1 00:00:09,468 --> 00:00:14,932 என் நினைவில், வெகு காலத்துக்குப் பின், முன்பு எப்போதையும்விட, 2 00:00:15,015 --> 00:00:16,808 இப்போது நான் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கேன். 3 00:00:16,892 --> 00:00:19,436 உண்மையில் முன்னாடி இவ்வளவு ஆரோக்கியத்துடன் இருந்தேனான்னு சந்தேகம் தான். 4 00:00:20,646 --> 00:00:24,149 இங்கு கடந்த இரண்டு வாரங்களாக நான் கற்றதையெல்லாம் வெளியில் சென்று 5 00:00:24,233 --> 00:00:27,444 நடைமுறையில் பின்பற்ற ஆவலாக இருக்கேன். 6 00:00:28,362 --> 00:00:30,072 அதாவது, இந்த சாப்பிடும் போது தியானம். 7 00:00:30,155 --> 00:00:33,784 நிச்சயமா என்னால இதையெல்லாம் தினமும் காலை, என் குடும்பத்தினருடன், 8 00:00:33,867 --> 00:00:35,911 சமையலறையில் கடைப்பிடிக்க முடியும். 9 00:00:35,994 --> 00:00:40,123 "நேர்மையான எதிர்பார்ப்புகள்" உதவும். உண்மையிலேயே அது அனுகூலமாக இருக்கும். 10 00:00:40,207 --> 00:00:43,544 அது மட்டுமில்லாமல், நீங்கள் காட்டியிருக்கும் 11 00:00:43,627 --> 00:00:48,340 அன்பும், பரிவும், ஒற்றுமையும், இந்த கலைநயமும், தினம் பதிவு செய்வது, எல்லாமே, உதவும். 12 00:00:48,423 --> 00:00:51,552 மிக்க நன்றி. நான் தனிமரம் இல்லை என்பதை உணர்கிறேன். 13 00:00:55,055 --> 00:00:56,723 சரிதான். 14 00:00:56,807 --> 00:00:58,600 நான் ஒரு புதிய நபரைப் போல உணர்கிறேன். 15 00:01:00,102 --> 00:01:03,313 புதிய நபர். ஆரோக்கியமான நான். 16 00:01:04,815 --> 00:01:10,612 ஆமாம், எனக்கு இப்போது முற்றிலும் ஒரு புதிய கண்ணோட்டம் வந்திருக்கு என கூறலாம். 17 00:01:11,238 --> 00:01:12,281 ஆமாம், ஆமாம். 18 00:01:14,157 --> 00:01:15,158 எனக்குத் தேவலை. 19 00:01:17,619 --> 00:01:21,707 அதற்காக, நான் உண்மையாகவே உங்க எல்லோருக்கும் கடன்பட்டிருக்கேன். 20 00:01:22,291 --> 00:01:23,834 குறிப்பாக உங்களுக்கு, லூயான், 21 00:01:23,917 --> 00:01:28,046 நான் வெளியே சென்று எதையும் எதிர்கொள்ளும்படி ஒரு சூழலை 22 00:01:28,130 --> 00:01:30,340 நீங்கள் உருவாக்கித் தந்ததற்கு. 23 00:01:33,177 --> 00:01:34,386 அதனால் தான் போகத் தயாராக இருக்கேன். 24 00:01:37,639 --> 00:01:39,391 நீ என்ன கண்ராவியைப் பத்தி பேசுற? 25 00:01:40,809 --> 00:01:42,686 -என்ன சொன்னீங்க? -உனக்குத் தேவலையா, ஹாம்? 26 00:01:44,438 --> 00:01:45,439 உனக்கு பிரமை. 27 00:01:46,398 --> 00:01:48,775 பாருங்க, லூயான். இங்கே நானா கிறுக்கு? அல்லது... 28 00:01:48,859 --> 00:01:50,736 "கிறுக்கு" என்கிற வார்த்தைக்கு என்னுடைய விளக்கம் என்ன தெரியுமா. 29 00:01:50,819 --> 00:01:53,030 கிறுக்குன்னா, "கருத்து வேறுபாடு இருக்கும் ஒரு பெண்" என்று தான் அதற்கு அர்த்தம். 30 00:01:53,113 --> 00:01:55,365 -சரி, நன்றி. எனவே இந்த... -நீங்களும் விஷயத்துக்கு வரலை. 31 00:01:55,449 --> 00:02:00,495 நான் தற்சமயம் ரொம்ப தாக்கப்படுவதாக உணர்கிறேன். 32 00:02:00,579 --> 00:02:04,499 சரி, எனக்கு என்ன தோணுதுன்னா, நீ பச்சை பொய்யை எங்க முன்னாடி திரட்டி தரையில் போட்டு 33 00:02:04,583 --> 00:02:06,210 அதை ஹாட் ஃபட்ஜ் சன்டேன்னு சொல்வது போலிருக்கு. 34 00:02:06,877 --> 00:02:08,503 -ஹேரியட். -என்ன? நான் இங்க உட்கார்ந்துகிட்டு 35 00:02:08,586 --> 00:02:11,089 மிஸ். அமெரிக்காவோட நன்றி பேச்சை கேட்டுக்கிட்டு இருக்கணுமா? 36 00:02:11,173 --> 00:02:13,550 ஒருத்தரோட மோதுறது உனக்கு ரொம்ப சுலபம்னு தெரியும், ஹேரியட். 37 00:02:13,634 --> 00:02:15,886 ஆனால் அது உன்னை எங்கு கொண்டு விடும் என்றும் எங்களுக்குத் தெரியும், சரியா? 38 00:02:15,969 --> 00:02:17,596 அதனால, கொஞ்சம் அமைதியா இரு, கண்ணு. 39 00:02:19,556 --> 00:02:23,560 அதோடு நம்ம காலை நேரப் பகுதி முடிவுக்கு வருதுன்னு நினைக்கிறேன். 40 00:02:23,644 --> 00:02:25,437 இங்கே வந்ததுக்கு, அனவருக்கும் நன்றி. 41 00:02:25,521 --> 00:02:27,356 இனி உங்க சொந்த நேரத்தை நீங்க அனுபவிக்கலாம், 42 00:02:27,439 --> 00:02:29,775 நான் உங்க அனைவரையும் 12:30 மணிக்கு சாப்பாட்டு அறையில் சந்திக்கிறேன். 43 00:02:29,858 --> 00:02:32,694 ஷீலா, ஒரு சின்ன அரட்டைக்கு என்னுடன் பங்களாவிற்கு வர முடியுமா? 44 00:02:33,946 --> 00:02:35,030 கண்டிப்பா. 45 00:02:35,113 --> 00:02:37,616 நீங்க இதை மோசத்திலிருந்து படுமோசமாக்கினீர்கள், இல்லையா? 46 00:02:47,584 --> 00:02:48,877 இதோ ஆரம்பிக்கிறோம். 47 00:02:48,961 --> 00:02:53,215 வெளிப்படையாக, நீங்க மறந்திருந்தாலும் பரவாயில்லை, அது புதுசு இல்லை, 48 00:02:53,298 --> 00:02:56,301 இந்த அனுபவம் கட்டாயப்படுத்தியது இல்லை. உங்களுக்கு அது நினைவிருக்கு, இல்லையா? 49 00:02:57,135 --> 00:02:58,512 இருக்கு. ஆம், நினைவிருக்கு. 50 00:02:58,595 --> 00:03:01,348 நல்லது, நல்லது. ஏன்னா நான் அதை உங்களுக்கு ஞாபகப்படுத்தலைன்னா, 51 00:03:01,431 --> 00:03:02,641 என் வேலையை சரியாச் செய்யலைன்னு அர்த்தம். 52 00:03:02,724 --> 00:03:04,476 நான் இந்த சிகிச்சை மையத்தை ஆரம்பித்ததே... 53 00:03:04,560 --> 00:03:06,687 இதோ ஆரம்பிச்சுட்டாங்க, மறுபடியும் அந்த பழங்கதையெல்லாம். 54 00:03:06,770 --> 00:03:09,690 அவங்க சாப்பிட மாட்டாங்க. அவங்க பெற்றோர் அவங்கள பைத்தியக்கார மையத்துக்கு அனுப்புனாங்க. 55 00:03:09,773 --> 00:03:11,441 அங்கே அவங்கள கட்டிப் போட்டாங்க. கட்டாயப் படுத்தி உணவை திணிச்சாங்க. 56 00:03:11,525 --> 00:03:14,403 இனி யாருக்கும் அது நடக்கக்கூடாதுன்னு இவங்க சபதம் செய்தாங்க. இதெல்லாம் தான் தெரியுமே. 57 00:03:14,486 --> 00:03:17,739 ...என் முகமெல்லாம் நீலமாகும் வரை. ஆனால், இறுதியில், நீங்க தான் முடிவு செய்யணும். 58 00:03:20,033 --> 00:03:21,076 எனவே, என்ன நினைக்கிறீங்க? 59 00:03:22,119 --> 00:03:23,120 ஷீலா? 60 00:03:27,207 --> 00:03:29,918 ஆமாம். ஒரு வினாடி நான் வேறு எதையோ பத்தி நினைச்சிட்டு இருந்தேன். 61 00:03:30,002 --> 00:03:34,590 ஆனால், அதை இன்னொரு முறை சொல்றீங்களா? நான் எதைப் பத்தி என்ன நினைக்கிறேன்? 62 00:03:34,673 --> 00:03:37,718 ஷீலா, உண்மையாகவே நீங்க வீட்டுக்குப் போகத் தயாரா இருக்கீங்களா? 63 00:03:39,887 --> 00:03:42,055 வெறுமன நான் போகலாமான்னு கேட்பதை விட்டுட்டு, சுத்தி வளைச்சு அதை செய்யப் 64 00:03:42,139 --> 00:03:44,433 பார்த்ததுக்கு, என்னை நீங்க மன்னிக்கணும். 65 00:03:45,142 --> 00:03:46,685 நீங்க மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. 66 00:03:47,644 --> 00:03:49,062 தீயவற்றை உணர்ந்து கொள். 67 00:03:49,563 --> 00:03:51,773 அது நீங்க சொன்ன படிகளில் ஒன்று. பட்டியலில இருக்கு. 68 00:03:51,857 --> 00:03:54,109 இருக்கு. என் பட்டியல் தான். 69 00:03:55,235 --> 00:03:58,989 ஆனால், இந்த சம்பவத்தில, யாரோ ஒருவரிடம் மன்னிப்பு கேட்கும் அவசியம் இருந்தாலும், 70 00:03:59,072 --> 00:04:00,240 அந்த நபர் நான் இல்லை. 71 00:04:00,908 --> 00:04:03,744 ஹேரியட்டிடம் நான் மன்னிப்பு கேட்கப் போவதில்லை. அந்த பொம்பள... 72 00:04:03,827 --> 00:04:05,245 உங்களுக்கு "கிறுக்கு"ங்குற அந்த வார்த்தை பிடிக்காதுன்னு எனக்குத் தெரியும். 73 00:04:05,329 --> 00:04:08,290 -ஆனால் அவங்க கொஞ்சம்... -நான் உங்களைப் பத்தி பேசுறேன், ஷீலா. 74 00:04:08,373 --> 00:04:11,210 இந்த செயல்முறையில நீங்க நேர்மையா ஈடுபடலைன்னா, 75 00:04:11,293 --> 00:04:12,628 அப்புறம் நீங்க தான் வருத்தப்படுவீங்க. 76 00:04:13,212 --> 00:04:14,546 ்அடடா. இது வரும்னு யோசிக்காம விட்டுட்டோமே. 77 00:04:14,630 --> 00:04:17,673 ஒருவேளை அவங்க இதை தன் தலையணையில் தைச்சு வச்சிருப்பாங்களோன்னு நினைக்கிறேன். 78 00:04:17,757 --> 00:04:20,677 இதுல உனக்கு என்ன கிடைக்கப்போகுதுன்னு நினைக்கிற? பெரிய தொகையை கட்ட பில் வரும். 79 00:04:20,761 --> 00:04:26,391 வேறு வகையில் சொன்னால், நீங்க முயற்சி செய்யப்போவதில்லைன்னா, அப்போ, சரி. 80 00:04:27,017 --> 00:04:28,435 அப்போ நீங்க இங்க இருக்கவே கூடாது. 81 00:04:29,228 --> 00:04:32,523 நான் எல்லா செயல்களையும், பயிற்சிகளையும் செய்யறேனே. எல்லாத்துக்கும் வருகிறேனே. 82 00:04:32,606 --> 00:04:35,901 வருவது என்றால் நேர்மையாக இருப்பதுன்னு பொருள். 83 00:04:35,984 --> 00:04:40,239 நான் கேட்க விரும்புவதைச் சொல்வது இல்லை, ஆனால் உங்க மனசுல இருப்பதைச் சொல்லணும். 84 00:04:40,322 --> 00:04:42,908 நான் என்ன நினைக்கிறேன்னு தெரிஞ்சுக்க யாருக்கும் விருப்பமில்லை, அதுவும் இவளுக்கு இல்லை. 85 00:04:42,991 --> 00:04:44,743 அதுவுமில்லாம, நீதான் பணம் கொடுப்பதுல உண்மையாக இருக்கயே. 86 00:04:44,826 --> 00:04:46,620 அந்த ஆடைகள் எல்லாம் எவ்வளவு கேவலமாக இருக்கு. 87 00:04:46,703 --> 00:04:49,081 இறுதியில உங்க முடிவுதான், ஷீலா. நீங்க வேணும்னா இப்போதே வீட்டுக்குப் போகலாம். 88 00:04:49,164 --> 00:04:53,293 அதை வெற்றின்னு சொல்லிக் கொள்ளலாம், விட்ட இடத்திலிருந்து வாழ்க்கையை தொடங்கலாம். 89 00:04:54,211 --> 00:04:58,882 அல்லது இங்கேயே இருந்து, ஒரு முடிவு செய்து, ரொம்ப கஷ்டமான விஷயங்களை அணுகலாம். 90 00:05:00,133 --> 00:05:01,844 அப்போ தான் உண்மையான மாற்றம் ஏற்படும். 91 00:05:02,636 --> 00:05:03,846 எனவே, நீங்க என்ன செய்யப் போறீங்க? 92 00:05:05,138 --> 00:05:07,391 நீ அவங்ககிட்ட இது போதும்னு சொன்னா போதும். 93 00:05:07,474 --> 00:05:08,600 நீ போக தயாரா தானே இருந்த. 94 00:05:08,684 --> 00:05:11,895 ஆனால், வழக்கம் போல உனக்கு தைரியம் போயிடுச்சு. 95 00:05:15,899 --> 00:05:18,527 உன்னுடைய பையெல்லாம் பேக் செய்து தயாரா இருந்ததைப் பார்த்து நான் சிரித்துவிட்டேன். 96 00:05:19,194 --> 00:05:20,237 மிக்க நன்றி. 97 00:05:20,320 --> 00:05:22,447 குறைந்தது உங்க முகத்துல சிரிப்பை வரவழைக்க முடிந்ததே. 98 00:05:22,531 --> 00:05:27,995 உண்மையிலேயே அது பயன் தருமா? நீ நன்றியோடும் உண்மையாகவும் இருந்தால் போதுமா? 99 00:05:28,078 --> 00:05:29,746 "எனக்கு குணமாகிடுச்சு. பை-பை." 100 00:05:30,372 --> 00:05:31,874 பார்க்க ரொம்ப அற்புதமா இருந்தது. 101 00:05:31,957 --> 00:05:35,460 இயல்பா இல்லாம, ஒரு அணில் தண்ணீருல சறுக்குறா மாதிரி. 102 00:05:35,544 --> 00:05:36,795 உங்களுக்கு என்ன அக்கறை? 103 00:05:36,879 --> 00:05:39,381 சரி, அக்கறைங்குறது சரியான வார்த்தையா தோணலை. 104 00:05:39,464 --> 00:05:41,633 உங்களுக்கு இந்த இடம் பிடிக்கிற மாதிரி எல்லோருக்கும் பிடிக்கணும்னு அவசியமில்லை. 105 00:05:44,803 --> 00:05:47,514 ஏன் எப்போதும் இப்படி என்னிடம் மோசமா நடந்துக்குறீங்க? 106 00:05:50,309 --> 00:05:52,436 -ரொம்ப நியாயமான கேள்வி, தெரியுமா. -எனக்குத் தெரியும். 107 00:05:52,519 --> 00:05:55,105 அதுக்கு ஒரு காரணம் இருக்கு. என்னால சரியா அதை விவரிக்க முடியலை. 108 00:05:56,231 --> 00:05:58,817 முகம்-சம்மந்தப்பட்டது. பாதி அப்படி. 109 00:06:02,196 --> 00:06:04,156 என் கை எடைகளை வச்சு எதுவும் செய்தீர்களா? 110 00:06:04,239 --> 00:06:06,909 என்னைப் பார்த்தால் உன் கை எடைகளை வச்சுகிட்டு எதுவும் செய்யற மாதிரியா இருக்கேன்? 111 00:06:16,418 --> 00:06:17,753 கடவுளே. 112 00:06:19,963 --> 00:06:22,716 இன்னும் கொஞ்சம் நாட்கள் இங்கே தங்கினா, இவளைப் போலவே மோசமா ஆகிடுவாய். 113 00:06:22,799 --> 00:06:24,301 இது போதும். 114 00:06:24,384 --> 00:06:27,804 உறுதியா தான் சொல்றயா? இதோட இன்னும் மோசமாக் கூட ஆகலாம். 115 00:06:28,931 --> 00:06:31,558 இரண்டு வாரம் ஆன பிறகும், அவங்க உன்னிடமிருந்து இன்னும் எதிர்பார்க்குறாங்க. 116 00:06:31,642 --> 00:06:34,853 உன் பிசினஸ் அங்கு பாழாகிக்கிட்டிருக்கு, இந்த சமயத்துல உன்னிடம் பணம் பிடுங்குறாங்க. 117 00:06:37,064 --> 00:06:38,607 இது எல்லாமே ஒரு ஏமாற்று வேலை தான். 118 00:06:38,690 --> 00:06:42,027 இந்த இடத்தை எல்லாம் பாரு. லூயான் எப்படி இதை எல்லாம் சம்பாதிச்சாங்க? 119 00:06:45,405 --> 00:06:47,157 நீ இரண்டு வாரமா நீ அதைச் செய்யலை. 120 00:06:47,241 --> 00:06:50,577 பார்க்கவும் நல்லாயிருக்க. நல்லா தேவலை. ஆனால் அவள் உன்னை நம்ப மறுக்கிறாள். 121 00:06:50,661 --> 00:06:53,038 ஏன்னா நீ சரியா இல்லாத வரைக்கும் அவள் உன்னை குணப் படுத்திக்கிட்டே இருக்கலாம். 122 00:06:53,121 --> 00:06:56,959 ஆசை பிடிச்ச கழுதை லூயானுக்கு இன்னும் வருமானம். உனக்கு வருமானத்துக்கு வழியில்ல. 123 00:06:59,169 --> 00:07:00,170 மே 1982 கடைசி நாள்!!! 124 00:07:04,258 --> 00:07:06,301 கவனமாக உண்ணுதல். அப்படின்னா என்ன? 125 00:07:07,344 --> 00:07:09,137 அந்த பெயரிலேயே அதன் பொருளும் இருக்கு. 126 00:07:09,721 --> 00:07:14,184 நாம் உணவை பயன்படுத்தும் மற்ற எதுக்காகவும் இல்லாமல், 127 00:07:14,268 --> 00:07:17,062 நம்ம சந்தோஷத்துக்காகவும், ஊட்டத்துக்காகவும் கவனத்துடன் சாப்பிடுவது. 128 00:07:17,729 --> 00:07:18,814 வேறு எதற்கு என்று யாராவது சொல்ல முடியுமா? 129 00:07:19,815 --> 00:07:20,816 சௌகரியம். 130 00:07:21,692 --> 00:07:22,943 கூட்டுறவு. 131 00:07:24,152 --> 00:07:25,571 தவிர்த்தல். 132 00:07:26,446 --> 00:07:27,447 இவை எல்லாம் தெரிந்ததே. 133 00:07:28,740 --> 00:07:31,910 நீ இங்கு தனியா தான் இருக்க. மூழ்கினாலும் சரி இல்ல நீந்தினாலும் சரி. அக்கறையைப் பாரு. 134 00:07:31,994 --> 00:07:33,078 அன்பு? 135 00:07:33,704 --> 00:07:36,999 அது ஒரு கேள்வியா? ஏன்னா நீங்க... இறுதியில் குரலை உயர்த்தினீங்க. 136 00:07:37,082 --> 00:07:39,668 -பின்புலம் பேசுவது குறைந்து விட்டது. -நிஜமாகவா? 137 00:07:39,751 --> 00:07:42,629 -நாம திரும்பி அதை செய்யப் போறதில்லை, இல்லயா? -நான் இரண்டு முறை செய்யலாம். 138 00:07:44,173 --> 00:07:47,301 இந்த ஆரஞ்சு பயிற்சியின் ஆறு படிகளை யாரால சொல்ல முடியும்? 139 00:07:47,384 --> 00:07:48,385 ஹேரியட்டைத் தவிர வேறு யாராவது. 140 00:07:48,468 --> 00:07:50,220 அனோரெக்ஸிக்குகள் அனைவரும் அதிகம் சாதிப்பவர்கள். 141 00:07:50,304 --> 00:07:52,848 ஏதோ அங்கீகாரத்தைத் தேடும் மிஸைலைப் போல அவள் கையை எப்போதும் மேலே தூக்குறா. 142 00:07:52,931 --> 00:07:58,896 பிடிப்பது, பார்ப்பது, முகர்வது, சுவைப்பது, விழுங்குவது, தொடர்வது. 143 00:07:58,979 --> 00:08:01,315 -காலை நக்குவதை மறந்துவிடாதே. -நல்ல பதில், மெலிண்டா. 144 00:08:01,398 --> 00:08:06,528 இது உங்களுக்குள்ளேயே நீங்கள் அமர்ந்து, உங்கள் இந்திரீய அனுபவங்களை காண்பது. 145 00:08:06,612 --> 00:08:10,741 நம்மில் சிலருக்கு அது ரொம்ப சுகமான இடமாக இராது. 146 00:08:12,117 --> 00:08:13,535 அதற்கு கையைத் தூக்க வேண்டிய அவசியமில்லை. 147 00:08:13,619 --> 00:08:15,537 -மன்னிக்கணும். -மேலும் நீங்கள் மன்னிப்பும் கேட்க வேண்டாம். 148 00:08:15,621 --> 00:08:18,665 -மன்னிக்கணும். மன்னிக்கணும். மன்னிக்கணும். -பரவாயில்லை. பரவாயில்லை. 149 00:08:18,749 --> 00:08:20,250 நான் வேறு ஒரு ஆரஞ்சு பழத்தை தேர்ந்து எடுக்கலாமா? 150 00:08:20,751 --> 00:08:24,338 இதுக்குள்ள ஏதோ ஒரு பிரச்சினை இருக்கும் போல தோணுது. 151 00:08:24,421 --> 00:08:25,964 அடடா, அடடா. இதுக்கு நிறைய நேரம் ஆகும் போல இருக்கே. 152 00:08:26,048 --> 00:08:27,299 தாராளமா செய்யுங்க. 153 00:08:32,136 --> 00:08:34,806 என்னை மன்னிச்சிடுங்க. இது கிறுக்குத்தனம். நான் அனைவரையும் காக்க வைக்கிறேன். 154 00:08:34,890 --> 00:08:36,058 -என்னை மன்னிச்சி்டுங்க. -பரவாயில்லை. 155 00:08:36,140 --> 00:08:39,019 உனக்குன்னு ஒரு வாழ்வு இருந்தது, ஒரு பயிற்சி டேப், வளரும் பிசினஸ், 156 00:08:39,102 --> 00:08:41,230 அதையெல்லாத்தையும் விட்டுட்டு இந்த மண்ணாங்கட்டிக்காக உட்கார்ந்திருக்க. 157 00:08:41,313 --> 00:08:44,107 இது தான் உன் இனம், இப்போது. இங்கு தான் இருக்க விரும்புறயா? 158 00:08:44,191 --> 00:08:47,110 ...யாரோ ஒரு அந்நியன், வேறு கிரகத்திலிருந்து வந்து இங்கு போட்டுட்டு போனது போல. 159 00:08:47,194 --> 00:08:50,739 உங்க வாழ்க்கையில நீங்க இதுவரை இப்படி ஒன்றை பார்த்திருக்கவே மாட்டீங்க. 160 00:08:50,822 --> 00:08:54,785 அதன் குணங்கள் என்ன? அதன் நிறங்கள் என்ன? அது என்ன வடிவில் இருக்கு? 161 00:08:54,868 --> 00:08:57,704 இது வெறும் ஒரு ஆரஞ்சு. ஒரு சாதாரண ஆரஞ்சு பழம். 162 00:08:57,788 --> 00:09:01,792 உங்க கையில் அதை வைத்திருப்பது எப்படி உள்ளது? அதன் எடை, அதன் சருமம். 163 00:09:01,875 --> 00:09:04,711 அதன் மேல் இருக்கும் அந்த குத்துகளையும் சிறு அடிதாள் கட்டைகளையும் பாருங்க. 164 00:09:04,795 --> 00:09:07,506 இப்போ நாம் ஒரே ஒரு தோல் பகுதியோடு ஆரம்பிப்போம், 165 00:09:08,632 --> 00:09:11,093 அங்கே தான் அதனுடைய மணமுள்ள எண்ணை தேங்கி இருக்கிறது, 166 00:09:11,176 --> 00:09:12,636 அது தான் அந்த பழத்தின் தோலை பாதுகாக்கிறது. 167 00:09:14,096 --> 00:09:15,097 அந்த மணத்தை உள்வாங்குங்கள். 168 00:09:15,764 --> 00:09:19,268 முகர்வதும் ஒரு வகையான புசித்தல் தான் என்பதை நாம் அறிந்து இதைச் செய்ய வேண்டும். 169 00:09:19,351 --> 00:09:21,854 அது உங்கள் நாசிகளிலிருந்து நுரையீரல் வரை பயணம் செய்கிறது. 170 00:09:21,937 --> 00:09:24,439 இப்படியே போனால், இன்னும் ஒரு வருஷமாகும், இதுல ஒரு வாய் சாப்பிட. 171 00:09:24,523 --> 00:09:25,524 இது ரொம்ப கேலிக்கூத்தாக இருக்கு. 172 00:09:25,607 --> 00:09:29,278 இப்போது பழத்தின் ஒரு பகுதியை வாயிலே வைத்து, 173 00:09:30,028 --> 00:09:33,949 இன்னும் அதை கடிக்காமல் இருக்க முயற்சியுங்கள். அதை உங்கள் வாயில் மட்டும் இருக்கும். 174 00:09:34,032 --> 00:09:38,912 என்னவெல்லாம் உணர்கிறீர்கள், அப்புறம், உங்கள் உடலின் செயல்முறைகளின் எதிர்வினைகளையும். 175 00:09:39,663 --> 00:09:44,084 அவை எல்லாவற்றையும் ஒரு வினாடி எந்த வகை தீர்ப்பும் வழங்காமல் கவனிப்போம். 176 00:09:44,168 --> 00:09:46,211 கொஞ்சம் கூட கௌரவம் இல்லாமல். 177 00:09:47,921 --> 00:09:50,090 அந்த சத்தங்கள் வந்ததை நான் விரும்புறேன், மெலிண்டா. 178 00:09:50,174 --> 00:09:54,469 ஆம். என்ன எதிர் வினை வந்தாலும் பரவாயில்லை, ஆனால் இன்னும் கடிப்பதை தவிருங்கள். 179 00:09:54,553 --> 00:09:57,890 நாம் வெறுமன கவனத்துடன், கவனித்து வருகிறோம். 180 00:09:57,973 --> 00:10:00,017 அடுத்து என்ன? அனைவரும் சேர்ந்து கழிப்பறைக்கு சென்று 181 00:10:00,100 --> 00:10:02,895 கவனத்துடன் அந்த ஆரஞ்சை கழித்து விடவேண்டுமா? வாய்ப்பை தவற விடுகிறாய். 182 00:10:02,978 --> 00:10:06,023 உன் வாழ்க்கையில் மீதம் இருக்கும் கொஞ்சம் காலத்தை நீ வீணாக்குகிறாய். 183 00:10:06,106 --> 00:10:07,191 இல்லை, நீ நிறுத்த வேண்டும்! 184 00:10:07,941 --> 00:10:12,362 மன்னிக்கவும். என்னால்... இதை செய்ய முடியாது. உங்களால முடியும். நான்... இது எனக்கில்லை. 185 00:10:12,446 --> 00:10:14,198 அவளால் அதைச் செய்ய முடியாது. அவள் அப்படியே போக முடியாது. 186 00:10:14,281 --> 00:10:17,284 உங்க ஆரஞ்சை கவனியுங்க, ஹேரியட். எல்லாரும் ஆரஞ்சுகளை கவனிக்கவும், தயவுசெய்து. 187 00:10:26,043 --> 00:10:27,044 நான் ஒன்றை பறிக்கலாமா? 188 00:10:27,669 --> 00:10:29,046 -நிச்சயமா. -இல்லை, கண்ணு. 189 00:10:31,340 --> 00:10:34,510 மன்னிக்கணும், கண்ணு. அது இங்குள்ள அனைவருக்கும், நமக்கு மட்டும் இ்லலை. 190 00:10:35,052 --> 00:10:36,303 நீங்க எவ்வளவு காலம் இங்கு இருப்பீங்க, அம்மா? 191 00:10:36,386 --> 00:10:39,515 நான் உனக்கு சொன்னேனே, கண்ணே. நான் இன்னும் இரண்டு வாரங்கள் இருப்பேன். முடிந்துவிடும். 192 00:10:40,432 --> 00:10:43,393 ஆமாம். இன்னும் பத்து நாள் தூங்கினால், அப்புறம் நான் வீட்டுக்கு வந்துடுவேன். 193 00:10:43,894 --> 00:10:46,563 அது அவ்வளவு மோசம் இல்லை. பிங்கி எப்படி இகுக்கா? 194 00:10:46,647 --> 00:10:48,774 அவங்களுக்கு உடல் நிலை சரியில்லை. அவங்களுக்கு தலையில அடிபட்டிருக்கு. 195 00:10:48,857 --> 00:10:51,193 அவங்க தலை டாக்டர்களிடம் போய் சிகிச்சை எடுத்துக்கிட்டு குணமாறாங்க. 196 00:10:53,195 --> 00:10:54,571 அவங்க தலை எப்படி அடிபட்டது? 197 00:10:54,655 --> 00:10:56,406 சரி, நாம அவ்வளவு தூரம் போகவில்லை. 198 00:10:57,407 --> 00:10:58,617 நான் ஒரு நாய் வளர்க்கப் போறேன். 199 00:10:59,409 --> 00:11:00,410 என்ன? 200 00:11:00,911 --> 00:11:03,664 அடடா, அது பெரிசாவும், வித்தியாசமாவும் இருக்கே. 201 00:11:03,747 --> 00:11:08,502 ஆம். நாங்க ஒரு, விலங்குகள்... சரணாலயத்துக்குப் போனோம். 202 00:11:08,585 --> 00:11:10,587 அங்க, சில அழகான நாய்களைப் பார்த்தோம். 203 00:11:10,671 --> 00:11:13,841 அதில் ஒன்றின் பெயர் ஓரியோ... அதை எங்களுக்கு ரொம்ப பிடிச்சுது. 204 00:11:14,842 --> 00:11:17,803 ஆனால், அதுக்கு கொஞ்சம் நடத்தை பிரச்சினைகள் இருந்தன, கண்ணில் கோளாறு, 205 00:11:17,886 --> 00:11:20,430 அது ரொம்ப கவலையா இருந்தது, அதனால... ஆனால் ஆம், நாங்க யோசிச்சிட்டிருக்கோம். 206 00:11:20,514 --> 00:11:21,765 அட அது ரொம்ப கிளுகிளுப்பா இருக்கே. 207 00:11:30,482 --> 00:11:32,234 அவளையும் கூட்டிட்டு வந்ததுக்கு நன்றி. 208 00:11:32,317 --> 00:11:34,653 நீங்க செய்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு தாராள மனசு. 209 00:11:35,863 --> 00:11:39,783 சரி, நமக்குள்ள இருக்குற பிரச்சினைகளை, நான் அவள் வரை கொண்டு போகபோறதில்லை. 210 00:11:39,867 --> 00:11:43,787 நீ இப்படி இருப்பதை அவள் பார்க்கணும்னு நினைக்கிறான், அப்போ அவன் நாய் தந்த ஹீரோவாகலாமே. 211 00:11:43,871 --> 00:11:46,164 உனக்கு இது இன்னும் கூடுதல் பிரச்சினை. அது தான் இது. 212 00:11:46,790 --> 00:11:48,208 எனக்கு உன் மேல ரொம்ப கோபம். 213 00:11:48,876 --> 00:11:51,170 நான் எப்போ இனி உன் மேல கோபப்படாம இருக்கப்போறேனோ எனக்குத் தெரியலை. 214 00:11:51,253 --> 00:11:53,088 -நான்... டேனி. நான் வருந்துகிறேன். -இல்லை. இல்லை, கேளு. ஷ்ஷ். 215 00:11:53,589 --> 00:11:55,674 சொல்றதைக் கேளு. என்னை பேச விடு, சரியா? 216 00:11:56,800 --> 00:11:58,969 நீ இங்க வந்திருப்பது ஒரு பெரிய விஷயத்தை சமாளிக்கவும், எதிர்கொள்ளவும்னு எனக்குத் தெரியும் 217 00:11:59,052 --> 00:12:04,725 நீ அதை தைரியமா செய்யறதுக்கு நான் உன்னைப் பத்தி பெறுமைப் படுறேன். 218 00:12:04,808 --> 00:12:06,351 உண்மையிலேயே அதை பாராட்டணும். 219 00:12:06,435 --> 00:12:08,645 இதுல ஒரு வளையம் இருக்கு, அந்த வளையத்தை உடைத்தாகணும், 220 00:12:08,729 --> 00:12:10,439 அந்த வளையத்தை உடைத்து வெளியே வருவது உன் கையில் தான் இருக்கு. 221 00:12:11,273 --> 00:12:12,274 மாயாவுக்காக. 222 00:12:15,903 --> 00:12:18,197 உன் நல்லதுக்காகவும். அவ்வளவுதான். 223 00:12:20,324 --> 00:12:23,327 ஆனால் எனக்கு உன் மீது இன்னும் கோபம் தான். 224 00:12:43,055 --> 00:12:44,973 அன்பு. 225 00:12:51,897 --> 00:12:53,106 நாம் இதை சாதிப்போம். 226 00:12:54,024 --> 00:12:55,400 அது என்ன கண்ராவி அது? 227 00:12:58,362 --> 00:13:00,531 -அது என்ன... ஓ, ச்சே. -சரி, மக்களே. 228 00:13:01,073 --> 00:13:04,076 உனக்கு எப்படி இருக்குன்னு எனக்குத் தெரியும். எல்லை மீறி போவது போல தோணுதா? 229 00:13:04,701 --> 00:13:07,704 -எனக்கு ஏன் உன்னை பிடிக்கலைன்னு அறிந்தேன். -அதை தவிர்க்க முடியாது, இல்லையா? 230 00:13:07,788 --> 00:13:09,831 -உங்களுக்கு எங்க இதெல்லாம்... -லூசியிடம் ஒரு பிரதி இருந்தது. 231 00:13:09,915 --> 00:13:13,752 அது இருப்பதையே நான் மறந்துட்டேன், இதைப் போட்டு கொஞ்சம் பயிற்சி செய்யும் வரை. 232 00:13:14,503 --> 00:13:15,504 அதுல நீ இருந்த. 233 00:13:15,587 --> 00:13:18,006 ஒரு நிமிடம் இருங்க. என்னால் எல்லாத்தையும் விளக்கிச் சொல்ல முடியும். 234 00:13:18,090 --> 00:13:21,176 இதை செய்து, கூடவே ஒரு பள்ளியும் இருக்கா இல்லை இது மட்டும்... 235 00:13:22,302 --> 00:13:25,055 ஆம், இது மட்டும் தான். 236 00:13:25,639 --> 00:13:26,640 நம்பவே முடியலை. 237 00:13:26,723 --> 00:13:29,643 நான் இப்போது தான் சொன்னேன், கற்பிக்கிறேன்னு. நான் கற்பிக்கிறேன். 238 00:13:29,726 --> 00:13:32,938 எனவே, நீங்க ஒரு வகையில், காலியிடத்தை நிரப்பிட்டீங்க. 239 00:13:33,021 --> 00:13:35,899 பாதி பொய் என்பதும் முழு பொய் மாதிரியே மோசமானது தான். 240 00:13:36,441 --> 00:13:39,862 தனிப்பட்ட முறையில் நான் அதை இன்னும் மோசமா நினைக்கிறேன், ஏன்னா அதுல திருட்டுத்தனம் இருக்கு. 241 00:13:40,696 --> 00:13:42,865 கண்டிப்பா அவகிட்ட திருட்டுத்தனம் இருக்கு. அது நிச்சயம். 242 00:13:42,948 --> 00:13:44,324 நான் அதை அப்படிப் பார்க்கவில்லை. 243 00:13:44,408 --> 00:13:48,662 நான் என் பிழைப்புக்கு என்ன பண்ணுறேன் என்பதில் உங்களுக்கு என்ன சம்மந்தம் இருக்குன்னு தெரியலை. 244 00:13:48,745 --> 00:13:52,749 நாம இங்க வந்து எந்த காரணத்துக்காக சிகிச்சை எடுக்குறோமோ, அதையே நீ விற்கிறாய். 245 00:13:56,003 --> 00:13:58,297 நீ தான் பசும்தோல் போர்த்திய புலி. 246 00:13:58,380 --> 00:14:00,424 அவங்களுக்கு உன்னை இங்கு தேவையில்லை. அவங்களுக்கு உன்னை பிடிக்கலை. 247 00:14:00,507 --> 00:14:02,843 இருந்தாலும் நீ இங்கதான் இருப்பன்னு அடம்பிடிக்கிற. விழித்துக் கொள்! 248 00:14:02,926 --> 00:14:06,430 நீ இங்கிருந்து வெளியே போனதுக்கு அப்புறம் இதை இன்னும் விற்கப் போகிறாயா? 249 00:14:07,598 --> 00:14:11,351 சரி, நான் இதுக்கும் அதுக்கும் என்ன சம்மந்தம் இருக்குன்னு எனக்குத் தெரியலை. 250 00:14:11,435 --> 00:14:14,354 இங்க இருக்கிற எங்கள்ல ஒருத்தி தான் நீன்னு தெரிஞ்சதுக்குப் பின், யார் உன் டேப்பை வாங்குவாங்க? 251 00:14:14,438 --> 00:14:19,484 "மிகக் குறைந்த விலையான 9.95 டாலர்களாலும், படு மோசமான உனவு கோளாறினாலும், 252 00:14:19,568 --> 00:14:21,612 நீங்களும் என்னைப் போலவே காட்சி அளிக்கலாம்." 253 00:14:22,196 --> 00:14:25,782 ஆமாம், இது தான் உன்னிடம் எனக்கு ரொம்ப பிடிக்காத விஷயம். 254 00:14:25,866 --> 00:14:28,202 அவங்களுக்கு வேறு வழியே இல்லைன்னாலும், நீ துன்பத்துல தவித்து, 255 00:14:28,285 --> 00:14:29,620 உடைந்துபோவதை அவங்க பார்க்கணும். 256 00:14:29,703 --> 00:14:33,165 சரி, உண்மை என்னன்னா, நான் இதுக்கு திரும்பப் போகிறேனா என்பதே சந்தேகம் தான். 257 00:14:33,248 --> 00:14:34,958 என்னால முடியுமான்னு எனக்குத் தெரியலை... 258 00:14:35,042 --> 00:14:36,043 எனக்குப் பிடிச்சிருக்கு. 259 00:14:37,211 --> 00:14:40,297 -அதுல உள்ள இசை நல்லாயிருக்கு. -ஆமாம், ரொம்ப கவனத்தைக் கவர்கிறது. 260 00:14:40,380 --> 00:14:44,593 மேலும் லூயான் சொன்னபடி, உடற்பயிற்சி செய்வது நல்லது. ஆரோக்கியமும் கூட. 261 00:14:44,676 --> 00:14:47,846 நீங்க கடுகு பேக்கெட்டுகளை இரவு உணவுக்கு சாப்பிடுங்க. ஆரோக்கியத்தைப் பத்தி என்ன தெரியும்? 262 00:14:50,349 --> 00:14:52,100 உடலுக்கு நன்றிகடன் செலுத்த நீச்சலுக்குப் போறோம். 263 00:14:52,809 --> 00:14:53,977 நீங்களும் வர விரும்புறீங்களா? 264 00:14:54,061 --> 00:14:55,896 அதைவிட ஆசிடில் குளித்து விடலாம். 265 00:14:56,897 --> 00:14:57,898 சரி. 266 00:14:59,233 --> 00:15:00,275 நல்லது. 267 00:15:05,197 --> 00:15:07,908 நான் என் முன்னாள் காதலியிடம் சொல்வேன், அவளால் நிறுத்த முடிவது 268 00:15:07,991 --> 00:15:09,117 பெரும் பாக்கியம் என்று. 269 00:15:09,201 --> 00:15:11,620 உணவு ஒரு அடிக்ஷ்னாக இருக்கும்போது, இன்னும் கஷ்டமாகி விடுகிறது. 270 00:15:12,621 --> 00:15:15,541 நீ எதிரியுடன் நண்பனாகி விடணும். 271 00:15:15,624 --> 00:15:19,044 உன்னை கொல்லும் ஒன்றோடு, நல்ல ஆரோக்கியமான உறவை வளர்க்க வேண்டும். 272 00:15:19,127 --> 00:15:21,129 ஆனால் என்னால் யாருக்கும் பாடமெடுக்க முடியாது. 273 00:15:21,213 --> 00:15:25,759 இதோ வருகிறது பாடம், இன்னும் மூன்று, இரண்டு... மூன்று, இரண்டு... 274 00:15:25,843 --> 00:15:30,514 உண்மை என்னன்னா, நான் உங்களுக்கு சொல்லும் அதே அளவிற்கு கற்கவும் நிறைய இருக்கு. 275 00:15:30,597 --> 00:15:32,891 சுயநலம் மிக்க, புனதமான பொய்! 276 00:15:32,975 --> 00:15:35,602 நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியரின் காப்பிக் கோப்பையில் அச்சிட வேண்டிய வாசகம். 277 00:15:35,686 --> 00:15:38,522 ஷீலா, உன் சுற்று. நன்றிக்கடன் நேரம். 278 00:15:41,024 --> 00:15:43,235 சரி. நான் இன்று காலை எழுந்தேன். 279 00:15:43,318 --> 00:15:45,112 எழாமல் இருப்பதோடு இது பரவாயில்லை. 280 00:15:50,659 --> 00:15:53,537 நான் என் மகளை இரண்டு வாரங்களுக்குப் பின் பார்த்தேன். 281 00:15:55,747 --> 00:15:59,835 அதோடு, அவள் இன்னும் பெரியவளாகி இருக்கிறாள். 282 00:16:02,129 --> 00:16:03,130 வித்தியாசமாக இருக்கிறாள். 283 00:16:05,841 --> 00:16:08,051 ஆனால், அப்படி இருக்காது, இல்லையா? 284 00:16:08,135 --> 00:16:12,306 அதாவது அவள் தாயைப் பிரிந்து இருந்ததால் அவள் பொறுப்புள்ளவளாகிறாள். 285 00:16:14,183 --> 00:16:17,269 வேறு எதுக்காவது நன்றிக்கடன் இருக்கா? அது சின்ன விஷயமாகவும் இருக்கலாம். 286 00:16:17,352 --> 00:16:20,606 பித்தலாட்டக்காரின்னு பெயர் வாங்கினதுக்கு? அது சின்ன விஷயமா? 287 00:16:20,689 --> 00:16:21,982 என்னால வேறு எதையும் யோசிக்க முடியலை. 288 00:16:22,065 --> 00:16:26,028 யோசிக்காம இருக்க முயற்சி செய். யோசிக்காம இருந்தாலே வாய் தன்னால வேலை செய்யும். 289 00:16:26,111 --> 00:16:27,446 சில சமயம் ரொம்ப நல்லா வேலை செய்யும். 290 00:16:27,529 --> 00:16:29,531 இங்க இருக்கிறவங்க எல்லோரையும் போலவே, நல்லா பொய் பேசும். 291 00:16:29,615 --> 00:16:32,117 சும்மா சுத்தி உட்கார்ந்து, உணர்ச்சிகளை பகிர்ந்து, ஆரஞ்சுகளை உரிச்சுக்கிட்டு இருப்பாங்க, 292 00:16:32,201 --> 00:16:34,161 அங்கே உலகில் உள்ள வின்னி கிரீன்ஸுகள் எல்லோரும் வெற்றி பெற்று கொண்டே இருப்பாங்க. 293 00:16:34,244 --> 00:16:36,079 அங்கே வேறு என்னவோ நடந்துகிட்டே இருக்குப் போலும். 294 00:16:36,163 --> 00:16:39,082 நீங்க வெளியே சொல்லாத ஒன்று. நான் அதை கேட்க விரும்புறேன். 295 00:16:39,166 --> 00:16:40,167 ஓ, இல்லை, அவளுக்கு அதில் விருப்பமில்லை. 296 00:16:40,250 --> 00:16:42,961 நீங்க சொல்லாம மறைக்குறீங்க, ஷீலா. எங்க அனைவருக்கும் அது தெரியும். 297 00:16:43,045 --> 00:16:45,297 ஒரு மாறுதலுக்கு அதை வெளியே சொல்றீங்களா? 298 00:16:54,264 --> 00:16:57,059 உங்ககிட்ட மந்திர சக்தி எதுவும் கிடையாது. என் ஆன்மாவிற்குள் நீங்க பார்க்கவில்லை. 299 00:16:57,726 --> 00:17:01,271 உங்களுக்கு விவேகமில்லை, நீங்க புத்திசாலி கூட இல்லை. கண்டிப்பா வேடிக்கையானவரும் இல்ல. 300 00:17:01,355 --> 00:17:04,148 நீங்க சொல்றதெல்லாமே, ஏதோ ஒரு தெரு ஓர பரிசுக்கடையில உள்ள பம்பர் ஸ்டிக்கரிலிருந்து 301 00:17:04,233 --> 00:17:05,233 இரவல் வாங்கின மாதிரி இருக்கு. 302 00:17:05,317 --> 00:17:07,109 நீங்க என்னவோ தலாய் லாமாவைப் போல நடந்துக்குறீங்க, 303 00:17:07,194 --> 00:17:11,448 ஆனால் உண்மையில் நீங்க தனிமையில் அவதிபடுற, முன்னாள் பருமனான, ஓரின சேர்க்கை ஆள் 304 00:17:11,531 --> 00:17:14,492 மாதிரி மிக மலிவான ஆடை அணிந்து உங்க தரத்தை நீங்களே குறைச்சுக்கிட்டவங்க. 305 00:17:15,160 --> 00:17:16,869 -இன்னும் எதுவும் இருக்கா? -இல்லை. 306 00:17:18,704 --> 00:17:20,540 இது தான் உள்ளிருக்கும் குரல். அது இனிமேல் மறையும். 307 00:17:20,624 --> 00:17:24,627 வாயை மூடு, மெலிண்டா. கண்ராவிப் பெண்ணே! எப்போதும் இன்னொருத்தரை குஷிப்படுத்தணும். 308 00:17:24,711 --> 00:17:28,590 நீ குணமாவதுல கூட உன்னால ஒழுங்கா கவனம் செலுத்த முடியலை, அதுக்கும் இந்த அறையில இருக்குறவங்க 309 00:17:28,674 --> 00:17:30,175 அனைவரும் உனக்கு தட்டிகொடுத்துட்டே இருக்கணும்! 310 00:17:30,259 --> 00:17:32,970 அப்புறம் நீ, நீ பெரிய பெண் விடுதலை வாதி போல பேசுற, 311 00:17:33,053 --> 00:17:34,680 ஆனால் உண்மையில, உன்னைவிட அழகா 312 00:17:34,763 --> 00:17:37,057 இருப்பதாலும், இன்னும் வெற்றி பெற்றவங்குறதாலும், நீ என்னை வெறுக்குற. 313 00:17:37,140 --> 00:17:39,142 உனக்கு வெளி உலகத்துல தனிப்பட்ட வாழ்க்கைன்னு எதுவும் கிடையாது. 314 00:17:39,226 --> 00:17:40,352 இது தான் உன்னுடைய சம்மர் கேம்ப், 315 00:17:40,435 --> 00:17:42,604 உனக்கு கொஞ்சம் முக்கியத்துவம் கிடைக்கும் ஒரே இடம் இது தான். 316 00:17:42,688 --> 00:17:43,689 சரி, ஷீலா. 317 00:17:43,772 --> 00:17:45,190 உண்மையான குணம் எப்படி இருக்கும்னு பார்த்த பிறகு, 318 00:17:45,274 --> 00:17:49,069 நான் வேணும்னா கழிப்பறை தரையில் கைகளைக் கட்டி, விழுந்து கிடக்கிறேன். 319 00:17:49,152 --> 00:17:51,363 -அப்பாடி. சாதிச்சுட்ட. இப்போ போ. -ஷீலா, பொறுங்க. 320 00:17:51,446 --> 00:17:54,575 உனக்கு என்ன குறுக்கா? அவங்க உன்னை வெறுக்குறாங்க. வெறுப்பு. போ! 321 00:17:54,658 --> 00:17:58,579 இந்த மனக் கோளாறு இருப்பதுல நல்ல விஷயம் என்ன தெரியுமா? 322 00:17:59,079 --> 00:18:03,000 உங்களுக்கு நீங்களே சொல்லாத எந்த கெட்டதையும் இன்னொருவர் சொல்ல முடியாது, 323 00:18:03,500 --> 00:18:05,460 அது எவ்வளவு மோசமா இருந்தாலும் சரி. 324 00:18:07,045 --> 00:18:09,131 நான் அதை எங்காவது பம்பர் ஸ்டிக்கரில் படிச்சிருக்கலாம். 325 00:18:10,799 --> 00:18:13,927 இறுதியாக உண்மையைச் சொன்னதுக்கு நன்றி. 326 00:18:23,020 --> 00:18:26,857 குணமடையும் பாதைக்கு வரவேற்கிறோம். இது மிகவும் கஷ்டமானது. 327 00:18:39,995 --> 00:18:42,998 சரி, புரியுது. நான் முட்டாளா இருந்திருக்கேன். 328 00:18:43,081 --> 00:18:46,001 நான் உன்னை கஷ்டப்படுத்தியிருக்கேன், நீ என் மேல கோபமாக இருக்கன்னு தோணுது. 329 00:18:46,084 --> 00:18:48,212 கோபப்பட உனக்கு எல்லா உரிமையும் இருக்கு. எனக்கு அது தேவை தான். 330 00:18:50,422 --> 00:18:53,091 நான் உன் காதுக்குள்ள ஓதாம இருப்பதே உனக்கு நல்லதுன்னு எனக்குத் தோணுது. 331 00:18:53,175 --> 00:18:55,344 நீ அதனாலேயே இன்னும் ஆரோக்கியமாகவும், சந்தோஷமாகவும் இருக்கலாம். 332 00:18:57,137 --> 00:19:02,184 உடலுக்கு அதிகமா முக்கியத்துவம் வேண்டாம். வளைவுகளை வரைந்திடு. காண்பதை வரை. 333 00:19:03,435 --> 00:19:05,354 நான் உங்கிட்ட ரொம்ப கொடுமையா இருந்திருக்கேன். 334 00:19:05,437 --> 00:19:09,775 நான் உன் உடலைப் பத்தி பேசியது, ரொம்ப தப்பு. கொஞ்சமும் நியாயமில்லை. 335 00:19:11,318 --> 00:19:15,489 ஆனால் எல்லாமே மோசமில்லை. சில சமயங்களில் உனக்கு உந்துதலும் தந்திருக்கேன், இல்லையா? 336 00:19:16,156 --> 00:19:18,116 அந்த காணொளி. அந்த வகுப்புகள். நான் இல்லாம நீயாகவே, 337 00:19:18,200 --> 00:19:21,161 அதையெல்லாம் செய்திருப்பாயா? உண்மையா அதுக்கு பதில் சொல்ல முடியுமா? 338 00:19:21,245 --> 00:19:23,163 நான் இல்லாம நீ யாராக இருந்திருப்பன்னு நினைக்கிற? 339 00:19:23,247 --> 00:19:25,457 உன் வாழ்வில் நடந்திருக்கும் நல்ல விஷயங்கள் எல்லாத்துக்கும் காரணம்... 340 00:19:44,101 --> 00:19:49,398 உண்மையாகவே, நிஜமாகவே, நான் வீணானதைப் பத்தி வருந்துகிறேன். 341 00:19:50,107 --> 00:19:54,653 வீணான என் நேரம். அதைப் பத்தி ரொம்ப மட்டமா உணருகிறேன், எல்லவற்றிலுமே அப்படிதான். 342 00:19:55,153 --> 00:19:57,906 அந்த நேரத்தை நான் இன்னும் பயணுள்ள ஒன்றில் செலவழித்திருக்கலாம்... 343 00:19:59,575 --> 00:20:02,286 எனக்குத் தெரியலை. நண்பர்களை சேர்த்திருக்கலாம். ஒரு வித்தியாசத்தை உண்டாக்கலாம். 344 00:20:02,369 --> 00:20:05,205 எதுவும் செய்யலாம், உண்மையாக, வேறு எதுவும் செய்திருக்கலாம். 345 00:20:09,209 --> 00:20:13,338 ஒரு வாத்தியம் வாசிக்க கத்துக் கொண்டிருக்கலாம். அல்லது இத்தாலிய மொழியை கற்றிருக்கலாம். 346 00:20:13,422 --> 00:20:16,425 அல்லது, ஜப்பானிய மொழியோ, ஏதோ ஒன்று. எனக்குத் தெரியலை. 347 00:20:16,508 --> 00:20:20,053 ஜப்பானிய மொழியில்லை. அது ரொம்ப கஷ்டம். ஆனால் செய்திருக்கலாம். 348 00:20:20,137 --> 00:20:22,097 அது போல, நான் இப்போது செய்யும் பிசினஸில், 349 00:20:22,181 --> 00:20:25,601 நான் மட்டும், பாதி நேரத்தையும் ஆற்றலையும் அதை மேம்படுத்த, பயன்படுத்தியிருந்தால்... 350 00:20:26,977 --> 00:20:29,313 அதோடு, இப்போது இப்படி பேதுவதும் நல்லதை விளைவிக்காது என தெரியும், 351 00:20:29,396 --> 00:20:32,774 ஆனால்... எனக்கு வருத்தமாக இருக்கு. 352 00:20:33,400 --> 00:20:39,406 நான் சொல்லியிருக்கும் பொய்கள், செய்திருக்கும் தீங்கு, அதையெல்லாம் நினைத்தால்... இல்லை? 353 00:20:42,159 --> 00:20:44,036 என் வாழ்க்கையை நான் மீண்டும் வாழ விரும்புகிறேன். 354 00:20:44,119 --> 00:20:46,747 ஆனால்... என்ன, இப்போது ரொம்ப தாமதமாகிவிட்டதோ என கவலையாக இருக்கு. 355 00:20:48,248 --> 00:20:51,877 பாருங்க, வெற்றி கண்டவர்கள், நன்றாக வாழ்ந்தவர்கள் எல்லோரும் இது போன்று இருந்து 356 00:20:51,960 --> 00:20:53,420 குணமானவர்கள் என பாசாங்கு செய்ய மாட்டேன். 357 00:20:55,547 --> 00:20:56,632 ஆனால்... 358 00:20:57,591 --> 00:20:59,009 "ஆனால்" என்று ஒரு வார்த்தையைச் சொன்னேனா? 359 00:20:59,718 --> 00:21:02,012 சரி, நீங்க எதையோ மறைமுகமா சொன்னது போல இருந்தது. 360 00:21:03,055 --> 00:21:04,431 நான் என்ன சொல்ல நினைத்தேன் என சொல்லுங்க. 361 00:21:08,143 --> 00:21:09,561 இப்பவும் ஒண்ணும் தாமதமாகவில்லைன்னு. 362 00:21:10,646 --> 00:21:11,939 நீங்களே சொல்லிட்டீங்க. 363 00:21:18,403 --> 00:21:19,738 நான் இதை ஒரு தம்பதிகளைச் சார்ந்திருக்கும் 364 00:21:19,821 --> 00:21:22,324 முன்பதிவு என்று நினைத்துக் கொண்டிருந்தேன். 365 00:21:22,407 --> 00:21:24,451 சரி, டேனி, உங்கள் ஏமாற்றத்துக்கு வருந்துகிறேன். 366 00:21:24,535 --> 00:21:29,331 இந்த நேரம் எதற்காக திட்டமிடப்பட்டிருக்கு என்றால், அடிக்டிவ் மற்றும் கம்பல்சிவ் நடத்தைகளுடன் 367 00:21:29,414 --> 00:21:34,628 போராடி, அவற்றை வெற்றியுடன் எதிர்கொண்டு, குணமாகும் பாதையின் செயல்முறையை 368 00:21:34,711 --> 00:21:36,505 விளக்கவும், ஆழந்த, ரகசியமான, தனிமைப்படுத்தும் பாதையில் ஆதரவாக இருக்கவும், அன்பானவர்களோடு 369 00:21:36,588 --> 00:21:39,007 மட்டும் அந்த அனுபவத்தை பகிரவும் தா,ன் இந்த அழைப்பு. 370 00:21:39,091 --> 00:21:40,175 சரி, அது தான் இந்த சந்திப்பின் நோக்கம் எனில், 371 00:21:40,259 --> 00:21:42,511 இவருடைய காதலருடன் உங்களால் தொடர்பு கொண்டு, அவரை அழைக்க முடிந்ததா? 372 00:21:43,095 --> 00:21:45,681 -ஓ, தயவுசெய்து இப்படி செய்யாதீங்க. ப்ளீஸ். -இவங்க அதைப் பத்தி சொன்னாங்களா? 373 00:21:45,764 --> 00:21:49,935 அவங்க ஒரு மோர்மன் ஷாப்பிங் மாலின் டெவேலப்பருடன் உறவு வைத்திருப்பதைப் பத்தி? 374 00:21:50,018 --> 00:21:51,812 அவர் நிச்சயமா தீயவர் தான்னு எனக்குத் தெரியும். 375 00:21:51,895 --> 00:21:53,981 -நான் தான் அது முடிஞ்சிடுச்சுன்னேனே. -நீ எதையும் என்னிடம் சொல்லலை. 376 00:21:54,064 --> 00:21:56,024 பொய்யைத் தவிர என்னிடம் எதுவும் சொல்லலை. 377 00:21:56,108 --> 00:21:58,318 உங்களுக்குக் கோபம். அது எனக்குப் புரியுது. 378 00:21:58,402 --> 00:22:00,028 ஆனால், இப்போதைக்கு, நான் கேட்டுக்குறேன், நாம் நம்ம... 379 00:22:00,112 --> 00:22:01,738 நான் மாற முயற்சி செய்கிறேன். அதை தான் இங்கே முயன்று வருகிறேன். 380 00:22:01,822 --> 00:22:04,491 நான் இன்னும் மேம்பட நினைக்கிறேன், அதோடு நான் மேம்பட்டும் வருகிறேன். 381 00:22:04,575 --> 00:22:07,995 நான் செய்த தவறுகளை ஒத்துக்குறேன். எல்லாத்தையும். 382 00:22:08,078 --> 00:22:09,997 அதோட நீங்க கோபப்படும் எல்லாத்தையும் நான் ஒத்துக்குறேன்... 383 00:22:10,914 --> 00:22:12,708 நான் தான் செய்தேன், எல்லாத்தையும். 384 00:22:12,791 --> 00:22:15,294 ஆனால் அவங்க வேறு வேறு இல்லை. 385 00:22:15,377 --> 00:22:17,838 -அதற்கு எல்லாம் தொடர்பு இருக்கு. பயிற்சிகள்... -எனக்குப் புரியுது. புரியுது. 386 00:22:17,921 --> 00:22:20,174 இது "என் ஈடுபாடு ஒரு அறிகுறி" என்பது போல ஒரு விஷயமா மாறப்போகுது. 387 00:22:20,257 --> 00:22:22,259 -இல்லை. -நீ அதை செய்யலையே. 388 00:22:22,342 --> 00:22:24,428 -அந்த வியாதி தானே செய்தது, இல்லையா? -நான் சொல்லவந்தது அது இல்லை. 389 00:22:24,511 --> 00:22:26,930 -நான் சொல்வது அதுவே இல்லை. -ஆம், எனக்கு கவலையில்லை. 390 00:22:27,431 --> 00:22:30,767 உன்னை தட்டிக் கொடுத்து எனக்கு சலித்துவிட்டது. 391 00:22:31,393 --> 00:22:33,812 உனக்கு அது ஏற்கனவே இங்கு ஏராளமா கிடைச்சிடுச்சுன்னு தோணுது, எனவே... 392 00:22:33,896 --> 00:22:38,984 ஆமாம், நல்லது. நீ உன் முன்னேற்றத்துக்கு உழைக்கிறாய். அது நல்லது தானே. 393 00:22:39,651 --> 00:22:43,071 அது நல்லாயில்லை. அது பயிற்சி. நிஜமாகவே கடினமான உழைப்பு. 394 00:22:43,155 --> 00:22:46,783 ஆம். சரி. நான் இங்கிருந்த போகப் போறேன். 395 00:22:46,867 --> 00:22:50,495 நான் இன்னும் வெகு தூரம் ஓட்டிட்டு போகணும், அதோடு நாளைக்கு முக்கியமான வேலை இருக்கு. 396 00:22:51,914 --> 00:22:53,916 ஏசிஎல்யூவில் வேலைக்கான நேர்முகம். 397 00:22:54,625 --> 00:22:58,754 அது சம்பளமில்லாத வேலை எல்லாம் இல்லை. அது உண்மையான, பாலிசி வேலை. 398 00:22:58,837 --> 00:23:01,715 நன்றியில்லாத வேலை. உண்மையான வேலை. 399 00:23:03,091 --> 00:23:04,676 ரொம்ப சந்தோஷம். 400 00:23:05,427 --> 00:23:09,223 சரி, அது எப்படி போகுதுன்னு உனக்கு சொல்றேன். வேணும்னா கேட்டுக்கோ. 401 00:23:21,735 --> 00:23:26,406 சரி, அதோ பாரு. கிட்டத்தட்ட சரியாகிடுச்சு. வெளியே போனாலும் இப்படிதான். 402 00:23:27,324 --> 00:23:31,286 உனக்கா சந்தோஷப்படுறேன். நிஜமா. ஆனால் அடுத்தது என்ன? 403 00:23:35,916 --> 00:23:37,376 உன் சொந்த வாழ்க்கை ஒரு தோல்வி தான். 404 00:23:39,086 --> 00:23:41,630 அதனால நீ இந்த ஃபிட்னஸ் பிசினஸுக்கு இன்னும் நேரம் ஒதுக்கலாம். 405 00:23:44,174 --> 00:23:46,426 ஆனால், அதுல இப்போ என்ன நடக்குது? 406 00:23:46,510 --> 00:23:48,387 இன்னொரு காணொளியை வெளியிடப் போறயா? 407 00:23:48,887 --> 00:23:51,765 ஜூன் 1982 408 00:23:51,849 --> 00:23:54,768 ஆரோக்கியத்துக்கும் சுகாதாரத்துக்குமான, குணமடைந்து வரும் ஒரு புலீமிக்கின் கைட்? 409 00:23:54,852 --> 00:23:56,812 இதோடு சம்மந்தப்பட யார் விரும்புவார்கள்? 410 00:23:58,355 --> 00:24:00,482 நிரப்புவதற்கு நிறைய காலியான நாட்கள் உள்ளன. 411 00:24:01,149 --> 00:24:02,818 என்ன செய்து அவற்றை நிரப்பப்போகிறாய்? 412 00:24:26,800 --> 00:24:27,843 தூங்க முடியலையா? 413 00:24:29,261 --> 00:24:31,555 இல்ல. எனக்கு அவ்வளவு சுகமில்ல. 414 00:24:32,514 --> 00:24:35,642 ஆம், எனக்கும் தான். எனக்கு கொஞ்சம் தாகம் எடுத்தது, அதனால... 415 00:24:35,726 --> 00:24:37,352 எனினும், குட் நைட். 416 00:24:37,436 --> 00:24:40,189 சிறந்தது. ரொம்ப சிறப்பு. அவளும் பொய் நிறைந்தவள் தான். 417 00:24:40,272 --> 00:24:42,774 இங்கே இருக்கிற எல்லோரையும் போல, தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கின்றனர். 418 00:24:42,858 --> 00:24:43,859 பொறு. 419 00:24:44,443 --> 00:24:46,361 என்னை மன்னித்துவிடு, நான்... நான்... 420 00:24:49,823 --> 00:24:51,783 எனக்கு கேட்டுது. 421 00:24:53,952 --> 00:24:55,037 சரி. 422 00:24:55,120 --> 00:25:00,876 நான் உங்களை ஏமாற்றவோ, அப்படி எதுவும் முயலவில்லை. எனக்குக் கேட்டது, அவ்வளவு தான் சொல்றேன். 423 00:25:00,959 --> 00:25:02,252 இது ஒரு எல்லையை மீறுவதாகும். 424 00:25:02,336 --> 00:25:04,463 நீ இங்கு தங்குபவள். நான் தான் கவுன்சிலர். 425 00:25:07,216 --> 00:25:08,383 ஆனால், இதோ. 426 00:25:09,468 --> 00:25:12,804 நான் பின்னாடி போயிட்டேன். அது எனக்கு வருத்தமா இருக்கு. 427 00:25:13,555 --> 00:25:16,600 இது தான் முதல் முறை என்றெல்லாம் இல்லை, நிச்சயமா கடைசியாவும் இருக்காது. 428 00:25:16,683 --> 00:25:18,185 இதெல்லாம் நான் சொன்ன மோசமான அந்த 429 00:25:18,268 --> 00:25:19,728 -விஷயங்களினால் தானா... -அட, இல்ல. இல்லவேயில்ல. 430 00:25:19,811 --> 00:25:23,440 உங்களால இல்ல, கண்ணே, இல்ல. இல்ல. உங்களுக்கு அவ்வளவு சக்தி இல்லை. 431 00:25:23,524 --> 00:25:25,484 நான் உங்களிடம் ஆயிரம் சாக்குகள் சொல்லலாம். 432 00:25:26,610 --> 00:25:31,448 ஆனால், உண்மை என்னன்னா, நானும் சில சமயங்களிலே வழுக்கி விழுந்து விடுகிறேன். 433 00:25:33,450 --> 00:25:35,327 சரிதானே? குணமாகும் பாதை நீளமானது. 434 00:25:38,956 --> 00:25:40,165 உங்களுக்கு ஏமாற்றமா இருக்கா? 435 00:25:41,166 --> 00:25:42,251 இல்ல, நான்... 436 00:25:45,629 --> 00:25:47,589 ஆணாம், கொஞ்சம் அப்படி தான். 437 00:25:48,215 --> 00:25:49,216 எனக்கும் தான். 438 00:25:50,509 --> 00:25:51,760 ஆனால் நாளை என்பது இன்னொரு தினம். 439 00:25:53,762 --> 00:25:56,807 போய் தூங்கப் பாருங்க ஷீலா. சரியா? 440 00:25:57,391 --> 00:25:58,392 குட் நைட். 441 00:26:10,988 --> 00:26:14,491 ஹே. என்னை அந்த வரவேற்பு அறை மாதிரி இருக்கும் அந்த இடத்துல காத்திருக்க சொன்னாங்க. 442 00:26:14,575 --> 00:26:17,494 ஆனால் அங்க ஒரு அன்பான ஒரு பெண் இருந்தாங்க, அவங்ககிட்ட யாரை கூட்டிச் செல்ல வந்தேன்னு சொல்லவும், 443 00:26:17,578 --> 00:26:20,747 அவங்க உடனே, நீ எங்க இருக்கன்னு சொன்னாங்க. எனவே... 444 00:26:20,831 --> 00:26:21,915 எப்படியானாலும், ஹை. 445 00:26:22,833 --> 00:26:24,042 நீங்க வந்துட்டீங்களே. 446 00:26:24,126 --> 00:26:26,712 ஆமாம், சரி, அது தான் என் குணம், வந்து விடுவது. 447 00:26:26,795 --> 00:26:29,256 எனக்கு உயர்நிலைப் பள்ளியிலே தினமும் வந்ததுக்கு பரிசெல்லாம் கிடைச்சிருக்கு. 448 00:26:29,339 --> 00:26:30,674 அடி சக்கை. எனவே... 449 00:26:30,757 --> 00:26:34,803 -உனக்கு, அந்த பைகளை எடுக்க உதவட்டுமா? -இல்ல, இல்ல. வேண்டாம், நான் செய்யறேன். 450 00:26:36,513 --> 00:26:37,764 என்னை மன்னிச்சிடுங்க. 451 00:26:38,432 --> 00:26:42,019 நீங்க சொன்னது சரிதான். அப்படி தான் ஆச்சு. எனக்கு உதவி தேவை. 452 00:26:42,102 --> 00:26:43,979 அப்பவும். இப்பவும் தான். இன்னும் தேவையா இருக்கு. 453 00:26:44,688 --> 00:26:45,689 ஆமாம். 454 00:26:46,315 --> 00:26:48,400 பொரு, நாம இப்போ பைகளைப் பத்தி பேசலையே? 455 00:26:48,483 --> 00:26:49,610 -இல்ல. -இல்ல. எனக்குத் தெரியும். 456 00:26:49,693 --> 00:26:52,154 இந்த மனசு சார்ந்த விஷயம். ஆமாம், அது தானே. புரியுது. 457 00:26:52,237 --> 00:26:56,533 இல்ல, என்னால பெட்டியை சமாளிக்க முடியும், ஆனால், பாக்கி எல்லாம், எனக்குத் தெரியாது. 458 00:26:57,242 --> 00:26:59,244 -பார்ப்போம். -ஆமாம். ஆமாம். 459 00:27:13,008 --> 00:27:15,010 எனக்குள்ள இன்னும் அதற்கான ஆற்றல் இருக்கான்னு எனக்குத் தெரியலை. 460 00:27:16,595 --> 00:27:18,639 அதாவது, இந்த ஏரோபிக்ஸ். இந்த பிசினஸ் அதுக்கெல்லாம். 461 00:27:18,722 --> 00:27:19,890 ஓ, இப்போ இதைப் பாருடா. 462 00:27:21,975 --> 00:27:24,228 எனக்கு இதெல்லாம் கொஞ்சம் அதிகமா இருக்கலாம். 463 00:27:25,187 --> 00:27:26,188 சரி. 464 00:27:29,525 --> 00:27:32,194 நீ எப்படி அப்படி சொல்ல முடியும்? நீ எப்படி விட்டுவிட முடியும்? 465 00:27:32,861 --> 00:27:35,322 என்னை நானே புரிந்துகொள்வதற்கு நிறைய இருக்குறப்போது 466 00:27:35,405 --> 00:27:38,367 அங்கே போய் நின்னு பெரிய வல்லுனர் மாதிரி எப்படி என்னால பேச முடியும்னு தெரியலை. 467 00:27:39,701 --> 00:27:41,411 உனக்கு சில விசிறிகளிடமிருந்து கடிதம் வந்திருக்கு. 468 00:27:41,495 --> 00:27:43,121 ஸ்டாஹ்ல்/கிருன்னர் நிறுவனத்திலிருந்து எனக்கு அதை அனுப்பினாங்க 469 00:27:43,205 --> 00:27:45,082 ஏன்னா அவங்க நாம இன்னும் சேர்ந்து வேலை செய்யறோம் நினைச்சுட்டாங்க. 470 00:27:45,165 --> 00:27:46,792 நாம இன்னும் சேர்ந்து வேலை செய்யறோமா? 471 00:27:46,875 --> 00:27:48,627 பரவாயில்லை. நாம புரிந்து கொள்ள நிறைய இருக்கு. 472 00:27:48,710 --> 00:27:50,420 அது நல்லாயிருக்கே. எனக்கு ஒரு கடிதம் வந்திருக்கா? 473 00:27:51,421 --> 00:27:52,506 ஒண்ணுக்கும் அதிகமா வந்திருக்கு. 474 00:28:00,055 --> 00:28:02,724 அன்புள்ள ஷீலா, இந்த உடற்பயிற்சி டேப் தான் சிறந்தது. 475 00:28:02,808 --> 00:28:06,311 அன்புள்ள ஷீலா, பாடி பை ஷீலா ஒரு லைஃப் சேவர். 476 00:28:06,395 --> 00:28:09,314 -அதில்லாமல் நான் என்ன செய்திருப்பேன்னு... -அன்புள்ள ஷீலா, நன்றி. 477 00:28:09,398 --> 00:28:14,611 என் வாழ்வை, என் ஆரோக்கியத்தை, என் தன்னம்பிக்கையை எனக்கு மீண்டும் தந்ததுக்கு நன்றி. 478 00:28:14,695 --> 00:28:17,489 சமீபமாக நான் ஆரோக்கியக் குறைவினால் நோய்வாய்ப் பட்டிருந்தேன். 479 00:28:17,573 --> 00:28:18,782 நான் மிகவும்... 480 00:28:18,866 --> 00:28:21,618 சரி, நீங்க கட்டாயம் செய்யணும், ஏன்னா அது தான் முற்றிலும் உண்மை. 481 00:28:21,702 --> 00:28:23,412 நீங்கள் என் வாழ்வையே மாற்றிவிட்டீர்கள். 482 00:29:52,501 --> 00:29:54,503 தமிழாக்கம் அகிலா குமார்