1 00:00:06,216 --> 00:00:09,970 சிசேமே வொர்க் ஷாப் வழங்கும் 2 00:00:17,394 --> 00:00:18,395 மெட்ரோ நகரச் செய்திகள் 3 00:00:28,363 --> 00:00:29,739 அம்மா! அப்பா! 4 00:00:32,324 --> 00:00:33,952 அம்மா. என்ன நடக்கிறது? 5 00:00:33,952 --> 00:00:35,537 இந்த வாரியம் என்னைத் தற்காலிகமாக நீக்கி விட்டு 6 00:00:35,537 --> 00:00:37,539 பேராசிரியர் மெக்கார்மேக்கை தற்காலிகத் தலைவராக்கி இருக்கிறார்கள். 7 00:00:37,539 --> 00:00:40,041 காலையிலிருந்து நிருபர்களின் அழைப்புகளை தவிர்த்து வருகிறேன். 8 00:00:40,125 --> 00:00:41,543 எல்லோருக்கும் தெரிந்துவிட்டதா? 9 00:00:41,543 --> 00:00:44,588 அவளுடைய முற்றிலும் நியாயம் இல்லாத காரணமில்லாத பணி நீக்கம் பற்றியா? ஆமாம். 10 00:00:45,964 --> 00:00:48,300 அப்புறம், ஒரு குடும்ப விஷயத்திற்காக நான் விடுமுறை எடுக்கிறேன். 11 00:00:48,967 --> 00:00:52,846 ஆனால் விரைவில் எல்லோருக்கும் எலோக்வென்ட் பெசன்ட் விசாரணை பற்றித் தெரிய வரும். 12 00:00:55,223 --> 00:00:56,474 அப்பாடா. என் வக்கீல் வந்துவிட்டார். 13 00:00:57,434 --> 00:00:58,768 நாம் பிறகு பேசலாம். 14 00:01:01,313 --> 00:01:02,564 நான் பார்த்துக் கொள்கிறேன். 15 00:01:07,444 --> 00:01:09,321 “இப்போது நிறுத்து அல்லது இது வெளியே வரும்.” 16 00:01:10,113 --> 00:01:11,197 எது வெளியே வரும்? 17 00:01:30,592 --> 00:01:32,385 பேய் எழுத்தாளர் 18 00:01:36,014 --> 00:01:38,475 இட்ரிஸ், நீ தயாராகவில்லையா? 19 00:01:40,227 --> 00:01:42,062 சரி. 20 00:01:43,897 --> 00:01:45,482 நேற்று எப்போது வீட்டிற்கு வந்தீர்கள்? 21 00:01:45,482 --> 00:01:46,775 11:00 மணிக்குப் பிறகு. 22 00:01:47,692 --> 00:01:50,612 பல்கலைக்கழகம் ஆர்கைவ் அறையை திறந்துவிட்டது. அது என் பணியோடு சேர்ந்து இருக்கிறது. 23 00:01:50,612 --> 00:01:54,115 கல்வித்துறையில் முன்னணி நட்சத்திரம், லைலா பார்ன்ஸ் விக்ஃபோர்ட் பல்கலைக்கழகத்திற்காக 24 00:01:54,199 --> 00:01:57,077 தன் தைரியமான திட்டத்தை போன இலையுதிர் காலத்தில் அறிவித்து பலரின் கவனத்தை ஈர்த்தார். 25 00:01:57,077 --> 00:01:58,536 இதில் கட்டண குறைப்புகள் 26 00:01:58,620 --> 00:02:01,831 மற்றும் பழங்கால தொல்பொருட்களை அவற்றின் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்புவதும் அடங்கும். 27 00:02:01,915 --> 00:02:03,333 ஒரு சுவாரஸ்யமான திருப்பத்தில், 28 00:02:03,333 --> 00:02:05,877 தலைவர் பார்னஸ், நேற்று இரவு விடுமுறையில் சென்றார். 29 00:02:05,961 --> 00:02:08,004 பல்கலைகழகத்தின் அதிகாரப்பூர்வ செய்தி அவர் தன் குடும்ப விஷயத்திற்காக 30 00:02:08,004 --> 00:02:10,090 இதை செய்தார் என்று சொன்னாலும், 31 00:02:10,090 --> 00:02:13,718 விக்ஃபோர்ட் ஆசிரியர்கள் மற்றும் வாரிய உறுப்பினர் சிலர் அவரது முன்னேற்றங்கள் 32 00:02:13,802 --> 00:02:18,139 மிக அதிகமாக, மிக விரைவாக இருந்ததாக நினைத்ததாக நம் ஆட்கள் சொல்கிறார்கள். 33 00:02:18,223 --> 00:02:21,810 மேலும் விவரங்கள் இன்னும் சில நேரத்திற்கு பின்பு நமக்கு கிடைக்கும். சிந்தியா, நீங்கள் சொல்லுங்கள். 34 00:02:22,602 --> 00:02:25,647 நமக்கு ஒரு பிரச்சினை 35 00:02:30,944 --> 00:02:31,987 நியா, நீ நலமா? 36 00:02:32,737 --> 00:02:34,239 கண்டிப்பாக இல்லை. நீ நலமாக இருப்பாயா? 37 00:02:35,031 --> 00:02:37,200 என் பெற்றோரை இவ்வளவு கவலையாக பார்த்தது கிடையாது. 38 00:02:37,284 --> 00:02:40,745 நாம் செய்தவற்றை அவர்கள் கண்டுபிடித்தால், தாங்குவார்களா என்று தெரியாது. 39 00:02:40,829 --> 00:02:41,830 நாம் நிறுத்த வேண்டும். 40 00:02:41,830 --> 00:02:45,458 பயப்பட வேண்டாம். வேண்டாத நேரத்தில் நாம் ஆர்கைவ் அறையில் இருந்த 41 00:02:45,542 --> 00:02:47,711 அந்த காட்சிகள் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது. 42 00:02:47,711 --> 00:02:49,004 இரு. யார் அந்த அவர்கள்? 43 00:02:49,004 --> 00:02:50,755 ஏம்பர், லியம் மற்றும் மெக்கார்மேக். 44 00:02:50,839 --> 00:02:53,550 நம் வீடியோ அவர்களிடம் இருந்தால், வேறு என்ன இருக்கிறதோ எனத் தெரியவில்லையே? 45 00:02:53,550 --> 00:02:56,261 இரு. உண்மையில் இது நல்ல விஷயம். 46 00:02:56,261 --> 00:02:57,554 இது எப்படி நல்ல விஷயமாகும்? 47 00:02:57,554 --> 00:03:00,724 யோசித்துப்பார். நம்மை மிரட்டுகிறார்கள் என்றால், அவர்கள் பதட்டமாக இருக்கிறார்கள் என்று அர்த்தம். 48 00:03:01,224 --> 00:03:04,352 அந்த வீடியோவை அவர்கள் வெளியிட்டிருக்கலாம், ஆனால் செய்யவில்லையே. 49 00:03:04,936 --> 00:03:06,354 அவர்களுக்கு பதற்றம் இல்லை. 50 00:03:06,438 --> 00:03:08,773 நம்மை மிரட்டவில்லை. என்னை மிரட்டுகிறார்கள். 51 00:03:09,733 --> 00:03:11,568 என் அம்மா தான் குற்றம் சாட்டப்படுகிறார், 52 00:03:11,568 --> 00:03:14,529 நாம் திருட்டுத்தனமாக சுற்றுகிறோம் என தெரிந்தால், அவங்களுக்கு தான் பிரச்சினை. 53 00:03:14,613 --> 00:03:18,074 ஹாதோர்ன் கிளப்பில் இருந்த மாறுவேஷங்கள் பற்றி நாம் டோனவனிடம் சொல்ல வேண்டும். 54 00:03:18,158 --> 00:03:20,243 அவர் எப்படி நம்மை நம்புவார்? நம்மிடம் எந்த ஆதாரமும் இல்லையே. 55 00:03:20,327 --> 00:03:22,412 அந்த மாறு வேஷத்தை நாம் எடுக்கவில்லை. -தெரியும். 56 00:03:22,412 --> 00:03:24,873 சிட்டிடம் அவளது நண்பர்களைப் பற்றிய உண்மையை நான் சொல்லி 57 00:03:24,873 --> 00:03:27,292 ஹாதோர்ன் கிளப்பின் புகைப்படங்களை அவளை எடுக்கச் சொல்கிறேன். 58 00:03:27,292 --> 00:03:29,336 அதை வைத்து, ஏம்பரையும், லியமையும் டோனவன் விசாரிக்கலாம், 59 00:03:29,336 --> 00:03:31,087 ஆனால், மெக்கார்மேக் பற்றி நம்மிடம் ஆதாரம் இல்லையே. 60 00:03:31,171 --> 00:03:32,839 அவரைப் பற்றியும் ஏதாவது கண்டுபிடிக்கலாம். 61 00:03:32,923 --> 00:03:34,925 உண்மையில், மெக்கார்மேக் தான் ஈபியை மாற்றியிருக்கக்கூடும். 62 00:03:34,925 --> 00:03:36,009 ஈத்தன்! 63 00:03:36,009 --> 00:03:37,844 அவருக்கு அறிவு இருக்கிறது மற்றும்... -ஓ-ஹோ. 64 00:03:38,511 --> 00:03:39,679 ஹாய், டாட்! -ஹாய். 65 00:03:39,763 --> 00:03:42,140 மெக்கார்மேக். அவர் இங்கே என்ன செய்கிறார்? 66 00:03:42,224 --> 00:03:44,017 ஆலிவரின் குடும்பத்தோடு. 67 00:03:44,017 --> 00:03:46,102 எங்களிடம் ஏதாவது சொல்ல வேண்டுமா, ஆலிவர்? 68 00:03:48,521 --> 00:03:49,856 இல்லை என்று நினைக்கிறேன். 69 00:03:50,440 --> 00:03:51,441 நாம் என்ன செய்வது? 70 00:03:51,441 --> 00:03:54,277 நிச்சயம், அவர்களை கண்காணிக்கலாம். என்னோடு வாருங்கள். 71 00:03:54,945 --> 00:03:57,197 ஜாக்கிரதை. ரகசியமாக இல்லை என்றால், நம்மை கண்டுபிடித்து விடுவார். 72 00:04:02,577 --> 00:04:04,287 சார்லி. சமீர்! 73 00:04:05,330 --> 00:04:07,332 நல்ல ரகசியம். 74 00:04:07,832 --> 00:04:09,918 ஹாய், ஈத்தன். 75 00:04:10,627 --> 00:04:12,337 என்ன ஒரு இன்ப அதிர்ச்சி. 76 00:04:12,337 --> 00:04:14,631 இவர்கள் இருவரும் ஈத்தனின் பிறந்தநாளில் மேஜிக் செய்தார்கள். 77 00:04:14,631 --> 00:04:17,716 அவர்கள் ஆலிவரின் இளம் தொல்லியல் கிளப்பில் இருந்து, 78 00:04:17,800 --> 00:04:19,844 ஒரு பெரிய கண்டுபிடிப்பு செய்தார்கள். 79 00:04:20,512 --> 00:04:21,846 உங்கள் தோழி நியா எங்கே? 80 00:04:22,556 --> 00:04:25,684 ம், இங்கு தான் எங்கோ இருக்கிறாள். இங்கு இல்லை. 81 00:04:25,684 --> 00:04:28,436 சரி, எதற்காக புத்தக கடைக்கு வந்திருக்கிறீர்கள்? 82 00:04:28,937 --> 00:04:31,565 இன்று பிற்பாடு, நாங்கள் ஆலிவர் மாமாவின் நினைவு கூட்டம் ஏற்பாடு செய்கிறோம். 83 00:04:32,065 --> 00:04:34,150 இங்கேயா? -அது தான் ஆலிவரின் விருப்பம். 84 00:04:34,234 --> 00:04:35,860 இந்த இடத்தை நேசித்தான். 85 00:04:35,944 --> 00:04:37,362 ம், இப்போது தான் நினைவு வந்தது, டாட், 86 00:04:37,362 --> 00:04:39,823 ஆலிவர் கேட்ட அந்த தொல்பொருளை கொண்டு வந்தீர்களா? 87 00:04:39,823 --> 00:04:41,408 கொண்டு வந்திருக்கிறேன். 88 00:04:44,160 --> 00:04:48,999 இதோ இருக்கிறது. த ஸ்கராப் பீட்டில். 89 00:04:48,999 --> 00:04:51,042 ஆய்வுக் கூடத்தில் இருந்தா இதை எடுத்து வந்தீர்கள்? 90 00:04:51,126 --> 00:04:52,127 ஆமாம். 91 00:04:53,128 --> 00:04:54,337 ஆய்வு கூடமா? 92 00:04:55,422 --> 00:04:58,717 இளம் தொல்லியல் கலைஞராக, எனக்கு ஆர்வமாக இருக்கிறது. 93 00:04:58,717 --> 00:05:01,511 ஆலிவர் அங்கே கிளப்பிற்கு செல்லாதது எனக்கு ஆச்சரியமாக இருக்கு. 94 00:05:01,595 --> 00:05:05,098 ஆசிரியர்களும், மாணவர்களும் படிக்க அங்கே அற்புதமான தொல் பொருட்கள் உள்ளன. 95 00:05:05,098 --> 00:05:07,851 அது பார்ப்பதற்கு அழகாக இருக்கும் போல. 96 00:05:07,851 --> 00:05:11,104 ஈத்தன், நினைவு கூட்டத்திற்காக ஏதோ வரைய நினைத்தாய் மறந்து விடாதே. 97 00:05:11,104 --> 00:05:12,731 என்ன வரைவது என்று தெரியவில்லை. 98 00:05:12,731 --> 00:05:15,483 ஆய்வுகூடத்தில் அதைப் பற்றி யோசிக்கிறாயா? 99 00:05:15,567 --> 00:05:18,194 நிச்சயம், அங்கே சுவாரஸ்யமான எகிப்திய பொருட்கள் நிறைய இருக்கும். 100 00:05:19,112 --> 00:05:22,824 உனக்கு ஏதேனும் யோசனை வரலாம். உன்னோடுவர நானும் விரும்புகிறேன். 101 00:05:23,491 --> 00:05:24,659 அம்மா, நாமும் போகலாமா? 102 00:05:24,743 --> 00:05:27,120 ஈத்தன், நான் இன்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும். 103 00:05:27,120 --> 00:05:28,788 ம், டாட் உன்னை அழைத்து செல்வாரா? 104 00:05:28,872 --> 00:05:30,832 இல்லை. முடியாது. மன்னிக்கவும். என் புது வேலை... 105 00:05:30,916 --> 00:05:32,208 தயவு செய்யுங்களேன்? 106 00:05:36,171 --> 00:05:39,799 சரி. உங்கள் இருவரையும் ஆய்வு கூடத்திற்கு அழைத்துச்செல்ல முயற்சி செய்கிறேன். 107 00:05:39,883 --> 00:05:42,469 மிக்க மகிழ்ச்சி, டாட். -எனக்கும் தான். 108 00:05:42,469 --> 00:05:43,970 மால்கமை சந்தித்திருக்கிறீர்களா? 109 00:05:44,054 --> 00:05:47,349 அட, ஆமாம். ஹாய். நீ இங்கே வேலை செய்கிறாயா? 110 00:05:47,349 --> 00:05:49,017 ஈபியை மெக்கார்மேக் தான் மாற்றினார் 111 00:05:49,017 --> 00:05:51,937 என்பதற்கு ஆய்வுகூடத்தில் ஆதாரம் இருக்கக்கூடும். 112 00:05:51,937 --> 00:05:54,648 அதன் மூலம், நாம் ஈத்தன் மற்றும் நியாவின் அம்மாவிற்கு உதவலாம். 113 00:05:54,648 --> 00:05:57,025 அவர் ஆதாரங்களை அப்படியே வைத்திருப்பார் என்று நீ நம்புகிறாயா? 114 00:05:57,025 --> 00:05:58,109 கனவு காண்கிறாய், சமீர். 115 00:05:58,193 --> 00:05:59,986 ஹே. இரு. நாங்கள் உதவ முயற்சிக்கிறோம். 116 00:06:00,070 --> 00:06:01,071 உங்களால் உதவ முடியாது. 117 00:06:01,071 --> 00:06:03,657 மெக்கார்மேக் என்னைப் பற்றி விசாரித்தது தெரியுமா? அவர்களுக்கு நம்மை பற்றி தெரிந்துவிட்டது. 118 00:06:03,657 --> 00:06:06,743 என் அம்மாவை வேலை நீக்கம் செய்வது வரை, அல்லது, ஜெயிலுக்கு அனுப்பும் வரை ஓய மாட்டார்கள். 119 00:06:06,743 --> 00:06:09,204 நாம் அப்படி நடக்க விடக் கூடாது. -அது தான் நடக்கிறது. 120 00:06:09,204 --> 00:06:11,498 என் அம்மாவிற்கு வேலை போனது, அவர்கள் என்னை மிரட்டுகிறார்கள். 121 00:06:11,498 --> 00:06:13,124 இதை நாம் கைவிட முடியாது. 122 00:06:15,460 --> 00:06:16,461 நியா! 123 00:06:16,545 --> 00:06:17,629 அவளைப் போக விடு. 124 00:06:17,629 --> 00:06:20,215 ரொம்பவும் மன உளைச்சலில் இருக்கிறாள். அவள் வேண்டுமென்றே அப்படி சொல்லவில்லை. 125 00:06:20,757 --> 00:06:23,802 தெரியும், ஆனாலும் வருத்தமாக இருக்கிறது. -அவளைக் கொஞ்சம் தனியாக விடு. 126 00:06:23,802 --> 00:06:25,595 நாம் இந்த மர்மத்தை தொடர்ந்து ஆராய்வோம். 127 00:06:27,597 --> 00:06:29,432 இதோ, என் அக்கா அழைக்கிறாள். 128 00:06:29,516 --> 00:06:32,352 சிட் சந்திக்க வேண்டுமாம். என்ன நடக்கிறது என்று அவளிடம் சொல்கிறேன். 129 00:06:32,852 --> 00:06:35,105 வாழ்த்துக்கள். தொடர்பில் இரு. 130 00:06:37,440 --> 00:06:41,653 ஆலிவர் - நினைவு 131 00:06:46,533 --> 00:06:48,827 சார்லெட்‘ஸ் வெப் - இ.பி.ஒயிட் படங்கள் எடுத்தது கார்த் வில்லியம்ஸ் 132 00:06:48,827 --> 00:06:51,246 இ.பி. ஒயிட்டின், சார்லெட்‘ஸ் வெப். 133 00:06:51,246 --> 00:06:53,748 சிறப்பு, ஆலிவர். நிறைய புத்தக கதாபாத்திரங்கள். 134 00:07:00,964 --> 00:07:02,132 என்ன நடக்கிறது? 135 00:07:22,068 --> 00:07:25,030 ஆலிவர்? என்னை புத்தகத்திற்குள் அனுப்பிவிட்டீர்களா? 136 00:07:25,655 --> 00:07:27,908 ஈடித்! ஈடித்! 137 00:07:28,867 --> 00:07:31,161 வீக்லி கிரானிக்கிளின் நிருபரை நீ அழை. 138 00:07:31,161 --> 00:07:34,581 என்ன நடந்தது என்று அவரிடம் சொல். இது பற்றி தெரிந்துகொள்ள அவர் விரும்புவார். 139 00:07:35,081 --> 00:07:36,708 ஒரு புகைப்படக்காரரை கூட அழைத்து வருவார். 140 00:07:37,250 --> 00:07:40,212 இந்த மாநிலம் முழுவதிலும், நம் பன்றி போல மிக பிரமாதமான பன்றி வேறெங்கும் இல்லை. 141 00:07:40,837 --> 00:07:41,838 பிரமாதமான 142 00:07:41,922 --> 00:07:44,132 லர்வி, நீ வில்பருக்காக ஒரு பதாகை செய்ய வேண்டும். 143 00:07:44,716 --> 00:07:47,677 பன்றியை கவுன்டி கண்காட்சிக்கு அழைத்து செல்ல முடிவு செய்திருக்கிறேன். 144 00:07:48,261 --> 00:07:52,599 பெரிய பதாகை செய்து, பச்சை வண்ணம் அடித்து, தங்க எழுத்துக்களால் எழுது. 145 00:07:53,308 --> 00:07:54,601 என்ன எழுத்துக்கள் வேண்டும்? 146 00:07:54,601 --> 00:07:57,020 சக்கர்மேனின் புகழ் பெற்ற பன்றி. 147 00:08:00,565 --> 00:08:01,399 வா. 148 00:08:04,611 --> 00:08:06,488 நிஜமாகவே இந்த புத்தகத்தைப் படிக்க விரும்புகிறேன். 149 00:08:13,203 --> 00:08:17,290 சிட்னி? மந்திரவாதியின் மறைவிடமா? இங்கே ஏன் சந்திக்க சொன்னாய்? 150 00:08:17,374 --> 00:08:20,377 தொழில்முறை மந்திரவாதிகள் நிகழ்ச்சி செய்வதை பார்க்க நீ விரும்பினாய். 151 00:08:20,377 --> 00:08:24,631 நீ இனிமையானவள், எனக்கு மகிழ்ச்சி. ஆனால் நான் உன்னிடம் சொல்ல... 152 00:08:24,631 --> 00:08:26,341 நீ ஆர்வமாக இருக்கிறாய் என்று நினைக்கிறேன். 153 00:08:27,717 --> 00:08:29,511 அந்த டிக்கெட்டுகள் சுலபமாக கிடைக்கவில்லை. 154 00:08:30,011 --> 00:08:31,096 ஏம்பர். 155 00:08:32,264 --> 00:08:34,515 படிக்கும் காலத்தில் இருந்து நான் விக்ஃபோர்டில் இருக்கிறேன், 156 00:08:34,599 --> 00:08:37,143 பல்கலைக்கழகத்தோடு எனக்கு நெருங்கிய சம்பந்தம் இருக்கிறது. 157 00:08:37,143 --> 00:08:38,227 அது சிறப்பு. 158 00:08:38,311 --> 00:08:40,063 ஆஸ்ட்ரிட், இன்னும் கொஞ்சம் நேரம் நமக்கு தேவைப்படும். 159 00:08:40,145 --> 00:08:41,981 ஆய்வுக்கூடத்திற்கு அவர்களை நீ அழைத்து செல்வாயா? 160 00:08:42,065 --> 00:08:43,108 சரி. -நன்றி. 161 00:08:44,401 --> 00:08:48,572 இப்போது, இந்த இடத்திற்கு வலிமையான நம்பகமான தலைமை தேவை, 162 00:08:48,572 --> 00:08:50,407 அதை நான் கொடுக்க விரும்புகிறேன். 163 00:08:50,407 --> 00:08:52,534 ஹாய். என் பெயர் ஆஸ்ட்ரிட். 164 00:08:52,534 --> 00:08:56,705 பேராசிரியர் மெக்கார்மேக்கிற்கு தாமதம் ஆவதால், நான் உங்களை ஆய்வுக்கூடத்திற்கு அழைத்துச் செல்கிறேன். 165 00:08:56,705 --> 00:09:01,084 ஏனென்றால் குழந்தை பராமரிப்பு கூட என் வேலையின் பகுதியாகி விட்டது. என்னோடு வாருங்கள். 166 00:09:04,921 --> 00:09:07,465 லைலா பார்ன்ஸ் தலைவர் 167 00:09:22,606 --> 00:09:23,607 “பிரமாதமான?” 168 00:09:29,195 --> 00:09:31,656 நான் சார்லெட்டை எப்படி கண்டுபிடிப்பது? 169 00:09:32,282 --> 00:09:33,658 உனக்கு சார்லெட்டை தெரியுமா? 170 00:09:34,951 --> 00:09:36,369 நீ பேசுவாயா? 171 00:09:37,871 --> 00:09:41,207 இல்லை. எனக்கு சார்லெட் தெரியாது. அவளிடம் வலை இருக்கிறது என்று தெரியும். 172 00:09:41,291 --> 00:09:43,293 கண்டிப்பாக உண்டு, முட்டாளே. அவள் ஒரு சிலந்தி. 173 00:09:44,961 --> 00:09:45,921 உவாக். சிலந்திகள். 174 00:09:45,921 --> 00:09:47,672 ஹே, சார்லெட் என் தோழி. 175 00:09:47,756 --> 00:09:49,424 மன்னிக்கவும். எனக்கு அவை அருவருப்பானவை. 176 00:09:49,424 --> 00:09:50,842 அது மிக மோசம். 177 00:09:52,302 --> 00:09:54,429 நாம் எல்லோரும் நண்பர்களாக முடியும் என்று நம்புகிறேன். 178 00:09:57,140 --> 00:10:01,811 உனக்கு மாயாஜாலம் பிடிக்கும் என்று சிட் சொன்னாள், அதனால் நாம் நிகழ்ச்சிக்கு போக ஏற்பாடு செய்துள்ளேன். 179 00:10:02,979 --> 00:10:05,982 இப்போது நீ நன்றி சொல்ல வேண்டும். -நன்றி. 180 00:10:06,608 --> 00:10:08,777 அதிர்ச்சியில் இருக்கிறாள். வா. நம் இடத்தை தேடுவோம். 181 00:10:15,367 --> 00:10:17,285 ஓ. இந்த இடத்தைப் பாரு. 182 00:10:17,369 --> 00:10:20,121 எல்லா தொல்லியல் பேராசிரியர்களும் இங்கே தான் வேலை செய்வார்களா? 183 00:10:20,205 --> 00:10:22,165 ஆமாம், ஆனால் டாட் தான் அதிகாரி. 184 00:10:22,916 --> 00:10:26,545 அப்படியென்றால், இங்கே தான் அவருடைய பழைய எகிப்து பொருட்களை வைப்பாரா? 185 00:10:26,545 --> 00:10:28,755 ஆமாம். எனவே, எதையும் உடைக்காதே. 186 00:10:33,969 --> 00:10:36,596 இரண்டு கயிறுகள் இருக்கின்றன, ஆனால் அவை ஒன்றாகிவிடும். 187 00:10:37,847 --> 00:10:38,890 இது அருமை தானே? 188 00:10:44,187 --> 00:10:45,230 இதோ வந்து விட்டோம். 189 00:10:45,230 --> 00:10:47,691 ஓ. இது எப்படி வேலை செய்யும்? 190 00:10:47,691 --> 00:10:51,236 இங்கே, மந்திரவாதிகள் ஒவ்வொரு மேஜையாக சென்று மாயாஜாலம் செய்வார்கள். 191 00:10:51,236 --> 00:10:54,573 நிகழ்ச்சி முழுவதும் தந்திரங்கள் பெரிதாகவும் இருக்கும், ஆச்சரியப்படவும் வைக்கும். 192 00:10:55,282 --> 00:10:59,494 ஹலோ! ஹலோ, வரவேற்கிறோம்... -அடடா, இவர் மேஜிக் மார்லா. 193 00:10:59,578 --> 00:11:01,413 இணையத்தில் அவளை பின்தொடர்கிறேன். 194 00:11:01,413 --> 00:11:05,000 சார்லி, இங்கே உட்காரு. ஒருவரை ஒருவர் நாம் புரிந்துகொள்ள முடியும். 195 00:11:05,500 --> 00:11:06,918 ம், சரி. 196 00:11:14,718 --> 00:11:16,177 என்னிடம் நிறைய கேள்விகள் இருக்கிறது. 197 00:11:17,220 --> 00:11:18,221 சிறப்பு. 198 00:11:22,267 --> 00:11:23,268 இது எதற்காக? 199 00:11:24,728 --> 00:11:26,104 ஜாக்கிரதை! 200 00:11:26,605 --> 00:11:28,064 பரவாயில்லை, ஆஸ்ட்ரிட். 201 00:11:28,148 --> 00:11:32,402 ஆலிவர் மாமா இதை பயன்படுத்த சொல்லிக் கொடுத்தார். இப்படித்தான் எகிப்தியர்கள் எழுதினார்கள். 202 00:11:32,402 --> 00:11:34,195 இதை பயன்படுத்தி நீ வரையலாமே? 203 00:11:34,279 --> 00:11:35,572 அதை பழமையானதாக மாற்றி காட்டலாம். 204 00:11:35,572 --> 00:11:40,994 அது நல்ல யோசனை. ஸ்பிங்க்சில் நானும் ஆலிவர் மாமாவும் இருப்பது போல வரைகிறேன். 205 00:11:44,915 --> 00:11:47,167 ஹே, அந்த அறையில் என்ன இருக்கிறது? 206 00:11:47,167 --> 00:11:49,794 அங்கே தான் டாட் தன் சொந்த ஆராய்ச்சிகளை வைக்கிறார் போலும். 207 00:11:50,629 --> 00:11:51,630 அப்படியா? 208 00:11:59,304 --> 00:12:00,305 இதோ வருகிறேன். 209 00:12:03,934 --> 00:12:05,352 மன்னிக்கவும். 210 00:12:06,269 --> 00:12:09,314 தலைவர் மெக்கார்மேக்கிற்கு யாரும் அங்கே செல்வது பிடிக்காது. அது தடை செய்யப்பட்ட இடம். 211 00:12:21,701 --> 00:12:22,744 உன் பெயர் என்ன? 212 00:12:22,744 --> 00:12:25,789 நியா. ஹாய், உன்னை சந்திப்பதில் மகிழ்ச்சி. 213 00:12:25,789 --> 00:12:29,542 உன்னுடைய வலையில், ஏன் “பிரமாதமாக” என்று எழுதினாய்? 214 00:12:30,377 --> 00:12:32,796 அது என்னைப் பற்றியது. நான் தான் வில்பர், நான் பிரமாதமானவன். 215 00:12:32,796 --> 00:12:34,673 ரொம்பவும் தலைகனம் ஆகிவிட்டான். 216 00:12:35,340 --> 00:12:36,841 நான் வெளியே தெரிய சார்லெட் முயன்றாள், 217 00:12:36,925 --> 00:12:40,595 எனவே, கவுன்டி கண்காட்சிக்கு என்னை அழைத்துச் சென்று பரிசு வெல்ல விவசாயி சக்கர்மேன் நினைத்தார். 218 00:12:40,679 --> 00:12:42,889 நாம் இன்று அங்கே தான் போகிறோம்! சரியா, சார்லெட்? 219 00:12:42,973 --> 00:12:44,849 நான் வர முடியும் என்று தோன்றவில்லை, வில்பர். 220 00:12:45,433 --> 00:12:46,851 என்ன? ஏன் முடியாது? 221 00:12:47,477 --> 00:12:50,438 எனக்கு வேறு வேலைகள் இருக்கின்றன. 222 00:12:51,565 --> 00:12:53,650 நீ இல்லாமல் நான் எங்கும் போனதில்லையே. 223 00:12:53,650 --> 00:12:56,361 கவுன்டி கண்காட்சி இதற்கு ஒரு நல்ல தொடக்கமாக இருக்கலாம். 224 00:12:57,237 --> 00:13:02,409 சிறிது நேரம் படுத்துக்கொள்ளப் போகிறேன். இப்போதெல்லாம் சோர்வாக இருக்கிறது. 225 00:13:11,585 --> 00:13:15,171 ஆக, ஆலிவர், நான் வில்பரை கண்காட்சிக்கு அழைத்துச் செல்ல வேண்டுமா? 226 00:13:17,299 --> 00:13:18,842 அவள் யாரிடம் பேசுகிறாள்? 227 00:13:18,842 --> 00:13:20,552 அவளுக்கு மனநிலை சரியில்லை என நினைக்கிறேன். 228 00:13:26,975 --> 00:13:30,478 சரி. சார்லி, உண்மையைச் சொல். முதல் கேள்வி. 229 00:13:31,771 --> 00:13:33,440 ம், மன்னிக்கவும். இதோ வருகிறேன். 230 00:13:36,026 --> 00:13:37,777 நீ என்னை காப்பாற்றினாய். 231 00:13:38,361 --> 00:13:39,404 எதிலிருந்து? 232 00:13:39,404 --> 00:13:42,240 ஏம்பர். “மந்திரவாதியின் மறைவிடத்திற்கு” எனக்கும் சிட்டுக்கும் டிக்கெட் வாங்கினாள். 233 00:13:42,324 --> 00:13:44,659 என்னிடம் கேட்க நிறைய கேள்விகள் இருக்கின்றன என்று சொல்கிறாள். 234 00:13:44,743 --> 00:13:48,496 நியா எப்படி உணர்கிறாள் என்று எனக்குத் தெரியும். இது பயமுறுத்த ஆரம்பிக்கிறது. 235 00:13:48,580 --> 00:13:50,290 இல்லை, இது சிறப்பு. 236 00:13:50,290 --> 00:13:53,752 நீ அவளைப் பேச வைத்தால், தடுமாறி நமக்கு ஏதாவது தகவல் சொல்லக்கூடும். 237 00:13:53,752 --> 00:13:57,047 சொல்வது சுலபம், செய்வது தான் கடினம். ஆய்வுக்கூடத்தில் என்ன நடக்கிறது? 238 00:13:57,047 --> 00:13:58,131 நன்றாக இருக்கிறது. 239 00:13:58,882 --> 00:14:01,635 மெக்கார்மேக் தன் சிறப்பு ஆராய்ச்சிகளை வைக்கும் ஒரு அறை இருக்கிறது. 240 00:14:01,635 --> 00:14:04,054 அங்கு ஏதோ மறைத்து வைத்திருக்கிறார். 241 00:14:04,054 --> 00:14:05,722 போலிகளை உருவாக்கும் கருவிகளா? 242 00:14:05,722 --> 00:14:07,182 அல்லது உண்மையான ஈபியாக கூட இருக்கலாம். 243 00:14:07,182 --> 00:14:10,227 அது உதவியாக இருக்கும். வாழ்த்துக்கள். 244 00:14:10,227 --> 00:14:11,311 உனக்கும் தான். 245 00:14:11,311 --> 00:14:12,812 தொல்லியல் ஆராய்ச்சி ஆய்வுக்கூடம் 246 00:14:20,153 --> 00:14:21,947 என்னோடு போக ஏன் அவள் விரும்பவில்லை? 247 00:14:21,947 --> 00:14:24,032 தெரியவில்லை. சோர்வாக இருக்கிறாள். 248 00:14:24,741 --> 00:14:28,578 எனக்கு சார்லெட் பற்றி கவலையாக இருக்கிறது. சமீபமாக அவள் அமைதியாக இருக்கிறாள். 249 00:14:29,412 --> 00:14:30,956 நீ அவளிடமே ஏன் கேட்கக் கூடாது? 250 00:14:30,956 --> 00:14:33,333 நல்ல யோசனை. கேட்கிறேன். இப்போது. 251 00:14:36,002 --> 00:14:37,587 ம், இரு. 252 00:14:39,297 --> 00:14:43,760 என்னோடு வருவாயா, நியா? எனக்கு பதற்றமாக இருக்கிறது. 253 00:14:44,344 --> 00:14:45,428 கண்டிப்பாக வருகிறேன், வில்பர். 254 00:14:45,512 --> 00:14:46,846 நன்றி, நியா. 255 00:14:53,603 --> 00:14:54,813 சிட் பரிசுகள் விற்கும் கடைக்கு போய் இருக்கிறாள். 256 00:14:56,982 --> 00:14:57,983 சிறப்பு. 257 00:15:02,279 --> 00:15:04,364 ஒன்றை புரிந்துகொள்ள எனக்கு உதவி செய்வாயா? 258 00:15:04,364 --> 00:15:05,532 கண்டிப்பாக. செய்கிறேன். 259 00:15:06,866 --> 00:15:08,535 உனக்குத் தெரியுமா என்று தெரியவில்லை, 260 00:15:08,535 --> 00:15:11,371 நான் பேராசிரியர் மெக்கார்மேக்கின் உதவி ஆசிரியர். 261 00:15:11,371 --> 00:15:13,039 அப்படியா? எனக்குத் தெரியாது. 262 00:15:13,540 --> 00:15:15,458 எலோக்வென்ட் பெசன்ட் போலி ஆக்கப்பட்டது என்று நீயும் உன் நண்பர்களும் 263 00:15:15,542 --> 00:15:17,252 கண்டுபிடித்ததாக அவர் சொன்னார். 264 00:15:17,252 --> 00:15:18,461 அடடா. அப்படியா? 265 00:15:18,545 --> 00:15:22,340 மூன்று உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் தாங்களாகவே இதை கண்டுபிடித்தது ஆச்சரியம்தான். 266 00:15:23,466 --> 00:15:26,303 அவர்களுக்கு வேறு உதவி இல்லாமல். 267 00:15:32,601 --> 00:15:35,437 உன் மாமா இங்கே உன்னை அடிக்கடி அழைத்து வந்தாரா? 268 00:15:35,937 --> 00:15:38,732 ஆமாம். இது விசித்திரம். 269 00:15:39,482 --> 00:15:42,152 இதையெல்லாம் பயன்படுத்தும்போது அவர் நினைவு வருகிறது. 270 00:15:43,069 --> 00:15:44,070 நல்ல நினைவுகள் தானே? 271 00:15:44,738 --> 00:15:46,406 ஆமாம். நல்லவை தான். 272 00:15:47,490 --> 00:15:49,826 உன் உறவினரை ஞாபகப்படுத்தும் ஏதாவது விஷயங்கள் நீ செய்வாயா? 273 00:15:51,286 --> 00:15:52,871 நாம் பேசியதை நினைவு வைத்திருக்கிறாயே. 274 00:15:53,955 --> 00:15:58,084 மறுபடியும் கிட்டார் வாசிக்க விரும்புகிறேன். அவர் தான் எனக்கு சொல்லிக் கொடுத்தார். 275 00:15:58,168 --> 00:15:59,169 நீ வாசிக்க வேண்டும். 276 00:16:02,380 --> 00:16:03,548 சரி, என்ன நடந்தது? 277 00:16:05,133 --> 00:16:07,385 என்ன சொல்கிறாய்? -அட சொல்லு, சமீர். 278 00:16:07,469 --> 00:16:11,056 அந்த ஸ்குரு, நினைவிருக்கிறதா? நீ ஆலிவர் மாமாவின் மர்மத்தைக் கண்டுபிடித்தாயா? 279 00:16:14,226 --> 00:16:15,810 கிட்டத்தட்ட நெருங்கிவிட்டோம். 280 00:16:15,894 --> 00:16:19,439 உண்மையில், இந்த அறையில் இருக்கும் ஏதோ ஒன்று நமக்கு உதவக்கூடும். 281 00:16:19,439 --> 00:16:21,942 ஆனால், என்னால் அதை நெருங்க முடியவில்லை. 282 00:16:21,942 --> 00:16:24,152 அதனால் தான் இங்கே வர நீ விரும்பி இருக்கிறாய். 283 00:16:24,236 --> 00:16:26,613 என்னிடம் சொல்லி இருக்கலாம். இதோ செய்கிறேன். 284 00:16:30,200 --> 00:16:33,620 ஆஸ்ட்ரிட், எனக்கு பசிக்கிறது. 285 00:16:33,620 --> 00:16:35,497 சாப்பிட ஏதாவது இருக்கிறதா? 286 00:16:35,497 --> 00:16:37,082 குழந்தை பராமரிப்பாளர் மற்றும் சமையல்காரர். 287 00:16:37,666 --> 00:16:39,876 ஏன் கூடாது? இதோ வருகிறேன். 288 00:16:41,044 --> 00:16:42,045 நன்றி. 289 00:16:43,922 --> 00:16:46,508 வெண்டிங் இயந்திரங்கள் பக்கத்தில் உள்ளன. விரைவாக போ. 290 00:16:46,508 --> 00:16:48,927 நான் பார்த்துக்கொள்கிறேன். -நன்றி. ஈத்தன். 291 00:16:55,058 --> 00:16:58,311 சார்லெட்! உன்னிடம் ஒரு கேள்வி கேட்கணும்! சார்லெட்! 292 00:16:58,395 --> 00:17:00,689 வில்பர், என்ன அது? 293 00:17:01,523 --> 00:17:03,441 உன்னால் முடியும். அவளிடம் கேள். 294 00:17:03,525 --> 00:17:05,360 எல்லாம் நலமா, வில்பர்? 295 00:17:05,944 --> 00:17:09,781 இல்லை, இல்லை. நீ எப்போதும் அமைதியாக சோர்வாக இருக்கிறாய். 296 00:17:09,863 --> 00:17:11,366 கவலையாக இருக்கிறது, சார்லெட். 297 00:17:12,700 --> 00:17:16,912 கவலைப்படத் தேவையில்லை, வில்பர். எல்லாம் நலமாக இருக்கிறது. 298 00:17:16,997 --> 00:17:18,832 பிறகு ஏன் என்னோடு கண்காட்சிக்கு வர மறுக்கிறாய்? 299 00:17:18,832 --> 00:17:22,710 வர விருப்பம் இல்லாமல் இல்லை. வர முடியவில்லை. 300 00:17:22,794 --> 00:17:26,798 அதுதான் ஏன்? நீ போகவில்லை என்றால், நானும் போக மாட்டேன்! 301 00:17:28,216 --> 00:17:30,719 வில்பர், நிறுத்து! இப்போதே திரும்பி வா! 302 00:17:32,721 --> 00:17:34,180 எனக்கு ஆலிவரைத் தெரியும். 303 00:17:35,098 --> 00:17:36,850 அவர் ஏன் குழந்தைகள் கிளப் பற்றி சொல்லவில்லை? 304 00:17:38,685 --> 00:17:40,770 நீ பொய் சொல்கிறாய் போல. 305 00:17:41,479 --> 00:17:43,565 அல்லது ஏதாவது மறைக்கிறாய். 306 00:17:45,650 --> 00:17:49,237 வந்து, இது ஒரு உண்மையான விசாரணை. 307 00:17:50,113 --> 00:17:52,324 நீயும் உன் நண்பர்களும் கவனமாக இருக்க வேண்டும். 308 00:17:52,324 --> 00:17:53,617 அது என்ன மிரட்டலா? 309 00:17:54,826 --> 00:17:56,912 யாரோடு மோதுகிறாய் என்று உனக்குத் தெரியவில்லை. 310 00:17:58,246 --> 00:18:00,248 ஒரு நினைவு பொருள் வாங்கி வந்தேன், சார்லி. 311 00:18:03,752 --> 00:18:06,963 தந்திர கார்டுகள். நன்றி, சிட். -பரவாயில்லை. 312 00:18:07,547 --> 00:18:09,674 ஏதாவது நல்ல மாயாஜாலத்தை நான் தவறவிட்டு விட்டேனா? 313 00:18:09,758 --> 00:18:12,010 இன்னும் இல்லை, ஆனால் என்னிடம் கார்டு தந்திரம் இருக்கிறது. 314 00:18:14,387 --> 00:18:15,889 உனக்காக, ஏம்பர். 315 00:18:52,008 --> 00:18:55,220 ஹாய், டாட்! வந்துவிட்டீர்களே! நான் வரைந்த படத்தைப் பார்க்கிறீர்களா? 316 00:18:55,220 --> 00:18:57,889 பார்க்கிறேன். மற்றவர்கள் எங்கே? 317 00:18:57,973 --> 00:18:59,766 வந்து விடுவார்கள். நீங்கள் வந்துப் பாருங்கள்! 318 00:19:00,267 --> 00:19:03,395 அடடா. ஸ்பிங்க்சில் நீயும் ஆலிவரும். 319 00:19:03,395 --> 00:19:06,815 ஆமாம். என்னை எகிப்திற்கு அழைத்து போவது பற்றி எப்போதும் பேசுவார். 320 00:19:08,733 --> 00:19:12,696 இந்த பாப்பிரஸ் மூன்று நாட்கள் பழையது போல இல்லை, மூன்று மில்லியன் வருடங்கள் எப்படி சொல்ல முடியும். 321 00:19:12,696 --> 00:19:15,657 இதை சரிசெய்ய பியூமிஸ் கற்கள் நமக்கு வேண்டும். 322 00:19:15,657 --> 00:19:17,409 என் இடத்தில் சில இருக்கின்றன. 323 00:19:20,996 --> 00:19:22,414 நான் போய் அவனிடம் பேசுகிறேன். 324 00:19:22,414 --> 00:19:23,832 நான் உன்னோடு வருகிறேன். 325 00:19:23,832 --> 00:19:25,000 நீ எப்படி வந்து... 326 00:19:29,212 --> 00:19:30,589 என் மீது ஏறிக்கொள். 327 00:19:30,589 --> 00:19:32,132 சீக்கிரமாக போக வேண்டும். 328 00:19:32,132 --> 00:19:33,383 கிச்சு கிச்சு மூட்டுகிறாய். 329 00:19:33,383 --> 00:19:34,676 அவன் அந்தப் பக்கம் போனான். 330 00:19:38,972 --> 00:19:41,057 ஒரு கார்டை எடு. ஏதாவது ஒரு கார்டு. 331 00:19:45,020 --> 00:19:49,816 நல்லது. அதை நினைவு வைத்து மறுபடியும் டெக்கில் வைத்து விடு. 332 00:19:53,194 --> 00:19:54,613 நல்ல திறமைசாலி. 333 00:19:54,613 --> 00:19:57,115 உனக்குப் புரியாது. 334 00:19:58,950 --> 00:20:00,327 டெக்கை கட் செய், ஏம்பர். 335 00:20:07,334 --> 00:20:08,585 இது தான் உன்னுடைய கார்டா? 336 00:20:12,839 --> 00:20:14,299 அவள் திறமைசாலி என்று நான் தான் சொன்னேனே. 337 00:20:18,345 --> 00:20:24,184 சரி! மாயாஜாலத்திற்கு தயாரா? யார் என் முதல் வாலண்டியர்? 338 00:20:24,684 --> 00:20:25,518 நான். 339 00:20:25,602 --> 00:20:27,938 நல்லது, சிறப்பு. இந்தப் பெட்டிக்கு பக்கத்தில் வருகிறாயா? 340 00:20:27,938 --> 00:20:31,358 நம் தைரியமான வாலண்டியருக்கு ஒரு பலத்த கைதட்டல் கொடுப்போம். 341 00:20:34,611 --> 00:20:35,862 ம், பரவாயில்லை! 342 00:20:35,946 --> 00:20:38,323 கவலைப்படாதீர்கள். என் படம் நன்றாக இருக்கும். 343 00:20:38,323 --> 00:20:40,742 ஐயோ. அந்த பியூமிஸ் கற்கள் அதை இன்னும் சிறப்பாக காட்டும். 344 00:21:09,062 --> 00:21:10,313 அவன் எங்கே இருப்பான்? 345 00:21:12,524 --> 00:21:14,276 மன்னிக்கவும். வில்பரைப் பார்த்தாயா? 346 00:21:14,276 --> 00:21:16,152 இல்லை. 347 00:21:16,236 --> 00:21:19,030 அவனை நீ ஓடவிடாமல் இருந்திருந்தால் இந்த மாதிரியான இக்கட்டான சூழ்நிலையில் இருந்திருக்க மாட்டோம். 348 00:21:19,114 --> 00:21:21,658 நானா? நான் உதவி பண்ணத் தான் முயல்கிறேன். 349 00:21:21,658 --> 00:21:24,995 வில்பர் உன்னை மதிக்கிறான், சார்லெட், நீ எதையோ மறைக்கிறாய் என்று அவனுக்குத் தெரியும். 350 00:21:25,870 --> 00:21:28,498 என்ன நடக்கிறது என்று வில்பரிடம் நீ சொல்லி விட்டால் தேவலை என்று தோன்றுகிறது. 351 00:21:29,332 --> 00:21:31,960 என்னை நம்பு. மற்றவர்கள் நம்மிடம் பொய் சொன்னால் அது ரொம்ப கஷ்டமாக இருக்கும். 352 00:21:31,960 --> 00:21:36,131 எனக்கு நேரம் கிடைக்கும் போது அவனிடம் சொல்கிறேன். நாம் மறுபடியும் தேடிப்பார்ப்போம். 353 00:21:40,844 --> 00:21:44,055 சிட்னியைத் துண்டு துண்டாக ஆக்கப் போகிறோம், 354 00:21:44,139 --> 00:21:47,142 கைகளைத்தட்டி உற்சாகப்படுத்துங்கள். 355 00:21:50,687 --> 00:21:53,648 சிட்னி, இது உங்களைக் கொஞ்சம் காயப்படுத்தலாம். 356 00:21:56,526 --> 00:21:58,111 என்னை ஏன் புகைப்படம் எடுத்தீர்கள்? 357 00:21:58,111 --> 00:21:59,404 நீ ஏன் எங்களைப் பின்தொடர்ந்தாய்? 358 00:21:59,404 --> 00:22:00,488 நான் பின்தொடரவில்லை. 359 00:22:01,531 --> 00:22:03,575 எங்களுக்கு எல்லாம் தெரியும், எங்களால் நிரூபிக்க முடியும். 360 00:22:04,367 --> 00:22:07,621 நீயும் உன் நண்பர்களும் என்னைப் பின்தொடர்கிறீர்கள் என்பதைத் தான் இந்த புகைப்படம் நிரூபிக்கும். 361 00:22:08,288 --> 00:22:09,623 எங்களிடம் அது மட்டும் இல்லை. 362 00:22:09,623 --> 00:22:13,668 நீ, லியம் மற்றும் உன் பாஸ் மெக்கார்மேக் எல்லோரும் மாட்டப் போகிறீர்கள். 363 00:22:17,380 --> 00:22:19,841 நீ நினைக்கின்ற மாதிரி நீ ஒன்றும் அவ்வளவு புத்திசாலியில்லை. 364 00:22:21,092 --> 00:22:23,470 அதற்கு என்ன அர்த்தம்? 365 00:22:23,470 --> 00:22:29,184 இப்போது, சிட்னி... துண்டுதுண்டாக்கப்பட்டுவிட்டார்! 366 00:22:29,184 --> 00:22:30,852 ஹே, சிட், நன்றாக இருக்கிறாய்! 367 00:22:33,063 --> 00:22:34,189 எங்களுக்கு புகைப்படம் வேண்டும். 368 00:22:36,733 --> 00:22:41,196 இந்த மாதிரி சின்னச் சின்ன வட்டங்கள் போடத் தான் விரும்பினாயா? 369 00:22:41,196 --> 00:22:44,699 எப்படி மாறுவது, கொஞ்சம் கொஞ்சமாக மறைவது என்பதையெல்லாம் ஏற்கனவே பார்த்து விட்டாயா? 370 00:22:46,117 --> 00:22:47,285 பார்க்க வேண்டுமா? -ஆமாம். 371 00:22:47,911 --> 00:22:49,412 இதோ. 372 00:22:50,830 --> 00:22:53,416 இது பிடித்திருக்கிறதா? -நன்றாக இருக்கிறது. 373 00:22:55,544 --> 00:22:56,795 நான் எதை தவறவிட்டேன்? 374 00:22:57,462 --> 00:22:59,339 கழிவறையைக் கண்டிபிடித்தாயா? 375 00:22:59,339 --> 00:23:00,674 ஆமாம். 376 00:23:01,675 --> 00:23:03,051 என்னுடைய ஓவியம் எப்படி இருக்கிறது? 377 00:23:04,010 --> 00:23:08,306 கிட்டத்தட்ட தத்ரூபமாக இருக்கிறது. ஒரு போலி மாதிரி. 378 00:23:09,933 --> 00:23:12,269 போலியாக ஒன்றை உருவாக்க வேண்டும் என்றால், நீ ஒரு நல்ல கலைஞனாக இருக்க வேண்டும். 379 00:23:12,269 --> 00:23:13,353 தவறாக எடுத்துக்கொள்ளாதே, ஈதன். 380 00:23:13,353 --> 00:23:16,273 பழங்கால பாபிரஸ். -என்ன சொல்கிறீர்கள்? 381 00:23:16,273 --> 00:23:19,442 புது பாபிரஸை யாரும் பழமையான ஒன்றாகத் தெரிகின்ற மாதிரிச் செய்ய முடியாது. 382 00:23:19,526 --> 00:23:21,736 உலகத்தில் உள்ள எல்லா பியூமைஸ் கற்கள் கொண்டு செய்தாலும் முடியாது. 383 00:23:23,572 --> 00:23:24,573 வாருங்கள். உங்களுக்குக் காட்டுகிறேன். 384 00:23:25,448 --> 00:23:28,076 நீங்கள் எப்படி போலியாகப் பண்ணுவது என்று எனக்குக் காட்டப் போகிறீர்களா? 385 00:23:28,743 --> 00:23:29,578 ஈதன், தொடர்ந்து செய். 386 00:23:33,707 --> 00:23:35,709 நன்றி, சிட்னி. 387 00:23:38,420 --> 00:23:41,506 அது உண்மையில் நன்றாக இருந்தது. உனக்கு ஒன்றுமில்லையே? 388 00:23:41,590 --> 00:23:43,300 உன்னிடம் பேச வேண்டும். இப்பொழுதே. 389 00:23:44,676 --> 00:23:46,094 சரி. கண்டிப்பாக பேசலாம். 390 00:23:48,847 --> 00:23:50,932 என்ன பிரச்சினை? என்னிடம் சொல். 391 00:23:51,683 --> 00:23:53,310 இதை இங்கே சொல்ல விரும்பவில்லை, 392 00:23:53,310 --> 00:23:56,521 அனால், ஏம்பர் உன்னுடைய தோழி கிடையாது. -என்ன? 393 00:23:56,605 --> 00:23:59,024 எலோக்வென்ட் பெசன்ட்டின் திருட்டில் நியாவின் அம்மாவை மாட்டி விட, லியம், பேராசிரியர் மெக்கார்மேக் 394 00:23:59,024 --> 00:24:00,525 ஆகியோரோடு சேர்ந்து வேலை செய்கிறாள். -என்ன? 395 00:24:00,609 --> 00:24:02,944 நூலகத்தில் இருந்த பழைய காகிதச் சுருள் போலியானது. அவர்கள் மாறுவேடம் அணிந்து... 396 00:24:03,028 --> 00:24:05,989 இது எவ்வளவு பைத்தியக்காரத்தனம் தெரியுமா? -அந்த மாறுவேட பொருட்கள் ஹாதோர்ன் கிளப்பின் 397 00:24:05,989 --> 00:24:07,991 உடைகள் வைக்கும் ரகசிய அறைகளின் பின் பக்கம் உள்ளன. 398 00:24:07,991 --> 00:24:09,492 அதை நீ தான் படம் எடுக்க வேண்டும். 399 00:24:09,576 --> 00:24:12,245 கிளப்பில் நீ என்ன செய்துகொண்டிருந்தாய்? -அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. கேள். 400 00:24:12,329 --> 00:24:14,706 நேற்று ஏம்பர் அவளுடைய படிப்பு சம்பந்தமாக வேலை செய்வதாக சொன்ன போது, 401 00:24:14,706 --> 00:24:16,708 என்னையும் என் நண்பர்களையும் பின்தொடர்ந்தாள். 402 00:24:16,708 --> 00:24:18,335 ம், பாரேன்? 403 00:24:18,335 --> 00:24:21,880 எங்களுக்கு அடையாளம் தெரியக் கூடாது என்பதற்காக, அவள் பச்சை நிறத் தொப்பி அணிந்திருந்தாள். 404 00:24:21,880 --> 00:24:23,423 ஏம்பரை ஏன் புகைப்படம் எடுத்தாய்? 405 00:24:23,423 --> 00:24:25,342 அவள் உன்னையும், உன் நண்பர்களையும் பொருட்படுத்தவில்லை. 406 00:24:25,342 --> 00:24:27,385 இல்லை, அவள் உன்னைத் தான் பொருட்படுத்தவில்லை. 407 00:24:27,469 --> 00:24:29,262 மூன்று வாரங்களுக்கு முன் வரையில் உனக்கு நண்பர்களே கிடையாது, 408 00:24:29,346 --> 00:24:31,932 இப்போது, ஹாதோர்ன் கிளப்பிற்காக உன்னைப் பரிசீலிக்க வேண்டுமா? 409 00:24:31,932 --> 00:24:34,226 மன்னித்துவிடு, சிட், ஏம்பர் உன்னை பயன்படுத்திக் கொள்கிறாள். 410 00:24:34,226 --> 00:24:35,644 நீ உள்ளே நுழையப் போவதில்லை. 411 00:24:37,771 --> 00:24:41,191 நீயே அதை சொல்லி இருக்கிறாய். உன்னைத் தேர்ந்தெடுக்க ஒரு காரணமும் இல்லை. 412 00:24:42,651 --> 00:24:45,946 இனிமேலும் உன்னிடம் பேச நான் விரும்பவில்லை. வீட்டுக்குப் போ. 413 00:24:51,201 --> 00:24:54,162 இங்கே நான் வைத்திருக்கின்ற பாபிரஸ் 3,000 வருடம் பழமையானது. 414 00:24:54,246 --> 00:24:55,956 எலோக்வென்ட் பெசன்ட் அளவுக்குப் பழமையானது. 415 00:24:55,956 --> 00:24:57,874 அதாவது, அது மதிப்பு வாய்ந்தது எல்லாம் கிடையாது, 416 00:24:57,958 --> 00:25:00,126 ஆனால், அதை பத்திரமாக வைத்துக்கொள்ள விரும்புகிறேன், ஏனென்றால்... 417 00:25:02,128 --> 00:25:03,129 என்ன பிரச்சினை? 418 00:25:03,213 --> 00:25:04,381 அதைக் காணோம்! 419 00:25:06,258 --> 00:25:07,759 என்னிடம் தான் அதன் குறியீடு இருக்கிறது. 420 00:25:10,011 --> 00:25:11,388 நான் வாரியத்திடம் பேச வேண்டும். 421 00:25:21,898 --> 00:25:24,609 நியா, பார்! அவன் இதன் வழியாகத் தான் தப்பித்திருக்க வேண்டும். 422 00:25:24,693 --> 00:25:26,236 எவ்வளவு பெரிய தவறு. 423 00:25:26,236 --> 00:25:29,239 நான் கவலைப்பட மாட்டேன். அவனுக்கு யோசிக்க நேரம் கிடைத்தால் கட்டாயம் திரும்பி வருவான். 424 00:25:29,239 --> 00:25:32,909 உனக்குப் புரியவில்லை. வில்பர் அந்த கண்காட்சிக்குப் போக வேண்டும். 425 00:25:32,993 --> 00:25:35,412 அவனால் போக முடியாவிட்டால், கிறிஸ்துமஸைக் கடக்க முடியாது. 426 00:25:35,996 --> 00:25:37,414 என்ன சொல்கிறாய்? ஏன்? 427 00:25:37,414 --> 00:25:39,791 இன்று நடக்கும் கண்காட்சியில் பரிசு வெல்லவில்லை என்றால், 428 00:25:39,791 --> 00:25:42,878 அவனும் மற்ற பன்றி மாதிரி கொல்லப்படுவான். 429 00:25:43,628 --> 00:25:46,631 அதாவது... உணவிற்காகவா? 430 00:26:41,895 --> 00:26:43,897 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்