1 00:00:07,341 --> 00:00:09,841 இந்த பூமி மிகவும் வண்ணமயமாக இருப்பதால், 2 00:00:10,636 --> 00:00:13,676 வாழ்க்கையில் சிறிய விஷயங்களை தவறவிடுவது எளிது. 3 00:00:15,766 --> 00:00:17,426 ஆனால், சற்று கூர்ந்து கவனித்தால்... 4 00:00:18,101 --> 00:00:20,561 அங்கு கண்டறியப்படாத ஒரு உலகமே உள்ளது. 5 00:00:22,648 --> 00:00:24,978 இந்த உலகில் சிறிய ஹீரோக்களுக்கும்... 6 00:00:26,485 --> 00:00:27,815 சிறிய வில்லன்களுக்கும்... 7 00:00:29,029 --> 00:00:31,409 அசாத்திய சக்தி தேவை... 8 00:00:34,618 --> 00:00:40,118 மாபெரும் முரண்பாடுகளுக்கு எதிராக வெற்றிபெறுவதற்கு அவர்களுக்கு உதவ. 9 00:00:53,929 --> 00:00:55,969 லத்தின் அமெரிக்க காடுகள், 10 00:00:57,766 --> 00:00:59,266 பூமியில் வேறு எங்கும் இல்லாததை விட... 11 00:00:59,351 --> 00:01:00,351 வர்ணனையாளர் பால் ரட் 12 00:01:00,435 --> 00:01:01,975 ...பல சிறிய உயிர்களுக்கு வாழ்விடமாக இருக்கிறது. 13 00:01:04,565 --> 00:01:09,145 கீழே கிடக்கும் செடிகளின் சருகுகளில், ஒரு புதிய உயிர் தொடங்குகிறது. 14 00:01:11,655 --> 00:01:15,945 இந்த ஸ்ட்ராபெரி டார்ட் தவளையானது தனது முதுகில் தன் குட்டிகளை சுமந்து செல்கிறது. 15 00:01:19,288 --> 00:01:22,078 குட்டி ஒரு அரிசியின் அளவுதான் இருக்கும். 16 00:01:35,804 --> 00:01:38,434 அடர்ந்த காடுகளின் நிலம் அதன் குட்டிகளுக்கு மிகவும் ஆபத்தானது. 17 00:01:43,228 --> 00:01:45,648 அது வளர தாய் தவளை ஒரு பாதுகாப்பான இடத்தைத் தேட வேண்டும். 18 00:01:49,401 --> 00:01:56,281 இங்கே மேலே, இந்த 40 மீட்டர் ஓங்கி உயர்ந்த மரக் கிளைகளில். 19 00:01:59,786 --> 00:02:01,616 ஒரு திராட்சையின் அளவுள்ள ஒரு தவளைக்கு... 20 00:02:02,998 --> 00:02:05,168 எவரஸ்ட் சிகரத்தில் ஏறுவதைப்போல மிகவும் கடினமானது. 21 00:02:19,640 --> 00:02:21,310 பிசுபிசுப்பான பாதங்கள் அதற்கு இறுக்கமான பிடியை கொடுக்கின்றன. 22 00:02:24,311 --> 00:02:26,731 ஆனால் ஒரு சிறு சறுக்கல் கூட ஆபத்தில் முடியலாம். 23 00:02:35,614 --> 00:02:37,914 மரங்களில் அதோடு ஏராளமான உயிரினங்கள் வாழ்கின்றன. 24 00:02:40,702 --> 00:02:41,702 மரத்தின் வேர் முதல்... 25 00:02:43,539 --> 00:02:44,539 ...உச்சி வரை. 26 00:02:47,459 --> 00:02:50,799 ஒரே மரத்தில் 5,000 வெவ்வேறு வகையான 27 00:02:50,879 --> 00:02:52,509 சிறிய உயிரினங்கள் வாழக்கூடும். 28 00:03:06,186 --> 00:03:10,186 இறுதியாக, சூரியன் பிரகாசிக்கும் இடமான மர உச்சியில். 29 00:03:16,655 --> 00:03:19,365 தரைக்கு மேலே குட்டிகள் வளர்வதற்கு ஒரு ப்ரொமிலியாட் செடி 30 00:03:19,449 --> 00:03:21,079 சரியான குளத்தை உருவாக்கி இருக்கிறது. 31 00:03:29,585 --> 00:03:33,585 உணவு மற்றும் இடத்திற்காக பல சிறிய விலங்குகள் போட்டியிடுவதால், 32 00:03:34,882 --> 00:03:37,182 காட்டில் வாழ்க்கை என்பது நிச்சயமில்லாதது. 33 00:03:39,720 --> 00:03:42,140 நிஜமான நிபுணரால் மட்டுமே உயிர் பிழைத்திருக்க முடியும். 34 00:03:45,809 --> 00:03:50,399 அடர்ந்த காடு 35 00:03:58,405 --> 00:04:00,615 உலகிலேயே மிகவும் சிறிய குரங்கைப் பாருங்கள்... 36 00:04:03,660 --> 00:04:05,080 பிக்மி மார்மோசெட். 37 00:04:09,416 --> 00:04:11,626 ஒரு வளர்ந்த குரங்கே உள்ளங்கைக்குள் அடங்கிவிடும் அளவுதான். 38 00:04:23,263 --> 00:04:29,813 சிறியதாக இருப்பதால் யார் நண்பர், எதிரி அல்லது உணவு என்பதை அறிந்து கொள்வது கடினம். 39 00:04:37,945 --> 00:04:39,815 ஆனால் குறைந்தபட்சம் அதன் கால்களுக்குக் கீழே உள்ள 40 00:04:39,905 --> 00:04:41,105 உணவை அவை எடுத்துக்கொள்ளும். 41 00:04:44,618 --> 00:04:46,698 கூர்மையான பற்களால், சுவைமிகுந்த இனிப்பான மரச்சாறு 42 00:04:46,787 --> 00:04:51,247 நிறையும் துளைகளை உருவாக்க அவை மரப்பட்டைகளைக் கடிக்கின்றன. 43 00:04:53,168 --> 00:04:56,048 ஒரு பெரிய மரத்தில், 1,000திற்கும் அதிகமாக துளைகள் இருக்கும். 44 00:05:02,094 --> 00:05:04,054 ஒரு வளரும் குடும்பத்திற்கு இது போதுமானது. 45 00:05:07,933 --> 00:05:11,813 நல்ல விஷயம். கூட்டத்திற்கு புது வரவுகளும் இருக்கின்றன. 46 00:05:15,566 --> 00:05:17,816 ஒவ்வொன்றும் பிங்-பாங் பந்தின் அளவில். 47 00:05:30,122 --> 00:05:32,752 மார்மோசெட்கள் எப்போதும் இரட்டை குட்டிகளைப் பெற்றெடுக்கும். 48 00:05:35,335 --> 00:05:40,085 குட்டியின் பராமரிப்பை பெற்றோர்கள் இருவரும் பகிர்வார்கள், பெரிய குட்டிகளும் உதவும்... 49 00:05:42,009 --> 00:05:43,219 அதாவது அவை சண்டையிடாத போது. 50 00:05:47,264 --> 00:05:50,604 ஒன்றுகூடி வாழ்வதுதான் இந்த சிறிய உயிரினங்களின் அடிப்படை குணாதிசயம். 51 00:05:54,688 --> 00:05:57,318 அதுபோலத்தான் மரக்கிளையில் தொங்கிக்கொண்டிருப்பதும். 52 00:06:00,402 --> 00:06:02,032 மரத்துக்கு கீழே மிகவும் ஆபத்தானது... 53 00:06:08,744 --> 00:06:10,754 அதே சமயம் மேலே அளவுக்கதிகமான கூட்டம். 54 00:06:12,581 --> 00:06:18,211 மார்மோசெட்டை விட அறுபது மடங்கு பெரிதான ஹவ்லர் குரங்குகள் மேலே ஆதிக்கம் செய்கிறது. 55 00:06:27,679 --> 00:06:31,849 காட்டின் 80% உயிரினங்கள் மர உச்சியில்தான் காணப்படுகின்றன. 56 00:06:47,950 --> 00:06:51,410 காட்டின் நிலத்தில் வாழ்வதென்பது பெரும் போராட்டம். 57 00:06:55,415 --> 00:06:59,035 சூரிய ஒளி நிலத்தில் படுவது அரிது, அதனால் எதுவும் அதிகம் வளர்வதற்கு வாய்ப்பில்லை. 58 00:07:10,681 --> 00:07:13,811 இந்த மிகவும் சிறிய எலி மேலிருந்து விழுவதை நம்பியே இருக்கிறது. 59 00:07:27,406 --> 00:07:29,826 மழைதான் காட்டிற்கு உயிரூட்டும் சக்தி. 60 00:07:33,662 --> 00:07:35,662 ஒவ்வொரு ஆண்டும் மூன்று மீட்டர்கள் அளவுக்கு மழை பெய்கிறது. 61 00:07:39,668 --> 00:07:43,878 ஒவ்வொரு துளியும் சிறிய உயிரினங்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 62 00:07:46,925 --> 00:07:50,175 மழைத்துளிகள் தவளைக்குட்டி உள்ள குளத்தை நிரப்பிக்கொண்டேயிருக்கும். 63 00:07:53,765 --> 00:07:56,765 ஆனால் அந்த மழையே பாதகமாகவும் இருக்கலாம். 64 00:07:58,353 --> 00:08:04,993 செடிகளும் மரப்பட்டைகளும் நீரை உறிஞ்சி மரங்களுக்கு பெரும் எடையை சேர்க்கின்றன. 65 00:08:12,659 --> 00:08:15,449 பெரும் மழை லேசான மண்ணை அடித்துச் சென்றுவிடுகிறது. 66 00:08:20,375 --> 00:08:24,085 ராட்சத மரங்கள் பல நூற்றாண்டுகளாக புயல்களைத் தாங்குகின்றன... 67 00:08:28,217 --> 00:08:29,547 அந்த ஒரு நாள் வரை... 68 00:09:02,876 --> 00:09:05,086 இந்த அளவு பெரிய மரம் ஒன்று விழும்போது... 69 00:09:06,588 --> 00:09:08,838 காட்டில் உள்ள உயிரினங்களுக்கு ஒரு பெரும் இழப்பாகிறது. 70 00:09:15,222 --> 00:09:17,722 ஸ்ட்ராபெரி டார்ட் தவளை பிழைத்துக்கொண்டது. 71 00:09:20,602 --> 00:09:22,602 ஆனால் குட்டி வேட்டையாடப்படும் அபாயத்தில் உள்ளது. 72 00:09:30,988 --> 00:09:33,818 நெருப்பு வயிறு பாம்பால் அதை உணர முடியும். 73 00:09:52,092 --> 00:09:53,932 தாய் தவளை செய்வதற்கு எதுவுமில்லை... 74 00:09:58,182 --> 00:09:59,392 மீண்டும் இனச்சேர்க்கைக்கு தயாராவதைத் தவிர. 75 00:10:10,903 --> 00:10:15,573 சிலருக்கான அழிவை ஏற்படுத்தும் இது சிலருக்கு நன்மை பயக்கிறது. 76 00:10:18,869 --> 00:10:21,409 இலை வெட்டி எறும்புகள் இனி ஏறத் தேவையில்லை. 77 00:10:27,836 --> 00:10:30,506 இலைகள் எறும்புகளைவிட பல மடங்கு அளவில் பெரியவை. 78 00:10:32,758 --> 00:10:36,348 ஆனால் ஒவ்வொரு எறும்பும் அதன் எடையை விட பத்து மடங்கு எடையை சுமக்க முடியும். 79 00:10:47,940 --> 00:10:51,820 எட்டு மில்லியன் எறும்புகள் கொண்ட ஒரு காலனியால் சில நாட்களிலேயே இது போன்ற 80 00:10:51,902 --> 00:10:53,782 ஒரு மரத்தின் இலைகளை அகற்றிவிட முடியும். 81 00:11:04,665 --> 00:11:08,875 விழுந்த ராட்சத மரம் மற்ற சிறிய இலை உண்ணிகள் அனைத்தையும் ஈர்க்கிறது. 82 00:11:11,338 --> 00:11:14,218 துரதிஷ்டவசமாக, மார்மோசெட்டுகள் இலைகளை சாப்பிடுவதில்லை. 83 00:11:16,802 --> 00:11:20,222 ஒரு பெரிய சாறு கொண்ட மரத்தை இழப்பது பெரும் பின்னடைவுதான். 84 00:11:28,230 --> 00:11:32,230 ஆனால் இந்த சிறு குரங்குகளுக்கு ஒரு வியக்கத்தக்க வேட்டையாடும் குணமும் உண்டு. 85 00:11:44,997 --> 00:11:48,627 ஸ்ப்ரிங் போன்ற அதன் கால்கள் மூன்று மீட்டர் உயரத்துக்கு அவற்றை தாவ வைக்கிறது. 86 00:11:52,129 --> 00:11:54,839 வளைந்த நகங்கள் கொக்கி போன்ற ஒரு பிடிப்பை தருகிறது. 87 00:12:05,976 --> 00:12:10,056 அந்த கூர்மையான பற்கள் பூச்சிகள் மீது நன்றாக செயல்படுகின்றன. 88 00:12:18,197 --> 00:12:23,407 கிளைகளின் இடையில் வேட்டையாடுவது இந்த சிறு குரங்குகளுக்கு எளிதான ஒன்றுதான். 89 00:12:32,002 --> 00:12:34,052 அவை கைப்பற்றும் எதையும் சாப்பிடும். 90 00:12:52,773 --> 00:12:55,233 ஆனால் பார்ப்பதெல்லாம் உண்மை கிடையாது. 91 00:12:57,611 --> 00:12:59,911 ஒரு அற்புதமான உருவ மாற்றம். 92 00:13:00,614 --> 00:13:04,624 ஒரு கொடிய பாம்பினைப் போன்ற இந்த கம்பளிப் பூச்சியின் தோற்றம் நம்பும்படியாக உள்ளது, 93 00:13:06,828 --> 00:13:08,078 பயமுறுத்துவதாகவும். 94 00:13:21,176 --> 00:13:23,006 நூற்றுக்கணக்கான ஆண்டுகள் நிழலில் இருந்த பிறகு, 95 00:13:23,554 --> 00:13:28,684 திடீரென காட்டின் தரையில் சூரிய ஒளி படுகிறது. 96 00:13:36,567 --> 00:13:40,987 செயலற்று கிடந்த விதைகள் முளைத்து ஓங்கி வளரத் தொடங்குகின்றன. 97 00:13:44,575 --> 00:13:47,995 இது இப்போது சூரிய வெளிச்சத்திற்கான போட்டியாக மாறுகிறது. 98 00:13:51,623 --> 00:13:54,043 பற்றிக்கொண்டு வளரும் செடிகளும் கொடிகளும் படர்வதற்கு தயாராகின்றன... 99 00:13:57,129 --> 00:14:00,759 வெளிச்சத்தில் தங்கள் இடத்திற்காக சிறு மரங்களின் மீதும் அவை போராடி படர்கின்றன. 100 00:14:14,396 --> 00:14:17,816 விரைவாக விழுந்த மரத்தின் மீது புதிய செடிகள் வளர்கின்றன. 101 00:14:25,574 --> 00:14:30,624 அந்த இடைவெளி ஒரு பசுமையான திறந்த வெளியாக மாற்றமடைகிறது. 102 00:14:38,545 --> 00:14:40,205 ஆனால் இது ஈடன் தோட்டம் இல்லை. 103 00:14:44,259 --> 00:14:46,679 ஹம்மிங் பறவைகள் ஒரு தாளைப் போல லேசானவை. 104 00:14:48,889 --> 00:14:52,179 அவை அளவில் சிறியதாக இருந்தாலும், அவற்றின் ஆக்ரோஷம் அதை ஈடுசெய்கிறது. 105 00:15:02,569 --> 00:15:06,409 சிலவற்றுக்கு கத்தி போன்ற அலகுகள் இருக்கும், பற்களும் கூட. 106 00:15:10,702 --> 00:15:12,702 அனைத்தும் பூக்களுக்காக சண்டையிடுவதற்கே. 107 00:15:17,042 --> 00:15:19,592 ஹம்மிங் பறவைகள் சில நிமிடங்களுக்கு ஒருமுறை உண்ண வேண்டும். 108 00:15:21,296 --> 00:15:25,756 இறகுகள் கொண்ட நாக்கால், அவை வினாடிக்கு 20 முறை விரைவாக தேனை குடிக்கின்றன. 109 00:15:29,972 --> 00:15:31,352 அவை விரைவாக அதைச் செய்ய வேண்டும். 110 00:15:35,310 --> 00:15:37,310 போட்டி கடுமையானதாக இருக்கிறது. 111 00:15:40,232 --> 00:15:42,152 ஆனால் அது இப்படி இருக்க வேண்டியதில்லை. 112 00:15:47,573 --> 00:15:49,993 ஹெலிகோனியாவின் பிறை வடிவ மலர்களிலிருந்து பெரும்பாலான 113 00:15:50,075 --> 00:15:52,695 ஹம்மிங் பறவைகள் உணவைப் பெறுவதற்கு சாத்தியமில்லாமல் போகிறது. 114 00:15:57,124 --> 00:15:59,924 ஆனால் பச்சை ஹெர்மிட் பறவைக்கு நீண்ட, வளைந்த அலகு உள்ளது. 115 00:16:03,213 --> 00:16:05,723 அது தேனை எந்த சிக்கலுமின்றி அருந்த அனுமதிக்கிறது. 116 00:16:17,644 --> 00:16:19,564 கிட்டத்தட்ட. 117 00:16:21,398 --> 00:16:22,818 ஊசியின் முனையை விட சிறியதான, 118 00:16:23,650 --> 00:16:27,280 இந்த மலர் பூச்சிகள் ஹெலிகோனியாவின் தேனை கிட்டத்தட்ட தீர்த்துவிட்டன. 119 00:16:30,157 --> 00:16:32,987 அடுத்த மலரைச் சென்றடைய, அவற்றுக்கு ஒரு போக்குவரத்து உதவி வேண்டும். 120 00:16:41,084 --> 00:16:43,924 அவற்றின் அளவிற்கு, கிட்டத்தட்ட சிறுத்தை போல ஓடக்கூடியவை அவை. 121 00:16:47,299 --> 00:16:49,129 ஹம்மிங் பறவைகளின் அலகு வழியாக விரைந்து சென்று... 122 00:16:51,637 --> 00:16:53,717 அதன் நாசியில் மறைந்துகொண்டு... 123 00:16:58,810 --> 00:17:01,360 அடுத்த மலருக்கு செல்ல தயாராக இருக்கிறது. 124 00:17:13,700 --> 00:17:15,120 திறந்த வெளியில் செடிகள் வளர்ந்ததால், 125 00:17:15,202 --> 00:17:18,622 காட்டின் தரை மீண்டும் நிழலால் மூடப்படுகிறது. 126 00:17:24,211 --> 00:17:26,511 இந்த ஈரமான சூழலில் விழுந்த மரங்களின் எச்சங்கள் அழுகி... 127 00:17:28,674 --> 00:17:31,094 அதில் பூஞ்சைகள் செழித்து வளர்கின்றன. 128 00:17:37,057 --> 00:17:40,057 இங்கே புதிய உணவைத் தேடுவது கடினமான ஒன்றாகிறது. 129 00:17:52,114 --> 00:17:55,164 பிரேசில் விதை பெரும்பாலான விலங்குகளுக்கு மிகவும் கடினமானது. 130 00:17:58,120 --> 00:17:59,330 ஆனால் அகூட்டிக்கு அல்ல. 131 00:18:06,879 --> 00:18:09,509 அதனால் இப்போது உண்ண முடியாததை பிறகு உண்பதற்காகப் புதைத்து வைக்கிறது. 132 00:18:12,718 --> 00:18:14,138 இயல்பாகவே அது பதட்டமானதுதான். 133 00:18:16,346 --> 00:18:17,756 நியாயமான காரணத்திற்காக. 134 00:18:24,897 --> 00:18:27,727 ஒரு வீட்டு பூனை விட மார்கே சற்று பெரியதாக இருக்கும்... 135 00:18:31,361 --> 00:18:33,361 ஆனால் மிகவும் அபாயகரமானது. 136 00:18:59,014 --> 00:19:02,314 இருட்டான காட்டின் தரை பல வேட்டையினங்களை கொண்டது. 137 00:19:05,062 --> 00:19:08,902 சிறிய அளவில், அவை இன்னும் மோசமானவை. 138 00:19:12,277 --> 00:19:13,737 40 சிறு கால்களில் ஊர்ந்து செல்லும் 139 00:19:13,820 --> 00:19:18,030 இந்த விரல் அளவுள்ள வெல்வெட் புழு இரையை அமைதியாக பின்தொடரும். 140 00:19:19,535 --> 00:19:22,575 அவற்றின் வேட்டையாடும் யுக்திகளானது புதுமையான செயல்முறைகளாக இருக்கும். 141 00:19:28,961 --> 00:19:32,801 அதன் உடலில் உள்ள அதிர்வு உணரிகள் இரையின் நகர்வைக் கண்காணிக்கும். 142 00:19:38,470 --> 00:19:40,220 அது நெருக்கமாக ஊர்ந்து செல்ல வேண்டும்... 143 00:19:43,141 --> 00:19:45,021 அதன் ரகசிய ஆயுதத்தைப் பயன்படுத்த... 144 00:19:55,237 --> 00:19:56,657 வெப் ஸ்லிங்கர்கள். 145 00:20:05,247 --> 00:20:07,877 பிசுபிசுப்பான இழைகள் நொடிகளில் கடினப்படுகின்றன. 146 00:20:13,714 --> 00:20:14,924 தப்பிக்க வழியே கிடையாது. 147 00:20:26,268 --> 00:20:29,688 சிறிய உயிரினங்கள் எப்போதும் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். 148 00:20:34,401 --> 00:20:38,241 பெண் ஸ்ட்ராபெரி டார்ட் தவளை புதிய முட்டைகளை இட்டுள்ளது. 149 00:20:41,950 --> 00:20:44,370 ஆனால் அவற்றை பாதுகாப்பதோ ஆண் தவளையின் வேலை. 150 00:20:58,217 --> 00:21:00,837 பிரகாசமான சிகப்பு நிறம் எதிரிகளுக்கு எச்சரிக்கையாகும். 151 00:21:04,139 --> 00:21:06,559 அதன் தோல் ஒரு கொடிய விஷத்தை சுரக்கிறது. 152 00:21:10,062 --> 00:21:11,272 ஆனால் ஒரு சிக்கல்... 153 00:21:15,025 --> 00:21:17,025 நெருப்பு வயிறு பாம்புகள் விஷத்தை தாங்கும் சக்தி கொண்டவை. 154 00:21:19,071 --> 00:21:22,121 அதோடு எந்தவொரு சிறு நகர்வையும் உணரக்கூடியவை. 155 00:21:26,286 --> 00:21:27,956 அசையாமல் அப்படியே இருந்தால்... 156 00:21:30,415 --> 00:21:32,075 அது பிழைக்கக்கூடும். 157 00:21:45,347 --> 00:21:47,177 அது எல்லாவற்றிலிருந்தும் ஒளிந்துகொள்ள முடியாது. 158 00:21:54,106 --> 00:21:55,316 ஒரு போட்டிக்கார ஆண் தவளை. 159 00:21:58,610 --> 00:22:00,030 அது இந்த பகுதியை கைப்பற்ற நினைக்கிறது. 160 00:22:07,870 --> 00:22:10,870 இந்த இடத்தை அது கைப்பற்றினால், முட்டைகளை சாப்பிட்டுவிடும். 161 00:22:14,793 --> 00:22:17,213 இந்த சிறிய அப்பா தவளை தோற்றுவிட்டால் எல்லாவற்றையும் இழந்துவிடும். 162 00:22:27,055 --> 00:22:31,685 சர்க்கரை கட்டியை விட கனமில்லாத இவை இரண்டும், சமமான பலம் கொண்டவை. 163 00:22:46,617 --> 00:22:49,077 அவற்றால் அரை மணிநேரத்திற்கு மேலாக தொடர்ந்து சண்டையிட முடியும். 164 00:23:00,088 --> 00:23:02,298 சிறிய தவளை சோர்வடையத் தொடங்குகிறது. 165 00:23:10,516 --> 00:23:12,346 ஆனால் அப்பா தவளை வென்றுவிட்டது. 166 00:23:15,437 --> 00:23:18,857 அதன் எதிரி பின்வாங்கிவிட்டது, இப்போதைக்கு. 167 00:23:21,818 --> 00:23:25,448 முட்டைகள் குஞ்சு பொரிக்க இன்னும் இரண்டு வாரங்களுக்கு பாதுகாக்கும் கடமை இருக்கிறது. 168 00:23:34,915 --> 00:23:38,955 காடு முதிர்ச்சியடையும் போது, மேலும் சிக்கலான உறவுகள் உருவாகின்றன. 169 00:23:47,928 --> 00:23:50,558 இந்த ஆர்க்கிட் தேனீ ஒரு அசாதாரண பணியில் இருக்கிறது. 170 00:23:52,432 --> 00:23:55,142 இங்கே வர அது 40 கிலோமீட்டர்கள் பயணித்துள்ளது. 171 00:23:58,355 --> 00:23:59,475 அது தனியாக இல்லை. 172 00:24:02,734 --> 00:24:07,664 அவை அனைத்தும் ஆண் தேனீக்கள், ஒரு விஷயத்திற்காக வந்துள்ளன. 173 00:24:10,284 --> 00:24:11,494 மகரந்தம் அல்ல. 174 00:24:12,870 --> 00:24:13,910 நறுமணம். 175 00:24:16,498 --> 00:24:18,168 இந்த ஆர்க்கிட் ஒரு நறுமணத்தை உற்பத்தி செய்கிறது, 176 00:24:18,250 --> 00:24:20,880 அதைக் கொண்ட ஆண் தேனீக்களை பெண் தேனீக்களால் தவிர்க்க முடியாது. 177 00:24:23,297 --> 00:24:25,757 எனவே ஆண் தேனீ முடிந்த அளவுக்கு அதைச் சேகரிக்கிறது. 178 00:24:28,177 --> 00:24:29,597 ஆனால் அது கவனமாக இல்லையென்றால்... 179 00:24:32,848 --> 00:24:33,848 ஆண் தேனீ அதில் மூழ்கிவிடும். 180 00:24:44,985 --> 00:24:46,395 வெளியேர ஒரே வழிதான் இருக்கிறது. 181 00:24:54,912 --> 00:24:56,412 ஒரு சிறிய துவாரத்தின் வழியாக. 182 00:25:02,127 --> 00:25:04,957 தேனீக்கு பிரிவு உபச்சாரத்தை வழங்காமல் ஆர்க்கிட் அதை வெளியேற விடாது. 183 00:25:09,593 --> 00:25:11,803 தேனீயின் முதுகில் மகரந்தம் ஒட்டிக்கொள்ளும். 184 00:25:21,396 --> 00:25:23,976 ஒரு துணையைத் தேடும் சிறிய தேனீயின் பணி தொடர்கிறது, 185 00:25:24,983 --> 00:25:26,403 ஆனால் ஆர்க்கிட்டின் வேலை முடிந்தது. 186 00:25:41,875 --> 00:25:46,205 பிக்மி மார்மோசெட்களுக்கு வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்புவதாக தெரிகிறது. 187 00:25:50,217 --> 00:25:52,467 இந்த நாட்களில் பூச்சிகளைக் காண்பது கடினமாகிறது. 188 00:25:56,139 --> 00:25:57,219 ஆனாலும் பிரச்சனை இல்லை. 189 00:25:58,308 --> 00:26:01,558 அவை புதிய மரங்களில் புதிய மரச்சாறு துளைகளைத் தோண்ட தொடங்கிவிட்டன. 190 00:26:10,112 --> 00:26:11,992 சத்தமிடும் அக்கம்பக்கத்தினரும் வந்துவிட்டனர். 191 00:26:18,579 --> 00:26:22,999 உரக்க ஒலியெழுப்பி, உணவு அனைத்தையும் தனக்கென்று வைத்துக்கொள்வதோடு... 192 00:26:32,009 --> 00:26:33,429 குழப்பத்தையும் உருவாக்குகிறது. 193 00:26:42,394 --> 00:26:43,774 இயற்கை உபாதைகளின் போது, 194 00:26:44,938 --> 00:26:47,268 சிக்கலைத் தீர்ப்பது மிகச்சிறிய உயிரினங்களின் பொறுப்பாகிறது. 195 00:26:54,531 --> 00:26:57,951 இந்த சின்னஞ்சிறு சூப்பர்ஹீரோ கிளைகளைச் சுத்தமாக வைத்திருக்கிறது. 196 00:27:04,875 --> 00:27:07,335 வண்டு, ஒரு நாணயத்தின் அளவே இருக்கிறது. 197 00:27:08,504 --> 00:27:09,924 ஆனால் எந்த வேலையும் பெரிதல்ல. 198 00:27:17,888 --> 00:27:19,058 20 மீட்டர் உயரத்திலிருந்து விழும்போதும்... 199 00:27:21,225 --> 00:27:23,345 மிகவும் கெட்டியாக பிடித்துக்கொள்கிறது. 200 00:27:43,580 --> 00:27:45,750 கழிவுகளைச் சுத்தம் செய்யும் மற்ற குழுக்களும் வருகின்றன. 201 00:28:00,305 --> 00:28:03,135 புதைக்கப்படுவதற்காக சாண உருண்டைகள் உருட்டிச் செல்லப்படுகின்றன. 202 00:28:06,270 --> 00:28:07,480 அவற்றின் குட்டிகளுக்கு உணவாக. 203 00:28:10,691 --> 00:28:12,691 அதோடு காட்டிற்கான உரமாகவும். 204 00:28:19,199 --> 00:28:23,199 ஆச்சரியமான சிறிய விலங்குகள் நிறைந்த ஒரு சிக்கலான உலகம் இந்த காடு. 205 00:28:24,663 --> 00:28:26,793 அனைத்தும் தங்களின் தனித்துவமான கடமைகளோடு. 206 00:28:32,129 --> 00:28:34,969 இந்த சிறிய விலங்குகளும் தங்கள் கடமையை கண்டுபிடித்துவிட்டன. 207 00:28:41,555 --> 00:28:44,385 அவற்றின் நெரிசலான காட்டின் ஒரு பகுதி எப்போதும் மாறிக்கொண்டே இருக்கிறது. 208 00:28:48,437 --> 00:28:51,357 ஆனால் இப்போதைக்கு, வாழ்க்கை இனிமையானது. 209 00:28:56,195 --> 00:28:57,235 கீழே... 210 00:28:58,614 --> 00:29:01,414 அகூட்டி விட்டுச்சென்ற ஒரு பிரேசில் விதை... 211 00:29:07,206 --> 00:29:09,416 நிழல்களில் மெதுவாக வளர்கிறது. 212 00:29:13,086 --> 00:29:14,506 ஒரு நீண்ட கால செயல்திட்டத்தைப் பின்பற்றி. 213 00:29:17,424 --> 00:29:22,434 சிறிய தொடக்கங்களில்தான், பெரிய விஷயங்கள் வெளிப்படுகின்றன. 214 00:29:34,358 --> 00:29:37,188 காடு முடிவற்ற பச்சை நிற கடல் போல காட்சியளிக்கலாம்... 215 00:29:40,739 --> 00:29:45,579 ஆனால் ஒவ்வொரு மரமும் சிறிய அதிசயங்களின் வாழ்விடமாகும். 216 00:29:51,166 --> 00:29:52,576 ஒரு ஸ்ட்ராபெரி டார்ட் தவளை 217 00:29:53,085 --> 00:29:55,915 தனது குட்டிக்கு ஒரு பாதுகாப்பான இடத்தைத் தேடுகிறது. 218 00:30:00,300 --> 00:30:01,390 அடுத்த தலைமுறையை வளர்க்க... 219 00:30:13,981 --> 00:30:15,981 அது விரைவில் பயணத்தைத் தொடங்குவது நல்லது. 220 00:30:17,943 --> 00:30:19,613 இது ஒரு நீண்ட பயணம்... 221 00:30:20,404 --> 00:30:22,164 மேலே செல்ல. 222 00:31:10,454 --> 00:31:12,464 வசன தமிழாக்கம் அருண்குமார்