1 00:01:12,322 --> 00:01:13,323 மன்னித்துவிடுங்கள். 2 00:01:16,952 --> 00:01:21,123 சாமுவேல் டாவ்செட்டோடு தப்பு செய்ததற்கு மன்னித்துவிடுங்கள். 3 00:01:23,250 --> 00:01:25,294 அந்தப் பாம்பு தான் என்னைத் தூண்டியது. 4 00:01:29,006 --> 00:01:30,382 நமக்குள்ளேயே இருக்கட்டும், நயோமி. 5 00:02:44,873 --> 00:02:47,626 சாரா பெர்ரியின் நாவலைத் தழுவியது 6 00:03:47,394 --> 00:03:48,854 வணக்கம், டாக்டர். 7 00:03:48,937 --> 00:03:50,731 நோயாளி எப்படி இருக்கிறார்? என்னிடம் ஏதாவது சொல்ல வேண்டுமா? 8 00:03:50,814 --> 00:03:52,774 அவர் சொல்வதை மட்டும் செய்யுங்கள். 9 00:03:56,987 --> 00:04:00,449 திருமதி. சீபோர்ன். முடிந்த அளவு சீக்கிரமாக வந்துவிட்டேன். 10 00:04:05,871 --> 00:04:07,915 “நான் போன பிறகு என்னை நினைவு கொள், 11 00:04:09,249 --> 00:04:12,211 அமைதியான இடத்திற்குள் சென்றுவிட்டேன், 12 00:04:13,086 --> 00:04:14,922 என் கையைப் பிடிக்க முடியாத இடம் அது.” 13 00:04:15,005 --> 00:04:17,548 சார், உங்களை பரிசோதனை செய்யலாமா? 14 00:04:26,683 --> 00:04:28,185 இது தீவிரமாகிறது. 15 00:04:28,685 --> 00:04:32,272 ஆனால், உடனே அறுவை சிகிச்சை செய்தால், எந்த சிரமமும் இருக்காது. 16 00:04:35,067 --> 00:04:39,655 பிறந்ததைப் போலவே உலகை விட்டு பிரிய விரும்புகிறேன். 17 00:04:39,738 --> 00:04:41,865 தழும்புகள் எதுவும் இல்லாமல். 18 00:04:56,839 --> 00:04:58,966 நான் அறுவை சிகிச்சை செய்யாவிட்டால், அவர் இறந்துவிடுவார். 19 00:04:59,049 --> 00:05:00,551 அவர் தொண்டை குறுகிவிட்டது. 20 00:05:01,969 --> 00:05:05,013 நீங்கள் அனுமதித்தால், மயக்க மருந்தைத் தருவேன். 21 00:05:06,974 --> 00:05:08,892 என்ன... அவரது அனுமதி இல்லாமல் அறுவை சிகிச்சையா? 22 00:05:14,773 --> 00:05:15,858 என்னை மன்னியுங்கள். 23 00:05:26,577 --> 00:05:27,995 நான் உன்னோடு தங்கலாமா? 24 00:05:28,579 --> 00:05:29,913 கண்டிப்பாக. 25 00:05:33,292 --> 00:05:34,918 நீ ஓய்வெடுக்க வேண்டும், கோரா. 26 00:05:46,722 --> 00:05:47,764 நீ நடுங்குகிறாய். 27 00:06:34,728 --> 00:06:35,771 ஃபிராங்கி. 28 00:06:40,442 --> 00:06:41,693 உன் அப்பா இறந்துவிட்டார். 29 00:06:47,366 --> 00:06:48,492 வருத்தமாக இருக்கிறீர்களா? 30 00:06:52,538 --> 00:06:53,664 ஆனால் நீங்கள் அழவில்லையே. 31 00:07:00,087 --> 00:07:01,296 வருந்துகிறேன், ஃபிராங்கி. 32 00:08:07,529 --> 00:08:09,907 அன்பு கோரா, வருந்துகிறேன். 33 00:08:11,158 --> 00:08:13,035 ஏதேனும் உதவி தேவைப்பட்டால் சொல். 34 00:08:13,118 --> 00:08:15,120 சொல்கிறேன். நன்றி, சார்லஸ். 35 00:08:19,208 --> 00:08:22,377 -நீங்கள் வந்ததற்கு நன்றி, டாக்டர் காரெட். -நான் ஒன்றும் கொண்டு வரவில்லை. 36 00:08:26,757 --> 00:08:27,758 நாம் கிளம்பலாம். 37 00:08:28,258 --> 00:08:29,843 நான் டாக்ஸி பிடிக்கிறேன். 38 00:08:30,802 --> 00:08:32,346 எனக்கு டாக்ஸியில் போக விருப்பம் இல்லை. 39 00:08:33,054 --> 00:08:34,056 நடந்து போகலாமா? 40 00:08:34,681 --> 00:08:36,140 பாதாள ரயிலில் போக விரும்புகிறேன். 41 00:08:37,726 --> 00:08:38,852 நான் அவனை வீட்டிற்கு அழைத்து போகவா? 42 00:08:40,562 --> 00:08:41,563 வா. 43 00:08:53,867 --> 00:08:56,495 நீண்ட தூரம் நடந்து போவது எனக்குப் பிடிக்கும். 44 00:08:57,371 --> 00:08:58,622 என்னோடு வருகிறீர்களா? 45 00:08:59,331 --> 00:09:00,332 கண்டிப்பாக வருகிறேன். 46 00:09:09,007 --> 00:09:11,301 நாம் நதியை ஒட்டி நடக்கிறோம். 47 00:09:12,010 --> 00:09:13,345 அது நமக்கு அடியில் தான் இருக்கிறது. 48 00:09:15,013 --> 00:09:19,059 சர்க்காசோ கடலில் இருந்து, அந்த விலாங்கு மீன்கள் மேல் நோக்கி நீந்தி வரும். 49 00:09:20,519 --> 00:09:21,854 இங்கே இனப்பெருக்கம் செய்ய வரும். 50 00:09:23,355 --> 00:09:26,441 மண் மற்றும் கடல் செடிகளுக்கு பதில், இங்கே இரும்பும் கான்கிரீட்டும் தான் இருக்கின்றன. 51 00:09:28,068 --> 00:09:29,653 இரும்பு மற்றும் கான்கிரீட் மோசமானது இல்லையே. 52 00:09:32,322 --> 00:09:33,323 என்ன? 53 00:09:35,826 --> 00:09:38,078 எனக்கு இயற்கை வரலாற்றில் ஆர்வம் அதிகம், டாக்டர் காரெட். 54 00:09:39,413 --> 00:09:41,206 கவனியுங்கள். நதி ஓடும் சத்தம் கேட்கும். 55 00:10:07,482 --> 00:10:10,986 என் கணவர் எப்போதும் எனக்கு நகை வாங்கி கொடுப்பார். 56 00:10:12,321 --> 00:10:13,614 அறுவை சிகிச்சை செய்ய என்னை அனுமதித்திருக்க வேண்டும். 57 00:10:20,037 --> 00:10:22,206 உயிரோடு இருப்பவரை அறுவை சிகிச்சை செய்வது எப்படி இருக்கும்? 58 00:10:26,001 --> 00:10:28,629 இல்லை, சும்மா ஆர்வத்தில் கேட்கிறேன். அவ்வளவு தான். 59 00:10:34,134 --> 00:10:35,344 அது பரபரப்பாக இருக்கும். 60 00:10:36,678 --> 00:10:37,679 கொடுமையாக இருக்கும். 61 00:10:37,763 --> 00:10:40,307 ஒவ்வொரு அறுவை சிகிச்சையும், நம்பிக்கையின் விளைவு தான். 62 00:10:41,099 --> 00:10:42,976 அது மன உளைச்சல் தரும் விஷயம், திருமதி. சீபோர்ன். 63 00:10:45,729 --> 00:10:49,483 அற்புதமாக தோன்றுகிறது. அதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். 64 00:10:49,566 --> 00:10:50,776 நீ எப்படி உணர்கிறாய்? 65 00:10:51,527 --> 00:10:52,528 வித்தியாசமாக. 66 00:10:54,488 --> 00:10:55,822 மைக்கேலின் நண்பர்கள் எல்லோரும்... 67 00:11:00,536 --> 00:11:03,038 நான் டாக்டர் காரெட்டோடு நடந்து போனேன். 68 00:11:04,623 --> 00:11:06,375 நாங்கள் நிறைய பேசினோம். 69 00:11:10,546 --> 00:11:11,755 அது தவறா என்ன? 70 00:11:12,256 --> 00:11:13,340 இல்லை. 71 00:11:14,216 --> 00:11:18,303 கோரா, புது நண்பர்கள் பெற, முயற்சி செய்ய உனக்கு சுதந்திரம் உண்டு. 72 00:11:21,390 --> 00:11:23,267 நாம் பல காலமாக தனிமையில் இருந்தோம். 73 00:11:28,564 --> 00:11:31,400 இதை உனக்காக எடுத்து வைத்தேன். இது உன் ஆர்வத்தைத் தூண்டலாம். 74 00:11:41,743 --> 00:11:43,078 நான் ஃபிராங்கியைப் போய் பார்க்கிறேன். 75 00:11:52,713 --> 00:11:56,300 எஸ்ஸெக்ஸில் சீ டிராகன் தென்பட்டது 76 00:11:59,094 --> 00:12:00,179 எஸ்ஸெக்ஸில் தென்பட்டது 77 00:12:00,262 --> 00:12:01,263 ‘அசுரத்தனமான பாம்பு’ 78 00:12:12,608 --> 00:12:13,734 கிரேஸி! 79 00:12:20,407 --> 00:12:21,408 கிரேஸி! 80 00:12:30,083 --> 00:12:31,376 கிரேஸி! 81 00:12:42,638 --> 00:12:45,516 ...என் வேலை மீது நிறைய ஆர்வம் காட்டினீர்கள், 82 00:12:45,599 --> 00:12:49,937 எனவே, மருத்துவப் பள்ளியில் நான் அறுவை சிகிச்சை செய்வதை பார்க்க விரும்புகிறீர்களா? 83 00:12:51,438 --> 00:12:52,648 குளோரோஃபார்ம் 84 00:12:55,651 --> 00:12:59,530 இந்த நோயாளியை ஒரு குதிரை மிதித்துவிட்டது. 85 00:12:59,613 --> 00:13:01,365 -மேடம். -வழிவிடுங்கள். 86 00:13:01,448 --> 00:13:03,659 -ரொம்ப ரத்தமாக இருக்கும். -...முழங்காலில் 87 00:13:03,742 --> 00:13:05,285 பல எலும்புகள் முறிந்துவிட்டன. 88 00:13:06,245 --> 00:13:08,330 -லூக் காரெட் தான் அறுவை சிகிச்சை செய்வார். -சரி! 89 00:13:10,249 --> 00:13:12,793 அமைதி! அமைதி! 90 00:13:12,876 --> 00:13:17,798 லூக் காரெட் அறுவை சிகிச்சை செய்வார், ஜார்ஜ் ஸ்பென்சர் உதவி செய்வார். 91 00:13:17,881 --> 00:13:19,091 சரி! 92 00:13:20,425 --> 00:13:21,760 நீ என் நண்பன். 93 00:13:25,264 --> 00:13:26,265 தொடங்குங்கள். 94 00:13:28,183 --> 00:13:29,476 அடக் கடவுளே. 95 00:13:31,812 --> 00:13:34,314 -இதற்கு பதில் தெருவில் ரத்தம் சிந்தியே இறப்பேன். -அறுவைக்கத்தி. 96 00:13:43,198 --> 00:13:44,575 எனக்குத் தெரியவில்லை. 97 00:13:49,913 --> 00:13:53,292 இதோ. மாடியில் தான் என் அறை இருக்கிறது. 98 00:13:55,252 --> 00:13:57,921 இதற்கு முன்னர் நதிக்கு தெற்கு பக்கம் நீங்கள் வந்ததில்லையோ? 99 00:13:58,005 --> 00:13:59,965 இங்கே வந்ததில் ரொம்ப சந்தோஷம், டாக்டர் காரெட். 100 00:14:03,135 --> 00:14:05,262 கீனின் அறுவை சிகிச்சை 101 00:14:07,222 --> 00:14:09,224 நீங்கள் எப்போதும் உதவுவீர்களா, டாக்டர் ஸ்பென்சர்? 102 00:14:09,308 --> 00:14:11,101 வந்து, நானும் அறுவை சிகிச்சை செய்வேன். 103 00:14:11,727 --> 00:14:14,146 ஒரு உள்நோக்கி வளர்ந்த கால் நகம் அல்லது சிறுநீர்ப்பை கல். 104 00:14:14,229 --> 00:14:16,481 கற்களை நீக்கும் அறுவை சிகிச்சையை சிறப்பாக செய்வேன். 105 00:14:17,691 --> 00:14:21,361 ஆனால் திரு. காரெட் மிகவும் புதுமையானவர், திருமதி. சீபோர்ன். 106 00:14:21,862 --> 00:14:23,447 தயவுசெய்து, என்னை கோரா என்று கூப்பிடுங்கள். 107 00:14:24,531 --> 00:14:25,532 லூக். 108 00:14:27,534 --> 00:14:29,995 அடுத்து எந்த பாகத்தை அறுவை சிகிச்சை செய்யப் போகிறீர்கள், லூக்? 109 00:14:30,078 --> 00:14:31,038 இதயத்தை. 110 00:14:32,247 --> 00:14:33,248 எப்படி? 111 00:14:33,332 --> 00:14:37,794 நான் மார்புக்கூட்டை திறந்த பின்பும் நோயாளியை 112 00:14:37,878 --> 00:14:40,464 உயிரோடு வைத்திருப்பது தான் சவாலான விஷயம். 113 00:14:41,632 --> 00:14:45,052 சரியான நோயாளி தேவை. 114 00:14:46,261 --> 00:14:47,304 நீங்கள் ஒரு மிருகம். 115 00:14:47,387 --> 00:14:49,890 மருத்துவமனை நிர்வாகம் உன்னோடு ஒத்துப்போகிறது. காரணம் தெரியவில்லை. 116 00:14:49,973 --> 00:14:52,017 புது யோசனைகளைப் பற்றி நாம் எல்லோரும் சந்தேகப்படுவோம். 117 00:14:52,100 --> 00:14:54,645 -அட, இல்லை. நான் முன்னேற்றத்தை விரும்புபவள். -மார்த்தா ஒரு சமதர்மவாதி. 118 00:14:54,728 --> 00:14:57,856 சமதர்மவாதி மற்றும் இயற்கை ஆர்வலர்? 119 00:14:58,607 --> 00:15:01,443 -அதைப்பற்றி என்ன? -ஒன்றுமில்லை. மகிழ்ச்சியானது தான். 120 00:15:01,527 --> 00:15:02,528 மகிழ்ச்சியானதா? 121 00:15:03,153 --> 00:15:05,405 உங்களுடைய இருதய அறுவை சிகிச்சை மகிழ்ச்சியை தருமா? 122 00:15:05,489 --> 00:15:06,740 அது ஒரு வேலை. 123 00:15:08,283 --> 00:15:11,495 சரி, பணியில் நாம் வரவேற்கப்படும் போது, நமக்கு வேலைகளும் உண்டு. 124 00:15:11,578 --> 00:15:13,622 சரி, நாங்கள் வரவேற்கப்படவில்லை போலும். 125 00:15:17,709 --> 00:15:19,419 நம் மனதுக்குப் பிடித்ததை நாம் பின்தொடர வேண்டும். 126 00:15:19,503 --> 00:15:21,088 இதை ஒப்புக் கொள்கிறேன். 127 00:15:45,362 --> 00:15:48,824 இந்த முரண்பாடான வடிவங்கள் வாழும் படிமங்கள் என்று அழைக்கப்படலாம் 128 00:15:52,995 --> 00:15:54,872 ப்ளேசியோசார் 129 00:16:05,716 --> 00:16:07,426 எஸ்ஸெக்ஸ் 130 00:16:25,944 --> 00:16:27,112 அது என்ன? 131 00:16:27,946 --> 00:16:28,947 ஒன்றுமில்லை. 132 00:16:31,325 --> 00:16:32,951 அவள் மால்டனிற்கு போனதாகச் சொன்னாய். 133 00:16:35,162 --> 00:16:36,663 எனவே, மால்டனில் தானே இருப்பாள்? 134 00:16:38,582 --> 00:16:40,918 நீ என்னிடம் எதையோ மறைக்கிறாய். 135 00:16:41,502 --> 00:16:42,503 இல்லை. 136 00:16:51,470 --> 00:16:53,805 அந்தப் பையனோடு இருக்கிறாள் என்றால், என்னிடம் சொல்லிவிடு. 137 00:16:54,515 --> 00:16:55,516 அவள் அவனோடு இல்லை. 138 00:16:59,019 --> 00:17:01,188 அப்படியென்றால், சீக்கிரம் வீடு வந்து சேர்வாள். 139 00:17:13,534 --> 00:17:14,952 திருமதி. சீபோர்ன் இருக்கிறாரா? 140 00:17:15,035 --> 00:17:16,203 இருக்கிறார், உள்ளே வாருங்கள். 141 00:17:16,787 --> 00:17:17,871 நன்றி. 142 00:17:17,954 --> 00:17:18,955 கோரா? 143 00:17:22,792 --> 00:17:23,627 லூக். 144 00:17:24,419 --> 00:17:26,463 ஹலோ. என்ன ஒரு ஆச்சரியம். 145 00:17:26,547 --> 00:17:27,798 உங்களுக்கு ஒன்று கொண்டு வந்தேன். 146 00:17:29,007 --> 00:17:30,467 இதயத்தசையின் குறுக்கு பகுதி. லண்டன் 147 00:17:30,551 --> 00:17:31,844 அடடா, அழகாக இருக்கு. 148 00:17:33,011 --> 00:17:35,597 -இது என்ன? -மனித இதயத்தின் ஒரு பகுதி. 149 00:17:35,681 --> 00:17:36,890 ஆபரேஷன் தியேட்டரில் இருந்தா? 150 00:17:36,974 --> 00:17:41,019 இல்லை, இல்லை. சவக்கிடங்கில் இருந்து. ஆராய்ச்சி சவத்திலிருந்து. 151 00:17:41,103 --> 00:17:44,022 எனக்கு கிடைத்ததிலேயே மிக வித்தியாசமான பரிசு இது தான். 152 00:17:44,106 --> 00:17:45,357 நன்றி. 153 00:17:45,858 --> 00:17:48,026 இதை எஸ்ஸெக்ஸிற்கு எடுத்துச் செல்கிறேன். நாங்கள் நாளை கிளம்புகிறோம். 154 00:17:49,444 --> 00:17:52,239 -எஸ்ஸெக்ஸா? -ஆமாம், கோல்செஸ்டர். 155 00:17:56,785 --> 00:17:58,495 ஒரு கடல் மிருகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 156 00:17:59,121 --> 00:18:00,622 அதுவா. நான் அதைப்பற்றி படித்திருக்கிறேன். 157 00:18:01,373 --> 00:18:02,958 கொஞ்சம் ஆராய்ச்சி செய்திருக்கிறேன். 158 00:18:03,041 --> 00:18:05,669 -ஒரு கற்பனை விலங்கின் மீதா? -கற்பனை கிடையாது. உண்மை. 159 00:18:07,004 --> 00:18:09,464 இந்தப் பாம்பு, ஒரு வகை ப்ளேசியோசாராக இருக்கக்கூடும். 160 00:18:10,132 --> 00:18:12,801 “த ஆரிஜின்” புத்தகத்தில் டார்வின் சொல்வது போல, ஒரு உயிரினம் 161 00:18:12,885 --> 00:18:14,970 சாதாரண பிரச்சினைகளில் இருந்து காப்பாற்றப்பட்டு இருந்திருக்கலாம். 162 00:18:15,053 --> 00:18:16,638 -அதாவது, கண்டிப்பாக, நீங்கள் படித்திருக்கலாம்... -இல்லை. 163 00:18:16,722 --> 00:18:18,932 -நீ படித்ததில்லையா? -கோரா, இல்லை... 164 00:18:19,016 --> 00:18:20,017 -என்ன? -வேண்டாம்... 165 00:18:21,059 --> 00:18:22,936 எஸ்ஸெக்ஸுக்குப் போகாதீர்கள். 166 00:18:25,397 --> 00:18:27,983 நான் விரும்புவதைச் செய்ய நினைக்கிறேன். 167 00:18:28,066 --> 00:18:29,067 அது, சரி தான். 168 00:18:29,151 --> 00:18:32,946 ஆனால் மருத்துவ ரீதியாக, நீங்கள் மன வருத்தமாக இருக்கிறீர்கள். 169 00:18:33,030 --> 00:18:34,781 -கோரா... -அவர் இறந்துவிட்டதால் நான் விரும்பியதைச் செய்யலாம். 170 00:18:43,999 --> 00:18:50,172 எஸ்ஸெக்ஸில் இருந்து செய்தி! சமீபத்திய தகவல். கொடூரமான பாம்பு மீண்டும் வந்துவிட்டது. 171 00:19:01,808 --> 00:19:03,310 அது ஒன்றும் அவ்வளவு மோசமாக இல்லை. 172 00:19:04,520 --> 00:19:05,979 அது சூனியக்காரர்களின் நாடு. 173 00:19:06,063 --> 00:19:07,064 எஸ்ஸெக்ஸில் இருந்து செய்தி! 174 00:19:07,147 --> 00:19:08,732 பறக்கும் பாம்பு, அல்லது எஸ்ஸெக்ஸில் இருந்து விசித்திரமான செய்தி 175 00:19:08,815 --> 00:19:12,361 தற்போதைய செய்தி. பயங்கர பாம்பு திரும்ப வந்துவிட்டது. 176 00:19:12,444 --> 00:19:13,695 அந்தப் பாம்பு பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? 177 00:19:13,779 --> 00:19:16,657 என்ன தெரியாது, மேடம்? இதைப் பாருங்கள். போஸ்ட்கார்ட்? 178 00:19:16,740 --> 00:19:17,741 இல்லை, வேண்டாம். 179 00:19:17,824 --> 00:19:19,743 -அந்த பாம்பைப் பார்க்க வந்திருக்கிறீர்களா? -நீங்கள் அதைப் பார்த்தீர்களா? 180 00:19:19,826 --> 00:19:22,287 ஓ, ஆமாம். சொரசொரப்பான முதுகு மற்றும் இறக்கைகள் இருக்கும். 181 00:19:22,371 --> 00:19:24,665 -பாம்புகளுக்கு இறக்கைகள் கிடையாதே. -இதற்கு இருக்கு. 182 00:19:24,748 --> 00:19:25,791 ஏதாவது புகைப்படம் இருக்கிறதா? 183 00:19:25,874 --> 00:19:30,003 கால்நடைகளை தின்றுவிட்டது. சமீபத்தில் பார்க்கப்பட்டது. 184 00:19:30,087 --> 00:19:32,089 -எங்கே? -ஆல்ட்வின்டர். கால்வாயின் கரையோர கிராமம். 185 00:19:32,965 --> 00:19:35,217 ஆல்ட்வின்டர். நன்றி. 186 00:19:35,300 --> 00:19:36,426 நன்றி. 187 00:19:38,262 --> 00:19:39,596 எஸ்ஸெக்ஸில் இருந்து செய்தி! 188 00:19:39,680 --> 00:19:41,306 த ப்ளூ போர் ஹோட்டல் 189 00:19:46,103 --> 00:19:49,022 நான் கொஞ்சம் நடந்துவிட்டு வரவா? உனக்கு ஏதாவது வாங்கி வருகிறேன். 190 00:19:55,070 --> 00:19:56,446 ரொம்பவும் தாமதிக்காதே. 191 00:20:21,638 --> 00:20:22,639 அடச்சே! 192 00:20:32,316 --> 00:20:33,734 -அடச்சே! -நிறுத்து! 193 00:20:40,741 --> 00:20:42,034 நான் உதவுகிறேன். 194 00:20:42,117 --> 00:20:43,118 சரி, உதவுங்கள். 195 00:20:48,332 --> 00:20:49,625 சிக்கியிருக்கிறது. 196 00:20:52,753 --> 00:20:53,795 எழுந்திரு! எழுந்திரு! 197 00:20:58,759 --> 00:20:59,760 இதோ, என் பெல்ட்டைப் பயன்படுத்தலாம். 198 00:21:10,979 --> 00:21:13,106 கழுத்து ஜாக்கிரதை. 199 00:21:15,567 --> 00:21:16,568 இப்போது இழுங்கள்! 200 00:21:32,167 --> 00:21:33,293 இதோ. 201 00:21:41,260 --> 00:21:42,469 நன்றி. 202 00:21:45,597 --> 00:21:48,684 -நான் கிளம்புகிறேன். -எங்கே போகிறீர்கள்? 203 00:21:48,767 --> 00:21:49,893 ஆல்ட்வின்டர். 204 00:21:50,978 --> 00:21:53,730 வதந்திகளை கேள்விப்பட்டு, அங்கே போய் பார்க்கப் போகிறீர்கள். 205 00:21:55,941 --> 00:21:58,569 பார்ப்பதற்கு ஒன்றும் இல்லை. வீட்டிற்குத் திரும்புங்கள். 206 00:22:31,185 --> 00:22:32,352 எங்கள் பலியை ஏற்றுக்கொள்ளுங்கள். 207 00:22:34,980 --> 00:22:36,064 என் சகோதரியை வீட்டிற்கு அழைத்து வாருங்கள். 208 00:22:43,113 --> 00:22:46,450 இதை எடுத்துகொண்டு, கிரேஸியை அழைத்து வாருங்கள். 209 00:22:46,533 --> 00:22:47,910 கிரேஸியை அழைத்து வாருங்கள். 210 00:23:12,476 --> 00:23:13,477 ஹென்றி? 211 00:23:14,937 --> 00:23:15,938 ஃபாதர். 212 00:23:19,149 --> 00:23:20,275 கிரேஸியை பற்றி தகவல் தெரிந்ததா? 213 00:23:24,905 --> 00:23:25,989 நீங்கள் நலமா? 214 00:23:26,615 --> 00:23:30,577 அது ஒன்றும் இல்லை. ஒரு விபத்து. கிரேஸி விஷயம் என்னாச்சு? 215 00:23:30,661 --> 00:23:34,915 அவள் கயிறு விற்க மால்டனிற்கு போய் இருக்கிறாள். ஆனால், இதுவரை இவ்வளவு தாமதம் ஆனதில்லை. 216 00:23:36,124 --> 00:23:37,417 நயோமி என்ன சொல்கிறாள்? 217 00:23:37,960 --> 00:23:40,629 அந்தப் பாம்பு பற்றிய வதந்திகளை கேட்டுக் கொண்டிருந்தாளாம். 218 00:23:40,712 --> 00:23:42,631 அது ஒரு கற்பனை கதை என்று நமக்கே தெரியும். 219 00:23:43,340 --> 00:23:46,844 அவள் மால்டனில் ஒரு தோழியோடு தங்கி இருக்கலாம். 220 00:23:48,178 --> 00:23:51,265 அவள் உற்சாகமான பெண். அம்மாவின் கண்காணிப்பு இல்லை. 221 00:23:53,976 --> 00:23:55,185 உனக்காக நான் இருக்கிறேன். 222 00:23:59,731 --> 00:24:02,609 இன்று காலை, இவற்றை வலையில் பிடித்தேன். 223 00:24:04,987 --> 00:24:05,988 நன்றி. 224 00:24:08,991 --> 00:24:10,367 சீக்கிரம் வந்து விடுவாள், ஹென்றி. 225 00:24:11,952 --> 00:24:14,037 ஞாயிற்றுக்கிழமை தேவாலயத்தில் சந்திக்கலாம். 226 00:24:15,956 --> 00:24:16,957 நன்றி, ஃபாதர். 227 00:25:03,045 --> 00:25:04,338 என் கடிதம் படித்தாயா? 228 00:25:04,421 --> 00:25:05,589 உனக்கு சொல்வது போல, 229 00:25:05,672 --> 00:25:08,926 என் பகுதியிலுள்ள ஒவ்வொரு குடும்பத்தின் பிரச்சினைகளைப் பற்றி யோசித்தால், 230 00:25:09,009 --> 00:25:10,636 எந்த வேலையும் செய்ய முடியாது. 231 00:25:13,931 --> 00:25:15,432 ஓ, யார் வந்திருப்பது பாரேன். 232 00:25:15,516 --> 00:25:16,600 சார்லஸ். இங்கே என்ன செய்கிறீர்கள்? 233 00:25:16,683 --> 00:25:19,853 நீ லண்டனில் இல்லையென்று கேள்விப்பட்டேன். உன்னைப் பற்றி கவலைப்பட்டேன். 234 00:25:19,937 --> 00:25:21,813 இங்கே சீ டிராகன் பற்றி ஆராய்ச்சி செய்ய வந்திருக்கிறேன். 235 00:25:21,897 --> 00:25:23,690 நகரத்தில் பொழுதுபோக்க எதுவும் இல்லையா? 236 00:25:23,774 --> 00:25:26,318 மார்த்தாவின் பிரச்சாரத்திற்கு உதவியிருக்கலாமே? 237 00:25:28,820 --> 00:25:31,448 -உன்னை கவனிப்பதாக மைக்கேலிடம் உறுதியளித்தேன். -மார்த்தா என்னைப் பார்த்துக்கொள்கிறாள். 238 00:25:34,284 --> 00:25:38,747 வில் ரான்சம். அவருக்கு பொறுப்பான பதிவி கொடுத்தோம். ஆனால் அவர் ஊழியம் செய்கிறார். 239 00:25:39,665 --> 00:25:42,501 கடற்கரையில் அவருக்கு ஒரு சபை இருக்கிறது. அவரால் உன்னைப் பார்த்துக்கொள்ள முடியும். 240 00:25:42,584 --> 00:25:43,919 என்ன, ஒரு பாதிரியாரா? 241 00:25:45,087 --> 00:25:48,841 உன்னை அறிமுகப்படுத்தி அவருக்கு கடிதம் எழுதுகிறேன். அவர் ஆல்ட்வின்டரில் வாழ்கிறார். 242 00:25:48,924 --> 00:25:50,300 ஆல்ட்வின்டரிலா? 243 00:25:59,059 --> 00:26:00,978 “நான் நதியோரங்களில் தேடிக் கொண்டிருக்கிறேன் 244 00:26:01,061 --> 00:26:03,021 ஆனால் ப்ளேசியோசார் பற்றி எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை...” 245 00:26:03,105 --> 00:26:04,439 காதல் பொங்கி வழிகிறதே. 246 00:26:05,357 --> 00:26:06,984 “இருந்தாலும், கிராமம் மிகவும் அழகாக இருக்கிறது, 247 00:26:07,067 --> 00:26:10,654 பப்பும் கவர்ச்சியாக இருக்கிறது. நீங்கள் கொடுத்த இதயத்தை இன்னமும் வைத்திருக்கிறேன். 248 00:26:10,737 --> 00:26:12,781 அன்புடன், கோரா.” 249 00:26:15,117 --> 00:26:16,827 ஸ்பென்சர். இதற்கு என்ன அர்த்தம்? 250 00:26:18,203 --> 00:26:19,663 இன்னமும் உன்னுடைய பரிசை வைத்திருக்கிறாளா? 251 00:26:22,040 --> 00:26:25,961 இல்லை, அவளுக்கு என்னைப் பிடிச்சிருக்கு போல. அப்படித்தானே? 252 00:26:27,880 --> 00:26:30,340 திரு. காரெட். என்னைப் பார்க்க வேண்டும் என சொன்னீர்களே. 253 00:26:30,424 --> 00:26:31,508 சரியான நோயாளி கிடைத்துவிட்டார். 254 00:26:31,592 --> 00:26:33,385 -பெரிகார்டியல் எஃப்யூஷனா? -அப்படித்தான் நினைக்கிறேன். 255 00:26:33,468 --> 00:26:35,679 -வயது? -ஐம்பத்தி ஒன்று. அவள் நாடி குறைகிறது. 256 00:26:35,762 --> 00:26:36,763 சீக்கிரமாக வாருங்கள். 257 00:26:40,142 --> 00:26:42,269 உன் அடுத்த நோயாளிக்கு நான் சிகிச்சை அளிப்பேன், சரியா? 258 00:26:51,653 --> 00:26:53,071 நர்ஸ், நுரையீரலை பிடித்துக்கொள்ளுங்கள். 259 00:26:53,947 --> 00:26:54,948 கத்திரிக்கோல். 260 00:27:01,663 --> 00:27:02,664 அதை பிடித்துக்கொள்ளுங்கள். 261 00:27:10,422 --> 00:27:11,632 நாடியைப் பாருங்கள். 262 00:27:16,512 --> 00:27:17,513 நாடி துடிக்கவில்லை. 263 00:27:18,764 --> 00:27:19,765 அட்ரீனலின். 264 00:27:35,322 --> 00:27:36,365 ஏதாவது முன்னேற்றம்? 265 00:27:56,301 --> 00:27:57,302 மன்னிக்கவும். 266 00:28:00,138 --> 00:28:02,516 ஆபரேஷன் தியேட்டரில் இன்னொரு சடலம். 267 00:28:02,599 --> 00:28:05,727 அவளால் சில மணி நேரம் தான் தாக்குபிடித்திருக்க முடியும். எல்லோருக்கும் இது புரியும். 268 00:28:05,811 --> 00:28:09,314 நீ ஒரு முன்னோடி, காரெட், அதை நான் மதிக்கிறேன். 269 00:28:09,398 --> 00:28:12,276 ஆனால் நம் மருத்துவமனையின் நற்பெயர் பற்றி நான் யோசிக்க வேண்டும். 270 00:28:12,359 --> 00:28:16,738 இங்கே, நான் முதன்முதலாக இருதய அறுவை சிகிச்சை செய்ய முயற்சிக்கிறேன்! 271 00:28:17,281 --> 00:28:20,367 நம்முடைய நற்பெயருக்கு என்னவாகும்? அது பாதிக்காது, அதிகரிக்கும். 272 00:28:20,450 --> 00:28:22,536 அவருக்கு தெரியவில்லையா நான் ஒரு புகழ்வாய்ந்த... இல்லை. 273 00:28:22,619 --> 00:28:25,122 உண்மையில், எந்த சந்தேகமும் இன்றி, 274 00:28:25,205 --> 00:28:28,584 என் தலைமுறையின் மிகத் திறமையான... 275 00:28:29,793 --> 00:28:31,336 அறுவைசிகிச்சை நிபுணர் நான் தான். 276 00:28:35,674 --> 00:28:38,719 -முதலில் அதை வேறு யாராவது செய்துவிட்டால்? -யாராவது முயற்சிக்கிறார்களா என்ன? 277 00:28:38,802 --> 00:28:40,554 கத்தியை அவளுடைய உடல் தாங்கிக் கொள்ளவில்லை. 278 00:28:40,637 --> 00:28:42,181 எனக்கு திடமான இதயம் தேவை. 279 00:28:42,264 --> 00:28:45,184 இளமையான மற்றும் ஆரோக்கியமான இதயம். தேவைப்பட்டால் இந்த அறையில் கூட அதைச் செய்வேன். 280 00:28:50,189 --> 00:28:54,067 நாம் விடுமுறை எடுக்கலாம். எங்காவது போகலாமா? 281 00:28:58,947 --> 00:29:00,157 எஸ்ஸெக்ஸிற்கு. 282 00:29:15,923 --> 00:29:17,007 உள்ளே வாருங்கள். 283 00:29:18,217 --> 00:29:19,468 என்ன நடக்கிறது? 284 00:29:19,551 --> 00:29:21,720 நாங்கள் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு வந்துவிட்டோமா என்ன? 285 00:29:21,803 --> 00:29:23,263 லூக். இங்கே என்ன செய்கிறீர்கள்? 286 00:29:23,347 --> 00:29:25,182 உங்களால் தான் எஸ்ஸெக்ஸ் மீது ஆர்வம் வந்துவிட்டது. 287 00:29:25,265 --> 00:29:28,936 உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி. உள்ளே வாருங்கள். 288 00:29:29,019 --> 00:29:30,354 உனக்கு லூக்கை நினைவிருக்கிறதா, ஃபிராங்கி? 289 00:29:34,066 --> 00:29:35,484 375. 290 00:29:35,567 --> 00:29:38,237 374. 373. 291 00:29:38,320 --> 00:29:40,405 உங்கள் தலைமுடியை சீவுவதே இல்லையா? 292 00:29:40,489 --> 00:29:42,866 உங்கள் கைகள் அழுக்காக உள்ளன. 293 00:29:43,951 --> 00:29:46,620 -மதிய வணக்கம், டாக்டர் காரெட். -லூக். 294 00:29:46,703 --> 00:29:48,205 உங்கள் பிரச்சினைகளை சரி செய்கிறேன். 295 00:29:50,290 --> 00:29:53,710 -ஸ்பென்சர். -உதவி வேண்டுமா? 296 00:29:54,962 --> 00:29:56,755 கண்டிப்பாக தேவைப்படும். நீ போ. 297 00:30:03,095 --> 00:30:06,598 சரி, உண்மையில், இங்கு எதற்காக வந்தீர்கள்? 298 00:30:11,728 --> 00:30:14,439 சிகிச்சையின் போது ஒரு நோயாளி இறந்துவிட்டார். 299 00:30:14,982 --> 00:30:15,816 வருந்துகிறேன். 300 00:30:15,899 --> 00:30:18,235 ஓ, புது முயற்சி செய்யும்போது அப்படி ஆகக்கூடும். 301 00:30:19,528 --> 00:30:21,488 உங்கள் விஷயம் என்ன ஆனது? அந்த மிருகத்தைப் பார்த்தீர்களா? 302 00:30:22,823 --> 00:30:25,033 இன்னும் இல்லை. மேலும் தகவல் அறிய நான் ஆல்ட்வின்டருக்கு 303 00:30:25,117 --> 00:30:26,159 -போகிறேன். -யாரிடமிருந்து? 304 00:30:26,702 --> 00:30:28,579 கடவுளுக்குத்தான் தெரியும். ஒரு சலிப்பான பாதிரியார் இருக்கிறார். 305 00:30:28,662 --> 00:30:30,247 -மிக மோசம். -ஆமாம். 306 00:30:30,330 --> 00:30:31,623 அவர் உங்களைப் பிரார்த்தனை செய்யச் சொல்வார். 307 00:30:31,707 --> 00:30:34,918 நான் மறுப்பேன், அது மோசமான சூழலாக இருக்கும். 308 00:30:35,002 --> 00:30:38,714 -நீங்கள் இங்கே என்னோடு இருக்கலாமே. -அப்படியா? 309 00:30:38,797 --> 00:30:41,383 நான் வந்த முதல் நாளிலேயே, இரவில் என்னை தனியாக விட்டுச் செல்வது சரி இல்லை. 310 00:30:41,466 --> 00:30:43,719 துணைக்கு ஸ்பென்சர் இருக்கிறாரே. 311 00:30:44,553 --> 00:30:47,347 ஆனால் விலங்கு உங்களை அழைக்கிறது என்றால்... 312 00:30:48,515 --> 00:30:50,392 சரி, இரவு உணவுக்கு பின் வருகிறேன். 313 00:31:02,696 --> 00:31:04,406 வெளியே ஏதாவது இருக்கிறதா? 314 00:31:07,075 --> 00:31:08,535 இல்லை, வெறும் காற்றுதான். 315 00:31:13,040 --> 00:31:15,375 வா. போய் மற்றவர்களோடு இருக்கலாம். 316 00:31:15,459 --> 00:31:16,460 என்னோடு வா, செல்லக்குட்டி. 317 00:31:21,882 --> 00:31:25,802 சரி, நயோமிக்கு கொடுக்க யாரிடம் பென்சில் இருக்கிறது? 318 00:31:27,387 --> 00:31:29,640 -என்ன வரைகிறாய், ஜான்? -அந்தப் பாம்பை. 319 00:31:30,307 --> 00:31:33,393 -நாம் வேறு ஏதாவது பேசலாமா? -சரி. பேசலாம். 320 00:31:33,477 --> 00:31:34,728 யார் இரவு உணவிற்கு வருகிறார்கள்? 321 00:31:35,938 --> 00:31:40,108 சார்லஸுக்குத் தெரிந்தவர். லண்டனில் இருந்து ஒரு விதவை மற்றும் அவளது மகன் வருகிறார்கள். 322 00:31:40,609 --> 00:31:43,904 அவள் வயதாகி சுருக்கம் விழுந்தவளாக இருப்பாள். சமூக கிசுகிசுக்கள் பற்றி பேசி 323 00:31:43,987 --> 00:31:46,740 நம்மை எல்லாம் ரொம்பவும் சலிப்படையச் செய்வாள். 324 00:31:48,242 --> 00:31:49,326 அவளுடைய மகன்? 325 00:31:49,910 --> 00:31:51,578 நீ என்ன நினைக்கிறாய், ஜோ? 326 00:31:51,662 --> 00:31:52,913 ஒரு இளம் மாணவனோ? 327 00:31:52,996 --> 00:31:54,122 ஆக்ஸ்போர்டில் படித்தவனோ? 328 00:31:54,915 --> 00:31:58,752 ஆமாம். என்னைக் காதலித்து பிறகு கல்யாணம் செய்துகொள்ள கேட்பான். 329 00:31:58,836 --> 00:32:01,588 நான் அதை மறுத்து அவனை வருத்தப்பட வைப்பேன். 330 00:32:04,132 --> 00:32:06,093 நீ இங்கேயே தங்குகிறாயா? நாம் சேர்ந்து சாப்பிடலாம். 331 00:32:06,176 --> 00:32:08,512 தங்கு. உன்னை நன்கு கவனித்துக்கொள்வோம். 332 00:32:11,014 --> 00:32:14,726 இல்லை, வேண்டாம். இருட்டுவதற்கு முன் நான் போக வேண்டும். 333 00:32:14,810 --> 00:32:16,854 என்னைப் பற்றியும், என் அப்பா கவலைப்பட வேண்டாமே. 334 00:32:18,438 --> 00:32:19,565 நான் துணைக்கு வருகிறேன். 335 00:32:20,774 --> 00:32:22,442 -விருந்தினர்கள் வந்திருக்கிறார்களே. -பரவாயில்லை. 336 00:32:23,026 --> 00:32:24,695 நான் திரும்பி வரும் வரை, அவர்கள் இங்கு தான் இருப்பார்கள். 337 00:32:35,539 --> 00:32:38,458 வேதத்தைப் பற்றி ஒரு கேள்வி கேட்கலாமா, ஃபாதர்? 338 00:32:39,418 --> 00:32:40,419 தாராளமாக. 339 00:32:44,464 --> 00:32:46,425 பாம்பு ஏன் ஏவாளைத் தூண்டுகிறது? 340 00:32:55,058 --> 00:32:56,852 வந்து, அது ஒரு உருவகம். 341 00:32:58,770 --> 00:33:01,607 பாம்பு என்பது உண்மையில் சாத்தான். 342 00:33:06,612 --> 00:33:07,863 நானும் அப்படித்தான் நினைத்தேன். 343 00:33:11,575 --> 00:33:13,660 எஸ்ஸெக்ஸில் எந்தப் பாம்பும் இல்லை. 344 00:33:26,131 --> 00:33:30,969 சத்தியமாகச் சொல்கிறேன், நயோமி. இங்கே எதுவும் இல்லை. 345 00:33:53,659 --> 00:33:55,202 -நன்றி. -பரவாயில்லை. 346 00:34:04,127 --> 00:34:05,170 இது என்ன, ஹென்றி? 347 00:34:05,879 --> 00:34:09,882 அந்த மிருகத்தை பயமுறுத்துவதற்காக, நயோமி இன்று மதியம் இவற்றை தோலுறித்து தொங்கவிட்டாள். 348 00:34:12,177 --> 00:34:16,348 அது உண்மை இல்லை, ஹென்றி. எந்த மிருகமும் இல்லை என்று அவளிடம் சொல். 349 00:34:53,342 --> 00:34:56,804 எங்களைப் பாதுகாத்து, பத்திரமாக வைத்திருக்க வேண்டும். 350 00:35:10,110 --> 00:35:13,697 மிகவும் இளம் வயதிலேயே விதவையாகிவிட்டாய். அழகாகவும் இருக்கிறாய். 351 00:35:14,281 --> 00:35:17,117 சரி. நான் சற்று அதிகமாக அலங்காரம் செய்து கொண்டேன். 352 00:35:17,201 --> 00:35:19,953 பாதிரியார் வீட்டில் நடக்கும் விருந்து சம்பிரதாயப்படி இருக்கும் என்று நினைத்தேன். 353 00:35:20,037 --> 00:35:22,497 கசாப்பு கடைக்காரர், திரு. பர்ன்ஸ் இருக்கிறாரா? 354 00:35:22,581 --> 00:35:23,582 வீட்டில் இல்லை. 355 00:35:25,876 --> 00:35:30,172 வருந்துகிறோம். இவ்வளவு இளம் வயதில் அவன் தன் அப்பாவை இழந்துவிட்டான். 356 00:35:31,256 --> 00:35:34,843 அவன் எப்போதுமே சற்று வித்தியாசமானவன். அவன்... 357 00:35:36,261 --> 00:35:39,223 தனிமையாக இருப்பான். அது பரவாயில்லை. 358 00:35:42,976 --> 00:35:47,397 வில் இப்போது வந்துவிடுவார். ஜோவின் தோழியை வீட்டில் விடச் சென்றிருக்கிறார். 359 00:35:47,481 --> 00:35:49,066 இப்போது, எல்லோரும் சற்று பதட்டமாக இருக்கிறார்கள். 360 00:35:51,568 --> 00:35:52,653 இதோ வந்து விட்டார். 361 00:35:54,780 --> 00:35:56,114 ஆமாம், நான்... 362 00:35:58,909 --> 00:36:04,248 ம், என் பேச்சை எழுத வேண்டும். எல்லோரையும் அமைதிப்படுத்த வேண்டும். 363 00:36:04,331 --> 00:36:07,042 -நான் பிறகு வந்து கலந்துகொள்ளவா? -கூடாது. 364 00:36:10,170 --> 00:36:11,547 அவர்கள் இனிமையானவர்கள். 365 00:36:22,975 --> 00:36:23,976 ஹலோ. 366 00:36:24,059 --> 00:36:25,394 நீங்கள்தான் பாதிரியாரா? 367 00:36:26,687 --> 00:36:29,022 உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி, திருமதி. சீபோர்ன். 368 00:36:32,776 --> 00:36:35,070 ஜான், என் முகத்தில் காயம்பட்ட அந்த நாள், உனக்கு நினைவிருக்கிறதா? 369 00:36:35,153 --> 00:36:37,948 கடற்கரையைச் சேர்ந்த ஒரு விசித்திரமான பெண்மணி. 370 00:36:39,533 --> 00:36:41,535 என்னை மன்னிக்கவும். நான் நல்லபடியாக சொல்லவில்லை. 371 00:36:41,618 --> 00:36:43,453 நீங்கள் உதவாமல் நான் என்ன செய்திருப்பேன் என்றே தெரியவில்லை. 372 00:36:43,537 --> 00:36:44,997 நீங்கள் ஒரு முரடன். 373 00:36:45,080 --> 00:36:46,915 கண்டிப்பாக, அது சரி தான். 374 00:36:46,999 --> 00:36:48,417 -ஹலோ. -மார்த்தா. 375 00:36:48,500 --> 00:36:51,128 -மார்த்தா. என் பெயர் வில். சந்தித்ததில் மகிழ்ச்சி. -எனக்கும் தான். 376 00:36:52,421 --> 00:36:55,090 எனக்குப் பசிக்கிறது, சாப்பிடலாமா? 377 00:36:56,133 --> 00:36:57,551 மிகச் சிறந்த யோசனை. 378 00:37:00,304 --> 00:37:01,972 இங்கே படிமங்களை பார்க்க வந்திருக்கிறீர்களா? 379 00:37:02,055 --> 00:37:04,183 அந்த பாம்பு பற்றி கோரா அதிக ஆர்வமாக இருக்கிறாள். 380 00:37:05,851 --> 00:37:09,313 இங்கிருக்கும் ஒரே பாம்பு, தோவாலயத்தின் விசேஷ இருக்கையில் செதுக்கப்பட்டது மட்டும் தான். 381 00:37:09,396 --> 00:37:10,647 200 வருடங்களாக அது அங்கிருக்கிறது. 382 00:37:10,731 --> 00:37:13,400 -இப்போது உயிரோடு வந்துவிட்டது. -ஜோ. 383 00:37:14,151 --> 00:37:15,277 ஏன் அப்படி நினைக்கிறாய்? 384 00:37:15,360 --> 00:37:20,991 ஏனென்றால் அது கடற்கரையில் காணப்பட்டது. இப்போது நிறைய பேர் நினைக்கிறார்கள்... 385 00:37:21,074 --> 00:37:23,202 ஜோ. போதும். 386 00:37:24,953 --> 00:37:26,788 அந்தப் பாம்பு விஷயம் உண்மை கிடையாது. 387 00:37:29,291 --> 00:37:30,667 ஆனால், உண்மையாக இருந்தால்? 388 00:37:31,835 --> 00:37:33,837 சார்லஸ் லைலின் வேலை பற்றி தெரியுமா? 389 00:37:35,214 --> 00:37:36,465 அட, தெரியுமே. 390 00:37:36,548 --> 00:37:38,050 வில் எல்லாவற்றையும் படித்திருக்கிறார். 391 00:37:38,133 --> 00:37:39,510 யார் அந்த சார்லஸ் லைல்? 392 00:37:40,093 --> 00:37:42,429 பரிணாம வளர்ச்சியிலிருந்து தப்பித்த விலங்குகளைப் பற்றி எழுதியிருக்கிறார். 393 00:37:42,971 --> 00:37:44,515 ஒருவேளை இந்தப் பாம்பும் அவற்றில் ஒன்றாக இருக்கலாமே. 394 00:37:45,182 --> 00:37:46,391 இல்லை. 395 00:37:46,475 --> 00:37:48,727 இல்லை, இந்தப் பாம்பு, அவர்களாக உருவாக்கிய ஒரு கண்டுபிடிப்பு. 396 00:37:48,810 --> 00:37:52,648 அது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலங்களின் ஒரு அறிகுறி. 397 00:37:52,731 --> 00:37:54,274 வந்து... உற்சாகமான காலகட்டம். 398 00:37:54,358 --> 00:37:58,028 அவர்களுக்குள் உண்மையான பயத்தைக் கொண்டு வருகின்ற பெரிய மாற்றம். 399 00:37:59,530 --> 00:38:01,323 அப்படியானால் நீங்கள் முன்னேற்றத்திற்கு எதிரானவரா? 400 00:38:03,242 --> 00:38:05,953 நீங்கள் என்னை மிகவும் குறுகிய கண்ணோட்டத்தில் பார்ப்பதில் உறுதியாக இருக்கிறீர்கள். 401 00:38:09,248 --> 00:38:11,124 ம், உங்கள் கணிப்பு தவறாக இருக்கலாம். 402 00:38:12,209 --> 00:38:15,838 நான் இங்கு புறக்கணிக்கப்பட்டிருக்கலாம்... உங்கள் தேவாலயத்தைப் பொறுத்த மட்டிலுமாவது. 403 00:38:17,798 --> 00:38:18,882 இயேசுவே புறக்கணிக்கப்பட்டவர் தானே. 404 00:38:19,925 --> 00:38:21,051 ஒரு காலத்தில். 405 00:38:21,134 --> 00:38:23,011 இந்தக் காலத்தில், அவர் மிகவும் வெளிப்பட்டிருக்கிறார். 406 00:38:25,013 --> 00:38:26,014 உண்மை தான். 407 00:38:27,724 --> 00:38:30,477 கண்ணுக்குத் தெரியாத கடவுளை நம்புவதை விட, 408 00:38:30,561 --> 00:38:32,604 மக்கள் பார்த்த உயிரினத்தை நான் நம்புவேன். 409 00:38:33,522 --> 00:38:34,565 இது என்ன தேவநிந்தனையா? 410 00:38:35,858 --> 00:38:37,526 வில் உன்னைப் பற்றி கணிப்பது உனக்குப் புரியாது. 411 00:38:37,609 --> 00:38:38,861 நீ எவ்வளவு முயற்சித்தாலும் கூட. 412 00:38:40,112 --> 00:38:42,823 என் உதவி போதகருடன் பேசுங்கள். உன்னை நரகத்துக்குப் போ என சபித்துவிடுவார். 413 00:38:45,826 --> 00:38:49,121 -யாருமே நான் எதிர்பார்த்தது போல் இல்லை. -நீங்களும் தான். 414 00:38:49,204 --> 00:38:50,956 அப்பா சொன்னார், நீங்கள் மிகவும் சலிப்பான... 415 00:38:51,039 --> 00:38:54,459 இரவு நீங்கள் இங்கே தங்கினால், தேவாலயத்தில் இருக்கும் விசேஷ இருக்கையை காலையில் பார்க்கலாம் 416 00:38:55,711 --> 00:39:00,048 நான் என்னுடைய நண்பனைப் பார்க்கப் போக வேண்டும், ஆனால் அந்தப் பாம்பைப் பார்க்கவும் ஆவலாக இருக்கிறேன். 417 00:39:01,258 --> 00:39:02,467 சரி, இங்கேயே இருக்கிறேன். 418 00:39:02,551 --> 00:39:06,597 தேவாலயம் பிடிக்காது.நீங்கள் இருங்கள். நாங்கள் மட்டும் போகிறோமே. 419 00:39:07,222 --> 00:39:09,308 அப்படியென்றால், இன்றிரவு கிளம்பிவிடலாம், சரியா? 420 00:39:10,976 --> 00:39:12,269 நீங்கள் விரும்பியதையே செய்யுங்கள். 421 00:39:14,188 --> 00:39:15,397 தங்குகிறீர்களா? 422 00:39:16,607 --> 00:39:17,858 முடிவு எடுத்துவிட்டீர்கள். 423 00:39:26,575 --> 00:39:28,243 ஹென்றி! ஹென்றி! 424 00:39:38,253 --> 00:39:40,756 -இது என்ன? -மால்டனில் இருந்து இப்போது தான் திரும்பி வந்தேன். 425 00:39:40,839 --> 00:39:41,882 கிரேஸி? 426 00:39:43,759 --> 00:39:44,927 அவள் வரவே இல்லை. 427 00:39:48,889 --> 00:39:50,641 இங்கேயே பாதுகாப்பாக இரு. 428 00:40:01,985 --> 00:40:03,111 கிரேஸி? 429 00:40:05,614 --> 00:40:06,907 கிரேஸி! 430 00:40:07,533 --> 00:40:08,534 கிரேஸி! 431 00:41:14,766 --> 00:41:15,767 ஃபாதர்! 432 00:41:36,705 --> 00:41:40,417 எஸ்செக்ஸ் பாம்பு உங்கள் தேவாலயத்தின் நடுவில் இருக்கிறது. 433 00:41:41,502 --> 00:41:44,087 ஓக் மரத்தில் செதுக்கப்பட்ட புராணம். 434 00:41:45,255 --> 00:41:48,217 இன்று காலை ரத்தக்களரியாக ஒரு ஆட்டின் தலை புதருக்குள் கிடந்ததைப் பார்த்தேன். 435 00:41:48,759 --> 00:41:49,968 ஏதாவது விலங்கு அதைக் கொன்றிருக்குமோ? 436 00:41:50,552 --> 00:41:53,639 விலாங்கு மீனை பிடிக்கும் பொறி அது. மீனவர்களில் யாராவது விட்டுச் சென்றிருக்கலாம். 437 00:41:54,348 --> 00:41:56,141 எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறீர்கள்? 438 00:41:58,352 --> 00:42:02,648 எனக்கு ஏதாவது சந்தேகம் வந்தால், நான் எப்படி என்னுடைய மந்தையைப் பார்த்துக்கொள்ள முடியும்? 439 00:42:04,441 --> 00:42:06,485 -ஃபிலிப். காலை வணக்கம். -காலை வணக்கம், ஃபாதர். 440 00:42:08,403 --> 00:42:10,280 -வணக்கம், எட்வர்ட். -வணக்கம், ஃபாதர். 441 00:42:10,906 --> 00:42:12,658 ஜார்ஜ். காலை வணக்கம். 442 00:42:14,535 --> 00:42:19,164 இன்னும் கிரேஸி பேங்க்ஸ் கிடைக்கவில்லை அதனால்... இப்போது என்ன சொல்லப் போகிறீர்கள்? 443 00:42:21,542 --> 00:42:24,336 இவர் தான் என் உதவி போதகர், மாத்யூ எவன்ஸ்ஃபோர்ட். 444 00:42:24,419 --> 00:42:25,838 இவர் தான் திருமதி. கோரா சீபோர்ன். 445 00:42:25,921 --> 00:42:26,922 உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. 446 00:42:27,005 --> 00:42:29,007 ஃபாதர் ரான்சம் தயாராக வேண்டியுள்ளது. 447 00:42:29,091 --> 00:42:30,467 உட்காருங்கள், திருமதி. சீபோர்ன். 448 00:42:31,635 --> 00:42:33,053 அந்த பீடத்தில் இல்லை. 449 00:42:33,971 --> 00:42:35,013 அதுவும் இன்று கூடாது. 450 00:42:41,687 --> 00:42:45,190 மன்னிக்கவும். இது எல்லாம் அவர் மனதைப் புண்படுத்திவிட்டது. 451 00:42:45,274 --> 00:42:46,733 நீங்கள் விரும்பும் இடத்தில் உட்காருங்கள். 452 00:43:51,006 --> 00:43:53,342 போய் உதவிக்கு ஆளைக் கூப்பிடுங்கள். சீக்கிரம்! 453 00:43:56,970 --> 00:43:57,971 கிரேஸி! 454 00:43:59,598 --> 00:44:00,599 கிரேஸி! 455 00:44:02,476 --> 00:44:04,853 நாம் ஒவ்வொருவரும் சந்தேகத்துடனும், பயத்துடனும் வாழ்கிறோம். 456 00:44:06,438 --> 00:44:07,481 நானும் கூட அப்படித்தான். 457 00:44:09,942 --> 00:44:11,818 இந்த சூழலில் தான் கடவுள் வாழ்கிறார். 458 00:44:13,570 --> 00:44:18,450 நம் நிச்சயமற்ற தன்மையிலும், காதலிலும். 459 00:44:20,536 --> 00:44:23,205 ஒன்றாகச் சேர்ந்து வருவதற்கு இது தான் நமக்கான நேரம். 460 00:44:24,665 --> 00:44:26,625 என் பங்கிற்கு, உங்களின் பயங்களைப் பற்றி கேட்கிறேன், 461 00:44:26,708 --> 00:44:29,503 முடிந்தளவு கஷ்டப்பட்டு புரிந்துகொள்ள முயல்கிறேன். 462 00:44:30,963 --> 00:44:32,256 பயப்படாதீர்கள். 463 00:44:34,800 --> 00:44:39,972 நாம் தொலைந்து விட்ட சூழலில் தான், ஒளி நமக்கு அருகில் இருக்கும். 464 00:44:44,351 --> 00:44:45,352 தயவுசெய்து, எழுந்து நில்லுங்கள். 465 00:44:52,901 --> 00:44:57,364 என்னுடன் இருங்கள் 466 00:44:57,447 --> 00:45:04,079 மாலை நேரம் வேகமாக வீழ்கிறது 467 00:45:04,913 --> 00:45:09,710 இருள் அதிகமாகிறது 468 00:45:10,878 --> 00:45:15,591 ஆண்டவரே, என்னுடன் தங்கியருளும் 469 00:45:15,674 --> 00:45:22,514 பிற உதவியாளர்கள் உதவாத போதும் 470 00:45:22,598 --> 00:45:26,018 வசதிகள் பறந்தோடிய போதும் 471 00:45:27,477 --> 00:45:31,690 ஆதரவற்றவர்களின் உதவியே 472 00:45:31,773 --> 00:45:37,446 ஓ, என்னுடன் இருங்கள் 473 00:45:41,283 --> 00:45:43,410 எனக்கு எதிரியிடம் பயமில்லை... 474 00:45:48,415 --> 00:45:50,584 ஜோனா, என்ன விஷயம்? 475 00:45:52,836 --> 00:45:54,004 கிரேஸி பற்றிய விஷயம். 476 00:45:54,546 --> 00:45:56,048 ஹென்றி என்னை அனுப்பினார். அவருக்கு உதவி தேவை. 477 00:45:56,673 --> 00:45:57,674 கிரேஸி. 478 00:46:02,554 --> 00:46:06,350 கிரேஸி! கிரேஸி! 479 00:46:06,433 --> 00:46:10,312 -நகருங்கள், வாருங்கள்! -கிரேஸி! கிரேஸி! 480 00:46:10,395 --> 00:46:11,939 கிரேஸி! 481 00:46:12,564 --> 00:46:13,941 -கிரேஸி! -தொடந்து தேடுங்கள். 482 00:46:14,024 --> 00:46:16,360 கிரேஸி! 483 00:46:16,443 --> 00:46:17,819 -கிரேஸி! -இங்கே வா. 484 00:46:19,112 --> 00:46:20,489 கிரேஸி! 485 00:46:21,698 --> 00:46:26,537 -கிரேஸி! கிரேஸி! கிரேஸி! -சீக்கிரம், தேடுங்கள்! 486 00:46:27,412 --> 00:46:30,874 கிரேஸி! கிரேஸி! 487 00:46:34,086 --> 00:46:38,966 கிரேஸி! கிரேஸி! கிரேஸி! 488 00:46:50,894 --> 00:46:53,397 இல்லை! இல்லை! 489 00:46:57,776 --> 00:46:58,861 இல்லை. 490 00:47:06,827 --> 00:47:08,078 கிரேஸி. 491 00:47:14,835 --> 00:47:17,087 இல்லை, இல்லை, இல்லை. 492 00:47:22,134 --> 00:47:24,511 இல்லை. இல்லை. 493 00:47:24,595 --> 00:47:28,473 இங்கே! இங்கே! அவள் இங்கே இருக்கிறாள்! 494 00:47:33,437 --> 00:47:34,938 வில்! வில்! 495 00:47:36,190 --> 00:47:38,025 இந்தப் பக்கம்! இந்தப் பக்கம்! 496 00:47:49,953 --> 00:47:51,079 என் செல்ல கிரேஸி. 497 00:47:59,213 --> 00:48:00,672 மிகவும் வருந்துகிறேன். 498 00:48:00,756 --> 00:48:02,966 சாத்தான். சாத்தான் வந்துவிட்டது. 499 00:48:05,260 --> 00:48:07,262 இப்போது வேண்டாம். தயவுசெய்து நிறுத்து, மாத்யூ. 500 00:48:08,180 --> 00:48:11,266 “புனித மைக்கேல், தூதரே, போரின் போது எங்களைக் காத்தருளும். 501 00:48:11,808 --> 00:48:14,561 அக்கிரமத்திற்கும் பிசாசின் கண்ணிக்கும் எதிராக எங்களை பாதுகாத்தருளும். 502 00:48:15,646 --> 00:48:18,774 கடவுளின் சக்தியால், சாத்தானையும், சுற்றித் திரியும் எல்லா தீய ஆவிகளையும் 503 00:48:18,857 --> 00:48:20,567 நரகத்தில் தள்ளுங்கள்...” 504 00:48:20,651 --> 00:48:23,403 மாத்யூ சொல்வது சரிதான். பாம்பு வந்துவிட்டது. 505 00:48:24,488 --> 00:48:27,366 “கடவுள் தன் விருப்பப்படி படைத்த மனிதர்களுக்காகவும், 506 00:48:27,449 --> 00:48:31,537 சாத்தானின் கொடுங்கோன்மையிலிருந்து மிக அதிக விலை கொடுத்து மீட்ட மனிதர்களுக்காகவும், 507 00:48:31,620 --> 00:48:33,413 அவர்களின் உதவிக்காக மனமிறங்கி வாருங்கள். 508 00:48:34,289 --> 00:48:35,916 எனவே, சாத்தானை நம் காலடியில் நசுக்கி, 509 00:48:35,999 --> 00:48:40,838 அவன் இனி மனிதர்களைச் சிறைபிடிக்காமல் இருக்கவும், தேவாலயத்திற்குக் கேடு செய்யாமல் இருக்கவும் 510 00:48:40,921 --> 00:48:42,381 அமைதியின் கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள். 511 00:48:43,131 --> 00:48:45,300 உன்னதமானவரிடம் பிரார்த்தனை செய்யுங்கள், 512 00:48:45,384 --> 00:48:48,470 தாமதிக்காமல் அவர் நம் மீது கருணை காட்டி, 513 00:48:48,554 --> 00:48:52,850 பிசாசும், சாத்தானுமாகிய பழைய பாம்பாகிய டிராகனைப் பிடித்துக்கொள்ள...” 514 00:50:05,923 --> 00:50:07,925 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்