கு மாற்றவிருந்தேன், 199 00:11:29,566 --> 00:11:31,192 ஆனால், எல்லோரிடமும் நான் கெட்டவள் என சொன்னாள். 200 00:11:33,153 --> 00:11:35,405 எல்லோரும் “மேற்கின் பொல்லாத சூனியக்காரி” என என்னை அழைத்தனர். 201 00:11:35,906 --> 00:11:39,200 நான் சூனியக்காரி என்பதால், மக்கள் இயல்பாகவே நான் ரொம்ப மோசமானவள் என்று நினைப்பார்கள், 202 00:11:39,284 --> 00:11:41,202 அதை அவள் இன்னும் மோசமாக்கிவிட்டாள். 203 00:11:41,703 --> 00:11:43,163 மக்கள் தாங்களாகவே அனுமானம் செய்கிறார்கள். 204 00:11:44,164 --> 00:11:46,207 என்னை நம்பு, எனக்கு அது புரிகிறது. 205 00:11:47,834 --> 00:11:51,796 நான் உன்னைத் துன்புறுத்த முயலவில்லை. என்னைத் தான் துன்புறுத்திக் கொண்டேன் என தோன்றுகிறது. 206 00:11:53,381 --> 00:11:55,258 உன்னை அந்த லேக்கிற்கு அழைத்திருக்க வேண்டும். 207 00:11:55,342 --> 00:11:57,969 தண்ணீரை விட்டுத் தள்ளி அந்தக் கடற்கரையில் உட்கார்ந்திருக்கலாம். 208 00:11:58,845 --> 00:12:01,765 உன்னை “மோசமானவள்” என்று சொன்னது மோசமான விஷயம் தான். 209 00:12:02,349 --> 00:12:04,100 அதனால் தான் உன்னை டின் கேர்ளாக மாற்றினேன். 210 00:12:05,435 --> 00:12:07,354 என் மனக் குழப்பங்களை சமாளித்திருந்தால் தேவலை. 211 00:12:08,647 --> 00:12:09,773 உண்மையிலேயே வருந்துகிறேன். 212 00:12:10,440 --> 00:12:11,441 நானும் தான். 213 00:12:16,821 --> 00:12:19,741 இனி நான் அந்த மாயாவியைப் பார்க்க வேண்டியதில்லை என நினைக்கிறேன். 214 00:12:20,325 --> 00:12:23,495 இதற்காகத் தான் நீ அவனைப் பார்க்க நினைத்தாயா? சூனியக்காரிக்காக இதயம் பெறவா? 215 00:12:24,454 --> 00:12:29,000 அவளுக்கு இதயம் இருந்திருந்தால், என் மேல் கோபப்பட்டிருக்க மாட்டாள் என நினைத்தேன். 216 00:12:29,793 --> 00:12:30,794 நான் கோபமாக இல்லை. 217 00:12:52,774 --> 00:12:54,734 நான் பார்த்ததிலேயே சிறந்த தந்திரம் இதுதான். 218 00:12:55,318 --> 00:12:57,237 இதை எனக்குச் சொல்லிக் கொடுப்பாயா? 219 00:12:57,737 --> 00:13:00,532 டின் கேர்ளுக்கு மாயாவியைப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லாமல் இருக்கலாம், ஆனால் எனக்கு மூளை தேவை. 220 00:13:01,116 --> 00:13:03,076 உனக்கு மூளை தேவையேயில்லை, சோளக்காட்டு பொம்மையே. 221 00:13:03,702 --> 00:13:06,288 உன்னிடம் அது இருக்கிறது. உன்னிடம் எப்போதுமே அது இருந்திருக்கிறது. 222 00:13:06,288 --> 00:13:10,584 என்னிடம் இருந்தால், எல்லோரையும் தவறாக பாப்பி தோட்டத்துக்குள் செல்ல விட்டிருக்க மாட்டேனே. 223 00:13:11,167 --> 00:13:13,253 பாப்பி நிகழ்வு, என்னுடைய தவறு தான். 224 00:13:13,253 --> 00:13:15,005 அதற்கு நான் தான் காரணம், சோளக்காட்டு பொம்மையல்ல. 225 00:13:15,672 --> 00:13:16,882 என்ன சொல்கிறாய்? 226 00:13:17,841 --> 00:13:20,427 பாப்பி தோட்டத்தின் அபாயங்கள் பற்றி பல வருடங்களாக, என்னை எச்சரித்தார்கள், 227 00:13:20,427 --> 00:13:24,848 ஆனால் அந்தச் சாலையில் இருந்த பிரிவை அடைந்ததும், எனக்கு இருந்த ஒரே பாதை, மலை மேல் ஏறுவது தான். 228 00:13:24,848 --> 00:13:26,349 உனக்கு உயரம் என்றால் பயமாயிற்றே. 229 00:13:26,975 --> 00:13:28,226 அதனால் தான், நான் எதையும் சொல்லவில்லை, 230 00:13:28,310 --> 00:13:32,981 சோளக்காட்டு பொம்மை பாப்பி தோட்டத்தின் வழியாகப் போகலாம் என்று சொன்னதும், நான் எதிர்க்கவில்லை. 231 00:13:32,981 --> 00:13:36,109 அதனால் தான், கொஞ்சமாவது தைரியத்தைப் பெற மாயாவியை பார்க்க விரும்பினேன். 232 00:13:36,109 --> 00:13:37,944 உனக்குத் தைரியம் தேவையில்லை, சிங்கமே. 233 00:13:39,029 --> 00:13:40,322 நீ செய்திருப்பதைப் பார். 234 00:13:40,322 --> 00:13:43,325 நீச்சல் பலகையில் இருந்து என்னைக் காப்பாற்றினாய். அது தைரியமான செயல் தான். 235 00:13:44,784 --> 00:13:48,371 பாப்பி தோட்டத்தைப் பற்றிய உண்மையைச் சொல்லி இருக்கிறாய், அதற்கும் நிறையவே தைரியம் தேவை. 236 00:13:49,247 --> 00:13:52,250 அப்படியானால் நான் தைரியசாலி என்றா சொல்கிறாய்? 237 00:13:53,251 --> 00:13:54,502 உனக்குப் புரியவில்லையா? 238 00:13:55,629 --> 00:13:56,880 நீங்கள் யாருமே அந்த மாயாவியைப் பார்க்க வேண்டியதில்லை. 239 00:13:59,049 --> 00:14:02,385 ஆமாம். சோளக்காட்டு பொம்மையே, புத்திசாலியாக இருக்க நிறைய வழிகள் இருக்கின்றன. 240 00:14:02,469 --> 00:14:03,845 நீ மிகவும் கூர்ந்து கவனிக்கிறாய். 241 00:14:04,638 --> 00:14:06,932 மற்றவர்கள் பார்க்காத விஷயங்களை நீ பார்க்கிறாய், 242 00:14:07,641 --> 00:14:10,435 திருப்புமுனையாக இருந்த அந்த செஸ் காயிங்களை வீடியோவில் கவனித்தாய். 243 00:14:10,435 --> 00:14:14,231 நாள் முழுவதும் வயலில் நின்று, காக்கைகளை பயமுறுத்துவதால், கூர்ந்து கவனிக்க கற்றுக்கொண்டேன். 244 00:14:15,649 --> 00:14:18,860 டின் கேர்ள்? -மெலனி என்று கூப்பிடு. அது தான் என் பெயர். 245 00:14:18,944 --> 00:14:22,822 அன்பும், அக்கறையும் கொண்ட இதயம் உனக்கு இருக்கு, மெலனி. 246 00:14:24,157 --> 00:14:26,534 உன் தோழியை நீ இழந்ததால் தான், இதையெல்லாம் செய்திருக்கிறாய். 247 00:14:30,747 --> 00:14:31,790 அப்புறம்... 248 00:14:35,710 --> 00:14:36,711 இதோ உனக்காக. 249 00:14:36,795 --> 00:14:39,589 அது எதற்காக என தெரியாவிட்டாலும், மாயாவிக்காக இல்லையென்றால் சரி. 250 00:14:39,673 --> 00:14:42,509 எனக்கும் தான், ஆனால் நாங்கள் கண்டுபிடிப்போம். -ஆமாம். 251 00:14:46,972 --> 00:14:49,766 சரி, இப்போது என்ன நடக்கும்? 252 00:14:50,767 --> 00:14:52,602 நீங்கள் ஆஸிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும். 253 00:14:52,686 --> 00:14:54,187 நாங்கள் எப்படி திரும்பிச் செல்வது? 254 00:14:55,105 --> 00:14:57,732 சோளைக்காட்டு பொம்மையையும், சிங்கத்தையும், குரங்குகள் அழைத்துச் செல்லும். 255 00:14:58,358 --> 00:15:01,403 மெலனி என்னுடன் பயணிப்பாள். நாங்கள் பேச இது ஒரு வாய்ப்பாக இருக்கும். 256 00:15:06,825 --> 00:15:08,326 நன்றி. -உன் பிரிவால் வாடுவேன். 257 00:15:08,410 --> 00:15:10,287 சார்லி. -உன் பிரிவால் வருந்துவேன். 258 00:15:12,872 --> 00:15:15,333 நியா, உன் உள்ளுணர்வுகளை வெளிப்படுத்த தைரியம் வேண்டும், 259 00:15:15,417 --> 00:15:17,627 அப்படி வெளிப்படுத்துவது நல்லது தான். 260 00:15:17,711 --> 00:15:21,381 பாப்பி தோட்டத்தைப் பற்றி அனைவரிடமும் சொன்னது எனக்கு நிம்மதியாக இருக்கிறது. 261 00:15:22,507 --> 00:15:23,550 உன் அம்மாவிடம் பேசு. 262 00:15:27,679 --> 00:15:29,014 நன்றி, சிங்கமே. 263 00:15:31,224 --> 00:15:32,350 பை. -பை. 264 00:15:32,934 --> 00:15:33,935 பை. 265 00:15:44,154 --> 00:15:45,196 அவர்கள் எங்கே சென்றார்கள்? 266 00:15:50,118 --> 00:15:51,828 மீண்டும் புத்தகத்திற்கே சென்றுவிட்டார்கள். 267 00:15:51,912 --> 00:15:54,372 எப்படி என்று என்னிடம் கேட்காதே, ஆனால் சென்றுவிட்டார்கள். 268 00:15:56,249 --> 00:15:57,375 நாம் செய்து முடித்துவிட்டோம். 269 00:15:57,959 --> 00:15:59,211 என்னால் இதை நம்ப முடியவில்லை. 270 00:16:00,629 --> 00:16:02,047 இன்னும் இதை செய்து முடிக்கவில்லை. 271 00:16:03,465 --> 00:16:04,549 ஆமாம். 272 00:16:07,135 --> 00:16:08,345 இது எதுவும் சரி வராது. 273 00:16:13,350 --> 00:16:15,518 இதில் ஒன்றுமே இல்லையே. 274 00:16:24,945 --> 00:16:28,740 எலோக்வென்ட் பெசன்ட். என் அம்மா எகிப்துக்கே திரும்ப அனுப்பும் கலைப்பொருள். 275 00:16:28,740 --> 00:16:31,701 ஆலிவர் நமக்கு அனுப்பிய காணொளியிலும் இது இருந்தது. 276 00:16:47,884 --> 00:16:49,636 இது எந்த மொழி? 277 00:16:50,428 --> 00:16:54,599 பழைய எகிப்து காலத்தைச் சேர்ந்த ஹையரோகிளைஃபிக் ஸ்கிரிப்ட் என நினைக்கிறேன். 278 00:16:55,767 --> 00:16:59,563 புரிகிறது. ஆலிவர் எகிப்திய தொல்பொருளாளர், 279 00:17:00,355 --> 00:17:03,733 மேலும் சிறிது சந்தேகம் பிடித்தவர். 280 00:17:03,817 --> 00:17:06,611 பள்ளியில் செஸ் காயின்களுக்கு நடுவில் மறைத்து, 281 00:17:06,695 --> 00:17:10,448 யாருக்கும் தெரியாத மொழியில் எழுதியிருக்கிறார், 282 00:17:11,783 --> 00:17:14,703 இது தவறான கைகளில் சேர்வதை அவர் நிச்சயம் விரும்பவில்லை. 283 00:17:15,661 --> 00:17:17,914 ஆமாம், ஆனால் ஏன்? 284 00:17:19,416 --> 00:17:20,417 தெரியவில்லை. 285 00:17:21,083 --> 00:17:23,795 நான் புகைப்படம் எடுத்துக்கொள்கிறேன் வீட்டிற்குச் சென்று பார்க்கலாம். 286 00:17:23,879 --> 00:17:26,131 ஆனால் இதை மொழிபெயர்ப்பதற்கு ஒரு வழியைத் தேடனும். 287 00:17:33,096 --> 00:17:34,848 பழங்கால எழுத்துக்களை மொழிபெயர்க்கும் புத்தகம். 288 00:17:34,848 --> 00:17:37,767 அது போதும். இன்றிரவே ஆரம்பிக்கிறேன். 289 00:17:37,851 --> 00:17:41,938 ஆக, எலோக்வென்ட் பெசன்டுக்கும், இந்த மர்மத்திற்கும் ஏதோ தொடர்புள்ளது. 290 00:17:42,606 --> 00:17:48,194 இந்த மர்மத்தை கண்டுபிடித்தால், நமக்கு நீதி கிடைக்குமா? 291 00:17:59,080 --> 00:18:00,165 அம்மா? 292 00:18:01,833 --> 00:18:03,543 உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும். 293 00:18:03,627 --> 00:18:04,753 என்ன? 294 00:18:06,671 --> 00:18:07,797 ஒன்றும் பிரச்சினை இல்லையே? 295 00:18:07,881 --> 00:18:08,882 இருக்கு. 296 00:18:19,267 --> 00:18:21,478 டிரக்கிலிருந்து பொருள்களை இறக்கி வைக்க 297 00:18:21,478 --> 00:18:25,899 என் தோழிக்கு உதவியதாக அவளிடம் சொன்னேன், ஆனால் அவள் என்னை நம்பாமல் காவலரை அழைத்தாள். 298 00:18:27,734 --> 00:18:30,737 சார்லியின் அப்பா வரவில்லை என்றால் என்ன நடந்திருக்கும் என்றே தெரியவில்லை. 299 00:18:31,238 --> 00:18:33,406 உனக்கு அப்படி நடந்தது வருந்தமாக உள்ளது, அன்பே. 300 00:18:34,908 --> 00:18:36,159 என்னிடம் சொன்னதற்கு நன்றி. 301 00:18:36,910 --> 00:18:39,788 நான் சுரங்கப்பாதையில் சென்றதற்காக கோபமாக இருப்பீர்கள் என நினைத்தேன். 302 00:18:40,789 --> 00:18:42,332 அதைப்பற்றி பிறகு பேசலாம். 303 00:18:42,332 --> 00:18:43,583 நான் உன் மீது கோபமாக இல்லை. 304 00:18:44,417 --> 00:18:46,294 ஆனால் அந்தப் பெண் மீது கோபமாக இருக்கிறேன். 305 00:18:48,046 --> 00:18:50,173 இனவெறி பிடித்தவர்கள் இருக்கிறார்கள் என தெரியும். 306 00:18:51,591 --> 00:18:53,677 அதைப் பற்றியெல்லாம் நீங்கள் என்னிடம் சொன்னீர்கள், 307 00:18:54,844 --> 00:18:55,845 ஆனால்... 308 00:18:58,598 --> 00:19:00,684 அது எனக்கு நடக்கவில்லை, 309 00:19:02,769 --> 00:19:03,853 இப்படி நடக்கவில்லை. 310 00:19:04,938 --> 00:19:06,439 எவ்வளவு கொடுமையாக இருக்கும் என புரிகிறது. 311 00:19:07,440 --> 00:19:11,069 இது போன்று மறுபடியும் நடக்காது என்று சொல்ல ஆசை தான், ஆனால் அப்படி பொய் சொல்ல முடியாது. 312 00:19:12,153 --> 00:19:14,114 உன் தோலின் நிறத்தைப் பார்த்து 313 00:19:14,114 --> 00:19:15,782 சிலர் உன்னைப் பற்றி ஏதேனும் நினைக்கலாம். 314 00:19:17,742 --> 00:19:19,035 நான் அவளிடம் பேசியிருக்க வேண்டும்... 315 00:19:21,162 --> 00:19:23,039 அல்லது திட்டியிருக்க வேண்டும், 316 00:19:24,749 --> 00:19:26,501 அல்லது உதவிக்கு அழைத்திருக்க வேண்டும், ஆனால்... 317 00:19:28,753 --> 00:19:30,714 நான் உறைந்துவிட்டேன். 318 00:19:30,714 --> 00:19:33,091 ஹே. நான் சொல்வதைக் கேள். 319 00:19:34,426 --> 00:19:36,303 நீ எந்த தவரும் செய்யவில்லை. புரிகிறதா? 320 00:19:36,845 --> 00:19:39,222 நீ அதைப்பற்றி வருத்தப்படவும் தேவையில்லை. 321 00:19:39,723 --> 00:19:43,268 நீ கறுப்பர் என தெரிந்த உடனேயே, அவள் உன்னைப் பற்றி தவறாக நினைத்திருப்பாள். 322 00:19:46,730 --> 00:19:48,189 நான் இப்போது என்ன செய்வது? 323 00:19:49,024 --> 00:19:51,026 இது மறுபடியும் நடக்காமலிருக்க என்ன செய்வது? 324 00:19:53,570 --> 00:19:54,821 அது கடினமான விஷயம். 325 00:19:54,905 --> 00:19:58,366 இந்த நாடு தோன்றியதற்கு முன்பிலிருந்தே இனவெறி தோன்றிவிட்டது. 326 00:20:01,077 --> 00:20:06,082 ஆனால், உன்னைப் போன்ற தைரியமான இளைஞர்கள் இதை எதிர்த்துப் போராடுகின்றனர். 327 00:20:06,166 --> 00:20:08,001 நீ நீயாக இரு, நியா. 328 00:20:09,294 --> 00:20:12,923 நீ சாதுரியமான, அறிவான, 329 00:20:13,715 --> 00:20:15,550 நல்ல பெண். 330 00:20:17,677 --> 00:20:19,846 நீ இந்த உலகை சிறப்பானதாக மாற்றுவாய். 331 00:20:22,349 --> 00:20:23,475 நான் உன்னை நேசிக்கிறேன். 332 00:20:29,814 --> 00:20:30,857 நன்றி, அம்மா. 333 00:20:39,574 --> 00:20:40,617 இதோ. 334 00:20:41,326 --> 00:20:42,452 என்னை மன்னித்துவிடு. 335 00:20:44,120 --> 00:20:46,706 நன்றி. நான் வீட்டில் இருப்பது கஷ்டமாகத் தான் இருக்கும். 336 00:20:47,457 --> 00:20:49,251 இந்த அறையைப் பெற, நீ பல வருடம் காத்திருந்தாய். 337 00:20:50,627 --> 00:20:52,629 இன்னும் கொஞ்சம் காலம் காத்திருக்கணும் போல. 338 00:20:53,129 --> 00:20:55,090 சில மாதங்கள் நன்றாக அனுபவித்தேன். 339 00:20:57,092 --> 00:20:59,302 ஹே, உன் தந்திரங்களில் ஒன்றை எனக்குக் காட்டு. 340 00:21:01,388 --> 00:21:02,597 உண்மையாகவா? 341 00:21:02,681 --> 00:21:06,101 நான் இப்போது அதற்குத் தயாராக இல்லை, ஆனாலும் செய்யட்டுமா? 342 00:21:06,685 --> 00:21:07,978 இது நன்றாக இருந்தது. 343 00:21:07,978 --> 00:21:10,272 ஏன் சிரிக்கிறாய்? நன்றாகத்தானே இருந்தது. 344 00:21:10,272 --> 00:21:11,856 சரி, என்னை கவர்ந்துவிட்டாய். 345 00:21:11,940 --> 00:21:15,735 இதன் மூலம் உன்னை ஆச்சரியப்படுத்துகிறேன். இப்போது, என்னிடம் இந்த நாணயம் இருக்கிறது. 346 00:21:15,819 --> 00:21:18,530 இதை என்னால் மறைய வைக்க முடியும். 347 00:21:27,622 --> 00:21:30,125 அது வெறும் கனவு தான். நான் இங்கு தான் இருக்கிறேன். 348 00:21:44,806 --> 00:21:47,475 த எலோக்வென்ட் பெசன்ட் 349 00:21:47,559 --> 00:21:49,144 விக்ஃபோர்ட் பல்கலைக்கழகம் எலோக்வென்ட் பெசன்டைப் பார்வையிடவும் 350 00:22:00,864 --> 00:22:02,032 என்னால் இதை நம்ப முடியவில்லை. 351 00:22:02,574 --> 00:22:04,743 நீ தவறாக நினைத்திருந்தால்? இதை எப்படி விளக்குவது? 352 00:22:04,743 --> 00:22:06,953 நான் தவறாக நினைக்கவில்லை என நம்புவோம். 353 00:22:12,042 --> 00:22:13,043 அதைக் காணவில்லை. 354 00:22:17,714 --> 00:22:21,343 மன்னிக்கவும், எலோக்வென்ட் பெசன்ட் எங்கே? எப்போதும் அந்தக் கண்ணாடிப் பெட்டியில் தான் இருக்கும். 355 00:22:21,343 --> 00:22:23,470 கெய்ரோவிலுள்ள அருங்காட்சியகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. 356 00:22:23,470 --> 00:22:26,014 இன்றா? -இந்நேரத்திற்கு அது பேக் செய்யப்பட்டிருக்கும். 357 00:22:30,352 --> 00:22:31,519 பரவாயில்லை. அவர் தான் என் அம்மா. 358 00:22:31,603 --> 00:22:33,772 நியா? நீ இங்கு என்ன செய்கிறாய்? -ஹே, நியா. 359 00:22:34,689 --> 00:22:36,733 ஆலிவர் அலுவலகத்திற்கு வந்த சிறுவர்கள் நீங்கள் தானே? 360 00:22:36,733 --> 00:22:38,109 இளம் தொல்லியல் துறையினர்? 361 00:22:38,193 --> 00:22:39,653 நீ தொல்லியல் துறையில் இருக்கிறாயா? 362 00:22:39,653 --> 00:22:41,905 ஆமாம், அம்மா. கேளுங்கள், நீங்கள் எல்லாவற்றையும் நிறுத்தணும். 363 00:22:42,530 --> 00:22:44,115 நாங்கள் எலோக்வென்ட் பெசன்டை பார்க்க வேண்டும். 364 00:22:44,199 --> 00:22:47,202 இப்போது தான் உனக்கு ஆர்வம் வந்துவிட்டதா? இதைப்பற்றி பல மாதங்களாக பேசியிருக்கிறேனே. 365 00:22:47,202 --> 00:22:49,246 தயவுசெய்து. நிறுத்துங்கள். 366 00:22:49,246 --> 00:22:51,539 என்ன சொல்கிறாய்? -நியா? என்ன நடக்கிறது? 367 00:22:51,623 --> 00:22:54,084 எலோக்வென்ட் பெசன்ட் பற்றி தகவல் கிடைத்திருக்கிறது. 368 00:22:54,084 --> 00:22:55,168 நாங்கள் சொல்வதைக் கேளுங்கள். 369 00:22:55,669 --> 00:22:56,670 சமீர். 370 00:23:01,967 --> 00:23:03,051 இங்கே இரண்டு புகைப்படங்கள் இருக்கின்றன. 371 00:23:03,552 --> 00:23:05,554 ஒன்று பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து 372 00:23:05,554 --> 00:23:07,180 எடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ எலோக்வென்ட் பெசன்டின் புகைப்படம். 373 00:23:07,264 --> 00:23:09,724 மற்றொன்று நூலகத்தின் உள்ளேயிருந்து சமீபத்தில் எடுக்கப்பட்ட 374 00:23:09,808 --> 00:23:12,269 எலோக்வென்ட் பெசன்டின் புகைப்படம். 375 00:23:12,769 --> 00:23:14,229 நீங்கள் பார்ப்பது போல, 376 00:23:15,647 --> 00:23:16,773 இரண்டும் ஒத்துப் போகவில்லை. 377 00:23:17,983 --> 00:23:19,109 எனக்குப் புரியவில்லை. 378 00:23:19,901 --> 00:23:20,902 என்ன சொல்கிறாய்? 379 00:23:20,986 --> 00:23:26,658 நான் சொல்வது வியப்பாக இருக்கலாம், ஆனால் இந்த எலோக்வென்ட் பெசன்ட் போலியானது. 380 00:24:24,841 --> 00:24:26,843 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்