1 00:00:44,711 --> 00:00:46,213 சரி. 2 00:01:28,005 --> 00:01:29,923 டாக்டர் காரெட்? எங்கே போகிறீர்கள்? 3 00:01:52,654 --> 00:01:53,864 அன்புள்ள ஸ்டெல்லா, 4 00:01:54,573 --> 00:01:57,159 இப்போது தான் லூக்கிடமிருந்து அதிர்ச்சியான செய்தியைக் கேள்விப்பட்டேன். 5 00:01:57,701 --> 00:01:58,911 மிகவும் வருந்துகிறேன். 6 00:02:00,078 --> 00:02:02,748 என் வாழ்நாளில், முதல் முறையாக, பேச முடியாமல் தவிக்கிறேன். 7 00:02:08,461 --> 00:02:10,631 பாம்பைத் தேடி தான் நான் ஆல்ட்வின்டருக்கு வந்தேன், 8 00:02:11,632 --> 00:02:13,926 இங்கே நட்பை எதிர்பார்க்கவில்லை. 9 00:02:14,968 --> 00:02:17,429 ஸ்டெல்லா, உன்னை சந்திக்க விரும்புகிறேன், 10 00:02:18,722 --> 00:02:21,266 ஆனால் நான் திரும்பி வந்தால் கிராமவாசிகள் வருந்தக் கூடும். 11 00:02:22,851 --> 00:02:25,270 நீ என் தோழி மற்றும் நான் இப்படி... 12 00:02:25,354 --> 00:02:26,688 என்ன நடந்தது? 13 00:02:27,773 --> 00:02:29,149 நம் வீடு கொள்ளையடிக்கப்பட்டதா? 14 00:02:33,320 --> 00:02:35,906 மார்த்தா எங்கே? அவரது அறை காலியாக இருக்கிறது. 15 00:02:38,200 --> 00:02:39,618 நாம் போய் சாப்பிடலாம். 16 00:02:58,262 --> 00:03:00,430 -எங்கே போயிருந்தாய்? -என்னால் தூங்க முடியவில்லை. 17 00:03:01,098 --> 00:03:02,641 உங்களைத் தேடி வந்தேன். 18 00:03:03,642 --> 00:03:05,060 நான் நயோமியைத் தேடிச் சென்றேன். 19 00:03:05,143 --> 00:03:06,770 அவள் இறந்துவிட்டாளா? 20 00:03:14,778 --> 00:03:16,446 உனக்கு இதம் கொடுப்போம். 21 00:03:18,866 --> 00:03:19,867 வில்? 22 00:03:20,450 --> 00:03:21,827 என்ன? 23 00:03:21,910 --> 00:03:23,704 எமன் எனக்காக காத்திருக்கிறான். 24 00:03:26,915 --> 00:03:28,333 வருத்தப்படாதீர்கள். 25 00:03:31,753 --> 00:03:33,255 நான் தயார். 26 00:03:40,971 --> 00:03:42,222 எனக்கு உதவி செய்யுங்கள். 27 00:03:44,850 --> 00:03:46,351 எது வேண்டுமானாலும் செய்கிறேன். 28 00:03:47,352 --> 00:03:49,104 நான் கோராவையும், ஃபிராங்கியையும் பார்க்க வேண்டும். 29 00:03:51,523 --> 00:03:52,983 அவர்கள் திரும்பி வர வேண்டும். 30 00:04:21,762 --> 00:04:24,765 சாரா பெர்ரியின் நாவலைத் தழுவியது 31 00:04:43,534 --> 00:04:45,285 இன்னொரு டப்பா கொண்டு வரவா? 32 00:04:45,369 --> 00:04:47,496 ஆமாம், கொண்டு வா. பின் அறையில் இருக்கிறது. 33 00:05:02,344 --> 00:05:03,428 என் காமிக் புத்தகங்கள்! 34 00:05:06,348 --> 00:05:08,433 -இந்தாருங்கள், மிஸ். -நன்றி. 35 00:05:15,774 --> 00:05:16,859 திருமதி. சீபோர்ன் 36 00:05:18,068 --> 00:05:19,570 கோல்செஸ்டர் எஸ்ஸெக்ஸ் 37 00:05:40,966 --> 00:05:42,301 அன்புள்ள கோரா, 38 00:05:43,760 --> 00:05:45,637 நாம் லண்டனில் சந்திப்பதற்கு சற்று முன்னர், 39 00:05:46,221 --> 00:05:49,725 ஸ்டெல்லா காசநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிய வந்தது. 40 00:05:51,226 --> 00:05:54,521 ஒருவேளை மியூசியத்தில் அதனால் தான் நான் அப்படி நடந்து கொண்டு இருக்கலாம். 41 00:05:56,982 --> 00:06:00,277 இப்போது, அவள் நிலைமை மோசமாகி வருகிறது. 42 00:06:02,988 --> 00:06:06,617 உங்களுக்கு கடிதம் எழுதி உங்களை வரச் சொல்ல சில நாட்களாக என்னைக் கெஞ்சுகிறாள். 43 00:06:08,035 --> 00:06:10,871 ஆனால் அது அவளுக்கு, எனக்கு, மற்றும் நம் யாருக்குமே 44 00:06:11,371 --> 00:06:14,917 ஒரு சிறந்த யோசனையாக... இருக்காது. 45 00:06:18,837 --> 00:06:23,550 உண்மையில், நாட்களை எப்படி கடத்துவது என்று எனக்குத் தெரியவில்லை. 46 00:06:26,887 --> 00:06:28,764 நான் உடைந்து விட்டேன். 47 00:06:50,077 --> 00:06:51,078 இதோ. 48 00:07:00,546 --> 00:07:03,048 உன் தையலை விட, நீ சவரம் செய்தது நன்றாக இருக்கிறது. 49 00:07:14,059 --> 00:07:16,979 -நீ ஏன் சில நாட்கள் என்னோடு தங்கக் கூடாது? -நான் தனியாக நன்றாகத் தான் இருக்கிறேன். 50 00:07:19,565 --> 00:07:20,983 கொடு நான் செய்கிறேன். 51 00:07:26,864 --> 00:07:28,657 சவக்கிடங்கிற்கு பிறகு செல்லலாம். 52 00:07:28,740 --> 00:07:29,741 என்ன? 53 00:07:29,825 --> 00:07:32,411 என் கைவிரல்களை பயன்படுத்த பயிற்சி செய்ய வேண்டும். 54 00:07:36,248 --> 00:07:37,875 நான் பணிக்குத் திரும்ப வேண்டும், ஸ்பென்சர். 55 00:07:37,958 --> 00:07:39,042 ஒவ்வொரு நாளாக செய்யலாம். 56 00:07:41,420 --> 00:07:43,213 அறுவை சிகிச்சை செய்வது பற்றி இப்போது நினைக்காதே. 57 00:07:44,590 --> 00:07:45,799 அது சாத்தியம் என்றா நினைக்கிறாய்? 58 00:07:47,342 --> 00:07:49,344 நான் ஓய்வு எடுக்க வேண்டுமா? வேலையை விட்டு விட்டு? 59 00:07:51,054 --> 00:07:52,973 -என்னைப் பற்றி தெரியாதா? -மன்னிக்கவும். 60 00:07:54,433 --> 00:07:56,185 நான் செய்யக்கூடியது ஏதாவது இருக்கும். 61 00:07:56,268 --> 00:07:57,269 என்னைத் தனிமையில் விடு. 62 00:07:59,354 --> 00:08:00,439 லூக்... 63 00:08:00,522 --> 00:08:03,650 -என்னைத் தனிமையில் விடு. -சரி. 64 00:08:11,533 --> 00:08:12,534 பை-பை. 65 00:08:13,869 --> 00:08:15,204 நன்றி. இது போதும். 66 00:09:37,536 --> 00:09:38,704 ஹலோ. 67 00:09:40,831 --> 00:09:42,291 ஆம்ப்ரோஸ் தன் மனதை மாற்றிக்கொண்டார். 68 00:09:45,127 --> 00:09:46,253 மன்னிக்கவும். 69 00:09:49,006 --> 00:09:50,007 உள்ளே வாருங்கள். 70 00:09:51,341 --> 00:09:55,429 “சமூக வீட்டு வசதிதான் பதில் என்பதை நான் ஏற்காததால் ஒரு சட்டத்தை முன்மொழிய முடியாது. 71 00:09:56,054 --> 00:09:59,224 மக்கள் தங்கள் பிரச்சினைகளைத் தானே தீர்த்து, மாநிலத்தின் மேல் சாராமல் இருக்க வேண்டும்.” 72 00:09:59,308 --> 00:10:02,644 உண்மையில், இவருக்கு மூளை கிடையாது தான், ஆனால் நெஞ்சில் ஈரம் கூட இல்லை. 73 00:10:05,105 --> 00:10:08,150 கவலைப்படாதே. நான் தொடர்ந்து கடிதங்கள் எழுதுவேன். 74 00:10:08,233 --> 00:10:10,527 உண்மையில், எங்களிடமும் ஒரு செய்தி இருக்கிறது. 75 00:10:11,945 --> 00:10:13,864 நமக்கு உதவ ஸ்பென்சர் ஒரு திட்டம் சொன்னார். 76 00:10:14,531 --> 00:10:16,575 என்ன? எப்போது? 77 00:10:17,492 --> 00:10:20,287 நீங்கள் போன பிறகு நாங்கள் பேசிக் கொண்டு இருந்தோம், அப்போது அவர்... 78 00:10:20,370 --> 00:10:23,207 இந்த முழு கட்டிடத்தையும் வாங்க ஒப்புக் கொண்டு இருக்கிறார். 79 00:10:23,290 --> 00:10:24,291 -என்ன? -ஆமாம். 80 00:10:24,374 --> 00:10:26,543 அவர் தண்ணீர் வசதி மற்றும் மின்சாரம் கொடுக்க விரும்புகிறார். 81 00:10:26,627 --> 00:10:28,045 இந்த இடத்தை மாற்ற விரும்புகின்றார். 82 00:10:31,590 --> 00:10:33,008 அது உங்களுக்கு மிகவும் நல்லது. 83 00:10:33,091 --> 00:10:35,969 எங்களுக்கு மட்டுமல்ல, இங்கே பத்து குடும்பங்கள் இருக்கிறார்கள். 84 00:10:36,595 --> 00:10:37,596 உங்களுக்கு சந்தோஷமாக இல்லையா? 85 00:10:37,679 --> 00:10:38,722 கண்டிப்பாக சந்தோஷம் தான். 86 00:10:39,348 --> 00:10:42,476 தனி மனிதர்களாக, நீங்கள் எல்லோரும் பயன் பெறுவீர்கள். 87 00:10:44,353 --> 00:10:47,064 ஆனால் உண்மையான மாற்றம் தேவை, தர்மம் அல்ல. 88 00:10:50,234 --> 00:10:52,236 அவர் இதை உங்களுக்காகத் தான் செய்கிறார். 89 00:10:54,029 --> 00:10:56,490 உங்கள் இருவரின் எதிர்காலம் பற்றி பேசினார். 90 00:11:07,835 --> 00:11:09,044 கோரா. 91 00:11:09,127 --> 00:11:11,004 -ஸ்பென்சர். -கோரா. நான்... 92 00:11:11,088 --> 00:11:13,549 மார்த்தாவைத் தேடுகிறாய் என்றால், அவள் சில நாட்களுக்கு முன்பே வெளியேறிவிட்டாள். 93 00:11:13,632 --> 00:11:16,677 -அவள் சீப்சைடில் வசிக்கிறாள். -இல்லை. கெட்ட செய்தி உண்டு. 94 00:11:17,636 --> 00:11:19,596 லூக் கத்தியால் குத்தப்பட்டு, அவனது பொருட்கள் திருட்டு போயின. 95 00:11:19,680 --> 00:11:21,557 என்ன? எப்போது? 96 00:11:21,640 --> 00:11:23,559 பார்ட்டியில் இருந்து வீட்டிற்கு திரும்பும் வழியில். 97 00:11:23,642 --> 00:11:25,018 அவனது வலது கையில் பெரிய காயம். 98 00:11:25,102 --> 00:11:26,603 அறுவை சிகிச்சைக்கு நேராக அழைத்துச் சென்றேன். 99 00:11:27,187 --> 00:11:29,439 -என்னால் முடிந்த அளவு செய்திருக்கிறேன். -சரி. 100 00:11:31,567 --> 00:11:33,777 அவனால் மறுபடியும் அறுவை சிகிச்சை செய்ய முடியாது. 101 00:11:33,861 --> 00:11:35,237 ஓ, லூக்! 102 00:11:36,238 --> 00:11:39,408 விஷயங்களை மாற்ற முடிந்தால், இடத்தை மாற்ற முடிந்தால்... 103 00:11:40,450 --> 00:11:42,286 நான் என்ன செய்ய வேண்டும்? என்ன வேண்டுமானாலும் செய்கிறேன். 104 00:11:43,203 --> 00:11:45,455 அவனை சென்று பாரு. உற்சாகப்படுத்து. 105 00:11:45,539 --> 00:11:47,040 அவன் என்னை வரச் சொன்னானா? 106 00:11:47,666 --> 00:11:48,917 நான் இங்கே இருப்பது அவனுக்குத் தெரியாது. 107 00:12:05,809 --> 00:12:06,810 லூக்? 108 00:12:13,025 --> 00:12:14,026 லூக்? 109 00:12:34,963 --> 00:12:37,049 ஓ, என் அன்பு நண்பா. 110 00:12:37,132 --> 00:12:38,550 நீ வருவாயா என்று எதிர்பார்த்தேன். 111 00:12:39,760 --> 00:12:41,303 விஷயம் தெரிந்த உடனேயே வந்துவிட்டேன். 112 00:12:42,638 --> 00:12:43,931 மிகவும் வருந்துகிறேன். 113 00:12:45,682 --> 00:12:46,808 மிகவும் வருந்துகிறேன். 114 00:12:48,018 --> 00:12:50,687 இதைப் பாரு. பயனற்றது. 115 00:12:51,772 --> 00:12:53,774 இறைச்சியை கூட வெட்ட முடியாது. 116 00:12:55,150 --> 00:12:56,818 நான் இதை சுத்தப்படுத்துகிறேன். 117 00:13:11,875 --> 00:13:14,378 சிறிது உடல் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யவா? 118 00:13:14,461 --> 00:13:17,422 ரப்பர் பேண்ட் வைத்து பயிற்சி செய்வதா? பரவாயில்லை, வேண்டாம். 119 00:13:18,882 --> 00:13:20,467 அல்லது செயற்கை பகுதிகளை உடலில் வைக்கும், 120 00:13:20,551 --> 00:13:22,469 நீ சொன்ன அந்த மருத்துவருக்கு கடிதம் எழுதவா? 121 00:13:22,553 --> 00:13:25,264 அவர் ஒரு முட்டாள் என்பதால் அவரைப் பற்றி உன்னிடம் சொன்னேன். 122 00:13:25,347 --> 00:13:26,431 அப்படி செய்ய முடியாது. 123 00:13:30,310 --> 00:13:31,395 சரி, நான் இப்போது இங்கே இருக்கிறேன். 124 00:13:32,479 --> 00:13:34,690 அடுத்து என்ன வந்தாலும், நாம் சேர்ந்து எதிர்கொள்ளலாம். 125 00:13:34,773 --> 00:13:35,774 சேர்ந்தா? 126 00:13:36,942 --> 00:13:38,610 நம் முட்டாள்தனமான சண்டையை மறந்துவிடு. 127 00:13:38,694 --> 00:13:40,028 நான் உன்னை கவனித்துக் கொள்கிறேன். 128 00:13:40,112 --> 00:13:41,613 எப்படி? 129 00:13:44,533 --> 00:13:45,701 என்னோடு வந்து வாழு. 130 00:13:45,784 --> 00:13:48,871 அய்யே, எனக்கு உதவி செய்ய ஸ்பென்சர் சொன்னது போல பேசுகிறாய். 131 00:13:48,954 --> 00:13:52,833 இல்லை. அதாவது, என்னோடு சேர்ந்து வாழு. எப்போதும். 132 00:13:53,542 --> 00:13:54,668 என்ன? 133 00:13:54,751 --> 00:13:56,753 என் நண்பன் மற்றும் கூட்டாளியாக. 134 00:13:56,837 --> 00:13:58,422 அது மார்த்தாவின் பொறுப்பு என்று நினைத்தேன். 135 00:14:01,258 --> 00:14:02,259 அவள் வெளியேறிவிட்டாள். 136 00:14:02,342 --> 00:14:04,845 அப்படியா. ஆக, வெற்றிடத்தை நிரப்புகிறாய். 137 00:14:04,928 --> 00:14:05,929 இல்லை. 138 00:14:06,013 --> 00:14:07,181 அவள் போய்விட்டாள், 139 00:14:07,264 --> 00:14:08,473 -வேலைக்காரர்கள் இல்லை. -இல்லை, லூக். 140 00:14:08,557 --> 00:14:11,476 -நான் மட்டும் தான் இருக்கிறேன். -இல்லை... தயவு செய்து, பேசாமல் சொல்வதைக் கேள். 141 00:14:18,233 --> 00:14:19,610 இது சரியாக இருக்கும். 142 00:14:20,569 --> 00:14:23,030 நாம் நண்பர்கள், ஒருவரோடு ஒருவர் இனிமையாக பழகுகிறோம். 143 00:14:23,113 --> 00:14:26,408 என் வீடு... எனக்கு மட்டும் மிகப் பெரியது. நீ, மைக்கேலின் அறையில் தங்கலாம். 144 00:14:26,491 --> 00:14:27,492 அந்தக் கல்லறையிலா? 145 00:14:28,035 --> 00:14:29,286 அதை சுத்தம் செய்துவிட்டேன். 146 00:14:31,038 --> 00:14:32,331 இதைப் பற்றி யோசி. 147 00:14:32,998 --> 00:14:35,792 நாம் சேர்ந்து படித்து, பேசி, நம் நேரத்தை செலவிடலாம். 148 00:14:37,211 --> 00:14:41,340 வெளியே மதிய உணவு சாப்பிடலாம். கென்சிங்டன் பூங்காவில் நடக்கலாம். 149 00:14:41,423 --> 00:14:44,384 கேலரிக்கு போகலாம்? நெருப்பு ஏற்றலாம்? வீட்டில் சாப்பிடலாம்? 150 00:14:44,468 --> 00:14:46,637 நிறைய சாப்பிட்டு, நிறைய குடிக்கலாம். 151 00:14:46,720 --> 00:14:51,141 இரவு வணக்கம் சொல்லி நான் உன் கணவரின் படுக்கையில் படுக்கலாமா? 152 00:14:54,478 --> 00:14:55,646 ஏன் கூடாது? 153 00:14:55,729 --> 00:14:57,439 ஏனென்றால் இது முட்டாள்தனம். 154 00:14:58,690 --> 00:15:00,275 உன்னால் இதைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை. 155 00:15:00,359 --> 00:15:04,863 ஆனால், இந்த ரத்தம் தோய்ந்த காயம் என் கண்களை திறந்துவிட்டது. 156 00:15:04,947 --> 00:15:06,365 உன் மீது எனக்கு அக்கறை உண்டு, லூக். 157 00:15:06,448 --> 00:15:09,326 நான் தேவைப்பட்ட போது நீ அழைத்தாய். 158 00:15:09,826 --> 00:15:11,119 ஒரு டாக்டராக. 159 00:15:11,203 --> 00:15:13,413 வருத்தத்தை சொல்ல ஒரு நண்பனாக. 160 00:15:13,497 --> 00:15:15,207 குடிப்பதற்கு ஒரு கூட்டாளியாக. 161 00:15:15,290 --> 00:15:17,334 அது உண்மை இல்லை. நீ என் தோழன். 162 00:15:23,382 --> 00:15:25,634 சரி, உன் தோழனாக... 163 00:15:27,636 --> 00:15:29,429 உன்னிடம் உண்மையைப் பேச வேண்டும், கோரா. 164 00:15:31,306 --> 00:15:33,267 உன்னோடு வாழ எனக்கு விருப்பமில்லை. 165 00:15:33,350 --> 00:15:34,643 ஏன் அப்படி? 166 00:15:35,561 --> 00:15:37,896 நான் உன்னைக் காதலிக்கிறேன், 167 00:15:37,980 --> 00:15:40,649 ஆனால் நீ வேறு யாரையோ காதலிக்கிறாய். 168 00:16:17,186 --> 00:16:18,687 மார்த்தா. 169 00:16:23,901 --> 00:16:25,152 உள்ளே வருகிறாயா? 170 00:16:47,132 --> 00:16:48,884 லூக் பற்றி கேள்விப்பட்டிருப்பாய் என நினைக்கிறேன். 171 00:16:50,135 --> 00:16:51,428 ஆமாம். 172 00:16:52,721 --> 00:16:54,223 நீ ஏன் என்னிடம் சொல்லவில்லை? 173 00:16:56,141 --> 00:16:59,353 நீ ஏதாவது முட்டாள்தனமாக செய்வாய் என்று நினைத்தேன். 174 00:17:07,194 --> 00:17:08,278 என்னை மன்னித்துவிடு, மார்த்தா. 175 00:17:09,238 --> 00:17:10,239 எதற்காக? 176 00:17:13,534 --> 00:17:16,703 உன்னை அப்படி நடத்தியதற்காக. லூக்... 177 00:17:21,333 --> 00:17:23,710 நான் நேசித்த மக்களை கவனிக்காததற்காக. 178 00:17:36,932 --> 00:17:38,934 மேலிருந்து பார்க்க இது மிக அழகிய காட்சி. 179 00:17:40,602 --> 00:17:41,979 நீ பார்க்க விரும்புகிறாயா? 180 00:17:51,029 --> 00:17:53,198 எனக்கு நர்ஸ் வேண்டாம் என்று கோராவிடம் சொல்லிவிட்டேன். 181 00:17:53,907 --> 00:17:55,242 அவள் எப்படி இருக்கிறாள்? 182 00:17:56,493 --> 00:17:57,494 மோசமாக. 183 00:17:58,453 --> 00:18:01,582 உன்னைப் பற்றி கவலைப்படுகிறாள். நாங்கள் இருவரும் தான். 184 00:18:02,958 --> 00:18:04,793 ஸ்பென்சர், என்னால் எழுதக்கூட முடியவில்லை. 185 00:18:06,420 --> 00:18:08,630 நீ சொல்லு, நான் எழுதுகிறேன். 186 00:18:12,926 --> 00:18:14,303 ஒரு இரவு நீ இங்கு தங்கலாம். 187 00:18:16,555 --> 00:18:17,806 எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தங்கலாம். 188 00:18:24,938 --> 00:18:25,939 நன்றி. 189 00:18:33,322 --> 00:18:35,741 நான் பிறந்த வீட்டையே என்னால் பார்க்க முடிகிறது. 190 00:18:39,745 --> 00:18:41,455 ஆம்ப்ரோஸ் உதவி செய்யப் போகிறானா? 191 00:18:43,165 --> 00:18:45,000 சமதர்ம தத்துவத்தை அவர் ஆதரிக்க மாட்டார். 192 00:18:46,877 --> 00:18:47,878 மன்னித்துவிடு. 193 00:18:48,754 --> 00:18:49,963 ஸ்பென்சர் என்ன நினைக்கிறான்? 194 00:18:50,047 --> 00:18:51,632 தெரியவில்லை. நான் அவனை புறக்கணிக்கிறேன். 195 00:18:53,926 --> 00:18:55,385 அவன் என்னைக் காதலிக்கிறான் போல. 196 00:18:56,261 --> 00:18:57,804 ஏதாவது சொன்னானா? 197 00:18:57,888 --> 00:18:59,014 எனக்கு அப்படித் தோன்றுகிறது. 198 00:19:03,977 --> 00:19:04,978 என்ன விஷயம்? 199 00:19:06,855 --> 00:19:09,650 ஸ்டெல்லா பற்றியது. அவளுக்கு உடம்பு சரியில்லை. 200 00:19:10,317 --> 00:19:11,693 இன்னும் ஜுரம் இருக்கிறதா? 201 00:19:12,402 --> 00:19:15,697 காசநோய். இறந்து கொண்டு இருக்கிறாள் போல. 202 00:19:22,913 --> 00:19:26,208 என்னைப் பார்க்க விரும்புகிறாள், ஆனால், திரும்பிப் போக தயக்கமாக இருக்கிறது. 203 00:19:28,085 --> 00:19:29,086 பயமா? 204 00:19:31,129 --> 00:19:32,297 கிராமவாசிகளை பார்த்து அல்ல. 205 00:19:34,758 --> 00:19:35,884 வில்லைப் பார்ப்பதா? 206 00:19:41,265 --> 00:19:42,516 என்னைப் பற்றி உனக்குத் தெரியும். நான்... 207 00:19:44,017 --> 00:19:45,185 நான் எல்லாவற்றையும் சொதப்புகிறேன். 208 00:19:48,647 --> 00:19:50,107 அவற்றை சரிசெய்யவும் உனக்குத் தெரியும். 209 00:19:51,692 --> 00:19:53,235 தேவைப்பட்டால், நீ செய்ய வேண்டும். 210 00:19:55,112 --> 00:19:57,197 நீ கோழை இல்லை, கோரா சீபோர்ன். 211 00:20:58,717 --> 00:20:59,718 மார்த்தா. 212 00:21:01,053 --> 00:21:03,597 நீ இவ்வளவு வசதியானவன் என எனக்குத் தெரியாது. 213 00:21:03,680 --> 00:21:04,932 உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி. 214 00:21:10,771 --> 00:21:11,772 கேளு. 215 00:21:12,481 --> 00:21:17,277 இந்த புது வீட்டுச் சொந்தக்காரர் யோசனை எனக்கு அதிகமாக தோன்றுகிறது, பிறகு... 216 00:21:17,361 --> 00:21:19,112 அதைவிட அதிகம். என்னிடம் ஒரு திட்டம் இருக்கிறது. 217 00:21:19,196 --> 00:21:20,239 வேண்டாம். 218 00:21:21,406 --> 00:21:24,076 மன்னிக்கவும், ஒரு ஆணை தன்வசம் இழுத்து வரும் பெண் நான் இல்லை... 219 00:21:24,159 --> 00:21:26,954 -இல்லை, கண்டிப்பாக இல்லை. ஆனால்... -திருமணம், பெண்களை அடிமைப்படுத்தும். 220 00:21:27,037 --> 00:21:29,706 -சமுதாய ரீதியாக, பண ரீதியாக. -என்ன? இல்லை. 221 00:21:29,790 --> 00:21:32,876 ஆமாம், புரட்சிக்கு அது ஒரு மிகப் பெரிய தடை. 222 00:21:33,418 --> 00:21:35,963 இது அப்படிப்பட்ட திட்டம் இல்லை. 223 00:21:39,591 --> 00:21:43,387 சமூக வீட்டு வசதிக்காக ஒரு பிரச்சாரம் செய்ய என் டிரஸ்டைப் பயன்படுத்த முடிவு செய்திருக்கிறேன், 224 00:21:43,470 --> 00:21:45,013 அதை நடத்த எனக்கு ஒருவர் தேவை. 225 00:21:46,974 --> 00:21:48,684 நாம் சேர்ந்து பணியாற்ற வேண்டும். 226 00:21:50,519 --> 00:21:51,937 உனக்கு ஒரு வேலை கொடுக்கிறேன். 227 00:22:24,219 --> 00:22:27,222 ஹலோ, காக். உனக்காக ஏங்கினேன். 228 00:22:31,685 --> 00:22:32,686 கோபால்ட். 229 00:22:35,355 --> 00:22:36,356 சியான். 230 00:22:38,984 --> 00:22:42,154 உள்ளே வாசனை திரவியம் மற்றும் குளியல் சோப்பு இருக்கிறது. 231 00:22:44,531 --> 00:22:45,949 வந்ததற்கு நன்றி. 232 00:22:46,783 --> 00:22:48,118 அவனை அழைத்து வந்ததற்கு. 233 00:22:48,702 --> 00:22:51,288 கண்டிப்பாக. நாங்களும் உனக்காக ஏங்கினோம். 234 00:22:55,584 --> 00:22:57,419 நீ வரமாட்டாய் என்று கவலைப்பட்டேன். 235 00:22:59,505 --> 00:23:01,131 உன்னை ஒருமுறை பார்க்க விரும்பினேன். 236 00:23:16,271 --> 00:23:17,773 எப்படி உணர்கிறாய்? 237 00:23:19,775 --> 00:23:20,776 நான் தயார். 238 00:23:22,986 --> 00:23:24,321 இல்லை, அப்படி சொல்லாதே. 239 00:23:27,241 --> 00:23:28,700 அப்படித்தான் இருக்கிறேன். 240 00:23:34,623 --> 00:23:36,166 குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள்? 241 00:23:41,797 --> 00:23:44,341 பள்ளியிலிருந்து வந்த பிறகு கிராமத்தில் ஒரு பெண் அவர்களைப் பார்த்துக் கொள்கிறாள். 242 00:23:44,842 --> 00:23:46,093 எனக்கு சோர்வாக இருக்கிறது. 243 00:23:47,803 --> 00:23:50,889 நீ நலமா? இப்போது ஓய்வு எடுக்க வேண்டுமா? 244 00:23:50,973 --> 00:23:53,600 இல்லை. இப்போது வேண்டாம். 245 00:24:04,319 --> 00:24:05,320 ஸ்டெல்லா? 246 00:24:09,324 --> 00:24:11,577 நீ என்னிடம் ஏதாவது பேச வேண்டுமா? 247 00:24:16,999 --> 00:24:18,000 ஆமாம். 248 00:24:24,590 --> 00:24:26,049 நீ சென்று வில்லை சந்திப்பாயா? 249 00:24:30,762 --> 00:24:33,015 என்ன? மாட்டேன். 250 00:24:33,098 --> 00:24:34,850 அவருக்கு பேச ஒருவர் வேண்டும். 251 00:24:35,642 --> 00:24:37,186 ஆனால் நான் உன்னைப் பார்க்கத் தான் வந்திருக்கிறேன். 252 00:24:41,481 --> 00:24:43,066 அவர் தேவாலயத்தில் இருப்பார். 253 00:24:47,613 --> 00:24:49,615 சரி, நான் அவரை தொந்தரவு செய்யக் கூடாது. 254 00:24:52,910 --> 00:24:55,454 நான் உன்னிடம் கேட்கிறேன், கோரா. 255 00:25:00,083 --> 00:25:01,251 எனக்கு அது தான் வேண்டும். 256 00:25:05,714 --> 00:25:06,840 அவனை என்னிடம் விட்டுவிட்டு போ. 257 00:25:59,893 --> 00:26:01,353 உங்களை வர வேண்டாம் என்று சொன்னேனே. 258 00:26:01,436 --> 00:26:02,855 நான் ஸ்டெல்லாவை பார்க்க வேண்டும். 259 00:26:05,065 --> 00:26:06,817 அவள் தான் உங்களை வந்து பார்க்கச் சொன்னாள். 260 00:26:11,154 --> 00:26:12,823 வேண்டாம் என்றால் நான் போகிறேன். 261 00:26:18,787 --> 00:26:19,955 நாம் நடந்து கொண்டே பேசலாமா? 262 00:26:25,627 --> 00:26:27,588 கடலுக்கு படகுகள் போகின்றனவா? 263 00:26:27,671 --> 00:26:29,089 இல்லை. 264 00:26:29,173 --> 00:26:30,465 எல்லோரும் இன்னும் பயத்தில் தான் இருக்கின்றனர். 265 00:26:32,467 --> 00:26:34,511 குழந்தைகள் இதை எப்படி பார்க்கிறார்கள்? 266 00:26:39,224 --> 00:26:41,518 ஸ்டெல்லாவின் நோய் பற்றி அவர்களிடம் சொல்லவில்லை. 267 00:26:43,395 --> 00:26:44,897 நயோமி இன்னும் கிடைக்காத போது, 268 00:26:46,690 --> 00:26:47,941 அது மிகவும் கொடுமையாகத் தோன்றுகிறது. 269 00:26:51,695 --> 00:26:54,031 நீங்கள் யாரிடமாவது மனம்விட்டு பேச வேண்டும் என்று ஸ்டெல்லா நினைக்கிறாள். 270 00:26:57,367 --> 00:26:58,368 என்னோடு பேசுங்கள். 271 00:27:03,957 --> 00:27:05,292 அவள் மிகவும் தைரியமானவள். 272 00:27:07,628 --> 00:27:10,506 என்னை விட அவள் நன்றாக எதிர்நோக்கி இருக்கிறாள். 273 00:27:13,217 --> 00:27:15,177 கொஞ்ச காலமாக அவளுக்குத் தெரிந்திருக்கிறது. 274 00:27:17,721 --> 00:27:19,056 ஆமாம், அவள் அதை ஏற்றுக்கொண்டாள். 275 00:27:25,979 --> 00:27:27,397 சில சமயங்களில், அவளது... 276 00:27:29,858 --> 00:27:31,109 மனம் நிறைய யோசிக்கும். 277 00:27:35,155 --> 00:27:39,952 பிறகு, என் ஸ்டெல்லாவாக, என்னிடம் திரும்புவாள். 278 00:27:44,206 --> 00:27:45,207 ஆனால்... 279 00:27:48,669 --> 00:27:50,420 அவள் மனதால் விலகும்போது கூட, நான்... 280 00:27:53,632 --> 00:27:55,133 அவளை மேலும் காதலிக்கிறேன். 281 00:27:58,011 --> 00:27:59,680 அவளை எப்போதும் காதலிப்பேன், கோரா. 282 00:28:03,141 --> 00:28:04,226 எனக்குத் தெரியும். 283 00:28:05,853 --> 00:28:07,104 நீங்கள் நேசிப்பீர்கள் என்று தெரியும். 284 00:28:16,989 --> 00:28:18,574 உன் அம்மா சரியாக சொன்னாள், தெரியுமா? 285 00:28:19,825 --> 00:28:21,159 அந்த பாம்பு உயிரோடு இருக்கிறது. 286 00:28:21,952 --> 00:28:23,120 நீங்கள் அதைப் பார்த்தீர்களா? 287 00:28:24,830 --> 00:28:28,500 -எப்படி இருக்கும்? மிகப் பெரியதா? -ஆமாம். 288 00:28:30,544 --> 00:28:32,546 வந்து அதைப் பார்க்கிறாயா? 289 00:28:48,562 --> 00:28:49,938 இவை பாம்பிற்காகவா? 290 00:29:07,664 --> 00:29:09,041 கொஞ்சம் எடுத்து வை. 291 00:29:10,918 --> 00:29:12,377 உன் அம்மாவிற்காக எடுத்து வை. 292 00:29:23,972 --> 00:29:25,307 என்னை மன்னித்துவிடுங்கள், வில், 293 00:29:26,892 --> 00:29:28,602 உங்களுக்கு விஷயங்களை மோசமாக்கி விட்டேன். 294 00:29:29,186 --> 00:29:30,312 இல்லை, கோரா. 295 00:29:32,564 --> 00:29:33,857 எனக்கு வேண்டியது எல்லாம் இருந்த போதும், 296 00:29:35,692 --> 00:29:37,694 நான் உன் மீது ஆசைப்பட்டேன். 297 00:29:39,071 --> 00:29:40,239 அது அவ்வளவு எளிதல்ல. 298 00:29:41,907 --> 00:29:42,950 இல்லையா? 299 00:29:46,954 --> 00:29:48,830 காதல் கணக்கு செய்ய முடியாதது. 300 00:29:50,374 --> 00:29:52,209 அது திருமணத்தோடு முடியாது. 301 00:29:54,753 --> 00:29:56,713 காதலிக்க பல வழிகள் உண்டு. 302 00:30:01,134 --> 00:30:03,053 மகிழ்ச்சியான திருமணம் பற்றி உனக்குத் தெரியாது. 303 00:30:06,473 --> 00:30:09,059 இருந்தாலும் ஒருவரை நேசிப்பது எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியும். 304 00:30:13,438 --> 00:30:15,065 திரும்பி நேசிக்கப்படுவதும். 305 00:31:25,093 --> 00:31:26,845 வால்டர் இவான்ஸ் மற்றும் கோ. லிமிடெட் டெர்பி 306 00:31:35,020 --> 00:31:37,272 இதோ. முடிந்துவிட்டது. 307 00:31:38,440 --> 00:31:39,983 நாம் உள்ளே போகலாமா? 308 00:31:46,615 --> 00:31:49,993 நீங்கள் ஏன் உள்ளே வருகிறீர்கள்? 309 00:31:52,412 --> 00:31:53,830 நாம் எங்கே போகிறோம்? 310 00:31:56,875 --> 00:31:58,168 என் படகைத் தள்ளிவிடுவாயா? 311 00:31:59,294 --> 00:32:00,629 உன்னால் அப்படி செய்ய முடியுமா? 312 00:32:29,116 --> 00:32:30,534 அவனை சந்திக்க நான் தயார். 313 00:32:32,327 --> 00:32:33,537 பாம்பையா? 314 00:32:35,539 --> 00:32:36,707 என் இறைவன் மற்றும் அரசன். 315 00:33:58,914 --> 00:34:00,332 அம்மா! 316 00:34:00,415 --> 00:34:01,834 ஃபிராங்கி? 317 00:34:02,876 --> 00:34:04,503 -என்ன விஷயம்? -என்ன நடந்தது? 318 00:34:04,586 --> 00:34:05,587 ஸ்டெல்லா எங்கே? 319 00:34:07,714 --> 00:34:08,715 ஃபிராங்கி. 320 00:34:10,551 --> 00:34:12,177 அவர் பாம்பைப் பார்க்கச் சென்றிருக்கிறார். 321 00:34:12,261 --> 00:34:13,804 -என்ன? -என்ன சொல்கிறாய்? 322 00:34:15,347 --> 00:34:18,641 உனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அவள் எங்கே என்று மட்டும் சொல். 323 00:34:18,725 --> 00:34:20,268 அவர் படகில் இருக்கிறார். 324 00:34:21,687 --> 00:34:22,688 என்ன? 325 00:35:42,392 --> 00:35:45,771 நாங்கள் பாம்பைப் பார்த்தோம், கோரா. நாங்கள் அதைப் பார்த்தோம். 326 00:35:50,400 --> 00:35:51,485 ஒன்றும் பிரச்சினை இல்லை. 327 00:36:12,464 --> 00:36:13,799 ஸ்டெல்லா எங்கே போகிறார்? 328 00:36:15,175 --> 00:36:16,718 வில்லுடன், திரும்ப வீட்டிற்கு. 329 00:36:17,886 --> 00:36:20,848 முன்னதாக, போவதற்கு தயார் என்று சொன்னாரே. 330 00:36:24,935 --> 00:36:26,353 ஸ்டெல்லாவுக்கு உடம்பு சரியில்லை. 331 00:36:28,814 --> 00:36:30,357 அவர் இறந்துவிடுவாரா? 332 00:36:30,440 --> 00:36:32,734 நாம் எல்லோருமே ஒரு நாள் இறப்போம். 333 00:36:35,571 --> 00:36:37,030 ஆனால் அவரது காலத்திற்கு முன்னரே, 334 00:36:37,656 --> 00:36:39,116 அப்பாவைப் போலவா? 335 00:36:42,661 --> 00:36:44,371 ஆமாம், அப்படியும் நடக்கலாம். 336 00:36:49,251 --> 00:36:50,794 நீங்கள் இறக்கக் கூடாது. 337 00:36:51,920 --> 00:36:53,589 எனக்கு அப்படி இல்லை. 338 00:36:54,214 --> 00:36:56,592 நிறைய வேலை இருக்கிறது. 339 00:36:56,675 --> 00:36:57,718 நல்லது. 340 00:39:00,465 --> 00:39:01,466 நயோமி. 341 00:39:04,136 --> 00:39:05,929 எல்லாம் சரியாகிவிடும், அப்பா. 342 00:39:10,767 --> 00:39:12,186 நான் அந்தப் பாம்பைப் பார்த்தேன். 343 00:39:13,562 --> 00:39:14,688 அது இறந்துவிட்டது என நினைக்கிறேன். 344 00:39:19,234 --> 00:39:20,235 அது முடிந்துவிட்டது. 345 00:39:28,952 --> 00:39:31,955 கடற்கரையில் இருக்கிறது! வாருங்கள். 346 00:39:35,167 --> 00:39:36,585 இன்று ஞாயிற்றுக்கிழமை இல்லை தானே? 347 00:39:45,886 --> 00:39:48,555 மிருகம் இறந்துவிட்டது. கடற்கரையில் இருக்கிறது. 348 00:39:49,640 --> 00:39:52,142 எல்லோருக்கும் சொல்ல வேண்டும். பார்சனுக்கு சொல்லு! 349 00:39:52,226 --> 00:39:53,268 அந்த மிருகம் இறந்துவிட்டது. 350 00:39:53,352 --> 00:39:55,479 துறைமுகத்தில் இருக்கிறது. நீங்களே பாருங்கள். 351 00:40:08,700 --> 00:40:10,035 அது பாம்பு இல்லை. 352 00:40:10,577 --> 00:40:11,954 அது என்ன? அடக் கடவுளே. 353 00:40:54,496 --> 00:40:55,497 நயோமி. 354 00:40:56,248 --> 00:40:57,249 ஜோ! 355 00:41:19,021 --> 00:41:20,439 அது இங்கு ஏன் வந்தது? 356 00:41:23,317 --> 00:41:25,485 பூகம்பத்தினால் அதன் வழி மாற்றம் அடைந்திருக்கலாம். 357 00:41:28,822 --> 00:41:31,617 ஏன் எல்லோரும் அதை பாம்பு என்று நினைத்தார்கள்? 358 00:41:32,201 --> 00:41:34,578 தங்களுக்கு புரியாத விஷயங்களைப் பற்றி மக்கள் பயப்படுவார்கள். 359 00:41:37,372 --> 00:41:38,957 தவறான முடிவுகள் எடுப்பார்கள். 360 00:41:42,336 --> 00:41:43,795 அது இறப்பதில் எனக்கு விருப்பமில்லை. 361 00:44:21,745 --> 00:44:27,751 ஆறு மாதங்களுக்குப் பிறகு 362 00:44:47,646 --> 00:44:49,064 திருமதி. சீபோர்ன்? 363 00:44:49,147 --> 00:44:50,566 பேராசிரியரே. 364 00:44:51,066 --> 00:44:52,401 இன்னொரு கடிதம் வந்திருக்கிறது. 365 00:44:53,402 --> 00:44:54,403 நன்றி. 366 00:45:09,376 --> 00:45:11,962 எப்படி இருக்கிறாய், கோரா? 367 00:45:13,130 --> 00:45:14,840 பெரிய பள்ளத்தில் என நினைக்கிறேன், சரியா? 368 00:45:17,551 --> 00:45:18,719 உனக்காக ஏங்குகிறேன். 369 00:45:19,970 --> 00:45:22,806 நீ எனக்காக ஏங்கும் அளவிற்கு இல்லை. 370 00:45:25,142 --> 00:45:27,978 இறுதியாக என்னை பாராட்டும் மக்களைக் கண்டேன். 371 00:45:28,604 --> 00:45:30,772 மருத்துவ பள்ளியின் தலைவராகி இருக்கிறேன். 372 00:45:31,732 --> 00:45:35,861 இருதயத்தின் ரகசியங்களை நான் அவர்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டுமாம். 373 00:45:37,738 --> 00:45:39,740 சரி, உன் வாழ்க்கை எப்படி இருக்கிறது? 374 00:45:40,824 --> 00:45:43,285 இப்போது வில்லிடம் இருந்து ஏதாவது தகவல் தெரிந்ததா? 375 00:45:57,424 --> 00:46:00,427 “திரு. கார்த் பார்க்கவே மாட்டார் என்று மக்கள் நினைப்பது போல 376 00:46:00,511 --> 00:46:03,639 எவெர்ஸ்லி காட்டில் அவர் ஒரு நரியைப் பார்க்காவிட்டால், 377 00:46:03,722 --> 00:46:08,143 அதற்கு நரிகள் என்று எதுவும் இல்லை என்று அர்த்தமில்லை.” 378 00:46:15,108 --> 00:46:17,194 நீ போ. நன்றாக தூங்கு. 379 00:46:18,654 --> 00:46:19,655 இரவு வணக்கம். 380 00:46:20,447 --> 00:46:21,865 நான் ஒரு நொடியில் வருகிறேன், ஜோ. 381 00:46:56,400 --> 00:46:57,484 அன்புள்ள வில், 382 00:46:58,443 --> 00:47:00,320 ஒவ்வொரு நாளும் உங்களைப் பற்றி நினைக்கிறேன், 383 00:47:01,238 --> 00:47:03,490 நாம் பகிர்ந்து கொண்டதையும், அதன் அர்த்தம் பற்றியும். 384 00:47:05,242 --> 00:47:08,161 நான் வருந்தி, மகிழ்கிறேன். 385 00:47:08,954 --> 00:47:12,249 உங்களை நேசிக்கிறேன், நீங்கள் இல்லாமல் இருப்பேன். 386 00:47:14,376 --> 00:47:15,419 இருந்தாலும், 387 00:47:16,336 --> 00:47:17,421 தயவுசெய்து பதில் எழுதுங்கள். 388 00:47:27,097 --> 00:47:29,391 பாதிரியார் வில்லியம் ரான்சம் தி ரெக்டரி 389 00:47:29,474 --> 00:47:31,727 ஆல்ட்வின்டர் எஸ்ஸெக்ஸ் 390 00:48:37,793 --> 00:48:39,294 நீங்கள் பதில் எழுதவே இல்லையே. 391 00:48:43,340 --> 00:48:44,842 எனக்கு நிறைய சொல்ல வேண்டி இருந்தது. 392 00:49:13,287 --> 00:49:14,538 நாம் நடந்து கொண்டே பேசலாமா? 393 00:50:52,845 --> 00:50:54,847 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்