1 00:00:06,006 --> 00:00:08,926 மாலை நேரத்திற்குள் இன்னும் பதினைந்து செ.மீ மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2 00:00:09,009 --> 00:00:12,095 தென் கோடியில் உள்ள பால்டிமோர் வரை வெள்ள எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. 3 00:00:12,179 --> 00:00:15,349 முடிந்தவரை, மக்கள் வீதிகளில் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 4 00:00:15,432 --> 00:00:17,893 ஒரு சர்ச் இளைஞர்கள் வேன் உள்பட, இன்டர் ஸ்டேட் ஹைவேக்களில் பல விபத்துக்கள் 5 00:00:17,976 --> 00:00:19,686 நடப்பதை நமது குழு கண்டுள்ளனர். 6 00:00:20,312 --> 00:00:21,605 அவர்கள் குடும்பங்களுக்கு எங்கள் பிரார்த்தனைகள். 7 00:00:22,731 --> 00:00:25,234 அடக் கடவுளே. பத்திரமாக இருங்கள், எட். 8 00:00:26,443 --> 00:00:29,530 இப்போது சூரியன் பிரகாசிக்கும் சான் டியாகோவிற்குப் போவோம், 9 00:00:29,613 --> 00:00:32,824 அங்கு நமது ஃபிட்னெஸ் நிபுணரான ஷீலா டி. ரூபின் நமக்காக காத்திருக்கிறார். 10 00:00:37,162 --> 00:00:40,624 பார்த்தீர்களா? இது கஷ்டமே இல்ல. உங்களுக்கு ஒரு சவால். 11 00:00:41,542 --> 00:00:43,460 -வித்தியாசம் தெரியுமா? -நிச்சயமா. 12 00:00:43,544 --> 00:00:46,255 -நிஜமா தெரியுமா, ஸ்டூ? -எனக்குத் தெரியாது. 13 00:00:46,338 --> 00:00:49,091 உங்க மனசுக்குள்ளேர்ந்து, உன்னால முடியாது, ஏற்கனவே நீ பல முறை முயற்சி செய்து, 14 00:00:49,967 --> 00:00:51,844 பல முறை தோற்றுப் போயிருக்கன்னு, சொல்ற குரலை அடக்குவது தான் கஷ்டம். 15 00:00:51,927 --> 00:00:54,680 நீங்க பலவீனமானவங்க. அது உங்களுக்குத் தெரியாதுன்னு சொல்லும். 16 00:00:54,763 --> 00:00:56,682 என் மாமியாரிடம் பேசிட்டு வந்திருக்கீங்க போலயிருக்கே. 17 00:00:57,349 --> 00:00:58,433 தமாஷ். தமாஷுக்குச் சொன்னேன். 18 00:00:58,517 --> 00:01:00,769 அந்தக் குரலை இல்லாம செய்த பிறகு செய்வது தான் சவால். 19 00:01:02,229 --> 00:01:04,480 நீங்கள் வலிமையானவர், உங்களால் முடியும் என்று உங்களுக்குள் 20 00:01:04,982 --> 00:01:05,983 கொழுந்து விட்டு எரியும் நெருப்பு அது. 21 00:01:07,693 --> 00:01:10,529 ஆக என் முட்டியிலிருந்து ஒரு உரசும் சத்தம் வருதே, அது சவாலா? 22 00:01:10,612 --> 00:01:12,614 இல்ல, ஸ்டூ. அது ஆஸ்டீயோஆர்த்ரைடிஸ். 23 00:01:13,115 --> 00:01:16,410 ஆனால் அதை சமாளிக்க முடியும். நான் சில மாத்தங்களை காட்டறேன். 24 00:01:16,910 --> 00:01:21,957 நாலு, மூணு, ரெண்டு, ஓண்ணு. இதோ. 25 00:01:22,541 --> 00:01:26,044 நடங்க, நடங்க, திரும்புங்க. நடங்க, நடங்க, திரும்புங்க. அப்படி தான். 26 00:01:26,587 --> 00:01:27,629 அதோட முடியுது! 27 00:01:29,965 --> 00:01:31,049 நன்றி, பெண்களை. 28 00:01:31,133 --> 00:01:33,260 -சரி. -மன்னிக்கணும். சாரி. 29 00:01:33,343 --> 00:01:35,012 -மன்னிக்கணும். நான் தான். ஹே. -நன்றி. 30 00:01:35,512 --> 00:01:37,472 அசத்திட்ட. நீ ஒரு நடசத்திரம். 31 00:01:37,556 --> 00:01:39,308 நீ ரொம்ப திரில்லிங்கா செய்த. எனக்குத் தலைகால் புரியலை. 32 00:01:39,391 --> 00:01:41,185 இளைப்பாறு. இன்னிக்கு தானே முதல் நாள் செய்யறோம். 33 00:01:41,685 --> 00:01:43,228 இல்ல, அதை ஒளிபரப்பு செய்தாங்க 34 00:01:43,312 --> 00:01:45,772 அமெரிக்காவுல இருக்குற அனைத்து சமையறைக்கும் வரவேற்பறைக்கும் இது போயிடுச்சு. 35 00:01:45,856 --> 00:01:48,609 நான் நியூ யார்க், டிசி, ஜாக்சன்வில் டோபேக்காவைப் பத்தி பேசுறேன். 36 00:01:48,692 --> 00:01:51,278 நான் ஏன் நகரங்களைச் சொல்றேன்? உனக்கு தான் அமெரிக்கா தெரியுமே. 37 00:02:09,880 --> 00:02:13,634 எனவே, நீங்க அற்புதமா செய்யறீங்க. நிச்சயமா, நான் அதை உங்களுக்குச் சொல்ல அவசியமில்லை, 38 00:02:13,717 --> 00:02:15,010 அதனால நான் நேர விஷயத்துக்கு வரேன். 39 00:02:15,093 --> 00:02:19,223 உங்க தேசிய பிராண்டுடன் எங்களுடையதை இணைக்கலாம் என்பதை தான் நாங்க முன் வைக்கிறோம். 40 00:02:20,015 --> 00:02:21,016 மாநில பிராண்டை. 41 00:02:21,099 --> 00:02:22,976 நீங்க குட் மார்னிங் அமெரிக்காவில இடம் பெற்றிருக்கீங்க. 42 00:02:23,060 --> 00:02:25,312 -நீங்க தேசிய பிராண்டுன்னு சொல்வேன். -நான் சொன்னது உங்களை. 43 00:02:25,395 --> 00:02:27,981 ஆய்வின் படி, ஹார்ட்மன் ஃபூட்ஸ் இன்னும் தென்மேற்கு பகுதியில 44 00:02:28,065 --> 00:02:30,442 -அடி எடுத்து வைக்கலை. -பசிஃபிக் நார்த்வெஸ்டிலும் தான். 45 00:02:31,026 --> 00:02:31,860 சரி... 46 00:02:31,944 --> 00:02:35,030 ஆகவே நாங்க தான் உங்களை உலகத்துக்கு அறிமுகப்படுத்தறோம். அப்படிதானே? 47 00:02:35,781 --> 00:02:38,742 மேசன், இந்த பெண்கள் உங்களை விழுங்குவதுக்கு முன்னாடி நான் பதில் சொல்றேன். 48 00:02:39,576 --> 00:02:42,788 நாங்க இன்னும் அனைத்து மார்கெட்களிலும் இல்லை, ஆனால் அதுக்கு தான் உங்க உதவியை நாடுகிறோம். 49 00:02:46,333 --> 00:02:48,293 ஒவ்வொரு பெண்ணும் ஷீலா ரூபினாக ஆசைப் படறாங்க, 50 00:02:48,377 --> 00:02:49,586 ஆனால் என்ன யோசிக்கறாங்கன்னா, 51 00:02:49,670 --> 00:02:53,215 "அதுக்கு நான் எதை தியாகம் செய்யணும்? இன்பத்தையா? சந்தோஷத்தையா? 52 00:02:53,715 --> 00:02:54,716 இனி எதையும் யோசிக்கத் தேவையில்லை. 53 00:02:55,300 --> 00:02:58,011 எங்க புதிய புராடெக்ட்டை பாருங்க: கொழுப்பு இல்லாத குக்கி. 54 00:02:58,595 --> 00:03:02,391 கொழுப்பு இல்லாத குக்கின்னா, உடம்புல கொழுப்பு ஏறாது. விஞ்ஞானப்பூர்வமா நிரூபணம் ஆகியிருக்கு. 55 00:03:02,474 --> 00:03:04,726 ஃபார்மலா ஆஃபர் செய்யும் போது விவரங்களை சரிபார்த்துடுவோம், 56 00:03:04,810 --> 00:03:07,187 ஆனால் நாங்க இப்போ யோசிச்சிருப்பது, ஒரு கணிசமான தொகை முன்பணமாகவும், 57 00:03:07,271 --> 00:03:08,814 அதோட சேர்த்து லாபத்துல ஒரு பங்கும். 58 00:03:08,897 --> 00:03:11,358 ஒவ்வொரு முறை ஒரு வாடிக்கையாளர் ஒரு குக்கியை சாப்பிடும் போதும் 59 00:03:11,441 --> 00:03:14,278 உங்களுக்கும் அதுல ஒரு சிறு பகுதி கிடைக்கும். 60 00:03:14,903 --> 00:03:16,113 ஆனால், அதுக்கு முன், ஒரு ருசியான விஷயம். 61 00:03:16,196 --> 00:03:18,156 எங்களுக்கு உங்க விருப்பு வெறுப்புகள் தெரியணும். 62 00:03:18,240 --> 00:03:20,117 ஷீலா, எந்த சுவையில உள்ள குக்கி உங்களுடைய ஃபேவரெட்? 63 00:03:20,200 --> 00:03:21,743 தேர்ந்தெடுக்க, எங்களிடம் பல சுவைகள் இருக்கு. 64 00:03:22,369 --> 00:03:25,664 "நீங்க" உங்களை அடையாளப்படுத்துற மாதிரி ஒரு குக்கியை நீங்க தேர்ந்தெடுக்கணும். 65 00:03:28,667 --> 00:03:32,838 உங்களுக்குப் பிரச்சினை இல்லைன்னா, இந்த குக்கிகளை தேர்ந்தெடுக்க 66 00:03:32,921 --> 00:03:33,755 கொஞ்சம் அவகாசம் தேவை. 67 00:03:33,839 --> 00:03:36,300 அதனால நாங்க கொஞ்சம் குக்கிகளை வீட்டுக்கு எடுத்துட்டுப் போறோம் 68 00:03:36,383 --> 00:03:39,636 அதுக்கு அப்புறம் எங்க எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்துக்கறோம். 69 00:03:42,014 --> 00:03:43,849 ஒரு தட்டு முழுவதும் சூடான குக்கிகள் இருக்கு, எனக்கு அது தான் தெரியுது, 70 00:03:43,932 --> 00:03:48,645 ஆனால் என்னன்னா, எல்லோருமே அது ஒரு விஷயமே இல்லங்கற மாதிரி பேசறாங்க. 71 00:03:49,313 --> 00:03:50,939 அதாவது, எனக்கு... 72 00:03:52,900 --> 00:03:53,901 அது எது மாதிரி இருந்தது தெரியுமா? 73 00:03:53,984 --> 00:03:56,528 அது ஒரு பார்ட்டி லைட் அணைஞ்சு அணைஞ்சு எரிவது போலவும், நான் அதை 74 00:03:56,612 --> 00:03:58,238 கண்டுக்காம இருக்கணும் என்கிற மாதிரி இருந்தது. 75 00:03:58,322 --> 00:03:59,698 அது எப்படி முடியும்? 76 00:04:00,199 --> 00:04:03,368 அல்லது, அறையில நிர்வாணமா இருக்கறவங்க உடலுறவு கொள்றாங்க, 77 00:04:03,452 --> 00:04:05,245 ஆனால் எல்லோரும் அது ரொம்ப சாதாரணமான விஷயம் போல, 78 00:04:05,329 --> 00:04:06,914 சாதாரணமா பேசறாங்க... 79 00:04:07,956 --> 00:04:09,416 முடியாதுப்பா! 80 00:04:10,417 --> 00:04:13,170 எங்கிட்ட என் ஃபேவரெட் குக்கி எதுன்னு கேட்டுட்டே இருந்தாங்க, 81 00:04:13,253 --> 00:04:15,631 அதுல என்ன கஷ்டம் தெரியுமா? எனக்குத் தெரியலை. 82 00:04:16,130 --> 00:04:17,757 எனக்குத் தெரியாது. நிஜமா தெரியலை. 83 00:04:18,425 --> 00:04:22,012 நான் மாட்டிக்கிட்டேனோ, இல்லை அப்படியே உறைஞ்சு போனேனோ தெரியலை, 84 00:04:22,095 --> 00:04:25,724 ஆனால் நான் அதைப் பத்தி யோசிக்க யோசிக்க, எதுவுமே பதில் கிடைக்கல. 85 00:04:26,225 --> 00:04:29,269 ஆம். வயசுக்கு வந்த பின், வாழ்க்கை முழுக்க நாம விரும்புறதை ஒதுக்கி வச்சுட்டே இருந்தா, 86 00:04:29,353 --> 00:04:31,772 இது மாதிரி தான் ஆகும். 87 00:04:32,773 --> 00:04:35,692 நம்முடனே நமக்கு உள்ள தொடர்பை இழந்துடுவோம். தெரியுமா? 88 00:04:35,776 --> 00:04:37,027 அது தான். ஆமாம். 89 00:04:38,695 --> 00:04:39,696 எனக்குத் தெரியலை. 90 00:04:40,864 --> 00:04:45,786 எனக்கு என்ன பிடிக்கும்னு எனக்கே தெரியலை. சொல்லவே வெட்கமா இருக்கு. 91 00:04:48,622 --> 00:04:49,706 வேற எங்கேயும் சொல்ல மாட்டேன், இங்கே தான் முடியும். 92 00:04:52,209 --> 00:04:54,294 நான் டின்னருக்கு, வெளியே போகணும்னு என் தெரபிஸ்ட் சொன்னார். 93 00:04:55,796 --> 00:05:00,050 புதிய விஷயங்களை ருசிக்கணும், என் விருப்பு வெறுப்புகளை தெரிஞ்சுக்கணும்னு சொன்னார். 94 00:05:01,260 --> 00:05:03,053 -எப்படி போச்சு? -நான் அதை செய்யலை. 95 00:05:03,136 --> 00:05:05,264 எல்லோரும் என்னையே பார்க்கிற போது 96 00:05:05,347 --> 00:05:08,141 ஒரு உணவகத்துல தனியா டின்னர் சாப்பிடணுமா? ரொம்ப சங்கடம்தான். 97 00:05:11,812 --> 00:05:14,147 சரி. இங்கே என்ன நடக்குது? 98 00:05:14,648 --> 00:05:16,024 உன்னை எனக்கு எப்படித் தெரியும்? 99 00:05:16,942 --> 00:05:20,153 போஸ்ட் ஆஃபீஸ். ஆமாம். ரெண்டு வாரங்களுக்கு முன் நீ எனக்கு ஸ்டாம்புகளை வித்த. 100 00:05:20,237 --> 00:05:21,864 ஆமாம், சரி தான். 101 00:05:21,947 --> 00:05:24,825 -எனக்கு முகம் மறக்காது. -நீ இங்கே என்ன செய்யற? 102 00:05:24,908 --> 00:05:26,410 நான் இங்கே என்ன செய்யறேனா? 103 00:05:27,411 --> 00:05:28,662 நீ இங்கே என்ன செய்யற? 104 00:05:29,746 --> 00:05:31,331 நீ என்ன, இப்போ எதுவும் கல்ட்ல சேர்ந்திருக்கயா? 105 00:05:31,832 --> 00:05:34,751 அது தான் என் ஆதரவு குழு. என்னுடய பெயர் சொல்லாத ஆதரவுக் குழு. 106 00:05:36,795 --> 00:05:39,006 நான்... சரி, என்னை மன்னிச்சிடு. நான் அதை உணரலை. 107 00:05:39,089 --> 00:05:42,759 நான்... தெளிவா சிந்திக்க, ஒரு குட்டி சுத்து ஜாகிங் செய்யலாம்னு வந்தேன், 108 00:05:42,843 --> 00:05:45,554 இப்போ அடிக்கடி அதைச் செய்யறேன். 109 00:05:45,637 --> 00:05:47,139 ரொம்ப ஆச்சரியமா இருக்கு. நம்பவே முடியல. 110 00:05:47,222 --> 00:05:49,933 நிஜமா அது ரொம்ப... எங்கிட்ட மாற்றத்தை எற்படுத்திடுச்சு. 111 00:05:50,517 --> 00:05:52,686 ஆம், நான் ஜாக் செய்துட்டே இருந்தேன், இங்கே வந்து சேர்ந்துட்டேன், 112 00:05:52,769 --> 00:05:54,104 இப்போ உனக்கு தொந்தரவு தராம கிளம்பறேன். 113 00:05:54,188 --> 00:05:57,357 நீ மாயாவை ஒரு நாள் முன்னதாகவே வந்து கூட்டிட்டுப் போக முடியுமான்னு யோசிச்சேன். 114 00:05:57,941 --> 00:05:59,735 என்னுடன் வேலை செய்யறவங்க, வெளியே கூப்பிட்டுகிட்டே இருக்காங்க, 115 00:05:59,818 --> 00:06:02,529 நான் எப்போதும் மறுத்துட்டே இருந்தா, அப்புறம் வயசாயிடுச்சுன்னு உதறிவிடுவாங்க. 116 00:06:02,613 --> 00:06:04,948 நீ என்னுடன் விளையாடாதே, டேனி. எனக்கு நீ முன்னாடியே சொல்லியிருக்கணும். 117 00:06:05,699 --> 00:06:09,870 சரி, ஷீலா, உனக்கு விருப்பம்னா நான் ஊர்லேர்ந்து யாரையும் வரவழைக்க முடியும், 118 00:06:09,953 --> 00:06:11,955 ஆனால் அந்த பெண்கள் பார்ட்டிக்குப் போவாங்க. இரவு முடியறதுக்குள்ள, நம்ம குழந்தை 119 00:06:12,039 --> 00:06:14,374 அவங்களுடன் சேர்ந்து குடிச்சுட்டு இருப்பா. 120 00:06:16,418 --> 00:06:17,878 நீ இப்போ இங்கே வசிக்கல. 121 00:06:18,712 --> 00:06:21,507 முதல்ல அழைக்காம நீ இங்கே வர முடியாது. குறைந்த பட்சம், கதவைத் தட்டணும். 122 00:06:26,470 --> 00:06:27,471 சரி தான். 123 00:06:32,226 --> 00:06:34,811 உன் மாஜி நிஜமாவே சிக்கலானவன் தான், இல்ல? 124 00:06:35,479 --> 00:06:38,857 இன்னும் ஒண்ணரை வருஷத்துக்கு மார்ஷா உள்ளேயே முடங்கிக் கிடப்பா. 125 00:06:38,941 --> 00:06:40,984 என்னை மன்னிச்சிடுங்க. இனிமே இது மாதிரி நடக்காது. 126 00:06:41,735 --> 00:06:45,072 ஆம், அதாவது, இனி இப்படி நடக்காதுன்னு உறுதி செய்ய ஒரு வழி இருக்கு 127 00:06:45,155 --> 00:06:48,116 இந்த மீட்டிங்களை நடத்த நாம சரியா ஒரு இடத்தை தீர்மானிக்கணும், என்ன? 128 00:06:48,200 --> 00:06:51,787 ஹே, இந்த இடத்துல நல்லாதானே நடந்துட்டு இருக்கு. அதாவது, எனக்கு இங்கே வச்சுகறதுல சந்தோஷம் தான். 129 00:06:52,454 --> 00:06:53,872 உனக்கு சந்தோஷம் தான். 130 00:06:53,956 --> 00:06:56,875 ஆனால் நாங்க இது போல உன் காராஜுல ஒளிஞ்சு சந்திக்கிறது, குணமாக அவ்வளவு 131 00:06:56,959 --> 00:06:58,752 சிறப்பானது இல்லன்னு நீ யோசிச்சுப் பார்த்தாயா? 132 00:06:58,836 --> 00:07:01,547 கொஞ்சம் பிரைவெசி இருக்கட்டும்னு சொன்னா, அது நான் குணமாகுவதற்கு எப்படி தடையா முடியும். 133 00:07:02,798 --> 00:07:06,009 சரி, எங்க குணமாகும் பயணம் என்ன ஆகுறது? நாங்க டிவியில வரலையே. 134 00:07:06,093 --> 00:07:09,888 நாங்க சாதாரண மக்கள், ரொம்ப சிரமப்பட்டு தான் இந்த அளவுக்கு முன்னேறி இருக்கோம், 135 00:07:09,972 --> 00:07:14,476 நீ மறைச்சு வைக்கிற ரகசியமா நாங்க இருப்பதுல எங்களுக்கு ரொம்ப உடன்பாடு இல்ல, ஷீல். 136 00:07:14,560 --> 00:07:15,853 -அதாவது... -நான் மறைச்சு வைக்கல. 137 00:07:15,936 --> 00:07:18,105 என்னன்னா, என் வாழ்க்கையில இப்போ நான் நிறைய சிக்கல்களை சந்திக்கிறேன். 138 00:07:18,188 --> 00:07:22,109 -வந்து, குழந்தை இருக்கா. -உனக்கு மட்டும் தான் குழந்தைங்க உண்டா? 139 00:07:23,110 --> 00:07:25,153 நான் அப்படி நினைக்கல. எப்படியோ எல்லோரும் பார்த்துக்கறாங்களே. 140 00:07:26,864 --> 00:07:30,075 இனிமேல் இதுபோல தடங்கல்கள் வராம நான் உறுதியா பார்த்துக்கறேன். நான் வாக்குத் தரேன். 141 00:07:35,038 --> 00:07:36,290 ரூபின், டானியல் கில்மார்ட்டின், கெல்லி 142 00:07:36,373 --> 00:07:38,500 கலிஃபோர்னியா ஸ்டேட் போலீஸ் கைதான ரிபோர்ட் அலமேடா கம்பெனி 143 00:07:38,584 --> 00:07:40,252 ஓக்லேண்ட் போலீஸ் டிபார்ட்மெண்ட் கைதான ரிபோர்ட் 144 00:07:54,850 --> 00:07:56,310 இது உனக்கு சந்தோஷமா? 145 00:07:57,811 --> 00:07:58,937 சந்தோஷமில்லாம எப்படி இருக்கும்? 146 00:08:00,397 --> 00:08:02,858 எவ்வளவு நல்ல ஃபோட்டோ. நீ கையை விரிச்சு படுத்திருக்கயே. 147 00:08:03,567 --> 00:08:06,904 அது சரி தான். உனக்கு எது பிடிக்கும் என்பதே உனக்குத் தெரியாதே. 148 00:08:07,905 --> 00:08:09,990 ஆண்களே, பெண்களே, சாக்லேட், வென்னிலா. 149 00:08:11,533 --> 00:08:13,952 நீ நல்லா இரு. எனக்கு இது மாதிரியான பிரச்சினைகள் இல்லை. 150 00:08:14,036 --> 00:08:15,120 உனக்கு இல்லன்னு எனக்குத் தெரியும். 151 00:08:15,204 --> 00:08:17,414 எனக்கு என்ன வேணும், அதை எப்படிப் பெறணும்னு எனக்குத் தெரியும். 152 00:08:17,998 --> 00:08:20,542 -உனக்கு என்ன வேணும்னும் எனக்குத் தெரியும். -அது என்னது? 153 00:08:20,626 --> 00:08:25,214 இப்போதைக்கு, மத்ததை விட நீ டேனியை குழியில தள்ளணும்னு பார்க்கிற. 154 00:08:25,297 --> 00:08:29,259 இல்ல. டேனி ஏற்கனவே மோசமா சொதப்பியிருக்கான். அவன் தானே போய் குழியில விழுவான். 155 00:08:29,343 --> 00:08:33,013 சரி. அவன் தானே படுகுழியில விழுவதற்காக நீ காத்திருக்கலாம், ஒருவேளை, 156 00:08:33,096 --> 00:08:35,933 அந்த நேரத்துல அவன் உன் வாழ்க்கையில குறுக்கிட்டு, ஒரு நொடியில, 157 00:08:36,015 --> 00:08:37,851 உன் குணமாகும் பயணத்தையும், உன் பிசினஸையும், 158 00:08:37,934 --> 00:08:40,645 அவன் இஷ்டத்துக்கு உன்னுடைய கஸ்டடி ஏற்பாட்டுல மாத்தம் செய்யலாம். 159 00:08:40,729 --> 00:08:44,691 ஆனால் ஆறு வருஷமா அந்த குழந்தையை நீ தனியா வளர்த்த போது, டேனி தன் வாழ்க்கை தான் 160 00:08:44,775 --> 00:08:47,444 முக்கியம்னு நடந்துகிட்டான், இன்னும் ஒரு நாள் நீ அந்த குழந்தையைப் பார்த்துகிட்டா என்ன ஆயிடும்? 161 00:08:48,320 --> 00:08:49,988 அவன் அப்படி தான் இருப்பான்னு நம்ப வச்சுட்டான் போல. 162 00:08:50,572 --> 00:08:52,699 அது தான் அவனுடைய வழக்கம், 163 00:08:53,784 --> 00:08:56,328 அவனை அப்படி இருக்க எல்லோரும் அனுமதிச்சிருக்காங்க. நானும் தான். 164 00:08:56,411 --> 00:08:59,873 ஆகவே இப்போ அவன் சோம்பறியா, சுயநலக்கார ராஸ்கலா இருப்பது, அது உன் தவறு. 165 00:09:00,624 --> 00:09:01,834 ரொம்ப நல்லாயிருக்கே. 166 00:09:01,917 --> 00:09:03,627 அங்கே வெளியிலே போய் சொன்னா நல்ல காமெடின்னு அனைவரும் சிரிப்பாங்க. 167 00:09:03,710 --> 00:09:06,421 வெளியேன்னு சொன்னேனே, மாயாவைக் கூட்டிட்டு வர நேரமாகல? 168 00:09:14,263 --> 00:09:15,264 இது தான் உன் காரா? 169 00:09:17,099 --> 00:09:19,184 எங்க காரா இருந்தது, டேனியுடையதும் என்னுடையதும். 170 00:09:22,229 --> 00:09:23,480 சரி, இப்போ கவனமா கேளு. 171 00:09:25,232 --> 00:09:27,901 கன்வேர்டிபிள், ஜெர்மன், பக்கெட் இருக்கைகள். 172 00:09:28,485 --> 00:09:31,488 நீ இப்போ டிவியில வர. உனக்குன்னு கொஞ்சம் தன்மானம் வேணும். 173 00:09:47,379 --> 00:09:50,299 நல்லது, நீ வந்துட்டயே. நான், மாயாவை அழைத்து, சொல்றேன்... 174 00:09:51,967 --> 00:09:53,677 நாம வெளியே கொஞ்சம் பேசலாமா, பிளீஸ்? 175 00:09:55,304 --> 00:09:56,305 ஆம். 176 00:10:01,894 --> 00:10:04,771 சரி, எனவே, என்ன பேசணும்? 177 00:10:05,772 --> 00:10:08,567 இப்போ நம்ம குழந்தையை பார்த்துக்கும் பொறுப்பு 50 சதவிகிதம் உன்னுடையது. 178 00:10:10,068 --> 00:10:12,112 என் வக்கீல் அதைப் பத்தி என்னிடம் எதுவும் சொன்னதாக ஞாபகம் இல்லையே. 179 00:10:12,196 --> 00:10:14,573 வக்கீல்கள் இல்லை, விவாதம் இல்லை, விதிகளை கடைபிடிப்பது, அவ்வளவுதான். 180 00:10:16,533 --> 00:10:17,868 சரி. புரியுது. 181 00:10:18,368 --> 00:10:23,123 நம்ம இருவரின் பேர்ல இருக்குற வீட்டுக்கு நான் வந்துட்டேன் என்பதால, நீ என்னை உனக்கு தொந்தரவு 182 00:10:23,207 --> 00:10:25,459 -தராம இருக்கவும், நம்ம பிசினஸில் இருந்தும்... -டேனி. 183 00:10:25,542 --> 00:10:27,920 -...நீ என்னை எடுத்து விடப் பார்க்கற? -போதும், நிறுத்து. 184 00:10:28,003 --> 00:10:31,298 அதனால நம்ம பெண்ணை பயன்படுத்தி என்னை ஒடுக்கப் பார்க்கற. கடவுளே. 185 00:10:32,132 --> 00:10:34,718 இது தான் உன் தார்மீகத்தின் கீழ் எல்லைன்னு நான் ஒவ்வொரு முறையும் பொறுத்துக்கிட்டா, 186 00:10:34,801 --> 00:10:36,553 நீ அதையும் தாண்டி இன்னும் மோசமா போறயே. 187 00:10:36,637 --> 00:10:38,639 நீ தார்மீகத்தைப் பத்தி பேசுறது தமாஷா இருக்கு. 188 00:10:38,722 --> 00:10:40,057 அந்த நீதிமன்ற ஜன்னல் மேல ஒரு செங்கல்லை 189 00:10:40,140 --> 00:10:42,184 தூக்கிப் போட்ட அந்த கல்லூரி புரொடெஸ்ட் சம்பவம் நினைவிருக்கா 190 00:10:42,267 --> 00:10:44,937 -அதுக்காக ரெண்டு நாட்கள் சிறையில இருந்தயே? -நான் அதுக்காக வெட்கப்படறேன்னு நினைச்சயா? 191 00:10:45,020 --> 00:10:46,897 இல்ல, நிச்சயமா நீ பெருமிதப்படுவன்னு தெரியும். 192 00:10:46,980 --> 00:10:50,234 ஆனால், அதிலிருந்து ஒரே ஒரு கேள்வி, டேனி, எப்படி அது ரெண்டே இரவுகள் மட்டுமா இருந்தது? 193 00:10:50,317 --> 00:10:51,193 நான் கடைசியா செக் செய்த போது, 194 00:10:51,276 --> 00:10:53,904 ஃபெடரல் சொத்துக்களுக்கு கேடு விளைவிச்சா, அதற்கு பத்து வருஷம் வரை தண்டனை உண்டு. 195 00:10:53,987 --> 00:10:54,988 ஆகவே நீ இப்போ ஒரு வக்கீலா? 196 00:10:55,072 --> 00:10:58,450 அதுக்காக யாரோ அதிகாரிகள் சொன்னதை எல்லாம் செய்திருக்காங்கன்னு புரிய, வக்கீல் தேவையில்லை. 197 00:11:00,994 --> 00:11:02,079 அது தான் நடந்ததா? 198 00:11:02,162 --> 00:11:04,498 நீ போலீஸ்காரங்க கிட்ட சில பெயர்களைச் சொல்லி... 199 00:11:05,249 --> 00:11:08,001 ஜாக்கும் ஜெர்ரியும் அதைப் பத்தி என்ன நினைப்பாங்கன்னு நான் யோசிக்கிறேன். 200 00:11:08,085 --> 00:11:10,712 உன் புதிய சகாக்கள் எல்லோரும் அதைப் பத்தி என்ன நினைப்பாங்கன்னு யோசிக்கிறேன். 201 00:11:11,630 --> 00:11:12,714 உனக்கு என்ன ஆச்சு? 202 00:11:13,715 --> 00:11:15,634 நீ ஒரே ஒரு செய்தி தொகுப்புல தான் வந்திருக்க, அதுக்குள்ள திடீர்னு... 203 00:11:15,717 --> 00:11:19,930 நான் எப்போதுமே இப்படி தான் இருந்தேன், டேனி. நீ அந்த பக்கத்தை பார்க்க அனுமதிக்கலை. 204 00:11:34,695 --> 00:11:38,448 -எதோ சரியா இல்லை. -இன்னும் கொஞ்சம் முயற்சி செய்தா சரியாகும். 205 00:11:39,449 --> 00:11:42,035 என்னைப் பாரு. நான் இதுக்கு சரியா இருக்கமாட்டேன். 206 00:11:43,287 --> 00:11:44,371 எல்லாம் சரியா தான் இருக்க. 207 00:11:45,539 --> 00:11:48,292 என்ன கொஞ்ச காலம் ஆயிடுச்சு... 208 00:11:48,792 --> 00:11:49,918 நான் வீட்டை விட்டு வெளியே வந்தா? 209 00:11:52,045 --> 00:11:55,465 உனக்கு இருக்கற பயம் எனக்குப் புரியுது, ஆனால் இந்த மீட்டிங் முக்கியமானது. 210 00:11:56,383 --> 00:11:58,051 இந்த நபர்கள் முக்கியமானவங்க, 211 00:11:58,135 --> 00:12:00,554 நாமும் முக்கியமானவங்கன்னு அவங்களுக்கும் புரிய வைக்கணும். 212 00:12:01,054 --> 00:12:03,807 நீங்களும் முக்கியம்னு இவங்களுக்குத் தெரியப் படுத்தும் அவசியம் என்ன? 213 00:12:04,558 --> 00:12:07,519 அவங்களுக்கு நம்மைப் பத்தி அக்கறை இல்லை. அவங்க நமக்கு மரியாதை தருவதில்லை. 214 00:12:08,103 --> 00:12:12,774 அவங்களுக்கு நம்ம மதத்தின் மீது இருக்கிற வெறுப்பை அவங்க இறைவனுடன் தீர்த்துக்கட்டும். 215 00:12:17,321 --> 00:12:20,073 ஆனால் இந்த விளையாட்டுகள் எனக்கு எவ்வளவு முக்கியம்னு உனக்குத் தெரியும். 216 00:12:21,074 --> 00:12:24,411 எங்க அப்பாவை நான் பார்த்து வளர்ந்த காலம் முதலேயே எனக்கு இது ரொம்ப பிடிக்கும். 217 00:12:25,579 --> 00:12:29,917 தூய மனசும், ஒழுக்கமும் இருந்தால் தான் பெரும் சாதனை படைக்க முடியும். 218 00:12:31,084 --> 00:12:32,961 அதுல நாமும் ஒரு சிறு பங்கு எடுத்துக்கறது... 219 00:12:40,427 --> 00:12:42,554 இன்னிக்கு நம்ம சுத்து வட்டாரத்துல எல்லாம் நாசம் செய்யும் நபரைப் பிடிக்க 220 00:12:43,430 --> 00:12:45,682 கேமராக்களைப் பொருத்தி இருக்காங்க. 221 00:12:49,102 --> 00:12:51,855 எல்லா நேரங்களிலும் நம்மை இப்போ கண்காணிச்சுட்டு இருக்காங்க. 222 00:12:55,526 --> 00:12:58,028 நாம இப்போ இதை சமாளிப்பது நம்ம கையில இருக்கு. 223 00:13:14,503 --> 00:13:17,214 நீங்க உங்க டேட்டுக்காக காத்திருக்கும் வரை, நான் உங்களுக்கு எதுவும் டிரிங்கஸ் தரலாமா? 224 00:13:18,298 --> 00:13:19,299 நான் காத்திருக்கல. 225 00:13:19,383 --> 00:13:22,469 நான், இன்னிக்கு தனியா தான் டின்னருக்கு வந்தேன். 226 00:13:23,679 --> 00:13:24,763 இன்னும் நல்லது. 227 00:13:29,643 --> 00:13:30,644 ஒரு கணம் பொறுங்க. 228 00:13:32,145 --> 00:13:34,815 மிராகோஸ்டா கம்யூனிட்டி காலேஜுக்கு நீங்க சில மாதங்கள் போனீங்களா? 229 00:13:34,898 --> 00:13:38,151 அதாவது... உங்க முகம் எனக்கு ரொம்ப பழக்கமானதா இருக்கு. 230 00:13:39,361 --> 00:13:40,737 நான் போகலை. 231 00:13:41,238 --> 00:13:44,116 எனக்கு ஒயிட் ஒயின் இருந்தா ரொம்ப நல்லாயிருக்கும், பிளீஸ். 232 00:13:45,951 --> 00:13:48,871 நான் முதல்ல டிவியில தோன்றிய போது, என்னிடம் எல்லோரும் எப்போதும் இதை கேட்பாங்க. 233 00:13:49,830 --> 00:13:51,206 "நீ டாம்பாவில வளர்ந்தயா?" 234 00:13:51,915 --> 00:13:53,750 என்னைப் பார்த்தா டாம்பாவில வளர்ந்தவ மாதிரியா இருக்கு? 235 00:13:54,918 --> 00:13:57,129 ஆனால் இருக்கலாமோ என்னவோ. 236 00:13:59,423 --> 00:14:02,551 -நீங்க ஒரு முடிவுக்கு வர முடிந்ததா? -ஓ, ஆம். எங்கே பார்க்கட்டும். 237 00:14:03,051 --> 00:14:05,804 ஸ்டார்டர்கள் - சூப் சாலட்கள் - என்ட்ரீஸ் 238 00:14:07,598 --> 00:14:10,100 -இன்னும் கொஞ்சம் பொறுத்து வரலாமா? -இல்ல, இல்ல, நான் கிட்டத்தட்ட... 239 00:14:10,809 --> 00:14:12,102 நிஜமாவே இவ்வளவு கஷ்டமா என்ன? 240 00:14:12,769 --> 00:14:15,606 இதென்ன வாழ்வா-சாவா என்றி முடிவா, ஏதோ ஒரு என்ட்ரீயை சொல்லுவயா? 241 00:14:16,940 --> 00:14:18,609 சரி, செய்யறேன். என்ன தெரியுமா? 242 00:14:18,692 --> 00:14:21,195 அந்த மோசமான கார் தான் உனக்கு பொருத்தமா இருக்குமோ என்னவோ. 243 00:14:21,278 --> 00:14:22,613 இன்னும் லேஸா எதுவும் இருக்கா? 244 00:14:22,696 --> 00:14:25,282 இதுல இருக்குற எல்லாமே ஒரு சாஸுடனோ அல்லது... 245 00:14:25,365 --> 00:14:26,617 ஆம், அது தான் அவர் முடிவு. 246 00:14:27,201 --> 00:14:32,206 நான் ரொம்ப உணவைப் பத்தி பேசறவன் இல்ல, ஆனால் பலரும் கடல் உணவை விரும்பி கேட்கிறார்கள். 247 00:14:32,789 --> 00:14:34,750 நான் வழக்கமா ஷெல்ஃபிஷ் சாப்பிடறது கிடையாது. 248 00:14:36,251 --> 00:14:38,545 ஓ, கடவுளே, அது தான் விஷயம்! 249 00:14:38,629 --> 00:14:40,005 நீங்க செய்திகள்ல வந்திருந்தீங்க. 250 00:14:40,088 --> 00:14:41,715 அந்த லியோடார்ட் லேடி. 251 00:14:42,382 --> 00:14:45,427 அடக் கடவுளே, நீங்க மிராகோஸ்டாவுக்குப் போகல. 252 00:14:46,094 --> 00:14:47,930 -இப்போ அவங்க அனைவரும் உன்னை பார்ப்பாங்க. -நீ அங்கே போகவே மாட்ட. 253 00:14:48,013 --> 00:14:50,557 -நான், "ஒருவேளை, அவங்க"... -...ஒரு கெண்டையின் வாலை உறிஞ்சி, 254 00:14:51,141 --> 00:14:55,229 அதன் ஊதா நரம்புல என்ன இருக்கோ, கடவுளுக்குத் தான் தெரியும். 255 00:14:55,812 --> 00:14:58,565 என்ன தெரியுமா? எனக்கு தீர்மானிக்க இன்னும் சில நிமிடங்கள் ஆகும். 256 00:14:58,649 --> 00:14:59,650 ரொம்ப நன்றி. 257 00:15:02,694 --> 00:15:05,739 எனவே, ஜான், நீங்க மால்களுக்கு பெயர்போனவர். 258 00:15:07,157 --> 00:15:08,742 நான் வர்த்தக ரீதியான ரியல் எஸ்டேட் டெவலப்பர், 259 00:15:08,825 --> 00:15:12,120 அதனால மால்களுக்கு என் பிசினஸில் பெரும் பங்கு உண்டு. 260 00:15:13,038 --> 00:15:14,206 சரி, அது பெரிய பிசினஸ் தான். 261 00:15:15,249 --> 00:15:16,750 எங்க வளர்ச்சி நல்லதாக இருந்துட்டு இருக்கு. 262 00:15:18,252 --> 00:15:20,128 அதைப் பத்தி மனைவியை விட யாரும் சந்தோஷமா இருக்க முடியாது. 263 00:15:20,712 --> 00:15:21,797 ஷாப்பிங், ஷாப்பிங், ஷாப்பிங். 264 00:15:24,675 --> 00:15:27,469 மரியா, ஹீத் உங்கிட்ட தான் பேசிட்டு இருந்தார். 265 00:15:27,553 --> 00:15:30,055 அவர் என்னைப் பத்தி பேசிட்டு இருந்தார். 266 00:15:33,517 --> 00:15:34,518 சரி. 267 00:15:34,601 --> 00:15:38,939 அவங்களுடைய பைகளுக்கும் எனக்கும் சேர்த்து கார்ல இடம் இருந்தா, அதுவே பெரிசு தான். 268 00:15:40,899 --> 00:15:43,527 -நான் உங்களுக்கு இன்னும் மது கொடுக்கவா? -நாங்க மது அருந்துவதில்லை. நன்றி. 269 00:15:44,486 --> 00:15:47,447 இது எங்களுடன் ஒரு சிறிய சந்தோஷத்துக்காக பங்கெடுத்துக்கலாமே, இல்லையா? 270 00:15:48,115 --> 00:15:51,159 -கடவுள் புரிந்துகொள்வார். -சிறுக்கியே. 271 00:15:51,243 --> 00:15:52,953 இனி ஒரு முறை நீங்க அப்படி பேசினால், இந்த சிறுக்கி உங்க கழுத்துல 272 00:15:53,036 --> 00:15:56,248 அந்த ஸ்டீக் வெட்டுற கத்தியை வைப்பாள். 273 00:16:02,296 --> 00:16:04,798 ரொம்ப காரமா இருக்காங்க போல. என்ன சொல்ற? 274 00:16:12,973 --> 00:16:14,391 நீங்க படற கஷ்டம் எனக்குப் புரியுது. 275 00:16:15,350 --> 00:16:16,602 நான் அப்படி நினைக்கலை. 276 00:16:17,728 --> 00:16:20,272 அந்த மெனுவிலிருந்து தேர்ந்தெடுப்பது ரொம்ப கஷ்டம். 277 00:16:21,190 --> 00:16:25,319 நான் இங்கே தனியா உட்கார்ந்து இருக்கேன், 278 00:16:25,402 --> 00:16:31,408 அதிலும் நான் ஒரு பெண், என்பதாலேயே நீங்க அப்படி தைரியமா என்னிடம் பேச அனுமதியிருக்கா? 279 00:16:32,701 --> 00:16:36,205 அதாவது, இதுவே நான் தனியா இருக்குற ஒரு பிசினஸ்மேனா இருந்தா, நீங்க இப்படி செய்வீங்களா? 280 00:16:37,331 --> 00:16:38,665 செய்திருக்க மாட்டேன். இருந்தாலும்... 281 00:16:38,749 --> 00:16:40,000 -ஒருவேளை செய்திருக்கலாம். தெரியல. -சரி. 282 00:16:40,083 --> 00:16:42,794 -எனக்கு பில் கொடுக்கறீங்களா, பிளீஸ்? -ஓ, இல்ல, இல்ல. பொறுங்க, பொறுங்க. 283 00:16:42,878 --> 00:16:44,922 -நீங்க போறதுக்கு முன்னாடி, என்னை மன்னியுங்க. -பிளீஸ். 284 00:16:45,005 --> 00:16:48,467 உங்க கிட்ட பேசியதுக்கு இல்ல, ஏன்னா அது சாதாரண மனித இயல்புதான். 285 00:16:48,550 --> 00:16:49,760 அது இன்னும்-இன்னும்-இன்னும் இதுக்காக தான். 286 00:16:50,302 --> 00:16:52,471 மக்களுக்கு அதை சுவைப்பதில் ஆசை இல்லைன்னா, இந்த நாட்டிலேயே 287 00:16:52,554 --> 00:16:54,181 மிக நல்ல விளைச்சலை நான் எதுக்கு உங்களுக்கு கொண்டு வரணும்? 288 00:16:54,264 --> 00:16:57,392 இவ்வளவு வெண்ணையை இந்த அஸ்பாரகஸ் மேல போட்டு தடவி, எதுக்கு? 289 00:16:57,476 --> 00:17:02,022 பெஸ்டோவைப் பத்தி என்னை சொல்ல வைக்காதீங்க, ஏன்னா பெஸ்டோ அவ்வளவு ருசி. 290 00:17:03,106 --> 00:17:07,736 நான் கார்லோஸ், மறந்துட்டேனே. பாருங்க, நான் கட்டாயப் படுத்த விரும்பல. 291 00:17:07,819 --> 00:17:09,112 அதுக்கு ரொம்ப தாமதமாகிடுச்சுன்னு நினைக்கிறேன். 292 00:17:09,195 --> 00:17:13,075 இல்ல, ஆனால் நீங்க இவ்வளவு தூரம் வந்துட்டு இவ்வளவு தூரம் வந்துட்டு... 293 00:17:13,157 --> 00:17:15,117 -நான் பக்கத்துல தான் இருக்கேன். -...இவ்வளவு பணத்தை செலவழிச்சு... 294 00:17:15,202 --> 00:17:16,537 இல்ல, நான் அந்த மெனுவிலிருந்து எதையும் 295 00:17:16,619 --> 00:17:17,579 -ஆர்டர் செய்யவே இல்ல. -இந்த உணவகத்துல இருக்குற மிகச் சுவையானதை 296 00:17:17,663 --> 00:17:20,665 -சுவைக்காம போனீங்கன்னா எப்படி ஒத்துக்கலாம். -எனக்கு டிரை பண்ண விருப்பமில்ல. 297 00:17:20,749 --> 00:17:22,835 -எனக்கு வேண்டாம். நன்றி. -இல்ல. நீங்க சுவைக்கணும். 298 00:17:22,917 --> 00:17:24,294 பிளீஸ், அதை கீழே வைய்யுங்க. 299 00:17:28,214 --> 00:17:29,508 இதை எடுங்க. 300 00:17:31,134 --> 00:17:32,135 இப்போ... 301 00:17:35,430 --> 00:17:36,265 அதோ அப்படிதான். 302 00:17:48,652 --> 00:17:51,363 அது ஒரு அஸோயிச்கா. ரொம்ப அரிதான வெரைட்டியில்ல. 303 00:17:51,446 --> 00:17:53,991 அதன் சுவை வந்து... அதாவது, எனக்கு நினைவுக்கு வருவது... 304 00:17:55,534 --> 00:17:57,160 கோடைகாலம் தான் ஞாபகம் வருது. 305 00:17:58,036 --> 00:18:00,414 -நான் குழந்தையா இருந்த போது. -ஆமாம். 306 00:18:00,497 --> 00:18:02,499 இது தான் நான் சுவைத்த தக்களிகளிலேயே ரொம்ப ருசியானதுன்னு நினைக்கிறேன். 307 00:18:02,583 --> 00:18:05,252 இல்ல நான் சுவைத்த தக்காளியே இது தானோ. 308 00:18:05,335 --> 00:18:10,966 ஆனால் இப்போ, துரதிர்ஷடவசமா, உங்களுக்கு உணவே பிடிக்காம போயிடும். 309 00:18:11,550 --> 00:18:12,801 பிடிக்காம போயிடுச்சுன்னே வச்சுக்கோங்க. 310 00:18:14,219 --> 00:18:17,139 பாருங்க, என்னை சாப்பிட வச்சதுக்கு நன்றி. 311 00:18:17,222 --> 00:18:20,809 அதோட, மீதம் உள்ள தக்காளியையும் ருசிச்சு சாப்பிடுங்க 312 00:18:20,893 --> 00:18:23,312 இனிய இரவாக இருக்கட்டும். நான்... 313 00:18:23,395 --> 00:18:25,314 -நீங்க எங்கிருந்து வந்தீங்க? -நானா? 314 00:18:26,273 --> 00:18:27,441 ஓ, ஆம். அந்த தக்காளி. 315 00:18:27,524 --> 00:18:28,692 ஆம். 316 00:18:28,775 --> 00:18:32,404 லோடிக்கு வெளியே உள்ள ஒரு சின்ன குடும்ப தோட்டத்துல அதை வளர்க்கறாங்க. 317 00:18:32,487 --> 00:18:33,864 சரி, அப்படின்னா அவங்க மந்திரவாதிங்களா இருக்கணும். 318 00:18:33,947 --> 00:18:36,116 -இல்ல, இல்ல. நீங்களும் இதை வளர்க்கலாம். -வழியே இல்ல. 319 00:18:36,200 --> 00:18:38,744 எனக்கும் செடிக்கும் ராசியே கிடையாது. நான் செயற்கை செடிகளைக் கூட கொன்னுடுவேன். 320 00:18:39,244 --> 00:18:40,495 அது உண்மையா இருக்காது. 321 00:18:41,580 --> 00:18:43,832 -உங்களுக்கு எப்படித் தெரியும்? -எனக்குத் தெரியாது. 322 00:18:43,916 --> 00:18:47,336 நீங்க போதுமான அளவுக்கு உங்களை பெருமையா நினைக்கறது இல்லன்னு, எனக்கு என்னவோ தோணுது. 323 00:18:48,795 --> 00:18:52,049 உண்மையைச் சொல்லணும்னா, எனக்கும் விவசாயத்துல பெரிய ராசியெல்லாம் இல்லை, 324 00:18:52,132 --> 00:18:54,843 ஆனால் எதை வாங்கணும், அதை எப்படி இது போன்ற உணவகங்களுக்கு 325 00:18:54,927 --> 00:18:57,387 லாபத்துல விற்கணும்னு எனக்குத் தெரியும். 326 00:18:57,471 --> 00:19:00,432 அதனால அவங்க அதை வெண்ணையும் பூண்டையும் போட்டு சாகடிக்கலாம்னா? 327 00:19:00,933 --> 00:19:02,643 ஆம். அதே தான். 328 00:19:02,726 --> 00:19:04,520 இன்பம் என்பது ரொம்ப எளிமையான ஒண்ணு. 329 00:19:06,230 --> 00:19:07,231 மக்கள் அதை மறந்துடறாங்க. 330 00:19:10,776 --> 00:19:11,777 என்ன தெரியுமா, 331 00:19:11,860 --> 00:19:13,153 நீங்க உங்க பெயர் என்னன்னே சொல்லலை. 332 00:19:13,654 --> 00:19:15,364 நீங்க சொல்லணும்னு அவசியம் இல்ல, ஆனால் நீங்க சொல்லலை. 333 00:19:16,949 --> 00:19:18,242 நான் கெல்லி. 334 00:19:18,325 --> 00:19:19,701 உங்களை சந்திச்சதுல மகிழ்ச்சி, கெல்லி. 335 00:19:21,286 --> 00:19:25,958 இல்ல, இல்ல. நான் கெல்லி இல்ல. நான், ஷீலா. 336 00:19:27,835 --> 00:19:30,587 -சரி, உங்களை சந்திச்சதுல மகிழ்ச்சி, ஷீலா. -நான்... உங்களை சந்திச்சதுல மகிழ்ச்சி, கார்லோஸ். 337 00:19:30,671 --> 00:19:32,297 நான் ஏன் அப்படிச் சொன்னேன்னு தெரியலை. 338 00:19:32,381 --> 00:19:33,924 நான் கொஞ்சம் மர்மா, அப்படி, 339 00:19:34,758 --> 00:19:36,218 -நடந்துக்க நினைச்சேன்... -இல்ல, விளக்கம் அவசியமில்லை. 340 00:19:38,178 --> 00:19:41,890 நான் உன்னை நேசிக்கிறான், ரொம்ப நேசிக்கிறேன் 341 00:19:41,974 --> 00:19:45,435 நான் உன்னை நேசிக்கிறான், ரொம்ப நேசிக்கிறேன் 342 00:19:47,604 --> 00:19:49,481 சரி. குட் நைட். 343 00:19:59,992 --> 00:20:01,034 அப்பா. 344 00:20:01,535 --> 00:20:03,662 தெரியும் கண்ணே. நான் உனக்கு உதவ நினைக்கிறேன், 345 00:20:03,745 --> 00:20:06,999 ஆனால் நீ நினைப்பதை விட கொஞ்சம் குறைவா செய்யறேன், ஏன்னா நீயே கத்துக்கணும். சரியா? 346 00:20:07,749 --> 00:20:08,750 உன்னால செய்ய முடியும். 347 00:20:13,380 --> 00:20:14,464 நல்லபடியா ஓடுங்க. 348 00:20:15,632 --> 00:20:17,134 அதுல சிறப்பானதை கண்டுபிடியுங்க. 349 00:20:19,136 --> 00:20:21,180 உணவு, உடை, சேவைகள். 350 00:20:21,263 --> 00:20:26,268 இப்போ, கற்பனை செய்து பாருங்க, வெறும் 1800 சதுரடியில உருவான 351 00:20:26,351 --> 00:20:28,896 விளையாட்டு வீரர்கள் குடியிருப்புக்கு அருகில் உள்ள ஒரு அதி-நவீனமான ரிடேயில் கிராமம் இது. 352 00:20:28,979 --> 00:20:32,149 ஒரு பொதுத்துறை மற்றும் தனியார் பார்ட்னர்ஷிப். 353 00:20:32,649 --> 00:20:36,403 -சரி, அது ரொம்ப நல்லாயிருக்கே. -அது தான் எதிர்காலம்னு தோணுது. 354 00:20:36,486 --> 00:20:37,988 ஆனால் உங்களுக்கு இன்னொரு வேலை தரலாம்னு நினைக்கிறேன். 355 00:20:38,572 --> 00:20:41,033 -கட்டாயம். -போர்டபிள் டாய்லெட்கள். 356 00:20:43,452 --> 00:20:44,286 மன்னிக்கணும்? 357 00:20:44,369 --> 00:20:47,039 எங்களுக்கு கிட்டத்தட்ட 5,000 போர்டபிள் டாய்லெட்டுகள் தேவைப்படும் 358 00:20:47,122 --> 00:20:48,874 அந்த போட்டிகள் நடக்கும் வட்டாரத்தில. 359 00:20:48,957 --> 00:20:53,337 கட்டுமானத்துல உங்களுடைய அனுபவத்தைப் பார்த்தால், நீங்க தான் அதைச் செய்ய முடியும்னு தோணுது. 360 00:20:55,964 --> 00:21:00,552 நான் கட்டாயமா டாய்லெட்களை கட்ட முடியும், நான் நினைக்கிறேன், இன்னும் பெரிய வாய்ப்பு... 361 00:21:00,636 --> 00:21:02,596 ஒன்று சொல்லட்டுமா, நீங்க இதை சரியாச் சொல்லுங்க, 362 00:21:02,679 --> 00:21:04,765 அதோட உங்களுக்கு கமிட்டியில நிறைய ரசிகர்கள் இருக்காங்க. 363 00:21:08,143 --> 00:21:09,144 நிச்சயமா. 364 00:21:09,228 --> 00:21:11,605 நல்ல மனிதர். நாங்க லாஜிஸ்டிக்ஸைப் பத்தி உங்களுக்கு சொல்றோம். 365 00:21:12,564 --> 00:21:13,815 ஆம். எனக்குத் தகவல் சொல்லுங்க. 366 00:21:15,776 --> 00:21:17,903 நான் என் மனைவியுடன் கொஞ்சம் தனியா பேசலாமா, பிளீஸ்? 367 00:21:24,368 --> 00:21:26,078 ஃபோன்ல பேசியது ஹீத் ரூடிகெர். 368 00:21:27,538 --> 00:21:31,667 வாரக்கணக்குல அந்த எல்ஏ கேம்ஸ் கமிட்டியுடன் நெட்ஒர்க்கிங்கை செய்த பின், 369 00:21:33,001 --> 00:21:35,295 எனக்கு போர்ட்டபிள் டாய்லெட்டுகளைக் கட்டும் பணியை கொடுத்திருக்காங்க. 370 00:21:37,798 --> 00:21:42,594 '84 கேம்ஸுல என்னுடைய பங்கு டாய்லெட்டுகள் கட்டுவது தான். 371 00:21:44,429 --> 00:21:45,597 அப்போ இது என் தப்பா? 372 00:21:45,681 --> 00:21:48,350 அந்த டின்னர்ல நீ நடந்துகிட்ட விதம், கண்டிப்பா ஒரு காரணமா இருந்தது. 373 00:21:48,433 --> 00:21:50,060 -அது நியாயம் இல்ல. -இல்லயா? 374 00:21:53,105 --> 00:21:55,190 என்னை அவமானப்படுத்த புதிய வழிகளை கண்டுபிடிக்கிறீங்க. 375 00:21:56,525 --> 00:22:00,529 நீங்க ஒருத்தியோட உறவு வச்சுக்கிட்டீங்க, அனைவருக்கும் முன் என்னை கேலி பேசறீங்க. 376 00:22:00,612 --> 00:22:02,990 என் வீட்டிலேயே நான் கைதியா இருக்கேன். 377 00:22:03,073 --> 00:22:04,366 இதெல்லாத்தையும் தாண்டி, 378 00:22:04,449 --> 00:22:06,660 நான் உங்களுக்கு அடிபணிந்து நடக்கணும், அதோட... 379 00:22:09,162 --> 00:22:13,417 உங்களுக்கு அமைதி கிடைக்கணும்னா, ஜான், விஷயங்கள் இங்கே மாறணும். 380 00:22:19,882 --> 00:22:22,259 இது எனக்கு எதை ஞாபகப்படுத்துதுன்னு நான் யோசிக்கிறேன். 381 00:22:24,344 --> 00:22:26,263 வாயில இருக்கு, ஆனால் வர மாட்டேங்குது. 382 00:22:27,806 --> 00:22:29,349 என் அக்காவின் லிப் கிளாஸை நினைவு படுத்துது. 383 00:22:30,142 --> 00:22:32,936 இதே மாதிரி நல்ல வாசனை வந்தது, ஆனால் இதே போல மோசமான ருசியா இருந்தது, 384 00:22:33,020 --> 00:22:34,980 அதனால காரமெல் வேண்டாம். 385 00:22:40,235 --> 00:22:42,154 -நீ நலமா? -ஆம், நான் நல்லாயிருக்கேன். 386 00:22:43,614 --> 00:22:46,074 ஏன்னா அந்த மீட்டிங்குல நீ ரொம்ப, ஒரு மாதிரி... 387 00:22:48,994 --> 00:22:50,662 இது எதையும் நாம செய்ய வேண்டிய அவசியம் இல்ல. 388 00:22:50,746 --> 00:22:52,122 சத்தியமா, ஷீலா, 389 00:22:52,623 --> 00:22:55,125 இந்த குக்கிஸ் விஷயத்தை எதிர்கொள்வது உனக்கு கஷ்டமா இருந்தால்... 390 00:22:56,710 --> 00:22:58,837 -உன் ஆரோக்கியம் தான் முதலில் வரணும். -நான் நல்லா தான் இருக்கேன். 391 00:23:00,172 --> 00:23:02,466 நிஜமாவா? ஏன்னா உன் கவனம் இங்கே இல்லாதது போல இருக்கு... 392 00:23:02,549 --> 00:23:03,592 நான் ஒருவரை சந்திச்சேன். 393 00:23:03,675 --> 00:23:06,678 அப்படின்னு நினைக்கிறேன். அதாவது, இல்ல, அவரை சந்திச்சது தெரியும். 394 00:23:06,762 --> 00:23:11,642 அவர் கொஞ்சம் நெருக்கமானவராக மாறலாம். 395 00:23:12,392 --> 00:23:14,478 -ஓ, பரலோகத்தில் இருக்கும் பிதாவே. -நிறுத்து. 396 00:23:14,561 --> 00:23:16,897 இரு, இல்ல, இங்கே நான் என்னவே நினைக்கிறேன் நீ... நீ என்னன்னா... 397 00:23:16,980 --> 00:23:18,899 -நீ யாரையோ சந்திச்சயா? எனக்குச் சொல்லு. -சரி. 398 00:23:18,982 --> 00:23:22,110 சொல்ல எதுவும் இல்லை, நிஜமா. அதாவது, நாங்க பேசினோம். 399 00:23:22,194 --> 00:23:26,949 அவர் ரொம்ப வேடிக்கையா இருந்தார் அதோட ஒரு மாதிரி நேர்மையானவர்னு தோணுது. 400 00:23:28,116 --> 00:23:29,576 -எனக்கு உணவு தந்தார். -நிறுத்து. 401 00:23:30,786 --> 00:23:32,955 அப்புறம், நான் என் ஃபோன் நம்பரை தந்தேன். 402 00:23:33,038 --> 00:23:35,040 நான் அவரிடம் அதை எழுதிக் கொடுத்தேன். 403 00:23:35,624 --> 00:23:37,292 நான், நானே தான்... நான் யார்? 404 00:23:39,378 --> 00:23:40,379 என்னை மன்னிச்சிடு, 405 00:23:40,462 --> 00:23:41,880 -ஆனால் நான் உன்னைப் பத்தி ரொம்ப யோசிப்பேன்... -நிறுத்து. 406 00:23:41,964 --> 00:23:44,091 ...அதோடு நான் எப்போதும் கேட்க பயம். 407 00:23:44,174 --> 00:23:47,719 -அப்புறம் என்னன்னா நீ இந்த நல்ல செய்தியைத் தர. -இல்ல, இன்னும் எதுவும் ஆகலை. 408 00:23:47,803 --> 00:23:49,054 -ஆம், அது... ஆமாம். -ஆம். 409 00:23:49,137 --> 00:23:51,557 -நான் இந்த குக்கிஸை சாப்பிடப் போறேன். -அதாவது, முக்கியமா இருக்கலாம். 410 00:23:51,640 --> 00:23:52,975 அது குக்கிஸுடன் தான் ஆரம்பித்தது. 411 00:23:53,058 --> 00:23:56,228 நான் உணவகத்துக்குப் போனது, எனக்கு என்ன பிடிக்கும்னு கண்டுபிடிக்க. 412 00:23:56,311 --> 00:23:57,729 இருந்தாலும், அவர்... 413 00:23:57,813 --> 00:24:02,693 அவர் வந்தார், அப்பறம், ஆமாம், எனக்கு எது பிடிக்கும்னு தெரிந்தது. 414 00:24:08,073 --> 00:24:10,158 -இருக்கலாம். இருக்கலாம். -இருக்கலாம். 415 00:24:10,242 --> 00:24:12,202 ஆனால் எனக்கு காரமெலோ அல்லது ஸ்டிராபெரியோ பிடிக்கலைன்னு தெரியும். 416 00:24:12,286 --> 00:24:16,290 நான் உன்னை நேசிக்கிறான், ரொம்ப நேசிக்கிறேன் 417 00:24:16,957 --> 00:24:21,420 -கழுத்தை கட்டிகிட்டு நான் உன்னை நேசிக்கிறேன் -நேசிக்கிறேன். கழுத்து. 418 00:24:23,839 --> 00:24:25,215 சரி. குட் நைட். 419 00:24:31,930 --> 00:24:33,849 ச்சே. ச்சே. 420 00:24:55,871 --> 00:24:58,540 ரன்னர்ஸ் ஒர்ல்ட் ஓட்டம் ஓடி அதிக நாட்கள் வாழுங்கள்! 421 00:25:20,270 --> 00:25:21,647 ஓ, ச்சே. 422 00:25:38,956 --> 00:25:39,957 அடக் கடவுளே. 423 00:25:45,462 --> 00:25:46,588 சரி. 424 00:25:46,672 --> 00:25:52,469 ஆக, இதைச் சுத்தி மேல, அது மேல, நீ இப்போ மரத்தை சுத்தி வா. 425 00:25:53,804 --> 00:25:55,347 அப்புறம் அடுத்ததைச் செய். 426 00:25:56,515 --> 00:25:58,141 உனக்கு கிடைத்த அருளை எண்ணிப் பார்க்கணும். 427 00:25:58,225 --> 00:26:02,229 நீங்க தான் உயிருடன் உள்ள பரிசு. எல்லோருக்கும் அந்த பாக்கியம் இல்லை. 428 00:26:03,313 --> 00:26:04,314 சுதந்திரமா ஓடுங்க. 429 00:26:04,982 --> 00:26:05,983 முட்டாள்கள். 430 00:26:06,066 --> 00:26:07,067 அதோட... 431 00:26:09,069 --> 00:26:12,614 இல்ல, சாவிகள். அதை பிடி... சரி தான். போகலாம், வா. போகலாம். 432 00:26:12,698 --> 00:26:14,491 திமிங்கலங்களைக் காப்பாத்துங்க 433 00:26:18,328 --> 00:26:22,165 ஓஷன் அட்வோகேட்ஸ் 434 00:26:22,249 --> 00:26:26,128 ஒலீவியா III 435 00:26:36,763 --> 00:26:39,016 மன்னிக்கணும். நீங்க அதைச் செய்யும் போது காப்பி குடிக்கலாமா? 436 00:26:42,477 --> 00:26:43,478 எனக்குத் தெரியாது. 437 00:26:47,357 --> 00:26:48,650 ஆகவே எப்படிப் போகுது? 438 00:26:50,277 --> 00:26:53,447 -பம்பு செய்வது எப்படிப் போகுதுன்னு கேட்கிறாங்களா? -நிச்சயமா, ஆம். 439 00:26:53,530 --> 00:26:55,157 தெரியுமா, அதுவும் சேர்த்து தான், இல்லயா? 440 00:26:55,657 --> 00:26:57,201 நாம அனைவரும் போகும் இந்த பைத்தியாக்கார பந்தயம். 441 00:26:58,368 --> 00:26:59,411 -ஆமாம். -ஒரு தாயாகவும், புரோஃபெஷனலாகவும் 442 00:26:59,494 --> 00:27:01,205 இருப்பதன் பேலன்ஸ். 443 00:27:02,664 --> 00:27:05,834 சரி தான். சரி. நல்லா போகுது. 444 00:27:07,044 --> 00:27:09,171 நல்லது. நல்லது. நல்லது. 445 00:27:10,214 --> 00:27:11,215 எனக்கு ஒரு மகள் இருக்கா. 446 00:27:12,382 --> 00:27:13,383 மாயா. 447 00:27:16,595 --> 00:27:19,264 எந்த விஷயங்கள் நம் வாழ்க்கையில் ஒரு பிடிப்பை ஏற்படுத்துதோ, அவை 448 00:27:19,348 --> 00:27:23,644 நமக்கு நம்மிடம் உள்ள தொடர்பையே இல்லாமல் செய்வது, ரொம்ப விசித்திரம். 449 00:27:25,562 --> 00:27:27,189 ஆனால் அது தான் விஷயமே என்று இருக்கலாம், இல்லையா? 450 00:27:27,272 --> 00:27:30,609 இதிலிருந்து மீண்டு மேம்பட்டு வரணும். 451 00:27:31,568 --> 00:27:32,819 அதோட அது பேலன்ஸைப் பத்திய விஷயமே இல்லை. 452 00:27:32,903 --> 00:27:35,739 அது தியாகம், நாம அதை செய்தால் தான் வளர முடியும். 453 00:27:38,408 --> 00:27:39,910 நான் எப்படி தாக்குப் பிடிக்கிறேன் தெரியுமா? 454 00:27:41,495 --> 00:27:42,621 நான் வினையத்துடன் அடிபணிகிறேன். 455 00:27:44,164 --> 00:27:50,087 ஒரு நாள், நான் என்னை அப்படியே உறிஞ்சு எடுத்த பின், என்னிடம் கொடுக்க எதுவும் இருக்காது. 456 00:27:50,170 --> 00:27:54,007 குழந்தைகளுக்கும் சரி, என் வேலைக்கும் சரி. எதுவும் இருக்காது. 457 00:27:55,926 --> 00:27:57,177 அதுக்கு அப்புறம் என் கதை முடிஞ்சுடும். 458 00:28:05,894 --> 00:28:07,729 -நான் உங்களுக்கு இன்னொரு காப்பி கொண்டு வரேன். -சரி. 459 00:28:11,900 --> 00:28:13,068 அது சூடா இருந்தால் நல்லாயிருக்கும். 460 00:28:16,029 --> 00:28:19,241 -எங்களுக்கு சாக்லேட் ரொம்ப பிடிச்சிருக்கு. -அற்புதம். 461 00:28:19,825 --> 00:28:23,287 ஆனால் லாபத்துல என் பங்கு 50 பேஸிஸ் புள்ளிகள் ஒவ்வொரு காலாண்டும் அதிகரிக்கும். 462 00:28:29,001 --> 00:28:29,918 யேய். 463 00:28:40,929 --> 00:28:42,556 சரி. 464 00:28:47,269 --> 00:28:48,729 -சம்மதிக்கிறோம். -சரி, ஆம். 465 00:28:50,898 --> 00:28:52,983 -ஹலோ. -ஹே, டெப். 466 00:28:53,066 --> 00:28:55,986 -டேனி பனானி! யார் இறந்துட்டாங்க? -யாரும் இறக்கல. 467 00:28:56,069 --> 00:29:00,282 யாரும் இறக்கல. என் குட்டித் தங்கையைக் கூப்பிட்டு எப்படி இருக்கான்னு கேட்கலாம்னு தான். 468 00:29:00,365 --> 00:29:02,951 -ரொம்ப நாள் ஆயிடுச்சு. -நீ போதையில இருக்கயா? 469 00:29:03,452 --> 00:29:05,662 இல்ல. அப்படி இல்ல. 470 00:29:06,872 --> 00:29:07,873 நானும் இல்ல. 471 00:29:09,791 --> 00:29:13,128 தெரியுமா, நான் இங்கே உட்கார்ந்து இருந்தேன் 472 00:29:13,212 --> 00:29:16,715 அப்போ யோசிச்சேன், உனக்கு இப்போ இருக்க ஒரு இடம் தேவையா? 473 00:29:16,798 --> 00:29:20,594 அதாவது, என்னைத் தெரியுமே, பனானி, எனக்கு எப்போதும் தேவை, தேவையும் இல்ல. ஏன்? 474 00:29:20,677 --> 00:29:25,724 சரி, என்னிடம் ஒரு மடக்கற மெத்தை இருக்கு, 475 00:29:26,642 --> 00:29:30,604 அது இந்த அழகான கடற்கரை கிராமத்துக்கு உன்னை வான்னு அழைக்குது. 476 00:29:30,687 --> 00:29:33,857 நீ இங்கே வந்து, சுத்திப் பார்த்துட்டு, உன் டேன்-ஐ அதிகரித்துக் கொள்ளலாம். 477 00:29:33,941 --> 00:29:35,859 -என்ன ஆச்சு? -நீ எதைப் பத்தி கேட்குற? 478 00:29:35,943 --> 00:29:38,946 ஏவ்ரியின் அகால மரணத்தைப் பத்தி உனக்கு மெஸ்ஸேஜ் அனுப்பினேன், 479 00:29:39,029 --> 00:29:40,697 நீ அப்போ எதுவும் சொல்லல. 480 00:29:41,532 --> 00:29:43,283 அந்த பறவைையை நான் எவ்வளவு நேசிச்சேன்னு உனக்கே தெரியும். 481 00:29:47,037 --> 00:29:49,623 ஆம், தெரியும். என்னை மன்னிச்சிடு. 482 00:29:51,250 --> 00:29:52,918 ஷீலாவும் நானும் விவாகரத்து செய்யறோம். 483 00:29:53,001 --> 00:29:54,628 அது தான் விஷயம். 484 00:29:57,172 --> 00:29:58,173 ஓ, இல்ல. 485 00:29:59,383 --> 00:30:02,553 உனக்கு அனுதாபமா, இல்ல ஆச்சரியமான்னு தெரியலை. 486 00:30:03,220 --> 00:30:06,390 எனக்கு வருத்தம். நீ எப்படி சமாளிக்கற? 487 00:30:06,473 --> 00:30:07,599 நான்... 488 00:30:07,683 --> 00:30:13,480 பாதி நாட்கள் மாயாவைப் பார்த்துக்கும் பொறுப்பு என்னுடையது, நான் ரொம்ப மோசமான தந்தை. 489 00:30:13,564 --> 00:30:18,569 அதக்கு மேல என்ன, எனக்கு எதுவும் விளங்கல, டெப், 490 00:30:18,652 --> 00:30:20,070 எனக்கு உதவி கிடைச்சா நல்லாயிருக்கும். 491 00:30:22,072 --> 00:30:23,490 அதோட என்னிடம் போதை மருந்து இருக்கு. 492 00:30:25,909 --> 00:30:26,952 நான் அடுத்த பஸ்ஸை பிடிச்சு வரேன். 493 00:30:27,035 --> 00:30:29,329 நல்லது. நல்லது. 494 00:30:29,997 --> 00:30:31,498 நல்ல ஃபுட்பால். 495 00:30:33,292 --> 00:30:37,796 ஒரு பால் ஷ்னெய்டருக்கு. அவர் அதை தூரமாக மில்லருக்கு அடிப்பார். 496 00:30:41,300 --> 00:30:42,301 மாலை வணக்கம். 497 00:30:42,384 --> 00:30:43,844 உங்களுக்குத் தெரியாது. 498 00:30:45,846 --> 00:30:47,639 -நாம மேல போகலாமா? -வேண்டாம். 499 00:30:47,723 --> 00:30:51,143 -இந்த விளையாட்டை மட்டும் அணைக்கிறேன். -நீங்க செய்ய வேண்டியது ஒண்ணே ஒண்ணு தான் 500 00:30:51,768 --> 00:30:53,896 இந்த சட்டையை எடுத்துடுங்க... 501 00:30:55,814 --> 00:30:58,025 நான் உங்க பெல்ட பக்கிளை உடைச்சுட்டேன். அட. 502 00:30:59,359 --> 00:31:02,070 உனக்கு இவ்வளவு உற்சாகம் வருவதற்கு ஏதோ ஒண்ணு நடந்திருக்கு. 503 00:31:02,154 --> 00:31:03,197 ஆமாம். நான் ஒரு தகவல் வச்சிருக்கேன். 504 00:31:04,615 --> 00:31:05,616 சரி. 505 00:31:05,699 --> 00:31:10,037 நான்... ஷீலாவும் நானும் இப்போதான் ஒரு டயட் ஃபூட் கம்பெனியுடன் 506 00:31:10,120 --> 00:31:11,872 ஒரு விளம்பர டீலை பேசி முடிச்சோம். 507 00:31:12,956 --> 00:31:14,124 அதுவும் நல்ல லாபகரமான ஒண்ணு. 508 00:31:14,666 --> 00:31:16,752 ஆமாம், நீ பிசியா தான் இருந்த. 509 00:31:18,712 --> 00:31:19,713 சரி. 510 00:31:20,964 --> 00:31:23,926 சரியா புரிந்து கொள்ளணும்... 511 00:31:24,885 --> 00:31:27,095 கடவுளே. சொல்லி முடி, கிரெட்டா. ஆமாம். 512 00:31:31,934 --> 00:31:36,688 என்னன்னா, கடந்த சில மாதங்களா, நமக்குள்ள எல்லாம் சரியா இருக்குன்னு தோணல. 513 00:31:38,482 --> 00:31:41,068 அதாவது, நாம இன்னும் பிசினஸுல பார்ட்னர்களா ஆக, ஆக, 514 00:31:41,151 --> 00:31:45,489 நாம இல்லற வாழ்க்கையில பார்ட்னர்களா இருப்பது குறையுது, தெரியுமா. 515 00:31:45,572 --> 00:31:51,119 அதனால எனக்குத் தோணுது, இன்னும் நல்லது, இன்னும் ஆரோக்கியமானது, 516 00:31:52,371 --> 00:31:57,334 எதுன்னா, நீங்க இல்லாம நாங்க மட்டும் பிசினஸை நடத்துறது தான்னு தோணுது. 517 00:32:01,797 --> 00:32:05,008 எர்ண், நாம திரும்பவும் சகஜ நிலைக்குத் திரும்பணும்... 518 00:32:05,092 --> 00:32:06,385 நான் இப்போ இந்த விளையாட்டை ப் பார்க்க விரும்புறேன். 519 00:32:13,267 --> 00:32:14,935 இப்போது தான் தாக்குதல் முறையை ஆரம்பித்துள்ளார். 520 00:32:29,908 --> 00:32:31,118 இடது பக்கத்தை முயற்சி செய்கிறார். 521 00:32:32,619 --> 00:32:38,500 நீ சாதிக்கிற. போராடுவது, ஜெயிப்பது, காயப்படுத்துவது, ஆற்றுவது. 522 00:32:39,626 --> 00:32:43,130 இது ரொம்ப நல்லாயிருக்கு. நீ நல்லா செய்யற. 523 00:32:44,756 --> 00:32:50,095 அப்படி இருந்தும், இதோ இங்கே குளியல் அறையில தனக்குத் தானே பேசிட்டு இருக்க. 524 00:32:50,804 --> 00:32:52,347 உன்னை நீ நம்புவது கஷ்டமா இருக்கு, இல்லையா? 525 00:33:09,114 --> 00:33:10,282 -ஹை. -ஹை. 526 00:33:10,365 --> 00:33:13,410 எனவே, நான் இத்தாலிய உணவை பத்தி யோசிச்சேன். என்ன, அங்கே இன்னொரு... 527 00:34:44,333 --> 00:34:46,335 தமிழாக்கம் அகிலா குமார்