1 00:00:05,966 --> 00:00:09,844 ஓல் கோலி போய்விட்டதை என்னால் சமாளிக்க முடியாது என்று நினைத்தேன். 2 00:00:09,844 --> 00:00:12,764 ஆனால் என்ன விந்தை, நான் நன்றாக உணர்ந்தேன். 3 00:00:13,348 --> 00:00:15,850 நீங்கள் முதலில் புதிய காரில் ஏறும்போது அந்த புதிய காரின் 4 00:00:15,850 --> 00:00:18,812 வாசனையை நுகர்வீர்கள் தெரியுமா? 5 00:00:19,354 --> 00:00:22,274 என் வாழ்க்கை முழுவதும் அந்த வாசனை இருப்பது போல் உணர்ந்தேன். 6 00:00:22,816 --> 00:00:24,985 எனக்கு நானே ஒரு இறுதி சோதனை செய்துகொள்ள, 7 00:00:24,985 --> 00:00:28,321 ஓல் கோலியின் பழைய படுக்கையறையின் கதவைத் திறக்க முடிவு செய்தேன். 8 00:00:34,077 --> 00:00:36,663 நான் அழ ஆரம்பித்து என் தலைமுடியை பிய்த்துக்கொள்ளவில்லை என்றால், 9 00:00:36,663 --> 00:00:41,501 ஹேரியட்டின் காலத்தைத் தொடங்க தயாராக இருக்கிறேன் என்று அர்த்தம். 10 00:00:43,795 --> 00:00:45,171 மிக்க நன்றி. 11 00:00:47,173 --> 00:00:48,633 காலை வணக்கம், ஹேரியட். 12 00:00:49,384 --> 00:00:51,469 ஹேரியட், காலை வணக்கம். 13 00:00:51,469 --> 00:00:54,264 இன்று காலை என் செல்ல மகள் எப்படி இருக்கிறாள்? 14 00:00:54,264 --> 00:00:57,517 பெற்றோர் உங்களைப் பற்றி எவ்வளவு கவலைப்படுகிறார்கள் என்பதை அவர்கள் எவ்வளவு... 15 00:00:58,101 --> 00:01:00,729 உன் பிரபலமான தக்காளி சாண்ட்விச்சைப் பற்றி கவலைப்படாதே. 16 00:01:00,729 --> 00:01:03,732 ...வித்தியாசமாக பேசுகிறார்கள் என்பதன் மூலம் சொல்லலாம். 17 00:01:03,732 --> 00:01:06,276 சூப்பர் அம்மா அதை பார்த்துக்கொள்வார். 18 00:01:07,986 --> 00:01:11,364 உண்மையில், சூப்பர் அம்மா, அதை குறுக்காக வெட்டுவதுதான் எனக்குப் பிடிக்கும். 19 00:01:11,948 --> 00:01:13,158 நிச்சயமாக. 20 00:01:13,742 --> 00:01:15,201 நான் எப்படி மறந்தேன்? வெறும்... 21 00:01:15,952 --> 00:01:17,746 பயிற்சி சரியானதாக்குகிறது. 22 00:01:19,497 --> 00:01:24,961 அம்மா, ஓல் கோலியுடன் 5,027 சாண்ட்விச் சாப்பிட்டது அருமையான அனுபவம், 23 00:01:24,961 --> 00:01:28,798 ஆனால் இப்போது முன்னேறி புதியதை முயற்சிக்க வேண்டிய நேரம் இது. 24 00:01:28,798 --> 00:01:29,925 சூடான மதிய உணவு போல. 25 00:01:31,843 --> 00:01:33,803 அது ஒரு நல்ல யோசனை. 26 00:01:34,387 --> 00:01:36,056 அதுபோல நிறைய யோசனை என்னிடம் உள்ளது. 27 00:01:36,056 --> 00:01:37,140 போக வேண்டும். 28 00:01:39,559 --> 00:01:42,979 அந்த புதிய வாழ்க்கையின் வாசனையை வெல்ல முடியாது. 29 00:01:44,231 --> 00:01:47,150 {\an8}நான் விரும்புகிறேன் நீ விரும்புகிறாய் 30 00:01:47,150 --> 00:01:48,860 நாம் விரும்புகிறோம் 31 00:01:49,736 --> 00:01:51,988 நான் எப்படியிருக்க விரும்புகிறேனோ அப்படியிருப்பேன் 32 00:01:51,988 --> 00:01:54,407 என் உரிமை 33 00:01:54,407 --> 00:01:57,410 முடியாது, என் தலைமுடியை நான் வெட்டிக்கொள்ளமாட்டேன் 34 00:01:57,410 --> 00:01:59,579 நான் எதை வேண்டுமானாலும் அணிவேன் 35 00:01:59,579 --> 00:02:06,127 நான் நானாக இருப்பதையே விரும்புகிறேன் 36 00:02:06,127 --> 00:02:08,504 நான் விரும்புவதில்லை நீ விரும்புவதில்லை 37 00:02:08,504 --> 00:02:11,466 நாம் என்ன செய்ய வேண்டும் என்று மற்றவர்கள் சொல்வதை நாம் விரும்புவதில்லை 38 00:02:11,466 --> 00:02:12,551 {\an8}"ஹேரியட்டின் காலம்" 39 00:02:14,344 --> 00:02:15,679 {\an8}லூயிஸ் ஃபிட்ஸ்ஹியூ புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 40 00:02:16,555 --> 00:02:20,976 ஹேரியட்டின் காலத்தைத் தொடங்க ஒரு பாடல் தேவை என்று முடிவு செய்தேன். 41 00:02:25,230 --> 00:02:26,314 கபூம். 42 00:03:19,618 --> 00:03:20,619 நீ நலமா? 43 00:03:20,619 --> 00:03:21,912 ஒருபோதும் இவ்வளவு நன்றாக இருந்ததில்லை. 44 00:03:21,912 --> 00:03:23,496 "நிஜமாகவே," நன்றாக இருக்கிறாயா? 45 00:03:23,496 --> 00:03:25,248 அல்லது "நான் ஓல் கோலியை மிஸ் செய்கிறேன், 46 00:03:25,248 --> 00:03:27,417 உதவாக்கரை போல அழவும் கத்தவும் தொடங்கப்போகிறேன்" என்ற நன்றாக இருப்பதா? 47 00:03:27,417 --> 00:03:29,502 நீ என்ன செய்கிறாய்? 48 00:03:29,502 --> 00:03:33,256 என் நாக்கால் மூக்கைத் தொட முயற்சிக்கிறேன். 49 00:03:33,256 --> 00:03:34,799 இதற்கு முன்பு செய்ததில்லை. 50 00:03:35,300 --> 00:03:39,012 காலை வணக்கம், என் தைரியமான இளம் நடிகர்களே. 51 00:03:39,012 --> 00:03:41,389 அருமை! நான் செய்துவிட்டேன். 52 00:03:41,389 --> 00:03:43,350 வகுப்பு தொடங்கிவிட்டது, ஹேரியட். 53 00:03:43,350 --> 00:03:45,143 மன்னிக்கவும், செல்வி. எல்சன். 54 00:03:45,143 --> 00:03:49,648 நீங்கள் அனைவரும் அறிந்தபடி, இலையுதிர் கால அறுவடை நாள் நெருங்கிவிட்டது. 55 00:03:49,648 --> 00:03:53,068 நம்முடைய ஆண்டு வகுப்பு நாடகத்தோடு கொண்டாடும் நேரம். 56 00:03:53,068 --> 00:03:55,528 இப்போது, யாரிடம் யோசனை இருக்கிறது? 57 00:03:58,531 --> 00:03:59,866 ஏன் கவலைப்பட வேண்டும்? 58 00:03:59,866 --> 00:04:02,911 ஒவ்வொரு வருடமும், செல்வி. எல்சன் ஆலோசனைகளைக் கேட்டுவிட்டு, 59 00:04:02,911 --> 00:04:06,998 ஒவ்வொரு வருடமும் மேரியனின் மோசமான யோசனைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பார். 60 00:04:06,998 --> 00:04:10,585 செல்வி. எல்சன் மேரியனின் யோசனையை ஏன் நிராகரிக்க முடியாது என்பதற்கு ஒவ்வொருவருக்கும் 61 00:04:10,585 --> 00:04:11,586 ஒரு கோட்பாடு இருந்தது. 62 00:04:11,586 --> 00:04:14,923 -இரண்டு வார்த்தைகள். மன... -கட்டுப்பாடு. 63 00:04:14,923 --> 00:04:17,634 மேரியன் அவருக்கு உருளைக்கிழங்கு வறுவலை 64 00:04:17,634 --> 00:04:19,636 லஞ்சமாக கொடுக்கலாம். 65 00:04:20,845 --> 00:04:22,806 ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்? எனக்குத் தெரியாது. 66 00:04:22,806 --> 00:04:24,933 எனக்குத் தெரியும் என்று ஏன் நினைக்கிறீர்கள்? 67 00:04:25,892 --> 00:04:27,602 உண்மையில், நான் அதைக் கேள்விப்பட்டது... 68 00:04:29,521 --> 00:04:32,691 ஹாய், மேரியன். உனக்காக இருக்கையை சூடாக வைத்திருந்தேன். 69 00:04:33,817 --> 00:04:35,277 முடித்துவிட்டோம் என்று நினைக்கிறேன். 70 00:04:35,777 --> 00:04:38,530 கடற்கொள்ளையர்களை வைத்து ஏதாவது செய்வோம். அல்லது கரடிகளை வைத்து. 71 00:04:39,239 --> 00:04:41,575 மேடம் கியூரியும் அவரது கணவரும் ரேடியத்தையும் உண்மையான அன்பையும் எப்படி கண்டுபிடித்தார்கள் 72 00:04:41,575 --> 00:04:42,659 என்பது எப்படி? 73 00:04:42,659 --> 00:04:44,661 அல்லது கடற்கொள்ளையர்களும் கரடிகளும். 74 00:04:45,078 --> 00:04:47,998 விடுமுறை குளிர்காலம் வருவதைக் கொண்டாடுவதால், 75 00:04:47,998 --> 00:04:50,208 கதகதப்பாக இருப்பது பற்றி நாம் ஏன் எதுவும் செய்யக்கூடாது? 76 00:04:50,208 --> 00:04:53,169 ஆம், கையுறைகளுக்கு சல்யூட் வைக்கலாம். 77 00:04:53,169 --> 00:04:56,715 அல்லது இரயில் செல்லும் போது சுரங்கப்பாதையின் மேல் நிற்கும் போது, 78 00:04:56,715 --> 00:04:59,759 சூடான காற்று பேண்டை பறக்க செய்வது பற்றி. 79 00:04:59,759 --> 00:05:01,761 அதைத்தான் நான் சொல்ல வந்தேன். 80 00:05:01,761 --> 00:05:03,889 -ஒன்று போலவே... -யோசிப்பது. 81 00:05:05,348 --> 00:05:06,516 வேறு யாராவது? 82 00:05:07,017 --> 00:05:09,311 நான் என்ன சொல்வது? எல்லாவற்றுக்கும் ஒரு தொடக்கம் உண்டு. 83 00:05:09,936 --> 00:05:11,229 ஆம், ஹேரியட். 84 00:05:11,730 --> 00:05:15,609 {\an8}இலையுதிர் கால அறுவடை நாளில் இரவு உணவில் பெரிய வறுத்த கோழி எப்போதும் இருப்பதால்... 85 00:05:15,609 --> 00:05:16,693 {\an8}முக்கிய ரகசியம் 86 00:05:16,693 --> 00:05:18,528 {\an8}...அதோடு வரலாற்றில் ட்ரோஜன் போரைப் பற்றி படிப்பதால், 87 00:05:18,528 --> 00:05:22,157 கிரேக்கர்கள் ட்ரோஜன்களுக்கு பரிசளித்த பெரிய ட்ரோஜன் கோழியை செய்தால் என்ன? 88 00:05:22,157 --> 00:05:25,577 அதோடு அவர்கள் சாப்பிட தயாராக இருக்கும்போது, அவர்கள் பதுங்கியிருந்து தாக்கப்படுகிறார்கள். 89 00:05:30,123 --> 00:05:33,293 என்னால் இப்போது பார்க்க முடிகிறது. பள்ளியில் எனது நாடகம் வெற்றி பெறும், 90 00:05:33,293 --> 00:05:34,419 பிறகு பிராட்வே செல்வேன், 91 00:05:34,419 --> 00:05:36,755 பிறகு மாண்ட்ரீல், ஓல் கோலி அதைப் பார்ப்பார். 92 00:05:40,217 --> 00:05:44,262 மேரியன், எங்களை ஆவலில் வைத்திருப்பதை நிறுத்து. 93 00:05:44,930 --> 00:05:48,225 நாம் இலையுதிர் கால அறுவடை விருந்தில் உண்ணும் பொருட்களைப் போல வேடமணிந்து விடுமுறையை 94 00:05:48,225 --> 00:05:49,601 கௌரவிக்க பரிந்துரைக்கிறேன். 95 00:05:49,601 --> 00:05:52,771 அது பொருத்தமானது, அசலானது, தவிர, 96 00:05:52,771 --> 00:05:55,065 நான் ஏற்கனவே முழு நாடகத்தையும் எழுதிவிட்டேன். 97 00:05:55,565 --> 00:05:57,859 தெளிவாக தெரிகிறது, செல்வி. எல்சன் இது 98 00:05:57,859 --> 00:06:01,238 ஹேரியட்டின் காலம் என்ற செய்தியைக் கேட்கவில்லை. 99 00:06:02,072 --> 00:06:03,907 சபாஷ், மேரியன். 100 00:06:03,907 --> 00:06:06,993 நீ வறுத்த கோழியாக நடிக்க விரும்புவாய் என்று நினைக்கிறேன். 101 00:06:07,827 --> 00:06:08,995 மிகச்சரி. 102 00:06:08,995 --> 00:06:14,000 ரேச்சல் மற்றும் பெத் எலன், உங்கள் இருவரையும் ட்ரம்ஸ்டிக்குகளாகப் பார்க்கிறேன். 103 00:06:14,501 --> 00:06:18,129 திரு. மேத்யூஸ் மற்றும் பிங்கி, நீங்கள் சேனைக்கிழங்குகளாக இருக்கலாம். 104 00:06:18,129 --> 00:06:22,217 கேரி, உன்னை களைக்கோஸாகப் பார்க்கிறேன். 105 00:06:22,217 --> 00:06:25,804 ஜேனி மற்றும் ஸ்போர்ட் அற்புதமான உருளைக்கிழங்கு வறுவலாக இருப்பீர்கள். 106 00:06:25,804 --> 00:06:30,892 ஹேரியட், நீ வெங்காயமாக இருப்பது பற்றி என்ன சொல்கிறாய்? 107 00:06:32,686 --> 00:06:35,730 நான், "முடியாது, முடியவே முடியாது" 108 00:06:35,730 --> 00:06:38,233 என்று சொல்வேன். 109 00:06:38,233 --> 00:06:42,320 இல்லை. ஹேரியட், அது அபத்தமானது. 110 00:06:42,320 --> 00:06:44,739 வெங்காயங்கள் அழகானவை. 111 00:06:44,739 --> 00:06:47,075 அவை துர்நாற்றம் வீசும், அதோடு மக்களை அழ வைக்கும். 112 00:06:47,659 --> 00:06:50,287 முதல் பார்வையில் தெரிவதை விட நிறைய இருக்கிறது. 113 00:07:00,630 --> 00:07:02,632 நீ என்ன செய்ய முயற்சிக்கிறாய்? 114 00:07:02,632 --> 00:07:05,677 செல்வி. எல்சன் என்னிடம் நிஜமாகவே வெங்காயமாக இருக்க வேண்டும் என்றால், 115 00:07:05,677 --> 00:07:09,180 வெங்காயம் விழுவது போல் உருளும் வகையில் விழ கற்றுக்கொள்ள வேண்டும் என்றார். 116 00:07:13,226 --> 00:07:15,020 இது இலையுதிர் கால அறுவடை நாளுக்கான நாடகத்திற்காகவா? 117 00:07:15,020 --> 00:07:18,648 இல்லை, நான் ஜாலியாக இருப்பதால் வெங்காயமாக இருக்கிறேன். 118 00:07:19,232 --> 00:07:20,609 நான் கேட்டேன். 119 00:07:23,737 --> 00:07:24,946 இங்கே என்ன நடக்கிறது? 120 00:07:24,946 --> 00:07:26,489 அவள் வெங்காயமாக இருக்கிறாள். 121 00:07:26,489 --> 00:07:28,992 வெங்காயம் போல உணர வேண்டும் என்றால் வெங்காயம் போல 122 00:07:28,992 --> 00:07:30,994 விழ வேண்டும் என்று ஒரு நல்ல இயக்குனர் சொல்வார். 123 00:07:30,994 --> 00:07:33,288 நீ வெங்காயம் போல உணர்கிறாயா? 124 00:07:33,914 --> 00:07:35,457 கொஞ்சமும் இல்லை. 125 00:07:36,833 --> 00:07:39,502 செல்லம், நீ வெங்காயம் போல உணர வேண்டும். 126 00:07:40,420 --> 00:07:42,255 நான் வெங்காயமாக இருக்க விரும்பவில்லை. 127 00:07:42,255 --> 00:07:43,632 அதோடு அது ஒரு நல்ல விஷயம். 128 00:07:43,632 --> 00:07:46,009 இப்போதெல்லாம் வெங்காயத்திற்காக எத்தனை கதாப்பாத்திரங்கள் எழுதப்படுகின்றன? 129 00:07:46,009 --> 00:07:47,510 நீங்கள் மிகவும் புத்திசாலி. 130 00:07:47,510 --> 00:07:50,180 நீங்கள் வெங்காயம் போல உருண்டு விழுவதைப் பார்ப்போம். 131 00:07:50,180 --> 00:07:52,015 நான் செய்து காட்டுகிறேன். 132 00:08:00,190 --> 00:08:02,651 நீங்கள் வெங்காயம் போல் உணர்கிறீர்களா? 133 00:08:02,651 --> 00:08:05,570 முயற்சி செய்கிறேன், ஆனால் சின்ன வெங்காயம் போல தான் உணர முடிந்தது. 134 00:08:06,613 --> 00:08:07,614 மன்னிக்கவும். 135 00:08:07,614 --> 00:08:10,367 உனக்கு இது வேடிக்கையானதாக தோன்றினால், ஏன் முயற்சி செய்யக்கூடாது? 136 00:08:10,951 --> 00:08:12,327 ஒருவேளை நான் செய்யலாம். 137 00:08:18,166 --> 00:08:19,876 இப்போது நான் வெங்காயமாக இருப்பதால், 138 00:08:19,876 --> 00:08:22,796 மேசையாக இருப்பது எப்படி இருக்கும் என்று எனக்கு வியப்பாக இருக்கிறது. 139 00:08:22,796 --> 00:08:25,465 அல்லது குளியல் தொட்டியாக. வேறொரு நபராக. 140 00:08:30,762 --> 00:08:33,306 அதற்கு ஓல் கோலி என்ன சொல்வார் என்று வியப்பாக இருக்கிறது. 141 00:08:34,599 --> 00:08:35,808 கார்சியாஸ் கார்னிசெரியா ஒய் பனடேரியா 142 00:08:35,808 --> 00:08:37,726 ஓல் கோலி பற்கள் கொண்ட பறவை போல தோற்றமளிப்பார், 143 00:08:37,726 --> 00:08:40,772 ஆனால் நான் நிஜமாகவே கொஞ்சம் வெங்காயம் போல இருப்பதாக நினைக்கிறேன். 144 00:08:41,273 --> 00:08:45,527 அந்த கொடுமைக்கு பிறகு, என்னை முழுவதுமாக வெங்காயமாக்கிக்கொள்ள முடிவு செய்தேன், 145 00:08:46,027 --> 00:08:48,238 நான் இன்னும் ஆராய்ச்சி செய்ய வேண்டியிருந்தது. 146 00:08:48,738 --> 00:08:51,575 என்னிடம் அதிக கந்தகச் சத்து இருப்பதால், 147 00:08:51,575 --> 00:08:55,537 மஞ்சள் வெங்காயம் மிகவும் அதிக சுவை கொண்டதாக அறியப்படுகிறேன். 148 00:08:56,162 --> 00:08:58,498 என்னிடம் கந்தகச் சத்து குறைவாக இருப்பதால், 149 00:08:58,498 --> 00:09:02,878 பெர்முடா வெங்காயம் மிகவும் இனிப்பான சுவைக்கு பிரபலமானது. 150 00:09:02,878 --> 00:09:05,672 அந்த முட்டாளின் பேச்சைக் கேட்காதே. 151 00:09:05,672 --> 00:09:09,426 இனிப்பான மற்றும் மிகவும் அதிக சுவை வேண்டும் என்றால், 152 00:09:09,426 --> 00:09:11,386 உனக்கு இருப்பது ஒரே தேர்வு. அது... 153 00:09:11,386 --> 00:09:13,597 -பெர்முடா வெங்காயம் தான். -இல்லை, அது... 154 00:09:13,597 --> 00:09:15,974 மஞ்சள் வெங்காயம் தான். நினைவிருக்கட்டும். 155 00:09:17,183 --> 00:09:19,352 இல்லை, விடாலியா வெங்காயம் தான். 156 00:09:20,186 --> 00:09:22,314 பிறகு, நூலகத்தில் சில புத்தகங்கள் எடுத்து 157 00:09:22,314 --> 00:09:25,442 எல்லா வகையான வசீகரிக்கும் விஷயங்களையும் கற்றுக்கொண்டேன். 158 00:09:25,442 --> 00:09:29,863 நியூயார்க் நகரம் பிக் ஆனியன் என்று அழைக்கப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா? 159 00:09:29,863 --> 00:09:32,324 ஏனென்றால் இந்த நகரத்தையும் அதன் மக்களையும் பற்றி தோண்டத்தோண்ட 160 00:09:32,324 --> 00:09:35,994 நிறைய விஷயங்கள் முடிவில்லாமல் வந்துகொண்டே இருக்கும். 161 00:09:36,578 --> 00:09:39,873 அல்லது பண்டைய எகிப்தியர்கள் வெங்காயத்தை வணங்கினார்கள். 162 00:09:39,873 --> 00:09:42,417 அதன் கோள வடிவும், பொது மையம் கொண்ட 163 00:09:42,417 --> 00:09:46,296 வட்டங்களும் முடிவிலியை அடையாளப்படுத்துவதாக நம்பப்படுகிறது. 164 00:09:46,296 --> 00:09:47,756 நான் அதிகம் படிக்கப் படிக்க, 165 00:09:47,756 --> 00:09:52,219 ஓல் கோலியின் புகழ்பெற்ற மேற்கோள்களில் ஒன்றை நான் புரிந்துகொள்ள ஆரம்பித்தேன். 166 00:09:52,719 --> 00:09:54,304 தஸ்தாயெவ்ஸ்கி கூறினார், 167 00:09:54,304 --> 00:09:56,306 "நீங்கள் எல்லாவற்றையும் நேசித்தால், 168 00:09:56,306 --> 00:10:00,018 எல்லாவற்றிலும் தெய்வீக இரகசியத்தை உணர்வீர்கள்" என்று. 169 00:10:07,734 --> 00:10:10,237 அடுத்த நாள் எங்கள் உடைகள் கிடைத்ததும், 170 00:10:10,237 --> 00:10:12,447 தஸ்தாயெவ்ஸ்கி என்னை அபத்தமான வெங்காய உடையில் 171 00:10:12,447 --> 00:10:16,034 பார்த்திருந்தால் என்ன சொல்லியிருப்பார் என்று நான் வியந்தேன். 172 00:10:16,034 --> 00:10:18,745 குறைந்த பட்சம் என்னுடைய குறிப்பேட்டை மறைக்க ஒரு இரகசிய பாக்கெட்டாவது இருந்ததே. 173 00:10:18,745 --> 00:10:21,581 அது எனக்கு அதிகம் அரிப்பை ஏற்படுத்தவில்லை. 174 00:10:21,581 --> 00:10:24,042 அல்லது கேரி ஆண்ட்ரூஸின் களைக்கோசு ஆடையின் 175 00:10:24,042 --> 00:10:27,754 வினோதமான விவரத்தைத் தவிர பரவாயில்லை. 176 00:10:30,590 --> 00:10:33,426 இது ஏன் களைக்கோசு போல நாற்றமடிக்கிறது? 177 00:10:34,511 --> 00:10:38,139 பிங்கியும் ஊதா நிற காலுறையும் பொருத்தமான சேனைக்கிழங்கு உடையில் வந்தனர். 178 00:10:38,139 --> 00:10:40,308 நீ "சுவையான சேனைக்கிழங்கு" போல இருக்கிறாய். 179 00:10:40,308 --> 00:10:43,562 நீ "அருமையான சேனைக்கிழங்கு" போல இருக்கிறாய். 180 00:10:46,189 --> 00:10:48,567 ரேச்சலும் பெத் எலனும் டிரம்ஸ்டிக்குகளாக வந்தனர். 181 00:10:48,567 --> 00:10:50,986 விழப் போகிறேன். என்னைப் பிடி. 182 00:10:51,861 --> 00:10:54,322 சரி. மன்னித்துவிடு, பெத் எலென். கைகள் இல்லை. 183 00:10:55,782 --> 00:10:57,242 நீங்கள் எதிர்பார்ப்பது போல, 184 00:10:57,242 --> 00:11:03,123 மேரியனின் கோழி வறுவல் உடை மிகவும் பிரமாதமாக இருந்தது. 185 00:11:03,123 --> 00:11:08,503 என்ன? பிராட்வே நாடகங்களுக்கு உடை தைக்கும் அத்தை எல்லோருக்கும் இருப்பதில்லையா? 186 00:11:10,589 --> 00:11:16,386 முதலில், நீங்கள் எல்லோரும் சாப்பிடும் அளவுக்கு அழகாக இருக்கிறீர்கள் என்று சொல்வேன். 187 00:11:18,430 --> 00:11:19,848 சாப்பிடும் அளவுக்கு அழகாக. 188 00:11:25,270 --> 00:11:29,482 எனக்கு உதவப் போகிறீர்களா, அல்லது உங்களை பட்டியலில் சேர்க்கவா? 189 00:11:30,150 --> 00:11:30,984 பட்டியல் 190 00:11:30,984 --> 00:11:33,028 ரேச்சலிடம் அவள் பழிவாங்கப் போகும் 191 00:11:33,028 --> 00:11:35,196 எல்லா நபர்களின் நீண்ட பட்டியல் இருந்தது. 192 00:11:35,196 --> 00:11:36,698 திரு. ஹோரேஷியோ. 193 00:11:37,699 --> 00:11:39,409 நன்றி, திரு. ஹோரேஷியோ. 194 00:11:39,409 --> 00:11:40,702 பரவாயில்லை. 195 00:11:41,411 --> 00:11:43,997 ஆம். சரி, நான் உன்னைப் பிடித்துக்கொண்டேன். 196 00:11:43,997 --> 00:11:47,375 எழுந்துவிட்டாய், ரேச்சல். ஒன்றும் பிரச்சினையில்லை. 197 00:11:48,627 --> 00:11:49,628 உதவி. 198 00:11:49,628 --> 00:11:54,424 நமது முதல் ஒத்திகையை, "நம்முடைய கதாப்பாத்திரங்களாக மாறக் கற்றுக்கொள்வதற்கான 199 00:11:54,424 --> 00:11:58,720 முதல் படி என்ன?" என்று நம்மை நாமே கேட்டுக்கொள்வதன் மூலம் தொடங்குவோம். 200 00:11:58,720 --> 00:12:04,017 என்னைப் பொறுத்தவரை, இது உண்மையில் ஆழமாக என் கதாப்பாத்திரத்தை அறிந்து கொள்வது. 201 00:12:04,017 --> 00:12:08,521 என், ஹேரியட், நீ சிறந்த நடிகை இல்லையா? 202 00:12:08,521 --> 00:12:13,652 உண்மையில், இது நல்ல ஆலோசனை என்று நினைக்கிறேன், ஹேரியட். 203 00:12:13,652 --> 00:12:19,783 எல்லோரும் நம் கதாப்பாத்திரங்களை அறிந்துகொள்ள சிறிது நேரம் செலவிடுவோம். 204 00:12:22,452 --> 00:12:24,454 மன்னிக்கவும், பெத் எலென், நீ என் கண்ணுக்கு தெரியவில்லை. 205 00:12:29,834 --> 00:12:31,294 கவனமாக இரு. 206 00:12:31,294 --> 00:12:33,171 கோழிக்கறிக்கு டிரம்ஸ்டிக்குகள் தேவை. 207 00:12:37,926 --> 00:12:39,010 என் மீதிருந்து எழுந்திருங்கள். 208 00:12:39,010 --> 00:12:41,304 எங்கள் முதல் வார ஒத்திகையின் முடிவில், 209 00:12:41,304 --> 00:12:44,766 நான் பக்க உணவுகளின் அதிகாரப்பூர்வமற்ற தலைவியாக ஆனேன். 210 00:12:44,766 --> 00:12:46,518 நாம் பக்க உணவுகள் மட்டுமே என்று எனக்குத் தெரியும். 211 00:12:46,518 --> 00:12:49,729 ஆனால் நாம் ஒன்றுபட்டால், மாற்றத்தை ஏற்படுத்தலாம். 212 00:12:50,939 --> 00:12:52,274 நாங்கள் தயார்! 213 00:12:53,650 --> 00:12:57,404 செல்வி. எல்சன், ஹேரியட் எனது நாடகத்தில் புதிய வரிகளை எழுதுகிறாள். 214 00:12:59,406 --> 00:13:03,243 இது ஒரு நல்ல கதை, மேரியன். 215 00:13:03,243 --> 00:13:07,831 பக்க உணவுகளும் அபிப்பிராயங்களை சொல்லலாம் என்று நினைக்கிறேன். 216 00:13:07,831 --> 00:13:09,124 நான் பார்க்கலாமா? 217 00:13:11,751 --> 00:13:14,045 நீ என்ன நினைக்கிறாய் என்று புரிகிறது, ஹேரியட். 218 00:13:14,045 --> 00:13:16,172 வறுத்த கோழிதான் நட்சத்திரம். 219 00:13:16,172 --> 00:13:20,427 ஆனால் பக்க உணவுகள் இல்லாமல், இலையுதிர் கால அறுவடை விருந்து இருக்காது. 220 00:13:21,011 --> 00:13:22,512 மிகச்சரி. 221 00:13:22,512 --> 00:13:25,765 நான் எழுதும் உரையில் அந்த வரியைப் பயன்படுத்துவதில் உங்களுக்கு ஆட்சேபம் இல்லையே? 222 00:13:25,765 --> 00:13:27,767 அது புத்திசாலித்தனமானது. 223 00:13:29,102 --> 00:13:30,896 அது உன்னுடையது. 224 00:13:31,980 --> 00:13:34,399 நன்றாக செய்தாய், ஹேரியட் எம். வெல்ஷ். 225 00:13:34,399 --> 00:13:36,484 நன்றாக செய்தாய். 226 00:13:40,155 --> 00:13:43,617 மேரியனின் கதையை சரிசெய்வது நான் நினைத்ததை விட மிகவும் கடினமாக இருந்தது. 227 00:13:44,993 --> 00:13:46,703 ஹலோ, ஹேரியட். 228 00:13:46,703 --> 00:13:48,455 ஓல் கோலி. 229 00:13:50,957 --> 00:13:52,459 மாண்ட்ரீல் எப்படி இருந்தது? 230 00:13:52,459 --> 00:13:54,586 கொஞ்சம் பிரெஞ்சு கற்றுக்கொண்டேன். 231 00:13:56,963 --> 00:13:59,132 அதற்கு "எழுத்து எப்படிப் போகிறது?" என்று அர்த்தம். 232 00:14:01,009 --> 00:14:02,135 பதட்டமாக இருக்கிறேன். 233 00:14:02,135 --> 00:14:05,847 நான் இதுவரை என் எழுத்தை வேறு யாரிடமும் காட்டியதில்லை. 234 00:14:05,847 --> 00:14:07,390 என் எழுத்தில் குறை இருந்தால்? 235 00:14:07,390 --> 00:14:12,771 இது எழுத்தாளர் சாமுவேல் பெக்கெட் வாழ்க்கையைப் பற்றி சொன்னது, இது எழுதுவதற்கும் பொருந்தும். 236 00:14:12,771 --> 00:14:16,191 "என்னால் தொடர முடியாது. நான் தொடர்வேன்." 237 00:14:17,025 --> 00:14:18,401 எனவே, அதுபடி செயல்படு. 238 00:14:19,194 --> 00:14:20,946 இல்லை, போகாதீர்கள். 239 00:14:21,446 --> 00:14:23,531 ஒவ்வொரு இரவும் நீங்கள் எனக்கு போர்வையை போர்த்திவிட்டு 240 00:14:23,531 --> 00:14:25,450 தூங்கச் செல்லும் நேரம் என்று சொல்ல வேண்டும். 241 00:14:25,450 --> 00:14:29,037 என் பெற்றோர் அப்படிச் செய்வதில்லை. அதோடு நான் உங்களை பிரிந்து வாடுகிறேன். 242 00:14:30,497 --> 00:14:34,000 அவ் ரிவோர், ஹேரியட். அவ் ரிவோர். 243 00:14:34,668 --> 00:14:36,545 அதற்கு பிரெஞ்சு மொழியில்... 244 00:14:36,545 --> 00:14:38,129 பிரியாவிடை என்று அர்த்தம். 245 00:14:41,925 --> 00:14:45,595 என் வயதில் இப்படி செய்யக்கூடாது என்று எனக்குத் தெரியும். 246 00:14:45,595 --> 00:14:47,013 ஆனால் இது ஒரு அவசரநிலை, 247 00:14:47,013 --> 00:14:50,809 அதற்கு ஒரே தீர்வு எனக்கு ஐந்து வயதாகிவிட்டதாக பாசாங்கு செய்வதுதான். 248 00:15:09,995 --> 00:15:12,163 ஓல் கோலி என்னைக் காப்பாற்றப் போவதில்லை, 249 00:15:12,163 --> 00:15:14,666 மீண்டும் ஐந்து வயது போல பாசாங்கு செய்வதும் காப்பாற்றவில்லை. 250 00:15:18,086 --> 00:15:20,964 எனக்கான ஆதரவு நிரந்தரமாக போய்விட்டது. 251 00:15:20,964 --> 00:15:26,177 என்னைக் காப்பாற்றப் போகிற ஒரே நபர் ஹேரியட் எம். வெல்ஷ் தான். 252 00:15:29,055 --> 00:15:35,687 "நண்பர்களே, ரோமானியர்களே, காய்கறிகளே, நான் சொல்வதைக் கேளுங்கள்." 253 00:15:37,314 --> 00:15:38,315 நன்றாக இல்லை. 254 00:15:40,317 --> 00:15:46,531 "நாம் முன் உணவுகளாக இருக்கலாம் எனும்போது ஏன் பக்க உணவுகளாக இருக்க வேண்டும்?" 255 00:15:47,991 --> 00:15:49,784 முன் உணவுகளா? 256 00:16:02,756 --> 00:16:06,968 சரி, நாம் "உருளைக்கிழங்குகளாக" கிளம்பினோம் 257 00:16:06,968 --> 00:16:10,847 சுவையான ஊருக்கு இரயிலில் 258 00:16:10,847 --> 00:16:15,727 நாம் வாணலியில் அழகாக நடனமாடி பொன்னிறமாக வறுபட்டோம் 259 00:16:15,727 --> 00:16:20,941 மிருதுவான தின்பண்டங்கள் என்று வரும்போது நாம் தங்க கிரீடத்தை அணிவோம் 260 00:16:20,941 --> 00:16:22,943 அந்தப் பாடல் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை, 261 00:16:22,943 --> 00:16:25,862 ஆனால் அது எப்படி முடிகிறது என்பதை நான் நிச்சயமாக பார்க்க விரும்பினேன். 262 00:16:25,862 --> 00:16:30,992 சுவையான நகரத்திற்கு வழி காட்டுவோம் 263 00:16:33,453 --> 00:16:37,916 செல்வி. எல்சன், ஹேரியட் சில வரிகளை எழுத அனுமதிக்க நான் கனிவோடு ஒப்புக்கொண்ட போது, 264 00:16:37,916 --> 00:16:40,293 என் நாடகத்தை அவள் இசை நாடகமாக மாற்ற அனுமதிக்க 265 00:16:40,293 --> 00:16:41,753 நான் ஒப்புக்கொள்ளவில்லை. 266 00:16:42,587 --> 00:16:47,217 மேரியன், நீ ஏன் வருத்தப்படுகிறாய் என்று எனக்குப் புரிகிறது. 267 00:16:47,801 --> 00:16:50,720 அதற்கு ஏதாவது செய்ய வேண்டிய நேரம் இது. 268 00:16:50,720 --> 00:16:55,934 நீ இப்போது உணரும் உணர்ச்சிகள், கோபம், வெறுப்பு, பொறாமை. 269 00:16:56,601 --> 00:17:01,773 அந்த உணர்வுகளில் ஒன்றில் மூழ்க முயற்சி செய், அதிலிருந்து என்ன வெளிப்படுகிறது என்பதைப் பார். 270 00:17:01,773 --> 00:17:03,149 ஆனால், செல்வி. எல்சன்... 271 00:17:03,149 --> 00:17:07,529 நடிப்பு ஒரு பயணம், மேரியன். இப்போது பயப்படாதே. 272 00:17:07,529 --> 00:17:10,282 இப்போது, ஹேரியட். முதலில் இருந்து தொடங்குவோம். 273 00:17:10,282 --> 00:17:14,035 எல்லா பக்க உணவுகளும் குழு பாடலில் இணைய விரும்புகிறேன். 274 00:17:15,203 --> 00:17:19,708 ஒன்று, இரண்டு, மூன்று. 275 00:17:24,004 --> 00:17:27,007 நான் ஏதாவது சரியாகச் செய்திருக்க வேண்டும், ஏனென்றால் அடுத்த நாள், 276 00:17:27,007 --> 00:17:30,051 எல்லா பக்க உணவுகளும் அவற்றின் கதாபாத்திரங்களில் வேலை செய்தன. 277 00:17:30,719 --> 00:17:35,432 நான் சேனைக்கிழங்கு தான். 278 00:17:35,432 --> 00:17:37,976 சிறுவர்களே, தயவு செய்து கூச்சலிடுவதை நிறுத்துவீர்களா? 279 00:17:38,727 --> 00:17:39,978 உனக்கு உருளைக்கிழங்கு வறுவல் வேண்டுமா? 280 00:17:42,022 --> 00:17:46,902 சரி, நாம் "உருளைக்கிழங்குகளாக" கிளம்பினோம் சுவையான ஊருக்கு இரயிலில் 281 00:17:46,902 --> 00:17:48,778 நாம் வாணலியில் அழகாக நடனமாடி 282 00:17:48,778 --> 00:17:51,197 -பொன்னிறமாக வறுபட்டோம் -வரிசை நகராமல் தடுக்கிறாய். 283 00:17:51,197 --> 00:17:55,452 மிருதுவான தின்பண்டங்கள் என்று வரும்போது நாம் தங்க கிரீடத்தை அணிவோம் 284 00:17:55,452 --> 00:18:00,624 சுவையான நகரத்திற்கு வழி காட்டுவோம் 285 00:18:03,627 --> 00:18:08,924 நான் ஒரு களைக்கோசு. 286 00:18:09,966 --> 00:18:10,967 அருவருப்பு. 287 00:18:10,967 --> 00:18:14,930 அழுகிய முட்டை போல நாற்றமுடைய ஒன்றாக இருக்க நீ எப்படி விரும்புவாய்? 288 00:18:14,930 --> 00:18:18,225 களைக்கோசை முறையற்ற முறையில் சமைப்பதில் இருந்துதான் 289 00:18:18,225 --> 00:18:20,644 அழுகிய முட்டை வாசனை வருகிறது. 290 00:18:20,644 --> 00:18:23,230 மெதுவாக வேகவைத்து ஒழுங்காக தயார் செய்யும்போது, 291 00:18:23,230 --> 00:18:26,816 களைக்கோசு இனிப்பாக, சுவையோடு, மிருதுவாக இருக்கும். 292 00:18:27,525 --> 00:18:32,948 நான் ஒரு களைக்கோசு. 293 00:18:35,283 --> 00:18:36,576 இது எப்போது நிற்கப் போகிறது? 294 00:18:36,576 --> 00:18:40,080 நடிப்பு ஒரு பயணம், மேரியன். பயப்படாதே. 295 00:18:40,080 --> 00:18:41,164 ஹேரியட். 296 00:18:42,457 --> 00:18:44,542 நீ... நீ பரிதாபமாக இருக்கிறாய். 297 00:18:49,673 --> 00:18:52,801 செல்வி. எல்சன், ஹேரியட் என் நாடகத்தை கைப்பற்ற முயற்சிக்கிறாள்... 298 00:18:52,801 --> 00:18:55,345 மேரியன், நீ வந்துவிட்டாய். சரியான நேரத்தில். 299 00:18:55,345 --> 00:18:56,805 ஹேரியட் எழுதிய ஒரு புதிய காட்சியை 300 00:18:56,805 --> 00:19:00,100 ஒத்திகை பார்க்க நீ சரியான நேரத்தில் வந்துவிட்டாய். 301 00:19:04,771 --> 00:19:09,776 "ச்சே, களைக்கோசு. நீ அழுகிய முட்டை போல துர்நாற்றம் வீசுகிறாய்." 302 00:19:09,776 --> 00:19:12,404 "களைக்கோசு அழுகிய முட்டை போல நாற்றமடிக்க காரணம்..." 303 00:19:12,404 --> 00:19:14,281 இது எல்லை மீறி போவிட்டது. 304 00:19:14,281 --> 00:19:17,492 நான் வில்லி இல்லை. நான் தான் பிரதான உணவு. 305 00:19:20,078 --> 00:19:22,080 இதற்கு நீ அனுபவிக்கப்போகிறாய். 306 00:19:28,044 --> 00:19:29,379 மேரியன். 307 00:19:33,717 --> 00:19:34,926 சரி, எல்லோரும். 308 00:19:34,926 --> 00:19:39,598 நாடகத்தின் முடிவிற்கான ஒரு புதிய பாடலுக்கான மிக இரகசியமான, மேரியன் இல்லாத ஒத்திகைக்காக 309 00:19:39,598 --> 00:19:42,267 -நான் உங்களை இங்கு அழைத்திருக்கிறேன். -நல்ல முயற்சி, ஹேரியட். 310 00:19:43,476 --> 00:19:44,895 யார் வந்திருக்கிறார்கள் என்று பாருங்கள். 311 00:19:44,895 --> 00:19:47,772 அசல் கதைக்கு திரும்பாத வரை, நாங்கள் நாடகத்தை விட்டு வெளியேறுகிறோம் என்பதை 312 00:19:47,772 --> 00:19:50,859 நீங்கள் எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும். 313 00:19:52,736 --> 00:19:55,947 ஒருவேளை மேரியன் இல்லாமல் நாடகம் நன்றாக இருக்கும். 314 00:19:59,618 --> 00:20:02,913 ஜேனி சொல்வது சரி என்று எனக்குத் தெரியும். வறுத்த கோழி இல்லாமல், 315 00:20:02,913 --> 00:20:05,624 எங்கள் இலையுதிர் கால அறுவடை நாள் நாடகம் தோல்வியடையும். 316 00:20:06,166 --> 00:20:08,877 மேரியன், நீ இல்லாமல் எங்களால் முடியாது என்று உனக்குத் தெரியும். 317 00:20:08,877 --> 00:20:12,172 என்னுடைய நாடகத்தை அபகரிக்க முடிவெடுப்பதற்கு முன்பு நீ அதைப் பற்றி யோசித்திருக்க வேண்டும். 318 00:20:12,172 --> 00:20:14,341 நாடகத்தை சிறப்படைய செய்ய ஹேரியட் எம். வெல்ஷ் விரும்புகிறாள் என்று 319 00:20:14,341 --> 00:20:15,634 நீங்கள் எல்லோரும் நினைக்கலாம். 320 00:20:15,634 --> 00:20:18,929 ஆனால் உண்மை என்னவென்றால், அவள் என்னைப் பழிவாங்க விரும்புகிறாள். 321 00:20:18,929 --> 00:20:20,263 அது உண்மை அல்ல. 322 00:20:20,847 --> 00:20:24,684 அப்படியா? அப்படியென்றால், நான் உன் தோழியாக இல்லாததற்காக என் மீது கோபம் வரவில்லையா? 323 00:20:25,477 --> 00:20:27,020 அது வெகு காலத்திற்கு முன்பு. 324 00:20:27,520 --> 00:20:31,316 "பொய்க்காரி, கையும் களவுமாக மாட்டிகொண்டாள்" என்று சொல்ல விரும்புகிறேன். 325 00:20:31,316 --> 00:20:33,276 ஆனால் நான் எதிலும் மாட்டவில்லையே. 326 00:20:33,276 --> 00:20:36,905 எனவே "பொய்க்காரி, நொண்டி வெங்காய உடையோடு மாட்டிகொண்டாள்" என்று செல்வேன். 327 00:20:36,905 --> 00:20:38,698 நீ பொய்க்காரி. 328 00:20:38,698 --> 00:20:39,866 அதை பொய்க்காரி சொல்கிறாள். 329 00:20:40,867 --> 00:20:43,828 நான் பொய்க்காரி அல்ல! 330 00:20:46,122 --> 00:20:48,792 மன்னித்துவிடு. இது எதிர்பாராமல் நடத்துவிட்டது. நீ நலமா? 331 00:20:52,504 --> 00:20:55,757 எல்லோரும் பார்த்தீர்கள். அவள் என்னைத் தாக்கினாள். 332 00:20:55,757 --> 00:20:57,050 ஏதாவது செய்யுங்கள்! 333 00:20:57,050 --> 00:20:59,511 -சரி, நீ என்ன செய்ய... -செல்லுங்கள். 334 00:21:04,099 --> 00:21:05,308 ஓடு, ஹேரியட்! 335 00:21:11,856 --> 00:21:14,276 அவளைப் பிடித்த பிறகு நாம் என்ன செய்ய வேண்டும்? 336 00:21:14,276 --> 00:21:16,152 எனக்குத் தெரியாது. உனக்குத் தெரியும் என்று நினைத்தேன். 337 00:21:24,160 --> 00:21:25,412 அவள் எங்கே போனாள்? 338 00:21:25,412 --> 00:21:26,496 பிரிந்து செல்வோம்! 339 00:21:47,517 --> 00:21:50,437 முக்கிய இரகசியம் 340 00:21:57,903 --> 00:22:00,614 அது அப்படி இருக்க முடியாது, முடியுமா? 341 00:22:02,866 --> 00:22:05,577 நான் பேசிக்கொண்டிருந்த புதிய வாழ்க்கையின் வாசனை தெரியுமா? 342 00:22:06,494 --> 00:22:08,371 ஆனால் மேரியனுக்கு என் குறிப்பேடு கிடைத்துவிட்டது. 343 00:22:08,371 --> 00:22:10,874 என்னால் நுகர முடிந்த ஒரே வாசனை பயம் மட்டுமே. 344 00:22:11,499 --> 00:22:14,294 சரி, நீ பொய்க்காரி இல்லை என்று கூறுவதால், 345 00:22:14,294 --> 00:22:18,590 உன் குறிப்பேட்டில் எங்களைப் பற்றி நீ எழுதிய எல்லாமே உண்மையாகத்தான் இருக்க வேண்டும். 346 00:22:24,679 --> 00:22:29,434 என்னைத் தவிர வேறு யாரும் என் குறிப்பேட்டை படிக்கக்கூடாது! 347 00:22:36,608 --> 00:22:40,737 இதோ என்னைப் பற்றி ஒன்று உள்ளது. 348 00:22:41,947 --> 00:22:47,827 வெகுவிரைவில், ஹேரியட்டின் காலம் அதிகாரப்பூர்வமாக முடிவடைந்தது. 349 00:22:48,995 --> 00:22:52,123 நான் விரும்புகிறேன் நீ விரும்புகிறாய் 350 00:22:52,123 --> 00:22:54,084 நாம் விரும்புகிறோம் 351 00:22:55,085 --> 00:22:57,629 நான் விரும்புவதில்லை நீ விரும்புவதில்லை 352 00:22:57,629 --> 00:23:02,842 நாம் என்ன செய்ய வேண்டும் என்று மற்றவர்கள் சொல்வதை நாம் விரும்புவதில்லை 353 00:23:05,262 --> 00:23:11,101 அக்கம் பக்கத்தில் நல்லதைச் செய்ய நான் என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன் 354 00:23:11,101 --> 00:23:13,562 நான் நன்றாக சிரிக்கிறேன் 355 00:23:13,562 --> 00:23:16,690 நான் உண்மையைச் சொல்ல முயற்சி செய்கிறேன் 356 00:23:16,690 --> 00:23:19,442 நான் விரும்புகிறேன் நீ விரும்புகிறாய் 357 00:23:19,442 --> 00:23:21,152 நாம் விரும்புகிறோம் 358 00:23:22,279 --> 00:23:24,864 நான் விரும்புவதில்லை நீ விரும்புவதில்லை 359 00:23:24,864 --> 00:23:27,659 நாம் என்ன செய்ய வேண்டும் என்று மற்றவர்கள் சொல்வதை நாம் விரும்புவதில்லை 360 00:23:27,659 --> 00:23:30,287 நான் எப்படியிருக்க விரும்புகிறேனோ அப்படியிருப்பேன் 361 00:23:30,287 --> 00:23:31,913 என் உரிமை 362 00:23:33,123 --> 00:23:35,750 நான் விரும்புகிறேன் நீ விரும்புகிறாய் 363 00:23:35,750 --> 00:23:37,586 நாம் விரும்புகிறோம் 364 00:23:37,586 --> 00:23:40,881 முடியாது, என் தலைமுடியை நான் வெட்டிக்கொள்ளமாட்டேன் 365 00:23:40,881 --> 00:23:43,258 நான் எதை வேண்டுமானாலும் அணிவேன் 366 00:23:43,258 --> 00:23:49,472 நான் நானாக இருப்பதையே விரும்புகிறேன் 367 00:23:49,472 --> 00:23:52,183 நான் விரும்புவதில்லை நீ விரும்புவதில்லை 368 00:23:52,183 --> 00:23:56,730 நாம் என்ன செய்ய வேண்டும் என்று மற்றவர்கள் சொல்வதை நாம் விரும்புவதில்லை 369 00:23:56,730 --> 00:23:58,732 வசனத் தமிழாக்கம் அருண்குமார்