1 00:00:16,934 --> 00:00:19,520 அடக் கடவுளே. இதை வச்சுட்டு நாம என்ன செய்ய முடியும்னு தெரியுமா? 2 00:00:19,520 --> 00:00:22,439 ஆம். என் வீட்ட வாங்கப் போறேன். 3 00:00:27,986 --> 00:00:31,865 ஹே, இந்த ஆன்ம-மீட்பு விஷயம் நல்லாதான் இருக்கு. ஒத்துக்கோ. 4 00:00:31,865 --> 00:00:35,160 ஆமாம். இப்போ வேடிக்கை பார்க்கறயா? 5 00:00:35,160 --> 00:00:36,870 இது ஸ்டூவர்ட். தகவலைக் கூறவும். 6 00:00:36,870 --> 00:00:39,164 ஹை, ஸ்டூவர்ட். இது உன் பெரிய அக்கா. 7 00:00:39,164 --> 00:00:41,166 உனக்கு ஷூ லேஸ் கட்டச் சொல்லிக் கொடுத்து, 8 00:00:41,166 --> 00:00:43,669 - சைக்கிள் ஓட்ட கற்பித்து, எல்லாம் கொடுத்தவள். - உன் சைக்கிளை ஓட்ட. ஆமாம். 9 00:00:44,253 --> 00:00:46,255 ஒண்ணு மட்டும் நான் உனக்குச் சொல்ல விரும்பறேன் 10 00:00:46,255 --> 00:00:48,340 உனக்கு அடுத்த ரெண்டு மாச வாடகை, முன்னாடியே கிடைக்கப் போகுது. 11 00:00:48,340 --> 00:00:49,883 அதனால, அதைப் பத்தி கவலைப்படாதே, சரியா? 12 00:00:50,467 --> 00:00:51,301 சரி. 13 00:00:53,303 --> 00:00:56,306 பெக், உன்னால உணர முடியுதா? 14 00:00:58,809 --> 00:01:00,477 எனக்கு இங்கே நிறைய நினைவுகள் வருது. 15 00:01:00,477 --> 00:01:03,689 அதாவது அந்த கொலம்பியன் கூட்டத்து கிட்ட நீ என் நம்பரைக் கொடுத்தயே, அது மாதிரி, 16 00:01:03,689 --> 00:01:08,610 அப்புறம் போய் தெருக் கோடியில இருக்குற பெட்ரோல் பங்கின் கழிப்பறையில ஒளிஞ்சுகிட்டேனே? ஆம். 17 00:01:08,610 --> 00:01:12,781 பெக், நான் எப்போதும் நல்ல தருணங்களைப் பத்தி தான் யோசிப்பேன், கெட்டதை நினைக்க மாட்டேன். 18 00:01:12,781 --> 00:01:14,116 - அது ஒரு தேர்வு தான். - சரி. 19 00:01:15,534 --> 00:01:18,161 - கராஜ். சரிதான். நாம போகலாம். - ஓ, ச்சே. 20 00:01:18,161 --> 00:01:21,498 - டென்னி, எனக்கு உதவு. இது கனமா இருக்கு. - வா. 21 00:01:22,708 --> 00:01:24,585 ஓ, ச்சே, டென்னி. 22 00:01:24,585 --> 00:01:26,879 இது தான் இந்த வீட்டுல உங்க கடைசி நாள், புரியுது. 23 00:01:26,879 --> 00:01:30,883 நீங்க சொல்றதை எல்லாம் இனி கேட்க முடியாது, ஏன்னா எனக்கு... 24 00:01:30,883 --> 00:01:33,260 சரி. சரி. ஏதோ ஒண்ணு, நான்... 25 00:01:38,891 --> 00:01:39,892 சரி. 26 00:01:44,563 --> 00:01:45,564 ச்சே. 27 00:01:46,523 --> 00:01:47,524 சரி, வா போகலாம். 28 00:01:53,405 --> 00:01:54,406 அப்படிதான், அடி செல்லம். 29 00:02:00,204 --> 00:02:01,330 நமக்குள்ள இன்னும் ஒரு இது இருக்கு, பேபி. 30 00:02:02,122 --> 00:02:03,540 "நாம" எல்லாம் இல்லை. 31 00:02:10,714 --> 00:02:11,715 அரிதான நாணயங்கள் 32 00:02:11,715 --> 00:02:13,217 - என்ன ஒரு மூர்க்கன். - சொல்லாதே. 33 00:02:13,217 --> 00:02:15,344 அவன் நம்மை ஏமாத்திட்டான். நான் உனக்கு சைகை செய்தேன். 34 00:02:15,344 --> 00:02:18,639 அதுல அவன் சொன்ன அளவுக்கு நிக்கல்லின் கலவை அவ்வளவு இருக்க வாய்ப்பே இல்லை. 35 00:02:18,639 --> 00:02:21,600 - நம்ம கண்ணு முன்னாடி தானே சோதிச்சான். - அந்த சோதனை வெறும் கண்துடைப்பு. 36 00:02:22,142 --> 00:02:24,311 இது வேற மாதிரி நடக்கும்னு நான் எப்படி எதிர்பார்த்திருக்க முடியும்? 37 00:02:24,311 --> 00:02:28,273 உனக்கு மட்டும் தான் 25,000-ங்கிறது, 5000-ம்னு அர்த்தம். 38 00:02:28,273 --> 00:02:32,027 ஆமாம், சரி, இன்னும் கொஞ்சம் அதிகம் கிடைச்சிருக்கும், நீ என்னுடன் அங்கே ஒத்துழைக்கல. 39 00:02:32,528 --> 00:02:34,863 அதோட நீ பாதியை நீ வீட்டுலயே விட்டுட்ட. 40 00:02:34,863 --> 00:02:36,031 சரியா? 41 00:02:36,031 --> 00:02:37,533 கண்றாவி கார்ல ஏறு! 42 00:03:13,110 --> 00:03:15,445 சரிதான், நான் இந்த டிரைவுகள் ரெண்டையும் இங்கே இழுக்கறேன். 43 00:03:16,154 --> 00:03:18,156 நீங்க இதுக்கெல்லாம் எப்போதாவது பேக்-அப் செய்து வச்சிருக்கீங்களா? 44 00:03:18,657 --> 00:03:19,825 அதாவது? 45 00:03:21,660 --> 00:03:24,788 - என்எஸ்ஏ இங்கே உள்ள இருக்குறது போல இருக்கு. - அவரிடம் பேசாதே. 46 00:03:29,042 --> 00:03:31,295 ஊஊ, அவர் ரொம்ப கவனத்துடன் செயல்படுவார்! 47 00:03:31,295 --> 00:03:32,796 இந்த பையனை எங்கிருந்து பிடிச்ச? 48 00:03:32,796 --> 00:03:34,089 சூப்பர்மார்கெட்டுல. 49 00:03:34,590 --> 00:03:37,926 - நீங்க இருவரும் பில்லின் நண்பர்கள்னு சொன்னான். - பில் தான் மேனேஜர். 50 00:03:38,969 --> 00:03:40,721 சரி. இது உங்களுக்கு. 51 00:03:40,721 --> 00:03:42,848 இது அதிகம் இல்லை, ஆனால் நமக்கு கொஞ்சம் அவகாசத்தை கொடுக்கும். 52 00:03:43,348 --> 00:03:45,267 இன்னொரு விஷயம், எனக்கு இதை செய்யறதுல சந்தோஷம் இல்லை. 53 00:03:45,267 --> 00:03:46,977 சொல்லப் போனா, ரொம்ப உடல் வலிக்குது. 54 00:03:46,977 --> 00:03:50,522 என் கடன் ரொம்ப அதிகமாகிடும், ஆனால் பரவாயில்லை, நான் பார்த்துக்கறேன். 55 00:03:50,522 --> 00:03:53,483 எதிர்காலமே இல்லாததை தான் என்னால சமாளிக்க முடியாது. எனக்குன்னு ஒரு வாழ்வு வேணும். 56 00:03:53,483 --> 00:03:55,110 நாம இதுலேர்ந்து சம்பாதிச்சுட்டே இருக்கணும், அப்போ தான் பிசினஸ் நடக்கும். 57 00:03:58,405 --> 00:04:02,659 உள்ள இருக்குற அங்கம் எல்லாம் ஏற்கனவே இதை வேண்டாம்னு நிராகரிக்குது. 58 00:04:03,285 --> 00:04:06,705 அடக் கடவுளே. நீங்க இதை எடுத்துக்கணும். 59 00:04:07,748 --> 00:04:10,209 எனக்குள்ள ஒரு பாதி மனசு, நீங்க இதை மாட்டேன்னு சொல்லணும்னு எதிர்பார்க்குதோ? 60 00:04:10,209 --> 00:04:12,628 சரி, ஆமாம். மனசின் ஒவ்வொரு பாகமும். 61 00:04:12,628 --> 00:04:17,507 அதாவது, நான் இதை உங்களுக்கு கொடுத்திருக்கவே மாட்டேன், ஆனால் நீங்க இதை எடுத்துக்கணும். 62 00:04:17,507 --> 00:04:19,091 கண்டிப்பா. 63 00:04:23,639 --> 00:04:24,640 என்ன எழவு ஆயிடுச்சு? 64 00:04:26,517 --> 00:04:28,769 - என்னை மன்னிச்சிடு. - இது ரொம்ப கவலையா இருக்கே. 65 00:04:28,769 --> 00:04:30,729 என் மனசை ரொம்ப தொட்டுடுச்சு! 66 00:04:30,729 --> 00:04:34,149 இதை கடனா நினைச்சுக்கலாம், சரியா? பத்து சதவிகிதம் வட்டி. 67 00:04:34,149 --> 00:04:35,609 பத்து சதவிகிதமா? 68 00:04:35,609 --> 00:04:37,986 எட்டு. நான் சலுகையா அறிமுக ரேட்டை தரேன். 69 00:04:43,116 --> 00:04:45,244 என் நிலைமையும் நான் பார்த்துக்க வேணும் இல்லையா. 70 00:04:45,244 --> 00:04:47,871 இது வெறும் ஒரு சின்ன துளிதான். 71 00:04:47,871 --> 00:04:49,998 ரொம்ப மனசை தொட்டுடுச்சு. 72 00:04:49,998 --> 00:04:54,461 எனக்கு ஆதரவு தருவதற்கு நன்றி. 73 00:04:54,461 --> 00:04:56,380 போகுது, போகுது, போயிடுச்சு. 74 00:04:56,380 --> 00:05:00,926 சரி. ஹே, இன்னிக்கு இரவு பயோனீயர்டவுன்ல, அந்த சந்திப்பை மறக்க வேண்டாம். 75 00:05:00,926 --> 00:05:02,928 அது நிஜமாவே ஒரு நல்ல பிசினஸ். 76 00:05:02,928 --> 00:05:04,388 பொறு, நீ அதை சீரியஸாவா சொன்ன? 77 00:05:04,388 --> 00:05:06,473 ஆம், எல்லாம் கைகூடி வருது. 78 00:05:06,473 --> 00:05:09,977 நான் இந்த டோனா ஸ்கார்போரோ கேஸ் பரிசை வாங்கறதுக்கு ரொம்ப நெருங்கி வந்தாச்சு. 79 00:05:09,977 --> 00:05:13,564 அவள் இறந்துட்டான்னு எனக்கு 98.6 சதவிகிதம் நிச்சயமா தெரியும். 80 00:05:13,564 --> 00:05:17,693 அவள் உயிருக்கு உயிரா நேசிச்ச தன் மொட்டை பறவையையும் விட்டுட்டுப் போயிட்டா. 81 00:05:18,569 --> 00:05:21,071 போகட்டும். பாருங்க, நான் என்ன செய்யறேன்னு எனக்குத் தெரியும், சரியா? 82 00:05:21,071 --> 00:05:23,740 சரி, பாரு, உனக்கு நான் ஒரு வேலை வச்சிருக்கேன். 83 00:05:24,366 --> 00:05:25,826 இது உண்மையான கேஸ். 84 00:05:25,826 --> 00:05:29,496 மணந்தவரை மோசம் செய்யறது, அப்படியா இருக்கலாம். 85 00:05:29,496 --> 00:05:32,124 நாம இன்னும் விசாரிச்சுட்டு இருக்கோம், ஆகவே அடிதடி எல்லாம் கூடாது. 86 00:05:32,124 --> 00:05:35,252 அவளை பின்தொடரணும். எதுவும் பார்த்தால் படம் பிடிச்சுடு. 87 00:05:35,752 --> 00:05:36,753 சரி. 88 00:05:38,130 --> 00:05:41,175 உண்மையில, நான் இதைப் பத்தி எப்படி உணர்கிறேன்னு தெரியலை, 89 00:05:41,675 --> 00:05:44,511 அதாவது, இன்னொரு பெண்மணியின் காதல் விஷயத்துல குறுக்கிடறதைப் பத்தி. 90 00:05:45,012 --> 00:05:47,806 - அதோட, நான் பிசியா இருக்கேன். - நீ விளையாட்டுக்குச் சொல்றன்னு நினைக்கிறேன். 91 00:05:47,806 --> 00:05:49,600 அதாவது, போலி டர்டில்நெக் சட்டைகளை 92 00:05:49,600 --> 00:05:55,731 போடற இந்த பெண் ஒருவழியா தன் உண்மையான காதலனை கண்டுபிடிக்கலைனு முடிவெடுக்க நாம் யாரு? 93 00:05:55,731 --> 00:05:57,024 அதாவது, நான் யாரு... 94 00:05:57,649 --> 00:05:59,568 அவள் சஸ்பென்டர்கள் போட்டிருக்காளா? 95 00:06:01,028 --> 00:06:03,488 சரி, நல்லது. நான் ஒரு உண்மையான புரொஃபெஷனல். 96 00:06:03,488 --> 00:06:05,199 அது தான் அவளுடைய வேலையிட முகவரி. 97 00:06:05,199 --> 00:06:06,283 நான் பாத்துக்குறேன். 98 00:06:07,659 --> 00:06:09,119 எந்த சண்டை சச்சரவும் வேண்டாம். 99 00:06:09,119 --> 00:06:12,122 சரி, சில சமயம் முன்னேற்றம் மெதுவா தான் இருக்கும். ஆனால் முயற்சி செய்துட்டே இரு. 100 00:06:12,122 --> 00:06:13,624 - நான் நாலாவதுக்குப் போறேன். - சரி, நல்லது. 101 00:06:13,624 --> 00:06:16,793 ஒரு வேளை உனக்கு சத்தமாக உயர் அழுத்த சத்தம் கேட்டா, அதை ஒரு நிமிடம் கீழே இறக்கு. 102 00:06:16,793 --> 00:06:18,837 - புரியுது. - ஹே, காருக்கு நன்றி. 103 00:06:18,837 --> 00:06:20,839 நான் ஜாக்கிரதையா இருக்கேன். என்னை பின்தொடர்ந்தாலே ஒழிய. 104 00:06:20,839 --> 00:06:22,007 கண்டிப்பாக. 105 00:06:22,508 --> 00:06:26,470 பாருங்க, நீங்க இதை டென்னியுடன் சேர்ந்து செய்யறது எனக்குப் பிடிக்கல. 106 00:06:27,471 --> 00:06:29,765 அடுத்தது நீங்க உடலுறவு கொள்வீங்க. 107 00:06:32,309 --> 00:06:34,394 இல்ல. நீங்க ஏற்கனவே செய்தாச்சா? 108 00:06:34,394 --> 00:06:36,438 நான் ஒரு பெண், கரோல். எனக்கும் தேவைகள் இருக்கு. 109 00:06:37,523 --> 00:06:39,233 ஆனால் இனி நடக்காது. நான் அவனை வெறுக்குறேன். 110 00:06:40,192 --> 00:06:42,027 எனவே, எனக்கு என்ன வேலை வச்சிருக்க? 111 00:06:42,027 --> 00:06:43,820 அது ஒரு வேவு பார்க்கிற வேலை. 112 00:06:43,820 --> 00:06:46,365 யாருடைய மனைவியோ. மோசம் செய்யறவளா இருக்கலாம். விசாரிச்சா போதும். 113 00:06:46,365 --> 00:06:48,825 - எந்த சண்டை சச்சரவும் வேண்டாம். - நான் ஏன் அவகிட்ட சண்டைக்கெல்லாம் போறேன்? 114 00:06:48,825 --> 00:06:50,661 சரி, விஷயங்கள் எப்படி மாறும்னு தெரியாது. 115 00:06:50,661 --> 00:06:52,079 நீ தயாரா இரு. 116 00:06:55,123 --> 00:06:56,333 அவளுக்கு என்ன ஆச்சு? 117 00:06:57,543 --> 00:07:01,046 தடை செய்யப்பட்டிருக்கா, 15 வயசானவ, அவளுடைய டிரோன். 118 00:07:01,046 --> 00:07:04,007 அதோட உன்னுடன் ஒரு போலி மேற்கத்திய டவுன்ல உன்னுடன் மாட்டிட்டு இருக்கா. 119 00:07:04,007 --> 00:07:07,803 ஹே, என் மாற்றான் தாய் எப்படி இருந்தாங்கன்னு உனக்குத் தெரியுமா? 120 00:07:07,803 --> 00:07:11,306 மூக்கை திருத்தி, சுருட்டை முடியுடன் இருக்குற முசோலினி மாதிரி கண்டிப்பா இருப்பாங்க. 121 00:07:11,306 --> 00:07:15,686 நான் குண்டா இருக்கேன்னு சொல்லி, என் பிறந்தநாள் கேக்கை குப்பையில தூக்கிப் போட்டாங்க. 122 00:07:15,686 --> 00:07:17,437 கரோல் அன்பானவள். 123 00:07:17,437 --> 00:07:21,400 பாரு, அவள் உன் அம்மாவும் இல்லை, அம்மாவாக முயற்சி செய்யவும் இல்லை. 124 00:07:22,442 --> 00:07:24,528 அதுக்காக அவள் கிராதகியும் இல்லை. 125 00:07:24,528 --> 00:07:26,530 அதனால, அவளை கொஞ்சம் மரியாதையுடன் நடத்து போதும். 126 00:07:27,531 --> 00:07:28,866 எனக்கு இப்போ ரொம்ப போர் அடிக்குது. 127 00:07:28,866 --> 00:07:32,202 உலகத்துக்கு வரவேற்கிறோம். இங்கே போரிங்காக தான் இருக்கும். 128 00:07:32,202 --> 00:07:37,332 நீ மட்டும் தான் போரிங்கா இல்லாம இருக்க முடியும். நீ தான் வால் நட்சத்திரமா இருக்கணும், புரியுதா? 129 00:07:38,083 --> 00:07:39,209 சரி, ஏதோ ஒண்ணு. 130 00:07:39,209 --> 00:07:43,130 சரி, இப்போ போய் ஜெயிச்சுட்டு வா, வால் நட்சத்திரம் போல. 131 00:08:02,065 --> 00:08:03,609 அந்த டேட்டூக்களை மூடணும். 132 00:08:04,234 --> 00:08:07,738 அதைப் பத்தி கவலைப்படாதே. பாட்டிகள் கூட இப்போ டேட்டூக்களை குத்திக்கிறாங்க. 133 00:08:07,738 --> 00:08:11,241 சிலந்திகளை இல்ல. கழுத்துல இல்ல. கொஞ்சம் மூடிக்கோ. 134 00:08:12,075 --> 00:08:13,076 சரி. 135 00:08:15,787 --> 00:08:17,706 நீ என்ன வேவு பார்க்கிற கண்ணாடியை போட்டிருக்கயா? 136 00:08:18,207 --> 00:08:20,292 அவை போலின்னு உனக்கு ஏன் தெரியும்னா, நான் கண்ணாடி போடறதில்லைனு உனக்குத் தெரியும். 137 00:08:20,292 --> 00:08:22,336 நீ ஒரு அழகான ஹென்றி கிஸ்ஸிஞ்சரைப் போல இருக்க. 138 00:08:23,587 --> 00:08:24,713 ஜூடி வர முடியாது. 139 00:08:24,713 --> 00:08:26,381 அது வரும். அதை எடு. 140 00:08:26,381 --> 00:08:29,468 எனக்கு அவை தேவை. அதுல ஒரு மைக் இருக்கு. 141 00:08:30,052 --> 00:08:32,721 - அவன் செய்ததை நான் நிரூபிக்கணும் இல்ல. - இந்த கண்றாவி விஷயங்கள் எல்லாம். 142 00:08:32,721 --> 00:08:35,182 பார்க்க கேவலமா இருக்கு. போட்டுக்காதே. 143 00:08:35,849 --> 00:08:39,602 டென்னி, எல்லாத்தையும் ஏன் உடைக்கிற? எடுத்த உடனே அதை தான் செய்யற, ஏன்? 144 00:08:39,602 --> 00:08:41,813 - ஆரரம்பிச்சுட்டாப்பா. - எனக்கு வார்த்தைகளே இல்லை. 145 00:08:42,606 --> 00:08:45,400 இது இன்னும் புத்திசாலிதனம். யாரும் நாய் மேல கருவியை பொருத்தறது இல்லை. 146 00:08:45,400 --> 00:08:46,860 இங்கே வா, ஜூடி. 147 00:08:47,986 --> 00:08:49,196 இதோ, ஆச்சு. 148 00:08:50,197 --> 00:08:51,573 இதைப் பாரு. 149 00:08:51,573 --> 00:08:54,826 இப்போதிலிருந்து, ஜூடி எல்லாத்தையும் பதிவு செய்வாள், 150 00:08:54,826 --> 00:08:56,537 அவனுக்கு சந்தேகமே வராது. 151 00:08:58,497 --> 00:08:59,581 சரி, சரி. 152 00:08:59,581 --> 00:09:03,335 நாய் உன் கவனத்தை சிதறவிடாம பார்த்துக்கோ. அப்புறம் என் சிக்னலை மிஸ் பண்ணிடுவ. 153 00:09:04,002 --> 00:09:06,004 - நீ எனக்கு சிக்னல் செய்வயா? - ஆம். 154 00:09:06,004 --> 00:09:09,174 ஹே, மையாமி ஷாக் அன்ட் ஆ-வை உருவாக்கியது நான். 155 00:09:09,174 --> 00:09:10,801 - இங்கே வா. - நான் இதைப் பத்தி இப்போ பேச விரும்பல. 156 00:09:10,801 --> 00:09:13,053 - நமக்கு லேட் ஆகுது. - அப்படித்தான். செல்லக் குட்டி. 157 00:09:13,053 --> 00:09:16,181 - வா போகலாம், ஜூடி. அப்படி தான். - வா ஜூடி. உன் மைக்கை கவனி. இந்தா. 158 00:09:16,181 --> 00:09:18,392 ஆம், ஹை. உள்ள ஏறு. 159 00:09:45,711 --> 00:09:49,047 நினைவு வச்சுக்கோ, மையாமி ஷாக் அன்ட் ஆ-முழுவதும் என்னுடைய திட்டம். 160 00:09:49,631 --> 00:09:51,341 அந்த பேரு எங்கிருந்து வந்ததுன்னு நினைக்கிற. 161 00:09:51,341 --> 00:09:54,887 அதோட, மையாமியிலிருந்து ஆல்ஃப்ரெடோ கிட்டேர்ந்து யார் பணம் வாங்கித் தந்தாங்களாம்? நான் தானே! 162 00:09:56,680 --> 00:09:59,683 இது என்னது? நீ யாரை கவர நினைக்கிறாய்? 163 00:09:59,683 --> 00:10:02,561 அதையெல்லாம் கண்டுக்காம, நான் கொடுக்குற சிக்னலுக்காக காத்திட்டு இரு. 164 00:10:05,022 --> 00:10:08,317 பாப்! இவர் தான் திரு. டென்னிஸ். அவர் காச்செலுக்கு வேலை செய்யறார். 165 00:10:13,280 --> 00:10:15,574 நான் உங்களை தடவிப் பார்த்து செக் செய்தால் பரவாயில்லையா? 166 00:10:19,286 --> 00:10:21,914 என்னைப் பத்தி என்ன கேள்விப்பட்டிருக்கீங்கன்னு தெரியாது, நண்பா, 167 00:10:21,914 --> 00:10:25,042 ஆனால் நான் ஒரு ஆர்ட் கன்சல்டெண்ட். 168 00:10:25,042 --> 00:10:26,710 நான் ஏன் துப்பாக்கியெல்லாம் வச்சுக்கணும்? 169 00:10:26,710 --> 00:10:28,795 நாம இதை கௌரவமா செய்துடலாம், சரியா? 170 00:10:28,795 --> 00:10:32,633 பாருங்க, மன்னிக்கணும், ஆனால் இங்கே விஷயங்கள் இப்படி தான். 171 00:10:42,142 --> 00:10:46,355 நான் இன்னிக்கு இங்கு பெரிய தொகை செலவு செய்ய அனுமதி இருக்கு 172 00:10:50,859 --> 00:10:52,027 இப்போ என் முறையா? 173 00:10:55,864 --> 00:10:59,326 சரி, நான் ஒண்ணு சொல்றேன். நானும் உங்களை தடவி பார்க்கப் போறேன், சரியா? 174 00:11:02,371 --> 00:11:03,872 சரி, இந்தாங்க. 175 00:11:03,872 --> 00:11:07,042 - நான் இன்னும் முடிக்கல. - நீங்க கால் முடியை ஷவ் செய்யறீங்களா. 176 00:11:07,042 --> 00:11:10,462 சரிதான், சரிதான். சரி, போதும்... அது போதும். 177 00:11:10,462 --> 00:11:12,047 - சரிதான், போதும். - சரி. 178 00:11:12,047 --> 00:11:13,298 சரி. 179 00:11:13,298 --> 00:11:16,635 சரி, நாம இதை செய்துட்டு இருக்குறபோதே, ஏன் நாயையும் தடவிப் பார்த்துடலாமா? 180 00:11:21,056 --> 00:11:22,391 தாராளமா செய்யுங்க. 181 00:11:25,686 --> 00:11:27,271 நாயை தடவி பாக்குறது. 182 00:11:29,815 --> 00:11:31,233 - நல்ல ஜோக். - உள்ளே வாங்க. 183 00:11:31,233 --> 00:11:32,943 - சரி. - ஹே. 184 00:11:33,819 --> 00:11:36,071 என்ன கண்றாவி இது? உங்க ரெண்டு பேருக்கும் நடுவில எதுவும் நடக்குதா? 185 00:11:45,414 --> 00:11:46,748 அவருக்கு நல்ல ரசனை. 186 00:11:46,748 --> 00:11:49,293 வட அமெரிக்காவுல காச்செல் வாங்குவது எல்லாம் இவர் மூலம் தான். 187 00:11:52,421 --> 00:11:53,505 அந்த நிறங்கள். 188 00:11:54,590 --> 00:11:57,092 பிரஷை வச்சு தீட்டும் அந்த முறைதான் எனக்கு பிடிச்சிருக்கு. 189 00:11:57,092 --> 00:11:59,428 ஆம், அது இம்பிரெஷனிசம்ல வழக்கமா செய்யறது தான். 190 00:11:59,428 --> 00:12:00,721 உண்மையில அது அவ்வளவு சாதாரணமானது இல்லை. 191 00:12:00,721 --> 00:12:02,806 அவர் கன்ஸ்டிரக்டிவ் ஸ்ட்ரோக்ஸை உபயோகிச்சிருக்கார், 192 00:12:02,806 --> 00:12:05,851 அந்த வழக்கம் இம்பிரெஷனிச காலத்துக்கு அப்புறம் வந்தது தான், 193 00:12:05,851 --> 00:12:06,935 அது தான் இது. 194 00:12:07,519 --> 00:12:09,855 நிஜமாவா? நாம இதை வாங்குறோமா? 195 00:12:09,855 --> 00:12:12,858 எனக்கு ஒரு ஃபோன் கால் இருக்கு, அதனால நாம இதை கொஞ்சம்... 196 00:12:14,026 --> 00:12:15,027 சரி. 197 00:12:16,737 --> 00:12:18,614 தெளிவா சொல்லணும்னா, இந்த ஓவியம், 198 00:12:20,032 --> 00:12:21,158 ஒரு போலி. 199 00:12:24,661 --> 00:12:26,788 இல்லை. இல்லை. 200 00:12:28,624 --> 00:12:30,709 இல்லை. அதாவது, இல்ல. 201 00:12:30,709 --> 00:12:33,504 ரிலாக்ஸ் பண்ணுங்க. ஹே, அவருக்கு அக்கறை இல்லை. 202 00:12:34,087 --> 00:12:37,341 மெட்ரோபாலிட்டன் மியூசியத்துல எவ்வளவு போலிகள் இருக்குன்னு உங்களுக்குத் தெரியுமா? 203 00:12:37,925 --> 00:12:39,551 அது தான் விஷயம். அவங்களுக்கும் தெரியாது. 204 00:12:39,551 --> 00:12:42,471 இல்லை, அதாவது, இது திருடப்பட்டது. 205 00:12:43,096 --> 00:12:47,809 - ஆனால் அது இப்போ என் சுவர்ல இருக்கு, அது... - பாப், அது ஒரு போலி. 206 00:12:47,809 --> 00:12:49,811 அது பரவாயில்லை. நமக்குத் தெரியும். 207 00:12:49,811 --> 00:12:53,148 ஆனால் நான் பார்த்ததிலேயே அற்புதமான ஓவியங்கள்ல ஒண்ணு இது. 208 00:12:53,148 --> 00:12:55,651 அதாவது, கலை உலகத்துல பாதிக்கு மேல எல்லாம் போலிகள் தானே. 209 00:12:58,820 --> 00:13:00,656 யார் இந்த நகலைத் தீட்டினாங்கன்னு சொல்ல முடியுமா? 210 00:13:00,656 --> 00:13:04,326 - அந்த நாய் வெளியே காத்திருக்கலாம், இல்லயா? - இல்லை, அது வீட்டுலயே பழக்கப்பட்டது. 211 00:13:04,326 --> 00:13:07,412 பாரு, நாம இப்போ மேலே பேசலாம். யார் இந்த ஓவியர்? 212 00:13:07,412 --> 00:13:08,580 என்ன தெரியுமா, எனக்கு இன்னொரு பையர் இருக்காங்க. 213 00:13:08,580 --> 00:13:12,167 அது போலியா இருந்தாலும், காச்செல் இதை ரொம்ப விரும்புவாங்கன்னு நான் நினைக்கிறேன். 214 00:13:12,167 --> 00:13:15,921 வெள்ளிக்கிழமைக்குள்ள எனக்கு ஒரு மில்லியன் கேஷா கிடைச்சால் நான் விற்க தயார். 215 00:13:18,841 --> 00:13:21,051 சரி. ஒத்துக்கறேன். 216 00:13:21,051 --> 00:13:22,177 ஹே. 217 00:13:22,177 --> 00:13:24,555 இப்போ, சொல்லுங்க யார் அந்த நகல் ஒவியத்தை தீட்டியது. 218 00:13:29,643 --> 00:13:31,061 அந்த நாயை வெளியே கூட்டிட்டு போறீங்களா? 219 00:13:31,061 --> 00:13:32,729 சரி, நீங்க நாயை வெளியே கூட்டிட்டு போறீங்களா? 220 00:13:35,315 --> 00:13:37,568 நாங்க பேசிட்டு இருக்கோம். நீங்க செய்யறீங்களா? 221 00:13:41,905 --> 00:13:43,323 வா, ஜூடி, வா. 222 00:13:44,116 --> 00:13:46,910 என்ன தெரியுமா, பெக்கி, அவங்க ரொம்ப அழகா இருப்பது எல்லாம் சரிதான், 223 00:13:46,910 --> 00:13:49,121 ஆனால் சமாளிப்பது தான் கஷ்டம். 224 00:13:49,121 --> 00:13:51,790 அவங்ககிட்ட சில குறைகள் இருக்கு, ஆனால் நல்ல மனசு. 225 00:13:51,790 --> 00:13:53,834 நாங்க நியூ யார்க்குல டேட் செய்திட்டு இருந்தோம். 226 00:13:53,834 --> 00:13:57,421 அவங்க ரொம்ப அதிக அளவுள கஞ்சா அடிச்சுட்டு இருந்தபோது... 227 00:13:57,421 --> 00:13:59,882 ஹே, ஹே, ஹே. இது ஒரு டாக் ஷோ இல்லை. 228 00:13:59,882 --> 00:14:03,218 ஆம். சரி, நான் இன்னிக்கு இரவே காச்செல்லை கூப்பிடறேன். 229 00:14:03,218 --> 00:14:06,555 இப்போ ஃபுளோரென்ஸ்ல என்ன டைம்? நான் அதை ஒரு படம் எடுத்துக்குறேன். 230 00:14:06,555 --> 00:14:08,849 இல்ல, இல்ல. படம் எடுக்கக் கூடாது. நான் உங்களுக்கு ஒரு கேட்லாக் அனுப்பறேன். 231 00:14:08,849 --> 00:14:09,933 நீங்க எதுக்காக கூப்பிடணும்? 232 00:14:09,933 --> 00:14:11,935 உங்களுக்கு தான் அதிகாரம் இருக்குன்னு நினைச்சேன். எனக்கு வெள்ளிக்கிழமைக்குள்ள பணம் வேணும். 233 00:14:11,935 --> 00:14:15,314 நீங்க முதல் முறை சொன்னபோதே புரிஞ்சிடுச்சு, மச்சான். வெள்ளிக்கிழமை கிடைக்கும். 234 00:14:17,399 --> 00:14:19,860 - நல்லது. பியர் சாப்பிடறீங்களா? - ஆமாம். 235 00:14:19,860 --> 00:14:21,069 சௌரியமா உட்காருங்க. 236 00:14:29,328 --> 00:14:30,329 நன்றி. 237 00:14:32,331 --> 00:14:35,083 எனக்கு அந்த ஓவியரைப் பத்தி தெரிஞ்சுக்க ஆசை. 238 00:14:37,169 --> 00:14:38,170 அவங்க என் மனைவியா இருந்தாங்க. 239 00:14:38,170 --> 00:14:39,630 ஆகவே இப்போ இறந்துட்டாங்களா? 240 00:14:39,630 --> 00:14:41,298 இல்லை, என்னை விட்டுட்டு போயிட்டாங்க. 241 00:14:41,298 --> 00:14:43,217 - இறந்ததாலா? - இல்ல. 242 00:14:43,217 --> 00:14:45,552 - ஏன்னா நீங்க கடந்தகாலத்துலயே பேசறீங்க. - இல்லை. 243 00:14:45,552 --> 00:14:49,306 பாருங்க, காச்செல் வாங்க போறாங்க, ஆனால் அவர் அதை ஆய்வு செய்துட்டு வாங்குவார். 244 00:14:50,599 --> 00:14:52,809 உங்க மனைவியின் குடும்பம் ஒரு பரிசை அறிவிச்சிருக்காங்க. 245 00:14:52,809 --> 00:14:56,688 அதோட அவங்க ஓவியங்களை நகல் எடுத்திருக்காங்க. இது ரொம்ப தீவிரமான விஷயம், பாப். 246 00:14:56,688 --> 00:14:58,440 பாப்பா இல்ல ராபர்ட்டா. 247 00:14:58,941 --> 00:15:00,526 ஆமாம், சரி. 248 00:15:01,401 --> 00:15:03,445 இருந்தாலும், இதுக்கும் கலைக்கும் எந்த சம்மந்தமும் இல்ல. 249 00:15:03,445 --> 00:15:05,614 அவங்களுக்கு அவளை கண்டுபிடிக்கணும். 250 00:15:06,114 --> 00:15:07,616 இதுக்கும் விற்பனைக்கு என்ன சம்மந்தம்? 251 00:15:07,616 --> 00:15:10,702 நாம நாயை திரும்பவும் உள்ளே கொண்டு வரணுமா? ஜூடி! 252 00:15:12,204 --> 00:15:14,414 வாடா, செல்லம். வா. வா! 253 00:15:14,414 --> 00:15:18,210 பாருங்க, நான் சொல்வது... இன்னொரு விஷயம், நான் அவங்களுடைய நலம் விரும்பி. 254 00:15:18,210 --> 00:15:20,921 ஆனால் அவங்க இறந்து போயிருந்தால், இந்த ஓவியத்தின் விலை இன்னும் அதிகமாகும். 255 00:15:23,090 --> 00:15:25,467 நகல்கள் அப்படி அதிகமாகும்னு எனக்குத் தோணல. 256 00:15:25,467 --> 00:15:27,469 சரி, ஆனால் இந்த கலை உலகமே மடத்தனமாதான் இயங்குது. 257 00:15:27,469 --> 00:15:30,347 அதை விற்பதுக்கு, கொஞ்சம் அதைப் பத்தி தெரிஞ்சுக்கணும், இல்லையா. 258 00:15:34,142 --> 00:15:36,854 ஒரு சம்பவம் நடந்தது... 259 00:15:39,273 --> 00:15:40,691 ஒரு டேக்கோ டிரக்குல. 260 00:15:40,691 --> 00:15:42,025 கேபிவிகே 261 00:15:42,025 --> 00:15:43,110 18 மாதங்களுக்கு முன் 262 00:15:43,110 --> 00:15:45,487 என்னுடன் வேலை செய்தவன் ஒருவனுக்கு சொந்த வாழ்க்கையில் பிரச்சினைகள் இருந்தன. 263 00:15:47,447 --> 00:15:52,077 என்னுடைய வேலை பளுவிலே, நான் அதை கவனிக்கலை. 264 00:15:52,077 --> 00:15:54,997 ஹே, பபிள்ஸ். கிளிப்போர்டுல, என்ன நடக்குது? 265 00:15:57,749 --> 00:16:02,212 என்னன்னா, அவ்வப்போது நீ ஒரு புன்னகை செய்தால் நீ என்ன செத்துப் போயிடுவயா? 266 00:16:02,212 --> 00:16:03,589 நான் சொல்றது புரியுதா? 267 00:16:08,218 --> 00:16:11,305 இப்போ, என் பக்கத்துல இருக்குற நியாயத்தை சொல்றேன், அன்னிக்கு காலையிலிருந்து சாப்பிடலை. 268 00:16:12,055 --> 00:16:13,682 இது தான் வரிசையா? 269 00:16:16,727 --> 00:16:18,020 நீங்க பாப் ஸ்கார்போரோ தானே. 270 00:16:19,313 --> 00:16:22,983 வரிசையில, நான் உங்களுக்கு முன்னாடி நிக்கலாமா? நான் கர்ப்பமா இருக்கேன், நான் சாப்பிடணும். 271 00:16:25,027 --> 00:16:26,278 நீங்க அவ்வளவு ஒண்ணும் கர்ப்பமா தெரியலையே. 272 00:16:26,278 --> 00:16:28,655 ட்ரேஸ் பெர்ரோஸ் டாக்கோஸ் 273 00:16:28,655 --> 00:16:29,865 - மன்னிக்கணும்? - சரி. 274 00:16:30,616 --> 00:16:32,826 இல்லை, நீங்க எனக்கு முன்னாடி நிற்க முடியாது. 275 00:16:32,826 --> 00:16:35,579 - என்னை மன்னிச்சிடுங்க. - நான் கர்ப்பமா இருக்கேன், நான் சாப்பிடணும். 276 00:16:35,579 --> 00:16:37,122 நாம அனைவருமே சாப்பிடணும். 277 00:16:37,122 --> 00:16:39,041 - எனக்கு ஒரு குழந்தை பிறக்கப் போகுது. - கர்ப்பம்னா என்னன்னு எனக்குத் தெரியும். 278 00:16:39,041 --> 00:16:40,375 பாருங்க, அவன் அங்கே தான் மேலே இருக்கான். 279 00:16:40,375 --> 00:16:42,794 - அடக் கடவுளே! - வேண்டாம், அப்படிச் செய்யாதே! 280 00:16:55,390 --> 00:16:59,144 ஒருவேளை ராணுவத்தில் இருந்திருந்தால், அதுபோல ஒரு டிராமாவுக்கு தயாரா இருப்போம், 281 00:16:59,144 --> 00:17:01,438 ஆனால் எனக்கு எந்த வித தற்காப்பும் இருக்கலை. 282 00:17:12,699 --> 00:17:13,951 ஸ்கார்போரோ, நீங்க நலமா? 283 00:17:15,160 --> 00:17:16,161 ஸ்கார்போரோ? 284 00:17:19,164 --> 00:17:23,167 எனக்கு ஒரு மாதிரி தலையைச் சுத்தி நிகழ்கால நினைவை இழக்கும் நிலை வந்தது. 285 00:17:32,761 --> 00:17:36,682 எனக்கு ஓய்வு நேரம் தேவைப்பட்டது. உண்மையா, என்னால வேலை செய்ய முடியலை. 286 00:17:40,477 --> 00:17:41,603 ஹலோ. 287 00:17:41,603 --> 00:17:44,398 அப்போது டோனா உதவி செய்யல. நிஜமா உதவலை. 288 00:17:44,398 --> 00:17:47,484 அலுவலகத்திலிருந்து ஓய்வு கொடுத்ததால, நீ ஊரை சுத்தணும்னு அவசியம் இல்லை. 289 00:17:49,152 --> 00:17:51,321 நடந்தது ரொம்ப வேதனையாதான் இருக்கு. துரதிர்ஷ்டம் தான். 290 00:17:52,865 --> 00:17:54,283 நான் நினைக்கிறேன், அவனுடைய கண்ணாடி... 291 00:17:54,283 --> 00:17:56,869 அடக் கடவுளே. ஆம். நீ இன்னும் கொஞ்சம் அன்பா இருந்திருக்கலாம். 292 00:17:56,869 --> 00:17:58,954 - நீ ஹலோ சொல்லியிருக்கலாம். - ஹலோ. 293 00:17:58,954 --> 00:18:00,581 - நான் ஹலோ சொன்னேன். - ஏதோ ஒண்ணு. 294 00:18:01,874 --> 00:18:03,333 நான் அவனை "பபிள்ஸ்" என்று கூப்பிட்டேன். 295 00:18:03,333 --> 00:18:04,960 சரி. ஆம், அப்போ நீ நட்புடன் தான் இருந்த. 296 00:18:06,253 --> 00:18:07,254 நான் ஏளனம் செய்தேன். 297 00:18:08,839 --> 00:18:12,009 சரி, வாழறோம், கற்கிறோம், பேபி. யார் ரொம்ப இனிய பறவை? 298 00:18:12,009 --> 00:18:13,510 அதுக்கு அப்புறம் அவன் இறந்துட்டான். 299 00:18:14,636 --> 00:18:16,680 - அதன் பின் அவன் இறந்துட்டான். - சரி, என்ன தெரியுமா, பாப்? 300 00:18:16,680 --> 00:18:19,016 நீ ஹலோ சொல்லிட்டு இருந்த நிறைய பேர் இறந்திருக்காங்க. சரியா? 301 00:18:19,016 --> 00:18:20,017 ஹலோ. 302 00:18:20,017 --> 00:18:21,685 இது ரொம்ப நாளா நடந்துட்டு வர விஷயம். 303 00:18:21,685 --> 00:18:24,021 ஒண்ணு நீ வேலைக்குத் திரும்பி போகணும், இல்ல நீ ஒரு மனநல மருத்துவரைப் பார்க்கணும். 304 00:18:24,646 --> 00:18:26,440 என்னால இதை வச்சு ஓவியம் கூட தீட்ட முடியலை. 305 00:18:31,778 --> 00:18:34,573 எனவே, நான் ஒரு மனநல மருத்துவரிடம் போனேன் 306 00:18:34,573 --> 00:18:36,366 மக்களை ஹாலுசினோஜினிக் சிகிச்சை மூலம் 307 00:18:36,366 --> 00:18:39,536 டிராமாவால பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் உதவுகிறார். 308 00:18:47,878 --> 00:18:52,257 அது என் வாழ்க்கையை மாத்திடுச்சு. வாழ்க்கையைப் பத்திய என் கண்ணோட்டத்தை மாத்திடுச்சு. 309 00:18:56,386 --> 00:18:58,096 அதாவது, மொத்தத்துக்கும். 310 00:19:09,983 --> 00:19:10,984 பாப். 311 00:19:12,194 --> 00:19:13,570 ஸ்டூடியோவில உன்னைக் கூப்பிடறாங்க. 312 00:19:15,739 --> 00:19:18,575 மீண்டும் வரவேற்கிறோம். நாம் இப்போது பிரேக்கிங் செய்திகளை பார்க்கலாம். 313 00:19:18,575 --> 00:19:20,285 டவுன்டவுன் பாம் ஸ்பிரிங்க்ஸுக்கு உங்களை அழைத்துச் செல்கிறோம். 314 00:19:20,285 --> 00:19:23,080 அங்கே தான் மிகப் பெரிய ஒரு சிங்க்ஹோல் சரிந்து விட்டது, 315 00:19:23,080 --> 00:19:24,706 அதில் ஒரு டூரிஸ்ட் இறந்துவிட்டார். 316 00:19:24,706 --> 00:19:27,584 அலீசியா ஹெரேரா அங்கே களத்துல இருக்கிறார். தற்சமயம் பிரேக்கிங் செய்திகளை அவர் தருவார். 317 00:19:27,584 --> 00:19:29,503 அலீசியா, எங்களுக்கு நீங்க இந்த டிராஜிடியைப் பத்தி என்ன தகவல் சொல்ல முடியும்? 318 00:19:29,503 --> 00:19:32,089 ஒரு வினாடி இரு... இருங்க. 319 00:19:32,089 --> 00:19:37,010 இது டிராஜிடி தானா? இது தான் முக்கியமான விஷயமா? 320 00:19:37,010 --> 00:19:40,639 அதாவது, இது வெறும் மரணம் தானே. நாம எல்லோருமே அங்கே தானே போறோம். 321 00:19:40,639 --> 00:19:42,432 - அவன் என்ன செய்யறான்? - என்ன கண்றாவியை செய்யறான் அவன்? 322 00:19:42,432 --> 00:19:47,062 ஏன்னா பாக்கி எல்லாம், இதெல்லாம், முட்டாள்தனம். 323 00:19:47,062 --> 00:19:49,898 டோனா... ஆனால் அவளுக்கு புரியலை. 324 00:19:49,898 --> 00:19:51,859 எனவே, என்னை வேலையிலிருந்து எடுத்துட்டாங்க. 325 00:19:52,359 --> 00:19:54,069 ஆம், நான் பார்த்தேன். 326 00:19:54,069 --> 00:19:57,239 நாம ஷாம்பேயின் சாப்பிடலாம். இப்போ எதாவது அர்த்தமுள்ளதா செய்யலாம். 327 00:19:57,239 --> 00:19:59,616 அப்படின்னு எதை சொல்ற, பாப்? போதைல இருக்குறத தொழிலா செய்ய போறயா? 328 00:20:00,367 --> 00:20:01,702 அது எனக்கு வேற கண்ணோட்டத்தைத் தருது. 329 00:20:16,550 --> 00:20:20,053 அடுத்த ஆறு மாதங்கள்ல நான் ரொம்ப பாதிக்கப்பட்டேன். 330 00:20:20,053 --> 00:20:21,763 {\an8}என் கண்ணோட்டம் இன்னும் அதிகமானது. 331 00:20:21,763 --> 00:20:22,848 {\an8}எல்லாமே முட்டாள்தனம் 332 00:20:22,848 --> 00:20:28,020 {\an8}நான் டிவியில சொன்ன உட்கருத்தைக் கேட்டு மக்கள் என்னைத் தேடி வீட்டுக்கு வர ஆரம்பிச்சாங்க. 333 00:20:28,979 --> 00:20:32,024 அவங்களுக்கு நம்பிக்கையை தந்தேன், போலும். 334 00:20:32,024 --> 00:20:33,775 எல்லாமே முட்டாள்தனம். 335 00:20:33,775 --> 00:20:37,613 குரு பாப், சைகிக் வலியும் முட்டாள்தனமானதா? 336 00:20:40,741 --> 00:20:42,284 எல்லாமே முட்டாள்தனம் தான். 337 00:20:43,160 --> 00:20:44,953 எனக்கு கொஞ்சம் காப்பி வேணும். 338 00:20:45,704 --> 00:20:49,124 - எல்லாமே முட்டாள்தனம். - நன்றி. 339 00:21:00,594 --> 00:21:01,762 அன்புள்ள பாப், நீ நாசமா போக 340 00:21:01,762 --> 00:21:04,097 நீ சொல்றது சரிதான், எல்லாமே முட்டாள்தனம் தான் 341 00:21:04,097 --> 00:21:05,390 குறிப்பா நீ டோனா 342 00:21:05,390 --> 00:21:06,683 நான் மாறியிருந்தேன். 343 00:21:11,605 --> 00:21:13,732 ஆனால் அவள் மாறலை. 344 00:21:19,279 --> 00:21:20,781 ரொம்ப துக்கமா இருக்கு, இல்லையா? 345 00:21:20,781 --> 00:21:24,868 அது எப்போதும் நடக்குறது தான். நிறைய தம்பதிகள் பிரியறாங்க. 346 00:21:26,620 --> 00:21:29,790 கடைசியில, என் மனைவி, ஒரு இரு பரிமாணக் கண்ணோடத்தின் கைதியா இருந்தாள். 347 00:21:29,790 --> 00:21:30,707 ஆம். 348 00:21:30,707 --> 00:21:32,501 ஒரு முறை, அவள் என்கிட்ட பயங்கரமா கூச்சல் போட்டு... 349 00:21:32,501 --> 00:21:33,585 ஹே, நண்பா. 350 00:21:33,585 --> 00:21:37,798 ஹே, உனக்கு எல்லாத்தையும் கொட்டணும்னா, நான் ஒரு சீகாங்கு ஸ்டூடியோ திறக்கறேன். 351 00:21:37,798 --> 00:21:39,466 பாதுகாப்பான இடம். ஆண்கள் மட்டும். 352 00:21:39,466 --> 00:21:41,510 அவர் இப்போதான் உண்மையைச் சொல்ல தொடங்கியிருக்கார், டென்னி. 353 00:21:42,386 --> 00:21:44,429 சரி, மேலே சொல்லுங்க. ஒரு முறை என்ன? 354 00:21:44,429 --> 00:21:47,850 ஆன்மாவின் பயணம், ஆன்மா மூலமாவே, ஆன்மாவை அடைவதற்கா? 355 00:21:49,017 --> 00:21:50,894 எனக்கு யாரும் முதலீடு செய்பவர்கள் கிடைச்சா நல்லாயிருக்கும், சரியா. 356 00:21:51,687 --> 00:21:52,855 அந்த நாயைக் காணோமே. 357 00:21:52,855 --> 00:21:55,941 நீ என்ன குரு பாப்பின் சீகாங்கு, அது போல எதுவும் ஆரம்பிக்கலாம்னு யோசிக்கிறயா... 358 00:21:55,941 --> 00:21:58,360 - நாம இந்த நாயை கண்டுபிடிக்கணும். - அமைதியான பார்ட்னர். 359 00:21:58,360 --> 00:21:59,528 என்னை பின்தொடர ஒரு கூட்டம் இருக்கு. 360 00:21:59,528 --> 00:22:00,946 நான் உங்களை அழைக்கிறேன். 361 00:22:01,446 --> 00:22:03,282 ஜூடி! ஜூடி. 362 00:22:04,491 --> 00:22:05,492 ஜூடி! 363 00:22:06,493 --> 00:22:08,161 வா, செல்லாம். ஜூடி! 364 00:22:09,371 --> 00:22:13,292 - ஜூடி! இங்கே வா, செல்லம். வாம்மா, செல்லம்! - ஹே, ஹே! செல்லக் குட்டி. வா போகலாம். 365 00:22:13,292 --> 00:22:16,170 - வா, ஜூடி. - வா, செல்லம். நல்ல குட்டி. 366 00:22:16,920 --> 00:22:18,213 வாடா, செல்லக் குட்டியே. 367 00:22:21,967 --> 00:22:23,802 - இங்கே வா, செல்லம். - ஹே, அதனுடைய வாயில என்ன இருக்கு? 368 00:22:23,802 --> 00:22:26,972 கீழே போடு. ஜூடி, கீழே போடு. கீழே போடு. 369 00:22:26,972 --> 00:22:29,683 அது என்னவோ, அதை விழுங்கிடுச்சு. போகலாம். 370 00:22:30,893 --> 00:22:32,644 நீ என்ன அந்த பக்கம் வேலை செய்யறயா? 371 00:22:32,644 --> 00:22:35,147 நீ அங்கே செய்தது வெறும் பைத்தியக்காரத்தனம். 372 00:22:35,147 --> 00:22:40,694 நான் உச்சகட்டத்துல இருந்தேன். எல்லாம் கிடைக்கிற தருணம். சரியா அப்பதான் உன்னுடைய சீகாங்கு 373 00:22:40,694 --> 00:22:44,198 ஸ்டூடியோவைப் பத்தி பேச ஆரம்பிச்சு, முதலீடு பணம் கிடைக்குமான்னு பார்த்த. 374 00:22:44,198 --> 00:22:46,283 பெக், அது நல்ல வாய்ப்பு. 375 00:22:47,284 --> 00:22:49,494 உன்னுடைய தேர்வுகள்ல இதுவும் ஒண்ணா, டென்னி? 376 00:22:50,245 --> 00:22:53,999 என்னுடன் இனிமே பேசவே பேசாதே. ஒருபோதும் பேசாதே. 377 00:22:54,583 --> 00:22:56,001 நிஜமாவா? அப்படி இருக்கப் போறோமா? 378 00:22:57,544 --> 00:22:59,713 நீ நல்லாயிருக்கயாடா செல்லம்? உன்னை பார்க்கலாம். நீ நல்லாயிருக்கயா? 379 00:22:59,713 --> 00:23:00,964 எனக்கு ஒரே ஒரு வாய்ப்பு இருந்தது. 380 00:23:01,882 --> 00:23:04,218 நான் அவனை தூண்டில்ல மாட்ட வச்சேன், நீ அவனை எடுத்து விட்டுட்ட. 381 00:23:04,218 --> 00:23:07,387 - அப்படி இல்லை... சரி. சரி தான். - வேண்டாம், பேசாதே. சரியா? 382 00:23:07,387 --> 00:23:09,765 இப்போ அவனை மாட்ட வைக்க நான் வேற வழியைத் தேடணும் 383 00:23:09,765 --> 00:23:13,393 அதோட அந்த அப்பா-மகள் அணி குண்டா அணியை பரிசு கிடைக்குற வரை 384 00:23:13,393 --> 00:23:14,937 செயல்படாம பார்த்துக்கணும். 385 00:23:14,937 --> 00:23:19,775 ஏன்னா டோனா அந்த மொட்டை பறவையை விட்டுட்டுப் போக வாய்ப்பே இல்லை. 386 00:23:21,276 --> 00:23:23,153 அதை எப்படி நீ சாதிக்கப் போறன்னு எனக்குத் தெரியலை. 387 00:23:23,737 --> 00:23:25,572 எனவே அது தான் உன் புதிய உத்தியா? 388 00:23:25,572 --> 00:23:28,867 - சரி. - முதல்ல, திட்டத்தை உடைக்கிறது. 389 00:23:28,867 --> 00:23:31,787 இப்ப நீ என் நம்பிக்கைய குறைக்க முயற்சி பண்ற. 390 00:23:31,787 --> 00:23:34,081 நீ ஏன் காச்செலை கூப்பிடக் கூடாது? அவர் ஒருவேளை உனக்கு உதவலாம். 391 00:23:34,081 --> 00:23:35,832 நீ அவன் பேரையே சொல்ல மாட்டன்னு நினைச்சேன். 392 00:23:35,832 --> 00:23:38,210 - நான் அவர் பேரை சொல்லறதில்லை. - சரி, இப்போ தான் சொன்ன. 393 00:23:38,210 --> 00:23:42,756 - எனக்கு அந்த ஆளை பிடிக்காது. தெரியுமில்ல. - ஏன்னா, நீ ஆக நினைச்சதை, அவன் ஆகியிருக்கான் 394 00:23:42,756 --> 00:23:46,093 நிஜமாவா? நான் உன்னை மோசமா நடத்துற முட்டாளாவா இருக்க விரும்புறேன்? 395 00:23:46,093 --> 00:23:50,430 சரி, இல்ல. நான் எனக்குன்னு ஒரு வாழ்க்கையை உருவாக்க நினைக்கிறேன். நீ வந்து சொதப்பாதே. 396 00:23:50,430 --> 00:23:51,515 ஆம். 397 00:23:52,349 --> 00:23:54,977 நீ அதை வருத்தப்பட வக்கிறன்னு எனக்கு புரியுது. 398 00:23:55,644 --> 00:23:56,687 அதை வெட்கிட்ட அழைச்சுட்டு போகணும். 399 00:23:56,687 --> 00:23:59,857 வெட்கிட்ட கூட்டிட்டு போறதுக்கு உங்கிட்ட ஏது பணம். இங்கே வா. இங்கே வா, ஜூடி. 400 00:24:01,233 --> 00:24:02,359 அடக் கடவுளே. 401 00:24:02,359 --> 00:24:04,194 இப்போ நல்லாயிருக்கு. சரிதானே, செல்லம்? 402 00:24:06,113 --> 00:24:07,489 ஹே, என்ன கண்றாவி அது? 403 00:24:10,200 --> 00:24:13,537 இது ஒரு விரல். அடக் கடவுளே! 404 00:24:18,625 --> 00:24:19,626 செல்லக் குட்டி. 405 00:25:18,477 --> 00:25:20,479 தமிழாக்கம் அகிலா குமார்