1 00:00:05,590 --> 00:00:07,008 எல்லோரிடமும் சொல்ல ஒரு கதை 2 00:00:07,008 --> 00:00:10,804 இருக்கிறது என்பது ஒரு உண்மையான எழுத்தாளருக்குத் தெரியும் என்று ஓல் கோலி எப்போதும் சொல்வார். 3 00:00:11,388 --> 00:00:13,056 அந்த பொருள் எங்கே போனது? 4 00:00:13,765 --> 00:00:17,310 என் உளவு பாதையில் நான் கண்டுபிடிப்பதன் அடிப்படையில், அதை ஏற்றுக்கொள்வேன். 5 00:00:17,310 --> 00:00:19,437 எல்லோரிடமும் சொல்ல ஒரு கதை இருக்கிறது. 6 00:00:20,522 --> 00:00:22,857 ராபின்சன்களைத் தவிர எல்லோருக்கும். 7 00:00:22,857 --> 00:00:27,529 சலிப்பூட்டும் இவர்களோடு இருப்பதை காட்டிலும், தொப்புளை சுத்தம் செய்வதே உற்சாகமூட்டுகிறது. 8 00:00:27,529 --> 00:00:30,323 இன்று என்ன வாங்கினாய், திருமதி. ராபின்சன்? 9 00:00:30,323 --> 00:00:32,576 ஒரு இறகு துடைப்பான், திரு. ராபின்சன். 10 00:00:33,493 --> 00:00:34,703 துடைப்பதற்கா? 11 00:00:34,703 --> 00:00:37,956 ஏன், ஆம். துடைப்பதற்குத்தான், திரு. ராபின்சன். 12 00:00:38,790 --> 00:00:40,875 பெயின்ட் காய்வதைப் பார்ப்பது போல. 13 00:00:41,585 --> 00:00:43,420 அவர்கள் ரஷ்ய உளவாளிகளா அல்லது 14 00:00:43,420 --> 00:00:46,673 வேற்றுகிரகவாசிகளா என்பதை முடிவில் கண்டுபிடிப்பேன் என்று தெரியும். 15 00:00:47,299 --> 00:00:50,468 பிறகு எனக்கு "வாய்ப்புகள்" இல்லாமல் போனது. 16 00:00:52,554 --> 00:00:54,389 அவர்கள் கிளம்புகிறார்களா? 17 00:00:56,808 --> 00:00:59,686 நான் அவர்களது கதையைக் கண்டுபிடிக்கும் முன்பு ராபின்சன்கள் கிளம்பினால், 18 00:00:59,686 --> 00:01:02,355 நான் எப்படி என்னை ஒரு உண்மையான எழுத்தாளர் என்று சொல்லிக்கொள்வது? 19 00:01:02,355 --> 00:01:05,358 ஹேரியட், சீக்கிரம். பார்ட்டிக்கு தாமதமாகிறது. 20 00:01:05,942 --> 00:01:10,155 ராபின்சன்கள் தங்கள் சலிப்பை ஒரு மிருகத்தனமான திரையாக பயன்படுத்தினார்களா? 21 00:01:10,155 --> 00:01:12,490 அதைக் கண்டுபிடிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. 22 00:01:13,199 --> 00:01:16,328 எனக்கென்று ஒரு மோசமான மாறுவேடம் வேண்டும். 23 00:01:16,912 --> 00:01:17,913 கிடைத்துவிட்டது. 24 00:01:18,914 --> 00:01:21,583 {\an8}நான் விரும்புகிறேன் நீ விரும்புகிறாய் 25 00:01:21,583 --> 00:01:23,335 நாம் விரும்புகிறோம் 26 00:01:24,461 --> 00:01:26,922 நான் எப்படியிருக்க விரும்புகிறேனோ அப்படியிருப்பேன் 27 00:01:26,922 --> 00:01:28,590 என் உரிமை 28 00:01:29,090 --> 00:01:32,010 முடியாது, என் தலைமுடியை நான் வெட்டிக்கொள்ளமாட்டேன் 29 00:01:32,010 --> 00:01:34,471 நான் எதை வேண்டுமானாலும் அணிவேன் 30 00:01:34,471 --> 00:01:40,602 நான் நானாக இருப்பதையே விரும்புகிறேன் 31 00:01:40,602 --> 00:01:43,230 நான் விரும்புவதில்லை நீ விரும்புவதில்லை 32 00:01:43,230 --> 00:01:46,191 நாம் என்ன செய்ய வேண்டும் என்று மற்றவர்கள் சொல்வதை நாம் விரும்புவதில்லை 33 00:01:46,191 --> 00:01:47,275 {\an8}"இது என் பார்ட்டி, தேவைப்பட்டால் உளவு பார்ப்பேன்" 34 00:01:49,319 --> 00:01:50,403 {\an8}லூயிஸ் ஃபிட்ஸ்ஹியூ புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 35 00:01:52,530 --> 00:01:54,074 இது வெல்ஷ் குடும்பம் அல்லவா. 36 00:01:54,074 --> 00:01:55,158 உள்ளே வாருங்கள். 37 00:01:56,993 --> 00:01:58,245 ஹேரியட்? 38 00:01:58,828 --> 00:02:00,247 பார்ட்டி ஆடையிலா? 39 00:02:00,247 --> 00:02:02,582 என்ன அதிசயம்? 40 00:02:02,582 --> 00:02:05,335 பொதுவாக இந்த உடையில் என்னைப் பார்க்க முடியாது. 41 00:02:05,335 --> 00:02:07,379 ஆனால் நீங்கள் ஒழுக்கமானவர், உளவாளி அல்ல என்று 42 00:02:07,379 --> 00:02:10,298 மக்கள் நினைத்தால் உண்மையைச் சொல்ல வாய்ப்புகள் அதிகம். 43 00:02:10,298 --> 00:02:11,967 பிங்கி, வெல்ஷ்களின் கோட்களை வாங்கு, 44 00:02:11,967 --> 00:02:14,052 நீ ஹேரியட்டை குழந்தைகளின் பார்ட்டிக்கு அழைத்துப் போ. 45 00:02:14,052 --> 00:02:15,136 மகிழ்ச்சியாக இருங்கள். 46 00:02:15,136 --> 00:02:18,348 இல்லை. கொடூரமான குழந்தைகளின் பார்ட்டி. 47 00:02:18,348 --> 00:02:22,185 உளவு பார்ப்பதில் தோல்விக்கு உத்தரவாதம் அளிக்கும் ஒரு பழைய வழக்கம் இது. 48 00:02:22,936 --> 00:02:26,147 நீ வந்துவிட்டதால், பார்ட்டியைத் தொடங்கலாம். 49 00:02:26,731 --> 00:02:30,610 ராபின்சன்களின் இரகசிய அடையாளங்களின் பட்டியலை தயார் செய்தேன். 50 00:02:30,610 --> 00:02:32,404 சர்வதேச கலைப் பொருள் திருடர்கள். 51 00:02:33,989 --> 00:02:34,948 காலப்பயணிகள். 52 00:02:36,533 --> 00:02:37,576 வேற்றுகிரகவாசிகளா? 53 00:02:40,120 --> 00:02:44,040 அவர்களது கதை எதுவாக இருந்தாலும், அதைக் கண்டுபிடிக்க இரண்டு மணிநேரம்தான் இருக்கிறது. 54 00:02:44,624 --> 00:02:47,544 ராபின்சன்கள் வந்துவிட்டார்களா? 55 00:02:47,544 --> 00:02:49,754 ஆம். நான் அவர்களது கோட்டைத் தூக்கி வர வேண்டும். 56 00:02:50,338 --> 00:02:52,299 திருமதி. வைட்ஹெட் ஒவ்வொரு ஆண்டும் அவர்களை அழைப்பர். 57 00:02:52,299 --> 00:02:54,134 அவர்களுக்காக பரிதாபப்படுகிறார் என நினைக்கிறேன். 58 00:02:54,134 --> 00:02:57,888 உனக்கு ஒன்றை காண்பிக்க காத்திருக்கிறேன். அது நீடோ-மஸ்கிடோஸ். 59 00:02:57,888 --> 00:02:59,598 "நீடோ-மஸ்கிடோஸா"? 60 00:02:59,598 --> 00:03:01,641 ஆம், நீடோ-மஸ்கிடோஸ். 61 00:03:01,641 --> 00:03:03,059 கண்டிப்பாக, ஏன் கூடாது? 62 00:03:03,560 --> 00:03:05,020 எனது பணியின் முதல் படி: 63 00:03:05,020 --> 00:03:08,940 ஒரு பழைய தந்திரத்தைப் பயன்படுத்தி பிங்கி வைட்ஹெட்டிடமிருந்து தப்பிக்க வேண்டும். 64 00:03:09,900 --> 00:03:11,359 பிங்கி, கழிவறை எங்கிருக்கிறது? 65 00:03:11,359 --> 00:03:14,905 ஹாலை தாண்டி இடது பக்கம். நான் இங்கேயே காத்திருகிறேன். 66 00:03:23,830 --> 00:03:25,749 பந்துகளின் மீது கால் வைத்துவிட்டாள். 67 00:03:26,917 --> 00:03:28,293 உன்னால் நம்ப முடிகிறதா? 68 00:03:30,128 --> 00:03:32,005 நான் ஒருபோதும்... 69 00:03:35,050 --> 00:03:39,262 பெரியவர்களின் பார்ட்டியில் குழந்தையாக இருப்பது உளவு பார்ப்பதற்கு ஏதுவானது. 70 00:03:39,262 --> 00:03:43,725 குழந்தைகளுக்குக் கேட்காது என்று நினைத்துக்கொண்டு பெரியவர்கள் எல்லா விஷயங்களையும் பேசுவார்கள். 71 00:03:43,725 --> 00:03:45,101 மார்டிமர் பற்றி கேள்விப்பட்டாயா? 72 00:03:45,101 --> 00:03:48,188 இருபது வருடங்களாக அவர் தலை முழுக்க முடி இருந்ததாக அவரது மனைவி நினைத்தார். 73 00:03:48,188 --> 00:03:51,858 ஒரு பறவை அவரது வழுக்கை தலையில் இருந்த விக்கைத் தூக்கிச் சென்றுவிட்டது. 74 00:03:51,858 --> 00:03:56,071 பறவைகளை போலி முடிகள் ஈர்க்கின்றனவா அல்லது எல்லா முடிகளும் ஈர்க்குமா? 75 00:03:56,071 --> 00:03:59,366 எப்படி இருந்தாலும், வெளியே போகும்போது அதிகம் தொப்பிகள் அணிய வேண்டும். 76 00:04:00,033 --> 00:04:03,495 பல வகையான பெரியவர்களை அவர்களின் இயல்பான சூழல்களில் பார்ப்பது 77 00:04:03,495 --> 00:04:06,248 ஒரு இயற்கை ஆவணப்படத்தைப் பார்ப்பதைப் போன்றது. 78 00:04:07,332 --> 00:04:12,963 நாம் மிகவும் அமைதியாக இருந்தால், அரிதான கண்ணாடி அணிந்த வனவிலங்குகளைக் காணலாம். 79 00:04:12,963 --> 00:04:15,507 பங்குகளை வாங்குங்கள்! 80 00:04:15,507 --> 00:04:18,425 உங்கள் இடது பக்கத்தில், திரு. விதர்ஸை பார்க்கலாம். 81 00:04:18,425 --> 00:04:22,597 கூச்ச சுபாவமுள்ளவர், வீட்டை விட்டு வெளியேறுவது எப்படி என்பதை சமீபத்தில் தான் கற்றுக்கொண்டார். 82 00:04:22,597 --> 00:04:27,269 வலது புறம், வஞ்சகரானா திருமதி. பிளம்பர் ஒரு எளியவரை ஓரம் கட்டுவதைப் பார்க்கலாம். 83 00:04:27,269 --> 00:04:31,940 உங்கள் நாய்க்கு ஆடை அணிவிப்பதைப் பற்றி என்றைக்காவது நினைத்ததுண்டா? 84 00:04:32,440 --> 00:04:34,067 அவை மிகவும் பிரசித்திப்பெற்றது. 85 00:04:34,067 --> 00:04:36,111 தன் உள்ளுணர்வை நம்பி, 86 00:04:36,111 --> 00:04:39,948 அரிதான சிகையலங்காரம் கொண்ட ஆடம்பரமான பெண் தப்பித்துக்கொண்டார். 87 00:04:39,948 --> 00:04:41,741 அதை "வாய்ப்புள்ளது" என்று எடுத்துக்கொள்ளட்டுமா? 88 00:04:42,325 --> 00:04:44,160 ஆனால் ராபின்சன்கள் எங்கே? 89 00:04:45,245 --> 00:04:48,331 அவர்கள் பார்ட்டியில் எங்கோ பதுங்கி இருப்பார்கள் என்று எனக்குத் தெரியும். 90 00:04:49,583 --> 00:04:52,544 கவலைப்படாதே, கேரோல். எல்லோருக்கும் உன் சூரை மீன் கறியுணவு பிடிக்கும். 91 00:04:52,544 --> 00:04:54,838 அதாவது, இது ஒன்றும் போட்டியல்ல. 92 00:04:54,838 --> 00:04:57,757 நியூயார்க் பகுதியில் சிறந்த கறியுணவு சமைப்பவர்கள் யார் என்று 93 00:04:57,757 --> 00:05:01,177 பல ஆண்டுகளாக என் அம்மாவும் திருமதி. வைட்ஹெட்டும் போட்டிபோடுகிறார்கள். 94 00:05:02,345 --> 00:05:05,891 "இது சுவையானது" என கத்தும் சீமோர் கேஸ்கோவிடம் கவனமாக இரு. 95 00:05:05,891 --> 00:05:08,810 நகைச்சுவை செய்பவரா? உங்கள் பல்சுவை நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர் தானே? 96 00:05:08,810 --> 00:05:11,313 ஆம், அவர் எப்போதாவது ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டால். 97 00:05:11,313 --> 00:05:13,523 உணவோடு கொஞ்சம் நட்பாகவும் பேசினால் 98 00:05:13,523 --> 00:05:16,526 ஒப்பந்தத்தில் அவரது கையொப்பத்தை வாங்கிவிடுவேன். 99 00:05:18,320 --> 00:05:20,447 சுவையாக இருப்பது போல தெரிகிறது. 100 00:05:20,989 --> 00:05:27,120 எனது வான்கோழி கறியுணவுக்கு பக்கத்தில் இதை வைக்கிறேன். 101 00:05:27,120 --> 00:05:32,709 சுவையானது மற்றும் சுமாரானது இரண்டிலும் ஒவ்வொன்று இருப்பது மிகவும் நன்றாக இருக்கிறது. 102 00:05:34,711 --> 00:05:38,465 அவளது கறியுணவு இருக்கும் போது யார் என் கறியுணவை சாப்பிடப் போகிறார்கள்? 103 00:05:40,800 --> 00:05:44,262 நான் ஒரு இயக்குநர், எனவே நான் ஏன் உன் கறியுணவுக்கு மக்களை திருப்பக்கூடாது? 104 00:05:44,262 --> 00:05:46,723 லைட்ஸ், கேமரா, ஆக்ஷன், அன்பே. 105 00:05:48,308 --> 00:05:51,102 சரி, கேஸ்கோ. எங்கே இருக்கிறாய்? 106 00:05:53,772 --> 00:05:56,399 சரி, ராபின்சன்களே. எங்கே இருக்கிறீர்கள்? 107 00:05:59,402 --> 00:06:02,781 திருமதி. ராபின்சன், நாம் பார்ட்டியில் இருக்கிறோம். 108 00:06:03,740 --> 00:06:07,327 நிச்சயமாக, திரு. ராபின்சன். பார்ட்டியில். 109 00:06:11,206 --> 00:06:14,334 ஹலோ. உங்களைப் பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது. 110 00:06:25,554 --> 00:06:28,265 எங்களுடன் கை மொழிச் சொல் விளையாட்டு விளையாட வருகிறீர்களா? 111 00:06:29,224 --> 00:06:31,351 மன்னித்துவிடுங்கள். பிறகு பார்க்கலாம். 112 00:06:33,353 --> 00:06:36,481 பெரியவர்கள் பேச்சில், "பிறகு" என்றால் முடியாதென்று அர்த்தம். 113 00:06:37,315 --> 00:06:40,110 பார்ட்டி நடக்கிறது. இசை எங்கே? 114 00:06:40,110 --> 00:06:42,904 இசையை சத்தமாக ஒலிக்கவிடு, நான் காங்கா நடனத்தைத் தொடங்குகிறேன். 115 00:06:45,574 --> 00:06:47,409 அவர்கள் எங்கே போனார்கள்? 116 00:06:50,954 --> 00:06:52,497 பார்த்துப் போ, சிறுமியே. 117 00:06:53,623 --> 00:06:55,250 என்னை மன்னித்துவிடுங்கள். 118 00:06:58,003 --> 00:06:59,462 என் புதிய ஆடை பிடித்திருக்கிறதா? 119 00:07:01,047 --> 00:07:02,757 அழகாக இருக்கிறது. 120 00:07:03,675 --> 00:07:05,343 மிக்க நன்றி. 121 00:07:05,343 --> 00:07:09,222 தொந்தரவு செய்ய விரும்பவில்லை, ஆனால் திரு. மற்றும் திருமதி. ராபின்சனை பார்த்தீர்களா? 122 00:07:10,098 --> 00:07:13,518 மன்னித்துவிடு, செல்லம். பார்த்தால், உன்னிடம் சொல்கிறேன். 123 00:07:13,518 --> 00:07:15,437 நீங்கள் மிகவும் இனிமையானவர். 124 00:07:21,651 --> 00:07:22,986 மன்னித்துவிடு. 125 00:07:22,986 --> 00:07:24,821 ராபின்சன்களின் இரகசிய அடையாளத்தின் பட்டியல். 126 00:07:26,573 --> 00:07:27,782 இங்கே இருக்கு. 127 00:07:28,366 --> 00:07:32,203 கழிவறைக்குப் போகும் வழியில் தொலைந்துவிட்டாயா? எனக்கு அடிக்கடி நடக்கும். 128 00:08:00,023 --> 00:08:02,859 ட்ரூமன், வேண்டாம்! உணவு மேஜை கூடாது. 129 00:08:05,153 --> 00:08:06,154 திரும்ப வந்துவிடு! 130 00:08:07,447 --> 00:08:10,659 ட்ரூமன். நீ சிக்கலில் மாட்டப்போகிறாய். 131 00:08:21,336 --> 00:08:23,046 இது நல்லதுக்கு அல்ல. 132 00:08:23,046 --> 00:08:27,050 திரு. ராபின்சன் இரகசிய பட்டியலைப் பார்த்தால், அது என்னுடையதென்று தெரிந்துவிடும், 133 00:08:27,050 --> 00:08:31,054 ஏனென்றால் அந்த காகிதத்தில் "ஹேரியட் எம். வெல்ஷ் மேஜையிலிருந்து" என்று போட்டிருக்கிறது. 134 00:08:31,805 --> 00:08:33,181 இங்கே இருக்கிறாயா. 135 00:08:33,181 --> 00:08:35,600 உனக்கு குழந்தைகளின் பார்ட்டியில் சந்தோஷம் கிடைக்கும்போது 136 00:08:35,600 --> 00:08:39,020 நீ ஏன் பெரியவர்களின் சலிப்பான பார்ட்டியில் நேரத்தைப் போக்க விரும்புகிறாய்? 137 00:08:41,690 --> 00:08:44,651 நீங்கள் எப்போதாவது குழந்தைகளின் அறையில் சிக்கியிருந்தால், 138 00:08:44,651 --> 00:08:46,444 அப்போதுதான் இது பெரிய குழந்தைகள்... 139 00:08:48,405 --> 00:08:51,866 சில விஷயங்களை மட்டுமே செய்ய கட்டுப்படுத்தப்பட்ட ஒரு வெற்று நிலம் என்றும்... 140 00:08:53,034 --> 00:08:55,662 நீ என் டிவி என்னை மிஸ் செய்வதாக நினைக்கிறாயா? 141 00:08:56,246 --> 00:09:00,208 ...சிறு குழந்தைகள் தான் இந்த வினோதமான, உலகின் உண்மையான ஆட்சியாளர்கள் என்று உங்களுக்குத் தெரியும். 142 00:09:02,043 --> 00:09:05,714 முரட்டுத்தனமாக சாப்பிடும் வெறி போன்றது. 143 00:09:11,136 --> 00:09:12,888 என்னிடம் கொடு. 144 00:09:20,395 --> 00:09:22,480 ஃபுரூட்டி பன்ச்? அடச்சே! 145 00:09:23,064 --> 00:09:24,107 நான் துடைக்கிறேன். 146 00:09:26,651 --> 00:09:28,194 நான் இங்கிருந்து வெளியேற வேண்டும். 147 00:09:29,112 --> 00:09:31,323 ஹாய், ஹேரியட். உன் ஆடை எனக்குப் பிடித்திருக்கிறது. 148 00:09:31,907 --> 00:09:33,700 எனக்கு இந்த ஆடை பிடிக்கவில்லை. 149 00:09:37,954 --> 00:09:40,123 ஹாம் ரேடியோ எப்படி செயல்படுகிறது? 150 00:09:40,123 --> 00:09:43,293 வேற்றுகிரகவாசிகளுடன் இன்னும் தொடர்பு கிடைக்கவில்லை, 151 00:09:43,293 --> 00:09:48,882 ஆனால் "ஹலோ" என்பதற்கான துருக்கிய மொழி வார்த்தையைக் கற்றுக்கொண்டேன். அது மெர்ஹாபா. 152 00:09:48,882 --> 00:09:50,884 சரி. 153 00:09:50,884 --> 00:09:52,385 நான் போக வேண்டும், பிங்கி. 154 00:09:52,385 --> 00:09:54,638 நீ என் ஹாம் ரேடியோவை முயற்சிக்க விரும்பவில்லையா? 155 00:09:54,638 --> 00:09:57,015 அதை நானே என் கையால் செய்தேன். 156 00:09:59,226 --> 00:10:00,310 பிறகு பார்க்கிறேன். 157 00:10:00,936 --> 00:10:02,729 அட, வந்து முயற்சித்துப் பார். 158 00:10:02,729 --> 00:10:06,191 நீயும் நானும் ஒரே மாதிரி சிந்திப்பதால் சொல்கிறேன். 159 00:10:06,691 --> 00:10:10,695 உண்மையைச் சொன்னால், பிங்கியும் நானும் என்றைக்கும் ஒரே மாதிரி சிந்தித்தது இல்லை. 160 00:10:10,695 --> 00:10:14,491 அவன் ஒரு நல்ல பையன் அவ்வளவுதான், எங்களுக்குள் பொதுவானது எதுவுமில்லை. 161 00:10:17,285 --> 00:10:18,370 ஜொனாதன், வேண்டாம். 162 00:10:24,042 --> 00:10:26,127 ஒரு சிறிய சீரற்ற மின்னழுத்தமும் ஹாம் ரேடியோவை பாழாக்கிவிடும். 163 00:10:27,212 --> 00:10:30,715 பிங்கியின் கவனம் சிதறியபோது, நான் தப்பிக்க வேண்டிய நேரம் வந்தது. 164 00:11:11,631 --> 00:11:13,717 அடச்சே! நான் துடைக்கிறேன். 165 00:11:18,263 --> 00:11:22,517 என்னைக் கேட்டால், இந்த கறியுணவு உன் பெருமையைப் பாடுகிறது. 166 00:11:23,935 --> 00:11:25,103 மோசம் ட்ரூமன். 167 00:11:25,103 --> 00:11:26,730 நான் சைவம். 168 00:11:27,480 --> 00:11:31,234 இது சீமோர் "வேடிக்கையான" கேஸ்கோ தானே. 169 00:11:31,234 --> 00:11:32,652 நீங்கள் வந்தது மகிழ்ச்சியளிக்கிறது. 170 00:11:33,153 --> 00:11:35,947 சீமோர், அதைச் சொல்கிறீர்களா. 171 00:11:36,948 --> 00:11:39,534 வேடிக்கையானவன்! 172 00:11:43,079 --> 00:11:44,247 சீமோர்? 173 00:11:44,247 --> 00:11:45,916 வெல்ஷி! எப்படி இருக்கிறாய்? 174 00:11:45,916 --> 00:11:49,878 நீங்கள் வரலாம் என்று கேள்விப்பட்டேன். அதனால்தான் ஒப்பந்தத்தைக் கொண்டு வந்தேன். 175 00:11:49,878 --> 00:11:54,049 உங்கள் கையொப்பம் கிடைத்தவுடன் நாங்கள் நிகழ்ச்சிக்கு தயார் செய்துவிடுவோம். 176 00:11:54,633 --> 00:11:56,259 கொஞ்சம் பொறு. அவசரப்படாதே, வெல்ஷி. 177 00:11:56,259 --> 00:11:59,179 இதில் எது வான்கோழி, எது சூரை மீன் என்று சொல்? 178 00:11:59,179 --> 00:12:00,513 அதுதான் வான்கோழி. 179 00:12:04,559 --> 00:12:08,271 அதை வான்கோழி என்றேனா? இதைத்தான் வான்கோழி என்றேன். 180 00:12:11,608 --> 00:12:13,235 தப்பித்துவிட்டேன். எனக்கு சூரை மீன் ஒவ்வாமை இருக்கிறது. 181 00:12:13,235 --> 00:12:15,737 ஒரு வாய் சாப்பிட்டால் என் வயிறு கெட்டுவிடும், 182 00:12:15,737 --> 00:12:17,197 உனக்கே புரியும். 183 00:12:18,073 --> 00:12:19,616 அப்படித்தான் நினைக்கிறேன். 184 00:12:20,116 --> 00:12:23,828 ஹேய், பாபி பி. வயதானவரே. நலமா? 185 00:12:25,497 --> 00:12:27,916 இது மிகவும் சுவையாக இருக்கிறது! 186 00:12:32,504 --> 00:12:36,925 இது முன்மாதிரிதான், ஆனால் இதுவரை, விளக்குகளை கட்டுப்படுத்த முடியும்... 187 00:12:38,885 --> 00:12:40,679 அதோடு வானொலியையும். 188 00:12:43,223 --> 00:12:46,768 காங்கா, காங்கா, காங்கா காங்கா, காங்கா, காங்கா 189 00:12:46,768 --> 00:12:48,895 ஜேனெட், எனக்கு காங்கா வேண்டாம். 190 00:12:50,021 --> 00:12:51,273 ஒருவேளை தேவைப்படலாம். 191 00:12:51,273 --> 00:12:54,901 பிங்கி, இதில் ஏதாவது வரவேற்பறையில் ஒலிக்கும் இசையை அதிகரிக்குமா? 192 00:12:54,901 --> 00:12:58,196 ஆம். ஆனால் கவனமாக இருக்க வேண்டும், ஏனென்றால்... 193 00:13:00,740 --> 00:13:02,075 உரத்து ஒலிக்கிறது! 194 00:13:04,828 --> 00:13:06,329 அப்படித்தான்! 195 00:13:08,415 --> 00:13:10,208 காங்கா நடன வரிசை! 196 00:13:13,461 --> 00:13:16,256 காங்கா, காங்கா, காங்கா காங்கா, காங்கா, காங்கா 197 00:13:16,923 --> 00:13:19,050 ஹேய், குழந்தைகளே. யாருக்கு காங்கா பிடிக்கும்? 198 00:13:22,846 --> 00:13:24,556 இல்லை, குழந்தைகளே! உங்கள் அறையில் இருங்கள்! 199 00:13:25,557 --> 00:13:27,767 வாருங்கள், கறியுணவு எடுத்துக் கொள்ளுங்கள். 200 00:13:27,767 --> 00:13:31,187 இது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் "வாய்ப்பு". 201 00:13:31,187 --> 00:13:34,024 காங்கா, காங்கா, காங்கா காங்கா, காங்கா, காங்கா 202 00:13:34,024 --> 00:13:35,108 நில்லுங்கள்! 203 00:13:35,609 --> 00:13:39,237 காங்கா, காங்கா, காங்கா காங்கா, காங்கா, காங்கா 204 00:13:40,488 --> 00:13:43,199 இதோ வந்துவிடுவேன். நான் சீமோரிடம் பேச வேண்டும். 205 00:13:45,452 --> 00:13:47,203 ஹேய், சீமோர். 206 00:13:47,203 --> 00:13:50,624 எனவே, அந்த ஒப்பந்தத்தில் நீங்கள் கையொப்பமிட நான் என்ன செய்ய வேண்டும்? 207 00:13:50,624 --> 00:13:52,292 நான் சொல்கிறேன், வெல்ஷி. 208 00:13:52,292 --> 00:13:54,711 உன் மனைவி ஒரு நாள் கறியுணவு சமைத்துக் கொடுத்தால், 209 00:13:54,711 --> 00:13:56,630 இப்போதே கையொப்பமிடுவேன். 210 00:13:56,630 --> 00:13:57,714 ஒப்புக்கொள்கிறேன். 211 00:13:59,716 --> 00:14:03,470 எனது சூரை மீன் கறியுணவை யாராவது பாராட்டினீர்களா? 212 00:14:04,179 --> 00:14:05,263 சூரை மீனா? 213 00:14:06,514 --> 00:14:08,099 புதிய காங்கா நடன வரிசை! 214 00:14:10,018 --> 00:14:11,770 காங்கா, காங்கா, காங்கா காங்கா, காங்கா, காங்கா 215 00:14:11,770 --> 00:14:13,730 இது பெரியவர்களுக்கான விருந்து! 216 00:14:22,447 --> 00:14:27,160 காங்கா, காங்கா, காங்கா டா, டா, டா, டா, டா, டா 217 00:14:27,160 --> 00:14:31,081 டா, டா, டா, டா, டா, டா டா, டா, டா, டா, டா, டா 218 00:14:31,081 --> 00:14:33,291 காங்கா பாடுவோம்! 219 00:14:34,459 --> 00:14:35,460 பிங்கி! 220 00:14:35,460 --> 00:14:39,047 இந்த காங்கா நடனத்தால் எனக்கு வியர்க்கிறது, திருமதி. ராபின்சன். 221 00:14:39,548 --> 00:14:40,882 உங்கள் கோட்டை கொடுக்கிறீர்களா? 222 00:14:41,675 --> 00:14:42,717 நன்றி. 223 00:14:44,928 --> 00:14:46,555 நான் உதவுகிறேன், பிங்கி. 224 00:14:49,266 --> 00:14:50,517 ஆம்! 225 00:14:51,685 --> 00:14:55,647 காங்கா, காங்கா, காங்கா காங்கா, காங்கா, காங்கா 226 00:15:00,610 --> 00:15:03,071 ஹேரியட், கோட் அறைக்கென்று விதிமுறை உள்ளது. 227 00:15:03,071 --> 00:15:06,616 நீ மற்றவர்களின் பாக்கெட்டுகளில் தேடக் கூடாது. 228 00:15:06,616 --> 00:15:08,159 இது ஒரு அவசரநிலை. 229 00:15:08,952 --> 00:15:09,953 கிடைத்துவிட்டது. 230 00:15:09,953 --> 00:15:12,789 இதுதான் கோட் அறையா, திருமதி. ராபின்சன்? 231 00:15:12,789 --> 00:15:14,916 ஆம், திரு. ராபின்சன். 232 00:15:15,709 --> 00:15:18,253 ஏன் ஆடைகளில் பாக்கெட் இல்லை? 233 00:15:18,253 --> 00:15:20,922 அதை யாராவது எனக்கு விளக்க முடியுமா? 234 00:15:21,715 --> 00:15:24,384 அது என் கோட்டா, திருமதி. ராபின்சன்? 235 00:15:24,384 --> 00:15:27,137 உங்கள் கோட்தான், திரு. ராபின்சன். 236 00:15:30,891 --> 00:15:33,560 திருமதி. ராபின்சன், இப்போதே கிளம்ப வேண்டும் என்று நினைக்கிறேன். 237 00:15:33,560 --> 00:15:35,770 ஒப்புக்கொள்கிறேன், திரு. ராபின்சன். 238 00:15:36,688 --> 00:15:39,900 என்ன? என்னோடும் என் நண்பனோடும் கை மொழிச் சொல் விளையாட்டு 239 00:15:39,900 --> 00:15:43,236 விளையாடாமல், வெளியேறுவதைப் பற்றி எப்படி நினைக்க முடியும்? 240 00:15:47,824 --> 00:15:49,075 இறுதியாக. 241 00:15:49,576 --> 00:15:52,913 ராபின்சன்கள் உண்மையில் யார் என்பதை கண்டறியதான் பார்ட்டிக்கு வந்தேன். 242 00:15:52,913 --> 00:15:58,376 கை மொழிச் சொல் விளையாட்டு என்றாலும், ஒரு நல்ல உளவாளி ஒருபோதும் பின்வாங்கமாட்டார். 243 00:16:02,797 --> 00:16:04,341 ஒரு நிமிடம் கொடுக்க முடியுமா? 244 00:16:04,341 --> 00:16:06,468 பிங்கி, நீ பின்னாடி வருகிறாயா... 245 00:16:12,891 --> 00:16:14,226 எனவே, நமது பணி என்ன? 246 00:16:14,226 --> 00:16:17,229 ராபின்சன்கள் எவ்வளவு சலிப்பானவர்கள் என்பதை கவனித்திருக்கிறாயா? 247 00:16:17,229 --> 00:16:19,022 லிஃப்டில் ஒலிக்கும் இசை போல. 248 00:16:20,148 --> 00:16:21,733 அதைத்தான் நானும் சொல்வேன். 249 00:16:21,733 --> 00:16:25,278 நிச்சயமாக நீ சொல்வாய். ஒரே மாதிரி சிந்திக்கிறோம். 250 00:16:25,862 --> 00:16:31,159 சரி. அவர்களின் இரகசிய அடையாளங்களை மறைக்க அது ஒரு கட்டுக்கதை என நினைக்கிறேன். 251 00:16:31,743 --> 00:16:32,869 இவற்றைப் பார். 252 00:16:33,411 --> 00:16:34,871 "விதைப்பை மக்களா"? 253 00:16:34,871 --> 00:16:39,501 சாதாரண மனிதர்கள் ராட்சத விதைப்பைகளில் வளர்க்கப்பட்டு ஏலியன்களால் மாற்றப்படும். 254 00:16:40,252 --> 00:16:41,753 விதைப்பை மக்கள். 255 00:16:41,753 --> 00:16:43,046 பிங்கி, கீழே குனி. 256 00:16:43,547 --> 00:16:44,714 என்னிடம் ஒரு திட்டம் உள்ளது. 257 00:16:44,714 --> 00:16:48,760 இந்த வார்த்தைகளை அவர்களிடம் கொடுத்து கை மொழிச் சொல் விளையாட்டு விளையாட வைப்போம். 258 00:16:48,760 --> 00:16:52,722 அவர்கள் நடுங்குவதையோ மரம் போல அசையாமல் நிற்பதையோ பார்க்கும் நிமிடம்... 259 00:16:52,722 --> 00:16:55,058 அவர்கள் உண்மையில் யார் என்பதை நாம் அறிவோம். 260 00:16:55,058 --> 00:16:57,435 இருவரும் அங்கு தயாரா? 261 00:16:57,435 --> 00:16:58,562 தயார். 262 00:16:59,563 --> 00:17:00,981 இதோ உங்களுக்கான வார்த்தைகள். 263 00:17:00,981 --> 00:17:05,526 உங்களுக்கான வார்த்தைகள் இதோ. நீங்கள் தொடங்குங்கள். 264 00:17:09,281 --> 00:17:10,364 இரண்டு வார்த்தைகள். 265 00:17:10,907 --> 00:17:12,449 முதல் வார்த்தை. 266 00:17:13,785 --> 00:17:18,039 முணுமுணுப்பு. கிசுகிசு. இரகசியம். 267 00:17:18,872 --> 00:17:20,208 இரண்டு வார்த்தைகள். 268 00:17:21,418 --> 00:17:23,128 இரகசிய உளவாளி. 269 00:17:23,128 --> 00:17:24,880 அபாரம், திருமதி. ராபின்சன். 270 00:17:26,214 --> 00:17:27,966 வித்தியாசமாக ஏதாவது தெரிகிறதா? 271 00:17:27,966 --> 00:17:29,175 இல்லை. 272 00:17:34,347 --> 00:17:35,640 ஒரு யானை. 273 00:17:40,103 --> 00:17:41,187 விதைப்பை மக்கள். 274 00:17:45,775 --> 00:17:48,403 லோன்... தி லோன் ரேஞ்சர்! 275 00:17:48,403 --> 00:17:49,613 அருமையாக யூகித்தாய். 276 00:17:49,613 --> 00:17:51,281 அருமையாக குறிப்புகளை கொடுத்தாய். 277 00:17:58,496 --> 00:17:59,998 சர்வதேசம். 278 00:17:59,998 --> 00:18:01,082 கலை. 279 00:18:01,082 --> 00:18:02,167 கொள்ளையர்களா? 280 00:18:02,667 --> 00:18:06,004 திருடர்கள்! சர்வதேச கலைப் பொருள் திருடர்கள். 281 00:18:06,004 --> 00:18:09,216 ராபின்சன்கள் வேடிக்கையாக நடந்துகொண்டது வித்தியாசமாக இருந்தது. 282 00:18:09,799 --> 00:18:14,429 அவர்களின் உண்மை கதையை மறைத்த சலிப்பூட்டும் பாறாங்கல்லைத் அகற்றியது போல இருந்தது. 283 00:18:15,347 --> 00:18:16,806 ஏதாவது தெரிந்ததா? 284 00:18:16,806 --> 00:18:18,850 காத்திரு. அவர்கள் அடையாளம் வெளிப்படும். 285 00:18:26,691 --> 00:18:28,777 அன்புக்காக செய்யும் காரியங்கள். 286 00:18:38,036 --> 00:18:39,829 நான் பார்ப்பதை நீயும் பார்க்கிறாயா? 287 00:18:42,249 --> 00:18:44,709 ஒரு சொல், இரண்டு சொற்குறியீடு. 288 00:18:46,628 --> 00:18:48,755 கடினமாக முயற்சியுங்கள், திரு. ராபின்சன். 289 00:18:48,755 --> 00:18:53,385 இதை நாம் வென்றால், பிரபஞ்சத்தின் சாம்பியன்களாக இருப்போம். 290 00:18:54,052 --> 00:18:55,136 பிரபஞ்சமா? 291 00:18:56,596 --> 00:19:02,394 இது மிகவும் தந்திரமானது, திருமதி. ராபின்சன். 292 00:19:05,230 --> 00:19:06,481 அது என்ன வார்த்தை? 293 00:19:06,481 --> 00:19:07,774 தெரியவில்லை. 294 00:19:10,110 --> 00:19:13,029 கண்டுபிடிக்க ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. 295 00:19:17,951 --> 00:19:19,703 புதிய பிரிவைத் திறக்கிறார்களா? 296 00:19:23,248 --> 00:19:25,750 இல்லை, ட்ரூமன்! மனிதர்களின் உணவு வேண்டாம். 297 00:19:27,627 --> 00:19:29,129 கவனியுங்கள்! 298 00:19:35,260 --> 00:19:36,636 பதில்! 299 00:19:46,021 --> 00:19:47,230 கறியுணவு! 300 00:19:47,981 --> 00:19:49,065 ட்ரூமன்! 301 00:19:59,451 --> 00:20:01,119 மோசம் ட்ரூமன். மோசம். 302 00:20:01,620 --> 00:20:04,247 கறியுணவு போட்டியில் வென்றது யாரென்று யூகிக்கிறாயா? 303 00:20:04,247 --> 00:20:06,833 இது உண்மையில் ஒரு போட்டி அல்ல. 304 00:20:09,419 --> 00:20:11,338 பார்த்துக்கொள், பெக்கி வைட்ஹெட். 305 00:20:22,265 --> 00:20:24,059 சரி, இது ஒரு போட்டிதான். 306 00:20:24,059 --> 00:20:27,562 கவலைப்பட வேண்டாம், அன்பே. நீங்கள் ருசிக்க வீட்டில் நிறைய இருக்கிறது. 307 00:20:27,562 --> 00:20:28,730 இன்னுமா? 308 00:20:29,272 --> 00:20:31,775 மன்னிக்கவும், திருமதி. ராபின்சன். 309 00:20:31,775 --> 00:20:34,945 இன்று இரவு, குழந்தைகள் நீங்கள்தான் வெற்றியாளர்கள் போல தெரிகிறது. 310 00:20:34,945 --> 00:20:36,947 சிறந்த அணி வெற்றி பெற்றது. 311 00:20:36,947 --> 00:20:40,492 உங்கள் இருவருக்கும் இடையில் நல்ல புரிதல் இருக்கிறது. 312 00:20:40,492 --> 00:20:42,327 அருமையான புரிதல். 313 00:20:42,327 --> 00:20:44,913 நாங்கள் என்ன சொல்வது. அதேதான்... 314 00:20:44,913 --> 00:20:46,748 ஒரே மாதிரி யோசிப்பது. 315 00:20:47,249 --> 00:20:49,125 விளையாட்டுக்கு நன்றி. 316 00:20:49,125 --> 00:20:50,502 உங்கள் இருவரையும் சந்திக்கும் முன், 317 00:20:50,502 --> 00:20:53,547 நாங்கள் நினைத்தோம், இங்குள்ள அனைவரும்... 318 00:20:54,130 --> 00:20:55,131 சலிப்பானவர்கள் என்று. 319 00:20:56,925 --> 00:20:58,843 செல்ல வேண்டிய நேரம், திருமதி. ராபின்சன். 320 00:20:58,843 --> 00:21:01,638 நாளை நமக்கு ஒரு நீண்ட பயணம் உள்ளது. 321 00:21:01,638 --> 00:21:03,181 எங்கே போகிறீர்கள்? 322 00:21:03,181 --> 00:21:05,433 எங்கிருந்து வந்தோமோ அங்கேயே. 323 00:21:05,433 --> 00:21:08,895 குறிப்பிட்டு சொல்ல முடியாத நீண்ட தொலைவில் உள்ள இடம். 324 00:21:10,105 --> 00:21:11,648 மிக தொலைவு போல தெரிகிறது. 325 00:21:12,816 --> 00:21:15,402 இங்கிருந்து பல ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. 326 00:21:16,945 --> 00:21:19,573 உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. 327 00:21:19,573 --> 00:21:21,616 எனக்கும்தான். பத்திரமாக பயணியுங்கள். 328 00:21:22,158 --> 00:21:24,578 பார்க்கலாம். உங்களைப் போல இருக்க விரும்பவில்லை. 329 00:21:25,537 --> 00:21:26,997 நீ ஏன் எங்களைப் போல இருக்க விரும்பவில்லை? 330 00:21:26,997 --> 00:21:29,082 இது மக்கள் சொல்லும் வேடிக்கையான விஷயம்தான். 331 00:21:29,082 --> 00:21:30,917 கூடுதலாக, சந்தத்தோடு இருக்கும். 332 00:21:30,917 --> 00:21:34,713 ஆம், நீடோ-மஸ்கிடோஸ் போல. 333 00:21:38,425 --> 00:21:40,510 எனவே, இப்போது என்ன செய்ய விரும்புகிறாய்? 334 00:21:40,510 --> 00:21:44,389 நீ செய்த சூப்பர் ஹாம் ரேடியோவை எனக்கு ஏன் காட்டக் கூடாது? 335 00:21:44,389 --> 00:21:47,309 வேண்டாம். அதைவிட நல்ல யோசனை தோன்றுகிறது. 336 00:21:51,980 --> 00:21:52,981 ஹேரியட்! 337 00:21:54,190 --> 00:21:57,694 எனவே ராபின்சன்களின் இரகசியக் கதையை நான் கண்டுபிடிக்கவில்லை. 338 00:21:57,694 --> 00:21:59,946 அதனால் நான் மோசமான எழுத்தாளர் என்று அர்த்தம் இல்லை. 339 00:21:59,946 --> 00:22:04,075 எல்லாவற்றுக்கும் மேலாக, எனக்கு இன்னும் பிடித்த கதையை கண்டுபிடித்தேன். 340 00:22:04,075 --> 00:22:07,078 நான் பிங்கியை தெரிந்து கொண்ட கதை. 341 00:22:07,078 --> 00:22:09,247 இது எங்களுக்கு ஒரு தொடக்கம்தான். 342 00:22:09,247 --> 00:22:11,207 இதெல்லாம் எங்கே போய் முடியும் என்று யாருக்குத் தெரியும்? 343 00:22:11,207 --> 00:22:13,501 உனக்குப் பிடித்த வாசனை எது? 344 00:22:13,501 --> 00:22:16,004 மழை பெய்த பிறகான மண்வாசனை. 345 00:22:16,004 --> 00:22:17,088 எனக்கும்தான். 346 00:22:31,853 --> 00:22:34,731 அடுத்த ஆண்டு வரை காத்திரு, கேரோல் வெல்ஷ். 347 00:22:42,030 --> 00:22:43,073 "செவ்வாய் கிரகவாசிகளா"? 348 00:22:51,790 --> 00:22:54,459 நான் விரும்புகிறேன் நீ விரும்புகிறாய் 349 00:22:54,459 --> 00:22:56,211 நாம் விரும்புகிறோம் 350 00:22:57,337 --> 00:22:59,881 நான் விரும்புவதில்லை நீ விரும்புவதில்லை 351 00:22:59,881 --> 00:23:05,470 நாம் என்ன செய்ய வேண்டும் என்று மற்றவர்கள் சொல்வதை நாம் விரும்புவதில்லை 352 00:23:07,639 --> 00:23:13,311 அக்கம் பக்கத்தில் நல்லதைச் செய்ய நான் என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன் 353 00:23:13,311 --> 00:23:15,855 நான் நன்றாக சிரிக்கிறேன் 354 00:23:15,855 --> 00:23:19,150 நான் உண்மையைச் சொல்ல முயற்சி செய்கிறேன் 355 00:23:19,150 --> 00:23:21,736 நான் விரும்புகிறேன் நீ விரும்புகிறாய் 356 00:23:21,736 --> 00:23:23,655 நாம் விரும்புகிறோம் 357 00:23:24,531 --> 00:23:27,284 நான் விரும்புவதில்லை நீ விரும்புவதில்லை 358 00:23:27,284 --> 00:23:30,120 நாம் என்ன செய்ய வேண்டும் என்று மற்றவர்கள் சொல்வதை நாம் விரும்புவதில்லை 359 00:23:30,120 --> 00:23:32,706 நான் எப்படியிருக்க விரும்புகிறேனோ அப்படியிருப்பேன் 360 00:23:32,706 --> 00:23:34,708 என் உரிமை 361 00:23:35,417 --> 00:23:38,211 நான் விரும்புகிறேன் நீ விரும்புகிறாய் 362 00:23:38,211 --> 00:23:40,213 நாம் விரும்புகிறோம் 363 00:23:40,213 --> 00:23:43,049 முடியாது, என் தலைமுடியை நான் வெட்டிக்கொள்ளமாட்டேன் 364 00:23:43,049 --> 00:23:45,719 நான் எதை வேண்டுமானாலும் அணிவேன் 365 00:23:45,719 --> 00:23:51,391 நான் நானாக இருப்பதையே விரும்புகிறேன் 366 00:23:51,391 --> 00:23:54,311 நான் விரும்புவதில்லை நீ விரும்புவதில்லை 367 00:23:54,311 --> 00:23:59,107 நாம் என்ன செய்ய வேண்டும் என்று மற்றவர்கள் சொல்வதை நாம் விரும்புவதில்லை 368 00:23:59,107 --> 00:24:01,192 வசனத் தமிழாக்கம் அருண்குமார்