1 00:00:17,470 --> 00:00:19,870 வைட்ஸ்டோன் இங்கே தானே இருக்கணும்? 2 00:00:20,070 --> 00:00:21,520 இதுதான் சரியான பள்ளத்தாக்கு. 3 00:00:22,600 --> 00:00:23,600 அது எங்கே போச்சு? 4 00:00:24,600 --> 00:00:27,150 என்ன இந்த வாரம் நகரங்கள் நகர்ந்த வண்ணமா இருக்கு? 5 00:00:44,870 --> 00:00:46,710 அது நகரலை போல. 6 00:00:56,390 --> 00:00:57,800 ட்ராகன்கள் நகர்கின்றன. 7 00:00:58,350 --> 00:01:00,710 ஏற்கனவே இமான், வெஸ்ட்ரன்னை பிடிச்சுட்டாங்க. 8 00:01:00,910 --> 00:01:05,500 நம் பாதுகாப்பு நிலையா இருக்கு, ஆனால் கில்மோருக்கு, எனக்கு விரைவில் உதவி தேவை. 9 00:01:05,700 --> 00:01:09,010 நகரத்தை மறைப்பது நிரந்தர தீர்வாக செய்யப்பட்டதல்ல. 10 00:01:09,210 --> 00:01:10,800 அல்யூராக்காக நான் பேச முடியாது, 11 00:01:11,000 --> 00:01:14,890 ஆனால் இந்த மறைக்கும் மந்திரம் என் சரும அழகை பாதிக்குது. 12 00:01:15,090 --> 00:01:17,360 நம் நிலைமை எனக்கு நல்லா புரியுது. 13 00:01:18,030 --> 00:01:22,850 ஆனால், இப்போதைக்கு, வைட்ஸ்டோனை காக்க அதை ஒளிப்பதுதான் ஒரே வழி. 14 00:01:23,050 --> 00:01:27,000 நீ என்ன செய்தாலும், காஸ், அது வேலைக்கானது என்பதில் மகிழ்ச்சி. 15 00:01:27,920 --> 00:01:30,570 - பெர்சி. - வாக்ஸ் மாகினா. 16 00:01:30,770 --> 00:01:33,780 மூணு வாரங்கள் கழித்து, நம்பிக்கை இழக்க தொடங்கினோம். 17 00:01:33,980 --> 00:01:34,880 மூணு வாரங்களா? 18 00:01:35,170 --> 00:01:37,180 நாங்க போய் மூணு நாள் தானே ஆச்சு. 19 00:01:37,550 --> 00:01:39,550 அந்த ஃபே சாம்ராஜ்யத்தை வெறுக்கறேன். 20 00:01:40,550 --> 00:01:44,270 உங்க நேர விரிவு பிரச்சனையை தவிர்த்து, நீங்க திரும்பியது நிம்மதி. 21 00:01:45,770 --> 00:01:47,480 அதுவும் புது தோற்றத்துடன். 22 00:01:48,650 --> 00:01:49,800 அது மாதிரி ஏதோ. 23 00:01:50,000 --> 00:01:51,840 உன்னை சந்திச்சதும் மகிழ்ச்சி, ஷான். 24 00:01:52,040 --> 00:01:53,940 மற்றவர்கள் எங்கே? 25 00:01:54,440 --> 00:01:55,680 வேடிக்கை கதை. 26 00:01:55,880 --> 00:01:58,030 அவர்களை தொலைத்தேன். 27 00:01:58,780 --> 00:02:01,230 அவ்வளவு வேடிக்கையல்ல. 28 00:02:01,430 --> 00:02:04,600 அம்ப்ரசில் தாக்கியபோது அவர்களிடமிருந்து பிரிக்கப்பட்டோம். 29 00:02:04,800 --> 00:02:06,210 எங்கு வேண்ணாலும் இருக்கலாம். 30 00:02:06,660 --> 00:02:09,330 அப்போ உன் நண்பர்களை தேட நான் உதவறேன். 31 00:02:10,540 --> 00:02:12,380 தொலைந்ததை காட்டு. 32 00:02:13,800 --> 00:02:15,170 சரி, உயிருடன் உள்ளனர். 33 00:02:17,170 --> 00:02:18,680 ஆனால் அந்த மக்கள் யார்? 34 00:02:19,590 --> 00:02:21,510 க்ராக் ஒளியலை போல. 35 00:02:21,930 --> 00:02:23,850 அவன் சுருங்கிட்டானா? 36 00:02:24,600 --> 00:02:27,100 நல்லவேளை எனக்கு மட்டும் அப்படி தோணலை. 37 00:02:27,390 --> 00:02:28,600 அய்யோ. 38 00:02:28,980 --> 00:02:30,760 வெஸ்ட்ரன்னில் இருக்கான் போல. 39 00:02:30,950 --> 00:02:31,940 வெஸ்ட்ரன்னா? 40 00:02:32,610 --> 00:02:36,030 என் தூதர்கள் கூறுவது, அந்த இடத்தை அம்ப்ரசில் ட்ராகன் பிடித்தான். 41 00:02:36,570 --> 00:02:38,700 உள்ளூர் மக்கள் தப்பித்தனர் அல்லது... 42 00:02:42,200 --> 00:02:44,330 அப்போ க்ராகுக்கு பெரிய பிரச்சனை. 43 00:02:51,960 --> 00:02:53,540 ஸ்ட்ராங்க்ஜா. 44 00:02:54,630 --> 00:02:56,210 ஹலோ, மாமா. 45 00:03:59,740 --> 00:04:04,280 தி லெஜண்ட் ஆஃப் வாக்ஸ் மாகினா 46 00:04:05,200 --> 00:04:07,310 பல வருடம் முன் நான் புரட்டி எடுத்த 47 00:04:07,510 --> 00:04:11,620 சின்ன பையன் இன்னும் சுருங்குவனு நான் எதிர்பார்க்கலை. 48 00:04:16,170 --> 00:04:19,000 செத்தவனை கோபப்படுத்திட்டேன் போல. 49 00:04:22,630 --> 00:04:25,260 நீ தொடங்கியதை முடிக்க வந்திருக்கேன். 50 00:04:25,680 --> 00:04:28,310 உன்னால் வெல்ல முடியாத சண்டைக்கு போகாதே. 51 00:04:28,890 --> 00:04:32,430 கோடரியில் படிந்த ரத்தக்கரையை பற்றி வரலாறு பேசாது. 52 00:04:32,890 --> 00:04:35,400 வரலாறு உன்னை பத்தி பேசும்னு நினைக்கறியா? 53 00:04:35,650 --> 00:04:39,470 பலம் பொருந்திய, கெவ்டாக்கை, 54 00:04:39,670 --> 00:04:42,640 டைட்டன்ஸ்டோன் கைமுட்டிகள் அணிந்தவனை, 55 00:04:42,840 --> 00:04:44,450 ஒரு ட்ராகன் முட்டி போட வெச்சதாமே. 56 00:04:45,240 --> 00:04:47,160 சொல்லு, மாமா, 57 00:04:47,660 --> 00:04:53,040 உன் சுருங்கிப்போன விரை இருக்கா, இல்லை அதையும் ட்ராகனிடம் கொடுத்துட்டியா? 58 00:04:56,040 --> 00:04:59,130 உன் தலை இருக்கும்போதே சொல்ல வந்ததை சொல்லு. 59 00:05:00,130 --> 00:05:01,210 சரி. 60 00:05:01,800 --> 00:05:04,510 இந்த மந்தையின் மரியாதையை மீட்க வந்திருக்கேன். 61 00:05:05,180 --> 00:05:10,640 எனவே, கெவ்டாக், ஒத்தைக்கு ஒத்தை சண்டைக்கு சவால் விடறேன். 62 00:05:16,690 --> 00:05:18,230 ஏற்கிறேன். 63 00:05:22,320 --> 00:05:25,100 - என்னுடன் வா. - சதுரத்தை ஏற்படுத்து. 64 00:05:25,300 --> 00:05:26,760 ஒரு திடலை உருவாக்கு. 65 00:05:26,960 --> 00:05:29,560 சே. அங்கே தனியா போனான்னு நம்ப முடியலை. 66 00:05:29,760 --> 00:05:30,980 நாம ஏதாவது செய்யணும். 67 00:05:31,180 --> 00:05:32,540 என்ன செய்யலாம்னு சொல்ற? 68 00:05:33,450 --> 00:05:34,410 கெய்லீ. 69 00:05:34,750 --> 00:05:37,020 நீ இங்கிருந்து போனு சொன்னேனே. 70 00:05:37,220 --> 00:05:38,190 இதை பார்க்காமலா? 71 00:05:38,390 --> 00:05:41,170 மந்தையின் விதிகள் இதோ. 72 00:05:43,050 --> 00:05:46,470 ஒருவர் இறக்கும்வரை சண்டை முடியாது. 73 00:05:47,630 --> 00:05:49,050 விதிகள் முடிந்தன. 74 00:05:49,800 --> 00:05:53,720 நல்லது. ஏன்னா அதற்கு மேல் என் மண்டையில் ஏறாது. 75 00:05:54,520 --> 00:05:57,560 இன்று என்ன ஆயுதம் கொண்டு வந்த, மருமகனே? 76 00:05:59,770 --> 00:06:00,730 சே. 77 00:06:01,360 --> 00:06:04,180 தற்சமயம் நிராயுதபாணியா இருக்கேன். 78 00:06:04,380 --> 00:06:05,740 உனக்கே தெரியுமே. 79 00:06:07,570 --> 00:06:08,990 நல்லது. 80 00:06:14,040 --> 00:06:15,580 உன் பலத்தை காட்டு. 81 00:06:45,190 --> 00:06:46,530 நாம உள்ளே போகணும். 82 00:06:48,240 --> 00:06:49,680 நீ இங்கேயே இருக்கணும். 83 00:06:49,880 --> 00:06:51,910 என் பார்வையிலிருந்து நீ தப்ப முடியாது. 84 00:06:53,830 --> 00:06:54,740 சரி. 85 00:07:04,670 --> 00:07:06,550 அங்கே என்ன இருக்கு? 86 00:07:08,510 --> 00:07:10,470 அவங்களை பிடிங்க! பிடிங்க! 87 00:07:12,340 --> 00:07:13,300 கெய்லீ! 88 00:07:14,760 --> 00:07:16,390 இல்லை! அவங்களை விடுங்க! 89 00:07:31,700 --> 00:07:34,410 நீ சாவதை பார்க்க உன் நண்பர்களை அழைத்தாயா? 90 00:07:35,030 --> 00:07:37,870 அவர்கள் நண்பர்களுக்கும் மேல். 91 00:07:38,450 --> 00:07:40,460 விளையாட்டுக்குதானே சொன்ன? 92 00:08:05,480 --> 00:08:07,150 நீ இங்கே வா. 93 00:08:08,730 --> 00:08:10,240 எனக்கு தெரிஞ்சிருக்கணும். 94 00:08:10,650 --> 00:08:14,700 குள்ளர்கள் மேல் உனக்கு எப்பவும் பரிதாபம் இருந்ததுண்டு. 95 00:08:20,830 --> 00:08:23,730 இந்த நாயின் தலை நொருங்குவதை யாருக்கு பார்க்கணும்? 96 00:08:23,930 --> 00:08:25,170 வேணாம்! 97 00:08:25,540 --> 00:08:27,650 இது உனக்கும் எனக்கும் இடையே! 98 00:08:27,850 --> 00:08:29,820 நீ தான் இதற்கு காரணம், க்ராக். 99 00:08:30,020 --> 00:08:35,140 நீ இந்த நகரத்துக்குள் காலெடுத்து வைத்ததுமே உன் நண்பர்களின் சாவு உறுதியானது. 100 00:08:36,260 --> 00:08:37,430 நண்பர்களே! 101 00:08:40,680 --> 00:08:41,890 பைக்! 102 00:08:46,190 --> 00:08:48,690 க்ராக் ஸ்ட்ராங்க்ஜா. 103 00:08:51,030 --> 00:08:53,610 உன் வலிமை எங்கிருந்து வரும்? 104 00:08:55,860 --> 00:08:59,240 உன் வலிமை எங்கிருந்து வரும்? 105 00:08:59,740 --> 00:09:02,200 என்ன? என்ன வலிமை? 106 00:09:02,580 --> 00:09:05,040 எவ்வளவு பலவீனமா இருக்கேன்னு தெரியலையா? 107 00:09:06,210 --> 00:09:10,460 உன் வலிமை எங்கிருந்து வரும்? 108 00:09:12,170 --> 00:09:13,420 க்ராக்! 109 00:09:16,590 --> 00:09:18,010 உன் உதவி தேவை. 110 00:09:20,850 --> 00:09:21,890 நான்... 111 00:09:23,270 --> 00:09:24,520 விருப்பப்... 112 00:09:25,810 --> 00:09:26,810 படுவது... 113 00:09:27,600 --> 00:09:33,240 ஆத்திரமடைய! 114 00:09:50,090 --> 00:09:54,210 என் நண்பர்களை இனி தொடாதே! 115 00:09:57,430 --> 00:09:59,470 அது அருமை. 116 00:09:59,930 --> 00:10:03,180 குட்டி க்ராகிடம் இன்னும் போராடும் குணம் இருக்கு. 117 00:10:10,190 --> 00:10:11,340 அய்யோ. 118 00:10:11,540 --> 00:10:13,860 எனக்கும் இருக்கு போல. 119 00:10:48,060 --> 00:10:49,850 எதுவுமே மாறலை, க்ராக். 120 00:10:50,730 --> 00:10:54,690 இப்பவும் மலைக்கு அழுதுட்டே ஓடிப்போன அதே பலவீனமான கோழை. 121 00:10:57,070 --> 00:11:00,070 என்னை நிறுத்த முடியும்னு உனக்கு எப்படி தோன்றியது? 122 00:11:01,990 --> 00:11:03,030 நண்பர்கள். 123 00:11:03,780 --> 00:11:04,990 என்னது? 124 00:11:07,120 --> 00:11:11,460 என் வலிமை என் நண்பர்களிடமிருந்து வரும். 125 00:11:23,470 --> 00:11:25,220 அய்யோ பாவம், க்ராக். 126 00:11:25,600 --> 00:11:27,270 அவங்க உன்னை காப்பாத்த முடியலை. 127 00:11:27,720 --> 00:11:30,230 ஆம். ஆனால் என்ன விஷயம்னா... 128 00:11:31,020 --> 00:11:32,650 என்னிடம் இன்னும் நிறைய உண்டு. 129 00:11:33,230 --> 00:11:34,860 வாக்ஸ் மாகினா. 130 00:11:36,480 --> 00:11:37,900 இறங்கி... 131 00:11:38,780 --> 00:11:41,150 சாத்துங்க! 132 00:11:43,200 --> 00:11:44,950 ஸ்கான்லனின் கை! 133 00:11:45,910 --> 00:11:47,120 அவன் கூறியது கேட்டுதா? 134 00:11:58,130 --> 00:11:59,710 அவர்களை கொல்லுங்க! 135 00:14:24,820 --> 00:14:27,400 அது கெட்டது. 136 00:14:32,910 --> 00:14:36,650 ஸ்டார்ம்ஸ் மந்தையே, இந்த பலவீனமானவர்கள் 137 00:14:36,850 --> 00:14:38,540 உங்களை வெல்ல விடாதீங்க. 138 00:14:40,170 --> 00:14:41,880 இதை முடிங்க. 139 00:14:47,050 --> 00:14:48,800 இது சரியா போகலையே. 140 00:15:05,230 --> 00:15:06,110 மகனே. 141 00:15:06,440 --> 00:15:07,610 அப்பா. 142 00:15:10,490 --> 00:15:11,820 கடவுளே, இது வேலைக்காணும். 143 00:15:16,290 --> 00:15:18,580 வா, ட்ரிங்கெட், எனக்கு இடம் வேணும். 144 00:15:21,370 --> 00:15:24,110 க்ராக். பயங்கரமா ஒண்ணு செய்யணுமா? 145 00:15:24,310 --> 00:15:25,300 கண்டிப்பா! 146 00:15:31,130 --> 00:15:32,760 நீ யாருனு அவனுக்கு காட்டு. 147 00:15:36,010 --> 00:15:39,980 க்ராக் ஸ்ட்ராங்க்ஜா! 148 00:16:14,970 --> 00:16:15,890 க்ராக்! 149 00:16:16,810 --> 00:16:18,770 இல்லை. இல்லை, இல்லை, இல்லை. 150 00:16:29,860 --> 00:16:31,400 ஹலோ, நட்புகளே. 151 00:16:33,110 --> 00:16:35,200 உன் தரையிறக்கத்தை இன்னும் சீராக்கணும். 152 00:17:04,310 --> 00:17:07,730 ஸ்ட்ராங்க்ஜா. ஸ்ட்ராங்க்ஜா. 153 00:17:08,230 --> 00:17:12,690 ஸ்ட்ராங்க்ஜா. ஸ்ட்ராங்க்ஜா. 154 00:17:23,000 --> 00:17:24,500 ஸ்டார்ம்ஸ் மந்தை. 155 00:17:26,370 --> 00:17:27,380 இது முடிஞ்சுது. 156 00:17:29,040 --> 00:17:30,590 கெவ்டாக் அழிந்தான். 157 00:17:31,670 --> 00:17:33,420 நீங்க சுதந்திரமானவர்கள் இப்போ. 158 00:17:34,800 --> 00:17:36,130 அதனால் என்ன, கசின்? 159 00:17:37,470 --> 00:17:38,970 இப்போ நீ தலைவன். 160 00:17:40,220 --> 00:17:43,140 ஜான்சோர், பார்த்து ரொம்ப நாளாச்சு. 161 00:17:44,430 --> 00:17:45,850 ஏன் சங்கிலி? 162 00:17:47,350 --> 00:17:51,020 ஒருவழியா அப்பாவை எதிர்த்தேன், உன்னைப் போல. 163 00:17:51,610 --> 00:17:52,860 அதற்கான விலை இது. 164 00:17:55,780 --> 00:17:57,200 உன் இஷ்டப்படி செய். 165 00:18:04,790 --> 00:18:08,210 ஒருகாலத்தில் எனக்கு சகோதரன் போலிருந்தாய். 166 00:18:10,880 --> 00:18:15,090 உன் அப்பாவால் செய்ய முடியாததை செய்ய உனக்கு வலிமை இருக்கு, 167 00:18:15,550 --> 00:18:17,260 பெருமையுடன் தலைமை தாங்குவது. 168 00:18:17,800 --> 00:18:19,180 எனவே... 169 00:18:19,970 --> 00:18:22,350 ஸ்டார்ம்ஸ் மந்தையின் தண்டர்லார்டாக 170 00:18:23,060 --> 00:18:26,600 சான்சோர் அழைக்கப்படுவார். 171 00:18:32,070 --> 00:18:33,070 நானா? 172 00:18:33,820 --> 00:18:35,900 ஆனால் நீ என்ன பண்ணுவ? 173 00:18:36,530 --> 00:18:37,390 ஒண்ணுமில்லை. 174 00:18:37,590 --> 00:18:38,860 ட்ராகனை கொல்லலாம். 175 00:18:39,780 --> 00:18:41,070 நீயும் வரயா? 176 00:18:55,670 --> 00:18:57,450 உன்னை கொன்னிருப்பேன். 177 00:18:57,650 --> 00:19:00,050 ஆம். பேதி ஆயிருக்கும். 178 00:19:01,090 --> 00:19:02,010 எனக்கும். 179 00:19:04,890 --> 00:19:07,140 கொண்டாட ஒரு பாட்டு பாடு. 180 00:19:08,480 --> 00:19:11,560 சரி. சரி. பழைய பாட்டு, ஆனால் நல்ல பாட்டு. 181 00:19:12,360 --> 00:19:15,650 கெவ்டாக் இறந்ததற்கு, ஒரு புதிய தொடக்கத்திற்கு. 182 00:19:16,110 --> 00:19:17,150 பசங்களா. 183 00:19:19,610 --> 00:19:22,030 ஒரு அழகான பெண்ணை சந்தித்தேன் 184 00:19:24,410 --> 00:19:30,190 பின் வெக்ஸும் வாக்ஸும் தங்களது தந்தையை சந்தித்தனர், தர்மசங்கடமா இருந்தது. 185 00:19:30,390 --> 00:19:32,900 அப்புறம் அப்படி இப்படி. இங்கே இருக்கோம். 186 00:19:33,100 --> 00:19:34,900 இரு. அடிச்சுவடு? 187 00:19:35,100 --> 00:19:36,320 பெறுவது கடினமா இருந்ததா? 188 00:19:36,520 --> 00:19:37,240 இல்லை. 189 00:19:37,440 --> 00:19:39,050 இல்லை, சுலபமா இருந்தது. 190 00:19:42,430 --> 00:19:43,430 ரொம்ப சுலபம். 191 00:20:04,030 --> 00:20:05,450 ஹேய். 192 00:20:05,910 --> 00:20:08,330 நான் யோசிச்சுட்டிருந்தேன்... 193 00:20:10,370 --> 00:20:12,710 நீ என்னுடன் ஆட வரயா? 194 00:20:13,460 --> 00:20:14,710 பரவாயில்லை. 195 00:20:15,420 --> 00:20:16,960 இன்னொரு முறை வரேன். 196 00:20:18,670 --> 00:20:19,760 சரி. 197 00:20:21,510 --> 00:20:22,510 பிறகு ஆடிப்போம். 198 00:20:26,970 --> 00:20:28,790 அதிகமா கேட்டுட்டேனா? 199 00:20:28,990 --> 00:20:30,670 ஜாலியா தானே இருந்தேன். 200 00:20:30,870 --> 00:20:32,390 கெய்லீ, இங்கே மேலே வா. 201 00:20:32,770 --> 00:20:34,750 எனக்கேத்த ஒரு பையனை சந்தித்தேன் 202 00:20:34,950 --> 00:20:36,510 ஷிம்மி-ஐ, ஷிம்மி-ஐ, ஓ 203 00:20:36,710 --> 00:20:38,760 ஆனால் படுக்கையில் அவன் பத்தலை 204 00:20:38,960 --> 00:20:40,550 ஷிம்மி-ஐ, ஷிம்மி-ஐ, ஓ 205 00:20:40,750 --> 00:20:43,600 அவன் முயன்றான், ஆனால் என்னை தவிக்க விட்டு போயிட்டான் 206 00:20:43,800 --> 00:20:46,430 சரி. நாம் அம்பிலிகலை அழிக்கணும். 207 00:20:46,630 --> 00:20:47,730 அம்ப்ரசில். 208 00:20:47,930 --> 00:20:49,640 சே. அவனையும்தான். 209 00:20:49,840 --> 00:20:51,150 இப்போதான் நமக்கு வாய்ப்பு. 210 00:20:51,350 --> 00:20:53,330 மந்தை நம் பக்கம் இருக்கு. 211 00:20:54,290 --> 00:20:56,530 பழி வாங்க துடிச்சுட்டிருக்கேன். 212 00:20:56,730 --> 00:21:01,170 ஸ்டார்ம்ஸ் மந்தையின் பலத்தை கான்க்ளேவ் உணரும் நேரம் இது. 213 00:21:01,710 --> 00:21:04,130 - மகிமைக்கு. - ரத்தத்துக்கு. 214 00:21:12,390 --> 00:21:16,380 தன் குவியலை கொண்டு போக ரெண்டு நாளுக்கு ஒரு முறை இருண்டவன் வருவான். 215 00:21:16,580 --> 00:21:19,090 அவனுக்கு வலை பொறி வைக்க நல்ல வாய்ப்பு. 216 00:21:19,290 --> 00:21:22,840 பொறினா சொன்னீங்க. சில வரைபடங்களை உருவாக்கறேன், 217 00:21:23,040 --> 00:21:25,780 சரியான லீவர்கள், சீர்நிலையை வடிவமைக்கிறேன். 218 00:21:27,280 --> 00:21:28,450 என் மந்தையே. 219 00:21:30,790 --> 00:21:33,160 நமக்கு மீண்டும் நகர விருப்பம்னு அறிவேன். 220 00:21:33,910 --> 00:21:37,880 ஆனால் இன்னும் ஒரு நாள் வெஸ்ட்ரன்னை நம் வீடாகக் கொள்வோம். 221 00:21:38,500 --> 00:21:44,300 விடிகாலையில், ட்ராகனின் தோலில் நம் வாள்களை சாணம் தீட்டுவோம். 222 00:21:46,130 --> 00:21:48,540 அதைவிட இன்னும் கொஞ்சம் நேரம் தேவைப்படும். 223 00:21:48,740 --> 00:21:51,960 என் வடிவமைப்பில் நிறைய கியர்கள், நகரும் பாகங்கள் இருக்கும். 224 00:21:52,160 --> 00:21:53,580 பிறகு குடி வேற. 225 00:21:53,780 --> 00:21:56,000 நமக்கு குடிக்க நிறைய நேரம் வேணும். 226 00:21:56,200 --> 00:21:58,460 மதியம், வாள்களை சாணம் தீட்டுவோம். 227 00:21:58,660 --> 00:22:00,670 விடிகாலையில், திட்டமிடுவோம். 228 00:22:00,870 --> 00:22:03,480 இரு, நாம் விடிகாலை எழுந்திருக்கணுமா? 229 00:22:05,450 --> 00:22:08,280 பரவாயில்லை. நேரம் பத்தி பிறகு பேசிக்கலாம். 230 00:22:08,780 --> 00:22:11,520 கறித்துண்டு சூட்டில் இருக்கையில் வெளிவர தேவையென்றபோது 231 00:22:11,720 --> 00:22:12,810 அப்பொழுதுதான் 232 00:22:13,010 --> 00:22:14,650 - அழுத்தமா பிடி - சாட்டை போல் அடி 233 00:22:14,850 --> 00:22:19,330 சொட்டையனை அழ வை 234 00:22:24,670 --> 00:22:27,180 நாம் சேர்ந்து பாடினால் அருமையா இருக்கு. 235 00:22:27,880 --> 00:22:29,660 இன்னொரு முறை பாடலாமா? 236 00:22:29,860 --> 00:22:31,760 ஓய்வு நேரம் இருந்தா நல்லா இருக்கும். 237 00:22:32,310 --> 00:22:33,600 என்கூட மேல வர்றியா? 238 00:22:38,690 --> 00:22:43,020 பிறகு... நான் எல்லாரையும் பசுபோல் தோற்றத்தை மாற்றி ஒளிச்சேன். 239 00:22:44,110 --> 00:22:46,850 தெரியும், தெரியும். புத்திசாலித்தனம்ல? 240 00:22:47,040 --> 00:22:51,100 சொல்லு, ஸ்கான்லன் ஷார்ட்ஹால்ட், எப்படி நீ, 241 00:22:51,300 --> 00:22:55,150 கொடுங்கோலர்களை கவிழ்க்கற, ட்ராகன்களை கொல்லுற? 242 00:22:55,340 --> 00:23:00,190 ஒரு கலைஞனின் வாழ்க்கையில் அளவில்லா சாகசங்கள், 243 00:23:00,390 --> 00:23:03,860 சுதந்திரம் மற்றும் ஆராய்ச்சி. 244 00:23:04,060 --> 00:23:05,380 அது மிக அருமை. 245 00:23:05,960 --> 00:23:08,130 அதை விட அருமை என்ன தெரியுமா? 246 00:23:09,180 --> 00:23:11,300 கட்டு. எனக்கு பிடிக்குமே. 247 00:23:12,010 --> 00:23:15,080 மனநிலை பொருத்தமா இருந்தா என்னை டாடினு கூட கூப்பிடு. 248 00:23:15,280 --> 00:23:18,480 கொஞ்ச காலமாவே இதை செய்யணும்னு நினைச்சுட்டிருந்தேன். 249 00:23:20,190 --> 00:23:22,420 நீ... நீ அதை உணர்கிறாயா? 250 00:23:22,620 --> 00:23:25,180 அதுதான் ஈர்ப்பு. நமக்குள் இருக்கு. 251 00:23:25,370 --> 00:23:27,490 நமக்கிடையே ஏதோ ஒண்ணு உறுதியா இருக்கு. 252 00:23:28,070 --> 00:23:30,680 உன்னை பத்தி சொல்லு, 253 00:23:30,880 --> 00:23:34,240 அழகான கெய்லீ, மார்க்கிஸிய சூரியனை போல் கண்களை உடையவளே. 254 00:23:34,660 --> 00:23:37,120 நானும் கிட்டதட்ட உன்னை போலத்தான். 255 00:23:37,830 --> 00:23:40,670 கைமலில் வளர்ந்தேன், ஆனால் நிறைய இடம் சென்றேன். 256 00:23:41,080 --> 00:23:44,210 என் படிப்புக்காக என் அம்மா தன் சேமிப்புகளை கரைத்தாள். 257 00:23:45,800 --> 00:23:50,130 - அப்படியா? தாய் போல் வருமா. - ஆம், என் தாய் நிச்சயம் சிறந்தவள். 258 00:23:50,880 --> 00:23:55,930 ஸ்கான்லன் ஷார்ட்ஹால்ட், உன்னை பத்தி டாக்டர் ட்ரான்ஸெல் நிறைய கதை சொன்னார். 259 00:23:56,310 --> 00:24:00,040 ஆம், அது ஆச்சரியமல்ல. அவர் என் ரசிகன்னு தான் தோன்றியது. 260 00:24:00,240 --> 00:24:03,520 ஆனால் அவரது பெரும்பாலான கதைகளை ஏற்கனவே கேட்டிருக்கேன், 261 00:24:04,270 --> 00:24:05,440 என் அம்மாவிடமிருந்து. 262 00:24:07,020 --> 00:24:07,980 நீ... 263 00:24:08,690 --> 00:24:10,530 அவங்களுக்கு பெருமை சேர்க்க போறியா? 264 00:24:13,910 --> 00:24:15,030 ஆம். 265 00:24:15,660 --> 00:24:17,950 ஆம், அவங்க பெருமை படுவாங்க. 266 00:24:19,250 --> 00:24:21,940 அவங்க காதில் பொய் வாக்குகள் உரைத்து 267 00:24:22,140 --> 00:24:25,420 பின் காணாமல் போன சக்கரை-பேச்சு பிசாசை சந்திக்கறேன்னு பெருமை. 268 00:24:26,090 --> 00:24:28,460 அவளிடம் அவன் விட்டு போனது ஒரு பாட்டையும் 269 00:24:29,130 --> 00:24:30,050 என்னையும். 270 00:24:30,460 --> 00:24:33,510 இரு. நான் டாடிதானா? 271 00:25:17,090 --> 00:25:19,040 வசனங்கள் மொழிபெயர்ப்பு பிரதீப் குமார் 272 00:25:19,240 --> 00:25:21,180 {\an8}படைப்பு மேற்பார்வையாளர் பி.கே.சுந்தர்