1 00:01:21,331 --> 00:01:23,542 ஹேய். நான் இங்கே இருக்கிறேன். 2 00:01:24,710 --> 00:01:26,170 இன்னமும் இங்கேதான் இருக்கிறேன். 3 00:01:35,262 --> 00:01:37,181 நான் உனக்கு உதவுகிறேன். 4 00:02:08,753 --> 00:02:10,088 ஈலை. 5 00:02:11,673 --> 00:02:12,674 ஈலை. 6 00:02:15,928 --> 00:02:17,804 என்ன செய்திருக்கிறீர்கள்? 7 00:02:23,060 --> 00:02:24,269 டாக்டர் ஆட்லர். 8 00:02:27,731 --> 00:02:29,316 பரவாயில்லை, வேண்டாம், டெனிஸ். நன்றி. 9 00:02:30,317 --> 00:02:32,026 சம்பவ இடத்திலேயே அவன் சுயநினைவை இழந்துவிட்டான், 10 00:02:32,027 --> 00:02:36,156 அவனால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாததால், மயக்க மருந்து தர வேண்டியிருந்தது. 11 00:02:36,657 --> 00:02:39,909 அவன் ஏதாவது அந்நிய பாஷையில் பேசினானா? 12 00:02:39,910 --> 00:02:41,494 எனக்குத் தெரிந்து இல்லை. 13 00:02:41,495 --> 00:02:43,871 நல்லது. நீங்கள் இங்கிருக்கிறீர்களே. அவன் எப்படி இருக்கிறான்? 14 00:02:43,872 --> 00:02:46,708 அவன் நலம்தான். இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறான். அவனுடன் டெனிஸ் இருக்கிறார். 15 00:02:47,709 --> 00:02:49,168 அவன் நேற்றிரவு இங்கு வந்தபோது நீயும் இங்கு இருந்தாயா? 16 00:02:49,169 --> 00:02:51,922 இல்லை. மருத்துவ உதவியாளர்கள் பள்ளியிலிருந்து நேராக அவசர சிகிச்சை பிரிவுக்கு அழைத்து வந்தனர். 17 00:02:53,131 --> 00:02:54,091 உங்களுக்கு ஒன்றும் இல்லையே? 18 00:02:55,050 --> 00:02:56,176 உங்கள் கைக்கு என்ன ஆச்சு? 19 00:02:58,262 --> 00:02:59,513 அவன் இதை வரைந்திருக்கிறான். 20 00:03:00,222 --> 00:03:01,931 அற்புதமாக இருக்குதானே? 21 00:03:01,932 --> 00:03:04,433 இதைப் பார்த்து பயமாக இருப்பதாகச் சொன்னான். 22 00:03:04,434 --> 00:03:05,519 அவன் உங்களிடம் பேசினானா? 23 00:03:06,270 --> 00:03:07,437 நேரடியாக இல்லை. இல்லை. 24 00:03:08,897 --> 00:03:10,566 ஆனால், டெனிஸுக்கு டச்சு மொழி தெரியுமா? 25 00:03:11,066 --> 00:03:12,067 டச்சு மொழியா? 26 00:03:13,235 --> 00:03:14,695 என்ன உளறுகிறீர்கள்? 27 00:03:15,279 --> 00:03:18,490 ஹேய், ஹேய். அவன் எழுந்துவிட்டான். 28 00:03:23,579 --> 00:03:24,413 நோவா. 29 00:03:25,455 --> 00:03:26,582 இப்போது எப்படி உணர்கிறாய்? 30 00:03:50,355 --> 00:03:52,106 நான் வீட்டிற்கு போக வேண்டும். 31 00:03:52,107 --> 00:03:54,193 செல்லமே, நீ பேசுகிறாய். 32 00:03:56,695 --> 00:03:59,572 நான் உறுதியாகச் சொல்கிறேன், கெய்ல், நேற்றிரவு நான் பேசியது அவனுக்கு புரிந்தது. 33 00:03:59,573 --> 00:04:01,032 நிச்சயமாக அவனுக்குப் புரிந்தது. 34 00:04:01,033 --> 00:04:03,743 - அவன் எப்படி டச்சு மொழியில் பேசுவான்? - எனக்குத் தெரியவில்லை. 35 00:04:03,744 --> 00:04:05,745 ஆனால் கேளு, நாம் முழு பரிசோதனை, ரத்த பரிசோதனை, 36 00:04:05,746 --> 00:04:09,457 ஸ்கேன், ஏடிஹெச்டியை தவிர்த்து, இன்டர்மிட்டன்ட் எக்ஸ்ப்ளோசிவ் உள்ளதா என பார்க்க வேண்டும். 37 00:04:09,458 --> 00:04:12,376 அவன் சம்பந்தப்பட்ட எல்லா ஃபைல்களையும், அவன் இருந்த குடும்பங்களையும் நான் பார்க்கணும்... 38 00:04:12,377 --> 00:04:13,878 கொஞ்சம் பொறுமையாக இருங்கள். 39 00:04:13,879 --> 00:04:17,422 இங்கே நான் அடுத்தகட்ட சட்டப்பூர்வமான நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்துகிறேன், ஈலை. 40 00:04:17,423 --> 00:04:19,051 அவன் மற்றொரு குழந்தையை தாக்கியிருக்கிறான். 41 00:04:19,885 --> 00:04:20,968 சரி. சரி. 42 00:04:20,969 --> 00:04:22,470 அந்தச் சிறுவன் எப்படி இருக்கிறான்? 43 00:04:22,471 --> 00:04:25,349 உடலளவில் குணமாகிவிடுவான், ஆனால் மனதளவில் அதிர்ச்சியடைந்துள்ளான். 44 00:04:25,933 --> 00:04:29,186 நிச்சயமாக, நிறைய இரத்தத்தை இழந்தான். 45 00:04:31,980 --> 00:04:33,315 ஆம், கேள்விப்பட்டேன். 46 00:04:34,024 --> 00:04:35,150 ஈலை? 47 00:04:37,694 --> 00:04:38,986 ஈலை, உங்களுக்கு ஒன்றுமில்லையே? 48 00:04:38,987 --> 00:04:40,405 உட்காருகிறீர்களா, ஈலை? 49 00:04:40,989 --> 00:04:42,407 யாராவது எனக்கு உதவ முடியுமா? 50 00:04:43,992 --> 00:04:45,326 உங்கள் ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளது. 51 00:04:45,327 --> 00:04:46,786 168/90 உள்ளது. 52 00:04:46,787 --> 00:04:48,204 உண்மையில், நான் நன்றாகத்தான் இருக்கிறேன். 53 00:04:48,205 --> 00:04:51,666 கொஞ்ச நேரமாக சாப்பிடவில்லை, என் இரத்த சர்க்கரை அளவு குறைந்துவிட்டது. அவ்வளவுதான். 54 00:04:51,667 --> 00:04:53,669 - நான் உங்களுக்கு ஆரஞ்சு ஜூஸ் கொண்டு வரேன். - நன்றி. 55 00:04:54,169 --> 00:04:57,380 சரி. ஆக, குடும்ப வரலாறு பற்றி நமக்கு எவ்வளவு தெரியும்? 56 00:04:57,381 --> 00:04:59,215 ஈலை, சற்று பொறுங்கள். 57 00:04:59,216 --> 00:05:01,050 இல்லை. நான் நலமாகத்தான் இருக்கிறேன். 58 00:05:01,051 --> 00:05:04,345 மரபணு காரணிகள் உள்ளதா என்று பார்க்க, நான் அவனுடைய பெற்றோரின் பின்னணி பற்றி அறியணும். 59 00:05:04,346 --> 00:05:06,347 குடும்ப வரலாறு பற்றி எந்தத் தகவலும் இல்லை. 60 00:05:06,348 --> 00:05:08,224 அவன் சட்டப்படி பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தை. 61 00:05:08,225 --> 00:05:11,352 பேட்டரி பார்க்கில் உள்ள செயின்ட் மேத்யூஸில் கைவிடப்பட்டவன். 62 00:05:11,353 --> 00:05:13,729 அடச்சே. சரி, சரி... சரி. 63 00:05:13,730 --> 00:05:16,065 அப்படியென்றால் அவனைத் தத்தெடுத்த குடும்பங்களின் ஃபைல்கள் வேண்டும், 64 00:05:16,066 --> 00:05:17,859 அவனுடைய முழு மருத்துவ வரலாறும் எனக்குத் தேவை, 65 00:05:17,860 --> 00:05:20,945 மற்றும் கூடிய விரைவில் டெனிஸை நான் வீட்டில் சந்திக்க வேண்டும். அதோடு நான்... 66 00:05:20,946 --> 00:05:24,448 ஈலை, வழக்கின் உண்மைகள் மாறிவிட்டன. 67 00:05:24,449 --> 00:05:25,908 உங்களுக்கே அது தெரியும். 68 00:05:25,909 --> 00:05:29,328 அவன் பள்ளி அமைப்பிலிருந்து நீக்கப்பட்டுவிட்டான், தன் வளர்ப்புக் குடும்பத்தையும் இழக்க நேரிடலாம், 69 00:05:29,329 --> 00:05:31,956 மற்றும் நீண்ட காலத்திற்கு அவனை இங்கேயே வைத்திருப்பார்கள். 70 00:05:31,957 --> 00:05:33,165 எனக்கு அது தெரியும், கெய்ல். 71 00:05:33,166 --> 00:05:35,251 அதனால்தான் எனக்காக நீ சற்று தாமதத்தை ஏற்படுத்த வேண்டும். 72 00:05:35,252 --> 00:05:36,919 டாக்டர் ஆட்லரை அழைக்கிறேன். 73 00:05:36,920 --> 00:05:38,547 தயவுசெய்து, நர்ஸுகளின் நிலையத்திற்கு வரவும். 74 00:05:39,339 --> 00:05:41,216 டாக்டர் ஆட்லரை அழைக்கிறேன். 75 00:05:42,342 --> 00:05:44,427 அவர் வந்து... அப்பா! 76 00:05:44,428 --> 00:05:46,345 பார்ப், நீ இங்கே என்ன செய்கிறாய்? ஏதாவது பிரச்சினையா? 77 00:05:46,346 --> 00:05:48,891 அங்கு ஏதாவது பிரச்சினையா? உங்கள் வீடு மோசமான நிலையில் உள்ளது. 78 00:05:50,684 --> 00:05:51,809 அது ஒன்றுமில்லை. ஒன்றுமில்லை. 79 00:05:51,810 --> 00:05:56,272 மரச்சாமான்கள் உடைந்திருந்தன, இரத்தமும் அம்மாவின் ரோஜாக்களும் இருந்தன. 80 00:05:56,273 --> 00:05:58,566 நேற்றிரவு ஃபோன் மூலம் உங்களை தொடர்புகொள்ள முயற்சித்தேன். 81 00:05:58,567 --> 00:06:00,526 சார்ஜ் தீர்ந்திருக்கும். அவ்வளவுதான். 82 00:06:00,527 --> 00:06:01,986 ஆனால், உண்மையில் ஒன்றுமில்லை. 83 00:06:01,987 --> 00:06:03,571 என் கையை வெட்டிக்கொண்டேன், அவ்வளவுதான். 84 00:06:03,572 --> 00:06:05,114 - நீங்கள் தாக்கப்பட்டதாக நினைத்தேன்... - இல்லை. 85 00:06:05,115 --> 00:06:07,909 ...உங்கள் வீட்டு வேலைக்காரர்தான் நீங்கள் இங்கு இருப்பதாகச் சொன்னார். 86 00:06:07,910 --> 00:06:09,869 - பார்ப், ரிலாக்ஸ். - நான் ஏதாவது பையை எடுத்து வரேன். 87 00:06:09,870 --> 00:06:14,791 பார்ப், ஒன்றுமில்லை விடு. மூச்சுவிடு. மூச்சுவிடு. மூச்சுவிடு. 88 00:06:19,129 --> 00:06:21,965 வந்து, அது சங்கடமாக இருந்தது. 89 00:06:23,884 --> 00:06:25,009 இப்போது பரவாயில்லையா? 90 00:06:25,010 --> 00:06:26,303 ஆம். 91 00:06:29,181 --> 00:06:32,434 உண்மையைச் சொல்ல வேண்டுமானால், எனக்கு “ஜின் அண்ட் டானிக்” மதுபானம் வேண்டும். 92 00:06:33,810 --> 00:06:36,355 நிச்சயமாக 10:00 மணிக்கு பிறகுதான், மருத்துவமனை பார் திறக்கப்படும். 93 00:06:42,861 --> 00:06:44,571 என்னை மன்னித்துவிடுங்கள், அப்பா. 94 00:06:46,657 --> 00:06:48,950 நான் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. அது உங்களுக்கு சுத்தமாக பிடிக்காது என தெரியும். 95 00:06:48,951 --> 00:06:50,952 மன்னிப்பு கேட்காதே. நீ கவலையாக இருந்தாய். 96 00:06:50,953 --> 00:06:52,370 நிச்சயமாக கவலையாகத்தான் இருந்தேன். 97 00:06:52,371 --> 00:06:55,122 உங்கள் வீடானது கோளாறான போதைக்கு அடிமையானவர்களால் கைப்பற்றப்பட்டது போல இருந்தது. 98 00:06:55,123 --> 00:06:58,085 இது போன்ற அனைத்து கற்பனைகளும் என் தலைக்குள் ஓடிக் கொண்டிருந்தன. 99 00:07:02,631 --> 00:07:06,468 அம்மாவிற்கு அப்படி ஆனதிலிருந்து நான் பதட்டமாக இருக்கிறேன் என நினைக்கிறேன்... 100 00:07:08,345 --> 00:07:09,346 தெரியுமா? 101 00:07:16,270 --> 00:07:17,271 அப்பா. 102 00:07:18,939 --> 00:07:19,773 நான் கிளம்புவது நல்லது. 103 00:07:21,066 --> 00:07:23,026 அப்பா. அப்பா. பொறுங்கள். 104 00:07:24,069 --> 00:07:25,319 பாருங்க, எனக்குத் தெரியவில்லை. 105 00:07:25,320 --> 00:07:27,865 ஆனால், நாம் இதைப் பற்றி பேசினால், 106 00:07:28,365 --> 00:07:30,283 நாம் உண்மையிலேயே இதைப் பற்றி பேசினால், ஒருவேளை... 107 00:07:30,284 --> 00:07:33,077 பாரு, நாம் விரைவில் சந்திக்க ஒரு திட்டம் போடுவோம். 108 00:07:33,078 --> 00:07:35,496 நீயும் நானும் சோஃபியும் சேர்ந்து டின்னர் சாப்பிடுவோம், சரியா? 109 00:07:35,497 --> 00:07:37,540 ஆனால், இது சரியான நேரமல்ல. 110 00:07:37,541 --> 00:07:38,791 என் நோயாளி நெருக்கடியில் இருக்கிறார். 111 00:07:38,792 --> 00:07:40,793 சரி. நிச்சயமாக. ஒரு நோயாளி. 112 00:07:40,794 --> 00:07:42,086 - பார்ப். - எனக்குப் புரிந்துவிட்டது. 113 00:07:42,087 --> 00:07:44,381 விடுங்கள். எனக்குப் புரிகிறது. அது உங்கள் வேலை. 114 00:07:44,923 --> 00:07:46,299 உங்கள் நோயாளிகள் உங்களைச் சார்ந்து இருக்கிறார்கள். 115 00:07:46,300 --> 00:07:48,468 என்னை நம்புங்கள், எனக்குத் தெரியும். 116 00:08:07,571 --> 00:08:08,404 ஹலோ? 117 00:08:08,405 --> 00:08:10,990 நோவா என்னும் முதல் பெயரைக் கொண்ட ஒரு வளர்ப்புப் பிள்ளையை உனக்கு நினைவிருக்கா? 118 00:08:10,991 --> 00:08:13,409 வெளிரிய, நீல நிற கண்கள் கொண்ட எட்டு அல்லது ஒன்பது வயது இருக்கும், 119 00:08:13,410 --> 00:08:15,369 அதீத கட்டுப்பாடு சிக்கல்கள் உடையவன் மற்றும் பேச்சு வராதவனா? 120 00:08:15,370 --> 00:08:18,080 ஹலோ, என் அற்புதமான உதவியாளரே, எப்படி இருக்கிறாய்? 121 00:08:18,081 --> 00:08:20,541 நிச்சயமாக நோயாளி அல்ல. ஆலோசனை பெற அல்லது 122 00:08:20,542 --> 00:08:22,001 பரிந்துரையின் பெயரில் வந்திருக்கலாம். 123 00:08:22,002 --> 00:08:23,794 இல்லையென்றால் எனக்கே நினைவிருக்கும், இல்லையா? 124 00:08:23,795 --> 00:08:26,298 சரி, நீங்கள் மூளை இறுகிப் போகும் வயதில் இருக்கிறீர்கள். 125 00:08:30,385 --> 00:08:31,594 நான் சரிபார்க்க வேண்டுமா? 126 00:08:31,595 --> 00:08:34,263 எப்படியோ பிறகு நான் உங்கள் ஃபைலைத்தான் பார்க்கவிருந்தேன். 127 00:08:34,264 --> 00:08:35,890 அது நன்றாக இருக்கும். நன்றி. 128 00:08:42,856 --> 00:08:44,525 - நான் பேசலாமா? - ம்-ம். 129 00:08:45,400 --> 00:08:46,776 ஹாய், செல்லமே. 130 00:08:46,777 --> 00:08:48,278 நான் இங்கேதான் இருக்கிறேன், சரியா? 131 00:08:49,655 --> 00:08:53,282 இதுதான் நடக்கப் போகிறது: உன்னை அப்படியே அழகாக உள்ளே தள்ளி, 132 00:08:53,283 --> 00:08:56,828 உன் மூளையின் ஒரு புகைப்படத்தை நாங்கள் எடுப்போம். அருமையான விஷயம், அல்லவா? 133 00:08:59,581 --> 00:09:01,791 சரி, இதுதான் இரைச்சலை சமாளிக்க உதவப் போகிறது. 134 00:09:01,792 --> 00:09:04,585 சத்தம் கொஞ்சம் அதிகமாக இருக்கும், ஆனால் உன் சத்தம் எங்களுக்குக் கேட்கும், 135 00:09:04,586 --> 00:09:06,588 எனவே உனக்கு ஏதாவது தேவைப்பட்டால் சொல். 136 00:09:07,256 --> 00:09:09,633 நீ ஆடாமல் அசையாமல் இருப்பது முக்கியம். 137 00:09:15,973 --> 00:09:17,766 இது வலிக்கவே வலிக்காது, சரியா? 138 00:09:18,684 --> 00:09:21,143 இல்லை. இல்லை. உனக்கு எதுவுமே தெரியாது. 139 00:09:21,144 --> 00:09:23,480 நீ அசையாமல் இருப்பதுதான் முக்கியம், சரியா? 140 00:09:51,967 --> 00:09:55,386 பதட்டத்தை குறைக்கும் மருந்து, வீரியம் குறைவாக தரப்பட்டிருந்தாலும் அவனை அமைதியாக வைத்திருக்கும். 141 00:09:55,387 --> 00:09:57,013 எவ்வளவு நேரமெடுக்கும்? 142 00:09:57,014 --> 00:10:00,434 இது வழக்கமான சோதனை முறை, 15 நிமிடங்களுக்குள் முடிந்துவிடும். 143 00:10:01,018 --> 00:10:02,477 அவனை உள்ளே அனுப்பி வெளியே எடுப்பதுதான் எங்கள் இலக்கு. 144 00:10:03,729 --> 00:10:05,022 நோவா, நாம் துவங்கப் போகிறோம். 145 00:10:05,731 --> 00:10:07,774 உனக்கு பிரச்சினை இல்லை என்பதை நான் அறிய, உன் கட்டை விரலை தூக்கிக் காட்ட முடியுமா? 146 00:10:09,860 --> 00:10:11,570 சரி, கண்ணா. இதோ தொடங்கலாம். 147 00:10:54,655 --> 00:10:57,658 ப்ரீஸ்கேன் முடிந்தது. நாங்கள் இப்போது படங்களைப் பெறுகிறோம். 148 00:10:58,242 --> 00:11:00,077 அப்படியே இரு, நோவா. இன்னும் கொஞ்சம் நேரம்தான். 149 00:11:14,675 --> 00:11:17,135 அருமை, நோவா. அசையாமல் இருக்க முயற்சி செய், சரியா? 150 00:11:29,773 --> 00:11:31,525 நோவா, அசையாமல் இரு. 151 00:11:35,070 --> 00:11:37,364 - நாம் அவனை அங்கிருந்து வெளியேற்றணும். - கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. 152 00:11:38,198 --> 00:11:39,825 எப்படி இருக்கிறாய், நோவா? நலம்தானே? 153 00:11:42,327 --> 00:11:43,704 இன்னும் கொஞ்சம் நேரம்தான். 154 00:11:49,251 --> 00:11:50,919 ஸ்கேனை நிறுத்துங்கள். நிறுத்துங்கள்! 155 00:11:56,717 --> 00:11:58,010 ஒன்றுமில்லை. 156 00:11:59,178 --> 00:12:00,804 ஒன்றுமில்லை, நோவா. நோவா. 157 00:12:01,555 --> 00:12:02,556 ஒன்றுமில்லை. 158 00:12:04,099 --> 00:12:06,517 செல்லமே. செல்லமே, இங்கே வா. 159 00:12:06,518 --> 00:12:08,812 ஒன்றுமில்லை. உனக்கு ஒன்றுமில்லை. 160 00:12:09,396 --> 00:12:10,855 மூச்சுவிடு, மூச்சுவிடு, மூச்சுவிடு. 161 00:12:10,856 --> 00:12:14,026 மூச்சுவிடு. ஓ, கண்ணா. 162 00:12:14,568 --> 00:12:16,737 சரி. நான் இங்குதான் இருக்கிறேன். 163 00:12:18,071 --> 00:12:18,989 இங்குதான் இருக்கிறேன். 164 00:12:28,582 --> 00:12:31,334 அவனுக்கு கொஞ்சம் மயக்க மருந்து கொடுக்கிறோம், அவன் இன்று ஓய்வெடுக்கட்டும். 165 00:12:31,335 --> 00:12:32,753 பாவம் இந்தச் சிறுவன் கஷ்டப்படுகிறான். 166 00:12:39,009 --> 00:12:43,889 அசாதாரண திசுவோ, டிபிஐயோ இல்லை. சிபிஎஃப் சரியான அளவுகளில் செயல்படுகிறது. 167 00:12:44,556 --> 00:12:47,184 அனைத்து இரத்த குறிப்பான்களும் வரம்பிற்குள் உள்ளன. எம்ஆர்ஐயிலும் பிரச்சினை இல்லை. 168 00:12:48,310 --> 00:12:51,313 அவன் மார்பில் ஒரு வித்தியாசமான பிறவிக் குறி உள்ளது, 169 00:12:52,272 --> 00:12:55,484 ஆனால் பேரதிர்ச்சி மனநிலைக்கான எந்த குறியோ அடையாளமோ இல்லை. 170 00:12:57,277 --> 00:12:59,779 என்னவாக இருந்தாலும், இது உளவியல் ரீதியானது. 171 00:12:59,780 --> 00:13:02,365 கேளுங்கள், ஈலை, நான்தான் உங்களை இதில் ஈடுபட வைத்தேன். 172 00:13:02,366 --> 00:13:03,991 இல்லை. உண்மையில், அது நீ இல்லை, கெய்ல். 173 00:13:03,992 --> 00:13:06,410 நீ அழைப்பதெற்கெல்லாம் முன்பே அவன் என் வீட்டிற்கு வந்தான். 174 00:13:06,411 --> 00:13:07,537 எனக்குத் தெரியும். 175 00:13:07,538 --> 00:13:08,914 அது எதற்காக? 176 00:13:10,499 --> 00:13:12,375 இதைப் பற்றி நீங்கள் என்னிடம் எதையாவது மறைக்கிறீர்களா? 177 00:13:12,376 --> 00:13:14,253 உங்கள் இருவருக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா? 178 00:13:15,754 --> 00:13:22,052 அவன் என்னிடம் வந்தான், அவனுக்கு என் உதவி தேவை என்பது மட்டும்தான் எனக்குத் தெரியும். 179 00:14:15,355 --> 00:14:16,356 லின்? 180 00:15:03,070 --> 00:15:04,529 சுத்தம் செய்யும் குழுவை அனுப்பி, லேரியை அழகுபடுத்துபவரிடம் கூட்டிச் சென்றேன், 181 00:15:04,530 --> 00:15:05,446 நீங்கள் எனக்கு 300 டாலர் தரணும், விளையாட்டாக சொன்னேன். 182 00:15:05,447 --> 00:15:06,865 நாம் எப்போது டின்னர் சாப்பிடலாம் என சொல்லுங்கள், அன்புடன் பார்பரா. 183 00:15:10,661 --> 00:15:12,204 என்ன, நீ டேட்டிங் போகப் போகிறாயா? 184 00:15:13,497 --> 00:15:16,250 ஒன்றுமில்லை. இங்கே வா, அன்பே. ஒன்றுமில்லை. 185 00:15:26,802 --> 00:15:28,011 ஐயோ. 186 00:15:30,597 --> 00:15:32,391 நான் பைத்தியமாக மாறுகிறேன். 187 00:15:36,562 --> 00:15:38,981 சரி. எனக்குத் தெரியும். இந்தா. 188 00:15:39,648 --> 00:15:41,733 நான் உனக்காக ஒன்றும் செய்ததே இல்லை என்று சொல்லாதே. 189 00:16:16,685 --> 00:16:18,520 பி.டபிள்யூ. 190 00:16:27,779 --> 00:16:28,947 லேரி, என்ன ஆச்சு, பையா? 191 00:16:57,017 --> 00:16:58,310 - ஹாய், சூ ஆன். - ஹாய். 192 00:17:00,646 --> 00:17:03,356 அது ஒரு சமாதான காணிக்கை. என்சிலாடஸ். 193 00:17:03,357 --> 00:17:05,607 எனக்கு மெக்ஸிகன் உணவு மிகவும் நிம்மதி தருகிறது, உங்களுக்கு? 194 00:17:05,608 --> 00:17:07,194 எனக்கும்தான். ஆமாம். 195 00:17:09,530 --> 00:17:11,113 ஈலை, உங்களுடன் நான் வெளிப்படையாக பேசலாமா? 196 00:17:11,114 --> 00:17:12,616 அது ரொம்ப அவசியமா? 197 00:17:14,952 --> 00:17:19,205 உங்கள் அன்பு மனைவியை இழந்தது உங்களுக்கு எவ்வளவு கடினமாக இருந்திருக்கும் என்பதை 198 00:17:21,165 --> 00:17:22,792 என்னால் கற்பனை மட்டுமே செய்ய முடியும். 199 00:17:23,292 --> 00:17:27,798 ஆனால், இனி நீங்கள் இதைத் தனியாக கடந்து செல்ல வேண்டியதில்லை, சரியா? 200 00:17:29,258 --> 00:17:30,759 உங்களுக்காக நான் இருக்கிறேன். 201 00:17:31,343 --> 00:17:34,470 ஆனால் இவை அனைத்திற்கும் ஒரு வளமான எதிர்காலம் இருக்கலாம். 202 00:17:34,471 --> 00:17:36,222 மற்றும் அதுதான்... 203 00:17:36,223 --> 00:17:38,475 இது விற்பனையாளர்களின் சந்தைக்கு உகந்த நேரம். 204 00:17:39,101 --> 00:17:41,644 ஆனால் இனி நேரத்தை வீணடிக்க வேண்டாம், நண்பா, சரியா? நாம் அதில் ஏதாவது செய்ய வேண்டும். 205 00:17:41,645 --> 00:17:44,230 இந்த ரியல் எஸ்டேட் உரையாடல்கள் யாருக்குப் பிடிக்கும் தெரியுமா? 206 00:17:44,231 --> 00:17:45,815 - என் மகளுக்கு. - ஓ, பார்பரா. 207 00:17:45,816 --> 00:17:47,483 ஆமாம். எனவே, நீயும் பார்பராவும் அதைப் பற்றி பேசலாமே, 208 00:17:47,484 --> 00:17:49,986 நான் என் நம்பிக்கையை உங்கள் இருவரின் திறமையின் மீது வைக்கிறேன். 209 00:17:49,987 --> 00:17:51,237 - உண்மையாகவா? - ஆமாம். 210 00:17:51,238 --> 00:17:52,406 அற்புதம். 211 00:17:52,990 --> 00:17:54,741 - இதற்காக நீங்கள் வருத்தப்பட மாட்டீர்கள், ஈலை. - நான் ஏற்கனவே வருந்துகிறேன். 212 00:17:55,784 --> 00:17:57,159 ஈலை. உங்களுக்குத் தெரியுமா? 213 00:17:57,160 --> 00:17:59,078 அழகான மற்றும் வேடிக்கையான ஒரு டாக்டர்? 214 00:17:59,079 --> 00:18:02,082 ஏதோ ஒரு அதிர்ஷ்டசாலி பெண்மணி உங்களைப் பிடிக்கப் போகிறாள். 215 00:18:10,090 --> 00:18:13,467 உங்களுக்கு சம்மதமா? நான் என் அனைத்து நேர்காணல்களையும் பதிவு செய்வேன். 216 00:18:13,468 --> 00:18:14,635 நிச்சயமாக. 217 00:18:14,636 --> 00:18:16,721 கொஞ்சம் விசாரணை போலத் தோன்றுகிறது. 218 00:18:16,722 --> 00:18:18,223 ஓ, இல்லை. இல்லவே இல்லை. 219 00:18:18,891 --> 00:18:20,516 நாம் பேசுகையில், நான் கொஞ்சம் சுற்றிப் பார்க்கலாமா? 220 00:18:20,517 --> 00:18:22,602 ஆம், கண்டிப்பாக. குப்பையாக இருப்பதற்கு என்னை மன்னியுங்கள். 221 00:18:22,603 --> 00:18:24,730 சமீப காலமாக என் கவனம் ரொம்பவே சிதறுகிறது. 222 00:18:25,439 --> 00:18:26,440 கண்டிப்பாக. 223 00:18:28,525 --> 00:18:30,902 பள்ளியில் பார்த்த அந்த விஷயம்... 224 00:18:30,903 --> 00:18:32,278 அதைப் பற்றி என்னிடம் சொல்ல விரும்புகிறீர்களா? 225 00:18:32,279 --> 00:18:35,282 நான் ஈஎம்டி அறிக்கையைப் படித்தேன், ஆனால் நீங்கள் என்ன பார்த்தீர்கள் என அறிய வேண்டும். 226 00:18:36,867 --> 00:18:40,662 அங்கே நிறைய இரத்தம் இருந்தது. 227 00:18:41,455 --> 00:18:43,581 நோவாவும் மற்றொரு பையனும் தரையில் கிடந்தனர், 228 00:18:43,582 --> 00:18:47,668 அதோடு இப்பவும் அவனுக்கு எதுவும் ஞாபகம் இல்லை. நல்ல வேளை. 229 00:18:47,669 --> 00:18:49,087 அது மிகவும் பயங்கரமாக இருந்தது. 230 00:18:49,588 --> 00:18:54,592 என் வாழ்நாளில் இப்படிப்பட்ட வினோதமான நடத்தைகளை நான் நிறைய பார்த்திருக்கிறேன், 231 00:18:54,593 --> 00:18:56,595 ஆனால் இது போன்ற எதையும் பார்த்ததில்லை. 232 00:18:57,179 --> 00:19:00,641 எப்படியோ, வழக்கமாக நான் குடிக்க மாட்டேன் ஆனால்... 233 00:19:05,312 --> 00:19:07,271 - உங்களுக்கும் ஒன்று வேண்டுமா? - இல்லை, பரவாயில்லை. நன்றி. 234 00:19:07,272 --> 00:19:08,190 சரி. 235 00:19:08,732 --> 00:19:09,566 நிச்சயமாகவா? 236 00:19:18,659 --> 00:19:22,662 சரி, உங்களிடம் என்ன சொல்வதென தெரியவில்லை. 237 00:19:22,663 --> 00:19:25,122 சரி, அவன் உங்களுடன் எட்டு மாதங்களாக இருக்கிறான்தானே? 238 00:19:25,123 --> 00:19:29,294 ஆம்.எனக்கு முன் அவன் இருந்த குடும்பத்துடன் அவனுக்கு சரிபட்டு வரவில்லை. 239 00:19:30,504 --> 00:19:33,340 அந்த பெற்றோர் இவனை தொல்லையாக நினைத்தனர். 240 00:19:34,591 --> 00:19:38,053 ஆனால் இவன்தான் என் முதல் வளர்ப்பு மகன், அதோடு எனக்கு என்ன எதிர்ப்பார்ப்பது என்றே தெரியவில்லை. 241 00:19:38,804 --> 00:19:40,556 மிகவும் வருத்தத்தோடு இருப்பவனாகத் தெரிந்தான். 242 00:19:42,266 --> 00:19:44,393 எதற்காக பிள்ளையைத் தத்தெடுக்க முடிவெடுத்தீர்கள்? 243 00:19:45,269 --> 00:19:46,853 எதற்காக அதை என்னிடம் கேட்கிறீர்கள்? 244 00:19:46,854 --> 00:19:50,649 அதாவது, அதற்கும் நோவாவிற்கு நடக்கும் விஷயத்திற்கும் தொடர்பு உள்ளதா? 245 00:19:51,900 --> 00:19:53,777 நான் காரணியைத் தேடுகிறேன், அவ்வளவுதான். 246 00:19:56,071 --> 00:19:56,905 நான்... 247 00:20:00,450 --> 00:20:05,288 எனக்கு கிடைத்திராத எல்லா விஷயத்தையும் நான் ஒருவருக்குக் கொடுக்க நினைத்தேன். 248 00:20:05,289 --> 00:20:06,373 எனவே... 249 00:20:12,129 --> 00:20:14,256 சரி, இங்கு வந்தபோது அவன் பேசினான் என்றீர்கள்தானே? 250 00:20:16,049 --> 00:20:16,967 ஆனால் நீண்ட காலத்திற்கு அல்ல. 251 00:20:17,593 --> 00:20:21,095 விரைவிலே அவன் உடல்நிலை மோசமானது, நான் கெய்லிடம் சொன்னேன். 252 00:20:21,096 --> 00:20:25,766 அவள் என்னைத் தொடர்ந்து முயற்சிக்கச் சொன்னாள், எனவே அச்சிறுவனுக்கு வேறு வழி இல்லை என புரிந்தது. 253 00:20:25,767 --> 00:20:28,854 எப்படி மோசமானது? அதாவது பேசாமல் இருப்பதைத் தவிர. 254 00:20:29,646 --> 00:20:35,277 அலறலுடன் வலிப்பு வரத் தொடங்கின. 255 00:20:40,365 --> 00:20:41,282 ஏதாவது வார்த்தைகள் பேசினானா? 256 00:20:41,283 --> 00:20:43,534 இல்லை, வெறும் அலறல் மட்டும்தான். 257 00:20:43,535 --> 00:20:45,621 அவன் முகம் மாறிவிடும். 258 00:20:46,288 --> 00:20:47,831 பேய் பிடித்த பிள்ளை போல. 259 00:20:49,208 --> 00:20:51,459 கற்பனையில் அவன் வேறு எங்கோ போவது போல இருக்கும். 260 00:20:51,460 --> 00:20:53,587 பயங்கரமான ஏதோ ஒரு இடத்திற்கு. 261 00:20:56,507 --> 00:20:58,883 அவன் வேறு மொழியில் பேசி நீங்கள் கேட்டதே இல்லையா? 262 00:20:58,884 --> 00:21:00,176 இல்லை. 263 00:21:00,177 --> 00:21:04,222 அவன் ஏதோ ஒரு மொழியில் பேசியதாக நீங்கள் சொன்னீர்களே, அது டச்சு மொழியா? 264 00:21:04,223 --> 00:21:05,307 ஆமாம். 265 00:21:07,226 --> 00:21:08,560 நான் அவனது அறையைப் பார்க்கலாமா? 266 00:21:13,690 --> 00:21:15,942 நானே போய் பார்த்தால் பரவாயில்லையா? 267 00:21:15,943 --> 00:21:17,986 அதாவது, அது எப்படி இருக்கு என நான் உணர வேண்டும். 268 00:21:18,862 --> 00:21:20,112 நிச்சயமாக. 269 00:21:20,113 --> 00:21:21,447 நல்லா நேரம் எடுத்துப் பாருங்கள். 270 00:21:21,448 --> 00:21:23,533 - நன்றி. - அங்குள்ள குப்பைகளை நான் போய் சுத்தம் செய்கிறேன். 271 00:21:23,534 --> 00:21:24,618 சரி. 272 00:22:29,349 --> 00:22:31,142 மன்னிக்கவும். நான் உங்களை திடுக்கிடச் செய்ய நினைக்கவில்லை. 273 00:22:31,143 --> 00:22:32,310 அது பரவாயில்லை. 274 00:22:32,311 --> 00:22:34,229 இந்த ஓவியங்களைப் பார்த்திருக்கிறீர்களா? 275 00:22:36,315 --> 00:22:38,567 ஆமாம், ஆனால் எனக்கு அவற்றைப் பார்க்கப் பிடிக்காது. 276 00:22:39,193 --> 00:22:41,110 நோவாவிற்கு புரியாத உணர்வுகளை வெளிப்படுத்த 277 00:22:41,111 --> 00:22:43,821 இது நல்ல வழி என்று கடைசியாக பார்த்த மருத்துவர் சொன்னார், இருந்தாலும்... 278 00:22:43,822 --> 00:22:47,201 சரி, ஆனால் அவன் தொடர்ந்து வரையும் இந்த பண்ணை வீடு பற்றி ஏதாவது தெரியுமா? 279 00:22:47,701 --> 00:22:49,077 - என்ன பண்ணை வீடு? - பாருங்கள். 280 00:22:49,578 --> 00:22:51,205 எல்லாவற்றிலும் இருக்கு. இதோ. 281 00:22:51,955 --> 00:22:52,789 இதோ இங்கு இருக்கு. 282 00:22:53,624 --> 00:22:55,709 இங்கு இருக்கு. இங்கு இருக்கு. 283 00:22:56,627 --> 00:22:57,794 இங்கு இருக்கு. 284 00:23:00,380 --> 00:23:02,841 நான் அதை கவனித்ததே இல்லை. 285 00:23:03,467 --> 00:23:04,885 அதற்கு என்ன அர்த்தம் என நினைக்கிறீர்கள்? 286 00:23:05,552 --> 00:23:06,637 எனக்குத் தெரியாது. 287 00:23:10,182 --> 00:23:12,100 அவன் எதைக் குறித்து அதிகம் பயப்படுவான் என நினைக்கிறீர்கள்? 288 00:23:13,810 --> 00:23:14,978 உண்மையாகவா? 289 00:23:16,063 --> 00:23:18,106 தன்னைப் பார்த்தே பயப்படுவான் என நினைக்கிறேன். 290 00:23:40,504 --> 00:23:43,464 ஃபார் ராக்கவே-மோட் அவென்யூ செல்லும் ஏ ரயில். 291 00:23:43,465 --> 00:23:45,509 அடுத்த நிறுத்தம், 125வது தெரு. 292 00:23:58,689 --> 00:23:59,815 ஹேய், நோவா. 293 00:24:00,315 --> 00:24:02,734 ஒன்றும் பிரச்சினை இல்லை. உன்னைப் பார்க்க கொஞ்ச நேரத்தில் வருகிறேன். 294 00:24:04,444 --> 00:24:05,279 ஹேய்... 295 00:24:08,699 --> 00:24:10,742 இவற்றை உன் அறையில் பார்த்தேன். 296 00:24:16,915 --> 00:24:19,126 நோவா, இவை அற்புதமாக உள்ளன. 297 00:24:20,794 --> 00:24:22,588 இவற்றையெல்லாம் வரைந்தது நீதானே? 298 00:24:26,466 --> 00:24:30,179 இவற்றைப் பற்றி என்னிடம் சொல்ல விரும்புகிறாயா? 299 00:24:33,140 --> 00:24:34,600 நீங்கள் கோபமாக இருக்கிறீர்களா? 300 00:24:35,184 --> 00:24:38,270 கோபமா? இல்லை. நான் ஏன் கோபமாக இருக்கப் போகிறேன்? 301 00:25:08,926 --> 00:25:10,801 எனக்குத் தெரிந்த இந்த விளையாட்டை நீ நினைவுபடுத்தினாய். 302 00:25:10,802 --> 00:25:12,137 நீ விளையாட விரும்புகிறாயா? 303 00:25:13,305 --> 00:25:14,972 இதற்கு பெயர் மேட் கேம். 304 00:25:14,973 --> 00:25:18,017 இதோ. சரி. 305 00:25:18,018 --> 00:25:21,939 உனக்கு பாதி, எனக்குப் பாதி. 306 00:25:22,564 --> 00:25:23,398 சரியா? 307 00:25:25,275 --> 00:25:26,527 இவற்றை எடுத்துக்கொள். 308 00:25:27,736 --> 00:25:29,905 சரி. எனவே இதை இப்படித்தான் விளையாட வேண்டும். 309 00:25:31,782 --> 00:25:34,993 நான் என்னுடையது ஒன்றை எடுத்து, அதை நடுவில் வைத்து, 310 00:25:35,536 --> 00:25:37,871 என்னைக் கோபப்படுத்தும் ஏதாவது விஷயத்தைப் பற்றி நான் சொல்வேன். 311 00:25:38,455 --> 00:25:40,415 சரியா? தொடங்குவோம். 312 00:25:41,208 --> 00:25:46,463 படம் பார்க்கும்போது என் பாப்கார்னை யாராவது சாப்பிட்டால் எனக்குக் கோபம் வரும். 313 00:25:48,173 --> 00:25:49,174 சரி. நீ ஆடு. 314 00:25:50,050 --> 00:25:53,053 உன் காயை எடுத்து, என்னுடையதன் மேல் வை. 315 00:25:54,930 --> 00:25:56,098 அருமை. 316 00:25:56,682 --> 00:25:59,685 இப்போது உன்னைக் கோபப்படுத்தும் எதையாவது சொல். 317 00:26:02,104 --> 00:26:04,188 என் ஐஸ் கிரீமை வேறு ஒருவர் சாப்பிடுவது. 318 00:26:04,189 --> 00:26:07,109 அது நல்ல விஷயம். உனக்குத் தெரியுமா? எனக்கும் அது பிடிக்காது. 319 00:26:07,609 --> 00:26:09,111 சரி, பார்ப்போம். வேறு என்ன? 320 00:26:11,196 --> 00:26:12,865 திமிராக இருக்கும் மக்கள். 321 00:26:15,868 --> 00:26:17,744 மோசமாக நடந்துகொள்ளும் மக்கள். 322 00:26:20,247 --> 00:26:22,707 மோசமாக நடந்துகொள்ளும் மக்கள். சரி. 323 00:26:22,708 --> 00:26:25,460 உதாரணத்திற்கு, அப்படி மோசமாக நடக்கும் ஒருவரை உன்னால் சொல்ல முடியுமா? 324 00:26:26,628 --> 00:26:28,046 டெனிஸ். 325 00:26:28,922 --> 00:26:31,425 டெனிஸ். டெனிஸ் எப்படி மோசமாக நடந்துகொள்வார்? 326 00:26:32,551 --> 00:26:34,178 என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போக மாட்டாங்க. 327 00:26:35,637 --> 00:26:38,015 நீ வீட்டிற்குப் போக விரும்புகிறாய். எனக்கு அது புரிகிறது. 328 00:26:38,765 --> 00:26:39,892 சரி, வேறு என்ன? 329 00:26:45,480 --> 00:26:47,774 பிறரைக் காயப்படுத்தும் மக்கள். 330 00:26:51,945 --> 00:26:55,699 பிறரைக் காயப்படுத்தும் மக்கள். சரி. 331 00:26:57,534 --> 00:26:59,536 உதாரணத்திற்கு ஒருவரை சொல்ல முடியுமா? 332 00:27:00,662 --> 00:27:03,790 கெட்ட விஷயங்களைச் செய்யும் கெட்டவர்கள். 333 00:27:13,634 --> 00:27:15,427 எப்படிப்பட்ட கெட்ட விஷயங்கள்? 334 00:27:22,309 --> 00:27:24,143 சரி, நோவா, இந்த டவர் மிகவும் உயரமாக உள்ளது, 335 00:27:24,144 --> 00:27:28,565 எனவே எல்லாவற்றையும்விட எது உன்னை ரொம்ப அதிகமாகக் கோபப்படுத்தும் என்று சொல். 336 00:27:30,567 --> 00:27:34,112 உன் காயை எடுத்து மேலே வை. 337 00:27:35,697 --> 00:27:36,698 சூப்பர். 338 00:27:38,784 --> 00:27:39,910 இப்போது அதைச் சொல். 339 00:27:40,911 --> 00:27:43,997 எல்லாவற்றையும் விட உன்னை ரொம்ப அதிகமாகக் கோபப்படுத்தும் விஷயம். 340 00:27:49,086 --> 00:27:50,337 பரவாயில்லை. 341 00:27:51,630 --> 00:27:53,048 நீ அதைச் சொல்லலாம். 342 00:27:55,425 --> 00:27:57,135 உங்களுக்கே தெரியும். 343 00:28:02,516 --> 00:28:04,852 நீங்கள் என்ன செய்தீர்கள் என்று உங்களுக்கே தெரியும். 344 00:28:12,901 --> 00:28:14,444 எனக்குப் புரியவில்லை. 345 00:28:15,237 --> 00:28:17,281 இனி என்னால் இதைக் கையாள முடியாது. 346 00:29:44,952 --> 00:29:46,954 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்