1 00:00:53,305 --> 00:00:55,516 த டெர்மினல் லிஸ்ட் 2 00:02:41,580 --> 00:02:42,456 இங்கேதான். 3 00:02:42,539 --> 00:02:46,084 என் முதல் அடுக்குமாடி. உணவு, பியரை தரைல வைத்து சாப்பிட்டோம். 4 00:02:50,672 --> 00:02:51,924 அட கடவுளே. 5 00:02:52,007 --> 00:02:53,550 வருக, திருமதி ரீஸ். 6 00:02:56,094 --> 00:02:58,096 -அம்மாடி. -நம்ப முடியுதா? 7 00:02:59,723 --> 00:03:02,017 -என்னால நம்ப முடியுது. -இது கிரேசி. 8 00:03:02,100 --> 00:03:06,605 அதாவது, 30 வருட கடன் ஒப்பந்தத்தில ஒப்பமிடுவது என்னன்னு புரியுது. 9 00:03:06,688 --> 00:03:09,775 30 வருடமா. இங்கேயா? நமக்கு பைத்தியமா? 10 00:03:09,858 --> 00:03:12,152 தெரியல. கேட்டுப் பார்க்கணுமா என்ன? 11 00:03:13,111 --> 00:03:15,656 நல்லாவே இல்ல. 12 00:03:20,702 --> 00:03:23,372 -இந்த வால் பேப்பரை நீக்கணும். -ஆம். 13 00:03:23,455 --> 00:03:25,916 -கம்பளதையும். -அதேதான். நல்லா யோசி. 14 00:03:27,960 --> 00:03:30,587 -உதாரணத்துக்கு, துப்பாக்கி பெட்டகம் இங்க. -ஆஹா! 15 00:03:30,671 --> 00:03:34,049 வேலை மேஜை, ஜேபிஏடி கொடி, இங்கே. இந்த இடத்தை சீராக்கணும். 16 00:03:34,591 --> 00:03:36,843 அட, இல்ல. இந்த அறை என் அலுவலகம். 17 00:03:36,927 --> 00:03:38,095 என்னது? 18 00:03:38,178 --> 00:03:40,681 இது என் அலுவலகம். நீ காரேஜ் பயன்படுத்திக்கோ. 19 00:03:41,556 --> 00:03:44,142 இல்ல. அது நடக்காது. முடியாதது. 20 00:03:44,226 --> 00:03:46,895 -பார்த்துடுவோம். -படுக்கையறைகளை பார்க்கணுமா? 21 00:03:46,979 --> 00:03:51,441 பார்க்கலாம். இங்கே வேலையா வந்திருக்கோம். ஆக, குறும்புக்கெல்லாம் இடமில்லை. 22 00:03:51,525 --> 00:03:53,068 அதையும் பார்த்துடுவோம். 23 00:04:09,167 --> 00:04:13,380 15 மணி நேரம் முன் 24 00:04:17,467 --> 00:04:20,429 ஹேய், மடையர்களா. பளுவா இருக்கா? 25 00:04:20,512 --> 00:04:23,056 -நல்ல வேலை! -என் கடற்கரையிலிருந்து போங்க. 26 00:04:24,433 --> 00:04:25,350 எழுந்திரு! 27 00:04:27,936 --> 00:04:30,647 போய் அந்த மணியை அடி. அதுதான் உனக்கு லாயக்கு. 28 00:04:31,356 --> 00:04:32,441 மணியை அடிங்க. 29 00:04:33,025 --> 00:04:35,152 முதல் முறைதான் வலிக்கும், பெண்களே. 30 00:04:35,235 --> 00:04:37,696 -உங்களிடம் பளு இருக்கா? -இருக்கு என்னிடம். 31 00:04:37,779 --> 00:04:40,407 -சரி, அப்படி தெரியல. -மூன்று! 32 00:04:40,490 --> 00:04:43,285 விலகுவர்கள் வேணாம். மர திம்மையை எடுக்க முடியல, 33 00:04:43,368 --> 00:04:44,870 எதிரியை ஒழிக்க முடியாது. 34 00:04:48,540 --> 00:04:52,294 போங்க! போங்க, பெண்களே. விட்டுவிட கூடாது! 35 00:04:55,839 --> 00:04:58,091 உங்க ஜேஏஜி, சார். கேப்டன் ஹாவர்ட். 36 00:05:06,141 --> 00:05:07,392 எல்லாம் ஒழுங்கா இருக்கா? 37 00:05:08,185 --> 00:05:10,353 ஓடின்ஸ் ஸ்வோர்ட் பத்தி, 38 00:05:10,437 --> 00:05:12,773 நமக்கு மறுக்கும் உரிமை வேண்டும். 39 00:05:13,482 --> 00:05:15,275 "வேண்டும்"னா என்ன அர்த்தம்? 40 00:05:15,358 --> 00:05:16,860 துயரங்கள் நிகழும். 41 00:05:16,943 --> 00:05:20,530 அணி உளவு மூலம் நடவடிக்கை கட்டமைக்கப் படுது. நாம் பொறுப்பல்ல. 42 00:05:22,657 --> 00:05:24,242 சோதனை பத்தி என்ன தகவல்? 43 00:05:26,078 --> 00:05:29,998 இதில் எதையுமே சோதிக்கலன்னு சொல்றது முக்கியம். நீதித்துறை ரீதியா. 44 00:05:30,499 --> 00:05:33,293 என்டிஏஏ தெளிவா இருக்கு. நீதிமன்றத்துக்கு போனா-- 45 00:05:33,376 --> 00:05:34,628 நமக்கு பாதுகாப்பு உண்டா? 46 00:05:39,466 --> 00:05:40,550 உத்தரவை மீற முடியாது. 47 00:05:41,301 --> 00:05:43,512 ஜேம்ஸ் ரீஸ் அப்படி பார்ப்பது சந்தேகம். 48 00:05:47,140 --> 00:05:51,770 எதிர்பாரா நிகழ்வுகளை கணக்கில் கொள்வது இப்போ முக்கியம். 49 00:05:54,189 --> 00:05:55,774 என்ன எதிர்பாரா நிகழ்வுகள்? 50 00:05:56,358 --> 00:05:57,818 விலகி தந்திரமா கையாள்வது. 51 00:05:58,485 --> 00:06:00,779 இது நாடுகடத்தும் ஒப்பந்தமற்ற நாடு பட்டியல். 52 00:06:00,862 --> 00:06:02,697 -அபத்தம். -எல்லோரும் இறந்தாங்க. 53 00:06:03,615 --> 00:06:04,991 எனக்கு குடும்பம் உண்டு. 54 00:06:05,075 --> 00:06:07,869 நான் ஜேம்ஸ் ரீஸால் கெமரூன் போக முடியாது. 55 00:06:07,953 --> 00:06:09,830 பேசுவதை நிறுத்து. 56 00:06:13,166 --> 00:06:14,376 நாம் கடற்படை தலைமை, 57 00:06:15,043 --> 00:06:17,087 பங்குச் சந்தை முட்டாள்கள் அல்ல. 58 00:06:18,672 --> 00:06:22,843 நமக்கு சட்ட பாதுகாப்பு இருக்கும் வரை, நமது தகுதி காக்கப் பட வேண்டும். 59 00:06:23,927 --> 00:06:27,305 மரியாதை இழந்த கமாண்டர் ரீஸ் இங்க வர நினைத்தால், 60 00:06:27,973 --> 00:06:31,101 இங்குள்ள 5,000 ராணுவத்தினர் ஏதாவது சொல்வார்கள். 61 00:06:36,022 --> 00:06:37,023 அவங்கள பார்க்கறேன். 62 00:06:38,984 --> 00:06:41,528 நீ ஹார்னை கொன்ற பிறகு அவஙக தினமும் கூடறாங்க. 63 00:06:44,197 --> 00:06:48,702 காக்ஸ்க்கும், ஹாவர்டுக்கும் பாதுகாப்பு குறைவு, ஆக நிறைய வாய்ப்புகள் இருக்கு. 64 00:06:49,578 --> 00:06:51,997 பில்லர், எப்படியும்... முகாமை விட்டு வருவதில்லை. 65 00:06:52,622 --> 00:06:55,917 முழு கடற்படை நிலநீர் முகாமையுமே நீ எதிர்க்க மாட்டே. 66 00:07:19,274 --> 00:07:22,235 முதல் ரெண்டு பேரை வீழ்த்தி, பில்லருக்கு காத்திருப்போமா. 67 00:07:23,695 --> 00:07:25,322 துப்பாக்கியால் சுடுவோம். 68 00:07:26,156 --> 00:07:27,240 படகிலிருந்தா? 69 00:07:29,242 --> 00:07:31,203 அதில் வெற்றி வாய்ப்பு பாதிதான். 70 00:07:33,288 --> 00:07:34,706 தவற விடும் ஆபத்து கூடாது. 71 00:07:40,003 --> 00:07:41,171 மோசுல் நினைவிருக்கா? 72 00:07:42,589 --> 00:07:43,798 ஆம், அதற்கென்ன? 73 00:07:45,967 --> 00:07:47,594 சயீதாதி அல் ஜமீலா? 74 00:07:50,805 --> 00:07:52,182 ஹாவர்டுக்கு குடும்பமுண்டு. 75 00:07:55,268 --> 00:07:56,269 தைரியமான முயற்சி. 76 00:08:23,797 --> 00:08:25,799 காலிஃபோர்னியா கவர்னர் உடனடி ஃபெடரல் நடவடிக்கையை கோருகிறார். 77 00:08:25,924 --> 00:08:28,426 ராணுவத்தினர் மிரண்டால்: உள்நாட்டு பயங்கர வாதத்தின் வரலாறு. 78 00:08:32,514 --> 00:08:34,599 வேற ஏதும் இருந்தா, எஃப்பிஐயை கேளுங்க. 79 00:08:39,729 --> 00:08:42,941 ஜேம்ஸ் ரீஸ் மைக் டெடெஸ்கோவை கொல்லல. நீங்க, உங்க ஆட்கள்தான். 80 00:08:43,024 --> 00:08:46,611 டாலோஸ் வேலை பாதுகாப்பு தருவது. அடியாட்கள் அல்ல, மிஸ் புரனெக். 81 00:08:47,195 --> 00:08:49,030 உன்னை தெரியாதுன்னு நினைச்சியா? 82 00:08:49,114 --> 00:08:51,908 சீல்ஸை வைத்து ஆர்டி4895ஐ சோதனை செய்தீங்கன்னு தெரியும். 83 00:08:51,992 --> 00:08:55,495 அது கட்டிகளை உருவாக்கியது என்பதால், அவங்கள கொலை செய்திருக்கீங்க. 84 00:08:55,578 --> 00:08:59,165 இது என் செய்தி கதையில் இருக்கு. என்னை கொன்னா, உண்மை வெளிவரும். 85 00:08:59,249 --> 00:09:01,626 உங்க மோசமான பேரம் குலையப் போகுது. 86 00:09:07,507 --> 00:09:09,551 இன்று, பயந்து போய் விழிப்பது சுலபம். 87 00:09:10,844 --> 00:09:15,640 தொலைக் காட்சியில் நாம் பார்த்த வன்முறைச் செயல்களை புறக்கணிக்க முடியாது. 88 00:09:16,433 --> 00:09:22,314 அரசு உடனே செயல்பட்டு, ஜேம்ஸ் சல்லிவன் ரீஸ் ஒரு உள்நாட்டு பயங்கரவாதி என 89 00:09:22,897 --> 00:09:24,816 அறிவித்துள்ளது. 90 00:09:32,157 --> 00:09:36,036 நிறைய கேள்விகள் நிச்சயம் இருக்கும், கேள்விகளை துவங்குங்க. 91 00:09:36,661 --> 00:09:37,620 பின் வரிசை. ஆம். 92 00:09:37,704 --> 00:09:41,791 மேடம் செக்ரடரி, உங்களுக்கு ஜேம்ஸ் ரீஸ் தனிப்பட்ட முறையில அறிமுகம்தானே? 93 00:09:42,500 --> 00:09:44,836 நிறைய முறை சந்தித்திருக்கோம். ஆம். 94 00:09:44,919 --> 00:09:47,672 அவரிடம் ஏதோ கோளாறு இருப்பதா நீங்க சந்தேகித்ததுண்டா? 95 00:09:50,258 --> 00:09:52,093 ராணுவத்தில் சேரும் போது, 96 00:09:52,177 --> 00:09:56,473 அந்நிய, உள்நாட்டு ஆபத்துகளிலிருந்து அரசியலமைப்பை காக்க சத்தியம் செய்யறோம். 97 00:09:56,556 --> 00:10:00,435 கமாண்டர் ரீஸ் இன்னும் அந்த சத்தியத்துக்கு சேவை செய்வதா நினைக்கக் கூடும். 98 00:10:01,061 --> 00:10:02,312 எதற்கு எதிராக, மேடம்? 99 00:10:05,648 --> 00:10:08,610 ஜேம்ஸ் ரீஸ் அவர் ஒரு பணியில் இருப்பதாக நினைக்கிறார், 100 00:10:08,693 --> 00:10:10,737 அதை முடிக்கும் வரை ஓயமாட்டார். 101 00:10:10,820 --> 00:10:15,450 அடுத்தது யாரென யூகித்து, அங்கே அவனுக்கு முன் போய் பிடிப்பதுதான் வழி. 102 00:10:15,575 --> 00:10:17,327 கேப்ஸ்டோன் தொழிற்சாலைகளோடும் 103 00:10:17,410 --> 00:10:21,414 ஹார்னுடனும் தொடர்புள்ள எல்லோரையும் முதல்ல கண்டுபிடிக்கணும்னு அர்த்தம். 104 00:10:21,498 --> 00:10:24,292 நம் முதன்மையான இலக்கு பிடிப்பது. முக்கியத்துவமோ, 105 00:10:24,376 --> 00:10:26,961 மேலும் உயிர்ப் பலிகளை தவிர்ப்பது. 106 00:10:27,045 --> 00:10:31,007 இந்த இரு நோக்கங்களும் முரணானவையானால், அங்கேதான் நம் வேலை. 107 00:10:33,051 --> 00:10:34,427 -புரியுதா? -ஆம், சார். 108 00:10:35,887 --> 00:10:37,555 சரி, ஆளைக் கண்டுபிடிப்போம். 109 00:10:42,644 --> 00:10:45,438 -இப்ப எப்படி இருக்க? -கை ரொம்ப காயமாகியிருக்கு. 110 00:11:02,831 --> 00:11:04,791 ஜேம்ஸ் ரீஸ் எங்கேனு தெரியுமா? 111 00:11:10,463 --> 00:11:13,341 சரி, ஒரு விஷயம் இருக்கு. எனக்கு தகவல் தேவை. 112 00:11:13,425 --> 00:11:14,467 இதோ தொடங்கியாச்சு. 113 00:11:14,551 --> 00:11:18,179 என்னிடம் ரீஸ் பத்தி 5,000 வார்த்தைகள் இருக்கு, என் செய்தி-- 114 00:11:18,263 --> 00:11:20,348 நீ பிரச்சனைல இருக்க, பெண்மணி. 115 00:11:20,432 --> 00:11:21,933 கதைய முடிக்க நீங்க தேவை. 116 00:11:22,475 --> 00:11:24,269 அவனை பிடிக்க உங்களுக்கு நான் தேவை. 117 00:11:28,356 --> 00:11:31,192 உன்னிடம் என்ன இருக்கு சொல். பிறகு பார்க்கிறேன். 118 00:11:32,235 --> 00:11:33,778 எவ்ளோ உதவிகரமோ அவ்ளோ. 119 00:11:35,780 --> 00:11:38,241 நீங்க ஸ்டீவ் ஹார்ன் கணினியை பார்க்கணும். 120 00:11:38,324 --> 00:11:40,493 அதில் "பணமாக்கல் பட்டியல்" தேடுங்க. 121 00:11:40,577 --> 00:11:43,455 நியூபெல்லம் விற்பனைல சம்பாதித்த எல்லோரின் பட்டியல். 122 00:11:43,538 --> 00:11:45,540 கணக்கு பெரும்பாலும் சட்ட பூர்வமே, 123 00:11:45,623 --> 00:11:50,253 ஆனால் அதில் சில, ஆர்டி4895 என்ற மருந்தை கடற்படை சீல்கள் மேல் 124 00:11:50,336 --> 00:11:53,882 சோதிக்கும் ஒரு சதிக்காக தரப் பட்டவை. 125 00:11:53,965 --> 00:11:56,259 இதெல்லாம் ரீஸ் சொல்றதை வைத்தா? 126 00:11:56,342 --> 00:11:59,137 அவன் மூணு நாளா காட்டில் பேய்களுடன் பேசியவன். 127 00:11:59,220 --> 00:12:01,973 உங்க தோழியை, ஆபத்திலருந்து காப்பாத்தும் முன்னா? 128 00:12:02,056 --> 00:12:04,517 அவன்தான் என்னை ஆபத்தில் தள்ளியவன். 129 00:12:04,601 --> 00:12:06,811 கவனிங்க, நான் ரீஸை ஆதரிக்க இங்க வரல. 130 00:12:07,395 --> 00:12:09,189 அவன் நிறுத்தப் படவேண்டும்தான். 131 00:12:10,273 --> 00:12:12,984 அதே சமயத்தில் மத்தவங்களையும் பொறுப்பாக்கணும். 132 00:12:27,207 --> 00:12:30,418 டெப்டுலா, கணினி ஆய்வு அணி, ஹார்னின் கணினியை அலசட்டும். 133 00:12:30,502 --> 00:12:31,503 நிஜமாவா? 134 00:12:33,296 --> 00:12:34,297 சரி, சார். 135 00:12:38,843 --> 00:12:41,471 நான் நூல்நிலையத்தில் இருக்கேன், சில வேலை-- 136 00:12:41,554 --> 00:12:45,099 போன தடவை உன்னை விட்டபோது, நீ சான் ஃபிரான்சிஸ்கோ ஓடிட்டே. 137 00:12:46,434 --> 00:12:48,770 ஜுனியர், இவங்களை இந்த அறைலயே இருக்க வை. 138 00:12:54,692 --> 00:12:56,861 அவங்களை காத்திருக்கச் சொன்னேன். 139 00:13:03,660 --> 00:13:05,828 தளர்வாகு, ஜெரால்ட். இது உன் அலுவலகம். 140 00:13:07,080 --> 00:13:09,249 மேடம், நீங்க நகரில் இருப்பதை பார்த்தேன். 141 00:13:09,749 --> 00:13:12,001 இங்க வருவீங்கனு நினைக்கல. 142 00:13:12,752 --> 00:13:14,379 இது ஒரு திடீர் வருகை. 143 00:13:18,258 --> 00:13:19,467 யார் இவர்? 144 00:13:19,551 --> 00:13:21,469 டிசிஐஎஸ் முகவர் ஆஸாட். 145 00:13:23,638 --> 00:13:26,975 இந்த உரையாடல், நெறிமுறைகள் படி இருக்கணும்னு நினைத்தேன். 146 00:13:31,145 --> 00:13:34,941 இலக்கு உளவு தொகுப்பை ஓடின்ஸ் ஸ்வோர்ட் நடவடிக்கைலருந்து எடுத்தேன். 147 00:13:35,775 --> 00:13:39,696 எப்படிப்பட்ட உளவு, ஒரு பிளாடூனையே கொன்னிருக்கும்னு சந்தேகம் எனக்கு. 148 00:13:40,697 --> 00:13:42,907 நான் உளவுத்தொகுப்பை நன்கு அறிவேன். 149 00:13:44,617 --> 00:13:47,328 அது பலவீனமானது என்று நீங்க ஒப்புக் கொள்வீர்கள். 150 00:13:48,288 --> 00:13:52,083 தெருவில் போகும் ஆயுத வியாபாரியின் தகவலால், பெரும் நடவடிக்கையா? 151 00:13:52,875 --> 00:13:53,918 வேறேதும் இல்லையா? 152 00:13:54,919 --> 00:13:56,504 யாராவது இதை சோதித்தார்களா? 153 00:13:57,630 --> 00:14:01,009 கஹானி பத்தி எந்த உளவு வந்தாலும் நடவடிக்கை எடுக்கும் படி 154 00:14:02,677 --> 00:14:05,888 எனக்கு பென்டகன் நிரந்தர உத்தரவிட்டுள்ளது. 155 00:14:06,931 --> 00:14:09,183 அதை மேலே அனுப்பிய அதிகாரி... 156 00:14:10,602 --> 00:14:11,436 யார் அவர்? 157 00:14:14,564 --> 00:14:16,608 லாங்லி கேள்வி மாதிரி இருக்கு. 158 00:14:20,945 --> 00:14:22,030 நன்றி, ஜெரால்ட். 159 00:14:23,489 --> 00:14:24,324 அவ்ளோதானா? 160 00:14:25,033 --> 00:14:25,867 இப்போதைக்கு. 161 00:14:30,330 --> 00:14:33,541 உங்களை பார்த்தது மகிழ்ச்சி, அட்மிரல். மறுபடி பார்ப்பேன். 162 00:14:40,214 --> 00:14:42,175 கேப்டன் ஹாவர்டை வரச் சொல். இப்போ. 163 00:14:59,233 --> 00:15:03,571 அழைப்பு வார்காம் 164 00:15:06,616 --> 00:15:09,786 அம்மா, ஜெயிச்சா, எல்லோரையும் போல மாநில போட்டிக்கு 165 00:15:09,869 --> 00:15:12,455 நமது செலவிலேயே போகணும்னார் கோச் ஹென்ஸன். 166 00:15:12,538 --> 00:15:15,875 அது எப்படி நியாயம்? பள்ளி பஸ்ஸை ஏற்பாடு செய்யக் கூடாதா? 167 00:15:15,958 --> 00:15:17,960 -நான் பேசறேன். -சீக்கிரம் வந்துட்டீங்க. 168 00:15:18,044 --> 00:15:20,463 ஹேய். நான்... 169 00:15:23,466 --> 00:15:25,426 ஆக, இருவரும் கவனிங்க, நாம்... 170 00:15:27,095 --> 00:15:28,888 -நாம் கீஸ் போகிறோம். -என்னது? 171 00:15:28,971 --> 00:15:30,139 ஆம். இன்றிரவு. 172 00:15:30,223 --> 00:15:32,058 -என்ன? -டிக்கட் வாங்கிட்டேன். 173 00:15:33,267 --> 00:15:34,602 போக தயாராகணும் அவ்ளோதான். 174 00:15:35,645 --> 00:15:37,271 முடியாதுப்பா. போட்டி இருக்கு. 175 00:15:37,355 --> 00:15:39,649 போட்டிலாம் இல்ல. பொருட்களோடு தயாராகு. 176 00:15:40,149 --> 00:15:41,109 ஏதும் பிரச்சினையா? 177 00:15:41,192 --> 00:15:42,026 இல்ல. 178 00:15:43,653 --> 00:15:47,448 இல்ல. எல்லாம் ஓயும்வரை, இது ஒரு விடுமுறையா இருக்கட்டும். 179 00:15:48,157 --> 00:15:50,326 -எது ஓயும் வரை? -கவனி, 180 00:15:50,410 --> 00:15:51,828 குஷியா இருக்கும், சரியா? 181 00:15:51,911 --> 00:15:54,914 -எதுவாயிருந்தாலும் குஷியா இருக்காது. -சொல்றத கேள்! 182 00:15:57,542 --> 00:16:01,170 நீங்க இருவரும் உங்க பைகளை கட்டுங்க, சரியா? 183 00:16:01,713 --> 00:16:04,924 -ஆகட்டும்! போவோம்! -புரியலயே. உனக்கு கீஸ் பிடிக்காதே. 184 00:16:26,529 --> 00:16:30,074 ஹேய், நாம் கிளம்பணும். ஹாவர்ட் கீஸ் போக டிக்கட் வாங்கிட்டான். 185 00:16:33,536 --> 00:16:35,121 -எப்போ? -இன்றிரவு. 186 00:16:35,872 --> 00:16:36,956 ஓடி ஒளியப் போகிறான். 187 00:16:38,624 --> 00:16:39,625 கிளம்ப தயாராவோம். 188 00:16:53,181 --> 00:16:55,641 கவனி, சகோதரா, நான் நினைத்தது, அதோடு... 189 00:16:57,685 --> 00:16:59,020 இது எப்படி போனாலும், 190 00:17:00,438 --> 00:17:03,733 ஃபெடரல் போலீஸ் இதை விடாம விசாரிச்சுட்டே இருக்கும். 191 00:17:05,860 --> 00:17:09,280 முகவான்மை பாதுகாப்பையும் மீறி, உன் மீது ஏதும் சுமத்துவாங்க. 192 00:17:10,239 --> 00:17:11,157 திட்டம் இருக்கா? 193 00:17:12,241 --> 00:17:13,075 ஆம். 194 00:17:18,289 --> 00:17:19,791 மேன்கோரா பத்தி தெரியுமா? 195 00:17:21,417 --> 00:17:23,669 பெரு கரையிலுள்ள சின்ன சர்ஃபிங் நகரம். 196 00:17:25,129 --> 00:17:27,131 பயங்கர அலை எழும்பும் இடம். 197 00:17:28,800 --> 00:17:32,720 சுடு நீர் ஊற்று, மண் குளியல், அயஹுவாஸ்கா, சில ஆஸ்திரேலிய பெண்களோடு. 198 00:17:34,430 --> 00:17:35,973 ஓய்வு பெறுவோருக்கு நல்ல இடம். 199 00:17:39,602 --> 00:17:40,603 என்னை மன்னி. 200 00:17:41,270 --> 00:17:42,313 எதுக்கு? 201 00:17:44,315 --> 00:17:46,275 உன்னை இதில இழுத்ததுக்கு மன்னி. 202 00:17:47,360 --> 00:17:49,737 என்னை இதில் இழுத்தது அவங்க, சகோதரா. 203 00:17:51,697 --> 00:17:54,200 நீ அல்ல. அதை ஞாபகம் வைத்துக்கொள். 204 00:17:55,201 --> 00:17:56,202 சரி. 205 00:18:29,735 --> 00:18:31,362 இதைக் கட்டாயம் செய்யணுமா? 206 00:18:58,264 --> 00:18:59,724 -ஏஜென்ட் லாயுன்-- -இரு. 207 00:19:01,934 --> 00:19:03,436 ஹார்னின் கணினில தேடினோம். 208 00:19:03,519 --> 00:19:08,107 பல கடிதங்களில் பில்லர் மருந்து ஆர்டி-4895 பத்தி குறிப்பிட்டுருக்கார், 209 00:19:08,190 --> 00:19:10,192 ரீஸ் படைக்கு மருந்து தந்தது உட்பட. 210 00:19:11,110 --> 00:19:13,321 மூளைக் கட்டி பத்தி பில்லருக்கு தெரியும். 211 00:19:13,404 --> 00:19:16,991 அதோட இல்ல, சர். அவருக்கு இந்த சோதனைக்கு பணமும் தந்தாங்க. 212 00:19:17,074 --> 00:19:18,743 ஃபின்சென் பட்டியலை அலசினாங்க. 213 00:19:18,826 --> 00:19:21,454 குளோபல் சிஸ்டம்ஸ் பிளஸ், ஜெரால்ட் பில்லரோடது. 214 00:19:21,537 --> 00:19:24,165 எஸ்எக்ஸ்ஏ கன்சல்டிங், அது லெனார்ட் ஹாவர்டுடையது. 215 00:19:24,957 --> 00:19:27,001 அங்கே இருப்பது, பில் காக்ஸுடையது. 216 00:19:27,084 --> 00:19:30,755 சால் ஆக்னன், மார்கஸ் போய்கினுக்கு மத்த நிறுவனங்களிலும் தொடர்பு. 217 00:19:30,838 --> 00:19:33,466 இன்னொன்னு, ஓபெரான் அனலிடிக்ஸ். 218 00:19:33,549 --> 00:19:35,468 -அது யாரோடது? -தெரியல. 219 00:19:36,218 --> 00:19:38,804 வார்காமை கேட்டால், தெரிஞ்சுக்கலாம். 220 00:19:39,430 --> 00:19:40,973 இதை என்சிஐஎஸ்ஸிடம் தரணும்-- 221 00:19:41,057 --> 00:19:44,018 என்சிஐஎஸ் ஏஜென்ட் ஜாஷ் ஹோல்டர், ஹார்னின் ஆள், சர். 222 00:19:44,101 --> 00:19:47,146 நாம் நேரடியா முகாமிலுள்ள தொடர்புகள் மூலம் போகணும். 223 00:19:47,229 --> 00:19:49,941 இவங்க உயர் அதிகாரிகள். நடவடிக்கை விதிகள் இருக்கு. 224 00:19:50,024 --> 00:19:51,776 ஜேம்ஸ் ரீஸ் இங்கிருக்கான். 225 00:19:52,526 --> 00:19:55,571 அவன் இப்ப இருப்பது கொரனாடோவில. அவன் பட்டியல் இருக்கு. 226 00:20:00,952 --> 00:20:02,078 சரியா? 227 00:20:03,621 --> 00:20:06,540 டெப்டுலா, நீ ரீஸ் வீட்ல இரு. ஏதாவது நடந்தா, சொல். 228 00:20:06,624 --> 00:20:08,459 -என்ன நடக்குது? -நீ ஹாவர்டை கவனி. 229 00:20:08,542 --> 00:20:12,338 புரனெக்குக்கு ஒரு ஆள் வை. மேக், நீ காக்ஸை கவனி. போலீசுடன் ஒத்துழை. 230 00:20:12,421 --> 00:20:14,131 முகவரே, துப்பை கொடுத்தது நான். 231 00:20:14,215 --> 00:20:17,677 சும்மா உட்கார்! அதிர்ஷ்டம் இருந்தா, நீ கதை முடிவை காணலாம். 232 00:20:23,265 --> 00:20:25,226 என்ன செய்தாய்ன்னு சொல்வியா? 233 00:20:25,309 --> 00:20:27,520 உண்மையில், நான் எதுவும் செய்யல. 234 00:20:27,603 --> 00:20:29,063 அப்போ ஏன் ஓடுகிறாய்? 235 00:20:30,189 --> 00:20:33,150 இந்த அட்மிரலுக்கு எதிலோ தொடர்பிருக்கு. ஏதோ... 236 00:20:33,818 --> 00:20:37,321 மோசமானது. தன்னை பாதுக்காக்க என்னிடம் வேண்டினார். நானும்-- 237 00:20:39,323 --> 00:20:43,577 அப்போ மோசமா உணர்ந்தேன், அதான்-- ஜெரால்ட் நம்மை நன்றாக கவனித்தார். 238 00:20:44,829 --> 00:20:47,456 நமக்கு ஆதரவளித்து, பதவி உயர்வுக்கு எழுதினார்-- 239 00:20:47,540 --> 00:20:48,708 எவ்ளோ அம்பலமானே? 240 00:20:48,791 --> 00:20:52,670 இது அதைப் பத்தி அல்ல, ஆன். இது பலனளிக்காது. நிச்சயமா இங்க இல்ல. 241 00:20:53,254 --> 00:20:54,839 -கீஸ்லயா? -அப்பா! 242 00:20:54,922 --> 00:20:57,049 ஓட்டுனரிடம் இதோ வர்றேன்னு சொல். 243 00:20:59,552 --> 00:21:00,928 தயவு செய்து, ஆன், தயவு-- 244 00:21:01,012 --> 00:21:03,264 அப்பா, இது டாக்சி அல்ல. இது எஃப்பிஐ. 245 00:21:08,144 --> 00:21:11,188 இருக்கட்டும். நான் பார்த்துக்கறேன். 246 00:21:11,272 --> 00:21:13,149 சரி, பொறு, வர்றேன். 247 00:21:17,778 --> 00:21:21,490 சிலதை ஒழுங்கு படுத்தறேன். உங்களுக்கு என்ன வேணும் முகவரே? 248 00:21:25,286 --> 00:21:27,038 எங்கயோ போறீங்களா, கேப்டன்? 249 00:21:41,802 --> 00:21:45,723 கொரனாடோ கிளைச் சாலைகளில், அரை கிலோமீட்டர் வாகன வரிசையா? 250 00:21:45,806 --> 00:21:49,977 தப்பா நினைக்காதீங்க, முகாமை விட்டதுமே, கொரனாடோவிலருந்து வெளியேறிட்டீங்க. 251 00:22:09,997 --> 00:22:11,749 எவ்ளோ மோசமான நாள் இது. 252 00:22:11,832 --> 00:22:13,501 ஒரு கிறுக்கு சீல் ஓடிட்டான், 253 00:22:13,584 --> 00:22:17,838 அவன் இல்லாத இடத்தில் எஃப்பிஐ கதவை தட்டிக்கிட்டுருக்கு. 254 00:22:17,922 --> 00:22:19,882 நாங்க வாரன்டோட வந்த ஃபெடரல் முகவர்கள்-- 255 00:22:19,965 --> 00:22:21,425 என் முகத்தில் காட்டாதே. 256 00:22:21,509 --> 00:22:25,971 முத்திரை குத்திய காகிதத்தை காண்பித்தாள் பயப்படுவேன்னு நினைச்சியா? 257 00:22:26,055 --> 00:22:29,100 நான் சொல்லாம என் கட்டடத்துக்குள் நீங்க வரக் கூடாது. 258 00:22:32,520 --> 00:22:35,940 இருந்தாலும், பரவாயில்ல முகவரே. என்னிடம் மறைக்க ஏதுமில்லை. 259 00:22:38,234 --> 00:22:41,362 அவங்களை உள்ளே விடு. ஃபெடரல் முகவர்கள் தானே. 260 00:22:42,780 --> 00:22:43,948 போங்க. முன்னே போ. 261 00:22:50,121 --> 00:22:51,664 எது வேணுமோ எடுத்துக்கலாம். 262 00:22:52,873 --> 00:22:54,250 இங்கே வந்தது ஏன், தெரியும். 263 00:22:54,834 --> 00:22:58,712 உங்க கேள்விகளுக்கு இது பதில் கொடுக்கும்னு நினைக்கறேன். 264 00:23:00,923 --> 00:23:05,052 தப்பான இடத்திற்கு வந்ததை பற்றி உனக்கு தெரியும்போது, 265 00:23:05,761 --> 00:23:09,098 உங்களை அனுப்பிய நாயிடம், போய் முட்டிக்கச் சொல்லுங்க. 266 00:23:19,400 --> 00:23:20,484 என்ன நிலைமை, மேக்? 267 00:23:20,985 --> 00:23:22,319 ஹாவர்ட்ஸை காணலை. 268 00:23:22,403 --> 00:23:25,948 மூட்டை கட்டியாச்சு, மயாமிக்கு டிக்கட், ஆனா விமானத்தில் ஏறவில்லை. 269 00:23:26,031 --> 00:23:29,118 காக்ஸை காணோம். கூடிய சீக்கிரம் கண்டுபிடிப்போம். 270 00:23:46,635 --> 00:23:48,679 இன்றிரவு நல்லாதானே இருக்கே, பில்? 271 00:24:01,442 --> 00:24:03,402 ஜேம்ஸ் ரீஸ் இன்னும் கிடைக்கவில்லை 272 00:24:07,823 --> 00:24:11,785 இல்ல. அதுக்கு நீ பொறுப்பு இல்லை. யாரும் அதை எதிர்பார்க்கவில்லை. 273 00:24:24,173 --> 00:24:25,132 சில்லரை வெச்சுக்கோ. 274 00:24:55,704 --> 00:24:57,498 அப்ப, இது எப்படிதான் போகும்? 275 00:26:23,334 --> 00:26:25,044 பழைய துயரம் ஞாபகம் இருக்கா? 276 00:26:25,127 --> 00:26:26,086 சொல்லு? 277 00:26:26,170 --> 00:26:29,882 நான் அதை போலவே ஒண்ணு கண்டெடுத்தேன், 180 கிலோ "சனியன்." 278 00:26:29,965 --> 00:26:35,220 கேடர் கடற்கரைல இதை சுமந்தப்போ, எங்களை தோத்தாங்குளின்னு சொன்னது நினைவிருக்குமே. 279 00:26:36,138 --> 00:26:38,307 -கை உடைந்து போச்சு. -அப்படியா? 280 00:26:39,725 --> 00:26:41,101 வலி எப்படினு தெரியும். 281 00:26:43,020 --> 00:26:44,521 ரீஸ், உனக்கு என்ன வேணும்? 282 00:26:46,482 --> 00:26:47,858 வேற யாருக்கு தெரியும் சொல். 283 00:26:57,034 --> 00:26:58,619 பச்சைக் கொடி காட்டியது பில்லர். 284 00:27:00,120 --> 00:27:03,582 ஹாவர்ட் நுண்ணிய விவரங்களை நெறிப்படுத்தி, செயலாக்க உதவினார். 285 00:27:03,665 --> 00:27:05,793 வினியோகஸ்தர்கள்? மருத்துவர்கள்? 286 00:27:06,919 --> 00:27:09,254 அவங்க வெறும் கட்டளைகள பின்பற்றினாங்க. 287 00:27:10,464 --> 00:27:13,092 உங்களுக்கு பி12 வைடமின் தருவதா நினைச்சாங்க. 288 00:27:13,717 --> 00:27:16,720 சோதனை பத்தி எங்களுக்கு மட்டும்தான் தெரியும். 289 00:27:20,015 --> 00:27:23,435 நாம ஓய்வு பெற்றதும் என்ன தருவாங்க என்று உனக்கு தெரியுமே. 290 00:27:25,270 --> 00:27:26,772 முழு வாழ்வையே தந்தாலும், 291 00:27:28,357 --> 00:27:30,484 உனக்கு கிடைப்பதோ பென்சனும், துடுப்பும். 292 00:27:31,610 --> 00:27:33,862 "உங்க சேவைக்கு நன்றி." வார்த்தைகளே. 293 00:27:39,368 --> 00:27:41,328 நீ சகோதரத்துவத்தின் ஒரு அங்கம். 294 00:27:41,870 --> 00:27:43,622 அதுதான் உனக்கு கிடைத்தது. 295 00:27:45,582 --> 00:27:47,709 உன் சகோதரர்களை வெளிநாட்டுக்கு 296 00:27:48,460 --> 00:27:53,173 போய், அங்கே, குகைகளில், செத்துத் தொலைக்கச் சொன்னாய். 297 00:27:55,634 --> 00:27:58,470 ஆகட்டும், என்ன அது? நீயே அதைச் செய்ய முடியாதா? 298 00:28:02,683 --> 00:28:03,684 ஹேய். 299 00:28:04,685 --> 00:28:07,563 எங்க பயிற்சியில, நாங்க கனத்தை தனியா சுமக்கல. 300 00:28:07,646 --> 00:28:10,649 எப்பவும் பக்கபலமா நண்பர்கள் சூழ்ந்து இருந்தாங்க. 301 00:28:11,942 --> 00:28:14,445 அணி தேவைப்படும்போது, அவர்களை கூப்பிடலாம். 302 00:28:16,655 --> 00:28:18,157 உன் அணி எங்கே, பில்? 303 00:28:25,372 --> 00:28:26,665 இப்ப பாரம் உன்னிடம். 304 00:29:36,652 --> 00:29:39,071 ஐயோ, ரீஸ். என்ன செய்தாய்? 305 00:29:39,905 --> 00:29:41,782 -சரி, கேப்டன் ஹாவர்ட். -வேணாம். 306 00:29:43,867 --> 00:29:45,452 எனக்காக ஒண்ணு செய்வாயா? 307 00:29:45,536 --> 00:29:48,080 நான் செய்தது வெறும் அலுவலக வேலை, ரீஸ். 308 00:29:50,165 --> 00:29:53,043 உனக்கு என்னை தெரியும். ஜேம்ஸ், நான்-- 309 00:29:53,919 --> 00:29:57,172 என் வேலை மெத்தனமானது. தயை செய்து, ரீஸ். 310 00:29:58,715 --> 00:29:59,716 ஜேம்ஸ். 311 00:30:00,551 --> 00:30:01,593 குடும்பம் உண்டு. 312 00:30:02,719 --> 00:30:03,762 எனக்கும்தான். 313 00:30:05,264 --> 00:30:06,515 ராமிரெஸுக்கும் உண்டு. 314 00:30:07,391 --> 00:30:09,601 -கார்டீஸுக்கும் உண்டு. -வேணாம். 315 00:30:09,685 --> 00:30:14,940 உன் கணவன் என் பிளாடூனுக்கு செய்த வேலையால், டானி மிட்செல் தன் பிள்ளையை பார்க்க முடியல. 316 00:30:15,023 --> 00:30:17,943 அந்த காரணத்தை இப்ப சொல்ல முடியாது, கேப்டன். 317 00:30:18,026 --> 00:30:21,947 இப்ப, நான் சொல்றத செய்யப் போறியா இல்லையா? 318 00:30:24,241 --> 00:30:25,826 முடியாது, ரீஸ். நான்... 319 00:30:29,788 --> 00:30:30,622 சரி. 320 00:30:31,206 --> 00:30:32,791 -என்னை மன்னி. -புரியுது. 321 00:30:34,001 --> 00:30:35,002 நன்றி. 322 00:30:35,711 --> 00:30:39,256 என் பிள்ளையை கொல்ல காரணமானாய். இப்ப உன் பிள்ளையை கொல்கிறேன். 323 00:30:39,339 --> 00:30:40,966 வேணாம், ரீஸ். இல்ல. ரீஸ். 324 00:30:41,049 --> 00:30:42,676 -என்ன செய்றே? -இல்ல, வேணாம்! 325 00:30:42,759 --> 00:30:45,387 -அவனைப் பிடி! வேணாம், ரீஸ்! -முடியாது! 326 00:30:45,470 --> 00:30:47,639 -நிறுத்தித் தொலை! -முடியாது! 327 00:30:48,307 --> 00:30:49,308 தயவு செய்து. 328 00:30:53,270 --> 00:30:55,147 தயவு செய்து. நிறுத்து. 329 00:30:55,689 --> 00:30:56,857 -ரீஸ். -எழுந்துக்கோ. 330 00:30:57,357 --> 00:30:59,026 ஆகட்டும், எழுந்துக்கோ. 331 00:30:59,109 --> 00:31:01,528 நான் சொல்றத கேளு. தயவு செய்து கேள். சரி. 332 00:31:02,821 --> 00:31:04,364 உனக்கு ஒரு வாய்ப்பு. 333 00:31:04,448 --> 00:31:06,867 இப்ப உனக்கு ஒரு வாய்ப்பு தர்றேன். 334 00:31:06,950 --> 00:31:08,952 உன் வாழ்க்கையில் ஒரு நல்லது செய். 335 00:31:10,078 --> 00:31:14,207 உன் மனைவி, பிள்ளை பசிஃபிக்ல முழுகுவதை தவிர். உன்னால் முடியும். சரியா? 336 00:31:14,291 --> 00:31:15,292 சரி. 337 00:31:15,375 --> 00:31:16,627 நீ செய்யலாம். 338 00:31:22,841 --> 00:31:23,925 நீ செய்யப் போறியா? 339 00:31:28,597 --> 00:31:31,141 சரி. நான் செய்கிறேன். 340 00:31:31,224 --> 00:31:32,434 நீ நல்லவன். 341 00:31:33,226 --> 00:31:34,269 கடவுளே, எனக்கு உதவு. 342 00:31:39,316 --> 00:31:40,651 ஹாவர்ட் சுத்தமாகட்டும். 343 00:31:42,611 --> 00:31:44,571 அது முடியற வரை அவங்களை போக விடாதே. 344 00:31:45,989 --> 00:31:48,116 இரு, நீ எங்கேதான் போற? 345 00:31:49,117 --> 00:31:50,118 வீட்டுக்கு. 346 00:31:51,286 --> 00:31:52,788 "வீட்டுக்கு"னா என்ன அர்த்தம்? 347 00:31:54,873 --> 00:31:56,041 அவங்களை பார்க்கணும். 348 00:32:36,707 --> 00:32:38,125 உனக்கு என்ன வேணும், ரீஸ்? 349 00:32:43,505 --> 00:32:47,259 நீ காயப் படணும்னு நினைக்கவே இல்ல. எப்பவும் நோக்கம் அது அல்ல. 350 00:32:49,469 --> 00:32:53,098 தேவையானதைத் தவிர நீ எதுவும் செய்வேன்னு எனக்குத் தோணல. 351 00:32:54,975 --> 00:32:58,103 போரின் சில அம்சங்கள் அழகற்றவை. 352 00:32:58,770 --> 00:33:02,733 சரி, ஆனா நீ இப்போ போரில் இல்லை. வீட்டிலிருக்க. வித்தியாசம் இருக்கு. 353 00:33:04,067 --> 00:33:05,068 இனியும் அல்ல. 354 00:33:39,352 --> 00:33:42,564 நன்றி லெஃப்டினன்ட். ஏதாவது தெரிஞ்சா சொல்றோம். 355 00:33:43,356 --> 00:33:47,319 கொரனாடோ போலீஸ் அரசுத் துறையோடு ஒருங்கிணைந்து செயல்படுது. 356 00:33:48,153 --> 00:33:49,571 அட்மிரல் பத்தி ஏதும் உண்டா? 357 00:33:49,654 --> 00:33:54,201 வினியோக குறிப்பு, சோதனை முடிவு, எல்லாம் இயல்பா. பிரதிகள் வேறு எடுத்திருக்கான். 358 00:33:55,076 --> 00:33:59,748 சீல்ஸ் மீது சோதனை செய்த தடயங்களை ஏன் பில்லர் போட்டுக் கொடுக்கணும்? 359 00:34:02,876 --> 00:34:04,127 என்ன இது? 360 00:34:10,300 --> 00:34:11,760 பேச இடம் வேணும். 361 00:34:13,220 --> 00:34:14,930 டோனி. கொஞ்சம் பேசலாமா? 362 00:34:16,515 --> 00:34:18,475 -உட்கார். -பரவாயில்ல. 363 00:34:19,434 --> 00:34:21,770 நீ யார், என்னை இப்படி ஏன் செய்கிறாய்? 364 00:34:22,813 --> 00:34:24,231 பிஜான் ஆஸாட். டிசிஐஎஸ். 365 00:34:26,942 --> 00:34:28,068 கொஞ்ச நேரம் கொடுங்க. 366 00:34:33,490 --> 00:34:35,033 உன்னை நிறுத்த சொல்லிட்டாங்க. 367 00:34:35,700 --> 00:34:36,618 புரியலயே? 368 00:34:36,701 --> 00:34:39,246 உன் அணி தன் துறைக்கு திருப்பி அனுப்பப்படுது. 369 00:34:39,329 --> 00:34:43,458 எஃப்பிஐ பென்டகனில் நடந்த தவறை விசாரிக்கும், எதிர்மாறா அல்ல. 370 00:34:43,542 --> 00:34:44,584 அது சரிதான். 371 00:34:44,668 --> 00:34:48,046 உண்மைல, முகவரே, உங்களை வழக்கிலருந்து விடுவிக்க இஷ்டமில்லை. 372 00:34:48,129 --> 00:34:50,423 எனக்குத் தெரிந்து நல்லா நடத்தறீங்க. 373 00:34:50,924 --> 00:34:52,509 -அகல கால் வெச்சீங்க. -அகல காலா? 374 00:34:52,592 --> 00:34:55,679 அட்மிரல் தன் ஆட்கள் மீதே சட்ட விரோத சோதனை செய்தார். 375 00:34:55,762 --> 00:34:57,889 அது சட்ட விரோதமல்ல. விதிப்படியல்ல. 376 00:34:57,973 --> 00:34:59,558 நீ இதைப் பத்தி பேசறே. 377 00:35:00,308 --> 00:35:04,229 பில்லர் சோதனையை செய்ய அவசர பயன் அதிகாரத்தை கொண்டிருந்தார். 378 00:35:07,315 --> 00:35:11,361 அந்த சோதனை சட்ட விரோதமானதல்ல. ஆனா, மூடிமறைக்கும் வேலையா நினைக்கிறோம். 379 00:35:13,363 --> 00:35:15,073 இருவரும் அலுவலகத்தில் பேசுங்க. 380 00:35:23,582 --> 00:35:27,627 பில்லர், அவன் ஆட்கள் பத்தி உன்னிடமுள்ளதை டிசிஐஎஸ்க்கு கொடுத்துடு. 381 00:35:29,880 --> 00:35:31,506 பிறகு விடுமுறையில போயிடு. 382 00:35:33,216 --> 00:35:34,718 ரீஸ் இன்னும் வெளியில். 383 00:35:35,844 --> 00:35:36,970 குறுகிய விடுமுறை. 384 00:35:37,721 --> 00:35:40,265 யாரும் உன்னை இதில மண்டையை பிச்சுக்க சொல்லல. 385 00:35:40,891 --> 00:35:45,270 வாஷிங்டன் லாஸ் ஆஞ்சலசை கூப்பிட்டது. தேடுவோர் படையை மேற்கொள்ள அனுப்பறாங்க. 386 00:35:47,856 --> 00:35:50,400 வழக்கு ஆரம்பத்திலிருந்தே அவங்க பார்த்திருக்கணும். 387 00:36:05,415 --> 00:36:07,334 இது ஏன் உனக்கு எவ்வளவு முக்கியம்? 388 00:36:07,417 --> 00:36:08,877 -என்னது? -இந்த செய்திக் கதை. 389 00:36:09,794 --> 00:36:14,049 உனக்கு புகழ் ஈட்டவா, அல்லது ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தும்னு நினைக்கிறாயா? 390 00:36:14,132 --> 00:36:16,801 நான் செய்வதில எனக்கு லட்சியம் இருக்கக் கூடாதா? 391 00:36:16,885 --> 00:36:18,178 நீ தேர்ந்தெடுக்கணும்னா. 392 00:36:28,480 --> 00:36:33,068 என் நாலு வயதில், என் அப்பா சீன கம்யூனிஸ்ட் கட்சியிடம் முரண்பட்டார், 393 00:36:33,652 --> 00:36:35,487 ஜியோபிங் ஆட்சிக்கு எதிரானார். 394 00:36:36,321 --> 00:36:39,449 எனவே, என் அம்மாவை, என்னை, சகோதரனை அமெரிக்கா அனுப்பினார். 395 00:36:42,035 --> 00:36:43,411 பிறகு நான் அவரை பார்க்கல. 396 00:36:45,622 --> 00:36:49,250 எனது ஆறாம் வயதில், என் வீட்டை இழந்தேன், 397 00:36:49,334 --> 00:36:51,920 என் மொழியை, என் பெயரையும் கூட இழந்தேன், 398 00:36:52,545 --> 00:36:55,215 எல்லாம் என் அப்பாவின் உறுதியான முரண்பாட்டால். 399 00:36:57,008 --> 00:37:00,553 ஆக, ஆம், நான் உண்மை முக்கியமென நினைக்கிறேன். 400 00:37:03,139 --> 00:37:05,684 டேவிட் மற்றும் கோலியாத்தின் சண்டையில். 401 00:37:06,351 --> 00:37:09,396 இதில் ரீஸ் யார்? டேவிட் அல்லது கோலியாத்? 402 00:37:15,694 --> 00:37:17,320 அது எனக்கு இன்னும் புரியல. 403 00:37:35,046 --> 00:37:36,715 இன்று விந்தையா ஒண்ணு நடந்தது. 404 00:37:39,426 --> 00:37:43,596 பென்டகன் ஆர்டி-4895ஐ அங்கீகரித்திருக்கு என்று கண்டுபிடித்தோம். 405 00:37:44,973 --> 00:37:48,977 மேலும் வினோதம், ஃபின்சென் அம்பல படுத்த முடியாத ஒரு கூட்டாளி உண்டு. 406 00:37:49,060 --> 00:37:51,104 ஹார்ன் கூட இன்னுமொரு நபர் இருக்கார். 407 00:37:52,397 --> 00:37:53,398 பென்டகனா? 408 00:37:57,152 --> 00:37:58,528 அதுதான் உன் கோலியாத். 409 00:38:02,782 --> 00:38:05,410 போகணும். என் அணியை வழக்கிலருந்து நீக்கினாங்க. 410 00:38:06,077 --> 00:38:07,287 நான் என்னாவது? 411 00:38:11,124 --> 00:38:15,128 உன் செய்திக் கதையை முடித்து உடனடியா வெளியிடு, புரனெக். 412 00:38:36,149 --> 00:38:39,152 வீட்டுக்கு போ. வீட்டை லாஸ் ஆஞ்சலஸ் வரும் வரை பாக்கறேன். 413 00:38:52,332 --> 00:38:55,835 ஃஎப்பிஐ, கார்ட், ஃபின்சென் கொடுப்பனவுகளுக்கான ஆதாரம் இருக்கு 414 00:38:55,919 --> 00:38:58,213 அது ஓடின்ஸ் ஸ்வார்ட்டோட ஒத்துப்போகுது, ஆனா 415 00:38:58,296 --> 00:39:01,049 ஆர்டி4895க்கான அங்கீகாரம், லொரைன் ஹார்ட்லேயின் பெயரில். 416 00:39:03,051 --> 00:39:05,678 2 கோடி டாலர் மதிப்புள்ளது 417 00:39:19,275 --> 00:39:21,111 -ஹலோ? -ஹேய், ஜார்ட், நான்தான். 418 00:39:22,737 --> 00:39:24,405 என்னிடம் ரீஸ் கதை இருக்கு. 419 00:39:24,489 --> 00:39:28,785 ஆம், கேட்டேன். தி அட்லான்டிக்குக்கா? ஆக, யாரையோ அழ வைக்கப் போறியா என்ன? 420 00:39:28,868 --> 00:39:30,120 பெரிய விஷயம், ஜார்டன். 421 00:39:30,662 --> 00:39:34,457 லொரைன் ஹார்ட்லே ஒப்பமிட்ட அவசர பயன் அங்கீகாரம் என்னிடம் இருக்கு. 422 00:39:34,541 --> 00:39:38,795 ரீஸ் மற்றும் அவன் ஆட்கள் மேல் ரகசிய சோதனையை ஏவி, கட்டிகள் தந்தாள். 423 00:39:38,878 --> 00:39:40,130 கடவுளே. 424 00:39:40,213 --> 00:39:42,465 இன்னும் கேட்டா, இந்த மூடி மறைப்பு, 425 00:39:42,549 --> 00:39:45,760 ஸ்டீவ் ஹார்ன் தன் முதலீட்டை பாதுகாக்க தந்த லஞ்சத்தால். 426 00:39:45,844 --> 00:39:47,554 டிஃபென்ஸ் செக்ரட்டரிக்கும் பணமா? 427 00:39:47,637 --> 00:39:51,766 ஒரு பங்குதாரரை எஃபிஐ அம்பலமாக்க முடியல. ஹார்ட்லேயே தொடர்பானதால், 428 00:39:51,850 --> 00:39:54,602 படிப்பவங்க, என் முடிவுக்கே வருவாங்க. 429 00:39:54,686 --> 00:39:57,856 இல்ல அவளை, தான் செய்ததுக்கு பதில் சொல்லவாவது வைக்கணும். 430 00:39:59,983 --> 00:40:04,070 வோல்ட்ஸ்ட்ரீமின் ஆதாயம், உடனடி பதிப்பு. எவ்ளோ சீக்கிரம் பதிப்பிக்கலாம்? 431 00:40:04,904 --> 00:40:08,366 அனுப்பு. எல்லாம் இருந்தா, ஒரு மணி நேரத்தில் போட்டுடலாம். 432 00:40:08,908 --> 00:40:09,909 அப்படியே. 433 00:40:12,495 --> 00:40:14,455 ரகசிய சோதனைகள் மற்றும் பங்கு லஞ்சங்கள்: ஜேம்ஸ் ரீஸுக்கு எதிரா லொரைன் ஹார்ட்லே போர் 434 00:40:14,539 --> 00:40:15,540 எழுதியது கேட்டி புரனெக் 435 00:40:17,542 --> 00:40:18,960 அனுப்பு 436 00:40:19,043 --> 00:40:20,712 அனுப்பப் படுகிறது... 437 00:40:20,795 --> 00:40:22,130 தகவல் அனுப்பப் பட்டது. 438 00:40:51,910 --> 00:40:55,580 இது உன் அபிமானம், ஆனா எனக்கு புது இரவு சட்டை கிடைத்ததா தோணுது. 439 00:40:55,663 --> 00:40:56,748 நீ என்ன நினைக்கிற? 440 00:40:58,124 --> 00:41:01,711 என் வாழ்க்கையில ஒரு நல்ல முடிவாவது எடுத்திருக்கேன்னு தோணுது. 441 00:41:04,505 --> 00:41:05,840 நிச்சயமாகவா? 442 00:41:06,883 --> 00:41:08,927 -75 சதம்னு வெச்சுக்க. -அதிக பேச்சு. 443 00:41:17,560 --> 00:41:18,728 கர்ப்பமாயிருக்கேன். 444 00:41:22,440 --> 00:41:23,858 இப்ப கொடுத்த முத்தத்திலா? 445 00:41:24,442 --> 00:41:27,445 -கர்ப்பம் என்றால் என்ன அர்த்தம்? -கர்ப்பம் என்று. 446 00:41:27,528 --> 00:41:29,572 ஆக, நீ வீட்டுக்கு வரணும். 447 00:41:30,156 --> 00:41:31,032 நிச்சயமாகவா? 448 00:41:31,115 --> 00:41:33,243 கிட்டத்தட்ட 75, 80 சதவீதம் நிச்சயம். 449 00:41:42,502 --> 00:41:43,503 உனக்காக ஏங்கறேன். 450 00:41:53,680 --> 00:41:55,348 நீ பிரமாதமான தாய் ஆவாய். 451 00:41:58,476 --> 00:42:01,020 பையனா இருந்தா மேத்யூனு பேர் வெச்சா என்ன? 452 00:42:03,356 --> 00:42:04,399 மேத்யூ? 453 00:42:06,234 --> 00:42:07,986 எனக்கு பிடிச்ச பெயர் கன்னர். 454 00:42:08,069 --> 00:42:09,070 கன்னரா? 455 00:42:10,154 --> 00:42:11,698 -பெண்ணா இருந்தா? -கேஜ். 456 00:42:12,448 --> 00:42:13,992 -பெண்ணுக்கு கேஜா? -ஆம். 457 00:42:14,575 --> 00:42:15,618 லூசி எப்படி? 458 00:42:18,121 --> 00:42:19,455 பிடிச்சிருக்கு. லூசி. 459 00:42:34,512 --> 00:42:35,513 ஜேம்ஸ். 460 00:42:41,519 --> 00:42:42,562 லாரென்? 461 00:42:52,947 --> 00:42:53,781 ஜேம்ஸ். 462 00:42:54,532 --> 00:42:58,244 குடும்பங்களுக்கு ராத்திரி முழுக்க ஃபோன் பண்ணாங்க. என்ன ஆச்சு? 463 00:42:58,953 --> 00:42:59,954 என்னிடம் சொல். 464 00:43:00,621 --> 00:43:01,622 அப்பா. 465 00:43:05,335 --> 00:43:06,502 வா. 466 00:43:07,962 --> 00:43:09,130 வந்து பார்க்கணுமா? 467 00:43:09,797 --> 00:43:13,426 உனக்கு தலையில் அடிபட்டிருக்குன்னு மட்டும் தான் சொன்னாங்க, 468 00:43:13,509 --> 00:43:14,802 நீ ஓய்வு எடுக்கணுமாம். 469 00:43:14,886 --> 00:43:15,928 ஆகட்டும். 470 00:43:20,558 --> 00:43:21,392 ஐ லவ் யு. 471 00:43:21,476 --> 00:43:24,771 திரும்ப கூட்டிட்டு வா. அவன்... இடதில் இருக்கான். 472 00:43:32,737 --> 00:43:33,905 உன்னிடம் வர்றேன்! 473 00:43:35,448 --> 00:43:36,449 போ! 474 00:43:39,077 --> 00:43:40,036 டானி, வேணாம்! 475 00:43:43,081 --> 00:43:45,291 அப்பா. அப்பா. 476 00:43:46,459 --> 00:43:47,668 எல்லாம் சரிதானே? 477 00:43:47,752 --> 00:43:50,880 ஹேய்! கணவு கண்டது போதும்! கண்ணை திற! 478 00:43:56,094 --> 00:43:57,512 முடிச்சாச்சுன்னு சொன்னே. 479 00:43:58,971 --> 00:44:01,766 மூணு பணிகள் முன். மூணு பணிகள் முன். 480 00:44:01,849 --> 00:44:05,103 -எனக்கு இந்த பேச்சு வேணாம். -லூசியிடம் நான் என்ன சொல்வது? 481 00:44:05,186 --> 00:44:08,022 -நான் என்ன சொல்லணும்? -அவளிடம் உண்மையை சொல். 482 00:44:08,856 --> 00:44:11,734 அங்கே நான் சண்டையிட்டது உன்னையும் அவளையும் காக்க. 483 00:44:11,818 --> 00:44:13,611 நமக்கே தெரியும் அது அபத்தம்னு. 484 00:44:13,694 --> 00:44:16,572 அங்க நீங்க போனா உங்களுக்காக சண்டையிடறீங்க. 485 00:44:20,368 --> 00:44:21,661 லாரென், திரும்பி வா. 486 00:44:24,539 --> 00:44:26,791 "இதைவிட அழகான காட்சி இருக்க முடியாது, 487 00:44:27,542 --> 00:44:30,545 ஆனா, அதை காண யாருமே இல்ல, அந்த குட்டி பையனைத் தவிர, 488 00:44:30,628 --> 00:44:32,713 ஜன்னல வெறித்து பார்த்துட்டிருந்தான். 489 00:44:33,339 --> 00:44:37,593 மத்த பிள்ளைகள் காணாத பரவசங்கள் எண்ணற்றதை அனுபவித்திருக்கான், 490 00:44:37,677 --> 00:44:40,888 ஆனா, அவன் ஜன்னல் வழியா பார்த்துட்டிருந்தது 491 00:44:40,972 --> 00:44:43,474 அவனுக்கு எப்போதும் தடை செய்ய வேண்டிய ஒன்று." 492 00:44:46,853 --> 00:44:49,147 அத்தியாயம் 17. "வெண்டி வளர்ந்த பின்..." 493 00:44:50,773 --> 00:44:54,402 -அப்பா! ஜெயித்தேன்! ஸ்பெல்லிங் போட்டில. -பூட்சை கழற்று, லூசி. 494 00:44:54,485 --> 00:44:56,863 என்ன சொன்னேன்? பயிற்சி துல்லியமாக்கும். 495 00:44:57,697 --> 00:44:59,699 அருமை! கண்ணு, கேடயம் வாங்கினாய். 496 00:44:59,782 --> 00:45:01,742 கடைசி வார்த்தை டிஸப்பியர். 497 00:45:02,743 --> 00:45:06,497 அந்த பொண்ணுக்கு ரெண்டு 'பி'ன்னு தெரியல. ஆனா எனக்கு தெரியும். 498 00:45:06,581 --> 00:45:07,665 அதான் தெரியுமே. 499 00:45:11,252 --> 00:45:12,462 டிஸப்பியர். 500 00:45:13,671 --> 00:45:14,672 டி... 501 00:45:15,840 --> 00:45:16,841 ஐ... 502 00:45:18,384 --> 00:45:19,385 எஸ்... 503 00:45:20,553 --> 00:45:21,637 ஏ... 504 00:45:21,721 --> 00:45:23,014 போதும், போகணும். 505 00:45:23,556 --> 00:45:24,557 பி... 506 00:45:25,725 --> 00:45:26,726 பி... 507 00:45:27,894 --> 00:45:28,895 இ... 508 00:45:29,353 --> 00:45:30,354 ஏ... 509 00:45:47,163 --> 00:45:48,414 ஹேய். 510 00:45:48,498 --> 00:45:49,874 கிட்டத்தட்ட தூங்கிட்டாள். 511 00:46:18,861 --> 00:46:21,531 த்ரீமா கேட்டி செய்தி 512 00:46:21,614 --> 00:46:27,620 ஹார்ட்லே அதை அங்கீகரித்தாள். 513 00:47:15,376 --> 00:47:19,130 இல்ல. அணி மூன்று நாளை கிளம்புது. அவங்களை வழியனுப்பணும். 514 00:47:28,472 --> 00:47:29,599 அறைல தனியா பேசணும். 515 00:47:31,267 --> 00:47:33,227 முடிந்ததும் சொல்றேன். 516 00:47:40,276 --> 00:47:42,069 உன்னை ரொம்ப நேரம் கூப்பிட்டேன். 517 00:47:42,153 --> 00:47:45,865 இன்று எப்படிப் பட்ட குழப்பத்திலே முழுகினோம் என்பது தெரியாதா? 518 00:47:47,908 --> 00:47:49,660 எனக்கு ஓரளவு தெரியும், சார். 519 00:47:53,998 --> 00:47:58,377 ஹார்ட்லே சுயநலமிகளுக்கு பலியாக்க பார்த்தா, ஆனா நான் உங்க ஆட்டத்தை ஆடினேன். 520 00:48:01,922 --> 00:48:06,427 வேற என்ன இருக்கு? நமக்கு ஏதாவது வேணும். இந்த பெண்மணி ஏதோ சதி செய்யறா. 521 00:48:08,554 --> 00:48:09,597 என்ன அது? 522 00:48:18,230 --> 00:48:19,440 இது உங்களுக்கு, சார். 523 00:48:25,237 --> 00:48:26,072 ஆம்? 524 00:48:26,781 --> 00:48:27,907 அட்மிரல் பில்லர். 525 00:48:30,785 --> 00:48:33,412 உன் முழு பணியிலயும் ஜாக்கிரதையா நடந்தாய், 526 00:48:34,163 --> 00:48:36,290 திரை பின்னால் மறைந்து, 527 00:48:37,208 --> 00:48:39,377 மற்றவர்களை உனக்காக சண்டையிட ஆணையிட்டு. 528 00:48:41,295 --> 00:48:44,965 என் மகள், உன்னை விட அதிக தாக்குதலை சந்தித்தது, இன்று புரிந்தது. 529 00:48:48,594 --> 00:48:50,971 ஆக, அதை நான் சரி செய்ய நினைத்தேன். 530 00:48:51,055 --> 00:48:52,973 நீ பெரிய ஆளுனு நினைப்பா? 531 00:48:54,100 --> 00:48:55,601 நீ முக்கியமானவன்னு நினைப்பா? 532 00:48:56,143 --> 00:48:57,978 நீ ஒண்ணுமே இல்ல. 533 00:48:58,396 --> 00:49:02,108 காற்றில் பறக்கும் காய்ந்த சருகு. 534 00:49:02,900 --> 00:49:04,110 சரிதானே? 535 00:49:06,195 --> 00:49:09,323 க்ளேமோர் கண்ணி வெடியில், 700 உலோக உருளைகள். 536 00:49:10,574 --> 00:49:13,035 அதில் இரண்டு கண்ணி வெடிகள் உன்னை குறி வைத்தா, 537 00:49:13,119 --> 00:49:17,957 அது 1400 உலோக குண்டுகள், 1400. 538 00:49:18,541 --> 00:49:22,920 நீ கொலை செய்த சீல்கள் ஒவ்வொருத்தருக்கும் ஒரு நூறு. 539 00:49:24,171 --> 00:49:25,798 எதைப் பத்தி பேசறே நீ? 540 00:49:31,053 --> 00:49:32,930 எனக்கு வேற வழி இல்ல, சார். 541 00:49:41,689 --> 00:49:43,357 ரீஸ். கமாண்டர்! 542 00:49:45,234 --> 00:49:46,485 இதைச் செய்யாதே! 543 00:49:47,528 --> 00:49:48,779 கேட்குதா? 544 00:49:48,863 --> 00:49:50,239 நீ உறுதியா எதிர்க்கணும்-- 545 00:49:56,120 --> 00:49:59,623 இது வார்காமையும் மீறியது. உனக்குத் தெரியுமா? 546 00:50:00,624 --> 00:50:03,961 இப்ப வேற யார் இதில தொடர்புனு சொல்றேன், ஆனா நான் இறந்தா... 547 00:50:05,463 --> 00:50:06,672 நான் இறந்தா... 548 00:50:10,176 --> 00:50:11,177 உனக்கு தெரியாது. 549 00:50:11,260 --> 00:50:14,972 சரி, சும்மா பேச்சுக்கு வெச்சுக்குவோம், அட்மிரல், 550 00:50:16,307 --> 00:50:17,808 எனக்கு ஏற்கனவே தெரியும். 551 00:50:24,315 --> 00:50:27,234 துரோகி ஹாவர்ட் 552 00:50:40,956 --> 00:50:42,291 அதை யாராவது பார்த்தீங்களா? 553 00:50:42,374 --> 00:50:46,629 என்ஏபியின் வடமேற்கு மூலையில் வெடி. வார்காம் எரிந்தது, உச்சி மாடியில். 554 00:50:46,712 --> 00:50:49,256 அதை அடை. ஒண்ணொண்ணா. 555 00:51:01,811 --> 00:51:04,647 ரீஸ் முகாமில் இருக்கானா? பார்த்த சான்று இருக்கா? 556 00:51:05,773 --> 00:51:09,860 இது அட்மிரலின் அலுவலகம். ஒரு மாதிரி தொலை வெடிப்பா இருக்கணும். 557 00:52:02,621 --> 00:52:03,622 ரீஸ்! 558 00:52:30,149 --> 00:52:33,235 ஹேய்! இரு, உனக்கு என்ன நடந்ததுன்னு எனக்கு தெரியும். 559 00:52:33,319 --> 00:52:36,113 உனக்கு நடந்தது தெரியும். என்ன செய்தாங்கனு தெரியும். 560 00:52:36,196 --> 00:52:37,698 நீ இங்க இருக்கக் கூடாது. 561 00:52:37,781 --> 00:52:41,160 ஏன் உன் குடும்பத்தை கொன்னாங்க. ஹார்னின் சான்று இருக்கு. 562 00:52:43,829 --> 00:52:45,122 அதோட பில்லர். 563 00:52:46,373 --> 00:52:47,625 மாட்டினாங்க, ரீஸ். 564 00:52:49,585 --> 00:52:52,171 இப்ப நீதியை வேலை செய்ய விடு. 565 00:52:54,757 --> 00:52:56,133 நான்தான் நீதி. 566 00:53:01,388 --> 00:53:02,389 விட மாட்டேன். 567 00:53:04,767 --> 00:53:06,727 உன்னை இதைத் தொடர விட மாட்டேன். 568 00:53:35,506 --> 00:53:37,216 மறுபடி சொல்லப் போவதில்லை. 569 00:53:39,593 --> 00:53:40,844 என் பட்டியலில் சேராதே. 570 00:54:12,626 --> 00:54:15,337 -சொல்லு? -என்ன நடக்குது? ஒரு மணி நேரமாச்சே. 571 00:54:15,421 --> 00:54:17,256 நீ சொல். நான் காத்துட்டிருக்கேன். 572 00:54:18,215 --> 00:54:21,093 -காத்திட்டிருக்கியா? -இணையம் வேலை செய்வது இப்படி. 573 00:54:21,176 --> 00:54:24,138 எதையாவது எனக்கு அனுப்பினாதானே நான் பதிப்பிக்கலாம். 574 00:54:25,305 --> 00:54:26,557 நான் அனுப்பினேன். 575 00:54:27,224 --> 00:54:30,269 பெறுனர்: ஜார்டன் க்ராஃப் - கதை 576 00:54:30,936 --> 00:54:31,854 இல்ல, நீ அனுப்பல. 577 00:54:36,525 --> 00:54:37,985 ஜார்டன், நான் போகணும். 578 00:54:38,068 --> 00:54:41,572 வேணாம், கேட்டி. மறுபடி இப்படி செய்யாதே, புண்ணியமாகட்டும். 579 00:55:10,100 --> 00:55:13,479 உன் செய்தி கதையை படிச்சேன், மிஸ் புரனெக். அது அட்டாகாசம். 580 00:55:18,233 --> 00:55:20,110 துரதிருஷ்டவசமா, அது தப்பு. 581 00:55:23,989 --> 00:55:27,159 விலகிப் போக விரும்பினா, உன்னை கண்டுக்க மாட்டோம். 582 00:55:28,285 --> 00:55:32,206 ஆனா, அரை குறை கதையை பத்திரிகைல சொல்ல, நீ சாதாரண பத்திரிகையாளரல்ல. 583 00:55:34,541 --> 00:55:36,043 உனக்கு உண்மை தெரியணும்னா... 584 00:55:38,337 --> 00:55:39,379 முழு உண்மைக்கு, 585 00:55:40,172 --> 00:55:42,424 நான் வெளிப்படையான நேர்காணலுக்கு தயார். 586 00:55:44,093 --> 00:55:45,344 உனக்கு ஆர்வமிருந்தா. 587 00:57:33,785 --> 00:57:35,787 வசனங்கள் மொழிபெயர்ப்பு கைனூர் சத்யன் 588 00:57:35,871 --> 00:57:37,873 படைப்பு மேற்பார்வையாளர் சுதா பாலா