1 00:00:27,320 --> 00:00:29,239 உங்கள் கவலைகளை நடனமாடி விரட்டுங்கள் 2 00:00:29,239 --> 00:00:31,408 கவலைகளை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 3 00:00:31,408 --> 00:00:33,493 இசை முழங்கட்டும் 4 00:00:33,493 --> 00:00:35,412 அங்கே ஃப்ராகெல் ராக்கில் 5 00:00:35,412 --> 00:00:37,706 உங்கள் கவலைகளை களைந்திடுங்கள் 6 00:00:37,706 --> 00:00:39,749 நடனங்களை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 7 00:00:39,749 --> 00:00:41,376 ஃப்ராகெல்கள் விளையாடட்டும் 8 00:00:41,376 --> 00:00:42,419 - நாங்கள்தான் கோபோ. - மோகீ. 9 00:00:42,419 --> 00:00:43,336 - வெம்ப்ளே. - பூபர். 10 00:00:43,336 --> 00:00:44,254 ரெட். 11 00:00:47,757 --> 00:00:48,800 ஜூனியர்! 12 00:00:49,301 --> 00:00:50,635 ஹலோ! 13 00:00:52,178 --> 00:00:53,346 என் முள்ளங்கி. 14 00:00:54,472 --> 00:00:56,433 உங்கள் கவலைகளை நடனமாடி விரட்டுங்கள் 15 00:00:56,433 --> 00:00:58,560 கவலைகளை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 16 00:00:58,560 --> 00:01:00,645 இசை முழங்கட்டும் 17 00:01:00,645 --> 00:01:04,648 அங்கே ஃப்ராகெல் ராக்கில் அங்கே ஃப்ராகெல் ராக்கில் 18 00:01:04,648 --> 00:01:06,151 அங்கே ஃப்ராகெல் ராக்கில். 19 00:01:12,407 --> 00:01:15,076 ஹாய், ரெட். என் நடக்கும் தியானத்தை முடித்துவிட்டு, வந்துவிட்டேன். 20 00:01:15,577 --> 00:01:18,622 ஊப்ஸ். ஒரு குளூயி ரூடியைக் கொண்டு வந்துவிட்டேன் போலும். 21 00:01:18,622 --> 00:01:20,540 நீ இங்கேதான் வாழ்கிறாயா? 22 00:01:21,041 --> 00:01:22,626 இரண்டு பேருக்கு ஏற்ற இடமில்லையே, ம்? 23 00:01:23,668 --> 00:01:27,005 கிளம்பத்தான் போகிறேன்! 24 00:01:27,005 --> 00:01:29,507 இனிய நாளாக அமையட்டும். 25 00:01:30,592 --> 00:01:31,968 வெளியே காற்றடிக்கிறது. 26 00:01:31,968 --> 00:01:33,678 அன்று புயல் காற்று வீசிய பிறகு, 27 00:01:33,678 --> 00:01:36,890 மீதமிருக்கும் காற்று எல்லாவற்றையும் பறக்க வைக்கிறது. 28 00:01:36,890 --> 00:01:39,184 புயல் காற்று பற்றித்தான் எல்லோரும் பேசுகிறார்கள். 29 00:01:39,184 --> 00:01:42,604 “காற்று இதை அடித்துச் சென்றது.” “காற்று அதை அடித்துச் சென்றது.” 30 00:01:42,604 --> 00:01:44,814 -“ஹாய், ரெட்.” - கடைசியாக சொன்னது போகி பற்றியா? 31 00:01:44,814 --> 00:01:46,066 ஆமாம். 32 00:01:46,066 --> 00:01:47,692 ஹாய், ரெட். 33 00:01:47,692 --> 00:01:49,903 ஆனால் அது முக்கியமில்லை. 34 00:01:49,903 --> 00:01:51,780 இன்று டிவிஸ்ட்டி-டர்னி-தான். 35 00:01:51,780 --> 00:01:57,452 ஃப்ராகெல் ராக்கின் திரும்பி, குதித்து, ஓடும் ரேஸ். 36 00:01:57,452 --> 00:02:00,205 அதனால்தான் பரிசு பொருட்கள் வைக்கும் உன் அலமாரியில் இடம் உண்டாக்குகிறாய். 37 00:02:00,205 --> 00:02:04,459 சரிதான். இந்த பந்தயப் பாதை எனக்குத் தெளிவாகத் தெரியும். 38 00:02:04,459 --> 00:02:06,670 அதோ அங்கே இருப்பது, பின்புறம். 39 00:02:07,587 --> 00:02:09,338 அல்லது அது பின்புறமா? நான்... 40 00:02:09,338 --> 00:02:11,091 நானும் பந்தயத்தில் கலந்துகொள்ள ஆர்வமாக உள்ளேன். 41 00:02:11,091 --> 00:02:15,095 என்னுடைய கலை நயமிக்க எதிர்பார்ப்புகளுக்கு எதிராக. 42 00:02:15,095 --> 00:02:18,515 சரி, அதைவிட நீ வேறு ஏதாவது தகவல் சொல்ல வேண்டும். 43 00:02:19,516 --> 00:02:22,644 பந்தயம் நடக்கும்போதே நான் அதை வரையப் போகிறேன். 44 00:02:22,644 --> 00:02:26,439 நான் ஓடிக்கொண்டே கலை உருவாக்கப் போகிறேன். 45 00:02:26,439 --> 00:02:29,985 பிரபஞ்சமே, இந்த திறமைகளுக்காக, உனக்கு நன்றி. 46 00:02:29,985 --> 00:02:33,113 ஒரு சிகப்பு பொட்டு வரையத் தயாராகு 47 00:02:33,113 --> 00:02:35,824 ஏனெனில் நான் நகரப் போகிறேன். 48 00:02:45,083 --> 00:02:48,962 இந்தக் காற்று ஒரு முறை வீசினாலே, நிறைய சுத்தம் செய்ய வேண்டும். 49 00:02:51,006 --> 00:02:53,592 ஹே, இதை நான் பழகிக்கொள்ளலாம் போலும். 50 00:02:54,718 --> 00:02:56,428 திரும்பு, இடப்பக்கம் திரும்பு, குதி, 51 00:02:56,428 --> 00:02:58,221 வலப்பக்கம் திரும்பு, இரண்டு முறை. 52 00:02:58,722 --> 00:03:01,391 ரெட், பந்தயம் இன்னும் தொடங்கவில்லை என்று தெரியும் தானே? 53 00:03:01,391 --> 00:03:02,475 ஓ, தெரியுமே. 54 00:03:02,475 --> 00:03:06,897 ஒவ்வொரு திருப்பத்தையும் மனதில் யோசித்துக் கொண்டிருக்கிறேன். 55 00:03:06,897 --> 00:03:08,189 பெருக்க வருகிறேன். 56 00:03:08,690 --> 00:03:10,984 இன்று, நம் இருவருக்குமே முக்கியமான நாள். 57 00:03:10,984 --> 00:03:13,778 என் டிராவலிங் மாட் மாமாவிடம் இருந்து முதல் புது கலைப்பொருளை பெறப் போகிறேன், 58 00:03:13,778 --> 00:03:16,114 - பிறகு கார்குகளிடம் பேசப் போகிறேன். - இரு. 59 00:03:16,114 --> 00:03:18,450 - நீ பந்தயத்தில் கலந்துகொள்ளவில்லையா? - இந்த வருடம் இல்லை. 60 00:03:18,450 --> 00:03:20,493 அதாவது, கார்குகளிடம் ஏதோ சில குழப்பங்கள் இருக்கின்றன. 61 00:03:20,493 --> 00:03:22,829 நாம் எதிரிகளாக இருந்தோம், பிறகு நண்பர்களானோம். 62 00:03:22,829 --> 00:03:24,080 ஆனால் இப்போது என்னவாக உள்ளோம்? 63 00:03:24,080 --> 00:03:26,082 நான் ஜூனியரிடம் பேசப் போகிறேன். 64 00:03:26,082 --> 00:03:29,544 ஓ, கோபோ, பந்தயத்தில் கலந்துகொள்ளவில்லை என்றால் 65 00:03:29,544 --> 00:03:31,588 உனக்கு பதில் யாரையாவது தேர்ந்தெடுக்கணும் என்பது விதி. 66 00:03:32,088 --> 00:03:33,715 சரி, பூபர், நான் உன்னைத் தேர்ந்தெடுக்கிறேன். 67 00:03:33,715 --> 00:03:34,925 - என்ன? - ஜாலியாக இரு, நண்பா. 68 00:03:37,344 --> 00:03:38,345 ஓ, பூபர். 69 00:03:39,012 --> 00:03:41,431 விதிகளை மதிப்பது, மீண்டும் பிரச்சினையில் சிக்க வைத்துவிட்டது. 70 00:03:46,519 --> 00:03:48,855 இந்தக் காற்றுவீச்சு வேகமாக இருக்கிறது. 71 00:03:49,564 --> 00:03:50,982 அவற்றை நான், “காற்றுவீச்சு” என்கிறேன். 72 00:03:50,982 --> 00:03:54,486 முதலில் அதைப் பார்த்து பயந்தேன், பிறகு அவை அருமையானவை என்று புரிந்தது. 73 00:03:54,486 --> 00:03:56,154 அவை என்னை பல இடத்திற்கும் அழைத்துச் சென்று 74 00:03:56,154 --> 00:03:58,615 சுவாரஸ்யமான விஷயங்களை காட்டியிருக்கின்றன. 75 00:03:58,615 --> 00:04:00,575 இந்த கிச்சுகிச்சு பூ போல. 76 00:04:03,453 --> 00:04:04,829 நானும் உனக்கு கிச்சுகிச்சு மூட்டப் போகிறேன். 77 00:04:06,831 --> 00:04:09,709 பந்தயத்திற்கு நேரமாகிவிட்டது. நீ ஓடுகிறாயா? 78 00:04:09,709 --> 00:04:13,046 தெரியவில்லை. இப்போது இதைச் செய்கிறேன், அடுத்து என்ன நடக்கும் என பார்க்கலாம். 79 00:04:13,046 --> 00:04:16,925 - கிச்சுகிச்சு மூட்டுகிறது. - ஐயோ. ஆரம்பிக்கும் இடத்திற்குப் போகலாம். 80 00:04:16,925 --> 00:04:18,969 உற்சாகமாக இருக்கிறாய், ரெட். 81 00:04:18,969 --> 00:04:22,556 ஓடிக் கொண்டே வரைவது எனக்கு மிகவும் இயல்பானதாகத் தோன்றுகிறது. 82 00:04:24,391 --> 00:04:27,811 வரைவது சவாலான விஷயம் என்று எனக்கு காட்டியதற்கு நன்றி, பாறையே. 83 00:04:33,441 --> 00:04:35,318 நான் நலம்தான், என்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம். 84 00:04:39,072 --> 00:04:40,198 அதோ இருக்கிறது. 85 00:04:40,865 --> 00:04:42,576 முதல் புதிய கலைப்பொருள். 86 00:04:42,576 --> 00:04:44,869 ஸ்புராக்கி, நேரமாகிவிட்டது எழுந்திரு. 87 00:04:46,329 --> 00:04:47,330 ஓ, ஸ்புராக். 88 00:04:47,330 --> 00:04:50,208 இது சீக்கிரம் என்று தெரியும், ஆனால் ஆய்வகத்தின் நேரம் மாறியிருப்பதால், 89 00:04:50,208 --> 00:04:53,211 நீ புது நேரத்திற்கு பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். 90 00:04:54,170 --> 00:04:55,547 நாமிருவரும்தான். 91 00:04:56,798 --> 00:04:57,883 {\an8}இந்தா, நண்பா. 92 00:05:11,062 --> 00:05:12,063 அடடா. 93 00:05:12,063 --> 00:05:15,525 ஃப்ராகெல் ராக்கை மேம்படுத்த என் மாட் மாமா அனுப்பிய புதிய கலைப்பொருள். 94 00:05:16,026 --> 00:05:17,068 இது என்னவென்று தெரியவில்லை. 95 00:05:24,492 --> 00:05:26,369 ஹே, அதோ இருக்கிறான். 96 00:05:26,369 --> 00:05:29,623 யார் எழுந்து நின்று குரைப்பது என்று பாரு. நீ மிகவும் ஆர்வமாக இருக்கிறாயா? 97 00:05:38,089 --> 00:05:40,634 சரி, நாம் பந்தயத்தை ஆரம்பிக்கலாம். 98 00:05:40,634 --> 00:05:43,511 யாராவது, “வண்ண வர்ணனை” என்றீர்களா? 99 00:05:43,511 --> 00:05:46,514 நிச்சயம் யாரும் அப்படி சொல்லவில்லை. 100 00:05:46,514 --> 00:05:49,267 டிவிஸ்ட்டி-டர்னத்தானுக்கு வரவேற்கிறேன், 101 00:05:49,267 --> 00:05:54,481 இந்த பந்தயத்தில் ஃப்ராகெல் திரும்பி, சுற்றி, சிறப்பாகச் செய்யலாம். 102 00:05:54,481 --> 00:05:58,568 நான் பேர்ரி ப்ளூபெர்ரி, நான் இங்கே வண்ண வர்ணனை செய்ய வந்துள்ளேன். 103 00:05:58,568 --> 00:06:01,571 அந்த வண்ணம் என்னவென்றால், நீலம். 104 00:06:01,571 --> 00:06:02,948 ஹாய்! 105 00:06:02,948 --> 00:06:06,409 பேர்ரி, நாம் இருவருமே வர்ணனை சொல்லப் போகிறோம். 106 00:06:06,409 --> 00:06:07,827 மகிழ்ச்சி! 107 00:06:07,827 --> 00:06:11,498 வேறு யாரு? இது என் பழைய நண்பன், ஷெர்ரி கான்ட்ரெரி. 108 00:06:11,498 --> 00:06:15,126 இந்த நேரத்தில் நீ பொதுவாக ஸ்கூப் நீர்வீழ்ச்சியில் விடுமுறைக்கு சென்றிருப்பாய் தானே? 109 00:06:15,126 --> 00:06:18,463 உண்மையில், அந்தப் புயல்காற்று என் பயணத்தை தடுத்துவிட்டது, பேர்ரி. 110 00:06:18,463 --> 00:06:22,092 அதனால் இந்த நிகழ்ச்சியை செய்ய உனக்கு உதவுகிறேன். 111 00:06:22,092 --> 00:06:25,428 அது ரொம்பவும் மகிழ்ச்சி, இல்லை? 112 00:06:30,559 --> 00:06:34,479 என்னை ஃப்ராகெல் கீதம் பாடச் சொல்லியிருக்கிறார்கள். 113 00:06:34,479 --> 00:06:36,189 யார் சொன்னார்கள், ஷெர்ரி? 114 00:06:36,189 --> 00:06:41,820 என் இதயத்தில் ஒரு ராக் இருக்கிறது 115 00:06:41,820 --> 00:06:46,575 பூமிக்கடியில் ஒரு இடம் இருக்கிறது 116 00:06:47,075 --> 00:06:50,954 அங்கு அன்புதான் எல்லாமாக இருக்கும் 117 00:06:50,954 --> 00:06:52,038 சீக்கிரம் முடிந்துவிடும். 118 00:06:52,038 --> 00:06:56,209 ஹா-ஹா, என்ற சிரிப்பு சத்தம்தான் கேட்கும் 119 00:06:56,209 --> 00:06:57,836 அது உண்மையான கீதம் போல தெரியவில்லை. 120 00:06:57,836 --> 00:07:01,590 ஃப்ராகெல் ராக்கில் 121 00:07:02,382 --> 00:07:09,389 சத்தம் 122 00:07:12,350 --> 00:07:15,395 சரி, ஷெர்ரி, பாடியதற்காக நன்றி. 123 00:07:16,021 --> 00:07:17,022 அருமையாக இருந்தது. 124 00:07:17,022 --> 00:07:19,399 பந்தயத்தில் ஓடுபவர்கள், விசில் வண்டு கத்தியவுடன், ஓடவும். 125 00:07:19,399 --> 00:07:21,067 ஓ, விசில் வண்டு. 126 00:07:24,195 --> 00:07:25,196 விசில். 127 00:07:25,780 --> 00:07:27,115 ஓட ஆரம்பித்துவிட்டார்கள். 128 00:07:27,908 --> 00:07:29,576 இதோ! 129 00:07:30,076 --> 00:07:32,162 மண்ணை கவ்வுங்கள், இளம் ஃப்ராகெல்களே. 130 00:07:32,162 --> 00:07:35,081 - டிவிஸ்ட்டி-டர்னத்தான் தொடங்கிவிட்டது. - அற்புதம். நல்ல ஓட்டம். 131 00:07:35,081 --> 00:07:37,125 அவள் ஆர்வமாக இருக்கிறாள். ஓடுவதைப் பாரு. 132 00:07:37,125 --> 00:07:39,586 எல்லோரும், ஓடுங்கள். சிறப்பாக செய்கிறீர்கள். 133 00:07:42,797 --> 00:07:44,007 அங்கே ஒருவருக்கு காயம் ஏற்பட்டிருக்கு. 134 00:07:44,507 --> 00:07:46,259 என் தோள்பட்டையை சிராய்த்துக் கொண்டேன். 135 00:07:47,510 --> 00:07:48,720 என் தோள்பட்டையை சிராய்த்துக் கொண்டேனா? 136 00:07:49,221 --> 00:07:52,098 இப்போது நான் ஓய்வெடுக்கலாம் போலும். ஆமாம்! 137 00:07:53,767 --> 00:07:55,560 அதாவது, என்... தோள்பட்டை. 138 00:07:55,560 --> 00:07:57,896 அதை நான் சிராய்த்துக்கொண்டேன். 139 00:07:58,855 --> 00:08:00,023 ஒன்றுமில்லை, பூபர். 140 00:08:00,023 --> 00:08:02,525 நீ விழவந்தாய், ஆனால் எழுந்து விட்டாய். 141 00:08:02,525 --> 00:08:05,445 அதைக் கொண்டாடு, பூபர்! அதைக் கொண்டாடு! 142 00:08:05,445 --> 00:08:09,324 திரும்பு. குதி. இடது பக்கம். குதி. 143 00:08:09,324 --> 00:08:12,911 வலது பக்கம். குதி. இடது. குதி. 144 00:08:12,911 --> 00:08:16,248 வலது. குதி. வழுக்கு. 145 00:08:18,291 --> 00:08:21,086 - ஏன் நிற்கிறாய்? - அட, சரி. ஓடுகிறேன். 146 00:08:21,086 --> 00:08:23,338 ஒருவன் ஓடி வந்து என்னைத் தோற்கடிக்கப் பார்த்தான் 147 00:08:23,338 --> 00:08:25,507 “ரெட் உன்னால் அதை எதிர்க்க முடியாது” என எல்லோரும் சொன்னார்கள் 148 00:08:25,507 --> 00:08:29,135 ஆனால் வ்ஹோ-ஓ-ஓ நான் சிறப்பானவள் என்று எனக்குத் தெரியும் 149 00:08:30,595 --> 00:08:33,306 ஒப், பாப், டூடுலி-பாப் என்னால் முடியும் என்று காட்டினேன் 150 00:08:35,100 --> 00:08:37,686 ஒருவன் டம்-டம்-டம் என்று டிரம்ஸை அடிக்க ஆரம்பித்தான் 151 00:08:37,686 --> 00:08:40,105 என்னிடம், “ஃப்ராகெல் பெண்ணே, நீ ஜெயிக்க முடியாது” என்றான் 152 00:08:40,105 --> 00:08:43,483 ஆனால் வ்ஹோ-ஹோ-ஹோ நான் சிறப்பானவள் என்று எனக்குத் தெரியும் 153 00:08:44,693 --> 00:08:47,821 ஓ-வோ-வோ-வோ-வோ என்னால் முடியும் என்று அவர்களுக்குக் காட்டினேன் 154 00:08:49,239 --> 00:08:50,865 நாம் திறமைசாலியாக இருக்க வேண்டும் 155 00:08:50,865 --> 00:08:52,075 திடமாக இருக்க வேண்டும் 156 00:08:52,075 --> 00:08:55,704 திறமை இருக்கும்போது தவறு எதுவும் செய்ய மாட்டோம் 157 00:08:56,663 --> 00:08:58,999 வ்ஹு-ஹூ-ஹூ 158 00:08:58,999 --> 00:09:00,875 இது ரெட் ஃப்ராகெல் 159 00:09:00,875 --> 00:09:02,419 இதோ வருகிறாள் 160 00:09:02,419 --> 00:09:03,545 கவனித்துப் பாரு 161 00:09:03,545 --> 00:09:04,629 வ்ஹு-ஹூ 162 00:09:06,214 --> 00:09:08,967 பெரிய தொப்பி போட்ட ஒருவன் வந்தான் 163 00:09:08,967 --> 00:09:11,219 “ஃப்ராகெல் பெண்ணே, நீ இதை மிஞ்ச முடியாது” என்றான் 164 00:09:11,219 --> 00:09:14,472 ஆனால் ஓ-ஹோ, நான் சிறப்பானவள் என்று எனக்குத் தெரியும் 165 00:09:15,849 --> 00:09:17,726 ஓ-வோ-வோ-வோ-வோ 166 00:09:17,726 --> 00:09:18,935 என்னால் முடியும் என்று காட்டினேன் 167 00:09:20,896 --> 00:09:24,649 ஓ-ஓ நான் சிறப்பானவள் என்று எனக்குத் தெரியும் 168 00:09:27,652 --> 00:09:30,488 இந்தப் பாறைகளை, காற்றுதான் என் பந்தயப் பாதையில் போட்டிருக்க வேண்டும். 169 00:09:30,488 --> 00:09:34,242 ஆனால் நான் என் பாதையை மாற்றப் போவதில்லை. 170 00:09:41,499 --> 00:09:42,751 ஹாய். 171 00:09:42,751 --> 00:09:46,004 வெம்ப்ளே, நீ இங்கே என்ன செய்கிறாய்? 172 00:09:46,004 --> 00:09:49,549 நான் நடனமாடிக் கொண்டிருந்தேன், ஒரு காற்றுவீச்சு என்னை வழுக்கும் குளத்தில் தள்ளியது. 173 00:09:49,549 --> 00:09:51,509 அப்போது இந்த அழகான கொடியைப் பார்த்தேன், 174 00:09:51,509 --> 00:09:54,095 அதைப் பிடித்து ஊஞ்சலாடினேன் 175 00:09:54,095 --> 00:09:55,639 இங்கே வந்து விட்டேன். 176 00:09:55,639 --> 00:09:59,476 நீயும் நானும், இங்கிருக்கிறோம் என்றால்... 177 00:09:59,476 --> 00:10:02,979 சரிதான், நண்பர்களே. ரெட் மற்றும் வெம்ப்ளேவிற்கு ஆட்டம் டையாகிவிட்டது. 178 00:10:03,480 --> 00:10:06,816 உண்மையில் பேர்ரி, இருவரும் சமம் என்று அர்த்தம். 179 00:10:07,567 --> 00:10:09,819 மிக்க நன்றி, ஷெர். 180 00:10:12,239 --> 00:10:15,909 மன்னிக்கவும், ரெட், உன் வெறுப்பை வேறு விதத்தில் காண்பிக்கிறாயா? 181 00:10:15,909 --> 00:10:17,953 உன் முகத்தை சரியாகப் பார்க்க முடியவில்லை. 182 00:10:20,580 --> 00:10:23,875 காட்டர்பின், அந்த டர்பைனில் சிறப்பாக வேலை செய்திருக்கிறாய். 183 00:10:23,875 --> 00:10:25,252 உனக்கு தலைவணங்கி மரியாதை செலுத்துவேன் 184 00:10:25,252 --> 00:10:29,256 ஆனால் போன வாரக் கடைசியில் நான் கேவலமாக முடி வெட்டியிருப்பதை நீ பார்த்துவிடுவாய். 185 00:10:29,923 --> 00:10:30,924 நன்றி, சார். 186 00:10:30,924 --> 00:10:34,844 ஆனால் காற்று இல்லாமல் அந்த டர்பைனால் நமக்கு மின்சாரம் கொடுக்க முடியாது. 187 00:10:34,844 --> 00:10:38,098 இந்த காற்றுவீச்சையும் கணிக்க முடியாது. 188 00:10:38,098 --> 00:10:41,309 வீசிய காற்றைப் பிடிக்க விரைந்தோம், ஆனால், பிடிக்க முடியவில்லை. 189 00:10:41,810 --> 00:10:43,603 எப்போது வீசும் என்று காற்றே நம்மிடம் சொன்னால் நன்றாக இருக்கும். 190 00:10:43,603 --> 00:10:47,315 ஓ, ஆமாம். அது நன்றாக இருக்கும். அதாவது, “ஹே, நாங்கள் வருகிறோம். 191 00:10:47,315 --> 00:10:49,442 உங்கள் டர்பைனை தயாராக வையுங்கள்” என்று சொல்லலாம். 192 00:10:50,819 --> 00:10:53,196 அது நல்ல யோசனைதான். 193 00:10:53,697 --> 00:10:57,826 அவை வருவதை முன்கூட்டியே சொல்ல ஏதாவது வழி இருக்கலாம். 194 00:10:58,493 --> 00:11:00,203 ஏதாவது ஒன்றை பின்தொடர்ந்து போய் பார்க்கலாம். 195 00:11:01,162 --> 00:11:03,081 சாலை பயணம்! 196 00:11:03,081 --> 00:11:05,292 வழியில் நிறுத்தி ஒரு விக் வாங்கிக்கொள்ளலாமா? 197 00:11:05,292 --> 00:11:08,253 என் ஹேர்கட் மோசமாக இருப்பதாக உணர்கிறேன். 198 00:11:09,921 --> 00:11:11,548 குடி, ஜூனியரின் ஜூனியர், 199 00:11:11,548 --> 00:11:16,636 அப்போது நீ உன் அப்பா, ஜூனியரின் சீனியர் போல பெரிதாக வளரலாம். 200 00:11:19,681 --> 00:11:20,682 ஹாய், ஜூனியர். 201 00:11:22,642 --> 00:11:24,352 மன்னித்துவிடு. இதோ, நான்... 202 00:11:26,354 --> 00:11:28,315 ஜூனியர், நீ நலமா? 203 00:11:28,940 --> 00:11:31,026 ஏன்... எதற்காக நான் அமைதியாக இருக்க வேண்டும்? 204 00:11:31,026 --> 00:11:33,862 ஜூனியர்! நாம் பேச வேண்டும். 205 00:11:34,487 --> 00:11:35,697 என்ன... 206 00:11:35,697 --> 00:11:39,576 ஜூனியர், என்ன நடக்கிறது? 207 00:11:41,912 --> 00:11:43,038 என்ன சத்தம்? 208 00:11:43,038 --> 00:11:46,333 ஒன்றுமில்லை. நான் வேடிக்கையான குரல்களில் பேசி, பயிற்சி செய்துக் கொண்டிருந்தேன். 209 00:11:46,833 --> 00:11:49,753 என்ன நடக்கிறது? 210 00:11:50,378 --> 00:11:51,838 அவ்வளவு மோசமாக இல்லை. 211 00:11:52,339 --> 00:11:54,049 என்னால் இன்னும் நன்றாகச் செய்ய முடியும். 212 00:11:54,549 --> 00:11:57,552 என்ன நடக்கிறது? 213 00:11:57,552 --> 00:11:59,971 ஆமாம், பார்த்தாயா? நீ பயிற்சி செய்ய வேண்டும். 214 00:11:59,971 --> 00:12:02,474 இனி ஃப்ராகெல்களோடு பழகக் கூடாது என்று 215 00:12:02,474 --> 00:12:06,937 நான் சொன்னபோது நீ ஏமாற்றமடைந்தாய்... 216 00:12:06,937 --> 00:12:09,064 - என்ன? - ...ஆனால் நான் யோசித்தேன். 217 00:12:09,064 --> 00:12:10,065 அப்படியா? 218 00:12:10,565 --> 00:12:16,321 ஃப்ராகெல்களைப் வெறுக்கும் எல்லா காரணங்களையும் நான் விளக்கிச் சொன்னால் உனக்குப் புரியலாம். 219 00:12:17,072 --> 00:12:20,408 ஒன்று, அவை மிகவும் சிறியதாக இருப்பதால், நம்மால் பார்க்க முடியாது. 220 00:12:20,408 --> 00:12:22,035 - ஆனா... - அவை என்னதான் செய்கின்றன? 221 00:12:22,535 --> 00:12:25,038 இரண்டாவது, அவற்றின் வால் ஏன் அப்படி இருக்கிறது? 222 00:12:25,038 --> 00:12:29,042 மூன்றாவது... வந்து, மூன்றாவது ஒரு கருத்து இருந்தது. 223 00:12:29,626 --> 00:12:31,628 அரசே, 224 00:12:31,628 --> 00:12:36,174 நீங்கள் உங்கள் காலை உணவை சாப்பிட்டு முடிக்கவில்லை. 225 00:12:36,716 --> 00:12:40,136 ஓ, சரி, அதனால்தான் நான் மறந்து போயிருப்பேன். 226 00:12:40,136 --> 00:12:43,223 வயிறு நிறைந்திருக்கும்போது நான் திரும்பி வருகிறேன். 227 00:12:44,432 --> 00:12:46,935 அந்த ஃப்ராகெல்களை விட்டு விலகியே இரு. 228 00:12:47,602 --> 00:12:49,104 மன்னித்துவிடு. 229 00:12:49,104 --> 00:12:50,564 திரும்பு. 230 00:12:51,773 --> 00:12:55,402 குதி, வலது பக்கம் திரும்பு. 231 00:12:56,444 --> 00:12:57,445 இடது பக்கம் திரும்பு. 232 00:12:59,531 --> 00:13:03,994 ஓ-ஹோ! காற்று சில “அவுச்சி கோன்களை” வழியில் வீசியிருக்கிறது. 233 00:13:03,994 --> 00:13:07,706 பேர்ரி, அவற்றை “ஊச்சி கோன்” என்று உச்சரிக்க வேண்டும். 234 00:13:08,248 --> 00:13:10,792 நீ இல்லாமல் நான் என்ன செய்வேன், ஷெர்ரி? 235 00:13:13,503 --> 00:13:16,339 ஹே, ரெட்! இந்தப் பக்கம் வா. துள்ளும் காளான்கள்! 236 00:13:16,339 --> 00:13:19,134 அவை இலைகளால் மூடப்பட்டிருந்தன, ஆனால் காற்று விலக்கிவிட்டது. 237 00:13:19,134 --> 00:13:23,555 வெம்ப்ளே, இந்த முட்டாள் காற்றினால் நான் என் பாதையை விட்டு விலகமாட்டேன். 238 00:13:23,555 --> 00:13:26,099 இதுதான் சரியான பாதை. 239 00:13:26,683 --> 00:13:29,144 ஊச்சி! 240 00:13:29,144 --> 00:13:32,564 ஊச்சி. 241 00:13:32,564 --> 00:13:33,982 - ஊச்சி. - சரி. 242 00:13:33,982 --> 00:13:36,985 - நான் இந்தப் பாதையில் போகிறேன். - ஊச்சி. 243 00:13:38,236 --> 00:13:39,237 ஊச்சி. 244 00:13:40,947 --> 00:13:45,952 போ, வெம்ப்ளே! போ! போ, போ, போ! 245 00:13:45,952 --> 00:13:49,414 இரு. உன் தோளில் அடிபட்டதால் தானே நீ பந்தயத்தை விட்டு விலகினாய்? 246 00:13:49,915 --> 00:13:52,334 ஆனால் இப்போது நன்றாக கையை ஆட்டுகிறாய். 247 00:13:52,334 --> 00:13:56,046 ஆமாம். என் டாக்டர் செய்யச் சொன்னார். அப்போதுதான் குணமாகுமாம். 248 00:13:56,046 --> 00:13:58,131 அப்படியா? உன் டாக்டர் யாரு? 249 00:13:58,131 --> 00:14:00,884 என்ன? என் நோயாளியைத் தொந்தரவு செய்யாதே. 250 00:14:00,884 --> 00:14:02,552 அவன் குணமாக முயல்கிறான். 251 00:14:04,387 --> 00:14:05,388 ஆமாம். 252 00:14:08,808 --> 00:14:10,018 ஹே, ஸ்புராக்கி. 253 00:14:12,979 --> 00:14:15,565 என்ன இது... செல்லம். 254 00:14:15,565 --> 00:14:18,276 இது நாம் கடற்கரையில் பால் விளையாடும் நேரம் என்று எனக்குத் தெரியும், 255 00:14:18,276 --> 00:14:21,821 அந்நேரத்தில் என் கண்ணில் தூசி விழும்போது நீ என்னை வீட்டிற்கு அழைத்து வருவாய் 256 00:14:22,489 --> 00:14:24,407 நான் வேலைக்கு போக வேண்டும் 257 00:14:25,575 --> 00:14:27,994 எனக்கு ஏற்ற ஒரே கால நேரம் இதுதான். 258 00:14:27,994 --> 00:14:31,206 நான் இங்கே இல்லாவிட்டாலும் 259 00:14:32,290 --> 00:14:33,833 ஓய்வு நேரத்தின்போது உன்னைப் பார்க்கிறேன். 260 00:14:35,919 --> 00:14:37,170 ஹலோ, ஸ்புராக்கெட். 261 00:14:37,170 --> 00:14:40,131 நான் இங்கு இல்லை, ஆனால் இங்கு இருக்கிறேன். 262 00:14:40,131 --> 00:14:42,592 இரு, இப்போது இங்கேயும் இங்கேயும் இருக்கிறேன். 263 00:14:42,592 --> 00:14:44,135 இது அருமை, இல்லையா? 264 00:14:45,762 --> 00:14:47,347 இது கடினம் என்று தெரியும். 265 00:14:47,347 --> 00:14:50,809 அந்த புது கால அட்டவணையில் இருந்து நல்லது ஏதாவது நடக்கலாம். 266 00:14:51,476 --> 00:14:53,228 பிறகு சந்திக்கலாம், நண்பா. 267 00:15:04,906 --> 00:15:05,865 ஆமாம்! 268 00:15:05,865 --> 00:15:09,119 பாலத்தைத் தாண்டியதும் இறுதிக் கோடு வந்துவிடும். 269 00:15:09,119 --> 00:15:12,664 வெற்றி பெறுவதற்கு என் பாதையை மாற்றத் தேவையில்லை என்று தெரியும். 270 00:15:15,834 --> 00:15:19,254 சரி. நீ இந்தப் பக்கம் போகக் கூடாது, ரெட். 271 00:15:21,214 --> 00:15:22,757 நாம் அப்படி போகலாமே? 272 00:15:22,757 --> 00:15:26,177 ஒருவேளை புயல் காற்று நமக்காக ஒரு நல்ல பாதையை அமைத்திருக்கலாம், ம்? 273 00:15:26,177 --> 00:15:30,974 வெம்ப்ளே, கடைசியாகச் சொல்கிறேன், நான் தடத்தின் வழியில்தான் போவேன். 274 00:15:30,974 --> 00:15:34,311 உன்னைப் போல, நான் காற்றோடு மிதந்துகொண்டு போக மாட்டேன். 275 00:15:34,311 --> 00:15:36,104 - என்ன? ரெட். - கிளம்புகிறேன். 276 00:15:36,104 --> 00:15:37,772 நான் அப்படிச் செய்யவில்லை. 277 00:15:40,150 --> 00:15:41,902 ஜாக்கிரதை, ரெட். மெதுவாகப் போ. 278 00:15:43,153 --> 00:15:45,363 ஐயோ. 279 00:15:45,363 --> 00:15:47,490 கொஞ்சம் நகராமல் இரு! 280 00:15:47,490 --> 00:15:50,201 நகராமல் இரு! நான் எதாவது யோசிக்கிறேன். 281 00:15:53,204 --> 00:15:55,749 கவலைப்படாதே, ரெட். உன்னைக் கைவிட மாட்டேன். 282 00:16:06,635 --> 00:16:09,804 நான் பந்தயத்தில் வெற்றி பெற முடியாது. 283 00:16:14,309 --> 00:16:17,187 நன்றி, வெம்ப்ளே, ஆனால், நீ இப்போது விடலாம். 284 00:16:17,187 --> 00:16:20,106 சரி. நான் விடமாட்டேன் என்று வாக்கு கொடுத்ததால், விடலாமா என தெரியவில்லை. 285 00:16:20,899 --> 00:16:23,568 இப்போது விடலாம் என்று புரிகிறது. சரி. 286 00:16:23,568 --> 00:16:27,155 நண்பர்களாக இருக்க எனக்கு ஆசைதான், ஆனால், என் அப்பா விட மறுக்கிறார்! 287 00:16:27,155 --> 00:16:29,032 நான் என்ன செய்வது? 288 00:16:29,950 --> 00:16:31,618 அது சற்று கஷ்டம்தான், நண்பா. 289 00:16:32,244 --> 00:16:34,621 நட்பு ரீதியான, ரொம்ப கஷ்டமான விஷயம். 290 00:16:37,874 --> 00:16:40,001 ஹே. எனக்கு எப்போது குழப்பம் ஏற்பட்டாலும், 291 00:16:40,001 --> 00:16:42,837 என் டிராவலிங் மாட் மாமாவின் தபால் அட்டையைப் படிப்பேன். 292 00:16:42,837 --> 00:16:44,881 டிராவலிங் மாட் மாமாவின் எதை? 293 00:16:45,423 --> 00:16:47,509 வந்து, நான் அதைப் படித்தே காட்டுகிறேனே. 294 00:16:48,051 --> 00:16:49,052 சரி. 295 00:16:49,052 --> 00:16:50,720 “அன்புள்ள மருமகன் கோபோ...” 296 00:16:51,304 --> 00:16:54,891 ஃப்ராகெல் ராக்கை மேம்படுத்தும் பயணத்தில் நான் ஒரு அற்புதமான இடத்திற்கு வந்தேன். 297 00:16:59,229 --> 00:17:01,273 அறிவற்ற உயிரினத்தின் வேலை இடம். 298 00:17:01,273 --> 00:17:03,692 பாவம் அந்த அறிவற்ற உயிரினங்கள் அதிகம் வேலை செய்வதால், 299 00:17:03,692 --> 00:17:06,151 மோனோ ரயிலில் வீட்டுக்குத் திரும்பும்போது அலறிக் கொண்டே இருந்தார்கள். 300 00:17:07,027 --> 00:17:08,029 ரொம்பவும் பாவம். 301 00:17:09,072 --> 00:17:12,074 வேலைக்காகவில்லை என்றாலும், அவர்கள் தங்கள் வேலைகளை, 302 00:17:12,074 --> 00:17:14,285 பழையபடி செய்துகொண்டே இருந்தார்கள். 303 00:17:14,285 --> 00:17:17,205 அதிர்ஷ்டவசமாக, எப்படிச் செய்வதென்று அவர்களுக்கு காட்ட நான் அங்கிருந்தேன். 304 00:17:17,706 --> 00:17:18,540 நான் செய்யவா? 305 00:17:30,468 --> 00:17:32,012 அவர்களுக்கு ரொம்ப பிடித்ததால், 306 00:17:32,012 --> 00:17:35,181 எனக்குப் பொருத்தமான பொருளை பரிசாகக் கொடுக்க விரும்பினார்கள்... 307 00:17:35,181 --> 00:17:36,391 நன்றி. 308 00:17:36,391 --> 00:17:37,976 ...கைதட்டினார்கள். 309 00:17:40,353 --> 00:17:43,023 மிக்க நன்றி, ஆனால் நான் புறப்பட வேண்டுமே! 310 00:17:43,773 --> 00:17:48,111 எனவே, ஃப்ராகெல் ராக்கை மேம்படுத்த, இந்தக் கைதட்டும் கருவியை உனக்கு அனுப்புகிறேன். 311 00:17:48,111 --> 00:17:51,156 அன்பையும், பாராட்டுதலையும் வெளிப்படுத்த இதைப் பயன்படுத்து. 312 00:17:52,240 --> 00:17:55,327 “ஞாபகமிருக்கட்டும், எப்போதும் மாறிக்கொள்ளத் தயாராக இரு. 313 00:17:55,327 --> 00:17:57,162 இப்படிக்கு, அன்புடன் உன் மாமா, டிராவலிங் மாட்.” 314 00:17:58,121 --> 00:17:58,955 புரிகிறது. 315 00:17:58,955 --> 00:18:02,709 அந்த அட்டைதான் உன் மாமா, மேலும், அது உனக்கு அறிவுரை சொல்கிறது. 316 00:18:02,709 --> 00:18:04,544 உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி, மாமா அட்டை. 317 00:18:05,503 --> 00:18:06,504 சரி. 318 00:18:06,504 --> 00:18:08,715 ஆனால், அறிவுரை பொருத்தமானது தானே? 319 00:18:08,715 --> 00:18:12,010 நாம் நம்மை மாற்றிக்கொண்டு சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் இருக்க வேண்டும். 320 00:18:12,010 --> 00:18:13,637 இதை நாம் புரிந்துகொள்ளும்போது, 321 00:18:13,637 --> 00:18:17,015 நம் நட்பை நான் பாராட்டுகிறேன் என்று உனக்குத் தோன்றினால் 322 00:18:17,015 --> 00:18:20,143 உனக்கு நீயே கைதட்டிக்கொள். 323 00:18:21,937 --> 00:18:23,521 ஹே, நன்றி, கோபோ. 324 00:18:24,606 --> 00:18:25,440 மகனே, 325 00:18:25,440 --> 00:18:28,318 மூன்றாவது விஷயம் ஞாபகம் வந்துவிட்டது! 326 00:18:29,236 --> 00:18:30,612 என்னால் முடியும்போது சந்திக்கிறேன், நண்பா. 327 00:18:31,404 --> 00:18:32,739 - பை. - பை. 328 00:18:35,200 --> 00:18:37,661 ஃப்ராகெல்களால்... 329 00:18:39,955 --> 00:18:40,789 பறக்க முடியாது. 330 00:18:40,789 --> 00:18:42,457 ஆமாம், அவற்றால் பறக்க முடியாது. 331 00:18:42,457 --> 00:18:44,209 அது உனக்கு சரியான விஷயமாகத் தோன்றுகிறதா? 332 00:18:44,876 --> 00:18:47,629 சரி, ஒருவேளை அது நீச்சலாக இருக்கலாம். அவற்றால் நீந்த முடியாது. 333 00:18:47,629 --> 00:18:50,131 எனக்கு காலை உணவாக நிறைய லசான்யா வேண்டும். 334 00:18:51,508 --> 00:18:55,262 நாம் இங்கிருந்து வெளியேறி எப்படி பந்தயத்தில் மீண்டும் சேரப் போகிறோம்? 335 00:18:58,348 --> 00:18:59,349 ஹே. 336 00:18:59,349 --> 00:19:01,851 அந்தக் குகையில் இருந்து நல்ல சத்தம் வருகிறது. 337 00:19:01,851 --> 00:19:03,520 நாம் போய் அதைப் பார்க்கலாமா? 338 00:19:03,520 --> 00:19:09,067 வெம்ப்ளே, குகை நமக்கு பின்பக்கம் இருக்கிறது, இறுதிக் கோடு நம் முன்னே இருக்கிறது. 339 00:19:09,067 --> 00:19:11,736 காற்றோடு பறந்ததுபோதும். 340 00:19:11,736 --> 00:19:15,198 நான் முன்னர் சொன்னது போல, நான் அப்படிச் செய்யவில்லை. 341 00:19:15,198 --> 00:19:17,993 இருப்பதை இருப்பது போலவே நான் பார்க்கிறேன், 342 00:19:17,993 --> 00:19:19,411 அவை எப்படி இருந்தது என்று அல்ல. 343 00:19:20,328 --> 00:19:22,455 அதாவது, விஷயங்கள் மாறுகின்றன. 344 00:19:23,373 --> 00:19:25,875 நாம் சற்று வளைந்து கொடுக்க வேண்டும். 345 00:19:25,875 --> 00:19:27,878 நான் வளைந்து கொடுக்கிறேன்தான்! 346 00:19:30,380 --> 00:19:33,258 அருமையாக இருந்தது, ஆனால், நான் அதைச் சொல்லவில்லை. 347 00:19:35,010 --> 00:19:37,220 நான் சாலையைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்புகிறேன் 348 00:19:37,721 --> 00:19:41,641 ஏனென்றால், அது ஒரே மாதிரி இருந்தால் நான் தோற்க மாட்டேன் 349 00:19:41,641 --> 00:19:43,518 அது எங்குப் போகிறது என்று எனக்குத் தெரியும் 350 00:19:44,019 --> 00:19:46,897 எனக்கு பரிச்சயமான வளைவுகளும் நெளிவுகளும் 351 00:19:46,897 --> 00:19:50,275 நம் இதயத்தையும் நம் மனதையும் திறந்து வைத்தால் 352 00:19:50,275 --> 00:19:53,528 நாம் உருவாக்கும் சிக்கல்களை நாமே அவிழ்க்க முடியும் 353 00:19:53,528 --> 00:19:56,489 வாழ்க்கையில் சில சமயம் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும் 354 00:19:56,489 --> 00:19:59,743 எதிரில் இருப்பதை பார்த்து பயப்படாமல், பாதையில் தொடர்ந்து போக வேண்டும் 355 00:19:59,743 --> 00:20:06,207 வாழ்க்கையின் பாதை நம்மை நடத்திச் செல்லும், நமக்கு என்ன கிடைக்கும் என யாருக்கும் தெரியாது 356 00:20:09,085 --> 00:20:13,340 ஆமாம், புதிதாக வருவதை நாம் மனதார வரவேற்க வேண்டும் 357 00:20:13,882 --> 00:20:17,719 எங்கு அழைத்துச் செல்வது என்பதை காற்றே முடிவு செய்யட்டும் 358 00:20:18,887 --> 00:20:22,724 உன் பாதையில் முன்னேறப் பார், எப்போதும் திரும்பிப் பார்க்காதே 359 00:20:22,724 --> 00:20:29,231 ஏனென்றால் நட்சத்திரங்கள் உன்னைக் கண்டுபிடிக்கும் காற்று உன்னை வீடு கொண்டு சேர்க்கும் 360 00:20:31,399 --> 00:20:33,068 வந்து, நான் நினைக்கிறேன்... 361 00:20:33,068 --> 00:20:35,111 யோசிக்காமல் இருப்பது கடினமான விஷயம்தான் 362 00:20:35,111 --> 00:20:37,948 ஆனால் ஆழ்ந்து சுவாசித்து, உன்னால் முடிந்ததைச் செய் 363 00:20:37,948 --> 00:20:40,033 சில சமயம் பிரபஞ்சத்தை நம்ப வேண்டும் 364 00:20:40,033 --> 00:20:42,535 ஏனென்றால் முன்னே என்ன இருக்கிறது, வளைவில் என்ன இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது 365 00:20:42,535 --> 00:20:47,749 வாழ்க்கையின் பாதை நம்மை நடத்திச் செல்லும், நமக்கு என்ன கிடைக்கும் என யாருக்கும் தெரியாது 366 00:20:48,250 --> 00:20:52,504 ஆமாம், புதிதாக வருவதை நாம் மனதார வரவேற்க வேண்டும் 367 00:20:53,004 --> 00:20:57,384 எங்கு அழைத்துச் செல்வது என்பதை காற்றே முடிவு செய்யட்டும் 368 00:20:58,051 --> 00:21:01,930 உன் பாதையில் முன்னேறப் பார், எப்போதும் திரும்பிப் பார்க்காதே 369 00:21:01,930 --> 00:21:06,560 நீ கண்டுபிடிக்க பாதைக்கு அந்த நட்சத்திரங்கள் ஒளி காட்டும் 370 00:21:06,560 --> 00:21:12,107 காற்று உன்னை வீடு கொண்டு சேர்க்கும் 371 00:21:16,736 --> 00:21:18,822 எனக்கு பாதை தெரியாமல் இருக்கலாம் 372 00:21:18,822 --> 00:21:23,034 உன் மனம் சொல்வதைக் கேட்டு நடந்தால் நீ தோற்க முடியாது 373 00:21:23,034 --> 00:21:25,287 அது எங்குப் போகிறது என்று நமக்குத் தெரியாது 374 00:21:25,287 --> 00:21:29,666 ஆனால் நான் எப்போதும் உன் பக்கத்திலேயே இருப்பேன் 375 00:21:34,296 --> 00:21:35,839 - வாவ்! - ஆமாம்! 376 00:21:36,381 --> 00:21:38,466 - அற்புதம். - ஆமாம். 377 00:21:38,466 --> 00:21:42,721 நான் வழக்கமான பழைய பாதையிலேயே ஓடுவதில் கவனம் செலுத்திக் கொண்டே இருந்ததால், 378 00:21:42,721 --> 00:21:45,390 நம்மை மோசமான பாதையில் மாட்ட வைத்தேன். 379 00:21:45,390 --> 00:21:49,436 ஆனால், உன் வழிதான் நமக்கு இதையெல்லாம் காட்டியது. 380 00:21:53,690 --> 00:21:55,609 காற்றுவீச்சைப் போக விடாதே. 381 00:21:56,776 --> 00:21:58,403 அந்த சத்தம் கேட்கிறதா? 382 00:21:58,403 --> 00:22:02,115 தான் வருகிறேன் என்று காற்று சொல்வது போல இருக்கிறது. 383 00:22:02,115 --> 00:22:06,661 ஆமாம். காற்றின் ஆற்றலைப் பெற, நம் டர்பைனை எங்கே வைக்க வேண்டுமென நமக்குத் தெரிந்துவிட்டது. 384 00:22:06,661 --> 00:22:08,705 ஆஹா. அருமையான அணி. 385 00:22:08,705 --> 00:22:10,749 என் அணியை நேசிக்கிறேன். 386 00:22:12,125 --> 00:22:14,461 - ஆர்க்கிடெக்ட் பேஸை அழைக்கிறேன். - பேஸ் பேசுகிறேன். 387 00:22:14,461 --> 00:22:18,632 - என் விக் எனக்கு பிடிச்சிருக்கு. அதாவது என் அணி. - சரி. 388 00:22:19,966 --> 00:22:21,801 இந்த விக் நன்றாக இருக்கிறது, இல்லையா? 389 00:22:21,801 --> 00:22:22,886 சரி. 390 00:22:22,886 --> 00:22:26,723 - சரி, இப்போது எங்கே போகணும், வெம்பள்? - தெரியவில்லை. 391 00:22:28,642 --> 00:22:31,061 - அது மிக அழகாக இருக்கு. - ஆமாம்! 392 00:22:31,061 --> 00:22:34,689 இது நான் வழக்கமாகப் போகும் பாதை இல்லை, எனவே, ஆமாம். 393 00:22:34,689 --> 00:22:35,982 போகலாம். 394 00:22:42,739 --> 00:22:43,698 வாவ்! 395 00:22:44,783 --> 00:22:48,119 - ஓ, வெம்ப்ளே. அது அற்புதமாக இருந்தது! - ஆமாம்! 396 00:22:48,620 --> 00:22:50,372 மறுபடியும் பந்தயப் பாதைக்கு வந்துவிட்டோம். 397 00:22:50,372 --> 00:22:53,625 - இப்பவும் நாம் வெற்றி பெறலாம்! - ஆமாம்! 398 00:22:54,417 --> 00:22:55,835 இங்கே இருக்கிறாயா, ரெட்! 399 00:22:55,835 --> 00:22:57,546 நான் பந்தயத்தை முடிக்க வந்திருக்கிறேன்! 400 00:22:57,546 --> 00:22:59,923 உன் முகத்தை படம் வரைய இதுதான் சரியான கோணம். 401 00:22:59,923 --> 00:23:01,049 ஆமாம்! 402 00:23:02,300 --> 00:23:04,386 இதோ வெற்றியாளர் கிடைத்துவிட்டார், நண்பர்களே! 403 00:23:04,386 --> 00:23:08,557 - மோகீ ஃப்ராகெல்! - என்ன? 404 00:23:11,309 --> 00:23:12,435 - நன்றி. - மோகீ! 405 00:23:12,435 --> 00:23:15,272 நீ பந்தயத்தில் பங்கு பெறக்கூட நினைக்கவில்லை, ஆனால், வெற்றி பெற்றுவிட்டாயா? 406 00:23:15,855 --> 00:23:17,148 இது வந்து... 407 00:23:17,148 --> 00:23:18,942 - மிகப் பொருத்தமானது! - மிகப் பொருத்தமானது! 408 00:23:20,277 --> 00:23:23,196 நான் வெற்றி பெற்றேன் என்று சொல்ல மாட்டேன். 409 00:23:23,196 --> 00:23:26,491 ஆனால் நீ சொல்லலாம், ஏனென்றால் நான் வெற்றி பெற்றேனே! 410 00:23:26,491 --> 00:23:29,119 ஓ, ஆமாம்! இனிமையான ஃப்ராகெல்! 411 00:23:29,119 --> 00:23:30,203 என்ன... 412 00:23:31,871 --> 00:23:34,791 வெற்றியானது என்னைப் பற்றிய இன்னொரு கண்ணோட்டத்தைக் காட்டுகிறது. 413 00:23:34,791 --> 00:23:38,169 இது புதியது, பரவாயில்லை! ஆனாலும், எனக்குப் பிடிச்சிருக்கு! 414 00:23:38,169 --> 00:23:40,797 ஆமாம்! 415 00:23:41,590 --> 00:23:43,341 இது ஒரு இனிமையான தருணம் இல்லையா? 416 00:23:43,341 --> 00:23:46,219 எனக்கு இனிமையைப் பற்றித் தெரியும், நான் பேர்ரி ப்ளூபெர்ரி! 417 00:23:46,219 --> 00:23:48,638 இன்று சிறந்த வண்ண வர்ணனை, பேர்ரி. 418 00:23:48,638 --> 00:23:51,766 இங்கே வந்து உன் நாளைக் கெடுக்கவில்லை என்று நினைக்கிறேன். 419 00:23:51,766 --> 00:23:54,060 அது ஒரு நல்ல அனுசரணை. 420 00:23:54,060 --> 00:23:58,064 ஆனால், கூட ஆள் இருந்தது நன்றாகத்தான் இருந்தது. 421 00:24:03,361 --> 00:24:06,031 எதிர்மறையாக இருக்கக் கூடாது, அதுதான் என் சிறப்பம்சம். 422 00:24:22,923 --> 00:24:25,425 அடடா, ஸ்புராக்கி, உனக்கு புது நண்பன் கிடைத்திருக்கிறான். 423 00:24:25,425 --> 00:24:28,678 நாம் வழக்கமான விஷயத்தைச் செய்திருந்தால் இது எதுவும் நடந்திருக்காது. 424 00:24:28,678 --> 00:24:32,474 பார்த்தாயா? சில சமயம் புது வாய்ப்புகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். 425 00:24:33,058 --> 00:24:35,769 எனக்கு ஹாய் சொல்ல விரும்புகிறாயா? 426 00:24:38,063 --> 00:24:40,357 ஹே. நீ என்ன செய்கிறாய்... ஸ்புராக்கி! 427 00:24:54,371 --> 00:24:55,538 சரி, மோகீ. 428 00:24:55,538 --> 00:24:59,918 டிவிஸ்ட்டி-டர்னி-தானில் நம் இருவருக்குமே ஒரு நல்ல அனுபவம் கிடைத்துவிட்டது. 429 00:25:02,420 --> 00:25:04,839 ஹே. 430 00:25:04,839 --> 00:25:07,384 நானும் வெம்ப்ளேவும் உருவாக்கிய இந்த கேமை விளையாட வருகிறாயா? 431 00:25:07,384 --> 00:25:09,219 அதன் பெயர், “இதை எப்படி விளையாடுவது?” 432 00:25:09,219 --> 00:25:11,471 சரி. இதை எப்படி விளையாடுவது? 433 00:25:11,471 --> 00:25:12,889 ஆமாம்! சரியாகச் சொன்னாய்! 434 00:25:12,889 --> 00:25:14,933 - அதேதான்! - நான் சொல்லிட்டேன்! 435 00:25:14,933 --> 00:25:16,726 சரி, பூபர், இது உன் முறை. 436 00:25:16,726 --> 00:25:17,894 என்ன தெரியுமா? 437 00:25:17,894 --> 00:25:20,939 நான் தோள்பட்டைக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்று என் டாக்டர் சொன்னார். 438 00:25:20,939 --> 00:25:22,607 - அப்படியா? - இல்லை. 439 00:25:22,607 --> 00:25:25,652 - உண்மையில், அவன் நலமாகிவிட்டதாகச் சொன்னேன். - என்ன? 440 00:25:26,403 --> 00:25:28,113 அட, என்ன இது? 441 00:25:28,113 --> 00:25:30,073 என்ன... 442 00:26:53,657 --> 00:26:55,659 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்