1 00:00:06,091 --> 00:00:09,970 சிசேமே வொர்க் ஷாப் வழங்கும் 2 00:00:18,061 --> 00:00:19,646 அருமையாக இருக்கு. 3 00:00:21,773 --> 00:00:25,443 நாம் இதைச் செய்ய வேண்டுமா? நீங்கள் இருவரும் இங்கே இருக்கக் கூடாதே. 4 00:00:26,027 --> 00:00:28,613 நாம் சீக்கிரம் திரும்பவில்லை என்றால், பிரச்சினையில் மாட்டிக்கொள்வோம். 5 00:00:28,697 --> 00:00:30,407 என் அப்பா பிரச்சினையில் மாட்டிக்கொள்வார். 6 00:00:37,122 --> 00:00:38,123 சுரங்கப்பாதை! 7 00:00:40,333 --> 00:00:42,544 ஆனால் இது எங்கே போகிறது? 8 00:00:48,049 --> 00:00:49,509 நீ என்ன தேடுகிறாய்? 9 00:00:50,051 --> 00:00:52,262 காலடிச் சுவடுகள். ஆனால், எதுவும் தெரியவில்லை. 10 00:00:54,097 --> 00:00:56,141 நீ என்ன நினைக்கிறாய்? காசை சுண்டி விடலாமா? 11 00:00:57,100 --> 00:00:59,519 தலை, விழுந்தால்... அந்த பக்கம் போகலாமா? 12 00:01:02,230 --> 00:01:03,648 காசு என்றா சொன்னாய்? 13 00:01:08,320 --> 00:01:09,404 அது என்ன? 14 00:01:11,323 --> 00:01:13,909 பூ விழுந்திருக்கு. நாம் நூலகத்திற்கு திரும்பலாம். 15 00:01:36,097 --> 00:01:37,891 பேய் எழுத்தாளர் 16 00:01:39,017 --> 00:01:40,518 ஏன் இவ்வளவு தாமதம்? 17 00:01:41,353 --> 00:01:43,688 இரவு முழுதும் இந்த இடத்தில் இருக்க எனக்கு விருப்பமில்லை. 18 00:01:43,772 --> 00:01:45,482 எனக்கும் தான். 19 00:01:46,524 --> 00:01:47,692 இறுதியாக. 20 00:01:48,860 --> 00:01:53,240 சரி. ஐந்து நிமிடத்தில் நான் அப்பாவை வெளியே சந்திப்பதாக சொன்னேன். நாம் போகலாம். 21 00:01:53,240 --> 00:01:55,992 இரு. நாம் லாக்புக்கில் முதலில் பார்க்கலாம். 22 00:01:56,701 --> 00:01:58,078 என்ன? வேண்டாம். 23 00:01:58,078 --> 00:02:01,748 ஈபியை திருடியவர், பெலிக்கன் பெயின்டிங்கை பயன்படுத்தியது நமக்குத் தெரியும். 24 00:02:01,748 --> 00:02:04,459 திருடனின் பெயரைக் கண்டுபிடிக்கலாம். ஒரு நொடி தான் ஆகும். 25 00:02:11,675 --> 00:02:14,511 பார்க்கிறேன். பார்க்கிறேன். 26 00:02:15,804 --> 00:02:16,930 இங்கே இல்லை. 27 00:02:17,639 --> 00:02:18,640 அது நல்லதில்லை. 28 00:02:19,224 --> 00:02:20,976 அது நம் பிரச்சினையே இல்லை. 29 00:02:20,976 --> 00:02:24,312 நாம் சுரங்கப் பாதைக்குள் நுழைந்தது மீண்டும் எப்படி தேடுவது? 30 00:02:24,396 --> 00:02:26,648 நாம் கிளம்பலாம். என் அப்பா காத்திருப்பார். 31 00:02:26,648 --> 00:02:28,024 நாம் மறுபடியும் வரலாம். 32 00:02:28,108 --> 00:02:30,277 முடியாது. இங்கே பொதுமக்கள் வர முடியாது. 33 00:02:30,277 --> 00:02:31,570 சரி, என்ன செய்யலாம்? 34 00:02:32,070 --> 00:02:34,197 உன் அம்மா வேலைக்கு வைத்த அந்த தனியார் துப்பறிவாளர் 35 00:02:34,281 --> 00:02:35,907 அனைத்தையும் கண்டுபிடிப்பார் என நம்பலாமா? 36 00:02:44,207 --> 00:02:45,625 இரும்பு தட்டி 37 00:02:47,002 --> 00:02:48,336 ஆலிவர். 38 00:02:48,420 --> 00:02:50,046 “இரும்பு தட்டியா?” 39 00:02:51,965 --> 00:02:56,720 சாக்கடை தட்டியாக இருக்குமோ? சுரங்கப்பாதைக்குள் செல்ல. 40 00:02:57,262 --> 00:02:58,805 இவற்றை திறக்கிறாயா? 41 00:02:59,431 --> 00:03:01,474 உனக்கு சிறப்பு கருவிகள் எதுவும் வேண்டாமா? 42 00:03:02,267 --> 00:03:04,185 ஹே, சுரங்கப்பாதை பற்றிய சில விஷயங்கள் தெரிந்திருக்கு. 43 00:03:04,269 --> 00:03:06,229 பழைய பள்ளிகள் அவற்றை பயன்படுத்தி இருக்கிறார்கள். 44 00:03:07,230 --> 00:03:09,941 கட்டிடங்களுக்கு இடையே பனி காலத்தில் செல்வதற்கு அவை பயன்படுத்தப்பட்டன. 45 00:03:10,025 --> 00:03:12,402 பெரும்பாலானவை இப்போது மூடி வீணாக இருக்கின்றன. 46 00:03:12,402 --> 00:03:15,530 சமீர். நீ இட்ரிஸை பார்த்துக்கொள்ள வேண்டும். 47 00:03:15,614 --> 00:03:18,074 ஹாய், திரு. யூசஃப். -ஹாய், நியா, ஹாய், சார்லி. 48 00:03:18,617 --> 00:03:20,368 இதைப் பற்றி நாளை யோசிப்போம். 49 00:03:20,911 --> 00:03:22,162 நானும் கிளம்புகிறேன். 50 00:03:22,746 --> 00:03:23,747 பார்க்கலாம். 51 00:03:33,131 --> 00:03:34,466 மன்னிக்கவும். 52 00:03:34,466 --> 00:03:37,844 ஹாய்! நீ நியா தானே? தலைவர் பார்னஸின் மகள்? 53 00:03:37,928 --> 00:03:39,012 ஆமாம். 54 00:03:39,721 --> 00:03:42,224 உங்காளிடம் ரோசா பார்க்ஸ் பற்றி ஏதாவது புத்தகம் இருக்கிறதா? 55 00:03:42,224 --> 00:03:43,558 இருக்கிறது. வா. 56 00:03:45,477 --> 00:03:47,229 சரி, இதோ இருக்கிறது. 57 00:03:47,229 --> 00:03:49,981 குறிப்பிட்ட ஏதாவது ஒன்று வேண்டுமா, அல்லது... 58 00:03:50,065 --> 00:03:51,650 இல்லை, சும்மா பார்க்கிறேன். 59 00:03:51,650 --> 00:03:54,110 சரி, ஏதாவது உதவி வேண்டும் என்றால் என்னைக் கூப்பிடு. 60 00:03:54,194 --> 00:03:55,195 நன்றி. 61 00:04:02,744 --> 00:04:04,704 ரோசா பார்க்ஸ் 62 00:04:06,164 --> 00:04:10,085 ஆம், உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. 63 00:04:10,794 --> 00:04:12,963 மிகவும் ஆவலாக இருக்கிறேன். நன்றி. பை! 64 00:04:13,880 --> 00:04:15,549 சிட், நீ இதை நம்ப மாட்டாய். 65 00:04:15,549 --> 00:04:18,050 ஒருவரின் பிறந்தநாள் பார்ட்டியில் நான் நடத்திய மேஜிக் நிகழ்ச்சி 66 00:04:18,134 --> 00:04:22,096 ரொம்ப பிடித்துப் போய் எனக்கு மறுபடியும் வாய்ப்பு கொடுக்க விரும்புகிறார்கள்! 67 00:04:22,180 --> 00:04:23,932 வாழ்த்துக்கள்! 68 00:04:23,932 --> 00:04:26,851 இது மிகவும் முக்கியமானது. நான் நன்றாக செய்ய வேண்டும். 69 00:04:26,935 --> 00:04:29,271 நிறைய ஜாலங்களும், பொருட்களும் தேவை. 70 00:04:29,271 --> 00:04:31,189 அவற்றை வைக்க ஒரு மேஜை வேண்டும். 71 00:04:32,232 --> 00:04:33,525 ரகசிய கதவு கொண்ட ஒன்று. 72 00:04:33,525 --> 00:04:36,319 அந்த மேஜையை அமைக்க நான் உதவுகிறேன். -உண்மையாகவா? 73 00:04:36,403 --> 00:04:38,238 கல்லூரியில் இருக்கும் வடிவமைப்பு பட்டறையை பயன்படுத்தலாம். 74 00:04:38,238 --> 00:04:39,322 அது மிகவும் அற்புதம்! 75 00:04:39,406 --> 00:04:41,783 சரி, மேலே வைப்பதற்கு, நான்... -சிட்னி? 76 00:04:42,659 --> 00:04:43,660 ஹே, ஏம்பர்! 77 00:04:43,660 --> 00:04:46,746 நேற்று நடன வகுப்புமோசமாக இருந்தது தானே? இன்னும் கால் வலிக்கிறது. 78 00:04:47,289 --> 00:04:48,582 எனக்கும் அப்படித்தான். 79 00:04:49,541 --> 00:04:52,794 சட்டென்று போய் காபி குடிக்கலாமா? 80 00:04:54,796 --> 00:04:56,506 உறுப்பினர்களுக்கு மட்டும் தானே அனுமதி? 81 00:04:57,924 --> 00:04:59,676 சரி, என் விருந்தாளியாக வா. 82 00:05:02,971 --> 00:05:04,264 இதோ வருகிறேன், சரியா? 83 00:05:06,224 --> 00:05:07,893 புது உறுப்பினர்களே வருக 84 00:05:07,893 --> 00:05:09,269 ஹாதோர்னுக்கு வரவேற்கிறோம். 85 00:05:12,188 --> 00:05:14,024 அங்கேயே இரு. உன் பெயர் நான் எழுத வேண்டும். 86 00:05:21,948 --> 00:05:22,949 முதல் முறையாக வருகிறாயா? 87 00:05:23,533 --> 00:05:24,910 ஆமாம். 88 00:05:26,202 --> 00:05:27,203 நானும் தான். 89 00:05:31,082 --> 00:05:33,460 இந்த இனிப்பை நாம் சாப்பிடலாமா என்ன? 90 00:05:34,794 --> 00:05:36,213 தெரியவில்லை. 91 00:05:37,088 --> 00:05:38,256 அழகுக்காகவோ என்னவோ? 92 00:05:48,683 --> 00:05:49,684 ஹலோ. 93 00:05:51,269 --> 00:05:52,729 வகுப்புக்கு முன்னால் படிக்கிறாயா, என்ன? 94 00:05:53,605 --> 00:05:55,106 முக்கியமான கணக்குப் பரீட்சை. 95 00:05:57,776 --> 00:05:58,777 உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன். 96 00:05:58,777 --> 00:06:01,821 அகதிகள் முகாமில் பள்ளி படிப்பு இன்னும் நன்றாக இருந்திருக்கலாம், 97 00:06:01,905 --> 00:06:03,657 இங்கே வந்த போது நீ அவதிப்பட்டாய். 98 00:06:03,657 --> 00:06:06,201 ஆனால் இப்போது நன்றாகப் படிக்கிறாய். -நன்றி. 99 00:06:06,201 --> 00:06:09,079 நேற்று புத்தகக் கடையில் உன் நண்பர்களோடு இருந்த போது கூட, 100 00:06:09,079 --> 00:06:10,455 படித்துக் கொண்டிருந்தாயா? 101 00:06:10,455 --> 00:06:12,332 எல்லோரும் பதட்டமாக இருந்தீர்கள். 102 00:06:13,625 --> 00:06:15,752 ஆ-ஆமாம்... படித்துக் கொண்டிருந்தோம். 103 00:06:16,670 --> 00:06:17,712 என்ன விஷயம் தெரியுமா. 104 00:06:17,796 --> 00:06:19,714 என் ஷிப்ட் இன்று மாறிவிட்டது. 105 00:06:19,798 --> 00:06:23,093 உனக்கு சற்று ஓய்வு கிடைப்பதற்காக, இட்ரிஸை நான் பூங்காவிற்கு அழைத்துச் செல்லவா? 106 00:06:24,261 --> 00:06:26,137 சரி. அதைப் பற்றி கவலைப்படாதே. 107 00:06:26,221 --> 00:06:27,264 படிப்பு தான் முக்கியம். 108 00:06:42,195 --> 00:06:43,321 இல்லை! வேண்டாம்! 109 00:06:43,405 --> 00:06:46,032 நான் ரொம்ப சிறியவன், என்னைக் குப்பையில் போடக் கூடாது. 110 00:06:53,790 --> 00:06:55,166 பேசும் எலி. 111 00:06:55,667 --> 00:06:59,546 ஹே, குட்டி. ஒன்றும் பிரச்சினையில்லை. 112 00:06:59,546 --> 00:07:01,923 நீ யார்? அந்த இன்னொருத்தன் எங்கே? 113 00:07:02,007 --> 00:07:03,800 இரு... பைக்கை என்ன செய்தாய்? 114 00:07:04,384 --> 00:07:07,929 பைக்கா? -அதோடு தான் நான் குப்பைத்தொட்டியில் விழுந்தேன். 115 00:07:08,013 --> 00:07:11,016 என் தவறு இல்லை. ஃபோன் அடித்து என்னை பயமுறுத்தியது. 116 00:07:11,016 --> 00:07:12,434 நீ எங்கு இருப்பதாக நினைக்கிறாய்? 117 00:07:13,018 --> 00:07:15,520 மௌண்டன் வியு ஹோட்டல். அறை எண் 215. 118 00:07:16,354 --> 00:07:19,482 ஐயோ! இது குப்பைத் தொட்டியாக இருக்க வேண்டும். 119 00:07:19,566 --> 00:07:21,776 சமீர்! போகலாம் வா! 120 00:07:23,236 --> 00:07:24,362 ஹே, நண்பா! 121 00:07:24,446 --> 00:07:25,906 இங்கிருந்து என்னை வெளியே எடுக்கிறாயா? 122 00:07:26,615 --> 00:07:27,824 இதோ வருகிறேன்! 123 00:07:28,658 --> 00:07:29,659 உன் பெயர் என்ன? 124 00:07:30,243 --> 00:07:31,244 ரால்ஃப். 125 00:07:31,828 --> 00:07:33,580 ரால்ஃப். என் பெயர் சமீர். 126 00:07:34,289 --> 00:07:38,919 கேள், நான் பள்ளியிலிருந்து திரும்பும் வரை நீ இந்த அறையில் இருக்க வேண்டும், சரியா? 127 00:07:38,919 --> 00:07:40,253 நான் என்ன சாப்பிடுவது? 128 00:07:45,926 --> 00:07:47,093 இதோ. 129 00:07:48,637 --> 00:07:49,638 இரண்டு கிடைக்குமா? 130 00:07:52,474 --> 00:07:55,602 ஹே, முன்னாலே வந்து என்னை வெளியே எடுக்காததற்கு நன்றி. 131 00:07:56,519 --> 00:07:59,773 நானாகவே அந்த குப்பைத் தொட்டியிலிருந்து வெளியே வர அனுமதித்தாயே. 132 00:08:00,440 --> 00:08:02,567 கொஞ்சம் பெருமையுடனும், கண்ணியத்துடனும். 133 00:08:03,068 --> 00:08:06,905 சமீர், நீ நலமாக இருக்கிறாய் என்று நம்புகிறேன். 134 00:08:07,489 --> 00:08:08,657 சமீர்! 135 00:08:09,574 --> 00:08:10,575 நான் போக வேண்டும். 136 00:08:12,577 --> 00:08:13,620 வருகிறேன். 137 00:08:23,880 --> 00:08:24,881 காலியாக இருக்கிறது. 138 00:08:25,715 --> 00:08:28,301 சமீர் எனக்கு மெசேஜ் அனுப்பிய நொடியே தெரியும். வேறு என்னவாக இருக்கும்? 139 00:08:28,385 --> 00:08:29,427 பெவர்லி க்ளியரி 140 00:08:29,511 --> 00:08:32,514 “த மௌஸ் அண்ட் த மோட்டார் சைக்கிள்.” -இதில் எலி இல்லை. 141 00:08:33,056 --> 00:08:35,933 எனக்கு இந்த புத்தகம் பிடிக்கும். பெவர்லி க்ளியரி ஒரு மேதை. 142 00:08:37,226 --> 00:08:40,480 இதோ. நானும் எனது புத்தகத்தைக் கொண்டு வந்திருக்கிறேன், அதனால் சேர்ந்தே படிக்கலாம். 143 00:08:41,481 --> 00:08:42,649 சரி, அது எதைப் பற்றியது? 144 00:08:43,275 --> 00:08:45,902 ஒரு ஹோட்டல் அறையில் ரால்ஃப் என்ற ஒரு எலி வசிக்கிறது. 145 00:08:45,986 --> 00:08:48,572 அதன் அம்மா அதிகம் கவலைப்படுகிறவள். அதனால் அது பத்திரமாக ஒளிந்துகொள்கிறது, 146 00:08:48,572 --> 00:08:50,198 ஆனால் அது சாகசங்கள் செய்ய விரும்புகிறது. 147 00:08:50,282 --> 00:08:53,285 நான் ஒன்று சொல்லட்டுமா, அதனிடம் ஒரு பை இருக்குமே? 148 00:08:53,285 --> 00:08:56,830 ஆம். அது ஒரு பொம்மை, ஆனால் என்ஜின் போல சத்தமிட்டால் அது நிஜமாகிவிடும். 149 00:08:56,830 --> 00:08:58,206 “வ்ரூம் வ்ரூம்” போல. 150 00:09:00,959 --> 00:09:04,504 சுரங்கப்பாதைகளை ஆராய நமக்கு உதவுவதற்காக, ஆலிவர் ரால்ஃபை விடுவித்திருப்பாரோ? 151 00:09:04,588 --> 00:09:06,172 அவனால் ஒரு இரும்பு தட்டியில் புக முடியுமே. 152 00:09:06,256 --> 00:09:08,717 அதைத்தான் நானும் நினைத்தேன். பைக்கை கொண்டு வந்தாயா? 153 00:09:09,259 --> 00:09:11,887 ஆம். இதோ! 154 00:09:11,887 --> 00:09:15,140 எனது மாதிரி உருவாக்கத்தில் ஏதோ ஒரு நல்ல விஷயம் கிடைத்திருப்பது சந்தோஷம் தான். 155 00:09:15,140 --> 00:09:17,726 இதைப் பார். நான் அந்தச் சிறுவனுக்கு ஒரு ஹெல்மெட் செய்திருக்கிறேன். 156 00:09:20,478 --> 00:09:25,901 சரி, அந்தத் திருடன் எந்தப் பக்கம் சென்றிருப்பான் என கண்டறிய இந்த சுரங்கங்களை நான் ஆராய வேண்டுமா? 157 00:09:25,901 --> 00:09:30,113 ஆம். நீ உதவி செய்தால், உனக்கு ஒரு பெரிய ஆச்சரியம் இருக்கிறது. 158 00:09:30,113 --> 00:09:31,698 ஓ, என்ன? சீஸ் போலவா? 159 00:09:32,324 --> 00:09:34,326 இது சீஸை விடச் சிறந்தது. 160 00:09:34,326 --> 00:09:35,911 அப்படி இருக்காது. 161 00:09:35,911 --> 00:09:37,245 ஹே, சமீர். -ஹே. 162 00:09:37,329 --> 00:09:39,080 ஹே, நண்பர்களே. உள்ளே வாருங்கள். 163 00:09:39,164 --> 00:09:42,459 நியா, சார்லி, இவன் தான் ரால்ஃப். 164 00:09:43,793 --> 00:09:45,253 நீ ரொம்ப அழகாக இருக்கிறாய். 165 00:09:45,337 --> 00:09:48,215 அது உன் பைக்கா? -ஆமாம். 166 00:09:48,215 --> 00:09:51,343 அதில் இருக்கும் குரோமைப் பார்த்தாயா! ரொம்ப அழகு! 167 00:09:51,343 --> 00:09:52,761 நீ அதை ஓட்ட விரும்புகிறாயா? 168 00:09:53,637 --> 00:09:56,765 நிச்சயமாக, அது... நன்றாக இருக்கும். 169 00:09:59,601 --> 00:10:01,978 திடமான பிடிகள். லீவர்கள் வேலை செய்கின்றன. 170 00:10:02,520 --> 00:10:06,816 சிவப்பு நிறம் தான் எனக்கு பிடிக்கும், ஆனால் இது ஒரு நல்ல இயந்திரம். 171 00:10:07,943 --> 00:10:10,445 சரி, சமீர். ஹைய்யா! நீ என்னை ஜெயித்துவிட்டாய்! 172 00:10:10,445 --> 00:10:13,531 இது சீஸை விட சிறந்தது! நான் உன்னுடைய திட்டப்படியே செய்கிறேன்! 173 00:10:13,615 --> 00:10:14,658 நன்றி, ரால்ஃப். 174 00:10:15,659 --> 00:10:17,994 சரி, அதை எடுத்துக் கொண்டு ஒரு சுற்று போய் விட்டு வா. 175 00:10:18,828 --> 00:10:21,456 எனக்கு, இதை எப்படி ஸ்டார்ட் செய்வது என்று தெரியாது. 176 00:10:21,456 --> 00:10:22,958 பார், இது ஒன்றும் பெரிய விஷயமில்லை. 177 00:10:22,958 --> 00:10:27,587 பைக்கை ஸ்டார்ட் செய்வது எளிது. நீ ஒலி எழுப்பினால் போதும். 178 00:10:28,088 --> 00:10:29,589 “வ்ரூம் வ்ரூம்!” போல. 179 00:10:30,257 --> 00:10:31,758 அது கார் போல இருக்கிறதே. 180 00:10:32,300 --> 00:10:33,677 ஒருவேளை இது... 181 00:10:35,428 --> 00:10:37,180 நீ என்ன, நோய்வாய்ப்பட்ட டைனோசரா? 182 00:10:38,265 --> 00:10:40,100 கொஞ்சம் பொறு. நான் கண்டுபிடிக்கிறேன். 183 00:10:40,100 --> 00:10:41,560 பைக் கையேட்டை... 184 00:10:43,770 --> 00:10:45,105 பார்க்க வேண்டும். 185 00:10:46,606 --> 00:10:48,441 பைக் கையேடா? 186 00:10:48,525 --> 00:10:49,526 கண்டுபிடித்து விட்டேன். 187 00:10:54,864 --> 00:10:56,199 திரும்பச் செய். 188 00:10:57,534 --> 00:10:59,744 இசை மாதிரி இருக்கு. கேட்கிறதா? 189 00:11:00,412 --> 00:11:03,665 நெடுஞ்சாலைகளும் வேகமும். தூரமும் ஆபத்தும். 190 00:11:03,665 --> 00:11:06,001 விஸ்க்கர்கள் காற்றினால் தூக்கி வீசப்படுகின்றன! 191 00:11:06,626 --> 00:11:09,296 அந்தக் கையேட்டை எழுதியவர் யாரோ, அவர் ஒரு கவிஞர்! 192 00:11:13,425 --> 00:11:14,509 சரி. 193 00:11:18,221 --> 00:11:19,472 இது வேலை செய்கிறது! 194 00:11:19,556 --> 00:11:22,350 இப்போது இரும்புத் தட்டியைக் கண்டுபிடிக்க வேண்டும். 195 00:11:22,434 --> 00:11:25,979 எனக்கு ஒரு யோசனை, ஆனால் அது கொஞ்சம் காட்டுத்தனமானது. 196 00:11:25,979 --> 00:11:30,442 என் வீட்டில் ஒரு எலி பைக் ஓட்டுகிறது. 197 00:11:31,568 --> 00:11:34,321 ஆமாம், நான் “முரட்டு” பகுதியைப் பற்றி கவலைப்பட மாட்டேன். 198 00:11:37,782 --> 00:11:39,367 சரி, நீ என்ன நினைக்கிறாய்? 199 00:11:39,451 --> 00:11:42,329 சரி, அது நிச்சயமாக கீழே இருக்கும் சுரங்கப்பாதையாகத் தான் இருக்கும். 200 00:11:43,330 --> 00:11:44,664 அது நூலகத்தின் பக்கம் இருக்கிறது. 201 00:11:44,748 --> 00:11:46,249 ஆஹா! நல்லது! 202 00:11:47,500 --> 00:11:49,252 என் பொம்மையின் டிவி நியூஸ் கேமராவை எடுத்து வந்திருக்கிறேன். 203 00:11:50,879 --> 00:11:55,926 ரால்ஃப், இதை நிஜமாக்கி, கீழே இறங்கி நமக்காகப் படம் எடுக்க வேண்டுமா? 204 00:11:55,926 --> 00:11:58,970 நமக்கு தெளிவாகிவிட்டது, இதில் பைக்கும் சம்பந்தப்பட்டிருக்கிறது, இல்லையா? 205 00:11:59,054 --> 00:12:01,765 ஆம். இப்போதைக்கு ஹெல்மெட்டில் கேமராவை பொருத்து. 206 00:12:03,308 --> 00:12:05,727 சரி, இந்த கிறுக்குத்தனத்தைக் கேள். 207 00:12:06,645 --> 00:12:08,897 என் சிறு வயதில், நான் விண்வெளி வீரராக விரும்பினேன். 208 00:12:08,897 --> 00:12:12,567 எனது பெற்றோர்கள் அதை மிகவும் விரும்பி எனக்கு இந்த மிஷன் கட்டுப்பாட்டு மையத்தை உருவாக்கினார்கள். 209 00:12:13,151 --> 00:12:14,152 அருமை. 210 00:12:15,779 --> 00:12:18,615 இந்தத் திரை ரால்ஃபைக் கண்காணிக்கும் ஜிபிஎஸ் போல இருக்கலாம் என நினைத்தேன். 211 00:12:18,615 --> 00:12:21,159 சார்லியின் கேமரா பதிவுகளை இங்கே பார்க்கலாம். 212 00:12:21,243 --> 00:12:22,994 சரி, பைக் கையேட்டில், 213 00:12:23,078 --> 00:12:25,580 பொம்மை வாகனங்களுக்கு உயிரூட்டுவது பற்றி மட்டுமே இருக்கிறது. 214 00:12:26,081 --> 00:12:28,416 ஆனால் ரால்ஃப் அதைச் செய்ய முடியும் என நினைத்தேன்... 215 00:12:28,500 --> 00:12:31,044 ஒருவேளை அவனால் இதையெல்லாம் உயிர்ப்பிக்க முடியும். 216 00:12:31,044 --> 00:12:32,921 சரி, இதற்கு எப்படிப்பட்ட சத்தம் எழுப்பணும்? 217 00:12:32,921 --> 00:12:35,632 என் சிறு வயதில், “பீப், பூப், பீப்” எனச் சொல்வேன். 218 00:12:37,300 --> 00:12:40,804 பீப், பூப், பீப், பூப், பீப்? 219 00:12:41,972 --> 00:12:43,390 ஆம். பீப்... -நம்பவே முடியவில்லை! 220 00:12:43,390 --> 00:12:46,059 இது வேலை செய்கிறது. -என் கேமரா வீடியோ எடுக்கிறது! 221 00:12:46,059 --> 00:12:48,645 பீப், பூப், பீப், பீப், ப-டூ, பீப் 222 00:12:48,645 --> 00:12:49,771 பீப், பூப் 223 00:12:50,772 --> 00:12:52,482 வரைபடத்தைப் பாருங்கள்! 224 00:12:52,566 --> 00:12:54,317 இது நாம் இருக்கும் இடம்! 225 00:12:54,401 --> 00:12:59,281 என் வாழ்நாளில், மௌண்டன் வியு ஹோட்டலின் 215வது அறையை விட்டு வெளியே வந்ததேயில்லை. 226 00:12:59,281 --> 00:13:01,324 ஹாலில் என்ன இருக்கும் என யோசிப்பேன். 227 00:13:01,408 --> 00:13:04,244 கீழே என்ன இருக்கும், வண்டி நிறுத்தும் இடத்தில் என்ன இருக்கும் என்றும். 228 00:13:04,244 --> 00:13:07,497 இந்த சாகசத்திற்காகத் தான் நான் காத்திருந்தேன்! 229 00:13:09,958 --> 00:13:12,002 இதோ போகிறேன்! -பொறு! ரால்ஃப்! கயிறு கொண்டு... 230 00:13:13,128 --> 00:13:14,254 உன்னைக் கீழே இறக்கிவிடுகிறேன். 231 00:13:25,140 --> 00:13:26,641 கிறீச்! 232 00:13:26,725 --> 00:13:28,184 ரால்ஃப், உனக்கு ஒன்றுமில்லையே? 233 00:13:28,810 --> 00:13:30,270 அப்படிதான் நினைக்கிறேன். 234 00:13:30,270 --> 00:13:32,314 நண்பா, இது ரொம்ப குழப்பமான வழி! 235 00:13:37,193 --> 00:13:38,445 சரி, சரி. 236 00:13:43,116 --> 00:13:44,451 கிறீச்! 237 00:13:44,451 --> 00:13:47,996 சிக்னல் கிடைக்கவில்லை. நாம் நகர்ந்து போக வேண்டும்! 238 00:13:48,872 --> 00:13:50,123 ஹலோ? 239 00:13:50,707 --> 00:13:51,791 ஹலோ? 240 00:13:52,834 --> 00:13:54,419 கிறீச்! 241 00:13:55,879 --> 00:13:57,547 இல்லை, இதற்கு மேல் வழியில்லை. 242 00:13:58,381 --> 00:14:01,635 சிக்னல் வந்துவிட்டது, ஆனால் அவன் எங்கே? 243 00:14:02,135 --> 00:14:04,971 எடிசன் கட்டிடம் போல் தெரிகிறது? 244 00:14:05,722 --> 00:14:07,974 நமது வரைபடத்தில் இதைச் சேர்க்கிறேன். -எனக்கு புரியவில்லை. 245 00:14:08,058 --> 00:14:11,561 இந்தச் சுரங்கப்பாதைகள் வளாகம் முழுக்கச் செல்கின்றன, ஆனால் எல்லா முனையும் மூடப்பட்டிருக்கின்றன. 246 00:14:11,645 --> 00:14:14,189 ஆக, திருடன் எங்கே சென்றிருப்பான்? 247 00:14:14,189 --> 00:14:15,899 நாம் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். 248 00:14:16,566 --> 00:14:18,401 ஹே, எனக்கு எரிபொருள் குறைந்துக் கொண்டேயிருக்கிறது. 249 00:14:18,944 --> 00:14:21,696 அவன் என்ன சொல்கிறான்? இந்த பைக்குக்கு எரிபொருள் தேவையில்லையே. 250 00:14:21,780 --> 00:14:23,531 எனக்குப் பசிக்கிறது! 251 00:14:25,617 --> 00:14:28,203 புத்தகத்தின் படி, அவனுக்கு பீனட் பட்டரும், ஜெல்லி சாண்ட்விச்சும் பிடிக்கும். 252 00:14:29,663 --> 00:14:30,789 நாங்கள் உதவுகிறோம், ரால்ஃப். 253 00:14:34,584 --> 00:14:35,919 அடடா! 254 00:14:35,919 --> 00:14:39,130 முன்பு ரொட்டித் துண்டும் வேர்க்கடலையும் சாப்பிட்டிருக்கிறேன். 255 00:14:39,214 --> 00:14:42,008 அழுகிய ஸ்ட்ராபெரியின் பகுதியையும் சாப்பிட்டிருக்கிறேன். 256 00:14:42,092 --> 00:14:43,885 ஆனால் இது அருமையாக இருக்கிறது! 257 00:14:44,761 --> 00:14:45,804 சமீர். 258 00:14:45,804 --> 00:14:49,599 நீ கணக்குப் பரீட்சைக்கு எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்கிறாய் என உன் அப்பா சொன்னார். 259 00:14:49,683 --> 00:14:50,767 ஆமாம். 260 00:14:50,767 --> 00:14:54,688 சரி, உனக்கு இன்னும் அதிக நேரம் வேண்டுமானால் நாளை மதியம் இட்ரிஸை நான் பார்த்துக்கொள்கிறேன். 261 00:14:56,773 --> 00:14:58,149 உங்களுக்கு வேலை இல்லையா? 262 00:14:58,233 --> 00:14:59,234 நாளை எனக்கு விடுமுறை. 263 00:14:59,234 --> 00:15:01,695 எப்படியும் பில்களைச் செலுத்தப் போயாக வேண்டும். 264 00:15:01,695 --> 00:15:03,321 நான் சமாளித்துக் கொள்வேன். 265 00:15:04,406 --> 00:15:05,740 நீ உன்மீது கவனம் செலுத்து, சரியா? 266 00:15:15,834 --> 00:15:16,877 உனக்கு ஒன்றுமில்லையே? 267 00:15:17,627 --> 00:15:19,296 என் அம்மா சொன்ன அந்தக் கணக்குப் பரீட்சை... 268 00:15:20,380 --> 00:15:21,715 அதை நான் ஏற்கனவே எழுதிவிட்டேன். 269 00:15:21,715 --> 00:15:23,091 தேர்ச்சிப் பெறவில்லையா? 270 00:15:23,091 --> 00:15:24,885 இல்லை. முதல் தரம் வாங்கியுள்ளேன். 271 00:15:25,468 --> 00:15:27,178 பிறகு ஏன் அவரிடம் சொல்லவில்லை? 272 00:15:27,262 --> 00:15:29,764 நான் நியா மற்றும் சார்லியுடன் நட்பாகி 273 00:15:30,682 --> 00:15:33,101 இந்த மர்மத்தைக் கண்டுபிடிக்கும் வேலையில் இறங்கியதிலிருந்து, 274 00:15:34,311 --> 00:15:38,315 என் தம்பியையோ அல்லது மற்ற வேலைகளையோ பார்ப்பதற்கு எனக்கு நேரமில்லை. 275 00:15:39,566 --> 00:15:41,735 இருப்பினும், என்னால் உதவி கேட்க முடியாது. 276 00:15:41,735 --> 00:15:43,737 என் பெற்றோர்களுக்கு ஏற்கனவே நிறைய வேலை இருக்கு. 277 00:15:43,737 --> 00:15:46,865 உதவி கேட்க எவ்வளவு தயக்கமாக இருக்குமென எனக்குத் தெரியும். 278 00:15:46,865 --> 00:15:48,366 என் அம்மா ரொம்ப கவலைப்படுபவர், சரியா? 279 00:15:48,450 --> 00:15:51,745 அதனால் அவரிடம் என் பைக்கை காட்டவே மாட்டேன். 280 00:15:51,745 --> 00:15:54,831 ஹே, இன்றிரவு அந்தப் புத்தகக்கடை மூடியதும், 281 00:15:54,915 --> 00:15:55,999 அங்கு என் பைக்கை ஓட்ட முடியுமா? 282 00:15:56,625 --> 00:15:58,585 இல்லை. நீ ஓய்வெடுக்க வேண்டும். 283 00:15:59,377 --> 00:16:01,796 நாளை நீ நிறை சுற்ற வேண்டி இருக்கும். 284 00:16:09,012 --> 00:16:11,723 நியா, இவர் தான் மால்கம் டர்னர். 285 00:16:11,723 --> 00:16:14,351 இவர்தான் வளாகத்திலிருக்கும் கறுப்பின மாணவர்கள் சங்கத் தலைவர். 286 00:16:15,644 --> 00:16:17,145 புத்தகக்கடையில் உன்னைப் பார்த்திருக்கிறேன். 287 00:16:17,229 --> 00:16:19,481 நீ சார்லி மற்றும் சமீருடைய தோழி தானே? 288 00:16:19,481 --> 00:16:20,565 ஆமாம். 289 00:16:21,483 --> 00:16:24,861 சரி, என்ன நடந்ததென உன் அம்மா சொன்னார். 290 00:16:25,654 --> 00:16:27,155 உனக்கு அவ்வாறு நடந்ததை நினைத்து வருந்துகிறேன். 291 00:16:27,822 --> 00:16:30,325 வளாகத்திற்கு அருகிலிருக்கும் கடைக்கு எதிராகப் புறக்கணிப்பை 292 00:16:30,325 --> 00:16:32,786 ஒருங்கிணைக்கப் போகிறாய் என்றும் சொன்னார். 293 00:16:32,786 --> 00:16:34,246 ஆமாம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 294 00:16:36,831 --> 00:16:38,333 உன் நோக்கம் என்னவென்று நான் தெரிந்துக்கொள்ளலாமா? 295 00:16:38,917 --> 00:16:42,003 அதாவது, கடை உரிமையாளர் உன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று நினைக்கிறாயா? 296 00:16:42,712 --> 00:16:45,507 இனவெறியுடன் நடந்துக்கொள்ள கூடாதென ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்க நினைக்கிறாயா? 297 00:16:46,383 --> 00:16:48,176 கடையை மூட வேண்டுமென நினைக்கிறாயா? 298 00:16:49,553 --> 00:16:52,222 உண்மையில், இது வேறு யாருக்கும் நடக்கக்கூடாது என நினைக்கிறேன். 299 00:16:52,722 --> 00:16:53,932 பாதுகாப்பாக உணர விரும்புகிறேன். 300 00:16:55,058 --> 00:16:55,892 சரி. 301 00:16:57,435 --> 00:17:00,689 அந்தக் கடை உரிமையாளரையும் தாண்டி பெரிதாக ஒன்றைச் செய்ய நினைக்கிறாய். 302 00:17:01,481 --> 00:17:02,482 சரிதானே? 303 00:17:04,316 --> 00:17:06,319 நீ இங்கு ரோசா பார்க்ஸ் புத்தகம் வாங்கியதைப் பார்த்தேன். 304 00:17:08,446 --> 00:17:11,199 மான்ட்கோமெரி பேருந்து புறக்கணிப்பு என்பது ஓட்டுனர் ஒரு பெண்ணை இருக்கையை விட்டு 305 00:17:11,283 --> 00:17:13,034 எழுந்திருக்கச் சொன்னதற்காக நடந்ததில்லை, சரியா? 306 00:17:13,118 --> 00:17:14,369 அவன் சொல்வது சரி தான். 307 00:17:14,369 --> 00:17:17,497 அது ஒரு நகரம் மற்றும் அதன் அமைப்பைப் பற்றியது. பாகுபாடு பற்றியது. 308 00:17:17,581 --> 00:17:20,583 அது இனவாத நடைமுறைகள் மற்றும் அதன் சட்டங்களைச் சொல்லி 309 00:17:20,667 --> 00:17:23,587 கறுப்பின மக்களை பின்னாடி அமரச் சொல்வதாகும். 310 00:17:23,587 --> 00:17:24,713 சரிதான். 311 00:17:24,795 --> 00:17:28,382 ஆக என்னுடைய கேள்வி நீ ஒருவனை எதிர்க்க வேண்டுமா அல்லது முழு அதிகாரத்தையும் 312 00:17:28,967 --> 00:17:30,302 எதிர்க்க வேண்டுமா? 313 00:17:33,722 --> 00:17:34,723 ஏன் இரண்டையும் செய்யக்கூடாது? 314 00:17:36,099 --> 00:17:38,101 ஏற்கனவே ஒரு ஒப்பந்தம் கையெழுத்திட்டதாக சொன்னீர்களே? 315 00:17:38,101 --> 00:17:41,146 நாம் ஏன் சில வியாபாரங்களை எதிலாவது கையெழுத்திட சொல்லக் கூடாது. 316 00:17:41,771 --> 00:17:44,733 ஒரு... இனவெறி எதிர்ப்பு உறுதிமொழி போல. 317 00:17:45,483 --> 00:17:47,736 அப்போது, எங்கு பொருட்கள் வாங்க வேண்டும் என மக்களுக்குப் புரியும். 318 00:17:48,570 --> 00:17:52,073 அந்த பொடேகா கடைக்காரர் கையெழுத்து போடவில்லை என்றால், மக்கள் தாங்களாகவே புறக்கணிப்பார்கள். 319 00:17:54,075 --> 00:17:55,076 ஆஹா. 320 00:17:55,577 --> 00:17:58,038 நியா, உன் யோசனை பிடிச்சிருக்கு. 321 00:17:58,038 --> 00:18:00,373 இந்த கடைக்காரர்களுக்கு குழந்தைகள் இருந்தால், 322 00:18:00,457 --> 00:18:02,125 அவர்கள் கண்டிப்பாக கேட்டு நடப்பார்கள். 323 00:18:02,125 --> 00:18:04,461 உன் நண்பர்கள் மூலம் நீ விஷயத்தை எல்லோருக்கும் தெரிவிக்கலாம். 324 00:18:04,461 --> 00:18:05,545 டாக்டர் பார்னஸ்? 325 00:18:06,963 --> 00:18:08,757 நான் உங்களை 100% ஆதரிக்கிறேன். 326 00:18:13,845 --> 00:18:15,680 இதை ஏன் பொறியாக நினைக்கிறாய்? 327 00:18:15,764 --> 00:18:17,891 நாம் வெட்டி விட்டால், மீண்டும் போக முடியாது. 328 00:18:17,891 --> 00:18:20,852 ஒருவேளை அதை நகர்த்தி... -கொஞ்சம் இரு. 329 00:18:23,855 --> 00:18:25,357 சிட், என்ன இது. 330 00:18:25,357 --> 00:18:28,777 சரி, சரி. இறுதியாக, இந்த இடத்தில் ஒரு நட்பை உருவாக்கியதற்காக மன்னித்துவிடு. 331 00:18:28,777 --> 00:18:32,113 சரி, நல்லது. நாளைக்கு அவளைச் சந்திக்கலாமே. 332 00:18:35,533 --> 00:18:37,285 ஹே. -ஹே, நண்பா. 333 00:18:37,786 --> 00:18:39,079 என்ன செய்கிறாய்? 334 00:18:39,079 --> 00:18:41,539 என் மேஜிக் நிகழ்ச்சிக்காக ஒரு மேஜை. 335 00:18:42,624 --> 00:18:43,625 சிறப்பு. 336 00:18:47,045 --> 00:18:50,423 நான் கொஞ்சம் எடுத்துவிட்டேன். 337 00:18:51,758 --> 00:18:52,926 நான் யாரிடமும் சொல்ல மாட்டேன். 338 00:18:53,802 --> 00:18:56,638 நான் என் வேலைக்கு திரும்ப வேண்டும். பிறகு சந்திக்கலாம். 339 00:19:03,728 --> 00:19:05,730 சரி. அவளுக்கு செய்தி அனுப்பு. 340 00:19:14,948 --> 00:19:15,949 ஜெமினி பொலெவார்ட் 341 00:19:15,949 --> 00:19:17,158 ஒன்பதாவது அவின்யூவில் நள்ளிரவு 342 00:19:24,541 --> 00:19:25,625 ஹே! 343 00:19:28,795 --> 00:19:30,338 கிறீச்! 344 00:19:34,175 --> 00:19:35,260 குக்கீஸ்! 345 00:19:35,260 --> 00:19:36,761 கிறீச்! 346 00:19:36,845 --> 00:19:37,846 சூயி சாக்லெட் சிப் 347 00:19:43,101 --> 00:19:44,561 நீ அவற்றை சாப்பிடக்கூடாது. 348 00:19:45,520 --> 00:19:47,147 மனிதர்கள் கண்ணில் பட்டுவிடுவாய். 349 00:19:47,147 --> 00:19:50,191 சரி, இதை வீணாக்க கூடாது, இல்லையா? 350 00:19:50,275 --> 00:19:53,528 அந்த பைக் அழகாக இருக்கு. என் பெயர் ரோஸி. 351 00:19:53,612 --> 00:19:54,988 என் பெயர் ரால்ஃப். 352 00:19:54,988 --> 00:19:56,573 நீ எங்கிருந்து வருகிறாய்? 353 00:19:56,573 --> 00:19:58,742 மௌண்டன் வியு ஹோட்டல், கலிபோர்னியா. 354 00:19:59,409 --> 00:20:03,371 கலிபோர்னியாவா? நீ ஒரு சாகச பயணி. 355 00:20:03,455 --> 00:20:04,915 ஆமாம், சரி தான். 356 00:20:04,915 --> 00:20:07,125 ஹே, மற்றவர்களைச் சந்திக்க விரும்புகிறாயா? 357 00:20:15,050 --> 00:20:17,052 ஹே, எல்லோரும் வந்து, ரால்ஃபை சந்தியுங்கள். 358 00:20:17,052 --> 00:20:18,803 இந்த வண்டி எங்கே கிடைத்தது? -இவன் உண்மை தானா? 359 00:20:18,887 --> 00:20:20,013 இது எவ்வளவு வேகமாக போகும்? 360 00:20:20,013 --> 00:20:22,724 அப்படி ஓட்ட எங்கே கற்றாய்? -பேசாமல் இருங்கள்! 361 00:20:25,435 --> 00:20:26,978 நீ. 362 00:20:27,062 --> 00:20:29,814 நீ மனிதர்களோடு பழகுகிறாய், இல்லையா? 363 00:20:30,398 --> 00:20:34,569 சில குழந்தைகளோடு. -அந்த வண்டியில் சத்தத்தோடு சுற்றுவதை நிறுத்து. 364 00:20:34,653 --> 00:20:36,571 எங்களைக் காட்டிக்கொடுத்துவிடுவாய். 365 00:20:37,781 --> 00:20:39,741 நான் சற்று மகிழ்ச்சியாக இருந்தேன்! 366 00:20:39,741 --> 00:20:42,744 நான் இளைஞன் இல்லை, 367 00:20:42,744 --> 00:20:48,083 ஒரு பைக்கில் ஏறி சாகச பயணம் போக விரும்பவில்லை என்று நினைக்கிறாய் போல. 368 00:20:48,875 --> 00:20:50,835 உனக்கு ஒன்று காண்பிக்கிறேன். 369 00:20:50,919 --> 00:20:54,923 உன் வயதாக இருக்கும் போது, ஒரு மனிதன் வைத்த பொறி என்னை இப்படி ஆக்கிவிட்டது. 370 00:20:55,423 --> 00:20:57,092 நன்றாகப் பார்! 371 00:20:58,718 --> 00:21:02,722 இந்த காலனியில் நான் மூத்த எலியாக இருப்பதற்கு காரணம் உண்டு. 372 00:21:02,806 --> 00:21:04,724 நான் என் வலையில் மட்டும் இருப்பேன். 373 00:21:04,808 --> 00:21:06,977 நீயும் அப்படித் தான் இருக்க வேண்டும். 374 00:21:06,977 --> 00:21:09,354 ரால்ஃப்? ரால்ஃப்? 375 00:21:10,021 --> 00:21:11,147 போகாதே, ரால்ஃப். 376 00:21:11,231 --> 00:21:12,941 சமீர்! இங்கே இருக்கிறேன்! 377 00:21:12,941 --> 00:21:16,653 என்ன செய்கிறாய்? இன்று வண்டி ஓட்ட வேண்டாம் என்று சொன்னேனே. 378 00:21:16,653 --> 00:21:17,737 அதனால் என்ன! 379 00:21:17,821 --> 00:21:19,698 நள்ளிரவில், வேகமாக ஓட்ட முடியாது என்றால் 380 00:21:19,698 --> 00:21:22,576 பைக் வைத்துக்கொள்வதால் என்ன பயன்? 381 00:21:22,576 --> 00:21:25,745 உன்னிடம் வண்டி கிடையாது. இது சார்லி உடையது. 382 00:21:26,246 --> 00:21:28,915 உன்னை நம்ப முடியாது என்பதால், இதை நான் வைத்துக்கொள்கிறேன். 383 00:21:29,874 --> 00:21:32,168 சரி, போகலாம். இது தூங்கும் நேரம். 384 00:21:38,592 --> 00:21:40,969 கிராமப் புத்தகங்கள் 385 00:21:59,112 --> 00:22:00,280 இது மிக சிறப்பு. 386 00:22:00,280 --> 00:22:01,364 இனவெறியை எதிர்த்து போராடுவோம் 387 00:22:01,448 --> 00:22:03,074 என் பெற்றோரிடம் பேசுகிறேன். அவர்கள் கையெழுத்து போடுவார்கள். 388 00:22:03,158 --> 00:22:07,162 நமது ஹார்டுவேர் கடை மற்றும் பெயிண்ட் கடைக்காரரிடம் பேசுகிறேன். 389 00:22:07,162 --> 00:22:08,914 சமீர், எங்களோடு இணைகிறாயா? 390 00:22:10,582 --> 00:22:15,462 எனது ஊரில், இப்படி செய்தால், அரசாங்கம் எதிர்ப்பு தெரிவிக்கும். 391 00:22:16,254 --> 00:22:19,841 நாங்கள் அமைதியாக போராடினோம், அதற்கு, அவர்கள் வன்முறையைக் கையாண்டார்கள். 392 00:22:20,717 --> 00:22:22,052 பிறகு போர் தொடங்கியது. 393 00:22:23,428 --> 00:22:26,765 சமீர், கேள், நீ பங்கேற்க வேண்டாம்... -இல்லை, நான் பங்கேற்பேன். 394 00:22:27,641 --> 00:22:30,685 சிரியன் பேக்கரியில் இருக்கும் நம் நண்பர்களிடம் பேசுகிறேன். 395 00:22:33,563 --> 00:22:35,482 மிஷன் கட்டுப்பாடு என்ன சொல்கிறது? 396 00:22:36,274 --> 00:22:37,108 வயதான சான்ஸி 397 00:22:37,192 --> 00:22:38,360 இது ஆலிவர். 398 00:22:38,360 --> 00:22:40,320 “வயதான சான்ஸி?” 399 00:22:40,320 --> 00:22:41,613 இதற்கு என்ன அர்த்தம்? 400 00:22:42,364 --> 00:22:44,032 முன்னரே அந்த வார்த்தைகளைப் பார்த்திருக்கிறேன். 401 00:22:45,075 --> 00:22:48,411 ஆலிவரின் அலுவலகத்தில் இருந்த பழங்கால எழுத்துக்களுக்கான என் மொழிபெயர்ப்பில்! 402 00:22:49,829 --> 00:22:54,793 இதோ. அது இந்த பல்கலைக்கழக நிறுவனர், சார்லஸ் விக்ஃபோர்ட்டின் புனைப்பெயர். 403 00:22:55,293 --> 00:22:56,336 “வயதான சான்ஸி.” 404 00:22:57,462 --> 00:23:01,132 சரி. வேலைக்கு சேர்ந்த போது அவரைப் பற்றி அம்மா எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டி இருந்தது. 405 00:23:01,800 --> 00:23:04,135 அவருடைய ஆன்மா இன்னும் அங்கே சுற்றி வருவதாக சொல்கிறார்கள். 406 00:23:04,719 --> 00:23:06,972 ஹே, இங்கேயும் எந்த விவரமும் இல்லை. 407 00:23:07,806 --> 00:23:08,807 என்னால் நம்ப முடியவில்லை. 408 00:23:10,100 --> 00:23:11,101 என்ன? 409 00:23:12,477 --> 00:23:13,562 அவன் என் வீட்டில் இருக்கிறான். 410 00:23:16,481 --> 00:23:18,233 ரால்ஃப்? -ஹலோ? 411 00:23:18,233 --> 00:23:20,026 ரால்ஃப்! -எங்கே இருக்கிறாய், நண்பா? 412 00:23:20,527 --> 00:23:21,945 ஹலோ? -அவன் இங்கே இருக்கிறான். 413 00:23:21,945 --> 00:23:25,031 ஹலோ! ஹலோ? 414 00:23:25,115 --> 00:23:26,950 ரால்ஃப்? எங்கே இருக்கிறாய்? 415 00:23:26,950 --> 00:23:29,160 இங்கே இருக்கிறேன்! ஹலோ? -ரால்ஃப்? 416 00:23:29,911 --> 00:23:31,746 அவன் எங்கே இருக்கிறான்? -ஹலோ? 417 00:23:31,830 --> 00:23:35,166 ரால்ஃப்? -ஹலோ? ஹே! 418 00:23:35,667 --> 00:23:36,668 இங்கே இருக்கிறான். 419 00:23:41,172 --> 00:23:42,591 அங்கு எதுவுமே இல்லை. 420 00:23:42,591 --> 00:23:43,717 ஹலோ! 421 00:23:44,676 --> 00:23:45,927 பின்னால் இருந்து தான் சத்தம் வருகிறது. 422 00:23:46,011 --> 00:23:48,263 ஆமாம்! என் அருகில் தான் இருக்கிறீர்கள்! -அதை நகர்த்துவோம். 423 00:23:50,181 --> 00:23:52,225 ரால்ஃப்! உனக்கு ஒன்றுமில்லையே? 424 00:23:53,226 --> 00:23:55,520 என்னை நசுக்கிக் கொண்டு அந்த ஓட்டை வழியாக சுரங்கப் பாதையை விட்டு வெளியே வந்தேன். 425 00:23:55,604 --> 00:23:59,441 புரிகிறது. இது பல்கலைக்கழகம் உருவான காலத்தில் கட்டப்பட்ட வீடு. 426 00:23:59,441 --> 00:24:01,359 எனவே இதை சுரங்கப் பாதையோடு இணைக்கப்பட்டிருக்கும். 427 00:24:01,443 --> 00:24:05,030 இந்த ஓட்டை இன்னும் பெரிதாக இருந்தால் ரால்ஃபோடு சேர்ந்து நாமும் இதன் உள்ளே போகலாமே. 428 00:24:05,822 --> 00:24:08,658 அதன் மூலம் திருடன் எந்த வழியாக சென்றிருப்பான் என்ற துப்பு கிடைக்கலாம். 429 00:24:09,367 --> 00:24:13,121 ஆமாம், ஆனால் உள்ளே செல்வதற்கு துளையிடும் இயந்திரம் தேவையாச்சே. 430 00:24:15,123 --> 00:24:16,374 அல்லது தேவைப்படாமலும் போகலாம். 431 00:24:21,379 --> 00:24:24,966 ஸ்க்ரஞ்ச்! ஸ்க்ரஞ்ச்! 432 00:24:25,717 --> 00:24:28,220 ஸ்க்ரஞ்ச்! ஸ்க்ரஞ்ச்! ஸ்க்ரஞ்ச்! 433 00:24:28,220 --> 00:24:31,431 ஸ்க்ரஞ்ச்! ஸ்க்ரஞ்ச்! 434 00:24:31,431 --> 00:24:33,558 என் யோசனை வேலை செய்ததை என்னால் நம்பவே முடியவில்லை! 435 00:24:33,642 --> 00:24:35,310 பெட்டியிலிலேயே சத்தத்தைக் குறிப்பிட்டிருப்பதை என்னால் நம்ப முடியவில்லை! 436 00:24:35,310 --> 00:24:36,228 பிரப்-பிரப்! ஸ்க்ரஞ்ச்! 437 00:24:36,728 --> 00:24:39,439 என் வீட்டு அடிதளத்தில் இவ்வளவு பெரிய ஓட்டை போடுகிறோம் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. 438 00:24:40,315 --> 00:24:43,318 அமைதியாக இரு. இது போன்ற விஷயங்களில் நான் தான் என் அப்பாவுக்கு உதவுவேன். 439 00:24:43,818 --> 00:24:46,655 வேலை முடிந்த பிறகு, இதை மூட உதவுகிறேன். -ஆம் செய்துவிடு. 440 00:24:46,655 --> 00:24:49,741 ஸ்க்ரஞ்ச்! ஸ்க்ரஞ்ச்! 441 00:24:49,741 --> 00:24:51,785 இதை முடிக்க நேரமாகும் போல. 442 00:24:52,327 --> 00:24:54,996 “வயதான சான்ஸி” என்றால் என்ன என்பதை நாம் கண்டுப்பிடிக்க வேண்டும். 443 00:24:55,080 --> 00:24:55,914 சரி. 444 00:24:57,165 --> 00:25:00,710 ஹேய். ஒருவேளை, ஆலிவர், இந்த ஆவியுடன் பேச நினைக்கிறாரோ? 445 00:25:00,794 --> 00:25:02,879 அப்புறம் என்ன? வயதான சான்ஸியும் நமக்கு எழுத்திக் காட்டுமா? 446 00:25:02,963 --> 00:25:04,381 இருக்கலாம், தெரியவில்லை. 447 00:25:04,381 --> 00:25:06,299 நாம் எங்கு போய் வயதான சான்ஸியைக் கண்டுப்பிடிப்பது? 448 00:25:06,883 --> 00:25:07,884 நியா? 449 00:25:09,219 --> 00:25:10,387 போகலாம். 450 00:25:14,516 --> 00:25:15,517 ஹேய், செல்லங்களே. 451 00:25:16,101 --> 00:25:17,352 எல்லோரையும் இங்கு பார்த்ததில் மகிழ்ச்சி. 452 00:25:17,352 --> 00:25:20,730 நாங்கள் பணியமர்த்திய அந்த தனியார் புலனாய்வாளர், எலோக்வென்ட் பெசன்ட் போலியானது என்பதை 453 00:25:20,814 --> 00:25:23,316 நீங்கள் எப்படிக் கண்டுபிடித்தீர்கள் என அறிய சனிக்கிழமை உங்களை நேர்காணல் செய்வார். 454 00:25:23,400 --> 00:25:26,570 சாதாரண உரையாடல் போல இருக்கும் என்றார். எப்படி கண்டுப்பிடித்தீர்கள் என அறிய வேண்டுமாம். 455 00:25:26,570 --> 00:25:28,405 உங்களுக்கு அதில் சம்மதமா? காலை 10.00 மணிக்கு? 456 00:25:29,447 --> 00:25:30,448 நிச்சயமாக. 457 00:25:31,157 --> 00:25:33,076 சரி. அவரிடம் தெரிவிக்கிறேன். 458 00:25:37,205 --> 00:25:39,541 கொஞ்சம் ஓய்வு எடுக்கிறேன். சங்கதின் சட்டம். 459 00:25:40,041 --> 00:25:40,875 ஹேய், சமீர், 460 00:25:40,959 --> 00:25:43,044 புத்தக கடையில் இருக்கும் பெண் வைத்திருக்கும் குக்கீஸை 461 00:25:43,128 --> 00:25:45,171 எனக்கு கொண்டு வர முடியுமா? 462 00:26:10,196 --> 00:26:14,075 சரி, உன் புது நண்பருடன் இருந்த இரவு எப்படி இருந்தது? 463 00:26:14,868 --> 00:26:16,328 எதைப் பற்றி பேசுகிறாய்? 464 00:26:16,995 --> 00:26:19,164 நேற்றிரவு. நீ யாருக்கும் தெரியாமல் போனதைப் பார்த்தேன். 465 00:26:20,415 --> 00:26:23,001 நீ ஏம்பரோடு சுற்றுகிறாய் என நினைக்கிறேன். 466 00:26:23,001 --> 00:26:25,337 வந்து, நான் நூலகத்தில் படித்துக் கொண்டிருந்தேன். 467 00:26:25,337 --> 00:26:27,923 நான் பதுங்கிச் செல்லவில்லை, அப்பா, அம்மாவை எழுப்ப விரும்பவில்லை அவ்வளவு தான். 468 00:26:27,923 --> 00:26:30,091 அட சொல்லு! எங்கே போனாய்? 469 00:26:30,967 --> 00:26:32,510 நடனமாடவா? பெரிய பார்ட்டியா? 470 00:26:34,262 --> 00:26:35,347 இங்கே வந்தாயா? 471 00:26:36,473 --> 00:26:39,142 சார்லி, நான் எங்கே இருந்தேன் என சொல்லிவிட்டேன். அதை விடு, சரியா? 472 00:26:39,226 --> 00:26:40,393 சரி. 473 00:26:41,311 --> 00:26:44,189 ஹேய், வயதான சான்ஸியைப் பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா? 474 00:26:44,856 --> 00:26:46,149 பல்கலைக்கழக்கத்தின் நிறுவனாரா? 475 00:26:46,233 --> 00:26:48,693 ஆமாம், அவருடைய ஆவி. 476 00:26:49,361 --> 00:26:50,820 பள்ளியில் அளந்துவிடப்படும் கதை. 477 00:26:51,571 --> 00:26:53,365 அப்படி என்ன கதை அது? -எனக்குத் தெரியாது. 478 00:26:53,365 --> 00:26:57,035 அவர் இரவில் பள்ளியை சுற்றி வருவதாகவும், மாணவர்களை கண்காணிப்பதாகவும் சொல்லப்படுகிறது. 479 00:26:57,035 --> 00:27:00,413 வளாகத்தின் ஓரத்தில் இருக்கும் அந்த சிறிய பள்ளியில் அவரது ஆவி வாழ்கிறது என நினைக்கிறேன். 480 00:27:01,206 --> 00:27:04,584 கவலைப்படாதே, சார். ஆவி என்று எதுவுமே கிடையாது. 481 00:27:06,086 --> 00:27:07,087 ஆமாம். 482 00:27:20,225 --> 00:27:22,394 இதை இரவிலேயே செய்தாக வேண்டுமா? 483 00:27:22,394 --> 00:27:24,604 அப்போது தான் வயதான சான்ஸியின் ஆவி வெளியே வரும். 484 00:27:24,688 --> 00:27:26,690 சரி, இது தான் வழக்கம் என நாம் அவரிடம் சொல்லிவிட்டால், 485 00:27:26,690 --> 00:27:28,316 அவர் பகலில் வர ஆரம்பித்துவிடுவார். 486 00:27:28,400 --> 00:27:30,026 ரால்ஃப் அந்த ஓட்டையை எவ்வளவு பெரியதாக்கியுள்ளான்? 487 00:27:30,694 --> 00:27:34,906 அவன் மொழியில், “பன்னிரண்டு எலிகள் சேர்ந்து செல்லும் அகலத்திற்கு” என சொல்கிறான். 488 00:27:34,990 --> 00:27:37,075 ஓ, ஏறக்குறைய முடிந்துவிட்டதா? 489 00:27:39,077 --> 00:27:40,912 “விக்ஃபோர்ட் பள்ளி.” 490 00:27:42,831 --> 00:27:46,167 இந்த சிறிய பள்ளியில் தான் சார்லஸ் “சான்ஸி” விக்ஃபோர்ட் 491 00:27:46,251 --> 00:27:48,295 பல்கலைக்கழகத்தை நிறுவும் முன் பாடம் நடத்தினார். 492 00:27:48,920 --> 00:27:50,171 அவர் வீட்டில் இருப்பார் என நம்புவோம். 493 00:27:57,637 --> 00:28:01,808 ஹலோ? வயதான சான்ஸி? இங்கே இருக்கிறீர்களா? 494 00:28:02,309 --> 00:28:04,060 நாங்கள் ஆலிவரின் நண்பர்கள். 495 00:28:04,144 --> 00:28:05,228 நாங்கள் பேச விரும்புகிறோம். 496 00:28:08,440 --> 00:28:09,441 என்ன சத்தம் அது? 497 00:28:16,489 --> 00:28:19,492 சரி. இது மோசமான யோசனையாக இருக்கலாம். 498 00:28:26,666 --> 00:28:28,418 வயதான சான்ஸி? 499 00:29:20,887 --> 00:29:22,889 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்