1 00:00:07,341 --> 00:00:09,841 இந்த பூமி மிகவும் வண்ணமயமாக இருப்பதால், 2 00:00:10,677 --> 00:00:13,677 வாழ்க்கையில் சிறிய விஷயங்களை தவறவிடுவது எளிது. 3 00:00:15,766 --> 00:00:17,636 ஆனால், சற்று கூர்ந்து கவனித்தால்... 4 00:00:18,101 --> 00:00:20,561 அங்கு கண்டறியப்படாத ஒரு உலகமே உள்ளது. 5 00:00:22,648 --> 00:00:24,978 இந்த உலகில் சிறிய ஹீரோக்களுக்கும்... 6 00:00:26,485 --> 00:00:27,815 சிறிய வில்லன்களுக்கும்... 7 00:00:29,029 --> 00:00:31,409 அசாத்திய சக்தி தேவை... 8 00:00:34,618 --> 00:00:40,038 மாபெரும் முரண்பாடுகளுக்கு எதிராக வெற்றிபெறுவதற்கு அவர்களுக்கு உதவ. 9 00:00:57,057 --> 00:00:58,677 ஆப்பிரிக்க சவானா. 10 00:01:01,520 --> 00:01:03,360 இது பிரபலமான மிருகங்களின் நிலம். 11 00:01:08,986 --> 00:01:11,316 நம்முடைய கிரகத்தின் மிகப்பெரிய, மிகவும் கம்பீரமான... 12 00:01:11,405 --> 00:01:12,905 வர்ணனையாளர் பால் ரட் 13 00:01:12,990 --> 00:01:14,620 ...சில விலங்குகளின் தாயகம். 14 00:01:21,248 --> 00:01:25,998 ஆனால் யானைகளின் கால்களுக்கு அடியில், ஆராயப்படாத ஒரு உலகம் இருக்கிறது. 15 00:01:28,714 --> 00:01:31,344 யானைமூஞ்சுறுகளின் உலகம். 16 00:01:39,683 --> 00:01:45,403 இது எல்லா வகையான ஆச்சரியமான சிறிய புல் உண்ணிகளையும் வேட்டையினங்களையும் கொண்டது. 17 00:01:53,363 --> 00:01:57,373 ஆனால் ராட்சதர்களின் தேசத்தில் சிறியதாக இருப்பது ஒருபோதும் எளிதானது அல்ல. 18 00:01:59,786 --> 00:02:05,036 மந்தைகள் இந்த வழியாக செல்லும்போது, வாழ்க்கை இன்னும் கடினமானதாக மாறும். 19 00:02:05,459 --> 00:02:09,839 சவானா 20 00:02:14,468 --> 00:02:17,678 யானைமூஞ்சுறு ஒரு வெள்ளெலியை விட பெரியது அல்ல. 21 00:02:19,848 --> 00:02:22,138 ஆனால் மிக வேகமானது. 22 00:02:28,440 --> 00:02:32,400 அதன் அளவுக்கு, அது ஒரு சிறுத்தையை விட மூன்று மடங்கு வேகமானது. 23 00:02:34,655 --> 00:02:39,865 உணவுக்காக இடைவிடாத வேட்டையில் மணிக்கு 30 கிலோமீட்டர் வேகத்தில் ஓடுகிறது. 24 00:02:45,040 --> 00:02:48,460 இந்த வேகமான வாழ்க்கை வாழ்வதற்கு ஒவ்வொரு நாளும் தனது உடல் எடையில் 25 00:02:49,795 --> 00:02:51,955 மூன்றில் ஒரு பகுதி அளவுக்கு சாப்பிட வேண்டும். 26 00:02:56,051 --> 00:03:00,351 எனவே, வறண்ட காலங்களில் கூட, போதுமான உணவைத் தேட அதற்கு உதவ ஆயிரக்கணக்கான 27 00:03:01,431 --> 00:03:05,351 சதுர மீட்டருக்கு மேல் பாதைகளின் வலையமைப்பை உருவாக்கியுள்ளது. 28 00:03:15,279 --> 00:03:17,869 கண் சிமிட்டும் நேரத்தில் நாகப்பாம்பு தாக்கிவிடும். 29 00:03:24,955 --> 00:03:27,825 ஆனால் அதன் தடங்கள் அது தப்பிப்பதற்கு உதவுகின்றன. 30 00:03:32,629 --> 00:03:36,969 யானைமூஞ்சுறுவின் வாழ்க்கை சுறுசுறுப்பானது... அதோடு தனிமையானது. 31 00:03:39,511 --> 00:03:42,511 இந்த பெரிய சிவப்பு கோட்டையின் மன்னர்களைப் போலில்லை. 32 00:03:58,864 --> 00:04:02,494 குள்ள கீரிப்பிள்ளைகள் பெரும்பாலும் வீட்டை கரையான் புற்றுகளிலேயே உருவாக்குகின்றன. 33 00:04:13,712 --> 00:04:15,552 உங்கள் கையளவே இருக்கும் இவை, 34 00:04:17,882 --> 00:04:23,472 எண்ணிக்கையில் வலிமையையும் கதகதப்பையும் தேடிக்கொள்கின்றன. 35 00:04:27,851 --> 00:04:30,691 சவானாவில் காலைப்பொழுதுகள் வியக்கத்தக்க அளவு குளிரானவை. 36 00:04:34,983 --> 00:04:36,993 தாமதமாக எழுவதெல்லாம் மிகவும் எளிதானது. 37 00:04:42,991 --> 00:04:44,201 ஆனால் இன்று அப்படியில்லை. 38 00:04:50,249 --> 00:04:52,249 இந்த சிறிய இருவாய்க்குருவி பசியோடு இருக்கிறது. 39 00:04:56,880 --> 00:04:58,720 காலை உணவைப் பிடிக்க ஆர்வமாக இருக்கிறது. 40 00:05:09,268 --> 00:05:13,688 20 கீறிபிள்ளைகளும் ஒரு குருவியும் விசித்திரமான அணியாகத் தோன்றலாம். 41 00:05:15,774 --> 00:05:18,994 ஆனால் சிறிதாக இருக்கும்போது, ஒற்றுமையாக இருப்பது பலன் தரும். 42 00:05:24,116 --> 00:05:25,736 கீரிபிள்ளை இரையை வெளியே கொண்டு வரும். 43 00:05:30,247 --> 00:05:32,667 அப்போது இருவாய்க்குருவி ஆபத்து வருகிறதா என கண்காணிக்கும். 44 00:05:36,628 --> 00:05:39,548 குள்ள கீறிபிள்ளை ஒரு பெரிய பகுதியில் ரோந்து செல்லும், 45 00:05:39,631 --> 00:05:41,971 சுமார் 50 கால்பந்து மைதானங்கள் அளவிலான பகுதியை, 46 00:05:42,050 --> 00:05:44,600 வழியில் தங்கள் பிரதேசத்தை குறித்தவாறே. 47 00:05:46,263 --> 00:05:49,893 அதிக உயரத்தில் வாசனையை குறிப்பதால், அவை பெரியதாக மற்றவைகளுக்குத் தோன்றும். 48 00:05:58,066 --> 00:06:03,066 வறண்ட காலங்களில் கூட, அவர்களது பிரதேசம் அவர்களுக்கு தேவையான உணவை வழங்குகிறது. 49 00:06:07,075 --> 00:06:09,575 அவை ஆப்பிரிக்காவின் மிகச்சிறிய மாமிச உண்ணியாக இருக்கலாம், 50 00:06:10,245 --> 00:06:12,865 ஆனால் அவர்கள் பெரிய மிருகத்தை வேட்டையாட பயப்படுவதில்லை. 51 00:06:37,064 --> 00:06:38,904 ஒரு விஷ பாபூன் சிலந்தி. 52 00:06:48,283 --> 00:06:50,123 ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்துவதன் மூலம், 53 00:06:50,827 --> 00:06:54,497 இந்த உறுதியான அணி மிகக் கடுமையான காலங்களில் கூட உயிர்வாழ முடியும். 54 00:07:16,728 --> 00:07:19,858 ஆனால் மழை வரும்போது எல்லாம் மாறுகிறது. 55 00:07:42,629 --> 00:07:45,419 வீடற்ற ஒரு வாழ்க்கை கொஞ்ச பாதுகாப்பையே வழங்குகிறது. 56 00:07:47,718 --> 00:07:50,258 ஆனால் கீறிபிள்ளை பாதுகாப்பாகவும் கதகதப்பாகவும் இருக்கும். 57 00:08:05,152 --> 00:08:06,782 அவை தங்கள் வீட்டை சரியாக தேர்வு செய்திருக்கின்றன. 58 00:08:16,580 --> 00:08:19,830 கரையான் புற்றுகள் மோசமான வானிலையில் சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன. 59 00:08:32,221 --> 00:08:33,971 உமிழ்நீரையும் மண்ணையும் கலந்து, 60 00:08:35,599 --> 00:08:39,139 இந்த பூச்சிகள் கான்கிரீட் போன்ற உறுதியான கோட்டைகளை உருவாக்குகின்றன... 61 00:08:42,940 --> 00:08:44,690 ஒரு யானை அளவுக்கு பெரிதாக. 62 00:08:56,870 --> 00:09:01,170 மழையைத் தொடர்ந்து, பெரிய விலங்குகள் வரத் தொடங்குகின்றன. 63 00:09:07,714 --> 00:09:10,844 முதலில் இந்த நிலப்பரப்பில் தாக்கத்தை ஏற்படுத்துவது யானைகள் தான். 64 00:09:20,853 --> 00:09:22,693 ஐந்து டன் கால்தடம்... 65 00:09:24,064 --> 00:09:28,864 அனைத்து வகையான சிறிய உயிரினங்களைக் கொண்ட ஒரு நீர் உலகை உருவாக்குகிறது. 66 00:09:34,741 --> 00:09:37,161 கிரகத்தின் மிகப் பழமையான ஒன்றையும் உள்ளடக்கியவாறே. 67 00:09:40,414 --> 00:09:43,384 டைனோசர்களின் கால்தடங்களால் இது போன்ற சிறிய குளங்கள் 68 00:09:44,418 --> 00:09:47,668 உருவான காலத்தில் இருந்தே தலைப்பிரட்டைகள் வசித்து வருகின்றன. 69 00:09:57,222 --> 00:10:01,442 மழை பெய்த சில நாட்களில், முழு சவானாவும் பச்சைப்பசேல் என ஆகிறது. 70 00:10:04,855 --> 00:10:06,855 விலங்குகள் அதை சாப்பிடத் தொடங்கும் போது... 71 00:10:08,275 --> 00:10:10,485 இது மாபெரும் விளைவுகளை ஏற்படுத்துகிறது. 72 00:10:27,503 --> 00:10:30,633 யானைமூஞ்சுறு இதை நகர்த்துவதற்கு வழியே இல்லை. 73 00:10:33,300 --> 00:10:34,550 ஆனால் உதவி வந்துவிட்டது. 74 00:10:36,178 --> 00:10:39,008 சாணமிடப்பட்ட சில நொடிகளில் சாண வண்டுகள் வந்துவிடுகின்றன... 75 00:10:39,640 --> 00:10:41,560 போட்டி வருவதற்கு முன் ஒரு பங்கை 76 00:10:41,642 --> 00:10:43,852 பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையில். 77 00:10:50,609 --> 00:10:52,439 இந்த பந்து மிகவும் விலைமதிப்பற்றது. 78 00:10:56,156 --> 00:11:00,616 அதன் உணவும், ஒரு துணையை வெல்வதற்கான நம்பிக்கைகள் அனைத்தும் அதில் உள்ளன. 79 00:11:11,380 --> 00:11:15,680 இந்த சிறிய உலகில், ஒரு அடிக்கூட ஒரு பின்னடைவாக இருக்கலாம். 80 00:11:18,512 --> 00:11:21,602 ஆனால் நெரிசலில் மிதிபடுதல் என்பது ஒரு பேரழிவாக இருக்கலாம். 81 00:11:24,852 --> 00:11:30,362 ஒரு மில்லியனுக்கும் அதிகமான காட்டுமானும் வரிக்குதிரையும் இடம் பெயர்கிறது. 82 00:11:33,819 --> 00:11:38,949 புதிய புல் கிடைப்பது உறுதி என்ற நம்பிக்கை... இங்கே வரச் செய்கிறது. 83 00:11:43,328 --> 00:11:45,958 கிரீடம் உடைய ஆட்காட்டி குருவிகள் சவானாவில் திறந்தவெளியில் கூடு கட்டுகின்றன. 84 00:11:49,001 --> 00:11:52,171 இந்த குருவியின் புதிய முட்டைகள் மிதிக்கப்படும் அபாயத்தில் உள்ளன. 85 00:11:57,676 --> 00:11:59,136 கணுக்கால் உயரமே இருந்தாலும், 86 00:12:00,095 --> 00:12:02,555 ஒரு காட்டு மானை எதிர்க்க அது பயப்படவில்லை. 87 00:12:14,860 --> 00:12:18,490 ஆனால் காட்டுமானின் ஒரு மந்தை என்பது தடுத்து நிறுத்த முடியாதது. 88 00:12:39,551 --> 00:12:43,101 ஆச்சரியப்படும் விதமாக, எந்த முட்டையும் உடையவில்லை, 89 00:12:45,098 --> 00:12:47,308 ஆனால் குஞ்சு பொரிப்பதற்கு இன்னும் ஒரு மாதம் ஆகும். 90 00:12:55,234 --> 00:12:57,954 யானைமூஞ்சுறுவின் தடங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. 91 00:13:09,957 --> 00:13:12,287 கொஞ்சம் நெடுஞ்சாலை பராமரிப்பு செய்வதற்கான நேரம் இது. 92 00:13:47,953 --> 00:13:49,163 மீண்டும் வேகமான பாதையில். 93 00:14:07,181 --> 00:14:11,441 மந்தைகள் புற்களை மேயும்போது, ஒட்டகச்சிவிங்கி மரத்தைப் பார்க்கிறது. 94 00:14:23,447 --> 00:14:25,987 அகாசியாக்கள் புதிய இலைகளைத் துளிர்த்திருக்கின்றன. 95 00:14:26,617 --> 00:14:28,487 நீண்ட முட்களால் பாதுகாக்கப்படுகிறது. 96 00:14:31,872 --> 00:14:34,792 அரை மீட்டர் நீளமுள்ள நாக்குக்கு எதிராக அவை அவ்வளவு பயனில்லை. 97 00:14:44,134 --> 00:14:46,764 ஆனால் மரம் இரண்டாம் நிலை பாதுகாப்பைக் கொண்டுள்ளது. 98 00:15:01,860 --> 00:15:04,950 அகாசியா எறும்புகளின் இராணுவம் மீட்புக்குத் திரண்டு வருகிறது. 99 00:15:10,369 --> 00:15:14,329 தாடைகளில் ஒட்டிக்கொண்டு ஒட்டகச்சிவிங்கியை தாக்கும். 100 00:15:25,217 --> 00:15:27,217 இறுதியாக அது அங்கிருந்து நகரும் வரை. 101 00:15:30,013 --> 00:15:34,523 அகாசியா தனது விசுவாசமான இராணும் தங்க சிறப்பு வீங்கிய முட்களை வளர்க்கிறது. 102 00:15:40,482 --> 00:15:44,362 அதோடு அவற்றுக்கு உணவாக எறும்பு அளவிலான தேன் நிரப்பப்பட்ட பழங்களையும். 103 00:15:47,573 --> 00:15:52,083 ஒன்றாக வேலை செய்வதன் மூலம், இந்த சிறிய உயிரினங்கள் ராட்சதர்களை எதிர்க்க முடியும். 104 00:16:00,335 --> 00:16:03,205 ஆனால் சில நேரங்களில், ஓடுவது நல்லது. 105 00:16:07,259 --> 00:16:09,299 கூரான, குத்தும் கொம்புகள், 106 00:16:10,095 --> 00:16:12,555 150 கிலோ எடை... 107 00:16:16,185 --> 00:16:17,685 ஒரு காட்டுப்பன்றி கம்பீரமானது. 108 00:16:21,690 --> 00:16:24,990 அது எதற்காக வருகிறது என்று கீரிப்பிள்ளைக்கு தெரியும். 109 00:16:29,865 --> 00:16:31,275 கொஞ்சம் அன்புக்காக. 110 00:16:40,792 --> 00:16:44,212 தைரியமான கீரிப்பிள்ளைக்கு சுவையான ஒட்டுண்ணி கிடைக்கும். 111 00:16:49,301 --> 00:16:53,561 மற்றவர்களும் சேரும்போது, காட்டுப்பன்றி ஒட்டுண்ணி இல்லாது இருக்கும். 112 00:17:07,611 --> 00:17:11,241 விரைவில், அதிகமான வாடிக்கையாளர்கள் கீரிப்பிள்ளை ஸ்பாவில் நுழைகிறார்கள். 113 00:17:31,051 --> 00:17:34,891 திரும்பி வரும் வாடிக்கையாளர்களையும் இது தங்கள் பிரதேசமாகக் குறிக்கிறது. 114 00:17:39,351 --> 00:17:41,101 சிறிய மற்றும் புத்திசாலித்தனமான இவை 115 00:17:41,895 --> 00:17:45,475 பெரிய விலங்குகளுடன் தங்களுக்கு பலனளிக்கும் உறவுகளை உருவாக்குகின்றன. 116 00:17:58,537 --> 00:18:01,537 ஆக்ஸ்பெக்கர்கள் மிக உயர்ந்த பரிசுகளை அடையலாம். 117 00:18:04,418 --> 00:18:08,168 ஒட்டுண்ணிகளை பிடிக்க அவற்றின் கூர்மையான அலகுகளைப் பயன்படுத்துகின்றன. 118 00:18:10,465 --> 00:18:14,965 ஒரு விலங்கிற்கு போதுமானதாக இருக்கும்போது, அடுத்தவற்றிற்கு செல்கின்றன. 119 00:18:23,395 --> 00:18:26,435 ஆக்ஸ்பெக்கர்கள் தங்கள் எல்லா உணவையும் கால்களிலேயே பெறுகின்றன. 120 00:18:42,247 --> 00:18:47,037 கொஞ்சம் புத்திகூர்மையோடு அருவருப்படையாமல் இருந்தால், 121 00:18:50,923 --> 00:18:53,433 சிறிய விலங்குகள் புலம்பெயர்தலை அதிகம் பயன்படுத்திக்கொள்கின்றன. 122 00:19:03,477 --> 00:19:06,767 ஆனால் பின்தொடர்ந்து வரும் வேட்டையாடுபவை ஒரு சவாலாக இருக்கக்கூடும். 123 00:19:10,192 --> 00:19:12,402 ஆட்காட்டி குருவியின் முட்டைகள் இப்போது குஞ்சு பொரித்துவிட்டன. 124 00:19:14,279 --> 00:19:16,529 அதன் குஞ்சு இன்னும் அந்த சூழலுக்கு பழகி வருகிறது... 125 00:19:17,741 --> 00:19:19,241 ...இத்தகைய ஆபத்தான உலகில். 126 00:19:36,218 --> 00:19:38,718 குள்ளநரிகள் சந்தர்ப்பவாத வேட்டைக்காரர்கள். 127 00:19:45,435 --> 00:19:46,765 விலங்கு எவ்வளவு சிறிதாக உள்ளதோ, 128 00:19:49,106 --> 00:19:50,686 கொல்வது அவ்வளவு எளிது. 129 00:19:59,658 --> 00:20:00,868 ஒரு துணிச்சலான செயல். 130 00:20:02,744 --> 00:20:06,584 துணிச்சலான தாய் தனது குஞ்சின் மீதிருக்கும் கவனத்தை தன் பக்கம் திருப்புவதற்கு... 131 00:20:07,374 --> 00:20:08,714 தன்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறது 132 00:20:19,887 --> 00:20:23,767 அது நகராத வரை, அது கிட்டத்தட்ட கண்ணுக்கு தெரியாது. 133 00:20:32,107 --> 00:20:34,397 ஆனால் எறும்பு கடிப்பதை புறக்கணிப்பது கடினம். 134 00:20:56,215 --> 00:20:58,215 அம்மா ஒரு திசைதிருப்பலை உருவாக்குகிறது. 135 00:21:11,271 --> 00:21:14,651 குள்ளநரியை திசைதிருப்புவதற்கு போதுமான அளவு. 136 00:21:21,490 --> 00:21:24,200 ஆனால் இடப்பெயர்வு முடியும் வரை அது தனது 137 00:21:24,284 --> 00:21:26,204 குஞ்சைப் பாதுகாத்துக்கொண்டே இருக்க வேண்டும். 138 00:21:32,709 --> 00:21:35,669 பூச்சிகளின் ஒரு சிறிய இடப்பெயர்வு எல்லா இடங்களிலும் 139 00:21:35,754 --> 00:21:37,594 மந்தைகளைப் பின்தொடர்கின்றன. 140 00:21:39,591 --> 00:21:42,721 ஈக்களின் திரள் பெரிய விலங்குகளுக்கு எரிச்சலூட்டுகிறது. 141 00:21:47,516 --> 00:21:50,436 ஆனால் இந்த சிறிய உலகில், இது ஒரு பறக்கும் விருந்து. 142 00:21:53,897 --> 00:21:58,107 மந்தைகளிலிருந்து விலகி, பாறையின் வெளிப்புறங்களில் தனிமைப்படுத்தப்பட்டு, 143 00:21:58,443 --> 00:22:01,613 அகாமா பல்லிகள் உணவு தங்களிடம் வரும் வரை காத்திருக்கின்றன. 144 00:22:25,679 --> 00:22:28,219 பெரும்பாலான நேரங்களில், அது வெற்றிகரமாக அமைவதில்லை. 145 00:22:41,612 --> 00:22:44,202 எனவே, ஒரு பெரிய வாய்ப்பு தங்களுக்கு கிடைக்கும்போது... 146 00:22:46,241 --> 00:22:47,701 அவை அதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 147 00:22:55,125 --> 00:22:57,785 பகல் பொழுதின் வெப்பத்தில் ஓய்வெடுக்க சிங்கங்கள் இங்கு வருகின்றன. 148 00:23:04,885 --> 00:23:07,345 அவற்றுடன் ஈக்களும் வருகின்றன. 149 00:23:08,388 --> 00:23:09,388 நிறைய. 150 00:23:22,528 --> 00:23:24,658 அதிர்ஷ்டம், துணிச்சலானவர்களுக்கே சாதகமானது. 151 00:23:27,407 --> 00:23:29,487 ஆனால் தூங்கும் சிங்கத்தை எழுப்பாமல் இருப்பது நல்லது. 152 00:23:35,499 --> 00:23:38,249 நேரடி இல்லாமல் வேறு அணுகுமுறை இருக்கலாம். 153 00:24:00,440 --> 00:24:03,490 சிறிதாக இருப்பது எவ்வளவு நல்ல விஷயம் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. 154 00:24:39,771 --> 00:24:42,071 ஆனால் ஆபத்தான செயலில் ஈடுபடும்போது... 155 00:24:48,488 --> 00:24:49,698 அதிர்ஷ்டத்தை அதிகம் நம்பகூடாது. 156 00:25:05,005 --> 00:25:08,625 நிலம் காய்ந்தவுடன், மந்தைகள் நகர்கின்றன. 157 00:25:28,654 --> 00:25:30,784 அவை போவதைக் கண்டு சிலர் வருத்தப்பட மாட்டார்கள். 158 00:25:35,077 --> 00:25:36,287 அமைதி திரும்புகிறது. 159 00:25:42,251 --> 00:25:44,631 யானைமூஞ்சுறு மீண்டும் அந்த இடத்தை சுதந்திரமாக சுற்றலாம். 160 00:25:48,674 --> 00:25:50,974 அதிவேகமாக பூச்சிகளை வேட்டையாடலாம்... 161 00:25:52,511 --> 00:25:54,181 அதற்கு தடைகள் எதுவும் இல்லை. 162 00:25:59,726 --> 00:26:01,306 பருவங்கள் மாறும்போது... 163 00:26:02,563 --> 00:26:04,233 புதிய சவால்கள் தோன்றுகின்றன. 164 00:26:23,250 --> 00:26:27,380 உலர்ந்த யானையின் கால்தடம் உண்மையில் செல்லும் பாதையின் முடிவாக இருக்கலாம். 165 00:26:34,303 --> 00:26:36,223 ஆனால் இந்த சிறிய வண்டு வலுவானது. 166 00:26:37,931 --> 00:26:40,561 தனது எடையை விட பத்து மடங்கு எடையை அதனால் தூக்க முடியும். 167 00:26:54,156 --> 00:26:57,866 இப்போது மந்தைகளும் போய்விட்டதால், அதனால் இந்த பந்தை இழக்க முடியாது. 168 00:27:15,052 --> 00:27:17,642 அதன் கடுமையான முயற்சி பலனளித்தது. 169 00:27:22,059 --> 00:27:26,609 தனது பொக்கிஷமான உடைமையைப் பகிர்ந்து கொள்ளவும் அதன் துணையாகவும்... 170 00:27:28,899 --> 00:27:30,149 இருக்க தயாரான ஒரு பெண் வண்டு. 171 00:27:38,283 --> 00:27:40,493 கீரிப்பிள்ளைக்கும் வாழ்க்கை இனிமையாகிறது. 172 00:27:44,414 --> 00:27:46,464 குறைந்தபட்சம், பெரும்பாலான நேரங்களில். 173 00:27:57,761 --> 00:28:01,391 ஒரு நாகப்பாம்புக்கு ஒரு தனி கீரிப்பிள்ளை எளிதில் பலியாகக்கூடும். 174 00:28:03,183 --> 00:28:04,603 ஆனால் அவை ஒன்றாக நிற்கும்போது... 175 00:28:06,854 --> 00:28:09,194 இந்த சிறிய கும்பல் வெல்ல முடியாதது. 176 00:28:22,244 --> 00:28:24,454 இப்போது அவர்களுக்கு புதிய ஆட்கள் கிடைத்திருக்கிறார்கள். 177 00:28:27,624 --> 00:28:28,884 இப்போது ஒரு மாதமே ஆகிறது, 178 00:28:30,544 --> 00:28:32,254 ஆனால் இன்னும் மூன்று மாதங்களில், 179 00:28:32,880 --> 00:28:35,220 அவை அணியின் தீவிர உறுப்பினர்களாக இருப்பார்கள். 180 00:28:40,888 --> 00:28:43,848 பூமியில் மிகப்பெரிய இடப்பெயர்வுக்கு எதிராக கூட, 181 00:28:44,266 --> 00:28:49,306 சிறிய ஹீரோக்கள் வெறுமனே பிழைக்கவில்லை, அவர்கள் செழித்து வளர்கின்றன. 182 00:28:52,983 --> 00:28:55,823 சவானா மிகவும் பிரபல மிருகங்களின் நிலம். 183 00:28:58,488 --> 00:28:59,988 ஆனால் உண்மையில், 184 00:29:00,782 --> 00:29:05,662 இதைப்பற்றிய மிகச் சிறந்த கதைகளுள் சில... மிகச்சிறியவை. 185 00:29:58,173 --> 00:30:00,183 வசன தமிழாக்கம் அருண்குமார்