1 00:00:05,090 --> 00:00:08,093 1964 உலக கண்காட்சி. 2 00:00:08,093 --> 00:00:11,680 ஒரு வழக்கமான பழைய கண்காட்சியை கற்பனை செய்யுங்கள். பிறகு அதை ராக்கெட்டில் வைத்து 3 00:00:11,680 --> 00:00:16,434 எதிர்காலத்திற்கு நேரடியாக அனுப்புங்கள், அது போன்ற ஒன்று தான் இதுவும். 4 00:00:16,434 --> 00:00:20,939 அது நீங்கள் வீட்டுக்கு திரும்பிப்போக விரும்பாத கள பயணங்களில் ஒன்று. 5 00:00:20,939 --> 00:00:28,029 ஃபியூச்சரமா 2 க்கு வரவேற்கிறோம், 'நாளைய உலகிற்கான' உங்கள் கடவுச்சீட்டு. 6 00:00:28,029 --> 00:00:30,198 -அற்புதம். -அருமை. நன்றாக இருக்கிறது. 7 00:00:30,198 --> 00:00:34,911 நீர்மூழ்கி ரயில்கள் கண்டங்களையும் வர்த்தகத்தையும் இணைக்கும் பாலமாக இருக்கும். 8 00:00:35,495 --> 00:00:37,330 நான் நீருக்கடியில் வாழ விரும்புகிறேன். 9 00:00:37,330 --> 00:00:39,749 தபால்களைப் பெற நீ மூச்சை அடக்க வேண்டும். 10 00:00:39,749 --> 00:00:42,711 எப்படியும் அதை செய்வேன். நம் தபால்பெட்டி குப்பைத்தொட்டி அருகில் இருக்கிறது. 11 00:00:43,378 --> 00:00:46,548 எல்லா சின்னஞ்சிறு எதிர்கால மக்களையும் பாருங்கள். 12 00:00:46,548 --> 00:00:48,091 ஹாய், சின்னஞ்சிறு எதிர்கால மக்களே! 13 00:00:48,758 --> 00:00:50,719 எட்டிப் பார்க்காதே, ஹேரியட். 14 00:00:51,761 --> 00:00:52,762 பயங்கரமான அரக்கி! 15 00:00:52,762 --> 00:00:57,559 ஓடுங்கள், எதிர்கால மக்களே! மகிழ்ச்சியைக் கெடுக்கும் அரக்கி நகரத்தைத் தாக்குகிறாள். 16 00:00:59,060 --> 00:01:02,188 திரு. ஹோரேஷியோ, ஹேரியட்டும் ஜேனியும் இடையூறு செய்கிறார்கள். 17 00:01:02,772 --> 00:01:05,025 குழந்தைகளே, எதிர்காலத்துக்கு இடையூறு செய்வதை நிறுத்துங்கள். 18 00:01:05,025 --> 00:01:07,986 இன்றைய நாளின் கடைசி அற்புதமான பயணத்தை நீங்கள் கெடுக்கிறீர்கள். 19 00:01:14,659 --> 00:01:18,496 நாம் இன்றைக்குப் பார்த்த விஷயங்களை உன்னால் நம்ப முடிகிறதா? 20 00:01:18,496 --> 00:01:23,293 ரோபோ வேலையாட்கள், மின்சார கார்கள், செயற்கைக்கோள்கள்! 21 00:01:23,793 --> 00:01:27,631 நான் விண்வெளியில் இருந்து உளவு பார்க்கக்கூடிய விஷயங்களை கற்பனை செய்து பாருங்கள். 22 00:01:27,631 --> 00:01:30,342 எல்லா வினோதமான எதிர்கால உணவுகளையும் இங்கே சாப்பிட விரும்புகிறேன். 23 00:01:30,342 --> 00:01:32,510 அதாவது, பெல்ஜியன் வாஃபல் என்றால் என்ன? 24 00:01:33,178 --> 00:01:39,601 அது ஒரு வாஃபல், கவனமாகக் கேள், பெல்ஜியத்திலிருந்து வந்தது. 25 00:01:41,353 --> 00:01:42,604 ஆஹா. 26 00:01:43,480 --> 00:01:49,027 சரி. வீட்டுப்பாடத்திற்கான கடைசி கட்ட யோசனைகளை விரைவாக எழுத இந்த நேரத்தைப் பயன்படுத்துங்கள். 27 00:01:49,027 --> 00:01:54,366 கண்காட்சியில் பார்த்தவற்றின் அடிப்படையில், எதிர்காலம் குறித்து உங்களை அதிகம் உற்சாகப்படுத்துவது எது? 28 00:01:54,366 --> 00:01:57,994 எதிர்காலம் குறித்து எது என்னை உற்சாகப்படுத்தியது? ஓ, எல்லாமேதான். 29 00:01:58,620 --> 00:02:02,123 இப்போதிலிருந்து ஐந்து நிமிடங்கள். நன்றாக எழுதுங்கள். 30 00:02:02,791 --> 00:02:05,168 எதிர்காலம் குறித்து என்னை அதிகம் உற்சாகப்படுத்துவது எது? 31 00:02:05,168 --> 00:02:07,420 விண்வெளி வாகனங்கள், மின்சார பல் துலக்கும் பிரஷ். 32 00:02:07,420 --> 00:02:09,756 தேர்ந்தெடுக்க முடியவில்லை. கவனம் செலுத்து, ஹேரியட். 33 00:02:10,674 --> 00:02:15,011 எதிர்காலம் குறித்து என்னை அதிகம் உற்சாகப்படுத்தும் விஷயம்... 34 00:02:20,642 --> 00:02:21,935 என்னால் நம்ப முடியவில்லை. 35 00:02:22,561 --> 00:02:24,437 என் வாழ்வில் முதல் முறையாக, எனக்கு, 36 00:02:24,437 --> 00:02:28,066 மாபெரும் எதிர்கால எழுத்தாளரான, ஹேரியட் எம். வெல்ஷ்க்கு... 37 00:02:28,066 --> 00:02:30,026 எழுதும் உத்வேகம் இல்லை. 38 00:02:31,945 --> 00:02:34,197 நான் விரும்புகிறேன் நீ விரும்புகிறாய் 39 00:02:34,197 --> 00:02:36,449 நாம் விரும்புகிறோம் 40 00:02:37,450 --> 00:02:39,703 நான் எப்படியிருக்க விரும்புகிறேனோ அப்படியிருப்பேன் 41 00:02:39,703 --> 00:02:41,538 என் உரிமை 42 00:02:42,080 --> 00:02:44,541 முடியாது, என் தலைமுடியை நான் வெட்டிக்கொள்ளமாட்டேன் 43 00:02:44,541 --> 00:02:47,294 நான் எதை வேண்டுமானாலும் அணிவேன் 44 00:02:47,294 --> 00:02:53,091 நான் நானாக இருப்பதையே விரும்புகிறேன் 45 00:02:53,091 --> 00:02:56,219 நான் விரும்புவதில்லை நீ விரும்புவதில்லை 46 00:02:56,219 --> 00:02:59,180 நாம் என்ன செய்ய வேண்டும் என்று மற்றவர்கள் சொல்வதை நாம் விரும்புவதில்லை 47 00:02:59,180 --> 00:03:00,265 {\an8}"நாளைய உலகம்" 48 00:03:02,058 --> 00:03:03,393 {\an8}லூயிஸ் ஃபிட்ஸ்ஹியூ புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 49 00:03:03,393 --> 00:03:08,148 என் வகுப்பு விளக்கக்காட்சிக்கான சிறந்த யோசனையை யோசிக்க வேண்டும் என்றால், 50 00:03:08,148 --> 00:03:11,651 நான் விஷயங்களை வேறு விதமாக யோசிக்க வேண்டியிருந்தது. 51 00:03:13,945 --> 00:03:15,614 அருமை. ஆனால் ஏன் நிறுத்திவிட்டாய்? 52 00:03:18,199 --> 00:03:20,577 உன்னால் முடியும், எதிர்காலமே. உன் திறமையைக் காட்டு. 53 00:03:28,793 --> 00:03:31,755 கவலை வேண்டாம். என்னிடம் ஜெட் பேக் உரிமம் உள்ளது. 54 00:03:33,590 --> 00:03:35,217 நான் இறங்க வேண்டிய இடம். வருகிறேன். 55 00:03:42,599 --> 00:03:46,394 ஆஹா. எதிர்கால டொமேட்டோ சாண்ட்விச். 56 00:03:47,395 --> 00:03:49,064 ருசியாக இருக்கிறது. 57 00:03:51,900 --> 00:03:54,694 ரோபோட் கோலி, எதிர்காலம் குறித்து உன்னை அதிகம் உற்சாகப்படுத்துவது எது? 58 00:03:56,738 --> 00:03:59,074 இந்த கேள்விக்கு பதிலளிக்காமல் இருக்க புரோகிராம் செய்யப்பட்டிருக்கிறேன் 59 00:03:59,074 --> 00:04:02,327 ஏனென்றால் ஒரு நல்ல உளவாளி தானே விஷயங்களைக் கண்டுகொள்வார். 60 00:04:04,329 --> 00:04:07,832 எனக்கு பல யோசனைகள் தேவையில்லை, ஒரு சரியான யோசனை போதும். 61 00:04:07,832 --> 00:04:10,418 இது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல என்பது போல எல்லோரும் எழுதினார்கள், 62 00:04:11,586 --> 00:04:13,463 பிங்கி வைட்ஹெட் உள்பட. 63 00:04:15,423 --> 00:04:16,507 திரு. ஹோரேஷியோ. 64 00:04:17,509 --> 00:04:20,387 நான் முன்னதாகவே முடித்துவிட்டேன். யாராவது சிரமப்பட்டால், 65 00:04:20,387 --> 00:04:22,264 என்னால் அவர்களுக்கு நிச்சயமாக உதவ முடியும். 66 00:04:23,974 --> 00:04:25,559 போய்விடு, மேரியன். 67 00:04:25,559 --> 00:04:29,688 எதிர்காலம் பற்றிய விஷயங்களால் நிறைந்திருக்கும் இங்கு எதிர்காலத்தைப் பற்றி எழுத முடியவில்லை 68 00:04:29,688 --> 00:04:32,857 என்றால் என்னால் எப்படி எதிர்காலத்தில் சிறந்த எழுத்தாளராக முடியும்? 69 00:04:35,360 --> 00:04:36,570 நேரம் முடிந்தது. 70 00:04:36,570 --> 00:04:39,906 மாணவர்களே, நாம் திரும்பி செல்வதற்கு முன்பு கொஞ்சம் நேரம் இருக்கிறது. 71 00:04:39,906 --> 00:04:42,909 யார் "பெல்ஜிய வாஃபலை" சாப்பிட விரும்புகிறீர்கள்? 72 00:04:42,909 --> 00:04:44,703 அதை கேட்க வேடிக்கையாக இருக்கிறது. 73 00:04:44,703 --> 00:04:46,204 அதேதான். 74 00:04:50,125 --> 00:04:52,002 நீ நலமா, ஹேரியட்? 75 00:04:52,002 --> 00:04:53,086 நன்றாக இருக்கிறேன். 76 00:04:56,214 --> 00:04:58,174 ஹேய், நீ இப்போது என்னை புகைப்படம் எடுத்தாயா? 77 00:04:59,759 --> 00:05:00,760 ஹேய்! 78 00:05:00,760 --> 00:05:04,514 போகலாம், ஹேரியட். எதிர்கால வாஃபல் நமக்காக காத்திருக்கிறது. 79 00:05:04,514 --> 00:05:06,725 நீங்கள் அதைப் பார்த்தீர்களா? என்ன ஒரு திருட்டுத்தனம். 80 00:05:06,725 --> 00:05:11,354 ஆம், ஹேரியட். ஒருவரை கேட்காமல் யார் உளவு பார்ப்பார்கள்? 81 00:05:11,354 --> 00:05:13,940 அப்படியா? அவனைப் பின்தொடர்ந்து கண்டுபிடிக்கப் போகிறேன். 82 00:05:14,441 --> 00:05:17,527 போகாதே. நீ சுற்றித்திரிவது திரு. ஹோரேஷியோவிற்கு தெரிந்தால், 83 00:05:17,527 --> 00:05:19,487 உனக்கு நிச்சயமாக தண்டனை கிடைக்கும். 84 00:05:29,664 --> 00:05:33,293 நீ சொல்வது சரிதான், ஸ்போர்ட். எனவே தெரியாதபடி பார்த்துக்கொள். 85 00:05:36,004 --> 00:05:39,758 ஓல் கோலி ஒருமுறை சொன்னார், "கதை வழிநடத்தினால், பின்தொடரு" என்று. 86 00:06:15,168 --> 00:06:16,169 மன்னியுங்கள். 87 00:06:31,226 --> 00:06:32,394 மாட்டிக்கொண்டாய்! 88 00:06:34,020 --> 00:06:35,021 ஏன் அப்படி நடந்துகொண்டாய்? 89 00:06:35,021 --> 00:06:37,190 அனுமதியின்றி என் புகைப்படத்தை எதற்காக எடுத்தாய்? 90 00:06:38,108 --> 00:06:39,859 நான் உன்னை புகைப்படம் எடுக்கவில்லை. 91 00:06:42,070 --> 00:06:45,115 என் கசங்கிய புத்தகத் தாளை தான் புகைப்படம் எடுத்தாயா? 92 00:06:46,449 --> 00:06:49,286 உனக்கு புத்தகத் தாள் தெரிகிறது. நான் உண்மையைப் பார்க்கிறேன். 93 00:06:49,286 --> 00:06:52,539 குப்பை, விரிசல்கள், மக்கள் கவனிக்காத விஷயங்கள், அதுதான் கலை. 94 00:06:52,539 --> 00:06:53,915 நான் ஒரு புகைப்படக் கலைஞன். 95 00:06:53,915 --> 00:06:56,126 உனக்கு புரியாது. நீ ஒரு குழந்தை. 96 00:06:56,877 --> 00:06:58,795 குழந்தையா? உனக்கு 14 வயது இருக்குமா? 97 00:06:59,337 --> 00:07:01,423 நான் போக வேண்டும். துரதிஷ்டவசமாக கண்காட்சியில் சிக்கிக்கொண்டேன். 98 00:07:01,423 --> 00:07:03,466 நான் உன்னிடமும் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை. 99 00:07:04,092 --> 00:07:06,344 இதை அவ்வளவு வெறுத்தால் ஏன் இங்கு இருக்கிறாய்? 100 00:07:07,012 --> 00:07:10,515 என் பெற்றோர்கள் கோடாக் பெவிலியனில் வேலை செய்கிறார்கள். சிறிய நகரத்தை ஆச்சரியப்படுத்தி, 101 00:07:10,515 --> 00:07:13,602 இந்த போலியான இடத்தில் நிஜமான ஏதோவொன்றை தேட முயற்சிக்கிறார்கள். 102 00:07:13,602 --> 00:07:17,147 மேம்பட்ட எதிர்காலத்திற்காக ஏங்கும் மக்களிடம் போலியாக என்ன இருக்கப்போகிறது? 103 00:07:17,147 --> 00:07:18,440 எனக்கு எதிர்காலத்தில் நம்பிக்கை இல்லை. 104 00:07:18,440 --> 00:07:20,650 சரி, எனக்கும் ஆணவத்தில் நம்பிக்கை இல்லை. 105 00:07:20,650 --> 00:07:21,818 கண்காட்சியை அனுபவி, குழந்தை. 106 00:07:22,736 --> 00:07:24,029 நிச்சயமாக. 107 00:07:24,029 --> 00:07:26,072 எதிர்காலம் எவ்வளவு அற்புதமாக இருக்கும் 108 00:07:26,072 --> 00:07:28,742 என்பது குறித்த எனது விருது வெல்லும் கட்டுரையை நான் எழுதும்போது, 109 00:07:28,742 --> 00:07:30,911 உன்னைப் போன்றோரும் அதை நம்புவார்கள். 110 00:07:38,209 --> 00:07:42,631 மனித உருவத்தில் இருக்கும் மாற்றமுடியாத ஒரு பிரச்சனையை, நான் சந்தித்துவிட்டேன். 111 00:07:52,057 --> 00:07:54,100 ஜேனி! ஸ்போர்ட்! 112 00:07:55,435 --> 00:07:58,438 யூ-ஹூ, மேரியன்! எங்கே இருக்கிறாய்? 113 00:07:58,438 --> 00:08:02,067 நான் பெஞ்சின் மீது நிற்கிறேன். என்னைப் பற்றி புகார் செய்யும் நேரம் வந்துவிட்டது. 114 00:08:02,817 --> 00:08:04,611 எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. 115 00:08:04,611 --> 00:08:08,448 ஏற்கனவே என்ன எழுதுவது என்று தெரியாமல் விழிக்கிறேன். இப்போது தொலைந்துவிட்டேன். 116 00:08:10,450 --> 00:08:11,743 பெல்ஜிய வாஃபல் விற்குமிடம்! 117 00:08:18,291 --> 00:08:20,335 குப்பை புகைப்படக் கலை எப்படி போகிறது? 118 00:08:22,087 --> 00:08:24,714 பொறு, உன் புகைப்படக் கலை மோசம் என்று சொல்லவில்லை. அதாவது... 119 00:08:24,714 --> 00:08:25,966 உனக்கு என்ன வேண்டும்? 120 00:08:25,966 --> 00:08:28,301 நான் வகுப்பினருடன் இருந்தேன், நாங்கள் ஒரு கட்டுரையை எழுத வேண்டும், 121 00:08:28,301 --> 00:08:29,886 ஆனால் எனக்கு என்ன எழுதுவது என்று தெரியவில்லை. 122 00:08:29,886 --> 00:08:33,056 அப்போதுதான் உன்னைப் பார்த்தேன், "யாரும் கேட்காமல் என்னை உளவு பார்க்கக்கூடாது" என்று நினைத்தேன். 123 00:08:33,056 --> 00:08:35,725 அப்போதுதான் நான் தொலைந்துவிட்டேன். 124 00:08:36,726 --> 00:08:38,770 என் வகுப்பினரைக் கண்டுபிடிக்க நீ உதவ முடியுமா? 125 00:08:39,437 --> 00:08:40,438 முடியாது. 126 00:08:40,438 --> 00:08:43,733 நீ ஒரு நல்ல மனிதன் இல்லை என்று யாராவது உன்னிடம் சொல்லியிருக்கிறார்களா? 127 00:08:43,733 --> 00:08:45,902 என் பெற்றோரால் முடியும். போய் கேட்கலாம். 128 00:08:46,695 --> 00:08:49,155 சரி. நல்ல யோசனை. 129 00:08:49,155 --> 00:08:50,699 என் பெயர் ஹேரியட். 130 00:08:50,699 --> 00:08:52,659 சக். என் பெயர் சக். 131 00:08:54,077 --> 00:08:56,538 நான் எதிர்காலத்தை ருசித்துவிட்டேன், ஜேனி. 132 00:08:56,538 --> 00:09:00,166 இது பெல்ஜியத்திலிருந்து வருகிறது, அதோடு இது ஒரு வாஃபல். 133 00:09:00,166 --> 00:09:02,586 இது உலகத்தை மாற்றப்போகிறது. 134 00:09:05,255 --> 00:09:07,716 கவனம், ஸ்போர்ட். நாம் ஹேரியட்டைத் தேட வேண்டும். 135 00:09:11,970 --> 00:09:13,513 கவனம். அவளைத் தேட வேண்டும். 136 00:09:13,513 --> 00:09:17,517 நான் ஹேரியட்டின் பெயரை வாஃபல்களில் கிரீம் கொண்டு எழுதி பூத்திலேயே விட்டுவிட்டேன். 137 00:09:17,517 --> 00:09:20,854 அதன் அடியில் துடைப்பானில் ஒரு குறிப்பு வைத்திருக்கிறேன், "எங்களை சந்திக்கவும்..." 138 00:09:20,854 --> 00:09:22,147 ஹேரியட் X ஜனியை சந்திக்கிறாள். 139 00:09:22,772 --> 00:09:23,982 அதுதான் குறிப்பு இருக்கும் துடைப்பானா? 140 00:09:26,067 --> 00:09:28,778 ஸ்போர்ட், ஹேரியட் எப்படி நம்மை கண்டுபிடிக்கப் போகிறாள்? 141 00:09:33,909 --> 00:09:35,827 அங்கே நீங்கள் உலகின் மிகவும் பிரபலமான 142 00:09:35,827 --> 00:09:38,330 சர்க்கஸ் கோமாளியை அடையாளம் காணலாம். 143 00:09:38,330 --> 00:09:40,582 அந்த முக சுளிப்பை தலைகீழாகப் பார்த்தால் சிரிப்பது போல இருக்கும். 144 00:09:40,582 --> 00:09:43,043 இதுவரை உருவாக்கப்பட்டதிலேயே மிகப்பெரிய புகைப்படத்தில் இருக்கிறாய். 145 00:09:45,212 --> 00:09:49,591 கண்காட்சியில் உயரமான ஒன்று ராயல் டயர் ஃபெர்ரிஸ் ராட்டினம் தான். 146 00:09:51,551 --> 00:09:52,552 சக். 147 00:09:54,846 --> 00:09:56,473 ஹேய், செல்லம். 148 00:09:57,474 --> 00:09:59,100 உன்னை இரவு உணவு வரை எதிர்பார்க்கவில்லை. 149 00:09:59,100 --> 00:10:02,270 நிச்சயமாக ஒரு தோழியுடன் எதிர்பார்க்கவில்லை. அருமை. 150 00:10:02,771 --> 00:10:06,233 என் பெயர் ஹேரியட் எம். வெல்ஷ், நான் மிகவும் சிறப்பானவள்தான். நன்றி. 151 00:10:06,775 --> 00:10:08,777 இவளும் தொலைந்துவிட்டாள். உங்களால் உதவ முடியுமா? 152 00:10:08,777 --> 00:10:10,070 ஓ, செல்லம். 153 00:10:10,070 --> 00:10:12,864 நாங்கள் பயணத்தின் நடுவே இருக்கிறோம். 154 00:10:12,864 --> 00:10:17,202 கவலைப்படாதே, இளம்பெண்ணே. எங்களை விட சக்கிற்கு இந்த இடத்தை நன்றாகத் தெரியும். 155 00:10:17,202 --> 00:10:20,038 சக், செல்லம், இவளை பாதுகாப்பு நிலையத்திற்கு அழைத்துபோ. 156 00:10:20,789 --> 00:10:21,790 நல்லது. 157 00:10:21,790 --> 00:10:23,541 நீ நம்பகமான ஒருவருடன் இருக்கிறாய். 158 00:10:24,042 --> 00:10:25,168 பை, செல்லம். 159 00:10:27,045 --> 00:10:31,508 சிரமப்படாதே மகனே, உனக்குத் தெரியாததா, அதிகம் சிரமப்படாதே. 160 00:10:31,508 --> 00:10:33,552 அப்பா, போதும். என்ன செய்கிறேன் என்று எனக்குத் தெரியும். 161 00:10:33,552 --> 00:10:35,595 போகலாம், ஹேரியட். நாம் நீண்ட தூரம் போக வேண்டும். 162 00:10:35,595 --> 00:10:36,930 அது கண்காட்சியின் மறுபுறம் இருக்கிறது. 163 00:10:36,930 --> 00:10:40,725 நிச்சயமாக. இன்னொரு முறை சுற்றிப் பார்த்தால் தலை சுற்றும் போல. 164 00:10:40,725 --> 00:10:42,852 நீ வினோதமான குழந்தைதான், ஹேரியட். 165 00:10:42,852 --> 00:10:44,521 ஒருவேளை நீ சுவாரசியமானவளாக இருக்கலாம். 166 00:10:44,521 --> 00:10:46,731 அருகிலேயே இரு. நீ ஏதாவது கற்றுக்கொள்ளலாம். 167 00:10:53,822 --> 00:10:56,616 முதல் பாடம். இந்த கண்காட்சி எதைப் பற்றியது என்று நினைக்கிறாய்? 168 00:10:56,616 --> 00:10:58,994 -உலக அமைதியா? -தவறு! 169 00:10:58,994 --> 00:11:01,705 உலகெங்கிலும் உள்ள ஏமாற்றுக்காரர்கள் பணம் சம்பாதிக்கத்தான் இந்த கண்காட்சி. 170 00:11:01,705 --> 00:11:02,789 எதிர்கால எலுமிச்சை சாறை அனுபவியுங்கள் 171 00:11:04,124 --> 00:11:05,125 ஒவ்வொரு பெவிலியனும் குப்பையை... 172 00:11:05,125 --> 00:11:06,209 சுவிஸ் ஞாபகச் சின்னங்கள் 173 00:11:06,209 --> 00:11:07,794 ...விற்க பிராண்டிங் செய்யப்பட்டவை. 174 00:11:07,794 --> 00:11:09,713 இது மிகவும் முக்கியமான விஷயம், ஹேரியட். 175 00:11:11,047 --> 00:11:12,424 நீ இதை குறித்துக் கொள்ள வேண்டும். 176 00:11:12,424 --> 00:11:15,302 நான் இதை குறித்துக்கொண்டால் "நீ ஒரு எழுத்தாளராக ஆவதை மறந்து விடு!" 177 00:11:15,302 --> 00:11:18,221 என்று அது முத்திரை குத்தப்படும். 178 00:11:19,055 --> 00:11:21,433 உனக்கு அது தெரியாது. இந்த எதிர்கால விஷயங்கள் நடக்குமா 179 00:11:21,433 --> 00:11:23,351 என்று தெரியாத அதிபுத்திசாலிகளைப் போல. 180 00:11:23,351 --> 00:11:24,477 உனக்கு நன்றாக தெரியுமா? 181 00:11:24,477 --> 00:11:26,897 நிகழ்காலத்தில் வாழ்வது அடுத்து என்ன நடக்கும் என்ற கவலையை 182 00:11:26,897 --> 00:11:29,900 போக்கும் என்பதை நான் அறிவேன். நீ இப்போது என்ன உணர்கிறாய்? 183 00:11:29,900 --> 00:11:33,236 அவ்வளவுதான்! என் கட்டுரைக்காக எனக்கு நல்ல யோசனை கிடைக்கவில்லை என்றால், 184 00:11:33,236 --> 00:11:35,488 திரு. ஹோரேஷியோ என் தலை கூம்பு வடிவமாகும் வரை 185 00:11:35,488 --> 00:11:37,949 என்னை கூம்பு தொப்பி அணிய வைப்பார். 186 00:11:37,949 --> 00:11:41,494 அது எதிர்காலம். நீ இப்போது என்ன உணர்கிறாய்? 187 00:11:41,494 --> 00:11:42,954 சரி, 188 00:11:42,954 --> 00:11:45,457 இந்தக் கணம், இப்போது, 189 00:11:45,457 --> 00:11:47,500 வெயிலடிக்கிறது. 190 00:11:47,500 --> 00:11:49,002 மக்கள் சிரிக்கிறார்கள். 191 00:11:50,503 --> 00:11:52,756 என் தலைமுடி பிஸ்கட் போல வாசனை வீசுகிறது. 192 00:11:54,758 --> 00:11:57,886 அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று கவலைப்படுவதை விட இது பரவாயில்லைதானே? 193 00:11:59,804 --> 00:12:01,223 நடப்போம், சரியா? 194 00:12:01,223 --> 00:12:02,474 ஆம். நடப்போம். 195 00:12:03,600 --> 00:12:05,810 ஸ்விஸ் ஞாபகச் சின்னங்கள் 196 00:12:07,020 --> 00:12:08,480 அடடா, இந்த குப்பைகளைப் பார். 197 00:12:08,480 --> 00:12:10,982 இதை அணிய நீ ஒரு முட்டாளாக இருக்க வேண்டும். 198 00:12:14,402 --> 00:12:16,947 இப்போது, எல்லோரும் கவனம் செலுத்துகிறீர்களா என்று பார்ப்போம். 199 00:12:17,614 --> 00:12:19,783 நான் எப்போதும் கவனம் செலுத்துகிறேன். 200 00:12:19,783 --> 00:12:23,703 செல்வி ஹாவ்தோர்ன், நீ கொஞ்சம் எனது விலைமதிப்பற்றவைகளை எடுத்து வர முடியுமா? 201 00:12:31,503 --> 00:12:34,965 இந்த கண்காட்சியின் வடிவமைப்பாளர்களில் ஒருவர் பெயரை யாராவது சொல்ல முடியுமா? 202 00:12:34,965 --> 00:12:37,133 செல்வி வெல்ஷ் ஏன் சொல்லக்கூடாது? 203 00:12:37,676 --> 00:12:40,220 நாம் எல்லோரும் மாட்டிக்கொண்டோம். 204 00:12:40,220 --> 00:12:41,680 நான் காத்திருக்கிறேன், செல்வி வெல்ஷ். 205 00:12:43,515 --> 00:12:45,600 சார்லஸ் ஏம்ஸ், திரு. எச். 206 00:12:46,601 --> 00:12:51,523 சரி. அருமை, செல்வி வெல்ஷ். ஒருவராவது முழு கவனம் செலுத்துவதில் மகிழ்ச்சி. 207 00:12:51,523 --> 00:12:53,900 நீ ஹேரியட் போல பேசுவாய் என்று தெரியாது. 208 00:12:53,900 --> 00:12:55,652 எனக்கும் தெரியாது. 209 00:12:55,652 --> 00:12:58,363 நான் பயப்படும்போது என் குரல் உயர்கிறது என்று நினைக்கிறேன். 210 00:13:03,535 --> 00:13:05,036 பாதுகாப்பு நிலையம் அங்குதான் உள்ளது. 211 00:13:05,036 --> 00:13:06,454 இது என்ன? 212 00:13:06,454 --> 00:13:09,916 எப்படி நீ இதையெல்லாம் பார்த்துவிட்டும் எதிர்காலம் பற்றி உற்சாகமடைய முடியவில்லை? 213 00:13:12,711 --> 00:13:13,879 முகம் காட்டும் தொலைபேசிகளா? 214 00:13:13,879 --> 00:13:17,632 மக்கள் பேசும்போது மற்றவர்களைப் பார்க்க விரும்புவார்கள் என்று நீ நினைக்கிறாயா? 215 00:13:17,632 --> 00:13:19,384 நிச்சயமாக! 216 00:13:19,384 --> 00:13:21,469 என் நகைச்சுவைகளுக்கு ஜேனியின் குறட்டை போன்ற 217 00:13:21,469 --> 00:13:24,055 சிரிப்யை கேட்பதற்கு பதில், சிரிப்பை பார்க்க விரும்புகிறேன். 218 00:13:30,520 --> 00:13:32,022 எனவே, ஏதாவது யோசனைகள் தோன்றியதா? 219 00:13:32,022 --> 00:13:33,523 இல்லை. 220 00:13:33,523 --> 00:13:37,527 உலகின் மிகவும் அற்புதமான எதிர்காலம் சார்ந்த இடம் இதுதான். 221 00:13:37,527 --> 00:13:38,778 இதில் என்ன சிரமம் இருக்கிறது? 222 00:13:38,778 --> 00:13:42,115 நீ நிஜமான எழுத்தாளராக இருந்தால், உன் யோசனை எதை பற்றி வேண்டுமானாலும் இருக்க முடியாது. 223 00:13:42,115 --> 00:13:45,201 மற்றவர்கள் பார்க்க முடியாத விஷயங்களை நீ கண்டுபிடிக்க வேண்டும். 224 00:13:45,201 --> 00:13:46,369 ஆம். 225 00:13:46,369 --> 00:13:48,955 சரியான கோணத்தில் உலகைக் புகைப்படம் எடுப்பது போன்றது, 226 00:13:48,955 --> 00:13:50,206 உன்னால் மட்டுமே முடியும், சரியா? 227 00:13:50,206 --> 00:13:53,501 சில நேரங்களில் அதைச் சரியாக செய்வதற்கு மிகுந்த அழுத்தம் ஏற்படுகிறது. 228 00:13:54,252 --> 00:13:57,088 சொற்களை எழுதுவது எளிது. அது காகிதத்தோடு பேசுவதைப் போன்றது. 229 00:13:57,088 --> 00:13:59,090 அது மிகவும் எளிது என்று நீ நினைத்தால், 230 00:13:59,090 --> 00:14:03,261 எதிர்காலத்தைப் பற்றி உன்னை உற்சாகப்படுத்துவது எது என்று நீ எழுது, 231 00:14:03,261 --> 00:14:05,263 நான் கண்காட்சியின் படங்களை எடுக்கிறேன். 232 00:14:05,263 --> 00:14:07,140 யார் சிறந்த கலையை உருவாக்குகிறாரோ அவர் வெற்றி பெறுவார். 233 00:14:07,140 --> 00:14:08,558 அப்போது சரி. அதை ஏற்கிறேன். 234 00:14:14,189 --> 00:14:16,399 -அதை கவனமாக வைத்திரு. -அதை கவனமாக வைத்திரு. 235 00:14:18,360 --> 00:14:20,237 நான் உன்னை ஒரு படம் எடுக்கட்டுமா? 236 00:14:20,237 --> 00:14:22,614 உருவப்படமா? சுவாரசியமற்றது. 237 00:14:24,157 --> 00:14:25,283 ஹேரியட். 238 00:14:25,283 --> 00:14:26,743 விரல் நழுவி அழுத்திவிட்டேன். 239 00:14:34,960 --> 00:14:36,920 நேரம் முடிந்துவிட்டது. அவற்றை படித்துவிட்டு அழு. 240 00:14:37,879 --> 00:14:40,799 இவற்றில் வாழ்க்கை இருக்கிறது. ஒரு கற்றுக்குட்டிக்கு இது மோசம் இல்லை. 241 00:14:41,466 --> 00:14:43,885 நன்றி. உங்கள் முறை, புத்திசாலியே. 242 00:14:46,346 --> 00:14:48,890 "எதிர்காலம் குப்பையானது"? 243 00:14:49,599 --> 00:14:51,560 இந்த இடத்திலிருந்து நீ பெற்றது இதுதானா? 244 00:14:51,560 --> 00:14:52,769 அதைப்பற்றி யோசி, ஹேரியட். 245 00:14:52,769 --> 00:14:56,231 எதிர்காலத்தில் என்ன நடந்தாலும், எப்போதும் குப்பை இருக்கும். 246 00:15:04,072 --> 00:15:07,200 அதாவது, அதைச் சுத்தம் செய்ய எப்போதும் துப்புரவு பணியாளர்கள் இருப்பார்கள். 247 00:15:09,703 --> 00:15:11,705 பொறு. எனவே நீ சொல்வது... 248 00:15:11,705 --> 00:15:14,332 எதிர்காலம் நிச்சயமாக துப்புரவு பணியாளர்களுக்கானது. 249 00:15:15,792 --> 00:15:18,837 வாய்ப்பே இல்லை. எதிர்காலம் நிச்சயமாக குப்பையானது. 250 00:15:18,837 --> 00:15:20,672 -துப்புரவு பணியாளர்கள். -குப்பை. 251 00:15:21,256 --> 00:15:23,258 இரண்டுமாக ஏன் இருக்க முடியாது? 252 00:15:24,050 --> 00:15:26,344 எதிர்காலம் குப்பை மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கானதா? 253 00:15:26,344 --> 00:15:27,804 அது எனக்குப் பிடித்திருக்கிறது. அது தான் உண்மை. 254 00:15:28,555 --> 00:15:35,145 எதிர்காலம் குப்பை மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கானது! 255 00:15:35,145 --> 00:15:39,441 அது கேட்டதா? எதிர்காலம் குப்பை மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கானது! 256 00:15:39,941 --> 00:15:42,152 -நேரம் என்ன? -நான்கரை மணி. 257 00:15:42,152 --> 00:15:45,363 நேரத்துக்கு போக முடியாது. பாதுகாப்பு நிலையத்தை நெருங்கிவிட்டோமா? 258 00:15:45,363 --> 00:15:49,618 முன்னால் உள்ளது, உன் வகுப்பை நாமே கண்டுபிடிக்க முடியுமே, காவலர்கள் எதற்கு? 259 00:15:49,618 --> 00:15:51,328 நாம் உயரத்துக்கு போக வேண்டும். 260 00:15:51,328 --> 00:15:55,582 கோடாக் பெவிலியனை விட உயர்ந்த ஒன்று என்று உன் அப்பா சொன்னது... 261 00:15:57,125 --> 00:15:58,418 ஃபெர்ரிஸ் ராட்டினம்! 262 00:15:58,418 --> 00:16:00,045 வா, சக்! அங்கே ஓடிச்செல்வோம். 263 00:16:00,045 --> 00:16:01,630 இதோ பார். அது உன் ஆசிரியர் அல்லவா? 264 00:16:02,756 --> 00:16:03,757 ஹேய்! 265 00:16:07,928 --> 00:16:09,429 ஹேய், ஓடக்கூடாது! 266 00:16:09,429 --> 00:16:10,722 ஆம், ஓடக்கூடாது! 267 00:16:12,349 --> 00:16:13,892 கண்டிப்பாக சொல்லிவிட்டோம். 268 00:16:13,892 --> 00:16:14,976 நிச்சயமாக. 269 00:16:23,610 --> 00:16:24,694 நீ நலமா? 270 00:16:25,278 --> 00:16:29,616 நலம். கொஞ்சம் மூச்சுத்திணறல். கொஞ்ச நேரம் உட்காரலாமா? 271 00:16:30,533 --> 00:16:31,701 அந்த இடம் வந்துவிட்டது. 272 00:16:40,377 --> 00:16:41,711 மகிழுங்கள். 273 00:16:41,711 --> 00:16:43,213 நீ... நன்றாக இருக்கிறாயா? 274 00:16:43,213 --> 00:16:44,548 நான் நலமாக இருக்கிறேன் என்றேன். 275 00:16:44,548 --> 00:16:45,966 சரி. 276 00:16:45,966 --> 00:16:48,969 நீ நலம் இல்லை என்றாலும் பரவாயில்லை. 277 00:16:48,969 --> 00:16:50,845 உன் வகுப்பை தேடுவதில் கவனம் செலுத்துவோம். 278 00:16:50,845 --> 00:16:52,472 நாம் செய்ய வேண்டியது அதுதானே? 279 00:16:52,472 --> 00:16:53,557 ஆம், ஆனால்... 280 00:16:53,557 --> 00:16:56,309 என்னைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்து. அது என்னை வெறுப்படைய செய்கிறது. 281 00:16:56,309 --> 00:16:57,394 நான் நன்றாக இருக்கிறேன்! 282 00:16:57,394 --> 00:16:59,854 அந்த "நான் நன்றாக இருக்கிறேன்" என்பதன் அர்த்தம் தெரியும். 283 00:16:59,854 --> 00:17:02,440 "நான் மிகவும் நன்றாக இல்லை" என்பதற்கான குறியீடு அது. 284 00:17:03,525 --> 00:17:04,901 நான் சக்கிற்கு உதவ விரும்பினேன், 285 00:17:04,901 --> 00:17:08,862 ஆனால் என் கட்டுரையை போலவே வார்த்தைகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. 286 00:17:10,156 --> 00:17:11,824 அதுதான் என் வகுப்பு. 287 00:17:11,824 --> 00:17:14,660 என் பெயரை படிப்பதற்கு முன் நான் அங்கு போகவில்லை என்றால், அவ்வளவுதான். 288 00:17:17,622 --> 00:17:21,751 இல்லை, இது நடக்கக்கூடாது. நான் இதிலிருந்து இறங்க வேண்டும்! 289 00:17:21,751 --> 00:17:23,962 நான் என் வேலையை தொடங்கக் கூட இல்லை! 290 00:17:23,962 --> 00:17:25,255 நீ கவலைப்படுவது போல தெரிகிறது. 291 00:17:25,255 --> 00:17:28,758 உனக்கு திரு. ஹோரேஷியோவை தெரியாது. அவர் என் பெற்றோரை அழைப்பார். 292 00:17:28,758 --> 00:17:29,843 ஒருவேளை அழைக்கலாம். 293 00:17:29,843 --> 00:17:33,847 ஒருவேளை நீ சிக்கலில் மாட்டலாம், தோற்கலாம், இராணுவப் பள்ளிக்கு அனுப்பப்படலாம். 294 00:17:33,847 --> 00:17:36,057 ஆனால் கவலைப்படுவது அதை சரிசெய்யாது. 295 00:17:36,057 --> 00:17:39,311 கவலைப்படுவது காயப்படுத்தும். என்னை நம்பு. எனக்குத் தெரியும். 296 00:17:39,811 --> 00:17:40,979 எப்படி? 297 00:17:40,979 --> 00:17:42,063 ஏனென்றால்... 298 00:17:43,064 --> 00:17:46,776 ஏனென்றால் சில நேரங்களில் எனக்கு எதிர்காலம் என்னவாக இருக்கும் என்ற கவலை தோன்றும். 299 00:17:48,695 --> 00:17:51,698 உனக்கு எதிர்காலத்தில் நம்பிக்கை இல்லை என்று நீ சொன்னதாக நினைத்தேன். 300 00:17:52,782 --> 00:17:56,244 என்னை அதைச் சொல்ல வைக்காதே. மிகைப்படுத்துவதாக தெரியலாம்... 301 00:17:59,164 --> 00:18:00,790 எனக்கு இதய நோய் இருக்கிறது. 302 00:18:00,790 --> 00:18:02,834 எனவே சில நேரங்களில் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுவேன். 303 00:18:03,627 --> 00:18:06,004 இப்போது என்ன நடக்கிறது என்பதை மட்டுமே நான் நம்ப முடியும். 304 00:18:06,004 --> 00:18:09,007 அதோடு இதுதான்... என்னை ஈர்க்கிறது. 305 00:18:09,007 --> 00:18:12,219 அதனால் தான் சக்கின் பெற்றோர்கள் மிகவும் கவலைப்பட்டிருக்கிறார்கள், 306 00:18:13,178 --> 00:18:15,222 அவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது... 307 00:18:15,805 --> 00:18:17,807 அவன் தனிமையில் இருந்திருக்கிறான். 308 00:18:18,892 --> 00:18:22,979 அவனும் அவனுடைய கேமரா மட்டுமே. அவன் காயமடைய பயந்திருக்கிறான். 309 00:18:24,689 --> 00:18:27,234 இன்றைய நாள் முடிந்ததை என்னால் நம்ப முடியவில்லை. 310 00:18:31,529 --> 00:18:32,656 அவர் அழுகிறாரா? 311 00:18:34,824 --> 00:18:35,825 பெயர் பட்டியல். 312 00:18:35,825 --> 00:18:38,745 எல்லோரது வருகையையும் பதிவு செய்ய பெயர்களைப் படிக்க யார் உதவுவீர்கள்? 313 00:18:38,745 --> 00:18:41,915 திரு. ஹோரேஷியோ, ஸ்போர்ட் பெயர்களை படிப்பான் என்று நினைக்கிறேன். 314 00:18:41,915 --> 00:18:43,792 எல்லா பெயர்களையும். 315 00:18:45,168 --> 00:18:47,295 பெயர்களை படித்தால் என்னால் ஹேரியட் போல பேச முடியாது. 316 00:18:47,295 --> 00:18:48,838 மெதுவாக பேசு, ஸ்போர்ட். 317 00:18:48,838 --> 00:18:51,841 உன் வாழ்க்கைலேயே நீ மெதுவாக பேசியதை விட மெதுவாக பேசு. 318 00:18:51,841 --> 00:18:53,927 உனக்குத் தெரியுமா, நான் இதில் பயணித்ததே இல்லை. 319 00:18:53,927 --> 00:18:58,557 இந்த கண்காட்சி இங்கிருந்து பார்க்கும்போது அவ்வளவு மோசமாக தெரியவில்லை. 320 00:18:58,557 --> 00:19:01,810 நீ செய்ய வேண்டியது எல்லாம் வேறு விதமாக பார்ப்பது மட்டுமே. 321 00:19:01,810 --> 00:19:03,645 அல்லது அப்படித்தான் எனக்கு சொல்லப்பட்டது. 322 00:19:03,645 --> 00:19:04,938 இது நல்ல ஆலோசனை. 323 00:19:05,855 --> 00:19:08,024 மன்னித்துவிடு, உன் வகுப்பை சரியான நேரத்தில் கண்டுபிடிக்க முடியவில்லை. 324 00:19:08,775 --> 00:19:12,654 எதிர்காலம் பற்றி தெரியவில்லை என்றால் பரவாயில்லை என எனக்குக் கற்றுக் கொடுத்தாய். 325 00:19:12,654 --> 00:19:15,532 எனவே இனி கவலைப்படமாட்டேன். 326 00:19:15,532 --> 00:19:18,910 இப்போது, நிகழ்காலத்தில் வாழும் நேரமிது! 327 00:19:21,037 --> 00:19:22,372 உன்னுடன். 328 00:19:22,372 --> 00:19:24,958 சரி, தாம்சன்? 329 00:19:24,958 --> 00:19:26,042 இருக்கிறேன். 330 00:19:26,042 --> 00:19:28,420 கிடைத்துவிட்டது. டனாகா? 331 00:19:28,420 --> 00:19:29,546 இருக்கிறேன். 332 00:19:31,339 --> 00:19:34,301 வால்டன்? 333 00:19:34,301 --> 00:19:37,012 சீக்கிரம், ஸ்போர்ட். பேருந்து வரப்போகிறது. 334 00:19:37,012 --> 00:19:41,683 என்ன, ஸ்போர்ட்? அடுத்த பெயர் ஹேரியட் எம். வெல்ஷ். 335 00:19:45,854 --> 00:19:47,731 அட! தலை வலிக்கிறது. 336 00:19:48,857 --> 00:19:49,983 பெயரைச் சொல். 337 00:19:56,740 --> 00:19:58,450 வெல்ஷ், ஹேரியட். 338 00:20:02,329 --> 00:20:05,290 -ஃபெர்ரிஸ் ராட்டினத்தில் இருக்கிறாளா? -அவள் எங்கே? 339 00:20:05,874 --> 00:20:08,251 திரு. ஹோரேஷியோ... பாருங்கள், நான் ஹேரியட்டுக்காக பேச விரும்பவில்லை. 340 00:20:08,251 --> 00:20:10,253 ஆனால் நீ ஹேரியட்டுக்காகத்தான் பேசுகிறாய். 341 00:20:10,253 --> 00:20:13,048 ஆனால் அவள் என்னிடம் சொன்னாள், உலக கண்காட்சி முடியவில்லையாம், 342 00:20:13,048 --> 00:20:15,342 அதோடு, ஜேனியும் நானும் கூட அப்படித்தான் நினைக்கிறோம். 343 00:20:15,342 --> 00:20:16,927 நீ என் கவனத்தை ஈர்க்கிறாய். 344 00:20:16,927 --> 00:20:20,222 சரி, நாம் உலகின் மிக உயரமான ஃபெர்ரிஸ் ராட்டினத்தில் ஏறவில்லை, 345 00:20:20,222 --> 00:20:25,060 அதில் ஏறாமல் நாம் உலக கண்காட்சியை சுற்றிப்பார்த்தோம் என எப்படிச் சொல்வது? 346 00:20:29,731 --> 00:20:33,026 வகுப்பினரே, ஃபெர்ரிஸ் ராட்டினத்திற்குச் செல்லுங்கள்! 347 00:20:33,026 --> 00:20:34,361 பேருந்து வந்துவிடுமே? 348 00:20:34,361 --> 00:20:35,779 நல்ல யோசனை, செல்வி ஹாவ்தோர்ன். 349 00:20:35,779 --> 00:20:37,906 எனது விலைமதிப்பற்ற பொருட்களை கொண்டுபோய் பேருந்தில் வை, 350 00:20:37,906 --> 00:20:39,115 நாங்கள் வந்துவிடுகிறோம். 351 00:20:39,699 --> 00:20:41,284 பொறுங்கள். நானும் வருகிறேன். 352 00:20:42,535 --> 00:20:44,746 ஆஹா! இது நிஜமாகவே ஊசலாடுகிறது. 353 00:20:46,539 --> 00:20:48,083 ஹேரியட், அது உன் வகுப்பா? 354 00:20:48,708 --> 00:20:49,918 என்னால் பார்க்க முடியாது. 355 00:20:49,918 --> 00:20:53,004 அவர்கள் பேருந்தில் ஏறுகிறார்களா? அவர்கள் போகிறார்களா? 356 00:20:53,004 --> 00:20:54,214 நிச்சயமாக இல்லை. 357 00:20:57,717 --> 00:21:00,637 அருமையான யோசனை, ஹேரியட். எனக்குக் கூட இது தோன்றவில்லையே. 358 00:21:01,972 --> 00:21:03,932 நன்றி, என்று நினைக்கிறேன். 359 00:21:06,935 --> 00:21:10,897 நண்பர்களே! எப்படி செய்தீர்கள் என்று தெரியவில்லை, ஆனால் காப்பாற்றிவிட்டீர்கள். 360 00:21:12,691 --> 00:21:15,318 அதற்கு பதிலாக பெல்ஜிய வாஃபில்களை வாங்கிக் கொடு! 361 00:21:17,404 --> 00:21:19,489 உன் நண்பர்கள் உன் மீது மிகவும் அக்கறை கொண்டுள்ளனர். 362 00:21:19,489 --> 00:21:21,032 நான் அருமையானவள் என்று சொன்னேனே. 363 00:21:21,700 --> 00:21:23,535 ஆனால் நீயும் அருமைதான், சக். 364 00:21:24,744 --> 00:21:26,621 ஹேரியட், உன்னை ஒரு புகைப்படம் எடுக்கட்டுமா? 365 00:21:26,621 --> 00:21:30,417 நீ நிஜமாகவே நலமா? நீ ஒரு நபரை புகைப்படம் எடுக்க விரும்புகிறாயா? 366 00:21:30,417 --> 00:21:32,586 நான் ஒரு உண்மையான படத்தை எடுக்க விரும்புகிறேன். 367 00:21:32,586 --> 00:21:35,839 நான் அதை "ஹேரியட், எழுத்தாளர்" என்று அழைப்பேன். 368 00:21:35,839 --> 00:21:37,883 நீ கேட்டால் போதும். 369 00:21:41,428 --> 00:21:44,347 இறுதியாக என் கட்டுரையில் என்ன எழுதுவது என்று தெரிந்துவிட்டது. 370 00:21:44,347 --> 00:21:48,518 எதிர்காலத்தைப் பற்றி என்னை மிகவும் உற்சாகப்படுத்துவது எது? இதுதான் கேள்வி. 371 00:21:48,518 --> 00:21:53,231 ஆனால் கண்காட்சியில் எனது நாளுக்குப் பிறகு, இன்னும் உற்சாகமான ஒன்றைக் கண்டேன், 372 00:21:53,231 --> 00:21:56,234 நிகழ்காலம் என்ற சிறிய ஒன்றை. 373 00:21:56,234 --> 00:21:59,571 எதிர்காலத்துக்கு, நிறைய சாத்தியங்கள் உள்ளன, 374 00:21:59,571 --> 00:22:02,908 ஆனால் உங்களுக்குத் தெரியாத நிறைய விஷயங்களும் இருக்கின்றன. 375 00:22:02,908 --> 00:22:05,785 மேலும் தெரியாமல் இருப்பவை நிறைய பயமுறுத்தும். 376 00:22:06,328 --> 00:22:10,290 என் கனவுகள் நனவாகவில்லை என்றால் என்ன செய்வது? ஏதாவது மோசமாக நடந்தால்? 377 00:22:10,290 --> 00:22:12,083 நான் தனியாக இருந்தால் என்ன செய்வது? 378 00:22:12,083 --> 00:22:15,503 ஆனால் நீங்கள் இப்போது, நிகழ்காலத்தில் வாழ்ந்தால், 379 00:22:16,213 --> 00:22:20,634 நீங்கள் மேம்பட்டவராக இருக்க செய்திடும் நண்பர் ஒருவரை சந்திக்கக்கூடும். 380 00:22:20,634 --> 00:22:24,095 "வித்தியாசமாக சிந்திக்க. நிஜமான ஒன்றை உருவாக்க. 381 00:22:25,096 --> 00:22:29,226 உலகத்தை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கண்ணோட்டத்தை மாற்றும் ஒருவர். 382 00:22:30,060 --> 00:22:32,771 ஏனென்றால் நடக்கும் வரை, எதிர்காலம் ஒரு யூகம்தான். 383 00:22:33,605 --> 00:22:36,983 அதோடு அது வேறொருவரால் நிகழ்த்தப்படும் வரை நீங்கள் காத்திருக்காமல், 384 00:22:36,983 --> 00:22:39,527 நீங்கள் அதை விட மேம்பட்ட ஒன்றை உருவாக்க முடியும். 385 00:22:41,446 --> 00:22:42,489 ஒன்றாக." 386 00:22:45,700 --> 00:22:46,701 பரமரகசியம் 387 00:23:54,978 --> 00:23:56,980 வசனத் தமிழாக்கம் அருண்குமார்