1 00:01:27,671 --> 00:01:29,047 ஓய்! 2 00:01:45,063 --> 00:01:46,982 எனக்கு உதவு! சீக்கிரம்! வலையைப் பிடி! 3 00:01:48,567 --> 00:01:51,945 ஜோஷுவா! ஜோஷுவா! 4 00:01:52,029 --> 00:01:54,781 ஜோஷுவா! சீக்கிரம்! நீந்து! இங்கே வா! 5 00:02:05,792 --> 00:02:06,793 ஒன்றுமில்லை. 6 00:02:35,364 --> 00:02:38,158 சாரா பெர்ரியின் நாவலைத் தழுவியது 7 00:02:54,508 --> 00:02:55,717 நீ முழித்திருக்கிறாயா? 8 00:02:57,719 --> 00:02:59,346 நீ நன்றாக தூங்கவில்லை போலிருக்கிறது. 9 00:03:02,307 --> 00:03:04,977 முடிவடையாத மிக நீளமான இரவு. 10 00:03:11,525 --> 00:03:14,319 பொழுதுபோக்க வேறு எதுவும் இல்லாத குழந்தைகள் அவர்கள். 11 00:03:14,403 --> 00:03:15,779 நான் போயிருக்கவே கூடாது. 12 00:03:15,863 --> 00:03:17,573 அவர்களுக்கு படிமங்கள் காட்டினாய். 13 00:03:17,656 --> 00:03:19,366 அவர்கள் அவ்வளவு... 14 00:03:19,449 --> 00:03:21,994 அவர்களுடைய வகுப்பு தோழி இறந்திருக்கிறாள். கண்டிப்பாக சோகமாக இருப்பார்கள். 15 00:03:22,077 --> 00:03:25,038 அது சோகத்தை விட அதிகம். பயந்திருந்தார்கள். 16 00:03:26,540 --> 00:03:27,791 அதோடு, அது என்னுடைய தவறு தான். 17 00:03:39,386 --> 00:03:40,470 வணக்கம். 18 00:03:42,472 --> 00:03:43,682 இப்போது பரவாயில்லையா? 19 00:03:45,726 --> 00:03:48,478 ஏதாவது சொல், ஜோ. 20 00:03:48,562 --> 00:03:51,398 பரவாயில்லை, ஜோ. நீ பேச நினைக்கும் போதே பேசு. 21 00:03:53,025 --> 00:03:55,068 பாம்பு அவளை ஊமையாக்கிவிட்டது. 22 00:03:55,152 --> 00:03:56,445 ஜான் ரான்சம். 23 00:04:02,743 --> 00:04:04,536 வாரக்கடைசியிலிருந்தே அவள் எதுவும் பேசவில்லை. 24 00:04:04,620 --> 00:04:06,997 ஒருவேளை நாம் கோராவிடம் பேச வேண்டும் போல. 25 00:04:07,080 --> 00:04:08,957 என்ன நடந்தது என்று அவள் சொல்வாள். 26 00:04:13,754 --> 00:04:15,631 லூக்கை எங்காவது பார்த்தாயா? 27 00:04:16,130 --> 00:04:17,466 இன்னும் இல்லை. 28 00:04:18,300 --> 00:04:20,677 நீ போய் கிராக்நெல்லிடம் இருந்து கொஞ்சம் பால் வாங்கி வருகிறாயா? 29 00:04:20,761 --> 00:04:22,012 வழி ஞாபகம் இருக்கிறதா? 30 00:04:22,095 --> 00:04:23,222 நிச்சயமாக ஞாபகம் இருக்கிறது. 31 00:04:24,306 --> 00:04:26,183 தண்ணீருக்கு அருகில் போகாதே. 32 00:04:49,414 --> 00:04:50,415 அவர் வந்து விட்டார்! 33 00:04:53,168 --> 00:04:56,046 -எப்படி இருக்கிறீர்கள், கோரா? -உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி, லூக். 34 00:04:56,129 --> 00:04:57,548 நீங்கள் அந்த பள்ளியைப் பார்க்க வேண்டும். 35 00:04:57,631 --> 00:04:59,258 -நாம் நேராக அங்கே போகலாமா? -நிச்சயம், போகலாம். 36 00:05:03,720 --> 00:05:05,764 சீக்கிரமாக வந்ததற்கு நன்றி! 37 00:05:05,848 --> 00:05:07,933 கண்டிப்பாக. உங்கள் கடிதம் கிடைத்தவுடனேயே கிளம்பிவிட்டேன். 38 00:05:08,642 --> 00:05:10,519 அது நடந்ததற்கு பிறகு நான் தூங்கவே இல்லை. 39 00:05:11,854 --> 00:05:13,730 அது நல்லதில்லை. 40 00:05:13,814 --> 00:05:15,315 சரி, உண்மையில் என்ன தான் நடந்தது? 41 00:05:29,705 --> 00:05:32,583 நீ இங்கே பால் வாங்க வந்திருந்தால், நீயே தான் கறக்க வேண்டும். 42 00:05:36,962 --> 00:05:38,130 இங்கே வா. 43 00:05:49,224 --> 00:05:53,478 சரி, பயப்படாதே. அவளை பதட்டப்பட வைக்காதே. 44 00:05:55,814 --> 00:05:56,815 பார்த்தாயா? 45 00:06:03,238 --> 00:06:05,866 ஹலோ. ஹாய், குட்டி. 46 00:06:08,994 --> 00:06:12,831 அது ஒரு தொற்று போல தோன்றியது. எல்லோரும் சாத்தானால் பிடிக்கப்பட்டது போல. 47 00:06:15,375 --> 00:06:17,753 கோரா, நீங்கள் இயற்கைக்கு அப்பாற்பட்டதை நம்ப மாட்டீர்களே. 48 00:06:19,338 --> 00:06:23,759 ஏதோ ஒன்று நடந்தது. அது குழந்தைகளின் விளையாட்டில்லை. 49 00:06:24,343 --> 00:06:27,638 சரி, ஆனால் அதற்கு ஒரு அறிவுப்பூர்வமான விளக்கம் இருக்கும் தானே? 50 00:06:28,639 --> 00:06:29,640 எதைப் போல? 51 00:06:29,723 --> 00:06:32,601 சேலம் சூனியக்காரி வழக்குகளில் இருந்த பெண்கள், தங்கள் மூளையின் 52 00:06:32,684 --> 00:06:36,230 சக்தியை மாற்றிய விஷத்தை சாப்பிட்டார்கள் என்று நாம் நினைக்கிறோம். 53 00:06:37,314 --> 00:06:42,653 கிளாவிசெப்ஸ் புர்புரியா. அது ஒரு பூஞ்சை. அது கம்பு மற்றும் பிற தானியங்களின் மேலே வளரும். 54 00:06:43,695 --> 00:06:46,240 இந்த விஷம் அவர்களின் பிரமைக்கும் வலிப்புக்கும் காரணமாக இருக்குமா? 55 00:06:46,323 --> 00:06:49,993 ஆமாம், கண்டிப்பாக. ஆனால், இது இங்கிலாந்தில் பொதுவாக நடப்பதில்லை. 56 00:06:51,370 --> 00:06:53,497 இங்கு நடந்த எதுவுமே பொதுவானது இல்லை. 57 00:06:59,628 --> 00:07:02,339 நீங்களே பாருங்கள். 58 00:07:15,102 --> 00:07:17,271 அவர்கள் தாக்கப்பட்டது போலத் தோன்றுகிறது. 59 00:07:18,856 --> 00:07:21,066 நான் திரும்பி வந்தால்... 60 00:07:23,318 --> 00:07:24,319 நாம் கிளம்பலாமா? 61 00:07:36,248 --> 00:07:38,083 -திருமதி. சீபோர்ன். -என் பொருட்களை எடுக்கிறேன். 62 00:07:38,166 --> 00:07:39,710 குழந்தைகள் வருவதற்கு முன்னால் சுத்தம் செய்ய வேண்டும். 63 00:07:39,793 --> 00:07:41,211 கவலைப்படாதீர்கள். நாங்கள் கிளம்புகிறோம். 64 00:07:41,295 --> 00:07:44,256 -நீங்கள் யார்? -லூக் காரெட். 65 00:07:44,339 --> 00:07:45,424 அவர் ஒரு டாக்டர். 66 00:07:45,507 --> 00:07:50,012 ஆமாம். குழந்தைகளுக்கு என்ன நடந்தது என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன். 67 00:07:50,095 --> 00:07:53,599 அவர்களுக்கு ஜுரமோ, முக வீக்கமோ இருந்ததா? வாந்தி எடுத்தார்களா? 68 00:07:53,682 --> 00:07:55,350 இல்லை. ஏன் அப்படி இருக்க வேண்டும்? 69 00:07:55,976 --> 00:07:59,479 -நான் இதை விளக்க முயற்சி... -உங்களுடைய மத எதிர்ப்பு யோசனைகளோடு 70 00:07:59,563 --> 00:08:03,358 நீங்கள் இங்கே வரும் வரை என் வகுப்பு நன்றாக இருந்தது. 71 00:08:06,153 --> 00:08:07,446 வா. 72 00:08:19,124 --> 00:08:20,125 ஜோ. 73 00:08:23,462 --> 00:08:25,380 வெள்ளிக்கிழமை என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. 74 00:08:28,967 --> 00:08:31,720 ஆனால், நீ வாய் திறந்து பேசவில்லை என்றால், என்னால் உதவ முடியாது. 75 00:08:38,101 --> 00:08:39,227 நான் கோபப்பட மாட்டேன். 76 00:08:59,581 --> 00:09:00,999 இப்போது, என்னுடன் வா. 77 00:09:01,083 --> 00:09:03,961 சரி. புரிகிறது. நீ அப்படி செய்ய வேண்டும் என்றால்... 78 00:09:04,044 --> 00:09:05,045 வா. 79 00:09:12,261 --> 00:09:13,470 உனக்கு ஒன்றும் ஆகாது. 80 00:09:14,513 --> 00:09:15,597 பிறகு சந்திக்கலாம். 81 00:09:21,144 --> 00:09:22,563 என்ன நடந்தது என்று உங்களிடம் சொன்னார்களா? 82 00:09:24,147 --> 00:09:27,234 சொன்னார்கள். ஜோ மிகவும் வருத்தமாக இருக்கிறாள். 83 00:09:27,317 --> 00:09:29,319 உங்களிடம் சொல்ல முயன்றேன். 84 00:09:29,403 --> 00:09:32,322 குழந்தைகளுக்கு உறுதி தான் தேவை. புது யோசனைகள் அல்ல. 85 00:09:33,282 --> 00:09:34,283 அவர்கள் நலமாக இருப்பார்கள். 86 00:09:35,075 --> 00:09:36,702 அவர்களது பெற்றோர்களும் பயப்படுகிறார்கள். 87 00:09:37,786 --> 00:09:39,913 ஏதோ ஒன்று இருப்பதாக குழந்தைகள் உணருகிறார்கள். 88 00:09:40,747 --> 00:09:43,375 ஏதோ ஒன்றா? நீ அவர்களுக்கு உண்மையை சொன்னாய் என்று நினைக்கிறேன். 89 00:09:44,084 --> 00:09:47,754 மாத்யூ, பொது இடத்தில் உருவாக்கப்பட்ட கற்பனை கதைகளை உண்மையாக்கக்கூடாது. 90 00:09:47,838 --> 00:09:48,964 நீங்கள் கேள்விப்படவில்லையா? 91 00:09:50,382 --> 00:09:54,553 மீனவர்கள் இன்று காலை படகில் தாக்கப்பட்டார்கள். அவர்களது வலைகள் கிழிக்கப்பட்டன. 92 00:09:55,679 --> 00:09:58,599 நயோமி! வீட்டிற்கு போ! நீ இன்று வரக்கூடாது. 93 00:09:58,682 --> 00:10:01,435 -மாத்யூ. -அவளை அனுமதிக்க மாட்டேன். அவள் பிரச்சினை தான். 94 00:10:04,188 --> 00:10:07,024 நயோமி. நயோமி, நில்லு. 95 00:10:11,653 --> 00:10:14,198 அவள் இங்கே இருக்க வேண்டும். அவள் தன் சகோதரியை இழந்திருக்கிறாள். 96 00:10:16,074 --> 00:10:19,036 இது என்னுடைய பள்ளி. மன்னியுங்கள். 97 00:10:43,977 --> 00:10:45,270 நான் முட்டாள்தனமாக நடந்துவிட்டேன். 98 00:10:46,522 --> 00:10:47,648 இல்லை. 99 00:10:49,149 --> 00:10:50,901 அவர்களை அமைதிப்படுத்தும் என்று நினைத்தேன். 100 00:10:50,984 --> 00:10:55,155 பாம்பு பற்றி ஒரு அறிவார்ந்த விளக்கத்தை அவர்களுக்கு தரலாம் என்று நினைத்தேன். 101 00:10:55,239 --> 00:10:57,282 அங்கே ஒரு விலங்கு இருக்கின்றது என்று நினைக்கிறீர்களா? 102 00:11:00,953 --> 00:11:02,496 ஆமாம், அப்படித்தான் நினைக்கிறேன். 103 00:11:07,292 --> 00:11:09,294 நான் ஒரு தனிப்பட்ட கேள்வி கேட்கலாமா? 104 00:11:11,380 --> 00:11:13,173 அது உங்கள் கனவில் தோன்றுகிறதா? 105 00:11:20,848 --> 00:11:22,224 அப்படித்தான் நினைத்தேன். 106 00:11:22,307 --> 00:11:23,934 அது என் கற்பனை என்று நினைக்கிறீர்களா? 107 00:11:24,977 --> 00:11:26,270 வருத்தத்தில் இருக்கிறீர்கள் என நினைக்கிறேன். 108 00:11:29,231 --> 00:11:33,026 முன்னோடிகளான டார்வின் மற்றும் லயில் போன்றோரின் கோட்பாடுகள் இவை. 109 00:11:33,110 --> 00:11:35,028 உள்ளூர் மக்கள் இந்த விலங்கை 200 ஆண்டுகளாக 110 00:11:35,112 --> 00:11:37,155 -பார்த்திருக்கிறார்கள். -நல்லது. 111 00:11:37,823 --> 00:11:38,824 ஆமாம். 112 00:11:38,907 --> 00:11:40,325 இதோ இருக்கிறது. 113 00:11:40,409 --> 00:11:42,119 -என்ன? -உங்கள் ஆர்வம். 114 00:11:42,619 --> 00:11:44,371 ஆக, என்னை நம்புகிறீர்களா? 115 00:11:44,454 --> 00:11:45,956 நான் என்ன நினைக்கிறேன் என்பது முக்கியமில்லை. 116 00:11:47,666 --> 00:11:50,085 போராட்டம் இல்லாமல் உண்மையை கண்டுபிடிக்க முடியாது என்று தெரியும். 117 00:11:51,378 --> 00:11:53,881 நீங்களே உங்களை நம்பி வேலைக்கு திரும்ப வேண்டும். 118 00:12:29,833 --> 00:12:30,834 வில். 119 00:12:32,252 --> 00:12:34,338 எப்படி இருக்கிறீர்கள்? ஜோ எப்படி இருக்கிறாள்? 120 00:12:35,088 --> 00:12:36,173 நான் தொந்தரவு செய்யவில்லை தானே. 121 00:12:36,256 --> 00:12:38,091 இல்லைவே இல்லை. உள்ளே வருகிறீர்களா? 122 00:12:44,014 --> 00:12:46,767 -படகா? எந்த மாதிரி படகு? -அது எவ்வளவு தொலைவு? 123 00:12:47,351 --> 00:12:49,853 நம் நண்பர், லூக் காரெட், லண்டனில் இருந்து வந்திருக்கிறார். உள்ளே வந்து அவரை சந்தியுங்கள். 124 00:12:49,937 --> 00:12:52,439 இல்லை, நான்... இரவு சாப்பாட்டிற்கு வீடு திரும்ப வேண்டும். 125 00:12:52,523 --> 00:12:55,025 நீங்கள் நலமா என்று பார்க்கத்தான் வந்தேன். 126 00:12:55,734 --> 00:12:58,654 பள்ளியில் என்ன நடந்தது என்று குழந்தைகள் சொன்னார்கள். 127 00:12:58,737 --> 00:13:01,865 நன்றி. நான் நலம் தான். ஜோ எப்படி இருக்கிறாள்? 128 00:13:02,783 --> 00:13:05,827 -அவள்... -கோரா? நீ வரவேண்டும். 129 00:13:06,787 --> 00:13:12,167 நான் உங்களை தொந்தரவு செய்கிறேன். நாளை பேசலாமா? 130 00:13:12,751 --> 00:13:14,378 சரி. குட்பை. 131 00:13:16,505 --> 00:13:17,506 நில்லுங்கள். 132 00:13:20,259 --> 00:13:21,260 யாரது? 133 00:13:22,261 --> 00:13:23,428 வில் ரான்சம். 134 00:13:24,429 --> 00:13:26,640 அவர் தான் அந்த பழைய பாதிரியாரா? 135 00:13:30,143 --> 00:13:32,396 என்ன நடந்தது என்று புரிந்துகொள்ள விரும்புவீர்கள். 136 00:13:32,479 --> 00:13:36,233 -நான் எதையும் சொல்ல விரும்ப... -இல்லை, அது என் தவறு. அவர்களை பயமுறுத்தினேன். 137 00:13:37,734 --> 00:13:39,194 இதையெல்லாம் நீங்கள் தொடங்கவில்லை. 138 00:13:39,945 --> 00:13:42,072 இரவு முழுவதும் அதைப் பற்றி தான் யோசித்தேன். 139 00:13:43,866 --> 00:13:46,535 சில சமயம் நள்ளிரவு நம்மிடம் பொய் சொல்லும். 140 00:13:48,287 --> 00:13:49,496 ஆமாம். 141 00:13:54,168 --> 00:13:58,088 ஜோவிற்கு எப்படி உதவுவது என்று உங்களிடம் ஏதாவது யோசனை இருக்கும் என்று ஸ்டெல்லா நினைத்தாள். 142 00:14:00,257 --> 00:14:01,633 இது மிகவும் விசித்திரம், கோரா. 143 00:14:03,343 --> 00:14:04,887 அவளால் பேச முடியவில்லை. 144 00:14:04,970 --> 00:14:06,471 என்ன? 145 00:14:06,555 --> 00:14:07,681 அவள் பயந்திருக்கிறாள். 146 00:14:11,852 --> 00:14:14,938 என் நண்பர் லூக் ஒரு டாக்டர். அவர் வந்து ஜோவிடம் பேசுவார். 147 00:14:20,944 --> 00:14:24,448 நன்றி. ஆமாம். அது நிச்சயம் பயனளிக்கும். 148 00:14:26,992 --> 00:14:31,496 சரி, நீங்கள் திரும்பி போய், உங்கள் விருந்தாளியைக் கவனியுங்கள். 149 00:14:32,706 --> 00:14:33,874 சரி. 150 00:14:35,083 --> 00:14:36,335 கோட் கூட இல்லாமல் வந்தீர்களா? 151 00:14:49,598 --> 00:14:50,599 நன்றி. 152 00:14:54,937 --> 00:14:56,063 குட்பை. 153 00:14:56,146 --> 00:14:57,147 பை. 154 00:15:25,926 --> 00:15:27,177 குடிக்க ஏதாவது வேண்டுமா? 155 00:15:30,806 --> 00:15:35,102 சனிக்கிழமை உங்கள் பிறந்தநாளுக்காக இந்த பாட்டில் வைக்கப்பட்டிருப்பதாக மார்த்தா சொன்னாள். 156 00:15:35,853 --> 00:15:37,020 நீங்கள் ஏன் என்னிடம் சொல்லவில்லை? 157 00:15:37,104 --> 00:15:40,023 -யாருக்கு பிறந்தநாள் பிடிக்கும்? -எல்லோருக்கும் பிடிக்கும், பார்ட்டிகள்... 158 00:15:42,317 --> 00:15:43,652 எனக்காக பார்ட்டி நடந்ததே கிடையாது. 159 00:15:44,444 --> 00:15:45,487 நான் நம்ப மாட்டேன். 160 00:15:47,072 --> 00:15:48,657 மைக்கேல் பார்ட்டிகள் நடத்துவார். 161 00:15:49,867 --> 00:15:54,830 மக்கள் குடித்து, ஆடம்பரம் செய்வார்கள். அவர் என்னையும் எல்லோருக்கும் காட்டுவார். 162 00:15:54,913 --> 00:15:58,208 அப்படியென்றால், உங்களுக்கென்று ஒன்றை ஏற்பாடு செய்யலாம். 163 00:15:58,792 --> 00:16:02,254 இந்த சனிக்கிழமை, உங்கள் பிறந்த நாளுக்காக நான் ஒரு பார்ட்டி கொடுக்கிறேன். 164 00:16:15,475 --> 00:16:17,519 ஜோ பற்றி வில் மிகவும் கவலைப்படுகிறார். 165 00:16:18,353 --> 00:16:21,273 நீங்கள் அவளை பார்ப்பீர்கள் என்று சொல்லியிருக்கிறேன். உங்களுக்கு ஆட்சேபனை இருக்காது என நினைக்கிறேன். 166 00:16:21,857 --> 00:16:25,360 கண்டிப்பாக இல்லை. நான் மனோவசியம் செய்ய முயல்கிறேன். 167 00:16:25,444 --> 00:16:28,906 ஜோவை வசியம் செய்யப் போகிறீர்களா? அது ஆபத்தானது இல்லையா? 168 00:16:28,989 --> 00:16:32,034 இல்லை. ஒரு ஆஸ்திரிய டாக்டரின் சிகிச்சை முறைகளை கவனித்து வருகிறேன். 169 00:16:32,117 --> 00:16:33,327 அவர் மருத்துவ அணுகுமுறை கொண்டவர். 170 00:16:33,410 --> 00:16:35,954 நோயாளி தன் ஆழ்மனதை அணுக அவர் உதவுகிறார். 171 00:16:36,038 --> 00:16:38,707 அவர்களுடைய உள்ளார்ந்த பயங்கள், ரகசிய ஆர்வங்கள் போன்றவற்றை வெளிக்கொண்டு வருவார். 172 00:16:39,208 --> 00:16:40,751 அது பாதுகாப்பானதா? 173 00:16:40,834 --> 00:16:44,087 கண்டிப்பாக. உங்களுக்கு காட்டுகிறேன். 174 00:16:47,591 --> 00:16:49,676 என் மூளைக்குள்ளே சென்று பார்க்க விரும்புகிறீர்களா? 175 00:16:52,554 --> 00:16:53,680 அது ஒரு யோசனை தான். 176 00:16:56,433 --> 00:16:58,101 நான் என்ன செய்ய வேண்டும்? 177 00:16:58,602 --> 00:17:03,941 எதுவும் இல்லை. ஆமாம். வந்து, அப்படியே படுத்துக்கொள்ளுங்கள். 178 00:17:18,163 --> 00:17:19,164 இப்போது... 179 00:17:20,499 --> 00:17:22,209 என்னால் செய்ய முடியாது போல. 180 00:17:22,291 --> 00:17:24,586 அது தான், மனோவசியத்தின் அழகு. நீங்கள் முயற்சிக்க வேண்டியதில்லை. 181 00:17:25,587 --> 00:17:26,839 நான் சொல்வதை மட்டும் செய்யுங்கள். 182 00:17:28,674 --> 00:17:29,675 உங்களை நம்புகிறேன். 183 00:17:32,511 --> 00:17:34,429 ஆழமாக, நிதானமாக மூச்சு விடுங்கள். 184 00:17:36,682 --> 00:17:38,267 ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள். 185 00:17:39,810 --> 00:17:42,688 உங்களுடைய கை கால்கள் எல்லாம் கனமாக இருக்கின்றன. 186 00:18:11,175 --> 00:18:12,176 தளர்வாக இருங்கள். 187 00:18:13,760 --> 00:18:15,888 உங்கள் பயங்களை விலக்குங்கள். 188 00:18:18,473 --> 00:18:20,809 உங்கள் விருப்பங்களுக்கு இடம் கொடுங்கள். 189 00:18:35,574 --> 00:18:38,785 வேலைக்கு திரும்ப வேண்டும் என்று நான் சொன்னது, எனக்காக அல்ல. 190 00:18:39,786 --> 00:18:40,829 எவ்வளவு தூரம் இருக்கிறது? 191 00:18:45,626 --> 00:18:48,170 பல ஆயிரக்கணக்கான அல்லது மில்லியன் கணக்கான வருடங்கள் வெளிச்சத்திற்கு 192 00:18:48,253 --> 00:18:50,339 வராத, நிறைய விஷயங்கள் இருக்கலாம். 193 00:18:53,175 --> 00:18:57,304 அதற்கு உயிர் இல்லை என்றால், எனக்கு ஆர்வம் இருக்காது. 194 00:18:59,890 --> 00:19:01,767 தபால் மூலம் எனக்கு படிமங்கள் அனுப்பப்பட்டு இருக்கின்றன. 195 00:19:02,935 --> 00:19:05,729 அழகாக பெயரிட்டு ஒரு காட்சிப் பொருளாக வைத்திருக்கிறேன். 196 00:19:07,898 --> 00:19:10,943 அந்த பெரிய வீட்டில் நான் சந்தித்த அந்த பெண் போலவே நீங்கள் இல்லை. 197 00:19:27,543 --> 00:19:28,669 லூக்! 198 00:19:29,169 --> 00:19:30,295 என்ன அது? 199 00:19:34,508 --> 00:19:36,844 டோர்செட்டில் ஆன்னிங் கண்டுபிடித்த முதுகெலும்பு போல இருக்கிறது. 200 00:20:30,647 --> 00:20:31,899 இங்கே என்ன நடந்தது? 201 00:20:31,982 --> 00:20:33,400 அது வலைகளை கிழித்துவிட்டது. 202 00:20:33,483 --> 00:20:35,444 -மீனவர்களை படகிலிருந்து தள்ளியது. -எது அப்படி செய்தது? 203 00:20:35,527 --> 00:20:37,905 -எல்லோரையும் கொன்றிருக்கும். -தண்ணீரில் ஏதோ இருக்கிறதா? 204 00:20:37,988 --> 00:20:39,740 நீங்கள் பார்த்தீர்களா? எப்படி இருந்தது? 205 00:20:39,823 --> 00:20:42,367 நீங்களே எங்களுக்குச் சொல்லலாமே? உங்களுக்கு தான் அது பற்றி தெரியும் போல. 206 00:20:42,451 --> 00:20:43,577 என்ன? இல்லை, நான்... 207 00:20:43,660 --> 00:20:46,705 நீங்கள் வகுப்பறைக்குள் வந்ததிலிருந்து என் மகளுக்கு பயங்கர கனவுகள் வருகின்றன. 208 00:20:46,788 --> 00:20:48,415 திருமதி. சீபோர்ன் உதவி தான் செய்கிறார். 209 00:20:48,498 --> 00:20:49,666 அவர்களை பயமுறுத்தி இருந்தால் மன்னிக்கவும். 210 00:20:49,750 --> 00:20:52,419 -பயமுறுத்தியா? அவர்களை என்ன செய்தீர்கள்? -நாம் கிளம்பலாம். 211 00:20:54,254 --> 00:20:56,715 எதற்காக வந்திருக்கிறீர்கள் என தெரியாது, அதில் அக்கறையும் இல்லை. 212 00:20:56,798 --> 00:21:03,305 ஆனால் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தாலும், தயவு செய்து, அதை நிறுத்துங்கள். 213 00:21:24,618 --> 00:21:25,619 அப்பா? 214 00:22:06,869 --> 00:22:09,371 -என் அப்பாவை பார்த்தீர்களா? -இப்போது தான் கிளம்பினார். 215 00:22:22,176 --> 00:22:23,468 சரி, எனக்கு ஒரு பீர் வேண்டும். 216 00:22:25,679 --> 00:22:26,930 சரி. 217 00:22:40,569 --> 00:22:43,447 -நயோமி. -சாமுவேல். 218 00:22:56,710 --> 00:22:58,086 வலைகள் பற்றி கேள்விப்பட்டாயா? 219 00:23:00,214 --> 00:23:01,215 கேள்விப்பட்டேன். 220 00:23:07,262 --> 00:23:09,473 சரி. அதைக் குடி. குடி. 221 00:23:11,183 --> 00:23:12,226 நமக்கு இன்னும் ஒன்று கொண்டு வருகிறேன். 222 00:23:25,531 --> 00:23:28,242 ஒன்றுமில்லை. நான் இங்கிருக்கிறேன். 223 00:23:36,625 --> 00:23:37,626 -எனக்கு வலிக்கிறது. -கொஞ்சம் பொறு. 224 00:23:38,961 --> 00:23:40,003 எனக்கு வலிக்கிறது. 225 00:23:45,759 --> 00:23:48,178 -வேண்டாம். -இரு. 226 00:23:50,764 --> 00:23:52,724 நிறுத்து. இது பாவம். 227 00:23:53,225 --> 00:23:55,686 உன் சகோதரி போலவே, நீயும் மோசமானவள் என்று நினைத்தேன். 228 00:24:06,363 --> 00:24:09,157 மன்னியுங்கள், பிதாவே. மன்னியுங்கள். 229 00:24:45,694 --> 00:24:48,447 இதற்கு காரணம் அந்த பாம்பு தான். சாத்தானின் வேலையைச் செய்கிறது. 230 00:24:49,198 --> 00:24:50,616 எங்கள் ஆன்மாக்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள், ஃபாதர். 231 00:24:51,325 --> 00:24:52,826 பிரார்த்தனை விட அதிகம் செய்ய வேண்டும். 232 00:25:03,170 --> 00:25:06,632 கோரா. நீ வந்ததில் மகிழ்ச்சி. 233 00:25:07,841 --> 00:25:09,176 -ஹலோ, மார்த்தா. -ஹலோ. 234 00:25:09,718 --> 00:25:11,178 ஸ்டெல்லா, இவர் தான் லூக் காரெட். 235 00:25:11,762 --> 00:25:12,930 லூக், ஸ்டெல்லா ரான்சம். 236 00:25:13,013 --> 00:25:15,307 டாக்டர். காரெட், உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. 237 00:25:16,433 --> 00:25:17,476 உள்ளே வாருங்கள். 238 00:25:17,559 --> 00:25:19,853 குப்பையாக இருப்பதை மன்னியுங்கள். 239 00:25:20,354 --> 00:25:22,940 வீட்டை சீராக வைக்க முயற்சி செய்கிறேன். 240 00:25:26,777 --> 00:25:28,362 வில் தன் அலுவலகத்தில் இருக்கிறாரா? 241 00:25:29,071 --> 00:25:33,116 திருச்சபையைச் சேர்ந்த ஒருவரை பார்க்கப் போயிருக்கிறார். உன்னை சந்திக்காததற்கு வருந்துவார். 242 00:25:40,082 --> 00:25:41,083 ஹலோ. 243 00:25:44,962 --> 00:25:47,381 சனிக்கிழமை நீங்கள் எல்லோரும் கோரா வீட்டிற்கு வர வேண்டும். 244 00:25:47,464 --> 00:25:49,675 அன்று அவரது பிறந்தநாள். அவருக்காக நான் பார்ட்டி கொடுக்கிறேன். 245 00:25:49,758 --> 00:25:50,759 கண்டிப்பாக வருகிறோம். 246 00:25:52,469 --> 00:25:53,846 எங்களுக்கு கொஞ்சம் டீ கொடுப்பாயா? 247 00:26:02,437 --> 00:26:03,522 அவள் எப்படி இருக்கிறாள்? 248 00:26:04,815 --> 00:26:05,858 அமைதியாக. 249 00:26:08,026 --> 00:26:09,069 இது கடினமாக இருக்கிறது. 250 00:26:10,112 --> 00:26:12,489 பாவம். அவள் பயந்திருக்கிறாள். 251 00:26:15,200 --> 00:26:16,827 தயவு செய்து, உட்காருங்கள். 252 00:26:24,918 --> 00:26:26,587 உங்கள் கருத்து என்ன, டாக்டர் காரெட்? 253 00:26:29,047 --> 00:26:30,632 தன்னுணர்வற்ற நிலைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 254 00:26:30,716 --> 00:26:31,758 இல்லை. 255 00:26:32,968 --> 00:26:38,640 அது தான் நம் உள்ளுணர்வுகள் மற்றும் பயங்கள். 256 00:26:38,724 --> 00:26:44,146 அவற்றை நம்மால் கட்டுப்படுத்த முடியாது, ஆனால், அவை நம்மையும் நம் நடத்தையையும் பாதிக்கும். 257 00:26:46,273 --> 00:26:49,443 இது கேட்பதற்கு பயமாக இருக்கலாம். ஆனால், நம் மூளை அப்படித்தான் வேலை செய்யும். 258 00:26:50,194 --> 00:26:54,948 நான் ஜோவை தளர்வான நிலையில் வைத்து, அவளது ஆழ்மனது எண்ணங்களை வெளிக்கொண்டு வந்து, 259 00:26:55,032 --> 00:26:59,286 அவளுக்கு என்ன பிரச்சினை என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன். 260 00:26:59,786 --> 00:27:01,538 அதற்கு மனோவசியம் என்று பெயர். 261 00:27:06,335 --> 00:27:07,336 நன்றி. 262 00:27:12,591 --> 00:27:16,845 டாக்டர் காரெட் உன் உணர்வை புரிந்துகொள்ள புது வகையான முயற்சி செய்யப் போகிறார். 263 00:27:18,222 --> 00:27:19,932 அதற்கு மனோவசியம் என்று பெயர். 264 00:27:20,599 --> 00:27:21,683 அதே தான். 265 00:27:27,147 --> 00:27:32,069 சிறப்பு. நாம் அறையை தயார் செய்து, திரைச்சீலைகள் போட்டு விடலாம். 266 00:27:35,197 --> 00:27:38,075 நாம் வில் வரும் வரை காத்திருக்க வேண்டாமா? ஜோ என் மகளாக இருந்திருந்தால்... 267 00:27:38,158 --> 00:27:39,868 ஒரு ஆணின் அனுமதிக்காக காத்திருக்க வேண்டுமா? 268 00:27:45,874 --> 00:27:48,335 ஃபிராங்கியைப் போய் பார்க்க வேண்டும். நான் கிளம்புகிறேன். 269 00:27:57,261 --> 00:27:59,513 மன்னிக்கவும். அந்த ஜுரம் இன்னும் சரியாகவில்லை. 270 00:28:19,992 --> 00:28:23,787 கடவுளே, தயவுசெய்து, எங்கள் எல்லோரையும் காப்பாற்றுங்கள். 271 00:28:25,122 --> 00:28:27,416 எல்லோரையும் காப்பாற்றி, பாதுகாப்பாக வையுங்கள். 272 00:28:28,125 --> 00:28:29,126 மாத்யூ. 273 00:28:31,879 --> 00:28:33,213 மன்னிக்கவும். 274 00:28:35,007 --> 00:28:36,341 எனக்குத் தெரியாது... 275 00:28:37,217 --> 00:28:38,218 இது உங்களுடைய தேவாலயம். 276 00:28:40,053 --> 00:28:41,054 மாத்யூ. 277 00:28:43,640 --> 00:28:45,517 -நீ வருத்தமாக இருக்கிறாய். -நான் வருத்தமாக இல்லை. 278 00:28:45,601 --> 00:28:46,810 உட்கார்ந்து என்னோடு பேசு. 279 00:29:06,955 --> 00:29:10,542 கடவுளோடு ஒருவன் பேசுவது, அவனுடைய தனிப்பட்ட விஷயம். 280 00:29:10,626 --> 00:29:13,795 ஆனால், நாம் ஒருத்தருக்கு ஒருத்தர் ரகசியம் சொல்லி உதவி செய்துகொள்ளலாம். 281 00:29:13,879 --> 00:29:15,672 -நீங்கள் இதில் மிகவும் திறமைசாலி. -எதில்? 282 00:29:15,756 --> 00:29:18,800 இதில். இப்படி சாதாரணமாக பேசி, 283 00:29:18,884 --> 00:29:21,887 தாங்கள் சொல்வது முக்கியம் என்று மக்களை உணர வைத்து, 284 00:29:22,679 --> 00:29:24,473 அவர்கள் சொல்வதை நீங்கள் நம்புவதாக நடிப்பதில். 285 00:29:25,641 --> 00:29:28,018 -நான் வந்து... -நான் பேசும் போது என்ன நினைப்பீர்கள் என தெரியும். 286 00:29:29,811 --> 00:29:32,272 இட்டுக்கட்டப்பட்ட கதைகளால் பாதிக்கப்படும், ஏமாளி போல பார்க்கிறீர்கள். 287 00:29:32,898 --> 00:29:36,693 -இல்லவே இல்லை, நான் அப்படி நினைக்கவில்லை. -உங்களுக்குப் புரியவில்லை. 288 00:29:39,071 --> 00:29:41,156 உயிரை பணயம் வைத்து கடலுக்குள் போவது நீங்கள் இல்லையே. 289 00:29:42,324 --> 00:29:44,785 ஏதோ ஒன்றை உணர்வதால், உங்கள் குழந்தைகள் ஒன்றும் 290 00:29:44,868 --> 00:29:47,621 -படுக்கையில் அழுவதில்லை. -என் குழந்தைகள்... 291 00:30:01,218 --> 00:30:03,178 கிரேஸியின் இறப்பு எதிர்பாராதது. 292 00:30:05,931 --> 00:30:08,559 எல்லோரையும் பாதித்தது, ஆனால் மறுபடியும் அதைப் பற்றி பேசி யோசிப்பது 293 00:30:08,642 --> 00:30:11,103 -உதவாது என்று நினைக்கிறேன். -சரி. அதை எனக்கு மறுபடியும் விளக்குங்கள். 294 00:30:11,186 --> 00:30:14,231 கிரேஸி பேங்க்ஸின் உடலில் இருந்த கீறல்களை விளக்குங்கள். 295 00:30:14,314 --> 00:30:17,359 படகுகளின் மீது நடந்த தாக்குதல் பற்றி சொல்லுங்கள். உங்கள் மகள் ஊமையாகிவிட்டாளே! 296 00:30:19,152 --> 00:30:21,363 நீங்களும் அதை உணர்கிறீர்கள் என்று உங்கள் முகத்தைப் பார்த்தாலே தெரிகிறது. 297 00:30:26,285 --> 00:30:30,956 கடவுளின் பாதுகாப்பில் எப்படி இருப்பது என மக்களுக்கு சொல்லித்தர வேண்டும். 298 00:30:32,833 --> 00:30:34,710 நீங்கள் மக்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும். 299 00:31:22,132 --> 00:31:28,055 “ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கினாலும் நாம் பயப்படோம்.” 300 00:32:05,801 --> 00:32:09,763 ...எப்போதும் தளர்வாக. என் குரல் கேட்ட வண்ணம். 301 00:32:10,264 --> 00:32:13,433 உன் கை கால்கள் கனமாக இருக்கின்றன. 302 00:32:16,728 --> 00:32:18,772 ஜோ, நான் சொல்வதைக் கேள். 303 00:32:20,607 --> 00:32:24,111 என் குரலில் கொஞ்சம் கவனம் செலுத்து. என் குரல் கேட்கிறது என்று தெரியப்படுத்து. 304 00:32:26,697 --> 00:32:30,492 ஜோ. எப்படி என்று நீ சொல்லு... 305 00:32:31,493 --> 00:32:32,703 அந்த பாம்பு. 306 00:32:36,415 --> 00:32:39,042 -எனக்கு பயமாக இருக்கிறது. -நீ பாதுகாப்பாக இருக்கிறாய், ஜோ. 307 00:32:40,586 --> 00:32:42,212 பயப்படத் தேவையில்லை. 308 00:32:43,630 --> 00:32:46,592 ஆனால், வகுப்பறையில் நடந்தது உன்னை பாதித்தது, இல்லையா? 309 00:32:46,675 --> 00:32:47,885 நான் அதை தடுத்திருக்க வேண்டும். 310 00:32:49,636 --> 00:32:52,222 நீ எதுவும் தவறு செய்யவில்லை என்று புரிகிறதா? 311 00:32:55,309 --> 00:32:56,518 நாங்கள் தான் அந்த மந்திரத்தைச் சொன்னோம். 312 00:32:58,228 --> 00:32:59,479 நாங்கள் தான் அதை இங்கு கொண்டு வந்தோம். 313 00:33:01,315 --> 00:33:02,649 எதை இங்கு கொண்டு வந்தீர்கள்? 314 00:33:03,275 --> 00:33:06,028 பரவாயில்லை. மெதுவாகவே சொல்லு. 315 00:33:08,739 --> 00:33:10,449 அது ரகசியமாக இருந்திருக்க வேண்டும். 316 00:33:10,532 --> 00:33:12,826 அந்த ரகசியம் என்ன, ஜோ? 317 00:33:14,536 --> 00:33:15,537 அந்த மந்திரம். 318 00:33:17,039 --> 00:33:18,081 நாங்கள் சொன்ன மந்திரம். 319 00:33:18,832 --> 00:33:20,167 லூக். 320 00:33:20,250 --> 00:33:25,756 ஜோ, நான் பேசுவதைக் கேள். பயப்படத் தேவையில்லை. 321 00:33:26,882 --> 00:33:29,510 தாமதமாகிவிட்டது. நயோமி அதை கொண்டு வந்துவிட்டாள். 322 00:33:30,344 --> 00:33:31,345 நான் கொண்டு வந்துவிட்டேன். 323 00:33:32,596 --> 00:33:33,597 அது... 324 00:33:34,097 --> 00:33:35,891 -அது எங்களுக்குள்ளே இருக்கிறது. -ஜோ. 325 00:33:36,517 --> 00:33:37,518 ஜோ. 326 00:33:40,395 --> 00:33:42,022 நிறுத்து. 327 00:33:43,148 --> 00:33:44,149 ஜோ. 328 00:33:46,944 --> 00:33:49,154 -இது என்ன? -வில். இவர் என்னுடைய நண்பர், 329 00:33:49,238 --> 00:33:51,490 -டாக்டர் லூக் காரெட். -பாதிரியார் ரான்சம்... 330 00:33:52,741 --> 00:33:54,117 என் மகளை என்ன செய்கிறாய்? 331 00:33:54,201 --> 00:33:56,286 தவறாக நினைக்காதீர்கள். நான் அவளுக்கு உதவுகிறேன். 332 00:33:56,370 --> 00:33:59,289 -உங்கள் மனைவி ஒப்புதல் கொடுத்தார்... -வில், இவர் நம் நண்பர். 333 00:33:59,373 --> 00:34:02,709 -கோராவின் நண்பர். அவரை விடுங்கள். -இது என் வீடு. உனக்கு எவ்வளவு தைரியம்! 334 00:34:02,793 --> 00:34:05,546 தவறாக புரிந்துக்கொண்டீர்கள். இப்போதே, அவர் மீதிருந்து கையை எடுங்கள். 335 00:34:10,425 --> 00:34:13,178 இது நன்கு ஆராய்ச்சி செய்யப்பட்ட மருத்துவ முறை என்று நான் உறுதியளிக்கிறேன். 336 00:34:14,429 --> 00:34:15,472 என்னால் உதவ முடியுமா என்று கேட்டீர்களே. 337 00:34:15,556 --> 00:34:16,556 அப்பா... 338 00:34:18,934 --> 00:34:20,226 நான் நலம் தான். 339 00:34:23,105 --> 00:34:24,147 நாங்கள் கிளம்புகிறோம். 340 00:34:24,231 --> 00:34:26,567 கோரா, வேண்டாம். தவறாக நினைத்துவிட்டார். 341 00:34:27,067 --> 00:34:28,110 நன்றி, ஸ்டெல்லா. 342 00:34:45,627 --> 00:34:46,628 மன்னியுங்கள். 343 00:34:49,630 --> 00:34:51,632 -நீங்கள் நலம் தானே? -நலம் தான். 344 00:34:51,717 --> 00:34:53,217 என்னை மன்னித்துவிடுங்கள். 345 00:34:53,302 --> 00:34:55,512 அவர் அப்படி செய்ததை என்னால் நம்பவே முடியவில்லை. 346 00:34:56,179 --> 00:34:58,307 அது பயனளித்தது. அவள் மறுபடியும் பேசுகிறாள். 347 00:35:13,030 --> 00:35:15,365 நெருப்பு இருளை போக்கட்டும். 348 00:35:16,283 --> 00:35:17,951 பாவத்தில் இருந்து எங்களைக் காப்பாற்றுங்கள். 349 00:35:18,493 --> 00:35:19,828 ஆமாம். நெருப்பைப் பற்றவை. 350 00:35:27,544 --> 00:35:28,962 எனக்கு ஒயின் வேண்டும். 351 00:35:29,630 --> 00:35:30,756 என்ன நடந்தது? 352 00:35:31,507 --> 00:35:35,677 வில் வீட்டிற்கு வந்து இதைப் பார்த்து சந்தோஷப்படவில்லை. இப்படி சொல்லலாம். 353 00:35:37,221 --> 00:35:38,722 -அவர் என்னைத் தாக்கினார். -என்ன? 354 00:35:38,805 --> 00:35:40,849 யாரும் யாரையும் தாக்கவில்லை. அவர் வந்தார், 355 00:35:40,933 --> 00:35:43,936 ஜோ மீது லூக் சாய்ந்திருப்பதைப் பார்த்து கோபப்பட்டார். 356 00:35:44,436 --> 00:35:48,815 அவளுக்காக பயந்திருப்பார் போல. அவரிடம் நீ விளக்கிச் சொன்னாயா? 357 00:35:48,899 --> 00:35:51,443 -மன்னிப்பு கேட்டாயா? -நானும் ஸ்டெல்லாவும் அங்கே தான் இருந்தோம். 358 00:35:51,527 --> 00:35:55,280 மக்கள் வசியப்படுவதை நான் பார்த்திருக்கிறேன். அது ரொம்ப விசித்திரமாக இருக்கும். 359 00:35:55,364 --> 00:35:57,699 அது மனோவசியம். அது பயனும் அளித்தது. 360 00:35:59,493 --> 00:36:02,162 -போகாதே. எங்களோடு இரு. -நான் இதை முடிக்க வேண்டும். 361 00:36:02,246 --> 00:36:04,122 -யாருக்கு எழுதுகிறாய்? -ஸ்பென்சருக்கு. 362 00:36:06,124 --> 00:36:09,169 உங்களுடைய நோயாளி நெவ், மற்றும் அவனது அக்கம்பக்கத்தினருக்கு உதவ முயற்சிக்கிறோம். 363 00:36:09,253 --> 00:36:11,380 ஃபிராங்கி, எப்படி இருக்கிறாய்? நாள் எப்படி இருந்தது? 364 00:36:11,463 --> 00:36:14,007 லண்டனை காட்டிலும் இந்த இடம் எனக்குப் பிடித்திருக்கிறது. 365 00:36:14,550 --> 00:36:16,176 எப்போதும் இங்கேயே இருக்க விரும்புகிறேன். 366 00:36:16,760 --> 00:36:19,972 அப்படி என்றால், இன்னும் கொஞ்ச நாள் இங்கே இருப்போம் போலிருக்கிறது, மார்த்தா. 367 00:36:21,849 --> 00:36:24,059 இங்கே வா. பயங்கரமாக நாறுகிறாய். 368 00:36:24,142 --> 00:36:26,186 -இல்லை. -ஆமாம். 369 00:36:26,270 --> 00:36:29,439 கோரா, லண்டனை விட்டு போனதால் எந்த நன்மையும் ஏற்படவில்லை. 370 00:37:37,090 --> 00:37:38,634 என் மீது கோபமா? 371 00:37:40,010 --> 00:37:41,512 அப்படி இருந்தாலும், உனக்கு என்ன அக்கறை? 372 00:37:42,429 --> 00:37:43,680 எனக்கு அக்கறை இருக்கிறது. 373 00:37:48,352 --> 00:37:52,314 ரொம்பவும் வெறுப்பாக இருக்கிறது. நான் மக்களை வருந்த வைக்க முயற்சிக்கவில்லை. 374 00:37:54,149 --> 00:37:55,609 நீ வில்லிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். 375 00:37:56,652 --> 00:37:59,154 ஒரு ஆணின் அனுமதி இல்லாமல் நான் செய்யும் ஒவ்வொரு விஷயத்திற்கும் 376 00:37:59,238 --> 00:38:01,365 என்னால் மன்னிப்பு கேட்க முடியாது. 377 00:38:01,448 --> 00:38:03,742 தவறு செய்தால் மட்டும், மன்னிப்பு கேட்டால் போதும். 378 00:38:05,577 --> 00:38:07,454 உண்மையாக இருந்தால் மட்டும். 379 00:38:12,042 --> 00:38:15,045 நீ எந்த தவறும் செய்யவில்லை என்றால், எதற்கு கவலைப்படுகிறாய்? 380 00:38:24,847 --> 00:38:26,306 பேசாமல் தூங்கு. 381 00:39:53,769 --> 00:39:55,270 வீட்டில் இருப்பவர்களை எழுப்ப நான் விரும்பவில்லை. 382 00:39:55,354 --> 00:39:56,730 ஒரு தபால் இருக்கிறது. 383 00:39:56,813 --> 00:39:58,607 உங்களுக்கு தனிப்பட்ட முறையில் கொடுக்க விரும்பினேன். 384 00:40:01,693 --> 00:40:03,946 நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மார்த்தா சொன்னாள். 385 00:40:04,613 --> 00:40:05,656 நீங்கள் மன்னிப்பு கேட்டீர்களா? 386 00:40:06,406 --> 00:40:07,824 இல்லை. 387 00:40:08,367 --> 00:40:10,619 தவறு செய்யாத போது நான் மன்னிப்பு கேட்கத் தேவையில்லை. 388 00:40:12,120 --> 00:40:13,830 சரி, இதை படிக்க ஆவலாக இருக்கிறேன். 389 00:40:13,914 --> 00:40:14,915 என்னை கேலி செய்கிறீர்களா? 390 00:40:14,998 --> 00:40:18,043 இல்லை, உன்னிடம் நான் எதிர்பார்ப்பது அது தான். 391 00:40:21,755 --> 00:40:22,756 கோரா, எ... 392 00:40:28,846 --> 00:40:30,138 கோரா! 393 00:40:30,222 --> 00:40:31,473 என்னிடம் நீங்கள் தானே உதவி கேட்டீர்கள். 394 00:40:31,557 --> 00:40:34,101 -அவள் மீது பரிசோதனை செய்ய சொல்லவில்லையே. -ஸ்டெல்லா அனுமதி கொடுத்தாள். 395 00:40:34,184 --> 00:40:36,228 என்ன? அதையெல்லாம் நினைவுபடுத்தி அவளை பயமுறுத்தவா? 396 00:40:36,311 --> 00:40:37,813 உங்களுக்கு அதைப் பற்றி ஒன்றும் தெரியாது. 397 00:40:37,896 --> 00:40:38,939 எனக்கு எல்லாம் தெரியும். 398 00:40:39,773 --> 00:40:43,277 உங்களிடம் அனுமதி கேட்கவில்லை, உங்கள் முடிவைக் கேட்கவில்லை என்று உங்களுக்குக் கோபம். 399 00:40:43,360 --> 00:40:44,736 டாக்டர் காரெட் உடன் இருக்கும் போது எப்படி கேட்பீர்கள்? 400 00:40:44,820 --> 00:40:46,822 அவன் சொல்வதை நீங்கள் மறுக்கமாட்டீர்களே. 401 00:40:51,743 --> 00:40:54,288 என் மீது கோபம் கொள்ள உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. 402 00:40:57,708 --> 00:40:58,876 அது உண்மை தான். 403 00:41:01,253 --> 00:41:02,629 பிறகு ஏன் கோபப்படுகிறீர்கள்? 404 00:42:19,748 --> 00:42:21,750 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்