1 00:00:13,680 --> 00:00:17,184 நாள் 121 2 00:00:17,184 --> 00:00:19,811 மீண்டும், ஒரு பெரிய விண்கப்பல் வந்திருக்கிறது. 3 00:00:19,811 --> 00:00:23,982 {\an8}ஏலியன்கள் நம் உலகத்தை ஆக்கிரமித்து இன்றோடு நான்கு மாதங்கள் ஆகிறது. 4 00:00:24,733 --> 00:00:28,529 {\an8}நான்கு நீண்ட மாதங்கள். நம் உலகம் இதுவரை அறிந்திராத கடினமான சூழ்நிலை. 5 00:00:28,529 --> 00:00:31,949 நாம் பாதிக்கப்பட்டிருக்கிறோம். உயிர்களை, நிலத்தை, 6 00:00:31,949 --> 00:00:34,409 அன்புக்குரியவர்களைத் தியாகம் செய்திருக்கிறோம். 7 00:00:35,994 --> 00:00:40,207 இன்னும், லட்சக்கணக்கானவர்கள் இறந்த நிலையில், நாங்கள் இங்கே உலக பாதுகாப்பு கூட்டணியில் 8 00:00:40,207 --> 00:00:44,628 ஒவ்வொரு தேசத்தின் ஒவ்வொரு வளத்துடனும் உங்களுக்காக ஒவ்வொரு நாளும் போராடிக் கொண்டிருக்கிறோம். 9 00:00:44,628 --> 00:00:49,758 நம் எதிரியைப் புரிந்துகொள்ளவும், வீழ்த்தவும் எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்கிறோம். 10 00:00:50,384 --> 00:00:54,805 உங்கள் உதவியைக் கேட்கிறோம். தயவுசெய்து இராணுவத்துக்கு ஒத்துழையுங்கள், 11 00:00:54,805 --> 00:00:57,850 விதிமுறைகளை பின்பற்றுங்கள், அசுத்தமான பகுதிகளை காலி செய்யுங்கள். 12 00:00:58,433 --> 00:01:02,729 ஏலியன் வித்துகள் இப்போது நமது கிரகத்தின் 30% க்கும் அதிகமான காற்றை பாதித்துவிட்டன. 13 00:01:02,729 --> 00:01:06,316 பாதிக்கப்பட்ட எல்லா பகுதிகளிலிருந்தும் அகதிகளுக்கு தங்குமிடம் அமைத்திருக்கிறோம். 14 00:01:06,900 --> 00:01:13,073 ஒரே உலகமாக, ஒரே கூட்டணியாக, உங்களைப் பாதுகாக்க நாங்கள் ஒன்றாகச் செயல்படுகிறோம். 15 00:01:13,073 --> 00:01:15,367 ஒன்றாக, இந்தப் போரில் வெற்றி பெறுவோம். 16 00:01:16,034 --> 00:01:19,204 ஒன்றாக, இந்த இருண்ட நாட்கள் முடிவதை நாம் பார்ப்போம். 17 00:01:20,247 --> 00:01:24,459 நம்முடைய ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து விடுபட்ட வானத்தில் அந்த சூரியன் உதிக்கும்போது, 18 00:01:25,460 --> 00:01:29,131 நம் இனம் இதுவரை அறிந்திராத பிரகாசமான நாளாக அது இருக்கும். 19 00:01:41,435 --> 00:01:43,687 {\an8}ஒசாகா, ஜப்பான், பூமி 20 00:02:40,994 --> 00:02:44,081 ஓடுங்கள்! ஓடுங்கள்! 21 00:04:17,757 --> 00:04:20,469 கவலைப்படாதே, நாம் உன் அம்மாவைக் கண்டுபிடிக்கப் போகிறோம். 22 00:04:55,879 --> 00:04:58,257 WDC, உலக பாதுகாப்பு? 23 00:04:58,257 --> 00:04:59,842 நீங்கள் கூட்டணியைச் சேர்ந்தவர்களா? அரசா? 24 00:04:59,842 --> 00:05:01,301 மிட்சுகி யமடோ? 25 00:05:01,802 --> 00:05:02,886 இங்கு மக்கள் சிரமத்தில் இருக்கிறார்கள். 26 00:05:02,886 --> 00:05:05,013 -அவர்களுக்காக நாங்கள் இங்கே வரவில்லை. -என்னை விடுங்கள்! 27 00:05:05,013 --> 00:05:06,056 என்ன சொல்கிறீர்கள்? 28 00:05:06,056 --> 00:05:11,228 என்னை விடுங்கள்! என்ன செய்கிறீர்கள்? 29 00:05:11,228 --> 00:05:12,980 நாம் எல்லோருக்கும் உதவ வேண்டும்! 30 00:05:12,980 --> 00:05:17,067 நீங்கள்தான் அரசாங்கம்! எல்லோருக்கும் உதவுங்கள்! என்ன செய்கிறீர்கள்? 31 00:05:17,067 --> 00:05:18,944 என்னை விடுங்கள்! 32 00:05:20,153 --> 00:05:21,697 என்னை விடுங்கள்! 33 00:05:23,282 --> 00:05:24,283 {\an8}தர்மேக்ஸ் டெக்னாலஜி 34 00:05:30,122 --> 00:05:31,123 என்னை இறக்கிவிடுங்கள்! 35 00:05:31,123 --> 00:05:33,834 என்னை விடுங்கள். என்னை விடுங்கள்! 36 00:05:35,377 --> 00:05:36,712 என்னை இறக்கிவிடுங்கள். 37 00:05:36,712 --> 00:05:37,713 என்னை விடுங்கள். 38 00:05:37,713 --> 00:05:39,798 -எங்களிடம் உத்தரவுகள் இருக்கின்றன... -மக்கள் இறந்துகொண்டிருக்கிறார்கள்! 39 00:05:39,798 --> 00:05:41,717 -எனக்குப் புரிகிறது. -நான் அவர்களுக்கு உதவ வேண்டும். 40 00:05:41,717 --> 00:05:43,802 நாம் இந்தப் போரில் தோற்றுக்கொண்டிருக்கிறோம். 41 00:05:43,802 --> 00:05:45,262 என்னை இறக்கிவிடுங்கள். 42 00:05:45,262 --> 00:05:46,889 இறக்கிவிடுங்கள், மக்கள் சிக்கலில் இருக்கிறார்கள், அவர்களுக்கு நம் உதவி தேவை. 43 00:05:46,889 --> 00:05:50,058 நாம் வெற்றிபெற உதவும் இடத்திற்கு உன்னை அழைத்துச் செல்கிறோம். 44 00:05:53,353 --> 00:05:56,315 நீ எல்லோரையும் காப்பாற்றக்கூடிய இடத்துக்கு. 45 00:06:01,778 --> 00:06:03,864 என்னை விடுங்கள். 46 00:06:14,666 --> 00:06:17,169 நாம் எங்கே போகிறோம்? 47 00:07:35,205 --> 00:07:38,834 ...இந்தியாவில் நடந்த தாக்குதல்கள் மேற்கு பாகிஸ்தானில் பரவி, 48 00:07:38,834 --> 00:07:41,461 {\an8}இதுவரை நடந்த படையெடுப்பிலேயே மிக மோசமானது என்று உதவி குழுக்கள் அழைக்கும்... 49 00:07:41,461 --> 00:07:42,588 {\an8}பிரிட்டிஷ் கொலம்பியா, பூமி 50 00:07:42,588 --> 00:07:44,298 {\an8}...அகதிகள் நெருக்கடியை உருவாக்கியிருக்கிறது. 51 00:07:44,298 --> 00:07:46,800 {\an8}வளிமண்டலம் முழுக்க அம்மோனியாவின் அளவு ஆபத்தான விகிதத்தில் 52 00:07:46,800 --> 00:07:49,761 உயர்வதாக உலக பாதுகாப்பு கூட்டணி தெரிவிக்கிறது, 53 00:07:49,761 --> 00:07:52,681 சில பகுதிகள் ஒரு மில்லியனுக்கு 200 பாகங்களை நெருங்குகிறது. 54 00:07:52,681 --> 00:07:54,850 உதிரிக் குழுவான மூவ்மென்டின் ஆதரவாளர்கள், 55 00:07:54,850 --> 00:07:57,561 கூட்டணிக்கு தொடர்ந்து பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறார்கள். 56 00:07:57,561 --> 00:08:01,190 இன்று காலை, பிராந்தியத்தில் உயிர்பிழைத்தவர்களின் முகாமுக்குச் சென்ற 57 00:08:01,190 --> 00:08:04,526 சரக்கு வாகனங்கள் மீது பதுங்கியிருந்து தாக்கி உணவுப்பொருட்களை பறித்துச் சென்றனர். 58 00:08:04,526 --> 00:08:07,404 -இது போன்ற திடீர் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன... -உங்களிடம் மிட்டாய் இருக்கிறதா? 59 00:08:07,404 --> 00:08:09,698 - ...உணவுத் தட்டுப்பாடு தொடர்ந்து மோசமடைகிறது... -என்ன? 60 00:08:09,698 --> 00:08:12,034 ஜெல்-ஓ? ஏதாவது ஐஸ்கிரீம்? 61 00:08:12,034 --> 00:08:16,455 எங்களிடம் உணவே இல்லை. ஒரு மாதத்திற்கு முன்பே ஐஸ்கிரீம் வருவது நின்றுவிட்டது. 62 00:08:16,455 --> 00:08:18,332 ...அருகிலுள்ள முகாமுக்குச் செல்கிறார்கள். 63 00:08:33,013 --> 00:08:36,433 சரி, பஞ்சு பொம்மைகள் இருக்கின்றனவா? 64 00:08:36,433 --> 00:08:39,727 கரடி பொம்மை போல? அது ஒரு கரடியாக கூட இருக்க வேண்டியதில்லை. 65 00:08:39,727 --> 00:08:44,149 அது நீர்நாயாகவோ, சாவிக்கொத்தில் உள்ள முயலாகவோ... 66 00:08:44,149 --> 00:08:46,485 ஹேய். உன்னை இங்கே அழைத்து வந்தது யார்? 67 00:08:46,485 --> 00:08:48,820 என் அம்மா. கழிவறையில் இருக்கிறார். 68 00:08:50,989 --> 00:08:51,990 கழிவறையா? 69 00:09:03,627 --> 00:09:05,420 கழிவறைக்கு சாவி வேண்டும். 70 00:09:06,505 --> 00:09:07,506 நீ இங்கேயே இரு. 71 00:09:08,173 --> 00:09:11,718 ...துபாயும் சாண்டியாகோவும் இந்த நேரத்தில் பெரிய அளவில் பாதிக்கப்படாதது, 72 00:09:11,718 --> 00:09:14,054 காலநிலையும் நிலப்பரப்பும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பரிந்துரைக்கிறது. 73 00:09:14,054 --> 00:09:15,430 லூக், நாம் போக வேண்டும். 74 00:09:20,185 --> 00:09:22,354 -ஹேய்! -பதினேழு, பதினாறு... 75 00:09:31,363 --> 00:09:32,906 பன்னிரெண்டு, பதினொன்று, 76 00:09:32,906 --> 00:09:34,658 பத்து, ஒன்பது... 77 00:09:34,658 --> 00:09:37,411 ஹேய்! உன்னைத்தான்! 78 00:09:38,579 --> 00:09:40,414 எட்டு, ஏழு... 79 00:09:42,124 --> 00:09:44,376 -லூக் எங்கே? -எனக்குப் பின்னால் இருந்தான். 80 00:09:49,089 --> 00:09:51,300 -கதவைத் திற! -உன் அண்ணன் எங்கே? 81 00:09:59,183 --> 00:10:02,477 கதவைத் திற! 82 00:10:22,247 --> 00:10:25,959 -லூக், உனக்கு என்ன ஆனது? நீ நலமா? -அம்மா, கருவிகளை எடுத்து வந்தேன். பாருங்கள். 83 00:10:25,959 --> 00:10:27,836 லூக், உனக்கு விதிகளை தெரியும். 84 00:10:27,836 --> 00:10:31,089 அவர்கள் கதவை நோக்கி நகரும் தருணத்தில், நீ வெளியேற 17 வினாடிகள்தான் இருக்கும். 85 00:10:31,089 --> 00:10:32,382 நீ 30-க்கு மேல் எடுத்துக்கொண்டாய். 86 00:10:32,382 --> 00:10:35,302 அந்த நொடிகளில் நீ இறந்திருக்கலாம். நம் எல்லோரும் இறந்திருக்கலாம். 87 00:10:35,302 --> 00:10:36,553 ஆனால் நாம் இறக்கவில்லை, சரியா? 88 00:10:36,553 --> 00:10:39,097 -நமக்கு இவை தேவை. -லூக், உனக்கு விதிகளை தெரியும்! 89 00:10:39,097 --> 00:10:40,807 பதினேழு வினாடிகள்! 90 00:10:41,475 --> 00:10:42,476 ஆம். 91 00:10:45,145 --> 00:10:46,230 எனக்கு விதிகள் தெரியும். 92 00:11:26,103 --> 00:11:28,313 கிட்டத்தட்ட இடத்தை நெருங்கிவிட்டோம். 93 00:11:34,444 --> 00:11:35,988 அதுதான் அவற்றின் விண்கப்பல். 94 00:11:35,988 --> 00:11:38,448 {\an8}அமேசான் மழைக்காடுகள், பிரேசில் 95 00:11:38,448 --> 00:11:41,368 {\an8}நாம் சுட்டு வீழ்த்திய ஒன்று. 96 00:11:45,831 --> 00:11:48,166 அது என்னவென்று எனக்குத் தெரியும். 97 00:11:49,793 --> 00:11:51,795 {\an8}அவர் வருகிறார், மேடம் ஜனாதிபதி. 98 00:11:51,795 --> 00:11:53,213 {\an8}சரி, இந்த முறை நீங்கள் சொல்வது சரி என்று நம்புகிறேன். 99 00:11:53,213 --> 00:11:55,132 {\an8}கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக அந்த விண்கப்பல் நம்மிடம் இருக்கிறது. 100 00:11:55,132 --> 00:11:56,884 {\an8}நீங்கள் விரைவாக முன்னேற்றத்தை கொடுக்க முடியாவிட்டால், 101 00:11:56,884 --> 00:11:58,760 {\an8}நடவடிக்கையை கூட்டணி கையில் எடுக்க வேண்டியிருக்கும். 102 00:11:58,760 --> 00:12:02,472 {\an8}எனது நிதி இல்லாமல் வேலை நடக்காது என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறேன். 103 00:12:02,472 --> 00:12:06,685 எனவே, இது எனக்குச் சொந்தமானது, சில ஐக்கிய நாடுகளுடையது அல்ல. 104 00:12:06,685 --> 00:12:09,188 {\an8}இது உங்களுடைய விலையுயர்ந்த பொம்மைகளில் ஒன்றல்ல நிகில். 105 00:12:09,188 --> 00:12:12,065 {\an8}உலகத் தலைவர்கள் என்னிடம் என்ன சொல்கிறார்களோ அதைத்தான் உங்களிடம் சொல்கிறேன். 106 00:12:12,065 --> 00:12:13,192 {\an8}எங்களுக்கு முடிவுகள் தேவை. 107 00:12:13,192 --> 00:12:16,320 அந்த வரைபடம் கடந்த வாரம் கிட்டத்தட்ட 80% பச்சை நிறத்தில் இருந்தது. 108 00:12:16,320 --> 00:12:17,946 இப்போது 75-இல் தொங்கிக்கொண்டிருக்கிறோம். 109 00:12:17,946 --> 00:12:19,781 நாடுகள் முழுக்க வசிக்க முடியாத மண்டலங்கள் உள்ளன. 110 00:12:19,781 --> 00:12:22,075 இந்த விகிதத்தில், அவை நமது வளிமண்டலத்தை மாற்ற... 111 00:12:22,075 --> 00:12:23,827 ஆம், என்னால் கணக்கு போட முடியும், ஜனாதிபதி மேடம். 112 00:12:23,827 --> 00:12:27,873 முடிவுகள் வந்துகொண்டிருக்கின்றன என்று உங்களுடைய மற்ற தலைவர்களிடம் நீங்கள் சொல்லலாம். 113 00:12:27,873 --> 00:12:29,208 பை-பை. 114 00:13:00,280 --> 00:13:01,281 இந்த வழியில், தயவுசெய்து. 115 00:13:10,791 --> 00:13:12,918 வரவேற்கிறேன். 116 00:13:12,918 --> 00:13:15,754 இறுதியாக நீ இங்கு வந்ததில் நான் எவ்வளவு உற்சாகமடைகிறேன் என்று சொல்ல முடியாது. 117 00:13:15,754 --> 00:13:16,964 நீ ஆங்கிலம் பேசுவாய், சரிதானே? 118 00:13:17,464 --> 00:13:20,175 நாங்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக உன்னைத் தேடிக்கொண்டிருக்கிறோம். 119 00:13:20,175 --> 00:13:22,845 நீ கனசாவாவில் இருக்கிறாய் என்று நினைத்தோம், ஆனால், ச்சே, 120 00:13:22,845 --> 00:13:24,513 நாங்கள் அங்கு வருவதற்குள் நீ போய்விட்டாய். 121 00:13:24,513 --> 00:13:27,182 எல்லோரும் போய்விட்டோம். அவற்றைத் தவிர. 122 00:13:27,182 --> 00:13:30,185 சரி. உனக்கு குடிக்க ஏதாவது வேண்டுமா? சாப்பிட ஏதாவது? 123 00:13:30,185 --> 00:13:33,564 அற்புதமான சமையல்காரர் இருக்கிறார். ஆசிய உணவு செய்வார். எதையும் செய்வார். 124 00:13:34,106 --> 00:13:35,440 நான் இங்கே என்ன செய்கிறேன்? 125 00:13:35,440 --> 00:13:37,568 ஓ. நேராக விஷயத்துக்கு. 126 00:13:37,568 --> 00:13:39,027 எனக்கு அது பிடித்திருக்கிறது. சரி. 127 00:13:40,028 --> 00:13:42,281 அறிமுக பேச்சை தவிர்த்துவிடுவோம், சரியா? 128 00:13:43,615 --> 00:13:44,783 என் பெயர் நிகில் கபூர். 129 00:13:44,783 --> 00:13:45,868 நீ யாரென்று எனக்கு தெரியும். 130 00:13:47,703 --> 00:13:48,912 நீ யாரென்று எல்லோருக்கும் தெரியும். 131 00:13:50,247 --> 00:13:51,623 சரி. 132 00:13:51,623 --> 00:13:54,418 இதற்கெல்லாம் முன் ஒரு உலகம் இருந்ததை சில நேரங்களில் நான் மறந்து விடுகிறேன். 133 00:13:55,419 --> 00:13:56,587 உண்மையில், நான் மறக்க மாட்டேன். 134 00:13:56,587 --> 00:13:58,088 அடக்கமாகவே பேசுகிறேன். 135 00:13:59,131 --> 00:14:01,508 ஆனால் தன்னடக்கத்திற்கு நமக்கு நேரம் இல்லை, இல்லையா? 136 00:14:02,009 --> 00:14:05,387 அது இங்கே இருப்பதால் நீ இங்கே இருக்கிறாய். 137 00:14:05,929 --> 00:14:08,432 அது உன்னால்தான் இங்கே இருக்கிறது. 138 00:14:09,183 --> 00:14:11,560 உன் குறியீடுகள்தான் அந்த விண்கப்பலுடன் தொடர்பை ஏற்படுத்தியது. 139 00:14:12,978 --> 00:14:15,772 எதிரியுடன் ஒருவர் மேற்கொண்ட ஒரே தொடர்பு. 140 00:14:17,149 --> 00:14:19,067 உன் அச்சுத்தூரங்கள்தான் அந்த விண்கப்பலை... 141 00:14:20,194 --> 00:14:22,029 சுட்டு வீழ்த்துவதை சாத்தியமாக்கின. 142 00:14:24,781 --> 00:14:26,700 இந்தப் போரின் ஒரே வெற்றியை எங்களுக்குக் கொடுத்தாய். 143 00:14:29,995 --> 00:14:30,996 அது வெற்றியல்ல. 144 00:14:32,581 --> 00:14:34,082 இது விஷயங்களை மோசமாக்கியது. 145 00:14:37,461 --> 00:14:40,589 இறந்த விண்கப்பலைப் பார்க்கவா உலகத்தின் மறுபக்கத்தில் இருந்து என்னைக் கூட்டி வந்தாய்? 146 00:14:44,301 --> 00:14:45,469 அப்படித்தான் நினைக்கிறாயா? 147 00:14:48,055 --> 00:14:49,056 அது இறந்துவிட்டதா? 148 00:14:51,183 --> 00:14:52,643 நீ முன்பு அதை தொடர்புகொண்டாய். 149 00:14:53,769 --> 00:14:55,604 நீ மீண்டும் அதை தொடர்புகொள்ள விரும்புகிறோம். 150 00:14:57,314 --> 00:14:58,315 நாங்கள் முயற்சித்தோம். 151 00:14:58,315 --> 00:15:02,236 அதற்கு உள்ளேயும் வெளியேயும் உலகின் தலைசிறந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தார்கள். 152 00:15:02,236 --> 00:15:05,864 இருந்தாலும், ஒரே ஒருவர்தான் தொடர்புகொண்டார். 153 00:15:07,741 --> 00:15:08,742 நீ. 154 00:15:11,119 --> 00:15:15,624 தொடர்பு. தகவல்தொடர்பு. இணைப்பு. 155 00:15:15,624 --> 00:15:18,710 அவற்றுக்கு என்ன வேண்டும் என்பதை நாம் கற்றுக்கொள்வதற்கான ஒரே வாய்ப்பு இதுதான். 156 00:15:19,378 --> 00:15:20,379 அவை ஏன் இங்கே இருக்கின்றன. 157 00:15:21,046 --> 00:15:22,464 அவற்றை எப்படி நிறுத்துவது? 158 00:15:26,301 --> 00:15:30,055 நான் கடந்த முறை இராணுவத்தோடு பணியாற்றியபோது அவர்கள் என்னிடம் பொய் சொன்னார்கள். 159 00:15:31,098 --> 00:15:32,099 என்னைப் பயன்படுத்திக்கொண்டார்கள். 160 00:15:34,560 --> 00:15:35,686 நான் ஏன் உன்னை நம்ப வேண்டும்? 161 00:15:36,186 --> 00:15:39,398 ஏனென்றால் நான் இராணுவத்தைச் சேர்ந்தவன் அல்ல, நானும் அவர்களை நம்ப மாட்டேன். 162 00:15:40,691 --> 00:15:43,735 நான் என் வாழ்நாள் முழுவதும் அமைப்புக்கு வெளியே வேலை செய்தேன், 163 00:15:43,735 --> 00:15:46,947 நான் பின்பற்றிய ஒரே விதி... 164 00:15:49,074 --> 00:15:50,868 "எப்போதும் ஒரு விதியை உடைப்பதை உறுதிப்படுத்திக்கொள்" என்பதுதான். 165 00:15:58,208 --> 00:16:00,878 அது சாகவில்லை என்று நீ சொன்னதன் அர்த்தம் என்ன? 166 00:16:03,255 --> 00:16:04,631 உள்ளே போ. நீயே பார். 167 00:16:05,549 --> 00:16:07,843 நாங்கள் முதலில் உன்னிடம் சில சோதனைகளை நடத்த வேண்டும். 168 00:16:07,843 --> 00:16:09,636 -என்ன மாதிரியான சோதனைகள்? -வழக்கமானதுதான். 169 00:16:09,636 --> 00:16:13,265 உன் உளவியல்... உடலியலின் நிலைத்தன்மை தெரிந்துகொள்ள... ஒருவேளை ஏதாவது நடந்தால். 170 00:16:13,265 --> 00:16:16,101 இது ஒரு சம்பிரதாயம், நிஜமாகத்தான், உன் சொந்த பாதுகாப்பிற்காக. 171 00:16:18,979 --> 00:16:19,980 அதில் என்ன இருக்கிறது? 172 00:16:22,357 --> 00:16:25,611 சரி, அந்தக் கேள்விக்கு உன்னால் பதிலளிக்க முடிந்தால், மிட்சுகி யமடோ, 173 00:16:26,570 --> 00:16:29,615 உண்மையில் இந்த போரில் வெற்றி பெற நமக்கு வாய்ப்பு இருக்கலாம். 174 00:16:44,546 --> 00:16:47,508 பிள்ளைகளே. என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? பேக் செய்ய சொன்னேன். செய்! 175 00:16:47,508 --> 00:16:50,844 இந்த இடம் பிடித்திருக்கிறது. இங்குள்ள குழாய்களில் தண்ணீர் வருகிறது. 176 00:16:50,844 --> 00:16:53,639 அதோடு மெத்தைகள், கொஞ்சம் துர்நாற்றம் வீசினாலும் கூட. 177 00:16:53,639 --> 00:16:55,599 ஒன்றுக்கு இரண்டு வாக்குகள். நாங்கள் இருக்கிறோம். 178 00:16:55,599 --> 00:16:57,684 நான் உன் அம்மா. இது ஒன்றும் தேர்தல் அல்ல. 179 00:16:57,684 --> 00:17:01,563 இன்னும் 48 மணிநேரம் கூட ஆகவில்லை. நீங்களே உங்கள் சொந்த விதிகளின்படி நடக்கவில்லை. 180 00:17:01,563 --> 00:17:04,566 நீ விதிகளை மீறியதால் நாம் தங்க முடியாது. இது இப்போது மிகவும் ஆபத்தானது. 181 00:17:05,067 --> 00:17:07,319 அந்த எரிவாயு நிலையத்தில் இருப்பவன் அதிகாரிகளை அழைத்திருந்தால்? 182 00:17:07,319 --> 00:17:09,988 நம்மைத் தேடிக்கொண்டிருந்தால் என்ன செய்வது? நாம் நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும். 183 00:17:09,988 --> 00:17:11,656 எப்போதும் ஓடிக்கொண்டே இருப்பது சலிப்படைந்துவிட்டது. 184 00:17:11,656 --> 00:17:14,034 நாம் இன்னும் கொஞ்சம் சென்றால், கடலுக்குள்தான் போவோம். 185 00:17:14,034 --> 00:17:16,662 மேற்கு நோக்கிச் செல்வது முடிந்தது. இப்போது வடக்கே செல்கிறோம், 186 00:17:16,662 --> 00:17:19,830 சாலைகள் நம்மை அழைத்துச் செல்லும் அளவுக்கு கண்டத்தின் உச்சிக்கு. 187 00:17:19,830 --> 00:17:22,084 ஆக்கிரமிப்புக்கு முன்பு கூட அவ்வளவு தூரத்தில் யாரும் வாழவில்லை. 188 00:17:22,084 --> 00:17:24,252 மிகச்சரி. அதுதான் விஷயம். நாம் பாதுகாப்பாக இருப்போம். 189 00:17:24,252 --> 00:17:26,797 ஏலியன்களிடம் இருந்தா அல்லது மனிதர்களிடமிருந்தா? 190 00:17:33,220 --> 00:17:35,556 உன் அப்பாவை கொன்றது ஏலியன்கள் அல்ல. 191 00:17:36,348 --> 00:17:39,685 தயவுசெய்து, உன் பொருட்களை பேக் செய். வா. 192 00:17:56,702 --> 00:17:57,703 ச்சே. 193 00:17:58,829 --> 00:18:00,038 இதைத் தேடுகிறீர்களா? 194 00:18:03,375 --> 00:18:06,044 நாம் அதை ஒருபோதும் வெளிப்படுத்தக் கூடாது என்று உனக்கே தெரியும். 195 00:18:07,212 --> 00:18:09,131 லூக், அதை என்னிடம் கொடு. 196 00:18:09,131 --> 00:18:12,259 நான்தான் கண்டுபிடித்தேன். இது நம்மை பாதுகாப்பாக வைத்திருக்கும், எனவே இங்கேயே இருப்போம். 197 00:18:12,259 --> 00:18:14,386 லூக், நான்தான் நம்மை பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். 198 00:18:14,386 --> 00:18:18,015 லூக், அதை என்னிடம் கொடு என்றேன். லூக், நீ என்னை நம்ப வேண்டும். 199 00:18:18,015 --> 00:18:20,058 -நீ நம்பு... -உங்கள் உள்ளுணர்வு சொல்கிறதா? 200 00:18:20,058 --> 00:18:23,020 அந்த உள்ளுணர்வுதான் இதுவரை நம்மை உயிரோடு வைத்திருக்கிறது. 201 00:18:23,020 --> 00:18:25,564 முழு உலகமும் சிதைந்து கொண்டிருக்கிறது. 202 00:18:25,564 --> 00:18:27,858 நீ, உன் தங்கை, இந்த குடும்பம்தான் என் உலகம். 203 00:18:27,858 --> 00:18:30,402 அதை பாதுகாப்பாக வைத்திருக்க நான் எதையும், எல்லாவற்றையும் செய்வேன். 204 00:18:30,402 --> 00:18:32,863 எனக்கும் ஒரு உள்ளுணர்வு இருக்கிறது. அதை கருத்தில்கொள்ள வேண்டாமா? 205 00:18:32,863 --> 00:18:34,198 ஆம். கருத்தில்கொள்ள வேண்டும். 206 00:18:34,198 --> 00:18:37,409 உன் உள்ளுணர்வுக்கு எப்படி வண்டி ஓட்டுவது, எப்படி இருட்டில் காயத்தை தைப்பது, 207 00:18:37,409 --> 00:18:40,871 கிடைத்தவற்றில் இருந்து எப்படி உணவை செய்வது, உன் தங்கையை எப்படி கவனிப்பது என்று தெரியும்போது. 208 00:18:42,664 --> 00:18:46,919 நான் உன்னைப் பாதுகாக்க மட்டும் இல்லை. உன்னை தயார் செய்கிறேன், ஒருவேளை... 209 00:18:46,919 --> 00:18:48,003 ஒருவேளை என்ன? 210 00:18:49,004 --> 00:18:54,468 லூக், அதை அவரிடம் கொடு. நான் இப்போது போக வேண்டும். சரியா? எனவே ஒன்றுக்கு இரண்டு வாக்குகள். 211 00:18:57,804 --> 00:18:59,556 நான் இங்கு தனியாக தங்க விரும்பினால்? 212 00:18:59,556 --> 00:19:01,850 அது விருப்பத்தேர்வு இல்லை. 213 00:19:02,392 --> 00:19:04,520 நீ செல்லுமிடம், நான் செல்வேன். நான் செல்லுமிடம், நீ செல்ல வேண்டும். 214 00:19:04,520 --> 00:19:07,022 நாம் ஒன்றாக செல்வோம். இது நம்முடைய முதல் விதி. 215 00:19:22,538 --> 00:19:23,622 நன்றி. 216 00:19:27,709 --> 00:19:30,045 இங்கே வா. 217 00:19:38,053 --> 00:19:39,346 எதை அளவிடுகிறாய்? 218 00:19:40,138 --> 00:19:42,975 ஆர்வத்தை தூண்டுபவை மற்றும் ஆர்வத்தை தடுப்பவை 219 00:19:42,975 --> 00:19:46,478 மற்றும் அவற்றின் நிலையான மாற்றத்தின் கூட்டுத்தொகையை EEG அளவிடும். 220 00:19:47,062 --> 00:19:48,063 நீ மருத்துவரா? 221 00:19:48,605 --> 00:19:50,148 அறிவாற்றலை ஆராயும் விஞ்ஞானி. 222 00:19:50,148 --> 00:19:52,442 {\an8}சோதனைக்குப் பிறகு உன் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்கிறேன். 223 00:19:54,611 --> 00:19:56,029 எண்டோ சுசக்கு. 224 00:19:57,364 --> 00:19:58,615 என்சி ஃபுமிகோ. 225 00:20:00,868 --> 00:20:04,121 காலாஸ். கிளின்டன். 226 00:20:04,121 --> 00:20:06,498 எந்த வயதில் நீ பட்டம் பெற்றாய்? 227 00:20:06,498 --> 00:20:08,000 இருபத்து இரண்டு. 228 00:20:09,251 --> 00:20:10,252 கிரெம்லின். 229 00:20:12,171 --> 00:20:13,172 மண்டேலா. 230 00:20:17,009 --> 00:20:18,510 அது என்னவென்று தெரியாது. 231 00:20:18,510 --> 00:20:20,596 முதல் முறையாக காதலித்தது? 232 00:20:24,892 --> 00:20:26,310 முதல் முறையாக காதலித்தது? 233 00:20:28,145 --> 00:20:29,146 மூன்று ஆண்டுகளுக்கு முன்பு. 234 00:20:29,938 --> 00:20:31,690 உன் முதல் காதலரின் பெயர்? 235 00:20:34,735 --> 00:20:36,862 -நீ அந்த நபரின் பெயரை சொல்ல வேண்டும். -ஏன்? 236 00:20:37,613 --> 00:20:39,323 நினைவக அடிப்படையை உருவாக்குகிறோம். 237 00:20:39,323 --> 00:20:40,407 ஏன்? 238 00:20:40,991 --> 00:20:42,159 பிறகு விளக்குகிறேன். 239 00:20:43,660 --> 00:20:44,661 அவருடைய பெயர் என்ன? 240 00:20:48,290 --> 00:20:49,291 ஹினாடா. 241 00:20:50,417 --> 00:20:51,710 ஹினாடா ஜப்பானில் இருக்கிறாரா? 242 00:20:52,211 --> 00:20:53,212 இல்லை. 243 00:20:57,382 --> 00:20:58,592 அது உன் மகள் என்று வைத்துக்கொள். 244 00:20:58,592 --> 00:21:00,302 வாழ்வா சாவா நிலைமை. 245 00:21:00,802 --> 00:21:04,932 நீ அவளையோ ஹினாடாவையோ காப்பாற்ற வேண்டியிருந்தால், யாரைத் தேர்ந்தெடுப்பாய்? 246 00:21:05,891 --> 00:21:07,935 உன் காதலியையா அல்லது குழந்தையா? 247 00:21:09,811 --> 00:21:10,812 காதலியை. 248 00:21:14,316 --> 00:21:16,902 இவை ஒரு கட்டடம் இடிந்து விழும் போது பதிவு செய்யப்பட்ட ஒலிகள். 249 00:21:16,902 --> 00:21:20,322 உன் காதலியையோ அல்லது உன் பெற்றோரையோ காப்பாற்ற வேண்டியிருந்தால், யாரைத் தேர்ந்தெடுப்பாய்? 250 00:21:21,532 --> 00:21:22,533 காதலியை. 251 00:21:24,326 --> 00:21:27,204 -அப்பாவி மக்களின் வரிசை... -காதலியை. அடுத்த கேள்விக்குப் போவோமா? 252 00:21:33,210 --> 00:21:36,380 -படத்தில் உன்னோடு இருப்பது யார்? -என்னுடைய முதல் கல்லூரி அறைத்தோழி. 253 00:21:36,880 --> 00:21:38,048 இச்சிகோ. 254 00:21:53,939 --> 00:21:56,108 அது ஹினாடாவா? 255 00:21:58,193 --> 00:21:59,444 விண்வெளி வீரரா? 256 00:22:00,028 --> 00:22:02,990 நீ அந்த விண்கப்பலோடு தொடர்புகொள்ள முயற்சித்ததற்கு அவர்தான் காரணமா? 257 00:22:06,368 --> 00:22:07,870 -நீ அந்த விண்கப்பலோடு தொடர்பு... -ஆம். 258 00:22:08,537 --> 00:22:10,831 அந்த விண்கப்பலில் ஹினாட்டா உயிருடன் இருப்பதாக நீ நம்புகிறாயா? 259 00:22:10,831 --> 00:22:11,999 இந்த கேள்வியின் நோக்கம் என்ன? 260 00:22:11,999 --> 00:22:14,918 அந்த விண்கப்பல் வானத்தில் சுடப்பட்ட போது ஹினாட்டாவைக் கொன்றதற்கு 261 00:22:14,918 --> 00:22:16,920 நீதான் காரணம் என்று நினைக்கிறாயா? 262 00:22:20,757 --> 00:22:24,178 -நீதான் பொறுப்பு என்று நினைக்கிறாயா... -கேள்வியைக் கேட்டேன். அதன் நோக்கம் என்ன? 263 00:22:24,178 --> 00:22:26,930 -நீதான் பொறுப்பு என்று நினைக்கிறாயா... -அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை... 264 00:22:26,930 --> 00:22:28,390 நீ கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். 265 00:22:28,390 --> 00:22:32,019 ஹினாடா முரையின் மரணத்திற்கு நீதான் பொறுப்பு என்று நினைக்கிறாயா? 266 00:22:33,520 --> 00:22:34,605 தொலைந்துபோ. 267 00:22:35,480 --> 00:22:36,523 அதுதானே உன் பதிலா? 268 00:23:28,784 --> 00:23:30,035 "பாதாம்." 269 00:23:36,667 --> 00:23:39,044 நீ ஆபத்தில் இருக்கும்போது அது நம் குறியீடு வார்த்தை. 270 00:23:44,508 --> 00:23:46,552 நான் இனி ஃபார்ஸியைக் கற்க விரும்பவில்லை. 271 00:23:47,177 --> 00:23:48,345 நாம் முன்பு கற்க வேண்டிய தேவை இல்லை. 272 00:23:48,345 --> 00:23:50,138 -இப்போது இருக்கிறது. -ஏன்? 273 00:23:50,764 --> 00:23:52,391 அது ஒரு நாள் நம் உயிரைக் காப்பாற்றலாம். 274 00:23:56,436 --> 00:23:57,437 எனக்கு அது நன்றாகத் தெரியாது. 275 00:24:00,315 --> 00:24:01,525 அதனால்தான் நீ பயிற்சி செய்கிறாய். 276 00:24:06,154 --> 00:24:07,239 அதுதான். 277 00:24:12,119 --> 00:24:13,120 சரி. 278 00:24:13,120 --> 00:24:16,290 நான் உள்ளே சென்று அடுத்த எரிவாயு நிலையம் எங்கே என்று கேட்கப் போகிறேன். 279 00:24:16,290 --> 00:24:17,708 நீங்கள் இங்கேயே இருங்கள், சரியா? 280 00:24:17,708 --> 00:24:19,126 எனக்குப் பசிக்கிறது, அம்மா. 281 00:24:19,126 --> 00:24:20,669 அவர்களிடம் உணவு இருக்கிறதா என்று கேட்கிறேன். 282 00:24:22,087 --> 00:24:23,797 அல்லது அவர்களிடம் கேட்கலாம். 283 00:24:33,182 --> 00:24:35,809 நாம் இராணுவத்திடம் இருந்து விலகி இருக்கிறோம். 284 00:24:36,602 --> 00:24:38,061 -உனக்கே தெரியும்... -விதிகள். 285 00:24:39,104 --> 00:24:40,105 ஆம். 286 00:24:44,109 --> 00:24:45,110 நமக்கு யார் இருக்கிறார்கள்? 287 00:24:46,528 --> 00:24:47,529 ஒருவருக்கொருவர். 288 00:24:48,780 --> 00:24:49,781 நமக்கு என்ன தேவை? 289 00:24:49,781 --> 00:24:51,533 -வேறொன்றுமில்லை. -வேறொன்றுமில்லை. 290 00:24:51,533 --> 00:24:52,618 அதுதான். 291 00:24:53,452 --> 00:24:54,453 சரி. 292 00:24:57,331 --> 00:24:58,749 இதோ வந்துவிடுகிறேன். 293 00:25:24,691 --> 00:25:26,652 பெட்ரோல் 294 00:25:31,865 --> 00:25:32,866 பெட்ரோல். 295 00:25:35,077 --> 00:25:36,078 அது எரிபொருள். 296 00:25:40,832 --> 00:25:43,752 ஒரு விளையாட்டு விளையாடுவோம். நான் உளவு பார்க்கிறேன். 297 00:25:44,920 --> 00:25:48,715 நான் என் கண்ணால் G-இல் தொடங்கும் ஒன்றை உளவு பார்க்கட்டுமா? 298 00:25:49,716 --> 00:25:51,802 லூக், தயவுசெய்து போகாதே. 299 00:25:51,802 --> 00:25:52,886 இதோ வந்துவிடுகிறேன். 300 00:25:54,012 --> 00:25:56,306 -அம்மா இருக்கச் சொன்னார்... -அதைக் கேட்டேன், சாரா. 301 00:25:57,641 --> 00:25:59,268 சத்தியமாக நான் வந்துவிடுவேன். 302 00:26:24,334 --> 00:26:26,670 -ஹேய். யாருக்கு இன்னொன்று வேண்டும்? -எனக்கு. 303 00:27:09,880 --> 00:27:11,924 இப்போது. இப்போது போ. 304 00:27:46,208 --> 00:27:48,126 ஹேய், சிறுவனே! அதை என்ன செய்கிறாய்? 305 00:28:00,264 --> 00:28:01,265 அம்மா. 306 00:28:03,559 --> 00:28:04,560 அம்மா. 307 00:28:12,526 --> 00:28:13,944 -ஹேய், ஹலோ. -அம்மா, போகாதீர்கள்! 308 00:28:13,944 --> 00:28:15,946 மன்னிக்கவும். நான்... நான் அவனுடைய அம்மா. 309 00:28:15,946 --> 00:28:18,198 எங்களுடைய எரிவாயு தீர்ந்துவிட்டது. 310 00:28:18,198 --> 00:28:20,450 அடுத்த எரிவாயு நிலையம் பற்றி விசாரிக்க கடைக்குச் சென்றேன். 311 00:28:20,450 --> 00:28:26,290 அவன் தெளிவாக துடுக்கான, முட்டாள்தனமான ஒன்றைச் செய்தான், ஆனால் அவன் ஒரு சிறுவன், 312 00:28:26,290 --> 00:28:27,791 அதோடு நாங்கள் வீட்டிலிருந்து வெகு தொலைவில் இருக்கிறோம். 313 00:28:28,458 --> 00:28:30,043 சாம், கேன்களை கீழே வை. 314 00:28:31,545 --> 00:28:34,882 நம்மை பாதுகாப்பாக வைத்திருக்கும் இந்த நல்லவர்களிடம் அவற்றைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, 315 00:28:34,882 --> 00:28:36,216 மன்னிப்பு கேள். 316 00:28:36,216 --> 00:28:37,301 என்னை மன்னித்துவிடுங்கள். 317 00:28:37,301 --> 00:28:38,802 பாருங்கள், மன்னிப்பு கேட்டுவிட்டான். 318 00:28:39,553 --> 00:28:44,099 பிள்ளைகள் தவறு செய்வார்கள், ஆனால் உறுதியாக சொல்கிறேன், இதை மீண்டும் செய்ய மாட்டான். 319 00:28:44,099 --> 00:28:46,560 நீங்கள் மூவ்மென்டைச் சேர்ந்தவர்கள் இல்லைதானே? 320 00:28:47,060 --> 00:28:48,145 என்ன? 321 00:28:48,645 --> 00:28:52,274 எதைப் பற்றி பேசுகிறீர்கள் என்று தெரியவில்லை. நாங்கள் ஒரு குடும்பம். அவன் ஒரு சிறுவன். 322 00:28:52,774 --> 00:28:54,776 எனவே காரை சோதனை செய்வதை பொருட்படுத்த மாட்டீர்கள். 323 00:28:54,776 --> 00:28:56,862 நீங்கள் சொன்னது போல, மக்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது எங்கள் வேலை. 324 00:28:58,447 --> 00:29:00,032 நீங்கள் குழந்தைகளை பயமுறுத்தப் போகிறீர்கள். 325 00:29:00,032 --> 00:29:02,993 அரசு சொத்தை திருட முயல்வதற்கு முன் இதைப் பற்றி உங்கள் மகன் யோசித்திருக்க வேண்டும், 326 00:29:02,993 --> 00:29:04,077 மேடம். 327 00:29:05,579 --> 00:29:06,914 -கைகளை உயர்த்துங்கள். -என்ன? 328 00:29:06,914 --> 00:29:09,666 ஆயுதம் இருக்கிறதா என்று சோதிக்க கைகளை உயர்த்தச் சொன்னேன். 329 00:29:09,666 --> 00:29:11,919 -நான் ஒரு அம்மா. -நாங்கள் பார்த்ததை கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். 330 00:29:11,919 --> 00:29:15,380 -இல்லை, மாட்டேன். -துப்பாக்கி! இங்கே ஒரு துப்பாக்கி இருக்கிறது. 331 00:29:20,093 --> 00:29:21,887 -அவர்களின் காரில் தேடு. -சரி, சார். 332 00:29:22,471 --> 00:29:25,015 அந்த துப்பாக்கி என் குடும்பத்தைப் பாதுகாப்பதற்காக. 333 00:29:25,015 --> 00:29:26,266 தயவுசெய்து, எங்களை விடுங்கள். 334 00:29:26,266 --> 00:29:28,060 -சாம், மன்னிப்பு கேள். -மன்னித்துவிடுங்கள். 335 00:29:28,060 --> 00:29:29,811 -அவன் ஏற்கனவே கேட்டுவிட்டான். -வெறும்... 336 00:29:31,021 --> 00:29:32,147 -அம்மா! -ஹேய்! 337 00:29:32,147 --> 00:29:34,316 -அம்மா! -அவளைத் தொடாதே. அவளைத் தொடாதே! 338 00:29:34,316 --> 00:29:37,152 கேளுங்கள், துப்பாக்கியை எடுத்துக்கொள்ளுங்கள். வைத்துக்கொள்ளுங்கள், சரியா? 339 00:29:37,152 --> 00:29:38,612 எங்களை போக விடுங்கள், கெஞ்சிக் கேட்கிறேன். 340 00:29:38,612 --> 00:29:40,697 நாங்கள் பிழைக்க முயற்சிக்கும் ஒரு குடும்பம்! 341 00:29:41,198 --> 00:29:43,742 மன்னித்துவிடுங்கள். இது எல்லாம் என் தவறு. தயவுசெய்து... மன்னித்துவிடுங்கள். 342 00:29:43,742 --> 00:29:45,953 -கேப்டன்! -தயவுசெய்து, எங்களை காயப்படுத்தாதீர்கள். 343 00:29:45,953 --> 00:29:47,663 எங்களை போகவிடுங்கள். சரியா? 344 00:29:47,663 --> 00:29:48,789 தயவுசெய்து நிறுத்துங்கள். 345 00:29:49,456 --> 00:29:50,457 தயவுசெய்து. 346 00:29:55,462 --> 00:29:57,339 -இது என்ன? -எனக்குத் தெரியாது. 347 00:30:01,093 --> 00:30:02,261 உன் பெயர் என்ன? 348 00:30:04,680 --> 00:30:06,056 ஆனா லூயிஸ். 349 00:30:09,101 --> 00:30:10,853 எலெக்ட்ரோமெக்னடிக் ஃபீல்ட் மீட்டரை எடு. 350 00:30:11,395 --> 00:30:12,396 சரி, சார். 351 00:30:14,439 --> 00:30:16,692 இப்போதெல்லாம் நாங்கள் நிறைய விஷயங்களைத் தேடுகிறோம். 352 00:30:16,692 --> 00:30:19,945 ஆனால் ஏலியன்களுக்கு எதிரான ஆயுதமாக இருக்கலாம் என்று அரசாங்கம் நினைக்கும் ஒன்றைக் கொண்ட 353 00:30:19,945 --> 00:30:21,238 ஒரு குடும்பம் அவற்றில் ஒன்று. 354 00:30:21,238 --> 00:30:23,365 எது பற்றி பேசுகிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. 355 00:30:23,866 --> 00:30:25,492 இது வெறும் உலோகத் துண்டு. 356 00:30:33,584 --> 00:30:34,793 கேப்டன். 357 00:30:37,921 --> 00:30:40,340 விசாரணைக்காக தேடப்படுபவர் 358 00:30:40,340 --> 00:30:41,633 அனீஷா. 359 00:30:44,553 --> 00:30:45,554 அனீஷா மாலிக். 360 00:30:50,601 --> 00:30:53,145 அவர்களையும் அவர்களுடைய எல்லா பொருட்களையும் வண்டியில் ஏற்று. 361 00:30:54,396 --> 00:30:55,939 சரி. அவளை மென்மையாக கையாளுங்கள். 362 00:31:06,116 --> 00:31:07,326 இங்கே வா. 363 00:31:17,169 --> 00:31:18,462 வாருங்கள்! 364 00:31:18,462 --> 00:31:19,630 ஹலோ. 365 00:31:19,630 --> 00:31:21,423 புறப்படலாம்! 366 00:31:21,423 --> 00:31:23,634 போகலாம். சீக்கிரம். 367 00:31:23,634 --> 00:31:25,302 நீங்கள் பயப்படத் தேவையில்லை. 368 00:31:25,302 --> 00:31:27,054 போகலாம். போகலாம்! 369 00:31:27,054 --> 00:31:28,430 குறைந்தபட்சம் என்னிடம் அல்ல. 370 00:31:28,931 --> 00:31:30,140 போகலாம்! 371 00:31:35,437 --> 00:31:37,564 அவள் சோதனையில் தோல்வியடைந்தாள். 372 00:31:37,564 --> 00:31:38,649 மோசமாக. 373 00:31:39,441 --> 00:31:41,276 அவள் எளிதாக உணர்ச்சிவசப்படுகிறாள், 374 00:31:41,276 --> 00:31:44,112 வினாடிகளில் எதிர்வினையாற்றுகிறாள், 375 00:31:44,613 --> 00:31:47,032 அவள் பதில் சொல்ல எடுத்துக்கொள்ளும் நேரம் நான் பார்த்ததிலேயே மிக விரைவானது. 376 00:31:47,032 --> 00:31:48,867 அதோடு மிகவும் பொறுப்பற்றவள். 377 00:31:48,867 --> 00:31:52,329 சரி, இந்த கட்டத்தில் கொஞ்சம் பொறுப்பற்ற தன்மையைப் பயன்படுத்தலாம் என்று நினைக்கிறேன். 378 00:31:53,956 --> 00:31:56,583 முன்னேற்றத்திற்கு மாற்று சிந்தனை தேவை. 379 00:31:57,918 --> 00:31:59,211 அப்படி இருக்கட்டும், 380 00:31:59,211 --> 00:32:02,673 உள்ளே சென்ற நிலையான உடல்நிலை கொண்ட விஞ்ஞானிகளுக்கு என்ன நடந்தது என்று தெரியும். 381 00:32:02,673 --> 00:32:04,383 ஆம், அவர்கள் எதுவும் கண்டுபிடிக்கவில்லை. 382 00:32:04,925 --> 00:32:06,760 அவர்களுக்கு என்ன நடந்தது என்று நான் பேசுகிறேன். 383 00:32:06,760 --> 00:32:08,387 நீ எதைப் பற்றி பேசுகிறாய் என்று தெரியும். 384 00:32:09,555 --> 00:32:12,516 ஆனால் அவள் மனித இனத்தை காப்பாற்ற எனக்கான சிறந்த வாய்ப்பாக இருக்கலாம். 385 00:32:13,350 --> 00:32:14,434 உன்னுடைய சிறந்த வாய்ப்பா? 386 00:32:15,227 --> 00:32:16,353 நல்லது. 387 00:32:16,353 --> 00:32:19,356 என் மனதை பகுப்பாய்வு செய்ய நான் உனக்கு சம்பளம் கொடுக்கவில்லை. 388 00:32:19,356 --> 00:32:20,732 எனவே அதை உன் வேலையில் காட்டு. 389 00:32:22,067 --> 00:32:25,404 பார், விண்வெளியில் இருப்பதற்கு பதிலாக அது அமேசானில் இருப்பதற்கு 390 00:32:26,029 --> 00:32:27,322 காரணம் அவள்தான். 391 00:32:27,322 --> 00:32:30,075 உன்னைப் போல அவள் அதை வெற்றியாகப் பார்க்கவில்லை. 392 00:32:30,868 --> 00:32:34,413 நிகில், அவள் வெறுமனே உயிரைக் காப்பாற்ற மட்டும் களத்தில் இருக்கவில்லை. 393 00:32:35,205 --> 00:32:37,541 ஒரு உயிரை எடுத்ததற்கு பிராயச்சித்தமாக அவள் அதைச் செய்தாள். 394 00:32:39,209 --> 00:32:42,171 அவள் கோபமும் குற்ற உணர்வும் நிறைந்த இடத்திலிருந்து செயல்படுகிறாள், 395 00:32:42,171 --> 00:32:44,548 இவை இரண்டு மிகவும் நிலையற்ற ஊக்கிகள். 396 00:32:44,548 --> 00:32:48,302 அவளை அந்த விண்கப்பலில் விட்டால் எப்படி செயல்படுவாள் அல்லது எதிர்வினையாற்றுவாள் என கணிக்க வழியில்லை. 397 00:32:49,720 --> 00:32:52,681 அவளைப் பற்றி உனக்கு அக்கறை இல்லையா? பணியைப் பற்றி யோசி. 398 00:32:53,932 --> 00:32:55,058 உன் பணியைப் பற்றி. 399 00:32:57,311 --> 00:32:59,104 சரி, அவளிடம் சொல்லலாம். 400 00:33:25,631 --> 00:33:29,426 எனவே, நீ சோதனைகளில் தோற்றதாக டாக்டர் காஸ்டிலோ சொன்னார். 401 00:33:29,426 --> 00:33:31,678 குறைந்தபட்சம் நீ முடிக்கவாவது நினைத்தாய். 402 00:33:31,678 --> 00:33:35,349 விண்கப்பலின் உள்ளே செல்லும் அளவுக்கு நீ உளவியல் ரீதியில் நிலையாக இல்லை என்று சொல்கிறார், 403 00:33:35,349 --> 00:33:38,310 அதனால்தான் டாக்டர் காஸ்டிலோ உன்னோடு விண்கப்பலுக்குள் வருவார். 404 00:33:38,310 --> 00:33:39,770 -என்ன? -இல்லை. 405 00:33:39,770 --> 00:33:42,606 ஆம். உங்கள் இருவருக்கும் ஆரம்பத்தில் கருத்து வேறுபாடு இருந்தது எனக்குத் தெரியும். 406 00:33:42,606 --> 00:33:44,107 உங்களுக்குள் ஒத்துப் போகவில்லை, இல்லையா? 407 00:33:44,107 --> 00:33:48,111 எனவே நீங்கள் எல்லாவற்றையும் பற்றி நன்றாக உணரமால் போகலாம், 408 00:33:48,111 --> 00:33:51,198 ஆனால் மக்களுடைய உணர்வுகளுக்கு அக்கறை காட்டக் கூடாது என்பதில் நம்பிக்கை கொண்டவன் நான். 409 00:33:51,698 --> 00:33:53,534 உணர்வுகள் வேலையை கெடுக்கும். 410 00:33:54,159 --> 00:33:56,954 அது உண்மையில் நம் மனித இனத்தின் மிகப்பெரிய தோல்விகளில் ஒன்று, 411 00:33:57,454 --> 00:33:59,873 அதனால்தான் இந்த போரில் தோற்கிறோமோ என்னவோ. 412 00:33:59,873 --> 00:34:03,752 எனவே, அதை மனதில் கொண்டு, கேட்கிறேன்... உண்மையில், உணர்வுகளை ஒதுக்கி வையுங்கள் என்று 413 00:34:03,752 --> 00:34:07,798 உங்கள் இருவரிடமும் சொல்கிறேன். 414 00:34:08,422 --> 00:34:13,512 மீண்டும் ஏதாவது மாயாஜாலம் செய்ய முடியுமா என்று பார்க்க அந்த விண்கப்பலுக்குள் செல். 415 00:34:15,138 --> 00:34:17,056 நீ அவற்றின் மனதில் ஒருமுறை நுழைந்தாய். 416 00:34:18,100 --> 00:34:19,851 நீ அதை மீண்டும் செய்ய முடியும் என்று நம்புகிறேன். 417 00:34:19,851 --> 00:34:25,107 அந்த நம்பிக்கைக்கு உதவியாக, உன் மனதை கண்காணிக்க மாயா அங்கே இருப்பார். 418 00:34:25,607 --> 00:34:26,692 எனக்கு கண்காணிப்பாளர் தேவையில்லை. 419 00:34:26,692 --> 00:34:27,775 ஆம், உனக்குத் தேவை. 420 00:34:28,485 --> 00:34:31,822 மாயாவின் வேலை விண்கப்பலின் உள்ளே உள்ள நினைவின் தடயங்களை வரைபடமாக்குவது. 421 00:34:31,822 --> 00:34:35,826 அவர் உன் நினைவை வரைபடமாக்கி, நீ நிலையாக இருப்பதை உறுதிசெய்ய முடியும். 422 00:34:35,826 --> 00:34:37,536 அல்லது மிகவும் நிலையானது அல்ல என்று 423 00:34:37,536 --> 00:34:40,205 நாங்கள் உறுதிப்படுத்திய உன் இயல்பான மனநிலையில் இருக்கிறாயா என்று. 424 00:34:40,205 --> 00:34:41,665 அருமை. அதை ஒப்புக்கொள்வோம். 425 00:34:41,665 --> 00:34:44,668 எனவே, உலகம் அழிந்துகொண்டிருக்கும்போது நாம் இங்கே நிற்க வேண்டுமா? 426 00:34:45,168 --> 00:34:48,213 அல்லது அதைக் காப்பாற்ற உதவ உனக்கு சூட் அணிவித்து தயார்படுத்த வேண்டுமா? 427 00:35:00,058 --> 00:35:01,435 பார்த்து நட. 428 00:35:11,987 --> 00:35:13,906 இந்த சூட் உன் பயோமெட்ரிக்கோடு ஒன்றிணைக்கப்பட்டிருக்கிறது. 429 00:35:14,907 --> 00:35:16,825 நான் எப்பொழுதும் உன் உடலின் செயல்பாடுகளை கண்காணிப்பேன். 430 00:35:18,535 --> 00:35:21,455 ஏதாவது செயலிழப்பைக் கண்டறிந்தால், பணியை நிறுத்திவிடு. 431 00:35:54,780 --> 00:35:57,574 செய்தி வேகமாக பரவுகிறது. நீ உள்ளே செல்லப் போவது அவர்களுக்குத் தெரியும். 432 00:36:00,494 --> 00:36:01,537 மாயா. 433 00:36:02,329 --> 00:36:03,830 நீ நலமா? 434 00:36:03,830 --> 00:36:05,666 நாங்கள் உன் ஆய்வகத்திற்கு மாதிரிகளை அனுப்பிவிட்டோம், சரியா? 435 00:36:05,666 --> 00:36:06,750 நன்றி. 436 00:36:06,750 --> 00:36:09,211 மிட்சுகி யமடோ, எங்கள் முன்னணி வேதியியலாளர், 437 00:36:09,211 --> 00:36:11,046 மாதிரி சேகரிப்பாளரான டோமஸை சந்தி. 438 00:36:11,046 --> 00:36:13,006 விண்கப்பலுக்கு வரவேற்கிறேன். 439 00:36:16,385 --> 00:36:18,762 சுவர்களில் நுண்ணிய நரம்பியல் பாதைகள் உள்ளன. 440 00:36:19,263 --> 00:36:21,431 கப்பல் ஒரு செயல்படும் உறுப்பு போன்றது, 441 00:36:22,641 --> 00:36:24,726 அதனால்தான் அது எவ்வாறு தரவுகளை கடத்துகிறது என்பதை நாம் ஆராயலாம். 442 00:36:24,726 --> 00:36:26,311 அவள் உள்ளே போகிறாளா? 443 00:36:26,311 --> 00:36:28,438 நிகில் அதற்கு ஒப்புதல் அளித்தார். 444 00:36:30,357 --> 00:36:33,694 இது அவருடைய உலகம், நாம் அதில் வாழ்ந்தாலும் செத்தாலும். 445 00:36:34,444 --> 00:36:35,696 இந்த வழியாக. 446 00:36:58,343 --> 00:36:59,511 இவை என்ன? 447 00:37:02,306 --> 00:37:03,557 டிராப்-ஷிப்கள். 448 00:37:04,183 --> 00:37:06,727 அப்படித்தான் ஏலியன்களின் முதல் அலை பூமிக்கு வந்தது. 449 00:37:07,811 --> 00:37:08,812 கண்ணுக்குத் தெரியாமல். 450 00:37:09,730 --> 00:37:11,523 அதனால் அவை வருவதை நாம் பார்க்கவில்லை. 451 00:37:12,733 --> 00:37:14,484 இன்னும் அவை வருவதை நம்மால் பார்க்க முடியவில்லை. 452 00:37:17,863 --> 00:37:19,615 அதற்கு நீ உதவுவாய் என்று நம்புகிறோம். 453 00:37:37,007 --> 00:37:38,634 என் பெயர் கிளார்க். 454 00:37:43,889 --> 00:37:45,057 உன் பெயர்? 455 00:37:45,557 --> 00:37:47,851 நாங்கள் அந்நியர்களிடம் பேசுவதில்லை. 456 00:37:48,435 --> 00:37:50,604 நான் அந்நியன் இல்லை. என் பெயரைத்தான் சொன்னேனே. 457 00:37:57,528 --> 00:37:58,862 நம்மை எங்கே கொண்டு போகிறார்கள்? 458 00:38:02,199 --> 00:38:04,117 நீண்ட தூரம் இல்லை, அதை என்னால் சொல்ல முடியும். 459 00:38:07,663 --> 00:38:09,748 கைவிலங்கோடு மிகவும் அமைதியாக இருக்கிறீர்கள். 460 00:38:10,707 --> 00:38:13,085 தப்பிக்க கடினமான சிறை உங்கள் சொந்த மனம்தான். 461 00:38:17,130 --> 00:38:19,007 மன்னிக்கவும். நான்... 462 00:38:19,925 --> 00:38:21,844 முந்தைய காலங்களில் ஆங்கில ஆசிரியராக இருந்தேன். 463 00:38:22,719 --> 00:38:23,720 அம்மா? 464 00:38:25,389 --> 00:38:26,682 இப்போது என்னவாக இருக்கிறீர்கள்? 465 00:38:26,682 --> 00:38:27,766 உன்னைப் போலத்தான். 466 00:38:28,308 --> 00:38:29,351 ஒரு உயிர்பிழைப்பவன். 467 00:38:30,519 --> 00:38:33,146 நீங்கள் அப்படியே இருக்க விரும்பினால், என்னை நம்ப பரிந்துரைக்கிறேன். 468 00:38:36,733 --> 00:38:37,860 ஏன்? 469 00:38:37,860 --> 00:38:40,737 நம்பிக்கை என்பதற்கு அர்த்தம் நீ அந்த வார்த்தையை கைவிட வேண்டும். 470 00:38:42,906 --> 00:38:45,200 ஆனால் அதற்கு பதில்... 471 00:38:47,369 --> 00:38:48,954 ஏனென்றால் நான் உண்மையில் இங்கு கைதி இல்லை. 472 00:38:54,126 --> 00:38:55,836 எல்லாம் தோன்றுவது போல இருப்பதில்லை. 473 00:39:16,231 --> 00:39:17,774 வா. அவள் காயப்பட்டிருக்கிறாள். 474 00:39:17,774 --> 00:39:20,485 -ஹேய், நீ நலமா? -ஐயோ, உனக்கு என்ன ஆனது? 475 00:39:20,485 --> 00:39:22,237 உனக்கு ஒன்றும் ஆகாது. 476 00:39:24,281 --> 00:39:25,282 பரவாயில்லை. 477 00:39:29,494 --> 00:39:30,913 -ஹேய். ஹேய்! -சரி. சரி. 478 00:39:30,913 --> 00:39:33,415 -நீ படு. கீழே படு! -ஹேய்! 479 00:39:34,917 --> 00:39:37,419 -டிரக்கிலிருந்து இறங்கு! -தரையில் படு! 480 00:39:38,837 --> 00:39:40,005 என்ன நடக்கிறது? 481 00:39:40,005 --> 00:39:41,924 அமைதியாக இருங்கள், என் பின்னால் இருங்கள். 482 00:39:45,844 --> 00:39:50,349 -சரி. அப்படியே இருங்கள்! -தரையில் படு, கீழே பார்! 483 00:39:51,767 --> 00:39:53,894 ஹேய், ஜிப் டைகளை கொடு. 484 00:39:56,230 --> 00:39:58,357 அதைச் செய்! இப்போதே! 485 00:40:01,235 --> 00:40:02,778 நான் இருக்கிறேன். உனக்கு ஒன்றும் ஆகாது. 486 00:40:07,741 --> 00:40:09,201 காதுகளை மூடிக்கொள்ளுங்கள். 487 00:40:15,207 --> 00:40:17,626 கவனமாக இருங்கள்! வெடிக்கப் போகிறது! 488 00:40:25,551 --> 00:40:27,261 எங்களோடு வாருங்கள். வாருங்கள். 489 00:40:29,513 --> 00:40:30,597 என்னை நம்புங்கள். 490 00:40:43,151 --> 00:40:44,152 தாக்கப்பட்டதை தெரிவித்துவிட்டார்கள்! 491 00:40:47,281 --> 00:40:48,574 நாம் வெளியேற வேண்டும்! 492 00:40:50,450 --> 00:40:51,451 கடைசி வாய்ப்பு. 493 00:40:52,578 --> 00:40:53,787 அம்மா. 494 00:40:56,164 --> 00:40:58,125 அவர்கள் எங்களிடமிருந்து எடுத்த பொருட்கள் எங்களுக்கு வேண்டும். 495 00:40:58,125 --> 00:41:00,002 அவர்களின் பொருட்களை எடுங்கள். எல்லாவற்றையும். 496 00:41:00,002 --> 00:41:01,420 வாருங்கள். 497 00:41:06,633 --> 00:41:09,928 இராணுவத்தின் பொருட்களை எடுங்கள்! டிரக்கில் ஏறுங்கள். 498 00:41:09,928 --> 00:41:11,805 -இறங்கு. -சீக்கிரம்! 499 00:41:11,805 --> 00:41:14,266 சரி, போகலாம். போகலாம்! 500 00:41:21,481 --> 00:41:22,774 அவரவர் இடத்தில் இருங்கள்! 501 00:41:26,111 --> 00:41:28,030 ஒரே எதிரிக்கு எதிராக நாம் போரிடுகிறோம். 502 00:41:28,697 --> 00:41:31,909 நீங்கள் அப்படிச் செயல்படத் தொடங்குங்கள், ஒருவேளை அது நாம் வெல்லக் கூடிய போராக இருக்கலாம். 503 00:41:32,701 --> 00:41:33,994 பைகளை எடுங்கள்! 504 00:41:33,994 --> 00:41:36,079 மேலங்கிகளை விடுங்கள். கதகதப்பாக வைத்திருக்கும். 505 00:41:39,333 --> 00:41:41,752 போகலாம்! 506 00:41:41,752 --> 00:41:43,587 சரி, அங்கே இருக்கும் ஒன்றுக்கு. 507 00:41:45,255 --> 00:41:46,632 இறுதி சோதனைகளை செய்யுங்கள். 508 00:41:48,634 --> 00:41:50,469 -சரி, போகலாம்! -வா! 509 00:41:54,348 --> 00:41:56,225 நல்ல வேலை செய்தீர்கள். போகலாம். 510 00:41:59,228 --> 00:42:00,229 சரி, போகலாம்! 511 00:42:00,229 --> 00:42:01,688 -ரைடர். -அப்பா. 512 00:42:02,731 --> 00:42:03,732 நல்ல வேலை செய்தீர்கள். 513 00:42:04,650 --> 00:42:06,026 இங்கே ஏற்றுங்கள். 514 00:42:06,902 --> 00:42:08,237 பேக் செய்யுங்கள். 515 00:42:08,237 --> 00:42:09,321 நீ நலமா? 516 00:42:09,321 --> 00:42:10,697 பேக் செய்யுங்கள்! போகலாம்! 517 00:42:10,697 --> 00:42:12,658 இது ஹெய்ன்ஸ் 57 கெட்சப். 518 00:42:20,958 --> 00:42:21,959 போகலாம்! 519 00:42:22,918 --> 00:42:23,919 நான் சொன்னது போல, 520 00:42:24,628 --> 00:42:26,171 எல்லாம் தோன்றுவது போல இருப்பதில்லை. 521 00:42:50,946 --> 00:42:52,030 இதோ. 522 00:43:11,300 --> 00:43:15,220 மாறுபாடு 523 00:43:19,850 --> 00:43:22,519 ஆம். கனடாவை விட பெரியது. 524 00:43:31,945 --> 00:43:32,946 நீ பார்த்தாயா? 525 00:43:37,743 --> 00:43:38,994 உங்களிடம் நேரலை வீடியோ இருக்கிறதா? 526 00:43:39,786 --> 00:43:41,914 இல்லை, அது சிதைந்த வீடியோ இணைப்பு. 527 00:43:48,378 --> 00:43:49,630 அங்கே என்ன இருக்கிறது? 528 00:43:50,464 --> 00:43:52,299 மாபெரும் சக்தியின் மூலம். 529 00:43:53,300 --> 00:43:55,677 ஆனால் என்னவென்று கண்டுபிடிக்க நாம் அவளைக் கடந்து போக முடியவில்லை. 530 00:43:57,513 --> 00:43:58,805 அவளா? 531 00:44:02,351 --> 00:44:03,477 என்னைப் பின்தொடரு. 532 00:44:39,221 --> 00:44:42,307 நீ தெரிந்துகொள்ள வேண்டும், அந்த அறைக்குள் நுழைந்த எல்லோருக்கும் நினைவாற்றல் இழப்பு ஏற்பட்டது. 533 00:44:42,891 --> 00:44:46,395 கடைசியாக உள்ளே சென்ற நபருக்கு கடுமையான நரம்பியல் பாதிப்பு ஏற்பட்டது. 534 00:44:48,230 --> 00:44:49,731 என்ன வகையான பாதிப்பு? 535 00:44:50,274 --> 00:44:51,400 இன்னும் எனக்குத் தெரியாது. 536 00:44:52,109 --> 00:44:53,944 அவருக்கு சுயநினைவு வரவில்லை. 537 00:45:00,075 --> 00:45:02,119 அந்த சோதனையின் மூலம் நான் உன்னைக் காயப்படுத்த முயற்சிக்கவில்லை. 538 00:45:03,287 --> 00:45:04,788 நான் உனக்கு உதவ முயன்றேன். 539 00:45:13,213 --> 00:45:14,756 நிச்சயமாக இதைச் செய்ய விரும்புகிறாயா? 540 00:45:16,800 --> 00:45:17,801 ஆம். 541 00:45:19,845 --> 00:45:21,471 விதிமுறைப்படி 15 நிமிடங்களில் உள்ளே சென்று, வெளியே வந்துவிட வேண்டும். 542 00:45:21,471 --> 00:45:23,515 ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கும் மனரீதியான செயல்பாடு சோதிக்கப்படும். 543 00:45:24,850 --> 00:45:25,851 புரிந்தது. 544 00:45:26,435 --> 00:45:28,729 உன் அம்மாவின் முகத்தையோ அல்லது உனக்குப் பிடித்த உணவின் சுவையையோ 545 00:45:28,729 --> 00:45:30,814 நீ மறக்க மாட்டாய் என்று என்னால் உத்தரவாதம் அளிக்க முடியாது. 546 00:45:31,315 --> 00:45:32,441 எனக்குப் புரிந்தது என்றேன். 547 00:45:34,359 --> 00:45:35,652 சரி. 548 00:45:46,788 --> 00:45:47,873 இணைக்கும் கயிறு. 549 00:45:48,874 --> 00:45:50,459 கயிறு இணைக்கப்பட்டது. 550 00:45:50,459 --> 00:45:53,295 அவசரமாக வெளியே வரவேண்டும் என்றால் இதை அழுத்து. 551 00:45:53,295 --> 00:45:54,838 உன்னால் பேச முடியாத பட்சத்தில். 552 00:45:57,382 --> 00:45:58,550 ஹெல்மெட் அணிந்துகொள். 553 00:46:19,363 --> 00:46:20,822 காட்சி நேரம். 554 00:46:29,289 --> 00:46:31,291 நாம் எங்கே போகிறோம் என்று ஏன் சொல்லவில்லை? 555 00:46:31,291 --> 00:46:34,545 ஏற்கனவே சொன்னேனே. பாதுகாப்பான, கதகதப்பான ஒரு இடத்துக்கு. 556 00:46:35,337 --> 00:46:36,588 கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு தூங்க. 557 00:46:37,881 --> 00:46:38,882 பிறகு நகர்ந்துகொண்டே இருப்போம். 558 00:46:38,882 --> 00:46:41,260 நன்றி, ஆனால் நாங்கள் எங்கள் பொருட்களை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவோம். 559 00:46:42,052 --> 00:46:43,512 அது புத்திசாலித்தனமானது இல்லை. 560 00:46:44,304 --> 00:46:46,640 அப்போது மீண்டும், நீங்கள் அந்த இராணுவ வண்டியின் பின்புறத்தில் இருப்பீர்கள். 561 00:46:47,140 --> 00:46:48,517 நீங்கள் யாரென்று எனக்குத் தெரியும். 562 00:46:50,602 --> 00:46:52,145 ஆரஞ்சு நிறங்கள். 563 00:46:53,564 --> 00:46:55,607 உங்களை நீங்கள் "மூவ்மென்ட்" என்று அழைக்கிறீர்கள். 564 00:46:57,067 --> 00:46:58,610 -அராஜகவாதிகள். -சீர்திருத்தவாதிகள். 565 00:46:58,610 --> 00:47:01,530 எங்களுக்கு எந்த பிரச்சினையும் வேண்டாம். எங்கள் பொருட்கள் மட்டும் போதும். 566 00:47:04,449 --> 00:47:06,910 -அதாவது, வெளியே குளிராக இருக்கிறது, அம்மா. -பரவாயில்லை. 567 00:47:08,412 --> 00:47:09,872 அம்மா, எனக்குப் பசிக்கிறது. 568 00:47:10,747 --> 00:47:12,165 வந்துவிட்டோம். 569 00:47:21,383 --> 00:47:22,801 வாயில்! 570 00:47:27,681 --> 00:47:28,891 போகலாம்! 571 00:47:43,322 --> 00:47:44,531 நிறுத்துங்கள்! 572 00:48:02,216 --> 00:48:03,884 பல மைல்கள் தூரத்துக்கு இது மட்டுமே கதகதப்பான இடம். 573 00:48:04,885 --> 00:48:07,304 ஏனென்றால் அடுத்த 50 மைல்களை நாங்கள் தேடிப் பார்த்துவிட்டோம். 574 00:48:07,304 --> 00:48:08,847 அதைத்தான் நாங்கள் செய்கிறோம். 575 00:48:09,348 --> 00:48:12,100 மக்களுக்கு உதவுகிறோம். அவர்களை பாதுகாப்பாக வைத்திருக்கிறோம். 576 00:48:13,769 --> 00:48:15,145 உங்களைப் போன்றவர்களை. 577 00:48:16,063 --> 00:48:18,482 இதோ. உங்களுடைய பொருட்கள் எல்லாம். 578 00:48:21,527 --> 00:48:23,946 -நன்றி. -நீங்கள் நன்றாக தூங்கலாம், 579 00:48:23,946 --> 00:48:27,282 காலையில் உங்களை அருகில் உள்ள அகதிகள் முகாமுக்கு கூட்டிச் செல்கிறோம். என்ன நினைக்கிறீர்கள்? 580 00:48:27,282 --> 00:48:29,117 அது ஹாட் சாக்லேட்டா? 581 00:48:29,618 --> 00:48:31,787 ஆம், இது ஹாட் சாக்லேட்தான். உனக்கு கொஞ்சம் வேண்டுமா? 582 00:48:38,585 --> 00:48:42,047 யாருடனும் சேராமல் இருப்பது பாதுகாப்பானது என்று நினைப்பவர்களில் நீயும் ஒருவள். 583 00:48:42,047 --> 00:48:43,507 உண்மை அதற்கு நேர்மாறானது. 584 00:48:45,384 --> 00:48:47,594 தொடர்புகள் மட்டுமே நம்மை வாழ வைக்கின்றன. 585 00:48:57,312 --> 00:48:59,523 கொஞ்சம் ஹாட் சாக்லேட் சாப்பிடு. போ. 586 00:49:40,314 --> 00:49:41,523 இதோ. 587 00:50:03,545 --> 00:50:05,297 யமடோ, உன் நிலையை சொல். 588 00:50:05,297 --> 00:50:09,343 முதல் தொலைபேசி எண். கல்லூரி அறை தோழி. என் கண்கள் என்ன நிறம்? 589 00:50:10,427 --> 00:50:15,015 02-555-0876. 590 00:50:15,015 --> 00:50:16,350 இச்சிகோ. பச்சை. 591 00:50:16,350 --> 00:50:19,061 நல்லது. நீ அருமையாக இருக்கிறாய். 592 00:50:20,646 --> 00:50:23,065 விண்கப்பல் முழுவதும் நரம்பியல் செயல்பாடுகள் கண்காணிக்கப்படுகிறது. 593 00:50:23,774 --> 00:50:27,402 நீ கேட்ட எல்லா அலைவரிசைகளும் உன் கையில் இருக்கும் கருவியில் ஏற்றப்பட்டிருக்கிறது. 594 00:50:46,755 --> 00:50:48,173 அது அவளுக்கு பதிலளிக்கிறது. 595 00:50:51,134 --> 00:50:52,135 இது நம்ப முடியாதது. 596 00:50:54,096 --> 00:50:56,473 என்ன நடக்கிறது? 597 00:51:43,187 --> 00:51:44,271 என்ன நடக்கிறது? 598 00:51:46,398 --> 00:51:48,525 -அவளை வெளியே இழுக்க வேண்டிய நேரம் இது. -இல்லை. 599 00:51:48,525 --> 00:51:50,402 பதினைந்து நிமிடங்கள் முடிந்துவிட்டது. அதுதான் விதி. 600 00:51:50,903 --> 00:51:52,362 விதிகளை விட்டுத்தள்ளு. 601 00:51:52,905 --> 00:51:56,033 இப்போது இந்த இணைப்பை துண்டித்துவிட்டால், அதை மீண்டும் பெற முடியாமல் போகலாம். 602 00:51:56,033 --> 00:51:57,242 அது உனக்குத் தெரியாது. 603 00:51:57,242 --> 00:51:59,411 அவளை அங்கேயே விட்டால், அவளை திரும்பப் பெற முடியாமல் போகலாம். 604 00:51:59,411 --> 00:52:01,038 ஆம், இது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆபத்து. 605 00:52:01,747 --> 00:52:05,042 -அது உனக்கான ஆபத்து அல்ல. -இந்த இணைப்பு துண்டிக்கும் வரை அல்லது அவள் 606 00:52:05,542 --> 00:52:06,710 துண்டிக்கும் வரை அங்கே இருப்பாள். 607 00:52:21,308 --> 00:52:23,727 இதை முயற்சிப்போம். 608 00:53:15,153 --> 00:53:16,280 அது... 609 00:54:38,195 --> 00:54:39,321 லூக். 610 00:54:40,656 --> 00:54:41,657 லூக். 611 00:54:45,744 --> 00:54:46,954 லூக், என்ன ஆனது? 612 00:54:47,621 --> 00:54:48,956 அது கேட்கிறதா? 613 00:54:54,837 --> 00:54:56,338 என்ன? 614 00:54:57,965 --> 00:54:58,966 அந்த... 615 00:55:01,635 --> 00:55:02,761 ஹம்மிங் ஒலி. 616 00:55:32,875 --> 00:55:34,418 என்ன நடக்கிறது? 617 00:55:34,418 --> 00:55:36,128 இது சில நிமிடங்களுக்கு முன்பு தொடங்கியது. 618 00:55:36,128 --> 00:55:38,589 மற்றவை போலவே இதுவும் இன்னொரு அதிர்ச்சி என்று நினைத்தேன். 619 00:55:38,589 --> 00:55:40,048 ஆனால் மற்றவை சீரற்றவை. 620 00:55:55,439 --> 00:55:58,233 இந்த அதிர்ச்சி ஒரு சீரான முறையில் இருக்கிறது. அதற்கு ஒரு மாதிரி இருக்கிறது. 621 00:56:00,944 --> 00:56:03,322 இந்த முறை வித்தியாசமாக உள்ளது. 622 00:56:03,989 --> 00:56:06,366 ஏதோ மாறிவிட்டது. 623 00:57:46,925 --> 00:57:48,927 வசனத் தமிழாக்கம் அருண்குமார்