1 00:00:05,090 --> 00:00:06,591 எனக்கு உடம்பு நன்றாகத்தான் இருக்கிறது. 2 00:00:08,802 --> 00:00:11,054 நான் எதற்காக மருத்துவரை சந்திக்க வேண்டும்? 3 00:00:11,054 --> 00:00:13,974 மனநல மருத்துவர் ஒரு சிறப்பு வகை மருத்துவர், செல்லம். 4 00:00:13,974 --> 00:00:15,850 டாக்டர் வாக்னர் உன்னிடம் பேசி 5 00:00:15,850 --> 00:00:18,853 நீ அனுபவித்ததைப் பற்றி பேச உனக்கு உதவுவார். 6 00:00:19,437 --> 00:00:21,189 நான் எதையும் அனுபவிக்கவில்லை. 7 00:00:21,189 --> 00:00:22,816 உன் நினைவை புதுப்பிக்கிறேன். 8 00:00:22,816 --> 00:00:26,319 உன் நண்பர்கள் நீ புத்தகத்தில் அவர்களைப் பற்றி எழுதிய மோசமான விஷயங்களைப் படித்தார்கள். 9 00:00:27,571 --> 00:00:29,823 பெரிய தவளையை வைத்து உன் வகுப்பை பயமுறுத்தி இருக்கிறாய். 10 00:00:30,782 --> 00:00:32,241 வேறென்ன? 11 00:00:32,741 --> 00:00:34,452 எனக்குத் தெரியும். 12 00:00:34,452 --> 00:00:36,955 உன் பெற்றோர்கள் மீது வாத்து பொம்மையை எறிந்தாய். 13 00:00:37,581 --> 00:00:40,667 அதைப் பற்றி நாமே பேச முடியாதா? அம்மா மகளாக? 14 00:00:40,667 --> 00:00:42,002 நண்பர்களாக? 15 00:00:43,461 --> 00:00:44,421 நல்ல முயற்சி, ஹேரியட். 16 00:00:45,589 --> 00:00:46,840 நீங்கள் தயார் என்றால் தொடங்கலாம். 17 00:00:48,508 --> 00:00:50,135 ஹாய், நான் டாக்டர் வாக்னர். 18 00:00:50,135 --> 00:00:51,636 உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி, ஹேரியட். 19 00:00:51,636 --> 00:00:54,681 நான் இங்கே வர எதிர்ப்பு தெரிவித்தேன் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். 20 00:00:54,681 --> 00:00:55,765 தெரிந்துகொண்டேன். 21 00:00:55,765 --> 00:00:57,100 அப்போது நாம் பேசலாம். 22 00:00:57,100 --> 00:00:58,268 பேசுவோமா? 23 00:00:59,144 --> 00:01:00,645 எனக்கு வேறு வழியில்லை. 24 00:01:02,480 --> 00:01:05,734 நான் உங்களிடம் பொய் சொல்ல மாட்டேன். கொஞ்சம் பதற்றமாக இருக்கிறேன். 25 00:01:05,734 --> 00:01:08,236 டாக்டரின் தலைமுடி நெருப்பு போல தெரிந்தது. 26 00:01:08,236 --> 00:01:09,738 இந்த விசித்திரமான கலை பொருட்கள், 27 00:01:09,738 --> 00:01:11,031 சிறிய குழந்தைகளின் விளையாட்டுகள் 28 00:01:11,031 --> 00:01:14,492 அதோடு என் ஆன்மா வரை உற்று நோக்கும் ஒரு பொம்மை எல்லாம் இருந்தன. 29 00:01:18,580 --> 00:01:21,666 நான் முயற்சி செய்கிறேன். ஆனால் நிலைமை கைமீறி போனால்... 30 00:01:25,837 --> 00:01:27,005 வசீகரமானது. 31 00:01:27,005 --> 00:01:30,217 ...நான் கலை பொருட்ளை பார்த்து வியப்பது போல நடிக்கலாம் அல்லது ஜன்னல் வழியாக தப்பிக்கலாம். 32 00:01:34,012 --> 00:01:36,389 ஒட்டு தாடியை வைத்துக்கொண்டு படகில் ஏறி தப்பிக்கலாம். 33 00:01:37,307 --> 00:01:38,808 ஹேரியட், நீ என்ன யோசிக்கிறாய்? 34 00:01:40,185 --> 00:01:42,604 ஒன்றுமில்லை, டாக்டர். ஒன்றுமே இல்லை. 35 00:01:43,188 --> 00:01:45,857 {\an8}நான் விரும்புகிறேன் நீ விரும்புகிறாய் 36 00:01:45,857 --> 00:01:47,609 நாம் விரும்புகிறோம் 37 00:01:48,735 --> 00:01:51,196 நான் எப்படியிருக்க விரும்புகிறேனோ அப்படியிருப்பேன் 38 00:01:51,196 --> 00:01:52,864 என் உரிமை 39 00:01:53,365 --> 00:01:56,284 முடியாது, என் தலைமுடியை நான் வெட்டிக்கொள்ளமாட்டேன் 40 00:01:56,284 --> 00:01:58,745 நான் எதை வேண்டுமானாலும் அணிவேன் 41 00:01:58,745 --> 00:02:04,876 நான் நானாக இருப்பதையே விரும்புகிறேன் 42 00:02:04,876 --> 00:02:07,504 நான் விரும்புவதில்லை நீ விரும்புவதில்லை 43 00:02:07,504 --> 00:02:10,465 நாம் என்ன செய்ய வேண்டும் என்று மற்றவர்கள் சொல்வதை நாம் விரும்புவதில்லை 44 00:02:10,465 --> 00:02:11,550 {\an8}"நான்தான் வெங்காயம்" 45 00:02:13,343 --> 00:02:14,678 {\an8}லூயிஸ் ஃபிட்ஸ்ஹியூ புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 46 00:02:17,889 --> 00:02:19,307 என்னைப் பற்றி என்ன எழுதுகிறீர்கள்? 47 00:02:19,307 --> 00:02:20,392 சில குறிப்புகள். 48 00:02:20,892 --> 00:02:22,143 உனக்கு பிரச்சினை இல்லை தானே? 49 00:02:22,143 --> 00:02:23,353 இல்லை. 50 00:02:23,353 --> 00:02:26,064 ஆனால் நீங்கள் ஏதாவது மோசமாக எழுதி, அது என் அம்மாவுக்கு தெரியவந்தால், 51 00:02:26,064 --> 00:02:28,441 நீங்கள் மனநல மருத்துவரிடம் செல்ல வேண்டியிருக்கலாம். 52 00:02:28,441 --> 00:02:30,318 உனக்கு ஒரு குறிப்பேடு வேண்டுமா? 53 00:02:30,819 --> 00:02:33,613 என்னிடம் ஒன்று இருப்பதும், உன்னிடம் ஒன்று இல்லாததும் நியாயமாகத் தெரியவில்லை. 54 00:02:34,114 --> 00:02:36,866 குறிப்பேட்டை நினைத்து என் கைகள் பரபரத்தன. 55 00:02:36,866 --> 00:02:39,494 என் எண்ணங்களை எழுதுவது பற்றி. 56 00:02:39,494 --> 00:02:41,830 என் எண்ணங்கள் இறுதியாக வெளிப்படும். 57 00:02:42,747 --> 00:02:44,457 இது வெளிப்படையாக சிக்கவைப்பதற்கான பொறி. 58 00:02:47,878 --> 00:02:49,254 ஐயோ! 59 00:02:50,922 --> 00:02:52,048 பரவாயில்லை, நன்றி. நான் நன்றாக இருக்கிறேன். 60 00:02:52,048 --> 00:02:54,968 எனவே, ஹேரியட். நீ இங்கே இருப்பதற்கான காரணம் தெரியுமா? 61 00:02:54,968 --> 00:02:56,887 நான் ஏன் இங்கே இருக்கிறேன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? 62 00:02:57,387 --> 00:03:00,640 உன் செவிலித்தாய் திடீரென்று போய்விட்டதாகவும் அதற்கு நீ பழக 63 00:03:00,640 --> 00:03:02,934 உனக்கு சிக்கல் இருப்பதாகவும் உன் அம்மா சொன்னார். 64 00:03:03,643 --> 00:03:05,520 உன் மனதில் உள்ளதை நீ ஏன் என்னிடம் சொல்லக்கூடாது? 65 00:03:06,271 --> 00:03:08,857 இங்கிருந்து தப்பிப்பதை விட, வெளியேற்றப்படுவது 66 00:03:08,857 --> 00:03:11,610 எளிதாக இருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது. 67 00:03:11,610 --> 00:03:14,696 எனக்கு லேசாக மயக்கம் வருகிறது. 68 00:03:14,696 --> 00:03:18,199 உற்று பார்க்கும் போட்டி நடத்துவோமா? 69 00:03:18,199 --> 00:03:20,035 தரையில் பறக்கும் தேவதையை பார்த்திருக்கிறீர்களா? 70 00:03:20,827 --> 00:03:22,037 -ஹேரியட்? -என்ன? 71 00:03:22,579 --> 00:03:24,122 இப்போது இந்த குறிப்பேடு வேண்டுமா? 72 00:03:25,290 --> 00:03:26,875 ஆம், தயவுசெய்து. 73 00:03:27,375 --> 00:03:28,460 இந்த புத்தகத்தின் உரிமையாளர்: ஹேரியட் எம். வெல்ஷ் 74 00:03:28,460 --> 00:03:30,170 புதிய குறிப்பேட்டில் என் பெயரை எழுதுவது 75 00:03:30,170 --> 00:03:32,255 என்னால் எதையும் செய்ய முடியும் என்ற உணர்வை எப்போதும் ஏற்படுத்தியது. 76 00:03:32,881 --> 00:03:35,091 மனநல மருத்துவரிடம் கூட பேசலாம். 77 00:03:35,091 --> 00:03:36,509 எனவே சொல், ஹேரியட், 78 00:03:36,509 --> 00:03:38,428 உன் செவிலித்தாய் போன பிறகு எப்படி உணர்ந்தாய்? 79 00:03:39,721 --> 00:03:42,641 நான் உணர்ந்தது... நான் உணர்ந்தது... 80 00:03:43,558 --> 00:03:46,436 என் வயிற்றில் ஒரு வித்தியாசமான உணர்வு. 81 00:03:46,436 --> 00:03:48,063 நான் அவரிடம் எல்லாவற்றையும் சொன்னேன். 82 00:03:48,063 --> 00:03:53,276 ஓல் கோலி, என் திருடப்பட்ட குறிப்பேடு, அதோடு என்னைப் பற்றியும். 83 00:03:54,361 --> 00:03:56,613 எனக்கு எல்லாம் தெரிய வேண்டும். 84 00:03:56,613 --> 00:03:59,324 எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள, எல்லாவற்றையும் பார்க்க வேண்டும். 85 00:03:59,324 --> 00:04:03,286 எல்லாவற்றையும் பார்க்க, நீங்கள் உளவாளியாக இருக்க வேண்டும். 86 00:04:03,286 --> 00:04:04,371 தெரியுமா, ஹேரியட், 87 00:04:04,371 --> 00:04:07,749 சில நேரங்களில் உளவு பார்க்க வேண்டிய சிறந்த நபர் நீதான். 88 00:04:09,459 --> 00:04:10,460 சரி. 89 00:04:12,003 --> 00:04:13,463 நீ அதைப் பற்றி சிந்திக்க வேண்டும். 90 00:04:14,089 --> 00:04:15,715 அடுத்த முறை அதைப் பற்றி பேசுவோம். 91 00:04:15,715 --> 00:04:17,800 இதை நம்முடைய அடுத்த அமர்வில் உன்னிடம் திருப்பித் தருகிறேன். 92 00:04:17,800 --> 00:04:18,884 அது எப்படி? 93 00:04:19,636 --> 00:04:21,638 இவரை எனக்குப் பிடித்திருக்கிறது என்பதை நான் ஒப்புக்கொள்ள வேண்டும். 94 00:04:22,138 --> 00:04:24,516 என்னிடம் ஒரு குறிப்பேட்டை கொடுத்துவிட்டு, அதை திரும்ப பெறுவது 95 00:04:24,516 --> 00:04:26,309 ஒரு மோசமான தந்திரம். 96 00:04:31,690 --> 00:04:35,026 எனவே, டாக்டர் வாக்னர் உங்களிடம் என்ன சொன்னார்? 97 00:04:35,527 --> 00:04:38,446 நீ ஒரு அருமையான இளம் பெண் என்று சொன்னார். 98 00:04:39,406 --> 00:04:40,740 அவர் சொன்னதில் தவறில்லை. 99 00:04:46,037 --> 00:04:50,375 செல்லம், நீ உன் நண்பர்களிடம் மன்னிப்பு கேட்பது பற்றி எப்போதாவது யோசித்திருக்கிறாயா? 100 00:04:50,375 --> 00:04:51,793 இல்லை. 101 00:04:51,793 --> 00:04:54,462 டாக்டர் வாக்னர் உனக்கு ஒரு குறிக்கோளை வழங்க பரிந்துரைத்தார். 102 00:04:54,462 --> 00:04:58,258 உன் நண்பர்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, நீ உன் குறிப்பேட்டை திரும்பப் பெறலாம். 103 00:04:59,885 --> 00:05:02,053 இன்று இரவு ஒயிட்ஹெட்களின் வீட்டில் சீட்டு விளையாடப் போகிறேன். 104 00:05:02,053 --> 00:05:03,430 நீயும் ஏன் என்னுடன் வரக்கூடாது? 105 00:05:03,430 --> 00:05:05,682 நீ பிங்கியிடம் மன்னிப்பு கேட்பதிலிருந்து தொடங்கலாம். 106 00:05:05,682 --> 00:05:08,810 என் குறிப்பேட்டை படித்ததற்காக அவன்தான் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். 107 00:05:08,810 --> 00:05:10,645 கொஞ்சம் அதைப்பற்றி யோசித்துப் பார், சரியா? 108 00:05:15,483 --> 00:05:16,818 நான் அதைப் பற்றி யோசித்தேன். 109 00:05:16,818 --> 00:05:19,446 இன்னும் கொஞ்சம் கூட அதைப்பற்றி யோசித்தேன். 110 00:05:19,446 --> 00:05:22,157 என் குறிப்பேட்டை நான் எவ்வளவு மிஸ் செய்கிறேன் என்பது பற்றி யோசித்தேன். 111 00:05:22,741 --> 00:05:24,492 ஓல் கோலியை எவ்வளவு மிஸ் செய்கிறேன், 112 00:05:24,492 --> 00:05:27,203 நான் அவனிடம் மன்னிப்பு கேட்டால் அதற்கு அவர் என்ன சொல்வார் என்றும். 113 00:05:28,496 --> 00:05:31,958 ஹோவர்ட் ஃபின்ச்சின் சுண்டுவிரல் மோதிரத்தை எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்று யோசித்தேன். 114 00:05:31,958 --> 00:05:34,711 சில நேரங்களில் அது அந்த சிறிய விவரங்கள்தான் 115 00:05:34,711 --> 00:05:37,130 பொய்யான ஒன்றை உண்மையானது என்று உணர வைக்கும். 116 00:05:38,298 --> 00:05:40,717 நடுவர் மன்றத்தின் மதிப்பிற்குரிய உறுப்பினர்களே, 117 00:05:40,717 --> 00:05:45,513 உண்மையின் சக்தியை நான் நம்புவதால்தான் இங்கே இருக்கிறேன். 118 00:05:45,513 --> 00:05:49,726 அதோடு, எனது கட்சிக்காரர் எல்லா குற்றச்சாட்டுகளிலும் நிரபராதி என்று 119 00:05:49,726 --> 00:05:54,564 நான் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க விரும்புகிறேன். 120 00:05:55,398 --> 00:05:58,193 பிறகு நான் ஹோவர்ட் ஃபின்ச் சொன்னதைப் பற்றி யோசித்தேன். 121 00:05:58,193 --> 00:06:00,987 நான் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை என்பதை உணர்ந்தேன். 122 00:06:01,571 --> 00:06:04,741 எனக்கு தேவை நீதி. 123 00:06:08,328 --> 00:06:12,791 இருவரையும் வரவேற்கிறோம். கேரோல், நீங்கள் விளையாட வந்தீர்கள் என்று நம்புகிறேன். 124 00:06:12,791 --> 00:06:16,211 நான் விளையாட வரவில்லை, பெக்கி. வெற்றி பெற வந்தேன். 125 00:06:17,003 --> 00:06:18,755 பிங்கி, யார் வந்திருக்கிறார்கள் என்று பார். 126 00:06:23,301 --> 00:06:25,387 நீயும் ஹேரியட்டும் ஏன் வெளியே செல்லக்கூடாது? 127 00:06:25,887 --> 00:06:28,848 நீங்கள் பேச நிறைய இருக்கும் என்று நம்புகிறேன். 128 00:06:28,848 --> 00:06:30,183 சரி. 129 00:06:32,894 --> 00:06:34,437 இது மிகவும் எளிதாக முடிந்துவிடும். 130 00:06:34,437 --> 00:06:37,065 பிங்கியிடம் வாதாடி வெற்றி பெற்று, என் குறிப்பேட்டை திரும்பப் பெறுவேன், 131 00:06:37,065 --> 00:06:39,526 அதோடு, யாரைப் பற்றியும் நான் கவலைப்பட வேண்டியதில்லை. 132 00:06:43,613 --> 00:06:44,823 இல்லை. 133 00:06:47,158 --> 00:06:48,702 என்ன நடக்கிறது, பிங்கி? 134 00:06:48,702 --> 00:06:51,788 நீ மன்னிப்பு கேட்க வருகிறாய் என்று 135 00:06:51,788 --> 00:06:54,666 நான் தற்செயலாக ஒரு சிலரிடம் குறிப்பிட்டிருக்கலாம். 136 00:06:55,333 --> 00:06:58,253 யார் வந்திருக்கிறாள் என்று பாருங்கள். எல்லோரும், பாருங்கள். 137 00:06:59,713 --> 00:07:00,714 ஹாய். 138 00:07:04,593 --> 00:07:05,510 முக்கிய இரகசியம் 139 00:07:10,265 --> 00:07:12,434 மாயாஜால குறிப்பேடு. பறந்து போ. 140 00:07:15,020 --> 00:07:16,855 உன் மன்னிப்புக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். 141 00:07:19,691 --> 00:07:23,236 உண்மையில், நான் குற்றமற்றவள் என்பதை நிரூபிக்க திட்டமிட்டிருந்தேன். 142 00:07:23,904 --> 00:07:26,156 மதிப்பிற்குரிய நீதிமன்ற உறுப்பினர்களே, 143 00:07:26,156 --> 00:07:30,285 உண்மையின் சக்தியை நான் நம்புவதால்தான் இங்கே இருக்கிறேன். 144 00:07:30,285 --> 00:07:34,039 எனது கட்சிக்காரர், ஹேரியட் எம். வெல்ஷ் ஆகிய நான், 145 00:07:34,039 --> 00:07:38,668 எல்லா குற்றச்சாட்டுகளிலும் நிரபராதி என்று சந்தேகத்திற்கு இடமின்றி 146 00:07:38,668 --> 00:07:41,755 நிரூபிக்க விரும்புகிறேன். 147 00:07:42,255 --> 00:07:43,673 விசாரணை நடத்தலாம். 148 00:07:43,673 --> 00:07:45,842 நான் வழக்கில் வெற்றி பெற்றால், என் குறிப்பேட்டை திரும்பப் பெறுவேன். 149 00:07:45,842 --> 00:07:47,636 நீ தோற்றால்? 150 00:07:47,636 --> 00:07:49,846 நீங்கள் என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஒப்புக்கொள்கிறேன். 151 00:07:50,430 --> 00:07:51,640 எந்த தண்டனை என்றாலுமா? 152 00:07:52,641 --> 00:07:53,767 குழு ஆலோசனை. 153 00:07:59,940 --> 00:08:02,484 பள்ளி நாடகத்தில் நீ வெங்காயமாக நடிப்பதால், 154 00:08:02,484 --> 00:08:07,572 நீ தோற்றால் ஒரு வெங்காயம் சாப்பிட வேண்டும். 155 00:08:07,572 --> 00:08:08,907 முழுவதையும். 156 00:08:08,907 --> 00:08:10,617 தண்டனை ஏற்றுக்கொள்ளப்பட்டது. 157 00:08:13,328 --> 00:08:17,207 நீ ஹோவர்ட் ஃபின்ச் ஆக இருந்தால், உனக்கு ஒரு சுண்டுவிரல் மோதிரம் வேண்டும். 158 00:08:18,416 --> 00:08:20,460 நீதிமன்ற அறைக்குச் செல்வோம். 159 00:08:29,970 --> 00:08:32,179 பிங்கி, அது உன் வீடு. நீதான் நீதிபதியாக வேண்டும். 160 00:08:32,806 --> 00:08:34,890 அதற்கு எனக்கு நீதிபதியின் மேலங்கி வேண்டும். 161 00:08:34,890 --> 00:08:35,976 எனக்கு கிடைத்துவிட்டது! 162 00:08:38,186 --> 00:08:41,481 -ரேச்சல், நீதான் நீதிமன்ற அதிகாரி. -அருமை! நீதிமன்ற அதிகாரி என்றால்? 163 00:08:41,481 --> 00:08:43,316 நீ நீதிமன்றம் சீராக நடப்பதை உறுதி செய்வாய். 164 00:08:43,316 --> 00:08:45,819 அவசியம் ஏற்பட்டால், எந்த வகையிலும். 165 00:08:46,987 --> 00:08:48,613 இனி எதுவும் சொல்லாதே. 166 00:08:50,407 --> 00:08:52,367 நான் நீதிமன்ற கலைஞனாக இருப்பேன்! 167 00:08:52,367 --> 00:08:53,994 நான் எழுத்தாளராக இருப்பேன். 168 00:08:54,494 --> 00:08:58,623 -அருமை. நான் வழக்கறிஞராக இருப்பேன். -இல்லை. 169 00:08:59,916 --> 00:09:01,459 நான்நான் வழக்கறிஞராக இருப்பேன். 170 00:09:01,459 --> 00:09:03,128 நீ ஏன்? 171 00:09:03,128 --> 00:09:05,297 மற்ற யாரையும் விட ஹேரியட்டை எனக்கு நன்றாகத் தெரியும். 172 00:09:05,297 --> 00:09:08,216 அதாவது அவளுடைய எல்லா தந்திரங்களும் எனக்குத் தெரியும். 173 00:09:09,050 --> 00:09:10,719 நான் என்ன செய்வேன்? 174 00:09:10,719 --> 00:09:12,053 நீ சாட்சியாக இருக்கலாம். 175 00:09:12,053 --> 00:09:14,431 நட்சத்திர சாட்சியாக. 176 00:09:18,018 --> 00:09:19,978 நட்சத்திர சாட்சி. 177 00:09:20,770 --> 00:09:24,232 கேளுங்கள்! இப்போது நீதிமன்ற அமர்வு தொடங்குகிறது. 178 00:09:24,232 --> 00:09:27,360 அழகான நீதிபதி வைட்ஹெட் வருகைக்கு எல்லோரும் எழுந்திருங்கள். 179 00:09:27,944 --> 00:09:30,655 ரேச்சல் பிங்கியை அழகானவன் என்று சொன்னாள். 180 00:09:30,655 --> 00:09:32,824 "மரியாதைக்குரிய" என்று சொல்ல வேண்டும், ரேச்சல். 181 00:09:32,824 --> 00:09:33,909 என்னவோ. 182 00:09:34,451 --> 00:09:37,954 "எல்லோரும் எழுந்திருங்கள்!" என்றேன், பயனற்றவர்களே. 183 00:09:42,042 --> 00:09:43,335 அது என்ன? 184 00:09:44,878 --> 00:09:45,879 என் கை சுத்தி. 185 00:09:48,256 --> 00:09:49,591 அமருங்கள். 186 00:09:50,217 --> 00:09:54,346 இது வெறும் சுண்டுவிரல் மோதிரமாக இருக்கலாம், ஆனால் நான் மிகவும் தன்னம்பிக்கையுடன் இருந்தேன். 187 00:09:54,846 --> 00:09:57,515 இருந்தாலும் என் இடது கால் மட்டும் நடுங்கியது. 188 00:09:59,517 --> 00:10:00,518 வருந்துகிறாயா? 189 00:10:01,061 --> 00:10:02,062 இல்லை. 190 00:10:02,062 --> 00:10:03,772 என் கால் நடுங்கலாம், 191 00:10:03,772 --> 00:10:07,984 ஆனால் நான் சார்ந்திருக்க மிகவும் திடமான ஒன்று உள்ளது: உண்மை. 192 00:10:09,194 --> 00:10:10,487 இன்றிரவு வழக்கு 193 00:10:10,487 --> 00:10:15,283 ஹேரியட் எம். வெல்ஷின் முன்னாள் நண்பர்களுக்கும் ஹேரியட் எம். வெல்ஷுக்குமானது. 194 00:10:15,283 --> 00:10:18,536 தொடக்க வாக்குமூலத்துடன் தொடங்குவோம். 195 00:10:18,536 --> 00:10:20,538 நீதிமன்ற மக்களே, 196 00:10:20,538 --> 00:10:25,335 பிரதிவாதியான ஹாரியட் எம். வெல்ஷ், நியாயமற்ற குற்றச்சாட்டுகளை 197 00:10:25,335 --> 00:10:28,296 எழுதுவதன் மூலம் நட்பிற்கு எதிரான கொடூரமான குற்றங்களை செய்ததோடு 198 00:10:28,296 --> 00:10:34,719 மன்னிப்பு கேட்காமல் இருக்கும் குற்றவாளி என்பதை நிரூபிக்க விரும்புகிறேன். 199 00:10:35,428 --> 00:10:36,846 பிரதிவாதிக்கான வழக்கறிஞர்? 200 00:10:38,848 --> 00:10:40,934 உங்களுக்கு இப்போது என்னை பிடிக்காது என்று தெரியும். 201 00:10:40,934 --> 00:10:42,519 ஒருவேளை நீங்கள் என்னை வெறுத்திருக்கலாம். 202 00:10:46,231 --> 00:10:50,443 ஆனால் ஒருவர் நிரபராதி என்பதை அறிய ஒருவரை பிடித்திருக்க வேண்டியதில்லை. 203 00:10:50,443 --> 00:10:52,571 ஏனென்றால் உண்மைகளே தங்களுக்காக பேசும். 204 00:10:52,571 --> 00:10:57,450 அதோடு நான் உண்மையைச் சொன்னதுதான் ஒரே குற்றம் என்கிறார்கள்! 205 00:10:57,450 --> 00:11:00,704 வழக்குத்தொடுப்பவரே, உங்கள் முதல் சாட்சியை நீங்கள் அழைக்கலாம். 206 00:11:00,704 --> 00:11:03,748 நான் ஸ்போர்ட் ரோக்கை அழைக்கிறேன். 207 00:11:07,252 --> 00:11:11,339 ஸ்போர்ட், பக்கம் 55ல் உள்ள பகுதியைப் படிக்கிறீர்களா? 208 00:11:11,339 --> 00:11:12,424 வேண்டும் என்றால் படிக்கிறேன். 209 00:11:13,884 --> 00:11:15,635 "சில நேரங்களில், என்னால் ஸ்போர்ட்டை சகித்துக்கொள்ள முடியவில்லை. 210 00:11:15,635 --> 00:11:19,014 எப்பொழுதும் அவனுடைய அப்பாவைப் பற்றி கவலைபடுவதும், புலம்புவதுமாக, 211 00:11:19,014 --> 00:11:21,683 சில நேரங்களில் அவன் வயதான பெண்மணியைப் போல தோன்றுகிறான்." 212 00:11:22,517 --> 00:11:24,978 அது உன்னை எப்படி உணர வைக்கிறது? 213 00:11:24,978 --> 00:11:26,062 மோசமாக. 214 00:11:26,980 --> 00:11:29,316 அது புலம்பல் இல்லை, ஹேரியட். நான் புலம்புபவன் அல்ல. 215 00:11:29,316 --> 00:11:31,359 "புலம்புபவன்" என்பது ஒரு வார்த்தை என்று நான் நினைக்கவில்லை. 216 00:11:33,486 --> 00:11:34,487 நான் அதை அனுமதிக்கிறேன். 217 00:11:35,071 --> 00:11:37,157 ஸ்போர்ட், விவாதத்துக்குரிய அந்த இரவில், 218 00:11:37,157 --> 00:11:39,284 உன்னுடைய அப்பா தட்டுகளை கழுவினால் நீ அவளுடன் திரைப்படத்திற்கு 219 00:11:39,284 --> 00:11:41,953 -செல்லலாம் என்று ஜேனி கேட்டாள். -அது சரிதான். 220 00:11:41,953 --> 00:11:43,747 அதற்கு நீ என்ன சொன்னாய்? 221 00:11:44,539 --> 00:11:47,667 "இது அவருடைய விரல்களை தேய்ந்து போகச் செய்யும், தட்டச்சுப்பொறியில் அவரால் 222 00:11:47,667 --> 00:11:50,003 தட்டச்சு செய்ய முடியாது" என்று சொன்னேன். 223 00:11:50,003 --> 00:11:53,381 "இதை அப்புறம் செய்ய முடியாதா?" என்று ஜேனி சொன்னபோது, 224 00:11:53,381 --> 00:11:54,591 நீ என்ன சொன்னாய்? 225 00:11:54,591 --> 00:11:57,719 கழுவாத தட்டு மனதை தொந்தரவு செய்யும் என்றேன். 226 00:11:58,595 --> 00:12:02,641 ஸ்போர்ட், இவை இரண்டும் என் பாட்டி என்னிடம் சொல்லும் விஷயங்கள். 227 00:12:02,641 --> 00:12:03,725 அப்படியா? 228 00:12:03,725 --> 00:12:06,519 அதிக பக்கமுள்ள நாவலை எழுத முயலும் போது 229 00:12:06,519 --> 00:12:08,146 என்னைத் தனியாக வளர்க்கும் 230 00:12:08,146 --> 00:12:10,649 ஒருவருக்கு உதவ முயற்சித்ததற்கு மன்னிக்கவும். 231 00:12:10,649 --> 00:12:12,776 நான் கவனித்துக்கொண்டு மட்டும் இருந்தேன். 232 00:12:12,776 --> 00:12:13,860 ஹேரியட்... 233 00:12:15,904 --> 00:12:18,657 எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று சொல்லும் ஒருவளுக்கு, 234 00:12:18,657 --> 00:12:20,408 சில நேரங்களில் எதுவும் தெரியாமல் போகலாம். 235 00:12:21,201 --> 00:12:22,202 நான் வெளியேறுகிறேன். 236 00:12:23,245 --> 00:12:24,246 ஸ்போர்ட். 237 00:12:27,415 --> 00:12:28,917 நன்றாக போகிறது, ஹேரியட். 238 00:12:28,917 --> 00:12:31,545 என்னுடைய இரகசிய, தனிப்பட்ட குறிப்பேட்டில் இருந்து 239 00:12:31,545 --> 00:12:34,839 முதலில் அவனுக்குப் படித்துக் காட்டியது நீதான். 240 00:12:36,591 --> 00:12:37,926 அடுத்த சாட்சி. 241 00:12:38,510 --> 00:12:42,556 ஒவ்வொருவராக, என் குறிப்பேட்டில் நான் எழுதியிருக்கும் எல்லோரும் 242 00:12:42,556 --> 00:12:45,267 எனக்கு எதிராக சாட்சி சொல்ல வந்தார்கள். 243 00:12:45,267 --> 00:12:49,229 நீ ஒரு காலத்தில் ஹேரியட்டின் மிகப்பெரிய ரசிகை என்பது எல்லோருக்கும் தெரியும், சரிதானே? 244 00:12:49,229 --> 00:12:51,898 எனக்கு அது பற்றி தெரியாது. 245 00:12:51,898 --> 00:12:54,025 ஆனால் நான் அவளைப் போல உடை அணிய முயற்சித்தேன், 246 00:12:54,025 --> 00:12:58,613 அதோடு ஒருமுறை ஹேரி-எட்ஸ் என்ற ரகசிய ரசிகர் மன்றத்தை தொடங்கினேன். 247 00:12:59,322 --> 00:13:01,616 அதில் எ வரும் பெத் எலென், "எட்ஸ்" என்று. 248 00:13:02,242 --> 00:13:05,787 ஆனால் நான் ரசிகையா? நான் அப்படி நினைக்கவில்லை. 249 00:13:05,787 --> 00:13:07,205 சரி. 250 00:13:07,205 --> 00:13:11,585 சரி, ரசிகை அல்லாத மிகப்பெரிய ரசிகையாக, 251 00:13:11,585 --> 00:13:15,255 ஹேரியட் தன் குறிப்பேட்டில் உன்னைப் பற்றி என்ன எழுதினாள் என்று பார்ப்போமா? 252 00:13:16,298 --> 00:13:17,299 சரி. 253 00:13:17,299 --> 00:13:21,303 "மக்கள் கேரி ஆண்ட்ரூஸின் வீட்டிற்குச் செல்ல ஒரே காரணம் அவளுடைய அம்மாவின் கேக் தான் என்று 254 00:13:21,303 --> 00:13:23,722 சில நேரங்களில் நான் நினைக்கிறேன்." 255 00:13:24,264 --> 00:13:26,099 இப்போது, அது உண்மை என்று நினைக்கிறாயா? 256 00:13:26,099 --> 00:13:27,267 இல்லை. 257 00:13:27,267 --> 00:13:30,478 என் வீட்டிற்கு வருபவர்கள் அடிக்கடி சொல்வதை மேற்கோள் காட்டுகிறேன், 258 00:13:30,478 --> 00:13:33,815 "என்னை அழைத்ததற்கு நன்றி, கேரி. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன்." 259 00:13:35,317 --> 00:13:36,818 வேறு கேள்விகள் இல்லை. 260 00:13:37,485 --> 00:13:40,196 கேரி, உன் வீட்டிற்கு வருவதற்கு முன்பு 261 00:13:40,196 --> 00:13:43,742 மக்கள் என்ன சொல்வார்கள் என்று தயவுசெய்து நீதிமன்றத்தில் சொல்கிறாயா? 262 00:13:43,742 --> 00:13:45,452 என் அம்மா அவருடைய பிரபலமான ஐந்தரை அடுக்கு 263 00:13:45,452 --> 00:13:47,829 டச்சு சாக்லேட் கேக் செய்தாரா என்று கேட்பார்கள். 264 00:13:47,829 --> 00:13:52,918 பனி போன்ற சுவை கொண்ட பளபளப்பானவற்றை மேலே தூவியது. 265 00:13:56,671 --> 00:13:58,048 வேறு கேள்விகள் இல்லை. 266 00:13:58,924 --> 00:13:59,925 மன்னிக்கவும். 267 00:13:59,925 --> 00:14:01,968 ஆனால் அது எதையும் குறிக்காது. 268 00:14:01,968 --> 00:14:05,305 -நகரு அல்லது நகர்த்தப்படுவாய், கேரி. -அது தற்செயலான நிகழ்வு. 269 00:14:08,099 --> 00:14:10,852 நீதிமன்றம் பெத் எலென் ஹான்செனை சாட்சி கூண்டுக்கு அழைக்கிறது. 270 00:14:11,937 --> 00:14:15,732 மன்னிக்கவும். இது நட்சத்திர சாட்சிக்கான நேரம். 271 00:14:15,732 --> 00:14:17,400 உன் முறைக்காக காத்திரு, மேரியன். 272 00:14:17,400 --> 00:14:19,736 நிதானமாக இரு, சுண்டுவிரல் மோதிரம். 273 00:14:20,237 --> 00:14:22,530 ஆட்சேபனை! அடுத்த சாட்சி அவள் இல்லை. 274 00:14:23,573 --> 00:14:25,075 ஆட்சேபனை நிராகரிக்கப்பட்டதா? 275 00:14:27,369 --> 00:14:28,662 எனக்கு குறிப்பேடு தேவையில்லை. 276 00:14:29,329 --> 00:14:32,123 ஹேரியட்டின் விஷம் கலந்த வார்த்தைகளை எனக்கு மனப்பாடமாக தெரியும். 277 00:14:32,123 --> 00:14:34,125 நான் மேற்கோள் காட்டுகிறேன், 278 00:14:34,125 --> 00:14:36,294 "மேரியன் வென்ற எல்லா விருதுகளையும் விட, 279 00:14:36,294 --> 00:14:39,297 வெறுக்கத்தக்கவளாக அவள் இருப்பதற்கான சாதனைகளுக்காக அவள் ஒரு மாபெரும் 280 00:14:39,297 --> 00:14:43,635 கோப்பையை வெல்லவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது." 281 00:14:44,886 --> 00:14:49,599 இதற்கு நான் சொல்கிறேன், நீ ஒரு மோசமானவள், 282 00:14:49,599 --> 00:14:51,142 ஹேரியட் எம். வெல்ஷ். 283 00:14:52,185 --> 00:14:56,356 அதற்கு நான் சொல்கிறேன், அக்டோபர் 12 ஆம் தேதி மாலை 3.30 மணிக்கு, 284 00:14:56,356 --> 00:14:59,734 நானும் ஸ்போர்ட்டும் எங்கள் பொம்மைகளை வைத்திருக்கும் பெரிய படம் கொண்ட 285 00:14:59,734 --> 00:15:02,988 செய்திமடலை நீ எல்லோருக்கும் கொடுத்தாயா இல்லையா? 286 00:15:02,988 --> 00:15:06,825 சரி, நீ கணக்கு வைத்திருக்கிறாய் என்றால், நான் ஒன்றை மோசமாக செய்ய வாய்ப்பிருந்தும் 287 00:15:06,825 --> 00:15:09,202 அதை நான் செய்யாதிருந்தால், அது போன்ற எல்லாவற்றையும் பட்டியலிலிருந்து நீ கழிக்க வேண்டும். 288 00:15:10,245 --> 00:15:12,122 வேறு கேள்விகள் இல்லை. 289 00:15:12,122 --> 00:15:15,458 பெத் எலென், இன்றைக்கு நான் உன்னிடம் மோசமானவற்றை சொல்ல வாய்பிருந்தும் 290 00:15:15,458 --> 00:15:16,626 சொல்லாது இருந்தது எத்தனை முறை? 291 00:15:17,294 --> 00:15:18,295 மூன்று. 292 00:15:18,795 --> 00:15:20,255 இல்லை, இரண்டு. 293 00:15:20,255 --> 00:15:22,507 மூன்று. கண்டிப்பாக மூன்று. 294 00:15:23,091 --> 00:15:24,092 நான்கு இருக்கலாம். 295 00:15:25,552 --> 00:15:26,720 வேறு கேள்விகள் இல்லை. 296 00:15:28,889 --> 00:15:33,143 "எப்போதும் பதட்டத்துடன் தலைமுடியை மெல்லும் பெத் எலென் போன்றவர்கள் சிறப்பு ஷாம்பூவைப் 297 00:15:33,143 --> 00:15:36,354 பயன்படுத்த வேண்டுமா என்று எனக்கு வியப்பாக இருக்கிறது." 298 00:15:36,354 --> 00:15:37,772 உன் பதில்? 299 00:15:38,773 --> 00:15:41,693 நான் பதட்டமாக இல்லை. எனக்கு அந்த சுவை பிடிக்கும். 300 00:15:45,322 --> 00:15:48,742 {\an8}"சில நேரங்களில், பிங்கியும் ஊதா நிற காலுறையும் பள்ளியை விட்டு வெளியேறி விசித்திரமான சர்க்கஸில் 301 00:15:48,742 --> 00:15:51,202 {\an8}சேர வேண்டும் என்று நினைக்கிறேன்." 302 00:15:52,203 --> 00:15:54,748 -அது உனக்கு என்ன உணர்வை தந்தது? -கோபமூட்டியது! 303 00:15:54,748 --> 00:15:57,125 நீதிமன்றத்தில் அமைதியாக இருங்கள்! நான் உத்தரவிடுகிறேன்! 304 00:15:57,876 --> 00:15:59,377 வருந்துகிறேன், நீதிபதி அவர்களே. 305 00:16:00,003 --> 00:16:03,256 உங்களுக்கு நினைவூட்டுகிறேன், இது நீதிமன்ற அறை, மிருகக்காட்சிசாலை அல்ல. 306 00:16:04,883 --> 00:16:07,844 -அருமை. -நான் பயிற்சி செய்து வருகிறேன். 307 00:16:07,844 --> 00:16:09,512 நல்ல வேலை செய்தீர்கள், நண்பர்களே. 308 00:16:09,512 --> 00:16:10,889 எங்களை எதிர்க்க முடியாது! 309 00:16:13,767 --> 00:16:16,228 "உங்கள் படுக்கைக்கு அடியில் வாழும் அந்த பயங்கரமான 310 00:16:16,228 --> 00:16:18,438 உயிரினத்தை பேய் என்று அழைப்பதற்கு பதிலாக 311 00:16:18,438 --> 00:16:21,650 அதை 'ரேச்சல் ஹென்னெஸி' என்றுதான் அழைக்க வேண்டும்." 312 00:16:21,650 --> 00:16:23,360 என் தம்பி ஏற்கனவே அப்படிதான் அழைக்கிறான். 313 00:16:26,947 --> 00:16:30,033 இறுதியாக, எங்கள் இறுதி வாதங்களுக்கான நேரம். 314 00:16:30,033 --> 00:16:33,119 நான் எழுதிய எல்லாமே நல்ல விஷங்கள் இல்லை, ஆனால் நான் நிரூபித்தபடி, 315 00:16:33,787 --> 00:16:36,831 அவை எல்லாமே உண்மை என்பதை நான் சமர்ப்பிக்கிறேன். 316 00:16:37,916 --> 00:16:40,001 அதோடு, ஓல் கோலியின் வார்த்தைகளில் சொல்வதென்றால், 317 00:16:40,585 --> 00:16:44,089 ஒரு எழுத்தாளரின் பொறுப்பு உண்மையைச் சொல்வதுதான் 318 00:16:44,089 --> 00:16:48,635 ஏனென்றால் உண்மைதான் அழகு, அழகுதான் உண்மை. 319 00:16:50,220 --> 00:16:53,431 இந்த வழக்கில் நிச்சயம் வெற்றி பெறுவேன். என்னால் உணர முடிந்தது. 320 00:16:53,431 --> 00:16:58,311 எனது அற்புதமான குறுக்கு விசாரணைகளுக்குப் பிறகு, ஜேனியால் என்ன சொல்ல முடியும்? 321 00:16:58,937 --> 00:17:00,939 நீதிபதி பிங்கி அவர்களே, என் இறுதி வாதத்திற்கு பதிலாக, 322 00:17:01,523 --> 00:17:02,649 ஹேரியட் எம். வெல்ஷை 323 00:17:03,817 --> 00:17:06,194 சாட்சி கூண்டுக்கு அழைக்க விரும்புகிறேன். 324 00:17:11,199 --> 00:17:12,199 ஆட்சேபனை, நீதிபதி அவர்களே. 325 00:17:12,199 --> 00:17:14,953 இது நமது நீதித்துறையின் ஒவ்வொரு விதியையும் மீறுகிறது. 326 00:17:14,953 --> 00:17:16,705 நம்முடைய "நீதி அமைப்பு" பறவைகளுக்கான 327 00:17:16,705 --> 00:17:20,458 தண்ணீர் தொட்டியை சாட்சி குண்டாக கொண்டது, அதோடு நீதிபதி, அவமரியாதை செய்யவில்லை, 328 00:17:20,458 --> 00:17:23,879 அவரது அப்பாவின் அங்கியை அணிந்திருக்கிறார் என்பதையும் நான் உங்களுக்கு நினைவூட்டலாமா? 329 00:17:23,879 --> 00:17:26,131 ஆட்சேபனை நிராகரிக்கப்பட்டது. நான் அனுமதிக்கிறேன். 330 00:17:33,388 --> 00:17:34,222 செல்வி. வெல்ஷ். 331 00:17:34,222 --> 00:17:37,350 பக்கம் 77 ல் என்னைப் பற்றி எழுதிய ஒரு பகுதி இருக்கிறது. 332 00:17:37,350 --> 00:17:39,853 நீதிமன்றத்திற்கு அதைப் படித்துக்காட்டுகிறாயா? 333 00:17:39,853 --> 00:17:41,730 சரி. 334 00:17:42,439 --> 00:17:46,860 நான் எழுதியிருப்பது, "மேடம் கியூரியைப் போல பெரிய விஞ்ஞானியாக ஜேனி விரும்புகிறாள். 335 00:17:47,402 --> 00:17:48,778 ஆனால் சில நேரங்களில் நான் நினைக்கிறேன்... 336 00:17:48,778 --> 00:17:51,656 என்ன தெரியும், இன்னொரு யோசனை, அதைப் படிக்காதே. 337 00:17:51,656 --> 00:17:55,285 உன் குறிப்பேட்டை கீழே வைத்துவிட்டு என் முகத்தை பார்த்து சொல். 338 00:17:56,620 --> 00:17:58,663 அதில் என்ன எழுதியிருக்கிறது என்று உனக்குத் தெரியும். 339 00:17:58,663 --> 00:18:00,206 ஆம், நீ எழுதியது எனக்குத் தெரியும். 340 00:18:00,206 --> 00:18:02,542 ஆனால் அதை நீ சொல்லி நான் கேட்க விரும்புகிறேன். 341 00:18:02,542 --> 00:18:04,169 நான் விரும்பவில்லை. 342 00:18:04,169 --> 00:18:06,254 என்னை நீதிமன்ற அதிகாரியை அழைக்க வைக்காதே. 343 00:18:06,963 --> 00:18:10,175 யாரும் அதை விரும்பவில்லை. 344 00:18:14,846 --> 00:18:18,058 நீ சொல்வது போல அது உண்மை என்றால், அதை ஏன் உன்னால் சொல்ல முடியவில்லை? 345 00:18:18,642 --> 00:18:19,893 ஏனென்றால்... 346 00:18:19,893 --> 00:18:23,438 ஏனென்றால் நீ ஒரு கோழை, அதோடு உன் நண்பர்களை திருட்டுத்தனமாக உளவு பார்த்து, 347 00:18:23,438 --> 00:18:26,107 அதை எங்கள் முகத்துக்கு நேராக சொல்ல தைரியம் இல்லாமல், மோசமான விஷங்களை 348 00:18:26,107 --> 00:18:28,818 உன் பொக்கிஷமான குறிப்பேட்டில் எழுதிவைத்துக் கொள்கிறாய். 349 00:18:28,818 --> 00:18:30,904 நாம் சிறிய இடைவேளை எடுக்கலாமா? 350 00:18:30,904 --> 00:18:32,155 மறுக்கப்பட்டது. 351 00:18:37,494 --> 00:18:40,288 நாங்கள் காத்திருக்கிறோம், பிரதிவாதியே. 352 00:18:40,872 --> 00:18:41,998 சொல். 353 00:18:42,832 --> 00:18:45,126 பைத்தியக்கார விஞ்ஞானி, மோசமான விஞ்ஞானி. 354 00:18:45,126 --> 00:18:47,546 அல்லது ஒருவேளை மோசமான பைத்தியக்கார விஞ்ஞானி. 355 00:18:52,259 --> 00:18:54,094 அது நிஜமாகவே என் உணர்வுகளை காயப்படுத்தியது. 356 00:18:54,678 --> 00:18:55,971 ஆனால் அது உண்மை. 357 00:18:58,098 --> 00:18:59,933 ஒருவேளை அப்படி இருக்கலாம், ஹேரியட் எம். வெல்ஷ். 358 00:19:00,433 --> 00:19:02,602 ஆனால் வாழ்க்கை உண்மையைப் பற்றியது மட்டுமே அல்ல. 359 00:19:02,602 --> 00:19:04,646 அது நட்பைப் பற்றியதும் கூட. 360 00:19:05,313 --> 00:19:08,316 நட்பில், நீ ஒரு நண்பரின் உணர்வுகளை காயப்படுத்தினால், 361 00:19:08,316 --> 00:19:09,693 நீ மன்னிப்பு கேட்க வேண்டும். 362 00:19:12,153 --> 00:19:14,906 நீ எழுத்தாளராகப் போகிறாய் என்றால், உண்மையைச் சொல்லும் தைரியம் வேண்டும், 363 00:19:14,906 --> 00:19:16,908 அதற்காக மன்னிப்பு கேட்கக்கூடாது என்று ஓல் கோலி 364 00:19:16,908 --> 00:19:19,202 எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார். 365 00:19:19,202 --> 00:19:23,999 ஓல் கோலி இங்கே இல்லை, ஆனால் நான் இங்கு இருக்கிறேன். 366 00:19:34,342 --> 00:19:37,387 மன்னிப்பு கேட்காததற்கு நான் மன்னிப்பு கேட்பது எப்படி? 367 00:19:37,888 --> 00:19:40,807 அதைச் சொல், ஹேரியட். அது அவ்வளவு கடினமானதல்ல. 368 00:19:40,807 --> 00:19:44,853 நான்... உலகில் உள்ள எதையும் விட நான் சொல்ல விரும்புகிறேன், ஆனால்... 369 00:19:45,687 --> 00:19:48,523 வாழ்க்கை உண்மையைப் பற்றியது மட்டுமல்ல என்று நீ முன்பே சொன்னாய். 370 00:19:48,523 --> 00:19:50,483 ஆனால் அது எனக்கு அப்படி இருந்தால் என்ன செய்வது? 371 00:19:51,484 --> 00:19:53,028 இது உன் விருப்பம், ஹேரியட். 372 00:19:59,910 --> 00:20:02,162 நான் தோற்றால் இந்த வெங்காயத்தை சாப்பிடுவேன் என்றேன், 373 00:20:02,162 --> 00:20:04,456 ஏனென்றால் நான் வெற்றி பெறுவேன் என்று எனக்குத் தெரியும். 374 00:20:04,456 --> 00:20:06,833 நான் உண்மையைத்தான் சொன்னேன் என்பதை நிரூபிக்க வேண்டும், 375 00:20:06,833 --> 00:20:08,293 அதைத்தான் நான் செய்தேன். 376 00:20:08,960 --> 00:20:10,962 எனவே, நான் ஏன் தோற்றதாக உணர்கிறேன்? 377 00:20:11,546 --> 00:20:14,549 நாடகத்தில் நான் வெங்காயமாக நடிப்பதை வெறுத்தேன். 378 00:20:15,467 --> 00:20:17,469 பிறகு அதில் என்ன நல்லது இருக்கிறது என்று பார்க்க ஆரம்பித்தேன், 379 00:20:17,469 --> 00:20:19,304 அதன் பல்வேறு அடுக்குகள் மற்றும் எல்லாவற்றுடனும். 380 00:20:19,888 --> 00:20:23,099 ஒரு நல்ல நடிகரைப் போலவே நான் வெங்காயமாக நடிக்க முயற்சித்தேன். 381 00:20:23,099 --> 00:20:24,601 ஆனால் இப்போது நான் உணர்கிறேன்... 382 00:20:36,112 --> 00:20:41,076 வெங்காயம் துர்நாற்றம் வீசும், விரும்பத்தகாத, மக்களை அழ வைக்கும் மோசமான ஒன்று. 383 00:20:42,077 --> 00:20:43,370 என்னைப் போலவே. 384 00:20:44,079 --> 00:20:49,209 உண்மை என்னவென்றால், நான்தான் வெங்காயம். 385 00:21:12,691 --> 00:21:14,401 வீட்டிற்குச் செல்ல வேண்டிய நேரம், குழந்தைகளே. 386 00:21:17,070 --> 00:21:18,613 செல்லம். என்ன ஆனது? 387 00:21:21,074 --> 00:21:22,200 என் கடவுளே. 388 00:21:23,868 --> 00:21:26,705 செல்லம். என்ன இதெல்லாம்? 389 00:21:27,998 --> 00:21:30,083 பாவம். 390 00:21:34,004 --> 00:21:35,171 எப்படி போனது? 391 00:21:36,089 --> 00:21:39,050 உன் நண்பர்களிடம் மன்னிப்பு கேட்டாயா? உன் குறிப்பேடு திரும்ப கிடைத்ததா? 392 00:21:39,050 --> 00:21:41,094 நான் வீட்டிற்கு போக வேண்டும். 393 00:21:41,094 --> 00:21:43,179 சரி. செல்லம். சரி. 394 00:23:51,224 --> 00:23:53,226 வசனத் தமிழாக்கம் அருண்குமார்