1 00:00:06,216 --> 00:00:09,970 சிசேமே வொர்க் ஷாப் வழங்கும் 2 00:00:11,263 --> 00:00:12,556 இதற்கு ஒரு அர்த்தமும் இல்லை. 3 00:00:12,556 --> 00:00:15,350 ஆறு மதங்களுக்கு முன்பே, இந்த எலோக்வென்ட் பெசன்டுக்கு அங்கீகாரம் வாங்கிவிட்டேன். 4 00:00:15,350 --> 00:00:17,936 கெய்ரோவிற்கு அதை அனுப்பும் முன் எல்லாம் ஒழுங்காக இருக்க வேண்டும், 5 00:00:17,936 --> 00:00:20,355 ஆனால், நிச்சயமாக எதுவுமே ஒழுங்காக இல்லை, டாட். 6 00:00:20,355 --> 00:00:22,941 என்ன சொல்வது என தெரியவில்லை, சிறுவர்கள் சரியாகத் தான் சொல்கிறார்கள். 7 00:00:24,234 --> 00:00:25,443 இது போலியானது. 8 00:00:25,527 --> 00:00:26,903 ஆனால் எப்படி? ஏன்? 9 00:00:26,987 --> 00:00:28,071 அம்மா, நீங்கள் நலம் தானே? 10 00:00:28,071 --> 00:00:31,575 இல்லை. அது மகத்தான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கலைப்பொருள். 11 00:00:31,575 --> 00:00:33,410 அது இப்போது காணாமல் போய்விட்டதா? 12 00:00:33,410 --> 00:00:35,620 இதை எப்படி கண்டுபிடித்தீர்கள் என சொல்லுங்களேன். 13 00:00:35,704 --> 00:00:37,163 ஆரம்பத்தில் இருந்து. 14 00:00:38,164 --> 00:00:39,207 சரி. 15 00:00:39,291 --> 00:00:41,501 இளம் மானுடவியலாளர்கள் சங்கத்திற்காக ஒரு ப்ராஜெக்ட் செய்தேன்... 16 00:00:41,585 --> 00:00:42,669 தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள். 17 00:00:42,669 --> 00:00:44,754 இளம் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சங்கம். 18 00:00:44,838 --> 00:00:48,592 நிச்சயமாக. நிறைய சங்கங்கள் உள்ளன, அதனால் குழம்பிவிட்டேன். 19 00:00:49,217 --> 00:00:51,928 சரி, அன்றைக்கு சமீர், எலோக்வென்ட் பெசன்டைப் பார்த்த போது, 20 00:00:52,012 --> 00:00:53,013 சில புகைப்படம் எடுத்தான். 21 00:00:53,013 --> 00:00:55,849 ஆமாம், நூலகத்தின் இணையதளத்தில் இந்த புகைப்படத்தைப் பார்த்தேன், 22 00:00:55,849 --> 00:00:57,893 நான் எடுத்த புகைப்படத்தை விட வித்தியாசமாக இருந்தது. 23 00:00:57,893 --> 00:01:02,522 பாருங்கள், அசல் எலோக்வென்ட் பெசன்டில் இந்த இடத்தில் ஒரு கிழிசல் இருக்கும். 24 00:01:02,606 --> 00:01:06,651 ஆனால் இந்த பதிப்பில் ஓட்டை ஏதும் இல்லை. இது போலியாத்தான் இருக்கும். 25 00:01:06,735 --> 00:01:07,819 எலோக்வென்ட் பெசன்ட் 26 00:01:07,903 --> 00:01:10,655 எகிப்திற்கு அனுப்பப்படப் போகிறது என நீங்கள் சொன்னது நினைவுக்கு வந்தது, 27 00:01:10,739 --> 00:01:12,365 அதனால் தான் நாங்கள் உடனடியாகச் சொன்னோம். 28 00:01:12,449 --> 00:01:15,535 நல்ல காரியம் செய்தாய். நீங்கள் எல்லோருமே. நன்றி. 29 00:01:17,495 --> 00:01:20,165 நாம் என்ன செய்வது? -நாம் போலீஸைக் கூப்பிடலாம். 30 00:01:20,165 --> 00:01:23,251 இப்போது வேண்டாம். நாம் அதைப் பல்கலைக் கழகத்திலேயே சமாளிப்போம். 31 00:01:23,335 --> 00:01:25,253 இந்த செய்தி வெளியே போனால், ஊடகங்களுக்குக் கொண்டாட்டமாகிவிடும். 32 00:01:25,337 --> 00:01:28,840 சரிதான். நான் போர்டை அழைத்து, தனியார் புலனாய்வாளரை ஏற்பாடு செய்கிறேன். 33 00:01:28,924 --> 00:01:29,925 நல்லது. 34 00:01:31,176 --> 00:01:32,928 குழந்தைகளே, நன்றி. இனி நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். 35 00:01:33,887 --> 00:01:35,055 வீட்டில் சந்திக்கலாம், கண்ணே. 36 00:01:37,474 --> 00:01:39,351 ஆனால் இன்னும் நிறைய கேள்விகள் இருக்கின்றன. 37 00:01:39,351 --> 00:01:42,145 எலோக்வென்ட் பெசன்டை யார், எப்படி திருடியிருப்பார்கள்? 38 00:01:42,229 --> 00:01:44,105 ஏன் திருடணும்? 39 00:01:44,189 --> 00:01:46,483 ஆலிவரின் அலுவலகத்தில் பார்த்த பழங்கால எழுத்துக்களைப் பற்றி தெரிந்ததா? 40 00:01:46,483 --> 00:01:47,943 மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன். 41 00:01:50,320 --> 00:01:52,280 இந்த புலனாய்வாளர் நல்லவர் என்று நம்புகிறேன். 42 00:01:53,365 --> 00:01:56,409 யாரோ ஒருவர் இங்கிருந்து எப்படி எதையோ திருட முடியும் என புரியவில்லை. 43 00:01:56,493 --> 00:02:00,247 ஆமாம். ஒரு மந்திரவாதியால் தான் இதை செய்திருக்க முடியும். 44 00:02:01,206 --> 00:02:02,207 நான் எங்கே இருக்கிறேன்? 45 00:02:05,293 --> 00:02:06,378 கொஞ்சம் கேளுங்கள். 46 00:02:07,212 --> 00:02:08,337 போன வாரம் அவளை அழைத்தேன்... 47 00:02:09,798 --> 00:02:10,799 ஹலோ? 48 00:02:14,844 --> 00:02:15,971 ஹலோ? 49 00:02:18,056 --> 00:02:19,307 என்ன நடக்கிறது? 50 00:02:23,186 --> 00:02:28,066 சும்மா சொல்கிறேன், இது முடியவில்லைப் போல. 51 00:02:44,291 --> 00:02:46,084 பேய் எழுத்தாளர் 52 00:02:47,502 --> 00:02:49,754 ஆலிவர் இன்னொரு கதாபாத்திரத்தை வெளியிட்டிருக்கிறார். 53 00:02:50,297 --> 00:02:56,845 நம்மைத் தவிர யாராலும் அவனைப் பார்க்கவோ, பேசுவதை கேட்கவோ முடியாது. த விசார்ட் ஆஃப் ஆஸ் போல. 54 00:02:56,845 --> 00:02:58,847 இவனது புத்தகம் எதுவென்று தெரியவில்லை. 55 00:02:59,514 --> 00:03:03,602 அவர் கதாபாத்திரங்களை வெளியே விட்டுக் கொண்டே இருப்பாரா? என்றென்றைக்குமா? 56 00:03:03,602 --> 00:03:05,604 நான் கிழவியாகும் போது, இதையெல்லாம் யோசிக்க முடியாது. 57 00:03:05,604 --> 00:03:07,022 பிப்பி லாங்க்ஸ்டாக்கிங் எந்த நிமிடத்தில் 58 00:03:07,022 --> 00:03:10,150 வருவாள் என்று கவலைப்படாமல், என் ஓய்வுக் காலத்தை அனுபவிக்க வேண்டும். 59 00:03:10,150 --> 00:03:12,068 நிகழ்காலத்தைப் பற்றி மட்டும் இப்போது கவலைப்படலாம். 60 00:03:12,152 --> 00:03:15,906 ஹலோ? ஹலோ? என்ன... 61 00:03:15,906 --> 00:03:18,074 நம்மால் அவனிடம் உண்மையைச் சொல்ல முடியாது, இல்லையா? 62 00:03:18,158 --> 00:03:19,159 முடியவே முடியாது. 63 00:03:19,701 --> 00:03:21,536 பத்திரிகையாளர் சந்திப்பு எங்கே என்று தெரியுமா? 64 00:03:21,620 --> 00:03:22,621 என்னது? 65 00:03:22,621 --> 00:03:24,623 பத்திரிக்கையாளர்கள் நிறைய பேர் இருக்கும் பெரிய அறை? 66 00:03:24,623 --> 00:03:28,460 எனது தயாரிப்பாளர்கள், உதவியாளர்கள், ஆதரவாளர்கள்? 67 00:03:28,460 --> 00:03:31,796 இது மியாமி மாநாட்டு மையம் தானே? 68 00:03:33,715 --> 00:03:34,716 இல்லை. 69 00:03:36,509 --> 00:03:39,471 ஓ, இல்லை. இல்லை, இல்லை, இல்லை. 70 00:03:42,474 --> 00:03:44,142 லியோ எல் மேக்னிஃபிகோ எங்கே? 71 00:03:44,226 --> 00:03:45,352 யார் அது? 72 00:03:45,352 --> 00:03:46,519 நான் தான். 73 00:03:46,603 --> 00:03:48,688 யாரோ ஒருவன் போல நீயே உன்னைப் பற்றி பேசுகிறாய்? 74 00:03:48,772 --> 00:03:51,775 லியோ அப்படித்தான் பேசுவான். இது என்னுடைய அடையாளம். 75 00:03:51,775 --> 00:03:53,235 நான் எங்கிருக்கிறேன் என சொல்லுங்களேன். 76 00:03:55,320 --> 00:03:58,365 வாழ்த்துக்கள். நீ வேறு பரிணாமத்தில் டெலிபோர்ட் செய்திருக்கிறாய், 77 00:03:58,365 --> 00:04:00,283 அது வினோதம் தான், ஆனால், சில நேரங்களில்... 78 00:04:00,367 --> 00:04:02,702 ஆலிவர் என்று ஒரு பேய் உள்ளது. 79 00:04:03,620 --> 00:04:05,997 காணாமல் போன எகிப்திய காகிதச்சுருள் பற்றிய மர்மத்தைக் கண்டுபிடிக்க, 80 00:04:06,081 --> 00:04:08,875 எங்களுக்கு உதவ, அவர் கற்பனைக் கதாபாத்திரங்களை எங்கள் உலகிற்குள் விடுவிக்கிறார். 81 00:04:08,959 --> 00:04:10,961 அந்த கதாபாத்திரங்களில் நீயும் ஒருவன், ஆனால், 82 00:04:10,961 --> 00:04:13,463 எந்தப் புத்தகத்தில் இருந்து நீ வந்திருக்கிறாய் என்று தான் தெரியவில்லை. 83 00:04:13,547 --> 00:04:16,466 ஹே, அவனிடம் உண்மையை சொல்ல வேண்டாம் என நினைத்தேன். 84 00:04:16,550 --> 00:04:18,927 மன்னித்துவிடு, நீ சொன்ன பொய்யும், உண்மையும், ஒரே அளவு மோசம் தான். 85 00:04:19,009 --> 00:04:20,220 இது தான் சரி. 86 00:04:21,346 --> 00:04:22,514 அப்படியா? 87 00:04:22,514 --> 00:04:25,809 பாருங்கள், மியாமியில் நான் ஒரு பிரபலமான மந்திரவாதி. 88 00:04:25,809 --> 00:04:28,812 இங்கே வருவதற்கு முன், பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் இருந்தேன். 89 00:04:28,812 --> 00:04:30,272 மியாமி ஹெரால்ட் பத்திரிகை என்னிடம், 90 00:04:30,272 --> 00:04:32,774 “லியோ எல் மேக்னிஃபிகோ, நீங்கள், யாரும் இதுவரை பார்த்திராத 91 00:04:32,774 --> 00:04:36,111 நம்ப முடியாத வித்தை செய்யப் போவதாக பல மாதங்களாகச் சொல்கிறீர்கள்” என கேட்டனர். 92 00:04:36,111 --> 00:04:37,195 நான் தயங்கினேன். 93 00:04:37,279 --> 00:04:40,115 என்னைச் சுற்றி இருந்த கேமராக்கள் எல்லாம் க்ளிக் செய்யப்பட்டன. 94 00:04:40,115 --> 00:04:43,577 ஆனால் உண்மை என்னவென்றால், தேவைப்படும்போது பயன்படுத்த எந்த வித்தையும் என்னிடம் இல்லை. 95 00:04:43,577 --> 00:04:46,079 எனக்கு என்ன செய்வதென்றே புரியாமல் திகைத்துவிட்டேன். 96 00:04:46,079 --> 00:04:48,915 இன்னும் எனக்கு மிகப் பெரிய வெப்பா கிடைக்கவில்லை. 97 00:04:48,999 --> 00:04:50,083 “வெபா” என்றால் என்ன? 98 00:04:50,083 --> 00:04:52,294 பெரும்பாலான மக்கள் “வெப்பா” என்று சொல்லும் போது, 99 00:04:52,294 --> 00:04:55,922 அதற்கு “மகிழ்ச்சி”, “அருமை”, “வாழ்த்துக்கள்” என்று அர்த்தம். 100 00:04:56,590 --> 00:05:00,635 ஆனால் லியோ சொல்லும்போது, அது ஒரு வாழ்க்கை முறை. 101 00:05:00,719 --> 00:05:03,805 இது கலப்படமில்லாத உற்சாகம். இது முடிவற்ற கண்டுபிடிப்பு. 102 00:05:03,889 --> 00:05:06,975 25 நாடுகளில் நடக்கும் என் எல்லா வியாபாரங்களிலும் இது ஒரு மேற்கோள். 103 00:05:06,975 --> 00:05:11,646 இந்த மர்மத்தைக் கண்டுபிடிப்பதில் நான் உதவினால், வெப்பாவைக் கண்டுபிடிக்க எனக்கு நேரம் கிடைக்கும். 104 00:05:11,730 --> 00:05:15,817 ஆனால், இந்த கற்பனைக் கதாபாத்திரம் பற்றிய விஷயங்கள் எல்லாம் உனக்கு பரவாயில்லையா? 105 00:05:17,110 --> 00:05:18,570 உங்கள் உலகில் லியோ கற்பனையான நபர் என்றால், 106 00:05:18,570 --> 00:05:21,197 லியோவின் உலகில் நீங்களும் உண்மையில்லை தானே? 107 00:05:21,281 --> 00:05:23,617 ஒருவேளை, நீங்கள் தான் அந்தக் கதாபாத்திரங்களாக இருக்கலாமோ. 108 00:05:24,200 --> 00:05:25,535 லியோ எப்பொழுதும் சொல்வது போல, 109 00:05:26,119 --> 00:05:27,787 “பெரிய விஷயங்களைத் திட்டமிடும் போது, 110 00:05:27,871 --> 00:05:29,831 வெவ்வேறு கோணங்களில் விஷயங்களைப் பார்க்க வேண்டும்.” 111 00:05:32,959 --> 00:05:35,212 கிராமப் புத்தகங்கள் 112 00:05:35,212 --> 00:05:38,465 நீங்கள் இதைத்தான் கேட்டீர்களோ. 113 00:05:38,465 --> 00:05:39,674 லியோ எல் மேக்னிஃபிகோ பாப்லோ கார்டாயா 114 00:05:39,758 --> 00:05:41,635 ஒரு மந்திரவாதி சிறுவன் போட்டியில் எப்படி வெற்றி பெற்று 115 00:05:41,635 --> 00:05:43,345 மியாமியில் பெரிய ஆளானான் என்பதைப் பற்றியது. 116 00:05:43,345 --> 00:05:44,763 இல்லை, இல்லை. உலகம் பூராவும். 117 00:05:44,763 --> 00:05:46,640 பின்னர் அந்தப் புகழ், அவன் தலைக்குள் ஏறியது, 118 00:05:46,640 --> 00:05:49,017 தன் மேற்கோள் “வெப்பா”வை எல்லோரும் பயன்படுத்ணும் என முயற்சித்தான், 119 00:05:49,017 --> 00:05:51,895 அது ஒரு ஸ்பானிஷ் மொழி, அதை அவன் தவறாகவே பயன்படுத்தினான். 120 00:05:51,895 --> 00:05:53,146 இது அவனுடைய கருத்து, சரியா? 121 00:05:53,230 --> 00:05:55,857 இது ரொம்ப நன்றாக இருக்கும். உங்களுக்கு இந்தப் புத்தகம் பிடிக்கும். 122 00:05:55,941 --> 00:05:58,193 பிரமாதமாக இருக்கிறதே. இதை வாங்கலாம் என்றிருக்கிறேன். 123 00:05:58,193 --> 00:06:00,570 பத்திரமாக வைத்து, படித்து முடித்ததும், திருப்பிக் கொடுத்துவிடு. 124 00:06:01,112 --> 00:06:04,616 சில சமயங்களில் நாங்கள் விசேஷத் திட்டங்கள் மூலம் புத்தகங்களைக் கடன் கொடுப்போம். 125 00:06:04,616 --> 00:06:07,953 ஒரு குடும்ப வழக்கம் மாதிரி. ஜாலியாகப் படியுங்கள். 126 00:06:07,953 --> 00:06:09,037 நன்றி. 127 00:06:12,374 --> 00:06:14,459 போன முறை போலவே, இந்த புத்தகமும் வெறுமையாக இருக்கிறது. 128 00:06:16,878 --> 00:06:21,091 பாப்லோ கார்டாயாவின் லியோ எல் மேக்னிஃபிகோ. இந்த முறை நாம் எல்லோரும் படிக்க வேண்டும். 129 00:06:21,091 --> 00:06:24,844 ஆமாம். இதில் ஒரு கொடூரமான சூனியக்காரி இருந்தால், முதலிலேயே தெரிந்துகொள்ள வேண்டும். 130 00:06:26,805 --> 00:06:27,806 ஹே, நண்பர்களே. 131 00:06:27,806 --> 00:06:29,683 ஹாய். -ஹாய், சமீர். 132 00:06:29,683 --> 00:06:32,477 நான் இட்ரிஸுக்கு படித்து காண்பித்தேன். முடித்துக் கொண்டே இருக்கிறோம். 133 00:06:32,561 --> 00:06:34,604 இவர்கள் என் நண்பர்கள், சார்லி மற்றும் நியா. 134 00:06:35,105 --> 00:06:36,565 உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. 135 00:06:36,565 --> 00:06:37,983 உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. 136 00:06:37,983 --> 00:06:40,277 சமீர், இதைக் கேள். இந்த சனிக்கிழமை இரவு, 137 00:06:40,277 --> 00:06:43,405 என் ஊரிலிருந்து வந்திருக்கும் ஒரு குடும்பத்திற்கு சிறப்பு விருந்து வைக்கிறோம். 138 00:06:43,405 --> 00:06:46,116 இப்போதுதான் யூஎஸ் வந்திருக்கிறார்கள், அவர்கள் சௌகரியமாக உணர வேண்டும் 139 00:06:46,116 --> 00:06:48,785 அமெரிக்காவைப் பற்றிய நம் இரண்டு வருட அனுபவத்தை அவர்களோடு பகிரலாம். 140 00:06:48,785 --> 00:06:50,287 சரி. நல்லது. 141 00:06:50,870 --> 00:06:52,747 உனக்கு ஒரு சிறப்பு வேலை வைத்திருக்கிறேன். 142 00:06:52,831 --> 00:06:55,542 பேக்கரியில் இருந்து அவர்களுக்காக ஒரு நமோரா வாங்கி வருவாயா? 143 00:06:55,542 --> 00:06:57,127 அவர்களுக்கு பிடித்த இனிப்பு அது. 144 00:06:57,127 --> 00:06:58,503 சரி, கண்டிப்பாக. 145 00:06:59,087 --> 00:07:02,757 நன்றி. நீங்கள் இருவரும் கூட, எங்கள் பார்ட்டிக்கு வர வேண்டும். 146 00:07:02,841 --> 00:07:05,385 நமோரோ சாப்பிடாமல் வாழ்க்கை முழுமை அடையாது. 147 00:07:05,385 --> 00:07:08,930 என்னைப் பொறுத்தவரை, உலகிலேயே மிகவும் சுவையான கேக் அது. 148 00:07:09,014 --> 00:07:10,640 நாங்கள் வருகிறோம். -வருகிறோம். 149 00:07:10,724 --> 00:07:11,725 இரு... 150 00:07:13,602 --> 00:07:14,603 போகலாம். 151 00:07:17,063 --> 00:07:19,900 ஆக, நாளைக்கு காப்பக அறையில் சந்தித்து எலோக்வென்ட் பெசன்ட் எப்படி 152 00:07:19,900 --> 00:07:21,401 திருடப்பட்டது என யோசிக்கலாமா? 153 00:07:21,401 --> 00:07:23,361 நாம் அதை, “ஈபி”என்று சொல்லலாமா? 154 00:07:23,445 --> 00:07:25,363 “எலோக்வென்ட் பெசன்ட்” என்பது வாயில் நுழையவில்லை. 155 00:07:25,447 --> 00:07:28,533 எலோக்வென்ட் பெசன்ட், எலோக்வென்ட் பெசன்ட். பார்த்தீர்களா? கடினமாக இருக்கிறது. 156 00:07:29,576 --> 00:07:30,619 ஈபி என்று சொல்வோம். 157 00:07:42,214 --> 00:07:44,716 சரி, என்ன நினைக்கிறாய்? 158 00:07:45,550 --> 00:07:46,635 பரவாயில்லை. 159 00:07:46,635 --> 00:07:48,970 பரவாயில்லையா? எனது சிறந்த வித்தையே இது தான். 160 00:07:49,054 --> 00:07:51,932 சரி, நீ ஜன்னல் வழியாக உன் இடது கையை காட்டி... 161 00:07:53,391 --> 00:07:55,518 இல்லை, இல்லை. அது வேண்டாம். 162 00:07:55,602 --> 00:07:57,938 நமக்கு வேலை இருக்கிறது. உன் கருவிகளை பார்க்கலாம். 163 00:08:01,816 --> 00:08:04,277 சரி, நான் தொடங்கும்போது வைத்திருந்த எல்லாம் உன்னிடம் இருக்கிறது, 164 00:08:04,361 --> 00:08:06,988 ஆனால் உண்மையில் உனக்கு... 165 00:08:13,203 --> 00:08:14,788 நீ நலம் தானே? 166 00:08:14,788 --> 00:08:18,041 லா விஸ்டாவில் என் தோழி அமாண்டா உபயோகித்த மந்திரக்கோல் போல இருக்கிறது. 167 00:08:19,334 --> 00:08:21,545 இரு, நீ மியாமியில் இருந்து வந்ததாக நினைத்தேனே. 168 00:08:21,545 --> 00:08:24,756 இப்போது அங்கே வாழ்கிறேன், ஆனால் லா விஸ்டாவில் வளர்ந்தேன். 169 00:08:24,756 --> 00:08:27,842 அது, ஃப்ளோரிடாவின் கடற்கரையில் உள்ள ஒரு சிறு நகரம். 170 00:08:27,926 --> 00:08:30,929 நானும், அமாண்டாவும் கடற்கரையில் இலவச மாயாஜால நிகழ்ச்சிகள் செய்வோம். 171 00:08:30,929 --> 00:08:34,849 டாமினோஸ் விளையாடும் வயதானவர்கள் தான் எங்களின் பார்வையாளர்கள், 172 00:08:34,933 --> 00:08:37,226 ஆனால் அது சிறப்பாக இருந்தது. 173 00:08:38,645 --> 00:08:42,023 மக்களின் முகத்தில் புன்னகையை பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கும் என அமாண்டா எப்போதும் சொல்வாள். 174 00:08:42,816 --> 00:08:43,817 வாய்ப்பே இல்லை. 175 00:08:43,817 --> 00:08:46,069 இதற்காகத்தான் நானும் மாயாஜாலம் செய்கிறேன். 176 00:08:46,695 --> 00:08:50,156 “உங்கள் திறமை என்ன?” என்ற ஒரு பெரிய டிவி நிகழ்ச்சி 177 00:08:50,240 --> 00:08:54,953 மியாமியில் ஆடிஷன் செய்தார்கள், ஆனால் அவளுக்கு பங்கேற்க விருப்பம் இல்லை. 178 00:08:54,953 --> 00:08:57,706 எனவே நான் தனியாக சென்றேன். 179 00:08:58,999 --> 00:09:04,045 நான் வெற்றி பெற்றேன், அதன் பிறகு எல்லாம் மாறியது. 180 00:09:04,796 --> 00:09:06,840 இப்போது நான் லியோ எல் மேக்னிஃபிகோ. 181 00:09:11,219 --> 00:09:14,472 சரி, நேரமாகிறது. இங்கே படுக்கை வசதி இருக்கிறதா? 182 00:09:15,307 --> 00:09:17,851 அடிதளத்தில் ஒரு கட்டில் இருக்கிறது. 183 00:09:19,269 --> 00:09:20,312 நல்லது. 184 00:09:20,312 --> 00:09:21,479 குட் நைட். 185 00:09:25,734 --> 00:09:28,653 நேற்றிரவு டின்னரின் போது, என் அம்மா நிர்வாக உறுப்பினர்கள் 186 00:09:28,737 --> 00:09:31,448 ஒரு தனிப்பட்ட புலனாய்வாளரை வைத்து காப்பக அறையை மூடிவிடுவார்கள் என்றார். 187 00:09:31,448 --> 00:09:34,576 இது உண்மை என்றால், நாம் விரைவாக யோசிக்க வேண்டும். 188 00:09:34,576 --> 00:09:35,785 அப்படியென்றால், நான் தொடங்கலாம். 189 00:09:38,955 --> 00:09:40,165 உண்மையாகவா? 190 00:09:40,165 --> 00:09:41,249 இது என்னுடைய அடையாளம். 191 00:09:41,750 --> 00:09:43,335 உன்னிடம் எவ்வளவு அடையாளங்கள் உள்ளன? 192 00:09:48,465 --> 00:09:50,175 எலோக்வென்ட் பெசன்ட் 193 00:09:50,175 --> 00:09:54,054 பூட்டை உடைத்து, ஈபியை எடுத்து, இங்கிருந்து வெளியே செல்லலாம், 194 00:09:55,138 --> 00:09:56,806 ஆனால் பாதுகாப்பு கேமராக்கள் காட்டிவிடும். 195 00:09:57,849 --> 00:09:59,351 காட்டிவிடுமா? 196 00:09:59,351 --> 00:10:01,811 தயவு செய்து, அறையின் ஓரத்தில் மெதுவாக நடந்து கொண்டே இருங்கள் 197 00:10:01,895 --> 00:10:03,939 நான் திரும்ப வரும் வரை நிற்கக் கூடாது. 198 00:10:08,693 --> 00:10:11,571 ஹே, நீங்கள் புத்தகத்தைப் படித்துவிட்டீர்களா? 199 00:10:11,655 --> 00:10:13,740 எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. -எனக்கும் தான். 200 00:10:13,740 --> 00:10:18,036 அவன் மியாமிக்கு போவது பிடித்தது... -நான் அதை இன்னும் படிக்கவில்லை. கதையை சொல்லாதே. 201 00:10:34,803 --> 00:10:35,804 வெப்பா. 202 00:10:37,764 --> 00:10:43,019 ஆக, இங்கிருந்து இதுவரை, அந்த பாதுகாப்பு கேமராக்கள் காட்டுவதில்லை. 203 00:10:44,187 --> 00:10:45,188 கண்டுபிடிக்க முடியாத இடம். 204 00:10:46,356 --> 00:10:51,069 ஆனால் ஈபி அந்த இடத்தில் இல்லை. எனக்குப் புரியவில்லை. 205 00:10:51,069 --> 00:10:52,153 எனக்கும் தான். 206 00:10:52,237 --> 00:10:58,243 இன்னும் முடியவில்லை. ஆனால் எப்படிப்பட்ட சிறிய கண்டுபிடிப்பு என்றாலும், அது உபயோகப்படும். 207 00:10:58,243 --> 00:10:59,828 சரி, இந்த நேரத்தில், 208 00:10:59,828 --> 00:11:03,915 அவர்கள் ஈபியை எப்படி கண்ணாடிக்குள்ளிருந்து எடுத்தார்கள் என்று கண்டுபிடிக்க வேண்டும். 209 00:11:06,793 --> 00:11:10,755 பாருங்கள். அவர் எதையோ சோதிக்கிறார். 210 00:11:10,839 --> 00:11:11,923 சிறப்பு. 211 00:11:12,007 --> 00:11:13,633 நாம் இதை கவனிக்கலாம். 212 00:11:34,237 --> 00:11:35,989 அங்கே பாதுகாப்பு கேமராக்கள் இல்லை. 213 00:11:37,073 --> 00:11:38,909 எனவே எலோக்வென்ட் பெசன்ட்டை 214 00:11:38,909 --> 00:11:41,786 பிரத்யேக தொகுப்பு அறையில் பார்க்கலாம், 215 00:11:41,870 --> 00:11:45,165 ஆனால் நூலகர் எப்போதும் நம்மையே பார்த்துக் கொண்டிருப்பார். 216 00:11:45,165 --> 00:11:48,251 கவனத்தை திசைத் திருப்பினால் ஒழிய. 217 00:11:48,335 --> 00:11:51,213 அதே தான். யாராவது நூலகரின் கவனத்தை திசைத் திருப்பலாம். 218 00:12:00,764 --> 00:12:05,477 இப்போது நூலகரின் கவனச் சிதறலால், வாய்ப்பு கிடைத்துவிட்டது. 219 00:12:05,477 --> 00:12:08,939 அப்போதுதான் அவர்கள் அசலை எடுத்துவிட்டு போலியை வைத்திருப்பார்கள். 220 00:12:08,939 --> 00:12:10,899 சரி. குற்றவாளிகள் போலியை 221 00:12:10,899 --> 00:12:12,901 பெட்டியில் கொண்டு வந்திருக்கலாம். 222 00:12:13,902 --> 00:12:18,114 நூலகர் வருவதற்கு முன்பு, எளிதாக மாற்றியிருக்கலாம். 223 00:12:18,198 --> 00:12:20,659 இப்போது போலியான எலோக்வென்ட் பெசன்ட் 224 00:12:20,659 --> 00:12:24,412 கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்படும் போது குற்றவாளிகள் சிரித்திருப்பார்கள். 225 00:12:25,121 --> 00:12:26,373 முடிந்தது. -நன்றி. 226 00:12:27,415 --> 00:12:29,876 குற்றவாளி அறையிலிருந்து சுலபமாக வெளியே போகிறான். 227 00:12:29,960 --> 00:12:33,838 அசலான எலோக்வென்ட் பெசன்ட்டை ஒரு பையில் வைத்துக்கொண்டு. 228 00:12:35,507 --> 00:12:37,133 நாம் கண்டுபிடித்துவிட்டோம். 229 00:12:37,217 --> 00:12:40,053 ஒரு நிமிடம்? உங்கள் பையை சோதனை செய்ய வேண்டும். 230 00:12:40,053 --> 00:12:41,805 யாருக்கும் விலக்கு இல்லை. 231 00:12:45,350 --> 00:12:46,560 நன்றி. 232 00:12:47,769 --> 00:12:49,312 நாம் நினைத்தது சரி இல்லை. 233 00:12:49,396 --> 00:12:51,606 வெளியே போகும்போது நூலகர் பையை சோதனை செய்வார். 234 00:12:51,690 --> 00:12:55,652 நாம் நெருங்கிவிட்டோம். இப்படிப்பட்ட புதிரை தீர்ப்பது சுலபமல்ல. 235 00:12:55,652 --> 00:12:59,864 என் பாட்டி எப்போதும் சொல்வது போல், “டென்கண் ஃபே.” நம்பிக்கை வை. 236 00:13:10,125 --> 00:13:11,960 இதுதான் அந்த பேயா? 237 00:13:11,960 --> 00:13:13,378 ஆலிவரைப் பார். 238 00:13:21,011 --> 00:13:22,679 “சார்கோஃபெகஸ்?” 239 00:13:23,680 --> 00:13:27,058 மம்மிக்களை புதைக்கும் சவப்பெட்டி தானே அது? 240 00:13:37,569 --> 00:13:38,820 போகலாம்! 241 00:13:58,173 --> 00:13:59,341 அந்தப் பேயின் திட்டம் என்ன? 242 00:13:59,841 --> 00:14:01,801 நிச்சயமாக, அவர் புரியும்படி சொல்பவர் அல்ல. 243 00:14:01,885 --> 00:14:03,178 நாம் கதவை தட்டுவோம். 244 00:14:03,178 --> 00:14:06,348 என்ன சொல்வது? மாடியில் இருக்கும் சவப்பெட்டியை பார்க்க வேண்டும் என்றா? 245 00:14:06,348 --> 00:14:09,100 இல்லை. நாம் ஒரு விசித்திரமான தேடுதல் வேட்டையில் இருக்கிறோம் என சொல்வோம். 246 00:14:09,184 --> 00:14:11,269 அல்லது குழந்தைப் பருவத்தில் இந்த வீட்டில் இருந்தோம், 247 00:14:11,353 --> 00:14:14,231 எங்கள் பழைய அறையை பார்க்க வேண்டும் என்று சொல்வோம். 248 00:14:14,231 --> 00:14:17,609 அல்லது நாங்கள் வீடு விற்பனையாளர்கள்... -நாம் பேசாமல் கவனிப்போமே. 249 00:14:17,609 --> 00:14:20,862 நான் ஒப்புக்கொள்கிறேன். துல்லியமாக கவனிப்பது தான் மதிப்பு மிக்கது. 250 00:14:20,946 --> 00:14:22,405 சமீரை பேக்கரிக்கு அழைத்து போவதைத் தவிர, 251 00:14:22,489 --> 00:14:24,241 மதியம் நமக்கு வேறு வேலையும் இல்லை. 252 00:14:25,283 --> 00:14:26,284 ஓ-ஓ. 253 00:14:26,993 --> 00:14:29,496 என்ன? -மறந்தே போயிட்டேன். 254 00:14:29,496 --> 00:14:31,498 வளாகத்துக்குள் என் அக்காவை சந்திக்க வேண்டும். 255 00:14:32,165 --> 00:14:34,793 எங்கள் பெற்றோருக்கு பெயிண்ட் அடிக்க உதவ வேண்டும். 256 00:14:34,793 --> 00:14:38,004 மன்னியுங்கள், நான் கிளம்ப வேண்டும். என்ன நடந்தது என எனக்குத் தெரியப்படுத்துங்கள். 257 00:14:38,713 --> 00:14:39,923 உன் உதவிக்கு நன்றி. 258 00:14:48,974 --> 00:14:51,434 கொஞ்சம் அமைதியாக இருப்பதும் நன்றாகத் தான் இருக்கிறது. 259 00:14:51,518 --> 00:14:52,811 எனக்கும் சார்லியைப் பிடிக்கும், 260 00:14:52,811 --> 00:14:56,523 ஆனால் அவளது ஒவ்வொரு யோசனையையும் சொல்லி சலிப்படையச் செய்வாள். 261 00:14:56,523 --> 00:14:58,817 கொஞ்சம் யோசித்து சிறந்ததை தேர்ந்தெடுக்கலாம். 262 00:14:58,817 --> 00:15:01,111 இப்படித்தான் அவள் எப்போதுமே யோசிப்பாள். 263 00:15:01,111 --> 00:15:03,113 சரிதான், ஆனால், கொஞ்சம் எரிச்சலாக உள்ளது. 264 00:15:03,113 --> 00:15:06,032 அதாவது, யாருமே முற்றிலும் சிறந்தவர் இல்லை. 265 00:15:06,741 --> 00:15:09,578 எடுத்துக்காட்டுக்கு, மற்றவருக்கான முடிவையும் 266 00:15:09,578 --> 00:15:11,830 நீயே சேர்த்து எடுத்துவிடுவாய். 267 00:15:11,830 --> 00:15:16,501 நாங்கள் அவனிடம் சொல்ல வேண்டாம் என முடிவெடுத்தும் நீ லியோ புத்தகத்திலிருந்து வந்ததை கூறியது போல. 268 00:15:16,585 --> 00:15:18,712 அது அவளுக்கும் கொஞ்சம் எரிச்சலாக இருந்திருக்கும். 269 00:15:19,296 --> 00:15:21,006 அட. உண்மையை உடைத்துவிட்டாய். 270 00:15:25,635 --> 00:15:28,221 மன்னித்துவிடு, நீ சொல்வதை ஒப்புக்கொண்டேன். 271 00:15:29,556 --> 00:15:32,767 ஆலிவர் நம்மைத் தேர்வு செய்ததற்கு ஏதோ ஒரு காரணம் இருக்கும். 272 00:15:32,851 --> 00:15:34,936 எனவே, நாம் சேர்ந்து செயல்பட கற்றுக்கொள்ளணும். 273 00:15:36,146 --> 00:15:37,147 சரி. 274 00:15:38,189 --> 00:15:39,858 ஜாலியாக இருக்கப் போகிறது. -ஆமாம். 275 00:15:39,858 --> 00:15:41,776 ஆமாம். -போகலாம். 276 00:15:43,153 --> 00:15:45,280 ஆம், நாம் சில இடங்களுக்கு சென்று... 277 00:15:46,239 --> 00:15:48,408 அவர்கள் கராத்தே வகுப்பிற்கு போகிறார்கள் போல. 278 00:15:48,408 --> 00:15:50,744 நாம் அங்கு சென்று, பிரிந்து போய் விசாரணை செய்ய வேண்டும். 279 00:15:50,744 --> 00:15:52,871 நான் அம்மாவைப் பின்தொடர்கிறேன், இருவரும் சிறுவனை பின்தொடருங்கள். 280 00:15:52,871 --> 00:15:55,749 அவர்கள் வீட்டிற்குள் நுழைவதற்கான ஒரு வழியயை நாம் கண்டுப்பிடிக்க வேண்டும். 281 00:15:55,749 --> 00:15:58,835 அவன் கராத்தே கற்றுக்கொள்கையில், நான் எப்படி அவனிடம் நெருங்குவது? 282 00:15:58,919 --> 00:15:59,920 நாம் யோசிப்போம். 283 00:16:01,379 --> 00:16:02,380 முதல் பாடம் இலவசம் 284 00:16:02,464 --> 00:16:03,965 பெரியோர், சிறியோர் மற்றும் குடும்பம் என அனைத்து தரப்பினரையும் வரவேற்கிறோம்! 285 00:16:04,049 --> 00:16:07,052 ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு. மூச்சை இழுங்கள். 286 00:16:07,052 --> 00:16:08,136 அப்படித்தான். 287 00:16:08,845 --> 00:16:10,096 சிறப்பாகச் செய்கிறாய். 288 00:16:10,180 --> 00:16:11,223 நன்றி. 289 00:16:12,349 --> 00:16:14,851 தொடங்கலாம். ஒன்று, இரண்டு, மூன்று. 290 00:16:14,935 --> 00:16:18,355 நீ அவனையே முறைத்து பார்க்கிறாய். இது வினோதமாக உள்ளது. சாதாரணமாக இரு. 291 00:16:19,397 --> 00:16:21,441 என்னால் சாதாரணமாக இருக்க முடியவில்லை. 292 00:16:22,609 --> 00:16:23,610 ஹே. 293 00:16:26,029 --> 00:16:27,697 அவள் என்ன பேசுகிறாள் என்பதை நீ கேள். 294 00:16:28,865 --> 00:16:30,075 என்னால் நெருங்க முடியவில்லை. 295 00:16:30,075 --> 00:16:32,202 இன்னும் மேலே, ட்ரேசி. 296 00:16:35,622 --> 00:16:36,623 ஆலன் பெயிண்ட் & டிசைன் 297 00:16:36,623 --> 00:16:37,874 இது என்ன கட்டிடம்? 298 00:16:38,625 --> 00:16:41,878 ஹாதோர்ன் கிளப். சாதனையாளர்கள் தான் உள்ளே செல்ல முடியும். 299 00:16:41,962 --> 00:16:44,589 வளாகத்திற்குள் அரசியல்வாதிகள், கலைஞர்கள், 300 00:16:44,673 --> 00:16:46,800 ஆராய்ச்சியாளர்கள் என புகழ்பெற்றவர்கள் எல்லாம் 301 00:16:46,800 --> 00:16:49,386 இந்த கிளப் உறுப்பினார்களோடு, எப்போதும் இங்கு தான் சாப்பிடுவார்கள். 302 00:16:49,386 --> 00:16:53,348 இவர்களோடு பழகினால், எளிதாக வேலை பயிற்சி, வேலை வாய்ப்பு எல்லாம் எளிதாக கிடைக்கும். 303 00:16:54,224 --> 00:16:56,643 எப்படி சேர்வது? -அவர்களாகவே நம்மை அழைக்க வேண்டும். 304 00:16:56,643 --> 00:16:59,521 வருடத்திற்கு 10 அல்லது 15 பேரை மட்டுமே சேர்ப்பார்கள். 305 00:16:59,521 --> 00:17:01,022 அவர்களுக்கு நீ கண்டிப்பாக தேவைப்படுவாய். 306 00:17:01,606 --> 00:17:03,650 உயர்நிலைப் பள்ளியில் நீதான் புத்திசாலி. 307 00:17:04,276 --> 00:17:05,485 இங்கு நான் பத்தோடு பதினொன்று தான். 308 00:17:06,695 --> 00:17:09,781 உண்மையிலேயே, கல்லூரியில் நண்பர்கள் கிடைப்பது கடினமாக உள்ளது. 309 00:17:10,657 --> 00:17:12,409 சிட்னி தானே? 310 00:17:12,409 --> 00:17:14,410 நாம் ஒரே சைக்லிங் வகுப்பில் தான் படிக்கிறோம். 311 00:17:14,494 --> 00:17:17,455 ஓ, ஆமாம். வியர்வை இல்லாமலேயே என்னைக் கண்டுப்பிடித்துவிட்டாயே. 312 00:17:18,081 --> 00:17:19,082 என் பெயர் ஏம்பர். 313 00:17:19,082 --> 00:17:21,501 இவர்கள் தான் லியம், ஸ்டெஃபனி மற்றும் பென். 314 00:17:21,501 --> 00:17:22,585 ஹாய். 315 00:17:23,378 --> 00:17:24,963 ஓ, இவள் தான் என் தங்கை, சார்லி. 316 00:17:25,589 --> 00:17:27,507 நீங்கள் தான் இந்த கட்டிடத்தை பெயிண்ட் அடிக்கிறீர்களா? 317 00:17:27,591 --> 00:17:28,842 எங்கள் பெற்றோர் பெயிண்டிங் வேலை செய்கிறார்கள். 318 00:17:28,842 --> 00:17:31,469 ஹாதோர்ன் கிளப் போன்ற பெரிய வேலையாக இருந்தால், நாங்கள் உதவுவோம். 319 00:17:31,553 --> 00:17:33,430 ம். -சிறப்பு. 320 00:17:36,892 --> 00:17:38,643 ஹேய், திரு. பாய்ட். உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. 321 00:17:38,727 --> 00:17:39,811 ஏவெரி. 322 00:17:41,104 --> 00:17:42,314 திரும்ப வந்தது நன்றாக உள்ளது. 323 00:17:44,065 --> 00:17:46,151 சரி, நாங்கள் கிளம்புகிறோம். 324 00:17:46,151 --> 00:17:48,445 உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. ஜிம்மில் சந்திக்கலாம். 325 00:17:48,445 --> 00:17:49,779 பை. -பை. 326 00:17:52,365 --> 00:17:54,618 பார்த்தாயா. உனக்கு நண்பர்கள் கிடைத்துவிட்டார்கள். 327 00:17:55,493 --> 00:17:57,370 சீக்கிரமே நீயும் அங்கு சாப்பிடுவாய். 328 00:17:57,454 --> 00:17:58,455 சரியாகச் சொன்னாய். 329 00:18:02,292 --> 00:18:05,754 சரி, இன்னும் கொஞ்சம் மேலே, டாட். அப்படித்தான். 330 00:18:05,754 --> 00:18:07,464 அங்கு ரொம்ப வெக்கையாக இருந்தது, எனவே... 331 00:18:07,464 --> 00:18:09,007 இதோ. 332 00:18:09,007 --> 00:18:11,468 என் பெயர் சமீர். உன் பெயர் என்ன? 333 00:18:11,468 --> 00:18:12,552 நிஜமாகவா? 334 00:18:15,263 --> 00:18:16,514 ம்-ம். 335 00:18:17,682 --> 00:18:19,184 நன்றி, குட் பை. 336 00:18:23,813 --> 00:18:26,149 சரி, நாளை அவள் மகனின் பிறந்தநாளை கொண்டாட போகிறாள். 337 00:18:26,233 --> 00:18:27,859 நாம் அந்த பார்ட்டிக்கு போகணும். -அவசரப்படாதே. 338 00:18:27,943 --> 00:18:29,319 வளர்ப்பு பிராணிகளளின் உயிரியல் பூங்காவை வரவழைக்க அம்மா நினைத்தார், 339 00:18:29,319 --> 00:18:31,655 அந்த நிறுவனத்திற்கு இரண்டு முன்பதிவு உள்ளதால், நாளைக்கு வர முடியாதாம். 340 00:18:31,655 --> 00:18:33,573 அதனால் பார்ட்டியே இல்லாமல் இருக்கலாம். 341 00:18:37,535 --> 00:18:39,871 இப்போது உனக்கு வெப்பா தோன்றியதா? -ஆமாம். 342 00:18:44,376 --> 00:18:46,545 மன்னிக்கவும். நாளைக்கு உங்கள் மகனுக்கு பிறந்தநாள் என்றும், 343 00:18:46,545 --> 00:18:48,255 அந்த கொண்டாட்டம் ரத்தானது என்றும் 344 00:18:48,255 --> 00:18:50,757 என் காதில் விழுந்தது. -சரி தான். 345 00:18:51,466 --> 00:18:53,677 சரி, எனக்கு ஒரு மந்திரவாதியைத் தெரியும். 346 00:18:54,761 --> 00:18:56,346 என்ன செய்திருக்கிறாய்? 347 00:18:56,346 --> 00:18:58,723 இந்த திட்டத்தின் மூலம் நாம் அந்த வீட்டுக்குள் நுழையலாம், சார்லி. 348 00:18:58,807 --> 00:19:01,351 நீ உன் மாயாஜால வேலையை காட்டு, நாங்கள் சென்று சவப்பெட்டியை தேடுகிறோம். 349 00:19:01,351 --> 00:19:02,477 இது ரொம்ப கஷ்டம். 350 00:19:02,561 --> 00:19:05,772 நான் தயாரவதற்கு ஒருநாள் தான் உள்ளது. என்னிடம் கேட்காமல் ஏன் இப்படி செய்தாய்? 351 00:19:05,772 --> 00:19:07,566 எனக்கு யோசிக்க நேரமில்லை. 352 00:19:07,566 --> 00:19:10,860 எப்படியோ, நீ தயாரவதற்கு தேவையானதை செய்ய ஒரு வல்லுநர் இருக்கிறான். 353 00:19:11,820 --> 00:19:13,071 உனக்கு புரியவில்லை, நியா. 354 00:19:13,071 --> 00:19:16,908 அவர்களுக்கு காட்ட எனக்கு வெறும் மூன்று வித்தைகள் தான் தெரியும். மூன்று. 355 00:19:16,992 --> 00:19:20,120 என்னால் காசை மறைய வைக்கவும், என் வாயிலிருந்து நீண்ட ரிப்பனை வெளிய இழுக்கவும், 356 00:19:20,120 --> 00:19:23,123 மற்றும் சில கார்ட்ஸை என் ஸ்லீவில் மறைய வைக்கவும் தெரியும். அவ்வளவு தான். 357 00:19:24,165 --> 00:19:26,793 ஸ்லீவ்! ஸ்லீவ் என்றா சொன்னாய்? 358 00:19:27,460 --> 00:19:31,464 ஸ்லீவ். ஸ்லீவ். ஸ்லீ... 359 00:19:38,889 --> 00:19:42,934 நியா, நூலகரை அழைத்து இரண்டு பொருள்களை ஆய்வு செய்யச் சொல். 360 00:19:43,018 --> 00:19:45,604 “த கவுன்ட் ஆஃப் மோன்டி கிரிஸ்டோ” நாவலின் முதல் பதிப்பையும், 361 00:19:45,604 --> 00:19:47,063 இந்தப் பெலிகன் ஓவியத்தையும். 362 00:19:48,481 --> 00:19:49,941 ஏன்? 363 00:19:50,025 --> 00:19:52,903 பிரத்யேக தொகுப்பு அறையிலிருந்த எலோக்வென்ட் பெசன்ட்டை குற்றவாளிகள் 364 00:19:52,903 --> 00:19:54,696 எவ்வாறு எடுத்திருப்பார்கள் என புரிந்துவிட்டது. 365 00:19:54,696 --> 00:19:58,742 அவர்களின் கொடூரமான திட்டத்தை நான் விவரிக்கிறேன். 366 00:20:00,285 --> 00:20:01,912 அது ரொம்ப எளிது. 367 00:20:01,912 --> 00:20:05,498 நம் வஞ்சகத் திருடன் இரண்டு பொருள்களை பார்க்க வேண்டும் என சொல்லியிருக்கிறான். 368 00:20:05,582 --> 00:20:06,583 என்ன? 369 00:20:06,583 --> 00:20:09,711 எலோக்வென்ட் பெசன்ட்டையும், பெலிகன் ஓவியத்தையும் பார்வையிட விரும்புகிறேன். 370 00:20:09,711 --> 00:20:12,047 “த கவுன்ட் ஆஃப் மோன்டி கிரிஸ்டோ” நாவலையும் 371 00:20:12,047 --> 00:20:13,715 பெலிகன் ஓவியத்தையும் பார்க்க விரும்புகிறேன். 372 00:20:13,715 --> 00:20:14,966 அடையாள அட்டை சமர்பிக்கப்பட்டது. 373 00:20:15,050 --> 00:20:16,051 விக்ஃபோர்ட் பல்கலைக்கழகம் என். ஐ. ஏபார்னஸ் 374 00:20:16,051 --> 00:20:17,469 என் அம்மா இங்கு தான் வேலை செய்கிறார். 375 00:20:18,178 --> 00:20:20,263 பதிவு புத்தகத்தில் கையெழுத்திடப்பட்டது. 376 00:20:20,347 --> 00:20:23,141 பிரத்யேக தொகுப்பு அறைக்கு புத்தகங்கள் கொண்டு வரப்பட்டன. 377 00:20:23,975 --> 00:20:27,771 அந்த அறையில் கேமராக்கள் இல்லை என்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். 378 00:20:29,773 --> 00:20:33,652 அடுத்து, இரண்டாவது குற்றவாளி கவனத்தை திசைத்திருப்ப முயன்றிருக்கிறான். 379 00:20:38,365 --> 00:20:40,116 மன்னிக்கவும். இதோ வந்துவிடுகிறேன். 380 00:20:41,952 --> 00:20:42,953 மன்னிக்கவும். 381 00:20:49,125 --> 00:20:50,752 இது எனக்கு ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. 382 00:20:50,752 --> 00:20:52,796 இது தான் அந்த மாயத் தருணம். 383 00:20:52,796 --> 00:20:54,839 நூலகரின் கவனச் சிதறிய போது, 384 00:20:54,923 --> 00:20:59,636 குற்றவாளி எலோக்வென்ட் பெசன்ட்டை பெலிகன் ஓவியத்தின் உள்ளே மறைத்து வைத்துவிட்டு 385 00:21:01,471 --> 00:21:04,224 போலியான எலோக்வென்ட் பெசன்டை 386 00:21:04,224 --> 00:21:09,145 நூலகர் திரும்பி வருவதற்குள் இருந்த இடத்திலேயே வைத்துவிட்டான். 387 00:21:11,106 --> 00:21:12,107 மன்னிக்கவும். 388 00:21:13,692 --> 00:21:15,277 முடித்துவிட்டேன். நன்றி. 389 00:21:15,860 --> 00:21:17,821 முடித்துவிட்டேன். நன்றி. 390 00:21:22,367 --> 00:21:23,368 நன்றி. 391 00:21:27,872 --> 00:21:31,501 கடைசியில், நூலகர் போலியான எலோக்வென்ட் பெசன்டை 392 00:21:31,585 --> 00:21:33,336 கண்ணாடிப் பெட்டியில் வைத்துப் பூட்டிவிட்டார், 393 00:21:33,420 --> 00:21:37,716 அசல் எலோக்வென்ட் பெசன்ட்டை ஒளித்து வைத்திருக்கும் ஓவியத்தை சுவரில் மாட்டிவிட்டார். 394 00:21:37,716 --> 00:21:39,759 இப்படிதான் திருடர்கள் இதை செய்திருக்கிறார்கள். 395 00:21:40,635 --> 00:21:42,095 அருமை. 396 00:21:42,095 --> 00:21:44,389 இது ஒரு நூலகமாக இல்லையென்றால், கைத்தட்டியிருப்பேன். 397 00:21:45,056 --> 00:21:46,933 சார்லி “ஸ்லீவ்” என்று சொன்னபோது தான் யோசித்தேன், 398 00:21:47,017 --> 00:21:51,146 கார்டை ஒளித்து வைக்க ஒரு மறைவிடம் தேவை. 399 00:21:51,146 --> 00:21:53,940 அதே போல் திருடனுக்கும் பொருளை ஒளித்து வைக்க ஒரு மறைவிடம் தேவைப்பட்டிருக்கும். 400 00:21:54,024 --> 00:21:55,025 அதோ அது அங்கிருக்கிறது. 401 00:21:56,151 --> 00:21:57,152 பொறு. 402 00:21:57,152 --> 00:21:59,487 எல்லாம் சரி தான், ஆனால்... 403 00:22:00,614 --> 00:22:04,993 ஈபியை பிரத்யேக தொகுப்பு அறையிலிருந்து எப்படி எடுத்தார்கள் என்று தான் தெரிந்திருக்கிறது. 404 00:22:04,993 --> 00:22:07,787 ஓவியத்திலிருந்து அதை எப்படி வெளியே எடுத்தார்கள் என்று நமக்குத் தெரியாதே. 405 00:22:10,415 --> 00:22:11,708 நல்ல கருத்து. 406 00:22:13,877 --> 00:22:19,382 சரி, பிறந்த நாள் விழாவில், அந்த சவப்பெட்டியில் நமக்கான விடைக் கிடைக்கலாம். 407 00:22:21,051 --> 00:22:23,511 நாம் அதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று ஆலிவர் ஏன் விரும்புகிறார்? 408 00:22:23,595 --> 00:22:26,640 நாம் தடுமாறிய நேரத்தில், துப்புக் கொடுத்திருக்கிறார். 409 00:22:26,640 --> 00:22:27,724 ஒத்துக்கொள்கிறேன். 410 00:22:27,724 --> 00:22:32,979 என்ன இருந்தாலும், பிணமே இருந்தாலும் மர்மத்தை உடைக்க உதவியாக இருக்கும். 411 00:22:33,813 --> 00:22:34,814 ஹே. 412 00:22:34,898 --> 00:22:37,651 ...வேறு வழியில்லை. இதை நாம் முழுமையாக நிறுத்தியாக வேண்டும். 413 00:22:38,860 --> 00:22:41,655 குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும், இப்போது காப்பக அறை மூடப்படுகிறது. 414 00:22:41,655 --> 00:22:43,698 தகவல்களுக்கு பல்கலைக்கழகத்தின் இணையதளத்தை அணுகவும். 415 00:22:44,449 --> 00:22:47,285 பள்ளி பணியமர்த்திய புலனாய்வாளராக இருப்பார். 416 00:22:47,369 --> 00:22:48,495 இப்போது நாம் என்ன செய்வது? 417 00:22:48,495 --> 00:22:50,789 நாம் இதை வேறு கோணத்தில் யோசிக்க வேண்டும். 418 00:22:52,749 --> 00:22:54,793 ஸ்நாக் சாப்பிடலாம். -அற்புதமான கோணம். 419 00:23:05,053 --> 00:23:09,224 என் பசியையும் தீர்க்கணும், என் டின்னரையும் வீணாகக் கூடாது. 420 00:23:11,393 --> 00:23:13,770 ஓ, பொறு. சூரியகாந்தி விதைகள். 421 00:23:15,564 --> 00:23:17,607 ஹே, கொஞ்சம் பொறு. 422 00:23:18,733 --> 00:23:21,570 நானா? -ஆமாம். பையைத் திறந்துக் காட்டு. 423 00:23:24,656 --> 00:23:25,949 ஏன்? 424 00:23:25,949 --> 00:23:29,286 ஆமாம், என்னுடையதையோ, அல்லது அவர்களுடையதையோ காட்டச் சொல்லவில்லையே? 425 00:23:33,290 --> 00:23:34,291 திறந்துக் காட்டு. 426 00:23:46,386 --> 00:23:47,512 சந்தோஷமா? 427 00:23:49,973 --> 00:23:52,559 வா. இனி இங்கு வரக் கூடாது. 428 00:23:52,559 --> 00:23:53,643 வரவேக் கூடாது. 429 00:23:55,353 --> 00:23:56,354 உனக்கு ஒன்றுமில்லையே? 430 00:23:57,689 --> 00:24:01,443 கறுப்பாக இருப்பதால் நான் திருடியிருப்பேன் என அந்தப் பெண் நினைத்ததுப் போல தான் இதுவும். 431 00:24:01,443 --> 00:24:03,570 அவர் தனது இனவெறியை மறைக்கக்கூட முயற்சிக்கவில்லை. 432 00:24:05,155 --> 00:24:07,032 நாம் அவரிடம் ஏதாவது சொல்ல வேண்டுமா? 433 00:24:07,032 --> 00:24:09,701 லியோ பழிவாங்குவதற்காக மாயாஜாலத்தை பயன்படுத்த மாட்டான். 434 00:24:09,701 --> 00:24:12,787 ஆனால் இந்த விஷயத்தில், விதிவிலக்கு இருக்கு. 435 00:24:12,871 --> 00:24:17,375 வேண்டாம். இதை பெரிதுப்படுத்த விரும்பவில்லை. என்னால் இதை நம்ப முடியவில்லை. 436 00:24:18,585 --> 00:24:22,297 நான் எவ்வளவு வெற்றி பெற்றாலும், 437 00:24:22,297 --> 00:24:26,384 நிகழ்ச்சிகளில் ஸ்பானிஷில் பேசுவதால், மக்கள் என்னை தாழ்வாக தான் நினைப்பார்கள். 438 00:24:28,178 --> 00:24:33,475 முதன்முதலில் அமெரிக்காவிற்கு வந்த போது, தெருவில் ஒருவர் எங்களைப் பார்த்துக் கத்த ஆரம்பித்துவிட்டார். 439 00:24:35,185 --> 00:24:36,978 எங்களுக்கு இங்கு அனுமதி இல்லை என்றும் 440 00:24:37,062 --> 00:24:40,148 நாங்கள் எங்கிருந்து வந்தோமோ அங்கேயே செல்ல வேண்டுமென்றும் சொன்னார். 441 00:24:48,406 --> 00:24:50,617 ஸிங்கர் 442 00:24:51,660 --> 00:24:53,203 சென்ட்ரல் க்ரோஸ் 443 00:24:55,038 --> 00:24:55,872 சென்ட்ரல் க்ரோஸரி 444 00:24:55,956 --> 00:24:57,707 “நான் கொள்ளைக்காரன் போல் இருப்பதாக மேனேஜர் சொன்னார்.” 445 00:24:57,791 --> 00:24:59,918 “இனவெறி கொண்டே என்னை அடையாளம் கண்டார்.” 446 00:25:00,877 --> 00:25:02,921 “இனவெறிப்பிடித்த மேனேஜரிடம் கவனமாக இருங்கள்.” 447 00:25:04,965 --> 00:25:06,967 “புறக்கணிப்பு.” 448 00:25:08,510 --> 00:25:09,386 மான்ட்கோமெரி பேருந்து புறக்கணிப்பு 449 00:25:09,386 --> 00:25:10,845 வேலை மற்றும் சுதந்திரத்திற்காக போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் 450 00:25:10,929 --> 00:25:12,180 நிறவெறிக்கு எதிரான போராட்டம் என்.வொய்.சி பள்ளிப் போராட்டம் 451 00:25:13,598 --> 00:25:16,059 அமைதி! 452 00:25:16,059 --> 00:25:17,269 அனைவரும் வேலை பெற போராடுகிறோம்! 453 00:25:17,269 --> 00:25:18,812 நல்ல வீடு - வாக்களிக்கும் உரிமை வேண்டும் 454 00:25:30,490 --> 00:25:32,826 தாமரை 455 00:25:34,703 --> 00:25:38,039 தாமரை. அதற்கு என்ன அர்த்தம்? 456 00:25:42,043 --> 00:25:43,503 நமோரா எங்கே? 457 00:25:44,337 --> 00:25:47,048 மன்னியுங்கள். என்னால் சரியான நேரத்திற்கு பேக்கரிக்கு போக முடியவில்லை, 458 00:25:47,132 --> 00:25:50,302 எனவே வேறொரு பேக்கரிக்கு சென்று பக்லாவா வாங்கி வந்துள்ளேன். 459 00:25:55,348 --> 00:25:57,267 உனக்கு பக்லாவா பிடிக்கும். 460 00:25:57,851 --> 00:25:59,811 இந்த குடும்பத்திற்கு நமோரா தான் விசேஷமானது, சரியா? 461 00:25:59,895 --> 00:26:03,732 நம்மைப் போலவே, சிரியாவிலிருந்து துருக்கிக்கும், அங்கிருந்து இங்கேயும் பயணித்திருக்கிறார்கள். 462 00:26:03,732 --> 00:26:05,609 அது நமக்கு சுலபமாக இல்லை தானே? 463 00:26:06,776 --> 00:26:07,903 சுலபமாக இல்லை. 464 00:26:08,820 --> 00:26:11,573 எனவே நம்மைப் போலவே அவர்களும் குழம்பியிருப்பார்கள் என உனக்கே புரிந்திருக்கும். 465 00:26:12,157 --> 00:26:13,450 அவர்கள் தங்கள் இடத்தில் இருப்பது போலவே 466 00:26:13,450 --> 00:26:15,201 உணர வைக்க நாம் அனைத்தையும் செய்யலாம், சரியா? 467 00:26:15,285 --> 00:26:18,163 சரி. மன்னியுங்கள். எனக்குப் புரிகிறது. 468 00:26:18,163 --> 00:26:20,165 நாளை நமோராவை வாங்கி விடுகிறேன். 469 00:26:21,249 --> 00:26:23,001 சரி. நல்லது. 470 00:26:27,797 --> 00:26:30,759 கார்டுகளை இறுக்கமாக பிடிக்காமல், உன் கட்டை விரல் மீது கவனம் வை, சரியா? 471 00:26:30,759 --> 00:26:34,596 மெதுவாக. நிதானமாக. கீழே விடாமல் இருந்தால் நல்லது. 472 00:26:34,596 --> 00:26:35,680 அப்படி நினைக்கிறாயா? 473 00:26:35,764 --> 00:26:37,515 கொஞ்சம்... -கீழே தவற விடப் போகிறேன். 474 00:26:37,599 --> 00:26:38,433 சரி. 475 00:26:39,434 --> 00:26:41,645 சிறப்பு, ஆனால் இன்னும் கொஞ்சம் வேகமாக செய். 476 00:26:43,063 --> 00:26:45,482 நல்லது. உன் உள்ளங்கை சற்று விரைவாக செயல்பட்டது, 477 00:26:45,482 --> 00:26:46,566 ஆனால் தொடர்ந்து செய். 478 00:26:49,569 --> 00:26:51,821 இது தான் நீ நினைத்த கார்டா? -இல்லை. 479 00:26:51,905 --> 00:26:56,117 நிதானமாகவும், பொறுமையாகவும் இரு. அப்படித்தான். அற்புதம். 480 00:26:56,910 --> 00:26:58,912 டைமண்ட் இரண்டா? -அற்புதம். 481 00:26:59,537 --> 00:27:01,289 சரி. மெதுவாக. 482 00:27:03,124 --> 00:27:06,711 ட-டா! -நல்லது. வெப்பா. வெப்பா. 483 00:27:06,795 --> 00:27:10,090 அப்படியா நினைக்கிறாய்? ஏனென்றால், எனக்கு அனுபவம் பத்தாது. 484 00:27:10,090 --> 00:27:13,468 நம்பிக்கையை இழக்காதே, சார்லி. நானும் இப்படித்தான் தொடங்கினேன். 485 00:27:13,552 --> 00:27:15,804 ஒருநாள் நானும், அமாண்டாவும், கடற்கரையில் நிகழ்ச்சி நடத்தினோம், 486 00:27:15,804 --> 00:27:18,557 எப்போதும் போல், யாரும் எங்களை கவனிக்கவில்லை. 487 00:27:18,557 --> 00:27:20,850 ஆனால் ஒரு பாட்டி எங்களிடம் வந்து, அவரது பேத்தியின் 488 00:27:20,934 --> 00:27:23,687 பதினைந்தாவது பிறந்தநாள் விழாவிற்கு நிகழ்ச்சி நடத்துமாறு அழைத்தார். 489 00:27:23,687 --> 00:27:25,522 எங்களுக்குத் தயாராவதற்கு ஒருநாள் தான் இருந்தது. 490 00:27:25,522 --> 00:27:26,815 நிகழ்ச்சி எப்படி நடந்தது? 491 00:27:26,815 --> 00:27:28,817 நிறைவாக இல்லை. -சிறப்பு. 492 00:27:28,817 --> 00:27:31,945 ஆனால் பிறந்தநாள் விழாவில் மக்களை கவர உதவியாக இருந்தது. 493 00:27:31,945 --> 00:27:35,198 விரைவில், நிறைய நிகழ்ச்சிகள் கிடைத்தன. நீ சரியான வழியில் தான் செல்கிறாய். 494 00:27:36,616 --> 00:27:37,617 நன்றி. 495 00:27:38,618 --> 00:27:40,078 பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஈத்தன் 496 00:27:40,078 --> 00:27:42,789 உள்ளே வாருங்கள். உங்கள் பொருள்களைப் பாருங்கள். 497 00:27:42,789 --> 00:27:45,834 இவ்வளவு குறுகிய காலத்தில், நீ இங்கு வந்தது எனக்கு சந்தோஷம். 498 00:27:45,834 --> 00:27:47,502 ஈத்தன் மிகவும் சந்தோஷப்படுவான். 499 00:27:47,586 --> 00:27:52,924 என்னை அழைத்ததற்கு நன்றி. என் உதவியாளர்கள்... எங்கே... 500 00:27:56,177 --> 00:27:59,139 என் உதவியாளர்கள், எங்கள் உபகரணங்கள் எங்கே வைக்க வேண்டும்? 501 00:27:59,139 --> 00:28:00,640 இதோ இங்கே தான். 502 00:28:01,224 --> 00:28:02,642 அம்மா? 503 00:28:02,726 --> 00:28:05,645 மன்னிக்கவும். ஒரு நிமிடம், இதோ வருகிறேன். 504 00:28:05,729 --> 00:28:08,148 பிறந்தநாள் வாழ்த்துக்கள் 505 00:28:08,148 --> 00:28:10,525 என்ன ஆச்சு, சார்லி? நீ குழம்பியிருப்பது போல் தெரிகிறது. 506 00:28:11,568 --> 00:28:12,569 அங்கே பாருங்கள். 507 00:28:17,866 --> 00:28:20,035 ஆலிவர். -அந்த பேயா? 508 00:28:20,035 --> 00:28:22,245 நாம் பார்ட்டி நடத்தவே கூடாது. 509 00:28:22,329 --> 00:28:25,248 ஈத்தன். எல்லாவற்றையும் கடந்து வந்திருக்கிறோம், 510 00:28:25,332 --> 00:28:27,584 பார்ட்டி நடத்துவது தான் நல்ல யோசனை. 511 00:28:28,209 --> 00:28:30,003 ஆனால் நான் ஆலிவர் மாமாவிற்காக ஏங்குகிறேன். 512 00:28:32,964 --> 00:28:33,965 ஆலிவர் மாமாவா? 513 00:29:29,479 --> 00:29:31,398 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்