1 00:00:06,006 --> 00:00:08,383 நயோமி! நயோமி! 2 00:00:09,468 --> 00:00:11,720 நயோமி! நயோமி! 3 00:00:15,349 --> 00:00:17,142 நயோமி! 4 00:00:17,226 --> 00:00:19,603 நயோமி! நயோமி! 5 00:00:19,686 --> 00:00:22,439 அவள் சகோதரி போலவே அவளும் கரையில் ஒதுங்குவாள். 6 00:00:23,315 --> 00:00:24,942 அவள் செய்த பாவங்களுக்காக. 7 00:00:26,151 --> 00:00:27,694 நயோமி! 8 00:00:42,459 --> 00:00:45,087 ஒன்றுமில்லை. இன்னும் தேடுகிறோம். 9 00:00:47,506 --> 00:00:48,507 வருந்துகிறேன். 10 00:00:51,885 --> 00:00:55,806 அவள் வீடு திரும்புவாள், ஹென்றி. எனக்கு... நம்பிக்கை இருக்கிறது. 11 00:00:55,889 --> 00:00:58,058 கிரேஸி விஷயத்திலும் நீங்கள் இப்படித்தான் சொன்னீர்கள். 12 00:00:58,141 --> 00:00:59,142 ஹென்றி... 13 00:03:15,529 --> 00:03:16,613 அவளைப் பற்றி ஏதாவது தெரிந்ததா? 14 00:03:21,743 --> 00:03:22,828 ஜோ. 15 00:03:43,515 --> 00:03:44,516 என்ன நடக்கிறது? 16 00:03:49,479 --> 00:03:50,981 நாம் லண்டனுக்குப் போக வேண்டும். 17 00:03:53,734 --> 00:03:55,611 -எதற்காக? -டாக்டர் காரெட். 18 00:03:56,195 --> 00:03:58,739 முன்பதிவு இல்லாமல் என்னை பரிசோதனை செய்வதாகச் சொன்னார். 19 00:03:58,822 --> 00:04:00,699 முன்பதிவா? எதற்காக? 20 00:04:01,366 --> 00:04:03,243 எனக்கு உடம்பு சரியில்லை, வில். 21 00:04:07,789 --> 00:04:09,082 அந்த ஜுரமா? 22 00:04:09,625 --> 00:04:10,918 அதை விட பெரிய நோய். 23 00:04:17,548 --> 00:04:18,884 சரி, நான்... 24 00:04:18,966 --> 00:04:21,845 இந்த வானிலை மிக... மிக... 25 00:04:23,305 --> 00:04:24,348 குளிராகவும் மழையாகவும் இருக்கிறது. 26 00:04:24,431 --> 00:04:25,933 -உனக்கு நோய் வர... -நான் பலவீனமாக இருக்கிறேன். 27 00:04:29,144 --> 00:04:30,395 இன்னும் பலவீனமாகிறேன். 28 00:04:34,942 --> 00:04:36,485 அதை மறைக்கப் பார்க்கிறேன். 29 00:04:38,487 --> 00:04:39,530 ஸ்டெல்லா, ஏன்? 30 00:04:42,199 --> 00:04:44,576 ஏன்? நான் வந்து... 31 00:04:44,660 --> 00:04:46,286 -பரவாயில்லை. -இல்லை, ஸ்டெல்லா. 32 00:04:46,828 --> 00:04:48,163 நான் டாக்டர் காரெட்டை நம்புகிறேன். 33 00:04:55,879 --> 00:04:56,880 சரி. 34 00:04:59,716 --> 00:05:00,801 நீ... 35 00:05:01,635 --> 00:05:03,428 நீ டாக்டர் காரெட்டை பார்க்க விரும்புகிறாயா? 36 00:05:05,222 --> 00:05:06,223 லண்டனில்? 37 00:05:13,021 --> 00:05:14,815 குழந்தைகளை அழைத்துப் போகலாம். 38 00:05:15,566 --> 00:05:16,942 ஒரு சாகச பயணம் போகலாம். 39 00:05:20,237 --> 00:05:21,655 சாகச பயணமா? 40 00:05:21,738 --> 00:05:22,739 ஏன் போகக் கூடாது? 41 00:05:29,705 --> 00:05:30,873 நாம் கோராவையும் சந்திக்கலாம். 42 00:05:39,673 --> 00:05:41,216 இல்லை. நான்... 43 00:05:42,342 --> 00:05:45,095 -என்னால் முடியாது... -நாம் வேறு எங்காவது தங்குவோம். 44 00:05:49,474 --> 00:05:51,059 நாம் சார்லஸோடு தங்கலாம். 45 00:05:54,146 --> 00:05:55,772 காலையில் கிளம்பலாம். 46 00:06:29,264 --> 00:06:32,267 சாரா பெர்ரியின் நாவலைத் தழுவியது 47 00:06:59,461 --> 00:07:00,587 எனக்கு அது வேண்டாம். 48 00:07:14,685 --> 00:07:16,979 அவர் எப்போது அறையிலிருந்து வெளியே வருவார்? 49 00:07:17,062 --> 00:07:18,355 விரைவில். 50 00:07:18,438 --> 00:07:20,607 திருமதி. சீபோர்ன், 2 ஃபௌலிஸ் ஸ்ட்ரீட், வெஸ்ட்மினிஸ்டர் லண்டன் 51 00:07:26,738 --> 00:07:27,990 வெகு விரைவில் என்று நம்புகிறேன். 52 00:07:46,383 --> 00:07:47,551 இன்று எப்படி இருக்கிறாய்? 53 00:07:49,178 --> 00:07:50,179 நன்றாக இருக்கிறேன். 54 00:08:20,584 --> 00:08:25,172 அவர்கள் என்னை சந்திக்க விரும்புகிறார்கள்... என் கண்டுபிடிப்பு, ப்ளேசியோசாரைப் பார்க்க வேண்டுமாம். 55 00:08:26,632 --> 00:08:27,883 அப்படி என்றால் எழுந்திரு. 56 00:08:29,801 --> 00:08:30,844 ஆனால், அவர்கள் எப்படி... 57 00:08:31,887 --> 00:08:35,097 மூட நம்பிக்கை மிகுந்த ஒரு கிராமத்தால் நீ துன்பப்படுவதை நான் அனுமதிக்க மாட்டேன். 58 00:08:38,268 --> 00:08:40,229 என் பெயரில் சொசைட்டிக்கு நீ எழுதினாயா? 59 00:08:43,440 --> 00:08:45,359 ஃபிராங்கி உனக்காக ஏங்குகிறான். 60 00:08:45,859 --> 00:08:47,486 ஒவ்வொரு முறை சாப்பிடும்போதும். 61 00:08:53,450 --> 00:08:56,286 அவன் என்னோடு வரட்டும். சுரங்க ரயிலில் போகலாம். 62 00:09:12,094 --> 00:09:13,929 எனக்கு வேறு ஏதாவது கடிதம் வந்ததா? 63 00:09:14,429 --> 00:09:15,430 இல்லை. 64 00:09:16,014 --> 00:09:17,307 ஆல்ட்வின்டரிலிருந்து எதுவும் வரவில்லையா? 65 00:09:18,267 --> 00:09:19,268 இன்னும் வரவில்லை. 66 00:09:47,004 --> 00:09:48,046 பாருங்கள். 67 00:09:48,630 --> 00:09:51,592 எலும்புக்கூடு காட்சி - ப்ளூ வேல் பிரிட்டிஷ் அருங்காட்சியகம் இயற்கை வரலாறு 68 00:09:51,675 --> 00:09:53,218 நாம் போய் பார்க்கலாமா? 69 00:09:55,053 --> 00:09:56,054 இன்று முடியாது. 70 00:09:56,138 --> 00:09:57,806 எனக்கு ஒரு முன்பதிவு இருக்கிறது. 71 00:10:14,072 --> 00:10:15,866 ராயல் புவியியல் சங்கம் 72 00:10:23,540 --> 00:10:25,250 இங்கே ஏதாவது பாம்புகள் இருக்கிறதா? 73 00:10:25,334 --> 00:10:29,087 இன்னும் இல்லை. என்றாவது ஒருநாள், ஏதாவது எலும்புக் கூட்டை நான் கண்டுபிடிக்கலாம். 74 00:10:30,714 --> 00:10:31,840 பேராசிரியர் மார்ச்சான்ட். 75 00:10:33,050 --> 00:10:34,259 கோரா சீபோர்ன். 76 00:10:36,428 --> 00:10:37,429 ஹலோ. 77 00:10:37,513 --> 00:10:38,514 வாருங்கள். 78 00:10:46,104 --> 00:10:47,105 உட்காருங்கள். 79 00:10:58,825 --> 00:11:01,328 நானே அதை வகைப்படுத்த விரும்ப மாட்டேன், 80 00:11:01,912 --> 00:11:04,915 ஆனாலும், அது ஒரு வகை ப்ளேசியோசாராக இருக்கலாம். 81 00:11:04,998 --> 00:11:08,126 எல்லாப் புத்தகங்களிலும் பார்த்து விட்டேன், இது போல் இதுவரை பார்த்ததில்லை. 82 00:11:12,381 --> 00:11:15,634 அது உனக்கு திடீரென்று கிடைத்ததா? 83 00:11:16,718 --> 00:11:20,138 இல்லை, நான் சில காலம் எஸ்ஸெக்ஸ் கடற்கரையில் தோண்டித் தேடினேன். 84 00:11:28,188 --> 00:11:29,231 எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. 85 00:11:32,067 --> 00:11:33,068 இன்னும் இருக்கிறதா? 86 00:11:35,487 --> 00:11:37,364 இல்லை, இப்போதைக்கு இது தான். 87 00:11:38,156 --> 00:11:39,241 இது வருத்தம் தான். 88 00:11:45,581 --> 00:11:48,250 இந்த துண்டை வைத்து கொண்டு நான் எதுவும் செய்ய முடியாது. 89 00:11:51,587 --> 00:11:52,796 என்ன செய்ய வேண்டும் என உனக்கே தெரியும். 90 00:11:53,589 --> 00:11:55,382 நீ திரும்பிப் போய், இன்னும் தேட வேண்டும். 91 00:12:01,805 --> 00:12:03,098 எனக்காக நேரம் ஒதுக்கியதற்கு நன்றி. 92 00:12:03,599 --> 00:12:05,434 எஸ்ஸெக்ஸிற்கு திரும்புங்கள், திருமதி. சீபோர்ன். 93 00:12:07,019 --> 00:12:08,770 நாம் அந்தப் பாம்பை கண்டுபிடிக்க வேண்டும். 94 00:12:09,271 --> 00:12:10,439 யாரோ ஆர்வமாக இருக்கிறார் போல. 95 00:12:15,986 --> 00:12:18,488 நாம் ஏன் ஆல்ட்வின்டருக்கு திரும்பக் கூடாது? 96 00:12:18,572 --> 00:12:19,823 நாம் போக முடியாது, ஃபிராங்கி. 97 00:12:22,534 --> 00:12:23,535 நான் எடுத்து வரவா? 98 00:12:23,619 --> 00:12:25,662 வேண்டாம், நான் எடுத்து வருகிறேன். 99 00:12:47,643 --> 00:12:49,686 -ஃபிராங்கி, நீ நலமா? -மிகவும் குளிராக இருக்கிறது. 100 00:12:49,770 --> 00:12:51,355 மாடிக்குப் போய் உடை மாற்றிக்கொள். 101 00:12:53,941 --> 00:12:55,692 கோரா, இவள் என் தோழி, சாலி. 102 00:12:56,276 --> 00:12:57,986 திருமதி. கோரா சீபோர்ன். 103 00:12:58,070 --> 00:12:59,112 ஹலோ. 104 00:12:59,196 --> 00:13:00,364 உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. 105 00:13:01,657 --> 00:13:03,617 நீங்கள் அடுத்த வாரம் வருகிறீர்களா? 106 00:13:04,910 --> 00:13:07,162 ஆம்ப்ரோஸுடன்? என் வீட்டிற்கு? 107 00:13:08,413 --> 00:13:10,749 அவர் உங்கள் பேச்சைக் கேட்பார் என்று மார்த்தா சொன்னாள். 108 00:13:10,832 --> 00:13:12,000 ஆமாம். 109 00:13:14,378 --> 00:13:16,296 மன்னிக்கவும், மிக சோர்வாக இருக்கிறது. 110 00:13:23,554 --> 00:13:25,264 கிளம்பும் போது, குடை வாங்கிக் கொள்ளுங்கள். 111 00:13:45,367 --> 00:13:46,785 அந்த கண்டுபிடிப்பிற்கு எந்த மதிப்பும் இல்லை. 112 00:13:46,869 --> 00:13:47,995 என்ன? 113 00:13:49,371 --> 00:13:51,498 நான் திரும்பி போய் நிறைய கண்டுபிடித்தால் ஒழிய. 114 00:13:52,082 --> 00:13:53,041 நீ போக முடியாது. 115 00:13:54,209 --> 00:13:56,170 இல்லை, கண்டிப்பாக போகக் கூடாது. 116 00:13:57,588 --> 00:13:59,423 நீ எஸ்ஸெக்ஸ் பற்றி மறக்க வேண்டும். 117 00:14:00,257 --> 00:14:02,551 அப்படியென்றால், பேராசிரியரைச் சந்திக்க நீ என்னை அனுப்பி இருக்கக் கூடாது. 118 00:14:02,634 --> 00:14:03,886 நான் உதவ முயன்றேன். 119 00:14:04,595 --> 00:14:05,596 ஏன்? 120 00:14:06,513 --> 00:14:08,056 நீ பழைய படி மாற வேண்டும் என விரும்பினேன். 121 00:14:09,057 --> 00:14:10,559 நான் முயற்சிக்கிறேன். 122 00:14:10,642 --> 00:14:11,643 அப்படியா? 123 00:14:13,437 --> 00:14:15,772 நாள் முழுவதும் படுக்கையில் படுத்து, சாப்பிடாமல் இருந்தா? 124 00:14:15,856 --> 00:14:18,025 திருமணமான ஒருவர் மீதான காதல் தோல்வியோடா? 125 00:14:20,277 --> 00:14:21,695 நாம் இயல்பாக வாழ வேண்டும். 126 00:14:21,778 --> 00:14:23,947 ஃபிராங்கிக்கு ஒரு நல்ல குடும்பத்தை உருவாக்க வேண்டும். 127 00:14:24,031 --> 00:14:25,449 -அப்படியா? -ஆமாம். 128 00:14:25,532 --> 00:14:26,867 நாம் வீட்டை திறந்து விட்டு, 129 00:14:26,950 --> 00:14:29,661 அவள் படிப்பு பற்றி நாம் யோசிக்கத் தொடங்க வேண்டும். 130 00:14:29,745 --> 00:14:31,330 -நாம் முயற்சி செய்து... -“நாம், நாம்.” 131 00:14:31,413 --> 00:14:33,957 நாம் ஒரு தம்பதி போல நீ பேசுகிறாய். 132 00:14:38,921 --> 00:14:41,089 -என்ன சொல்கிறேன் என்றால்... -நான் உன் வேலைக்காரி தான். 133 00:14:41,673 --> 00:14:43,425 இல்லை. என் தோழி. 134 00:14:43,509 --> 00:14:45,385 நட்புக்கு பணம் கொடுக்க முடியாது. 135 00:14:45,469 --> 00:14:46,470 என்ன? 136 00:14:46,553 --> 00:14:48,430 -எங்கு செல்கிறாய்? -ஓ, மன்னிக்கவும். 137 00:14:48,514 --> 00:14:50,724 நான் அரை நாள் விடுமுறை எடுக்கலாமா, மேடம்? 138 00:14:50,807 --> 00:14:52,226 என்ன? 139 00:14:52,726 --> 00:14:53,894 மார்த்தா? 140 00:14:56,772 --> 00:14:58,899 -மார்த்தா எங்கே போகிறார்? -தெரியாது. 141 00:14:58,982 --> 00:15:00,859 -எப்போது திரும்பி வருவார்? -தெரியாது. 142 00:15:00,943 --> 00:15:02,611 -அவர் எஸ்ஸெக்ஸிற்கு போய் விட்டாரா? -இல்லை! 143 00:15:06,365 --> 00:15:07,491 என்னை மன்னித்துவிடு. 144 00:15:09,243 --> 00:15:11,703 நாம் சென்று அந்த திமிங்கிலத்தைப் பார்க்கலாமா? 145 00:15:13,163 --> 00:15:14,289 எப்போது? 146 00:15:15,791 --> 00:15:16,792 நாளை. 147 00:15:22,172 --> 00:15:24,424 நான் அதை மனதார சொல்லவில்லை என்று நடிக்க வேண்டும். 148 00:15:24,508 --> 00:15:26,426 -அவளோடு நட்பாக வேண்டும். -ஏன்? 149 00:15:26,510 --> 00:15:29,054 -எனக்கு வேறு வழியில்லை. -எப்போதுமே மாற்று வழி உண்டு. 150 00:15:30,806 --> 00:15:31,807 -மார்த்தா. -இல்லை. 151 00:15:31,890 --> 00:15:35,644 எந்த அதிகாரமும் இல்லாமல் இருப்பது எப்படி இருக்கும் என்று உனக்குத் தெரியாது. 152 00:15:37,020 --> 00:15:38,897 நீ மிகுந்த சக்தி வாய்ந்தவள். 153 00:15:40,566 --> 00:15:43,569 அவள் நம்மோடு வர ஒப்புக் கொண்டாள். அவள் உன்னை மதிக்கத்தான் வேண்டும். 154 00:15:43,652 --> 00:15:46,738 ஆனால் நாங்கள் ஒவ்வொரு நாளும் ஒன்றாக இருப்போம். பேசி, பகிர்ந்து கொள்வோம். 155 00:15:46,822 --> 00:15:48,448 அவளும் அப்படி நினைத்தாள் என்று எண்ணினேன். 156 00:15:48,532 --> 00:15:50,450 நீ அவளை காதலிக்கிறாய் போலிருக்கிறதே. 157 00:15:55,622 --> 00:15:56,874 எல்லோருமே தான். 158 00:16:07,301 --> 00:16:08,635 ஜான், நாங்கள் கிளம்புகிறோம். 159 00:16:10,846 --> 00:16:12,764 படகுகளில் இரத்தம் இருக்கிறது! 160 00:16:21,106 --> 00:16:22,107 யார் இப்படி செய்தார்கள்? 161 00:16:23,525 --> 00:16:24,651 எவன்ஸ்ஃபோர்ட். 162 00:16:26,445 --> 00:16:27,446 ஏன்? 163 00:16:28,655 --> 00:16:30,115 இது நம்மை பாதுகாக்கும் என்று நினைக்கிறார். 164 00:16:30,199 --> 00:16:31,325 ஆக நமக்கு ஆபத்து இருக்கிறதா என்ன? 165 00:16:31,825 --> 00:16:33,035 இல்லை. 166 00:16:33,535 --> 00:16:36,205 -இதற்காக தான் நாம் லண்டனுக்கு போகிறோமா? -இல்லை. 167 00:17:07,986 --> 00:17:09,404 நயோமி வீடு திரும்புவாள். 168 00:17:11,531 --> 00:17:12,866 நாம் நம்பிக்கையோடு இருப்போம். 169 00:17:48,443 --> 00:17:49,862 என்ன வரைகிறாய், ஜான்? 170 00:17:51,572 --> 00:17:52,614 இது திமிங்கிலம். 171 00:17:55,158 --> 00:17:56,910 அங்கே போனவுடன் சார்லஸிடம் நீ காண்பிக்கலாம். 172 00:17:56,994 --> 00:17:59,037 நாம் ஏன் நேராக மியூசியத்திற்குப் போகக்கூடாது? 173 00:18:00,706 --> 00:18:02,916 இன்று காலை நகரத்தில், எனக்கும், உன் அப்பாவிற்கும் வேலை இருக்கிறது. 174 00:18:03,000 --> 00:18:05,919 -நாம் போய் கோராவைப் பார்க்கலாமா? -முடியாது. 175 00:18:07,337 --> 00:18:08,881 சீக்கிரமே அவளைப் பார்ப்போம். நிச்சயமாக. 176 00:18:42,706 --> 00:18:44,041 இன்னும் சற்று ஆழமாக. 177 00:19:00,599 --> 00:19:02,059 ரொம்பவும் பயப்படாதீர்கள். 178 00:19:02,935 --> 00:19:04,061 நான் நலம் தான். 179 00:19:04,978 --> 00:19:08,273 இன்னும் ஒரு முறை இருமி, இந்த பாத்திரத்தில் துப்புகிறீர்களா? 180 00:19:24,331 --> 00:19:25,666 இப்போது என்ன நடக்கும்? 181 00:19:26,750 --> 00:19:30,045 இந்த நுண்ணுயிரை வண்ணம் சேர்த்து, மைக்ரோஸ்கோப் மூலம் பார்ப்பேன். 182 00:20:09,835 --> 00:20:11,044 நான் பார்க்கலாமா? 183 00:20:12,129 --> 00:20:13,130 கண்டிப்பாக. 184 00:20:24,391 --> 00:20:25,893 அரிசி போல இருக்கிறது. 185 00:20:28,103 --> 00:20:29,354 மிகவும் நீலமாக. 186 00:20:31,607 --> 00:20:33,150 மிக அழகாக. 187 00:20:33,233 --> 00:20:35,652 துரதிர்ஷ்டவசமாக, இது காசநோய். 188 00:20:36,320 --> 00:20:38,071 -இல்லை. -மன்னிக்கவும். 189 00:20:41,366 --> 00:20:45,329 -அந்த... ஆல்ட்வின்டர் டாக்டர் சொன்னார்... -அந்த ஆல்ட்வின்டர் டாக்டர் ஒரு முட்டாள். 190 00:20:45,412 --> 00:20:46,413 லூக். 191 00:20:47,497 --> 00:20:49,833 -நாங்கள் கிளம்புகிறோம். வா. -தயவு செய்து, பொறுங்கள். 192 00:20:51,543 --> 00:20:52,669 இதற்கு ஒரு சிகிச்சை இருக்கிறது. 193 00:20:56,131 --> 00:20:58,383 நியூமோதோராக்ஸ் சிகிச்சை. 194 00:20:59,468 --> 00:21:04,014 அது நல்லது, ஆனால் என்னைக் கேட்டால், அவளுக்கு இருக்கும் ஒரே தீர்வு அதுதான். 195 00:21:08,185 --> 00:21:09,478 அது என்ன? 196 00:21:11,313 --> 00:21:14,691 நோயுற்ற நுரையீரலை நான் அறுவை சிகிச்சை செய்து, 197 00:21:14,775 --> 00:21:16,777 அது ஆறுவதற்கான நல்லதொரு வாய்ப்பை உண்டாக்கலாம். 198 00:21:16,860 --> 00:21:19,905 இதுவரை அது வெற்றிகரமாக செய்யப்படவில்லை. 199 00:21:19,988 --> 00:21:21,698 அப்படியென்றால், வேண்டாம். கண்டிப்பாக, வேண்டாம். 200 00:21:21,782 --> 00:21:25,786 -உங்கள் பயத்தினால் இவளை இழந்து விடாதீர்கள். -கசாப்பு கடையில் இருக்கும் மாமிசத்தைப் போல 201 00:21:25,869 --> 00:21:28,330 அவளைத் துண்டாக்க நான் அனுமதிப்பேனா? 202 00:21:28,413 --> 00:21:29,706 வேறு வழிகள் இருக்கின்றன. 203 00:21:29,790 --> 00:21:31,834 டியூபர்குலின் ஊசிகள் போடலாம்... 204 00:21:31,917 --> 00:21:34,127 -குறைந்த அளவு வெற்றி கிடைக்கும். -ஜெர்மனியில் அவை வேலை செய்திருக்கின்றன. 205 00:21:34,211 --> 00:21:35,712 அறுவை சிகிச்சை, உண்மையில்... 206 00:21:35,796 --> 00:21:37,297 அவள் உங்கள் பரிசோதனை சடலம் இல்லை, டாக்டர் காரெட். 207 00:21:37,381 --> 00:21:38,799 -அவள் என் மனைவி. -நிறுத்துங்கள். 208 00:21:42,553 --> 00:21:43,720 இது என்னுடைய நோய். 209 00:21:50,894 --> 00:21:52,688 எனக்கு சிகிச்சை பெற விருப்பமில்லை. 210 00:21:57,609 --> 00:21:59,945 எதிர்காலத்தில் நடக்க போவதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும், திருமதி. ரான்சம். 211 00:22:01,196 --> 00:22:03,866 சில நாட்கள் நல்லபடியாக இருக்கும், சில நாட்கள் மோசமாக இருக்கும். 212 00:22:11,623 --> 00:22:12,749 பலவீனம் இருக்கும். 213 00:22:13,375 --> 00:22:14,376 மனப்பிராந்தி இருக்கும். 214 00:22:16,587 --> 00:22:17,588 நன்றி. 215 00:22:19,464 --> 00:22:21,884 நான் என் கணவரோடு பேச வேண்டும். 216 00:22:38,442 --> 00:22:39,526 ஸ்டெல்லா. 217 00:22:42,029 --> 00:22:43,780 நான் முடிவு செய்துவிட்டேன் 218 00:22:46,700 --> 00:22:49,578 என் பொன்னான நேரத்தை மருத்துவமனையில் செலவழிக்க நான் விரும்பவில்லை. 219 00:22:51,413 --> 00:22:52,539 எல்லாவற்றையும் விட்டு... 220 00:22:53,123 --> 00:22:54,291 நான் என்ன செய்ய வேண்டும்? 221 00:23:00,839 --> 00:23:02,591 குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்லுங்கள். 222 00:23:05,719 --> 00:23:07,679 அவர்கள் ஆவலாக இருக்கிறார்கள். 223 00:23:11,266 --> 00:23:12,726 பிறகு வீட்டிற்குப் போவோம். 224 00:23:17,940 --> 00:23:19,608 சார்லஸ் நம்மை எதிர்பார்த்து... 225 00:23:19,691 --> 00:23:22,861 இப்போது, நான் போய் அவரைப் பார்த்து விட்டு, அங்கே ஓய்வு எடுக்கிறேன். 226 00:23:42,381 --> 00:23:43,382 அப்பா? 227 00:23:46,426 --> 00:23:47,719 நீங்கள் நலமா? 228 00:23:48,637 --> 00:23:49,763 ஆமாம். 229 00:23:53,100 --> 00:23:54,434 போய் உன் தம்பியைத் தேடு. 230 00:24:50,866 --> 00:24:51,909 இங்கேயே இரு, சரியா? 231 00:24:53,827 --> 00:24:54,912 வில். 232 00:24:55,746 --> 00:24:56,788 நீங்கள் லண்டனுக்கு வந்திருக்கிறீர்களே. 233 00:24:57,956 --> 00:25:00,042 குழந்தைகள் திமிங்கிலம் பார்க்க விரும்பினார்கள். 234 00:25:01,251 --> 00:25:04,463 கண்டிப்பாக. ஆமாம். ஃபிராங்கி மிக ஆர்வமாக இருக்கிறான். 235 00:25:06,465 --> 00:25:07,758 தாயைப் போல பிள்ளை. 236 00:25:10,928 --> 00:25:11,970 நான் என்ன நினைக்கிறேன்... 237 00:25:12,054 --> 00:25:13,305 கோரா. 238 00:25:17,976 --> 00:25:19,186 நீங்கள் ஏன் கிளம்பினீர்கள்? 239 00:25:23,524 --> 00:25:25,692 ஃபிராங்கிக்கு வீட்டு ஞாபகம் வந்தது. அவ்வளவுதான். 240 00:25:26,276 --> 00:25:27,778 நீங்கள் வித்தியாசமாக நடந்துகொள்கிறீர்கள், கோரா. 241 00:25:27,861 --> 00:25:29,071 மன்னிக்கவும். 242 00:25:31,114 --> 00:25:33,200 எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள்? அம்மா நலம் தானே? 243 00:25:33,867 --> 00:25:35,202 -அவள்... -ஜான் எங்கே? 244 00:25:36,370 --> 00:25:37,454 நாங்கள்... 245 00:25:37,538 --> 00:25:38,956 நாங்கள் வீட்டிற்குப் போக வேண்டும். 246 00:25:42,751 --> 00:25:45,003 குட் பை, திருமதி. சீபோர்ன். 247 00:26:03,856 --> 00:26:05,274 அம்மா, நீங்கள் நடுங்குகிறீர்கள். 248 00:26:17,411 --> 00:26:20,664 -கோரா, என்ன நடந்தது? -என்னை விட்டுவிடு. 249 00:26:36,638 --> 00:26:38,599 நயோமி திரும்பி விட்டாளா என்று பார்க்கிறேன். 250 00:26:38,682 --> 00:26:39,683 ஜோ? 251 00:26:43,770 --> 00:26:45,147 அவளைப் போக விடு. 252 00:27:32,444 --> 00:27:34,071 திரும்பி வா, நயோமி. 253 00:27:35,155 --> 00:27:36,156 திரும்பி வா. 254 00:28:16,488 --> 00:28:17,906 இது தான் எனக்கான நீதியா? 255 00:28:20,576 --> 00:28:22,202 அப்படித்தான் என்று நினைக்கிறேன். 256 00:28:26,164 --> 00:28:27,291 எதற்காக? 257 00:28:28,166 --> 00:28:30,669 நமக்குள் எந்த ரகசியமும் கிடையாது, இல்லையா? 258 00:28:35,007 --> 00:28:36,008 இல்லைவே இல்லை. 259 00:28:43,473 --> 00:28:45,225 உன்னிடம் நான் ஒன்றை மறைத்திருக்கிறேன். 260 00:28:54,109 --> 00:28:55,110 நான் ஒருவரை... 261 00:28:55,194 --> 00:28:56,195 பேசாமல் இருங்கள். 262 00:29:07,456 --> 00:29:10,083 நீங்கள் நல்லவர், வில் ரான்சம். 263 00:29:30,521 --> 00:29:32,814 நம் சண்டையை மறந்துவிடலாமா? 264 00:29:34,691 --> 00:29:36,026 நான் முயற்சிக்கிறேன். 265 00:29:41,073 --> 00:29:42,824 உனக்கு எது வேண்டும் என்று முடிவு செய். 266 00:29:45,702 --> 00:29:47,663 கிடைக்காததைப் பற்றி யோசிக்காதே. 267 00:29:54,711 --> 00:29:55,712 கோரா. 268 00:29:56,296 --> 00:29:58,632 ஹலோ. வந்ததற்கு நன்றி. 269 00:30:00,759 --> 00:30:02,261 நீங்கள் இன்னும் எஸ்ஸெக்ஸில் இருப்பதாக நினைத்தேன். 270 00:30:02,845 --> 00:30:05,055 இல்லை, சில... காலம் முன்பு கிளம்பினேன். 271 00:30:07,224 --> 00:30:08,684 நீங்கள் ஏன் கடிதம் எழுதவில்லை? 272 00:30:09,560 --> 00:30:10,853 நீங்கள் ஏன் எழுதவில்லை? 273 00:30:10,936 --> 00:30:12,980 நான் நம்ப முடியாத ஆள். காரணம் சொல்வேன். 274 00:30:14,606 --> 00:30:15,774 உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. 275 00:30:20,863 --> 00:30:22,072 சரி, என்ன நடந்தது? 276 00:30:22,781 --> 00:30:26,034 எல்லோரும் என்னை எதிர்த்தார்கள். நான் சாத்தான் என்று முடிவு செய்தார்கள். 277 00:30:26,118 --> 00:30:28,245 என்ன? அந்த அன்பான பாதிரியார் கூடவா? 278 00:30:29,037 --> 00:30:30,289 இல்லை, அவர்... 279 00:30:32,833 --> 00:30:35,794 இருந்தாலும், இங்கே வேறு விஷயத்தைப் பற்றி உங்களிடம் பேச வந்திருக்கிறேன். 280 00:30:36,503 --> 00:30:39,214 அந்த பார்ட்டி நினைவிருக்கிறதா? மார்த்தாவோடு? 281 00:30:41,091 --> 00:30:42,092 மார்த்தாவா? 282 00:30:43,093 --> 00:30:44,178 மற்றும் சாலி? 283 00:30:46,346 --> 00:30:47,514 சாலி? 284 00:30:47,598 --> 00:30:49,057 உங்கள் நோயாளியின் சகோதரி. 285 00:30:53,061 --> 00:30:54,938 நாம் சேரிகளுக்கு போவது. 286 00:30:55,022 --> 00:30:56,773 லூக், இது முக்கியமான விஷயம். 287 00:30:56,857 --> 00:30:59,193 நான் மார்த்தாவை ஆதரிக்க விரும்புகிறேன். நீங்களும் வர வேண்டும். 288 00:30:59,735 --> 00:31:01,778 -உண்மையாகவா? -ஆமாம். 289 00:31:01,862 --> 00:31:03,071 நீங்கள் நெவ்வின் டாக்டர். 290 00:31:03,155 --> 00:31:05,657 நீங்கள் ஆம்ப்ரோஸோடு பேசினால், அவர் நிச்சயமாக கேட்பார். 291 00:31:05,741 --> 00:31:07,075 தயவு செய்யுங்கள், லூக். 292 00:31:07,159 --> 00:31:09,411 ம், பிரச்சினை என்னவென்றால், எனக்கு வேறு வேலை இருக்கிறது. 293 00:31:11,747 --> 00:31:13,457 வருடாந்திர பிஎம்ஏ பார்ட்டி இருக்கிறது. 294 00:31:13,540 --> 00:31:14,750 அதற்கு, போகாதீர்கள். 295 00:31:15,918 --> 00:31:18,003 ஆனால், எனக்கு விருது கொடுக்கிறார்களே. 296 00:31:18,086 --> 00:31:20,214 லூக், அது பிரமாதம். 297 00:31:20,297 --> 00:31:22,049 உங்களுக்கு ஆர்வம் என்று ஒத்துக்கொள்ளுங்கள். 298 00:31:24,718 --> 00:31:26,803 ஒரு நண்பரின் உதவி இருந்தால் இரண்டையுமே 299 00:31:26,887 --> 00:31:28,680 செய்ய முடியும் என்று நினைக்கிறேன். 300 00:31:31,558 --> 00:31:32,893 அது மிகப் பெரிய மரியாதை. 301 00:31:39,191 --> 00:31:41,276 எனக்கு நகைகள் வேண்டாம். 302 00:31:42,861 --> 00:31:44,112 ஆனாலும் நன்றி. 303 00:31:47,074 --> 00:31:49,451 சரி தான். என்னால் வாங்க முடியாது. 304 00:32:03,674 --> 00:32:04,842 காலை வணக்கம். 305 00:32:05,843 --> 00:32:06,844 இது என்ன? 306 00:32:07,344 --> 00:32:08,637 என்னால் முடிந்தது. 307 00:32:09,429 --> 00:32:10,430 நன்றி. 308 00:32:18,146 --> 00:32:21,358 லூக்கை அழைக்க என்னோடு வருவாயா? அவன் தப்பிக்காமல் இருக்க வேண்டும். 309 00:32:23,527 --> 00:32:25,821 நான் ஃபிராங்கியொடு காலை உணவு சாப்பிட வேண்டும். 310 00:32:29,658 --> 00:32:32,244 லூக். மார்த்தா வந்திருக்கிறாள். 311 00:32:38,250 --> 00:32:39,251 லூக். 312 00:32:45,090 --> 00:32:46,300 ஏன் இப்படி கொடூரமாக இருக்கிறாய்? 313 00:32:46,383 --> 00:32:47,384 மார்த்தா வந்திருக்கிறாள். 314 00:32:48,969 --> 00:32:50,053 கடவுளே. 315 00:32:54,516 --> 00:32:55,517 காலை வணக்கம். 316 00:32:57,561 --> 00:32:58,687 நீ நலமாக தோன்றுகிறாய். 317 00:32:58,770 --> 00:33:00,063 தயாரா? 318 00:33:00,147 --> 00:33:01,148 வந்து... 319 00:33:03,483 --> 00:33:05,360 பார், நான் இரவு முழுவதும் வேலை செய்தேன். 320 00:33:05,444 --> 00:33:07,571 இதைச் செய்ய முடியவில்லை. 321 00:33:09,072 --> 00:33:11,408 -எழுந்திரு. எழுந்திரு. -உண்மையில்... 322 00:33:13,744 --> 00:33:14,870 ஸ்ட்ராங் காபி வேண்டுமா? 323 00:33:15,454 --> 00:33:16,830 -என்ன சொல்கிறாய்? -ஆமாம். 324 00:33:23,670 --> 00:33:26,798 அவனிடம் சொல்லவில்லை, இல்லையா? அது... 325 00:33:27,716 --> 00:33:29,051 நிச்சயமாக சொல்லவில்லை. 326 00:33:29,134 --> 00:33:31,845 நல்லது. உன் மீது எவ்வளவு ஆர்வமாக இருக்கிறான் என்று எல்லோருக்குமே புரியும். 327 00:33:34,723 --> 00:33:37,518 சரி, நான் கேட்க வேண்டும் என்று நினைத்தேன். நான் வந்து... 328 00:33:38,018 --> 00:33:39,561 நான் நன்றாக நடந்துகொண்டேனா? 329 00:33:41,939 --> 00:33:43,524 அதை ஏற்கனவே மறந்தாயிற்று. 330 00:33:47,236 --> 00:33:49,821 ஒரு ஆணை எப்படி மட்டம் தட்டுவது என பெண்களுக்குத் தெரியும். 331 00:33:51,448 --> 00:33:53,659 நீ இப்பவும் கோராவுக்காக ஏங்கவில்லையே. 332 00:33:56,078 --> 00:33:57,246 லூக், 333 00:33:57,746 --> 00:33:59,581 உன் நேசத்தை அவள்மீது பாழடிக்காதே. 334 00:33:59,665 --> 00:34:01,792 அதை என்ன செய்வது என்று அவளுக்குத் தெரியாது. 335 00:34:03,210 --> 00:34:04,211 இதோ வந்து விட்டேன். 336 00:34:15,722 --> 00:34:16,931 சரி. 337 00:34:18,016 --> 00:34:19,601 இதை முடிப்போம். 338 00:34:37,786 --> 00:34:39,121 பாருங்கள், திரு. ஆம்ப்ரோஸ், 339 00:34:39,204 --> 00:34:41,581 அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஓய்வு எடுக்க இது ஏற்ற இடமில்லை. 340 00:34:42,165 --> 00:34:44,793 நம் விருந்தினருக்கு குடிக்க தண்ணீர் தேவைப்படலாம். 341 00:35:02,311 --> 00:35:04,354 கிணறு சுத்தமாக இல்லை. 342 00:35:04,438 --> 00:35:07,608 -தண்ணீரில் ரசாயனங்கள் இருக்கிறது. -அது என்ன, லூக்? 343 00:35:09,943 --> 00:35:11,028 விஷ வாயு. 344 00:35:11,111 --> 00:35:13,113 ஜன்னல் ஓரங்களை கருப்பாக்கிவிட்டது. 345 00:35:18,285 --> 00:35:21,330 ஆக, உங்கள் கழிவுகளை எங்கே போடுவீர்கள், சாலி? 346 00:35:21,914 --> 00:35:25,375 வெளியே சாக்கடையில், அல்லது அது நிரம்பினால் இன்னும் தள்ளி. 347 00:35:25,459 --> 00:35:26,502 இங்கே பூச்சிகள் உண்டா? 348 00:35:26,585 --> 00:35:27,878 கண்டிப்பாக உண்டு. 349 00:35:29,922 --> 00:35:30,923 நன்றி. 350 00:35:32,758 --> 00:35:34,092 அது மிக, 351 00:35:35,260 --> 00:35:37,763 பயனுள்ள தகவல். 352 00:35:47,856 --> 00:35:49,066 போகாதீர்கள், சார்லஸ். 353 00:35:49,149 --> 00:35:50,484 வருகிறேன் என்று சொன்னேன், வந்துவிட்டேன். 354 00:35:50,567 --> 00:35:53,654 -அவர்களுக்கு உதவும் அதிகாரம் உங்களுக்கு உண்டு. -உதவி இருக்கிறோம், கோரா. 355 00:35:53,737 --> 00:35:55,531 மறுபடியும் சட்டம் இயற்றி இருக்கிறோம். 356 00:35:55,614 --> 00:35:57,032 அனுமதிச் சட்டம்... 357 00:35:57,115 --> 00:36:00,327 குடிசைப் பகுதிகளை அகற்றி மக்களை வீடற்றவர்களாக ஆக்கக்கூடாது. 358 00:36:00,410 --> 00:36:01,495 உன் ஆலோசனை என்ன? 359 00:36:01,578 --> 00:36:03,121 சமூக குடியிருப்பு மசோதா தேவை. 360 00:36:04,373 --> 00:36:06,124 கம்யூனிஸ்ட் பேசுகிறார். 361 00:36:06,208 --> 00:36:07,876 மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள், ஆம்ப்ரோஸ். 362 00:36:07,960 --> 00:36:10,170 வியாதி மட்டும் தான் இங்கே உயிரோடு இருக்கிறது. 363 00:36:10,254 --> 00:36:11,672 நீ உயிரோடு இருக்கிறாயே. 364 00:36:11,755 --> 00:36:13,757 -என்ன சொல்கிறீர்கள், சார்லஸ். -என்... 365 00:36:13,841 --> 00:36:17,719 காலராவினால் இறப்பது எப்படி இருக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? 366 00:36:17,803 --> 00:36:20,389 நமக்கு கீழே ஓடும் சாக்கடைகளில் ஒரு உயிர்கொல்லி வாழ்ந்து கொண்டிருக்கிறது. 367 00:36:20,472 --> 00:36:23,100 எனவே, முதலில், வயிற்றுப் போக்கு உண்டாகும், 368 00:36:23,767 --> 00:36:25,894 நாள் முழுவதும் வாந்தி எடுப்போம், 369 00:36:25,978 --> 00:36:28,230 நம் கண்கள் பெரிதாகி, 370 00:36:28,313 --> 00:36:30,023 நம் தோல் நீல நிறமாகிவிடும். 371 00:36:32,818 --> 00:36:35,737 அது பயங்கரமான, தனிமையான சாவு. 372 00:36:36,989 --> 00:36:38,740 சுத்தமான நீர் கிடைப்பது அடிப்படை மனித உரிமை. 373 00:36:40,284 --> 00:36:42,870 நாம் அதை ஒப்புக்கொள்ளவில்லை என்றால், நாம் நம் வழியைப் பார்த்துப் போக வேண்டும். 374 00:36:51,044 --> 00:36:52,546 சக பணியாளர்களிடம் பேசுகிறேன். 375 00:36:53,172 --> 00:36:54,590 மசோதா உருவாக்க முடியுமா என பார்க்கிறேன். 376 00:37:01,346 --> 00:37:02,598 லூக் கீழே இருக்கிறார். 377 00:37:03,473 --> 00:37:05,517 வெளியே போவது சரியாகத் தோன்றவில்லை. 378 00:37:06,268 --> 00:37:08,228 இல்லை, உள்ளேயிருந்து வருத்தப்படாதே. 379 00:37:08,312 --> 00:37:09,354 முயற்சி செய். 380 00:37:10,063 --> 00:37:11,273 இந்த இயக்கத்தில் நீ கலந்துகொள்ளலாம். 381 00:37:11,773 --> 00:37:13,400 நீ அற்புதமானவள், மார்த்தா. 382 00:37:14,276 --> 00:37:15,444 இங்கே உன்னை வீணடிக்கிறார்கள். 383 00:37:17,487 --> 00:37:19,615 -எனக்கு நிறைய செய்ய வேண்டும். -நீ செய்தாக வேண்டும். 384 00:37:21,283 --> 00:37:23,744 நீயும், ஃபிராங்கியும், எப்போதும் என் உதவியை தேட மாட்டீர்கள், இல்லையா? 385 00:37:26,747 --> 00:37:28,207 லூக்கோடு ஜாக்கிரதையாக இரு. 386 00:37:29,499 --> 00:37:30,501 நாங்கள் நண்பர்கள். 387 00:37:54,399 --> 00:37:56,151 நாம் சென்று உங்கள் வெற்றியைக் கொண்டாடலாமா? 388 00:37:56,860 --> 00:37:59,780 அதாவது நிறைய குடிக்கலாம். 389 00:38:03,408 --> 00:38:05,035 ஓ, ஓ. 390 00:38:26,390 --> 00:38:27,599 அவள் மிகவும் அழகு. 391 00:38:35,315 --> 00:38:36,316 டாக்டர் காரெட். 392 00:38:36,400 --> 00:38:38,235 -அடக் கடவுளே. வாரியத்தின் தலைவர். -காரெட்? 393 00:38:38,318 --> 00:38:41,029 நாம் ஒரு பாருக்கு சென்று குடிக்க வேண்டும் போல. 394 00:38:41,113 --> 00:38:43,615 இது உங்களுக்கான இரவு. இதை மகிழ்ச்சியோடு செலவழிக்கலாம். 395 00:38:43,699 --> 00:38:44,783 காரெட். 396 00:38:45,909 --> 00:38:47,411 காரெட், வாழ்த்துக்கள். 397 00:38:47,494 --> 00:38:48,745 என்னால் முடிந்ததைச் செய்கிறேன். 398 00:38:49,663 --> 00:38:53,333 -இது உங்கள் மகளா? -திரு. காரெட், கண்ணியமாக நடந்துகொள்ளுங்கள். 399 00:38:53,417 --> 00:38:55,169 முடியாது என்பது வருத்தம் தான். 400 00:38:55,252 --> 00:38:58,422 நீங்கள் திருமதி. காரெட் என்று நினைக்கிறேன். உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. 401 00:38:58,505 --> 00:39:00,090 எனக்கும் மிகுந்த மகிழ்ச்சி. 402 00:39:02,384 --> 00:39:05,762 என் அன்பு மனைவியிடம் என் பேச்சை நான் பயிற்சி செய்ய வேண்டும். 403 00:39:07,556 --> 00:39:08,557 ஹலோ. 404 00:39:15,647 --> 00:39:19,318 மிகுந்த மரியாதையோடும், பணிவோடும் நான் இந்த... 405 00:39:19,401 --> 00:39:21,695 -பணிவோடா? உண்மையாகவா? -...நான் இந்த... 406 00:39:28,744 --> 00:39:31,205 இது தான் எனக்குத் தேவைப்பட்டது. நன்றி. 407 00:39:31,288 --> 00:39:33,665 குடிப்பதற்கு நான் எப்போதும் தயார். 408 00:39:35,334 --> 00:39:37,961 -கடவுளே, என் கால்களை உணர முடியவில்லை. -அப்படியா? 409 00:39:38,045 --> 00:39:40,339 எல்லாம் உன்னால் தான், திருமதி. காரெட். 410 00:39:50,432 --> 00:39:52,726 என்ன இது, கோரா? நாம் என்ன செய்கிறோம்? 411 00:39:53,352 --> 00:39:56,063 உங்கள் பார்ட்டியில் மோசமாக நடந்துகொள்கிறோம். 412 00:39:56,146 --> 00:39:59,983 மரியாதையாக பணிவாக இருப்பது போர் அடிக்கிறது. 413 00:40:00,067 --> 00:40:01,985 எதைப் பற்றி சொல்கிறீர்கள்? 414 00:40:02,069 --> 00:40:03,403 நாம் திருமணம் செய்துகொள்ளலாம். 415 00:40:05,781 --> 00:40:08,700 நிஜமாகத்தான். என்னைக் கல்யாணம் செய்துகொள். என் மனைவியாக இரு. 416 00:40:12,538 --> 00:40:13,997 லூக். என்... 417 00:40:16,208 --> 00:40:19,503 -முடியாது. அதாவது, என்னால் முடியாது. -ஏன் முடியாது? 418 00:40:20,963 --> 00:40:23,590 என் கணவர் இறந்து சில மாதங்கள் தான் ஆகின்றன. 419 00:40:23,674 --> 00:40:26,134 -அது வந்து... -உன் கணவர் மோசம். நீ அவரை நேசிக்கவில்லை. 420 00:40:26,218 --> 00:40:27,594 ஏ... நீ என்ன... 421 00:40:27,678 --> 00:40:28,846 நான் உன்னை நேசிக்கிறேன். 422 00:40:33,809 --> 00:40:35,894 உன்னை பார்த்த நொடியிலிருந்து நேசிக்கிறேன். 423 00:40:37,062 --> 00:40:38,230 என்னைப் பற்றி தெரிவதற்கு முன்பேவா? 424 00:40:39,314 --> 00:40:40,649 நான் பார்த்தது எனக்குப் பிடித்தது. 425 00:40:41,692 --> 00:40:43,485 அதன் மீது உரிமை கொண்டாட விரும்பினீர்களா? 426 00:40:46,154 --> 00:40:49,157 -அ-அந்த கவலையற்ற கோரா என்னவானாள்? -மன்னிக்கவும். நான்... 427 00:40:49,241 --> 00:40:50,492 அதைப்பற்றி யோசனை செய். 428 00:40:52,035 --> 00:40:53,287 நாம் சிரிக்கிறோம். 429 00:40:53,370 --> 00:40:55,747 வாக்குவாதம் செய்கிறோம். ஒரு திருமணமான தம்பதி போல இருக்கிறோம். 430 00:40:58,417 --> 00:41:00,419 நட்பு மட்டும் போதாதா என்ன? 431 00:41:01,295 --> 00:41:02,796 அது ரொம்ப குறைவு. 432 00:41:05,090 --> 00:41:06,466 மன்னிக்கவும். நான்... 433 00:41:09,136 --> 00:41:10,888 -முன்பு, நிறைய இருந்திருக்கலாம், ஆனால்... -முன்பா? 434 00:41:10,971 --> 00:41:12,264 என்னை எஸ்ஸெக்ஸிற்கு அழைத்து, 435 00:41:12,347 --> 00:41:14,099 -உன் வீட்டு தலைவனாக்கினாயே அப்போதா? -என்ன? 436 00:41:14,183 --> 00:41:16,685 அந்தப் பார்ட்டியை நான் எதற்காக நடத்தினேன் என்று நினைக்கிறாய்? 437 00:41:19,855 --> 00:41:22,733 ஒரு தோழிக்காக நீங்கள் செய்வதாக நினைத்தேன். 438 00:41:24,151 --> 00:41:26,945 அவன் எப்படி? அவனும் உன் நண்பனா? 439 00:41:29,072 --> 00:41:30,115 யார்? 440 00:41:31,033 --> 00:41:32,659 அவனுக்கு திருமணம் ஆகிவிட்டது தெரியுமா? 441 00:41:33,285 --> 00:41:36,121 இருந்தாலும், அது நிறைய நாள் நீடிக்காது ஏனென்றால் அவன் மனைவியின் நுரையீரல் பலவீனமாக இருக்கிறது. 442 00:41:36,205 --> 00:41:37,873 அதற்காகத்தான் காத்திருக்கிறாயா? 443 00:41:39,750 --> 00:41:42,461 நீ இந்தளவுக்கு கருணை இல்லாதவள் என்று நான் நினைக்கவில்லை, கோரா. 444 00:41:42,544 --> 00:41:44,004 நீ எதைப் பற்றி சொல்கிறாய்? 445 00:41:45,339 --> 00:41:48,008 காசநோய். போனவாரம் தான் அவளை சோதித்தேன். 446 00:41:51,136 --> 00:41:52,221 நீ பொய் சொல்கிறாய். 447 00:41:52,304 --> 00:41:54,264 என்னை நம்பவில்லை என்றால் ஸ்பென்சரிடம் கேள். 448 00:41:54,890 --> 00:41:56,850 கவலைப்படாதே. சில மாதங்களில் அவள் இறந்துவிடுவாள், 449 00:41:56,934 --> 00:41:58,644 அவனை நீ மொத்தமாக அடைந்துவிடலாம். 450 00:41:58,727 --> 00:42:00,103 என்னை விட்டு தள்ளிப் போ. 451 00:42:00,187 --> 00:42:01,813 கோரா, பொறு. மன்னித்துவிடு. 452 00:42:01,897 --> 00:42:02,981 என்னை விட்டு தள்ளிப் போ. 453 00:42:07,402 --> 00:42:10,030 -கோரா, திரும்பி வா. -என்னை தனியாக விடு. 454 00:42:20,666 --> 00:42:22,417 -நீ குடித்திருக்கிறாய். -நீ ஒரு குடிகாரன். 455 00:42:27,339 --> 00:42:28,340 பிஎம்ஏ 456 00:42:28,423 --> 00:42:30,676 அப்படியென்றால் ஓடி விடு, கோழையே. 457 00:42:30,759 --> 00:42:32,469 நீ தான் கோழை. 458 00:42:47,234 --> 00:42:49,903 தயவுசெய்து மேடைக்கு வாருங்கள், சார். 459 00:42:51,947 --> 00:42:53,156 போயா. 460 00:43:16,555 --> 00:43:20,475 முட்டாள். முட்டாள். முட்டாள்! 461 00:43:27,858 --> 00:43:30,652 -என்ன நடந்தது? -லூக் காதலைச் சொன்னான். 462 00:43:30,736 --> 00:43:31,945 -என்ன? -ஆமாம். 463 00:43:33,447 --> 00:43:34,489 நீ ஒரு முட்டாள். 464 00:43:35,866 --> 00:43:38,452 -அவன் தான் முட்டாள். -இல்லை, கோரா. இங்கே பார். 465 00:43:38,535 --> 00:43:39,703 இல்லை, நீ அங்கே இல்லை. 466 00:43:39,786 --> 00:43:42,873 நாங்கள் சிரித்து பேசிக் கொண்டிருந்தோம் அடுத்த நிமிடமே, காதலைச் சொன்னான். 467 00:43:42,956 --> 00:43:44,333 அவன் உன்னைக் காதலிக்கிறான். 468 00:43:47,961 --> 00:43:50,756 உன்னைக் காதலிப்பது எவ்வளவு வலி கொடுக்கும் என்று தெரியுமா? 469 00:43:52,799 --> 00:43:55,219 எனக்குத் தெரியவில்லை. 470 00:43:55,302 --> 00:43:57,387 -இல்லை, உனக்கு எப்போதும் தெரிந்ததில்லை. -மார்த்தா, என்ன... 471 00:43:57,471 --> 00:43:59,097 -உனக்கு என்ன வேண்டும், கோரா? -வேண்டுமா? 472 00:43:59,181 --> 00:44:02,476 ஆமாம். அது உனக்கு தெரியாமல் நீ அதிக நாட்கள் இருந்தால், 473 00:44:02,559 --> 00:44:05,062 -இன்னும் நிறைய பேர் காயப்படுவார்கள். -அது வந்து... 474 00:44:05,145 --> 00:44:07,231 -நான் பல காலமாக மாட்டிக் கொண்டு... -ஆமாம். 475 00:44:07,814 --> 00:44:09,900 சரி, மறுபடியும் மைக்கேலையே குறை சொல்லு. 476 00:44:11,068 --> 00:44:13,946 நீ சொல்வது சரி. நான் இங்கே வீணடிக்கப்பட்டேன். 477 00:44:37,219 --> 00:44:39,680 லண்டன் & மெட்ரோபாலிட்டன் ரயில்வேஸ் 478 00:44:49,565 --> 00:44:50,566 பணம். 479 00:44:54,403 --> 00:44:55,571 பர்ஸ்! 480 00:44:57,823 --> 00:44:58,824 இல்லை. 481 00:44:59,408 --> 00:45:00,409 கொடுத்து விடு. 482 00:45:16,300 --> 00:45:17,301 அதைக் கொடு. 483 00:45:28,437 --> 00:45:30,439 என் கையை விட்டுவிடு. தயவு செய். 484 00:46:01,261 --> 00:46:02,471 பிதாவே. 485 00:46:03,972 --> 00:46:05,182 என் பிரார்த்தனைக்கு செவி கொடுங்கள். 486 00:46:09,311 --> 00:46:12,564 என் பாவங்களை கைவிடுகிறேன். 487 00:46:14,233 --> 00:46:15,817 கெட்டவற்றைக் கைவிடுகிறேன். 488 00:46:20,197 --> 00:46:21,532 அவளை என்னிடம் திருப்பித் தாருங்கள். 489 00:47:41,403 --> 00:47:43,405 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்