1 00:00:14,515 --> 00:00:16,183 {\an8}நம்மால் எப்படி இதற்கான தீர்வைக் காண முடியாமல் போனது? 2 00:00:16,183 --> 00:00:18,101 நாம் கண்டுபிடித்து விடுவோம் என்று ரொம்பவே நம்பினேன். 3 00:00:18,644 --> 00:00:19,811 ஆமாம். நானும் தான். 4 00:00:19,811 --> 00:00:21,230 யார் வேண்டுமானாலும் இதை செய்திருக்கலாம். 5 00:00:21,230 --> 00:00:23,023 ஒவ்வொருவருக்குமே அதற்கான வாய்ப்பும், வழியும் இருந்தன. 6 00:00:23,023 --> 00:00:24,358 ஒவ்வொருவருக்கும் அதற்கான நோக்கம் இருந்தது. 7 00:00:24,358 --> 00:00:28,362 ஒரு விஷயம் மட்டும் தான் என்னைக் குடைந்து கொண்டே இருக்கிறது. 8 00:00:29,404 --> 00:00:30,531 ஆனால், அது உனக்குப் பிடிக்காது. 9 00:00:31,198 --> 00:00:32,533 அட, என்ன சொல்கிறீர்கள்? 10 00:00:32,533 --> 00:00:36,745 ஆஃப்டர்-பார்ட்டியில், ஒரு நபரைப் பற்றித் தான் 11 00:00:36,745 --> 00:00:39,957 யாருமே சொல்லவில்லை. 12 00:00:40,457 --> 00:00:41,875 நூலகத்தில், 13 00:00:41,875 --> 00:00:43,877 நான் யாரையெல்லாம் பார்த்தேன் என்றால், இசபெல், 14 00:00:43,877 --> 00:00:46,755 ஹான்னா, கிரேஸ், ஃபெங், 15 00:00:46,755 --> 00:00:49,132 செபாஸ்டியன், யுலசீஸ், 16 00:00:49,132 --> 00:00:51,260 ட்ராவிஸ், விவியன்... 17 00:00:52,803 --> 00:00:54,179 யாருமே ஸோயியைப் பார்க்கவில்லை. 18 00:00:55,973 --> 00:00:58,100 வந்து, இல்லை... அவள்... கிரேஸுக்கு உதவ முயன்று கொண்டிருந்தாள். 19 00:00:58,100 --> 00:01:00,018 யாஸ்பர் உனக்கு உதவ முயற்சி செய்த மாதிரியா? 20 00:01:03,021 --> 00:01:04,105 இது சுவையாக இருக்கிறது. 21 00:02:09,755 --> 00:02:11,882 அது என்ன? என்ன நடக்கிறது? 22 00:02:11,882 --> 00:02:12,966 உட்காரு. 23 00:02:14,259 --> 00:02:15,719 யார் செய்தார்கள் என கண்டுபிடித்து விட்டீர்களா? 24 00:02:16,303 --> 00:02:18,263 இப்படி ஆகி விட்டதே என்று ரொம்ப வருத்தமாக இருக்கிறது. 25 00:02:18,263 --> 00:02:20,098 நீங்கள் என் பெற்றோரிடம் பேசுவதை நான் விரும்பவில்லை, 26 00:02:20,098 --> 00:02:23,185 அப்புறம், அவர்கள் இந்த கள்ளஉறவு விஷயங்களையும் மூடி மறைத்துவிட்டனர். 27 00:02:23,185 --> 00:02:26,063 நேற்றிரவு ஆஃப்டர்-பார்ட்டியின் போது நீ என்ன செய்து கொண்டு இருந்தாய் என்று 28 00:02:26,063 --> 00:02:29,775 எங்களிடம் சொன்னால் மட்டும் போதும். 29 00:02:29,775 --> 00:02:30,859 அடச்சே. 30 00:02:32,569 --> 00:02:34,029 நான் தடயங்களை மறைத்து விட்டதாகத்தான் நினைத்தேன். 31 00:02:34,029 --> 00:02:35,739 ஸோயி, நீ என்ன செய்தாய்? 32 00:02:37,616 --> 00:02:39,117 அதைப்பற்றி நினைக்காமல் இருக்க முயற்சித்தேன். 33 00:02:39,117 --> 00:02:41,745 -எட்கர் விஷயத்தில், நீயும் கிரேஸும் சண்டை போட்டீர்கள். -ஆமாம். 34 00:02:41,745 --> 00:02:44,623 மணப்பெண் தோழி உரையில் அவளுக்கு உபயோகமாக என்னால் எதையும் செய்ய முடியவில்லை. 35 00:02:44,623 --> 00:02:46,500 ஏனென்றால் எட்கர் குறுக்கிட்டு விட்டான். 36 00:02:47,125 --> 00:02:47,960 அப்புறம் நான்... 37 00:02:48,460 --> 00:02:51,964 அது ஒரு விபத்து என்று தான் சொல்வேன். 38 00:02:53,257 --> 00:02:55,592 அவன் சாக வேண்டும் என்று நான் விரும்பவில்லை. 39 00:02:55,592 --> 00:02:57,886 இல்லை. 40 00:02:57,886 --> 00:03:00,973 ஐயோ. விடுங்களேன். யாரும் அவனைப் பற்றி கவலைப்படக்கூட இல்லை. 41 00:03:01,557 --> 00:03:03,934 இதைப்பற்றி நீ ரொம்ப இயல்பாக இருக்கிறாய். 42 00:03:03,934 --> 00:03:04,893 தெரியவில்லை. 43 00:03:06,353 --> 00:03:11,984 இது எல்லாமே ஏதோ அபத்தமான திகில் படம் மாதிரி இருந்தது. 44 00:03:13,902 --> 00:03:15,863 கிரேஸ் இன்னும் என் மேல் கோபமாக இருக்கிறாள் என எனக்குத் தெரியும். 45 00:03:15,863 --> 00:03:16,947 {\an8}ஹலோ? 46 00:03:16,947 --> 00:03:18,031 {\an8}த ஸோயி 47 00:03:18,031 --> 00:03:19,116 {\an8}இங்கே யாராவது இருக்கிறீர்களா? 48 00:03:19,116 --> 00:03:22,619 {\an8}மன்னிப்பு கேட்காமல் அவள் தேன் நிலவுக்குக் செல்லக்கூடாது என நினைத்தேன். 49 00:03:23,787 --> 00:03:28,083 அதனால் தான், அவளது பெட்டியில் என் மணப்பெண்-தோழி உரையை வைக்க, அவளது படுக்கை அறைக்குள் நுழைந்தேன். 50 00:03:30,544 --> 00:03:33,505 ஹலோ? யாரவது உள்ளே இருக்கிறீர்களா? 51 00:03:53,650 --> 00:03:55,986 எட்கர், அது நீயா? 52 00:03:57,613 --> 00:03:58,864 இது வேடிக்கையாக இல்லை. 53 00:04:04,828 --> 00:04:05,829 ஹாய், குட்டி நாயே. 54 00:04:05,829 --> 00:04:09,583 என் தங்கைக்காக ஒரு குறிப்பை விட்டுவிட்டு கிளம்பிக் கொண்டிருந்தேன். 55 00:04:16,423 --> 00:04:19,927 ஐயோ, கடவுளே! 56 00:04:20,594 --> 00:04:21,595 கடவுளே! 57 00:04:25,933 --> 00:04:26,934 தூரப் போ! 58 00:04:30,854 --> 00:04:32,064 ஐயோ. 59 00:04:35,567 --> 00:04:36,944 வேண்டாம்! 60 00:04:42,824 --> 00:04:45,536 நாசமாய் போ, சனியனே! 61 00:04:53,210 --> 00:04:55,838 நாயே? 62 00:04:57,506 --> 00:04:59,174 அடச்சே. 63 00:04:59,174 --> 00:05:01,051 நான் அந்த நாயைக் கொன்றுவிட்டேன். 64 00:05:01,051 --> 00:05:02,219 பரவாயில்லை, ஸோ. 65 00:05:02,219 --> 00:05:04,388 பாரு, அது ஒரு விபத்து. சரியா? நீ சொன்ன மாதிரி. 66 00:05:04,388 --> 00:05:08,517 -அவள், “நாசமாய் போ, சனியனே” என்று சொன்னாள். -நீங்களும் தானே சொன்னீர்கள்? 67 00:05:08,517 --> 00:05:12,187 எனக்கும் கொஞ்சம் “ஆத்திரம்” வரும் என இருவருக்கும் ஞாபகம் இருக்கும், 68 00:05:12,187 --> 00:05:13,772 என்னை யாராவது கடுப்பேற்றினால் அது வெளிவரும். 69 00:05:13,772 --> 00:05:14,898 ஓ, ஆமாம், எனக்கு ஞாபகம் இருக்கு. 70 00:05:14,898 --> 00:05:18,402 நானே சொல்ல வேண்டும் என்றிருந்தேன், ஆனால் நீங்கள் இருவரும் அதை எப்படியோ கண்டுபிடித்துவிட்டீர்கள். 71 00:05:18,402 --> 00:05:21,697 -அந்த நாய் எங்கே என யோசித்துக் கொண்டிருந்தோம். -சரி, பதில் கிடைத்துவிட்டது. 72 00:05:21,697 --> 00:05:23,991 சரி, யார் எட்கரைக் கொன்றிருப்பார்கள் என்ற விஷயத்திற்கு வருவோம். 73 00:05:23,991 --> 00:05:25,659 சரி. யார் செய்தது? 74 00:05:27,953 --> 00:05:29,371 சந்தேகப் படும்படியாக யாரும் இல்லை. 75 00:05:29,371 --> 00:05:31,498 என்னது? சந்தேகப்படக்கூடிய யாரும் இல்லையா? 76 00:05:32,082 --> 00:05:34,001 வந்து... நாம் ஏதாவது ஒரு விஷயத்தை தவற விட்டிருக்க வேண்டும். 77 00:05:34,001 --> 00:05:35,419 மன்னித்துவிடு, நண்பா. 78 00:05:36,003 --> 00:05:38,088 இவ்வளவு தூரம் வந்தும், உன்னை ஏமாற்றிவிட்டேன். 79 00:05:38,088 --> 00:05:40,465 -கிரேஸ் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? -கிரேஸ் செய்திருப்பாள் என்று தோன்றவில்லை. 80 00:05:41,216 --> 00:05:42,634 அதை எப்படி நிரூபிப்பது என்றுதான் தெரியவில்லை. 81 00:05:42,634 --> 00:05:45,637 எல்லோரும் இங்கே வாருங்கள். நாம் சில விஷயங்களைப் பற்றிப் பேச வேண்டும். 82 00:05:46,305 --> 00:05:48,140 சரி, என் குழு இன்னும் வேலையை செய்து கொண்டிருக்கின்றனர், 83 00:05:48,140 --> 00:05:50,976 ஆனால், மணப்பெண் தான் இதைச் செய்திருக்க வேண்டும் என எனக்குத் தெளிவாகத் தோன்றுகிறது. 84 00:05:50,976 --> 00:05:52,227 -இல்லை. -ஆம். 85 00:05:52,227 --> 00:05:54,188 -பணத்திற்காக அவனை திருமணம் செய்தாள்... -இல்லை. 86 00:05:54,188 --> 00:05:55,731 ...அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை, 87 00:05:55,731 --> 00:05:56,857 அவனது பானத்தில் மருந்து கலந்தாள். 88 00:05:57,482 --> 00:05:58,734 நேரான விஷயம். 89 00:05:58,734 --> 00:06:00,110 குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும், ஷெரிஃப். 90 00:06:00,694 --> 00:06:02,112 நீங்கள் தான் அந்த முன்னால் போலீஸ். 91 00:06:02,112 --> 00:06:03,906 -ஆமாம். -ஐயோ. 92 00:06:03,906 --> 00:06:05,199 -உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. -சரி. 93 00:06:05,199 --> 00:06:06,909 உங்கள் வேலையை எப்படிப் பார்க்கணும் என நான் சொல்ல வேண்டியதில்லை, 94 00:06:06,909 --> 00:06:09,661 ஆனால், உண்மையாக விசாரிக்க வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா? 95 00:06:10,370 --> 00:06:14,166 இங்கு உள்ளவர்களில், சந்தேகப்படும்படியான சூழல்கள் இருப்பது, கிரேஸுக்கு மட்டுமல்ல. 96 00:06:14,750 --> 00:06:16,877 பத்து நிமிடங்களுக்கு முன், கிரேஸ் மேல் குற்றம் சாட்டுவதற்கு முன், 97 00:06:16,877 --> 00:06:18,462 -தான் அதைச் செய்ததாக இசபெல் நினைத்தார். -என்ன? 98 00:06:18,462 --> 00:06:22,424 உண்மையில் இது மிகவும் எளிதான விஷயம். நான் எட்கரைக் கொன்றிருப்பேன் என்று நினைத்ததே இல்லை. 99 00:06:22,424 --> 00:06:26,261 அவன் என்னைக் கொல்ல நினைத்தான், 100 00:06:26,261 --> 00:06:28,931 அது தவறுதலாக அவனைக் கொன்று விட்டது என்று நான் நினைத்தேன். 101 00:06:28,931 --> 00:06:30,933 அவனைக் கொல்வது நோக்கமல்ல. 102 00:06:30,933 --> 00:06:34,520 ஆனால், இதுவரை நான் நினைத்தது எல்லாம் சரி என்று தோன்றுகிறது, கிரேஸ் தான் குற்றவாளி. 103 00:06:36,522 --> 00:06:37,523 சரிதான். 104 00:06:38,023 --> 00:06:39,942 -சரியா? ஏன் அப்படி சொல்கிறீர்கள்? -ஒரு நிமிடம் பொறு, அனிக். 105 00:06:39,942 --> 00:06:41,276 -என்ன? -ஒரே ஒரு நிமிடம். 106 00:06:41,276 --> 00:06:43,028 -ஒரு நிமிடமா? எங்களுக்கு நேரமில்லை... -ஒரு நிமிடம்... 107 00:06:43,028 --> 00:06:46,448 கிரேஸ் தான் இதைச் செய்தாள் என உங்களுக்கு உறுதியாகத் தெரிய வாய்ப்பே இல்லை. 108 00:06:46,448 --> 00:06:49,618 -கொலையாளியைக் கண்டுபிடித்துவிட்டோம். கிரேஸ் தான். -ஆமாஆம். 109 00:06:49,618 --> 00:06:52,829 நான் அவளைக் கைது செய்கிறேன். கடவுள் அவள் மீது இரக்கம் காட்டட்டும். 110 00:06:52,829 --> 00:06:54,915 நான் கொலை செய்யவில்லை ஏன எப்படி நினைக்கிறீர்கள்? 111 00:06:54,915 --> 00:06:57,543 ஏனென்றால் அந்த நாயை நான்தான் கொன்றேன். 112 00:06:57,543 --> 00:06:58,877 -நீ கர்னலைக் கொன்றாயா? -அப்படித்தான் நினைக்கிறேன். 113 00:06:58,877 --> 00:07:01,588 -இல்லை, நீ கொன்றிருக்க மாட்டாய். -கண்டிப்பாக நான் தான் கொன்றேன். 114 00:07:01,588 --> 00:07:04,591 உறுதியாகச் சொல்கிறேன், கர்னல் சாகவில்லை. அந்த குட்டிச் சாத்தான் சாக மாட்டான். 115 00:07:04,591 --> 00:07:07,761 மூன்றாவது முறை அவனுக்குப் புற்றுநோய் வந்தபோது, அவன் இறந்துவிட்டதாக நினைத்து, அவனைப் புதைத்தேன். 116 00:07:07,761 --> 00:07:09,596 ஆனால் அந்த நாய், எப்படியோ வெளியே வந்துவிட்டான். 117 00:07:09,596 --> 00:07:10,639 வெளியே குதித்து வந்துவிட்டான். 118 00:07:10,639 --> 00:07:13,517 -கர்னல்! வா. -வேண்டாம்! 119 00:07:13,517 --> 00:07:14,726 ஓ, கடவுளே. 120 00:07:16,186 --> 00:07:17,437 இந்த நாயைக் கொல்ல முடியாது. 121 00:07:18,480 --> 00:07:20,691 ஆனால் எப்படி? நான் அவனை ஜன்னல் வழியாகத் தூக்கியெறிந்தேனே. 122 00:07:20,691 --> 00:07:22,067 என்னிடம் ஒரு கூற்று இருக்கிறது. 123 00:07:22,067 --> 00:07:26,488 எட்கர் இறப்பதற்கு முன் என்ன சொன்னான் என்பதை அது தெளிவுப்படுத்தும். 124 00:07:26,488 --> 00:07:30,158 ஜன்னல் வழியாக ஸோயி நாயைத் தூக்கியெறிந்தாள், அது இசபெல்லின் ட்ராம்போலினில் வந்து விழுந்தது. 125 00:07:30,158 --> 00:07:32,160 வேட்டை நாயே! 126 00:07:32,160 --> 00:07:33,704 இதைத்தான் எட்கர் பார்த்தான். 127 00:07:39,168 --> 00:07:40,169 அற்புதம். 128 00:07:40,794 --> 00:07:41,795 வேறு யாரும் கைத்தட்டவில்லையா? 129 00:07:42,713 --> 00:07:44,506 உனக்கு ஒன்பது உயிர் இருக்கு தானே, குட்டி பையா? 130 00:07:47,676 --> 00:07:48,969 கேவலமான நாய். 131 00:07:48,969 --> 00:07:51,763 சரி எப்படியோ, உங்களிடம் ஆதாரமில்லை. அதுவெறும் நோக்கம் தான். 132 00:07:51,763 --> 00:07:55,017 இங்கு நோக்கம் இல்லாதவர் ஒருவர் கூட கிடையாது. 133 00:07:56,435 --> 00:07:57,436 நோக்கம் இல்லை. 134 00:07:58,562 --> 00:07:59,563 நோக்கமில்லை. 135 00:07:59,563 --> 00:08:01,481 ஆம், இசபெலுக்கு ஏற்பட்ட சூழ்நிலை மறுபடியும் ஏற்பட்டால்... 136 00:08:01,481 --> 00:08:03,066 -நாம் தவறான இடத்தில் தேடுகின்றோம். -ஆம். 137 00:08:03,066 --> 00:08:04,151 வீடியோவைப் பார்க்க வேண்டும். 138 00:08:04,151 --> 00:08:06,111 ஹே! நில்லுங்கள்! 139 00:08:06,111 --> 00:08:09,239 முட்டாள்களான நீங்கள் இருவரும் துப்பறிவதைப் பார்த்துக் கொண்டு நான் சும்மா இருக்கமாட்டேன். 140 00:08:09,239 --> 00:08:10,991 இது முடிந்துவிட்டது. 141 00:08:11,992 --> 00:08:13,785 சரி. ஸோயி கொலை செய்யவில்லை. 142 00:08:14,453 --> 00:08:16,246 கிரேஸும் கொலை செய்யவில்லை. நான் தான் செய்தேன். 143 00:08:16,246 --> 00:08:18,916 கேவலமானவனே. நீ என்ன செய்ய முயற்சிக்கிறாய் என புரிகிறது. 144 00:08:19,499 --> 00:08:21,210 அது வேலைக்காகாது. 145 00:08:21,210 --> 00:08:22,878 நான் அவளைக் கைது செய்கிறேன். 146 00:08:22,878 --> 00:08:24,254 நானும் அவனைக் கொன்றேன். 147 00:08:24,755 --> 00:08:25,797 நானும் எட்கரைக் கொன்றேன். 148 00:08:25,797 --> 00:08:27,549 இது ரொம்ப அபத்தமாக இருக்கிறது. 149 00:08:27,549 --> 00:08:31,386 ஸூலூ இனத்தினர் சொல்வது போல, “மரணம் என்பது எல்லா மனிதருக்கும் நிகழும்.” 150 00:08:31,386 --> 00:08:33,931 நான் என் கைகளால் அவன் கழுத்தை நெரித்துக் கொன்றேன். 151 00:08:33,931 --> 00:08:37,518 -அவனுக்கு விஷயம் கொடுக்கப்பட்டது. -நான் என் கையால் எட்கருக்கு விஷமளித்தேன். 152 00:08:37,518 --> 00:08:39,811 இது ஒன்றும் அகாத்தா கிறிஸ்டியின் கதை இல்லை. 153 00:08:39,811 --> 00:08:41,730 ஒரு மனிதன் இறந்திருக்கிறான். 154 00:08:41,730 --> 00:08:44,441 சரி, அப்படியென்றால், நீங்கள் எங்கள் அனைவரையுமே கைது செய்ய வேண்டும் 155 00:08:44,441 --> 00:08:46,610 ஏனென்றால் நானும் எட்கரை கொலை செய்தேன். 156 00:08:47,694 --> 00:08:50,864 நான் அவனை இரண்டாவது முறையாகக் கொலை செய்திருக்கலாம் என விரும்புகிறேன். 157 00:08:50,864 --> 00:08:52,616 -அப்பா. -மன்னித்துவிடு, உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன். 158 00:08:52,616 --> 00:08:54,868 பதிவிற்காக, நான் அவனைக் கொல்லவில்லை. 159 00:08:54,868 --> 00:08:56,537 பதிவிற்காக, நான் அவனைக் கொன்றேன். 160 00:08:57,162 --> 00:09:00,666 ஏனென்றால் நான் கிரேஸை காதலிக்கிறேன். நான் உங்களிடம் எல்லாவற்றையும் சொல்லவில்லை. 161 00:09:00,666 --> 00:09:03,710 நீங்கள் அனைவரும். “ஓ, நான் எல்லாவற்றையும் சொன்னேன்” எனச் சொல்வீர்கள். ஆனால் நான் சொல்லவில்லை. 162 00:09:03,710 --> 00:09:05,838 நானும் கிரேஸும் ஆம்ஸ்டர்டேமில் இருந்தபோது, 163 00:09:05,838 --> 00:09:09,174 பிரவுனிகளை அதிகமாக சாப்பிட்டு போதையாகி விட்டோம், பிறகு எனக்கு மனஅழுத்தம் ஏற்பட்டது. 164 00:09:09,174 --> 00:09:12,135 நீ என்னை சமாதானப்படுத்தினாய், மதியம் முழுவதும் நான் சரியாகும் வரை, 165 00:09:12,135 --> 00:09:13,762 என் முதுகைத் தடவிக் கொடுத்து என்னைத் தேற்றினாய். 166 00:09:13,762 --> 00:09:15,264 அவள் ட்ராவிஸுக்கு செய்ததைப் போலவே, 167 00:09:15,264 --> 00:09:17,516 ஆனால் என் விஷயத்தில், அவள் இதை உணர்வுபூர்வமாகச் செய்தாள். 168 00:09:17,516 --> 00:09:22,187 அத்தருணத்தில், எங்கள் இதயம் இணைந்தது, 169 00:09:22,187 --> 00:09:23,605 அதன்பின் விலகவே இல்லை. 170 00:09:23,605 --> 00:09:25,983 -பிறகு நான் கால்வாயில் வாந்தியெடுத்தேன். -போதும். 171 00:09:25,983 --> 00:09:27,276 ஹாவி, அவளைக் கைது செய்யுங்கள். 172 00:09:27,276 --> 00:09:28,485 வேண்டாம். 173 00:09:28,485 --> 00:09:30,487 -இல்லை, முடியாது. -கிரேஸைத் தொடாதீர்கள். 174 00:09:30,487 --> 00:09:32,447 விஷயம் ரொம்ப மோசமாகிவிட்டது, இல்லையா? 175 00:09:32,447 --> 00:09:36,201 முன்னாள் காவலர் இன்னாள் காவலருக்கு சொல்கிறேன், நிறைய வாக்கு மூலங்களைக் கேட்டீர்கள். 176 00:09:36,201 --> 00:09:37,703 சமூக ஊடகங்கள் இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டால், 177 00:09:37,703 --> 00:09:40,873 அவர்களுக்கு நிச்சயம் தெரியவரும், அப்போது 178 00:09:40,873 --> 00:09:46,003 “ஷெரிஃப் ரியர்டன் கொலை பற்றிய பல உண்மைகளைக் கேட்டறிந்தார், ஆனால் அவரின் தோழி, இசபெல் மின்னோஸ், 179 00:09:46,003 --> 00:09:49,089 அவற்றை நிராகரிக்கச் சொன்னதால் நிராகரித்துவிட்டார்” எனச் சொல்வார்கள். 180 00:09:52,384 --> 00:09:53,385 சரி. 181 00:09:53,969 --> 00:09:58,473 கொலையை மணப்பெண் செய்யவில்லை வேறொருவர் தான் செய்தார் என நிரூபிக்க ஐந்து நிமிடங்கள் தருகிறேன். 182 00:09:58,473 --> 00:10:00,392 காரணம் நம்பும்படியாக இருக்க வேண்டும், 183 00:10:00,392 --> 00:10:03,645 இல்லையென்றால் சட்டத்திற்கு இடையூறு செய்த குற்றத்திற்காக அனைவரையும் கைது செய்துவிடுவேன். 184 00:10:03,645 --> 00:10:07,024 உண்மையிலேயே இதை யார் செய்ததென உனக்குத் தெரியும் தானே, அனிக்? 185 00:10:07,024 --> 00:10:08,901 ஆம், கண்டிப்பாகத் தெரியும். 186 00:10:09,484 --> 00:10:11,570 கைலரிடமிருந்து வந்த ஒரு வீடியோவை நாம் மீண்டும் பார்க்க வேண்டும். 187 00:10:11,570 --> 00:10:12,779 யார் அந்த கைலர்? 188 00:10:12,779 --> 00:10:14,907 எந்த வீடியோ என்று சொல். நான் ஃபோனில் போடுகிறேன். 189 00:10:14,907 --> 00:10:19,203 சரி. ஒருவரைக் கொல்ல வேண்டுமென்றால் அதற்கான வழியும், நோக்கமும், வாய்ப்பும் கிடைக்க வேண்டும். 190 00:10:19,203 --> 00:10:22,748 இங்கிருக்கும் அனைவருக்குமே கொலை செய்வதற்கான வழி இருக்கு: ஹான்னா தோட்டத்திலிருக்கும் மலர்கள். 191 00:10:22,748 --> 00:10:28,003 அனைவருக்குமே வாய்ப்பும் இருக்கு, ஏனென்றால் அனைவருமே ஆஃப்டர்-பார்ட்டியில் இருந்தீர்கள். 192 00:10:28,003 --> 00:10:28,921 ஸோயியைத் தவிர. 193 00:10:28,921 --> 00:10:31,798 நீ மாடியில், படுக்கையறையில் ஜன்னல் வழியாக ஒரு நாயை வெளியே எறிந்துக் கொண்டிருந்தாய். 194 00:10:31,798 --> 00:10:33,634 -மறுபடியும், வருத்தப்படுகிறேன். -நீ வருத்தப்படவில்லை. 195 00:10:33,634 --> 00:10:36,970 மேலும், இங்கிருக்கும் எல்லோருக்குமே கொலை செய்வதற்கான நோக்கமிருந்திருக்கிறது. 196 00:10:37,513 --> 00:10:39,640 இசபெல், ஒரு ஏமாற்றப்பட்ட தாய். 197 00:10:39,640 --> 00:10:42,017 செபாஸ்டியன், வேலையிலிருந்து நீக்கப்பட்ட பங்குதாரர். 198 00:10:42,017 --> 00:10:44,144 ஹான்னா, அன்பிற்காக ஏங்கும் சகோதரி. 199 00:10:44,144 --> 00:10:46,438 ட்ராவிஸ், பொறாமை பிடித்த முன்னாள் காதலன். 200 00:10:46,438 --> 00:10:50,567 யுலசீஸ், பணக்காரர்கள் என்றாலே பிடிக்காத நாடோடி. 201 00:10:50,567 --> 00:10:54,112 ஃபெங், ரகசியமாக மனமுடைந்த மாமனார். 202 00:10:54,112 --> 00:10:57,616 விவியன், இரகசியம் நிறைந்த மாமியார். 203 00:10:57,616 --> 00:11:00,452 ஸோயி, சந்தேகப்படும் அண்ணி. 204 00:11:00,452 --> 00:11:04,331 அப்புறம் கிரேஸ், விருப்பமில்லாத மணப்பெண். 205 00:11:04,331 --> 00:11:05,916 -நான்கு நிமிடங்கள் பாக்கி. -சரி. 206 00:11:05,916 --> 00:11:09,169 ஆனால் ஒருவருக்கு மட்டும் இங்கிருக்கும் எல்லோரையும் விட அதிகமான நோக்கமிருந்திருக்கிறது. 207 00:11:09,711 --> 00:11:11,171 அவர்தான் இந்தக் கொலையைச் செய்திருக்கிறார். 208 00:11:20,097 --> 00:11:21,223 யுலசீஸ். 209 00:11:21,765 --> 00:11:23,934 -என்ன? -ஃபங்கிள் யுலசீஸா? 210 00:11:23,934 --> 00:11:27,271 பணக்காரர்களைப் பிடிக்காது என்பதற்காக நான் எட்கரைக் கொன்றுவிட்டதாக நினைக்கிறீர்களா? 211 00:11:27,271 --> 00:11:30,357 -இது வலுவில்லாத நோக்கம், இல்லையா? -சரிதான். 212 00:11:30,357 --> 00:11:32,526 அவர் சொல்வது சரியென்றால், நான் அவனைக் கொல்ல விரும்பியதாக ஏன் நினைக்கிறாய்? 213 00:11:32,526 --> 00:11:33,443 நீங்கள் கொல்ல நினைக்கவில்லை. 214 00:11:33,443 --> 00:11:35,404 பார், ஃபெங் என்னிடம் முன்னரே சொன்னது போல. 215 00:11:35,404 --> 00:11:36,446 இது எட்கர் சம்பந்தப்பட்டது அல்ல. 216 00:11:37,114 --> 00:11:38,407 -இது விவியன் சம்பந்தப்பட்டது. -என்ன? 217 00:11:38,407 --> 00:11:43,287 இசபெல் சொன்னது போல், விஷம் தவறான நபரிடம் சென்றிருக்கிறது. 218 00:11:43,287 --> 00:11:44,830 நீங்கள் ஃபெங்கைக் கொல்ல முயன்றிருக்கிறீர்கள். 219 00:11:46,832 --> 00:11:51,378 விவியன், இரவு உணவிற்குப் பிறகு, நீங்கள் யுலசீஸை மரத்தடியில் சந்தித்திருக்கிறீர்கள். 220 00:11:52,921 --> 00:11:55,174 பரவாயில்லை. எங்கள் அனைவருக்கும் அந்த உறவைப் பற்றி தெரியும். 221 00:11:55,174 --> 00:11:57,134 -எந்த உறவு? -எனக்கு கிரேஸுடன் இருக்கும் உறவு. 222 00:11:57,134 --> 00:11:58,427 இல்லை, அதில்லை. 223 00:11:58,427 --> 00:12:02,681 எனக்கும் இசபெலுக்கும் உள்ள இரகசிய உறவைச் சொல்கிறாள் என நினைக்கிறேன். 224 00:12:02,681 --> 00:12:04,600 இசபெலுடன் சமையல் வகுப்பு எடுத்தாயா? 225 00:12:04,600 --> 00:12:07,144 இல்லை. எல்லோருக்கும் அந்த உறவைப் பற்றி ஏற்கனவே தெரியும். 226 00:12:07,144 --> 00:12:08,812 என்ன? உண்மையாகவா? 227 00:12:08,812 --> 00:12:12,482 -அவர்களிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன், செபி. -அடக் கடவுளே. 228 00:12:12,482 --> 00:12:15,861 சில வருடங்களுக்கு முன்பு விவியனுக்கும், யுலசீஸுக்கும் இடையே உறவு இருந்தது. 229 00:12:15,861 --> 00:12:17,988 அடடா, கள்ளக் காதல் இருந்ததா. 230 00:12:18,572 --> 00:12:20,824 எங்களுக்கு என்ன நடந்ததென தெரிய வேண்டும், விவியன். 231 00:12:21,450 --> 00:12:22,451 நான்... 232 00:12:23,660 --> 00:12:26,705 நான் யுலசீஸிடம் தனிமையில் பேச சென்றேன். 233 00:12:28,916 --> 00:12:32,377 {\an8}விவியன் 234 00:12:32,377 --> 00:12:33,879 {\an8}நீ இங்கு என்ன செய்கிறாய்? 235 00:12:34,755 --> 00:12:35,881 ஏன் இங்கு வந்தாய்? 236 00:12:38,050 --> 00:12:39,051 ஓ, விவியன். 237 00:12:40,636 --> 00:12:42,429 நான் முயற்சித்தேன், விவியன். 238 00:12:44,264 --> 00:12:45,933 நான் உன்னை மறக்க முயற்சித்தேன், 239 00:12:47,559 --> 00:12:49,102 ஆனால் இத்தனை வருடங்களுக்குப் பிறகும், என்னால்... 240 00:12:50,812 --> 00:12:51,813 என்னால் உன்னை மறக்க முடியவில்லை. 241 00:12:52,314 --> 00:12:55,901 முட்டாளே. அப்படிச் சொல்லாதே. 242 00:12:55,901 --> 00:12:59,530 என் உணர்வுகளை மறக்க, இவ்வுலகம் முழுக்க ஓடினேன். 243 00:12:59,530 --> 00:13:01,615 ஆனால் ஓடி ஓடி களைத்துவிட்டேன். 244 00:13:03,200 --> 00:13:04,618 நீ என்னுடன் இரு. 245 00:13:04,618 --> 00:13:06,036 யுலசீஸ்! 246 00:13:07,746 --> 00:13:10,874 நீ இதற்கு மேலும் நடிக்கத் தேவையில்லை, அன்பே. 247 00:13:11,834 --> 00:13:13,168 உன் மகள்கள் வளர்ந்துவிட்டனர். 248 00:13:13,168 --> 00:13:16,255 நீ இதற்கு மேலும் அந்த வயதான முட்டாள் ஃபெங்குடன் வாழத் தேவையில்லை. 249 00:13:16,255 --> 00:13:18,382 அவர் ஒன்றும் முட்டாளில்லை. 250 00:13:18,966 --> 00:13:20,175 அவர் அன்பானவர். 251 00:13:20,759 --> 00:13:21,927 இனிமையானவர். 252 00:13:21,927 --> 00:13:23,387 நகைச்சுவையானவர். 253 00:13:24,429 --> 00:13:26,306 தாராள மனமுடையவர். 254 00:13:26,306 --> 00:13:28,016 தைரியமானவர். 255 00:13:28,600 --> 00:13:32,563 எனக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுக்குமளவிற்குத் தைரியமானவர். 256 00:13:32,563 --> 00:13:35,190 எனக்குத் தகுதியே இல்லாத வாய்ப்பு அது. 257 00:13:35,190 --> 00:13:39,027 நான் அவரை விட்டு வரமாட்டேன். 258 00:13:42,656 --> 00:13:43,991 இங்கு என்ன நடக்கிறது? 259 00:13:43,991 --> 00:13:47,661 என்ன தைரியமிருந்தால் என் மனைவியுடன் தனியாக இருட்டில் நின்று பேசிக் கொண்டிருப்பாய்? 260 00:13:48,662 --> 00:13:52,583 நான் அவனைப் போகச் சொன்னேன். 261 00:14:01,633 --> 00:14:03,927 சரி, அதுவே போதும். நன்றி. 262 00:14:03,927 --> 00:14:06,096 நான் என் கணவரைத் தான் நேசிக்கிறேன். 263 00:14:07,389 --> 00:14:11,727 சில வருடங்களுக்கு முன் நிறைய தவறுகள் செய்தேன், ஆனால், அவரோடு வாழத்தான் தேர்ந்தெடுத்தேன். 264 00:14:12,853 --> 00:14:15,272 ஆனால் ஒரு நொடி கூட அதை நினைத்து வருத்தப்படவில்லை. 265 00:14:15,272 --> 00:14:19,526 சரி. விவியன் ஃபெங்கை விட்டு பிரியப் போவதில்லையென்றால், 266 00:14:19,526 --> 00:14:22,571 ஃபெங்கை கொல்வது தான் அவளுடன் வாழ்வதற்காக ஒரே வழி. 267 00:14:22,571 --> 00:14:24,281 {\an8}எனவே, நிராகரிக்கப்பட்டதால் கோபத்துடன்... 268 00:14:24,281 --> 00:14:25,949 {\an8}வாழ்த்துக்கள் எட்கர் & கிரேஸ் 269 00:14:25,949 --> 00:14:27,034 ...உங்கள் முகாமிற்குத் திரும்பினீர்கள். 270 00:14:27,034 --> 00:14:30,078 பிறகு மேஜையில் செய்யப்பட்டிருந்த மலர் அலங்காரங்களைப் பார்த்தீர்கள் 271 00:14:30,078 --> 00:14:32,456 ஏனென்றால் விவியன் அடுத்த நாள் காலை வரை அதை எடுக்கவில்லை, 272 00:14:32,456 --> 00:14:34,333 அந்த டெவில்’ஸ் டிரம்பெட் மலரை அடையாளம் கண்டுகொண்டீர்கள். 273 00:14:35,709 --> 00:14:38,337 உங்கள் பயணங்களின் மூலமாக எல்லா மலர்களைப் பற்றியும் உங்களுக்குத் தெரியும். 274 00:14:38,337 --> 00:14:42,799 டெவில்’ஸ் டிரம்பெட். அதை மனநோய்க்கு மருந்தாகப் பயன்படுத்துவார்கள் என்று தான் கேள்விப்பட்டுள்ளேன். 275 00:14:43,509 --> 00:14:45,219 ஆக, உங்கள் திட்டத்தை செயல்படுத்தினீர்கள். 276 00:14:45,219 --> 00:14:49,973 ஃபெங்கைக் கொன்று, உள்ளே நுழைந்து அவரது இடத்தைப் பிடிக்க திட்டமிட்டீர்கள். 277 00:14:50,641 --> 00:14:53,101 அந்த பூக்களை வைத்து டீ தயாரிக்க நினைத்தீர்கள். 278 00:14:53,101 --> 00:14:55,604 இரவு முழுதும் வெளியே இருந்தேன். 279 00:14:55,604 --> 00:14:57,231 ஆப்டர்-பார்ட்டி முடியும் வரை வீட்டிற்குள் போகவில்லை. 280 00:14:57,231 --> 00:15:00,984 டீ பாத்திரம் மற்றும் சுடு தண்ணீரை எப்போது வாங்கியிருப்பேன்? 281 00:15:03,487 --> 00:15:07,199 உங்கள் கொம்பு தான் அந்த டீ பாத்திரம், 282 00:15:08,075 --> 00:15:09,201 சுடுதண்ணீரை... 283 00:15:13,539 --> 00:15:14,623 எங்கள் ஷவரில் பிடித்தீர்கள். 284 00:15:17,501 --> 00:15:20,337 கொம்பில் உங்கள் டீ தயாரான பிறகு, 285 00:15:20,337 --> 00:15:23,131 ஆப்டர்-பார்ட்டியில் உங்களுக்கு ஒரு கிளாஸ் விஸ்கியும், 286 00:15:23,131 --> 00:15:27,135 ஃபெங்கிற்கு டெவில்’ஸ் டிரம்பெட் சேர்த்த விஸ்கியையும் கொடுத்தீர்கள். 287 00:15:27,135 --> 00:15:29,388 நான் அப்படி செய்யவில்லை. 288 00:15:29,972 --> 00:15:31,849 அது வேறு ஒரு விஷயத்திற்காக என்று சொன்னேன். 289 00:15:31,849 --> 00:15:33,976 ஆமாம். தந்தைவழி சோதனை. 290 00:15:33,976 --> 00:15:36,728 -தந்தைவழி சோதனையா? -உன்னிடம் சொல்ல வேண்டாம் என்றேன், 291 00:15:36,728 --> 00:15:38,772 ஆனால், எனக்கு உறுதி தேவைப்பட்டது, கிரேஸ். 292 00:15:38,772 --> 00:15:39,857 விஷயம் என்னவென்றால், 293 00:15:39,857 --> 00:15:43,777 தந்தைவழி சோதனை செய்ய, தவறான கிளாஸை எடுத்தீர்கள். 294 00:15:43,777 --> 00:15:47,155 நீங்கள் விஸ்கி கிளாஸை எடுப்பதை பார்த்ததாக செபாஸ்டியன் சொன்னான். 295 00:15:47,155 --> 00:15:48,657 ஒன்றும் பிரச்சினையில்லையே, கீமோசாபி? 296 00:15:49,449 --> 00:15:50,784 உனக்கு என்ன வேண்டும்? 297 00:15:50,784 --> 00:15:53,954 ஒரு ரோஸ் கொடுங்கள், கூடவே என் கணவருக்கு விஸ்கி கொடுங்கள். 298 00:15:53,954 --> 00:15:56,790 ஆனால், கிரேஸ் ஆஃப்டர்-பார்ட்டியில், ரோஸ் குடித்தாள். 299 00:15:56,790 --> 00:15:58,458 அவளுக்கு விஸ்கியே பிடிக்காது. 300 00:15:58,458 --> 00:16:01,086 மேலும், விஸ்கியின் சுவை மோசமாக இருக்கும் என்று நினைக்கிறேன். 301 00:16:02,504 --> 00:16:06,091 அது கொலை விசாரணையாக மாறிய பிறகு, 302 00:16:06,091 --> 00:16:10,262 நீங்கள் விஸ்கியை மாற்றுவதை செபாஸ்டியன் பார்த்ததை உணர்ந்தீர்கள், 303 00:16:10,262 --> 00:16:12,431 எனவே, நீங்கள் ஒரு கதையை உருவாக்க வேண்டியிருந்தது, அன்பே. 304 00:16:12,431 --> 00:16:16,435 எனவே, போலி தந்தை-வழி சோதனை என்ற யோசனையை உருவாக்கினீர்கள். 305 00:16:16,435 --> 00:16:20,189 கிரேஸ் உங்கள் மகள் இல்லை என்று உங்களுக்கே தெரியும், ஆனால் சந்தேகிப்பது போல நடித்தீர்கள். 306 00:16:22,482 --> 00:16:24,902 நான் கிரேஸின் அப்பாவாக இருக்கக்கூடும். 307 00:16:26,570 --> 00:16:27,571 அவள் எனக்குப் பிறந்தவளா? 308 00:16:27,571 --> 00:16:30,407 அதைப்பற்றி விவியனிடம் கேட்டதாகச் சொன்னீர்கள், 309 00:16:30,407 --> 00:16:34,912 ஆனால் விவியனின் கதையில், தந்தைவழி சோதனை பற்றி எதுவும் இல்லை. 310 00:16:34,912 --> 00:16:36,788 ஆனால் ஓடி ஓடி களைத்துவிட்டேன். 311 00:16:38,373 --> 00:16:39,374 நீ என்னுடன் இரு. 312 00:16:39,374 --> 00:16:43,879 ஒரு கியூ-டிப் மற்றும் ஜிப்லாக் பேக்கை வைத்து உங்கள் கதையைச் சொன்னீர்கள். 313 00:16:45,547 --> 00:16:49,134 ஷவர் டீ, திருடப்பட்ட கியூ-டிப்புகள். 314 00:16:49,134 --> 00:16:51,720 இது அற்புதமான கற்பனை. 315 00:16:51,720 --> 00:16:55,390 பாரில் ஃபெங்கின் டிரிங்கில் விஷம் கலந்து, அவனிடம் கொடுத்தீர்கள், 316 00:16:55,390 --> 00:16:57,559 உங்கள் கதைப்படி அவர் ஒரு முடக்கு குடித்து 317 00:16:57,559 --> 00:17:01,063 தன் பிங் ஐஸ்கிரீமைக் கொடுக்க எட்கரிடம் சென்றார். 318 00:17:01,063 --> 00:17:02,439 சிறந்த எதிர்காலத்திற்காக. 319 00:17:04,441 --> 00:17:05,526 கடந்த காலத்தைப் புதைப்பதற்காக. 320 00:17:07,236 --> 00:17:09,570 ஃபெங் உங்களோடு குடித்ததாக நான் நினைக்கவில்லை. 321 00:17:09,570 --> 00:17:12,532 தெரியாத்தனமாக, ஃபெங் மற்றும் எட்கரின் கிளாஸ் மாறிவிட்டன. 322 00:17:12,532 --> 00:17:14,242 -அப்படியா? -நன்றி. 323 00:17:14,242 --> 00:17:16,869 உண்மையில், எனக்கு நினைவில்லை. 324 00:17:16,869 --> 00:17:17,954 வீடியோ இருக்கிறது. 325 00:17:17,954 --> 00:17:21,124 ஃபெங்கின் சமூக வலைதள நண்பர், கைலர், சிலவற்றை எடுத்தான். 326 00:17:21,124 --> 00:17:24,169 -ஸோயி, உன்னிடம் இருக்கிறதா? -ஆம். எட்கரின் அலுவலகத்தில் ஒரு டிவி இருக்கிறது. 327 00:17:24,169 --> 00:17:26,128 நாம் எல்லோரும் அங்கு போவோம். 328 00:17:26,128 --> 00:17:27,172 இங்கே ஒரு டிவி இருக்கிறது. 329 00:17:29,132 --> 00:17:30,133 பாரு. இது நன்றாக இருக்கு, அல்லவா? 330 00:17:30,133 --> 00:17:31,635 நீ எதையும் சாதாரணமாக செய்ய மாட்டாயா? 331 00:17:31,635 --> 00:17:33,846 இப்போது ஒரு டீனேஜரின் வீடியோவைப் பார்க்கிறோம். 332 00:17:33,846 --> 00:17:36,265 -ஸோ-ஸோ, இன்புட்டை அழுத்து. -அப்பா, அதைத்தான் செய்கிறேன். 333 00:17:36,265 --> 00:17:39,351 -ஸோ, எச்டிஎம்ஐயை அழுத்தினால்... -இல்லை, ஆப்பிள் டிவிக்கு போ. 334 00:17:39,351 --> 00:17:41,478 -இன்புட்டிற்கு போ, ஆம். -அதைத்தான் செய்கிறேன். 335 00:17:41,478 --> 00:17:43,272 இன்புட். எச்டிஎம்ஐ3... 336 00:17:43,772 --> 00:17:46,066 என்ன இது? வாயை மூடுங்கள்! எனக்குத் தெரியும். 337 00:17:49,486 --> 00:17:50,737 கைலரின் திருமண வீடியோக்கள் 338 00:17:52,489 --> 00:17:53,490 நன்றாக செய்யுங்கள், திரு. பெங். 339 00:17:53,490 --> 00:17:56,994 அங்கே, விஷமுடைய கிளாஸை யுலசீஸ் ஃபெங்கிடம் கொடுக்கிறார். 340 00:17:57,619 --> 00:18:01,290 பிறகு, ஃபெங் அந்த கிளாஸை எட்கருக்கு முன்னால் வைக்கிறார். 341 00:18:01,874 --> 00:18:03,500 சரி, இப்போது கவனமாக பாருங்கள், 342 00:18:04,251 --> 00:18:07,629 ஏனெனில் நாம் நினைப்பது சரி என்றால், எட்கர் பிங்கை பிடிக்கவில்லை என்றதும்... 343 00:18:07,629 --> 00:18:08,797 எனக்குப் பிடிக்கவில்லை. 344 00:18:08,797 --> 00:18:13,135 ...எனக்கு ஆச்சரியம் என்னவென்றால், அதை எப்படி பிடிக்காமல் போகும்? 345 00:18:13,135 --> 00:18:16,013 அதாவது, அது இனிப்பு, ஆனால் பழ வாசனையோடு பால் போல இருக்கிறது. 346 00:18:16,013 --> 00:18:18,432 -எல்லாவற்றின் சிறந்த கலவை... -அனிக். 347 00:18:18,432 --> 00:18:19,892 ஆம். சரி. மன்னிக்கவும். 348 00:18:19,892 --> 00:18:22,227 இதோ... இங்கே. 349 00:18:22,227 --> 00:18:23,395 அவளுக்குப் பிடிக்கவில்லை. 350 00:18:23,395 --> 00:18:26,190 உங்கள் நேர்மைக்கு நன்றி. நன்றி. 351 00:18:26,190 --> 00:18:27,191 ஸோயி, கொஞ்சம் நிறுத்து. 352 00:18:27,191 --> 00:18:30,110 அதோ... அங்கே. பார்த்தீர்களா? 353 00:18:30,110 --> 00:18:31,653 தவறான கிளாஸை எடுக்கிறார், 354 00:18:32,196 --> 00:18:34,198 விஷம் உள்ள கிளாஸ் தவறுதலாக எட்கரிடம் இருக்கிறது. 355 00:18:34,198 --> 00:18:36,074 அட, மோசமானவனே. 356 00:18:36,909 --> 00:18:39,203 ஆக, எட்கர் விஷம் கலந்த கிளாஸில் குடித்தான். 357 00:18:39,703 --> 00:18:41,038 ராக்ஸானாவும் தான். 358 00:18:41,038 --> 00:18:45,334 கிரேஸ் அடரால் போட்ட கிளாஸை பெங் குடித்தான். 359 00:18:45,334 --> 00:18:48,545 கைலர்! ஹே, பதிவு செய்கிறாயா? 360 00:18:48,545 --> 00:18:51,882 பாரு. இந்த மனிதன் நிறைய அடெரால் சாப்பிட்டிருக்கிறார். 361 00:18:51,882 --> 00:18:52,966 இரவு முழுதும் விழித்திருக்கிறார். 362 00:18:52,966 --> 00:18:55,719 புது வியாபாரத்திற்கு பல யோசனைகள் இருக்கும் போது எப்படி தூங்குவது? 363 00:18:56,303 --> 00:18:59,890 ஃபெங்கிற்கு விஷம் கொடுத்ததாக நினைத்து யுலசீஸ் சனிக்கிழமை தூங்கப் போனார். 364 00:18:59,890 --> 00:19:02,476 எனவே அடுத்த நாள் காலை, ஒரு பெண் அலறியதை கேட்டவுடன்... 365 00:19:04,353 --> 00:19:06,104 ஃபெங்கின் சடலத்தை பார்த்து, 366 00:19:06,104 --> 00:19:07,773 விவியின் கத்துவதாக நினைத்தார். 367 00:19:07,773 --> 00:19:10,275 யாரோ பிஸ்தா ஓடுகளின் மீது ஓடும் கரக், கரக், கரக் சத்தத்தை 368 00:19:10,275 --> 00:19:12,653 கேட்டதாக ட்ராவிஸ் சொன்னான், 369 00:19:12,653 --> 00:19:15,489 ஆனால் ட்ராவிஸைக் கடந்து யுலசீஸ் 370 00:19:15,489 --> 00:19:18,700 கிரேஸின் படுக்கையறையைத் தாண்டி ஓடி, 371 00:19:18,700 --> 00:19:21,745 அலறல் கேட்டதாக தான் நினைத்த, விவியனின் கதவுக்கருகே சென்றார். 372 00:19:22,329 --> 00:19:23,664 அது சரி தான். 373 00:19:23,664 --> 00:19:25,707 நான் கதவை திறந்த போது, யுலசீஸ் அங்கிருந்தான், 374 00:19:25,707 --> 00:19:30,003 ஃபெங்கைப் பார்த்தவுடன், அவன் பேயைப் பார்த்தது போலானான். 375 00:19:30,003 --> 00:19:31,171 அலறல் சத்தம் கேட்டேன். 376 00:19:31,171 --> 00:19:33,173 சரி, கைலர், நான் போக வேண்டும். கைலர். 377 00:19:36,051 --> 00:19:39,680 அடக் கடவுளே. முடித்து விட்டாயா? 378 00:19:39,680 --> 00:19:42,808 வேறு என்ன சொல்வது? அவனைப் பிடித்து விட்டோம், நண்பா. 379 00:19:42,808 --> 00:19:46,270 அப்படியா? நீங்கள் காட்டிய எதுவும் ஆதாரமாகாது. 380 00:19:46,270 --> 00:19:47,813 எல்லாம் சூழ்நிலை சார்ந்தது. 381 00:19:47,813 --> 00:19:51,066 அந்த கிளாஸ்கள் மாற்றப்பட்டன. அதை வீடியோவில் காட்டினோமே. 382 00:19:51,066 --> 00:19:52,734 மணப்பெண் மற்றும் இறந்தவனின் 383 00:19:53,402 --> 00:19:56,446 பாத்ரூம் அலராமரியில் ஒரு டீபாட் ஒளித்து வைக்கப்பட்டிருந்தது. 384 00:19:56,446 --> 00:19:58,824 சரி, இங்கே என்ன கிடைத்திருக்கிறது? 385 00:19:59,408 --> 00:20:03,078 உண்மையான போலீஸ் கண்டுபிடித்த உண்மை ஆதாரம். 386 00:20:03,078 --> 00:20:05,998 அந்த ஆள் ஷவரில் பூ போட்டு டீ சமைக்க விரும்பியிருந்தால், 387 00:20:05,998 --> 00:20:08,208 எதற்காக கிரேஸ் டீ பாத்திரத்தை அலமாரியில் மறைக்க வேண்டும்? 388 00:20:08,208 --> 00:20:09,126 நான் செய்ய... 389 00:20:09,126 --> 00:20:13,297 ஒருவேளை நடிகர்களான நீங்கள் இருவரும் உண்மையான டிடெக்டிவ் போல நடிக்க... 390 00:20:13,297 --> 00:20:14,381 நடிகர்களா? 391 00:20:15,257 --> 00:20:16,842 என் முகத்திற்கு நேரே அதைச் சொல்லுங்கள். 392 00:20:17,426 --> 00:20:20,304 திருப்ப சொல்ல விருப்பமில்லை. 393 00:20:21,263 --> 00:20:22,514 நான் தான் அந்த டீ பாத்திரத்தை ஒளித்து வைத்தேன். 394 00:20:22,514 --> 00:20:25,559 இல்லை, என் கையால் நான் தான் டீ பாத்திரத்தை ஒளித்து வைத்தேன். 395 00:20:25,559 --> 00:20:28,729 -இல்லை, ட்ராவிஸ். உண்மையில், நான் தான் ஒளித்தேன். -என்ன? ஏன்? 396 00:20:29,438 --> 00:20:31,148 உன் அறையில் அதைப் பார்த்தேன், 397 00:20:31,148 --> 00:20:33,442 டீயில் தான் விஷம் கலந்திருந்தது என்று தெரிந்தவுடன், 398 00:20:33,442 --> 00:20:36,987 அது உனக்கு கெடுதல் செய்துவிடுமோ என்று கவலைப்பட்டேன். 399 00:20:38,488 --> 00:20:41,575 நான் இதைச் செய்ததாக நினைத்தாயா? 400 00:20:42,159 --> 00:20:44,703 இல்லை, கிடையாது... பாரு. 401 00:20:44,703 --> 00:20:45,621 ஹே. இல்லை... 402 00:20:45,621 --> 00:20:48,207 என்ன இது... ஸோயி, நிறுத்து. ஸோயி! 403 00:20:48,207 --> 00:20:49,791 ஒரு முடக்கை விட நிறைய குடித்துவிட்டாய். 404 00:20:49,791 --> 00:20:53,003 பார்த்தாயா? நான் உன்னை நம்புகிறேன். 405 00:20:53,003 --> 00:20:55,506 இதில் விஷமில்லை என்று மனதார நம்புகிறேன். 406 00:20:56,965 --> 00:21:01,011 -நீ ஒரு முட்டாள், ஸோ. -உண்மையிலேயே. இங்கே வா. 407 00:21:13,857 --> 00:21:15,526 நான் உன் கொம்பில் இருந்து குடிக்கிறேனே. 408 00:21:15,526 --> 00:21:19,363 அது ஒரு பாரம்பரிய “ஜார்ஜியன் கான்ட்ஸி” என்று உனக்குத் தெரிந்திருக்க வேண்டும். 409 00:21:19,363 --> 00:21:22,574 -உன் “கான்ட்ஸி”-யில் இருந்து நான் குடிக்கிறேனே. -இது காலி. 410 00:21:23,242 --> 00:21:25,619 கடைசி சொட்டு கூமிஸ்ஸை டச் பேபீஸ் செய்ய பயன்படுத்தி விட்டேன். 411 00:21:25,619 --> 00:21:27,120 அதை என்னிடம் கொடு. 412 00:21:28,205 --> 00:21:30,499 இசபெலின் ஜின்னை அதில் ஊற்றுகிறேன். 413 00:21:30,499 --> 00:21:31,959 என்ன? என்ன நடக்கிறது? 414 00:21:31,959 --> 00:21:37,256 அதில் விஷம் இல்லையென்றால், பிரச்சினையில்லை, சரியா? 415 00:21:38,632 --> 00:21:41,009 -என்ன? இல்லை... -விவியன். 416 00:21:43,178 --> 00:21:44,012 சரி. 417 00:21:45,806 --> 00:21:47,391 இது முட்டாள்தனம். 418 00:21:48,517 --> 00:21:49,351 சிறப்பு. 419 00:21:49,935 --> 00:21:53,021 என்னைத் தடுக்க உனக்கு எதுவும் காரணம் இருக்காது. 420 00:21:58,986 --> 00:22:01,655 இது உயர்தர சாராயம். 421 00:22:02,364 --> 00:22:03,699 -நன்றி. -சரி. 422 00:22:03,699 --> 00:22:04,992 பரவாயில்லை. 423 00:22:10,873 --> 00:22:12,291 உன்னை நம்பினேன். 424 00:22:15,669 --> 00:22:17,462 -நிறுத்து. -இல்லை, வேண்டாம்! 425 00:22:17,462 --> 00:22:19,423 வேண்டாம். 426 00:22:21,216 --> 00:22:22,509 ஏன்? 427 00:22:27,931 --> 00:22:28,932 உன்னைக் காதலித்தேன். 428 00:22:30,642 --> 00:22:32,060 உண்மையாகக் காதலித்தேன். 429 00:22:32,644 --> 00:22:34,021 என் பலவீனமான அண்ணன் 430 00:22:34,021 --> 00:22:39,318 உணரக்கூட முடியாத அளவு ஆழமாக உன்னை காதலித்தேன். 431 00:22:41,403 --> 00:22:43,030 நீயும் அப்படி உணர்ந்தாய் எனத் தெரியும். 432 00:22:43,030 --> 00:22:45,532 ஆனால் உனக்கே உன்னால் உண்மையாக இருக்க முடியவில்லை. 433 00:22:47,159 --> 00:22:50,787 அதனால் தான் உனக்கு உதவ நினைத்தேன். 434 00:22:50,787 --> 00:22:53,290 எஞ்சிய வாழ்க்கையை நாம் ஒன்றாக வாழ்ந்திருக்கலாம். 435 00:22:54,374 --> 00:22:55,751 சாகசம் நிறைந்த, 436 00:22:56,919 --> 00:22:59,671 ஆர்வமான, காதல் நிறைந்த வாழ்க்கை. 437 00:23:00,172 --> 00:23:03,258 இந்த கேவலமான, சுவாரஸ்யமில்லாத நபரோடு நீ வாழ... 438 00:23:08,597 --> 00:23:09,431 ஐயோ. 439 00:23:13,435 --> 00:23:14,686 கொலையாளி கிடைத்துவிட்டான், நண்பா. 440 00:23:16,396 --> 00:23:17,773 நீ மேலே சொர்க்கத்தில் இருக்கிறாய். 441 00:23:18,482 --> 00:23:19,858 நான் கொல்லவில்லை என்று சொன்னேனே. 442 00:23:24,947 --> 00:23:29,576 கிரேஸ், இன்று திரும்பத் திரும்ப உன்னைக் கொலைக்காரி என்று 443 00:23:29,576 --> 00:23:33,038 குற்றம் சாட்டியதற்கு என்னை மன்னித்துவிடு. 444 00:23:33,038 --> 00:23:34,206 சரி. 445 00:23:34,206 --> 00:23:36,667 நான் ஆழமாக வருந்துகிறேன், 446 00:23:36,667 --> 00:23:40,045 சில மணி நேரங்கள் என் மகனுக்கு மனைவியாக இருந்ததால் 447 00:23:40,045 --> 00:23:42,798 அவன் சொத்து உனக்கு மட்டும் என்று நினைத்தால், 448 00:23:42,798 --> 00:23:45,300 எங்கள் வக்கீல்கள் உன்னிடம் பேசுவார்கள். 449 00:23:45,300 --> 00:23:47,010 -நீ ஜெயிக்க மாட்டாய். -இல்லை. 450 00:23:47,010 --> 00:23:49,888 நீ நியமிக்கும் வக்கீல்களை விட சிறந்தவர்களை எங்களால் நியமிக்க முடியும். 451 00:23:49,888 --> 00:23:53,725 உங்களின் கெட்ட சொத்து எதுவும் எனக்குத் தேவையில்லை, 452 00:23:53,725 --> 00:23:56,478 எனவே, எனக்கு வேண்டாம். 453 00:24:04,820 --> 00:24:06,196 முடிந்தது. இறுதியாக. 454 00:24:06,196 --> 00:24:08,365 இதனால் எனக்கு மில்லியன் டாலர்கள் கிடைக்கும், இல்லையா? 455 00:24:08,365 --> 00:24:09,449 நீங்கள் தானே சொன்னீர்கள். 456 00:24:10,158 --> 00:24:11,118 அப்பா? 457 00:24:12,536 --> 00:24:15,455 உங்கள் டிரக்கை திரும்பப் பெற எவ்வளவு பணம் தேவைப்படுகிறது? 458 00:24:16,123 --> 00:24:18,000 -உண்மையாகவா? -மில்லியன் டாலர்களா? அது வந்து... 459 00:24:18,000 --> 00:24:19,793 இல்லை, ஒவ்வொரு பைசாவையும் திருப்பித் தருகிறேன்! 460 00:24:19,793 --> 00:24:21,003 இல்லை, வேண்டாம். 461 00:24:22,254 --> 00:24:23,797 நன்றி. 462 00:24:25,465 --> 00:24:27,509 எட்கரின் மரணம் பற்றி யாரோ எனக்கு கட்டுரை அனுப்பி இருக்கிறார்கள். 463 00:24:28,010 --> 00:24:29,052 இப்போது வெளியாகிவிட்டது. 464 00:24:30,220 --> 00:24:34,141 எல்லா கம்ப்யூட்டர் காயின்களையும் உன்னால் விற்க முடிந்ததா? 465 00:24:34,141 --> 00:24:37,352 சிறிது குறைந்த விலை தான், ஒரு டாலருக்கு 62 சென்ட்டுகள் கிடைத்தது. 466 00:24:37,936 --> 00:24:39,938 அது முன்னரே நடந்தது அதிர்ஷ்டம்... 467 00:24:40,814 --> 00:24:42,149 -என்ன? -என்ன? 468 00:24:42,149 --> 00:24:45,611 பூசெஃபாலஸ், அதன் மதிப்பு உயருகிறது. அதிகரிக்கிறது. 469 00:24:45,611 --> 00:24:47,988 நான் விற்றதை விட இப்போது மூன்று மடங்கு மதிப்பு ஏறியிருக்கிறது. 470 00:24:48,906 --> 00:24:49,907 அது எதனால் என்று தெரியுமா? 471 00:24:49,907 --> 00:24:54,536 என் ரெடிட் படையை பூசெஃபாலஸில் முதலீடு செய்யும்படி நான் தான் சொன்னேன். 472 00:24:54,536 --> 00:24:56,455 ஆமாம், அதை எப்படி உச்சரிப்பது என்று எனக்குத் தெரியும். 473 00:24:58,081 --> 00:24:59,708 நான் தலைமையேற்றேன். 474 00:25:01,710 --> 00:25:04,671 உன்னை வேலையை விட்டு நீக்குகிறேன். மூட்டை கட்டிக் கொண்டு, இங்கிருந்து கிளம்பு. 475 00:25:06,298 --> 00:25:08,258 இசபெல், என்ன இது? 476 00:25:09,843 --> 00:25:11,220 நான் உங்கள் துணையாக இருப்பேன். 477 00:25:11,887 --> 00:25:14,139 திரையரங்கிற்கு போகலாம். உணவு சாப்பிடலாம். 478 00:25:14,139 --> 00:25:17,893 பெட்ரூமில் கை மட்டும் பயன்படுத்தி, சந்தோஷமாக இருப்பதை உறுதி செய்யலாம், 479 00:25:17,893 --> 00:25:19,353 இது சாத்தியம் என்று நினைக்கிறேன். 480 00:25:19,353 --> 00:25:22,105 ஏற்கனவே என்னிடம் இறக்க மறுக்கும் ஒரு நாய் இருக்கிறது. 481 00:25:26,109 --> 00:25:27,819 வெற்று முயற்சி. 482 00:25:29,613 --> 00:25:31,907 கிரேஸை காப்பாற்றியதற்கு நாங்கள் நன்றி சொல்ல விரும்புகிறோம். 483 00:25:32,908 --> 00:25:36,995 கிரேஸைக் காப்பாற்றியது. அது எனக்கு நன்மையாக இருந்தது. 484 00:25:36,995 --> 00:25:39,831 ஏனென்றால், அது, “கருணையானது.” 485 00:25:39,831 --> 00:25:41,333 கிரேஸ் காப்பாற்றப்பட்டாள். எனவே... 486 00:25:41,333 --> 00:25:44,378 அவள் காப்பாற்றப்பட்டாள், நான் உதவினேன். ஆனால் அது உங்களுக்கே தெரியும். 487 00:25:44,378 --> 00:25:47,714 இனிமையான தருணத்தை உருவாக்க முயல்கிறேன். அதை கெடுத்துவிடாதே. 488 00:25:47,714 --> 00:25:50,092 சரி, மன்னிக்கவும். இன்னமும் பதட்டமாக உணர்கிறேன். 489 00:25:50,092 --> 00:25:51,635 உங்களுக்கு புரிகிறதா என தெரியவில்லை. 490 00:25:51,635 --> 00:25:54,972 அனிக், நடந்து பற்றி ஸோயியிடமும் கிரேஸிடமும் 491 00:25:54,972 --> 00:25:59,434 என்னைப் பேச சொன்னது, உனக்கு எவ்வளவு கடினமாக இருந்திருக்கும் என எனக்குப் புரிகிறது. 492 00:25:59,434 --> 00:26:02,145 ஆம், அதைப்பற்றி பேச எனக்குப் பிடிக்கவில்லை 493 00:26:02,145 --> 00:26:03,772 என்னை நம்புங்கள், ஆனால்... 494 00:26:03,772 --> 00:26:05,524 நானும் என் தொழிலும் அப்படித்தான். 495 00:26:05,524 --> 00:26:08,193 உன்னால் மட்டும் தான், என் கஷ்டங்கள் பற்றி விவியனிடம் பேசினேன். 496 00:26:08,193 --> 00:26:10,696 அவளிடம் முதலிலேயே பேசியிருக்க வேண்டும். 497 00:26:11,280 --> 00:26:12,281 அவள் என் கூட்டாளி. 498 00:26:19,246 --> 00:26:21,498 அனிக், நீ ஸோயிக்கு நல்ல கணவனாக இருப்பாய். 499 00:26:22,583 --> 00:26:24,168 என்றாவது ஒருநாள் அது நடந்தால். 500 00:26:24,168 --> 00:26:25,502 இதை நீங்கள் சொல்வது வேடிக்கையாக இருக்கு, 501 00:26:25,502 --> 00:26:28,255 ஏனெனில் விரைவில் நான் ஸோயியிடம் ப்ரொபோஸ் செய்யவிருந்தேன். 502 00:26:28,881 --> 00:26:30,674 ஆனால், இப்போது நடந்திருக்கும் எல்லாவற்றிற்கும் பிறகு, 503 00:26:30,674 --> 00:26:33,594 திருமணம் பற்றி அவள் ஆர்வமாக இருப்பாளா என்று தெரியவில்லை. 504 00:26:34,303 --> 00:26:36,555 -உனக்கு உறுதியாகத் தெரியாது. -உனக்கு உறுதியாகத் தெரியாது. 505 00:26:39,391 --> 00:26:42,394 நீ நலமா? இது கடினமான சூழல் தான். 506 00:26:42,394 --> 00:26:45,814 ஆம். இல்லை. நான்...நன்றாக இருக்கிறேன். 507 00:26:45,814 --> 00:26:49,401 என் அங்கிள் பற்றி சரியாக தெரிந்து கொள்ளவில்லை. 508 00:26:49,902 --> 00:26:53,739 ஒரு நபராக இருந்ததை விட, என் கற்பனையில் தான் அவர் அதிகம் இருந்திருக்கிறார். 509 00:26:54,406 --> 00:26:57,576 உண்மையில், என் அம்மாவின் கள்ள உறவு எனக்கு அதிர்ச்சி கொடுத்தது. 510 00:26:58,202 --> 00:27:01,580 கிரேஸ் எட்கரை கொன்றிருப்பாள் என்று நான் நினைக்கவே இல்லை. 511 00:27:02,080 --> 00:27:03,916 -ஓ, ஆம், கண்டிப்பாக. -ஆம். 512 00:27:03,916 --> 00:27:06,084 ஒரு சின்ன சந்தேகம் மட்டும் இருந்தது. 513 00:27:06,084 --> 00:27:08,504 -மிகச் சின்ன சந்தேகம். -ஒரே ஒரு நொடிக்கு. 514 00:27:08,504 --> 00:27:14,718 ஆனால் இந்த வார கடைசி, காதல் பற்றியும், எது முக்கியம் என்றும், 515 00:27:14,718 --> 00:27:17,846 மற்றும் எஞ்சிய வாழ்க்கையில் எனக்கு எது தேவை என்றும் எனக்குப் புரிய வைத்தது. 516 00:27:17,846 --> 00:27:19,097 ஆமாம், எனக்கும் தான். 517 00:27:19,097 --> 00:27:23,393 அதைப்பற்றி பேச இது சரியான நேரமோ இடமோ இல்லை, 518 00:27:23,393 --> 00:27:26,605 ஆனால், வாழ்க்கை குறுகியது... 519 00:27:26,605 --> 00:27:27,731 என்னுடனான உறவு முறிக்கிறாயா? 520 00:27:27,731 --> 00:27:29,149 இல்லை! 521 00:27:29,149 --> 00:27:32,402 உன்னோடு இருக்கும் போது என்னையே எனக்குப் பிடிக்கிறது, 522 00:27:32,402 --> 00:27:37,199 உன்னை விடுத்து வேறு யாருடனும் சேர்ந்து என்னால் கொலை நடந்த சூழலை கடந்து வந்திருக்க முடியாது. 523 00:27:37,199 --> 00:27:38,534 எனக்கும் அப்படி தான். 524 00:27:39,034 --> 00:27:40,994 ஆனால் அது கொலைகள் நடக்கும் போது மட்டும் தான், இல்லையா? 525 00:27:40,994 --> 00:27:42,329 நான் சொல்ல வருவது என்னவென்றால், 526 00:27:43,247 --> 00:27:44,081 என்னைத் திருமணம் செய்வாயா? 527 00:27:45,207 --> 00:27:46,041 வாய்ப்பே இல்லை! 528 00:27:46,041 --> 00:27:48,252 என்ன? உனக்கு விருப்பமில்லையா... 529 00:27:48,252 --> 00:27:50,128 ஓ, இல்லை. அந்த “வாய்ப்பே இல்லை” இல்லை. 530 00:27:50,128 --> 00:27:52,339 “வாய்ப்பே இல்லை” என்றால் “வாய்ப்பே இல்லை! நானே உன்னைக் கேட்கவிருந்தேன்!” என்பது போல. 531 00:27:52,339 --> 00:27:54,049 -வாய்ப்பே இல்லை. -வீட்டிற்கு போகும் வழியில், 532 00:27:54,049 --> 00:27:55,801 முதலில் முத்தமிட்ட இடத்தில் கேட்கவிருந்தேன். 533 00:27:55,801 --> 00:27:57,761 இந்த வாரம் முழுவதும் உன் பெற்றோரின் ஆசீர்வாதங்களை வாங்க முயன்றேன், 534 00:27:57,761 --> 00:27:59,012 ஒருவழியாக இப்போது தான் கிடைத்தது. 535 00:27:59,012 --> 00:28:01,765 மன்னித்துவிடு. உனக்கு இப்படி ஒரு திட்டம் இருந்தது என்று எனக்குத் தெரியாது. 536 00:28:01,765 --> 00:28:03,433 நான் சொன்னதை வாபஸ் வாங்குகிறேன், மேலும் காத்திருக்கிறேன். 537 00:28:03,433 --> 00:28:06,144 இல்லை, இது தெரிந்து விட்டதால், உனக்கு ஆச்சரியம் இருக்காது. 538 00:28:06,144 --> 00:28:07,646 மேலும், நீ ஏற்கனவே கேட்டுவிட்டாய். 539 00:28:07,646 --> 00:28:08,605 நான், “வாபஸ் வாங்கிக்கொள்கிறேன்.” 540 00:28:08,605 --> 00:28:10,649 வந்து, “வாபஸ் வாங்காதே.” 541 00:28:10,649 --> 00:28:14,486 நான் கேட்க விரும்பும் விதத்தை, உன் மீது திணிக்க எனக்கு விருப்பமில்லை. 542 00:28:14,486 --> 00:28:16,488 -மோதிரம் வைத்திருக்கிறாயா? -ஆமாம், கார் பெட்டியில். 543 00:28:16,488 --> 00:28:17,406 -அப்படியா? -ஆமாம். 544 00:28:17,406 --> 00:28:18,782 அதை எடுத்து வந்து, கேளு. 545 00:28:18,782 --> 00:28:20,701 வேண்டாம், அது ஆச்சரியத்தைக் கெடுக்கும், ஏனென்றால்... 546 00:28:20,701 --> 00:28:21,618 என்னை திருமணம் செய்துகொள்வாயா? 547 00:28:22,536 --> 00:28:23,662 உன்னிடம் மோதிரம் இல்லை. 548 00:28:23,662 --> 00:28:27,249 உண்மை தான். இல்லை. ஆனால், என்னால் நீ செய்தது போல ஒன்றைச் செய்ய முடியும். 549 00:28:27,249 --> 00:28:29,626 இந்த கொடிகளில் இருந்து, நீ செய்தது போலவே. 550 00:28:29,626 --> 00:28:31,420 அப்படியே அது போலவே முடியாது. நீ எப்படி செய்தாய்? 551 00:28:31,420 --> 00:28:32,713 இதைக் கேளு. நாம் ஒரு ஒப்பந்தம் செய்யலாம். 552 00:28:32,713 --> 00:28:37,092 அடுத்த மாதம் ஒருநாள், நாம் எதிர்பார்க்காத போது, 553 00:28:37,092 --> 00:28:39,887 நம்மில் ஒருவர் ஆச்சரியப்படுத்தும் வகையில் ப்ரொபோஸ் செய்யலாம், சரியா? 554 00:28:39,887 --> 00:28:41,722 -அது நன்றாக இருக்கிறது. -பிரமாதம். 555 00:28:41,722 --> 00:28:42,681 -சிறப்பு. -நல்லது. 556 00:28:42,681 --> 00:28:44,224 -அற்புதம். -சரி. 557 00:28:44,224 --> 00:28:45,475 நல்லது. 558 00:28:45,475 --> 00:28:46,894 என்னை திருமணம் செய்வாயா? 559 00:28:47,394 --> 00:28:50,063 சரி. நான் செய்ய வந்தது புரிந்தது தானே? சரி. வந்து... 560 00:29:08,707 --> 00:29:10,375 இப்போது ப்ரொபோஸ் செய்யப் போகிறாயா? 561 00:29:13,170 --> 00:29:15,756 உங்கள் உதவிக்கு நன்றி. கூட்டாளியாக இருந்தது சிறப்பாக இருந்தது. 562 00:29:15,756 --> 00:29:17,758 ஆமாம், மறுபடியும் இந்த வேலையைச் செய்து, 563 00:29:17,758 --> 00:29:21,803 கண்ணோட்டத் திரைப்படங்களைக் கேட்டு கொலை வழக்கைத் தீர்த்தது நன்றாக இருந்தது. 564 00:29:21,803 --> 00:29:24,056 உங்கள் இருவரையும் அங்கே பார்த்தேன். 565 00:29:24,056 --> 00:29:26,350 ஹாலிவுட் படம் போல முடிவு கிடைக்கும் என்று சொன்னேனே. 566 00:29:29,228 --> 00:29:31,355 சரி, இனி என் புத்தகத்தை எழுத தொடங்கப் போகிறேன். 567 00:29:31,355 --> 00:29:32,606 எனக்கு எப்போதும் புரிந்ததில்லை. 568 00:29:33,190 --> 00:29:37,778 கண்ணோட்டத் திரைப்படம் என்பது தான் உங்கள் திறமை என்றால், ஏன் புத்தகம் எழுதுகிறீர்கள்? 569 00:29:43,659 --> 00:29:45,160 {\an8}ஒரு வருடத்திற்கு பிறகு 570 00:29:45,160 --> 00:29:46,245 {\an8}இதோ இந்தப் பக்கம். 571 00:29:47,496 --> 00:29:49,748 -ஸோயி! அனிக்! -ஹாய்! 572 00:29:49,748 --> 00:29:51,625 -ஹே! -இது மிக அருமையாக இருக்கு! 573 00:29:53,043 --> 00:29:54,586 -இது என் ஹாலிவுட் பழக்கவழக்கம். -சரி. 574 00:29:57,923 --> 00:29:59,716 அந்த மோதிரங்களைக் காட்டுங்கள். 575 00:29:59,716 --> 00:30:01,385 -இந்த மோதிரங்களா? -ஆம்! 576 00:30:01,385 --> 00:30:04,137 பாரு! இருவரும் ரொம்ப அழகு! 577 00:30:04,137 --> 00:30:09,142 பொறுங்கள். டேனியல் ராட்க்ளிஃப் தான் சேவியராக நடிக்கிறார் என்று ஆன்லைனில் படித்தேனே? 578 00:30:11,353 --> 00:30:13,063 நானாக யார் நடிக்கிறார் என பொறுத்திருந்து பாரு. 579 00:30:13,063 --> 00:30:14,398 {\an8}ஆக்ஷன்! 580 00:30:14,398 --> 00:30:15,774 {\an8}எக்ஸ் மார்க்ஸ் த மர்டர் ஸ்பாட் 581 00:30:15,774 --> 00:30:17,276 {\an8}உங்கள் எல்லோரிடமும் பேச விரும்புகிறேன், 582 00:30:17,860 --> 00:30:20,487 ஏனென்றால் உங்களில் யார் வேண்டுமானாலும், கொலைகாரனாக இருக்கலாம். 583 00:30:20,487 --> 00:30:22,906 -நன்றாக நடிக்கிறாள், இல்லையா? -அற்புதம்! 584 00:30:22,906 --> 00:30:25,117 ஆம். எல்லா நடிகர்களும் பொருத்தமாக உள்ளனர். 585 00:30:25,117 --> 00:30:28,579 இரண்டாவது வாய்ப்பிற்காக நீங்கள் எல்லோரும் ஹை ஸ்கூல் ரீயூனியனுக்கு வந்திருக்கிறீர்கள். 586 00:30:28,579 --> 00:30:31,665 காதலில். வாழ்க்கையில். வேறு ஒரு விஷயத்திற்காகவும். 587 00:30:31,665 --> 00:30:33,125 அனிக் இதைச் செய்திருப்பான் என்று தோன்றவில்லை. 588 00:30:33,125 --> 00:30:36,503 அனிக்? இல்லை. அவன் என் நெருங்கிய நண்பன். அவன் செய்யவில்லை என்று தெரியும். 589 00:30:36,503 --> 00:30:39,673 நானாக நடிக்கும் நபர், நான் நினைக்கும் நபர் தானா? 590 00:30:40,174 --> 00:30:42,801 நான் கொல்லவில்லை. நான் யாரையும் கொல்லவில்லை. 591 00:30:42,801 --> 00:30:44,094 கட்! 592 00:30:44,094 --> 00:30:46,638 எனக்கு ஜலீல் வைட்-ஐ ரொம்ப பிடிக்கும் என்று சொன்னேனே. 593 00:30:47,139 --> 00:30:50,934 ஒரு மகிழ்ச்சியான ஹாலிவுட் முடிவு உங்கள் இருவருக்கும் மட்டும் கிடைக்கவில்லை. 594 00:30:50,934 --> 00:30:52,811 எனக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது. 595 00:30:53,312 --> 00:30:54,688 பொறு, என்ன? 596 00:30:56,064 --> 00:30:58,859 -ஹே, நான் எப்படி நடித்தேன்? -அற்புதம். 597 00:31:01,278 --> 00:31:03,739 டேனருக்கும் ஜலீல் வைட்டிற்கும் நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதா? 598 00:31:03,739 --> 00:31:04,948 நீ ரொம்ப அழகாக இருக்கிறாய். 599 00:31:07,451 --> 00:31:08,911 எனக்கு ரொம்ப அசௌகரியமாக இருக்கு. 600 00:31:35,145 --> 00:31:37,147 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்