1 00:00:06,132 --> 00:00:09,970 சிசேமே வொர்க் ஷாப் வழங்கும் 2 00:00:15,600 --> 00:00:18,311 அவர்கள் எங்கே போனார்கள்? என் அம்மா கிளம்புகிறார். 3 00:00:18,395 --> 00:00:19,729 அதோ, அந்த சிவப்பு காரில். 4 00:00:19,813 --> 00:00:21,731 நம்ப முடியவில்லை. தாமதமாக வந்துவிட்டோம். 5 00:00:21,815 --> 00:00:23,775 அது இருக்கட்டும், தாம்சன் எங்கே? 6 00:00:23,775 --> 00:00:25,068 நான் உள்ளே போய் பார்க்கிறேன். 7 00:00:26,444 --> 00:00:29,072 அவர் மறைந்து போனது போல இருக்கிறது. 8 00:00:29,906 --> 00:00:31,032 அவர் உள்ளேயும் இல்லை. 9 00:00:33,118 --> 00:00:34,119 பாரிஸ் கேன்டீன் 10 00:00:34,119 --> 00:00:36,079 அவரை நழுவ விட்டுவிட்டோமே. இங்கு தானே இருந்தார். 11 00:00:37,455 --> 00:00:39,374 கவலைப்படாதே. பிடித்து விடலாம், நியா. 12 00:00:40,584 --> 00:00:42,252 ஒரு சங்கடமான கேள்வி கேட்கணும். 13 00:00:43,587 --> 00:00:45,630 அவர் ஏன் உன் அம்மாவை சந்தித்தார்? 14 00:00:46,381 --> 00:00:47,716 எனக்குத் தெரியாது. 15 00:00:49,509 --> 00:00:50,844 நாம் போகலாம். 16 00:01:11,448 --> 00:01:13,241 பேய் எழுத்தாளர் 17 00:01:14,951 --> 00:01:16,995 நீ ரொம்பவே நடக்கிறாய். 18 00:01:16,995 --> 00:01:18,371 நான் யோசிக்கிறேன். 19 00:01:19,456 --> 00:01:23,168 நியா, ஒரு வேளை இப்படி இருக்கலாமா... 20 00:01:24,961 --> 00:01:26,379 பரவாயில்லை. 21 00:01:26,463 --> 00:01:27,547 நானே சொல்கிறேன். 22 00:01:30,759 --> 00:01:32,969 இதில் உன் அம்மாவும் சம்பந்தப்பட்டிருப்பாரா? 23 00:01:33,053 --> 00:01:34,763 இல்லை, அப்படி இருக்காது. 24 00:01:35,472 --> 00:01:38,016 என் அம்மா எலோக்வென்ட் பெசன்டை எகிப்திடம் திரும்ப கொடுக்க நினைத்தார். 25 00:01:38,016 --> 00:01:39,559 அதைத் திருட அவர் ஏன் உதவப் போகிறார்? 26 00:01:39,643 --> 00:01:41,728 சரி. இதற்கு அர்த்தமில்லை. 27 00:01:42,270 --> 00:01:44,314 ஆனால் அவர் ஏன் அலெக்ஸ் தாம்சனை அப்போது சந்தித்தார்? 28 00:01:44,314 --> 00:01:46,274 அந்த அலெக்ஸ் தாம்சன் யார்? 29 00:01:46,358 --> 00:01:48,485 அவரைப் பற்றி எந்த தகவலும் கண்டுபிடிக்க முடியவில்லை. 30 00:01:53,573 --> 00:01:55,367 நமக்குத் தெரிந்தத தகவலை எழுதுவோம். 31 00:01:56,034 --> 00:01:58,411 அரௌண்ட் கேம்பஸ் 32 00:01:58,995 --> 00:02:02,207 ஏன்? 33 00:02:06,169 --> 00:02:08,462 சரி தான். கிடைத்ததா? -ஆமாம். 34 00:02:12,425 --> 00:02:13,969 சரி. தொடங்கலாம். 35 00:02:16,012 --> 00:02:18,181 தாம்சன் தான் ஈபியை எடுத்து விட்டு, போலியை வைத்தார் என தெரிந்துவிட்டது. 36 00:02:18,265 --> 00:02:19,432 அலெக்ஸ் தாம்சன் 10/3 37 00:02:19,516 --> 00:02:23,103 ஆனால் நூலகத்திலிருந்து சுரங்கப்பாதை வழியாக அவர் அதை எடுத்துச் செல்லவில்லை. 38 00:02:23,103 --> 00:02:25,272 அதை செய்தது அவரது கூட்டாளி. ஒரு பெண். 39 00:02:26,273 --> 00:02:29,359 பள்ளி கட்டிடத்தில் இருக்கும் சுரங்கப்பாதை வழியாக ஈபியோடு அவள் தப்பித்திருக்கிறாள். 40 00:02:30,026 --> 00:02:32,821 ஆனால் ஒருத்தன் அவளை வயதான சான்ஸியின் ஆவி என்று நினைத்தான். 41 00:02:32,821 --> 00:02:33,738 பேயைப் பார்ப்பதா? 42 00:02:33,822 --> 00:02:35,865 பெண்ணா? 43 00:02:35,949 --> 00:02:37,242 அக்டோபர் 3 அன்று வெளியே எடுக்கப்பட்டது 44 00:02:37,242 --> 00:02:39,744 பள்ளி கட்டிடத்திற்குள் உள்ள சுரங்கப் பாதைகள் நண்பர்கள் 45 00:02:39,828 --> 00:02:43,540 அருமை. ஆனால், நாம் இன்னும் நிறைய கண்டுபிடிக்க வேண்டும். 46 00:02:45,041 --> 00:02:46,960 ஆலிவரின் ஹைரோகிலிப்களை பார்க்கலாம். 47 00:02:46,960 --> 00:02:49,713 நல்ல யோசனை. நாம் எதையாவது மறந்து இருக்கலாம். 48 00:02:53,341 --> 00:02:54,342 உண்மையில்... 49 00:02:56,720 --> 00:02:58,763 நமக்கு ஆலிவரை விட நிறைய தெரியும். 50 00:02:58,847 --> 00:02:59,973 ஆலிவர் ராமோஸின் வாழ்க்கை 51 00:02:59,973 --> 00:03:02,475 சரி, இப்போது என்ன செய்வது? 52 00:03:04,060 --> 00:03:05,186 வீட்டிற்கு வந்துவிட்டேன்! 53 00:03:08,899 --> 00:03:09,941 ஹே, அம்மா. -ஹே. 54 00:03:10,025 --> 00:03:11,192 வேலை அதிகமா? 55 00:03:11,735 --> 00:03:14,613 ரொம்பவே. ஓய்வு எடுக்க விரும்புகிறேன். 56 00:03:15,322 --> 00:03:16,948 பொழுது போக்கினீர்களா? 57 00:03:17,616 --> 00:03:20,160 அதே சுவாரஸ்யமற்ற பல்கலைக்கழக வேலை தான், செல்லமே. 58 00:03:20,744 --> 00:03:22,621 எதிர்பாராமல், ஏதாவது சிறப்பான சந்திப்பு நிகழ்ந்ததா? 59 00:03:22,621 --> 00:03:28,668 கொடை அளிப்பவர் ஒருவரை சந்தித்தேன். அது சிறப்பு என்று தோன்றவில்லை. 60 00:03:28,752 --> 00:03:31,922 கொடை கொடுப்பவரா? அவருடைய பெயர் என்ன, அல்லது... 61 00:03:31,922 --> 00:03:33,298 எதற்காக இப்படிக் கேட்கிறாய்? 62 00:03:34,257 --> 00:03:36,259 உங்கள் வேலை பற்றி தெரிந்துகொள்ள விரும்புகிறேன், அம்மா. 63 00:03:36,843 --> 00:03:40,639 சரி. அவரது பெயர் அலெக்ஸ் தாம்சன். போதுமா? 64 00:03:40,639 --> 00:03:44,559 அவரிடம் ஏதாவது தனித்துவமான விஷயம் உண்டா? மச்சங்கள், திக்குதல் போன்றவை? 65 00:03:45,268 --> 00:03:46,269 அவன் ஆஸ்திரேலியன். 66 00:03:46,353 --> 00:03:48,980 ஆஸ்திரேலியனா? சுவாரஸ்யம் தான். 67 00:03:50,023 --> 00:03:51,358 எதைப் பற்றி பேசினீர்கள்? 68 00:03:51,358 --> 00:03:54,444 செல்லமே, என் வேலை பற்றி நீ ஆர்வமாக இருப்பது சிறப்பு தான், 69 00:03:54,444 --> 00:03:56,154 ஆனால் உன் நண்பர்கள் காத்திருக்கிறார்களே? 70 00:04:02,494 --> 00:04:03,620 சரி. 71 00:04:03,620 --> 00:04:05,121 ஆஸ்திரேலியன் 72 00:04:06,206 --> 00:04:07,249 ஆஸ்திரேலியன். 73 00:04:07,249 --> 00:04:09,960 இது எல்லாவற்றையும்... ஒரு கண்டத்திற்குள் சுருக்குகிறது. 74 00:04:10,794 --> 00:04:13,547 போதும் நிறுத்தலாமா? எனக்கு ஓய்வு தேவை. -சரி. 75 00:04:14,297 --> 00:04:17,050 நான் புத்தகக் கடையில் சிட்டை சந்திக்கணும். அவள் என்னை வீட்டிற்கு அழைத்துச் செல்வாள். 76 00:04:17,634 --> 00:04:20,720 சேர்ந்து நடந்து போவோமா? நீ போய் இட்ரிஸை கவனிக்க வேண்டும், இல்லையா? 77 00:04:21,471 --> 00:04:22,806 உண்மையில், நான் கவனிக்கத் தேவை இல்லை. 78 00:04:22,806 --> 00:04:25,934 சமூகக் கூடத்தில் இருந்து என் நண்பன் ஒருவன் அவனைப் பார்த்துக் கொள்ள உதவுகிறான், 79 00:04:25,934 --> 00:04:27,435 எனவே எனக்கு அதிக நேரம் இருக்கிறது. 80 00:04:27,519 --> 00:04:29,688 நல்லது. என்ன செய்யப் போகிறாய்? 81 00:04:30,313 --> 00:04:33,066 நீ புது பொழுதுபோக்கு தேடுகிறாய் என்றால், நான் மேஜிக்கை பரிந்துரைப்பேன். 82 00:04:33,817 --> 00:04:35,235 அல்லது வீடியோ கேம்மாக இருக்கலாம் 83 00:04:35,986 --> 00:04:36,987 சிறப்பு. 84 00:04:36,987 --> 00:04:39,322 இருவரும், ஜாலியாக இருங்கள். ஆலிவர் வந்தால் குறுஞ்செய்தி அனுப்பு. 85 00:04:41,283 --> 00:04:42,367 பிறகு சந்திக்கலாம். 86 00:04:43,410 --> 00:04:45,370 அது என்ன? ஜாலியாக இருக்கும் போலயே. 87 00:04:46,371 --> 00:04:48,331 நீ இதுவரை “செக்டார் 371” விளையாடியது இல்லையா? 88 00:04:48,873 --> 00:04:50,083 நீ எங்கு வாழ்ந்தாய்? 89 00:04:51,418 --> 00:04:54,921 வந்து, சிரியா, மற்றும் துருக்கி. 90 00:04:56,423 --> 00:04:57,424 மன்னித்துவிடு. 91 00:04:58,008 --> 00:05:02,387 எங்களிடம் இவை இல்லாமல் இல்லை. எனக்கு... அதில் ஆர்வமில்லை. 92 00:05:04,848 --> 00:05:06,349 வேண்டும் என்றால், நான் சொல்லி தருகிறேன். 93 00:05:07,601 --> 00:05:09,978 நல்லது. சிறப்பான விஷயம். 94 00:05:19,154 --> 00:05:21,740 வினைல் 95 00:05:21,740 --> 00:05:23,575 அவள் ஒரு ரெயின்போ 96 00:05:23,575 --> 00:05:25,285 சத்தியமாக, நான் உதவுகிறேன். -அப்படியா? 97 00:05:25,285 --> 00:05:26,369 சத்தியமா? -ஆமாம். 98 00:05:26,453 --> 00:05:27,871 நன்றி. -ஹாய், சிட். போகலாமா? 99 00:05:27,871 --> 00:05:28,955 ஹே. 100 00:05:29,706 --> 00:05:33,001 ஓ, என் தோழி ஞாபகம் இருக்கிறதா... -ஆட்ரி தானே? 101 00:05:33,001 --> 00:05:34,544 ஏம்பர் வில்லியம்ஸ். 102 00:05:34,628 --> 00:05:36,338 உன்னை சந்திப்பதில் மகிழ்ச்சி. 103 00:05:36,338 --> 00:05:38,924 இன்னும் நிறைய வேலை இருக்கிறது. கொஞ்சம் காத்திருக்கிறாயா? 104 00:05:39,841 --> 00:05:41,301 மன்னித்துவிடு. பிறகு உன்னோடு வருகிறேன். 105 00:05:41,301 --> 00:05:43,345 நாளை பள்ளி முடிந்தவுடன் உன்னை அழைத்துக் கொள்கிறேன், 106 00:05:43,345 --> 00:05:46,431 உனக்கு பிடித்த மேஜிக் கடைக்கு சென்று, பிறகு பிரோ-யோ சாப்பிடலாமா? 107 00:05:47,265 --> 00:05:49,517 என் தங்கை ஒரு தொழில்முறை மந்திரவாதி. 108 00:05:49,601 --> 00:05:50,435 அப்படியா. 109 00:05:51,978 --> 00:05:52,979 பயிற்சி எடுக்கிறேன். 110 00:05:53,063 --> 00:05:54,814 சரி, நீ சொன்னபடியே செய்யலாம். 111 00:05:54,898 --> 00:05:55,982 நன்றி. 112 00:06:10,622 --> 00:06:11,998 டேங்க் அண்ட் த பாங்காஸ் 113 00:06:30,559 --> 00:06:33,895 அவள் எங்கும் வண்ணமயமாக இருக்கிறாள் 114 00:06:33,979 --> 00:06:36,064 தன் தலைமுடியை சீவுகிறாள் 115 00:06:36,064 --> 00:06:39,859 அவள் வானவில் போன்றவள் 116 00:06:39,943 --> 00:06:42,320 காற்றில் வண்ணங்களோடு வருகிறாள் 117 00:06:42,904 --> 00:06:44,906 ஓ, எல்லா இடத்திலும் 118 00:06:44,990 --> 00:06:50,328 அவள் வண்ணமயமாக வருகிறாள் 119 00:07:01,756 --> 00:07:04,634 அவள் எங்கும் வண்ணமயமாக இருக்கிறாள் 120 00:07:12,642 --> 00:07:15,937 மிகவும் விசித்திரம். பாடல் வரிகள் அப்படியே மறைந்தது போல் இருக்கிறது. 121 00:07:16,021 --> 00:07:17,689 எனக்கு பிடித்த பாடல், “ஷி இஸ் எ ரெயின்போ.” 122 00:07:18,940 --> 00:07:20,567 ஷி இஸ் எ ரெயின்போ? 123 00:07:24,404 --> 00:07:25,739 அந்தப் பாடல் எதைப் பற்றியது? 124 00:07:26,656 --> 00:07:28,992 ரோலிங் ஸ்டோன்ஸ் என்ன நினைத்தார்கள் என்று எனக்குத் தெரியாது. 125 00:07:29,868 --> 00:07:33,038 அவர்கள் தான் எழுதினார்கள். இது “டேங்க் அண்ட் த பாங்காஸ்” குழுவின் பதிப்பு. 126 00:07:33,038 --> 00:07:37,208 ஆனால் நான், எப்போதுமே கோடை காலத்தின் முதல் நாளை நினைத்துப் பார்ப்பேன். 127 00:07:37,292 --> 00:07:39,544 கடைசி பரீட்சைக்குப் பிறகு பூங்காவிற்கு சென்றேன், 128 00:07:39,628 --> 00:07:42,172 அங்கே ஒரு தெரு கலைஞர் இந்தப் பாடலை பாடிக் கொண்டிருந்தார். 129 00:07:42,172 --> 00:07:46,092 எல்லோரும் பார்த்து கைதட்டினார்கள். 130 00:07:46,176 --> 00:07:49,596 இசை நம்மை வேறு ஒரு காலத்திற்கு கொண்டு செல்வது ஆச்சரியம் தானே? 131 00:07:49,596 --> 00:07:51,223 ஆமாம், ஆச்சரியம் தான். 132 00:07:52,015 --> 00:07:53,475 அந்த வார்த்தைகள் என்ன? 133 00:07:58,521 --> 00:08:01,233 “அவள் எங்கும் வண்ணமயமாக இருக்கிறாள். 134 00:08:01,233 --> 00:08:02,776 தன் தலைமுடியை சீவுகிறாள். 135 00:08:03,526 --> 00:08:05,237 அவள் வானவில் போன்றவள்.” 136 00:08:10,033 --> 00:08:11,243 இந்தாருங்கள். 137 00:08:14,663 --> 00:08:17,249 ஹாய். என் பெயர் ரெயின்போ. உன் பெயர் என்ன? 138 00:08:17,832 --> 00:08:18,875 சார்லி. 139 00:08:18,959 --> 00:08:20,252 உன்னை சந்திப்பதில் மகிழ்ச்சி. 140 00:08:20,961 --> 00:08:22,504 இது என்ன இடம்? 141 00:08:22,504 --> 00:08:25,382 இதுவரை நான் இங்கே வந்ததே இல்லை, ஆனால் ரொம்ப பிடிச்சிருக்கு. 142 00:08:25,382 --> 00:08:27,092 வண்ணமயமாக இருக்கிறது. 143 00:08:27,092 --> 00:08:28,385 ஓ, உனக்கு எந்த நிறம் பிடிக்கும்? 144 00:08:29,511 --> 00:08:30,679 ஆரஞ்சு? 145 00:08:30,679 --> 00:08:32,472 எனக்கும் ஆரஞ்சு பிடிக்கும். 146 00:08:32,556 --> 00:08:33,390 இதோ. 147 00:08:36,268 --> 00:08:37,310 நன்றி. 148 00:08:38,144 --> 00:08:41,565 உனக்கு விருப்பமான வண்ணத்தில், உன்னால் மாற முடியுமா? 149 00:08:41,565 --> 00:08:43,942 உண்மையில், அதை விட அதிகமாக செய்ய முடியும். 150 00:08:43,942 --> 00:08:45,026 பார்க்கிறாயா? 151 00:08:50,782 --> 00:08:53,618 ஆஹா. சரி. 152 00:08:56,454 --> 00:08:57,455 இதோ வருகிறேன். 153 00:09:02,294 --> 00:09:03,503 மால்கம். 154 00:09:04,713 --> 00:09:09,301 வடிவ-மாற்றம் பற்றி அந்த பாடலில் ஏதாவது சொல்லப்பட்டிருக்கிறதா? 155 00:09:10,635 --> 00:09:13,305 நான் அதைப்பற்றி அப்படி நினைக்கவில்லை. 156 00:09:14,556 --> 00:09:16,474 ஆனால், சில சமயங்களில் இசை தெளிவில்லாமல் இருக்கும். 157 00:09:16,558 --> 00:09:19,019 கேட்பவர் தான் கோடிட்ட இடங்களை நிரப்பிக் கொள்ள வேண்டும். 158 00:09:19,019 --> 00:09:22,355 இவையும் கவிதைகள் போலத் தான், அவரவருக்கென்று ஒரு அர்த்தம் கொடுக்கும். 159 00:09:24,858 --> 00:09:27,319 ஆமாம். அர்த்தம் கொள்வது. 160 00:09:28,236 --> 00:09:31,031 உனக்கு அடிப்படைகள் தெரிந்ததால், உன் கதாப்பாத்திரத்தை உருவாக்க வேண்டும். 161 00:09:31,698 --> 00:09:33,575 நான் மெக்கானிக்கை பரிந்துரைக்கிறேன். 162 00:09:33,575 --> 00:09:37,037 அவனுக்கு அதிக ஆரோக்கியம், சுறுசுறுப்பு மற்றும் உடல் திடம் இருக்கிறது. 163 00:09:37,037 --> 00:09:38,872 அவனால் மற்ற ரோபோக்களை சரிசெய்ய முடியும். 164 00:09:39,456 --> 00:09:42,876 ஆஹா. உனக்கு வீடியோ கேமில் திறமை அதிகம். -ஆமாம். 165 00:09:43,501 --> 00:09:44,669 எனக்கும் ஏதாவது திறமை இருந்தால் தேவலை. 166 00:09:44,753 --> 00:09:47,130 உனக்கு விளையாட்டில் திறமை இருக்கிறது. சார்லிக்கு மேஜிக் தெரியும். 167 00:09:47,756 --> 00:09:49,716 விடு. எல்லோருக்கும் ஒரு திறமை இருக்கும். 168 00:09:49,716 --> 00:09:51,092 நாம் தான் அதை கண்டுபிடிக்கணும். 169 00:09:53,220 --> 00:09:56,014 செக்டார் 371 170 00:09:56,598 --> 00:09:57,515 என்ன நடக்கிறது? 171 00:10:02,354 --> 00:10:04,564 சத்தியமாக, நான் எதுவும் செய்யவில்லை. 172 00:10:06,524 --> 00:10:09,861 இரு. இந்த கதாபாத்திரம் கிட்டத்தட்ட... 173 00:10:11,571 --> 00:10:12,572 தாம்சன் போல இருக்கிறது. 174 00:10:15,617 --> 00:10:17,786 கேம் மூலம் ஆலிவர் நமக்கு ஒரு துப்பு கொடுக்கிறார். 175 00:10:18,286 --> 00:10:19,537 அதற்கு என்ன அர்த்தம்? 176 00:10:20,038 --> 00:10:22,749 கேமை நாம் தாம்சனாக விளையாட வேண்டுமா? 177 00:10:23,375 --> 00:10:24,417 “கதாபாத்திரமாக.” 178 00:10:26,419 --> 00:10:27,546 எனக்குப் புரிகிறது. 179 00:10:29,005 --> 00:10:32,300 தாம்சன் போலவே இருக்கும் ஒரு கதாபாத்திரத்தை ஆலிவர் உருவாக்கியுள்ளார். 180 00:10:33,468 --> 00:10:37,305 அதன் மூலம், தாம்சன் ஒரு நிஜ மனிதன் கிடையாது என்று சொல்ல முயல்கிறார் போல. 181 00:10:37,806 --> 00:10:38,807 அவர் ஒரு கதாபாத்திரம். 182 00:10:38,807 --> 00:10:40,600 சரி தான். 183 00:10:41,101 --> 00:10:42,978 அவர் மாறுவேடம் அணிந்திருந்தார். 184 00:10:42,978 --> 00:10:45,522 எதற்காக இதில் என் அம்மாவை ஈடுபடுத்தினார்? 185 00:10:45,522 --> 00:10:46,606 நியா? 186 00:10:48,233 --> 00:10:51,152 உன்னை குப்பையை வெளியே கொட்டச் சொன்னேனே. நிறைய ஈக்கள் வந்துவிட்டன. 187 00:10:51,820 --> 00:10:53,738 இன்று காலையே அதை செய்துவிட்டேனே. 188 00:10:54,364 --> 00:10:55,365 ஒருவேளை நான்... 189 00:10:58,577 --> 00:10:59,661 மறந்திருக்கலாம். 190 00:11:00,829 --> 00:11:02,163 சும்மா விளையாடினேன். 191 00:11:02,831 --> 00:11:05,208 நியா, சமீர், இவள் தான் ரெயின்போ. 192 00:11:05,292 --> 00:11:06,626 புரிந்ததா! 193 00:11:07,210 --> 00:11:10,255 அவள் நீல நிறம் அணிந்து பார்த்திருக்கிறாயா? 194 00:11:12,424 --> 00:11:14,718 முன்னே இருக்கும் வானத்தைப் பார் 195 00:11:16,970 --> 00:11:19,055 அவள் முகம் பாய்மர துணி போல இருக்கிறது 196 00:11:19,139 --> 00:11:21,224 சற்று வெளிறி வெண்மையாக இருக்கிறது 197 00:11:21,808 --> 00:11:24,227 இதைவிட அழகான பெண்ணைப் பார்த்ததுண்டா? 198 00:11:24,311 --> 00:11:25,770 ஷி இஸ் எ ரெயின்போ டேங்க் அண்ட் த பாங்காஸ் 199 00:11:25,854 --> 00:11:28,064 என்னைப் பற்றிதான் பாடுகிறார்கள். 200 00:11:28,148 --> 00:11:31,026 ஆரம்பத்தில் நான் உன்னை நம்பவில்லை, ஆனால் நீ சொன்னது சரிதான். 201 00:11:31,026 --> 00:11:32,694 இது என் பாடல். 202 00:11:33,945 --> 00:11:37,908 இது, ஆலிவருக்கு பிடிக்கும் தான், ஆனால் வடிவ மாற்றம் பற்றி சொல்லவில்லை. 203 00:11:39,117 --> 00:11:42,203 பாடல் வரிகள் எப்படி வேண்டுமானாலும் புரிந்து கொள்ளப்படலாம் என்று மால்கம் சொன்னான். 204 00:11:42,871 --> 00:11:45,957 ஆலிவர் இதைக் கேட்டு விட்டு, ரெயின்போவை வடிவம் மாற்றுபவளாக நினைத்திருக்கலாம். 205 00:11:46,750 --> 00:11:50,128 சரி, ஆலிவர் ரெயின்போவை வெளியே விட்டிருந்தால், மர்மத்தை தீர்க்க அவள் நமக்கு உதவுவாள். 206 00:11:50,212 --> 00:11:51,213 சரி. 207 00:11:51,213 --> 00:11:53,506 அவளால் மற்றவர்கள் போல உருவம் மாற முடியலாம். 208 00:11:54,132 --> 00:11:55,759 அது உதவுமா என்று தெரியவில்லை. 209 00:11:56,343 --> 00:11:57,928 அவள் கண்ணுக்கு தெரிய மாட்டாள் தானே? 210 00:11:58,678 --> 00:12:00,430 நாம் உருமாறினால் நன்றாக இருக்கும். 211 00:12:01,056 --> 00:12:03,308 ஒருநாள் முழுவதும் நியாவாக இருப்பேன். 212 00:12:03,308 --> 00:12:05,435 சுவாரஸ்யமான கேம் விளையாடுவேன். 213 00:12:20,408 --> 00:12:21,952 இப்போது என்ன நடந்தது? 214 00:12:21,952 --> 00:12:25,413 அற்புதம். உன்னாலும் இதைச் செய்ய முடியும் என்று ஏன் சொல்லவில்லை, சார்லி? 215 00:12:25,997 --> 00:12:27,290 என்னால் முடியும் என்பது எனக்கே தெரியாது. 216 00:12:27,374 --> 00:12:29,584 அப்படி செய்ய நினைத்தேன், அதுவாகவே நடந்துவிட்டது. 217 00:12:30,168 --> 00:12:31,294 நீ முயற்சி செய், நியா. 218 00:12:36,800 --> 00:12:38,385 இன்னும் நீயாகத் தான் இருக்கிறாய், நியா. 219 00:12:39,970 --> 00:12:41,721 என்னைப் போல் மாறு! 220 00:12:43,098 --> 00:12:45,225 என்ன பிரேஸ்லெட் போட்டிருக்கிறாய், சார்லி? 221 00:12:45,725 --> 00:12:46,726 ரெயின்போ தான் எனக்குக் கொடுத்தாள். 222 00:12:47,686 --> 00:12:48,979 அது தான் விஷயமே. 223 00:12:48,979 --> 00:12:53,149 செக்டார் 371ல், ஒரு கதாபாத்திரம் தன் கவசத்தை கொடுத்தால், அவரது சக்தியும் கிடைத்துவிடும். 224 00:12:53,233 --> 00:12:54,985 அதனால் தான் நீ உருமாறினாயோ என்னவோ. 225 00:12:55,569 --> 00:12:57,404 அப்படி என்றால், ஒரு வண்ணத்தைத் தேர்ந்தெடு. 226 00:12:57,404 --> 00:12:58,863 எனக்கு நீலம் வேண்டும். 227 00:13:03,785 --> 00:13:05,453 யாராக வேண்டுமானாலும் மாற முடியுமா? 228 00:13:05,537 --> 00:13:08,415 சற்று முன்பு என் அம்மா போல நீ எப்படி உருமாறினாய், ரெயின்போ? 229 00:13:08,415 --> 00:13:10,041 அவரது புகைப்படத்தை சார்லி காண்பித்தாள். 230 00:13:10,125 --> 00:13:13,378 அதை என் மனதில் நிறுத்தி உருமாறுவதற்காக என் மனதை தயாராக்கினேன். 231 00:13:13,378 --> 00:13:17,048 என் முன்னாடி நிற்பவர் என்றால், அவரைப் பார்த்து, மனதை தயாராக்குவேன். 232 00:13:17,132 --> 00:13:22,512 ஆக, புகைப்படத்திலோ அல்லது நேரிலோ நாம் ஒருவரைப் பார்க்க வேண்டும். 233 00:13:23,555 --> 00:13:25,348 நான் உன்னைப் போல மாறுகிறேன், நீ சார்லி போல மாறு. 234 00:13:42,198 --> 00:13:44,910 இது ரொம்ப விசித்திரமாக இருக்கிறது. 235 00:13:44,910 --> 00:13:46,620 அது சரியான சொல் இல்லை. 236 00:13:46,620 --> 00:13:48,455 இது மிகவும் சிறப்பாக இருக்கிறது! 237 00:13:48,455 --> 00:13:50,916 இதற்கு முன்னர் என் சக்தியை யாரோடும் பகிர்ந்தது கிடையாது. 238 00:13:51,666 --> 00:13:53,877 வந்து, அப்படி பகிர யாரும் இருந்ததில்லை. 239 00:13:53,877 --> 00:13:57,380 அது சரி தான். அந்த பாடலில் இருந்த ஒரே கதாபாத்திரம் நீ தான். 240 00:13:58,298 --> 00:14:01,760 தனிமையாக தோன்றுகிறது. -தன்மையாக இல்லை. மகிழ்ச்சியாக. 241 00:14:01,760 --> 00:14:04,387 வந்ததிலிருந்து நிறைய சிறப்பான விஷயங்களைப் பார்க்கின்றேன். 242 00:14:04,471 --> 00:14:05,472 இது போல. 243 00:14:07,974 --> 00:14:09,351 சரி, இது என்ன? 244 00:14:12,354 --> 00:14:15,065 முதலில் நாம் நாமாக மாறலாம். 245 00:14:15,065 --> 00:14:17,984 இது ரொம்ப விசித்திரமாக மாறுகிறது. 246 00:14:25,533 --> 00:14:27,535 இதை புரிந்துகொள்கிறேன். 247 00:14:27,619 --> 00:14:31,748 இவரைப் பிடிப்பதற்காக, உங்களுக்கு உதவ ஆலிவர் என்ற பேய் என்னை விடுவித்ததா? 248 00:14:32,374 --> 00:14:33,375 அலெக்ஸ் தாம்சனா? 249 00:14:33,375 --> 00:14:37,420 ஆம். அவன் மாறுவேடம் அணிந்து இருப்பது தான் பிரச்சினை, 250 00:14:37,504 --> 00:14:40,048 அதனால் அவன் உண்மை முகம் எப்படி இருக்கும் என்று எங்களுக்குத் தெரியாது. 251 00:14:40,048 --> 00:14:41,967 கிரேக் நுயெனிடம் நாம் பேசலாமா? 252 00:14:42,842 --> 00:14:45,720 அன்றிரவு வயதான சான்ஸியை பார்த்த இசை மாணவன். 253 00:14:45,804 --> 00:14:46,805 இப்போது தான் அவனைப் பற்றி படித்தேன். 254 00:14:46,805 --> 00:14:50,267 நாளை கல்லூரியில் தன் ராக் பேண்டில் சேர்க்க தேர்வு நடத்துகிறான். 255 00:14:50,267 --> 00:14:52,185 அது ஒரு சிறப்பான யோசனை. 256 00:14:52,269 --> 00:14:55,939 ஆனால் முதலில், தாம்சனோடு பேசிய நமக்கு தெரிந்த ஒருவரோடு நாம் பேச வேண்டும். 257 00:14:57,023 --> 00:15:01,152 நூலகர். அவள் தான் அவரை ஆர்கைவ் அறையில் உள்ளும் வெளியே செல்ல அனுமதித்தவள். 258 00:15:01,236 --> 00:15:02,821 ஆனால் அது மூடியிருக்குமே. 259 00:15:03,405 --> 00:15:05,365 என் அப்பா வைத்து உள்ளே செல்ல முடியாது. 260 00:15:05,865 --> 00:15:06,866 மெக்கார்மேக் போல போகலாம். 261 00:15:06,950 --> 00:15:09,744 அவர் நூலகரின் நண்பர். இருவரையும் இன்று புத்தகக்கடையில் பார்த்தேன். 262 00:15:09,828 --> 00:15:10,829 நிபுணர் ஈபி போலி என்று சொன்னார் 263 00:15:10,829 --> 00:15:13,873 நீ உருமாறு, நியா. அவர் குரல் உனக்குத் தெரியுமே. 264 00:15:15,041 --> 00:15:16,626 சரி முயற்சி செய்கிறேன். 265 00:15:16,710 --> 00:15:18,795 என்ன சொல்வதென்று தெரியவில்லை என்றால் என்ன செய்வது? 266 00:15:20,922 --> 00:15:23,633 தொண்டையை செருமு. வயதான ஆண்கள் அப்படி செய்வார்கள். 267 00:15:37,772 --> 00:15:38,857 இதை செய்வோம். 268 00:15:41,109 --> 00:15:42,569 நீ நன்றாக செய்வாய், நியா! 269 00:15:49,242 --> 00:15:50,243 டாட். 270 00:15:51,578 --> 00:15:52,621 என்ன ஆச்சரியம். 271 00:15:56,541 --> 00:15:57,542 ஹாய். 272 00:16:00,462 --> 00:16:01,630 பிரேஸ்லெட் அழகாக இருக்கு. 273 00:16:03,089 --> 00:16:04,299 என் மருமகள் கொடுத்தாள். 274 00:16:04,966 --> 00:16:06,968 அழகாக இருக்கு. எந்த மருமகள்? 275 00:16:07,052 --> 00:16:09,471 இளையவள்? 276 00:16:09,971 --> 00:16:11,056 சரி, நீயாவது வந்தாயே. 277 00:16:11,056 --> 00:16:14,726 பொது மக்களை வரவிடாததால், இந்த இடம் ரொம்பவே அமைதியாக இருக்கிறது. 278 00:16:14,726 --> 00:16:16,478 மறுபடியும் எப்போது திறப்பீர்கள்? 279 00:16:16,478 --> 00:16:18,480 விசாரணையைப் பொறுத்து என்று நினைக்கிறேன். 280 00:16:19,898 --> 00:16:21,650 நீ அதை பற்றி சொன்னதால், 281 00:16:21,650 --> 00:16:24,027 எனக்கு சில கேள்விகள் உண்டு. -இரு. 282 00:16:24,861 --> 00:16:26,071 நான் என்ன படிக்கிறேன் தெரியுமா? 283 00:16:26,738 --> 00:16:28,240 நேற்று நீ பரிந்துரைத்த புத்தகம் தான். 284 00:16:28,240 --> 00:16:29,908 பழங்கால எகிப்திய கவிதைப் பற்றிய புத்தகம். 285 00:16:29,908 --> 00:16:30,992 பழங்கால எகிப்திய இலக்கியம் 286 00:16:32,244 --> 00:16:35,080 இந்த கவிதையைப் படித்தேன், உன் கருத்தை தெரிந்துகொள்ள வேண்டும். 287 00:16:36,122 --> 00:16:40,377 அது ஒரு கற்பனை கதையா அல்லது உண்மை மொழியியல் ஆய்வா? 288 00:16:41,419 --> 00:16:46,633 ஒருவேளை விளக்கமாக இருக்கலாம். 289 00:16:51,346 --> 00:16:53,348 சார்லி கிட்ட வந்துவிட்டதாக சொல்கிறாள். 290 00:16:53,348 --> 00:16:55,976 இந்த இடம் அருமையாக இருக்கிறது. இது எங்கே இருக்கிறது? 291 00:16:55,976 --> 00:16:58,520 இது என் நாடான, சிரியாவில் இருக்கிறது. 292 00:16:58,520 --> 00:17:00,105 நீ ஏன் வெளியேறினாய்? 293 00:17:01,398 --> 00:17:02,732 ஒரு போர் நடந்தது. 294 00:17:02,816 --> 00:17:07,195 அங்கே இருப்பது ரொம்ப ஆபத்து என்பதால் நானும் என் குடும்பமும் இங்கே வந்தோம். 295 00:17:08,655 --> 00:17:10,198 சரி, நல்லதை மட்டும் எடுத்துக்கொள். 296 00:17:10,282 --> 00:17:13,075 புது இடத்தில், புது நண்பர்களோடு வாழ முடிகிறது. 297 00:17:13,159 --> 00:17:16,371 ஹே! தாமதமாக வந்ததற்கு மன்னியுங்கள். என் அக்காவோடு இருந்தேன். 298 00:17:16,912 --> 00:17:20,833 அது மகிழ்ச்சியாக இருந்தது. சுவையான ஃப்ரா-யோ சாப்பிட்டோம். 299 00:17:22,168 --> 00:17:24,545 ஹே, என்ன பிரச்சினை, ரெயின்போ? 300 00:17:24,629 --> 00:17:27,424 எனக்கா? இல்லையே. ஒரு ரெயின்போ போல மகிழ்ச்சியாக இருக்கிறேன். 301 00:17:30,802 --> 00:17:35,307 எகிப்தியர்களின் கற்பனை திறன், அபாரமாக இருக்கிறது. 302 00:17:35,307 --> 00:17:37,225 அவர்களது கவிதைத்துவமான வார்த்தைகள். 303 00:17:38,727 --> 00:17:39,811 நான் பேசுவது சலிப்பாக இருக்கா? 304 00:17:40,520 --> 00:17:41,688 இல்லை, கண்டிப்பாக இல்லை. 305 00:17:41,688 --> 00:17:43,815 நான் இங்கே வந்திருப்பதால் கேட்கிறேன், அது திருடப்பட்ட அன்று 306 00:17:43,899 --> 00:17:46,443 ஒரு ஆள் எலோக்வென்ட் பெசன்டை வெளியே எடுத்து பார்த்ததாக கேள்விப்பட்டேன். 307 00:17:46,443 --> 00:17:49,279 அவனைப் பற்றி உனக்கு என்ன தெரியும்? -நான் இந்த வழக்கு பற்றி பேசக் கூடாது. 308 00:17:49,279 --> 00:17:50,572 விசாரணை செய்பவரின் உத்தரவு. 309 00:17:50,572 --> 00:17:51,990 ஆமாம். எனக்குத் தெரியும். 310 00:17:52,574 --> 00:17:55,660 அது மிகவும் குழப்பமாக இருக்கிறது. 311 00:17:56,620 --> 00:17:59,623 என் கண் முன்னே அந்த பெசன்ட் திருடப்பட்டது என்பதை நம்ப முடியவில்லை. 312 00:18:00,123 --> 00:18:02,375 எப்போது வேண்டுமானாலும் தலைவர் பார்னஸ் என்னை வேலையை விட்டு அனுப்பலாம். 313 00:18:02,459 --> 00:18:05,837 தலைவர் பார்னஸ் அப்படி செய்ய மாட்டார். அது உன் தவறு இல்லை என்று புரிந்துகொள்வார். 314 00:18:05,921 --> 00:18:07,714 ஆக, இப்போது உனக்கு தலைவர் பார்னஸை பிடித்திருக்கிறதா? 315 00:18:08,298 --> 00:18:11,092 அவள் தலைவராக தகுதி இல்லாதவள், திமிர் பிடித்தவள் என்றெல்லாம் 316 00:18:11,176 --> 00:18:12,719 எப்போதும் சொல்வாயே. 317 00:18:12,719 --> 00:18:14,471 இன்று என்ன ஆச்சு? 318 00:18:16,097 --> 00:18:17,974 நான்... நான்... 319 00:18:18,058 --> 00:18:22,312 மன்னிக்கவும், சில விடைத்தாள்களைத் திருத்த வேண்டும் என இப்போது தான் ஞாபகம் வந்தது. 320 00:18:24,731 --> 00:18:25,732 பிறகு சந்திப்போம். 321 00:18:31,905 --> 00:18:33,490 பேராசிரியர் மெக்கார்மேக். 322 00:18:33,490 --> 00:18:36,368 நான்கு மணிக்கான நம் சந்திப்பு பற்றி உங்களுக்கு தகவல் வந்தது தானே? 323 00:18:37,369 --> 00:18:38,620 ஆமாம். அந்த சந்திப்பு. 324 00:18:39,371 --> 00:18:40,580 அது எங்கே நடக்கிறது? 325 00:18:40,664 --> 00:18:41,915 கான்ஃபரன்ஸ் பி அறையில். 326 00:18:41,915 --> 00:18:45,252 போர்டின் கல்வி ஆலோசகராக, நீங்கள் அங்கே இருப்பது முக்கியம். 327 00:18:45,835 --> 00:18:46,836 முக்கியம். 328 00:18:47,712 --> 00:18:49,506 சற்று விரிவாகச் சொல்ல முடியுமா? 329 00:18:50,006 --> 00:18:52,175 தலைவர் பார்னஸ் பற்றிய விஷயம். 330 00:18:57,514 --> 00:18:58,890 அங்கு சந்திக்கலாம். 331 00:19:08,108 --> 00:19:09,442 மெக்கார்மேக் ஒரு புளுகன். 332 00:19:10,110 --> 00:19:11,778 இரு, என்ன? 333 00:19:11,778 --> 00:19:14,281 பொதுவில் என் அம்மாவை பிடித்தது போல நடிக்கிறார், 334 00:19:14,281 --> 00:19:17,701 ஆனால் நிஜத்தில் பிடிக்காது என்று நூலகர் சொன்னார். கொஞ்சமும் பிடிக்காதாம். 335 00:19:18,994 --> 00:19:22,414 இப்போது என் அம்மாவின் முதலாளிகள், நிர்வாக வாரியத்தின் உறுப்பினர்கள் எல்லோரும், 336 00:19:22,414 --> 00:19:23,999 அவரைப் பற்றி பேச சந்திக்கிறார்கள். 337 00:19:23,999 --> 00:19:25,750 அது ஒரு தவறான புரிதலாக இருக்கலாம். 338 00:19:26,376 --> 00:19:29,546 நல்ல முயற்சி, ரெயின்போ, ஆனால், இது சற்று விவகாரமானது. 339 00:19:29,546 --> 00:19:31,339 உன் அம்மாவிடம் சொல்லப் போகிறாயா? 340 00:19:31,423 --> 00:19:34,384 முடியாது. எனக்கு எப்படி தெரியும் என்று எப்படி விளக்குவேன்? 341 00:19:35,260 --> 00:19:39,014 அந்த சந்திப்பில் நான் கலந்துகொள்ள வேண்டும். -ஆனால் நீ மெக்கார்மேக் போல் உருமாற முடியாது. 342 00:19:39,014 --> 00:19:40,181 அவரே அங்கு தான் இருப்பார். 343 00:19:40,265 --> 00:19:41,600 வேறு வழி கண்டுபிடிக்கிறேன். 344 00:19:42,601 --> 00:19:44,185 ரெயின்போ, என்னோடு வருகிறாயா? 345 00:19:44,269 --> 00:19:46,605 நீ கண்ணுக்கு தெரிய மாட்டாய். எனக்கு உதவு. -கண்டிப்பாக. 346 00:19:46,605 --> 00:19:48,356 ஆனால் அது மோசமாக இருக்காது. 347 00:19:48,857 --> 00:19:51,443 வயதான சான்ஸியைப் பார்த்த பையனோடு நானும் சார்லியும் பேசுகிறோம். 348 00:19:51,443 --> 00:19:52,736 இது நல்ல யோசனை. 349 00:19:56,197 --> 00:19:57,282 இது எல்லாம் என்ன? 350 00:19:57,282 --> 00:19:58,783 இது நிறுவனர்களுக்கான வாரம். 351 00:19:58,867 --> 00:20:01,661 விக்ஃபோர்டின் இருநூறாவது ஆண்டு விழாவை கொண்டாடும் ஒரு பெரிய நிகழ்ச்சி. 352 00:20:03,204 --> 00:20:07,918 எனவே, இசை கட்டிடத்தில் கிரேகின் இசைக்குழு சில நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 353 00:20:08,627 --> 00:20:10,587 நாம் கல்லூரி மாணவர்கள் போல உருமாறி, 354 00:20:10,587 --> 00:20:12,172 அங்கு சென்றால் என்ன? 355 00:20:13,298 --> 00:20:15,508 நான் வாசிக்க வேண்டாம், இல்லையா? 356 00:20:15,592 --> 00:20:17,510 கவலைப்படாதே, நாம் நடிக்கலாம். 357 00:20:17,594 --> 00:20:20,347 அது ஒரு ராக் இசைக்குழு, எனவே 80% அலட்டல் தான் இருக்கும். 358 00:20:21,014 --> 00:20:22,015 வா போகலாம். 359 00:20:22,724 --> 00:20:24,684 எல்லோரும் இங்கே வந்ததற்கு நன்றி. 360 00:20:26,686 --> 00:20:29,105 ஆரம்பித்துவிட்டது. உள்ளே போக ஒரு திட்டம் தீட்ட வேண்டும். 361 00:20:30,148 --> 00:20:32,359 எனக்கு ஒரு யோசனை. அவள் பரவாயில்லையா? 362 00:20:33,985 --> 00:20:35,195 நல்ல திட்டம் தான். 363 00:20:36,112 --> 00:20:40,033 திடீரென்று சொன்னதற்கு மன்னிக்கவும், ஆனால் இது முக்கியமான விஷயம். 364 00:20:40,033 --> 00:20:41,785 புது ஆதாரம் வெளி வந்திருக்கிறது. 365 00:20:42,661 --> 00:20:43,662 ஹாய். 366 00:20:44,412 --> 00:20:45,580 பல்கலைக்கழக உணவகம். 367 00:20:45,664 --> 00:20:47,499 நான் யாரையும் அழைக்கவில்லையே. 368 00:20:47,499 --> 00:20:50,877 சரி. நாங்கள் எப்போதும் வருவோம். -எங்களுக்கு வேண்டாம். நன்றி. 369 00:20:51,920 --> 00:20:53,129 நீங்கள் பேசுங்கள், டோனவன். 370 00:20:53,213 --> 00:20:54,839 உனக்கு வேண்டாம் என்றால் விடு, டாட். 371 00:20:55,340 --> 00:20:56,925 எனக்கு டிகேஃப் வேண்டும். 372 00:20:57,509 --> 00:20:58,635 பிளாக் காபி கொடுங்கள். 373 00:20:58,635 --> 00:21:00,053 எலுமிச்சையும் தேனும் சேர்த்து, ஒரு டீ. 374 00:21:00,053 --> 00:21:01,805 அந்த இனிப்பில் கொழுப்பு இல்லையா? 375 00:21:01,805 --> 00:21:02,931 ஆமாம். 376 00:21:04,224 --> 00:21:05,392 எனக்கு தண்ணீர் போதும். 377 00:21:09,020 --> 00:21:10,605 சொதப்பப் போகிறேன். 378 00:21:12,232 --> 00:21:13,608 இதில் எது டிகேஃப்? 379 00:21:14,192 --> 00:21:15,277 டிகேஃப் என்றால் என்ன? 380 00:21:21,241 --> 00:21:23,493 சரி. இந்த இருவரையும் தேர்ந்தெடுக்கிறேன். 381 00:21:25,328 --> 00:21:26,663 வா. இது தான் வாய்ப்பு. 382 00:21:38,466 --> 00:21:41,011 அலெக்ஸ் தாம்சன், என்ற புனைபெயரில் இருக்கும் இந்த மனிதன் மீது தான், 383 00:21:41,970 --> 00:21:44,806 சந்தேகமாக இருக்கிறது. 384 00:21:45,390 --> 00:21:47,851 அது திருடப்பட்ட நாளில் இவன் எலோக்வென்ட் பெசன்டை 385 00:21:47,851 --> 00:21:49,394 பார்த்திருக்கிறான். 386 00:21:49,394 --> 00:21:50,812 அவனைப் பற்றி வேறு என்ன தெரியும்? 387 00:21:50,896 --> 00:21:51,897 எதுவும் தெரியாது. 388 00:21:51,897 --> 00:21:53,899 அவனது நிஜ பெயர் தாம்சன் இல்லை என்று நினைக்கிறேன். 389 00:21:53,899 --> 00:21:56,735 அரிதான பழமையான பொருட்களை கள்ளச் சந்தையில் விற்பவன் போல் தோன்றுகிறது. 390 00:21:56,735 --> 00:21:59,154 எனினும், நேற்று என் அலுவலகத்தில் 391 00:21:59,154 --> 00:22:03,450 இந்த மொட்டை கடிதம் வரும்வரை எந்த ஒரு துப்பும் கிடைக்கவில்லை. 392 00:22:03,450 --> 00:22:06,077 மொட்டை கடிதமா? சந்தேகமாக இல்லையா? 393 00:22:06,661 --> 00:22:08,163 இருக்கு ஆனால் இல்லை. 394 00:22:08,163 --> 00:22:13,043 லைலா குற்றவாளி என்று நினைத்து, அவளை மாட்டிவிட பார்க்கும், 395 00:22:13,043 --> 00:22:15,003 அவளின் கூட்டாளி போலத் தோன்றுகிறது. 396 00:22:16,796 --> 00:22:18,423 இது எப்படி சாத்தியம்? 397 00:22:22,552 --> 00:22:23,595 மன்னிக்கவும். 398 00:22:23,595 --> 00:22:24,846 பரவாயில்லை. 399 00:22:26,097 --> 00:22:28,516 நேப்கின்கள் கிடைக்குமா? -சரி. கொண்டு வருகிறேன். 400 00:22:30,352 --> 00:22:33,104 புகைப்படத்தில் இருப்பது உன் அம்மா தானே? -ஆமாம். 401 00:22:33,188 --> 00:22:34,773 அது மட்டுமில்லை. 402 00:22:35,649 --> 00:22:38,151 புகைப்படங்களோடு இந்த ரெக்கார்டிங்கும் வந்தது. 403 00:22:39,986 --> 00:22:41,196 சரி, லைலா, 404 00:22:41,196 --> 00:22:44,115 எலோக்வென்ட் பெசன்டிற்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என நினைக்கிறாய்? 405 00:22:44,199 --> 00:22:46,409 ஐந்து மில்லியன். இன்னும் அதிகம் கூட கிடைக்கலாம். 406 00:22:54,459 --> 00:22:56,795 என்ன விஷயம்? என் பெயர் கிரேக். வரவேற்கிறேன். 407 00:22:57,671 --> 00:22:58,672 நீங்கள் வாசிக்கலாம். 408 00:22:59,548 --> 00:23:02,008 முதலில், உன்னிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும். 409 00:23:02,509 --> 00:23:04,177 அக்டோபர் 3 அன்று வயதான சான்ஸியின் ஆவியை 410 00:23:04,261 --> 00:23:07,514 நீ பார்த்தாய் என்று பள்ளி செய்தித்தாளில் படித்தோம். 411 00:23:07,514 --> 00:23:08,890 ஓ, ஆமாம். 412 00:23:08,974 --> 00:23:11,309 கேள், நண்பா, இன்று நிறைய ஆடிஷன்கள் இருக்கின்றன, 413 00:23:11,393 --> 00:23:13,770 எனவே நீங்கள் வாசியுங்கள் நாம் பிறகு பேசலாமே? 414 00:23:22,153 --> 00:23:23,196 நீங்கள் தயாரானதும் வாசிக்கலாம். 415 00:23:25,282 --> 00:23:28,493 ஒன்று. இரண்டு. மூன்று. நான்கு. 416 00:23:38,670 --> 00:23:40,213 இது ஒரு தவறான புரிதல். 417 00:23:40,297 --> 00:23:41,965 தலைவர் பார்னஸ் குற்றவாளி கிடையாது. 418 00:23:41,965 --> 00:23:43,717 பிறகு ஏன் சந்தேகத்துக்குரிய நபரை சந்தித்தார்? 419 00:23:43,717 --> 00:23:45,468 நான் நம்பவில்லை. அவளது நோக்கம் என்ன? 420 00:23:45,552 --> 00:23:46,761 அதை கண்டுபிடிக்க முயல்கிறோம். 421 00:23:46,845 --> 00:23:48,930 தலைவரின் அலுவலகத்தை சோதிக்கணும். -ஆமாம். 422 00:23:49,014 --> 00:23:50,891 எப்படிப் பார்த்தாலும், அது பல்கலைக்கழகத்தின் சொத்து. 423 00:23:50,891 --> 00:23:53,852 அவளை நீக்க வேண்டும் என்றால், உடனே செய்ய வேண்டும். 424 00:23:53,852 --> 00:23:56,021 இந்த நிறுவனத்தின் நற்பெயர் கெட்டுவிடக் கூடாது. 425 00:24:02,444 --> 00:24:03,445 அற்புதம். 426 00:24:04,029 --> 00:24:06,823 அட்டகாசம். நீ அப்படி வாசிப்பாய் என்று தெரியாது. 427 00:24:07,532 --> 00:24:09,159 சில வருடங்கள் ஆகி விட்டது. 428 00:24:10,368 --> 00:24:12,329 ஆக, வயதான சான்ஸி பற்றி... 429 00:24:12,329 --> 00:24:16,166 ஓ, ஆமாம். எடிட்டர்கள் என்னை நம்பவே இல்லை. 430 00:24:16,166 --> 00:24:19,336 எனக்கு ஒரு கட்டுரை கூட கொடுக்கவில்லை, ஆனால் சத்தியமாக, நான் அவரைப் பார்த்தேன். 431 00:24:19,336 --> 00:24:20,545 என்னிடம் ஆதாரம் கூட இருக்கு. 432 00:24:23,089 --> 00:24:25,926 அவர் காட்டிற்குள் செல்லும் முன் இந்த புகைப்படத்தை எடுத்தேன். 433 00:24:25,926 --> 00:24:29,387 நான் அவரைப் பின்தொடர முயற்சித்தேன், ஆனால் அவர் மறைந்துவிட்டார். 434 00:24:30,597 --> 00:24:31,973 இது தான் கிடைத்தது. 435 00:24:33,099 --> 00:24:34,935 ஒரு பேயின் காலடிச் சுவடு. 436 00:24:37,187 --> 00:24:39,689 மனிதர்களுக்கு காலடிச் சுவடு இருந்தால், பேய்களுக்கும் இருக்கலாமே? 437 00:24:40,273 --> 00:24:42,067 சரி. இருக்கலாம். 438 00:24:42,067 --> 00:24:43,902 நன்றி. பிரயோஜனமான தகவல் தான். 439 00:24:43,902 --> 00:24:45,111 ஹே, இந்த இசைக்குழு பற்றி... 440 00:24:45,195 --> 00:24:47,781 எனக்கு மூன்றவது கலைஞர் தேவையில்லை, ஆனால்... 441 00:24:47,781 --> 00:24:50,450 சரி, இனி எதுவும் சொல்லாதே. நாங்கள் சேர்ந்து மட்டும் தான் வாசிப்போம். 442 00:24:50,450 --> 00:24:51,785 சரி தானே? 443 00:24:51,785 --> 00:24:53,828 உண்மை தான். மன்னிக்கவும். 444 00:24:56,581 --> 00:25:00,085 ஹே. பேய்க்கு காலடிச் சுவடு இருக்காது. அவனிடம் சொல்லலாமா? 445 00:25:00,085 --> 00:25:01,670 வேண்டாம். அவன் அதை நம்பட்டும். 446 00:25:02,254 --> 00:25:04,464 நீ லைலாவை ஒழிக்க நினைக்கிறாய், மெக்கார்மேக். 447 00:25:04,548 --> 00:25:06,424 உனக்கு பதவி கிடைக்கவில்லை என்ற கோபம். 448 00:25:06,925 --> 00:25:10,178 எலோக்வென்ட் பெசன்டை விற்க அவள் பேசுவதை ரெக்கார்டிங்கில் தெளிவாக கேட்டோமே. 449 00:25:10,262 --> 00:25:12,847 எனக்கு அவளைப் பற்றித் தெரியும். அவள் திருடியில்லை. 450 00:25:12,931 --> 00:25:16,226 அவள் திருடனோடு சும்மா காபி குடித்தாளா? சொல்லுங்கள். 451 00:25:16,226 --> 00:25:18,353 உன் அம்மாவைப் பற்றி அவர்கள் இப்படி பேசுவது அதிர்ச்சியாக உள்ளது. 452 00:25:18,353 --> 00:25:20,939 அவருக்கு பின்னாடி கூட பேசுகிறார்கள். அது ரொம்ப அநியாயம். 453 00:25:20,939 --> 00:25:23,900 என் நேர்மையைப் பற்றி சந்தேகப்படும் இந்த... 454 00:25:23,984 --> 00:25:25,527 எல்லோரும், அமைதியாக இருங்கள். 455 00:25:27,737 --> 00:25:30,115 தலைவரின் அலுவலகத்தை சோதனை செய்ய வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறேன். 456 00:25:31,283 --> 00:25:34,202 ஆனால் அவள் தன்னிலை விளக்கம் தர ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும். 457 00:25:35,829 --> 00:25:38,957 நாளை நீங்களே அவளது வீட்டிற்கு போய் அவளை சந்திக்கிறீர்களா? 458 00:25:39,624 --> 00:25:41,001 என்ன சொல்கிறாள் என்று பார்க்கலாம். 459 00:25:41,710 --> 00:25:44,004 அப்படியே செய்கிறேன். -ரொம்பவும் கனிவாக வேண்டாம். 460 00:25:44,588 --> 00:25:46,631 நாம் ஒரு பெரிய குற்றம் பற்றி விசாரிக்கிறோம். 461 00:25:46,715 --> 00:25:48,508 ஆமாம், சரி. -கண்டிப்பாக, புரிந்தது. 462 00:25:48,592 --> 00:25:50,594 இது அர்த்தமற்றது. 463 00:26:04,524 --> 00:26:05,775 உள்ளே இருக்கும் போது என்ன நடந்தது? 464 00:26:06,359 --> 00:26:07,444 ஒன்றுமில்லை. 465 00:26:07,444 --> 00:26:10,655 நீ தடுமாறினாய். உன்னுடைய சக்தியும் தான். 466 00:26:10,739 --> 00:26:12,073 எனக்கு சற்று சோர்வாக இருந்தது. 467 00:26:13,033 --> 00:26:16,703 ஆனால் கொஞ்சம் காபி குடித்தேன், இப்போது சுறுசுறுப்பாக இருக்கிறேன். 468 00:26:16,703 --> 00:26:19,456 ஓட்டை உடைய ஒரு டோனட்டை சாப்பிட்டிருக்கலாம். பார்க்கவே அருமையாக இருந்தது. 469 00:26:19,456 --> 00:26:21,374 ரெயின்போ, நீ நடிக்க வேண்டாம்... 470 00:26:23,001 --> 00:26:24,002 இரு. 471 00:26:25,295 --> 00:26:26,296 ஓட்டைகளா? 472 00:26:27,881 --> 00:26:29,174 ஐயோ. -என்ன? 473 00:26:30,258 --> 00:26:32,761 என் வீட்டின் அடித்தளத்தில் ஓட்டை இருக்கிறது. அதை மூட மறந்துவிட்டோம். 474 00:26:32,761 --> 00:26:34,471 அது ஒன்றும் பெரிய விஷயமில்லை. 475 00:26:34,471 --> 00:26:37,682 பெரிய விஷயம் தான். விசாரணை செய்பவர் வீட்டிற்கு வரும்போது, அதைப் பார்க்கப் போகிறார். 476 00:26:37,766 --> 00:26:38,892 நாம் போக வேண்டும். 477 00:26:41,019 --> 00:26:43,647 நீ போட்ட குப்பையை எடுக்கிறாயா? 478 00:26:47,817 --> 00:26:49,486 சிறப்பாக இருந்தது. 479 00:26:50,403 --> 00:26:54,324 நீ கிட்டார் வாசிப்பது ஆச்சரியம். ஏன், அதை முன்பே சொல்லவில்லை? 480 00:26:54,324 --> 00:26:55,784 இது தான் உன் திறமை. 481 00:26:57,410 --> 00:26:59,287 ஹே, என்ன விஷயம்? 482 00:27:00,705 --> 00:27:02,207 என் உறவினன் தான் கிட்டார் வாசிக்க சொல்லிக் கொடுத்தான். 483 00:27:03,500 --> 00:27:05,919 எந்நேரமும் வாசிப்பேன், ஆனால்... 484 00:27:07,754 --> 00:27:10,215 அவன் இறந்த பிறகு நான் வாசிக்க... 485 00:27:11,675 --> 00:27:12,884 விரும்பவில்லை. 486 00:27:13,885 --> 00:27:16,972 புதிதாக வேறு ஒன்று செய்யலாம் என்று நினைத்தேன். 487 00:27:18,265 --> 00:27:21,601 எனக்கும் வருத்தமாக இருக்கு, சமீர். 488 00:27:22,602 --> 00:27:27,774 இசை நம்மை வேறொரு காலத்திற்கு கொண்டு செல்லும் என்று மால்கம் சொன்னார். 489 00:27:27,774 --> 00:27:31,528 நாம் போக விரும்பாத இடங்களுக்கும் சில சமயங்களில் கொண்டு செல்லும். 490 00:27:33,071 --> 00:27:34,114 சரியாகச் சொன்னாய். 491 00:27:34,781 --> 00:27:38,618 நீ சிறப்பாக வாசிக்கிறாய். 492 00:27:39,744 --> 00:27:43,498 நீ மறுபடியும் வாசிப்பதை கேட்க விரும்புகிறேன். நீ தயாரான பிறகு வாசி. 493 00:27:44,291 --> 00:27:45,417 நன்றி. 494 00:27:48,420 --> 00:27:49,421 நியா தான். 495 00:27:49,421 --> 00:27:53,508 அவள் வீட்டில் சந்திக்கச் சொல்கிறாள், கூடவே என்னை ஒரு பக்கெட் நிறைய... 496 00:27:54,134 --> 00:27:55,886 இரு. என்ன? 497 00:27:59,723 --> 00:28:01,641 முதல் முறை என்றாலும் இருவரும் நன்றாக செய்கிறீர்கள். 498 00:28:01,725 --> 00:28:02,976 இது பயனளிக்கும் என்று நம்புவோம். 499 00:28:04,477 --> 00:28:07,063 உன் அம்மா அலெக்ஸ் தாம்சனுடன் பேசும் ரெக்கார்டிங் அவர்களிடம் இருப்பதை 500 00:28:07,147 --> 00:28:08,565 இப்பவும் என்னால் நம்ப முடியவில்லை. 501 00:28:08,565 --> 00:28:09,649 என்னாலும் தான். 502 00:28:09,733 --> 00:28:11,109 இது ரொம்பவே அச்சுறுத்தலாக இருக்கு. 503 00:28:11,818 --> 00:28:13,987 அதைக் கேட்ட போது, என் இதயமே நின்றுவிட்டது. 504 00:28:15,405 --> 00:28:19,117 பிறகு எல்லோரும் என் அம்மாவைப் பற்றி பொய் சொல்ல ஆரம்பித்தனர். 505 00:28:20,076 --> 00:28:22,871 நான் பயந்து போய், செய்வதறியாது திகைத்து நின்றுவிட்டேன். 506 00:28:24,122 --> 00:28:25,582 வருத்தமாக தான் இருக்கு, நியா. 507 00:28:26,583 --> 00:28:28,293 கவலைப்படாதே. நாம் இதைக் கண்டுபிடிப்போம். 508 00:28:29,252 --> 00:28:32,172 எல்லோரும், நன்றாக செய்தீர்கள். வேலை முடிந்தது. 509 00:28:33,548 --> 00:28:37,427 ஆஹா. இந்த பெயிண்ட் மற்றும் சிமெண்ட் எல்லாவற்றையும் மறைத்து விட்டது. 510 00:28:47,604 --> 00:28:51,566 உன் வீட்டின் அடிதளத்தில் ஒரு சுரங்க பாதை இருந்ததே யாருக்கும் தெரியாது. 511 00:28:51,650 --> 00:28:53,652 எனவே, இனி நீ அதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. 512 00:28:54,152 --> 00:28:56,071 யார் எலோக்வென்ட் பெசன்டை திருடினார்கள் என கண்டுபிடித்து, 513 00:28:56,071 --> 00:28:57,614 என் அம்மாவின் களங்கத்தை போக்கலாம். 514 00:28:57,614 --> 00:28:59,074 அப்போது தான் என் கவலை குறையும். 515 00:28:59,866 --> 00:29:01,618 சரி. பை! -குட் நைட். 516 00:29:50,667 --> 00:29:52,669 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்