1 00:00:27,320 --> 00:00:29,239 உங்கள் கவலைகளை நடனமாடி விரட்டுங்கள் 2 00:00:29,239 --> 00:00:31,408 கவலைகளை வேறு நாளைக்கு ஒத்திப் போடலாம் 3 00:00:31,408 --> 00:00:33,493 இசை முழங்கட்டும் 4 00:00:33,493 --> 00:00:35,412 அங்கே ஃப்ராகெல் ராக்கில் 5 00:00:35,412 --> 00:00:37,706 உங்கள் கவலைகளை களைந்திடுங்கள் 6 00:00:37,706 --> 00:00:39,749 நடனங்களை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 7 00:00:39,749 --> 00:00:41,376 ஃப்ராகெல்கள் விளையாடட்டும் 8 00:00:41,376 --> 00:00:42,419 - நாங்கள்தான் கோபோ. - மோகீ. 9 00:00:42,419 --> 00:00:43,336 - வெம்ப்ளே. - பூபர். 10 00:00:43,336 --> 00:00:44,254 ரெட். 11 00:00:47,757 --> 00:00:48,800 ஜூனியர்! 12 00:00:49,301 --> 00:00:50,635 ஹலோ! 13 00:00:52,178 --> 00:00:53,346 என் முள்ளங்கி. 14 00:00:54,472 --> 00:00:56,016 உங்கள் கவலைகளை நடனமாடி விரட்டுங்கள் 15 00:00:56,516 --> 00:00:58,560 கவலைகளை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 16 00:00:58,560 --> 00:01:00,228 இசை முழங்கட்டும் 17 00:01:00,729 --> 00:01:04,648 அங்கே ஃப்ராகெல் ராக்கில் அங்கே ஃப்ராகெல் ராக்கில் 18 00:01:04,648 --> 00:01:06,192 அங்கே ஃப்ராகெல் ராக்கில். 19 00:01:08,862 --> 00:01:09,863 கவனியுங்கள்! 20 00:01:10,947 --> 00:01:13,742 கவனியுங்கள்! 21 00:01:15,785 --> 00:01:18,872 எல்லோரும், உங்கள் வேலைகளை நிறுத்திவிட்டு கவனியுங்கள். 22 00:01:20,457 --> 00:01:22,334 நான் இங்கிருந்தே கவனிக்கலாமா? 23 00:01:22,334 --> 00:01:24,085 - சரி, தாராளமாக. - நன்றி. 24 00:01:24,085 --> 00:01:26,421 வருடத்தில் ஒரு நாள், 25 00:01:26,421 --> 00:01:29,299 என் பயத்தையெல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு... 26 00:01:29,799 --> 00:01:31,801 ரொம்ப தூரம் ஒதுக்க மாட்டேன், ஆனாலும் ஒதுக்கிவிட்டு, 27 00:01:31,801 --> 00:01:36,014 இந்தச் சமையல் நிகழ்ச்சியை நடத்தப் போகிறேன். 28 00:01:36,014 --> 00:01:38,975 - வாருங்கள். ஓஹோ. - மிகவும் தனித்துவமான முள்ளங்கி கொண்டாட்டத்தில்... 29 00:01:38,975 --> 00:01:40,268 பங்கேற்கலாம்! 30 00:01:41,394 --> 00:01:43,897 நன்றி, வெம்ப்ளே. நானே இதை அறிவிக்கலாம் என இருந்தேன். 31 00:01:43,897 --> 00:01:44,981 பரவாயில்லை, செஃப். 32 00:01:45,774 --> 00:01:47,567 ஆம், முள்ளங்கி கொண்டாட்டம். 33 00:01:47,567 --> 00:01:51,363 டின்னர் மற்றும் நிகழ்ச்சி, அதாவது அங்கு டின்னர்தான் நிகழ்ச்சியே. 34 00:01:53,406 --> 00:01:57,118 சரி, இதை முழுமையாக்க எனக்கு இன்னும் கொஞ்சம் முள்ளங்கிகள் வேண்டும். 35 00:01:59,829 --> 00:02:00,830 பாங்கோ! 36 00:02:00,830 --> 00:02:03,792 மன்னித்துவிடு, இது தானாகவே என் வாய்க்குள் குதித்துவிட்டது. 37 00:02:06,586 --> 00:02:08,212 இன்றுதான் இப்படி செய்யணுமா. 38 00:02:08,212 --> 00:02:11,466 சரி. மோகீயிடம் இன்னும் அதிக முள்ளங்கிகளை எடுத்து வரச் சொல்கிறேன். 39 00:02:12,509 --> 00:02:13,593 ஹே. என்ன... 40 00:02:13,593 --> 00:02:15,845 - ஹே! அதைச் சாப்பிடலாமென நினைத்தேன்! - உன்னால் முடியாது... 41 00:02:16,429 --> 00:02:19,266 புயல் வீசியதிலிருந்தே இந்தப் பறவைகள் இங்குதான் சுற்றுகின்றன. 42 00:02:19,266 --> 00:02:21,851 நான் சிரிப்பு நடைபயிற்சி செய்யும்போது ஒரு பறவையைப் பார்த்தேன். 43 00:02:21,851 --> 00:02:24,354 - சிரிப்பு நடைபயிற்சியா? அப்படியென்றால்? - ம்-ம். 44 00:02:25,230 --> 00:02:26,231 அதைப் புரிய வைப்பது கடினம். 45 00:02:26,856 --> 00:02:29,526 நடந்துகொண்டே... சிரிப்பது. 46 00:02:30,819 --> 00:02:32,195 இதுதான் அந்த நடைபயிற்சி. 47 00:02:32,195 --> 00:02:33,738 முள்ளங்கிக்காக என்னை எதிர்பார்க்கிறாய் என 48 00:02:33,738 --> 00:02:35,156 - கேள்விப்பட்டேன். - ஓ, ஆமாம். சரி. 49 00:02:35,156 --> 00:02:38,493 இங்கேயே இரு, நான் கார்க் தோட்டத்திற்குச் சென்றுவிட்டு வருகிறேன். 50 00:02:42,455 --> 00:02:44,916 பார்த்தாயா? அதுதான் முத்தமிட்டுக்கொண்டே நடப்பது. 51 00:02:44,916 --> 00:02:47,627 - ரொம்ப நவீனமானது. - சரி. சரி. 52 00:02:55,677 --> 00:02:58,096 ஸ்புராக்கி, நான் வந்துவிட்டேன்! 53 00:02:58,096 --> 00:03:00,599 ஒரு நண்பரை அழைத்து வந்திருக்கிறேன்! 54 00:03:00,599 --> 00:03:02,142 உனக்கு டாக்பாட்-ஐ ஞாபகமிருக்கா? 55 00:03:02,142 --> 00:03:06,104 ஹலோ, ஸ்புராக்லெட். இந்த பையன் ரொம்ப நல்ல நாய். 56 00:03:07,731 --> 00:03:09,816 நாய் பையன், ரொம்ப நல்ல பையன். 57 00:03:12,819 --> 00:03:15,238 கவலைப்படாதே, நண்பா. இவள் உன்னைப் பார்த்துக்கொள்ள வரவில்லை. 58 00:03:15,238 --> 00:03:17,490 நான் மறுபடியும் அப்படிச் செய்யவே மாட்டேன். 59 00:03:17,490 --> 00:03:19,451 நான் அவள் செயல்பாடுகளை மாற்றியமைக்கப் போகிறேன். 60 00:03:19,451 --> 00:03:21,202 டாக்பாட் தூங்கப் போகிறது. 61 00:03:21,703 --> 00:03:24,247 நான் வேலை செய்யும் பள்ளிக்கூடம் தெரியுமா? 62 00:03:24,247 --> 00:03:26,583 நான் அலட்டிக்கொள்ளாமல் இருந்தாலும்... 63 00:03:26,583 --> 00:03:29,461 குழந்தைகளைக் கவனிக்க வைக்க சில உதவிகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம். 64 00:03:29,461 --> 00:03:30,879 மேலும் யாருக்குத்தான் ரோபோட் பிடிக்காது? 65 00:03:31,922 --> 00:03:34,841 டாக்பாட் என் துணையாசிரியர் போல செயல்படும். என் சியர்-பாட் போல. 66 00:03:34,841 --> 00:03:39,179 அவள், “நல்ல யோசனை, டாக், காற்றாலை நன்றாக வேலை செய்கிறது” என்று அவளை சொல்ல வைப்பேன். 67 00:03:39,179 --> 00:03:42,557 “ஹே, இந்தப் புது மேல்சட்டையை எங்கிருந்து வாங்கினாய்?” 68 00:03:43,558 --> 00:03:44,935 நன்றாக இருக்கு தானே? 69 00:03:45,435 --> 00:03:47,062 ஆமாம் என எடுத்துக்கொள்கிறேன். 70 00:03:48,146 --> 00:03:50,774 இவளை முழுதாகப் பிரித்துவிட்டு மறுபடியும் வடிவமைக்க வேண்டும். 71 00:03:50,774 --> 00:03:54,986 புதுக் குரலுடனும் எளிமையான செயல்பாட்டுடனும் மறுவடிவமைப்பு செய்யணும். 72 00:03:54,986 --> 00:03:56,112 எனக்கு உதவி செய்கிறாயா? 73 00:03:56,863 --> 00:03:59,449 சரி, நண்பா. என்ன வேண்டுமோ செய். 74 00:04:03,787 --> 00:04:04,996 ஜூனியர்! 75 00:04:05,830 --> 00:04:09,751 உன்னிடம் இந்த சிவப்பு செடிகளை அகற்றச் சொன்னேனே. 76 00:04:09,751 --> 00:04:11,878 நான் அகற்றினேன், ஆனால் அது திரும்ப வளர்ந்துவிட்டது, அப்பா. 77 00:04:12,379 --> 00:04:16,257 - கவலைப்படாதீங்க, அகற்றிவிடுகிறேன். - என் செல்ல மகன். 78 00:04:16,257 --> 00:04:17,800 அழகு மகன். 79 00:04:17,800 --> 00:04:23,014 உள்ளே மகுடங்களைப் போட்டுப் பார்த்துக்கொண்டிருப்பேன், தேவைப்பட்டால் கூப்பிடு. சரி. 80 00:04:23,014 --> 00:04:26,685 குட்பை, சிவப்பு செடிகளே. பை-பை. 81 00:04:26,685 --> 00:04:28,687 - ஹாய், ஜூனியர்! - மோகீ! 82 00:04:28,687 --> 00:04:30,939 என்ன? ஒன்றும் பிரச்சனையில்லையே, மகனே? 83 00:04:30,939 --> 00:04:33,650 வந்து... இல்லை, ஒன்றுமில்லை, அப்பா. 84 00:04:33,650 --> 00:04:34,901 மன்னித்துவிடு. 85 00:04:34,901 --> 00:04:39,406 புது பிரச்சினை. நீயும் நானும் நண்பர்கள் என அப்பாவிற்குத் தெரியக் கூடாது. 86 00:04:40,073 --> 00:04:41,241 சிக்கலான விஷயம். 87 00:04:41,241 --> 00:04:44,661 பரவாயில்லை. எனக்கு முள்ளங்கிகள் கிடைத்துவிட்டன, நான் போகிறேன். 88 00:04:46,746 --> 00:04:49,165 ஸ்ட்ராபெர்ரிகள் இங்கு வளர்ந்திருப்பது எனக்குத் தெரியாது. 89 00:04:49,165 --> 00:04:51,543 - ம்-ம். - முதல் முறையாக ஸ்ட்ராபெர்ரியைச் சுவைத்தபோது, 90 00:04:51,543 --> 00:04:54,546 “அட, எவ்வளவு இனிப்பாக இருக்கு!” என நினைத்தேன். 91 00:04:55,130 --> 00:04:57,507 ஆம், ஆனால், அப்பா இதை அகற்றச் சொல்கிறார். 92 00:04:58,884 --> 00:04:59,718 ஹே! 93 00:04:59,718 --> 00:05:02,304 நீ அதை எடுத்துச் சென்று ஃப்ராகெல்களுடன் பகிர்ந்துகொள்ளலாமே? 94 00:05:02,304 --> 00:05:04,556 நிஜமாகவா? நன்றி. 95 00:05:05,140 --> 00:05:06,141 சரி. 96 00:05:06,850 --> 00:05:09,311 என்னால் எடுத்துச் செல்ல முடியாத அளவிற்கு அதிகமாக இருக்கு, நன்றி! 97 00:05:09,311 --> 00:05:10,395 ம்-ம். 98 00:05:11,980 --> 00:05:14,482 பை, பை, சிவப்பு செடிகளே. 99 00:05:17,319 --> 00:05:18,320 ஹே, ரெட்! 100 00:05:18,320 --> 00:05:20,906 முள்ளங்கி கொண்டாட்டத்திற்கு நல்ல இடத்தைத் தேர்வு செய்திருக்கிறாய். 101 00:05:20,906 --> 00:05:22,532 ஆம், என்னைப் பற்றி உனக்குத் தெரியும்தானே. 102 00:05:22,532 --> 00:05:26,912 பூபர் முள்ளங்கி சூப்பைத் தயாரிக்கும்போது, நான் அந்த இடத்தில் இருக்க வேண்டும். 103 00:05:26,912 --> 00:05:27,996 ஓ, ஆம். 104 00:05:28,496 --> 00:05:31,249 ஹே, சுவையான பாஞ்சோ. எனக்கு அது பிடிக்கும். 105 00:05:31,249 --> 00:05:32,792 என்னிடமும் பாஞ்சோஸ் இருந்திருக்கலாம். 106 00:05:32,792 --> 00:05:35,795 - உனக்கு ஒரு கெட்ட செய்தி இருக்கு, நண்பா. - சரி. 107 00:05:35,795 --> 00:05:37,339 இனி நீ ஆசைப்பட முடியாது 108 00:05:37,339 --> 00:05:39,299 ஏனென்றால், உனக்கு அதை கொண்டு வந்திருக்கிறேன்! 109 00:05:40,467 --> 00:05:43,929 பாஞ்சோ, பாஞ்சோ, பாஞ்சோ, பாஞ்சோ! 110 00:05:45,764 --> 00:05:48,892 சரி. முதலில், நான் சமைக்கப் போவது, எல்லோருக்கும் பிடித்த 111 00:05:48,892 --> 00:05:51,144 முள்ளங்கி எரிமலை. 112 00:05:51,144 --> 00:05:54,856 - ஆனால் எனக்கு... - மோகீ முள்ளங்கிகளுடன் வர வேண்டுமா? 113 00:05:54,856 --> 00:05:56,858 சரி சரி. 114 00:05:57,442 --> 00:05:59,069 நான் முள்ளங்கிகளை மட்டும் எடுத்து வரவில்லை. 115 00:05:59,069 --> 00:06:02,530 கார்க் தோட்டத்தில் ஸ்ட்ராபெர்ரிகள் வளர்வது உனக்குத் தெரியுமா? 116 00:06:02,530 --> 00:06:04,658 இங்கிருந்து போ! தயவுசெய்து போகாதே. 117 00:06:04,658 --> 00:06:05,742 நீ இங்கிருப்பது பிடிச்சிருக்கு. 118 00:06:05,742 --> 00:06:07,827 எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. 119 00:06:07,827 --> 00:06:10,705 நன்றி, மோக். ஆனால், ஸ்ட்ராபெர்ரிகளை நீயே வைத்துக்கொள். 120 00:06:10,705 --> 00:06:13,416 இன்று முள்ளங்கி கொண்டாட்டம். 121 00:06:13,416 --> 00:06:15,544 அதையே திரும்பத் திரும்ப சொல்லாதே. 122 00:06:15,544 --> 00:06:17,003 வாழ்த்துக்கள், பூபர்! 123 00:06:19,714 --> 00:06:21,258 தயாரா, செஃப்? 124 00:06:21,758 --> 00:06:23,260 வாருங்கள் செய்யலாம்! 125 00:06:27,764 --> 00:06:31,977 செஃப் பூபருடன் சேர்ந்து முள்ளங்கி சமைக்கத் தயாரா? 126 00:06:46,700 --> 00:06:48,785 இதுதான் முள்ளங்கி எரிமலை! 127 00:06:52,205 --> 00:06:53,999 ஆஹா! ஸ்ட்ராபெர்ரிகள். 128 00:06:53,999 --> 00:06:55,917 நிறைய இருக்கிறது! 129 00:06:55,917 --> 00:06:57,127 பார்க்கவே சந்தோஷமாக இருக்கு. 130 00:06:57,836 --> 00:06:59,671 - ருசியாகவும் இருக்கு! - ஆமாம். 131 00:06:59,671 --> 00:07:00,922 மன்னித்துவிடு! 132 00:07:00,922 --> 00:07:03,592 இங்கு ஒருவித நிகழ்ச்சி நடக்கிறது. 133 00:07:04,467 --> 00:07:07,220 நீங்கள் இங்கே பார்க்கலாமே! 134 00:07:07,220 --> 00:07:09,848 - ஆம்! ரொம்ப சுவையாக இருக்கு. - ஆம். 135 00:07:10,599 --> 00:07:11,766 அதை விடு. 136 00:07:14,269 --> 00:07:17,272 ஸ்ட்ராபெர்ரி, ரொம்ப மோசமான பெர்ரி. 137 00:07:18,023 --> 00:07:20,025 நமக்கு அவற்றைப் பற்றி என்ன தெரியும்? 138 00:07:20,942 --> 00:07:22,736 அவை பேராபத்தை ஏற்படுத்தலாம். 139 00:07:31,870 --> 00:07:33,330 ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது. 140 00:07:33,330 --> 00:07:38,084 இந்த ஸ்ட்ராபெர்ரி, கட்டிடம் கட்டுவதற்கு உதவும். 141 00:07:38,084 --> 00:07:39,961 இதைத் தயாரிப்பிடத்திற்கு அனுப்பு. 142 00:07:39,961 --> 00:07:42,589 மரியாதைக்குரிய, கட்டிட கலைஞரே, நான் அதைச் செய்ய மாட்டேன். 143 00:07:42,589 --> 00:07:45,175 அது பெரிய தவறாக முடியலாம். 144 00:07:46,009 --> 00:07:47,552 சரி, இது ரொம்ப சிக்கலான சூழ்நிலை. 145 00:07:47,552 --> 00:07:51,640 இந்த ஸ்ட்ராபெர்ரிகளை வைத்து கட்டிடம் கட்டலாமென நினைத்தேன், நீ அதை எதிர்க்கிறாய். 146 00:07:51,640 --> 00:07:52,807 இப்போது நாம் என்ன செய்வது? 147 00:07:53,308 --> 00:07:56,519 நாம் இன்னும் கொஞ்சம் துல்லியமான அளவீட்டு முறையைப் பயன்படுத்தினால் என்ன? 148 00:07:57,687 --> 00:08:00,232 மெஷர் டூஸர். 149 00:08:01,066 --> 00:08:02,067 ஆஹா! 150 00:08:02,067 --> 00:08:05,820 இந்த ஸ்ட்ராபெர்ரிகளைப் பற்றி ஒரு முடிவுக்கு வரும் முன், 151 00:08:05,820 --> 00:08:08,531 இதை ரிசர்ச் மற்றும் டெவலப்மெண்ட் துறைக்கு அனுப்பலாம். 152 00:08:08,531 --> 00:08:09,991 எங்களுக்கும் சம்மதம்தான். 153 00:08:09,991 --> 00:08:11,993 ஹே, நான்தான் ரிசர்ச். 154 00:08:11,993 --> 00:08:14,079 டெவலப்மெண்ட். உன்னுடன் இருப்பது சந்தோஷம். 155 00:08:14,079 --> 00:08:15,914 அவர்கள் ரொம்ப புத்திசாலிகளாகத் தெரிகிறார்கள். 156 00:08:19,876 --> 00:08:21,211 ஹே, இங்கிருக்கிறாயா! 157 00:08:21,211 --> 00:08:22,629 உன்னை நினைத்து கவலைப்பட்டோம். 158 00:08:22,629 --> 00:08:24,589 உன்னை உற்சாகப்படுத்துவதற்காக தன் மாமாவிடமிருந்து வந்த 159 00:08:24,589 --> 00:08:26,383 புதிய கலைப்பொருளைக் கொண்டு வர கோபோ போயிருக்கிறான். 160 00:08:26,383 --> 00:08:29,427 எனக்குத் தெரியவில்லை, வெம். என்னை உற்சாகப்படுத்த முடியாது என நினைக்கிறேன். 161 00:08:29,427 --> 00:08:30,637 என்ன? 162 00:08:30,637 --> 00:08:32,429 - சரி. - சரி. 163 00:08:32,429 --> 00:08:35,517 ஸ்ட்ராபெர்ரி, ரொம்ப மோசமான பெர்ரி. 164 00:08:35,517 --> 00:08:38,979 நமக்கு அவற்றைப் பற்றி என்ன தெரியும்? அவை பேராபத்தை ஏற்படுத்தலாம். 165 00:08:40,063 --> 00:08:42,524 ஹே. அதைத்தான் நானும் சொன்னேன். 166 00:08:42,524 --> 00:08:44,192 நமக்கு அவற்றைப் பற்றி என்ன தெரியும்? 167 00:08:44,192 --> 00:08:46,152 அவை பேராபத்தை ஏற்படுத்தலாம். 168 00:08:46,152 --> 00:08:48,113 பொறு. இங்கு என்ன நடக்கிறது? 169 00:08:48,822 --> 00:08:52,284 நமக்கு அவற்றைப் பற்றி என்ன தெரியும்? அவை பேராபத்தை ஏற்படுத்தலாம். 170 00:08:53,660 --> 00:08:56,121 என்ன? உன் காதில் என்ன விழுந்தாலும் அதை அப்படியே திரும்பச் சொல்வாயா? 171 00:08:56,121 --> 00:08:58,456 சொன்னதைச் சொல்லும் பறவை மாதிரி? 172 00:09:02,544 --> 00:09:05,672 ஸ்ட்ராபெர்ரிகள் ஃப்ராகெல்களுக்கு நல்லதல்ல. 173 00:09:06,381 --> 00:09:09,509 ஸ்ட்ராபெர்ரிகள் ஃப்ராகெல்களுக்கு நல்லதல்ல. 174 00:09:10,760 --> 00:09:16,516 ஸ்ட்ராபெர்ரிகள் ஃப்ராகெல்களுக்கு நல்லதல்ல. 175 00:09:17,017 --> 00:09:19,311 ஒரு பறவைதான் இதைச் சொன்னது, பறவைகள் மீது எனக்கு நம்பிக்கை உண்டு. 176 00:09:19,311 --> 00:09:20,228 நீ சொன்னது சரிதான். 177 00:09:20,228 --> 00:09:22,397 எனக்கு ஸ்ட்ராபெர்ரிகள் போதும்! 178 00:09:22,397 --> 00:09:24,983 இப்பவும் பூபர் முள்ளங்கி கொண்டாட்டத்தைச் செய்கிறான் என நினைக்கிறேன். 179 00:09:24,983 --> 00:09:26,443 வாருங்கள் திரும்ப அங்கே போகலாம். 180 00:09:27,986 --> 00:09:31,740 ஆம். திரும்ப அங்கே போகலாம். 181 00:09:37,329 --> 00:09:38,663 பல மணிநேரமாகிவிட்டது, ஸ்புராக்கி, 182 00:09:38,663 --> 00:09:40,957 டாக்பாட் எதையுமே பதிவு செய்யவில்லை. 183 00:09:40,957 --> 00:09:43,126 இது நல்ல யோசனை என யார் சொன்னது? 184 00:09:43,627 --> 00:09:45,337 சரி. திரும்பவும் முயற்சிக்கலாம். 185 00:09:45,337 --> 00:09:48,298 காற்றாற்றலை மாற்றுவது பற்றி நான் சொன்ன பிறகு, 186 00:09:48,298 --> 00:09:53,345 டாக்பாட், “நல்ல யோசனை, டாக். என்னை ஈர்த்துவிட்டது” எனச் சொல்லும். 187 00:09:56,681 --> 00:09:57,891 ஒன்றும் வேலைக்காகவில்லை. 188 00:09:57,891 --> 00:10:00,060 நீ ஏன் இவ்வளவு மோசமாக செயல்படுகிறாய்? 189 00:10:00,560 --> 00:10:03,605 எதையுமே சரியாகச் செய்வதில்லை. சரியாகச் செய். 190 00:10:05,482 --> 00:10:09,277 ஒரே ஒரு விஷயத்தையாவது நான் நன்றாகச் செய்கிறேனே: ஸ்ட்ராபெர்ரிகள் சாப்பிடுவது. 191 00:10:10,070 --> 00:10:12,239 அப்படியென்றால், அறிவற்ற உயிரினங்கள் ஸ்ட்ராபெர்ரிகளைச் சாப்பிடுமா, ம்? 192 00:10:19,371 --> 00:10:22,207 கவலைப்படாதே, ஸ்புராக்கி. உனக்கு ஒரு ஸ்ட்ராபெர்ரியை எடுத்து வைக்கிறேன். 193 00:10:23,583 --> 00:10:24,834 அடுத்த முறை. 194 00:10:24,834 --> 00:10:26,169 எல்லாவற்றையும் சாப்பிட்டுவிட்டேன். 195 00:10:30,674 --> 00:10:33,802 அற்புதம். ஹே, பூபர், உன் சமையல் உண்மையிலேயே “நன்றாக” இருக்கிறது. 196 00:10:34,761 --> 00:10:36,429 ஃப்ராகெல்களுக்கு பிடித்திருக்கிறது போலும். 197 00:10:36,429 --> 00:10:38,223 நன்றாகப் போகிறது போலும். 198 00:10:38,223 --> 00:10:40,475 நம் வெற்றியை எந்த ஸ்ட்ராபெர்ரியினாலும் பறிக்க முடியாது. 199 00:10:40,475 --> 00:10:42,811 ஹே, அறிவற்ற உயிரினங்களும் அவற்றையும் சாப்பிடும் தெரியுமா? 200 00:10:43,395 --> 00:10:45,230 அறிவற்ற உயிரினங்கள் ஸ்ட்ராபெர்ரிகளைச் சாப்பிடுமா? 201 00:10:45,230 --> 00:10:47,566 எனக்கும் சாப்பிட வேண்டும் போல இருக்கிறது. 202 00:10:47,566 --> 00:10:50,777 - சரி. கண்டுபிடித்து சாப்பிடலாம். - ஆம். 203 00:10:51,611 --> 00:10:53,780 ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கிறது, கோபோ. 204 00:10:54,781 --> 00:10:56,533 ஒரு நிமிடம் பொறு. 205 00:10:59,578 --> 00:11:08,295 ஸ்ட்ராபெர்ரி வெளி உலகிலிருந்து வந்துள்ளது. அவற்றை எப்படி நம்புவது? 206 00:11:08,795 --> 00:11:09,796 அற்புதம். 207 00:11:10,839 --> 00:11:15,468 ஸ்ட்ராபெர்ரி வெளி உலகிலிருந்து வந்துள்ளது. அவற்றை எப்படி நம்புவது? 208 00:11:16,469 --> 00:11:18,930 ஸ்ட்ராபெர்ரி வெளி உலகிலிருந்து வந்துள்ளது. 209 00:11:18,930 --> 00:11:20,807 அவற்றை எப்படி நம்புவது? 210 00:11:21,600 --> 00:11:23,852 என்ன? கண்டிப்பாக அவற்றை நம்பலாம். 211 00:11:23,852 --> 00:11:25,604 என் மாமா தான் அவற்றைக் கண்டுபிடித்தார், 212 00:11:25,604 --> 00:11:29,524 மேலும் ஸ்ட்ராபெர்ரிகள் நல்ல நிறத்திலும், ரொம்ப ருசியாகவும் இருக்கும். எனக்கு ரொம்ப பிடிக்கும். 213 00:11:29,524 --> 00:11:33,987 ஸ்ட்ராபெர்ரிகள் நல்ல நிறத்திலும், ரொம்ப ருசியாகவும் இருக்கும். எனக்கு ரொம்ப பிடிக்கும். 214 00:11:34,529 --> 00:11:35,947 அந்தப் பறவை நான் சொல்வதைத் திரும்பச் சொல்கிறதா? 215 00:11:36,573 --> 00:11:38,491 அப்படித்தான் நினைக்கிறேன். 216 00:11:38,491 --> 00:11:40,952 ஸ்ட்ராபெர்ரிகள் நல்ல நிறத்துடனும், நல்ல சுவையுடனும் இருக்கும். 217 00:11:40,952 --> 00:11:42,704 - எனக்கு அது ரொம்ப பிடிக்கும். - நகருங்கள்! 218 00:11:42,704 --> 00:11:44,372 ஸ்ட்ராபெர்ரி வெளி உலகிலிருந்து வந்துள்ளது. 219 00:11:44,372 --> 00:11:46,791 ஸ்ட்ராபெர்ரிகள் நல்ல நிறத்துடனும்... 220 00:11:57,093 --> 00:12:00,180 ஸ்ட்ராபெர்ரி-கட்டிட சோதனைக்கு நாம் தயாரா? 221 00:12:00,180 --> 00:12:02,182 ரிசர்ச் தொடங்குகிறது. 222 00:12:02,182 --> 00:12:04,559 - டெவலப்மெண்ட்டும் கூட. - சரி. 223 00:12:04,559 --> 00:12:07,729 ஸ்ட்ராபெர்ரி அழுத்த சோதனை, மூன்று, இரண்டு... 224 00:12:08,980 --> 00:12:11,024 என் மேல்சட்டை ஈரமாகிவிட்டது. 225 00:12:11,024 --> 00:12:11,942 விடு. 226 00:12:11,942 --> 00:12:14,903 அந்த சட்டையே அதற்காக வடிவமைக்கப்பட்டதுதான். 227 00:12:14,903 --> 00:12:16,321 தைரியமாக இரு. 228 00:12:18,615 --> 00:12:19,741 - இது ரொம்ப அதிகம்! - ஐயோ! 229 00:12:19,741 --> 00:12:22,202 - ஐயோ. - ஸ்ட்ராபெர்ரிகள் மன அழுத்தம் தருகின்றன! 230 00:12:22,702 --> 00:12:24,579 - குறித்துக்கொள்ளப்பட்டது. - குறித்துக்கொள்ளப்பட்டது. 231 00:12:25,705 --> 00:12:27,624 ஆனால், சுவையாகவும் இருக்கிறது! 232 00:12:29,334 --> 00:12:31,002 - குறித்துக்கொள்ளப்பட்டது. - குறித்துக்கொள்ளப்பட்டது. 233 00:12:31,836 --> 00:12:32,921 நல்லது. 234 00:12:35,590 --> 00:12:42,097 முள்ளங்கிகள்தான் டாப்பு, ஸ்ட்ராபெர்ரி டூப்பு! 235 00:12:42,097 --> 00:12:45,392 ஸ்ட்ராபெர்ரிகள்தான் சிறந்தவை. முள்ளங்கிகள் சிறந்தவை எனச் சொல்ல மாட்டேன்! 236 00:12:45,392 --> 00:12:48,478 ஸ்ட்ராபெர்ரிதான் சிறந்தவை. முள்ளங்கிகள் சிறந்தவை என சொல்ல மாட்டேன்! 237 00:12:48,478 --> 00:12:52,190 ஆனால், நண்பர்களே, வேற்றுமையில் ஒற்றுமை இருக்கிறது. 238 00:12:52,899 --> 00:12:53,858 அது போதுமானது. 239 00:12:53,858 --> 00:12:55,277 நல்ல வேலை செய்தாய், மோகீ. 240 00:12:56,152 --> 00:12:59,072 ஸ்ட்ராபெர்ரிகள் வாழ்க! 241 00:13:01,366 --> 00:13:04,744 மன்னித்துவிடு, ஆனால், ஸ்ட்ராபெர்ரிகள் என்னை மாதிரி சிவப்பாக இருக்கும். 242 00:13:05,245 --> 00:13:06,705 முள்ளங்கிகளும் அப்படித்தான். 243 00:13:06,705 --> 00:13:10,083 - ஆம். - ஆம், ஆனால் ஸ்ட்ராபெர்ரி ரொம்ப சிவப்பாக இருக்கும்! 244 00:13:10,083 --> 00:13:13,420 ஸ்ட்ராபெர்ரிகள்! 245 00:13:13,420 --> 00:13:15,005 முள்ளங்கிகள்! 246 00:13:15,005 --> 00:13:16,631 ஸ்ட்ராபெர்ரிகள் 247 00:13:16,631 --> 00:13:19,134 - அவை மிருதுவாக, ரொம்ப இனிப்பாக இருக்கும் - ரொம்ப இனிப்பாக இருக்கும் 248 00:13:19,134 --> 00:13:21,553 எப்போதுமே அதை சாப்பிட வேண்டும் எனத் தோன்றும் 249 00:13:21,553 --> 00:13:23,305 - ஸ்ட்ராபெர்ரிகள் - ஸ்ட்ராபெர்ரிகள் 250 00:13:23,305 --> 00:13:24,723 நீங்கள் நினைப்பதைவிட அவை சுவையானது 251 00:13:24,723 --> 00:13:27,767 அவை அழுக்காகவும், இளஞ்சிவப்பு நிறத்திலும் இருக்காது 252 00:13:28,351 --> 00:13:29,686 முள்ளங்கிகள் 253 00:13:29,686 --> 00:13:31,938 - இவை நமக்குத் தெரிந்தவைதான் - நமக்குத் தெரிந்தவைதான் 254 00:13:31,938 --> 00:13:33,940 ரொம்ப சுவையாக இருக்கும் அது வளரும் போதே சுவையாக வளரும் 255 00:13:33,940 --> 00:13:35,108 அந்தளவு வித்தியாசமாக இருக்காது 256 00:13:35,108 --> 00:13:37,402 முள்ளங்கிகள் நீங்கள் நினைப்பதைவிட அவை சுவையானவை 257 00:13:37,402 --> 00:13:40,697 அதன் மேல் பகுதியில் அசிங்கமான விதைகள் இருக்காது 258 00:13:40,697 --> 00:13:42,532 ஆனால் ஸ்ட்ராபெர்ரி 259 00:13:42,532 --> 00:13:46,703 - ஸ்ட்ராபெர்ரி ரொம்ப சுவையாக இருக்கும் - ஸ்ட்ராபெர்ரி ரொம்ப சுவையாக இருக்கும் 260 00:13:46,703 --> 00:13:48,914 ஓ, ஆனால் முள்ளங்கி 261 00:13:48,914 --> 00:13:52,542 - முள்ளங்கி ஆரோக்கியமானது - ஆரோக்கியமானது 262 00:13:53,627 --> 00:13:57,714 - ஸ்ட்ராபெர்ரிகள் - முள்ளங்கிகள் 263 00:13:57,714 --> 00:14:00,050 அவை இதைவிட சுவையானவை 264 00:14:00,050 --> 00:14:01,760 - முள்ளங்கிகள் - ஸ்ட்ராபெர்ரிகள் 265 00:14:01,760 --> 00:14:02,677 முள்ளங்கிகள் 266 00:14:02,677 --> 00:14:06,431 இனி நான் அதை சாப்பிடவே மாட்டேன் இதைத்தான் சாப்பிடுவேன் 267 00:14:06,431 --> 00:14:11,228 - ஸ்ட்ராபெர்ரிகள் - முள்ளங்கிகள் 268 00:14:11,228 --> 00:14:13,772 முள்ளங்கிகளுடன் ஒப்பிடக் கூடாது 269 00:14:13,772 --> 00:14:15,482 - ஸ்ட்ராபெர்ரிகள் - முள்ளங்கிகள் 270 00:14:15,482 --> 00:14:19,486 இனி நான் அதை சாப்பிடவே மாட்டேன் இதைத்தான் சாப்பிடுவேன் 271 00:14:19,486 --> 00:14:23,073 - ஸ்ட்ரா... - கொஞ்சம் பொறுங்கள்! 272 00:14:23,823 --> 00:14:27,702 நாம் அனைவரும் பிரச்சினையைத் தீர்த்து, ஒற்றுமையாக ஒன்று கூடுவோம் 273 00:14:27,702 --> 00:14:29,829 ஸ்ட்ராபெர்ரிகள் மற்றும் முள்ளங்கிகள் 274 00:14:29,829 --> 00:14:33,416 இரண்டிடமும் நல்ல விஷயங்களும் இருக்கின்றன 275 00:14:33,416 --> 00:14:36,795 சில குறைபாடுகளும் இருக்கின்றன ஆனால் இரண்டையுமே சாண்ட்விச்சில் சாப்பிடலாம் 276 00:14:36,795 --> 00:14:42,884 எனவே சண்டை போட வேண்டாம் இது வெறும் கருத்து வேறுபாடுதான் 277 00:14:43,593 --> 00:14:46,555 இதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். 278 00:14:46,555 --> 00:14:48,056 - ஸ்ட்ராபெரிகள் - முள்ளங்கிகள் 279 00:14:48,056 --> 00:14:51,184 - ஸ்ட்ராபெர்ரிகள் - முள்ளங்கிகள் 280 00:14:51,184 --> 00:14:53,728 - அவை இதைவிட சுவையானவை - முள்ளங்கிகள் 281 00:14:53,728 --> 00:14:55,272 - ஸ்ட்ராபெர்ரிகள் - முள்ளங்கிகள் 282 00:14:55,272 --> 00:14:59,276 இனி நான் அதை சாப்பிடவே மாட்டேன் இதைத்தான் சாப்பிடுவேன் 283 00:14:59,276 --> 00:15:03,196 - முள்ளங்கிகள் - ஸ்ட்ராபெர்ரிகள் 284 00:15:03,196 --> 00:15:07,826 ஸ்ட்ராபெர்ரிகள்! ஸ்ட்ராபெர்ரிகள்! ஸ்ட்ராபெர்ரிகள்! 285 00:15:08,410 --> 00:15:10,870 ஐயோ. இல்லை! 286 00:15:11,871 --> 00:15:14,416 முள்ளங்கிகள்தான் சிறந்தவை. முள்ளங்கிகள், முள்ளங்கிகள், முள்ளங்கிகள்! 287 00:15:15,125 --> 00:15:16,668 நான் என்ன செய்திருக்கிறேன்? 288 00:15:19,880 --> 00:15:21,214 ஐயோ. 289 00:15:24,301 --> 00:15:28,263 இறுதியாக, அமைதியான இடத்திற்கு வந்துவிட்டேன். 290 00:15:28,263 --> 00:15:30,432 வருகிறேன். 291 00:15:33,476 --> 00:15:36,855 சொன்னதைச் சொல்லும் பறவைகள் தலைவலியை உண்டாக்கும். 292 00:15:36,855 --> 00:15:40,400 ரெட், இந்த இடம் ஒருவருக்கு மட்டும்தான் அமைதியைக் கொடுக்கும். 293 00:15:40,400 --> 00:15:42,611 ஓ, நாம் இருவர் மட்டும்தான் உள்ளோம். 294 00:15:43,153 --> 00:15:44,487 வழிவிடு. 295 00:15:44,487 --> 00:15:46,823 - இங்கு அமைதியைத் தேடி வந்திருக்கிறேன். - அமைதியையும். 296 00:15:46,823 --> 00:15:47,991 ஐயோ. 297 00:15:48,909 --> 00:15:52,662 - ரொம்ப அழகான காட்சி. ரொம்ப பிடிச்சிருக்கு. - எனக்குப் பிடிக்கவில்லை. 298 00:15:52,662 --> 00:15:54,456 இங்கு ரொம்ப கூட்டமாக இருக்கிறது. 299 00:15:54,998 --> 00:15:57,167 - இங்கே யாரும் இல்லையென்றால், வெம்ப்... - ஹாய். 300 00:15:57,667 --> 00:16:01,463 நான் அனைவருக்கும் முன்பே வந்துவிட்டேன். ஆனால் அமைதியாக இருந்தேன். ஆம். 301 00:16:02,672 --> 00:16:04,925 எதுவுமே சரியாக இருப்பதாகத் தோன்றவில்லை. 302 00:16:04,925 --> 00:16:06,259 எப்படி இந்த நிலைக்கு வந்தோம்? 303 00:16:06,259 --> 00:16:08,178 ஆமாம். இதெல்லாம் எப்படி ஆரம்பித்தது? 304 00:16:10,096 --> 00:16:11,431 நான்தான் இதைச் செய்தேன். 305 00:16:12,766 --> 00:16:14,559 தயவுசெய்து யாரும் திகைக்காதீர்கள். 306 00:16:14,559 --> 00:16:16,519 அதற்குக்கூட இங்கு காற்றில்லை. 307 00:16:19,981 --> 00:16:21,858 உனக்குப் புரியும், காட்டர்பின். 308 00:16:21,858 --> 00:16:27,447 ரீவைன்ட் மற்றும் டெவலப்பே ஸ்ட்ராபெர்ரிகளை வைத்து கட்டிடம் கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கும். 309 00:16:28,281 --> 00:16:31,034 அது ரிசர்ச் மற்றும் டெவலப்மெண்ட், சார். 310 00:16:31,534 --> 00:16:33,703 அவர்கள் அந்தப் பெயரை பலமுறை சொல்லிவிட்டார்கள். 311 00:16:33,703 --> 00:16:34,788 உண்மைதான். 312 00:16:34,788 --> 00:16:38,250 நிச்சயம், அவர்கள் ஸ்ட்ராபெர்ரிகள் நல்லதல்ல என்றுதான் சொல்வார்கள். 313 00:16:39,417 --> 00:16:43,171 ஸ்ட்ராபெர்ரி பற்றிய இறுதி அறிக்கையை கொண்டு வந்துள்ளேன். 314 00:16:47,050 --> 00:16:48,260 அதைப் படிக்கப் போகிறாயா, இல்லை... 315 00:16:48,260 --> 00:16:49,678 - கண்டிப்பாகப் படிக்கிறேன். - சரி. 316 00:16:49,678 --> 00:16:52,389 ஆக, எங்கள் ரிசர்ச்... 317 00:16:52,389 --> 00:16:54,599 - மற்றும் டெவலப்மெண்ட். - ஆம், சரி. 318 00:16:54,599 --> 00:16:57,769 ஸ்ட்ராபெர்ரிகள் பற்றி என்ன முடிவு செய்திருக்கிறோம் என்றால்... 319 00:16:58,353 --> 00:16:59,271 என்ன? 320 00:16:59,271 --> 00:17:01,815 ...அவை பரவாயில்லை. அப்படியொன்றும் மோசமில்லை. 321 00:17:01,815 --> 00:17:04,025 என்ன? அப்படியென்றால் என்ன அர்த்தம்? 322 00:17:04,025 --> 00:17:07,487 வந்து, அவை கட்டிடம் கட்ட சரிவராது, 323 00:17:07,487 --> 00:17:09,863 மற்றும் அவை தீங்கானவையும் அல்ல. 324 00:17:09,863 --> 00:17:12,074 உண்மையில், அவை ரொம்ப ருசியாக இருக்கு. 325 00:17:12,074 --> 00:17:15,370 அதன் மேல் பகுதி, விசேஷ தொப்பி செய்யப் பயன்படும். 326 00:17:16,036 --> 00:17:17,581 ஜாலியாக இருக்கிறது, இல்லையா? 327 00:17:18,707 --> 00:17:22,002 நாம் இருவரும் நினைத்தது தவறு இல்லையா? 328 00:17:22,002 --> 00:17:23,378 ஆனால், அது சரியும் கூட! 329 00:17:23,378 --> 00:17:27,048 காட்டர்பின், உன் எச்சரிக்கை உணர்வு நம்மைப் பிரச்சினையிலிருந்து காப்பாற்றியது. 330 00:17:27,048 --> 00:17:31,303 அப்புறம், உங்கள் உற்சாகத்தினால், ஸ்ட்ராபெர்ரிகளைக் குறைத்து மதிப்பிடுவதை நான் நிறுத்திவிட்டேன். 331 00:17:31,303 --> 00:17:34,764 நாம் ரிசர்ச்சிடம் சொன்னது ஊர்ஜிதமானதில் எனக்கு சந்தோஷம்தான். 332 00:17:34,764 --> 00:17:37,392 டெவலப்மெண்ட்டிடமும், அதை மறக்காதீர்கள். 333 00:17:41,396 --> 00:17:42,564 ரொம்பவே ருசியாக இருக்கு. 334 00:17:42,564 --> 00:17:45,442 நான் முன்பைவிடவும் அழகாக இருக்கிறேன். 335 00:17:47,110 --> 00:17:49,905 - ரொம்ப பிடிச்சிருக்கு. - ம்-ம். 336 00:17:50,655 --> 00:17:53,575 பூபர்? இதை ஏன் உன் தவறு எனச் சொல்கிறாய்? 337 00:17:53,575 --> 00:17:54,659 ஆம். 338 00:17:54,659 --> 00:17:58,413 முதலில் தற்செயலாகத்தான் நடந்தது... 339 00:17:58,413 --> 00:18:01,416 ...ஆனால் அதன் பின் ஸ்ட்ராபெர்ரிகளை அழிக்கவும், முள்ளங்கி சமையலை பெரிதுபடுத்தவும் 340 00:18:01,416 --> 00:18:03,209 பறவைகளைப் பயன்படுத்தலாம் என்று புரிந்துகொண்டேன். 341 00:18:03,209 --> 00:18:06,796 முள்ளங்கிகளை எல்லோரும் மறந்துவிடுவார்களோ எனப் பயந்தேன். 342 00:18:07,797 --> 00:18:10,300 என்னையும் மறந்துவிடுவார்கள் என நினைத்தேன். 343 00:18:11,927 --> 00:18:14,596 இப்படியெல்லாம் நடக்குமென எனக்குத் தெரியாது. 344 00:18:14,596 --> 00:18:17,849 நான் இதுவரை ஒரு ஸ்ட்ராபெர்ரியைக் கூட சுவைத்ததில்லை தெரியுமா? 345 00:18:17,849 --> 00:18:18,975 என்ன? 346 00:18:18,975 --> 00:18:21,561 நீ ஸ்ட்ராபெர்ரியை சுவைத்ததே இல்லையா? 347 00:18:21,561 --> 00:18:24,773 சொன்னதைச் சொல்லும் பறவைகளை நீ ஒருவன் மட்டும் பயன்படுத்தவில்லை, பூபர். 348 00:18:24,773 --> 00:18:27,275 நானும் சிலவற்றைச் சொன்னேன், அதை நினைத்து வருத்தப்படுகிறேன். 349 00:18:27,275 --> 00:18:30,445 ஹே, நடந்ததை நினைத்து வருத்தப்படுவதற்கு இடமில்லை, 350 00:18:30,445 --> 00:18:32,155 அல்லது இங்கு எதற்குமே இடமில்லை. 351 00:18:32,155 --> 00:18:33,865 - கூட்டமாக இருக்கு! - ஓ, ஆம். 352 00:18:33,865 --> 00:18:37,494 ஹே, பூபரை உற்சாகப்படுத்த என் மாமா அனுப்பிய தபால் அட்டை இருக்கிறது. 353 00:18:37,494 --> 00:18:40,330 அவனுக்கு அது அப்போது தேவைப்படவில்லை, ஆனால் நமக்குத் தேவைப்படலாம். 354 00:18:41,539 --> 00:18:43,583 எல்லோரும் நெருக்கமாக நின்றுகொண்டால், 355 00:18:43,583 --> 00:18:45,794 நான் இங்கிருந்து வெளியேறிவிடுவேன்... 356 00:18:45,794 --> 00:18:48,421 “அன்புள்ள மருமகன் கோபோ மற்றும் நண்பர்களுக்கு...” 357 00:18:49,506 --> 00:18:54,261 சமீபத்தில் நான் ஒரு அற்புதமான விஷயத்தைக் கண்டுபிடித்துள்ளேன். 358 00:18:54,261 --> 00:18:59,391 அறிவற்ற உயிரினத்தின் துடிப்பான குள்ளர் சமூகத்தினைப் பார்த்தேன் 359 00:19:00,141 --> 00:19:03,687 அவர்களின் தனித்துவமான தலை வடிவமைப்பு அவர்கள் வேகமாக செல்லப் பயன்படுகிறது. 360 00:19:04,437 --> 00:19:05,772 ஹலோ, கூர்மையான தலை உடையவர்களே. 361 00:19:07,148 --> 00:19:09,568 கூர்மையான தலையுடைய அறிவற்ற உயிரினங்களைப் பெருமைப்படுத்தும் விதமாக 362 00:19:09,568 --> 00:19:12,445 அற்புதமான சிலை ஒன்றைப் பார்த்தேன். 363 00:19:12,445 --> 00:19:15,615 அது ரொம்ப அழகாக இருந்தது, ஆனால் என் வழியில் இருந்தது. 364 00:19:16,491 --> 00:19:17,993 நான் எங்கே உட்காருவது? 365 00:19:21,288 --> 00:19:24,499 யாராவது அதை என் மேஜையிலிருந்து எடுக்கும்படி பதட்டப்படாமல் கேட்டேன். 366 00:19:24,499 --> 00:19:29,087 இதை எடுங்கள்! இல்லை! சீக்கிரம், சீக்கிரம்! இதை அகற்றுங்கள்... 367 00:19:29,921 --> 00:19:31,548 நான் ஆதிக்கம் செலுத்தினேன் எனத் தெரியும் 368 00:19:31,548 --> 00:19:34,301 ஆனால் என் வார்த்தைகளுக்கு எவ்வளவு வலிமை இருந்தது, அதன் பின்விளைவுகள் 369 00:19:34,301 --> 00:19:37,178 எப்படியிருந்தது என்று எனக்குத் தெரியாது. 370 00:19:38,722 --> 00:19:42,309 தற்செயலாக, என் வார்த்தைகள் குழப்பத்தையும், அழிவையும் ஏற்படுத்தியிருக்கின்றன. 371 00:19:42,309 --> 00:19:43,977 வேண்டாம், மிருகமே. 372 00:19:43,977 --> 00:19:46,062 நான் அதை நகர்த்தத்தான் சொன்னேன், அழிக்கச் சொல்லவில்லை! 373 00:19:46,062 --> 00:19:49,691 வேண்டாம்! நிறுத்து. எல்லாம் முடிந்துவிட்டது. ஐயோ, கடவுளே. போய்... 374 00:19:49,691 --> 00:19:52,360 நான் சொன்ன வார்த்தைகளைத் திரும்ப பெற முடியாது என்றாலும், 375 00:19:52,360 --> 00:19:56,323 விஷயத்தைச் சரிசெய்ய புது வார்த்தைகளைப் பயன்படுத்தலாம். 376 00:19:56,323 --> 00:19:57,574 என்னை மன்னித்துவிடு. 377 00:19:57,574 --> 00:19:59,868 நான் வார்த்தைகளை இன்னும் கவனமாகப் பயன்படுத்தியிருக்க வேண்டும். 378 00:19:59,868 --> 00:20:01,703 நான் இப்படி நடக்கும் என எதிர்பார்க்கவில்லை. 379 00:20:02,203 --> 00:20:06,041 என் புது வார்த்தைகள் சந்தோஷத்தையும் அமைதியையும் மற்றும்... 380 00:20:06,041 --> 00:20:08,668 ...இனிமையையும் கூட திரும்பப் பெற உதவியது. 381 00:20:10,462 --> 00:20:11,546 நன்றி. 382 00:20:11,546 --> 00:20:14,966 ஃப்ராகெல் ராக்கை மேம்படுத்தும் என் மிஷனின் ஒரு பகுதியாக, 383 00:20:14,966 --> 00:20:18,553 இந்த கலைப்பொருளை உனக்கு அனுப்புகிறேன், கோபோ. 384 00:20:18,553 --> 00:20:21,223 “நம் வார்த்தைகள் பாதிப்பையும் ஏற்படுத்தும் 385 00:20:21,223 --> 00:20:22,849 ஆனாலும் அது சமாதானப்படுத்தவும் உதவும். 386 00:20:22,849 --> 00:20:24,517 இப்படிக்கு, அன்புடன் உன் மாமா, டிராவலிங் மாட்.” 387 00:20:25,018 --> 00:20:27,687 “பின்குறிப்பு, மிட்டாய் அருமையாக இருந்தது!” 388 00:20:28,521 --> 00:20:29,522 அவர் சொல்வது சரிதான். 389 00:20:29,522 --> 00:20:32,442 நம் வார்த்தைகளைப் பயன்படுத்தி விஷயங்களைச் சரிசெய்ய வேண்டும். 390 00:20:32,943 --> 00:20:33,944 ஹே. 391 00:20:35,654 --> 00:20:38,907 ஃப்ராகெல் ராக்கில் இந்த விஷயத்தைப் பரப்புவோம்! 392 00:20:38,907 --> 00:20:40,575 ஆம், வாருங்கள் போகலாம். 393 00:20:40,575 --> 00:20:43,578 - ஆமாம், எப்படி? - எப்படி? 394 00:20:44,996 --> 00:20:47,707 நான் என் வாலை நகர்த்தினால்... ஐயோ, அது என் கால். 395 00:20:47,707 --> 00:20:48,667 - பொறு. - சரி. 396 00:20:48,667 --> 00:20:50,252 பொறு, ஒன்று, இரண்டு, மூன்று எண்ணியவுடன் செய்யலாம், சரியா? 397 00:20:50,252 --> 00:20:53,421 நான் உன்னைக் கவனிக்கிறேன்தான். அமைதியாக இரு. 398 00:20:53,421 --> 00:20:56,508 ஹே! அதை... இப்போது... இல்லை. சீக்கிரம்! 399 00:20:56,508 --> 00:21:01,555 ஃப்ராகெலின் நேசம் திரும்பிவிட்டது! இதை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்! 400 00:21:01,555 --> 00:21:06,184 எங்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடு, வெறுப்பு கிடையாது. மற்றவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்! ஹா. 401 00:21:06,184 --> 00:21:08,812 எங்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடு, வெறுப்பு கிடையாது! 402 00:21:08,812 --> 00:21:10,230 மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்! 403 00:21:11,356 --> 00:21:14,317 ஆம், சமாதானப்படுத்துவது பயன் அளிக்கிறது. இதை பிறருக்கு தெரியப்படுத்துங்கள். 404 00:21:14,317 --> 00:21:15,402 ஆமாம்! 405 00:21:15,402 --> 00:21:19,406 லா-லா-லா-லா-லா-லா-லா 406 00:21:19,406 --> 00:21:21,658 - லா-லா-லா-லா-லா - லா, லா, லா 407 00:21:21,658 --> 00:21:22,742 லா-லா 408 00:21:22,742 --> 00:21:23,660 மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள் 409 00:21:23,660 --> 00:21:28,164 பிரகாசமாகவும் நன்றாகவும் இருந்தால், அது மகிழ்ச்சியை ஏற்படுத்தும் 410 00:21:28,164 --> 00:21:31,293 உங்கள் இதயம் சரியானதைத் தேர்ந்தெடுக்கட்டும் 411 00:21:31,293 --> 00:21:32,419 இதை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள் 412 00:21:32,419 --> 00:21:36,882 உணர்வு என்பது எப்போதும் போல நல்லபடியாக இருந்தால் 413 00:21:36,882 --> 00:21:39,509 அது புரிந்துகொள்ளப்பட்டால் 414 00:21:40,093 --> 00:21:41,177 இதை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள் 415 00:21:41,177 --> 00:21:45,348 நீங்கள் மற்றவர்களுக்கு அன்பைக் கொடுத்தால் அது உங்களுக்கே திரும்பக் கிடைக்கும் 416 00:21:45,348 --> 00:21:48,310 நீங்கள் என்ன கொடுக்கிறீர்களோ அதுதான் உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும் 417 00:21:48,810 --> 00:21:49,895 இதை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள் 418 00:21:49,895 --> 00:21:51,813 நான் உங்களுக்கு ஒரு பரிசு கொடுத்தால் 419 00:21:51,813 --> 00:21:53,982 நீங்களும் திரும்ப கொடுப்பீர்கள் என தெரியும் 420 00:21:53,982 --> 00:21:56,818 அதனால்தான் நாம் கொடுக்கிறோமே 421 00:21:57,319 --> 00:21:58,153 இதை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள் 422 00:21:58,153 --> 00:22:02,657 - மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள் - மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள் 423 00:22:02,657 --> 00:22:04,951 - ஆசைப்படுங்கள் - ஆசைப்படுங்கள் 424 00:22:04,951 --> 00:22:07,162 நீங்கள் செய்யும் எல்லா நல்ல விஷயங்களையும் 425 00:22:07,162 --> 00:22:11,291 - மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள் - மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள் 426 00:22:11,291 --> 00:22:13,543 - அது போய்விட்டால் - அது போய்விட்டால் 427 00:22:13,543 --> 00:22:15,629 அது உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும் 428 00:22:15,629 --> 00:22:19,799 நீங்கள் மற்றவர்களுக்கு அன்பைக் கொடுத்தால் அது உங்களுக்கே திரும்ப கிடைக்கும் 429 00:22:19,799 --> 00:22:22,886 நீங்கள் என்ன கொடுக்கிறீர்களோ அதுதான் உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும் 430 00:22:23,386 --> 00:22:24,512 இதை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள் 431 00:22:24,512 --> 00:22:28,683 நான் உங்களுக்கு ஒரு பரிசு கொடுத்தால் நீங்களும் திரும்ப கொடுப்பீர்கள் என தெரியும் 432 00:22:28,683 --> 00:22:31,436 அதனால்தான் நாம் கொடுக்கிறோமே 433 00:22:32,020 --> 00:22:33,104 இதை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள் 434 00:22:33,939 --> 00:22:35,148 இதை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள் 435 00:22:37,150 --> 00:22:39,778 அருமை! நன்றாக இருந்தது, மோகீ. 436 00:22:43,573 --> 00:22:46,159 அதை விடு, ஸ்புராக்கி. நான் இதைக் கைவிடுகிறேன். 437 00:22:49,412 --> 00:22:51,498 இதில் ஏன் இவ்வளவு மோசமாக செயல்படுகிறாய்? 438 00:22:51,498 --> 00:22:54,542 உன்னால் எதையும் சரியாகச் செய்ய முடியாதா. சரியாகச் செய். 439 00:22:54,542 --> 00:22:56,545 ஹே, என்னிடம் யாருமே இப்படி பேச மாட்டார்கள். 440 00:22:58,004 --> 00:22:59,214 என்னைத் தவிர. 441 00:23:00,840 --> 00:23:03,802 முதலாவது விஷயம், இது வேலை செய்கிறது. அடுத்தது... 442 00:23:05,136 --> 00:23:07,639 நான் அந்த வார்த்தைகளை இனி யாரிடமும் சொல்ல மாட்டேன். 443 00:23:07,639 --> 00:23:10,100 ஆக அதை எனக்கே சொல்லிக்கொள்வது எப்படி சரியாகும்? 444 00:23:12,269 --> 00:23:16,523 என் ஷிரோ வாலில் உள்ள சாதனைப் பெண்மணிகளுக்கு, நம் வார்த்தைகளில் ஆற்றலிருக்கிறது எனத் தெரியும், 445 00:23:16,523 --> 00:23:20,360 நாம் நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்தால், நம் வாழ்க்கை நன்றாக இருக்கும். 446 00:23:23,113 --> 00:23:26,491 நேர்மறையான வார்த்தைகள் நே-நே-நே-நேர்மறையான வார்த்தைகள் 447 00:23:26,491 --> 00:23:31,454 ந-ந-ந-நம் வாழ்க்கையை மே-மே-மே-மேம்படுத்தும் 448 00:23:33,039 --> 00:23:34,040 ஓஹோ. 449 00:23:35,834 --> 00:23:36,877 - நண்பா... - என்ன? 450 00:23:36,877 --> 00:23:39,421 ...மீண்டும் ராக்கிற்கு ஒற்றுமையைத் திரும்ப கொண்டு வந்துவிட்டோம். 451 00:23:39,421 --> 00:23:42,507 ஸ்ட்ராபெர்ரிகள் ஃப்ராகெல்களுக்கு நல்லதல்ல. 452 00:23:44,467 --> 00:23:46,887 நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும் 453 00:23:46,887 --> 00:23:50,390 சில விஷயங்கள் மாறாது. உணவின் நறுமணத்தைப் போல. 454 00:23:50,390 --> 00:23:54,644 நாம் நம் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும், அன்பை பகிர்ந்துகொள்ள வேண்டும். 455 00:24:05,155 --> 00:24:07,324 மகுடம் நன்றாக இருக்கிறது, அப்பா. 456 00:24:09,200 --> 00:24:12,913 இந்த பழைய மகுடமா? இப்போதுதான் அலமாரியிலிருந்து இதை எடுத்தேன். 457 00:24:13,413 --> 00:24:15,332 - ஸ்ட்ராபெர்ரிகள் ஃப்ராகெல்களுக்கு நல்லதல்ல. - என்ன? 458 00:24:17,667 --> 00:24:20,378 ஸ்ட்ராபெர்ரிகள் ஃப்ராகெல்களுக்கு நல்லதல்லயா? 459 00:24:20,378 --> 00:24:23,131 கடைசி ஸ்ட்ராபெர்ரியையும் அகற்றிவிட்டேன். 460 00:24:23,131 --> 00:24:25,592 ஜூனியர், திட்டம் மாறிவிட்டது. 461 00:24:25,592 --> 00:24:27,886 நிறைய ஸ்ட்ராபெர்ரிகளை வளர்க்க வேண்டும். 462 00:24:28,929 --> 00:24:31,348 - சரி. செய்கிறேன், அப்பா. - சரி. 463 00:24:31,348 --> 00:24:33,308 ஃப்ராகெல்களுக்கு நாம் யாரென காட்டலாம். 464 00:24:36,728 --> 00:24:37,812 உன்னால் முடியும், நண்பா. 465 00:24:37,812 --> 00:24:39,648 பூபர்! பூபர்! 466 00:24:40,273 --> 00:24:42,525 இது முழுவதுமாகச் சுத்தம் செய்யப்பட்டதென நிச்சயம் தெரியுமா? 467 00:24:42,525 --> 00:24:43,693 - ஓ, தெரியுமே. - ஆமாம்! 468 00:24:43,693 --> 00:24:46,238 இப்போது, இதைப் பார்ப்பதை நிறுத்திவிட்டு, சாப்பிடு. 469 00:24:46,238 --> 00:24:48,448 இது ஒரு அற்புதமான அனுபவமாக இருக்கும்! 470 00:24:48,448 --> 00:24:50,116 ருசித்து சாப்பிடு. 471 00:24:50,116 --> 00:24:51,451 - சரி. - ஆம். 472 00:24:56,581 --> 00:25:01,378 - இதன் ருசி... - என்ன? 473 00:25:01,378 --> 00:25:02,546 சுமாராக உள்ளது. 474 00:25:03,296 --> 00:25:04,756 இது சுமாராகத்தான் உள்ளது. 475 00:26:27,589 --> 00:26:29,591 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்