1 00:00:11,678 --> 00:00:15,140 நான் அதிக வெறுப்பைக் கொண்டிருக்கும் ஸ்கேட்டர் எனத் தோன்றும். 2 00:00:16,308 --> 00:00:19,019 பலரும்... மோசமான விஷயங்களைக் கூறுவார்கள். 3 00:00:19,102 --> 00:00:22,272 ஆனால் பிறர் கூறுவதைப் பற்றி நான் கவலைப்பட்டதே இல்லை. 4 00:00:22,773 --> 00:00:27,402 நான் அதை உத்வேகமாக எடுத்துக்கொண்டு, நான் செய்ய விரும்புவதையே தொடர்ந்து செய்தேன். 5 00:00:31,573 --> 00:00:34,868 லெட்டிஷியா பஃபனி 6 00:00:36,662 --> 00:00:38,372 நான் பிரேஸிலின் சா பாலோவில் வளர்ந்தேன். 7 00:00:40,999 --> 00:00:43,710 நான் முதல் முறை ஸ்கேட் தொடங்கியபோது, எனக்கு பத்து வயது. 8 00:00:43,794 --> 00:00:47,256 போர்டைத் தொட்ட போதே நான் அதை நேசிக்கத் தொடங்கிவிட்டேன். 9 00:00:49,132 --> 00:00:52,719 நான் ஸ்கேட் செய்யத் தொடங்கிய உடனேயே, அனைத்தையும் விரைவாகக் கற்றுக்கொண்டேன். 10 00:00:52,803 --> 00:00:55,931 ஸ்கேட் செய்த முதல் நாளிலேயே ட்ரிக்குகள் செய்ய முயன்றேன். 11 00:00:56,014 --> 00:00:58,100 எனக்கு எப்படி புஷ் செய்வது என்று கூடத் தெரியாது, 12 00:00:58,183 --> 00:00:59,518 ஆனால் ட்ரிக்குகள் செய்ய முயல்கிறேன். 13 00:01:01,353 --> 00:01:03,230 நான் கதவைப் பிடித்துக்கொண்டு, 14 00:01:03,313 --> 00:01:05,607 கிக்ஃப்லிப்கள், ஹீல்ஃப்லிப்களைச் செய்ய முயன்று கொண்டிருப்பேன்... 15 00:01:08,026 --> 00:01:10,279 ஸ்கேட்போர்டிங்கில், கீழே விழுவது சுலபம். 16 00:01:10,362 --> 00:01:11,238 நாம் எப்போதும் கீழே விழுவோம். 17 00:01:11,822 --> 00:01:13,824 பலரும் ஸ்கேட்டிங்கைத் தொடங்கும்போது அது வலியைக் கொடுப்பதால் 18 00:01:13,907 --> 00:01:15,409 அதைக் கைவிட்டுவிடுவார்கள். 19 00:01:17,703 --> 00:01:22,624 எனக்கு முதல் முறை நினைவுள்ளது நான் ஒரு குன்றில் கீழே சென்றபோது, விழுந்துவிட்டேன். 20 00:01:22,708 --> 00:01:25,252 எனக்கு... உடல் முழுவதும் சிராய்ப்புகள் ஏற்பட்டன. 21 00:01:25,335 --> 00:01:26,837 எனக்குத் தோன்றியதோ, 22 00:01:26,920 --> 00:01:28,839 ”இது வேடிக்கையாக உள்ளது. மீண்டும் செய்ய விரும்புகிறேன்.” 23 00:01:34,178 --> 00:01:37,639 நான் சிறுவர்களுடன் ஸ்கேட் செய்வேன். நானே ஒரு சிறுவன் போலத்தான் இருந்தேன், தெரியுமா? 24 00:01:37,723 --> 00:01:39,516 நான் அவர்களுடன் சண்டையிடுவேன். 25 00:01:39,600 --> 00:01:41,018 அதே ட்ரிக்குகளைச் செய்ய முயல்வேன். 26 00:01:41,602 --> 00:01:42,853 நான் மட்டும்தான் ஒரே சிறுமி. 27 00:01:43,353 --> 00:01:45,522 என் அண்டை வீட்டிலிருப்பவர் என்னை பல விதங்களில் அவமானப்படுத்துவார், 28 00:01:45,606 --> 00:01:49,193 ஏனெனில் நான் சிறுவர்கள் அணிந்திருக்கும் அதே விஷயங்களை அணிந்திருப்பேன்: 29 00:01:49,276 --> 00:01:52,696 பேகி பேண்ட், தொப்பி மேலும் ஒரு ஸ்கேட்போர்டும் வைத்திருப்பேன். 30 00:01:54,198 --> 00:01:56,283 என் அப்பாவுக்கு ஸ்கேட்போர்டிங் பிடிக்காது. 31 00:01:56,366 --> 00:01:57,868 நான் ஸ்கேட் செய்யக்கூடாது என அவர் விரும்பினார். 32 00:01:57,951 --> 00:02:00,037 அவர் ஒரு கண்டிப்பான அப்பாவாக இருந்தார். 33 00:02:00,120 --> 00:02:02,581 நான் வீட்டில் இருந்து படிக்க வேண்டும், 34 00:02:03,290 --> 00:02:05,292 வெளியே சிறுவர்களுடன் இருக்கக் கூடாது எனக் கூறினார். 35 00:02:05,375 --> 00:02:07,169 அவர் என் ஸ்கேட்போர்டை இரண்டாக உடைத்துவிட்டார். 36 00:02:08,377 --> 00:02:10,964 ஆனால் அடுத்த நாள் காலை, என் நண்பனுடன் ஒரு போர்டு கிடைத்தது, 37 00:02:11,048 --> 00:02:12,299 ஒரு புதிய போர்டை உருவாக்கினேன். 38 00:02:12,382 --> 00:02:14,801 நான் விரும்பியதெல்லாம் ஸ்கேட் செய்வதுதான். 39 00:02:23,018 --> 00:02:26,855 எனக்கு 14 வயது இருக்கும்போது, எக்ஸ் கேம்ஸில் ஸ்கேட் செய்ய 40 00:02:26,939 --> 00:02:28,690 லாஸ் ஏஞ்சல்ஸுக்கு என்னை அழைத்தனர். 41 00:02:28,774 --> 00:02:31,235 அந்தத் தருணத்தில்தான் எனக்குப் புரிந்தது, 42 00:02:31,318 --> 00:02:33,028 ”சரி, நாம் இதில் சிறப்பாக இருக்கிறோம்.” 43 00:02:33,111 --> 00:02:34,404 2007 எக்ஸ் கேம்ஸ் லாஸ் ஏஞ்சல்ஸ் 44 00:02:34,488 --> 00:02:38,367 கலிஃபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸுக்கு உங்களை வரவேற்கிறேன். 45 00:02:40,285 --> 00:02:42,996 என் முதல் எக்ஸ் கேம்ஸில் நான் சிறப்பாக விளையாடவில்லை. 46 00:02:44,164 --> 00:02:47,251 நான் பிரேஸிலில் நடந்த போட்டிகளில் ஸ்கேட்டிங் செய்து பழக்கப்பட்டிருந்தேன்... 47 00:02:47,334 --> 00:02:49,086 அங்கே ஸ்கேட் பார்க் மிகவும் சிறிதாக இருக்கும். 48 00:02:50,045 --> 00:02:54,341 எக்ஸ் கேம்ஸுக்கு வந்த போது, எல்லாம் இரண்டு மடங்கு அளவில் பெரிதாக இருந்தன. 49 00:02:55,217 --> 00:02:56,426 அதில் எனக்கு கடைசி இடம் கிடைத்தது. 50 00:02:58,345 --> 00:03:00,055 அது எனக்குத் தேவைப்பட்டது என நினைக்கிறேன். 51 00:03:00,138 --> 00:03:01,974 அது என் ஸ்கேட்டிங்கையே மாற்றியது. 52 00:03:03,308 --> 00:03:05,894 அது என் திறன்களை மேம்படுத்த உத்வேகமாக இருந்தது. 53 00:03:05,978 --> 00:03:08,856 நான் “சரி, என் விளையாட்டை மேம்படுத்த வேண்டும்” என நினைத்தேன். 54 00:03:10,524 --> 00:03:13,318 லெட்டிஷியா பெற்ற முதல் தங்கப் பதக்கம் 55 00:03:13,986 --> 00:03:15,904 அவரது தாய் நாட்டிலேயே கிடைத்துள்ளது. 56 00:03:15,988 --> 00:03:18,282 லெட்டி! லெட்டி! 57 00:03:20,492 --> 00:03:24,413 லெட்டிஷியா புஃபோனிதான் உங்கள் தங்கப் பதக்க வீரர். 58 00:03:27,124 --> 00:03:30,335 லெட்டிஷியா புஃபோனி மீண்டும் முதலிடத்தில் உள்ளார். 59 00:03:30,419 --> 00:03:32,379 மற்றொரு தங்கப் பதக்கம். 60 00:03:34,423 --> 00:03:36,675 மூன்று எக்ஸ் கேம்ஸ் தங்கப் பதக்கம் வென்றவர். 61 00:03:36,758 --> 00:03:38,969 ஒரு வெண்கலம், இரண்டு வெள்ளி. 62 00:03:40,721 --> 00:03:42,347 எக்ஸ் கேம்ஸ் பதக்கங்கள் - 2010 வெள்ளி 2011 வெண்கலம் - 2012 வெள்ளி 63 00:03:42,431 --> 00:03:43,849 2013 - தங்கள் - 2013 தங்கம் 2013 தங்கம் - 2014 வெண்கலம் 64 00:03:43,932 --> 00:03:46,393 நான் எக்ஸ் கேம்ஸில் வெல்லத் தொடங்கிய போது 65 00:03:46,476 --> 00:03:48,687 எல்லாம் வேகமாக நடந்தன. 66 00:03:48,770 --> 00:03:49,771 அது மிகவும் அற்புதமாக இருந்தது. 67 00:03:49,855 --> 00:03:52,232 நான் ப்ரோ ஸ்கேட்டர்களைச் சந்தித்தேன். 68 00:03:52,733 --> 00:03:56,236 மேலும் பத்திரிக்கைகளில் இடம்பெறுவதற்கான பல வாய்ப்புகள் கிடைத்தன, 69 00:03:56,320 --> 00:03:57,571 உடற்பயிற்சி பத்திரிக்கைகள், 70 00:03:57,654 --> 00:03:59,323 ஃபேஷன் பத்திரிக்கைகள் போன்று. 71 00:04:01,658 --> 00:04:03,118 எண்டோர்ஃபினா லெட்டிஷியா புஃபோனி 72 00:04:03,202 --> 00:04:07,372 பலரும் நான் இனி ஸ்கேட்டிங் செய்வதில்லை என்றனர், 73 00:04:07,456 --> 00:04:09,791 நான் முழு நேர மாடல் ஆகிவிட்டேன், 74 00:04:09,875 --> 00:04:11,168 உடற்பயிற்சி மாடல் ஆகிவிட்டேன் என்றனர். 75 00:04:12,669 --> 00:04:16,173 அது எனக்கு வருத்தமாக இருந்தது, ஏனெனில் எப்போதும் எனக்கு ஸ்கேட்போர்டிங்தான் முக்கியம். 76 00:04:16,255 --> 00:04:18,175 அதுதான் எனக்கு எப்போதும் முதலிடத்தில் இருக்கும். 77 00:04:20,427 --> 00:04:23,263 என்னை ஈஎஸ்பிஎன்னின் பாடி இஷ்யுவிற்கு அழைத்தபோது, 78 00:04:23,347 --> 00:04:24,348 எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. 79 00:04:24,431 --> 00:04:26,433 முதலில், எனக்குப் பதட்டமாக இருந்தது, 80 00:04:26,517 --> 00:04:29,311 ஏனெனில் நான் ஆடையின்றி நிற்க வேண்டும் என எனக்குத் தெரியும். 81 00:04:30,395 --> 00:04:32,648 நான் அதைச் செய்தேன், மேலும் அந்தப் படங்கள் எனக்குப் பிடித்திருந்தன. 82 00:04:32,731 --> 00:04:34,483 ஆனால் பலரும், 83 00:04:34,566 --> 00:04:38,445 தடகள வீரரின் உடலைக் காட்டுவதில் உள்ள கருத்தை, 84 00:04:38,529 --> 00:04:41,865 அதாவது தசைகளைக் காட்டி, மற்ற விஷயங்களைக் காட்டாமல் இருப்பதைப் புரிந்துகொள்ளவில்லை. 85 00:04:43,408 --> 00:04:46,662 அதனால் பலர் மோசமாகப் பேசினர், 86 00:04:46,745 --> 00:04:48,914 அதைச் செய்ய பணம் வாங்கினேன் எனக் கூறினார்கள். 87 00:04:48,997 --> 00:04:51,166 பணத்தின் மீது ஆர்வம் வந்துவிட்டது என்றனர். 88 00:04:51,250 --> 00:04:54,169 அது ஸ்ட்ரீட் லீக்ஸுக்கு சிறிது காலம் முன்னர் நடந்தது, 89 00:04:54,253 --> 00:04:55,629 என் முதல் ஸ்ட்ரீட் லீக். 90 00:04:55,712 --> 00:04:57,339 நாம் சிகாகோவில் நேரலையில் இருக்கிறோம். 91 00:04:57,422 --> 00:04:59,132 2015 ஸ்ட்ரீட் லீக் ஸ்கேட்போர்டிங் உலக சாம்பியன்ஷிப் 92 00:04:59,216 --> 00:05:01,260 ஸ்ட்ரீட் லீக் ஸ்கேட்போர்டிங்கிற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் இன்று. 93 00:05:01,343 --> 00:05:02,845 இதன் ஆறாண்டு கால வரலாற்றில், 94 00:05:02,928 --> 00:05:05,639 இன்றுவரை பெண்கள் ஸ்ட்ரீட் லீகில் பங்கேற்றதே இல்லை. 95 00:05:05,722 --> 00:05:06,723 இது முழுக்க முழுக்க பெண்களுக்காகவே! 96 00:05:06,807 --> 00:05:10,060 ஸ்ட்ரீட் லீக்தான் ஸ்கேட்போர்டிங்கில் மிகப் பெரிய போட்டி. 97 00:05:10,143 --> 00:05:13,188 என் ஸ்கேட்டிங் வாழ்க்கையில் கடினமான காலத்தில் நான் இருந்தேன், 98 00:05:13,272 --> 00:05:15,399 மேலும் நான் வெல்வதற்கு விரும்பினேன். 99 00:05:16,233 --> 00:05:18,944 பெண்களுக்கான ஸ்கேட்போர்டிங்கில் திருப்புமுனை. 100 00:05:19,027 --> 00:05:22,197 இறுதிப் போட்டிக்குச் செல்லும் பெண்களின் பட்டியலைப் பார்ப்போம். 101 00:05:22,281 --> 00:05:24,283 என்னுடன் பலரும் போட்டியிட்டனர், 102 00:05:24,366 --> 00:05:26,785 நான் இனி ஸ்கேட்டிங் செய்ய மாட்டேன் என அவர்கள்தான் கூறினார்கள். 103 00:05:27,953 --> 00:05:30,539 கோர்ஸுக்குச் சென்றவுடன் நாங்கள் அனைவரும் நண்பர்கள்தான். 104 00:05:30,622 --> 00:05:32,416 ஆனால் என் மனதில், 105 00:05:32,499 --> 00:05:35,043 அவர்கள்தான் என்னைப் பற்றி பேசியவர்கள் என எனக்குத் தெரியும். 106 00:05:36,086 --> 00:05:39,047 அவர்கள் கூறியது தவறு என நிரூபிக்க என் மீது அதிக அழுத்தத்தைக் கொடுத்தேன். 107 00:05:40,966 --> 00:05:43,135 போட்டிக்கு முன்னால் எனக்கு இருந்த பதட்டம், 108 00:05:43,218 --> 00:05:46,597 எனக்கு இருந்த உணர்வு, அது சிறப்பானது இல்லை. 109 00:05:47,639 --> 00:05:51,059 ஆனால் நான் ஸ்கேட் செய்யத் தொடங்கிய தருணத்தில், எல்லாம் மாறியது. 110 00:05:51,810 --> 00:05:54,855 என் கவனம் மாறிவிடும், நான் எதையும் கேட்கமாட்டேன். 111 00:05:55,355 --> 00:05:58,400 என் அருகில் நீங்கள் கத்தினாலும் சரி, என்னை அழைத்தாலும் சரி. 112 00:05:58,483 --> 00:05:59,902 அருகில் வெடி வெடித்தாலும் சரி. 113 00:05:59,985 --> 00:06:01,904 என் ட்ரிக்குகள் மீதுதான் கவனம் இருக்கும். 114 00:06:04,615 --> 00:06:06,658 தொடர்ச்சியாக இரு ஆலிக்களைச் செய்ய அவருக்குத் தெரிந்துள்ளது, 115 00:06:06,742 --> 00:06:07,618 நல்ல ஒற்றை ட்ரிக்குகள். 116 00:06:08,285 --> 00:06:09,578 அவர் வேகமாக ஸ்கேட் செய்கிறார். 117 00:06:10,495 --> 00:06:12,748 இவர் டிரான்சிஷனிலும், ஸ்ட்ரீட்டிலும் சிறப்பாக உள்ளார். 118 00:06:14,541 --> 00:06:16,960 அந்த கோர்ஸ் வேடிக்கையான கோர்ஸாக இருந்தது. 119 00:06:17,044 --> 00:06:20,964 அந்த கோர்ஸின் நடுவே ஒரு பெரிய எஸ்எல்எஸ் லோகோ இருந்தது, 120 00:06:21,048 --> 00:06:24,176 அதை யாரும் தாண்டியதில்லை, 121 00:06:24,259 --> 00:06:26,261 ஏனெனில் அங்கு பெரிய இடைவெளி இருந்தது. 122 00:06:27,596 --> 00:06:29,223 ஒரு பெரிய ஆலி. 123 00:06:30,516 --> 00:06:31,808 இதோ. 124 00:06:31,892 --> 00:06:32,893 புஃபோனி 3.3 முதலிடத்திற்கு 4.4 தேவை 125 00:06:32,976 --> 00:06:34,228 இதோ வருகிறார். 126 00:06:34,311 --> 00:06:38,315 நான் முதலிடம் இரண்டாமிடம் பற்றி யோசிக்கவேயில்லை. 127 00:06:38,398 --> 00:06:40,901 நான் என் ட்ரிக்குகளை வெற்றிகரமாகச் செய்யத்தான் விரும்பினேன். 128 00:06:43,445 --> 00:06:44,988 அருமை. சிறப்பான ஓட்டம். 129 00:06:45,072 --> 00:06:46,698 சிறப்பான ஃபிரண்ட்சைடு 180. 130 00:06:46,782 --> 00:06:47,783 புஃபோனி 15.2 முதலிடத்திற்கு 1.3 தேவை 131 00:06:47,866 --> 00:06:49,910 நான் இரண்டாமிடத்தில் இருந்தது எனக்கு நினைவுள்ளது, 132 00:06:49,993 --> 00:06:51,495 மேலும் எனக்கு மூன்று வாய்ப்புகள் இருந்தன. 133 00:06:51,578 --> 00:06:55,040 எனக்கு பெரிய ஸ்கோர் தேவையில்லை. எனக்கு போதுமான ஸ்கோர் தான் தேவை. 134 00:06:55,123 --> 00:06:56,917 ஏதாவது எளிமையாக செய்தால், 135 00:06:57,000 --> 00:06:59,586 எனக்கு அந்த ஸ்கோர் கிடைத்துவிடும், நான் முதலிடத்திற்குச் சென்றுவிடுவேன். 136 00:06:59,670 --> 00:07:02,506 ஆனால் என் மனதில், நான் பாயிண்ட்களை எண்ணவில்லை. 137 00:07:02,589 --> 00:07:05,259 நான் சிறப்பாக ஒன்றைச் செய்ய விரும்பினேன். 138 00:07:05,342 --> 00:07:08,178 ஒரு சிறப்பான ட்ரிக். வெல்வதற்கு எளிதான ஒன்று இல்லை. 139 00:07:08,804 --> 00:07:10,389 அவர் என்ன செய்யப் போகிறார்? 140 00:07:14,351 --> 00:07:17,813 பெரிய 360 ஃப்லிப்பை தவறவிட்டுவிட்டார். முழுதாக சுழலவில்லை. 141 00:07:17,896 --> 00:07:19,231 நான் 360 ஃப்லிப்பை முயன்றேன். 142 00:07:19,314 --> 00:07:21,149 முதல் முறை தவறவிட்டுவிட்டேன். 143 00:07:21,233 --> 00:07:23,735 ”சரி. இன்னும் இரண்டு வாய்ப்புகள் உள்ளன. என்னால் முடியும்” என நினைத்தேன். 144 00:07:30,325 --> 00:07:32,661 இரண்டாவது முறையும் தவறவிட்டுவிட்டேன். 145 00:07:32,744 --> 00:07:35,539 அப்போது “இப்போது இது கடினமாக இருக்கப் போகிறது. 146 00:07:35,622 --> 00:07:38,292 என் மீது எதிர்பார்ப்பு உள்ளது. இன்னும் ஒரு வாய்ப்புதான் உள்ளது” எனத் தோன்றியது. 147 00:07:38,375 --> 00:07:40,460 3.9 பாயிண்ட்தான் அவருக்குத் தேவை. 148 00:07:40,544 --> 00:07:43,672 அவர் அந்த 360 ஃப்லிப்பை மீண்டும் செய்கிறாரா... அதை இருமுறை தவறவிட்டுவிட்டார்... 149 00:07:43,755 --> 00:07:46,049 அல்லது அவரால் செய்ய முடிந்ததை முயல்கிறாரா எனப் பார்ப்போம். 150 00:07:46,133 --> 00:07:49,595 என் மனதில், அவ்வளவு பெரியதைச் செய்ய வேண்டியதில்லை எனத் தெரியும். 151 00:07:50,137 --> 00:07:51,847 ஆனால் பெரியதைச் செய்யத்தான் விரும்பினேன். 152 00:07:51,930 --> 00:07:53,724 அந்த ட்ரிக்கை முழுமையாகச் செய்ய விரும்பினேன். 153 00:07:53,807 --> 00:07:57,436 குறிப்பாக அதை இரண்டு முறை தவறவிட்டதால், இதை முழுமையாகச் செய்ய வேண்டும். 154 00:07:57,519 --> 00:08:01,231 என்னால் வெல்ல முடியாது என்பதால் என் ட்ரிக்கை மாற்ற முடியாது. 155 00:08:01,315 --> 00:08:03,150 நான் வென்றால், சரியான முறையில் வெல்ல விரும்புகிறேன். 156 00:08:03,233 --> 00:08:05,068 கவனத்துடன் இருக்க வேண்டும். 157 00:08:06,778 --> 00:08:09,573 பொதுவாக, ட்ரிக் செய்யும்போது நீங்கள் எப்போது தரையிறங்கப் போகிறீர்கள் எனத் தெரியும்... 158 00:08:09,656 --> 00:08:10,490 லேண்ட் % மிஸ் % 159 00:08:10,574 --> 00:08:11,575 ...அல்லது மிஸ் செய்வீர்களா எனத் தெரியும். 160 00:08:12,743 --> 00:08:14,453 என் பாதங்களுக்குக் கீழே என் போர்டு இருந்தது, 161 00:08:14,536 --> 00:08:17,539 அதனால் நான் “என்னால் முடியும். இதுதான். நான் லேண்ட் ஆகிவிடுவேன்” என நினைத்தேன். 162 00:08:17,623 --> 00:08:21,251 ஆனால் அதை லேண்ட் செய்த உடனேயே, என் சமநிலை கொஞ்சம் இடறியது. 163 00:08:21,335 --> 00:08:24,087 பிறகு மீண்டும் சமநிலைக்கு வந்தபோது, 164 00:08:24,171 --> 00:08:26,256 நான் “சரி. நான் செய்துவிட்டேன்” என நினைத்தேன். 165 00:08:26,340 --> 00:08:28,675 பிறகு உடனேயே நான் கொண்டாடத் தொடங்கினேன். 166 00:08:28,759 --> 00:08:30,677 வென்றுவிட்டார்! யேய்! 167 00:08:30,761 --> 00:08:32,429 அருமை. 168 00:08:32,513 --> 00:08:35,557 லெட்டிஷியா புஃபோனிதான் முதல் 169 00:08:35,640 --> 00:08:41,230 பெண்களுக்கான எஸ்எஸ்எஸ் நைக்கி எஸ்பி சூப்பர் கிரவுன் உலக சாம்பியன். 170 00:08:42,231 --> 00:08:44,149 கடைசி ட்ரிக்கை முடிக்கும்போது, 171 00:08:44,775 --> 00:08:46,860 நான் மிகவும் சிறப்பாக உணர்ந்தேன். 172 00:08:46,944 --> 00:08:48,654 அந்த உணர்ச்சியை விவரிப்பது கடினம். 173 00:08:48,737 --> 00:08:51,281 அது ஸ்கைடைவிங் செய்வது போல. அதை உணர நீங்கள் குதிக்க வேண்டும். 174 00:08:53,742 --> 00:08:57,204 அதுதான் என் சிறப்பான வெற்றி, ஏனெனில் அப்போது இருந்த சூழ்நிலை அப்படி. 175 00:08:57,287 --> 00:08:59,957 அதன் பிறகு, எனக்கு நிறைய மரியாதை கிடைத்தது என நினைக்கிறேன். 176 00:09:00,040 --> 00:09:02,084 இது கனவு. இது கனவு. 177 00:09:02,167 --> 00:09:05,045 இரண்டு வாரங்களாக ஸ்ட்ரீட் லீக் பற்றிய கனவுகள் வந்துகொண்டிருந்தன. 178 00:09:05,128 --> 00:09:06,880 இப்போது அதைச் சாதித்துவிட்டேன். 179 00:09:06,964 --> 00:09:08,006 நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். 180 00:09:08,924 --> 00:09:11,093 அது என் வாழ்க்கையில் சிறந்த தருணங்களில் ஒன்று. 181 00:09:13,345 --> 00:09:15,472 நீங்கள் சிறப்பாக ஒன்றைச் செய்கிறீர்கள் எனில் 182 00:09:15,556 --> 00:09:19,685 பிறர் மோசமாகப் பேசுவார்கள் எனப் புரிந்துகொள்ளும் பக்குவத்தை அடைந்தேன். 183 00:09:20,269 --> 00:09:21,270 ஆனால் நான் கவலைப்பட்டதே இல்லை. 184 00:09:21,353 --> 00:09:25,065 நான் எப்போது ஸ்கேட்போர்டிங்கை மேம்படுத்தவே விரும்புகிறேன். 185 00:09:25,691 --> 00:09:27,901 வெல்வது முக்கியம்தான், 186 00:09:27,985 --> 00:09:31,905 ஆனால் ஸ்கேட்போர்டிங் என்பது வெல்வதை விட பெரிய விஷயம். 187 00:09:33,448 --> 00:09:35,784 என்னிடம் நிறைய பெற்றோர்கள் வந்து 188 00:09:35,868 --> 00:09:40,163 என் வீடியோக்களைப் பார்த்துதான் தங்கள் மகள்கள் ஸ்கேட் செய்வதாகக் கூறினர். 189 00:09:40,247 --> 00:09:42,124 அதைக் கேட்கும்போது சிறப்பாக உணர்ந்தேன், தெரியுமா? 190 00:09:43,500 --> 00:09:48,463 நான் ஸ்கேட் செய்யத் தொடங்கியபோது எனக்கு இல்லாத ஒரு நபராக இருக்க முயல்கிறேன். 191 00:09:48,547 --> 00:09:51,675 ஏனெனில் என் அப்பாவிடம் பெண்களால் ஸ்கேட் செய்ய முடியும் எனக் காட்ட விரும்பினேன், 192 00:09:51,758 --> 00:09:53,468 பெண்களால் புரொஃபஷனலாக இருக்க முடியும் என. 193 00:09:53,969 --> 00:09:55,679 எனக்கு அப்படி ஒருவர் இல்லை. 194 00:09:55,762 --> 00:10:00,267 அதனால் இன்று இளம் தலைமுறையினருக்கு அந்த நபராக இருக்க விரும்புகிறேன், புரிகிறதா? 195 00:10:00,350 --> 00:10:03,478 நீங்கள் விரும்பும் எதையும் செய்யலாம் என அவர்களுக்குக் காட்ட விரும்புகிறேன். 196 00:10:03,562 --> 00:10:05,606 உங்கள் ஆர்வத்தை நீங்கள் பின்தொடர வேண்டும். 197 00:10:05,689 --> 00:10:06,982 உங்கள் அனைவராலும் அதைச் செய்ய முடியும். 198 00:10:39,473 --> 00:10:41,475 நரேஷ் குமார் ராமலிங்கம்