1 00:00:57,015 --> 00:01:00,269 ஒன்றுமில்லை. இனி மைக்கேலால் உன்னைக் காயப்படுத்த முடியாது. 2 00:01:32,259 --> 00:01:34,928 சாரா பெர்ரியின் நாவலைத் தழுவியது 3 00:02:00,996 --> 00:02:03,373 உங்கள் இழப்பிற்கு வருந்துகிறேன். 4 00:02:03,457 --> 00:02:06,001 -ஏதாவது தேவை என்றால் கேளுங்கள். -நன்றி. 5 00:02:09,128 --> 00:02:10,631 வருந்துகிறேன். 6 00:02:19,431 --> 00:02:21,225 வருந்துகிறேன். 7 00:02:43,372 --> 00:02:44,831 வீட்டிற்குப் போகிறோமா? 8 00:02:45,374 --> 00:02:48,043 ஆல்ட்வின்டருக்கு. வாடகைக்கு ஒரு குடிசை இருப்பதாக ஸ்டெல்லா சொன்னாள். 9 00:02:48,126 --> 00:02:49,545 என்ன? 10 00:02:51,505 --> 00:02:55,676 கோரா, தன் சகோதரியின் கையில் இறந்து கிடந்த ஒரு சிறுமியைப் பார்த்தாய். 11 00:02:55,759 --> 00:02:58,929 -எதற்கு திரும்பி போக நினைக்கிறாய்? -அங்கே என்ன இருக்கிறது என்று தெரிய வேண்டும். 12 00:03:00,347 --> 00:03:02,516 நீ எஸ்ஸெக்ஸில் இருக்க விரும்புகிறாய், இல்லையா? 13 00:03:02,599 --> 00:03:04,977 இல்லை, எனக்கு சுத்தமான காற்று பிடிக்காது. 14 00:03:08,897 --> 00:03:11,441 குடிசையில் கொஞ்சம் காலம் வாழ்வது மகிழ்ச்சியாக இருக்கும். 15 00:03:14,152 --> 00:03:16,196 நான் வீட்டிற்குப் போய், உன் பொருட்களை எடுத்து வருகிறேன். 16 00:03:17,281 --> 00:03:19,074 நிறைய ஷேர்லாக் புத்தகங்கள் வாங்குகிறேன். 17 00:03:24,538 --> 00:03:26,206 ரயிலில் போக காசு வேண்டும். 18 00:03:27,249 --> 00:03:30,043 கண்டிப்பாக. வேறு ஏதாவது செலவு இருந்தால், 19 00:03:30,127 --> 00:03:32,004 -நான் மகிழ்ச்சியோடு… -என்னை நான் கவனித்துக் கொள்வேன். 20 00:03:37,885 --> 00:03:39,344 லண்டனுக்கு திரும்பி வாருங்கள். 21 00:03:39,928 --> 00:03:41,722 மன்னியுங்கள், லூக். என்னால் அது முடியாது. 22 00:03:41,805 --> 00:03:43,307 நீங்கள் அதிர்ச்சியில் இருக்கிறீர்கள். 23 00:03:43,390 --> 00:03:46,643 நாம் லண்டனுக்குத் திரும்பியதும், நீங்கள் பழையபடி உணர்வீர்கள். 24 00:03:46,727 --> 00:03:50,230 -இப்பவும் நான் நானாகத் தான் இருக்கிறேன். -இல்லை. நம்புங்கள். இதை ஏற்கனவே பார்த்திருக்கிறேன். 25 00:03:51,690 --> 00:03:53,150 -இதையா? என்ன… -ஆமாம். 26 00:03:53,233 --> 00:03:55,986 பெண்ணிடம் பதட்டம். மன உளைச்சல் தந்த இடத்திற்கு திரும்ப வேண்டும் என்ற கட்டாயம். 27 00:03:56,069 --> 00:03:57,571 -உதவத் தான் அங்கு போகிறேன். -என்ன சொல்கிறீர்கள்? 28 00:03:57,654 --> 00:04:00,866 என்னால் மக்களிடம் பேசி, அறிவுப்பூர்வமான விளக்கம் கொடுக்க முடியும். 29 00:04:00,949 --> 00:04:02,993 ப்ளேசியோசார் பற்றிய உங்கள் கருத்தை சொல்லப் போகிறீர்களா? அதுவும் இப்போதா? 30 00:04:03,076 --> 00:04:04,953 கோரா, ஒரு இளம் பெண் இறந்துவிட்டாள். 31 00:04:05,037 --> 00:04:07,831 -உண்மையிலேயே நான்… -என்ன? என் எண்ணங்களை கைவிட வேண்டுமா? 32 00:04:08,415 --> 00:04:09,917 நீங்கள் இப்படி செய்வீர்கள் என எதிர்பார்க்கவில்லை. 33 00:04:10,000 --> 00:04:12,878 -நான் தகுதி பெற்ற மருத்துவர். -நான் உங்களுடைய நோயாளி இல்லை. 34 00:04:20,761 --> 00:04:21,845 எனக்கு கடிதம் அனுப்புவீர்களா? 35 00:04:24,681 --> 00:04:25,807 கண்டிப்பாக அனுப்புகிறேன். 36 00:04:35,275 --> 00:04:38,153 -ரயில் நிலையத்திற்கு போ. -சரி, சார். 37 00:05:56,899 --> 00:05:57,941 இது சிறிதாக இருக்கிறது. 38 00:05:58,025 --> 00:06:00,611 இது பப்பை விடப் பெரியது. உனக்கென்று ஒரு தனி அறை இருக்கிறது. 39 00:06:00,694 --> 00:06:02,487 லண்டனில் கூட எனக்கென்று ஒரு தனி அறை இருந்தது. 40 00:06:16,210 --> 00:06:17,544 நன்றாக இருக்கிறதா? 41 00:06:18,754 --> 00:06:20,130 இதைப் பரிந்துரை செய்வாயா? 42 00:06:21,965 --> 00:06:23,091 செய்வேன். 43 00:06:24,134 --> 00:06:25,427 இதைக் கேள். 44 00:06:25,928 --> 00:06:29,640 “திடமானது எல்லாம் காற்றில் கரைகிறது. புனிதமானது எல்லாம் அசுத்தப்படுகிறது.” 45 00:06:32,100 --> 00:06:33,310 ஷேக்ஸ்பியர் புத்தகமா? 46 00:06:34,269 --> 00:06:35,604 கார்ல் மார்க்ஸ். 47 00:06:35,687 --> 00:06:37,898 கம்யூனிச அறிக்கை என்று நினைக்கிறேன். 48 00:06:40,442 --> 00:06:44,071 நீ எப்படி இவ்வளவு தீவிரமாக ஆனாய்? 49 00:06:46,323 --> 00:06:47,991 நான் பெத்தனல் கிரீனில் பிறந்தேன். 50 00:06:48,825 --> 00:06:52,496 நம்மைச் சுற்றி எல்லாமே மோசமாக இருக்கும் போது, நாம் புது யோசனைகளைத் தேடுவோம். 51 00:06:52,579 --> 00:06:55,999 ஒரு தீவிர சமதர்மவாதியோடு, கோரா எப்படி ஒரே வீட்டில் வாழ்கிறாள்? 52 00:06:56,083 --> 00:06:57,960 அவளும் நானும், ரொம்பவும் மாறுபட்டவர்கள் இல்லை. 53 00:06:58,043 --> 00:06:59,878 அதுவும் அவளது பெரிய நகர வீட்டில். 54 00:06:59,962 --> 00:07:01,380 அது அவளது கணவரின் சொத்து. 55 00:07:01,463 --> 00:07:04,132 -அவளது நகைகளும் கூடவா? -அவள் எல்லாவற்றையும் கொடுத்து விட்டாள். 56 00:07:07,845 --> 00:07:09,096 நீங்கள் நெருக்கமானவர்களா? 57 00:07:09,596 --> 00:07:11,056 ஆமாம், அப்படியும் சொல்லலாம். 58 00:07:11,139 --> 00:07:13,267 -உன்னிடம் மனம்விட்டு பேசுவாளா? -சில சமயங்களில். 59 00:07:13,350 --> 00:07:14,768 மனம் திறந்து பேசுவாளா? 60 00:07:19,439 --> 00:07:20,941 அது… வந்து… 61 00:07:21,942 --> 00:07:24,778 -அவள் வந்து… -அவள் எஸ்ஸெக்ஸில் அதிக நாள் தங்குவாளா? 62 00:07:27,239 --> 00:07:28,490 எனக்குத் தெரியவில்லை. 63 00:07:29,324 --> 00:07:31,493 இப்போதிலிருந்து, கோரா தனக்கு விருப்பமானதை மட்டும் தான் செய்வாள். 64 00:07:32,119 --> 00:07:34,746 -அப்படியா செய்கிறாள்? -உங்களைப் போலத்தான், டாக்டர் காரெட். 65 00:08:05,277 --> 00:08:07,529 ஓ. இதை எங்கிருந்து எடுத்தாய்? 66 00:08:07,613 --> 00:08:10,032 வெளியேதான். நான் இதை வைத்துக் கொள்ளலாமா? 67 00:08:11,491 --> 00:08:13,327 அது யாருக்குச் சொந்தம் என்று கண்டுபிடிக்கும் வரை. 68 00:08:14,745 --> 00:08:16,121 வேறு என்னவெல்லாம் பார்த்தாய்? 69 00:08:16,205 --> 00:08:18,207 கருப்பு ஆடை அணிந்த நிறைய பேரைப் பார்த்தேன். 70 00:08:46,276 --> 00:08:48,445 -ஹென்றி. -அவர்கள் பேசுவதைக் கேட்டீர்களா? 71 00:08:48,529 --> 00:08:49,613 இல்லை. 72 00:08:50,906 --> 00:08:53,367 தன் பாவங்களுக்கு தண்டனையாக கிரேஸி இறந்துவிட்டாளாம். 73 00:08:55,452 --> 00:09:00,040 இல்லைவே இல்லை, ஹென்றி. இல்லை, அவள் மூழ்கி இறந்துவிட்டாள். சரியா? 74 00:09:00,832 --> 00:09:02,835 அது ஒரு விபத்து. வருத்தமான விபத்து. 75 00:09:07,923 --> 00:09:09,633 இனி அவளைக் கடவுள் பார்த்துக்கொள்வார். 76 00:09:15,722 --> 00:09:17,891 நாம் நயோமியைப் பார்த்துக்கொள்ள வேண்டும். 77 00:09:32,573 --> 00:09:33,949 நான் என்ன செய்யட்டும்? 78 00:09:46,628 --> 00:09:47,963 உனக்காக பாட்டு பாடவா? 79 00:09:49,173 --> 00:09:51,425 -உனக்காக பாடுகிறேன். -சரி. 80 00:10:04,605 --> 00:10:11,111 அந்தக் காட்டில் ஒரு அறை இருக்கிறது 81 00:10:11,195 --> 00:10:16,700 சொர்க்கத்தின் மணிகள் அடிப்பதைக் கேட்டேன் 82 00:10:16,783 --> 00:10:22,915 மங்கலான ஊதா நிறத்தால் அது முழுவதும் மூடப்பட்டிருந்தது 83 00:10:22,998 --> 00:10:29,421 மங்கலான ஊதா நிறத்தால் அது முழுவதும் மூடப்பட்டிருந்தது 84 00:10:33,217 --> 00:10:39,056 அந்த அறையில் ஒரு கட்டில் இருக்கிறது 85 00:10:39,139 --> 00:10:44,978 சொர்க்கத்தின் மணிகள் அடிப்பதை நான் கேட்டேன் 86 00:10:45,062 --> 00:10:51,068 கருஞ்சிவப்பு நிறத்தால் அது முழுவதும் மூடப்பட்டிருந்தது 87 00:10:51,151 --> 00:10:57,950 கருஞ்சிவப்பு நிறத்தால் அது முழுவதும் மூடப்பட்டிருந்தது 88 00:11:01,620 --> 00:11:05,791 கட்டிலுக்கு கீழே… 89 00:11:20,013 --> 00:11:21,181 மன்னிக்கவும். 90 00:11:21,265 --> 00:11:23,100 ஒரு பகுதியில் தண்ணீர் ஓடுகிறது 91 00:11:23,183 --> 00:11:25,394 அவள் ஏன் இன்னும் இங்கே இருக்கிறாள்? 92 00:11:25,477 --> 00:11:28,146 மற்றொரு பகுதியில் ரத்தம் ஓடுகிறது 93 00:11:28,230 --> 00:11:33,110 ஒரு பகுதியில் தண்ணீர் மறுபகுதியில் ரத்தம் ஓடுகிறது… 94 00:11:33,193 --> 00:11:34,486 திருமதி. சீபோர்ன். 95 00:11:35,237 --> 00:11:37,531 -கோரா. -என் வருத்தத்தைத் தெரிவிக்கத் தான் வந்தேன். 96 00:11:37,614 --> 00:11:39,575 மற்றவர்களுக்கு தொந்தரவாக இருந்தால் மன்னிக்கவும். 97 00:11:48,667 --> 00:11:52,212 ஸ்டெல்லாவும் நானும், நீங்கள் திரும்பி வருவீர்கள் என நினைக்கவில்லை. 98 00:11:53,505 --> 00:11:56,300 நான் உதவலாம் என்று நினைத்தேன். நடந்ததை சொல்லலாம் என நினைத்தேன். 99 00:11:56,383 --> 00:11:59,303 -எப்படி? -சரி, நான் விளக்குகிறேன். 100 00:12:00,971 --> 00:12:02,723 இல்லை, நீங்கள் பாம்பைத் தேடி வந்தீர்கள், 101 00:12:06,393 --> 00:12:08,645 நான் போக வேண்டும். ஃபிராங்கி எல்லாவற்றையும் எடுத்து வைக்கிறான். 102 00:12:10,230 --> 00:12:11,481 நானும் உங்களோடு வருகிறேன். 103 00:12:15,402 --> 00:12:17,029 நான் பிரச்சினை செய்ய வரவில்லை, வில். 104 00:12:17,112 --> 00:12:20,866 ஆனால் எல்லாவற்றையும் பார்த்து, கேள்வி கேட்க நினைக்கிறீர்கள். 105 00:12:21,491 --> 00:12:22,576 எனக்கு அது பிடிக்கும். 106 00:12:24,578 --> 00:12:27,247 மக்கள் பயந்திருக்கிறார்கள், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். 107 00:12:27,331 --> 00:12:28,373 சரி, புரிகிறது. 108 00:12:28,457 --> 00:12:30,334 உங்களைச் சந்திக்க ஸ்டெல்லா ஆர்வமாக இருப்பாள். 109 00:12:30,834 --> 00:12:32,294 அப்புறமாக வந்து அவளைச் சந்திக்கிறீர்களா? 110 00:12:32,377 --> 00:12:33,795 நிச்சயம் வருகிறேன். 111 00:12:37,674 --> 00:12:39,676 நான் வந்ததில் உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என நினைக்கிறேன். 112 00:12:41,053 --> 00:12:46,141 நீங்கள் புரிந்துகொள்ளவும், உண்மையைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறீர்கள். 113 00:12:48,268 --> 00:12:49,603 அதை நான் ஆமோதிக்கிறேன். 114 00:13:13,752 --> 00:13:16,004 உன் வேலைக்காரி உன்னைப் பார்த்துக்கொள்வாளா? 115 00:13:16,505 --> 00:13:18,131 நான்தான் வேலைக்காரி. 116 00:13:18,924 --> 00:13:23,220 -ஆமாம். நான் ஒரு முட்டாள். நான்… -நான்… கேலி செய்கிறேன், ஸ்பென்சர். 117 00:13:30,727 --> 00:13:31,937 என்ன விஷயம், மோரீன்? 118 00:13:32,020 --> 00:13:33,063 ஆயுதக் கிடங்கில் ஒரு வெடி விபத்து. 119 00:13:33,146 --> 00:13:35,732 அடிபட்ட ஒருவருக்கு பெரிகார்டியல் கிழிந்துவிட்டது. 120 00:13:35,816 --> 00:13:38,318 -இளைஞனா? -ஆமாம். வலிமையானவர் மற்றும் ஆரோக்கியமானவர். 121 00:13:39,528 --> 00:13:40,654 சரி, உடனே வா. 122 00:13:40,737 --> 00:13:42,197 மறுபடியும் ஆரம்பித்துவிட்டது. 123 00:13:46,493 --> 00:13:47,870 ஒரு உதவி செய்ய முடியுமா? 124 00:13:50,956 --> 00:13:54,793 அவன் நலமாகி விடுவான், டாக்டர். சிறிது கூட ரத்தம் சிந்தவில்லை. 125 00:14:01,341 --> 00:14:04,428 உன் சகோதரனின் இதயத்தை சுற்றி ஒரு கிழிசல் இருக்கிறது. 126 00:14:05,053 --> 00:14:06,263 அவனுக்கு ரத்தம் கசிகிறது… 127 00:14:07,890 --> 00:14:10,517 உள்ளுக்குள். வெகு வேகமாக. 128 00:14:11,268 --> 00:14:12,811 உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். 129 00:14:13,979 --> 00:14:16,690 அவனது இதயத்திலா? அது… பாதுகாப்பானதா? 130 00:14:16,773 --> 00:14:19,526 உன்னிடம் உண்மையைச் சொல்ல வேண்டும். போன முறை முயற்சித்த போது, தோல்வி அடைந்தேன். 131 00:14:19,610 --> 00:14:21,445 ஆனால், மருத்துவத்தில் முதல் முறை என்று எப்போதுமே உண்டு, 132 00:14:21,528 --> 00:14:23,822 அதைச் செய்யவில்லை என்றால், நாளை காலை உன் சகோதரன் இறந்து கிடப்பான். 133 00:14:23,906 --> 00:14:25,115 இது தான் அவனைக் காப்பாற்ற ஒரே வழி. 134 00:14:27,159 --> 00:14:28,619 மாஸ்க்கைத் தயார் செய். 135 00:14:29,286 --> 00:14:31,371 நீங்கள் வெளியே காத்திருங்கள். என் தோழி உங்களோடு இருப்பாள். 136 00:14:38,212 --> 00:14:40,797 தயவுசெய்து, முடிந்தவரை காப்பாற்றுங்கள். 137 00:14:41,840 --> 00:14:43,300 வாருங்கள். 138 00:14:48,805 --> 00:14:49,848 அருமை. 139 00:14:52,184 --> 00:14:55,145 யாருக்காவது தகவல் சொல்ல வேண்டுமா? குடும்பத்தினர் யாருக்காவது? 140 00:14:56,563 --> 00:14:58,649 நானும் நெவ்வும், போன வருடம் தான் இந்தியாவில் இருந்து வந்தோம். 141 00:14:59,816 --> 00:15:01,193 இங்கே எங்களுக்கு யாரையும் தெரியாது. 142 00:15:07,157 --> 00:15:08,659 எதற்காக லண்டனுக்கு வந்தீர்கள்? 143 00:15:11,495 --> 00:15:13,455 ஒரு ஆங்கிலேய குடும்பத்தோடு வந்தோம். 144 00:15:14,414 --> 00:15:17,668 நான் ஆயாவாகவும், நெவ் ஆசிரியராகவும் பணியாற்றினோம். 145 00:15:19,169 --> 00:15:23,006 ஆனால், நாங்கள் வந்த பிறகு அவர்கள் மனம் மாறிவிட்டார்கள். 146 00:15:24,633 --> 00:15:26,009 எங்களை அனுப்பிவிட்டார்கள். 147 00:15:28,887 --> 00:15:30,347 வருந்துகிறேன். 148 00:15:35,269 --> 00:15:36,395 கத்திரிக்கோல். 149 00:15:42,067 --> 00:15:43,360 கிளிப்புகள். 150 00:15:57,207 --> 00:15:58,333 நீ தயாரா? 151 00:16:10,012 --> 00:16:11,263 ஊசி. 152 00:16:11,346 --> 00:16:12,723 துடைக்கும் பஞ்சு. 153 00:16:37,539 --> 00:16:38,540 கத்திரிக்கோல். 154 00:16:50,594 --> 00:16:54,264 காயம் இப்போதைக்கு… அப்படியே இருக்கிறது. மார்பை தைத்து விடலாம். 155 00:16:54,348 --> 00:16:56,725 அவன் மயக்கம் தெளியும் வரை நாம் காத்திருக்க வேண்டும். 156 00:17:28,048 --> 00:17:29,675 அது மறுபடியும் பிளந்திருக்க வேண்டும். 157 00:17:32,511 --> 00:17:34,054 கொஞ்சம் நேரம் ஆகட்டும். 158 00:17:54,491 --> 00:17:55,534 அவனுக்கு நினைவு திரும்புகிறது. 159 00:18:02,082 --> 00:18:03,125 லூக். 160 00:18:04,626 --> 00:18:06,003 லூக். 161 00:18:10,549 --> 00:18:13,260 எல்லாம் நல்லபடியாக முடிந்தது. ஒன்றும் பிரச்சினையில்லை. நிம்மதியாக இருங்கள். 162 00:18:13,343 --> 00:18:15,095 ஹாய், நெவ். 163 00:18:18,223 --> 00:18:21,185 நான் செயின்ட் பால் அருகே வந்துகொண்டிருந்தேன், 164 00:18:22,978 --> 00:18:26,064 அந்த டோம் எப்படி… நிற்கிறது என்று ஆச்சரியப்பட்டேன். 165 00:18:27,691 --> 00:18:31,153 சரி, நான் போய் திரு. காரெட்டை பார்க்க வேண்டும். 166 00:18:40,871 --> 00:18:41,997 லூக்? 167 00:18:45,083 --> 00:18:46,460 லூக். 168 00:18:46,543 --> 00:18:47,628 நீ என்ன செய்கிறாய்? 169 00:18:48,295 --> 00:18:51,465 என்னால் முடியும் என நினைத்தேன்… ஆனால், அதை நம்பியதே இல்லை. 170 00:18:53,008 --> 00:18:55,302 ஒரு நொடி கூட நான் சந்தேகப்படவில்லை. 171 00:19:17,449 --> 00:19:18,450 உள்ளே வாருங்கள். 172 00:19:21,954 --> 00:19:23,997 இதை உனக்காக கொண்டு வந்தேன். 173 00:19:24,081 --> 00:19:25,290 நன்றி. 174 00:19:26,083 --> 00:19:30,254 நேற்றைய தொந்தரவிற்கு மன்னிக்கவும். என் துக்கத்தை சொல்லத் தான் வந்தேன். 175 00:19:31,171 --> 00:19:35,175 பக்கத்து குடிசையில் தான் தங்கி இருக்கிறேன், எனவே என்ன உதவி வேண்டுமானாலும் செய்கிறேன். 176 00:19:37,511 --> 00:19:38,971 உங்கள் இழப்பிற்கு வருந்துகிறேன். 177 00:19:41,348 --> 00:19:43,100 என் கணவரும் சமீபத்தில் இறந்துவிட்டார், ஆனால்… 178 00:19:46,019 --> 00:19:47,271 ஒரு மகளை இழப்பது என்பது… 179 00:19:47,354 --> 00:19:50,357 நீங்கள் சொல்வது சரி தான். அது சாதாரண விஷயமில்லை. 180 00:19:54,528 --> 00:19:57,739 -அங்கே ஏதாவது இருக்கிறதா? -நீங்கள் கிளம்பலாம். 181 00:20:08,834 --> 00:20:13,964 உங்கள் மகனிடம் இருக்கும் கோழி… அது வயதான கிராக்நெல்லிற்கு சொந்தமானது. 182 00:20:14,047 --> 00:20:15,507 அவர் கடற்கரையில் இருப்பார். 183 00:20:15,591 --> 00:20:16,758 நன்றி. 184 00:21:18,237 --> 00:21:20,739 -மதிய வணக்கம், திருமதி. சீபோர்ன். -ஹலோ. 185 00:21:21,490 --> 00:21:24,076 -கிராக்நெல்லிடம் என்ன வேண்டும்? -அவர் கோழி எங்களிடம் இருக்கிறது. 186 00:21:24,159 --> 00:21:25,452 ஜாக்கிரதையாக இருங்கள். 187 00:21:25,536 --> 00:21:27,120 என்ன சொல்கிறீர்கள்? 188 00:21:27,871 --> 00:21:29,039 அவர் தேவாலயத்திற்குப் போக மாட்டார். 189 00:21:29,122 --> 00:21:30,624 நாங்களும் தான் தேவாலயத்திற்குப் போக மாட்டோம். 190 00:21:44,847 --> 00:21:46,390 ஹலோ. 191 00:21:46,473 --> 00:21:47,766 திரு. கிராக்நெல்? 192 00:21:49,226 --> 00:21:51,395 பாம்பை நேசிக்கும் புதியவர்கள். 193 00:21:52,062 --> 00:21:53,564 அது என்னுடைய கோழி. 194 00:21:53,647 --> 00:21:56,608 மன்னிக்கவும். இது திருட்டு போய்விட்டது என்று நீங்கள் நினைக்க வேண்டாம். 195 00:21:56,692 --> 00:21:58,151 ஒரு மிருகத்தாலா? 196 00:21:59,945 --> 00:22:02,155 அங்கே ஏதாவது இருக்கிறது என்று நீங்கள் நம்புகிறீர்களா? 197 00:22:02,239 --> 00:22:04,533 இது நம்பிக்கை பற்றிய கேள்வி இல்லை எனக்கு. 198 00:22:05,784 --> 00:22:07,744 -கூண்டில் விடு. -உங்களிடம் ஆதாரம் உண்டா? 199 00:22:09,746 --> 00:22:11,874 நான் என்ன சொல்கிறேன் என்றால், கடவுளை நம்பாவிட்டால், 200 00:22:11,957 --> 00:22:13,792 சாத்தானையும் நம்பக்கூடாது. 201 00:22:15,294 --> 00:22:17,129 சரி, கிரேஸி பேங்க்ஸிற்கு என்ன நடந்தது என நினைக்கிறீர்கள்? 202 00:22:19,131 --> 00:22:21,592 ஒவ்வொரு வருடமும் சகதியில் யாராவது ஒருவர் இறக்கிறார்கள். 203 00:22:22,384 --> 00:22:24,428 அலையினால் இழுக்கப்படுகிறார்கள். 204 00:22:25,929 --> 00:22:29,892 அசாதாரணமான ஏதாவது ஒன்றை நீங்கள் பார்த்ததுண்டா? ஒரு கடல் மிருகம் போல? 205 00:22:29,975 --> 00:22:32,686 இன்னும் இல்லை. விலாங்கு மீன்கள் மற்றும் கடற்பறவைகளைத் தான் பார்த்துள்ளேன். 206 00:22:33,520 --> 00:22:34,688 ஆனால், பயங்கர மிருகம் ஏதுமில்லை. 207 00:22:35,355 --> 00:22:37,316 மன்னிக்கவும், திரு. கிராக்நெல். 208 00:22:37,399 --> 00:22:39,026 இவற்றின் பெயர்கள் என்னென்ன? 209 00:22:39,693 --> 00:22:41,987 காக் மற்றும் மைகாக். 210 00:22:43,655 --> 00:22:45,115 நகைச்சுவைக்காக சொன்னேன். 211 00:22:46,408 --> 00:22:47,618 அவற்றிற்கு உணவு கொடுக்கிறாயா, குட்டி? 212 00:22:54,750 --> 00:22:55,751 இதோ. 213 00:22:58,128 --> 00:23:00,422 -நன்றி. -பரவாயில்லை. 214 00:23:17,231 --> 00:23:19,149 நான் ஒன்று சொல்லவா, ஃபாதர்? 215 00:23:20,025 --> 00:23:21,151 கண்டிப்பாக. 216 00:23:25,447 --> 00:23:26,740 நான் பாம்பைப் பார்த்தேன். 217 00:23:30,077 --> 00:23:31,453 நன்றாகத் தெரியுமா? 218 00:23:33,830 --> 00:23:35,457 இப்போது இரவிலும் அதைப் பார்க்கிறேன். 219 00:23:38,544 --> 00:23:40,712 நிழலில் எனக்காக காத்திருக்கிறது போல தோன்றுகிறது. 220 00:23:40,796 --> 00:23:42,506 -இல்லை, நயோமி. -நான் பார்க்கிறேன். 221 00:23:44,424 --> 00:23:45,551 என்னால் உணர முடிகிறது. 222 00:23:45,634 --> 00:23:46,802 அது வந்து… 223 00:23:49,012 --> 00:23:51,849 …இரவில் பயம் நம்மை ஆட்கொள்ள விடுகிறோம். 224 00:24:20,794 --> 00:24:22,296 -ஹலோ, ஸ்டெல்லா. -ஹலோ 225 00:24:23,422 --> 00:24:24,464 ஹலோ. 226 00:24:24,548 --> 00:24:26,008 உன்னை சந்திப்பதில் மகிழ்ச்சி. 227 00:24:26,091 --> 00:24:28,552 எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள்? குழந்தைகள் நலமா? 228 00:24:29,261 --> 00:24:30,387 சற்று பதட்டமாக இருக்கிறார்கள். 229 00:24:32,014 --> 00:24:33,015 உள்ளே வாருங்கள். 230 00:24:34,641 --> 00:24:36,143 கோரா. ஃபிராங்கி. 231 00:24:38,312 --> 00:24:39,354 நீ என்ன செய்கிறாய்? 232 00:24:39,438 --> 00:24:42,649 -அறிவியல். சுவாரஸ்யமாக இல்லை. -அதையாவது நீ செய்கிறாயே. 233 00:24:43,817 --> 00:24:44,902 பெண்கள் அறிவியல் படிக்க மாட்டார்களா? 234 00:24:44,985 --> 00:24:48,614 உலகத்தைப் புரிந்துகொள்ள நம் எல்லோருக்கும் அறிவியல் தேவை. 235 00:24:49,239 --> 00:24:52,034 பாடம் நடத்த முடியுமா? நீங்கள் இங்கே வந்திருப்பதன் காரணத்தைச் சொல்லுங்களேன். 236 00:24:53,160 --> 00:24:56,330 அப்படி செய்வதில் சந்தோஷம் தான். என் படிமங்களைக் கொண்டு வருகிறேன். 237 00:24:56,830 --> 00:24:59,917 -அது நல்ல யோசனையா? -இருக்கலாமே. 238 00:25:00,000 --> 00:25:03,295 -வில்லை அதற்கு ஏற்பாடு செய்யச் சொல்கிறேன். -இப்போது, வில் எங்கே? 239 00:25:03,378 --> 00:25:04,379 அவன் அலுவலகத்தில். 240 00:25:04,463 --> 00:25:06,048 நான் போய் ஹலோ சொல்கிறேன். 241 00:25:12,179 --> 00:25:13,430 திருமதி. சீபோர்ன். 242 00:25:13,514 --> 00:25:15,682 கோரா. நான்… 243 00:25:15,766 --> 00:25:18,560 ஒரு கிராமப்புற பாதிரியார் இவ்வளவு படிப்பார் என்று நான் நினைத்ததே இல்லை. 244 00:25:20,896 --> 00:25:22,814 கொஞ்சம் கூட யோசிக்க மறுக்கிறீர்கள். 245 00:25:30,697 --> 00:25:32,533 இங்கே என்ன செய்கிறீர்கள், வில் 246 00:25:32,616 --> 00:25:33,617 என்ன சொல்ல வருகிறீர்கள்? 247 00:25:34,785 --> 00:25:37,996 உங்களைப் போன்ற ஒருவர், இங்கே இருப்பது பற்றிக் கேட்கிறேன். 248 00:25:40,999 --> 00:25:42,835 அதையே நான் உங்களிடமும் கேட்கலாமே. 249 00:25:45,504 --> 00:25:49,383 காலை நடை பயிற்சியின் போது என்ன கிடைத்தது என பாருங்களேன். 250 00:25:51,051 --> 00:25:53,011 நீங்கள் பொருட்களை சேகரிப்பவர் என்று நான் நினைக்கவில்லை. 251 00:25:53,095 --> 00:25:57,391 நீங்கள் தான் என்னை அலசி ஆராய ஊக்குவித்தீர்கள். 252 00:26:01,186 --> 00:26:03,689 அது என்ன? தெரிகிறதா? 253 00:26:05,274 --> 00:26:07,109 அது ஒரு வகை இரால். 254 00:26:08,485 --> 00:26:12,281 ஹோப்லோபாரியா அல்லது… இது எங்கு கிடைத்தது? 255 00:26:12,364 --> 00:26:16,326 செயின்ட் ஆசித் அருகே இருக்கும் பாறையில். ஒரு நாள் உங்களுக்கு காண்பிக்கிறேன். 256 00:26:16,410 --> 00:26:17,411 நன்றி. 257 00:26:22,124 --> 00:26:23,125 அதை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். 258 00:26:26,044 --> 00:26:28,005 இதோ வருகிறேன். நான் வந்து… 259 00:26:30,841 --> 00:26:32,301 அது என்ன? 260 00:26:33,051 --> 00:26:35,095 சற்று விசித்திரமான நிறம், இல்லையா? 261 00:26:35,179 --> 00:26:36,889 நம் பொக்கிஷங்களைப் பகிர்கிறோம். 262 00:26:38,640 --> 00:26:40,058 அது பரவாயில்லையா? 263 00:26:42,936 --> 00:26:43,979 பரவாயில்லை. 264 00:26:48,066 --> 00:26:49,902 இது தேம்ஸ் நதிக்கரையில் கிடைத்தது. 265 00:26:49,985 --> 00:26:53,989 அப்படியா? எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. 266 00:26:58,076 --> 00:26:59,620 மார்த்தா எப்போது திரும்பி வருவார்? 267 00:27:00,162 --> 00:27:01,455 விரைவில் என நம்புகிறேன். 268 00:27:06,210 --> 00:27:09,463 “திரு. லூக் காரெட் 269 00:27:09,546 --> 00:27:12,883 -தன் முதல் இருதய அறுவை சிகிச்சையை…” -எங்களுக்குத் தெரியும். 270 00:27:12,966 --> 00:27:16,803 “…லண்டனில் உள்ள பாரோ மருத்துவமனையில் செய்திருக்கிறார். 271 00:27:16,887 --> 00:27:21,308 திரு. காரெட்டின் உயிர் காக்கும், அல்லது சிலர் சொல்வது போல அற்புதமான…” 272 00:27:21,391 --> 00:27:23,727 -அற்புதமா? -ஓ, வாயை மூடு, காரெட். 273 00:27:23,810 --> 00:27:27,481 “…அறுவை சிகிச்சையை குறைத்து மதிப்பிடக் கூடாது. 274 00:27:27,564 --> 00:27:31,276 அது மருத்துவ ஆராய்ச்சியின் எல்லைகளை மட்டும் விரிவுப்படுத்தாது…” 275 00:27:31,360 --> 00:27:34,530 நீ இங்கே என்ன செய்கிறாய்? உன்னை பார்ப்பதில் மகிழ்ச்சி தான். 276 00:27:34,613 --> 00:27:37,157 டாக்டர் காரெட் ஒரு அற்புதம் செய்து இருக்கலாம். 277 00:27:37,241 --> 00:27:39,076 அவரே இயேசு கிறிஸ்துவாகவும் இருக்கலாம், 278 00:27:39,159 --> 00:27:41,828 ஆனால் நல்ல உணவு இல்லாமல் எந்த நோயாளியால் நலமாக வாழ முடியும் என சொல் பார்க்கலாம். 279 00:27:41,912 --> 00:27:43,372 நான் உன்னோடு வருகிறேன். 280 00:27:44,081 --> 00:27:47,251 திரு. காரெட் புகழ் பெறட்டும். நான் உன்னைப் பின்தொடர்கிறேன். 281 00:27:48,252 --> 00:27:51,630 “இது ஒரு முதல் தரமான பங்களிப்பு”… 282 00:27:58,971 --> 00:28:01,598 “அவள்தான் சுலபமாக வேலை செய்து…” 283 00:28:01,682 --> 00:28:03,016 நீ நன்றாக தேறிவிட்டாய். 284 00:28:03,100 --> 00:28:04,977 நன்றி, டாக்டர். 285 00:28:05,060 --> 00:28:08,146 நீ திரு. காரெட்டை சந்தித்தால், அவருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். 286 00:28:08,230 --> 00:28:10,941 அந்தக் காயத்தை நான் பார்க்கலாமா? 287 00:28:22,661 --> 00:28:24,997 -நன்றி. -நான் தான் சமைத்தேன். 288 00:28:25,080 --> 00:28:26,415 மிக்க நன்றி. 289 00:28:28,917 --> 00:28:32,045 உங்கள் வயதாக இருக்கும் போது என் சகோதரனும் நோயுற்றான். அது ஒரு போராட்டம். 290 00:28:32,129 --> 00:28:33,547 உங்களுக்கும் பெற்றோர்கள் அருகில் இல்லையா? 291 00:28:35,716 --> 00:28:38,427 பரவாயில்லை. பல காலம் முன்பு நடந்தது. பத்து வருடங்கள் இருக்கும். 292 00:28:40,762 --> 00:28:45,851 -உன் சகோதரன் இப்போது நலமா? -இல்லை. டைஃபஸ். அவன் நலம் பெறவே… 293 00:28:45,934 --> 00:28:47,227 வருந்துகிறேன். 294 00:28:49,438 --> 00:28:50,981 நான் பல வகைகளில் அதிர்ஷ்டசாலி தான். 295 00:28:51,064 --> 00:28:53,192 நல்ல வேலை மற்றும் வீடு இப்போது இருக்கிறது. 296 00:28:56,445 --> 00:28:59,656 வீட்டிற்குச் செல்வதை நினைத்து அவன் இன்னும் அதிக மகிழ்ச்சி அடைவான் என நினைத்தேன். 297 00:29:00,407 --> 00:29:03,702 நீண்ட மருந்துச் சீட்டைக் கொடுத்து, ஒரு மாதம் ஓய்வு எடுக்கச் சொல்லும் போதா? 298 00:29:03,785 --> 00:29:04,870 குறைந்தபட்சம். 299 00:29:05,495 --> 00:29:06,955 அவர்கள் எப்படி வாடகை கொடுப்பார்கள்? 300 00:29:07,831 --> 00:29:09,458 அவர்கள் வெளியேற்றப்படுவார்களா? 301 00:29:09,541 --> 00:29:13,253 கண்டிப்பாக இல்லை. திங்கட்கிழமை காலை அவன் மறுபடியும் வெடிமருந்து பொட்டலம் போட ஆரம்பிப்பான். 302 00:29:13,337 --> 00:29:16,215 இல்லை, இல்லை, மார்த்தா. அது அவன் ஆரோக்கியத்திற்குக் கேடு. 303 00:29:16,298 --> 00:29:17,841 அவனிடம் இதைச் சொல்ல வேண்டும். 304 00:29:17,925 --> 00:29:21,178 என்ன? அவனால் குணமடைய முடியாது என்றா? நீ சொல்கிறாயா அல்லது நான் சொல்லட்டுமா? 305 00:29:32,564 --> 00:29:34,316 நான்… அறிவுப்பூர்வமாக செயல்பட்டிருந்தால், 306 00:29:34,399 --> 00:29:38,570 பாராளுமன்ற உறுப்பினராக, ஏதாவது சட்டம் பற்றி விவாதித்திருப்பேன். 307 00:29:39,655 --> 00:29:44,117 ஆனால், உண்மையில், நான்… கிராக்நெல்லை மறுபடியும் 308 00:29:45,369 --> 00:29:48,413 அவரை கைவிடாத கடவுளிடம் திருப்பி அழைத்துச் செல்வதில் நேரத்தைக் கழிப்பேன். 309 00:29:49,915 --> 00:29:50,958 அல்லது… 310 00:29:53,085 --> 00:29:58,549 எனக்கு நோக்கம் தான் தேவை, சாதனைகள் அல்ல. 311 00:29:59,341 --> 00:30:00,717 வித்தியாசம் புரிகிறதா? 312 00:30:03,887 --> 00:30:05,055 மேலும், 313 00:30:06,765 --> 00:30:08,559 ஸ்டெல்லாவும் எனக்கு அந்தளவுக்கு முக்கியம். 314 00:30:10,978 --> 00:30:13,355 சரி, அது இங்கே தான் கிடைத்தது. 315 00:30:14,648 --> 00:30:17,401 பூகம்பத்தின் போது இங்கே நிலச்சரிவு ஏற்பட்டது போல் இருக்கிறது. 316 00:30:17,484 --> 00:30:19,653 அட, ஆமாம். இந்த இடம் மிக மோசமாக பாதிக்கப்பட்டது. 317 00:30:32,457 --> 00:30:34,084 கருவிகள் எடுத்துக் கொண்டு பிறகு வருகிறேன். 318 00:30:34,168 --> 00:30:35,794 என்ன கண்டுபிடிக்கலாம் என்று நினைக்கிறீர்கள்? 319 00:30:37,212 --> 00:30:38,714 கடந்த காலத்திற்கான ஒரு இணைப்பை. 320 00:30:40,174 --> 00:30:42,426 நமக்கெல்லாம் முன்பே உருவான விலங்குகளோடு ஒரு இணைப்பை. 321 00:30:44,595 --> 00:30:46,180 அங்கே என்ன இருக்கிறது என நினைக்கிறீர்களோ அதோடு ஒரு இணைப்பை. 322 00:30:48,724 --> 00:30:49,933 இருக்கலாம். 323 00:30:54,021 --> 00:30:59,026 ஆனால் இறந்த படிமம் எப்படி வாழும் ஒரு உயிரினத்தை நிரூபிக்க முடியும்? 324 00:31:00,903 --> 00:31:04,907 அது முடியாது. ஆனால் நமக்கு துப்புகள் கொடுக்கலாம். 325 00:31:06,783 --> 00:31:07,951 உண்மையிலேயே அதை நம்புகிறீர்களா? 326 00:31:09,453 --> 00:31:10,787 அப்படித்தான் நினைக்கிறேன். 327 00:31:12,915 --> 00:31:15,792 யோசிப்பது மற்றும் நம்புவது இடையே இருக்கும் வித்தியாசம் எனக்குத் தெரியாது. 328 00:31:16,752 --> 00:31:18,837 என்றாவது ஒருநாள் நீங்கள் எனக்கு கற்றுக் கொடுக்கலாமே. 329 00:31:21,131 --> 00:31:24,092 நம்பிக்கையை விட நல்ல ஆதாரத்தை நீங்கள் விரும்புவீர்கள் என நினைத்தேன். 330 00:31:25,135 --> 00:31:27,930 உங்கள் இறையியல் போலவே அறிவியலுக்கும் நிறைய கனவு காண வேண்டும். 331 00:31:28,722 --> 00:31:32,976 அறியாமையிலிருந்து புரிந்துகொள்ளும் வரை, எல்லாவற்றிலும் நம்பிக்கை வேண்டும். 332 00:31:36,563 --> 00:31:37,814 நம்பிக்கை. 333 00:31:50,494 --> 00:31:52,204 நீங்கள் அந்தப் பாம்பு விஷயத்தை நம்புகிறீர்களா? 334 00:31:56,208 --> 00:31:57,751 எனக்குத் தெரியவில்லை, ஃபிராங்கி. 335 00:31:59,253 --> 00:32:01,296 நம்மிடம் அதற்கான பதில்களும் இல்லை. 336 00:32:03,215 --> 00:32:04,341 ஆனால், என் கணவரிடம் சொல்லாதே. 337 00:32:04,424 --> 00:32:05,968 என்னால் ரகசியத்தை பாதுகாக்க முடியும். 338 00:32:07,386 --> 00:32:08,554 என்னாலும் முடியும். 339 00:32:12,432 --> 00:32:14,226 அவர்கள் சிப்பிகளை அறுவடை செய்கிறார்கள். 340 00:32:15,060 --> 00:32:17,062 சிறு வயதில் நானே இதை செய்திருக்கிறேன். 341 00:32:17,145 --> 00:32:19,606 அட. நீங்கள் நகரத்துப் பெண் என்று நினைத்தேன். 342 00:32:19,690 --> 00:32:21,775 இல்லை, 16 வயது வரை கடற்கரை பகுதியில் வாழ்ந்தேன். 343 00:32:23,694 --> 00:32:26,697 என் கணவரை சந்திக்க என் அப்பா என்னை லண்டனுக்கு அழைத்துச் சென்றார். 344 00:32:30,033 --> 00:32:31,702 வருந்துகிறேன். நீங்கள் அவரது பிரிவால் வருந்துவீர்கள். 345 00:32:36,957 --> 00:32:40,002 என் வீட்டிற்கு வந்தால் நீங்கள் முதலில் பார்ப்பது… 346 00:32:41,545 --> 00:32:43,589 ஒரு ஜப்பானிய கிண்ட்சுகி சாடியைத் தான். 347 00:32:44,464 --> 00:32:48,760 அது உடைந்து போய் மறுபடியும் தங்கத்தால் ஒன்று சேர்க்கப்பட்டது. 348 00:32:48,844 --> 00:32:49,845 அருமையாக இருக்கும். 349 00:32:52,222 --> 00:32:54,266 நாங்கள் சந்தித்த போது, மைக்கேல் அதை எனக்குக் கொடுத்தார். 350 00:32:59,521 --> 00:33:03,942 என்னை உடைத்து தங்கத்தால் இணைக்க நினைப்பதாக சொன்னார். 351 00:33:10,532 --> 00:33:11,783 அவர் உங்களைக் காயப்படுத்தினாரா? 352 00:33:26,173 --> 00:33:27,508 பாருங்கள். 353 00:34:21,186 --> 00:34:22,938 நைட்ஸ்பிரிட்ஜை விட சற்று வித்தியாசமாக இருக்கிறது தானே? 354 00:34:46,210 --> 00:34:49,505 -ஹலோ. வந்ததற்கு நன்றி. -ஒன்றும் பிரச்சினையில்லை. 355 00:34:49,590 --> 00:34:50,757 உன்னைப் பார்ப்பது சந்தோஷம் தான். 356 00:34:54,594 --> 00:34:56,304 -நோயாளி எப்படி இருக்கிறார்? -சற்று பரவாயில்லை. 357 00:34:57,181 --> 00:34:59,725 நீங்கள் சொன்னது போலவே, தினமும் காயத்தை சுத்தம் செய்கிறேன். 358 00:35:10,861 --> 00:35:11,862 வலி இருக்கிறதா? 359 00:35:12,863 --> 00:35:14,323 மூச்சு விட்டால் மட்டும். 360 00:35:14,907 --> 00:35:16,074 நல்லது. 361 00:35:20,287 --> 00:35:21,455 நன்றி. 362 00:35:38,305 --> 00:35:41,350 சரக்கு. பணம் கேட்க மாட்டேன். 363 00:35:42,309 --> 00:35:43,602 நன்றி. 364 00:35:44,269 --> 00:35:46,605 நிச்சயம் நீ திரும்ப வேலைக்கு போகக் கூடாது. 365 00:35:48,106 --> 00:35:49,650 ஏற்கனவே வேலை போய் விட்டது. 366 00:35:51,485 --> 00:35:52,694 எப்படி சமாளிக்கிறாய்? 367 00:35:54,404 --> 00:35:55,989 ஏதோ சமாளிக்கிறோம். 368 00:35:59,326 --> 00:36:01,453 உனக்கு குணமாகும் வரை நான் உன் வாடகையைக் கொடுக்கிறேன். 369 00:36:02,996 --> 00:36:05,249 நீ மருத்துவத்திற்கு மிகச் சிறந்த பங்களிப்பு செய்திருக்கிறாய். 370 00:36:06,083 --> 00:36:08,794 -ஏதோ எங்களால் முடிந்தது. -நீங்கள் என் சகோதரனின் உயிரைக் காப்பாற்றினீர்கள். 371 00:36:08,877 --> 00:36:10,462 நான் வற்புறுத்துகிறேன். 372 00:36:21,431 --> 00:36:22,558 எங்களுக்கு தானம் வேண்டாம். 373 00:36:23,141 --> 00:36:25,477 படித்த நெவ்வாலும், என்னாலும் எங்கள் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியும். 374 00:36:25,561 --> 00:36:30,065 -தெரியும். கடனாக நினைத்துக்கொள், நீ… -எதுவரை? 375 00:36:30,148 --> 00:36:33,110 இந்த குடிசைப் பகுதியில், தீப்பெட்டிகள் மற்றும் வெடிமருந்து நிரப்பும் வேலை செய்கிறோம். 376 00:36:33,193 --> 00:36:35,654 -புரியவில்லையா? -புரிகிறது. 377 00:36:35,737 --> 00:36:38,365 -அதனால்தான் நான் சமதர்மவாதியானேன். -பிரச்சினைக் கொடுப்பவர்கள். 378 00:36:50,377 --> 00:36:53,046 மாற்றம் கொண்டு வர சில சமயம் நாம் பிரச்சினை செய்ய வேண்டும். 379 00:36:53,922 --> 00:36:57,301 சரி. எல்லாம் நன்றாகத்தான் உள்ளது. இந்த சரக்கு வலியைக் குறைக்கும். 380 00:36:58,427 --> 00:36:59,845 மறுபடியும், நன்றி, டாக்டர். 381 00:37:02,097 --> 00:37:04,850 ஏதாவது ஒரு சந்திப்பிற்கு வா. உன்னை நன்கு பார்த்துக்கொள்வோம். 382 00:37:09,188 --> 00:37:10,689 வாழ்த்துக்கள். 383 00:37:17,196 --> 00:37:20,574 எனக்கு உன் உதவி தேவை, ஸ்பென்சர். எல்லாவற்றையும் மாற்றுவதற்கு உதவு. 384 00:37:21,783 --> 00:37:22,993 என்னால் எப்படி உதவ முடியும்? 385 00:37:23,076 --> 00:37:25,913 நீ சார்லஸ் ஆம்ப்ரோஸ் உடன் பேசு. அவர் என்னை மதிப்பதில்லை. 386 00:37:26,580 --> 00:37:28,207 அவரிடம் என்ன சொல்ல வேண்டும்? 387 00:37:28,957 --> 00:37:30,459 மக்களுக்கு சுத்தமான மலிவான வீடுகள் தேவை. 388 00:37:30,542 --> 00:37:34,588 பாராளுமன்றத்தில் சமூக வீட்டுவசதி மசோதா கொண்டு வரும்படி ஆம்ப்ரோஸிடம் சொல். 389 00:37:36,423 --> 00:37:39,968 நான் அவருக்கு கடிதம் எழுதுகிறேன். இங்கே பார்த்ததைச் சொல்கிறேன். 390 00:37:40,052 --> 00:37:42,095 சரியான விவரங்களை உள்ளடக்கி நான் எழுதிக் கொடுக்கிறேன். 391 00:37:42,179 --> 00:37:44,973 அல்லது மதிய உணவு சாப்பிட செல்லலாம். சேர்ந்தே கடிதத்தையும் எழுதலாம். 392 00:37:51,772 --> 00:37:56,068 அன்புள்ள திரு. ஆம்ப்ரோஸ், நான் உங்களுக்கு கடிதம் எழுதுவதை மன்னிப்பீர்களாக. 393 00:37:57,402 --> 00:37:58,904 உங்கள் தொகுதியிலுள்ள வீட்டு வசதிகளைப் பற்றி 394 00:37:58,987 --> 00:38:01,740 தெரிந்து கொள்ளும் வாய்ப்பு சமீபத்தில் எனக்கு கிடைத்தது, 395 00:38:02,950 --> 00:38:09,248 இருபதாவது நூற்றாண்டை நோக்கிச் செல்லும் நாம், சில மாற்றங்கள் செய்ய வேண்டிய நேரம் இது. 396 00:38:36,650 --> 00:38:39,486 உண்மையான பொருள் 397 00:38:48,036 --> 00:38:50,205 ஃபாட்டா மொர்கானா 398 00:38:52,207 --> 00:38:53,500 கற்பனை செய்யப்பட்ட பொருள் அதிகமாகும் வெப்பக்காற்று 399 00:38:53,584 --> 00:38:54,418 உண்மையான பொருள் குளிர்ந்த காற்று 400 00:39:26,658 --> 00:39:28,702 கோல்செஸ்டர் ரயில் நிலையம்! 401 00:39:28,785 --> 00:39:30,162 மார்த்தா. 402 00:39:32,956 --> 00:39:34,082 இங்கே என்ன செய்கிறாய்? 403 00:39:34,166 --> 00:39:37,920 உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி. நான் நகரத்து நூலகத்திற்கு வந்தேன். 404 00:39:38,003 --> 00:39:39,463 -ஃபிராங்கி எங்கே? -ஸ்டெல்லாவோடு இருக்கிறான். 405 00:39:39,546 --> 00:39:42,591 கொடு. என்னிடம் கொடு. உன்னிடம் நிறைய பேச வேண்டும். 406 00:39:42,674 --> 00:39:45,552 -அட, நானும் தான். -உனக்கு குடிசையைக் காண்பிக்க ஆவலாக இருக்கிறேன். 407 00:39:48,347 --> 00:39:49,765 அதோ அங்கிருக்கிறது. 408 00:39:51,642 --> 00:39:52,643 அருமையாக இருக்கிறது. 409 00:39:57,481 --> 00:39:59,024 அவர் தான் வில். 410 00:40:02,444 --> 00:40:04,196 அட, அங்கே. 411 00:40:08,116 --> 00:40:09,368 ஹலோ, கோரா. 412 00:40:11,453 --> 00:40:15,290 இப்போது வரை நூலகத்தில் இருந்தேன். அது கானல் நீர் இல்லை. அதன் பெயர்… 413 00:40:15,374 --> 00:40:17,000 -ஃபாட்டா மொர்கானா. -உங்களுக்கு எப்படி தெரியும்? 414 00:40:17,084 --> 00:40:18,418 என் புத்தகத்தில் இருக்கிறது. 415 00:40:18,961 --> 00:40:21,630 இத்தாலியில் மெசினா கால்வாயில் ஏன்ஜெலுஸி பார்த்திருக்கிறார். 416 00:40:21,713 --> 00:40:22,840 பாருங்கள். 417 00:40:22,923 --> 00:40:26,468 ஆக, சரியான வகை குளிர்ந்த மற்றும் வெப்ப காற்று கலக்கும்போது ஒரு ரிஃப்ராக்டிங் லென்ஸ் உண்டாகிறது. 418 00:40:26,552 --> 00:40:28,428 எனவே, நீரில் இருப்பவை நகர்வது மற்றும் கலைந்தது போல காணப்படுகின்றன. 419 00:40:28,512 --> 00:40:31,223 -நானே சுற்றிப் பார்க்கிறேன். -ஒரு நிமிடத்தில் வந்துவிடுகிறேன். 420 00:40:34,268 --> 00:40:36,019 அறிவியலின் அற்புதங்கள். 421 00:40:36,103 --> 00:40:39,690 இருந்தாலும்… எனக்கு கவலைக் கொடுக்கிறது. 422 00:40:39,773 --> 00:40:40,774 ஏன்? 423 00:40:42,067 --> 00:40:43,235 தெரியவில்லை. 424 00:40:44,236 --> 00:40:47,698 நீயும் நானும், வானத்தில் ஒரு படகு போவதாக நினைக்கிறோம். 425 00:40:48,574 --> 00:40:53,078 நயோமியோ, தண்ணீரில் பாம்பைப் பார்த்ததாக நினைக்கிறாள். 426 00:40:54,496 --> 00:40:55,998 எனக்குத்… தெரியவில்லை. 427 00:40:57,332 --> 00:40:58,584 ஸ்டெல்லா என்ன நினைக்கிறாள்? 428 00:41:02,171 --> 00:41:03,380 இன்னும் அவளிடம் சொல்லவில்லை. 429 00:41:11,054 --> 00:41:13,432 நான் உள்ளே போய் மார்த்தாவை சமாதானப்படுத்த வேண்டும். 430 00:41:17,352 --> 00:41:18,770 கோரா. 431 00:41:21,356 --> 00:41:23,525 இங்கே ஏதோ விசித்திரமாக நடப்பதாக உங்களுக்குத் தோன்றுகிறதா? 432 00:41:25,152 --> 00:41:26,278 கண்டிப்பாக இல்லை. 433 00:41:46,882 --> 00:41:48,967 -மாத்யூ. -தடுப்புகள் தயாராகிவிட்டன! 434 00:41:49,718 --> 00:41:52,429 -நான் இரவு நேர காவலுக்குப் போகிறேன். -என்ன? மாத்யூ. 435 00:41:52,513 --> 00:41:55,974 கடற்கரையில் நெருப்பு ஏற்றுவேன். இன்றிரவு நான் செய்துவிட்டு, ஒரு பெயர் பட்டியல் தயாரிப்பேன். 436 00:41:56,600 --> 00:41:57,851 அதைப் பார்த்தால்… 437 00:41:57,935 --> 00:42:01,939 என்ன? ஓக் மரக்கிளையை வைத்து அதை தாக்குவாயா? 438 00:42:02,022 --> 00:42:03,106 தரையில் சண்டை போடுவாயா? 439 00:42:03,190 --> 00:42:04,983 கிராமத்திற்கு திரும்பி ஓடி கூச்சல் போடுவேன். 440 00:42:06,485 --> 00:42:10,781 புரியவில்லையா? குழந்தைகள் உள்பட நம் எல்லோருக்கும் மீண்டும் தைரியம் வர வைக்க வேண்டும். 441 00:42:12,866 --> 00:42:13,951 சரி. 442 00:42:15,953 --> 00:42:19,248 -ஆனால், அவர்களுக்கு கொஞ்சம் தெளிவு தான் தேவை. -என்ன சொல்கிறீர்கள்? 443 00:42:19,331 --> 00:42:21,959 என் தோழி, திருமதி. சீபோர்ன், ஒரு இயற்கைவாதி, 444 00:42:22,042 --> 00:42:25,671 பள்ளியில் குழந்தைகளோடு பேச ஒப்புக்கொண்டிருக்கிறார். 445 00:42:25,754 --> 00:42:26,964 அப்படியா. 446 00:42:27,548 --> 00:42:28,715 அவரை நீ வரவேற்பாய் என நம்புகிறேன். 447 00:42:33,011 --> 00:42:34,638 நான் என்ன செய்ய வேண்டும்? 448 00:42:34,721 --> 00:42:36,098 பாரிஷ் சபையை கூட்ட வேண்டும். 449 00:42:36,181 --> 00:42:39,476 கண்டிப்பாக வேண்டாம். கூட்டம் கூட்டினால், மக்களின் பயம் அதிகரிக்கும். 450 00:42:39,560 --> 00:42:43,188 உங்கள் விருப்பப்படி செய்யுங்கள். சாத்தானை உள்ளே அனுமதியுங்கள். 451 00:42:58,871 --> 00:43:00,455 ஃபிராங்கி. பத்து நிமிடத்தில் வந்துவிடு. 452 00:43:00,539 --> 00:43:01,957 சரி. 453 00:43:42,623 --> 00:43:45,417 “இறைவனைத் தேடினேன், அவர் பதிலளித்தார் 454 00:43:45,501 --> 00:43:47,961 என் பயங்களை நீக்கினார்.” 455 00:44:01,683 --> 00:44:03,310 எதைப் பற்றி பயப்படுகிறீர்கள்? 456 00:44:12,110 --> 00:44:13,153 எதுவும் இல்லை. 457 00:44:15,072 --> 00:44:16,198 எதுவும் இல்லை. 458 00:44:19,117 --> 00:44:21,495 மன்னித்துவிடு. உன்னை எழுப்ப நினைக்கவில்லை. 459 00:45:45,913 --> 00:45:46,997 கோரா தன் படிமங்களை கொண்டு வந்திருக்கிறார். 460 00:45:51,460 --> 00:45:52,586 என்ன நடந்தது? 461 00:45:54,171 --> 00:45:56,215 நேற்றிரவு வீட்டிற்குள் ஒரு கடற்பறவை புகுந்துவிட்டது. 462 00:45:56,924 --> 00:45:58,383 சத்தியமாக, இது ஏதோ அறிகுறி தான். 463 00:45:58,467 --> 00:46:01,386 -பரவாயில்லை. கவலைப் படாதே. -என்னைத் தேடி தான் அந்த பாம்பு வருகிறது. 464 00:46:01,470 --> 00:46:03,096 கோரா எல்லாவற்றையும் விளக்கப் போகிறார். 465 00:46:06,892 --> 00:46:11,313 நம்மைச் சுற்றி, மண்ணில் பழமையான மிருகங்களின் எஞ்சிய உடல்கள் புதைந்து இருக்கின்றன. 466 00:46:11,396 --> 00:46:14,858 ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் கடவுள் இந்த பூமியில் படைத்த மிருகங்கள் அவை. 467 00:46:14,942 --> 00:46:18,320 சரி, காலப்போக்கில், இந்த மிருகங்கள் பரிணாம மாற்றம் அடைந்தன. 468 00:46:18,403 --> 00:46:20,989 அப்படியென்றால் ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு, இந்த பாம்பின் எஞ்சிய பகுதிகளை 469 00:46:21,073 --> 00:46:23,784 -மக்கள் கண்டுபிடிப்பார்களா? -முட்டாள்தனமான கேள்வி. அமைதியாக இரு. 470 00:46:23,867 --> 00:46:25,369 இல்லை, இது ஒரு நல்ல கேள்வி. 471 00:46:25,452 --> 00:46:27,329 அது உண்மை தான் என்கிறீர்கள், இல்லையா? 472 00:46:29,790 --> 00:46:32,626 ஆமாம். அது ஒரு வாழும் படிமமாக இருந்தால் மட்டுமே. 473 00:46:32,709 --> 00:46:36,421 வாழும் படிமமா? நான் ஏன் இதுவரை அவற்றைப் பற்றி கேள்விப்பட்டதில்லை? 474 00:46:36,505 --> 00:46:37,714 அது எனக்குத் தெரியாது. 475 00:46:37,798 --> 00:46:41,093 சில மிருகங்கள் பரிணாம வளர்ச்சியிலிருந்து தப்பித்திருக்கலாம் என்று ஒரு கருத்து உண்டு. 476 00:46:41,176 --> 00:46:42,511 சரி, பாம்பு இருக்கிறதா? 477 00:46:43,554 --> 00:46:45,305 அமைதியாக இருங்கள், குழந்தைகளே. 478 00:46:45,389 --> 00:46:47,933 -திருமதி. சீபோர்ன் அப்படி சொல்லவில்லை. -இல்லை, இல்லை. நான் சொல்வது… 479 00:46:48,016 --> 00:46:49,726 பாம்பு இருக்கிறதா, இல்லையா? 480 00:46:52,729 --> 00:46:54,022 உண்மையை மட்டும் சொல்லுங்கள். 481 00:46:57,860 --> 00:46:59,736 அதைக் கண்டுபிடிக்கத் தான் நான் இங்கு வந்தேன். 482 00:47:01,280 --> 00:47:05,325 உண்மை என்னவென்றால், எனக்குத்… தெரியாது. 483 00:47:06,910 --> 00:47:08,036 பாம்பு நம்மைத் தேடி வருகிறது. 484 00:47:08,120 --> 00:47:10,998 -பாம்பு நம்மைத் தேடி வருகிறது. -இல்லை, நான் அப்படி சொல்லவில்லை. 485 00:47:11,081 --> 00:47:13,584 -பாம்பு வருகிறது… பாம்பு! -நான் அப்படி சொல்லவில்லை. 486 00:47:13,667 --> 00:47:16,295 -ஜேக்கப், மார்க், நிறுத்துங்கள்! -பாம்பு! 487 00:47:16,378 --> 00:47:20,007 -இரு. நீ பயப்படுகிறாயா? -அமைதி. நிறுத்துங்கள். போதும் உங்கள் வேடிக்கை. 488 00:47:21,592 --> 00:47:23,468 குழந்தைகளே, போதும். 489 00:47:28,807 --> 00:47:30,434 நிறுத்துங்கள். போதும் வாயை மூடுங்கள். 490 00:47:31,560 --> 00:47:33,187 -நயோமி. -நயோமி, உன்னைக் கட்டுப்படுத்து… 491 00:47:45,574 --> 00:47:46,783 அவள் தான் செய்தாள். 492 00:47:47,868 --> 00:47:51,747 அவள் தான் செய்தாள். அவள் தான் செய்தாள். 493 00:47:52,247 --> 00:47:54,583 -அவள் தான் செய்தாள். -ரூத், உட்காரு! 494 00:47:54,666 --> 00:47:57,669 அவள் தான் செய்தாள். 495 00:47:57,753 --> 00:48:00,672 அவள் தான் செய்தாள். அவள் தான் செய்தாள். 496 00:48:00,756 --> 00:48:03,967 அவள் தான் செய்தாள். 497 00:48:04,051 --> 00:48:06,595 எலிசபெத். என்ன செய்கிறாய்? உட்காரு! 498 00:48:06,678 --> 00:48:09,848 -அவள் தான் செய்தாள். -மார்க். என்ன செய்கிறாய்? 499 00:48:12,809 --> 00:48:15,729 -அவள் என்னைக் காயப்படுத்துகிறாள்! -அவள் என்னைக் காயப்படுத்துகிறாள். 500 00:48:20,984 --> 00:48:22,361 உட்காருங்கள்! 501 00:48:25,322 --> 00:48:26,615 ஜோ, தயவுசெய்து வேண்டாம். 502 00:48:27,324 --> 00:48:30,202 தயவு செய்து, நீயும் சேர்ந்துகொள்ளாதே. 503 00:48:33,622 --> 00:48:35,958 ஜான், உன் அக்காவைப் போய் பார். 504 00:48:37,376 --> 00:48:39,169 நயோமி? நயோமி. 505 00:48:40,212 --> 00:48:41,463 நயோமி. 506 00:48:47,678 --> 00:48:49,388 நயோமி, தயவுசெய்து நிறுத்து! 507 00:49:04,111 --> 00:49:05,237 ஃபிராங்கி? 508 00:49:11,243 --> 00:49:12,619 ஜோ? 509 00:50:22,606 --> 00:50:24,608 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்