1 00:00:18,352 --> 00:00:20,604 இல்ல! அப்பா, வேண்டாம்! நிறுத்துங்க! 2 00:00:20,604 --> 00:00:23,148 - பாருங்க, உங்களை ரிபோர்ட் பண்ணுவேன், சரியா? - எங்கே போறீங்க? அப்பா. 3 00:00:23,148 --> 00:00:24,525 யாருக்கு சீக்கிரம் அலவென்ஸ் வேணும்? 4 00:00:24,525 --> 00:00:28,487 பார்த்துக்கோங்க நீங்களே, ரொம்ப சிறப்பான அப்பா. உங்களுக்கு கிடைக்கிற பட்டத்தை எங்கே அனுப்பட்டும்? 5 00:00:28,487 --> 00:00:30,447 அந்த சிறுக்கியின் வீட்டுக்கு அனுப்பு. 6 00:00:30,447 --> 00:00:32,533 - எனக்குப் புரியுது, அம்மா. இந்தா... - அவரை எதையும் எடுத்துட்டுப் போக விடாதே! 7 00:00:32,533 --> 00:00:33,951 ...நான் உங்க பையை எடுத்துக்க உதவறேன். 8 00:00:33,951 --> 00:00:35,160 பெக்கி, வேண்டாம்! 9 00:00:36,995 --> 00:00:37,955 வா போகலாம்! 10 00:00:38,539 --> 00:00:39,790 அட, நல்லா செய்த, பெக்கி. 11 00:00:39,790 --> 00:00:40,916 நான் ஹை சொல்லணும். 12 00:00:42,334 --> 00:00:43,752 இது நல்லாயிருக்கும். 13 00:00:44,253 --> 00:00:45,379 - பெக்கி! - ஹே, சிறுக்கி! 14 00:00:45,963 --> 00:00:48,924 பெக்கி, நிறுத்து, பெக்கி! நாசமா போச்சு. 15 00:00:49,508 --> 00:00:51,760 ஆமாம்! அந்த காரை அடிச்சு நொறுக்கு! 16 00:00:52,803 --> 00:00:56,723 ஹே! நீ உள்ளே வந்து உன் தோழிக்கு ஹலோ சொல்ல வேண்டாமா? 17 00:00:56,723 --> 00:00:57,808 நான் அவளை அப்படி கூப்பிட்டதே இல்லை. 18 00:00:57,808 --> 00:01:00,394 டையேன், அம்மாவின் பாத்ரூமுக்குப் போய் அந்த டூஷ்பேகை எடுத்துட்டு வா. 19 00:01:00,394 --> 00:01:03,397 - ஒரு சிறுக்கிக்கு தன் ஆயுதங்கள் இருக்கணும். - பெக்கி, தள்ளிப் போ. பாரு. 20 00:01:03,397 --> 00:01:05,566 அது என் அம்மாவுடைய முத்துக்கள் தானே? 21 00:01:07,109 --> 00:01:10,279 - நீ உன் அம்மாவுடையதுன்னு சொன்ன? - நீ எப்படி அம்மாவுடைய முத்துக்கள கொடுக்கலாம்? 22 00:01:10,279 --> 00:01:11,989 உங்க ரெண்டு பேருக்கும் ஏதோ போட்டி மாதிரி இருக்கு. 23 00:01:11,989 --> 00:01:13,448 - யாரு இன்னும் மோசம்? - நாம போய் தொலையலாமா? 24 00:01:13,448 --> 00:01:15,075 - கழட்டித் தா! அதைக் கழட்டித் தா! - அடக் கடவுளே. 25 00:01:15,075 --> 00:01:15,993 பெக்கி. 26 00:01:15,993 --> 00:01:17,452 - என் மேலேர்ந்து கையை எடு. - அதை கழட்டித் தா. கழட்டி... 27 00:01:17,452 --> 00:01:19,079 - அதை கழட்டித் தா! - பெக்கி. பெக்கி, விடு. 28 00:01:19,079 --> 00:01:20,330 - பெக்கி. நாசமா போச்சு! - ச்சே! 29 00:01:20,330 --> 00:01:22,583 - என்னை விடு! - அதைக் கழட்டித் தா! 30 00:01:22,583 --> 00:01:23,584 பெக்கி, விடு! 31 00:01:23,584 --> 00:01:26,378 என்னை விடு. தள்ளிப் போ! 32 00:01:26,378 --> 00:01:28,755 - விடு. விடு. விடு, பிடாரியே. - விடு! 33 00:01:38,807 --> 00:01:40,017 நான் கல்யாணமே செய்துக்க மாட்டேன். 34 00:01:41,852 --> 00:01:43,770 நான் என்ன சொல்ல முடியும்? அவர் அப்போ கிளர்ச்சி தருபவராக தான் இருந்தார். 35 00:01:49,026 --> 00:01:50,569 ஒரு பிரேஸ்லெட் செய்யற அளவுக்கு முத்துக்களை சேர்க்கலாம். 36 00:01:50,569 --> 00:01:51,778 நான் இறந்ததுக்கு அப்புறம் நீ அதை வச்சுக்கோ. 37 00:01:53,697 --> 00:01:54,865 உன்னை சாக விடமாட்டேன். 38 00:01:55,866 --> 00:01:58,202 அவள் தான் சாக போறா, நான் அவளை ரெயிலுக்கு முன் தள்ளி விட போறேன். 39 00:01:59,703 --> 00:02:01,163 அவங்க ரெண்டு பேரையுமே தள்ளி விட மாட்டயா? 40 00:02:44,540 --> 00:02:46,500 அடடே! இதோ வந்துட்டாளே. 41 00:02:47,084 --> 00:02:48,752 நீ என்னுடன் விளையாடுறயா? 42 00:02:48,752 --> 00:02:49,920 சீக்கிரமா விட்டுட்டாங்க. 43 00:02:49,920 --> 00:02:52,506 அவங்களுடைய கேஸுல அரசு டெக்னிக்கலா ஒரு தப்பு செய்துடுச்சு. 44 00:02:52,506 --> 00:02:54,633 என் அம்மாவுடைய கிமோனோவை கழட்டு. உடனே. 45 00:02:54,633 --> 00:02:57,219 அருமை. பெக், நீ ரொம்ப அசத்தலா இருக்க. 46 00:02:57,219 --> 00:02:58,929 சரி, இப்போ நீ போகும் நேரம் வந்துடுச்சு. 47 00:02:58,929 --> 00:03:00,222 நான் என் ரெட்டை காப்பியை குடிச்சிடவா? 48 00:03:00,222 --> 00:03:03,517 நான் சுவையா ஒரு காப்பி சாப்பிட்டு கிட்டத்தட்ட 18 மாசங்கள் ஆகியிருக்குமா? 49 00:03:03,517 --> 00:03:05,227 அது யார் தப்பு? 50 00:03:07,104 --> 00:03:09,523 பெக், அதைச் சொல்ற ஆளு நானாக இருக்க வேண்டாம்னு நினைக்கிறேன், சரியா? 51 00:03:09,523 --> 00:03:11,650 ஏன்னா அது என் ஸ்டைல் இல்லை. 52 00:03:11,650 --> 00:03:14,778 ஆனால் நம்ம இருவர்ல ஒருவர் பொறுப்பு ஏத்துக்கணும், அதை நீ செய்யல. 53 00:03:14,778 --> 00:03:18,115 அது பத்து வருஷத்துக்கு முன்னாடி, அதுக்கு அப்புறம் நீ ரெண்டு முறை வந்துட்ட. 54 00:03:18,115 --> 00:03:19,825 ஆமாம், சரி தான், நானே எனக்கு வாதாடியிருக்கணும். 55 00:03:19,825 --> 00:03:20,909 சரி, இப்போ போகலாம். 56 00:03:20,909 --> 00:03:22,953 ஹே, அவங்க ரெண்டு கேஸையும் சொதப்பிட்டாங்க. 57 00:03:22,953 --> 00:03:23,871 என்ன தெரியுமா? 58 00:03:23,871 --> 00:03:25,873 நீ, என்ன ஒரு பாதி செமஸ்டர் படிச்சயா 59 00:03:25,873 --> 00:03:28,000 - அந்த குயீன்ஸ் சட்டக் கல்லூரியில? - எப்படி இருந்தாலும்... 60 00:03:28,000 --> 00:03:30,836 - அதுக்கு அப்புறம் நீ ஃபெயிலாயிட்ட. - ஆம். இந்த பரீட்சையெல்லாம் வெறும் மோசடி. 61 00:03:31,420 --> 00:03:35,507 இப்போ, நான் காப்பியைச் சாப்பிட்டுட்டு, என் துணிகளை துவைச்சுக்கலாமா, பிளீஸ்? 62 00:03:40,095 --> 00:03:41,221 இது நல்ல காப்பி. 63 00:03:43,724 --> 00:03:45,225 நான் இதை தான் ரொம்ப மிஸ் பண்ணினேன். 64 00:03:45,225 --> 00:03:48,687 தெரியுமா, அங்கே உள்ள கார்கள் எல்லாம் வித்தியாசமா இருக்கு. வினோதம் தான். 65 00:03:48,687 --> 00:03:52,232 விஷயங்கள் அவ்வளவு சீக்கிரமா மாறும்னு நீ நினைக்கலை, ஆனால் அவங்க நினைக்கிறாங்க. 66 00:03:52,232 --> 00:03:55,194 - நான் இன்னிக்கு இங்கே உள்ளே வந்தபோது... - நீ உள்ள உடைச்சுட்டு வந்தபோதுன்னு சொல்லு. 67 00:03:55,194 --> 00:03:56,778 என்னைச் சுத்தி ரோஸ்லினின் பொருட்கள். 68 00:03:56,778 --> 00:03:58,989 நீ என் தங்கையை எங்க அம்மாவுடைய வீட்டிலிருந்து துரத்தி விட்டிருக்க. 69 00:03:58,989 --> 00:04:00,908 அந்த அலமாரியில கூட அவங்க வாசனை வருது. 70 00:04:00,908 --> 00:04:02,701 அவங்க உடைகளைப் போட்டுக்காதே, டென்னி. 71 00:04:02,701 --> 00:04:03,702 பாரு. 72 00:04:03,702 --> 00:04:07,331 - உன் வாசனையை அவங்களுடையதுக்கும் மேல போடற. - இல்ல, போடல. நான் இப்போ தான் கிமோனோவை எடுத்தேன். 73 00:04:07,873 --> 00:04:09,791 ஆனால் அந்த வாசனையை மிஸ் பண்ண முடியாது. 74 00:04:09,791 --> 00:04:10,959 தெரியுமா? அது தான் ரோஸ்லின். 75 00:04:10,959 --> 00:04:13,921 அவங்க இன்னும் இந்த துணியில இருக்காங்க. 76 00:04:15,839 --> 00:04:17,298 என் வீட்டு பூட்டை உடைச்சு உள்ள வந்துருக்க. 77 00:04:17,298 --> 00:04:21,220 என் அம்மாவுடைய ஆல்பம்களை எடுத்துருக்க. அவங்களுடைய கிமோனோவுல சுத்திட்டுருக்க. 78 00:04:21,220 --> 00:04:24,473 - நீ எந்த எல்லைகளையும் மதிக்கிறது கிடையாது. - பெக், இது இன்னும் ஈரமா இருக்கு. 79 00:04:24,473 --> 00:04:29,019 நான் போன தடவையே என்ன சொன்னேன்? ஆச்சு. நீ என் வாழ்க்கைக்கு ஒரு பாதகம். 80 00:04:29,019 --> 00:04:31,355 அதோட ரெண்டாவதா, அந்த கண்றாவி விவாகரத்து பத்திரத்துல கையெழுத்து போடு. 81 00:04:32,689 --> 00:04:34,399 என்னை அந்த மோட்டல் வரை கொண்டு விடேன்? 82 00:04:35,317 --> 00:04:36,944 என்னை விடுதலை செய்தப்போ 200 கிடைச்சது. 83 00:04:36,944 --> 00:04:38,695 உனக்கு நான் டின்னர் வாங்கித் தரேன். 84 00:04:41,114 --> 00:04:44,451 நான் இப்போதான் மூணு சைட் டிஷ்ஷோட சிக்கன் காசியாடோரி சாப்பிட்டேன். 85 00:04:44,451 --> 00:04:47,704 அடடா. உனக்கு ரொம்ப பிடிச்ச உணவாச்சே. 86 00:04:48,455 --> 00:04:50,123 உன் பிறந்தநாள் கூட இல்ல. 87 00:04:51,333 --> 00:04:53,836 - இல்ல, அங்கே வெறும் நிர்வாக அதிகாரம் தான். - சரி. சரி. 88 00:04:53,836 --> 00:04:56,088 அதனால நான் இந்த பிஐ வகுப்புக்கு போறேன். 89 00:04:56,088 --> 00:04:57,047 - நன்றி. - நிச்சயமா, கண்ணே. 90 00:04:57,047 --> 00:04:58,882 என்னன்னா, அதெல்லாம் வெறும் ஒரு பேருக்கு தான் 91 00:04:58,882 --> 00:05:01,134 ஏன்னா, உண்மையில, புரூஸ் எனக்கு ஏற்கனவே கேஸ்கள கொடுத்திருக்கார். 92 00:05:01,134 --> 00:05:03,262 நான் எற்கனவே அவருக்கு வேலையை கொண்டு வரேன். 93 00:05:03,262 --> 00:05:05,806 அதாவது, நான் அவருக்கு ரொம்ப அவசியம். 94 00:05:06,390 --> 00:05:09,101 - அருமை, பெக். எப்படி மாறிட்ட பாரு. - ஆமாம் இல்ல? 95 00:05:09,101 --> 00:05:11,019 - உன்னை பாரு. - ஆமாம். 96 00:05:11,019 --> 00:05:13,564 நீ ஒரு ஃபீனிக்ஸ், பேபி. 97 00:05:14,273 --> 00:05:16,525 என்னை "பேபி"னு கூப்பிடாதே. நான் ஒண்ணும் உன் பேபி இல்லை. 98 00:05:17,442 --> 00:05:19,236 அடக் கடவுளே, நான் மன்னிப்பு கேட்கிறேன். 99 00:05:19,236 --> 00:05:23,282 பாரு, நான் இப்போ ஒரு கற்கும் இடத்திலிருந்து வரேன். 100 00:05:23,282 --> 00:05:24,950 என்னை மன்னிச்சிடு. 101 00:05:24,950 --> 00:05:28,370 பாரு இது தான் விஷயம். இப்போ சொல்றேன். நாம இருவருமே ஃபீனிக்ஸ் தான். 102 00:05:28,370 --> 00:05:31,707 நீ, ரோஸ்லின் போனதுக்கு அப்பறம், அவங்க ஆன்மா சாந்தி அடையட்டும். 103 00:05:31,707 --> 00:05:34,042 உனக்கே தெரியும், அவங்க எனக்கும் அம்மா மாதிரி தான் இருந்தாங்க. 104 00:05:34,042 --> 00:05:35,961 இந்த பசங்க இந்த வீட்டு விஷயத்துல உன்னை ஏமாத்தியது. 105 00:05:36,545 --> 00:05:38,088 ஆனால் நீ இப்போ ஒரு பிஐ. 106 00:05:39,131 --> 00:05:41,675 நான் இப்போ சிறையிலிருந்து வெளியே வந்துட்டேன், ஒரு புது அத்தியாயத்தை ஆரம்பிக்க தயாரா இருக்கேன். 107 00:05:41,675 --> 00:05:44,386 சரி, கையில பணம் இல்லை. நான் குற்றவாளி. 108 00:05:45,596 --> 00:05:49,016 ஆனால் நான் அங்கே சீகாங்கு சொல்லி கொடுத்தேன், என மனசே லேசாயிடுச்சு. 109 00:05:49,016 --> 00:05:51,185 யார் அது சீகாங்கு? அவன் எதுக்கு வந்தான்? 110 00:05:51,185 --> 00:05:53,437 இல்ல, இல்ல. அது தியானம் செய்யற தற்காப்புக் கலை. 111 00:05:53,937 --> 00:05:55,564 ஆனால் நான் அதை கலவையாத் தரேன், 112 00:05:55,564 --> 00:06:00,152 ஏன்னா நான் காயத்தை ஆத்துறது போல கற்பிக்க விரும்புறேன், என்ன? போராட்டத்தை. 113 00:06:00,152 --> 00:06:01,278 புரியுது. 114 00:06:01,278 --> 00:06:04,072 - இந்த கலையெல்லாம் இன்னும் வளரணும். - அதே தான். 115 00:06:04,072 --> 00:06:06,283 நான் தான் இந்த கூட்டத்தை முன்நடத்தறேன். 116 00:06:06,283 --> 00:06:10,412 நாங்க ஆசனங்களில் உட்காருகிறோம், சேர்ந்து மூச்சு விடறோம், இருக்கோம். 117 00:06:11,997 --> 00:06:14,291 இதுக்காக தானே ஜான் லெனன் உயிரைக் கொடுத்தார். 118 00:06:14,291 --> 00:06:15,584 அது அழகாதான் இருக்கு. 119 00:06:15,584 --> 00:06:17,961 அது அழகா இருக்கு, அதனால நான் அதை பகிர விரும்புறேன். 120 00:06:18,921 --> 00:06:23,008 எனக்குள்ள இருக்கிற ஃபீனிக்ஸை இந்த சீகாங்கின் மையப்பகுதியுடன் இணைக்க விரும்புறேன், 121 00:06:23,509 --> 00:06:25,594 அதுவும் இங்கே ஹை டெஸ்ஸில். 122 00:06:27,513 --> 00:06:29,848 ஆன்ம மீட்பு அப்படின்னு ஒண்ணை செய்து, 123 00:06:30,933 --> 00:06:36,313 என் தொலைஞ்சு போன ஆன்மாவை என்னுடன் மீண்டும் சேருவது போல பண்ணப் போறேன். 124 00:06:38,899 --> 00:06:40,108 அதை எங்கே தொலைச்ச? 125 00:06:45,197 --> 00:06:46,490 தி அலியோ ரோட் வீட்டுல. 126 00:06:48,283 --> 00:06:50,369 அந்த வெள்ளி சாமானைச் சொல்றியா? 127 00:06:50,369 --> 00:06:52,329 - அது கிட்டத்தட்ட 20,000 மதிப்பிருக்கும். - அடச் சே. 128 00:06:52,329 --> 00:06:54,623 நீ உன் வக்கீலுக்கு பணம் கட்ட அதை வித்துட்டேன்னு சொன்ன. 129 00:06:54,623 --> 00:06:55,791 ஒரு கணக்கு போட்டது தான். 130 00:06:55,791 --> 00:06:57,751 - இன்னும் அதிகமாவும் இருக்கலாம், தெரியாது. - அந்த வீட்டுலயே அதை ஒளிச்சு வச்சிருக்கயா? 131 00:06:57,751 --> 00:06:58,836 அது லாண்ட்ரி அறையில இருக்கு. 132 00:06:58,836 --> 00:07:00,295 நாம எப்படியாவது உள்ள போகணும். 133 00:07:00,295 --> 00:07:03,423 நான் இந்த வீட்டுக் கடனை அடைச்சிருக்கலாம். இங்கேயே இருந்திருப்பேனே. 134 00:07:03,423 --> 00:07:05,509 நீ சொல்றது எல்லாம் பொய். 135 00:07:05,509 --> 00:07:08,595 நான் வெளிய வந்ததுக்கு அப்புறம் நாம சேர்ந்து இருக்கலாங்குறதுக்காக தான் பொய் சொன்னேன். 136 00:07:08,595 --> 00:07:11,223 இல்ல, நீ மாறவே மாட்ட. உங்கிட்ட மாற்றமே இருக்காது. 137 00:07:11,223 --> 00:07:13,976 பெக், இது நம்ம ரெண்டு பேருக்குமே முதல் போடறதுக்காக வச்சிருக்கிற தொகை. 138 00:07:13,976 --> 00:07:16,478 உனக்கு இதிலிரு்து 10,000 அல்லது 12,000 கிடைக்கப் போகுது. 139 00:07:16,478 --> 00:07:18,480 இது தான் வேளை, பெக். 140 00:07:18,480 --> 00:07:20,899 நம்முடைய மீதம் இருக்கும் காலத்தின் தொடக்கம் இது தான். 141 00:07:20,899 --> 00:07:22,442 எனக்கு மீதம் இருக்கும் வாழ்க்கை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது. 142 00:07:22,943 --> 00:07:23,986 சரியா? 143 00:07:23,986 --> 00:07:26,738 மேலும் அதுல நீ இல்லை. நாம இல்லை. 144 00:07:26,738 --> 00:07:28,574 நான் என் வாழ்க்கையை ஆபத்துல தள்ளப் போறதில்லை. 145 00:07:28,574 --> 00:07:30,325 - பேக்... - என் எதிர்காலத்தை நான் அடமானம் வைக்க மாட்டேன். 146 00:07:30,325 --> 00:07:32,995 நான் ஒரு பிஐ. மக்களுடைய வீடுகளிலிருந்து திருடப் போறதில்லை. 147 00:07:32,995 --> 00:07:34,371 - பெக்... - இல்ல. 148 00:07:35,914 --> 00:07:36,915 - நிஜமாவா? - இல்ல. 149 00:07:36,915 --> 00:07:39,710 - சரி. - விவாகரத்து பத்திரங்கள்ல கையெழுத்து போட்டுட்டு, 150 00:07:39,710 --> 00:07:41,503 என்னை என் வழிக்குப் போகவிடு. 151 00:07:42,004 --> 00:07:43,505 கொஞ்சம் இங்கே வாங்க, வெயிட்டர் அம்மா. 152 00:07:44,298 --> 00:07:45,674 உங்களுக்கு பில் கொண்டு வரவா? 153 00:07:45,674 --> 00:07:50,470 எனக்கு ஒரு காப்பியும், ஒரு ஆப்பிள் பையும் ஃபீப்பும் பார்சல் தர முடியுமா? 154 00:07:50,971 --> 00:07:52,389 அப்புறம் இந்த ஆளுகிட்ட பில்லைக் கொடுத்துடுங்க. 155 00:08:48,195 --> 00:08:51,990 நான் இந்த கேடுகெட்ட குருவைப் பிடிக்க ரொம்ப நெருங்கிட்டேன்னு சொல்ல விரும்புறேன். 156 00:08:51,990 --> 00:08:54,535 ரொம்ப, ரொம்ப நெருங்கிட்டேன். 157 00:08:55,953 --> 00:08:57,162 ச்சே. போறு. 158 00:08:58,163 --> 00:09:00,123 நீ ஃபட்ஜ் கடை திறந்திருக்கயா சொல்லு. 159 00:09:00,123 --> 00:09:04,628 ஆம், ஆனால் உங்களுக்கு நன்றி சொல்ல விரும்பினேன். ஓவென் விஷயத்துல எனக்கு உதவி செய்தீங்களே. 160 00:09:05,128 --> 00:09:07,172 அது பெரிய தப்புன்னு நான் உணர்ந்தேன். 161 00:09:08,382 --> 00:09:10,425 வலது பக்கம் உள்ளது இடது பக்கத்தை விட பெரிசா இருக்கு. 162 00:09:11,426 --> 00:09:13,637 அதோட, திருட்டும் தப்புன்னு உணர்ந்தேன். 163 00:09:14,221 --> 00:09:16,306 அட, வரவேற்கிறேன், கண்ணே. நாம மீண்டும் சந்திக்கலாம். 164 00:09:16,306 --> 00:09:21,937 அவன், என்னை பத்தி எதுவும் பேசினானா? குரு பாப்? என்னை மிஸ் பண்ணினானா? 165 00:09:21,937 --> 00:09:23,438 வேலை நேரத்துல சொந்த விஷயமங்களை பேசக் கூடாது. 166 00:09:25,190 --> 00:09:26,567 முதல்ல, இது பிசினஸ். 167 00:09:26,567 --> 00:09:28,527 இரண்டாவதா, இதுக்குப் பேரு வேலை-வாழ்க்கை பேலன்ஸ். 168 00:09:28,527 --> 00:09:29,945 நீங்க அதை செய்ய முயற்சி செய்யணும். 169 00:09:29,945 --> 00:09:31,905 நீ அந்த ஆளை இனி பார்க்கக் கூடாது. 170 00:09:31,905 --> 00:09:33,240 அது தானே நமக்குள்ள டீல். 171 00:09:33,240 --> 00:09:34,992 அதோட, அவன் உன்னை குறையோட விட்டுட்டு போயிருக்கான். 172 00:09:34,992 --> 00:09:36,785 சரி, அவனிடமிருந்து எப்படி பணத்தை வாங்கின? 173 00:09:36,785 --> 00:09:40,664 சரி, நான்... நாங்க டின்னருக்குப் போனோம். நான் அவனை மிரட்டினேன், அவன் பணம் தந்தான். 174 00:09:40,664 --> 00:09:41,748 டின்னருக்கா? 175 00:09:43,834 --> 00:09:45,627 - அதாவது, ஒரு டேட் மாதிரியா? - கடவுளே, இல்ல. 176 00:09:45,627 --> 00:09:47,212 உன்னை எங்கே கூட்டிட்டு போனான்? அவன் தான் பணம் தந்தானா? 177 00:09:47,212 --> 00:09:48,380 டேமி, நான் வேலை செய்துட்டு இருக்கேன். 178 00:09:48,380 --> 00:09:49,965 {\an8}நான் இப்போ ஒரு புரொஃபெஷனல். 179 00:09:49,965 --> 00:09:51,216 {\an8}சரி. 180 00:09:51,758 --> 00:09:55,429 {\an8}பாருங்க, அந்த ராஸ்கலுடைய காணாம போன மனைவியை கண்டுபிடிச்சதுக்கு நமக்கு பரிசு கிடைச்சா... 181 00:09:55,429 --> 00:09:59,266 சரிதான், கேளு. அந்த பரிசு இன்னும் இருக்கான்னு கூட நமக்குத் தெரியாதே? 182 00:09:59,266 --> 00:10:02,311 இன்னும் பெரிய மீன் சிக்கும். என் ஐடி ஆளு எங்கே? 183 00:10:02,311 --> 00:10:04,897 பாருங்க, இது எவ்வளவு பழசுன்னு தெரியுமா? 1962-ல செய்தது. 184 00:10:04,897 --> 00:10:08,942 நான் பிரைன் எப்ஸ்டைன். நீங்க டெக்கா ரெக்கார்ட்ஸ். நீங்க பீட்டில்ஸை நிராகரிக்க போறீங்க. 185 00:10:09,818 --> 00:10:11,069 நான் எந்த பீட்டில்ஸையும் பார்க்கலை. 186 00:10:11,069 --> 00:10:15,365 சரி, இன்னும் கூர்ந்து பாருங்க. அவங்க இங்கேயே தான் இருக்காங்க. நம்ம கைகள்ல தான். 187 00:10:15,365 --> 00:10:18,202 தயவுசெய்து பீட்டில்ஸை பயன்படுத்திக்காம கழிப்பறையில தூக்கி எறியாதீங்க. 188 00:10:18,202 --> 00:10:20,370 கழிப்பறையில என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கணுமா, பெக்கி? 189 00:10:20,370 --> 00:10:24,541 ஹாட் அண்ட் கோல்ட் அப்ளையன்ஸ் ரிப்பேர். என்னுடைய கடைசி நல்ல வாடிக்கையாளர். 190 00:10:24,541 --> 00:10:26,460 அந்த பிங்க் டிரக்குகள் வச்சிருப்பாங்களே? 191 00:10:26,460 --> 00:10:28,879 - பாரு! என்ன மாதிரி கேவலமான மெஸ்ஸெஜ் அது? - சரி. 192 00:10:28,879 --> 00:10:30,797 - பிங்க் சூடா இருக்குமா? சில்லுன்னு இருக்குமா? - பாரு. இந்த பக்கம் பாரு. 193 00:10:30,797 --> 00:10:34,718 அடுத்த வாரத்துக்குள்ள அவங்களுடைய பின்னணிகளை மூணு முறை செக் செய்யலைன்னா, 194 00:10:34,718 --> 00:10:36,553 நாம வருமானமில்லாம தெருவில தான் நிக்கணும். 195 00:10:36,553 --> 00:10:38,013 உனக்கு எதுக்கு சம்பளம் தரேன்? 196 00:10:38,013 --> 00:10:39,097 நீங்க எனக்கு சம்பளம் தரலை. 197 00:10:39,890 --> 00:10:42,809 பாரு, நீங்க இந்த பரிசைப் பத்தி விசாரிக்கணும். 198 00:10:42,809 --> 00:10:45,103 முடியாது. முடியாது, எனக்கு ஏற்கனவே நிறைய வேலை இருக்கு. 199 00:10:45,103 --> 00:10:48,732 அதோட, ஒரு ஐடி ஆள் இல்லாம இனிமே இங்கே உள்ள அடி எடுத்து வைக்காதே. 200 00:10:48,732 --> 00:10:49,816 நான் உனக்கு ஒரு வேலை கொடுத்தேன். 201 00:10:50,943 --> 00:10:53,529 இப்போ அதையும் சொதப்பிட்டீங்க. நான் உங்களை ஆச்சரியப்படுத்தலாம்னு இருந்தேன். 202 00:10:53,529 --> 00:10:56,031 அந்த ஆள் கிடைச்சுட்டான். நான் அவனை போய் கூட்டிட்டு வரணும். 203 00:10:57,449 --> 00:10:59,243 பெட்ரோலுக்கு கூட நீங்க எனக்குப் பணம் தருவதில்லை. 204 00:11:07,918 --> 00:11:09,044 அது வரலை. 205 00:11:09,878 --> 00:11:12,881 ரிலாக்ஸ் பண்ண முயற்சி செய்யுங்க. ஏற்கனவே இருமுறை தள்ளி போட்டாச்சு. 206 00:11:12,881 --> 00:11:15,884 எனக்கு இந்த பிரச்சினை இருக்குன்னு நினைக்கிறேன். எனக்கு ஷை பிளாடர் குறைபாடு இருக்கு போலும். 207 00:11:15,884 --> 00:11:19,137 அது ஒரு குறைபாடு. எனக்கு அந்த குறைபாடு இருக்குன்னு பாய்ஃபிரெண்ட் ஒருவன் சொன்னான். 208 00:11:23,016 --> 00:11:25,060 இப்போ என்ன சொல்ற? இன்னும் கொஞ்சம் பிரைவசி இருக்கே. 209 00:11:26,478 --> 00:11:29,022 ஹே, உனக்கு ஒரு மகன் இருக்கான், இல்ல? அவனுக்கு கம்ப்யூட்டர் நல்லா தெரியுமா? 210 00:11:29,606 --> 00:11:31,608 அவன் ஃபிரான்ஸுல உள்ள ஒரு கார்த்தூஸ் சன்யாசி. 211 00:11:31,608 --> 00:11:33,861 ஹே, என்னுடைய ஒரு வாரத்துக்கான சப்ளையை இப்பவே எடுத்துட்டு போனா என்ன? 212 00:11:33,861 --> 00:11:36,488 அப்புறம் எனக்கு ஒரு நாள் லீவ் கிடைக்கிறபோது நான் திரும்பவும் ஒரு முறை வரேன், 213 00:11:36,488 --> 00:11:37,865 அப்போ வந்து ரிலாக்ஸ்டா செய்யலாம். 214 00:11:38,657 --> 00:11:41,785 - ஹே, மிஸ், நீங்க உள்ள இருக்கீங்களா? - பொறு. நான் இப்பவே வெளியே வரேன். 215 00:11:41,785 --> 00:11:43,078 இன்னும் ஒரு வார அளவைத் தொடலை, பெக்கி. 216 00:11:43,078 --> 00:11:46,331 அதோட இந்த சோதனை இன்னும் முடியாததால், அதை உனக்கு தினமும் அரை அளவு தான் கிடைக்கும். 217 00:11:46,331 --> 00:11:49,293 என்னால இங்கே தினமும் வர முடியாது, மேரி. எனக்குக்குனு வாழ்க்கை இருக்கு. 218 00:11:49,293 --> 00:11:50,460 மிஸ்? 219 00:11:54,006 --> 00:11:55,215 அந்த சாஃப்ட்வேரை இன்ஸ்டால் பண்ணிடு, 220 00:11:55,215 --> 00:11:58,260 அதை எப்படி உபயோகிப்பதுன்னு தெரியற வரை அதை பழகு, அப்புறம் அவருக்கு சொல்லிக் கொடு. 221 00:11:59,052 --> 00:12:01,513 - இன்ஸ்டால் பண்ணியாச்சு. - அட. சபாஷ். 222 00:12:02,514 --> 00:12:05,809 சரி, வாக்கு கொடுத்தேன், வாக்கை காப்பாத்தினேன். 223 00:12:06,643 --> 00:12:08,395 நான் என் அக்கௌண்டென்ட்டை சந்திச்சேன். 224 00:12:08,395 --> 00:12:13,150 என் முன்னாள் பார்ட்னர் ரெண்டு புத்தகப் பெட்டிகளை வைத்திருந்ததாகவும், ரெண்டுமே போலின்னும் சொல்றார். 225 00:12:14,026 --> 00:12:15,944 எனவே... பிளீஸ் 226 00:12:16,862 --> 00:12:18,864 என் கையில இருந்த பங்குகளையும் நான் விற்க வேண்டியதா போச்சு. 227 00:12:18,864 --> 00:12:22,075 - அந்த ஈபே பொருட்களை எல்லாம் வித்தேன். - நான் கேட்கலைன்னு நினைத்துக் கொள்ளுங்க. 228 00:12:22,075 --> 00:12:24,328 - என் வீடு கூட கையைவிட்டுப் போகலாம். - ஏன்னா நான் கேட்கலை. 229 00:12:24,328 --> 00:12:26,288 எனவே, அந்த பையனுக்கு ஈபேயின் பணத்திலிருந்து பணத்தைக் கொடுக்கலாம், 230 00:12:26,288 --> 00:12:29,583 ஆனால், உன்னைப் பத்தி எனக்குத் தெரியலை. 231 00:12:29,583 --> 00:12:33,086 சரி, சீக்கிரம் ஆகட்டும். வாங்க. நல்ல தொகை, விரைவிலேயே கிடைக்கப் போகுது. 232 00:12:33,670 --> 00:12:35,547 நான் சொல்றேனே, ஏதோ நடக்குது. 233 00:12:35,547 --> 00:12:38,467 நான் இப்போ அதைப் பத்தி உங்ககிட்ட சொல்ல முடியாது, ஆனால் பெரிய விஷயம். 234 00:12:38,467 --> 00:12:39,718 பெரிசா? 235 00:12:39,718 --> 00:12:41,428 கண்ணை உருட்டாதீங்க. 236 00:12:41,428 --> 00:12:45,724 அது கொஞ்சமும் மரியாதையா இல்லை, பலவீனம்னவர்கள் தான் அவமரியாதை செய்வார்கள். 237 00:12:46,308 --> 00:12:49,019 நீங்க பலவீனமா இருக்காதீங்க. எனக்கு வகுப்பு இருக்கு. 238 00:12:55,526 --> 00:12:56,527 அவங்க கூலானவங்க. 239 00:13:25,889 --> 00:13:26,723 ச்சே! 240 00:13:30,811 --> 00:13:32,813 ச்சே! ச்சே! 241 00:13:47,494 --> 00:13:49,246 இங்கே வா, இங்கே லா. 242 00:13:50,247 --> 00:13:52,165 அந்த குறும்பு பெண்ணுக்கு ஸ்பெஷல் டெலிவரி. 243 00:13:52,165 --> 00:13:54,042 என்னை வேவு பார்ப்பதை நிறுத்தச் சொல்லு. 244 00:13:54,042 --> 00:13:55,127 நான் உன்னை கூப்பிட்டேன். 245 00:13:55,127 --> 00:13:56,962 நான் அந்த குருவின் மனைவியைப் பத்தி இன்னும் விஷயங்கள தெரிஞ்சுகிட்டேன். 246 00:13:57,546 --> 00:13:58,672 ஷ்ஷ்! நம்ம பேசுறதை ஒட்டு கேட்கலாம். 247 00:14:00,090 --> 00:14:02,092 - என்னது, அதாவது, உன் ஃபோனா? - இந்த வண்டி. 248 00:14:03,969 --> 00:14:08,974 பாரு, கேடுகெட்ட குரு தான் மனைவியை கொன்னு இருப்பான்னு, 99.9 சதம் உறுதியா நினைக்கிறேன். 249 00:14:08,974 --> 00:14:11,226 அவன் அவளைக் கார்ல மெக்ஸிகோவுக்குக் கூட்டிட்டு போய், 250 00:14:11,226 --> 00:14:14,438 அதுவே கொடூரமான, திட்டமிட்ட செயல் தான். 251 00:14:14,438 --> 00:14:17,608 அவளுடைய ராப் ஷீட் கிடைச்சதால, அவங்க குடும்பம் எங்க இருக்காங்கன்னு தெரிய வந்தது. 252 00:14:17,608 --> 00:14:19,026 அவங்க தான் காட்ச்சி குடும்பம். 253 00:14:19,026 --> 00:14:21,695 என்ன? காட்ச்சி குடும்பமா? எப்படி? 254 00:14:22,279 --> 00:14:23,989 மாஃபியா எல்லாம் ஒழிஞ்சுடுச்சுன்னு நினைச்சேன். 255 00:14:23,989 --> 00:14:27,075 ரான்சோ மிராஜுல அவங்க ஒரு டேன்னிங் ஸ்பாவை நடத்துறாங்க. 256 00:14:27,075 --> 00:14:29,369 அந்த டேன்னிங் ஸ்பா வெறும் ஒரு முகப்பு தான்னு எல்லோருக்கும் தெரியாதா, என்ன? 257 00:14:29,369 --> 00:14:31,705 - பாரு, இது ஹை டெஸ். - இல்ல? 258 00:14:31,705 --> 00:14:33,832 எனவே, காட்ச்சிகள் தான் பரிசை அறிவிச்சிருந்தால், 259 00:14:33,832 --> 00:14:36,251 அவங்களால மட்டும் தான் அது இன்னும் ஆக்டிவா இருக்கான்னு சொல்ல முடியும். 260 00:14:36,251 --> 00:14:38,795 சரி, நான் அதை சரிபார்க்கப் போறேன். 261 00:14:38,795 --> 00:14:40,130 டேன்னிங் ஸ்பா 262 00:14:49,765 --> 00:14:50,766 வேலைக்கு ஆள் தேவையில்லை. 263 00:14:51,350 --> 00:14:52,809 நான் விண்ணப்பிக்கவில்லை, கண்னே. 264 00:14:55,062 --> 00:14:57,105 நாங்க தற்சமயம் பெண்களுக்கு பெண்கள் வகை மஸ்ஸாஜுகளை அளிப்பதில்லை. 265 00:14:57,689 --> 00:15:00,776 எந்த பெண் அதை செய்திட்டு இருந்தாளோ, அவள் ஒரு மோட்டர்பைக் விபத்தில் காலை இழந்துட்டா. 266 00:15:00,776 --> 00:15:04,238 - இல்ல, வேண்டாம். ஒழிஞ்சேன், அப்பா. - இல்ல, வேண்டாம். ஒழிஞ்சேன், அப்பா. 267 00:15:04,947 --> 00:15:06,114 நிக் இருக்காரா? 268 00:15:06,907 --> 00:15:07,908 நிக்! 269 00:15:10,118 --> 00:15:12,829 நீ வெளுத்து போயிருக்க. அந்த டேன்னிங் பெட் காலி. 270 00:15:13,872 --> 00:15:15,499 இன்னிக்கு எனக்கு நேரம் இல்லை. 271 00:15:17,626 --> 00:15:18,961 நீங்க நிக் காட்ச்சி தானே? 272 00:15:20,212 --> 00:15:21,672 யார் கேட்கறாங்க? 273 00:15:21,672 --> 00:15:23,465 நேரடியா கேட்குறேன். 274 00:15:23,465 --> 00:15:26,510 என் சகோதரன் ஃபிராங்க்கைப் பத்தி நான் ஒரு புத்தகம் எழுதறேன். 275 00:15:27,010 --> 00:15:29,930 அவன் ஐந்து வருடங்கள் முன்னாடி காணாம போயிட்டான்! ஃபூ! அவ்வளவுதான், காணாம போயிட்டான். 276 00:15:30,514 --> 00:15:32,558 நாம இருவரும் ஒரு மாதிரி துக்கத்துல இருக்கோம்னு கேள்விப்பட்டேன். 277 00:15:33,392 --> 00:15:35,686 ரொம்ப நல்லா இருந்தது, கியூட்டீ. இங்கே நேரா இடது பக்கம். 278 00:15:35,686 --> 00:15:37,479 ஆம், நான் இப்போ கொஞ்சம் பிசி. 279 00:15:38,063 --> 00:15:40,941 - ஃபிரிட்ஜுல இன்னும் மேயோ இருக்கா? - இல்லை, காலி ஆயிடுச்சு. 280 00:15:41,441 --> 00:15:44,361 பணம் சம்பாதிக்க கூடவா பிசியா இருக்கீங்க, நிக்? என்ன? 281 00:15:44,361 --> 00:15:47,239 ஓ, ஆம். நான் ஒழிஞ்சேன், செய்லர். அட, ஆமாம். 282 00:15:47,239 --> 00:15:49,783 அரசு நமக்கு கடன்பட்டிருக்கு. நாம தான் பாதிக்கப்பட்டவங்க. 283 00:15:49,783 --> 00:15:54,621 எனக்குத் தெரிந்த வரை, இந்த நாட்டுல பாதிக்கப்பட்டவங்களுக்கு பணம் கிடைக்கும். 284 00:15:55,122 --> 00:15:57,708 ஓ, ஆம். ஓ, ஆமாம். 285 00:15:58,292 --> 00:16:00,127 - அந்த எழவு பிடிச்ச பறவை. - எழவு, எழவு, எழவு. 286 00:16:00,127 --> 00:16:02,796 - யோ, லையோநில் ரச்சி, வாயை மூடு! - ஒழிஞ்சேன், அப்பா. 287 00:16:02,796 --> 00:16:04,965 வென், அந்த இசையின் ஒலியை கொஞ்சம் அதிகமாக்கு, பிளீஸ். 288 00:16:04,965 --> 00:16:06,466 ஓய் வே. 289 00:16:06,466 --> 00:16:08,177 நமக்கு அவங்க ஈட்டுத்தொகை கொடுக்கணும். 290 00:16:08,886 --> 00:16:10,637 வலிக்கும் வேதனைக்கும் பணம் தரணும். 291 00:16:11,221 --> 00:16:14,766 அதுவும், அரசு மரியாதையுடன், அதாவது, உண்மையைச் சொல்லணும்னா, ஜானாதிபதிகளுக்கான 292 00:16:14,766 --> 00:16:18,562 மரியாதையுடன், கடைசி ஊர்வலம் நடத்தணும், ஆனால் அதை அப்புறம் பார்த்துக்கலாம். 293 00:16:19,646 --> 00:16:20,522 பாரு. 294 00:16:21,106 --> 00:16:23,817 நாங்க ஏற்கனவே டோனாவுக்கு பரிசுத்தொகை போட்டிருக்கோம். 70,000 டாலர்கள் போட்டிருக்கோம், 295 00:16:23,817 --> 00:16:25,152 அதனால, பணம் பெரிய... 296 00:16:25,152 --> 00:16:26,945 அந்த பணம் மூன்றாம் தரப்பினர்கிட்ட இருக்கா? 297 00:16:28,739 --> 00:16:33,493 ஏன்னா பெரும்பாலான குடும்பங்கள் பரிசு பணத்தை அப்படித் தான் வக்கிறாங்க. நான் வச்சிருக்கேன். 298 00:16:34,369 --> 00:16:38,040 பாருங்க, டோனாடெல்லா வீட்டுக்கு திரும்பணும்னு நான் வேண்டறேன், ஆனால் அவள் வரலைன்னா, 299 00:16:38,040 --> 00:16:40,876 உங்களுடைய வேதனைக்கு ஒரு விலை கிடைக்க வேண்டாமா? 300 00:16:42,544 --> 00:16:46,298 - நீ எவ்வளவு பணம் வரும்னு எதிர்பார்க்கிறாய்? - என்ன ஆளுக்கு மூணு மில்லயன், அதிகமாவோ. 301 00:16:46,298 --> 00:16:48,091 ஆனால் நாம கேஸ வலுவாக்கணும். 302 00:16:48,091 --> 00:16:50,385 ஒரே மாதிரி புகார்களை என் வக்கீல்கள் திறமையுடன் கையாளுவாங்க. 303 00:16:50,969 --> 00:16:52,346 அந்த லாக்கர்பீ விமானம் விழுந்து நொறுங்கியது... 304 00:16:53,263 --> 00:16:56,600 - அவங்க தான் அதை வாதாடினாங்களா? - அது ஒரு பில்லியன் -டாலர்-செட்டில்மெண்ட். 305 00:16:56,600 --> 00:16:58,227 பில்லியன் டாலர்கள். 306 00:17:00,312 --> 00:17:01,772 அந்த நிறுவனத்தின் பேர் என்ன? 307 00:17:02,356 --> 00:17:04,358 அவங்க ஆலோசனை கேட்டது. எக்ஹார்ட் & டோல். 308 00:17:04,358 --> 00:17:06,193 ஒரு வினாடி இரு, உன் பெயர் என்ன? 309 00:17:06,734 --> 00:17:08,362 சில்வியா பிளாத். 310 00:17:10,821 --> 00:17:14,660 நான் இறந்துவிட்டேன்னு சொல்லும், ஆனால் அது வேற சில்வியா பிளாத். 311 00:17:14,660 --> 00:17:16,036 என்னைப் பத்தின தகவல் எல்லாத்தையும் நான் ஒழிச்சுக் கட்டிட்டேன். 312 00:17:16,036 --> 00:17:18,955 நீ ரொம்ப வெளுத்துப் போயிருக்கீங்க. பத்து நிமிடங்கள் டேன்னிங் செய்துக்குறீங்களா? 313 00:17:18,955 --> 00:17:20,332 இல்லை, எனக்கு வேண்டாம். 314 00:17:21,124 --> 00:17:23,001 டோனடெல்லாவுக்கு என்ன ஆச்சுன்னு நினைக்கிற? 315 00:17:23,836 --> 00:17:25,712 எனக்குத் தெரியலை. அவள் பிரிஞ்சு போயிட்டா. 316 00:17:25,712 --> 00:17:28,464 இது தான் நீயா? த பெல் ஜார் புத்தகம் எழுதியது? 317 00:17:28,464 --> 00:17:32,386 இல்ல, அது அந்த இறந்த போன சில்வியா. அந்த புத்தகம் ஒரு சோகக் கதை. 318 00:17:32,386 --> 00:17:34,471 எனவே, அவளை யாரும் கொன்னு இருப்பாங்கன்னு உங்களுக்குத் தோணலையா? 319 00:17:34,471 --> 00:17:38,141 - அவள் கணவன்? - அவள் கணவனா? 320 00:17:38,141 --> 00:17:39,226 அந்த ஆளா? இல்ல. 321 00:17:40,102 --> 00:17:42,896 - என்ன. அப்போ, கணவன் பாப்பா இருக்காதா? - இல்ல, டோனா. இல்ல. 322 00:17:42,896 --> 00:17:46,525 நான் ஒழிஞ்சேன். நீ என்ன செய்த? ஒழிஞ்சேன், செய்லர். 323 00:17:46,525 --> 00:17:48,735 - ச்சே. ச்சே. - அந்த பறவைக்கு வாய்அதிகம் தான். 324 00:17:48,735 --> 00:17:50,696 ஒவ்வொரு முறை அவன் பெயரை கேட்கும் போதெல்லாம் ஆரம்பிச்சுடும். 325 00:17:51,488 --> 00:17:53,991 - பாப்புடைய பெயரா? - ச்சே, ச்சே. இல்ல, டோனா. 326 00:17:54,491 --> 00:17:56,702 - இது அவகிட்ட பல காலமா இருந்திருக்கு. - ஒழிஞ்சேன், செய்லர். 327 00:17:57,244 --> 00:18:00,622 இருந்தாலும், அவன் பழங்களையும், ஃப்ரூட்கேக்கையும் மட்டுமே சாப்பிடற பைத்தியக்காரன். 328 00:18:00,622 --> 00:18:02,374 - அவனால முடியாது. - எனக்குத் தெரியலை. 329 00:18:02,374 --> 00:18:05,085 அவனுக்கு நல்ல தசைகள் எல்லாம் இருக்கு. நான் அவன் படங்களை பார்த்திருக்கேன். 330 00:18:05,085 --> 00:18:09,673 அதாவது, அவன் ஒரு வகையில பலசாலிதான். ஆனால் அவன் கொலை செய்யலாம். 331 00:18:10,299 --> 00:18:11,300 இல்ல. 332 00:18:11,925 --> 00:18:15,512 டோனா அவனை வெறுத்தாள். அவள் பணத்தை எல்லா எடுத்துட்டா. அந்த சீட்டை பார்த்திருக்கணும். 333 00:18:15,512 --> 00:18:18,765 அப்போ, உங்ககிட்ட அவள் எங்கே போறான்னு ஏன் சொல்லலை, அவள் எங்கேயும் போயிருந்தா? 334 00:18:18,765 --> 00:18:22,477 பாரு, அவளுக்கு குடும்பத்துடன் பிரச்சினைகள் இருந்தது சரியா? அதைப் பத்தி நான் சொல்ல வேண்டாம். 335 00:18:22,477 --> 00:18:24,771 நாங்க எல்லோரும் ஒரு பக்கம், அவள் இன்னொரு பக்கம்னு சொல்லலாமா. 336 00:18:24,771 --> 00:18:26,481 நாங்க வாழறதுக்கே கஷ்டப்பட்டோம். 337 00:18:26,481 --> 00:18:28,817 அவள் அதை எல்லாத்தையும் ஆர்ட் ஸ்கூல்ல செலவு செய்தா, சரியா? 338 00:18:28,817 --> 00:18:31,153 நாங்க எல்லோரும் பிசினஸ் செய்யறவங்க, அவள் அப்படி இல்லை. 339 00:18:31,153 --> 00:18:33,739 ஆமாம், ஆமாம். 340 00:18:33,739 --> 00:18:35,073 ஒழிஞ்சேன், செய்லர். 341 00:18:35,782 --> 00:18:37,868 - எனவே, இந்த புத்தகம் எப்போ வெளியாகுது? - இன்னும் ஒரு வருஷத்துல. 342 00:18:37,868 --> 00:18:39,536 நான் இன்னும் மத்த குடும்பங்களுடன் பேசணும். 343 00:18:39,536 --> 00:18:41,205 - நான் தொடர்புல இருக்கேன். - பொறு. 344 00:18:41,747 --> 00:18:45,209 - என்னுடன் ஒரு வினாடி வா. - ஓ, இல்ல. ச்சே. ச்சே, ச்சே. 345 00:18:45,209 --> 00:18:47,252 - அப்போ ஒரு பரிசு இருக்கு, சரியா? - ஆம். 346 00:18:47,252 --> 00:18:50,380 நான் உனக்கு ஒரு இலவச டேன்னிங்க நேரத்தை ஒதுக்கப் போறேன், ஏன்னா உன்னை பார்க்க முடியலை. 347 00:18:51,173 --> 00:18:53,800 ஆம், டோனி! அப்படித்தான்! 348 00:18:56,512 --> 00:18:57,721 அது ஒரு லித்தோகிராஃப்பா? 349 00:19:02,559 --> 00:19:04,311 அது கான்வாஸில் ஆயில் ஓவியம். 350 00:19:04,311 --> 00:19:05,771 ஆம். டோனா தான் தீட்டினாள். 351 00:19:08,398 --> 00:19:09,483 டோனா வரைந்தாரா? 352 00:19:11,360 --> 00:19:12,569 இது ஒரு மக்ரீட் ஓவியம் மாதிரி இருக்கே. 353 00:19:14,780 --> 00:19:18,367 அது மக்ரீட்டின் மனைவி, நிஜமா. இதோட வரலாறு தெரியுமில்ல? 354 00:19:18,367 --> 00:19:21,787 வரலாறின் படி, அவருக்கு கொஞ்சம் குண்டா ஒரு மனைவி இருந்தாள், நான் அப்படி நினைக்கிறேன். 355 00:19:21,787 --> 00:19:24,790 என் விருப்பம், நல்ல அகலமா, தட்டையான வயிறுடன், நல்ல டேனுடன் இருக்கணும். 356 00:19:24,790 --> 00:19:27,042 ஆனால் டோனாவுக்கு இது ரொம்ப பிடிக்கும். 357 00:19:28,001 --> 00:19:30,379 எப்படியானாலும், வா. உள்ளே வா. வா, போகலாம், போகலாம். 358 00:19:32,464 --> 00:19:34,091 நீ என்ன செய்த? 359 00:19:34,091 --> 00:19:36,718 ஓ, ஆமாம். லையோநில் ரச்சி இப்போதெல்லாம் ரொம்ப சோகத்துல இருக்கு. 360 00:19:37,344 --> 00:19:40,305 30 வருஷமா அவளுடன் இருந்தது. அவளுடைய குழந்தை மாதிரி. 361 00:19:41,056 --> 00:19:43,058 அவள் போகும் போது அதனுடைய இறகுகளை எல்லாம் பிடுங்கி எடுத்துடுச்சு. 362 00:19:43,058 --> 00:19:45,686 நான் ஒழிஞ்சு போறேன், அப்பா. ஓ, இல்ல. 363 00:19:47,396 --> 00:19:48,397 ஓ, ஆமாம். 364 00:19:50,357 --> 00:19:53,277 தெளிவா, அவளுக்கு அந்த லையோநில் ரச்சி மேல பிரியம் இருந்திருக்கு, போகட்டும். 365 00:19:53,986 --> 00:19:57,072 விஷயம் என்னன்னா, திருட்டு மாஸ்டர்பீஸ் ஓவியங்களை அவள் நகல் எடுத்தாள், 366 00:19:57,072 --> 00:19:59,908 அதை அந்த ஸ்வாமி அந்த கூட்டத்துக்கு வித்தான். 367 00:19:59,908 --> 00:20:03,036 அதாவது, அவள் இறந்ததுக்கு எல்லா அறிகுறியும் இருக்கு. 368 00:20:03,912 --> 00:20:07,833 - பாவம் டோனா. - தெரியும். மனித இனத்துக்கே நஷ்டம், கரோல். 369 00:20:08,667 --> 00:20:09,918 அவள் நிச்சயமா நல்லா ஓவியம் தீட்டினாள். 370 00:20:09,918 --> 00:20:14,464 அதாவது, நான் ஓவியத்தை மதிப்பீடு செய்யறவ இல்லை, இருந்தாலும் ஒரு அளவுக்குத் தெரியும். 371 00:20:14,464 --> 00:20:15,924 ஒரு வினாடி, 372 00:20:15,924 --> 00:20:18,886 நிஜமான மக்ரீட் ஓவியத்தை தான் நான் பார்க்கிறேன்னு நான் நினைச்சேன். 373 00:20:19,970 --> 00:20:22,347 மேலும், அது சொல்றதை விட அந்த பறவைக்கு அதிகமாவே தெரியுது. 374 00:20:23,807 --> 00:20:26,852 அவளை ஏன் கொலை செய்தான்னு நினைக்கிற? பொறாமையா? 375 00:20:26,852 --> 00:20:30,314 ஆமாம். அவங்க இந்த மோசடியை செய்துட்டு இருந்தாங்க, அதுல ஏதோ தப்பாயிருக்கு. 376 00:20:30,314 --> 00:20:33,150 அந்த குரு தான் கொலைக்கும் அந்த பறவையின் துக்கத்துக்கும் காரணம். 377 00:20:33,150 --> 00:20:35,319 நான் காணவில்லை என்ற நபர்களைப் பத்திய ரிபோர்ட்டை போய் வாங்கிட்டு வரேன். 378 00:20:35,861 --> 00:20:38,113 ஹே! என் காரை விட்டு வெளியே வா! 379 00:20:38,113 --> 00:20:40,324 நான் ஒரு பைத்தியக்காரியை சமாளிக்கணும். அப்புறமா என்னை மாமிஸ்ல சந்தி. 380 00:20:40,324 --> 00:20:43,368 உனக்கு பைத்தியமா? இன்னொருவரின் கார்ல யாராவது ஏறுவாங்களா? 381 00:20:43,368 --> 00:20:44,786 ஆம், தப்பு தான். நான் லேட்டா வந்தேன். 382 00:20:44,786 --> 00:20:46,288 நீ என் காரின் வழியில குறுக்க நிறுத்தியிருக்க. 383 00:20:46,288 --> 00:20:48,498 கண்ணே, எனக்கு இருக்குற கோபத்துக்கு சுட்டுவிடுவேன். 384 00:20:48,498 --> 00:20:50,375 சரி, அப்படின்னா எனக்கு இன்னிக்கு ராசியான நாள், இல்லையா? 385 00:20:51,460 --> 00:20:52,461 அவை அந்த செயற்கை நகங்களா? 386 00:20:55,339 --> 00:20:57,925 ஆமாம். நான் தான் செய்தேன். 387 00:20:58,675 --> 00:20:59,593 அது தான் என் கடை. 388 00:20:59,593 --> 00:21:00,719 அருமை. 389 00:21:02,346 --> 00:21:03,514 நான் பார்க்கலாமா? 390 00:21:05,474 --> 00:21:07,643 ஓ! அருமை. அதை எப்படி செய்யறீங்க? 391 00:21:07,643 --> 00:21:08,977 அனுபவம் தான். 392 00:21:08,977 --> 00:21:11,855 சரி, அது மாத்திரம் இல்ல விஷயம், இது ஒரு திறமை. 393 00:21:13,148 --> 00:21:15,108 கடைக்கு வாங்க. நான் டிஸ்கவுண்ட் தரேன். 394 00:21:15,901 --> 00:21:17,152 ஆ! சரி. 395 00:21:17,152 --> 00:21:18,237 இனி ஒரு முறை அப்படி செய்யாதீங்க. 396 00:21:18,237 --> 00:21:19,446 நன்றி. 397 00:21:21,365 --> 00:21:24,618 காணாம போனவங்க ரிப்போர்ட். டோனா ஸ்கார்போரோ பாப்புக்கு ஒரு சீட்டு எழுதியிருக்கா. 398 00:21:26,078 --> 00:21:28,038 டியர், பாப், நீ நாசமா போக நீ சரியா தான் சொன்ன எல்லாமே முட்டாள்தனம் 399 00:21:28,038 --> 00:21:29,122 குறிப்பா நீ - டோனா 400 00:21:29,122 --> 00:21:31,124 - அருமை. ரொம்ப கடுமையா இருக்கு. - இல்ல? 401 00:21:31,124 --> 00:21:33,168 ஆகவே, அவள் விட்டுட்டுப் போயிருக்கா. அவ போயிருக்கா. 402 00:21:33,168 --> 00:21:34,461 ஆனால் அவள் லையோநில் ரச்சியை விட்டுட்டு போயிருக்காளே. 403 00:21:34,461 --> 00:21:38,382 அவள் அந்த பறவையை நேசிச்சிருக்கா. அது கெட்ட வார்த்தைகளை பேசினாலும். 404 00:21:38,882 --> 00:21:43,262 இப்போ அது ஒரு வேர்ஹௌஸ்ல இருக்கு, தன் இறகுகளை தானே பிக்குது. மனசு உடைஞ்சு. 405 00:21:44,638 --> 00:21:46,640 அவன் தான் கொன்னு இருப்பான். உறுதியா சொல்ல முடியும். 406 00:21:48,433 --> 00:21:49,935 நான் அந்த பறவையைப் போய் எடுத்துட்டு வரணும். 407 00:21:50,644 --> 00:21:51,770 நீ ரொம்ப இனிமையானவள். 408 00:21:51,770 --> 00:21:54,106 ஒரு இறகு இல்லாத பறவையை வச்சுப்பாயா? 409 00:21:54,606 --> 00:21:55,732 எவ்வளவு அக்கறை உனக்கு. 410 00:21:55,732 --> 00:21:58,902 அந்த பறவையைப் பத்தி யோசிச்சாலே என்னால இன்னிக்கு இரவு தூங்க முடியுமான்னு தெரியலை. 411 00:21:59,403 --> 00:22:01,572 ரொம்ப அதிகமாகிடுச்சு. 412 00:22:02,281 --> 00:22:03,115 ஹே. 413 00:22:04,700 --> 00:22:09,788 நாம் அதையெல்லாம் பொறுத்துக்கணும், கரோல். அதையெல்லாம் பொறுத்தக்க தான் வேணும். 414 00:22:10,914 --> 00:22:14,668 இன்னொரு விஷயம், நீ உன் தங்கையை தொடர்புகொள்ளணும், ஏன்னா ஸ்டூவர்ட் அவளுக்கு டென்ஷன் தரான். 415 00:22:14,668 --> 00:22:17,462 அவன் எப்படின்னு உனக்கு தான் தெரியுமே. அவனால உணர்ச்சிகளை வெளிகாட்ட முடியாது. 416 00:22:17,462 --> 00:22:19,548 அவன் இறுதி ஊர்வலத்துல கூட அழலைன்னு நீ சொன்னயே. 417 00:22:19,548 --> 00:22:20,966 ஒரு பொட்டு கண்ணீர் இல்லை. 418 00:22:20,966 --> 00:22:22,968 நான் "த விண்ட் பினீத் மை விங்ஸ்" பாடியபோதும் கண்ணீர் இல்ல. 419 00:22:22,968 --> 00:22:24,344 என்ன? 420 00:22:24,928 --> 00:22:27,097 புறாக்கள் பறந்திருக்கணும். 421 00:22:27,097 --> 00:22:29,933 வருத்தம். நெஞ்செரிச்சல் மாதிரி இருக்கு. 422 00:22:31,894 --> 00:22:33,687 இருந்தாலும், நான் அவளை தொடர்புகொள்ள பார்த்தேன். 423 00:22:35,355 --> 00:22:37,232 அதனால என்ன, மீண்டும் முயற்சி செய்யலாமே? 424 00:22:47,701 --> 00:22:49,453 டையேன். ஹே. 425 00:22:49,453 --> 00:22:52,789 எனக்கு ஒரு உதவி செய், என்னை பி. டவுன்ல சந்தி. நான் உனக்கு ஒண்ணு காட்டணும். 426 00:22:54,208 --> 00:22:55,209 "முடியாது"ன்னா என்ன அர்த்தம்? 427 00:22:56,126 --> 00:22:58,712 சரி, பரவாயில்லை, அப்போ நான் உனக்கு ஃபோன்லயே சொல்றேன். 428 00:22:58,712 --> 00:23:00,881 பாரு, நீ ஹைஸ்கூல் படிச்சிட்டு இருந்த போது எழுதி பென்ட்ஹௌஸ் ஃபோரத்துக்கு 429 00:23:00,881 --> 00:23:03,008 கொடுக்க நினைச்ச எதோ குறும்பு சீட்டு ஒண்ணு என்னிடம் இருக்கு. 430 00:23:03,592 --> 00:23:06,845 நீயும் லென்னி டைக்ஸ்டிராவுடன் ஒரு குழியில இருப்பதாக ஏதோ ஒரு கற்பனை கதை. 431 00:23:07,471 --> 00:23:10,432 அம்மா அதை கெட்டியா பிடிச்சுகிட்டாங்க. உன்னைப் பத்தி ரொம்ப பெருமைப்பட்டாங்க. 432 00:23:11,433 --> 00:23:14,102 இருக்கட்டும், நான் அதை உன் வீட்டுக்கு அனுப்ப முடியும், ஆனால் உன் குழந்தை... 433 00:23:15,896 --> 00:23:18,524 ஆமாம். சரி, அப்போ உன்னை பார்க்கறேன். 434 00:23:20,275 --> 00:23:21,276 யேய். 435 00:23:22,444 --> 00:23:25,447 பயோனீயர்டவுன்கிட்ட, வெளியே இருக்குற பங்க்ஹௌஸுக்குப் பின்னாடி வா. 436 00:23:30,911 --> 00:23:31,912 பெக்கி நியூமன் வழங்கும் "எங்கள் பயோனீயர்டவுன்" 437 00:23:31,912 --> 00:23:33,080 நடிப்பவர்கள், பெக்கி நியூமன் மற்றும் டிவி ஸ்டார் ஜிஞ்சர் ஃபாக்ஸ்! 438 00:23:33,080 --> 00:23:34,289 செவ்வாய்க்கிழமையிலிருந்து, வியாழக்கிழமை இருக்கலாம் 439 00:23:40,170 --> 00:23:41,797 உங்க அம்மாவிற்கு. உங்களுக்கும். 440 00:23:42,589 --> 00:23:46,134 பெக்கி, நைட் ரைடர்ல அவங்க ரெகுலரா வருவாங்கன்னு உனக்குத் தெரியுமா? 441 00:23:46,134 --> 00:23:48,053 செமி-ரெகுலரா. செமி. 442 00:23:48,053 --> 00:23:52,266 மன்னிக்கணும். லெட்ஜர்களைக் கிழிச்சு பேப்பர் பொம்மைகள் செய்யவும் திறமை தேவைப்படுமோ? 443 00:23:52,266 --> 00:23:55,394 அதோட, அவள் குதிரை மேல இருந்தால், புத்தகங்களை யார் பார்த்துப்பா? 444 00:23:56,144 --> 00:23:58,021 இப்போ எது வேணும்னாலும் நடக்கலாம். 445 00:23:59,731 --> 00:24:00,858 மன்னிக்கணும். இல்ல! 446 00:24:00,858 --> 00:24:05,153 இப்போ அவங்க முத்தமிடறாங்களே. அதெல்லாம் அந்த காலத்துக்குப் பொருந்தாது. 447 00:24:05,153 --> 00:24:07,030 ஒரு ஆணுக்காக ரொம்ப கஷ்டப்பட வேண்டாம். 448 00:24:07,030 --> 00:24:11,076 ஒரு பூனை மாதிரி இருக்கணும்னு சொல்வேன். அவங்க நம்மை தேடி வரணும். 449 00:24:11,869 --> 00:24:13,453 எவ்வளவு காலமா நீ தனியா இருந்திருக்க? 450 00:24:14,413 --> 00:24:16,081 முப்பத்து நாலு வருஷமா. 451 00:24:18,542 --> 00:24:20,878 ஹே, நீ கொஞ்சம் பணம் சம்பாதிக்க விரும்பறயா? 452 00:24:21,628 --> 00:24:23,338 நான் பணமே சம்பாதிக்கலை. 453 00:24:23,338 --> 00:24:25,716 நீ ஒரு கலை ஆர்வமுள்ளவளா நடிப்பயா? 454 00:24:27,759 --> 00:24:31,972 நான் கலையை உற்சாகப்படுத்துறவளா தாமஸ் க்ரௌண் அஃபேர்-ல நடிச்சேன். 455 00:24:32,806 --> 00:24:33,891 "அது நல்லாயிருக்கு." 456 00:24:35,601 --> 00:24:36,810 அது தான் நான் பேசிய வரி. 457 00:24:37,603 --> 00:24:40,314 ரூஸோ மிரட்டினாங்க. அவள் அந்த பாகத்தை வெட்டிட்டா. 458 00:24:41,398 --> 00:24:44,610 சரி. ஜிஞ்சர், உள்ளே போ. உன் கதாபாத்திரத்தின் ஆடையைப் போட்டுக்கோ. 459 00:24:45,194 --> 00:24:46,737 - ஹை! - சரி. நான் இங்கே வந்துட்டேன். 460 00:24:46,737 --> 00:24:47,946 ஹே! 461 00:24:47,946 --> 00:24:48,947 ஹை. ஹை. 462 00:24:49,531 --> 00:24:51,450 - சரி, நீ தயாரா? - எதுக்குத் தயாரா? 463 00:24:51,450 --> 00:24:54,828 சரி. ஒரு போலி அம்மாவுடன் ஒரு காட்சி நடிக்க. 464 00:24:54,828 --> 00:24:56,455 எதையெல்லாம் சொல்ல முடியலையோ அதையெல்லாம் சொல்லிடு. 465 00:24:56,455 --> 00:24:58,123 அது கட்டாயமா உதவும். சத்தியமா சொல்றேன். 466 00:24:59,374 --> 00:25:00,918 அந்த பென்ட்ஹௌஸ் கடிதம் என்ன ஆச்சு? 467 00:25:00,918 --> 00:25:03,962 நான் எப்போதும் உன் மேல அக்கறையா இருப்பதால அந்த குப்பையை நான் தூக்கி எறிஞ்சுட்டேன். 468 00:25:04,630 --> 00:25:07,049 உன்னை லிட்டில் லீகுல நடிக்க விடாததுக்கு, தண்டனையா, அந்த கோச்சுக்கு த ரையட் 469 00:25:07,049 --> 00:25:08,842 காட்சியை படிச்சேன், நினைவிருக்கா? 470 00:25:09,551 --> 00:25:11,470 உன் மேல எனக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. சரியா? 471 00:25:13,931 --> 00:25:15,432 கொஞ்சம் நிமிஷம் இரு. 472 00:25:18,852 --> 00:25:20,145 ஜிஞ்சர்! 473 00:25:20,145 --> 00:25:22,189 நாம இதை பல காலமா செய்துட்டு வருவதால, 474 00:25:22,189 --> 00:25:25,651 இங்கே கொஞ்சம் டையேன் இன்னொரு மகளா நடிப்பாள். 475 00:25:25,651 --> 00:25:28,111 - டையேன்... - என்னுடைய உண்மையான பெயரை சொல்லேன்? 476 00:25:28,111 --> 00:25:30,656 ...ஐசிஸ். டையனைசிஸ். சரி. 477 00:25:30,656 --> 00:25:36,912 தெளிவா, நீ சாகற தருவாயில இருக்க, உனக்கும் டையேனைசிஸுக்கும் தொடர்பில்லாம போச்சு. 478 00:25:37,663 --> 00:25:41,333 ஜெரி போனதுக்கு அப்புறம் நடந்ததை யாராலும் மறக்கவே முடியலை. 479 00:25:41,917 --> 00:25:42,918 கேடுகெட்டவன். 480 00:25:43,794 --> 00:25:47,214 இப்போ, ஸ்டூவர்ட் தன் கட்டைவிரலை சப்பிட்டு இருக்குற காட்சியை நினைவுபடுத்திக்கலாம். 481 00:25:47,881 --> 00:25:50,133 - அந்த பையனுக்கு என்ன வயசு? - அவனுக்கு ஒன்பது வயசு. 482 00:25:50,801 --> 00:25:53,762 அவனிடம் எதுவும் குறை இருக்கா? அது விரல் சப்பற வயசு இல்லையே. 483 00:25:54,721 --> 00:25:57,182 இது "அவமானப்படுத்தக் கூடாத நிலை," ஜிஞ்சர். 484 00:25:58,267 --> 00:25:59,768 என்னால இதைச் செய்ய முடியாது. 485 00:25:59,768 --> 00:26:02,354 மன்னிச்சிடு. இது ரொம்ப விசித்திரமா இருக்கு. 486 00:26:02,354 --> 00:26:04,022 ஹே. முடியாது, கீழே படு. 487 00:26:04,022 --> 00:26:06,817 நீ இப்போ சாகக் கிடக்குற, பேச்சு சரியா வரலை. 488 00:26:07,526 --> 00:26:08,610 டையேனைசிஸ். 489 00:26:09,361 --> 00:26:11,405 உனக்கு உண்மையா எப்படி இருந்ததுன்னு, நீ அம்மாவிடம் சொல்லணும். 490 00:26:11,405 --> 00:26:15,367 அவங்கள பாரு. அவங்க திறந்த மனசுடன், நீ சொல்றதை கேட்பாங்க. 491 00:26:16,159 --> 00:26:19,079 உன் மனசைத் திறந்து பேசு. 492 00:26:19,830 --> 00:26:22,541 அவங்க கேட்க தயாரா இருக்காங்க. 493 00:26:23,750 --> 00:26:26,044 - சலூன்ல வேலையை நிறுத்துங்க! - மன்னிச்சிடு, பெக். 494 00:26:26,044 --> 00:26:27,129 வா. 495 00:26:28,005 --> 00:26:29,214 இந்த தருணத்தல கவனமா இரு. 496 00:26:31,800 --> 00:26:35,637 இந்த தருணத்துல இரு. இப்போ... ஆக்ஷன்! 497 00:26:42,352 --> 00:26:46,648 அம்மா. நீங்க இறக்கும் முன் நான் உங்கள பார்க்கலை. 498 00:26:46,648 --> 00:26:48,066 உனக்கு பயமா இருந்ததா? 499 00:26:50,068 --> 00:26:52,279 நிச்சயமா பயம் தான். யாருக்கு இருக்காது? 500 00:26:53,071 --> 00:26:54,781 ஜிஞ்சர், உனக்கு நினைவில்லை. 501 00:26:58,368 --> 00:27:00,329 சரி, அப்பா போறதுக்கு முன்னாடி, 502 00:27:00,329 --> 00:27:03,957 நீங்க என்னை நகரத்துல இருக்குற ஆல்வின் ஏய்லியை பார்க்க கூட்டிட்டு போனீங்க, அங்கே உட்கார்ந்து, 503 00:27:04,708 --> 00:27:10,380 நீங்க அழுதீங்க... ஏன்னா நீங்க அதிர்ச்சியில இருந்தீங்க. 504 00:27:11,173 --> 00:27:13,926 அதுக்கு அப்புறம் கிராண்ட் சென்ட்ரல் ஸ்டேஷன்ல, நாம ஐஸ் கிரீம் சாப்பிட்டோம், 505 00:27:13,926 --> 00:27:17,304 அப்போ ஒரு காலத்துல நீீங்க ஒரு டான்சர் ஆக ஆசைப்பட்டதாகச் சொன்னீங்க. 506 00:27:20,641 --> 00:27:22,559 அதுக்கு அப்புறம் நான் டிரெயின்ல தூங்கிட்டேன். 507 00:27:24,061 --> 00:27:27,105 அந்த ஒரு நாள், நீங்க மொத்தமும் என்னுடைய அம்மாவா இருந்தீங்க. 508 00:27:30,234 --> 00:27:33,028 ஆனால், அப்பா விட்டுட்டு போனதுக்கு அப்புறம், நீங்க ஒரு ஆவியைப் போல ஆகிட்டீங்க. 509 00:27:36,240 --> 00:27:38,617 உண்மையா இறக்கும் முன்னரே சில பேர் இறந்து விடறாங்க. 510 00:27:41,036 --> 00:27:43,539 நான் எப்படியாவது உங்க கவனத்தை திரும்பப் பெறணும்னு முயற்சித்தேன், 511 00:27:45,999 --> 00:27:46,959 ஆனால் ரொம்ப வலிச்சுது. 512 00:27:46,959 --> 00:27:48,418 அதுக்கு மேல என்னால செய்ய முடியல! 513 00:27:50,087 --> 00:27:52,339 எனக்காக மக்கள் காத்துட்டு இருப்பதை பார்க்கிறேன். 514 00:27:54,174 --> 00:27:58,011 நான் நல்லா செய்தால், வெற்றி அடைஞ்சால், நீங்க திரும்பி வந்துடுவீங்கன்னு 515 00:27:58,011 --> 00:27:59,179 நான் நினைச்சேன். 516 00:28:01,181 --> 00:28:02,182 ஆனால் நீங்க போய் சேர்ந்துட்டீங்க. 517 00:28:07,104 --> 00:28:09,273 நான் உன்னை நேசிக்கிறேன்னு சொல்ல விரும்புறேன். 518 00:28:11,567 --> 00:28:13,068 சரியா? அதோட... 519 00:28:15,571 --> 00:28:16,989 நான் உன்னை மன்னிக்கிறேன். 520 00:28:26,039 --> 00:28:27,666 நானும் உன்னை மன்னிக்கிறேன். 521 00:28:28,876 --> 00:28:31,128 உனக்கு நினைவில்லை, ஜிஞ்சர்! 522 00:28:31,128 --> 00:28:33,255 என்ன? எதுக்கு? நீ எதுக்கு என்னை மன்னிக்கணும்? 523 00:28:33,255 --> 00:28:35,090 சுயநலமா இருந்ததுக்கு. 524 00:28:35,841 --> 00:28:36,925 அவ என்ன செய்கிறாள்? 525 00:28:36,925 --> 00:28:39,386 அது தான் சரின்னு தோணுச்சு. அவள் ரொம்ப ஒட்டிக்கற மாதிரி இருந்தா. 526 00:28:39,386 --> 00:28:41,513 அடக் கடவுளே... இது வெறும் பொய். 527 00:28:42,306 --> 00:28:44,016 இதை விடு. அவள் கேவலமா இருந்தா. 528 00:28:47,728 --> 00:28:49,688 அது நஞ்சை வெளியே கொட்டுவது போல இல்ல? 529 00:28:49,688 --> 00:28:53,233 நஞ்சை வெளியே கொட்டுவதா? பெக்கி, இல்ல! இப்போ இன்னும் மோசமா உணர்கிறேன். 530 00:28:53,734 --> 00:28:55,277 அவள் நல்ல அம்மா இல்லை. 531 00:28:55,277 --> 00:28:57,696 எனக்குத் தெரியும். அவங்க ரெண்டு பேரும் அப்படி தான். 532 00:29:06,830 --> 00:29:09,791 ஓ, என்... நீ போறயா? பிளீஸ்! 533 00:29:12,002 --> 00:29:13,837 நீ நிஜமாவே அந்த படுக்கையிலே மோசமா நடிச்ச. 534 00:29:14,755 --> 00:29:16,507 நீ ஆர்ட் வாங்கறவளா இன்னும் கொஞ்சம் நல்லா செய்தா நல்லாயிருக்கும். 535 00:29:30,437 --> 00:29:31,605 இது நல்லாயிருக்கா. 536 00:29:31,605 --> 00:29:34,399 நல்லா இருக்கா? ஆம், அது சிஸ்சான். 537 00:29:34,900 --> 00:29:36,026 கோபப்படாதே. 538 00:29:36,026 --> 00:29:38,695 - அது சிஸ்சான் தான். - அது ரொம்ப கிளாசிக்கா தான் இருக்கு, 539 00:29:38,695 --> 00:29:41,448 நவீனமான வகையில அப்படியிருக்கு. 540 00:29:41,448 --> 00:29:44,243 அதாவது நான் மாத்தி சொல்வது சரியா இருக்கும்னு நினைக்கிறேன். 541 00:29:47,037 --> 00:29:48,539 900,000? 542 00:29:48,539 --> 00:29:50,123 கிட்ட கூட வரலையே. 543 00:29:50,123 --> 00:29:53,836 - நீ போய் உன் ஆளைக் கூப்பிடேன்? - ஓ, ஆமாம். ஆம்! 544 00:29:53,836 --> 00:29:57,881 இப்போது தான் சரியான வேளை. நிச்சயமா. 545 00:29:59,550 --> 00:30:00,634 அவள் என்ன கிறுக்கா? 546 00:30:00,634 --> 00:30:02,553 அவளுக்கு சில குறைபாடுகள் இருக்கு. 547 00:30:02,553 --> 00:30:04,721 ஆனால் நம்பிக்கையானவள். 548 00:30:04,721 --> 00:30:06,431 விஷயம் என்னன்னா, அவளுடைய ஆளிடம் நிறைய பணம் இருக்கு. 549 00:30:06,431 --> 00:30:08,976 நமக்கு காச்செலுக்கு எதிரா விலை பேச யாராவது தேவை. 550 00:30:08,976 --> 00:30:10,477 அவனுக்கு அப்போ தான் அதன் அழுத்தம் தெரியும். 551 00:30:10,477 --> 00:30:12,688 பொறு. அவ நம்ம ஆளுக்கு வேலை செய்யலையா? 552 00:30:12,688 --> 00:30:14,439 அவள் ஜேம்ஸ் காச்செல்லுக்கு வேலை செய்யறான்னு நான் நினைச்சேன். 553 00:30:14,439 --> 00:30:17,526 இல்லை, அவள் காச்செல் வெறுக்குற ஆள் ஒருவருக்காக வேலை செய்யறா. 554 00:30:17,526 --> 00:30:19,945 நீ தான் அவள் ஜேம்ஸ் காச்செல்லுக்காக வேலை செய்வதாகச் சொன்ன. 555 00:30:20,737 --> 00:30:26,326 உனக்கு 1.3 வேணுமா வேண்டாமா? நீ உனக்கு 1.3 வேணும்னு சொன்னயா இல்லையா? 556 00:30:26,326 --> 00:30:28,996 - ஆமாம். - சரி, இப்படி தான் நமக்கு 1.3 கிடைக்கப் போகுது. 557 00:30:32,165 --> 00:30:36,545 சரி, நிச்சயமா செய்யறேன், சார். ஆம், சரி. 558 00:30:39,590 --> 00:30:43,427 - நாம தொடர்புல இருப்போம். - சரி. தொடாதே. வா, வா. 559 00:30:45,012 --> 00:30:46,096 எவ்வளவு மோசமா இருக்கு? 560 00:30:46,763 --> 00:30:51,059 மோசமா தான் இருக்கு. நான் மோசம்னு நினைச்சேன், ஆனல் இது படுமோசமா இருக்கு. 561 00:30:51,560 --> 00:30:53,478 உங்கிட்ட கொடை இருக்கா? என் சருமத்தை பாதிக்கும். 562 00:30:53,478 --> 00:30:55,147 எவ்வளவு மோசம்? என்ன சொல்றீங்க? 563 00:30:55,147 --> 00:30:56,607 இல்ல ஒரு தொப்பி? 564 00:30:56,607 --> 00:30:59,109 நான் திவாலாகிட்டேன்னு அறிவிக்க வேண்டி வரலாம். 565 00:30:59,943 --> 00:31:02,738 நீங்க திவாலாகிட்டதாக அறிவிக்க முடியாது. 566 00:31:02,738 --> 00:31:05,908 நான் சம்பளநாளுக்கு ரொம்ப பக்கத்துல வந்துட்டேன். இதுல என் வாழ்நாளின் உழைப்பு. 567 00:31:06,867 --> 00:31:08,035 நான் என்ன செய்யப் போறேன்? 568 00:31:09,661 --> 00:31:11,705 என்னால வேற எதுவும் செய்யவும் முடியாது. நான் ஒரு முட்டாள். 569 00:31:11,705 --> 00:31:14,458 பாரு, இன்னிக்கு ஒரு நாள் கொடுங்க, இல்ல நாளை வரைக்கும். 570 00:31:14,958 --> 00:31:16,960 சரி. வியாழக்கிழமை வரை. 571 00:31:16,960 --> 00:31:19,421 ஆனால் தைரியத்தை இழக்காதீங்க. செம்பர் ஃபி. 572 00:31:20,088 --> 00:31:21,215 நம்பிக்கையுடன் இருங்க. 573 00:31:24,885 --> 00:31:27,513 இன்றைய சீகாங்கு வகுப்புல, 574 00:31:27,513 --> 00:31:30,641 நம் வாயில்களை மூடுவதில் கவனம் செலுத்துவோம். 575 00:31:32,017 --> 00:31:33,644 பின்பாகத்தை சுருக்குங்கள். 576 00:31:35,062 --> 00:31:36,563 இடுப்பை வளைக்கவும். 577 00:31:41,276 --> 00:31:42,361 யார் அது? 578 00:31:43,487 --> 00:31:44,655 இது ஜூடி. 579 00:31:45,155 --> 00:31:47,699 - ஜூடியா, என்ன? - கேடுகெட்டவன் அவளை சூடான கார்ல விட்டுட்டான். 580 00:31:47,699 --> 00:31:51,828 நான், "இல்ல, இன்னிக்கு அப்படி நடக்க விடமாட்டேன். நீ என்னுடன் வந்துடு" என்று நினைச்சேன். 581 00:31:51,828 --> 00:31:52,913 சரியா, ஜூடி? 582 00:31:53,455 --> 00:31:56,166 சரிதான். அந்த வெள்ளியை திரும்ப எடுக்கறதுக்கு நான் உனக்கு உதவறேன், அதுல எனக்கு 60 சதம் வேணும். 583 00:31:56,166 --> 00:31:58,544 ஏன்னா முதலிலேயே அதை நீ எங்கிட்ட தான் கொடுத்திருக்கணும். 584 00:31:58,544 --> 00:32:00,254 - உண்மையில நான் 50-50ன்னு நினைச்சேன்... - சரி, 585 00:32:00,254 --> 00:32:03,465 இந்த ஒப்பந்தத்திலிருந்து நான் வெளியே போயிடறது போல குறைக்காதே, இல்ல நான் போயிடுவேன். 586 00:32:04,299 --> 00:32:05,509 சரி. 587 00:32:06,176 --> 00:32:07,344 அதோட எனக்கு இன்னொரு உதவி வேணும். 588 00:32:07,344 --> 00:32:08,554 நீ என்ன வேணும்னாலும் சொல்லு. 589 00:32:09,429 --> 00:32:12,057 மையாமி ஷாக் அண்ட் ஆ மாதிரி ஒரு விஷயத்துக்குத் தயாரா? 590 00:32:13,684 --> 00:32:14,726 இலக்கு யார்? 591 00:32:16,061 --> 00:32:17,896 அந்த மோசக்காரன் குரு. 592 00:32:17,896 --> 00:32:19,398 உனக்கு அவனைப் பத்தி என்ன தெரியணும்? 593 00:32:19,398 --> 00:32:21,358 அவன் மனைவியை கொன்னு இருக்கானான்னு தெரியணும். 594 00:32:21,358 --> 00:32:26,363 அவசியம் வந்தால் உனக்கு இன்னும் சொல்றேன், ஆனால் இப்போதைக்கு, இது போதும். 595 00:32:29,616 --> 00:32:30,868 சரி. போதும். 596 00:32:32,911 --> 00:32:34,246 அந்த நாயை படுக்கையிலிருந்து அனுப்பு. 597 00:32:38,041 --> 00:32:39,209 ஏன்? 598 00:32:39,209 --> 00:32:40,752 ஏன்னா நாம இருவரும் உடலுறவு கொள்ள போறோம். 599 00:32:40,752 --> 00:32:42,045 ஜூடி, பெட்டை விட்டு கீழே இறங்கு. 600 00:33:46,944 --> 00:33:48,946 தமிழாக்கம் அகிலா குமார்