1 00:00:27,320 --> 00:00:29,239 உங்கள் கவலைகளை நடனமாடி விரட்டுங்கள் 2 00:00:29,239 --> 00:00:31,408 கவலைகளை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 3 00:00:31,408 --> 00:00:33,493 இசை முழங்கட்டும் 4 00:00:33,493 --> 00:00:35,412 அங்கே ஃப்ராகெல் ராக்கில் 5 00:00:35,412 --> 00:00:37,706 உங்கள் கவலைகளை களைந்திடுங்கள் 6 00:00:37,706 --> 00:00:39,749 நடனங்களை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 7 00:00:39,749 --> 00:00:41,376 ஃப்ராகெல்கள் விளையாடட்டும் 8 00:00:41,376 --> 00:00:42,419 - நாங்கள்தான் கோபோ. - மோகீ. 9 00:00:42,419 --> 00:00:43,336 - வெம்ப்ளே. - பூபர். 10 00:00:43,336 --> 00:00:45,088 - ரெட். வூ! - ஊப்பீ! 11 00:00:45,088 --> 00:00:46,548 வூ-ஹூ! 12 00:00:47,757 --> 00:00:49,217 ஜூனியர்! 13 00:00:49,217 --> 00:00:50,635 ஹலோ! 14 00:00:51,678 --> 00:00:53,346 என் முள்ளங்கி. 15 00:00:54,472 --> 00:00:56,433 உங்கள் கவலைகளை நடனமாடி விரட்டுங்கள் 16 00:00:56,433 --> 00:00:58,560 கவலைகளை வேறு நாளைக்கு ஒத்திப்போடலாம் 17 00:00:58,560 --> 00:01:00,645 இசை முழங்கட்டும் 18 00:01:00,645 --> 00:01:03,189 அங்கே ஃப்ராகெல் ராக்கில் அங்கே ஃப்ராகெல் ராக்கில் 19 00:01:04,733 --> 00:01:06,151 அங்கே ஃப்ராகெல் ராக்கில். 20 00:01:14,534 --> 00:01:15,577 ஹே, ஸ்புராக்கெட். 21 00:01:15,577 --> 00:01:18,163 உன்னைப் பார்ப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. 22 00:01:20,999 --> 00:01:22,375 நீ மிகவும் வேடிக்கையானவன். 23 00:01:22,375 --> 00:01:23,877 ஹே, கேளு. சொல்ல மறந்துவிட்டேன், 24 00:01:23,877 --> 00:01:28,006 திருமதி ஷிம்மெல்ஃபின்னிக்கு இன்று ஜூரி பணி உள்ளது, நாம் அதை முழுமையாக ஆதரிக்கிறோம். 25 00:01:28,006 --> 00:01:29,216 குடியுரிமை பணி, உனக்கே புரியும். 26 00:01:29,216 --> 00:01:33,428 அவங்களது பூனையான ஃப்ளஃபினெல்லாவை பார்த்துகொள்ள முடியுமா என கேட்டாங்க, நான் சம்மதித்துவிட்டேன். 27 00:01:35,472 --> 00:01:38,225 ஃப்ளஃபினெல்லா இங்கிருந்தால் உனக்கு பிடிக்காது. 28 00:01:38,934 --> 00:01:41,144 ஆனால், நீ நாள் முழுவதும் மாடியில் பாதுகாப்பாகக் கழிக்கலாம். 29 00:01:41,144 --> 00:01:43,063 நீ அவளைப் பார்க்க வேண்டியதில்லை, அதனால் நீ பயப்படவும் தேவையில்லை. 30 00:01:45,607 --> 00:01:48,818 பயம் வந்தாலும் பரவாயில்லை. எனக்குத் தெரியப்படுத்து, நான் உதவுகிறேன். 31 00:01:51,613 --> 00:01:53,490 நிஜமாகவா? எலும்புகளை வைத்து பளு தூக்குகிறாயா? 32 00:01:54,157 --> 00:01:58,286 சரி, பலசாலி. உன் உணர்வுகளை அடக்க வேண்டிய அவசியமில்லை. 33 00:01:58,286 --> 00:02:03,333 உனக்காக மாடி திறந்துள்ளது, உனக்கு ஏதாவது புலம்ப வேண்டுமென்றால், நான் இங்கே இருக்கிறேன். 34 00:02:06,962 --> 00:02:09,296 ஹாய், திருமதி ஷிம்மெல்ஃபின்னி. நாங்கள் நன்றாக கவனித்துக்கொள்கிறோம்... 35 00:02:09,296 --> 00:02:13,218 அவங்க கிளம்பிட்டாங்க. ஆஹா. இந்தப் பெண்மணி ரொம்பப் பேச மாட்டாங்க போலும். 36 00:02:14,177 --> 00:02:15,679 வருக, ஃப்ளஃபினெல்லா. 37 00:02:15,679 --> 00:02:17,222 உன் வீடு மாதிரி சௌகரியமாக இரு. 38 00:02:17,222 --> 00:02:20,392 இந்த வீட்டில் எலிகள் இல்லை, ஆனால், நீ ஒன்றைக் கண்டுபிடித்தால், அது உன்னுடையதே. 39 00:02:20,392 --> 00:02:22,269 உனக்கு நினைவிருக்கிறதா, ஸ்புரா... 40 00:02:25,063 --> 00:02:26,565 ஸ்புராக்கெட். 41 00:02:59,598 --> 00:03:02,350 சரி, எல்லோரும் கேளுங்கள். இது மிகவும் முக்கியமான கூட்டம். 42 00:03:03,351 --> 00:03:05,312 அதனால்தான் என்னுடைய சீரியஸ் உடையை அணிந்திருக்கிறேன். 43 00:03:05,312 --> 00:03:08,440 இது என் மற்ற உடையைப் போலதான் இருக்கும், கூர்ந்து கவனித்தால் வித்தியாசம் தெரியும். 44 00:03:08,440 --> 00:03:09,691 - நான் கவனித்தேன். - நான் பார்த்த முதல் விஷயமே அதுதான். 45 00:03:09,691 --> 00:03:12,319 நண்பர்களே, நம்மிடம் இருந்த முள்ளங்கிகள் எல்லாம் தீர்ந்துவிட்டன. 46 00:03:12,319 --> 00:03:14,112 - ஓ-ஹோ. - நாம் அதை சரிசெய்யவில்லை என்றால், 47 00:03:14,112 --> 00:03:16,865 ஃப்ராகெல் ராக்கில் நம் வாழ்க்கை முறை என்றென்றைக்கும் மாறக்கூடும். 48 00:03:16,865 --> 00:03:18,074 என்றென்றைக்குமா? 49 00:03:18,074 --> 00:03:18,992 - ஆமாம். - இல்லை. 50 00:03:18,992 --> 00:03:22,579 என் வார்த்தையை மன்னியுங்கள், ஆனால் இது ஒரு கடினமான வேலை. 51 00:03:23,538 --> 00:03:26,041 - கோபோ! - தெரியும், தெரியும், தெரியும். 52 00:03:26,041 --> 00:03:28,293 ஆனால், நம்மிடம் தீர்வுகள் உள்ளன. 53 00:03:28,293 --> 00:03:32,088 பூபர் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்துவான் அவர் சில அற்புதமான கருத்துக்களை பகிர்ந்துகொள்வார். 54 00:03:32,088 --> 00:03:34,424 பொறுங்கள். இந்த அடுத்த விருந்தினரைத் தூக்கிவிட வேண்டும். 55 00:03:36,092 --> 00:03:38,136 காட்டர்பின். 56 00:03:38,136 --> 00:03:39,763 எப்படி இருக்கிறாய், பெண்ணே? 57 00:03:40,680 --> 00:03:41,681 ம்? 58 00:03:41,681 --> 00:03:44,434 - என்ன? நாங்கள் மிகவும் நெருக்கமான நண்பர்கள். - அப்படியா? 59 00:03:44,434 --> 00:03:46,436 அதாவது, நெருக்கமாக இருந்திருக்கணும். இல்லையா? 60 00:03:46,436 --> 00:03:48,897 - அப்படியும் இருக்கலாம். - தர்ம சங்கடம். 61 00:03:48,897 --> 00:03:53,109 சரி, நான் ஹைட்ரோபோனிக் தோட்டக்கலையைப் பயன்படுத்தி வருகிறேன், 62 00:03:53,109 --> 00:03:55,904 மண் இல்லாமல் செடிகளை வளர்க்கும் முறை. 63 00:03:55,904 --> 00:03:58,073 - சரி. - தற்போது கார்குகளின் தோட்டம் வறண்டு கிடப்பதால், 64 00:03:58,073 --> 00:04:00,450 இந்த முறையைப் பயன்படுத்தி மீண்டும் முள்ளங்கியை வளர்க்கலாம். 65 00:04:01,993 --> 00:04:04,162 - அற்புதம்! - அப்படிப் போடு என்னுடைய தோழியே! 66 00:04:04,162 --> 00:04:08,500 ஆஹா. நம்மைப் பாரேன். ஃப்ராகெல்களும், டூஸர்களும் ஒன்றாக வேலை செய்கிறோம். 67 00:04:08,500 --> 00:04:10,627 நினைத்துப் பார்த்தால், எங்கள் காலத்தில் நாங்கள் அவற்றை சாப்பிட்டோம். 68 00:04:10,627 --> 00:04:11,920 என்ன? 69 00:04:11,920 --> 00:04:13,213 சொன்னதை வாபஸ் வாங்கிக்கொள்கிறேன். 70 00:04:13,213 --> 00:04:17,800 சரி, எப்படியும், அறுவடை செய்யத்தக்க முதல் முள்ளங்கி 71 00:04:17,800 --> 00:04:20,262 45 முதல் 50 ஹெல்மெட் காலண்டர் மாதங்களில் தயாராகிவிடும். 72 00:04:20,262 --> 00:04:21,429 - தோராயமாக. - என்ன? 73 00:04:21,429 --> 00:04:23,598 மாதங்களா? அட, அவ்வளவு நாட்களா? 74 00:04:23,598 --> 00:04:25,850 ஹே, அவள் ஏதோ வேலை செய்கிறாள் என்று தான் நான் சொன்னேன். 75 00:04:25,850 --> 00:04:28,603 எனக்கு அவகாசம் தெரியும் என்று சொல்லவில்லை. 76 00:04:29,396 --> 00:04:31,898 சரி, முள்ளங்கிகளை உடனே 77 00:04:31,898 --> 00:04:35,819 அறுவடை செய்ய ஏதாவது, திட்டம் இருக்கிறதா? 78 00:04:35,819 --> 00:04:38,947 ஆம், என்ன திட்டம் இருக்கு கோபோ? நாங்கள் காத்திருக்கிறோம். 79 00:04:38,947 --> 00:04:42,742 ஆமாம். எங்களுக்கெல்லாம் தலைவன் போன்றவன் நீதானே? 80 00:04:46,329 --> 00:04:49,833 சரி... சரி, எல்லாம் சரியாகிவிடும். 81 00:04:49,833 --> 00:04:52,294 முள்ளங்கியை மீண்டும் வளர்க்க நான் ஒரு தீர்வு காண்பேன். 82 00:04:52,294 --> 00:04:57,048 அதாவது, நான் முதன்முதலில் முள்ளங்கியைக் கண்டுபிடித்த ஃப்ராகெலின் மருமகன் தானே. 83 00:04:57,048 --> 00:04:59,467 ஐயோ! கதை சொல்ல ஆரம்பித்துவிட்டான். 84 00:04:59,467 --> 00:05:04,389 வெகு காலத்திற்கு முன்பு, என் மாட் மாமா வெற்றிகரமாக கார்குகளின் தோட்டத்தில் 85 00:05:04,389 --> 00:05:10,312 முள்ளங்கிகளைக் கண்டுபிடித்தார் பிறகு, அவற்றை இந்தப் பெரிய ஹாலுக்கு எடுத்து வந்தார். 86 00:05:10,312 --> 00:05:16,151 அவர் ஃப்ராகெல் ஹார்னை, ஒலிக்கச் செய்தது, ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறித்தது. 87 00:05:18,862 --> 00:05:20,780 ஆஹா. அருமை. 88 00:05:20,780 --> 00:05:23,992 ஹே, என் மாமாவின் சமீபத்திய தபால் அட்டையில் சில மதிப்புமிக்க வழிகாட்டுதல்கள் நிச்சயம் இருக்கும். 89 00:05:23,992 --> 00:05:28,371 அவர் ஒரு முள்ளங்கியை நமக்கு அனுப்பியிருந்தாலொழிய, அது சந்தேகம் தான். 90 00:05:28,371 --> 00:05:30,081 “அன்புள்ள மருமகன் கோபோ...” 91 00:05:30,081 --> 00:05:31,541 அன்றொரு நாள், 92 00:05:31,541 --> 00:05:35,670 பெரும் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்ட ஒரு மலைப்பகுதியை நான் கண்டேன். 93 00:05:35,670 --> 00:05:39,090 அந்த அறிவற்ற உயிரினங்கள் மிகவும் பயந்திருந்ததைக் கவனித்தேன். 94 00:05:42,636 --> 00:05:45,805 ஆனால் எனக்கு சுத்தமாக பயம் எதுவும் இல்லை. 95 00:05:46,514 --> 00:05:47,515 நீ என்ன மாதிரியானவன்? 96 00:05:47,515 --> 00:05:50,352 அந்த அறிவற்ற உயிரினங்கள், ஒரு குன்றில் சிக்கியிருந்ததைப் பார்த்த போது, 97 00:05:50,352 --> 00:05:52,103 நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. 98 00:05:52,103 --> 00:05:55,106 வருகிறேன். வருகிறேன். உங்களைக் காப்பாற்ற ஃப்ராகெல் வருகிறேன். 99 00:05:56,399 --> 00:06:00,403 இந்த சூழ்நிலையில், மற்றவர்கள் பயப்படுவார்கள் என்றாலும், நான் பயமின்றி இருந்தேன். 100 00:06:00,403 --> 00:06:02,405 இது நான் நினைத்ததைவிட உயரமாக இருக்கிறது. 101 00:06:03,740 --> 00:06:07,619 மருமகனே, ஒரு வலிமையான தலைவன் எல்லா விதமான சந்தேக உணர்வுகளையும் எதிர்க்க வேண்டும். 102 00:06:07,619 --> 00:06:09,120 அதனால் நான் தைரியமாக வழி நடத்தினேன். 103 00:06:10,163 --> 00:06:11,831 இல்லை, இல்லை, இல்லை! 104 00:06:16,795 --> 00:06:18,171 அம்மா! அம்மா! 105 00:06:22,884 --> 00:06:24,427 எனக்கு அது ரொம்ப பிடிச்சிருக்கு. 106 00:06:24,427 --> 00:06:28,682 பயந்து போன அந்த அறிவற்ற உயிரினங்களுக்கு என்னைப் பின்தொடர்வது ஆறுதலாக இருந்தது. 107 00:06:29,182 --> 00:06:32,227 அவர்கள் எனக்கு ஒரு மேல்சட்டையைக் கொடுத்து, நான் ஒரு ஹீரோ என்றும் குறிப்பிட்டார்கள், 108 00:06:32,227 --> 00:06:34,396 - இன்னும் சூப்பரான ஹீரோ. ஒரு சூப்பர் ஹீரோ. - குளிருகிறது. 109 00:06:34,396 --> 00:06:36,273 ஆஹா. ஒரு புது வார்த்தையைக் கண்டுபிடித்துள்ளேன். 110 00:06:36,273 --> 00:06:39,442 எப்படியோ, தேவைப்படும்போது மற்றவர்களை வழிநடத்த வேண்டும் என்பதற்கான நினைவூட்டல் தான் இது. எனவே... 111 00:06:39,442 --> 00:06:44,030 “...உணர்வுகளை புறம் தள்ளி, பலவீனத்தைக் காட்டிக்கொள்ளாமல், தைரியமாக இருக்க வேண்டும்.” 112 00:06:44,030 --> 00:06:47,075 அது எனக்குப் பிடிச்சிருக்கு. அப்படித்தான் நான் வழிநடத்த வேண்டும். 113 00:06:48,994 --> 00:06:50,161 ஆமாம்! 114 00:06:51,204 --> 00:06:53,123 துண்டை அணிந்துகொண்டா? 115 00:06:53,123 --> 00:06:56,167 கோபோ. நீ ஒரு சூப்பர் ஹீரோ என்றால், 116 00:06:56,167 --> 00:07:00,505 நான் ஹீரோவின் உதவியாளனாக இருக்க முடியுமா? ஹீரோவின் பக்கத்தில் நிற்பானே, அந்தப் பையனைப் போல்? 117 00:07:00,505 --> 00:07:04,968 உதைக்கும் தூரத்தில்... ஒரு வலதுகை போல? 118 00:07:04,968 --> 00:07:07,178 - ம்? சரியா? சரி! - பிடிச்சிருக்கு. சரி, 119 00:07:07,178 --> 00:07:09,347 தைரியமாக ஒரு திட்டத்தை உருவாக்க நேரம் வந்துவிட்டது. 120 00:07:09,347 --> 00:07:11,224 முதல் வேலை, டிராஷ் ஹீப்பிடம் செல்வோம். 121 00:07:11,224 --> 00:07:12,392 அவள் எல்லாம் அறிந்தவள். 122 00:07:12,392 --> 00:07:13,602 அவளால் உதவ முடியும். 123 00:07:13,602 --> 00:07:15,312 இனி கூட்டங்கள் இல்லை. 124 00:07:15,937 --> 00:07:18,940 - வெறும் ஆக்ஷன் தான். - ஆக்ஷன். 125 00:07:18,940 --> 00:07:20,150 ஆக்ஷன். 126 00:07:21,401 --> 00:07:22,485 பை! 127 00:07:25,697 --> 00:07:28,533 இந்த தோட்டத்தில் ஏதோ ஒரு தப்பு இருக்கிறது. 128 00:07:28,533 --> 00:07:29,618 - ஆம். - அதாவது, 129 00:07:29,618 --> 00:07:32,329 நாம் பயன்படுத்திய கார்க்-ஏ-மாக்ஸ் ஆக மட்டும் இருக்க முடியாது. 130 00:07:32,329 --> 00:07:34,956 அது கார்குகளான நம்மைப் போல சரியானது. 131 00:07:34,956 --> 00:07:37,500 ஆனால் ஏதோ நடக்கிறது. 132 00:07:37,500 --> 00:07:39,669 ஒருவேளை ஃப்ராகெல்கள் நமக்கு உதவலாம். 133 00:07:39,669 --> 00:07:42,839 கோபோ ஒருமுறை என்னிடம், எப்போது எனக்கு ஒரு நண்பன் தேவையோ, 134 00:07:42,839 --> 00:07:46,134 அப்போது நான் இந்தக் கைத்தட்டும் கருவியைத் தட்டினால், அவன் ஓடி வந்து உதவுவேன் என்றான். 135 00:07:46,134 --> 00:07:50,222 நான் என் ஜூனியருடன் உடன்படுகிறேன். இப்போது நமக்கு உதவி தேவை. 136 00:07:50,222 --> 00:07:51,431 ஜாலி! 137 00:07:52,390 --> 00:07:53,266 இல்லை! 138 00:07:53,266 --> 00:07:54,935 - ம்? - நாம் இதில் 139 00:07:54,935 --> 00:07:58,688 ஃபிராகில்களை ஈடுபடுத்த வேண்டாம். நம் முன்னோர்களுக்கு அது பிடிக்காது. 140 00:08:00,982 --> 00:08:05,862 இங்கே பாரு, ஜூனியர். நான் மூர்க்கமாக இருக்க விரும்பவில்லை. 141 00:08:06,363 --> 00:08:09,866 கார்குகளின் தோட்டத்தை கார்குகள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். 142 00:08:09,866 --> 00:08:11,952 - ம்? - அதை சரிசெய்வது நம் பொறுப்பு. 143 00:08:11,952 --> 00:08:16,081 நீயும் நானும். ராஜா மற்றும் இளவரசன். 144 00:08:16,081 --> 00:08:18,750 தட்ட வேண்டிய கைகள் இங்கே தான் உள்ளன. 145 00:08:18,750 --> 00:08:21,002 இந்தக் கைகளைத் தட்டு, என் செல்ல மகனே. ஆம். 146 00:08:21,002 --> 00:08:23,088 - ஆமாம். நீங்கள் சொல்வது சரிதான், அப்பா. - அது என் மூக்கு. 147 00:08:23,088 --> 00:08:25,632 நமக்கு இவையும் தேவை இல்லை, ஃபிராகில்களும் தேவை இல்லை. 148 00:08:29,177 --> 00:08:31,012 - அது நான்தான். - நீதான் என் மகன். 149 00:08:31,012 --> 00:08:32,514 ஓ, கோபோ. 150 00:08:33,056 --> 00:08:35,308 நீ என்ன நினைத்து அதை ஜூனியரிடம் கொடுத்தாய் என எனக்குத் தெரியும். 151 00:08:35,976 --> 00:08:38,852 - நீ நலம்தானே? - வந்து... 152 00:08:41,481 --> 00:08:44,818 பரவாயில்லை. என்னைப் பின்தொடர்ந்து வா, வலதுகை. நமக்கு வேலை இருக்கு. 153 00:08:44,818 --> 00:08:46,736 தைரியமாக வேலையில் இறங்குவோம். 154 00:08:50,865 --> 00:08:54,244 மற்றொரு நாள் அந்த பழைய ஷூவில் என் தலை சிக்கிய போது, 155 00:08:54,244 --> 00:08:57,956 நான் பயந்தே போயிட்டேன். 156 00:08:59,332 --> 00:09:02,669 எவ்வளவு தாராளமாக உன் உணர்வுகளை வெளிப்படுத்துகிறாய், ஃபிலோ. 157 00:09:02,669 --> 00:09:04,796 குங்கே, ஏதாவது சேர்க்க வேண்டுமா? 158 00:09:04,796 --> 00:09:06,923 உணர்வுகளை வெளிப்படுத்த, உன் முறை வந்துவிட்டது. 159 00:09:06,923 --> 00:09:08,967 சரி. 160 00:09:08,967 --> 00:09:12,679 - ஃபிலோ சிக்கிக்கொண்டபோது, நான் வருத்தப்பட்டேன். - ஓ-ஹோ. 161 00:09:12,679 --> 00:09:14,723 - என்ன? - ஏனென்றால் நான் உன்னை இழக்க விரும்பவில்லை. 162 00:09:17,726 --> 00:09:22,772 என் பையன்களை பார். உங்களை நினைத்து பெருமையாக இருக்கு. அந்த உணர்வுகளை வெளிப்படுத்துங்கள். 163 00:09:24,608 --> 00:09:26,943 வருக, வருக. 164 00:09:26,943 --> 00:09:29,779 எங்கள் உணர்வு வட்டத்தில் பங்குகொள்ள நீங்கள் சரியான நேரத்தில் வந்திருக்கிறீர்கள். 165 00:09:29,779 --> 00:09:31,656 - ஆரோக்கியமானது. - நிவாரணம் தரக்கூடியது. 166 00:09:31,656 --> 00:09:33,575 உணர்வுகளுக்கு நேரமில்லை, மேடம் ஹீப். 167 00:09:33,575 --> 00:09:37,704 ஃப்ராகெல் ராக்கில் முள்ளங்கி நெருக்கடி உள்ளது எங்களுக்கு உங்கள் உதவி தேவை. 168 00:09:37,704 --> 00:09:40,874 “உணர்வுகளுக்கு நேரமில்லை” என்றா சொன்னான்? 169 00:09:40,874 --> 00:09:42,500 - அப்படித்தான் சொன்னார். - அப்படிக்கு அப்படியே. 170 00:09:42,500 --> 00:09:47,255 வந்து, முழு ராக்கும் என்னை நம்பித்தான் உள்ளது. எனக்கு உணர்வுகள் தேவையில்லை. நடவடிக்கைதான் தேவை. 171 00:09:47,255 --> 00:09:50,425 எனவே, உங்களுக்கு முள்ளங்கியை எப்படி திரும்ப கொண்டு வருவது என்று தெரியுமா? 172 00:09:51,885 --> 00:09:53,595 நீ என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும். 173 00:09:53,595 --> 00:09:56,890 - அப்படியா? - இதெல்லாம் எங்கே தொடங்கியதோ, அங்கே போய் பாரு. 174 00:09:57,390 --> 00:09:59,267 மேற்பரப்பிற்கு கீழே பாரு, 175 00:09:59,267 --> 00:10:04,397 பிறகு கீழே உள்ளதை மேலே வெளிச்சத்திற்குக் கொண்டு வா. 176 00:10:04,397 --> 00:10:05,690 ம்? 177 00:10:05,690 --> 00:10:08,026 - டிராஷ் ஹீப் பேசிவிட்டது. - டிராஷ் ஹீப் பேசிவிட்டது. 178 00:10:08,026 --> 00:10:10,654 - ஆமாம். - ஆமாம். 179 00:10:11,446 --> 00:10:12,948 மேற்பரப்பிற்குக் கீழே பார்க்க வேண்டுமா? 180 00:10:12,948 --> 00:10:14,407 எந்த மேற்பரப்பு? 181 00:10:15,200 --> 00:10:17,077 - எனக்குப் புரிந்துவிட்டது. - அவனுக்குப் புரிந்துவிட்டது. 182 00:10:17,077 --> 00:10:18,286 இது தொற்றக்கூடியதா? 183 00:10:18,870 --> 00:10:23,291 ஃப்ராகெலின் ஹாரன். என் மாமா முதலில் முள்ளங்கியைக் கண்டுபிடித்ததாக அறிவித்த இடம். 184 00:10:23,291 --> 00:10:25,377 அங்கேதான் இதெல்லாம் தொடங்கியது. 185 00:10:25,377 --> 00:10:27,712 இருந்தாலும் நான் உண்மையைச் சரிபார்க்க விரும்புகிறேன். 186 00:10:27,712 --> 00:10:30,966 நாம் மேற்பரப்பிற்கு கீழே தோண்ட வேண்டும். 187 00:10:30,966 --> 00:10:32,842 ஏனெனில் அங்கே ஏதோ ஒன்று புதைந்து கிடக்கும். 188 00:10:32,842 --> 00:10:36,888 அதை நாம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து முள்ளங்கி பிரச்சினையைத் தீர்க்கலாம். 189 00:10:36,888 --> 00:10:39,140 நாம் நிலையான அளவில் குழிகள் தோண்டப் போகிறோமா? 190 00:10:39,140 --> 00:10:42,394 அப்படி இல்லையென்றால், இந்த முழுப் பகுதியையும் நான் எச்சரிக்கையாக டேப் செய்ய வேண்டும். 191 00:10:42,394 --> 00:10:45,105 ஃப்ராகெல்களே, நாம் சில குழிகள் 192 00:10:45,105 --> 00:10:47,190 - தோண்ட வேண்டும் போல் தெரிகிறது! - பாட வேண்டும்! தோண்ட வேண்டும்! 193 00:10:47,190 --> 00:10:49,568 தோண்ட வேண்டும். நாம் ஒரே மாதிரி யோசிக்கிறோம். 194 00:10:55,782 --> 00:10:58,285 ஸ்புராக்கெட், நீ என்ன அணிந்திருக்கிறாய்? 195 00:11:00,704 --> 00:11:01,746 என்னால் உன்னை சமாளிக்க முடியவில்லை. 196 00:11:01,746 --> 00:11:04,374 கேள், நண்பா. உனக்கு பயமாக இருக்கிறதென்றால், அதை ஒப்புக்கொள்வதில் தவறில்லை. 197 00:11:04,374 --> 00:11:06,334 மாடி அங்கே தான் இருக்கிறது. 198 00:11:06,334 --> 00:11:07,752 நான் குப்பையை வெளியே போடப் போகிறேன், 199 00:11:07,752 --> 00:11:10,672 அதனால் நீ ஃப்ளஃபினெல்லாவுடன் சில நிமிடங்கள் தனியாக இருப்பாய். 200 00:11:10,672 --> 00:11:12,841 உனக்கு அது பரவாயில்லையா? 201 00:11:14,384 --> 00:11:16,928 சரி, பலசாலி. நான் உடனே வந்துவிடுகிறேன். 202 00:11:32,402 --> 00:11:33,445 ம்? 203 00:11:54,132 --> 00:11:55,133 ம்? 204 00:12:07,896 --> 00:12:08,897 ம்? 205 00:12:27,666 --> 00:12:29,292 ஸ்புராக்கெட்? 206 00:12:29,292 --> 00:12:31,044 பார், இதுதான் பிரச்சினை. 207 00:12:31,753 --> 00:12:33,838 இப்போது உன்னை மாடிக்கு அனுப்புகிறேன். 208 00:12:33,838 --> 00:12:35,549 நீ இதை நிறுத்த வேண்டும் 209 00:12:36,049 --> 00:12:38,385 ஃப்ளஃபினெல்லா, உனக்கு ஒன்றுமில்லையே? 210 00:12:39,970 --> 00:12:41,888 நம் முழு வாழ்க்கையும் இந்தத் தேடலை 211 00:12:41,888 --> 00:12:44,057 நம்பி தான் இருக்கிறது என்பதை உன்னால் நம்ப முடிகிறதா? 212 00:12:44,057 --> 00:12:45,934 என்னுடைய உணர்வு நிலையை சரிபார்த்துக்கொள்கிறேன். 213 00:12:49,521 --> 00:12:51,273 நான் சற்று அழுத்தமாக உணர்கிறேன். 214 00:12:51,273 --> 00:12:54,401 ஹே, இப்போது நாம் அதனால் கவனம் சிதறிவிடக் கூடாது. 215 00:12:54,401 --> 00:12:57,612 நாம் தைரியமாக இருக்கப் போகிறோம். தோண்ட வேண்டிய நேரம் இது, உணர்ச்சிகளுக்கு இடமில்லை. 216 00:12:57,612 --> 00:13:00,615 ஆனால் உணர்ச்சியை வெளிப்படுத்துவதைத்தான் ஃப்ராகெல்கள் சிறப்பாக செய்வார்கள். 217 00:13:00,615 --> 00:13:04,661 அதற்குத்தான் ஃப்ராகெல் என்ற பெயரில் எஃப் இருக்கு, அது இல்லையென்றால், நாம் வெறும் ராகில்கள் தான். 218 00:13:04,661 --> 00:13:07,080 - ஆமாம். - இல்லை. டிராஷ் ஹீப் தெளிவாக சொன்னாள். 219 00:13:07,080 --> 00:13:09,040 நம் உணர்வுகளை அடக்கி, தைரியமாக வேலையில் இறங்கினால், 220 00:13:09,040 --> 00:13:12,043 நம்மால் சாதிக்க முடிந்த விஷயங்களுக்கு எல்லையே இல்லை. 221 00:13:12,043 --> 00:13:14,045 சரி. தோண்ட 222 00:13:14,045 --> 00:13:15,881 - தொடங்குவோம்! - ஆடலாம்! தோண்டலாம்! 223 00:13:15,881 --> 00:13:17,799 மீண்டும், உன்னுடன் முற்றிலும் உடன்படுகிறேன். 224 00:13:19,467 --> 00:13:21,386 உணர்வுகளை அடக்கி, தைரியமாக வேலையில் இறங்குங்கள் 225 00:13:24,139 --> 00:13:26,308 எதுவாக இருந்தாலும் முன்னோக்கி செல்லுங்கள் 226 00:13:29,311 --> 00:13:31,521 உங்கள் உணர்வுகள் முக்கியம், ஆனால் அவை மட்டும் போதாது 227 00:13:33,440 --> 00:13:37,152 கடினமாக உழைக்க தயாராகுங்கள் என்னுடன் இருங்கள், விரைவில் நீங்களே காண்பீர்கள் 228 00:13:37,777 --> 00:13:41,323 உணர்வுகளை அடக்கி, தைரியமாக வேலையில் இறங்கினால் 229 00:13:41,323 --> 00:13:43,199 அடக்க... நம் உணர்வுகளை அடக்க வேண்டுமா? 230 00:13:44,200 --> 00:13:46,328 என்னை நம்புங்கள் உங்கள் உணர்வுகளை நம்பாதீர்கள் 231 00:13:46,328 --> 00:13:48,121 சரி, நான் கோபோவை நம்புகிறேன். 232 00:13:48,914 --> 00:13:51,207 உங்கள் மண்வெட்டிகளை உள்ளே இறக்குங்கள் அது கடினமாக இருக்கலாம் 233 00:13:51,207 --> 00:13:52,584 நாம் முயற்சி செய்து பார்க்கலாம். 234 00:13:52,584 --> 00:13:57,297 - ஆனால், வேலை முடிந்ததும் தெரியும் - ஆமாம். 235 00:13:57,297 --> 00:13:58,715 ஹே! 236 00:13:58,715 --> 00:14:02,636 நாம் கனவு காணும் அனைத்து முள்ளங்கிகளும் நமக்குப் போதுமான உணவுதான் 237 00:14:03,720 --> 00:14:07,724 எனவே எல்லோரும் என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள் வேலை முடியும் வரை நாம் உழைக்க வேண்டும் 238 00:14:08,892 --> 00:14:12,771 உங்கள் உணர்வுகள் ஒரு மண்வெட்டியை எடுத்து இந்தப் பெரிய குழியைத் தோண்டாது 239 00:14:13,563 --> 00:14:17,150 நாம் ஒரு பெரிய பணியை முடிக்க வேண்டியிருக்கு, பொறுப்பெடுத்துக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது 240 00:14:17,150 --> 00:14:18,735 அப்படியென்றால்... 241 00:14:18,735 --> 00:14:20,362 இரு. அப்படியென்றால் என்ன? 242 00:14:21,363 --> 00:14:24,991 ஒருவேளை எப்படி உணர்கிறேன் என்பதில் நான் உண்மையாக இல்லாமல் இருக்கலாம் 243 00:14:24,991 --> 00:14:29,537 என் தோள்களின் மீதுள்ள அழுத்தத்தினால் 244 00:14:31,248 --> 00:14:34,668 ஒருவேளை என் உணர்ச்சிகளுக்கு நான் இடமளிக்காமல் இருக்கலாம் 245 00:14:34,668 --> 00:14:39,839 என் இதயத்தில் ஒரு போர் நடக்கிறது என்ற எண்ணத்தில் நான் சிக்கிக் கொண்டிருக்கலாம் 246 00:14:40,674 --> 00:14:42,300 இல்லை, நான் நன்றாக இருக்கிறேன். 247 00:14:43,552 --> 00:14:47,889 உணர்வுகளை அடக்கி, தைரியமாக வேலையில் இறங்குங்கள் 248 00:14:48,473 --> 00:14:53,228 எதுவாக இருந்தாலும் முன்னோக்கிச் செல்லுங்கள் 249 00:14:53,228 --> 00:14:55,564 உணர்வுகளுக்கு மதிப்பளித்தால் முயற்சிப்பதை நிறுத்திவிடலாம் 250 00:14:55,564 --> 00:14:56,815 முயற்சிப்பதை நிறுத்திவிடலாம் 251 00:14:56,815 --> 00:15:01,403 ஆனால், நாம் இப்படியே தொடர்ந்தால், இறுதியில் கண்டுபிடிப்போம் 252 00:15:01,403 --> 00:15:02,737 - ஆம், ஆம், ஆம்! - ஹுரே! 253 00:15:02,737 --> 00:15:06,366 நாம் கனவு காணும் அனைத்து முள்ளங்கிகளும் நமக்குப் போதுமான உணவுதான் 254 00:15:06,366 --> 00:15:07,951 நமக்குப் போதுமான உணவுதான் 255 00:15:07,951 --> 00:15:11,496 எனவே எல்லோரும் என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள் வேலை முடியும் வரை நாம் உழைக்க வேண்டும் 256 00:15:11,496 --> 00:15:13,456 எல்லா வேலையும் முடியும் வரை வேலை செய் 257 00:15:13,456 --> 00:15:16,585 உங்கள் உணர்வுகள் ஒரு மண்வெட்டியை எடுத்து இந்தப் பெரிய குழியை தோண்டாது 258 00:15:16,585 --> 00:15:17,752 இந்தப் பெரிய குழி 259 00:15:17,752 --> 00:15:21,590 நாம் ஒரு பெரிய பணியை முடிக்க வேண்டியிருக்கு, பொறுப்பெடுத்துக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது 260 00:15:21,590 --> 00:15:22,549 அப்படியென்றால்... 261 00:15:24,467 --> 00:15:26,761 உணர்வுகளை அடக்கி, தைரியமாக வேலையில் இறங்குங்கள் 262 00:15:28,054 --> 00:15:29,472 நல்ல முன்னேற்றம், ஃப்ராகெல்களே. 263 00:15:29,472 --> 00:15:32,976 ஆஹா, ஒரு சிறிய தடுமாற்றம், நாம் முற்றிலும் தவறான திசையில் தோண்டிவிட்டோம். 264 00:15:32,976 --> 00:15:35,145 - நாம் மீண்டும் தொடங்க வேண்டும். - என்ன? 265 00:15:36,730 --> 00:15:38,064 நகைச்சுவைக்கு சொன்னேன். 266 00:15:38,064 --> 00:15:39,232 உணர்வுகளுக்கு நேரமில்லை, 267 00:15:39,232 --> 00:15:41,067 - ஆனால் வேலை சம்பந்தப்பட்ட நகைச்சுவை அருமையானவை. - ம்? 268 00:15:41,067 --> 00:15:42,694 சரி, தோண்டிக்கொண்டே இருங்கள். 269 00:15:49,993 --> 00:15:51,536 கண்டுபிடித்துவிட்டேன், ஜூனியர்! 270 00:15:51,536 --> 00:15:53,204 நான் என் முதுகு உரோமத்தைப் புதுப்பிப்பதைப் போலவே 271 00:15:53,204 --> 00:15:57,709 ஒரு ரேக்கைக் கொண்டு இந்தத் தோட்டத்தையும் புதுப்பிக்க வேண்டும். 272 00:15:58,668 --> 00:16:01,338 நீங்கள் ரொம்ப புத்திசாலி, அப்பா. 273 00:16:01,338 --> 00:16:03,048 - அப்படியா? - ம்? 274 00:16:03,048 --> 00:16:04,549 அப்பா, உங்கள் பிறந்தநாளுக்கு 275 00:16:04,549 --> 00:16:07,260 நான் டம்ப் கேக் செய்யும்போது நீங்கள் வெங்காய மாவை 276 00:16:07,260 --> 00:16:09,846 சமையலறை முழுவதும் சிந்தியது உங்களுக்கு நினைவிருக்கா? 277 00:16:09,846 --> 00:16:11,389 நான் நடனமாடினேன். 278 00:16:11,389 --> 00:16:14,517 அதாவது, சில நேரங்களில் சில விஷயங்கள் நடக்கும். இப்போது என்ன சொல்ல வருகிறாய்? 279 00:16:14,517 --> 00:16:20,065 சரி, நீங்கள் மாவை கிளரத் தொடங்கியவுடன், அது ஒரு பெரிய மாவு மேகமாக மாறியது. 280 00:16:20,065 --> 00:16:22,859 பல நாட்களாக கோட்டை தூசி நிறைந்திருந்தது. 281 00:16:22,859 --> 00:16:26,947 நீங்கள் தோட்டத்தை ரேக் கொண்டு சீரமைத்தால், அது பத்து மடங்கு மோசமாகிவிடும். 282 00:16:26,947 --> 00:16:29,074 அப்படிச் செய்யாதீர்கள். 283 00:16:29,824 --> 00:16:30,659 நாங்கள் நிச்சயம்... 284 00:16:30,659 --> 00:16:32,911 - ஓ, மிக்க நன்றி. - ...நீ சொல்வதைக் கேட்க மாட்டோம். 285 00:16:33,536 --> 00:16:36,331 இது நல்ல திட்டம்தான், நான் பார்த்துக்கொள்கிறேன். 286 00:16:36,331 --> 00:16:39,417 ஏனென்றால், கடைசியாக நான் சரிபார்த்த வரையில், நான்தான் ராஜா. 287 00:16:40,627 --> 00:16:43,505 ம்? என்ன செய்றாங்க, அப்பா? 288 00:16:44,089 --> 00:16:45,674 எனக்கு... எனக்குத் தெரியாது. 289 00:16:47,050 --> 00:16:50,720 நான் வாக்கிங் போகிறேன். 290 00:16:50,720 --> 00:16:52,764 - வாக்கிங்கா? வாக்கிங் என்றால் என்ன? - ம்? 291 00:16:53,974 --> 00:16:55,850 வாக்கிங்... என்றால் என்ன? 292 00:16:55,850 --> 00:16:59,854 அம்மாவுக்கு ஒன்றுமில்லையே, அப்பா? அவங்க எங்கே போறாங்க? 293 00:17:00,438 --> 00:17:02,399 கவலைப்பட நேரமில்லை, மகனே. 294 00:17:02,399 --> 00:17:05,235 நமக்கு மண்ணைக் கிளரும் சில வேலை இருக்கிறது. 295 00:17:06,111 --> 00:17:07,112 சரி. 296 00:17:11,074 --> 00:17:13,577 நாம் ரொம்ப நேரமாகத் தோண்டிக் கொண்டிருக்கிறோம். 297 00:17:13,577 --> 00:17:16,121 ஆனால், எதுவுமே கிடைக்கவில்லை. 298 00:17:16,121 --> 00:17:17,914 - ஹே, சூப்பர் கோபோ. - ம்? 299 00:17:17,914 --> 00:17:20,458 இந்த மிஷன் வெற்றி பெறுமா என்பதில் எனக்கு சந்தேகம் இல்லைதான், ஏனெனில், 300 00:17:20,458 --> 00:17:22,209 வலதுகை சந்தேகப்பட மாட்டான். 301 00:17:22,209 --> 00:17:24,713 ஆனால், மற்றவர்களுக்கு சந்தேகம் இருக்கலாம்... 302 00:17:25,380 --> 00:17:27,215 மற்றும் எனக்கும்தான். 303 00:17:28,341 --> 00:17:31,553 - தவறு செய்துவிட்டேன். - நேரத்தை வீணடிப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. 304 00:17:31,553 --> 00:17:32,929 ஒவ்வொரு நொடியும் ஒரு பரிசு. 305 00:17:32,929 --> 00:17:34,306 அப்படி சொன்னாலும், 306 00:17:34,306 --> 00:17:37,058 நாம் நம் நேரத்தை வீணடிப்பது போலத்தான் உணர்கிறேன்! 307 00:17:37,642 --> 00:17:41,313 இல்லை, இல்லை. அந்த உணர்வுகளை விட்டுத் தள்ளுங்கள், நாம் நமது மிஷனை நினைவில்கொள்ளவேண்டும். 308 00:17:41,313 --> 00:17:43,565 மேற்பரப்பிற்கு கீழே பாரு, 309 00:17:43,565 --> 00:17:48,445 பிறகு கீழே உள்ளதை மேலே வெளிச்சத்திற்குக் கொண்டு வா. 310 00:17:49,529 --> 00:17:52,407 ஹே, அங்கே தான். எனக்கு ஏதோ தெரிகிறது. 311 00:17:54,701 --> 00:17:57,329 - ஹே, இது ஒரு பழங்கால தகடு போலத் தெரிகிறது. - ம்? 312 00:17:57,913 --> 00:18:00,332 முள்ளங்கியைக் காப்பது பற்றி இதில் ஏதாவது தகவல் இருக்க வேண்டும். 313 00:18:00,332 --> 00:18:04,961 இது நிச்சயம் ஒரு தகடு தானா? எனக்கு இது ஒரு அழுக்குக் கட்டி போலத் தெரிகிறது. 314 00:18:04,961 --> 00:18:07,964 அழுக்கு பற்றி நன்கு அறிந்த ஒருவன் நான், அதனால் ஒப்புக்கொள்கிறேன். 315 00:18:07,964 --> 00:18:09,049 எனக்கு அழுக்கு பிடிக்கும். 316 00:18:09,049 --> 00:18:12,552 மண் குளியலைவிட சிறந்தது எதுவுமில்லை, ஆனால் ஆமாம், அது வெறும் அழுக்கு தான். 317 00:18:12,552 --> 00:18:15,222 இல்லை. தைரியமாக... வேலையில் இறங்குவது தான் 318 00:18:15,222 --> 00:18:17,307 சரியான யோசனை என்பதற்கு இந்த தகடு தான் சான்று. 319 00:18:17,307 --> 00:18:20,602 வந்து, இந்த அழுக்கை சுத்தம் செய்கிறேன், அப்படிச் செய்தால் இன்னும் தெளிவாக பார்க்கலாம். 320 00:18:28,526 --> 00:18:31,863 இதை நிறுத்து. வராதே, நான்தான் அரசன். 321 00:18:32,572 --> 00:18:34,157 - என் கண்கள்! - அம்மா சொன்னது சரிதான். 322 00:18:34,157 --> 00:18:36,660 அது புழுதிப் புயலாக மாறிவிட்டது. 323 00:18:36,660 --> 00:18:41,581 - அம்மா, எங்களுக்கு நீங்கள் தேவை! - இல்லை, தேவை இல்லை, மகனே. 324 00:18:41,581 --> 00:18:43,917 எல்லாம் சரியாக இருக்கிறது. உன்னால் பார்க்க முடியவில்லையா? 325 00:18:43,917 --> 00:18:46,545 இல்லை, என்னால் எதையும் பார்க்க முடியவில்லை. 326 00:18:46,545 --> 00:18:48,838 இது செயல்முறையின் ஒரு பகுதிதான். 327 00:18:49,506 --> 00:18:51,383 அம்மா! 328 00:18:56,930 --> 00:18:58,014 என்ன ஆச்சு? 329 00:18:58,014 --> 00:19:00,433 சரி, இதன் பொருள்... இதன் பொருள் என்னவென்றால்... 330 00:19:04,563 --> 00:19:06,982 அது வெறும் அழுக்கு தான். 331 00:19:06,982 --> 00:19:09,568 சரி, இது ஒரு பெரும் ஏமாற்றமாகப் போய்விட்டது. 332 00:19:13,029 --> 00:19:16,324 கார்குகளின் தோட்டத்தில் இருந்து பெரிய புழுதிப்புயல் வருகிறது. 333 00:19:16,324 --> 00:19:19,953 அது பெரிய ஹாலை நிரப்பிக் கொண்டிருக்கிறது நாம் இங்கே சிக்கிக்கொண்டோம். 334 00:19:20,620 --> 00:19:23,248 - நான்தான் போகி! - ஐயோ. 335 00:19:23,248 --> 00:19:25,834 இது ஒரு பெரும் ஏமாற்றமாகப் போய்விட்டது. 336 00:19:26,835 --> 00:19:29,629 யோசி, கோபோ. மாட் மாமா என்ன செய்வார்? 337 00:19:29,629 --> 00:19:33,925 தைரியமாக... வேலையில் இறங்குவார். மாற்று திட்டத்திற்கான நேரம் வந்துவிட்டது. 338 00:19:33,925 --> 00:19:37,679 ஆம்! மாற்று திட்டம். அசல் திட்டத்தை விடவும் சிறந்தது. 339 00:19:37,679 --> 00:19:39,931 சரி. அது என்னது? 340 00:19:39,931 --> 00:19:41,308 அவனை அவசரப்படுத்தாதே! 341 00:19:42,267 --> 00:19:43,894 அது வந்து... 342 00:19:44,603 --> 00:19:46,396 பை, திருமதி. ஷிம்மெல்ஃபின்னி. 343 00:19:46,396 --> 00:19:49,441 ஃப்ளஃபினெல்லா ஒரு கோபமான பூனை. 344 00:19:50,859 --> 00:19:53,111 சரி, மிஸ்டர். நாம் பேசணும். 345 00:19:54,279 --> 00:19:57,324 இங்கே பார், அந்தப் பூனையால் உனக்கு பய உணர்வுகள் வந்தன, 346 00:19:57,324 --> 00:20:00,035 நீ வலிமையானவனாக இருப்பதால் அந்த உணர்வுகளை அடக்க வேண்டியதில்லை. 347 00:20:00,035 --> 00:20:03,538 என்னிடமும் உன்னிடமும் நேர்மையாக இருப்பதுதான், வலிமையான செயல்பாடாக இருக்கும். 348 00:20:05,624 --> 00:20:07,792 நீ இப்போது அவற்றை வெளிப்படுத்தலாம், அவள் போய்விட்டாள். 349 00:20:18,970 --> 00:20:20,805 நிச்சயமாக உனக்கு அதைப் பற்றி எந்த உணர்வுகளும் இல்லையா? 350 00:20:20,805 --> 00:20:21,932 ஏனென்றால் எனக்கு கண்டிப்பாக இருக்கிறது. 351 00:20:28,438 --> 00:20:31,066 திட்டம் வருவதை உணர்கிறேன். 352 00:20:31,066 --> 00:20:33,735 மூளையை கசக்கி தீர்வினை எட்டும் முன், எப்போதும் அமைதியாகத்தான் இருக்கும். 353 00:20:33,735 --> 00:20:35,570 எனக்கு பிடிச்சிருக்கு. 354 00:20:35,570 --> 00:20:37,572 சரி, நேரம் எடுத்துக்கொள். இதை அவசரப்படுத்த வேண்டாம். 355 00:20:37,572 --> 00:20:40,450 என் எதிர்வாதம் என்னவென்றால், நாம் ஆழமான நிலத்தடியில் சிக்கிக்கொண்டுள்ளோம். 356 00:20:40,450 --> 00:20:41,826 அதனால், சீக்கிரமாக யோசி. 357 00:20:41,826 --> 00:20:45,163 ஆமாம், என்ன திட்டம், கோபோ? அடுத்து என்ன செய்வது? 358 00:20:45,163 --> 00:20:46,248 சொல். 359 00:20:47,040 --> 00:20:49,376 - நீ சிந்திக்கக்கூடிய முதல் விஷயம். - உன்னிடம் எப்போதும் ஒரு பதில் இருக்குமே. 360 00:20:49,376 --> 00:20:51,127 - நீ தீர்வு காண்பாய் என்று தெரியும். - அதை சரிசெய். 361 00:20:51,127 --> 00:20:52,212 நீ செய்வாய் என்று எனக்குத் தெரியும். 362 00:20:57,175 --> 00:21:00,136 என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை! 363 00:21:02,347 --> 00:21:06,518 தைரியமாக வேலையில் இறங்கி, வலிமையான தலைவனாக இருக்க விரும்பினேன், ஆனால் பயமாக இருக்கு. 364 00:21:06,518 --> 00:21:08,436 மேலும் முள்ளங்கிகளை நினைத்தால் வருத்தமாக இருக்கு. 365 00:21:08,436 --> 00:21:11,189 தோண்டியதில் ஒன்றும் கிடைக்கவில்லை. மேலே ஒரு புழுதிப் புயல் உள்ளது 366 00:21:11,189 --> 00:21:14,234 நாம் வேறு வழியேதுமின்றி இங்கே சிக்கியுள்ளோம். 367 00:21:14,234 --> 00:21:15,777 இது எல்லாம் வெறும்... வெறும்... 368 00:21:18,071 --> 00:21:19,698 ஓ, அப்படியே தான். 369 00:21:19,698 --> 00:21:22,909 உன் உணர்வுகளை வெளிப்படுத்து. ஃப்ளஃபினெல்லாவைப் பார்த்து பயப்படுவதில் ஒன்றும் தவறில்லை. 370 00:21:26,037 --> 00:21:29,666 நான்... என் மாமாவைப் போல வலுவாக இருக்க விரும்பினேன். 371 00:21:29,666 --> 00:21:31,251 ஆனால் ஃப்ராகெல் ராக் மாறிக்கொண்டே இருக்கு, 372 00:21:31,251 --> 00:21:33,712 முள்ளங்கிகளை எப்படி திரும்ப கொண்டு வருவது என்று தெரியவில்லை, 373 00:21:33,712 --> 00:21:35,922 என் கைத்தட்டும் கருவியை ஜூனியர் தூக்கி எறிந்துவிட்டான், 374 00:21:35,922 --> 00:21:38,550 நாங்கள் மீண்டும் நண்பர்களாக இருக்கப் போகிறோமா என்று தெரியாது. 375 00:21:43,930 --> 00:21:47,851 நான் ஒருபோதும் அழுவதில்லை, ஆனால் விஷயங்கள் கடினமாக இருக்கிறது, 376 00:21:47,851 --> 00:21:51,980 இப்போது கோபோ அழுகிறான், நான் அவனைவிட அதிகம் அழ விரும்புகிறேன். 377 00:21:53,607 --> 00:21:57,819 நான் ஏன் இவ்வளவு போட்டி மனப்பானமையுடன் இருக்கிறேன்? 378 00:21:57,819 --> 00:22:00,071 நான் மீண்டும் முள்ளங்கியை வைத்து சமைக்க விரும்புகிறேன். 379 00:22:00,071 --> 00:22:04,701 நான் பாசி பர்கர்கள் செய்து வருகிறேன், அவை மிகவும் மோசமாக இருக்கின்றன. 380 00:22:04,701 --> 00:22:07,037 அவை மிகவும் மோசமாக இருக்கின்றன! 381 00:22:07,037 --> 00:22:11,124 நான் ஆறுதலுக்காக அடிக்கடி அழுவேன், அதனால் இது ஒரு புதிய உணர்வு இல்லை. 382 00:22:11,124 --> 00:22:14,127 ஆனால், நம்முடைய முதல் குழு அழுகை... 383 00:22:14,127 --> 00:22:19,299 ...இது என்னை ஒரு புதிய உணர்ச்சி நிலைக்கு கொண்டுச் செல்கிறது. 384 00:22:19,299 --> 00:22:23,970 நான் முள்ளங்கிக்காக அழுகிறேனா? அல்லது... புழுதிப்புயலுக்காக அழுகிறேனா? 385 00:22:23,970 --> 00:22:26,723 அல்லது என் நண்பர்கள் அனைவரும் அழுவதால் அழுகிறேனா? 386 00:22:26,723 --> 00:22:28,725 அல்லது எல்லாவற்றுக்கும் சேர்த்து அழுகிறேனா? 387 00:22:29,935 --> 00:22:35,941 நாம் எப்போதும் ஒரு புதிய அமைப்பைக் கொண்டு வரலாம், ஆனால் டூஸர் குச்சி அமைப்பு சரியாக இருந்தது. 388 00:22:35,941 --> 00:22:37,108 அது இல்லாத குறையை உணர்கிறேன். 389 00:22:40,654 --> 00:22:41,655 என்ன... 390 00:23:02,384 --> 00:23:05,595 என் உணர்ச்சிகளை அழுவதன் மூலம் வெளிப்படுத்த முடியும் என்றே எனக்குத் தெரியாது. 391 00:23:05,595 --> 00:23:07,013 எனக்கும் தெரியாது. 392 00:23:07,013 --> 00:23:09,474 எனக்கு ஓரளவு தெரிந்திருந்தது. 393 00:23:09,474 --> 00:23:13,270 கோபோ, வெளிப்படுத்தி நிவாரணம் பெற, எங்கள் அனைவரையும் வழிநடத்தியதற்கு நன்றி. 394 00:23:13,270 --> 00:23:14,563 ஆமாம். 395 00:23:14,563 --> 00:23:18,733 மார்ஜொரி மேற்பரப்புக்கு கீழே போக சொன்னாள்,அது இதுதான் போலிருக்கிறது. 396 00:23:18,733 --> 00:23:23,280 நம் உணர்வுகள். ஏனெனில், அங்குதான் எல்லாம் தொடங்குகிறது, இல்லையா? 397 00:23:24,948 --> 00:23:29,244 உலகத்தைப் பாருங்கள் நம்மால் என்ன செய்ய முடியும்? 398 00:23:29,744 --> 00:23:33,832 ஏனென்றால், அது நமக்கு வலியைக் கொடுக்கிறது அது நம்மை சோகத்தில் ஆழ்த்துகிறது 399 00:23:33,832 --> 00:23:38,753 என் இதயம் நொறுங்கிப் போகும் போலிருக்கு 400 00:23:39,296 --> 00:23:42,090 நீண்ட குட்பையுடன் 401 00:23:43,717 --> 00:23:46,511 ஏனென்றால் அது நம்மை அழ வைக்கிறது 402 00:23:53,727 --> 00:23:57,898 ஆனால் எனக்கு ஒரு கனவு இருந்தது அதைத் தொடங்கும் நேரம் வந்தது 403 00:23:58,607 --> 00:24:00,483 ஒவ்வொரு உயிரினமும்... 404 00:24:02,736 --> 00:24:07,365 நாம் சகோதர சகோதரியாக இருந்தோம், ஒருவர் மற்றொருவரின் பகுதியாக இருந்தோம் 405 00:24:07,365 --> 00:24:11,161 அது நம்மை ஒன்றாக்கியது 406 00:24:12,412 --> 00:24:17,334 அது நம்மை வெற்றி பெறச் செய்தது 407 00:24:19,794 --> 00:24:23,006 சகோதர சகோதரி, ஒருவர் மற்றொருவரின் பகுதி 408 00:24:23,006 --> 00:24:26,593 இன்னொருவருக்காக நாம் வலியை அனுபவிக்கலாம் 409 00:24:26,593 --> 00:24:30,013 அது நம் உயிரையும் எடுக்கும், பணயமும் வைக்கும் 410 00:24:30,013 --> 00:24:33,808 உலகத்தை புதிதாக உருவாக்க அது நம்மை உருவாக்கும் 411 00:24:33,808 --> 00:24:36,853 சகோதர சகோதரி, ஒருவர் மற்றொருவரின் பகுதி 412 00:24:36,853 --> 00:24:39,981 இன்னொருவருக்காக நாம் வலியை அனுபவிக்கலாம் 413 00:24:39,981 --> 00:24:43,151 அது நம் உயிரையும் எடுக்கும், பணயமும் வைக்கும் 414 00:24:43,151 --> 00:24:46,154 உலகத்தை புதிதாக உருவாக்க அது நம்மை உருவாக்கும் 415 00:24:46,154 --> 00:24:49,074 சகோதர சகோதரி, ஒருவர் மற்றொருவரின் பகுதி 416 00:24:49,074 --> 00:24:51,660 இன்னொருவருக்காக நாம் வலியை அனுபவிக்கலாம் 417 00:24:51,660 --> 00:24:54,663 அது நம் உயிரையும் எடுக்கும், பணயமும் வைக்கும் 418 00:24:54,663 --> 00:25:00,293 உலகத்தை புதிதாக உருவாக்க அது நம்மை உருவாக்கும் 419 00:25:00,877 --> 00:25:06,550 நாங்கள் சகோதரன் சகோதரி ஒருவர் மற்றொருவரின் பகுதி 420 00:25:06,550 --> 00:25:10,679 அது நம்மை ஒன்றாக்குகிறது 421 00:25:11,638 --> 00:25:16,601 அது நம்மை வெற்றி பெறச் செய்கிறது 422 00:25:18,728 --> 00:25:22,691 முள்ளங்கி பற்றிய புதிய தகவல்கள் கிடைக்காவிட்டாலும், 423 00:25:22,691 --> 00:25:25,193 இப்போது நான் மிகவும் நன்றாக உணர்கிறேன் என்பது மட்டும் உறுதி. 424 00:25:25,193 --> 00:25:26,194 ஆம். 425 00:25:26,194 --> 00:25:28,405 நம் உணர்வுகளுடன் இணங்கியிருந்தால், எப்போதும் நம்மால் 426 00:25:28,405 --> 00:25:30,574 ஒரு தீர்வைக் காண முடியும் என்று நினைக்கிறேன். 427 00:25:31,783 --> 00:25:33,910 ஹே, அது என்னது? 428 00:25:33,910 --> 00:25:34,995 பாருங்க. 429 00:25:34,995 --> 00:25:37,038 - எனக்குத் தெரிகிறது - வா. 430 00:25:37,038 --> 00:25:40,125 - அங்கே பார். - அது என்னது? 431 00:25:41,918 --> 00:25:43,086 ஆஹா. அருமை. 432 00:25:43,879 --> 00:25:44,921 ஆமாம். 433 00:26:04,858 --> 00:26:06,192 இது என்னது... 434 00:26:10,280 --> 00:26:14,117 அந்த தூசியை கிளறக்கூடாது என்று அந்த வயதான முட்டாளை எச்சரித்தேன். 435 00:26:14,117 --> 00:26:17,454 என்னை எப்போதும் முக்கியமில்லாத ஆள் போல் தான் நடத்துவார். 436 00:26:17,454 --> 00:26:21,499 நிச்சயமாக, அவர்தான் ராஜா, ஆனால், ராஜாவின் முக்கிய நபர்... 437 00:26:21,499 --> 00:26:23,168 - ராணி? - ம்? 438 00:26:24,377 --> 00:26:25,712 ஒன்றுமில்லை. 439 00:26:26,213 --> 00:26:29,883 உங்களுக்கே தெரியும், ஒரு ராணி எப்போதும் மற்றொரு ராணியைத் தெரிந்துகொள்வார். 440 00:26:37,057 --> 00:26:38,058 நம்பவே முடியவில்லை. 441 00:26:41,061 --> 00:26:42,437 - எங்கு இருக்கிறோம்? - ஓ. 442 00:26:42,437 --> 00:26:46,608 எனக்குத் தெரியவில்லை, ஆனால், முள்ளங்கி பிரச்சினைக்கான தீர்வு இங்கு எங்காவது இருந்தால்? 443 00:26:46,608 --> 00:26:49,653 ஆஹா, இந்த சிலைகளைப் பாருங்களேன். 444 00:26:49,653 --> 00:26:51,488 அவை அற்புதமாக இருக்கின்றன. 445 00:26:51,488 --> 00:26:53,657 ஆனால், அவற்றை உருவாக்கியது யார்? 446 00:26:54,950 --> 00:26:56,243 அவர்கள் இன்னும் இருக்கிறார்களா? 447 00:26:58,787 --> 00:26:59,788 அடடா. 448 00:27:03,875 --> 00:27:05,794 தொடரும்... 449 00:28:27,876 --> 00:28:29,878 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்