1 00:00:09,135 --> 00:00:11,388 ஓல் கோலியை எனக்கு நன்றாகத் தெரியும், 2 00:00:11,388 --> 00:00:14,307 அது அவருக்கு பிடித்தமான விஷயங்கள் என்னவென்று எனக்கு நன்றாகத் தெரியும். 3 00:00:16,017 --> 00:00:17,018 உதாரணத்திற்கு, 4 00:00:17,018 --> 00:00:19,729 லூயிஸ் கரோல் எழுதிய ஆலிஸ் த்ரூ தி லுக்கிங் கிளாஸ். 5 00:00:19,729 --> 00:00:24,526 "பல விஷயங்களைப் பற்றி பேச நேரம் வந்துவிட்டது என்று சொன்னது வால்ரஸ்: 6 00:00:24,526 --> 00:00:29,364 ஷூக்கள், கப்பல்கள், மற்றும் முத்திரை மெழுகு... முட்டைக்கோசுகள் மற்றும் மன்னர்கள்... 7 00:00:29,364 --> 00:00:32,241 அதோடு கடல் ஏன் சூடாக இருக்கிறது..." 8 00:00:32,241 --> 00:00:34,953 "பன்றிகளுக்கு இறக்கைகள் உண்டா." 9 00:00:36,538 --> 00:00:40,166 மேகங்களுக்கு பெயரிடுவது மிகவும் பிடிக்கும். அதை அவர், தன் பாணியில் செய்வார். 10 00:00:40,166 --> 00:00:42,544 அதைப் பார்ப்பதற்கு கார்முகில் திரள் போல இருக்கிறது. 11 00:00:43,128 --> 00:00:44,671 எனக்கும் ஒரு பாணி இருக்கிறது. 12 00:00:44,671 --> 00:00:47,299 அது மோனிகா என்ற சோகமான எருமையை போல இருக்கிறது. 13 00:00:49,467 --> 00:00:52,721 அவர் நல்ல தோரணையின் பெரிய ரசிகையும் கூட. 14 00:00:52,721 --> 00:00:56,057 தலையை நிமிர்த்து, தோள்களை பின்புறமாக கொண்டுபோ. 15 00:00:56,725 --> 00:00:59,477 ஏன் என்னை சித்திரவதை செய்கிறீர்கள்? 16 00:00:59,477 --> 00:01:03,064 நல்ல தோரணை தன்னம்பிக்கையை வெளிப்படுத்த உதவும். 17 00:01:05,609 --> 00:01:07,861 அவருக்கு பிடிக்காததும் எனக்குத் தெரியும், 18 00:01:07,861 --> 00:01:12,949 அந்த பட்டியலில் முதலில் இருப்பது ஹம் செய்வது. 19 00:01:15,493 --> 00:01:18,163 நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கும்போது சத்தம் போட்டால், 20 00:01:18,163 --> 00:01:19,706 நீங்கள் ஒருவேளை மருத்துவரை பார்க்க வேண்டும். 21 00:01:34,471 --> 00:01:35,680 பாருங்கள், ஹம்மிங் பறவை. 22 00:01:36,598 --> 00:01:38,350 யாரும் அவ்வளவு சந்தோஷமாக இல்லை. 23 00:01:43,188 --> 00:01:46,650 ஒருநாள், ஓல் கோலி ஹம் செய்வதை பார்த்தபோது, 24 00:01:46,650 --> 00:01:49,069 ஏதோ சரியில்லை என்று தெரிந்தது. 25 00:01:50,737 --> 00:01:53,907 ஏதோ விபரீதமாக நடந்திருக்க வேண்டும். 26 00:01:59,746 --> 00:02:02,415 {\an8}நான் விரும்புகிறேன் நீ விரும்புகிறாய் 27 00:02:02,415 --> 00:02:04,167 நாம் விரும்புகிறோம் 28 00:02:05,293 --> 00:02:07,754 நான் எப்படியிருக்க விரும்புகிறேனோ அப்படியிருப்பேன் 29 00:02:07,754 --> 00:02:09,421 என் உரிமை 30 00:02:09,923 --> 00:02:12,842 முடியாது, என் தலைமுடியை நான் வெட்டிக்கொள்ளமாட்டேன் 31 00:02:12,842 --> 00:02:15,303 நான் எதை வேண்டுமானாலும் அணிவேன் 32 00:02:15,303 --> 00:02:21,434 நான் நானாக இருப்பதையே விரும்புகிறேன் 33 00:02:21,434 --> 00:02:24,062 நான் விரும்புவதில்லை நீ விரும்புவதில்லை 34 00:02:24,062 --> 00:02:27,023 நாம் என்ன செய்ய வேண்டும் என்று மற்றவர்கள் சொல்வதை நாம் விரும்புவதில்லை 35 00:02:27,023 --> 00:02:28,108 {\an8}"காதலில் ஓல் கோலி" 36 00:02:30,151 --> 00:02:31,236 {\an8}லூயிஸ் ஃபிட்ஸ்ஹியூ புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 37 00:02:32,654 --> 00:02:33,905 எனவே அவர் ஹம் செய்தார். 38 00:02:35,282 --> 00:02:37,242 -நான் ஹம் செய்வேன். -வலுவாக இழு. 39 00:02:39,661 --> 00:02:43,164 நத்தை உப்பை வெறுப்பது போல, ஓல் கோலிக்கும் ஹம் செய்வது பிடிக்காது. 40 00:02:43,915 --> 00:02:47,377 இரகசிய அரசாங்க நடவடிக்கைக்காக அவருக்கு பதிலாக ரோபோ மாற்றப்பட்டிருக்கலாம். 41 00:02:47,377 --> 00:02:48,879 பிறகு அவர் இதைச் செய்தார். 42 00:02:51,423 --> 00:02:53,174 அருமையாக இருக்கிறது. 43 00:02:53,174 --> 00:02:54,801 அருமையாக இல்லை. இது... 44 00:02:54,801 --> 00:02:56,011 வலுவாக இழு. 45 00:02:59,306 --> 00:03:00,932 இல்லை. மிகவும் வலுவாக இழுக்கிறாய். 46 00:03:01,516 --> 00:03:03,476 நீங்கள் என்ன செய்கிறீர்கள்? 47 00:03:04,603 --> 00:03:06,855 ஜிம்மி ஃபெல்ட்சர் கடந்த சீசனுக்கு பிறகு மூன்று இன்ச்கள் வளர்ந்து 48 00:03:06,855 --> 00:03:09,357 கூடைபந்து அணியில் என் இடத்தை பிடித்துவிட்டான். 49 00:03:11,026 --> 00:03:12,986 ஸ்போர்ட் அரை இன்சாவது வளர வேண்டும். 50 00:03:13,820 --> 00:03:15,238 இப்போது என் கையை இழுக்கிறாயா? 51 00:03:21,703 --> 00:03:22,913 நீ உதவலாம். 52 00:03:25,624 --> 00:03:28,376 நாங்கள் ஒவ்வொரு வாரமும் விளையாடும் டவுன் விளையாட்டால், 53 00:03:28,376 --> 00:03:29,711 எல்லாமே பழைய நிலைக்கு திரும்பும் என நம்பினேன். 54 00:03:29,711 --> 00:03:32,422 இங்கே நாங்கள் கற்பனை நகரத்தில் வாழும் கதாபாத்திரங்களை உருவாக்குவோம். 55 00:03:32,422 --> 00:03:35,592 ஹேய், ஓல் கோலி. நீங்கள் நெப்போலியன் போனபார்ட்டை சந்திக்க வேண்டும். 56 00:03:35,592 --> 00:03:36,927 அவர் உரையாற்றப் போகிறார். 57 00:03:36,927 --> 00:03:38,762 ஹேரியட், உன்னிடம் சொல்ல மறந்துவிட்டேன். 58 00:03:38,762 --> 00:03:41,014 இன்றிரவு விடுப்பு வேண்டும் என்று உன் அம்மாவிடம் கேட்டேன். 59 00:03:41,014 --> 00:03:44,768 ஆனால் ஒவ்வொரு திங்களன்றும் டவுன் விளையாடுவோம். அப்படிதானே செய்கிறோம். 60 00:03:44,768 --> 00:03:47,145 நாம் வேறொரு இரவு விளையாடலாம். 61 00:03:47,854 --> 00:03:52,108 சரி, ஓல் கோலி, இப்போதாவது சொல்லுங்கள். என்ன நடக்கிறது? 62 00:03:52,108 --> 00:03:53,777 நீ எதைப் பற்றி பேசுகிறாய்? 63 00:03:53,777 --> 00:03:55,528 நீங்கள் ஹம் செய்கிறீர்கள். 64 00:03:55,528 --> 00:03:57,656 நானா? வழக்கத்திற்கு மாறாக. நான் ஹம் செய்கிறேனா? 65 00:03:58,615 --> 00:04:00,158 எப்படியோ, இனிய இரவு, ஹேரியட். 66 00:04:28,228 --> 00:04:29,604 ஹலோ, கேத்தரின். 67 00:04:30,480 --> 00:04:31,773 ஹலோ, ஜார்ஜ். 68 00:04:31,773 --> 00:04:35,485 இவரை முன்பே பார்த்திருக்கிறேன். இவர் கார்சியாக்களின் டெலிவரிமேனாக இருந்தார். 69 00:04:36,069 --> 00:04:37,696 இவர் ஓல் கோலியுடன் என்ன செய்கிறார்? 70 00:04:37,696 --> 00:04:40,115 இன்று அழகாக இருக்கிறாய், கேத்தரின். 71 00:04:43,535 --> 00:04:46,204 ஹம் செய்கிறார், வாய்விட்டு சிரிக்கிறார்? 72 00:04:48,331 --> 00:04:50,250 வாழ்க்கை ஒரு பெரிய மர்மம். 73 00:04:50,250 --> 00:04:53,169 எல்லோரும் வேறொருவருடன் இருக்கும்போது வித்தியாசமானவர்களாக இருப்பார்களா? 74 00:04:53,169 --> 00:04:55,297 கண்டுபிடி. இது முக்கியமானதாக இருக்கலாம். 75 00:04:55,797 --> 00:04:58,091 கிரிகோரி 76 00:05:00,510 --> 00:05:03,597 ஓல் கோலி காதலிக்கிறாரா, என்ன? 77 00:05:03,597 --> 00:05:05,223 எனக்குத் தெரியாமல் இருக்கலாம். 78 00:05:06,975 --> 00:05:07,976 இருக்கலாம். 79 00:05:09,185 --> 00:05:10,562 சரி, நிச்சயமாக இருக்கலாம். 80 00:05:12,022 --> 00:05:13,815 அது அழகானது என்று நினைக்கிறேன். 81 00:05:13,815 --> 00:05:16,860 ஆம், உன் செவிலித்தாய் திருமணம் செய்துகொண்டு உன்னை விட்டுப் பிரிவதை நீ விரும்பினால். 82 00:05:16,860 --> 00:05:17,944 இல்லை. 83 00:05:18,653 --> 00:05:19,654 இல்லை. 84 00:05:20,238 --> 00:05:22,574 இல்லை. எங்களுக்குள் ஒரு விசேஷ பந்தம் இருக்கிறது. 85 00:05:22,574 --> 00:05:24,117 ஹேரியட். 86 00:05:24,117 --> 00:05:28,371 முடிந்துவிட்டதென்று சோகமாக இருக்காதே, அது நடந்ததே என்று சந்தோஷப்படு. 87 00:05:28,955 --> 00:05:31,082 என் அம்மா என்னிடம் அதை அடிக்கடி சொல்வார். 88 00:05:31,082 --> 00:05:33,001 எனக்கும் அதன் அர்த்தம் தெரியாது. 89 00:05:34,377 --> 00:05:36,421 அந்த நபரிடம் அவர் எதை விரும்புகிறார்? 90 00:05:36,421 --> 00:05:37,505 என் அறிவுரை வேண்டுமா? 91 00:05:37,505 --> 00:05:39,633 போய் புதிய கிரீன்ஸில்லா படத்தைப் பார். 92 00:05:39,633 --> 00:05:42,552 உன் பிரச்சினைகளைப் பற்றி யோசிக்காமல் இருக்க, டோக்கியோவை அழிக்கும் 93 00:05:42,552 --> 00:05:44,471 ஒரு இராட்சத டைனோசரைப் பார்ப்பது போல் வேறு எதுவும் இல்லை. 94 00:05:44,471 --> 00:05:46,514 அது ஒரு இராட்சத மிருகம். 95 00:05:46,514 --> 00:05:48,767 அவன் தவறாக புரிந்து கொண்டான் என்று நினைக்கிறேன். 96 00:05:48,767 --> 00:05:50,310 திரு. வால்டன்ஸ்டீனா? 97 00:05:50,310 --> 00:05:52,020 இல்லை, கிரீன்ஸில்லா. 98 00:05:52,020 --> 00:05:55,357 உனக்கு என்ன தேவை தெரியுமா, ஹேரியட்? இன்னொரு திட்டம், என்னைப் போலவே. 99 00:05:55,899 --> 00:05:59,778 இப்போது என் கூடைபந்து கனவு மங்கிவிட்டதால், நான் கணக்காளராக ஆக விரும்புகிறேன். 100 00:05:59,778 --> 00:06:01,238 இல்லை, நீ ஆகமாட்டாய். 101 00:06:01,238 --> 00:06:05,158 ஜிம்மி ஃபெல்ட்சர் உன்னைவிட உயரமாக இருக்கலாம். அதற்காக உன்னைவிட சிறந்தவன் என்று அர்த்தமல்ல. 102 00:06:05,700 --> 00:06:08,745 போடு, ஜிம்மி ஃபெல்ட்சர்! அப்படித்தான்! 103 00:06:11,122 --> 00:06:12,749 ஜிம்மிதான் சிறந்தவன்! 104 00:06:14,125 --> 00:06:16,586 சில நேரங்களில் எப்போது விலக வேண்டும் என்பதை நாம் அறிய வேண்டும். 105 00:06:17,087 --> 00:06:18,380 நீ விலகப் போவதில்லை. 106 00:06:18,380 --> 00:06:19,965 நீ போராட வேண்டும். 107 00:06:19,965 --> 00:06:21,508 அதிகமாக ஓடு, பளு தூக்கு, 108 00:06:21,508 --> 00:06:26,388 ஜிம்மி ஃபெல்ட்சரின் பலவீனங்களை கண்டறிந்து அவனை தோற்கடி. 109 00:06:28,139 --> 00:06:29,975 -சரி! -சரி! 110 00:06:29,975 --> 00:06:32,310 ஓல் கோலியை நம்மிடமிருந்து பிரிக்க அவரை அனுமதிக்கக் கூடாது! 111 00:06:32,310 --> 00:06:33,687 ஆம்! 112 00:06:34,521 --> 00:06:35,814 ஒரு நொடி... பொறு, என்ன? 113 00:06:36,815 --> 00:06:39,943 நான் திரு. வால்டன்ஸ்டீனை தடுக்க முயற்சித்தால், 114 00:06:39,943 --> 00:06:42,195 நான் அவரை நெருக்கமாகப் பின்தொடர வேண்டும், 115 00:06:42,195 --> 00:06:44,781 அவருடைய ஒவ்வொரு அசைவையும் கவனிக்க வேண்டும், 116 00:06:44,781 --> 00:06:48,410 எனக்குத் தேவையான அனைத்து தகவல்களும் கிடைக்கும் வரை உளவு பார்க்க வேண்டும். 117 00:07:02,173 --> 00:07:04,050 உங்கள் நன்கொடைக்கு நன்றி. 118 00:07:04,050 --> 00:07:05,552 மகிழ்ச்சி, மேடம். 119 00:07:06,136 --> 00:07:08,972 சரி, அவர் தாராளப் பண்புடையவர். 120 00:07:10,515 --> 00:07:12,142 நான் உங்களுக்கு உதவுகிறேன், பெண்மணியே. 121 00:07:12,767 --> 00:07:15,061 நன்றி, இனிமையான இளைஞனே. 122 00:07:16,104 --> 00:07:18,565 நீங்கள் கருணையுடையவர். 123 00:07:19,149 --> 00:07:21,443 ஆனால் தெளிவாக அவரிடம் ஏதோ தவறு இருக்கிறது. 124 00:07:27,949 --> 00:07:31,703 இல்லை, இவர் குழந்தைகளோடு நன்றாக பழகுகிறார். 125 00:07:33,121 --> 00:07:35,999 இரண்டு மணிநேரம் உளவு பார்த்த பிறகு, அவருக்கெதிராக எந்த ஆதாரமும் இல்லை. 126 00:07:37,083 --> 00:07:38,752 வீட்டிற்கு போகலாமென்று நினைத்தேன். 127 00:07:38,752 --> 00:07:40,420 ஹலோ, திரு. வால்டன்ஸ்டீன். 128 00:07:40,420 --> 00:07:42,756 இப்போதே தபால் வேண்டுமா, அல்லது வீட்டிற்கு வந்து தரவா? 129 00:07:42,756 --> 00:07:44,090 இப்போதே பெற்றுக் கொள்கிறேன். 130 00:07:44,090 --> 00:07:47,677 அதிர்ஷ்டவசமாக, ஒரு நல்ல உளவாளி ஒருபோதும் பின்வாங்கமாட்டார். 131 00:07:47,677 --> 00:07:50,096 திருமதி. வால்டன்ஸ்டீனுக்கு மட்டும் ஒன்று இருக்கிறது. 132 00:07:50,096 --> 00:07:52,182 திருமதி. வால்டன்ஸ்டீனா? 133 00:07:53,433 --> 00:07:54,976 யாருக்கு வந்திருக்கிறது? 134 00:07:57,395 --> 00:07:58,730 ஜார்ஜ். 135 00:08:01,233 --> 00:08:03,693 இவனை பூங்காவிற்கு அழைத்துப் போகிறேன். எப்போது வீட்டிற்கு வருவாய்? 136 00:08:03,693 --> 00:08:05,278 வேலை நேரம் முடிந்ததும் வருகிறேன். 137 00:08:12,661 --> 00:08:15,872 நான் ஆச்சரியப்பட்டேன், பயந்தேன், பிரமித்தேன். 138 00:08:15,872 --> 00:08:19,834 அவருக்கு இரகசிய மனைவியும், குழந்தையும் இருக்கிறார்களா? 139 00:08:19,834 --> 00:08:24,589 நான் ஓல் கோலியிடம் சொல்ல வேண்டும், ஆனால் இது மிகவும் முக்கியம். 140 00:08:24,589 --> 00:08:27,759 எனக்கு ஆதாரம் தேவை. எனக்கு அந்த தபால் வேண்டும். 141 00:08:27,759 --> 00:08:28,843 {\an8}திருமதி. வால்டன்ஸ்டீன் 142 00:08:31,721 --> 00:08:33,682 சீக்கிரம், கிளம்புங்கள். தாமதமாக போகாதீர்கள். 143 00:08:33,682 --> 00:08:35,683 ஷிஃப்பான் ஆடையை அணிந்திருக்க வேண்டும். 144 00:08:35,683 --> 00:08:36,810 வேறு ஆடையை மாற்ற வேண்டும். 145 00:08:36,810 --> 00:08:39,270 நீ ஏற்கனவே மூன்று முறை மாற்றிவிட்டாய், அன்பே. 146 00:08:39,270 --> 00:08:41,523 -நீங்கள் அழகாக இருக்கிறீர்கள், அம்மா. -அப்படியா நினைக்கிறாய்? 147 00:08:41,523 --> 00:08:43,108 நினைக்கவில்லை, தெரியும். 148 00:08:44,192 --> 00:08:45,527 இனிய மாலையாக அமையட்டும், செல்லம். 149 00:08:45,527 --> 00:08:47,529 செல்வி கோலி, அவள் 10 மணிக்குள் தூங்குகிறாளா என்று பாருங்கள். 150 00:08:47,529 --> 00:08:48,863 எப்போதும் செய்வது தானே? 151 00:08:50,365 --> 00:08:54,411 ஹேரியட், இன்றிரவு டவுன் விளையாடலாம் என்ன சொல்கிறாய்? 152 00:08:54,411 --> 00:08:57,247 நாம் எப்போதும் திங்களன்று டவுன் விளையாடுவோம் தானே. 153 00:08:57,247 --> 00:08:59,874 சில நேரங்களில் வித்தியாசமாக ஏதாவது செய்வது நன்றாக இருக்கும். 154 00:08:59,874 --> 00:09:02,085 நான் குச்சி ஐஸுக்காக ஏங்குகிறேன். 155 00:09:02,085 --> 00:09:04,671 சரி, நாம் டேசான்டிஸ் கடைக்கு போகலாம். 156 00:09:04,671 --> 00:09:09,676 உண்மையில், ஜேனியின் கூற்றுப்படி, கார்சியாக்களிடம் தான் நல்ல குச்சி ஐஸ் கிடைக்கும். 157 00:09:10,260 --> 00:09:13,722 அது அபத்தமானது, ஹேரியட். அது ஏழு தெருக்கள் தள்ளி இருக்கிறது. 158 00:09:13,722 --> 00:09:16,892 ஒரு குச்சி ஐஸுக்காக நாம் அவ்வளவு தூரம் நடக்கப் போவதில்லை. 159 00:09:17,475 --> 00:09:21,605 ஆனால் சில நேரங்களில் வித்தியாசமாக ஏதாவது செய்வது நன்றாக இருக்கும் என்று சொன்னீர்கள் தானே? 160 00:09:22,647 --> 00:09:24,482 சரி. 161 00:09:28,445 --> 00:09:29,738 ஹேரியட்? 162 00:09:34,951 --> 00:09:37,203 ஹேரியட், நீ என்ன செய்கிறாய்? 163 00:09:37,203 --> 00:09:39,915 நான் திரு. வால்டன்ஸ்டீனை தேடுகிறேன். 164 00:09:39,915 --> 00:09:45,170 அவரது ஜாக்கெட்டைத் தேடி, தபாலைக் கண்டுபிடித்து, அவரது மோசமான இரகசியத்தை அம்பலப்படுத்த வேண்டும். 165 00:09:45,670 --> 00:09:47,839 நான் குச்சி ஐஸை தேடுகிறேன். 166 00:09:47,839 --> 00:09:50,091 குச்சி ஐஸ் இங்கே இருக்கிறது. 167 00:09:50,091 --> 00:09:53,136 நல்ல பொருட்களை இங்கே வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். 168 00:09:54,971 --> 00:09:57,390 வாய்ப்பே இல்லை. அவை உருகிவிடும். 169 00:09:57,390 --> 00:09:59,851 சரிதான். என்னவொரு முட்டாள்தனம். 170 00:09:59,851 --> 00:10:04,564 நான் இங்கே இருப்பதால், கொஞ்சம் விலை குறைவான மிட்டாய்களை எடுத்துக் கொள்கிறேன். 171 00:10:04,564 --> 00:10:06,650 ரொம்ப நேரம் இங்கே இருக்க முடியாது, ஹேரியட். 172 00:10:06,650 --> 00:10:08,443 ஒரு நிமிடத்தில் வந்துவிடு. 173 00:10:08,443 --> 00:10:12,280 எதை எடுப்பதென்று தெரியவில்லை. நிறைய வகைகள் இருக்கின்றன. 174 00:10:13,073 --> 00:10:16,201 பாருங்கள். மெழுகு உதடு மிட்டாய்கள் இருக்கின்றன. 175 00:10:16,201 --> 00:10:20,455 நாற்பத்து ஐந்து, 44, 43. 176 00:10:20,455 --> 00:10:23,124 கேத்தரின், என்ன ஆச்சரியம். 177 00:10:25,043 --> 00:10:26,545 ஹலோ, ஜார்ஜ். 178 00:10:26,545 --> 00:10:30,549 திரு. வால்டன்ஸ்டீன் வந்துவிட்டார். ஆனால் அவரது ஜாக்கெட் எங்கே? 179 00:10:32,259 --> 00:10:33,885 நீங்கள் ஹேரியட்டை சந்திக்க விரும்புகிறேன். 180 00:10:34,678 --> 00:10:35,679 ஹலோ. 181 00:10:36,179 --> 00:10:38,515 இறுதியாக உன்னை நேரில் சந்திப்பதில் மகிழ்ச்சி, ஹேரியட். 182 00:10:38,515 --> 00:10:40,976 உன்னைப் பற்றி கேத்தரின் நிறைய சொன்னார். 183 00:10:40,976 --> 00:10:45,814 அப்படியா, ஏனென்றால் அவர் என்னிடம் ஒருமுறை கூட உங்களைப் பற்றி குறிப்பிட்டதில்லை. 184 00:10:46,481 --> 00:10:50,277 சரி, நான்... நாங்கள்... என்னை மன்னித்துவிடு, ஹேரியட். 185 00:10:50,277 --> 00:10:52,862 திரு. வால்டன்ஸ்டீன் என்னுடைய... 186 00:10:55,073 --> 00:10:56,575 காதலரா? 187 00:10:58,159 --> 00:10:59,327 அப்படியும் சொல்லலாம். 188 00:10:59,828 --> 00:11:00,870 இல்லையா? 189 00:11:03,248 --> 00:11:05,292 திரு. வால்டன்ஸ்டீன் பிஸியாக இருக்கிறார், ஹேரியட். 190 00:11:05,292 --> 00:11:07,502 அந்த மெழுகு உதடுகளுக்கு பணம் செலுத்திவிட்டு செல்வோம். 191 00:11:07,502 --> 00:11:10,422 என்ன தெரியுமா? நான் மீண்டும் குச்சி ஐஸ் மனநிலைக்கு வந்துவிட்டேன். 192 00:11:12,382 --> 00:11:13,800 அந்த மேலங்கி எங்கே? 193 00:11:13,800 --> 00:11:16,136 வெறுங்கையோடு போக நான் இவ்வளவு தூரம் வரவில்லை. 194 00:11:21,099 --> 00:11:23,393 கேத்தரின், நான் நினைத்தேன், 195 00:11:23,393 --> 00:11:26,605 எனது வேலை நேரம் முடிந்தது, உன்னுடனும் இந்த அழகு 196 00:11:26,605 --> 00:11:30,775 இளம் பெண்ணுடனும் சிறிது நேரம் செலவிடுவது மகிழ்ச்சியாக இருக்கும் என்று. 197 00:11:30,775 --> 00:11:33,653 நாம் எல்லோரும் ஏன் திரைப்படத்திற்கு போகக்கூடாது? 198 00:11:34,779 --> 00:11:36,615 எனக்குத் தெரியவில்லை. 199 00:11:36,615 --> 00:11:40,160 தயவுசெய்து. 200 00:11:40,160 --> 00:11:43,204 ஹேரியட், திரைப்படங்களுக்கு செல்வதைத் தவிர வேறு எதையும் நான் விரும்பவில்லை. 201 00:11:43,204 --> 00:11:47,083 ஆனால் 10 மணிக்குள் உன்னை தூங்கவைப்பேன் என்று உன் அம்மாவிடம் உறுதியளித்தேன், எனவே... 202 00:11:48,084 --> 00:11:50,170 ஆனால் இன்னும் 7 மணி கூட ஆகவில்லை. 203 00:11:50,170 --> 00:11:55,592 தெரியும், ஆனால் இப்போதைய திரைப்படங்கள் நிறைய நேரம் ஓடுகின்றன. 204 00:11:55,592 --> 00:11:57,510 நமக்கு நிறைய நேரம் இருக்கிறது. 205 00:11:57,510 --> 00:11:58,762 நேரமானாலும், 206 00:11:58,762 --> 00:12:02,891 அம்மா நீல நிற பட்டாடை அணிந்திருந்தார், அதன் அர்த்தம் உங்களுக்குத் தெரியும். 207 00:12:02,891 --> 00:12:05,936 அவர் நள்ளிரவு வரை வெளியே இருப்பார் என்று அர்த்தம். 208 00:12:07,354 --> 00:12:12,484 நீல நிற பட்டாடை சூரியன் உதிக்கும் வரை நடனமாடத் தூண்டும் என்று அம்மா சொல்வார். 209 00:12:13,818 --> 00:12:15,028 அப்போது முடிவெடுத்துவிட்டோம். 210 00:12:15,570 --> 00:12:18,031 கேத்தரின், நீ என்ன சொல்கிறாய்? 211 00:12:21,493 --> 00:12:24,454 சரி, ஆனால் நாம் நேரத்தில் கவனமாக இருப்போம், இல்லையா? 212 00:12:25,205 --> 00:12:28,458 நாம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கப் போகிறோம், இல்லையா? 213 00:12:36,258 --> 00:12:38,218 அவர் வண்டியில் என்ன பிரச்சினை? 214 00:12:38,218 --> 00:12:39,761 ஹேரியட், அமைதியாக இருக்கிறாயா? 215 00:12:39,761 --> 00:12:43,098 எப்படி இதை ஓட்டுகிறீர்கள்? எல்லாம் பழையதாகி கடகடக்கிறது. 216 00:12:43,098 --> 00:12:44,224 உண்மையில், ஹேரியட், 217 00:12:44,224 --> 00:12:48,436 இந்த வளைந்த முன் விளிம்பு விரைவான திருப்பங்களுக்கு மிகச்சரியானது. 218 00:12:50,188 --> 00:12:53,191 கடவுளே. நாம் எதை பார்ப்போம்? 219 00:12:54,234 --> 00:12:56,778 {\an8}"ஆட்டம் இஸ் ஃபார் லவ்வர்ஸ்" எப்படி? 220 00:12:56,778 --> 00:13:00,282 {\an8}இந்த ஆண்டின் சிறந்த காதல் படம் என்று செய்தித்தாளில் போட்டிருந்தார்கள். 221 00:13:11,960 --> 00:13:13,086 {\an8}கிரீன்ஸில்லா அட்டாக்ஸ் 222 00:13:27,851 --> 00:13:29,561 {\an8}"கிரீன்ஸில்லா அட்டாக்ஸ்" எப்படி? 223 00:13:29,561 --> 00:13:31,688 {\an8}இந்த தசாப்தத்தின் சிறந்த திகில் படம் என்று கேள்விப்பட்டேன். 224 00:13:31,688 --> 00:13:34,566 இது "ஆட்டம் இஸ் ஃபார் லவ்வர்ஸ்" ஐ விட சிறியது. 225 00:13:39,696 --> 00:13:40,947 {\an8}ஆம்! 226 00:13:43,033 --> 00:13:45,869 அவருடைய மேல் அங்கியில் இருந்து அந்தக் கடிதத்தை எடுக்கப் போகிறேன் என்றால், 227 00:13:45,869 --> 00:13:47,913 அவருக்கு அருகில் உட்கார வேண்டும். 228 00:13:47,913 --> 00:13:51,458 சரி, இரண்டு காதலர்களையும் பிரிப்பது வலியை ஏற்படுத்தாது. 229 00:14:07,724 --> 00:14:09,476 இதற்காக வருந்துகிறேன், ஜார்ஜ். 230 00:14:09,476 --> 00:14:12,854 பரவாயில்லை. ஹேரியட்டுக்கு பிடித்திருந்தால், எனக்கும் பிடிக்கும். 231 00:14:19,486 --> 00:14:22,572 வேறு யாருக்காவது குளிருகிறதா? நான் உறைந்து கொண்டிருக்கிறேன். 232 00:14:23,657 --> 00:14:27,202 அது, திரு. வால்டன்ஸ்டீன், உங்கள் மேல் அங்கியை கடனாக கொடுக்கிறீர்களா? 233 00:14:27,202 --> 00:14:28,620 இதோ, இதை எடுத்துக்கொள். 234 00:14:29,788 --> 00:14:32,123 அடுத்த திட்டத்துக்கான நேரம் இது. 235 00:14:33,041 --> 00:14:34,125 ஓல் கோலி. 236 00:14:34,125 --> 00:14:35,710 இப்போது என்ன? 237 00:14:35,710 --> 00:14:38,213 பாப்கார்னுக்கு கொஞ்சம் பணம் கிடைக்குமா? 238 00:14:55,689 --> 00:14:59,484 மன்னிக்கவும், மன்னிக்கவும். மன்னிக்கவும். வருந்துகிறேன். வழிவிடுங்கள். அச்சச்சோ! 239 00:14:59,484 --> 00:15:01,111 -ஹேரியட்! -அச்சச்சோ. 240 00:15:01,111 --> 00:15:05,949 திரு. வால்டன்ஸ்டீன், நான் மிகவும் வருந்துகிறேன். நான் ஒரு முட்டாள். 241 00:15:05,949 --> 00:15:08,743 பரவாயில்லை, ஹேரியட். நான் பார்த்துக் கொள்கிறேன். 242 00:15:08,743 --> 00:15:11,246 இல்லை. அது என்னுடைய தவறு. நான்... 243 00:15:11,246 --> 00:15:13,623 ஹேரியட், அவர் பார்த்துக்கொள்கிறேன் என்றார். 244 00:15:14,791 --> 00:15:18,295 உட்கார்ந்து சிக்கல் ஏற்படுத்துவதை நிறுத்து. 245 00:15:22,048 --> 00:15:26,636 இன்னும் குளிர்வதை என்னால் நம்ப முடியவில்லை. எனக்கு நடுங்குகிறது. 246 00:15:28,179 --> 00:15:29,890 தயவுசெய்து, என் அங்கியை எடுத்துக்கொள். 247 00:15:42,068 --> 00:15:45,739 கடவுளே. பாக்கெட்டில் என்ன இருக்கிறது? 248 00:15:47,616 --> 00:15:51,578 ஒரு உறை முகவரியில்... 249 00:15:53,496 --> 00:15:57,167 திருமதி. வால்டன்ஸ்டீன்! 250 00:15:57,918 --> 00:16:00,545 -உட்கார், சிறுமியே. உட்கார். -ஆம்! 251 00:16:01,671 --> 00:16:04,007 ஹேரியட், உனக்கு என்ன ஆனது? 252 00:16:04,007 --> 00:16:09,012 ஓல் கோலி, வலி மற்றும் சோகம் நிறைந்த வாழ்க்கையிருந்து உங்களை காப்பாற்றுகிறேன். 253 00:16:09,012 --> 00:16:12,641 திரு. வால்டன்ஸ்டீனுக்கு இரகசிய மனைவி இருக்கிறாள். 254 00:16:13,141 --> 00:16:15,477 {\an8}திருமதி. வால்டன்ஸ்டீன்? 255 00:16:15,477 --> 00:16:17,020 ஜார்ஜ்? 256 00:16:22,859 --> 00:16:24,444 நான் போக வேண்டும். 257 00:16:31,743 --> 00:16:34,037 {\an8}ஜார்ஜ், இதெல்லாம் என்ன? 258 00:16:35,580 --> 00:16:40,418 என் வாழ்க்கையில் ஒரு திருமதி. வால்டன்ஸ்டீன் இருக்கிறார், என் மனைவி அல்ல. 259 00:16:40,418 --> 00:16:42,837 அவர் என் அம்மா. 260 00:16:43,421 --> 00:16:46,967 ஆம், நான் என் அம்மாவுடன் வாழும் ஒரு வளர்ந்த மனிதன். 261 00:16:46,967 --> 00:16:49,553 மன்னிக்கவும், கேத்தரின், நான் அதை உன்னிடம் முன்பே சொல்லவில்லை. 262 00:16:49,553 --> 00:16:51,054 அது என்னை வருந்த செய்யாது. 263 00:16:51,054 --> 00:16:54,933 நீங்கள் முத்தமிட்ட அந்தப் பெண் யார்? குழந்தையுடன் இருந்தவர்? 264 00:16:55,642 --> 00:16:57,519 நீ அவரை உளவு பார்த்தாயா? 265 00:16:58,103 --> 00:17:00,063 நான் உங்களுக்காக விழிப்போடு இருந்தேன். 266 00:17:00,063 --> 00:17:02,357 {\an8}-உளவு பார்ப்பதா? -பூங்காவிற்குச் சென்றார்கள். 267 00:17:02,357 --> 00:17:06,444 அவளை காதலிப்பதாக சொன்னீர்கள். அவளையும் உன் குழந்தையையும் முத்தமிட்டீர்கள். 268 00:17:06,444 --> 00:17:07,612 {\an8}என்ன? 269 00:17:08,112 --> 00:17:09,863 {\an8}இல்லை, ஹேரியட். 270 00:17:09,863 --> 00:17:12,742 அது என் சகோதரியும் என் மருமகனும். 271 00:17:12,742 --> 00:17:15,203 அவர்கள் மாண்ட்ரீலில் இருந்து வந்திருக்கிறார்கள். 272 00:17:23,169 --> 00:17:26,548 என்னை மிகவும் ஏமாற்றம் அடையச் செய்துவிட்டாய். 273 00:17:26,548 --> 00:17:28,507 இல்லை, உங்களால் நான்தான் ஏமாற்றமடைந்தேன். 274 00:17:28,507 --> 00:17:31,011 நீங்கள்தான் இரகசிய காதலரை கொண்டவர். 275 00:17:31,011 --> 00:17:33,513 நேரம் வரும்போது சொல்லக் காத்திருந்தேன். 276 00:17:33,513 --> 00:17:35,682 {\an8}அது எப்போது வரும்? ஒருபோதும் வராதா? 277 00:17:35,682 --> 00:17:39,019 {\an8}ஹேரியட், உண்மையில் இது எதைப் பற்றியது? 278 00:17:39,936 --> 00:17:40,937 {\an8}எதைப்பற்றியும் இல்லை. 279 00:17:42,731 --> 00:17:47,193 உங்களுக்கு அவரை பிடித்திருக்கிறது, அதோடு அவருக்கு உங்களைப் பிடித்திருக்கிறது, 280 00:17:47,193 --> 00:17:50,572 நீங்கள் திருமணம் செய்துகொண்டு போய்விடுவீர்கள், திரும்பி வரமாட்டீர்கள்... 281 00:17:52,449 --> 00:17:53,783 ஹேரியட். 282 00:17:57,495 --> 00:17:59,456 நீங்கள் போவதை நான் விரும்பவில்லை. 283 00:17:59,456 --> 00:18:04,169 திரு. வால்டன்ஸ்டீனுக்கும் எனக்கும் இடையே என்ன நடக்கப் போகிறது என்று தெரியவில்லை. 284 00:18:05,670 --> 00:18:09,132 ஆனால் ஒரு நாள் நான் வெளியேற வேண்டும் என்பது தெரியும், 285 00:18:09,132 --> 00:18:10,759 ஏனென்றால் நீ வளர்ந்து வருகிறாய். 286 00:18:12,052 --> 00:18:15,931 ஆனால் நீ தயாராகும் வரை நான் செல்லமாட்டேன் என்று உறுதியளிக்கிறேன். 287 00:18:23,563 --> 00:18:26,358 {\an8}நான் உங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், திரு. வால்டன்ஸ்டீன். 288 00:18:26,358 --> 00:18:30,862 {\an8}ஒரு நிபந்தனையுடன் மன்னிப்பு ஏற்கப்பட்டது. 289 00:18:30,862 --> 00:18:31,947 {\an8}என்ன அது? 290 00:18:32,781 --> 00:18:35,867 {\an8}மீதிப் படத்தைப் பார்க்க மீண்டும் ஒரு நாள் நாம் திட்டமிடுவோம். 291 00:18:37,786 --> 00:18:38,787 {\an8}ஒப்புக்கொள்கிறேன். 292 00:18:41,248 --> 00:18:42,290 டாக்ஸி! 293 00:18:42,958 --> 00:18:43,959 இல்லை. 294 00:18:44,960 --> 00:18:46,836 கடவுளே! வெல்ஷ்கள். 295 00:18:47,921 --> 00:18:50,131 தியேட்டருக்கு அருகாமையில் பார்ட்டி நடப்பது தெரியுமா? 296 00:18:50,131 --> 00:18:51,383 -டாக்ஸி! -இல்லை. 297 00:18:51,383 --> 00:18:54,094 -அவர்கள் ஏன் சீக்கிரம் செல்கிறார்கள்? -டாக்ஸி! 298 00:18:55,929 --> 00:18:58,431 நீல நிற பட்டாடை ஒருபோதும் தவறு செய்யாது. 299 00:18:58,431 --> 00:19:00,308 வெள்ளி நிற காலணிகள். 300 00:19:00,892 --> 00:19:03,645 -அது மோசமானதா? -அவை கொப்புளங்களை ஏற்படுத்தும், 301 00:19:03,645 --> 00:19:05,897 அதாவது அவர் வீட்டிற்கு சென்று அவற்றை கழற்ற ஆர்வமாக இருப்பார். 302 00:19:05,897 --> 00:19:07,649 அவை நீல பட்டாடையை ரத்து செய்கின்றன. 303 00:19:08,817 --> 00:19:09,985 நீங்கள் சிக்கலில் இருக்கிறீர்களா? 304 00:19:09,985 --> 00:19:12,404 அவர்களுக்கு முன்பு நாங்கள் வீடு திரும்பவில்லை என்றால், ஆம். 305 00:19:12,404 --> 00:19:15,448 {\an8}ஏன், நான் ஏன் இந்த மோசமான யோசனைக்கு ஒப்புக்கொண்டேன்? 306 00:19:16,116 --> 00:19:17,534 {\an8}ஏனென்றால் நீங்கள் காதலிக்கிறீர்கள். 307 00:19:18,702 --> 00:19:20,287 {\an8}நான் குறிப்புகளை எடுத்துக்கொண்டிருக்கிறேன். 308 00:19:20,287 --> 00:19:21,580 {\an8}நம்மால் அதைச் செய்ய முடியும். 309 00:19:25,125 --> 00:19:26,251 நான் வேகமாக போவேன். 310 00:19:32,507 --> 00:19:33,842 சீக்கிரம்! அவர்களுக்குப் பிறகு. 311 00:19:34,843 --> 00:19:36,303 அவர்களை தொலைக்கப் போகிறோம். 312 00:19:37,345 --> 00:19:39,097 அவர்கள் போகிறார்கள்! 313 00:19:39,598 --> 00:19:41,433 நான் இருக்கும்போது நடக்காது! 314 00:19:41,433 --> 00:19:43,184 வேகமாக செல்லுங்கள்! 315 00:19:49,691 --> 00:19:51,943 பச்சை நிறமாக மாறு! 316 00:19:54,571 --> 00:19:55,947 செல்லுங்கள்! 317 00:20:01,453 --> 00:20:03,747 -அங்கு திரும்புங்கள். அது குறுக்குவழி. -சரி, மேடம்! 318 00:20:05,707 --> 00:20:07,417 நல்ல திருப்பும் திறன், திரு. டபிள்யூ. 319 00:20:07,417 --> 00:20:09,669 முன்பக்க சக்கரம் அதற்கு ஏற்றது என்றேனே! 320 00:20:12,464 --> 00:20:16,718 5வது அவென்யூ டிராபிக் ஜாம் ஆகப் போகிறது. கிழக்கே செல்லுங்கள். யார்க் தாண்டி. 321 00:20:22,557 --> 00:20:23,975 தசை பிடிப்பு ஏற்பட்டுவிட்டது என நினைக்கிறேன். 322 00:20:23,975 --> 00:20:27,270 -என்னால் முடியும். கூடையில் அமருங்கள். -வேண்டாம், ஹேரியட். அது அபத்தமானது. 323 00:20:27,270 --> 00:20:29,481 நீ மிகவும் சிறியவள், அவர் மிகவும் பெரியவர். 324 00:20:30,065 --> 00:20:31,650 என்னால் ஓட்ட முடியும்! 325 00:20:31,650 --> 00:20:34,361 உறுதியாவா? சமீபத்தில்தான் ஓட்டக் கற்றுக்கொண்டார். 326 00:20:35,278 --> 00:20:37,656 நீ என் மீது மோதியதை நினைவுகூர்கிறேன். 327 00:20:37,656 --> 00:20:40,867 கவலை வேண்டாம். நான் சிறந்தவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன். 328 00:20:46,915 --> 00:20:48,583 பொறுமை. உங்களால் இது முடியும். 329 00:20:48,583 --> 00:20:51,086 நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் செல்ல விரும்பும் திசையில் பாருங்கள். 330 00:20:56,883 --> 00:20:58,009 நன்றாக ஓட்டுகிறீர்கள். 331 00:20:58,927 --> 00:21:00,303 பிடித்துக்கொள்ளுங்கள்! 332 00:21:00,804 --> 00:21:03,473 என் வாழ்நாள் முழுவதும் ஓல் கோலியை எனக்குத் தெரியும். 333 00:21:03,473 --> 00:21:05,850 என்னை விட அவரை எனக்கு நன்றாகத் தெரியும் என நினைத்தேன். 334 00:21:06,643 --> 00:21:10,772 இருந்தாலும், கற்றுக்கொள்ள இன்னும் நிறைய இருக்கிறது என்பதை உணர்ந்தேன். 335 00:21:14,901 --> 00:21:17,320 -நாம் வந்துவிட்டோம்! -ஆம்! நாம் சாதித்துவிட்டோம்! 336 00:21:17,320 --> 00:21:19,155 நான் ஹேரியட்டை தூக்குகிறேன். நீ கதவைத் திற. 337 00:21:20,699 --> 00:21:21,700 தயாரா? 338 00:21:21,700 --> 00:21:22,909 ஆம். 339 00:21:24,202 --> 00:21:25,537 செல்வி கோலி? 340 00:21:25,537 --> 00:21:27,664 என் குழந்தையோடு என்ன செய்கிறீர்கள்? 341 00:21:27,664 --> 00:21:29,207 அடடா. 342 00:21:29,207 --> 00:21:30,417 ஹேரியட்? 343 00:21:33,795 --> 00:21:36,590 செல்வி கோலி, இங்கே என்ன நடக்கிறது? 344 00:21:36,590 --> 00:21:38,466 இந்த விசித்திரமானவர் யார்? 345 00:21:38,466 --> 00:21:40,927 அவர்... அவர்கள்... 346 00:21:42,220 --> 00:21:47,183 நான் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி என்னை அறிமுகப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். 347 00:21:47,684 --> 00:21:49,311 அதற்கு சற்று தாமதமாகிவிட்டது என நினைக்கிறேன். 348 00:21:49,311 --> 00:21:51,563 இங்கு நடப்பது எனக்குப் பிடிக்கவில்லை, செல்வி கோலி. 349 00:21:51,563 --> 00:21:54,065 அம்மா, நாங்கள் படத்திற்குச் சென்றிருந்தோம். 350 00:21:54,065 --> 00:21:56,610 ஹேரியட், உள்ளே போ. 351 00:21:57,861 --> 00:22:01,197 நீங்கள் இவ்வளவு சீக்கிரம் வீட்டிற்கு வருவீர்கள் என்று எங்களுக்குத் தெரியாது. 352 00:22:01,197 --> 00:22:04,784 அருமை. எனவே இருவரும் யாருக்கும் தெரியாமல் பின் வழியாக வீட்டிற்குள் 353 00:22:04,784 --> 00:22:05,952 வந்துவிடலாம் என நினைத்தீர்களா? 354 00:22:06,870 --> 00:22:09,456 வெள்ளி நிற காலணிகளை மறந்துவிட்டோம். 355 00:22:12,709 --> 00:22:15,128 செல்வி கோலி, நீங்கள் என்ன சொல்லப்போகிறீர்கள்? 356 00:22:16,880 --> 00:22:19,216 தெளிவாக, பாதுகாப்பற்ற இந்த மிதிவண்டியில் 357 00:22:19,216 --> 00:22:22,385 உறங்கும் நேரத்தைக் கடந்து ஒரு அந்நியருடன் ஹேரியட்டை உங்களுடன் 358 00:22:22,385 --> 00:22:26,348 அழைத்துச் செல்வது மிகவும் நல்லது என்று நீங்கள் நினைத்திருக்கிறீர்கள். 359 00:22:27,891 --> 00:22:30,268 திரு. வெல்ஷ், திருமதி. வெல்ஷ். 360 00:22:30,268 --> 00:22:31,937 எனது அடி மனதிலிருந்து, 361 00:22:31,937 --> 00:22:37,150 இது போன்ற ஒரு நிகழ்வு இனி ஒருபோதும் நடக்காது என்று உங்களிடம் உறுதியளிக்கிறேன். 362 00:22:37,150 --> 00:22:39,361 அது முடியாது என்று உங்களுக்கு உறுதியளிக்கிறேன். 363 00:22:39,361 --> 00:22:42,197 ஏனென்றால் செல்வி கோலி, நீங்கள் நீக்கப்பட்டீர்கள். 364 00:22:44,532 --> 00:22:47,202 நான் விரும்புகிறேன் நீ விரும்புகிறாய் 365 00:22:47,202 --> 00:22:48,954 நாம் விரும்புகிறோம் 366 00:22:50,080 --> 00:22:52,624 நான் விரும்புவதில்லை நீ விரும்புவதில்லை 367 00:22:52,624 --> 00:22:58,213 நாம் என்ன செய்ய வேண்டும் என்று மற்றவர்கள் சொல்வதை நாம் விரும்புவதில்லை 368 00:23:00,382 --> 00:23:06,054 அக்கம் பக்கத்தில் நல்லதைச் செய்ய நான் என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன் 369 00:23:06,054 --> 00:23:08,598 நான் நன்றாக சிரிக்கிறேன் 370 00:23:08,598 --> 00:23:11,893 நான் உண்மையைச் சொல்ல முயற்சி செய்கிறேன் 371 00:23:11,893 --> 00:23:14,479 நான் விரும்புகிறேன் நீ விரும்புகிறாய் 372 00:23:14,479 --> 00:23:16,398 நாம் விரும்புகிறோம் 373 00:23:17,274 --> 00:23:20,026 நான் விரும்புவதில்லை நீ விரும்புவதில்லை 374 00:23:20,026 --> 00:23:22,862 நாம் என்ன செய்ய வேண்டும் என்று மற்றவர்கள் சொல்வதை நாம் விரும்புவதில்லை 375 00:23:22,862 --> 00:23:25,448 நான் எப்படியிருக்க விரும்புகிறேனோ அப்படியிருப்பேன் 376 00:23:25,448 --> 00:23:27,450 என் உரிமை 377 00:23:28,159 --> 00:23:30,954 நான் விரும்புகிறேன் நீ விரும்புகிறாய் 378 00:23:30,954 --> 00:23:32,956 நாம் விரும்புகிறோம் 379 00:23:32,956 --> 00:23:35,792 முடியாது, என் தலைமுடியை நான் வெட்டிக்கொள்ளமாட்டேன் 380 00:23:35,792 --> 00:23:38,461 நான் எதை வேண்டுமானாலும் அணிவேன் 381 00:23:38,461 --> 00:23:44,134 நான் நானாக இருப்பதையே விரும்புகிறேன் 382 00:23:44,134 --> 00:23:47,053 நான் விரும்புவதில்லை நீ விரும்புவதில்லை 383 00:23:47,053 --> 00:23:51,850 நாம் என்ன செய்ய வேண்டும் என்று மற்றவர்கள் சொல்வதை நாம் விரும்புவதில்லை 384 00:23:51,850 --> 00:23:53,935 வசனத் தமிழாக்கம் அருண்குமார்