1 00:00:09,259 --> 00:00:11,845 நேராக பார். முகத்தை அமைதியாக வைத்துக்கொள். இங்கு இருக்க உனக்கு தகுதியிருக்கு. 2 00:00:11,929 --> 00:00:13,805 குறைந்தது, நீ அவனை அப்படி நம்ப வைக்கணும். 3 00:00:18,477 --> 00:00:19,853 நீங்க என்னை கொல்ல மாட்டீங்க, இல்ல? 4 00:00:20,646 --> 00:00:22,439 என்ன? இல்ல. என்னது? மாட்டேன்! 5 00:00:22,523 --> 00:00:25,734 நீங்க ஏன் அப்படி... இல்லை, இல்லை, நான்... நான் இங்கு வந்தது... 6 00:00:25,817 --> 00:00:28,320 ஒரு பைத்தியக்கார இடத்தில் என்னை பூட்டிவைக்க நினைத்த புருஷனிடமிருந்து ஓடி ஒளிய. 7 00:00:28,403 --> 00:00:32,573 ...உங்கள் தாராள மனதுடன் நீங்கள் தரும் ஒப்புதல் விளம்பரத்தை ஏற்க. 8 00:00:32,658 --> 00:00:34,493 "ஒப்புதல் விளம்பரமா"? 9 00:00:35,827 --> 00:00:37,913 நீங்க அதைப் பத்தி ரொம்ப யோசிச்சிருக்கீங்க. 10 00:00:37,996 --> 00:00:41,208 நம்ப வை. நீயும் நம்பு. அப்போ தான் அவன் நம்புவான். 11 00:00:41,291 --> 00:00:44,127 உண்மையில் நான் அதைப்பத்தி நிறைய யோசித்தேன், மேலும் நான்... 12 00:00:44,211 --> 00:00:47,798 அதாவது, உங்களிடம் வேலை செய்து கற்றுக் கொள்வதே பெரிய வாய்ப்பு தான். 13 00:00:47,881 --> 00:00:50,175 அதனால, இதோ வந்துவிட்டேன். 14 00:00:52,469 --> 00:00:53,804 நாம அதை அதிகாரபூர்வமா அறிவிக்கணுமா? 15 00:00:59,518 --> 00:01:01,436 -நாம டேன் செய்துகொள்வோம். -என்னது? 16 00:01:01,520 --> 00:01:03,647 நான் தரும் சலுகை. வாங்க. 17 00:01:06,233 --> 00:01:09,486 ஹே, அன்று நாம் அதை விட்டு வந்த விதம் எனக்குப் பிடிக்கவில்லை. நான் வருந்துகிறேன். 18 00:01:09,570 --> 00:01:11,154 அட, அதற்கு மேலே பேச வேண்டாம். 19 00:01:11,238 --> 00:01:13,991 அதாவது, அது அறிவு சார்ந்த ஒரு விவாதம், 20 00:01:14,074 --> 00:01:17,494 நல்லவேளை நாம் வசிக்கும் நாட்டில் அதையெல்லாம் அனுமதிக்கிறார்கள். 21 00:01:18,078 --> 00:01:19,454 கடந்து போயாச்சு. 22 00:01:19,538 --> 00:01:21,415 -நான் உங்களுக்கு குடிக்க கொண்டு வருகிறேன். -சிறப்பு. 23 00:01:21,999 --> 00:01:26,336 உங்ககிட்ட அந்த 900 சீரீஸ் படிவங்களும் ஈ.ஒய்.ஈக்கான ஈஐஎன் வரி ஆவணங்களும் உள்ளனவா? 24 00:01:28,797 --> 00:01:31,925 ஆம், எங்கோ இருக்கு. தெரியாது. எங்கன்னு தெரியலை. 25 00:01:32,009 --> 00:01:33,760 அதைக் கொஞ்சம் எடுத்துட்டு வர்றீங்களா, தயவுசெய்து? 26 00:01:34,970 --> 00:01:36,597 அப்படின்னா நாம் என்ன பிரிவதாக அர்த்தமா? 27 00:01:36,680 --> 00:01:40,684 இல்ல. இல்ல, கண்டிப்பாக இது ஒரு முறிவு இல்லை. 28 00:01:40,767 --> 00:01:42,811 ஆம், நிச்சயமா நானும் அப்படி சொல்ல வரலை. 29 00:01:43,395 --> 00:01:46,732 நீங்க ஈ.ஒய்.ஈ-யிலிருந்து விலகுவது தான் மிகச் சிறந்த வழியாக இருக்கும் என தீர்மானிக்கப்பட்டது. 30 00:01:46,815 --> 00:01:48,275 எனக்கு அந்த ஆவணங்கள் தேவை. 31 00:01:48,358 --> 00:01:50,027 எனவே, இது ஒரு ஆட்சிமாற்றமா? 32 00:01:50,110 --> 00:01:53,155 அட, இங்க பாருங்க, டேனி. உங்களுக்கு உண்மையில் இதுல அக்கறையே இல்லை. 33 00:01:53,238 --> 00:01:56,325 எனக்கு அக்கறை கிடையாதா? எனக்கா அக்கறை இல்லை? 34 00:01:56,408 --> 00:01:59,494 என்னை இப்படி யாருமே காயப்படுத்தியது இல்லை... 35 00:01:59,578 --> 00:02:02,998 எனக்கு அக்கறை மட்டும் தான் உள்ளது! நான் எப்போதும் அக்கறையோட தான் இருக்கேன்! 36 00:02:03,081 --> 00:02:04,208 -ஆழ்கடலைப் பத்தியா? -ஆமாம்! 37 00:02:04,291 --> 00:02:05,334 -சுற்றுச் சூழல் பத்தியா? -ஆம்! 38 00:02:05,417 --> 00:02:06,585 நான் அப்படி நினைக்கவில்லை. 39 00:02:06,668 --> 00:02:09,755 நீங்க அந்த குழுவின் பக்கம் வராம இருந்தாலே போதுமானது. 40 00:02:09,838 --> 00:02:12,883 நேர்மறையான ஊடக அபிப்பிராயம் வந்ததும், நன்கொடைகள் ஏராளமாக கிடைக்கின்றன. 41 00:02:12,966 --> 00:02:15,385 அனைவராலும் தலைவர் பதவியெல்லாம் ஏற்று செய்ய முடியாது. 42 00:02:15,469 --> 00:02:16,845 உங்கள் மகன், லியோவால் முடியுமா? 43 00:02:16,929 --> 00:02:18,972 இருக்கலாம். இன்னும் சில வருடங்கள் கழித்தாவது அப்படி ஆகலாம். 44 00:02:19,056 --> 00:02:20,641 ஓ, ஆம். சில வருடங்களில் ஆகலாம். 45 00:02:20,724 --> 00:02:23,143 அவன் வண்ணானின் சலவை மூட்டையைப் போல இருக்கிறான். 46 00:02:23,227 --> 00:02:26,146 பள்ளியில் அவனுடைய தோழி ஸ்டெஃபனி கே.-யைப் பத்தி அவன் பேசியதைக் கேட்டீர்களா? 47 00:02:26,897 --> 00:02:28,273 பாருங்க, தோழி. 48 00:02:28,357 --> 00:02:30,526 அவன் கற்பனை உலகில் இருக்கிறார். சொல்லப் போனால், நீங்களும் தான்! 49 00:02:30,609 --> 00:02:31,693 டேனி! 50 00:02:34,863 --> 00:02:38,534 நீங்க அந்த வரி படிவங்களை எடுத்துட்டு வந்தீங்கன்னா நான் என் வேலையைப் பார்க்க அனுகூலமாக இருக்குமே? 51 00:02:40,035 --> 00:02:41,036 சரி. 52 00:02:46,041 --> 00:02:48,502 எனவே, நீங்க இன்னும் உங்க வகுப்புகளை தொடர்கிறீர்கள், இல்லையா? 53 00:02:49,753 --> 00:02:52,339 நீங்க இவ்வளவு தூரம் வளர்ந்த பிறகும், பெரும்பாலும் உங்க வகுப்புகளை நீங்களே நடத்துகிறீர்களா? 54 00:02:52,422 --> 00:02:55,551 நான் செய்ய வேண்டியதுக்கும் மேலேயே செய்யறேன். அப்படி தான் மரிக்கா சொல்கிறார். 55 00:02:55,634 --> 00:02:57,302 அவர் ஏன் அதைச் சொல்லணும்? 56 00:02:57,386 --> 00:03:01,098 அவரைப் பொறுத்தவரை, வகுப்புகள் தான் பிரமிட்டின் அடிதளம். 57 00:03:02,057 --> 00:03:03,725 ஓ, சரி, அதில் அர்த்தம் இருக்குன்னு தோணுது. 58 00:03:04,309 --> 00:03:05,602 ஓ, அவர் ரொம்ப அறிவாளி. 59 00:03:06,186 --> 00:03:09,147 ஒருவேளை அவளும் ஓரின சேர்க்கை சேர்ந்தவள் தானோ. அதுதான் விஷயமா இருக்கும். 60 00:03:09,231 --> 00:03:12,484 ஆம். சரி, ஏரோபிக்ஸைப் பத்தி நான் விரும்புவது எரோபிக்ஸ் தான். 61 00:03:12,818 --> 00:03:13,861 மேலும் நான்... 62 00:03:13,944 --> 00:03:15,779 நான் இப்போது செய்ய முடிவதேயில்லை. 63 00:03:15,863 --> 00:03:19,366 ஓ, நீங்க இப்படிச் சொல்வதை மட்டும் அவர் கேட்டால் உங்கள நார் நாராக கிழித்துவிடுவார்! 64 00:03:19,449 --> 00:03:21,243 "அது பொழுதுபோக்கில்லை. புரிந்துகொள்ளுங்க. 65 00:03:21,326 --> 00:03:24,371 நாம வளர்வதை நிறுத்தலைன்னா, இறந்து விடுவோம். உங்க விரல் நகங்களைக் கடிப்பதை விடுங்கள்". 66 00:03:24,955 --> 00:03:28,125 நான் விரல் நகங்களைக் கடிக்கிறேன், என்னிடம் அதை அவர் வெறுக்கிறார். 67 00:03:28,208 --> 00:03:31,753 எனவே, பிரமிடின் மேல்மட்டம் என்பது என்ன? 68 00:03:31,837 --> 00:03:34,131 உண்மையாக தான் கேட்குறேன் அப்படி ஒன்று இருக்கா? 69 00:03:34,214 --> 00:03:37,217 அது தத்துவ ரீதியானதா, அல்லது பிசினஸ் சம்மந்தப்பட்டதா? 70 00:03:37,885 --> 00:03:38,886 இரண்டும் தான். 71 00:03:38,969 --> 00:03:42,264 உங்களுக்கு நல்ல பெரிய லாபமுள்ள விற்பனை ஆஃபர் வரும்போது. 72 00:03:42,347 --> 00:03:44,600 நான் சொல்வது நபிஸ்கோ அளவு பெரியது. 73 00:03:44,683 --> 00:03:47,686 அதுக்கு அப்புறம் நீங்க மொத்த பிரமிடையும் விற்றுவிட்டு 74 00:03:47,769 --> 00:03:49,396 பஹமாஸுக்கு புலம் பெயர்ந்து விடலாமே. 75 00:03:51,899 --> 00:03:53,400 ஆனால் அதற்கெல்லாம் இன்னும் வெகு தூரம் இருக்கு. 76 00:03:56,153 --> 00:03:59,031 நீங்க எனக்கு கீழே வேலை செய்ய வந்திருக்கிறீர்களா அல்லது நானாகவே மாற வந்திருக்கீங்களா? 77 00:03:59,114 --> 00:04:01,408 உன்னை பிடிச்சுட்டான். நீ எதுவுமே தெரியாத மாதிரி நடிப்பதே நல்லது. 78 00:04:01,950 --> 00:04:03,744 நான் நினைக்கிறேன் நான்... 79 00:04:04,620 --> 00:04:06,538 எனக்கு உண்மையில் தெரியாது. 80 00:04:11,084 --> 00:04:12,711 நான் இந்த பிரிவை ரொம்ப உணரப் போகிறேன். 81 00:04:13,795 --> 00:04:14,796 சரி. 82 00:04:15,631 --> 00:04:17,466 -நீ உணர மாட்டாயா? -இல்லே. 83 00:04:18,509 --> 00:04:20,302 நான் புதிதாக மாறத் தயார். 84 00:04:20,385 --> 00:04:22,137 மெக்சிக்கோ ரொம்ப நாளா இருக்கு, பன். 85 00:04:22,221 --> 00:04:23,764 நான் சொன்னது, நமக்கு. 86 00:04:24,264 --> 00:04:26,850 சும்மா கொஞ்ச நாட்களுக்கு மறைந்திருக்க. 87 00:04:26,934 --> 00:04:29,186 இப்போதைக்கு அது தான் நல்லதுன்னு எனக்குத் தோன்றுகிறது. 88 00:04:31,188 --> 00:04:33,148 நான் இவற்றிற்கு பிரியாவிடை கொடுக்கணும். 89 00:04:36,902 --> 00:04:38,070 என் சர்ஃப் இடம். 90 00:04:38,153 --> 00:04:40,614 அலைகள் அலைகள் தான். அங்கேயும் தான் கடல் இருக்கு. சாமானைக் கட்டு. 91 00:04:43,242 --> 00:04:46,828 நல்லது. ச்சே! நாம இந்த இடத்தை விட்டு போறப்போது அங்கே போயிட்டுப் போவோம். 92 00:04:47,579 --> 00:04:49,957 நீ தான் வெற்றிக் கொடி, பன்! 93 00:04:50,582 --> 00:04:53,418 நான் இன்னிக்கு ஒரு புதிய தகவல் விளம்பரத்தை டேப் செய்கிறேன். 94 00:04:53,502 --> 00:04:56,088 இன்னிக்கு இரவு. "இரவு நேரம் உகந்த நேரம்" என்பதான ஆற்றலை 95 00:04:56,171 --> 00:04:59,550 பயன்படுத்த அதுவே சிறந்த நேரம் என்று மரிக்கா நினைக்கிறார். 96 00:05:00,092 --> 00:05:01,468 அதில் உள்ள தகவல் என்ன? 97 00:05:01,552 --> 00:05:04,221 வழக்கம் போல, நான் தான் தகவல். 98 00:05:04,721 --> 00:05:08,475 ஆனால் சூழல் என்னன்னா, புது வருட இரவில் வேகஸ் நைட் கிளப். 99 00:05:08,559 --> 00:05:10,519 "உங்களின் புதிய உருமாற்றத்துக்கான கவுண்ட் டவுன்." 100 00:05:11,645 --> 00:05:13,146 "புதிய உருமாற்றத்துக்கு முன்." 101 00:05:13,564 --> 00:05:15,524 அதேதான்! 102 00:05:15,607 --> 00:05:19,361 ஆனால் அதுல அந்த "ஓல்டு புளூ ஐஸ் இன் தி பிளேபாய் கிளப்" பாடலின் உணர்வு இருக்கணும்னு 103 00:05:19,444 --> 00:05:23,115 மரிக்கா விரும்புறாங்க, நான் விரும்புவது வேறு. 104 00:05:23,198 --> 00:05:26,577 சரி, நீங்கதானே முக்கியம், இல்லையா? அதனால, உங்க வழியிலேயே அதை செய்யுங்க. 105 00:05:26,660 --> 00:05:28,370 நாங்க இதை ஒவ்வொரு முறையும் செய்யறோம். 106 00:05:28,453 --> 00:05:31,123 ஏதாவது பெரிசா நடக்கும் முன் சண்டை போடுவோம். அது எங்க வழக்கம். 107 00:05:31,206 --> 00:05:35,169 அது அழுத்தத்தைத் தரும் எங்க இருவரையும் சோர்வாக்கும். 108 00:05:35,252 --> 00:05:36,378 ஆமாம். ஆனால் அது தான் உங்க செயல்முறை, 109 00:05:36,461 --> 00:05:38,463 நீங்களே அதை மாத்தணும்னு நினைத்தாலும் மாத்த முடியாது. 110 00:05:38,547 --> 00:05:39,548 அதேதான். 111 00:05:52,311 --> 00:05:55,981 அவள் தான் சரி, நான் வருந்துகிறேன். 112 00:05:58,025 --> 00:06:02,154 எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு. உன்னை நான் புரிந்து கொள்ளவில்லை. எதுவுமே தெரியாது. 113 00:06:02,237 --> 00:06:05,157 ஆனால் தெரிந்தது போல நான் பாசாங்கு செய்கிறேன், ஏன்னா எங்கிட்ட இருப்பதெல்லாம் பொய் தான். 114 00:06:10,871 --> 00:06:12,623 உனக்கும் என்னைப் பத்தி எதுவும் தெரியாது. 115 00:06:13,790 --> 00:06:17,878 நான்... அதை மாற்ற விரும்புகிறேன். 116 00:06:17,961 --> 00:06:21,465 இப்போதே அதை மாற்ற விரும்புகிறேன். 117 00:06:23,884 --> 00:06:25,260 இப்பவும் ஒண்ணும் தாமதமாகிவிடவில்லை. 118 00:06:27,221 --> 00:06:29,223 இது போன்ற பொய் வாழ்க்கை வாழ்ந்து அலுத்துவிட்டது. 119 00:06:29,306 --> 00:06:32,851 நான் அக்கறை கொள்வது போல பாசாங்கு செய்து எனக்கு சலித்துவிட்டது. 120 00:06:34,478 --> 00:06:36,313 என்னை தெரிந்தது போல நீயும் நடிக்கிறாய். 121 00:06:37,523 --> 00:06:40,275 அதெல்லாமே இருப்பது மாறிவிடும். இப்போதே. 122 00:06:52,538 --> 00:06:54,665 நாம இதுக்குள்ள ரொம்ப நேரம் இருந்துட்டோமோ? 123 00:06:54,748 --> 00:06:57,042 -எனக்கு கொஞ்சம் கவலையா இருக்கு, நாம... -கவலை வேண்டாம். 124 00:06:57,125 --> 00:06:59,545 பாதுகாப்பானது இல்லைன்னா, இதையெல்லாம் அவங்களால விற்க முடியுமா? 125 00:06:59,628 --> 00:07:02,631 ஒரு அடிப்படை டேன் இல்லைன்னா, சூரிய ஒளி உங்களை வறுத்து எடுத்துவிடும். 126 00:07:03,257 --> 00:07:06,552 -மதியம் வேலையிருக்கு. -ஏன் அப்படி? 127 00:07:06,635 --> 00:07:11,098 எங்கள எரிச்சல் படுத்திய ஒருவரை இன்று சந்திக்கணும். 128 00:07:11,181 --> 00:07:13,100 அதை நான் தவிர்க்க முடியாது. 129 00:07:15,602 --> 00:07:17,020 இது என்ன எழவு இது? 130 00:07:17,771 --> 00:07:21,358 என் நிழலாக என்னை தொடர, சுவாரசியமான நாளான இன்றை தேர்ந்து எடுத்துள்ளாய். 131 00:07:21,441 --> 00:07:23,819 ஓ, உங்க நிழலாக இருப்பது பத்தியெல்லாம் எனக்குத் தெரியாது. 132 00:07:23,902 --> 00:07:24,987 எனக்குத் தெரியும். 133 00:07:26,154 --> 00:07:28,532 நான் உங்கள பார்க்க முடியும்னு உங்களுக்குத் தெரியுமில்ல? 134 00:07:28,615 --> 00:07:31,243 என் வகுப்புக்கு தவறுதலாக வந்தது முதல் எனக்கு தெரிந்தது தான் அது. 135 00:07:31,827 --> 00:07:35,247 உங்ககிட்ட உண்மையாகவே... ஏதோ இருக்கு. 136 00:07:35,330 --> 00:07:38,333 எனக்கு உங்களைப் பிடிக்க நேரலாம். வழக்கமா எனக்கு யாரையும் பிடிக்காது. 137 00:07:39,751 --> 00:07:41,461 சரி, எனக்கும் உங்களை பிடிக்கலாம். 138 00:07:43,797 --> 00:07:45,799 எனக்கு மூன்றோ நான்கோ இருந்திருக்கும்... 139 00:07:45,883 --> 00:07:47,718 சரியாத் தெரியலை, எவ்வளவு வயதுன்னு. மூணு இருந்திருக்குமோ என்னவோ? 140 00:07:47,801 --> 00:07:50,345 -அப்போது நான் பாடிபோர்டிங் செய்திருந்தேன் எனவே... -நாம இதை வேகமா முடிக்கலாமா? 141 00:07:50,429 --> 00:07:52,097 இல்லை. எனக்கு மூன்று வயது. 142 00:07:52,181 --> 00:07:55,225 என் கசின் தான் முதலில் எனக்கு சொன்னான், நான் கடலில் சிறுநீர் கழிக்கலாம் என்று. 143 00:07:56,143 --> 00:07:57,436 இங்கேயே தான். 144 00:07:58,937 --> 00:08:01,106 ஆ, அவன் சொன்னான், "கடலில் போ, டூட்." 145 00:08:01,190 --> 00:08:03,192 நானும் "நல்லது." 146 00:08:03,275 --> 00:08:05,152 நான் கணுக்கால்-அளவு நீரில் இருந்தேன். 147 00:08:05,235 --> 00:08:08,113 நான் என் பான்டுகளை கீழே தள்ளி, சிறு நீர் கழக்க ஆரம்பித்தேன். 148 00:08:08,947 --> 00:08:10,199 அற்புதமாக இருந்தது. 149 00:08:10,282 --> 00:08:11,491 கேட்டால் அப்படி தான் தோணுது. 150 00:08:11,575 --> 00:08:14,328 -ஆனால் அப்போ... -கண்ணே, இன்னுமா கதை முடியலை? 151 00:08:14,411 --> 00:08:16,121 அங்க சிக்கலான ஒரு மூதாட்டி, 152 00:08:16,205 --> 00:08:18,832 என் காதைப் பிடித்து இழுத்து, திரும்பவும் என் கசினிடமே என்னை கொண்டு போய் விட்டார், 153 00:08:18,916 --> 00:08:21,960 ஜோ சொன்னான், "அவனுக்கு மூன்று வயசாச்சு. இடத்தைக் காலி பண்ணு." 154 00:08:22,461 --> 00:08:24,630 அவங்க ரொம்ப நொந்து போய், கோபமா வெளியேறிட்டாங்க. 155 00:08:26,632 --> 00:08:29,134 அப்போதெல்லாம் அந்த மாதிரி கோபமா போவங்க, இல்ல? 156 00:08:29,218 --> 00:08:30,219 இப்போது... 157 00:08:34,556 --> 00:08:35,724 ஏய், அந்த ஆளு மூழ்கிட்டிருக்கான். 158 00:08:51,907 --> 00:08:55,661 கடவுளே. அதை வெறுத்தேன். ஆனால் அது நடக்கணும்னு இருந்தது. 159 00:08:57,704 --> 00:09:01,583 இது போல தண்டனைப் பெற அவன் என்ன அவ்வளவு மோசமா செய்துட்டான்? 160 00:09:02,209 --> 00:09:05,420 சரி, அவன் எங்கள் பொருளில்... என் பொருளில் மோசமான வேலையைச் செய்துட்டான். 161 00:09:06,505 --> 00:09:10,217 நான் இதே போல எல்லோரையும் மோசமான வேலையை, தண்டனை இல்லாமல் செய்ய அனுமதித்தால், 162 00:09:10,300 --> 00:09:11,718 நாம காலிதான். 163 00:09:13,679 --> 00:09:15,514 நீங்க குழந்தையாக இருந்த போது என்ன ஆனது? 164 00:09:17,349 --> 00:09:18,934 எல்லாமே தான், தெரியவிலையா. 165 00:09:20,519 --> 00:09:22,396 என் வீடு எவ்வளவு பெரிதுன்னு காட்டலாமா? 166 00:09:22,896 --> 00:09:25,816 ஜாக்கிரதை. உன் உணவிற்கு வழியைப் பாரு, உற்ற நண்பர் உனக்குத் தேவை இல்லை. 167 00:09:25,899 --> 00:09:27,234 ஆமாம். 168 00:09:33,240 --> 00:09:35,033 இதோ போகலாம். 169 00:09:36,410 --> 00:09:39,329 எங்கே என் குழந்தைகள்? எங்கே அவை? 170 00:09:39,413 --> 00:09:42,583 எங்கே இருக்கீங்க? எங்கே பசங்களா? எங்கே இருக்கீங்க? 171 00:09:42,666 --> 00:09:46,336 எங்கே பசங்களா? இதோ இங்கே இருக்கீங்களா! ஆம், கண்ணே! அட, ஆமாம்! முத்தம். 172 00:09:46,420 --> 00:09:49,631 ஆமாம். முத்தங்கள், முத்தங்கள். குட் பாய். முத்தங்கள். 173 00:09:49,715 --> 00:09:52,176 இது யாரு? 174 00:09:52,759 --> 00:09:54,595 நாம சந்திச்சிருக்கோம். ஷீலா ரூபின். 175 00:09:54,678 --> 00:09:58,765 எனக்குத் தெரியும். ஆனால் ஏன் இங்கே, வின்சென்ட்? 176 00:09:58,849 --> 00:10:01,268 ஓ, ஷ்ஷ். இங்க வா. 177 00:10:04,313 --> 00:10:07,566 நாங்க ஷீலாவை வின்னி கிரீன் பெயரின் கீழ் கொண்டு வரப் பார்க்கிறோம். 178 00:10:08,609 --> 00:10:11,570 ஆம், நாங்க இப்போது தான் அலுவலகங்களில் பேசினோம், 179 00:10:11,653 --> 00:10:14,740 அதோடு வின்னி இங்கு வந்து பேச்சு வார்த்தையை தொடரலாம் என்று நினைத்தார். 180 00:10:14,823 --> 00:10:17,701 -நான் இன்னும் சில மணி நேரம் இங்கே இருப்பேன்... -வின்சென்டும் நானும் பேசுகிறோம். 181 00:10:18,243 --> 00:10:20,746 ஷீலா தன் முதல் டேனை இன்று அலுவுலகத்தில் எடுத்துக் கொண்டார். 182 00:10:21,580 --> 00:10:25,125 யோசிச்சு பாருங்களேன். அவருடைய வயதில் முதல் முறையாக டேனிங் பெட்டில் இருப்பது. 183 00:10:25,209 --> 00:10:27,127 சரி, சான் டியாகோவில், 184 00:10:27,211 --> 00:10:29,254 நாங்க சூரிய வெளிச்சத்திலேயே அதை செய்திடுவோம். 185 00:10:29,338 --> 00:10:31,048 உங்க தோல்... 186 00:10:32,966 --> 00:10:34,635 இல்லை. இல்லை. 187 00:10:34,718 --> 00:10:38,805 இப்போ, வின்சென்ட், நம்மிடம் சின்சினாட்டியில் அந்த உறைந்த-உணவு நிறுவனம் இருக்கே 188 00:10:38,889 --> 00:10:40,349 அதுக்காக படம் எடுக்க இன்று இரவு வர்றாங்க, 189 00:10:40,432 --> 00:10:43,185 அதுக்கு அப்புறம் பெரிய பேச்சுவார்த்தை நடக்கப் போகுது. 190 00:10:46,563 --> 00:10:50,901 சின்சினாட்டியில் சான் டியாகோ ஒன்று இருக்கா? 191 00:10:51,902 --> 00:10:53,445 நீங்க என்ன கேட்குறீங்கன்னு எனக்குப் புரியலை. 192 00:10:53,529 --> 00:10:55,030 ஒருவேளை நீங்க இந்த ஊரைச் சேர்ந்தவங்க இல்லையோ? 193 00:10:56,657 --> 00:10:58,158 அது ஒரு கேள்வி மாதிரியே இல்லையே. 194 00:10:58,742 --> 00:11:00,202 மரிக்கா, நீங்க ரொம்ப விளையாடுறீங்க. 195 00:11:00,285 --> 00:11:02,120 அவங்களுக்கு நம்ம ஹோசியரி ஆடைகளை விற்க ஆசை. 196 00:11:02,204 --> 00:11:04,373 நான்தான் டேப்பை பார்த்தேன், அவங்கயில்ல. 197 00:11:05,290 --> 00:11:06,458 பெண்களுக்கு உங்களைப் பிடிக்கவில்லை. 198 00:11:08,001 --> 00:11:10,587 உன் டக்சேடோ டேய்லரிடமிருந்து வந்துவிட்டது, 199 00:11:10,671 --> 00:11:12,756 அதோடு, ஊஊ, மிக கச்சிதமாக இருக்கு. 200 00:11:16,051 --> 00:11:18,011 என் ஆடைகளைப் பற்றி இன்றிரவு பேசலாமா? 201 00:11:19,930 --> 00:11:23,851 டக்சேடோவைவிட இன்னும் கொஞ்சம் கேசுவலாக இருக்கும் ஆடைகளை நான் விரும்புகிறேன். 202 00:11:23,934 --> 00:11:25,227 அதாவது, இன்னும் என்னை பிரதிபலிப்பதாக. 203 00:11:27,271 --> 00:11:28,856 மேலே வா. 204 00:11:28,939 --> 00:11:31,024 டையமோடு என்ன நடந்ததுன்னு கேட்க நான் ஆவலாக இருக்கேன். 205 00:11:40,450 --> 00:11:41,910 இன்னும் பக்கமாவா, டூட். 206 00:11:45,539 --> 00:11:47,165 -நீ நல்லாயிருக்கியா? -ஆமாம். 207 00:11:50,586 --> 00:11:53,338 -சரி. சரி. ஆம். -ஆமாம். ஆமாம். 208 00:11:56,675 --> 00:11:58,802 ஓ, ச்சே இருக்கவே முடியாது! 209 00:11:58,886 --> 00:12:01,138 சரியா. இது தான் அந்த அளு? 210 00:12:01,221 --> 00:12:03,056 என்ன நடந்ததுன்னே எனக்குத் தெரியாது. 211 00:12:04,391 --> 00:12:07,186 அந்த கரண்ட் வந்து என்னை வெளியே கொண்டு போக ஆரம்பித்துவிட்டது. 212 00:12:07,269 --> 00:12:08,562 என்ன பணயம்? 213 00:12:08,645 --> 00:12:11,023 அவளிடமிருந்து தப்பிக்க அவன் ஒடிப்போய் தற்கொலை செய்து கொள்ள நினைத்தானோ. 214 00:12:12,274 --> 00:12:13,734 டூட்... 215 00:12:13,817 --> 00:12:15,110 பொறு, எனக்கு உன்னைத் தெரியும். 216 00:12:15,194 --> 00:12:17,029 தெரியும், டூட். எனக்குத் தெரியும். 217 00:12:17,112 --> 00:12:19,448 சரி, சிறப்பு. நாங்க இரண்டையும் இரண்டையும் சேர்த்துட்டோம். 218 00:12:19,531 --> 00:12:20,908 -இப்போது, டைலர்... -டைலர்? 219 00:12:20,991 --> 00:12:22,826 -நான் தான் அவன் டூட். -மற்றும் பன்னி. 220 00:12:23,994 --> 00:12:26,163 நீங்க என் வாழ்க்கையை காப்பாத்திட்டீங்க. 221 00:12:27,873 --> 00:12:29,333 எல்டன் சொன்னது போலவே. 222 00:12:29,917 --> 00:12:31,919 ஓ, ஆமாம், நான் அவவ்ளவு பெரிய விசிறியில்லை, ஆனால் அது பெரிய விஷயம் தான். 223 00:12:32,002 --> 00:12:33,921 உம்-ம்ம். நாங்க கிளம்புறோம். 224 00:12:34,838 --> 00:12:35,923 பொறு! பொறு! 225 00:12:36,507 --> 00:12:37,508 பொறுங்க. 226 00:12:39,134 --> 00:12:40,636 இது ஒரு குறியீடு. 227 00:12:40,719 --> 00:12:43,388 ஓ, இல்லை. இது அப்படியில்லை. 228 00:12:43,472 --> 00:12:46,183 நாம இந்த தருணத்துல ஒரே இடத்துல இருக்கணும்னு இருந்திருக்கு. 229 00:12:46,266 --> 00:12:47,351 அதைச் சொல்லாதே. 230 00:12:47,434 --> 00:12:49,186 இதெல்லாமே ஒரு காரணத்துக்காக தான் நடந்தது. 231 00:12:49,269 --> 00:12:50,729 ஹே! ஹே, ஹே. 232 00:12:51,313 --> 00:12:54,149 இது ஏதோ புராணக்கால துப்புகள் மாதிரி இல்லை? 233 00:12:54,233 --> 00:12:57,486 நீங்க எங்க வீட்டுக்கு வந்து கொஞ்சம் இளைப்பாறிவிட்டு தான் போகணும், என்ன? 234 00:12:59,279 --> 00:13:01,907 -சரி, நல்லது தானா. -என்ன நடக்குது? 235 00:13:01,990 --> 00:13:04,034 நான் மிகவும் சுவையா ஒரு மோல் உணவை சமைப்பேன். 236 00:13:04,910 --> 00:13:07,871 எனக்கு அந்த மோல் உணவு பிடிக்கும்னு அவனுக்கு எப்படித் தெரிந்தது? 237 00:13:10,040 --> 00:13:11,542 நீ அவனை கூப்பிட வேண்டாம். 238 00:13:11,625 --> 00:13:15,254 நீ மறுமலர்ச்சி மையத்துல இருப்பதாக நினைக்கிறான், அதனால தொடர்புல இருக்க அவசியம் இல்லை. 239 00:13:15,337 --> 00:13:17,714 உன் காயங்கள் ஆறுகின்றன. நீ வளர்கிறாய். 240 00:13:17,798 --> 00:13:22,094 அவன் நீ ஓடி போய்ட்டான்னு தெரிந்து உன்னை கண்டுபிடிச்சால் தான் உண்டு. 241 00:13:22,177 --> 00:13:25,639 அவனை கூப்பிடு. இந்த வின்னி விஷயம் முடியும் வரை நீ கொஞ்சம் இளைப்பாறி இரு. 242 00:13:31,311 --> 00:13:34,189 எளிதாக வச்சுக்கோ. எந்த வித சிக்கலிலும் மாட்டிக்காம பார்த்துக்கொள். 243 00:13:42,781 --> 00:13:44,157 நீங்கள் ரூபின் வீட்டினரை தொடர்பு கொண்டுள்ளீர்கள். 244 00:13:44,241 --> 00:13:47,244 இந்த ஒலிக்கு அப்புறம் உங்கள் தகவலை பதிவு செய்யுங்கள், நாங்கள் உங்களை அழைக்கிறோம். 245 00:13:47,327 --> 00:13:48,745 அன்பும் அமைதியும். 246 00:13:50,205 --> 00:13:52,833 ஹே, டேனி! ஹை மாயா. 247 00:13:52,916 --> 00:13:56,378 நான்தான். ஷீலா. அம்மா. 248 00:13:57,421 --> 00:13:59,673 நான் உங்களை அழைத்து விசாரிக்க தான் ஃபோன் செய்தேன் 249 00:13:59,756 --> 00:14:05,512 அதோடு, நான் நலமாக இருக்கேன்னு உங்களுக்குச் சொல்ல தான் செய்தேன். இங்க நல்லாயிருக்கு. 250 00:14:06,263 --> 00:14:08,223 நான் இப்போவே ரொம்ப ஆரோக்கியமா உணர்கிறேன் 251 00:14:08,307 --> 00:14:13,270 மற்றும் என்னைப் பத்தியும், முன் விரியும் பாதையைப் பத்தியும் தெரிந்து கொண்டேன். 252 00:14:13,353 --> 00:14:17,316 எனவே, என்னை இங்கு வர உற்சாகப் படுத்தியதுக்கு நன்றி. 253 00:14:17,399 --> 00:14:22,946 நான் அதை மதிக்கிறேன். நான் உங்கள் இருவரையும் நேசிக்கிறேன். 254 00:14:23,030 --> 00:14:25,991 அதோடு, நான் இப்போ மற்றவர்களிடம் ஃபோனை கொடுக்கணும், 255 00:14:26,074 --> 00:14:29,036 ஆனால், உங்களை விரைவில் பார்க்கலாம். சரியா, பை. 256 00:14:31,205 --> 00:14:34,166 ஓ! நீ ஃபோனை கண்டுகொண்டாய், பார்த்தேன். நல்லது. 257 00:14:34,249 --> 00:14:37,294 ஓ, நீங்க அதை பொருட்படுத்த மாட்டீங்கன்னு நினைக்கிறேன். குடும்பத்தோடு தொடர்பு கொண்டேன். 258 00:14:37,377 --> 00:14:39,421 ஓ, எனக்குப் புரியுது. நானும் இருவருக்குத் தந்தை. 259 00:14:41,256 --> 00:14:43,217 வாங்க. நான் என் குகையை காட்டுகிறேன். 260 00:14:48,764 --> 00:14:49,681 வின்சென்ட் கிரீன் 261 00:15:08,575 --> 00:15:10,536 அதை அசைக்க முடியுமா என்ன? 262 00:15:10,619 --> 00:15:12,621 சரி, அது முன்பை விட இப்போது பரவாயில்லை, 263 00:15:12,704 --> 00:15:14,915 ஆனால் இப்பவும் ரொம்ப கெட்டியாக தான் இருக்கு. 264 00:15:14,998 --> 00:15:17,459 சரி, நீங்க சுகமா உணர்ந்தால் தான் தன்னம்பிக்கையோட இருக்கமுடியும். 265 00:15:18,502 --> 00:15:20,087 நான் அதை திருடப் போறேன். 266 00:15:20,921 --> 00:15:23,382 -அவங்களிடம் போய் சொல்லுங்க. -இப்போ இன்னும் இளைப்பாறும் நேரம். 267 00:15:27,803 --> 00:15:29,847 அவங்களோட இளைப்பாறும் நேரத்துக்கு வேறு எங்காவது போறாங்களா, என்ன? 268 00:15:29,930 --> 00:15:31,598 ஓ, அவங்க மேலே மாஸ்டர் பெட்ரூமுல படுத்துக்குவாங்க. 269 00:15:32,933 --> 00:15:34,977 என் உடலின் வெப்பத்தைப் பொறுத்து. 270 00:15:35,060 --> 00:15:37,104 அந்த ஒரு விஷயத்தில் எங்களுக்குள் கருத்து வேறுபாடு உண்டு. 271 00:15:37,187 --> 00:15:39,606 ஆனால், இங்கே, இந்த கான்கிரீட் இருப்பதால ரொம்ப நல்லா, குளிர்ச்சியா இருக்கு. 272 00:15:39,690 --> 00:15:41,650 அதோட என்னுடைய டிரெயின் செட்டும் இருக்கே. 273 00:15:44,611 --> 00:15:49,449 என் வாழ்க்கை முழுவது அதை நான் வச்சிருக்கேன், அதன் ஒலி எனக்கு ஆறுதலா இருக்கு. 274 00:15:51,535 --> 00:15:53,871 இது உங்க முடிவா? இந்த கெராஜிலே இருப்பது? 275 00:15:54,454 --> 00:15:56,707 அட, ஆமாம், கண்டிப்பாக. இது என் வீடு. 276 00:15:57,666 --> 00:16:01,670 எனக்கு இது பிடிச்சிருக்கு. இந்த ஒப்பந்தம் எங்க இருவருக்குமே சரியா வருது. 277 00:16:01,753 --> 00:16:04,715 உங்களுக்கு உண்மையிலேயே பிடிச்சிருக்கா? அல்லது வெறுமன பழக்கமாகிடுச்சா? 278 00:16:05,465 --> 00:16:07,885 நாம எல்லோருமே நம்ம சூழலுக்கு ஏத்தாப்புல மாத்திக்கிறோம், இல்லையா? 279 00:16:09,428 --> 00:16:12,848 நீங்களும் உங்க கணவரையும் போல. நீங்க இதற்கு முன் நல்லபடியா பேசியிருக்கீங்களா? 280 00:16:12,931 --> 00:16:14,016 ஜாக்கிரதை. 281 00:16:14,099 --> 00:16:16,935 நீ அவனுடைய ரகசியங்களை கற்க வந்திருக்க. உன்னுடையதை சொல்வதற்காக இல்லை. 282 00:16:17,436 --> 00:16:21,023 நான் ஒரு தகவல் அனுப்பினேன். அவர் கவலைப்படுவார். 283 00:16:21,732 --> 00:16:23,358 அப்போ நீங்க விசாரிச்சது நல்லது தான். 284 00:16:30,782 --> 00:16:32,993 படப்பிடிப்புக்கு வச்சிருக்கும் ஆடையைப் பார்க்க விரும்புகிறீர்களா? 285 00:16:37,623 --> 00:16:40,501 மன்னிக்கணும், நான் ஒரு மாதிரி, அதிகமா அந்த உணவைப் பத்தி வாக்கு கொடுத்துட்டேன். 286 00:16:40,584 --> 00:16:43,504 நான் குவாக்காமோலை சொன்னேன்னு நினைக்கிறேன். எனக்கு மோலை எப்படிச் செய்வதுன்னு தெரியாது. 287 00:16:43,587 --> 00:16:44,880 எல்லாம் பரவாயில்லை, நண்பா. 288 00:16:44,963 --> 00:16:48,175 எனவே, ராணி ஷீலா ஏதோ ஒரு ஸ்பாவிற்குப் போய் இருக்காங்களா, இந்த வாரயிறுதியிலே? 289 00:16:49,593 --> 00:16:52,137 அவங்க அவர்களுக்கு பணம் கொடுக்கறாங்களா, இல்லை இவர் அவங்களுக்கா? 290 00:16:52,221 --> 00:16:54,389 இல்லை. நாங்க தான் பணம் தருகிறோம். 291 00:16:55,057 --> 00:16:57,768 ஆனால், அவங்களுக்கு, ஒரு சின்ன இடைவெளி தேவைப்பட்டது. 292 00:16:59,102 --> 00:17:00,938 அதுக்கு கோப்பை வேண்டாம்னு உறுதியா தெரியுமா? 293 00:17:01,021 --> 00:17:02,981 நான் தான் பாட்டிலை நன்றாக சமாளிப்பேன்னு சொன்னேன் இல்லையா. 294 00:17:03,065 --> 00:17:04,525 கண்ணே, தயவுசெய்து? 295 00:17:07,361 --> 00:17:09,780 எனவே, மெக்சிகோவா? 296 00:17:10,906 --> 00:17:12,366 அந்த யோசனை உங்களுக்கு எப்படி வந்தது? 297 00:17:15,243 --> 00:17:18,038 டைலருக்கு எப்போதுமே வீட்டில் எப்படி டார்டில்லாக்களை செய்ய விருப்படுவார். 298 00:17:18,747 --> 00:17:20,499 அது உண்மைதான். 299 00:17:21,750 --> 00:17:24,294 எனவே, அது, அது என்ன, ஒரு வகையான சிறிய பிசினஸா? 300 00:17:25,753 --> 00:17:27,130 எனக்குத் தெரியாது. உங்களுக்குத் தெரியும், 301 00:17:27,214 --> 00:17:29,800 ஆனால் அவங்களுக்கு, உங்க திறமையினாலும், சந்தையில் உங்களுக்கு இருக்கும் ஆதிக்கத்தினாலும் 302 00:17:29,883 --> 00:17:32,636 உங்களால அவங்களுக்கு நல்ல லாபம் போலிருக்கு. 303 00:17:33,887 --> 00:17:36,557 அந்த மெக்சிக்கோ திட்டத்தைப் பத்தி நாங்க இன்னும் 304 00:17:36,640 --> 00:17:39,351 முழுவதும் யோசிக்கலைன்னு ஒத்துக்கணும். 305 00:17:39,977 --> 00:17:41,520 எதுக்காக நீங்க உண்மையில் போறீங்க? 306 00:17:42,104 --> 00:17:44,022 உங்க மனைவி வெளியூர் போய் இருப்பதற்கு உண்மையான காரணம் என்ன? 307 00:17:44,106 --> 00:17:45,399 சரி. 308 00:17:46,483 --> 00:17:47,568 எனக்குப் புரியுது. 309 00:17:48,944 --> 00:17:51,029 உங்க வாழ்க்கையை நீங்க எப்படி வாழணும்னு சொல்வதற்கு நான் யாரு? 310 00:17:51,113 --> 00:17:53,574 -யாரும் இல்லை. -யாரும் யாருக்கும் யாரும் இல்லை. 311 00:17:53,657 --> 00:17:55,784 எல்லோருமே யாரோ தொடர்பு இருக்குறவங்கதான். 312 00:17:55,868 --> 00:17:59,872 ஆமாம். அது தான் அப்பட்டமான உண்மை. 313 00:18:00,747 --> 00:18:02,499 பொறுங்க, அதுவா உண்மை? 314 00:18:02,583 --> 00:18:05,544 இல்லை, இப்போ யோசிச்சுப் பாரத்தால் அது உண்மையே இல்லைன்னு தோணுது 315 00:18:05,627 --> 00:18:08,672 ஏன்னா நம்ம மத்தியில நிறைய பெயர்தெரியாதவர்கள் உலா வரறாங்க, 316 00:18:08,755 --> 00:18:12,259 அதுல பல பெயர்தெரியாதவங்க எல்லாம் தங்களை யாரோ முக்கியமானவங்கன்னு நினைக்குறாங்க. 317 00:18:12,342 --> 00:18:15,095 நரம்பு தளர்ச்சின்னா இப்படிதான் இருக்குமா? 318 00:18:15,179 --> 00:18:17,973 நான் இதுக்கு முன் யாரிடமும் சொல்லாத ஒன்றை உங்ககிட்ட சொல்லட்டுமா? 319 00:18:20,017 --> 00:18:23,645 மாரிக்கா உனக்கு கொஞ்சம் திமிரு பிடிச்சது போல தோணலாம். 320 00:18:23,729 --> 00:18:26,982 நிறைய பேருக்குப் புரியாது, நான் அவர்களைக் குறை கூறவில்லை. 321 00:18:28,150 --> 00:18:29,776 எனக்கு அவங்கள முழுசா புரிந்து கொள்ள முடியுது. 322 00:18:31,069 --> 00:18:34,990 எனக்கும் மரிக்காவைப் போல உள்ளவரோடு பழகிய அனுபவம் இருக்கு. 323 00:18:35,073 --> 00:18:37,159 அதாவது, என்மேல முழு பிடிப்பும் இருந்தவங்க. 324 00:18:37,242 --> 00:18:39,536 -யாரு, உங்க கணவரா? -இல்ல. 325 00:18:40,120 --> 00:18:44,958 அது வேறு ஒருத்தர். நான் ரொம்ப பழகிப் போனவர். 326 00:18:46,543 --> 00:18:49,296 முன்பெல்லாம் நான் அவர் மிக முக்கியம்னு நினைத்திருந்தேன், ஆனால், இப்போது... 327 00:18:49,379 --> 00:18:52,132 நீ என்ன செய்யற? இது உனக்கு உதவவும் இல்ல, அவசியமும் இல்ல. 328 00:18:52,925 --> 00:18:54,968 ...அந்த அவள், தான் என் முன்னேற்றத்துக்கு தடை. 329 00:18:55,052 --> 00:18:57,638 இதை பகிர்ந்து கொள்வது உனக்கு எப்படி உதவப் போகிறது? வாயை மூடு. 330 00:18:57,721 --> 00:19:01,600 நான் எப்போதும் அவள் தேவைன்னு உணரணும். அது தான் அவள் தேவை. அவள் ஒரு ஒட்டுண்ணி. 331 00:19:02,851 --> 00:19:06,146 எனக்கு உதவுவதாகக் கூறுவாள், ஆனால் உண்மையில், என்னை கொல்கிறாள். 332 00:19:06,230 --> 00:19:09,107 பொறுங்க, உங்க தாயா? உங்க மானேஜரா? யார் இவர்? 333 00:19:09,191 --> 00:19:11,401 நீ இப்போ என்ன சொல்லப் போற? என் தலைக்குள் இருக்கும் குரலுன்னா? 334 00:19:11,485 --> 00:19:14,196 பைத்தியம்னு நினைப்பான், அதோடு அவனும் டிரெயின் செட்டுடன் இருக்கும் ஒரு வளர்ந்த ஆள். 335 00:19:14,279 --> 00:19:17,491 அவள் ஒரு பழைய தோழி, என்னோடு நெடு நாட்கள் இருந்தவள். 336 00:19:18,492 --> 00:19:21,203 பிடிச்சிருக்கா? ஏன்னா, எனக்கு பிடிச்சிருக்கு. 337 00:19:21,286 --> 00:19:23,330 -அற்புதமா இருக்கு. -ஆமாம், இல்லையா? 338 00:19:25,249 --> 00:19:27,626 -உனக்கு உற்சாக மருந்து வேண்டுமா? -ஆமாம். 339 00:19:30,087 --> 00:19:32,631 பிஸ்ட்ரோ கார்டன்ஸில் இருக்கும் ஒரு பார்க்கிங் சிப்பந்தியிடமிருந்து எனக்கு அவை கிடைக்கிறது, 340 00:19:32,714 --> 00:19:34,466 மேலும் மரிக்காவிற்கு அது பத்தி தெரியாது. 341 00:19:35,050 --> 00:19:37,135 நாம சில சின்ன ரகசியங்களை வச்சுக்கதான் வேண்டும், இல்லையா? 342 00:19:41,181 --> 00:19:42,933 ஸ்டூடியோவிலே இருப்பது எப்போதுமே சுகம்தான், 343 00:19:43,016 --> 00:19:47,145 ஆனால் இங்கே தான் உண்மையான அற்புதமான கற்பனை பிறக்கிறது. 344 00:19:49,356 --> 00:19:51,567 ஆனால், நாம முதல்ல விளையாடணும்னு நான் விரும்புற விளையாட்டு ஒண்ணு இருக்கு. 345 00:19:54,027 --> 00:19:58,073 இப்போ கூட அதுல ஸ்கோர் செய்ய வாய்ப்பு இருக்கு, அது மின்னல் சுற்று. 346 00:19:58,991 --> 00:20:00,242 ரேபிட் ஃபையர். 347 00:20:00,951 --> 00:20:03,078 யோசிக்காதே. பதில் மட்டும் சொல்லுங்க. 348 00:20:04,121 --> 00:20:06,874 தாண்டக்கூடாது. பொய் சொல்லக் கூடாது. அப்படியெல்லாம் செய்தால், நீங்க அவுட். 349 00:20:06,957 --> 00:20:09,084 -நீங்க ரெடியா? -ஆம். 350 00:20:09,168 --> 00:20:11,670 ஆரம்பம். ஃபோனுல யார்கிட்ட போய் சொன்னீங்க? 351 00:20:11,753 --> 00:20:14,173 -நான் சொன்னேனே. பொய் சொல்லலை. -யாரிடம்? 352 00:20:15,215 --> 00:20:16,842 -என் கணவர். -மற்றும்? 353 00:20:16,925 --> 00:20:17,926 என் குழந்தை. 354 00:20:18,010 --> 00:20:19,803 நீங்க எங்க இருப்பதாக, உங்க கணவரும் குழந்தையும் நினைக்குறாங்க? 355 00:20:19,887 --> 00:20:21,597 -ஸ்பாவில். -மோசம், ஷீலா. 356 00:20:22,347 --> 00:20:24,141 -ஒரு மனநிலை சுகாதார நிலையத்துல. -எதுக்கு? 357 00:20:24,224 --> 00:20:25,475 புலீமியாவிற்காக. 358 00:20:25,559 --> 00:20:26,852 வாந்தி எடுக்குற ஒன்றா அது? 359 00:20:27,728 --> 00:20:29,062 -வாயால மட்டும் தான் பதில்கள் வரணும். -ஆம். 360 00:20:29,146 --> 00:20:30,856 -அது உதவுதா? -ஆம், உதவுவதை நிறுத்தும் வரை. 361 00:20:30,939 --> 00:20:32,774 உன் மரிக்கா மாதிரி, யார் அது? 362 00:20:32,858 --> 00:20:34,735 -அது நான். -ஏமாற்றுவது கூடாது. 363 00:20:34,818 --> 00:20:37,821 அது... அது நான் தான். ஆனால் நானில்லை. அது என் தலைக்குள் கேட்கும் ஒரு குரல். 364 00:20:37,905 --> 00:20:39,990 -குறுக்கு போலும். -ஆமாம், அப்படி தான். 365 00:20:40,073 --> 00:20:41,200 அவள் உன்னைக் கட்டுப்படுத்துகிறாளா? 366 00:20:41,283 --> 00:20:43,076 ஆம், அப்படி தான் நான் உணர்கிறேன். 367 00:20:43,160 --> 00:20:44,328 நீ அவளை வெறுக்கிறாயா? 368 00:20:44,411 --> 00:20:46,830 தீவிரமா, ஆனால் நான்தானே அவள். 369 00:20:48,874 --> 00:20:50,667 சிறுமியாக இருந்தபோது யார் உனக்கு தீங்கிழைத்தது? 370 00:20:51,877 --> 00:20:53,128 என் தந்தையின் நண்பர். 371 00:20:56,381 --> 00:20:57,925 நானும் தான்! 372 00:20:59,760 --> 00:21:01,512 டிங், டிங்! 373 00:21:01,595 --> 00:21:03,430 அவள் சாதித்துவிட்டாள்! 374 00:21:03,514 --> 00:21:05,349 ஜானி, அவள் எதை வென்றிருக்கிறாள் என்று சொல்லு! 375 00:21:05,432 --> 00:21:08,393 அவளுக்கு வின்னியுடன் நடனமாட ஒரு வாய்ப்பு. 376 00:21:08,477 --> 00:21:10,270 ஹா, ச்சே, ஹா! 377 00:21:10,354 --> 00:21:11,939 கிரீன்! 378 00:21:33,001 --> 00:21:35,254 ஆம்! 379 00:22:04,032 --> 00:22:06,577 -இப்போது உன் முறை. -ஓ, இல்லை. அது அப்படி இல்லை. 380 00:22:06,660 --> 00:22:08,829 மோசம், வின்னி. 381 00:22:11,415 --> 00:22:13,250 உனக்கும் மரிக்காவிற்கும் உள்ள ஏற்பாடு என்ன? 382 00:22:13,333 --> 00:22:15,502 நாங்க எங்க வீட்டையும் வாழ்க்கையையும் பகிர்ந்து கொள்கிறோம். அவ்வளவு தான். 383 00:22:16,545 --> 00:22:17,921 அவங்களுக்கு நீங்க ஓரின சேர்க்கை வகை மனிதர்ன்னு தெரியுமா? 384 00:22:18,005 --> 00:22:20,632 ஓ, அனைவருக்கும் நான் எவ்வளவு ஆனந்தமா இருக்கேன்னு தெரியுமே. 385 00:22:21,592 --> 00:22:22,926 நான் கேட்பது என்னன்னு உனக்குத் தெரியும். 386 00:22:23,010 --> 00:22:25,512 நாங்க ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொள்கிறோம், ஆதரவாக இருக்கிறோம். 387 00:22:25,596 --> 00:22:28,265 நான் வெறுக்கும் ஒரு மோர்மன் நபருடன் ஆறு மாதங்களாய் ஒரு உறவு இருந்தது. 388 00:22:28,348 --> 00:22:31,143 இப்போ முடிந்துபோச்சுன்னாலும், கஷ்டமா இருக்கு. 389 00:22:31,226 --> 00:22:33,312 எனக்கு நானே தீங்கிழைக்க விரும்புறேன். 390 00:22:33,395 --> 00:22:36,023 -சரி, அதை இப்போ விட்டுட்ட, இல்ல? -இல்லை. அவன் விட்டான். 391 00:22:36,106 --> 00:22:39,109 நானாக எதையும் நிறுத்தறதில்லை. அதுக்கு தான் அந்த குரல் இருக்கே. 392 00:22:39,193 --> 00:22:41,111 ஓ, அதுக்கு தான் அந்த குரலா? 393 00:22:43,280 --> 00:22:45,324 அது நீ அப்படிதான் நினைக்க விரும்புது. 394 00:22:47,034 --> 00:22:49,620 ஆனால் நீ மனது வைத்தால் எதை வேணும்னாலும் செய்யலாம். 395 00:22:50,495 --> 00:22:51,830 நீ உண்மையாகவே அதை நம்புகிறாயா? 396 00:22:51,914 --> 00:22:53,040 அப்படித்தான் நான் மக்களை நம்ப வைக்கிறேன். 397 00:22:54,666 --> 00:22:56,793 நான் அதை நம்புவதைவிட, அது இன்னும் நல்லதில்லையா. 398 00:22:59,087 --> 00:23:04,843 எனவே, எனது 16வது வயதிலிருந்து, யாரும் எதுவும் என்னை கேட்கவோ, அல்லது சொல்லவோ 399 00:23:04,927 --> 00:23:09,723 இல்லாமல், நானே என் வாழ்க்கை கதையை எழுதி வருகிறேன். 400 00:23:09,806 --> 00:23:11,099 என் சொந்த வார்த்தைகளில். 401 00:23:12,059 --> 00:23:14,353 நான் இப்பவும் தொடர்ந்து எழுதறேன், 402 00:23:14,436 --> 00:23:18,649 இப்போ வாழ்க்கையில் பெரிசா எதுவும் நடக்காத போதிலும் எழுதுறேன். 403 00:23:18,732 --> 00:23:20,901 அதிலிருந்து நீங்க இப்போ எங்களுக்குப் படிக்கப்போறீங்களா? 404 00:23:20,984 --> 00:23:23,946 மிகச் சரியானது. ஒரு பக்கத்தை எடுங்க. 405 00:23:24,029 --> 00:23:26,490 சரி, நான் எடுக்கறேன். சரி. 406 00:23:36,667 --> 00:23:38,001 சரி. 407 00:23:38,085 --> 00:23:39,419 ஆம். 408 00:23:43,882 --> 00:23:45,843 யாருமே இதற்கு முன் இதைக் கேட்டதில்லை. 409 00:23:48,387 --> 00:23:51,348 "அதுக்கு அப்புறம், அதோ நான் அங்கே தனியாக, இருந்தேன், 410 00:23:51,431 --> 00:23:53,934 என் கையில் ஒரு டார்ச்லைட்டும், என் நினைவுகளும் மட்டும் எனக்கு துணையாக, 411 00:23:54,017 --> 00:23:57,855 மற்றும் அதையெல்லாம் கீழே தள்ளிவிட ஒ்ரு பாட்டில் ஹெம்மிங்கவேயும்." 412 00:23:59,106 --> 00:24:01,567 உண்மையில, இது நான் நினைத்ததைவிட இன்னும் வலிக்குது. 413 00:24:01,650 --> 00:24:03,068 மேலே தொடருங்கள். 414 00:24:06,363 --> 00:24:10,242 "ஒரு நல்ல புத்தகம், சுகமான போர்வையைப் போல என்பதை நான் சீக்கிரமே தெரிந்துகொண்டேன்"... 415 00:24:10,325 --> 00:24:11,702 கடவுளே. 416 00:24:12,744 --> 00:24:16,582 "ஆனால் உண்மை நிலை என்பது கொடுமையான இடம், மற்றும் அரசியல் என்பது கொடுமையான பெண்"... 417 00:24:16,665 --> 00:24:18,208 அது தேவையே இல்லாதது. 418 00:24:19,001 --> 00:24:23,630 "நம் மாயமான பாதுகாப்பு வலையை கிழித்து எறிந்து விட்டு, குரூரமான பிசாசாக இருக்கும் 419 00:24:26,258 --> 00:24:27,551 வாழ்க்கையை நேருக்கு நேர் எதிர்கொள்ள வைக்கிறது. 420 00:24:29,136 --> 00:24:30,512 இனி தொடர முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. 421 00:24:30,596 --> 00:24:32,014 உன்னால முடியும், நீ அதை செய்யப் போற. 422 00:24:41,899 --> 00:24:42,941 அது அவள் தான். 423 00:24:43,025 --> 00:24:45,611 கவலை வேண்டாம். ஒரு முகப் படுத்து. உன்னால முடியும். 424 00:24:48,864 --> 00:24:53,035 சரி. நீங்க ஜாலியா இருந்தாச்சு. இப்போது சரியான ஆடைகளை அணிந்து கொள். 425 00:24:53,118 --> 00:24:54,453 இவை தான் சரியான ஆடைகள். 426 00:24:54,536 --> 00:24:56,705 -நீ வாயை மூடு. -அது ரொம்ப அன்பாக இல்லையே. 427 00:24:56,788 --> 00:25:00,167 நீ இந்த மாதிரியெல்லாம் எங்கிட்ட பேசாதே. எனக்கு உன்னைக் கண்டு பயமில்லை. 428 00:25:01,293 --> 00:25:02,836 என்னிடம் பயப்படும் அளவிற்கு உனக்கு சாமர்த்தியம் கிடையாது. 429 00:25:04,087 --> 00:25:08,050 -அவள் உன் அம்மா இல்லை. -அவள் உன் தோழியும் கிடையாது. 430 00:25:08,133 --> 00:25:09,843 உனக்கு அவளைப் பத்தி எதுவுமே தெரியாது. 431 00:25:09,927 --> 00:25:13,263 அவள் இன்னொரு நடிகை. இன்னொரு ஒட்டுண்ணி. 432 00:25:13,347 --> 00:25:14,723 அவள் நான் சொல்வதைக் கேட்டாள்! 433 00:25:16,266 --> 00:25:19,478 நாள் முழுவதும். என் யோசனைகளை. 434 00:25:20,270 --> 00:25:21,855 நீ எப்போது கடைசியாக நான் சொல்வதை கேட்டிருக்க 435 00:25:21,939 --> 00:25:24,024 நீ சொல்வதை கேட்கச் சொல்லி என்னை கொடுமை செய்வது தானே உன் வழக்கம்? 436 00:25:25,192 --> 00:25:26,693 சரி, 437 00:25:27,653 --> 00:25:29,404 அப்படின்னா, அவ்வளவுதான்னு நினைக்கிறேன். 438 00:25:30,739 --> 00:25:32,032 உன் படப்பிடிப்பை அனுபவி. 439 00:25:41,708 --> 00:25:42,793 ஓ, சரி. 440 00:25:42,876 --> 00:25:47,673 "இந்த பூமியில் என் 24வது வருடம் தான் என்னுடைய தைரியத்தை அதிகம் வெளிப்படுத்திய ஆண்டு. 441 00:25:48,382 --> 00:25:52,970 ஆனால் அன்று இரவு நான் இன்னும் ஒரு மடக்கு எர்னெஸ்டோ அருந்திவிட்டு, புறப்பட்டுவிட்டேன். 442 00:25:53,595 --> 00:25:56,223 தேடலில், வளர்ச்சிக்கான பாதையில், 443 00:25:56,306 --> 00:26:00,853 எதற்கெல்லாம் போரடணுமோ, போராடி, அதில் வெற்றிப் பெற." 444 00:26:03,856 --> 00:26:05,774 சுத்த மோசமா இருக்கு. 445 00:26:06,942 --> 00:26:08,360 நீ மோசமா இருந்த. 446 00:26:08,443 --> 00:26:13,407 ஆமாம், இருந்தேன். இப்பவும் அப்படி தான் இருக்கேன். 447 00:26:15,200 --> 00:26:17,286 என் அனுபவமில்லாத சூளுரைகளையும் தாண்டி, 448 00:26:17,369 --> 00:26:22,082 நான் போராட்டங்களை ஆரம்பிக்கவும் இல்லை வெற்றி பெறவும் இல்லை. 449 00:26:26,044 --> 00:26:28,255 அவள் எனக்கு துரோகம் செய்ததில் ஏதாவது ஆச்சரியம் இருக்கா என்ன? 450 00:26:31,508 --> 00:26:36,180 எனவே, நீ உனக்கு அது பரவாயில்லையா? 451 00:26:36,263 --> 00:26:41,143 சரி, எனக்கு "பரவாயில்லை" அப்படின்னு சொல்ல மாட்டேன், ஆனால் எனக்குப் புரிகிறது. 452 00:26:41,226 --> 00:26:43,270 -எங்களுக்கும் புரிகிறது. -பெரிய மனசுப்பா உனக்கு, 453 00:26:44,021 --> 00:26:47,232 அதுவும், அவள் உறவு வச்சுகிட்ட ஆள் உன்னுடைய எதிரின்னு தெரிஞ்சும் பாரு. 454 00:26:48,025 --> 00:26:49,693 பொறுங்க, என்ன சொன்னீங்க? 455 00:26:56,533 --> 00:26:59,828 இடங்கள், அனைவரும். அவங்க அவங்க இடத்தில் இருங்க, இப்போது ஆரம்பம். 456 00:27:06,460 --> 00:27:10,339 அவளை போய் கூட்டிட்டு வா, ஷீலா, தயவுசெய்து. என்னை மன்னிக்கும் படி அவகிட்ட சொல்லு. 457 00:27:12,216 --> 00:27:15,677 வின்னி, வின்னி, நீங்க நல்லா தான் இருக்கீங்க. 458 00:27:15,761 --> 00:27:17,804 இதை நீங்க பல தடவை இதற்கு முன்னாடி செய்திருக்கீங்க. 459 00:27:17,888 --> 00:27:20,849 சும்மா அங்க போய் நீங்களாகவே இருங்க. இயல்பா இருந்தா போதும். 460 00:27:20,933 --> 00:27:24,645 சும்மா வாயை மூடு! அவளைக் கண்டுபிடி, தயவுசெய்து! 461 00:27:26,438 --> 00:27:28,607 எனக்கு அவள் தேவை. 462 00:27:32,069 --> 00:27:34,363 தயவுசெய்து, தயவுசெய்து, ஷீலா. 463 00:27:49,670 --> 00:27:51,672 வடிகட்டிய முட்டாளே. 464 00:27:51,755 --> 00:27:55,467 அப்போதே சொன்னேன், இதுல ஈடுபடாதேன்னு, நீ கேட்கலை. 465 00:27:55,968 --> 00:27:57,386 நீ எப்போதுமே கேட்பதில்லை. 466 00:27:58,136 --> 00:27:59,429 நீ அவனை திருத்த முடியும்னு நினைச்ச, 467 00:27:59,513 --> 00:28:01,723 அதுக்கு அப்புறம் உன் பிரச்சினைகள் எல்லாம் போய்விடும்னு நினைச்சயா? 468 00:28:01,807 --> 00:28:03,058 நான் மறைஞ்சு போயிடுவேன்னு நினைச்சயா? 469 00:28:06,979 --> 00:28:08,397 ஆனால் நான் எங்கேயும் போக மாட்டேன். 470 00:28:08,480 --> 00:28:11,900 நீ என்னை தீயிட்டு கொளுத்த முடியாது. என் வாயை அடைக்க முடியாது. நான் தேவை. 471 00:28:11,984 --> 00:28:15,112 வாயை மூடு! நாசமாப் போனவ, வாயை மூடு. தயவுசெய்து. 472 00:28:15,195 --> 00:28:17,698 -நான் இல்லாம் அழுகி போயிடுவ. -நிறுத்துன்னு சொன்னேன்! 473 00:28:17,781 --> 00:28:19,908 நீ குண்டான, சோம்பேறி, கழுதையாகப் போற 474 00:28:19,992 --> 00:28:21,994 உனக்குன்னு காட்டிக்க எதுவுமே கிடையாது. நீ வாழ்ந்து எந்த பலனும் கிடையாது. 475 00:28:22,077 --> 00:28:26,623 -நீ இந்த பூமியில் வாழ காரணமேயில்ல. -போயிடு! என்னை விட்டு போ! போயிடு! 476 00:28:26,707 --> 00:28:29,543 -நீங்க நலமா இருக்கீங்களா, மேடம்? -இல்லை! இல்லை! 477 00:28:30,252 --> 00:28:32,045 நான் நலமாக இல்லை! நான் நலமா இல்ல. 478 00:28:32,129 --> 00:28:34,965 நான்... இது... எதுவும் வேலைக்கு ஆகலை. 479 00:28:36,175 --> 00:28:39,595 எனக்கு உதவி தேவை. 480 00:28:39,678 --> 00:28:40,721 பாஸோ நியூவோ 481 00:28:45,309 --> 00:28:46,310 நான் உங்களுக்கு உதவலாமா? 482 00:28:46,393 --> 00:28:49,521 ஆம், நான், டேனி ரூபின், என் மனைவி ஷீலாவை பார்க்க வந்தேன். 483 00:28:49,605 --> 00:28:53,066 -ரூபினா? -ஆம். ஷீலா ரூபின். 484 00:28:53,150 --> 00:28:56,236 என்னை மன்னித்து விடுங்கள். இங்கே அது போல நோயாளி யாரும் இருப்பதாக தெரியவில்லை. 485 00:30:32,416 --> 00:30:34,418 தமிழாக்கம் அகிலா குமார்