1 00:00:06,591 --> 00:00:09,511 சிசேமே வொர்க் ஷாப் வழங்கும் 2 00:00:14,474 --> 00:00:16,308 குழந்தைகளே, இங்கே என்ன செய்கிறீர்கள்? 3 00:00:17,102 --> 00:00:18,436 நாங்கள் சும்மா... 4 00:00:18,520 --> 00:00:20,272 இங்கே யாரும் வரக்கூடாது. இது பொது இடமல்ல. 5 00:00:20,272 --> 00:00:22,899 மன்னிக்கவும். நாங்கள் சும்மா... -போதும். 6 00:00:23,942 --> 00:00:28,738 கொஞ்சம் பொறு. நீ தலைவரின் மகள், நியா பார்னஸ் தானே? 7 00:00:31,616 --> 00:00:34,452 சரி. இந்த முறை மன்னித்துவிடுகிறேன், 8 00:00:35,036 --> 00:00:37,747 ஆனால் இதைப்பற்றி அவளிடம் சொல்ல வைக்காதே. 9 00:00:40,083 --> 00:00:43,837 புரிந்ததா? நல்லது. இப்போதே வெளியே போங்கள். 10 00:00:43,837 --> 00:00:47,090 ஓடு! -போ! சீக்கிரம்! 11 00:01:03,899 --> 00:01:05,692 பேய் எழுத்தாளர் 12 00:01:06,735 --> 00:01:11,281 நாம் முடிந்த வரை உண்மையை பேசணும். போலீஸிடம் பொய் சொல்லி நான் ஜெயிலுக்கு போக மாட்டேன். 13 00:01:11,281 --> 00:01:13,700 அவள் போலீஸ் இல்லை. தனியார் துப்பறிவாளர். 14 00:01:13,700 --> 00:01:15,452 நான் ரிஸ்க் எடுக்க மாட்டேன். 15 00:01:15,452 --> 00:01:17,954 நானும் ஆலிவரும் எப்படி சந்தித்தோம் என்று சொல்ல பயிற்சி செய்தேன், 16 00:01:18,038 --> 00:01:20,040 ஏனென்றால் அந்த கதை தான் உண்மையானது. 17 00:01:20,040 --> 00:01:21,124 அவர் இறந்த பிறகு, 18 00:01:21,124 --> 00:01:23,960 நமது தொல்லியல் துறை எப்படி தொடங்கியது என்பதை மட்டும் சொல்ல மாட்டேன். 19 00:01:24,044 --> 00:01:26,838 பதற்றப்படாதே, சமீர். 20 00:01:26,922 --> 00:01:29,633 நானே பேசுகிறேன். நான் நன்றாக பேசுவேன். 21 00:01:33,803 --> 00:01:34,804 நியா? 22 00:01:36,056 --> 00:01:38,516 மன்னியுங்கள், நேற்றிரவு நடந்ததைப் பற்றி தான் யோசிக்கிறேன். 23 00:01:38,600 --> 00:01:41,728 என் அம்மா யார் என்று அவருக்கு எப்படி தெரியும்? 24 00:01:41,728 --> 00:01:43,480 ஹே, அந்த சுரங்கப் பாதைகள் பற்றி 25 00:01:43,480 --> 00:01:46,441 நாம் துப்பறிவாளரிடம் சொல்ல வேண்டும், இல்லையா? 26 00:01:47,400 --> 00:01:48,777 அப்படி ஆலிவர் நினைத்திருந்தால், 27 00:01:48,777 --> 00:01:51,613 “இரும்பு கதவு” என்று எழுதாமல் “துப்பறிவாளர்” என்று எழுதியிருப்பார். 28 00:01:52,155 --> 00:01:55,575 ஆமாம். ரால்ஃபை அழைத்துச் சொல்வோம். அவன், சந்து பொந்தில் துப்புகளை கண்டுபிடிப்பான். 29 00:01:55,659 --> 00:01:57,160 நான் பைக்கை கொண்டு வரலாமா? 30 00:01:57,244 --> 00:01:58,995 இம்முறை வேண்டாம், சரியா? 31 00:01:59,079 --> 00:02:01,081 நீ சொன்னால் சரி. 32 00:02:01,081 --> 00:02:02,249 கொஞ்சம் பொறு. 33 00:02:04,626 --> 00:02:05,877 சரி, கிளம்பலாம். 34 00:02:07,212 --> 00:02:08,337 நில்லுங்கள். 35 00:02:10,131 --> 00:02:11,216 ரால்ஃப் எங்கே போனான்? 36 00:02:13,260 --> 00:02:15,387 சரி, எழுந்திருங்கள். எல்லோரும், எழுந்திருங்கள்! 37 00:02:15,387 --> 00:02:18,306 இது அவசரம்! எல்லோரும், எழுந்திருங்கள்! 38 00:02:18,390 --> 00:02:19,808 அப்பாடா, நீ இங்கே இருக்கிறாய். 39 00:02:19,808 --> 00:02:22,727 வெளியே, ஒரு பூச்சி கொல்பவர் இருக்கிறார்! 40 00:02:22,811 --> 00:02:24,312 நீ வந்து... -அமைதி! 41 00:02:25,814 --> 00:02:28,567 ஆமாம், வெளியே பூச்சி கொல்பவர் இருக்கிறார், 42 00:02:28,567 --> 00:02:30,860 அது உன்னுடைய தவறு. 43 00:02:30,944 --> 00:02:33,446 மனிதர்கள் நம் நண்பர்கள் என்பதால் 44 00:02:33,530 --> 00:02:37,242 அந்த குக்கிகளை சாப்பிடலாம் என்று நீ நினைத்தாய் அல்லவா? 45 00:02:37,242 --> 00:02:40,120 அதனால் இப்போது எலி பொறிகளும், விஷமும் தீரும் வரை 46 00:02:40,120 --> 00:02:42,831 நாங்கள் எல்லோரும் இந்த பொந்தில் மறைந்து இருக்க வேண்டும். 47 00:02:42,831 --> 00:02:45,000 குறைந்தது ஒரு மாதம் ஆகும். 48 00:02:45,000 --> 00:02:48,795 ரால்ஃப், நம்மிடம் உணவு குறைவு. புதிதாக உணவு கிடைக்கவில்லை என்றால்... 49 00:02:48,879 --> 00:02:50,881 அந்த சிறுவர்களிடம் பேசுகிறேன், சரியா? அவர்கள் உதவி செய்வர். 50 00:02:50,881 --> 00:02:52,841 மனிதர்களின் உதவியே வேண்டாம்! 51 00:02:53,425 --> 00:02:55,719 சரி. நானே செய்கிறேன். 52 00:02:56,428 --> 00:02:57,929 நீ உதவ விரும்புகிறாயா, ரால்ஃப்? 53 00:02:58,013 --> 00:03:00,265 ஆமாம், இது என் தவறு. என்ன வேண்டுமானாலும் செய்கிறேன். 54 00:03:00,265 --> 00:03:03,727 வெளியே போ. ஏற்கனவே நிறைய செய்துவிட்டாய். 55 00:03:06,938 --> 00:03:09,065 சரி. நாம் இப்போது தொடங்கலாம். 56 00:03:09,149 --> 00:03:11,109 கொஞ்சம் காபி தேவை. 57 00:03:11,735 --> 00:03:15,447 உங்களுக்கு என்னைப்பற்றி எந்தளவு தெரியும் என்று தெரியாது, 58 00:03:15,447 --> 00:03:18,408 என் பெயர் கேட்டி டோனவன், தனியார் துப்பறிவாளர். 59 00:03:18,909 --> 00:03:20,327 எலோக்வென்ட் பெசன்டின் திருட்டு மற்றும் 60 00:03:20,327 --> 00:03:23,288 ஏமாற்று வேலை பற்றி விசாரிக்க பல்கலைக்கழகம் என்னை பணி அமர்த்தியுள்ளது. 61 00:03:23,288 --> 00:03:26,041 சரி, உங்களிடம் சில கேள்விகள் கேட்கப் போகிறேன். 62 00:03:26,041 --> 00:03:31,296 முதலில், உங்கள் யாரையும் சந்தேகப்படவில்லை. இது ஒரு நட்பான உரையாடல், சரியா? 63 00:03:31,880 --> 00:03:35,717 மேலும், இதை நீங்கள் வெளியே சொல்லாமல் இருக்க வேண்டும். 64 00:03:35,717 --> 00:03:37,427 இது பல்கலைக்கழகத்தின் முக்கியமான பிரச்சினை, 65 00:03:37,427 --> 00:03:39,429 அதனால் இந்த தகவல் வெளியே தெரியக் கூடாது. 66 00:03:39,930 --> 00:03:40,931 ஏதாவது கேள்விகள் உண்டா? 67 00:03:42,098 --> 00:03:43,475 நான் கழிவறைக்கு போகலாமா? 68 00:03:45,185 --> 00:03:48,271 சரி. வெளியே வலதுபுறம் இருக்கிறது. 69 00:03:50,232 --> 00:03:51,233 எனக்கு போக வேண்டாம். 70 00:03:51,233 --> 00:03:52,525 வா. 71 00:03:56,780 --> 00:03:59,824 சரி, நீங்கள் எப்படி தொல்லியல் துறைக்கு வந்தீர்கள்? 72 00:04:00,408 --> 00:04:01,493 ஆலிவர் ராமோஸ். 73 00:04:02,077 --> 00:04:04,663 அதைத் தொடங்கி வைத்தது எங்கள் வழிகாட்டி, ஆலிவர் ராமோஸ். 74 00:04:05,163 --> 00:04:06,539 நாங்கள் சந்தித்ததைப் பற்றி சொல்கிறேன். 75 00:04:06,623 --> 00:04:09,668 சரி. அவள் அந்த மேஜையை விட்டு விலக நான் ஒரு வழி யோசிக்கிறேன். 76 00:04:09,668 --> 00:04:12,170 அப்போது, நீ பதிவு புத்தகத்தில் பார். 77 00:04:12,254 --> 00:04:14,464 அக்டோபர் முதல் வாரத்தில் தான் ஈபி திருடப்பட்டது. 78 00:04:14,548 --> 00:04:15,632 அந்த தேதிகளில் தேடு. 79 00:04:15,632 --> 00:04:18,134 பெலிகன் ஓவியம் மற்றும் எலோக்வென்ட் பெசன்ட் ஆகியவற்றை யார் பார்த்தார்கள் என 80 00:04:18,218 --> 00:04:19,469 நமக்குத் தெரிய வேண்டும். 81 00:04:19,553 --> 00:04:22,347 சரி. சரி, பெலிக்கன் மற்றும் எலிஃபன்ட் பெசன்ட். 82 00:04:22,347 --> 00:04:25,225 புரிந்தது. -மறுபடியும் கேள். 83 00:04:26,643 --> 00:04:30,772 ஒருநாள் நான் சுவையான யோகர்ட் பார்பேட் சாப்பிட்டிருந்த போது ஆலிவர்... 84 00:04:30,772 --> 00:04:32,440 ஹாய். நான் வந்துவிட்டேன். 85 00:04:33,024 --> 00:04:35,527 நாம் சோஃபாவில் உட்காரலாமா? சற்று சௌகரியமாக இருக்கும். 86 00:04:36,194 --> 00:04:39,364 சரி. உட்காரலாம். 87 00:04:43,660 --> 00:04:45,829 அப்பாடா, வந்துவிட்டேன். 88 00:04:45,829 --> 00:04:49,874 என் மீதி கதையை கேட்க விரும்புகிறீர்களா? 89 00:04:50,667 --> 00:04:51,835 பிறகு கேட்கிறேனே. 90 00:04:51,835 --> 00:04:54,504 ஆக, நீங்கள் எல்லோரும் உங்கள் இளம் தொல்லியல் துறை கிளப்பிற்காக 91 00:04:54,588 --> 00:04:57,465 எலோக்வென்ட் பெசன்டை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தீர்கள், சரியா? 92 00:04:58,466 --> 00:05:00,010 சிறப்பு. அப்படி என்ன செய்தீர்கள்? 93 00:05:03,722 --> 00:05:05,015 மன்னியுங்கள். 94 00:05:05,599 --> 00:05:07,934 அவனைக் கண்டுபிடித்துவிட்டேன்! “அலெக்ஸ் தாம்சன்.” 95 00:05:08,018 --> 00:05:10,979 நியா? -ஆம். எலோக்வென்ட் பெசன்ட். 96 00:05:11,479 --> 00:05:15,400 அதனுடைய வரலாறு போன்ற விவரங்களை நாங்கள் அப்போது தான் படித்தோம், சரியா? 97 00:05:15,984 --> 00:05:18,278 எங்கள் கிளப்பிற்காக புகைப்படங்களைப் பார்த்தோம். 98 00:05:18,278 --> 00:05:21,740 அக்டோபர் 3ஆம் தேதி அவன் அதைப் பார்த்திருக்கிறான். 99 00:05:22,407 --> 00:05:27,037 அந்த பொருளின் தன்மை மற்றும் வண்ண தீட்டல்கள் பற்றி அறிய. 100 00:05:27,037 --> 00:05:30,332 அப்படித்தான் அது போலி என்று தெரிந்ததா? 101 00:05:30,332 --> 00:05:33,251 அதிக தகவல் இருக்கு. அந்த ஆளின் புகைப்படம் கூட இருக்கு! 102 00:05:33,335 --> 00:05:35,795 யாராவது இங்கு வந்து, இதைப் புகைப்படம் எடுங்கள். 103 00:05:35,879 --> 00:05:37,130 அது சரியா? 104 00:05:37,547 --> 00:05:39,674 அவளது கவனத்தை திருப்பி, இங்கே வாருங்கள். 105 00:05:39,758 --> 00:05:41,092 ஹே. 106 00:05:42,802 --> 00:05:43,845 ஃபோனைக் கொடுங்கள் 107 00:05:43,929 --> 00:05:44,930 இது அந்த பேய் தான். 108 00:05:44,930 --> 00:05:45,972 ஹாய், பேயே. 109 00:05:48,600 --> 00:05:51,019 மன்னிக்கவும். நான் மந்திரவாதி. இப்படி நடக்கும். 110 00:05:51,019 --> 00:05:52,395 கொஞ்சம் உதவுகிறீர்களா? 111 00:05:53,438 --> 00:05:54,564 நன்றி. 112 00:06:07,369 --> 00:06:08,370 இது வேலை செய்கிறது. 113 00:06:08,954 --> 00:06:10,121 உன்னிடமே திரும்புகிறது. 114 00:06:13,041 --> 00:06:14,000 ஆமாம். 115 00:06:15,252 --> 00:06:16,253 என்ன விஷயம்? 116 00:06:18,171 --> 00:06:21,049 அப்போது நீங்கள் சொன்னது சரி என்று சொல்லிக் கொண்டிருந்தேன். 117 00:06:21,049 --> 00:06:22,676 அப்படித்தான் அது போலி என கண்டுபிடித்தோம். 118 00:06:22,676 --> 00:06:23,885 சரிதானே? 119 00:06:27,013 --> 00:06:30,100 ஸ்க்ரஞ்ச்! 120 00:06:31,226 --> 00:06:33,687 சரி, நமக்கு என்ன தெரிந்திருக்கிறது? 121 00:06:33,687 --> 00:06:37,315 நாம் தேடும் திருடனின் பெயர், அலெக்ஸ் தாம்சன் என்று தெரிந்துவிட்டது. 122 00:06:37,399 --> 00:06:38,900 சரி, ஆனால் இது சாதாரணமான பெயர். 123 00:06:38,984 --> 00:06:40,986 நம் நகரத்திலேயே நிறைய அலெக்ஸ் தாம்சன் இருக்கிறார்கள். 124 00:06:41,778 --> 00:06:44,906 பழைய மாணவர்வள் பற்றிய செய்தித்தாள்களை உன் அம்மா ஏன் இவ்வளவு வைத்திருக்கிறார்? 125 00:06:44,990 --> 00:06:48,451 என்றாவது நாள் படிக்கப் போவதாக சொன்னார். அட, இதில் கவனம் செலுத்து. 126 00:06:48,952 --> 00:06:50,120 நான் கவனிக்கிறேன் தான். 127 00:06:50,620 --> 00:06:54,916 அதோடு குற்றம் நடந்த தேதி, அக்டோபர் 3 என்று தெரிந்துவிட்டது. 128 00:06:55,709 --> 00:06:57,294 ஆனால் ஏன் அன்று? 129 00:06:58,003 --> 00:07:00,797 துப்பறிவாளர் அதை எப்படி கண்டுபிடித்தார்? 130 00:07:02,007 --> 00:07:04,634 அவளுக்கு சுரங்கப்பாதைகள் பற்றி தெரியுமா? -எனக்குத் தெரியாது. 131 00:07:04,718 --> 00:07:07,345 ஆனால் இந்த வழக்கை நாம் கண்டுபிடிக்க வேண்டுமென்று ஆலிவர் விரும்புகிறார். 132 00:07:08,096 --> 00:07:09,556 இப்போது புரிகிறது! 133 00:07:11,600 --> 00:07:14,936 இந்த செய்தித்தாள், குற்றம் நடந்த மறுநாள் வெளியிடப்பட்டது. 134 00:07:15,020 --> 00:07:17,606 இதில், இந்த நபர், கிரேக், 135 00:07:17,606 --> 00:07:23,111 “அக்டோபர் 3ம் தேதி வயதான சான்ஸியின் ஆவி பள்ளியை விட்டு வெளிய போனதை” பார்த்ததாக சொல்கிறான். 136 00:07:24,321 --> 00:07:25,322 அதனால் என்ன? 137 00:07:25,322 --> 00:07:29,951 இவன் வயதான சான்ஸியை பார்த்ததாக சொல்கிறான். நேரடியாக பார்த்தது போல. 138 00:07:30,827 --> 00:07:33,163 அவரது “மேலங்கி” மற்றும் “பழங்காலத்து தொப்பியை” பார்த்திருக்கிறானாம். 139 00:07:33,747 --> 00:07:34,873 எனக்குப் புரியவில்லை. 140 00:07:34,873 --> 00:07:37,250 கேளுங்கள், நமக்கு நிஜ பேய்யையே தெரியும். 141 00:07:37,334 --> 00:07:39,044 அது கண்ணுக்கு தெரியாது, இல்லையா? 142 00:07:40,587 --> 00:07:44,216 எனவே, இவனால் வயதான சான்ஸியின் ஆவியை பார்த்திருக்க முடியாது. 143 00:07:44,799 --> 00:07:47,636 அவன் உண்மையிலேயே பார்த்தது... 144 00:07:47,636 --> 00:07:52,807 தப்பிப் போன அலெக்ஸ் தாம்சனைத் தான். தொப்பி போட்டு, மாறுவேடத்தில் வந்திருப்பார். 145 00:07:52,891 --> 00:07:55,268 நாம் இன்னும் கண்டுபிடிக்காத அந்த சுரங்கப்பாதை 146 00:07:55,352 --> 00:07:56,436 பழைய பள்ளிக் கட்டிடத்தில் இருக்கலாமே. 147 00:07:56,436 --> 00:07:58,230 இது தான் அர்த்தமுள்ளதாக இருக்கிறது. 148 00:07:58,230 --> 00:08:00,607 அதனால் தான் “வயதான சான்ஸி” என்று ஆலிவர் சொல்லியிருப்பார். 149 00:08:00,607 --> 00:08:02,901 அந்த வாசலை முதலில் கண்டுபிடித்து துப்புக்களை தேட வேண்டும். 150 00:08:03,777 --> 00:08:07,280 ஆனால் மறுபடியும் பள்ளிக் கட்டிடத்திற்கு போய் நாம் பிடிபடக்கூடாது. 151 00:08:07,364 --> 00:08:08,531 பிடிபட மாட்டீர்கள். 152 00:08:08,615 --> 00:08:11,284 பூமிக்கடியில் இருந்து, கவனமாக உள்ளே நுழைந்தால் பிடிபட மாட்டீர்கள். 153 00:08:11,368 --> 00:08:14,329 நாளை இந்த சுரங்கப்பாதையை திறந்து விடுவேன். கண்டிப்பாக. 154 00:08:23,046 --> 00:08:24,047 சிட்னி? 155 00:08:27,217 --> 00:08:28,385 என்ன நடக்கிறது? 156 00:08:29,302 --> 00:08:31,221 நூலகத்தில் படிக்க வேண்டும் என்பதால் 157 00:08:31,221 --> 00:08:33,347 மேஜிக் மேஜை அமைக்க உதவ முடியாது என்றாயே. 158 00:08:33,431 --> 00:08:36,017 சார்லி... -சிட், வருகிறாயா? 159 00:08:37,351 --> 00:08:39,062 ஆமாம், கிரிஃபின். இதோ வருகிறேன். 160 00:08:42,190 --> 00:08:45,026 நீ உண்மையை சொல்லாவிட்டால், நான் அம்மா அப்பாவிடம் சொல்லிவிடுவேன். 161 00:08:45,110 --> 00:08:50,198 உன்னிடம் பொய் சொன்னதற்கு மன்னித்துவிடு. அது ஒன்றும் அவ்வளவு பெரிய தப்பில்லை. 162 00:08:52,075 --> 00:08:55,579 ஹாதோர்ன் கிளப் என்னைத் தேர்ந்தெடுத்துள்ளனர். 163 00:08:57,038 --> 00:08:58,957 பயிற்சி காலத்தில் இருப்பதால், யாரிடமும் சொல்லக்கூடாது, 164 00:08:58,957 --> 00:09:01,334 இல்லையென்றால், என்னை அனுமதிக்க மாட்டார்கள். 165 00:09:02,127 --> 00:09:04,921 ஐயோ. இப்போது, நான் உன் வாய்ப்பை கெடுத்துவிட்டேனா? 166 00:09:05,005 --> 00:09:07,424 இல்லை. இல்லை. பரவாயில்லை. 167 00:09:08,341 --> 00:09:10,343 பார், சார், இது பெரிய விஷயம். 168 00:09:11,803 --> 00:09:13,471 12 பேரில் நான் ஒருத்தி. 169 00:09:15,515 --> 00:09:17,434 இரு, பள்ளியிலேயே நீ சிறந்தவள் 170 00:09:17,434 --> 00:09:19,853 மற்றும் புத்திசாலி என்று அவர்கள் நினைக்கிறார்களா? 171 00:09:26,359 --> 00:09:28,320 நிச்சயமாக, நான் பேச வேண்டாமா என்ன? 172 00:09:30,739 --> 00:09:33,116 வேண்டாம். நானே பேசுகிறேன். 173 00:09:33,116 --> 00:09:37,037 இந்த உறுதிமொழியில் அவரை கையெழுத்திட வைப்பது முக்கியம். 174 00:09:37,037 --> 00:09:39,915 அவர் கையெழுத்து போடவில்லை என்றால், மக்கள் இங்கே வாங்குவதை தவிர்க்கக் கூடும். 175 00:09:39,915 --> 00:09:41,333 அவர் கையெழுத்திட்டால் என்னவாகும்? 176 00:09:42,542 --> 00:09:45,754 நீ பார்த்ததை அவரிடம் சொல். என்ன பதில் சொல்கிறார் என்று பார்ப்போம். 177 00:09:45,754 --> 00:09:48,757 சரி. சரி. இதோ போகிறேன். 178 00:09:54,971 --> 00:09:56,473 என்ன வேண்டும்? 179 00:09:57,182 --> 00:09:59,142 ஹாய். இந்த உறுதி மொழியில் கையெழுத்து போடுவீர்களா? 180 00:09:59,226 --> 00:10:00,227 இனவெறியை எதிர்த்து போராடுவோம் 181 00:10:00,227 --> 00:10:02,062 இது உறுதியான, நீண்டகால ஒப்பந்தம், 182 00:10:02,062 --> 00:10:05,523 இதில் நீங்கள் கையெழுத்து போட்டால் என்னைப் போன்ற சிறுவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவர். 183 00:10:09,319 --> 00:10:10,737 எனக்கு விருப்பமில்லை. 184 00:10:11,446 --> 00:10:14,199 என் வியாபாரத்தை எப்படி நடத்த வேண்டும் என்று எனக்கே சொல்லாதே. 185 00:10:14,199 --> 00:10:15,742 நீ கிளம்பலாம். 186 00:10:21,706 --> 00:10:23,959 ஹே. ஹே. 187 00:10:26,336 --> 00:10:28,421 ஒன்றும் பிரச்சினை இல்லையே? -என்னை கிளம்பச் சொல்லிவிட்டார். 188 00:10:28,505 --> 00:10:30,882 அவர் வியாபாரத்தை எப்படி நடத்துவது என்று சொல்ல தேவை இல்லை என்றார். 189 00:10:33,927 --> 00:10:35,178 இது விசித்திரம் தான், ஆனால், 190 00:10:36,263 --> 00:10:38,515 எனக்கென்னமோ இதில் அவர் கையெழுத்திடுவார் என தோன்றியது. 191 00:10:39,683 --> 00:10:41,601 நடந்தது பற்றி பேச நினைத்தேன். 192 00:10:42,394 --> 00:10:45,605 அவர் நடவடிக்கைகளை மாற்ற, பேசிப் பார்க்கலாமே என்று நினைத்தேன். 193 00:10:47,148 --> 00:10:48,233 அனுபவம் குறைவு இல்லையா? 194 00:10:48,233 --> 00:10:49,442 இல்லவே இல்லை. 195 00:10:50,277 --> 00:10:52,320 உன்னை போல் பலர் இருந்தால் நன்றாக இருக்கும். 196 00:10:54,114 --> 00:10:57,242 வா. வேறு நிறைய இடங்கள் இருக்கின்றன. 197 00:10:57,826 --> 00:10:59,035 எனக்கு ஒரு இடம் தெரியும். 198 00:11:00,954 --> 00:11:05,041 “உங்களுக்கும், உங்கள் அணிக்கும் இனவெறி-எதிர்ப்பு கல்வியை கொடுக்கலாம். 199 00:11:05,125 --> 00:11:09,379 நம் சமூகத்தின் மாறுபாடுகளை எதிரொலிக்கும் ஆட்களை வேலைக்கு சேர்க்கலாம்.” 200 00:11:09,880 --> 00:11:13,383 அடடா. நான் ஈர்க்கப்பட்டுவிட்டேன். நீங்கள் மூவரும் இப்படி யோசித்தீர்களா? 201 00:11:13,383 --> 00:11:18,096 நான் ஆதரவு மட்டும் தான் கொடுக்கிறேன். நியாவையும், மால்கமையும் தான் பாராட்ட வேண்டும். 202 00:11:18,096 --> 00:11:19,723 இது சிறப்பான விஷயம். நான் கையெழுத்து போடுகிறேன். 203 00:11:20,432 --> 00:11:22,601 உண்மையாகவே, ரொம்ப நன்றி, மிஸ். ரேனா. 204 00:11:22,601 --> 00:11:25,186 உங்கள் ஜன்னலில் இந்த ஸ்டிக்கரை வைத்து எல்லோருக்கும் தெரியப்படுத்தலாமே. 205 00:11:25,812 --> 00:11:29,107 ஹே. இந்த உறுதிமொழியில் கையெழுத்திடும் எல்லா வியாபாரிகளுக்கும் 206 00:11:29,107 --> 00:11:31,192 ஒரு கொண்டாட்டம் ஏற்பாடு செய்யலாமா? 207 00:11:31,568 --> 00:11:33,153 நீங்கள் அப்படி செய்யத் தேவையில்லை, ஏமி. 208 00:11:33,153 --> 00:11:34,446 இல்லை. நான் செய்ய விரும்புகிறேன். 209 00:11:34,946 --> 00:11:36,072 நானே ஏற்பாடு செய்கிறேன். 210 00:11:37,032 --> 00:11:38,783 இந்த கடையை என் பெற்றோர்கள் வாங்கியபோது, 211 00:11:38,867 --> 00:11:42,454 இந்த சமூகத்தை ஒன்று சேர்க்கும் ஒரு இடமாக இதை நினைத்தார்கள், 212 00:11:42,454 --> 00:11:45,457 நீங்களும் அதைத்தானே செய்கிறீர்கள். 213 00:11:50,837 --> 00:11:52,214 சரி. 214 00:11:52,714 --> 00:11:55,050 பிஸ்கட்டுகள் மூன்றடி உயரத்தில் உள்ளன... 215 00:11:55,050 --> 00:11:56,635 பராசிக் உயர் தரம் 216 00:11:56,635 --> 00:11:57,719 கணக்கு 217 00:11:57,719 --> 00:12:00,597 ...பலகையின் சாய்வு கோணம் 35 டிகிரி. 218 00:12:00,597 --> 00:12:03,433 எந்த வேகத்தில் செல்ல வேண்டுமென்றால்... 219 00:12:03,934 --> 00:12:06,061 பார்க்கலாம். ஒன்றைக் கூட்டிக்கொள். 220 00:12:06,061 --> 00:12:07,771 மிக விரைவாகச் செல்ல வேண்டும். 221 00:12:07,771 --> 00:12:09,481 சரி. இதோ போகிறேன். 222 00:12:11,024 --> 00:12:13,109 என்னால் முடியும். என்னால் இதைச் செய்ய முடியும். 223 00:12:13,193 --> 00:12:17,197 ஆம், நான் ஒரு எலி, என்னால் முடியும். 224 00:12:17,781 --> 00:12:20,450 இதோ போகலாம். சரி. 225 00:12:21,785 --> 00:12:24,579 காற்றில் பறப்பது போல பாசாங்கு செய்யப் போகிறேன். 226 00:12:26,456 --> 00:12:28,208 அந்த சரிவு பாதையில் ஏறி... 227 00:12:28,208 --> 00:12:31,670 அடடா! ஹைய்யா. 228 00:12:37,926 --> 00:12:39,135 வந்துவிட்டேன். 229 00:12:40,303 --> 00:12:41,304 சமீர்? 230 00:12:43,598 --> 00:12:44,683 இட்ரிஸ்? 231 00:12:44,683 --> 00:12:45,850 ஓ-ஹோ. 232 00:12:46,268 --> 00:12:47,269 அப்பா? 233 00:12:47,978 --> 00:12:49,479 என்ன சத்தம்? -தெரியவில்லை. 234 00:12:51,231 --> 00:12:52,649 உன் பை விழுந்துவிட்டது. 235 00:12:55,527 --> 00:12:57,529 சமீர், ஏ தரம் வாங்கியுள்ளாயே. 236 00:12:58,697 --> 00:13:00,115 ஏன் எங்களிடம் சொல்லவில்லை? 237 00:13:01,324 --> 00:13:03,159 பெயர்: சமீர் யூசஃப் மார்ச் 6ஆம் தேதி 238 00:13:03,243 --> 00:13:04,744 பொறு. தேர்வு ரொம்ப நாட்களுக்கு முன்பே முடிந்துவிட்டது. 239 00:13:06,871 --> 00:13:08,999 நீ ஏற்கனவே எழுதிவிட்ட தேர்விற்கு, 240 00:13:08,999 --> 00:13:12,544 நன்கு படிக்க வேண்டும் என்றா, நாங்கள் எங்கள் வேலைகளை மாற்றியமைத்தோம்? 241 00:13:14,462 --> 00:13:16,548 இங்கேயே இரு. உன் அம்மாவை அழைத்து வருகிறேன். 242 00:13:37,277 --> 00:13:41,573 பிஸ்கட்டுகளுக்காகவா நீ இப்படி செய்தாய், ரால்ஃப்? 243 00:13:41,573 --> 00:13:42,699 என்ன நடந்ததென சொல்கிறேன். 244 00:13:42,699 --> 00:13:45,035 வேண்டாம். எல்லாம் முடிந்துவிட்டது. இனி உனக்கு பைக் கிடையாது. 245 00:13:45,035 --> 00:13:49,039 சமீர்! -இப்போதே, என் அறைக்குப் போ. 246 00:13:50,999 --> 00:13:54,336 நான் பொறுப்பில்லாத எலி என்று அம்மா சரியாகத் தான் சொல்லியிருக்கிறார். 247 00:13:54,336 --> 00:13:55,754 நான் என்னை யாரென நினைத்தேன்? 248 00:13:55,754 --> 00:13:58,757 பைக் ஓட்டி மற்றவர்களுக்குப் பிரச்சினைகளை உண்டாக்குகிறேன். 249 00:14:00,300 --> 00:14:01,927 பொய் சொல்வது தவறு என்று தெரியும். 250 00:14:01,927 --> 00:14:06,264 படிப்பு, வீட்டு வேலை போன்றவற்றை எப்படி சமாளிப்பது என தெரியவில்லை. 251 00:14:06,848 --> 00:14:11,061 நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடக் கூடாது என தெரியும், ஆனாலும் என்னால் முடியவில்லை. 252 00:14:12,771 --> 00:14:16,274 அவர்களுடன் இருந்தால் சந்தோஷமாக உணர்கிறேன். 253 00:14:17,317 --> 00:14:19,986 நான் இதுவரை இப்படி உணர்ந்ததே இல்லை. 254 00:14:23,865 --> 00:14:25,325 நீ இப்படி நினைப்பது எங்களுக்குத் தெரியாது. 255 00:14:26,117 --> 00:14:27,118 இது எனக்கு பிரச்சினையா? 256 00:14:27,202 --> 00:14:28,620 ஆம். -கரீம். 257 00:14:30,497 --> 00:14:32,666 கண்டிப்பாக, நீ எங்களிடம் பொய் சொல்லியிருக்கக் கூடாது, 258 00:14:33,541 --> 00:14:35,919 நானும், உன் அப்பாவும் கலந்து பேசுகிறோம். 259 00:14:38,296 --> 00:14:39,923 உன் அறைக்குப் போ. 260 00:14:41,591 --> 00:14:42,676 குட் நைட், கண்ணா. 261 00:14:42,676 --> 00:14:43,969 குட் நைட், அப்பா. 262 00:14:44,844 --> 00:14:47,639 நான் பொறுப்பில்லாத எலி என்று அம்மா சரியாகத் தான் சொல்லியிருக்கிறார். 263 00:14:47,639 --> 00:14:50,559 நான் என்னை யாரென நினைத்தேன்? பைக்குகளை ஓட்டிச் சென்று, 264 00:14:50,559 --> 00:14:54,980 பிஸ்கட்டுகளை... இரகசியமாக திருடும் திருடனா? 265 00:14:54,980 --> 00:14:56,982 நான் என்னை யாரென நினைத்தேன்? -ரால்ஃப். 266 00:14:57,941 --> 00:14:59,901 அவர்கள் அதைப் பார்த்தது கூட நல்லது தான். 267 00:14:59,985 --> 00:15:02,028 என்றாவது ஒருநாள் உண்மையைச் சொல்லித்தானே ஆக வேண்டும். 268 00:15:02,696 --> 00:15:04,406 அந்த பிஸ்கட்டுகள் எனக்கில்லை. 269 00:15:04,406 --> 00:15:05,991 பாரேன், எனக்கு உன் உதவி வேண்டும். 270 00:15:05,991 --> 00:15:07,200 முன்பே கேட்டிருப்பேன், 271 00:15:07,284 --> 00:15:11,454 ஆனால் புத்தகக்கடையில் இருக்கும் எலிகள் மனிதர்களை நம்பாது. 272 00:15:12,080 --> 00:15:14,457 புத்தக்கடையில் எலிகள் இருக்கின்றனவா? 273 00:15:16,626 --> 00:15:17,961 ஆமாம். 274 00:15:25,635 --> 00:15:26,970 அவள் என்ன சொன்னாள், ரால்ஃப்? 275 00:15:28,179 --> 00:15:30,724 “நன்றி” என்று சொன்னாள். அவர்களைக் காப்பாற்றிவிட்டோம். 276 00:15:31,308 --> 00:15:33,226 எலிப்பொறியும், எலி மருந்தும் தீரும் வரை 277 00:15:33,310 --> 00:15:35,020 பொந்தில் ஒளிந்திருக்க, தேவையான அளவு உணவிருக்கிறது. 278 00:15:45,238 --> 00:15:46,364 சரி, சரி. 279 00:15:46,948 --> 00:15:49,743 “எல்லா மனிதர்களும் மோசமானவர்கள் இல்லை” எனச் சொல்கிறது. 280 00:15:50,243 --> 00:15:51,244 நன்றி? 281 00:15:53,455 --> 00:15:58,376 நீ அன்பாக நடந்துகொண்டது, இவரை பாதித்துவிட்டதாம். 282 00:15:59,169 --> 00:16:02,172 உதவி தேவைப்பட்டால், தயங்காமல் அவர்களைக் கூப்பிடலாம் என்கிறது. 283 00:16:02,172 --> 00:16:03,465 அவர்கள் இங்கு தான் இருப்பார்கள். 284 00:16:09,012 --> 00:16:10,680 சரி, டார்ச்சை சரிபார்ப்போம். 285 00:16:11,348 --> 00:16:14,309 ஹே, நன்றாக இருக்கிறது தானே? இது என்ன ஓட்டையா இல்லை வேறெதாவதா? 286 00:16:16,102 --> 00:16:18,438 கூடுதல் பேட்டரிகளும் இருக்கின்றன. தேவைப்பட்டால் எடுத்துக்கொள். 287 00:16:20,357 --> 00:16:21,858 ஹே. இங்கே. 288 00:16:22,984 --> 00:16:25,737 பெயிண்ட் சப்ளையரும், இரும்பு கடைகாரரும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டிவிட்டனர். 289 00:16:26,571 --> 00:16:28,156 புத்தகக்கடை விழாவிற்கு என் பெற்றோர்கள் வருவர். 290 00:16:28,240 --> 00:16:29,574 நானும் வருவேன். 291 00:16:29,658 --> 00:16:31,326 வீட்டிற்குள் அடைத்து வைக்கவில்லை என்றால். 292 00:16:32,285 --> 00:16:35,580 இருவரின் உதவிக்கும் ரொம்ப நன்றி. 293 00:16:39,292 --> 00:16:43,129 வாருங்கள். என் வீட்டின் அடித்தளத்தில் ரால்ஃப் சும்மா குழித் தோண்டவில்லை. 294 00:16:48,009 --> 00:16:53,348 தலையில் இடித்துக் கொள்ளாதீர்கள். ஊப்! கவனம். கவனம். 295 00:16:53,348 --> 00:16:57,561 வாருங்கள், மெதுவாக நடக்காமல், என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள். 296 00:16:57,561 --> 00:17:00,272 நான் பைக்கில் போகும் ஒரு எலி, என்னைப் பின்தொடர்வது சுலபம். 297 00:17:00,272 --> 00:17:02,566 எங்கே போகிறோம் என உனக்குத் தெரியும் தானே, நியா? 298 00:17:05,735 --> 00:17:06,736 நியா! 299 00:17:07,904 --> 00:17:08,947 இந்தப் பக்கமாக. 300 00:17:14,202 --> 00:17:15,411 எனக்குப் புரியவில்லை. 301 00:17:15,495 --> 00:17:18,665 இங்கு எங்கோ தான் பழைய பள்ளிக் கட்டிடத்தின் அடித்தளம் இருந்திருக்கணும். 302 00:17:19,165 --> 00:17:20,417 ஆனால் இங்கு எதுவுமே இல்லையே. 303 00:17:20,417 --> 00:17:22,002 இது சரியில்லையே. 304 00:17:22,084 --> 00:17:25,380 வந்து... அடித்தளமே இல்லாமல் இருந்தால்? 305 00:17:25,380 --> 00:17:27,716 ஒருவேளை நாம் பள்ளிக் கட்டிடத்தின் அடித்தளத்தில் தான் இருக்கிறோமோ? 306 00:17:35,599 --> 00:17:37,183 சரியாகச் சொன்னாய், சார்லி. 307 00:17:37,267 --> 00:17:38,894 இன்னும் ஏன் தாமதிக்கிறாய்? அதை இழு. 308 00:17:43,940 --> 00:17:45,525 பள்ளிக் கட்டிடத்தை கண்டுபிடித்துவிட்டோம். 309 00:17:46,818 --> 00:17:50,614 பார்த்து, பார்த்து. மெதுவாகப் போ, சமீர். 310 00:17:50,614 --> 00:17:52,407 நல்ல வேலை செய்தாய். நான் முதலில் போகிறேன். 311 00:17:52,407 --> 00:17:54,075 யாராவது பைக்கை எடுங்கள். 312 00:18:01,458 --> 00:18:03,627 மெதுவாக வராமல், என்னைப் போல வேகமாக வாருங்கள். 313 00:18:12,510 --> 00:18:17,182 அடடா. பகலில் கூட பயமாக இருக்கிறது. 314 00:18:17,182 --> 00:18:18,350 எனக்குத் தெரியும், சரியா? 315 00:18:20,185 --> 00:18:23,563 அந்த ஹாட்சைப் பாருங்கள். அது நன்றாக பொருந்தியிருக்கிறது. 316 00:18:25,482 --> 00:18:30,320 ஆக, இந்த வழியாகத் தான் அலெக்ஸ் தாம்சன் ஈபியுடன் வெளியே சென்றிருக்க வேண்டும். 317 00:18:33,782 --> 00:18:34,950 நிஜமாகத் தான் சொல்கிறாயா? 318 00:18:36,618 --> 00:18:37,911 உண்மையாகவா? அப்புறம் என்ன நடந்தது? 319 00:18:40,330 --> 00:18:41,498 இவள் என்ன சொல்கிறாள், ரால்ஃப்? 320 00:18:41,498 --> 00:18:42,874 இவள் இங்கு தான் வசிக்கிறாள், 321 00:18:42,958 --> 00:18:45,335 இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு இரவில் 322 00:18:45,335 --> 00:18:48,171 யாரோ இந்தத் ஹாட்சிலிருந்து வெளியே வந்ததைப் பார்த்திருக்கிறாள். 323 00:18:49,548 --> 00:18:52,092 அது ரொம்ப பயமாக இருந்ததால், அவளுக்கு இன்னும் ஞாபகமிருக்கிறதாம். 324 00:18:55,929 --> 00:18:57,097 நீ பார்த்தது இவரையா? 325 00:18:57,097 --> 00:18:58,431 அலெக்ஸ் தாம்சன் 10/3 326 00:18:58,515 --> 00:19:01,393 இல்லை, நிச்சயமாக அது ஒரு பெண்தானாம். 327 00:19:02,185 --> 00:19:03,186 பெண்ணா? 328 00:19:03,770 --> 00:19:05,355 இந்தச் சுரங்கப்பாதையைப் பற்றி யாருக்கும் தெரியாதே. 329 00:19:05,355 --> 00:19:07,941 அவள் அலெக்ஸ் தாம்சனின் கூட்டாளியாக இருக்க வேண்டும். 330 00:19:07,941 --> 00:19:11,027 சரி, ஆனால் இவர்கள் எல்லாம் யார் என்று நாம் எப்படி கண்டுபிடிப்பது? 331 00:19:11,111 --> 00:19:16,157 பொறு. பள்ளி கட்டிடத்திலும், புத்தகக்கடையிலும் எலிகள் இருக்கிறதென்றால், 332 00:19:16,992 --> 00:19:19,286 எல்லா இடங்களிலுமே அவை இருக்கும் தானே? 333 00:19:19,911 --> 00:19:21,079 ஆமாம், இருக்கும். 334 00:19:21,663 --> 00:19:22,831 உண்மையாகவா? 335 00:19:23,957 --> 00:19:25,125 ஒரு யோசனை தோன்றுகிறது. 336 00:19:26,126 --> 00:19:30,547 இவரைப் பார்த்திருக்கிறீர்களா? 337 00:19:33,633 --> 00:19:35,427 தயாரா? -தயார். 338 00:19:36,636 --> 00:19:39,472 தகவலைப் பரப்ப உதவுவதற்கு, நன்றி, எலிகளே. 339 00:19:39,973 --> 00:19:43,310 சரி அணியினரே, இந்த நகரம் முழுக்க விளம்பரங்களை ஒட்டலாம். 340 00:19:57,240 --> 00:19:59,075 இதோ. சிறப்பு விநியோகம். 341 00:20:18,094 --> 00:20:20,722 நான் ரொம்ப காலமாக உயிரோடு தான் இருக்கிறேன், 342 00:20:20,722 --> 00:20:23,850 ஆனால் உண்மையாக வாழ்ந்தேனா எனத் தெரியவில்லை. 343 00:20:23,934 --> 00:20:27,103 ஓ, அப்படியா? சரி, இது எப்படி இருக்கு. 344 00:20:32,651 --> 00:20:33,818 கிராமப் புத்தகங்கள் 345 00:20:33,902 --> 00:20:35,528 எல்லோருக்கும், வணக்கம். 346 00:20:35,612 --> 00:20:38,156 வந்ததற்கு நன்றி. எல்லோரும் அருகில் வாருங்கள். 347 00:20:38,240 --> 00:20:39,241 இனவெறிக்கு எதிரான வணிக உறுதிமொழி 348 00:20:39,241 --> 00:20:42,702 நியா பார்னஸை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். 349 00:20:48,750 --> 00:20:51,670 ஹாய். இங்கு வந்திருக்கும் எல்லாருக்கும், குறிப்பாக இந்நிகழ்ச்சியை நடத்தும் 350 00:20:51,670 --> 00:20:54,339 “கிராமப் புத்தகங்கள்” கடையின் உரிமையாளர் ரேனா அவர்களுக்கும் நன்றி. 351 00:20:55,006 --> 00:20:56,883 இந்நிகழ்ச்சி நடப்பதற்குக் காரணமான மால்கம் டர்னருக்கும் நன்றி. 352 00:21:00,971 --> 00:21:03,223 நான் என் வாழ்வில்... 353 00:21:04,558 --> 00:21:06,643 இனவெறியை அதிகமாக எதிர்கொண்டதில்லை. 354 00:21:07,143 --> 00:21:08,144 நேரடியாக எதிர்கொண்டதில்லை. 355 00:21:09,479 --> 00:21:11,648 என்னைப் பாதுகாப்பான சூழலில் வளர்க்க 356 00:21:11,648 --> 00:21:13,900 என் பெற்றோர் கஷ்டப்பட்டனர். 357 00:21:14,985 --> 00:21:16,111 அவர்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். 358 00:21:18,738 --> 00:21:23,451 ஆனால்... வளர்ந்து, விவரம் புரியும்போது, 359 00:21:24,244 --> 00:21:26,746 இவ்வுலகில் இனவெறியைக் கடந்து செல்வது கடினம் எனத் தெரிந்துக்கொண்டேன். 360 00:21:27,998 --> 00:21:30,083 எனக்கு 13 வயது தான் ஆகிறது, எனவே... 361 00:21:32,627 --> 00:21:34,713 இனவெறியை எதிர்ப்பதற்கு, 362 00:21:34,713 --> 00:21:36,715 வெறுமனே நம் சமூகத்திலும், பணி இடங்களிலும், 363 00:21:36,715 --> 00:21:38,592 இனவெறி இருக்கிறது என ஒப்புக்கொண்டால் மட்டும் போதாது. 364 00:21:39,467 --> 00:21:41,177 அதை எதிர்த்துப் போராட வேண்டும். 365 00:21:42,846 --> 00:21:46,182 இந்த உறுதிமொழியில் கையெழுத்திடுவதின் மூலம், உங்கள் வணிகம், 366 00:21:46,266 --> 00:21:49,311 சமத்துவத்தையும், பன்முகத்தன்மையையும் மட்டும் ஏற்படுத்தாது. 367 00:21:50,395 --> 00:21:53,315 என்னைப் போன்ற சிறுவர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும். 368 00:21:55,734 --> 00:21:57,903 நான் இந்தக் கடைக்கு வந்தால் 369 00:21:57,903 --> 00:21:59,446 இனரீதியாக பாகுபாடு காட்ட மாட்டோம் என்கிறீர்கள். 370 00:22:00,989 --> 00:22:02,741 என் நிறத்தை வைத்து என்னைப் போலீஸிடம் 371 00:22:02,741 --> 00:22:04,701 பிடித்துக்கொடுக்க மாட்டோம் என்கிறீர்கள். 372 00:22:05,493 --> 00:22:11,291 நாங்கள் சிறுவர்கள், இன்னும்... முதலாளிகள் ஆகவில்லை. 373 00:22:12,292 --> 00:22:14,044 ஆனால் நாங்களும் இந்தச் சமூகத்தை சேர்ந்தவர்கள் தான். 374 00:22:15,795 --> 00:22:17,923 நாங்கள் இப்படிப்பட்ட சமூகத்தைத் தான் பார்க்க விரும்புகிறோம். 375 00:22:18,506 --> 00:22:19,507 நன்றி. 376 00:22:23,637 --> 00:22:24,971 அற்புதம், நியா! 377 00:22:31,353 --> 00:22:35,023 நன்றாகப் பேசினாய், நியா! அற்புதம்! 378 00:22:40,362 --> 00:22:42,697 இனவெறியை எதிர்த்து நிற்போம் 379 00:22:42,781 --> 00:22:46,201 உன்னை நினைத்துப் பெருமைப்படுகிறேன். இதை நீயே தான் எழுதினாயா? 380 00:22:46,201 --> 00:22:47,786 வந்து, அப்பா உதவினார். 381 00:22:47,786 --> 00:22:49,955 அவள் தான் எழுதினாள், நான் சரிபார்த்தேன். 382 00:22:50,372 --> 00:22:52,290 கவனி, நான் பல்கலைக்கழகத்திற்குச் சீக்கிரம் போக வேண்டும், 383 00:22:52,374 --> 00:22:54,084 உன்னை மீண்டும் ஒருமுறை அணைத்துக்கொள்ளவா? 384 00:22:54,960 --> 00:22:56,545 உன்னை நேசிக்கிறேன், அன்பே. 385 00:22:56,545 --> 00:22:59,631 நானும் தான், அம்மா. என்னை மால்கமிடம் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. 386 00:22:59,631 --> 00:23:01,841 எனக்கும் சந்தோஷம், அன்பே! நான் போக வேண்டும்! 387 00:23:02,801 --> 00:23:06,388 உறுதிமொழியில் கையெழுத்திட்டதற்கு நன்றி, அப்பா. -விளையாடுகிறாயா? அதற்காகப் பெருமைப்படுகிறேன். 388 00:23:06,388 --> 00:23:08,431 நீயும், உன் நண்பர்களும், என்னை ஈர்த்துவிட்டீர்கள், சார்லி. 389 00:23:08,515 --> 00:23:10,517 உன் வயதில், நானும் இது போன்ற வேலைகளில் ஈடுபட்டிருக்கலாம். 390 00:23:10,517 --> 00:23:11,851 சார்லி. -ஹே, எங்கே போயிருந்தாய்? 391 00:23:11,935 --> 00:23:15,146 நியாவின் பேச்சைக் கேட்க தவறிவிட்டாய். -இல்லை நான் கேட்டேன், அற்புதமாகப் பேசினாள். 392 00:23:15,230 --> 00:23:18,191 அடக் கடவுளே. -ஹே, சார்லியுடன் கொஞ்சம் தனியாக பேசட்டுமா? 393 00:23:18,275 --> 00:23:19,276 நிச்சயமாக. 394 00:23:21,194 --> 00:23:22,529 நீ மேஜிக் மேஜையை முடித்துவிட்டாயா! 395 00:23:22,529 --> 00:23:25,448 கச்சிதமாக இருக்கிறது. -இதை சரிபார். 396 00:23:26,157 --> 00:23:27,867 இப்போது தெரிகிறது... 397 00:23:33,915 --> 00:23:35,875 இப்போது தெரியவில்லை! -ஓ, ஆமாம்! 398 00:23:37,294 --> 00:23:38,670 நானும், உன் அப்பாவும் பேசினோம், 399 00:23:38,670 --> 00:23:42,257 நீ உன் நண்பர்களுடன் அதிக நேரம் செலவழிக்க சம்மதிக்கிறோம். 400 00:23:42,883 --> 00:23:46,136 எங்கள் பிள்ளைகள் பாதுகாப்பாகவும், நலமாகவும் வாழத் தான் நாம் இங்கு வந்தோம். 401 00:23:46,720 --> 00:23:48,597 அதாவது இந்தச் சமூகத்தில் இணைந்து வாழ்வதற்கு. 402 00:23:48,597 --> 00:23:50,599 நீ உன் சமூகத்தைக் கண்டுபிடித்துவிட்டாய். 403 00:23:51,099 --> 00:23:52,893 இனி ஒருபோதும் நான் பொய் சொல்ல மாட்டேன். 404 00:23:52,893 --> 00:23:54,269 நன்றாகப் படிப்பாயா? 405 00:23:54,269 --> 00:23:57,439 ஆம். நிச்சயமாக. நன்றி. 406 00:24:04,446 --> 00:24:06,239 ஹே. ஹே! 407 00:24:07,532 --> 00:24:09,451 ஹாய்! நான் என்ன செய்ய வேண்டும்? 408 00:24:09,826 --> 00:24:11,703 இது “கிராமப் புத்தகங்கள்” கடை தானே? 409 00:24:11,703 --> 00:24:14,247 இது உன்னுடைய அறிவிப்பா? நான் இவரை இப்போது தான் பார்த்தேன். 410 00:24:14,331 --> 00:24:16,166 பாரிஸ் கேன்டீனில் ஒரு பெண்ணுடன் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். 411 00:24:16,166 --> 00:24:18,460 இப்போது தான் சாப்பிட ஆரம்பித்தார்கள், சீக்கிரம் போனால் தேவலை. 412 00:24:18,960 --> 00:24:20,128 அடடா. நன்றி. 413 00:24:25,258 --> 00:24:27,344 கண்டுபிடித்துவிட்டார்கள்! அவரைக் கண்டுபிடித்துவிட்டார்கள்! 414 00:24:27,344 --> 00:24:29,221 என்ன? -அலெக்ஸ் தாம்சன். 415 00:24:29,221 --> 00:24:32,140 அவர் பாரிஸ் கேன்டீனில், ஒரு பெண்ணுடன் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறானாம். 416 00:24:32,224 --> 00:24:35,518 அவரை எலிகள் பார்த்திருக்கின்றன. வாருங்கள். அவர்கள் செல்வதற்குள் நாம் போயாக வேண்டும். 417 00:24:35,602 --> 00:24:38,355 சரி தான். இந்தப் பெண் தான் உடந்தையாக இருப்பாள். 418 00:24:38,355 --> 00:24:39,522 போகலாம்! 419 00:24:40,023 --> 00:24:41,608 நன்றி, மிஸ். ரேனா! 420 00:24:41,608 --> 00:24:42,692 பை! 421 00:24:47,572 --> 00:24:48,990 ஹே, நன்றி, ரால்ஃப். 422 00:24:50,200 --> 00:24:52,577 எதற்கு? -இந்த மர்மத்தைக் கண்டுபிடிக்க உதவியதற்கு. 423 00:24:52,661 --> 00:24:55,664 நீ இல்லாமல் இதைச் செய்திருக்க முடியாது. -நாங்கள் உனக்கு ரொம்பவே கடமைப்பட்டிருக்கிறோம். 424 00:24:56,998 --> 00:25:01,294 இந்த சகாசம் நல்ல அனுபவமாக இருந்தது. ரொம்ப சந்தோஷமாக இருந்தேன். 425 00:25:01,378 --> 00:25:03,463 பிரச்சினையிலும் மாட்டிக்கொண்டேன். 426 00:25:05,298 --> 00:25:07,425 அம்மா ஏன் கவலைப்படுகிறார் என இப்போது தான் புரிகிறது. 427 00:25:07,509 --> 00:25:08,802 இப்போதும் கவலைப்பட்டுக் கொண்டிருப்பார். 428 00:25:09,970 --> 00:25:12,847 நான் அம்மாவைப் போய் பார்க்க வேண்டும். 429 00:25:13,557 --> 00:25:16,851 மௌண்டன் வியு ஹோட்டல் எவ்வளவு தூரம்? -ரொம்ப தூரம். 430 00:25:16,935 --> 00:25:19,646 ஆம், அடுத்த நாட்டிற்கே செல்வது போல. 431 00:25:19,646 --> 00:25:22,524 வந்து, நான் ஓட்டினால், சீக்கிரம் போய்விடலாம்! 432 00:25:24,859 --> 00:25:27,195 அடுத்த முறை பார்க்கலாம். 433 00:25:36,121 --> 00:25:38,081 த மௌஸ் அண்ட் த மோட்டார் சைக்கிள் பெவர்லி க்ளியரி 434 00:25:38,081 --> 00:25:39,416 மீண்டும் புத்தகத்திற்குள் சென்றுவிட்டான். 435 00:25:44,963 --> 00:25:46,673 அவனைப் பிரிந்து ரொம்ப கஷ்டப்படப் போகிறேன். 436 00:25:46,673 --> 00:25:47,757 போகலாம். 437 00:25:54,347 --> 00:25:56,266 அதோ அங்கே! உள் முற்றத்தில், அந்த ஊதா பூக்களுக்குப் பின்னால்! 438 00:25:56,266 --> 00:25:57,350 பாரிஸ் கேன்டீன் 439 00:25:57,434 --> 00:26:00,103 அவர் தான் அலெக்ஸ் தாம்சன். -சரி, ஆனால் யாருடன் பேசுகிறார்? 440 00:26:00,103 --> 00:26:01,855 அட. தலையை நகர்த்துங்கள். 441 00:26:03,732 --> 00:26:04,941 உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. -நிச்சயமாக. 442 00:26:05,025 --> 00:26:06,359 தொடர்பில் இருக்கலாம். -கவனமாக இருங்கள். 443 00:26:07,819 --> 00:26:09,029 என்னால் நம்ப முடியவில்லை. 444 00:26:11,114 --> 00:26:12,240 இப்படி இருக்காது. 445 00:26:14,326 --> 00:26:15,327 அம்மாவா? 446 00:26:16,077 --> 00:26:17,996 பெவர்லி க்ளியரி அவர்களுக்கு சமர்ப்பணம் 447 00:27:05,043 --> 00:27:07,045 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்