1 00:01:04,982 --> 00:01:06,942 {\an8}டைவ் அடிக்கக் கூடாது 2 00:02:16,803 --> 00:02:19,640 சரி. சரி. அங்கே. அதோ. போ. 3 00:02:20,516 --> 00:02:21,725 சரி. 4 00:02:52,089 --> 00:02:53,090 ஐயோ. 5 00:03:01,056 --> 00:03:02,641 அந்தப் பண்ணை வீட்டில் என்ன நடக்கிறது? 6 00:03:08,605 --> 00:03:10,773 எனக்கு ஒரு புகைப்படம் கிடைத்தது. அது... 7 00:03:10,774 --> 00:03:11,900 அப்படியா? 8 00:03:12,818 --> 00:03:13,944 எங்கே? 9 00:03:16,530 --> 00:03:19,825 வந்து... எனக்கு... ஞாபகம் இல்லை. அது வந்து... 10 00:03:37,176 --> 00:03:39,052 வந்து, உன் ரோஜாக்கள் உண்மையில்... 11 00:03:42,389 --> 00:03:43,807 நன்றாக வளர்கின்றன. 12 00:03:56,862 --> 00:03:58,071 லின்? 13 00:04:31,355 --> 00:04:32,731 ஹேய். 14 00:04:52,918 --> 00:04:54,169 உன் பெயர் என்ன? 15 00:04:55,170 --> 00:04:56,421 நீ இங்கேதான் வசிக்கிறாயா? 16 00:05:00,551 --> 00:05:01,552 உன்னுடன் யாராவது இருக்கிறார்களா? 17 00:05:11,812 --> 00:05:14,147 ஹேய், இங்கே திரும்பி வா! 18 00:05:14,648 --> 00:05:15,983 ஹே, கண்ணா! 19 00:05:16,608 --> 00:05:17,568 ஜாக்கிரதை! 20 00:05:28,871 --> 00:05:30,455 சரி, புதிதாக எதுவும் விஷயம் உள்ளதா? 21 00:05:31,540 --> 00:05:32,707 பெரிதாக ஒன்றுமில்லை. 22 00:05:32,708 --> 00:05:37,880 நான் எழுந்தேன், பல் துலக்கினேன், காஃபி போட்டேன். 23 00:05:39,548 --> 00:05:40,965 பிறகு என் வாசல் கதவில், இரத்தம் வருமளவு 24 00:05:40,966 --> 00:05:43,009 தன் விரல்களைக் கீறிக்கொண்டிருந்த ஒரு சிறுவனைப் பார்த்தேன். 25 00:05:43,010 --> 00:05:44,927 நான் அவனுக்கு உதவச் சென்றபோது, அவன் சாலையை நோக்கி ஓடி, 26 00:05:44,928 --> 00:05:46,179 ஒரு காரில் அடிப்பட்டிருப்பான். 27 00:05:46,180 --> 00:05:48,765 - முன்னாள் நோயாளியா அல்லது... - இல்லை, யாரென்றே தெரியாது. 28 00:05:49,600 --> 00:05:51,226 அது வினோதமாக உள்ளது, இல்லை? 29 00:05:52,519 --> 00:05:54,563 என் வாழ்க்கை டாலி சித்திரம் போல ஆகிவிட்டது. 30 00:05:57,816 --> 00:05:59,359 நீ ஏன் இங்கே வந்திருக்கிறீர்கள், ஈலை? 31 00:06:00,360 --> 00:06:02,070 அது பூமியில் என் இருப்பு பற்றிய கேள்வியா? 32 00:06:02,779 --> 00:06:04,740 இல்லை, இது ஒரு நடைமுறை கேள்விதான். 33 00:06:05,532 --> 00:06:07,909 ஒவ்வொரு வாரமும் நீங்கள் தானாகவே இங்கு வந்து, 34 00:06:07,910 --> 00:06:10,621 உண்மையில் நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதைத் தவிர்த்துவிட்டு, 35 00:06:11,330 --> 00:06:14,790 மற்றவற்றைப் பற்றி 50 நிமிடங்கள் பேசுகிறீர்கள். 36 00:06:14,791 --> 00:06:19,462 அல்லது சொல்வதற்கு எதுவும் இல்லாமல் இருக்கலாம். 37 00:06:19,463 --> 00:06:21,589 அல்லது நீங்கள் நிஜத்தை ஏற்க முடியாமல் இருக்கலாம். 38 00:06:21,590 --> 00:06:22,882 கண்டிப்பாக நான் அப்படித்தான் உணர்கிறேன். 39 00:06:22,883 --> 00:06:25,468 நான் நிஜத்தை ஏற்காமல் இருக்க வேண்டும்தான், ஆனால் அது நீடிக்காது. 40 00:06:25,469 --> 00:06:27,471 எனவே, இப்போதைக்கு நான் இதை அனுபவிக்கக் கூடாதா? 41 00:06:28,222 --> 00:06:29,348 அதை சந்தோஷமாகத்தான் அனுபவிக்கிறீர்களா? 42 00:06:30,057 --> 00:06:31,225 சிறப்பாக இல்லை. 43 00:06:34,686 --> 00:06:37,855 இங்கே பாருங்கள், இந்த சூழ்நிலையில், 44 00:06:37,856 --> 00:06:40,191 - அப்படி உணருவது சாதாரணம்தான்... - என்ன? 45 00:06:40,192 --> 00:06:42,568 கோபமாக, சோகமாக, குழப்பமாகவா? 46 00:06:42,569 --> 00:06:44,237 ஆமாம். அவை அனைத்தும்தான். 47 00:06:44,238 --> 00:06:46,073 சரி. அசௌகரியமானதுமா? 48 00:06:46,740 --> 00:06:49,367 அவள் உருவாக்கிய முழு சூழ்நிலையும் மிகவும் அசௌகரியமாக உள்ளது. 49 00:06:49,368 --> 00:06:52,119 அதாவது, ஹாலில் உள்ள பாத்ரூமைக் கூட இனி என்னால் பயன்படுத்த முடியாது. 50 00:06:52,120 --> 00:06:54,205 அவள் என்றால் உங்கள் மனைவி, லின்னா? 51 00:06:54,206 --> 00:06:55,790 நான் என் மனைவியைப் பற்றி பேச விரும்பவில்லை. 52 00:06:55,791 --> 00:06:59,545 சரி, நீங்கள் ஏன் அதைப் பற்றி பேச விரும்பவில்லை என்பதைப் பற்றி பேசலாம். 53 00:07:00,754 --> 00:07:03,840 அதைப் பற்றி பேசாமல் இருப்பது உங்களை எப்படி உணர வைக்கிறது? 54 00:07:03,841 --> 00:07:06,468 அற்புதமாக. அது என்னை மிகவும் அற்புதமாக உணர வைக்கிறது. 55 00:07:11,682 --> 00:07:12,766 சரி, வேலை எப்படி போகிறது? 56 00:07:14,935 --> 00:07:16,562 நன்றாகப் போகிறது. 57 00:07:17,312 --> 00:07:19,356 உங்கள் வேலையை எதற்காக குறைத்து மதிப்பிடுகிறீர்கள்? 58 00:07:20,816 --> 00:07:23,609 அதாவது, பிரச்சினையில் இருக்கும் குழந்தைகளுக்கு உதவுவது என்ற 59 00:07:23,610 --> 00:07:25,404 ஒரு பெரிய மற்றும் வெற்றிகரமான வேலையைச் செய்கிறீர்கள். 60 00:07:28,532 --> 00:07:30,284 இனி என்னால் அதைச் செய்ய முடியும் என்று தோன்றவில்லை. 61 00:07:48,427 --> 00:07:49,428 லின்? 62 00:07:58,604 --> 00:07:59,604 - ஹலோ. - கடவுளே, 63 00:07:59,605 --> 00:08:02,399 ஒருவழியாக உங்களுக்கு இணைப்பு கிடைத்தது. ஏறக்குறைய ஐந்து மெசேஜுகள் அனுப்பியுள்ளேன். 64 00:08:03,192 --> 00:08:04,734 இணைப்பில் இருக்கிறீர்களா? கெய்ல் பேசுகிறேன். 65 00:08:04,735 --> 00:08:07,320 ஆமாம். ஹாய்... ஆமாம். ஹாய், கெய்ல், நான் கேட்கிறேன்தான். 66 00:08:07,321 --> 00:08:09,071 பாருங்கள், உங்களை வேவு பார்ப்பதற்கு மன்னிக்கவும், 67 00:08:09,072 --> 00:08:11,490 என்னிடம் ஒரு பையன் இருக்கிறான், நீதிமன்றம் தீர்ப்பு சொல்லப் போகிறது மற்றும்... 68 00:08:11,491 --> 00:08:14,493 கெய்ல், என்னால் இப்போது புதிதாக எதுவும் எடுத்துக்கொள்ள முடியாது. 69 00:08:14,494 --> 00:08:17,289 சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள். இது ஒரு தனித்துவமான சூழ்நிலை. இது வித்தியாசமானது. 70 00:08:18,123 --> 00:08:19,373 நான் போக வேண்டும். 71 00:08:19,374 --> 00:08:21,585 ஒரு ஃபைலை ஈமெயில் அனுப்பியுள்ளேன். அதைக் கொஞ்சம் பார்க்க முடியுமா? 72 00:08:24,630 --> 00:08:25,464 குட்பை. 73 00:08:27,925 --> 00:08:28,967 என்ன? 74 00:08:34,765 --> 00:08:36,892 “ஆக்ரோஷமான நடத்தை இருந்துள்ளது. 75 00:08:37,558 --> 00:08:40,437 முரண்டு பிடிப்பவன். 76 00:08:41,355 --> 00:08:42,855 {\an8}பள்ளிகளில் இருந்து தொடர்ந்து வெளியேற்றப்பட்டவன்.” 77 00:08:42,856 --> 00:08:44,483 {\an8}முடிவு: நோவா ஸாயரின் வழக்கு முடிவற்றது. 78 00:08:45,192 --> 00:08:48,070 “குறிப்பாக நான்காம் இடத்தில் பிரச்சினை.” 79 00:09:21,103 --> 00:09:23,188 {\an8}நீருக்கு பயந்த சிறுவன் எழுதியவர் லின் 80 00:11:18,929 --> 00:11:19,930 நீ அடிக்கடி இப்படிச் செய்வாயா? 81 00:11:20,681 --> 00:11:22,599 நாய்களுக்கான கதவு வழியாக அத்துமீறு நுழைவாயா? 82 00:11:30,816 --> 00:11:32,276 உன் தொடர்பு எண் உனக்குத் தெரியுமா? 83 00:11:33,610 --> 00:11:35,696 அல்லது நீ எங்கு வசிக்கிறாய் என என்னிடம் சொல்ல முடியுமா? 84 00:12:07,603 --> 00:12:08,604 சரி. 85 00:12:10,522 --> 00:12:12,815 நீ எங்கு வசிக்கிறாய் என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும், 86 00:12:12,816 --> 00:12:16,111 ஏனென்றால் உன் பெற்றோர்கள் உன்னை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள், சரியா? 87 00:12:16,737 --> 00:12:18,447 எனவே ஒரு ஃபோன் பண்ணப் போகிறேன். 88 00:12:26,330 --> 00:12:28,206 911. உங்கள் அவசரநிலை என்ன? 89 00:12:28,207 --> 00:12:29,708 வந்து, நான்... 90 00:12:32,085 --> 00:12:33,378 நான் தவறு செய்துவிட்டேன். 91 00:13:31,895 --> 00:13:33,021 நீ இங்குதான் வசிக்கிறாயா? 92 00:13:52,082 --> 00:13:53,250 ஹலோ? 93 00:14:07,598 --> 00:14:08,765 ஹலோ? 94 00:14:11,268 --> 00:14:12,269 ஐயோ. 95 00:14:12,978 --> 00:14:15,062 - நகராதே அல்லது சத்தியமாக அடித்துவிடுவேன்! - வேண்டாம்! 96 00:14:15,063 --> 00:14:16,689 என் வீட்டில் என்ன செய்கிறாய்? 97 00:14:16,690 --> 00:14:19,442 அவன்தான் என்னை இங்கே கூட்டி வந்தான்! அவன் உங்கள் மகனா? 98 00:14:19,443 --> 00:14:20,527 என்ன? 99 00:14:21,028 --> 00:14:22,404 நோவா? இங்கே வா. 100 00:14:23,697 --> 00:14:25,448 என்ன நடந்தது? நீ என்ன செய்கிறாய்? 101 00:14:25,449 --> 00:14:27,159 அவன் என் வீட்டிற்கு வந்தான். 102 00:14:31,455 --> 00:14:33,498 நான் தூங்கிக்கொண்டிருந்தபோது நீ வீட்டை விட்டு வெளியே போனாயா? 103 00:14:39,880 --> 00:14:41,088 வந்து, நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும், 104 00:14:41,089 --> 00:14:43,466 ராத்திரியில் யாரோ ஒருவர் என் வீட்டிற்குள் வந்து மற்றும்... 105 00:14:43,467 --> 00:14:45,093 எனக்குப் புரிகிறது. 106 00:14:46,386 --> 00:14:48,888 இதற்கு முன்பு மேஸை பயன்படுத்தியதே இல்லை. அது வேலை செய்யுமா என எனக்குத் தெரியவில்லை. 107 00:14:48,889 --> 00:14:51,807 ஆமாம். என்னை நம்புங்கள். அது வேலை செய்கிறது. 108 00:14:51,808 --> 00:14:54,478 உடைந்த கண்ணாடிக் கிண்ணத்தில் என் கண்களை சுழற்றியது போல உணர்கிறேன். 109 00:14:55,729 --> 00:14:56,730 மன்னித்துவிடுங்கள். 110 00:14:57,731 --> 00:15:00,107 ஐயோ. இச்சிறுவனால் தான் நான் சாகப் போகிறேன். 111 00:15:00,108 --> 00:15:02,402 அதாவது என்னைத் தவறாக நினைக்க வேண்டாம். நான் அவனை மிகவும் நேசிக்கிறேன். 112 00:15:02,903 --> 00:15:04,695 அவன் வெறித்தனமாக இல்லாதபோது நீங்கள் அவனைப் பார்க்கணுமே. 113 00:15:04,696 --> 00:15:07,658 இந்த உலகிலே மிகவும் நல்ல பையன் அவன்தான். 114 00:15:09,576 --> 00:15:10,911 அவன் பேசுவானா? 115 00:15:12,913 --> 00:15:13,914 சமீபத்தில் இல்லை. 116 00:15:14,706 --> 00:15:18,251 முன்பு பேசுவான், ஆனால் இப்போது அவனுக்கு என்ன ஆச்சு என்றே தெரியவில்லை. 117 00:15:18,252 --> 00:15:22,548 அவனுக்கு நிறைய பரிசோதனைகள் செய்யப்பட்டன, ஆனால் எதுவும் பயனளிக்கவில்லை, மற்றும் நான்... 118 00:15:23,173 --> 00:15:26,592 நீங்கள் இதையெல்லாம் கேட்க வேண்டாம். இது கேட்பதற்கு பைத்தியக்காரத்தனமாக இருக்கும். 119 00:15:26,593 --> 00:15:27,678 இதைவிட பயங்கரமானதைக் கேட்டிருக்கிறேன். 120 00:15:29,263 --> 00:15:32,140 நோவா. ப்ளீஸ் வந்து மன்னிப்பு கேளு. 121 00:15:36,144 --> 00:15:37,354 நோவா. 122 00:15:45,237 --> 00:15:46,238 ஹேய். 123 00:15:49,741 --> 00:15:51,910 நீ இவரிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறாயா, அதாவது திரு... 124 00:15:52,452 --> 00:15:54,037 - ஈலை. - ஈலையிடம். 125 00:16:04,298 --> 00:16:05,339 இதுதான் என் வீடு. 126 00:16:05,340 --> 00:16:06,425 உண்மையாகவா? 127 00:16:12,306 --> 00:16:16,059 இது அவனுக்குப் பிடித்த பொழுதுபோக்கு. வரைவது. அற்புதமாக இருக்குதானே? 128 00:16:59,853 --> 00:17:01,229 ஹேய், நண்பா. 129 00:17:01,230 --> 00:17:03,649 நான் கொஞ்சம் தனிமையாக உணர்கிறேன். இன்றிரவு நான் உன்னுடன் தூங்கலாமா? 130 00:17:05,567 --> 00:17:06,902 சரி. 131 00:17:09,655 --> 00:17:12,406 நாம் டெடியை எடுப்போம். இதோ. 132 00:17:13,617 --> 00:17:14,617 சரி. 133 00:17:15,577 --> 00:17:16,578 ஆம். 134 00:17:17,119 --> 00:17:18,247 நோவா? 135 00:17:19,580 --> 00:17:22,376 இரவில் நீ வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது, சரியா? 136 00:17:23,210 --> 00:17:25,170 அல்லது வேறு நேரத்திலும் என் துணையின்றி போகக் கூடாது. 137 00:17:25,796 --> 00:17:26,797 சொல்வது புரிகிறதா? 138 00:17:28,006 --> 00:17:29,007 சரியா? 139 00:17:30,509 --> 00:17:31,510 சரி. 140 00:17:33,470 --> 00:17:34,638 உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். 141 00:18:33,822 --> 00:18:36,909 கேளு, உனக்கே என்னைப் பற்றித் தெரியும். எப்போதாவது உனக்கு இப்படி நடந்திருக்கா? 142 00:18:38,952 --> 00:18:40,912 வேறு ஒருவரின் கனவில் நீ இருப்பது போல தோன்றி இருக்கா? 143 00:18:40,913 --> 00:18:41,997 அடிக்கடி. 144 00:18:42,748 --> 00:18:47,502 இப்போது கூட, மனிதன் என்று கனவு காணும் ஒரு பட்டாம்பூச்சி போல உணர்கிறேன். 145 00:18:47,503 --> 00:18:49,795 - இங்கு கஞ்சாவெல்லாம் அனுமதிக்கிறார்களா? - என்ன? 146 00:18:49,796 --> 00:18:52,131 - இது மருத்துவ குணம் கொண்டது. - ம்-ம். 147 00:18:52,132 --> 00:18:54,426 - உனக்கும் கொஞ்சம் வேண்டுமா? - வேண்டாம். நீ தொடரு. 148 00:18:55,719 --> 00:18:58,596 சரி, யார் இந்தச் சிறுவன்? கிளையன்டா? 149 00:18:58,597 --> 00:19:00,723 இல்லை, திடீரென எங்கிருந்தோ வந்தான். 150 00:19:00,724 --> 00:19:02,975 ஒருவேளை உங்களுக்குள் தொடர்பிருக்கலாம். அதாவது, ஆன்மீக ரீதியாக. 151 00:19:02,976 --> 00:19:05,478 - இதற்கு முன் சந்தித்ததே இல்லை என சொல்கிறாய். - வேண்டாம், அந்த மாதிரி பேசாதே. 152 00:19:05,479 --> 00:19:07,188 - எந்த மாதிரி? - நான் சொல்வது உனக்கே புரியும். 153 00:19:07,189 --> 00:19:10,858 இந்த கிரகத்தில் உள்ள பாதி கலாச்சாரங்கள் ஒருவித ஆன்மீக உலகத்தையும், 154 00:19:10,859 --> 00:19:13,653 வாழ்வதிலுள்ள ஒருவித தொடர்ச்சியையும் நம்புகின்றன. 155 00:19:13,654 --> 00:19:17,156 சரி, உண்மையை எதிர்கொள்வதைத் தவிர்ப்பதற்காக, மக்கள் ஆன்மீக உலகைப் பற்றி 156 00:19:17,157 --> 00:19:19,700 எந்த ஆதாரமற்ற கோட்பாடுகளையும் இறுகப் பிடித்துக்கொள்வார்கள். 157 00:19:19,701 --> 00:19:21,786 மரணத்திற்குப் பிறகு வாழ்வு இருக்கிறது என்பதற்கு 158 00:19:21,787 --> 00:19:23,579 அறிவியல் ரீதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை. 159 00:19:23,580 --> 00:19:26,083 மக்கள் இறந்துவிட்டால், கதை முடிந்தது. 160 00:19:26,792 --> 00:19:29,545 அட, ஈலை, நீ உண்மையாக எப்படி உணர்கிறாய் என சொல். 161 00:19:32,005 --> 00:19:33,173 நான் எதையும் உணரவில்லை. 162 00:19:34,091 --> 00:19:35,801 நிஜத்தை ஏற்க முடியாமல் இருக்கிறேன். கேள்விப்பட்டதில்லையா? 163 00:19:36,885 --> 00:19:41,764 உனக்கு சிகிச்சையைவிட வேறு ஏதாவது தேவைப்படலாம். 164 00:19:41,765 --> 00:19:43,016 என்னது? 165 00:19:44,810 --> 00:19:46,019 அயாஹுவாஸ்கா. 166 00:19:47,145 --> 00:19:50,064 - நான் கிளம்பணும். உன்னுடன் பேசியதில் சந்தோஷம். - வேண்டாம். 167 00:19:50,065 --> 00:19:52,108 - என் ஷாமன். அவன்... - சரி, எனக்காக உன் ஷாமனுக்கு ஹாய் சொல். 168 00:19:52,109 --> 00:19:54,987 1969ஆம் ஆண்டின் இனிய புத்தாண்டு வாழ்த்து சொல். 169 00:19:56,864 --> 00:19:58,865 இதைச் செய்ய ஒப்புக்கொண்டதற்கு மிக்க நன்றி. 170 00:19:58,866 --> 00:20:01,033 நீ என்னைத் தொடர்ந்து தொந்தரவு செய்வதை என்னால் வேறு எப்படி தடுக்க முடியும்? 171 00:20:01,034 --> 00:20:02,618 ஃபைலை பார்த்தீர்களா? 172 00:20:02,619 --> 00:20:04,662 கொஞ்சம் பார்த்தேன். ஆனால், புதிதாகத் தொடங்க விரும்புகிறேன். 173 00:20:04,663 --> 00:20:05,998 சரி. 174 00:20:06,498 --> 00:20:07,540 சரி, இதோ இருக்கிறான். 175 00:20:07,541 --> 00:20:08,959 ஈலை, இவன்தான் நோவா. 176 00:20:23,432 --> 00:20:24,600 அட, என்ன இது? 177 00:20:28,103 --> 00:20:30,939 இவன் என் வீட்டிற்கு வந்தான், கெய்ல். அதுவும் இரண்டு முறை. 178 00:20:31,481 --> 00:20:32,608 அது ஒரு அறிகுறியாக இருக்கலாம். 179 00:20:33,233 --> 00:20:34,650 என்ன விளையாடுகிறாயா? 180 00:20:34,651 --> 00:20:37,612 பாருங்கள், ஈலை, அவன் எப்படி உங்கள் வீட்டிற்கு வந்தான் என்பதை என்னால் விளக்க முடியாது, சரியா? 181 00:20:37,613 --> 00:20:41,992 ஆனால், இரண்டு வருடங்களில் இந்தச் சிறுவன் ஐந்து வளர்ப்புக் குடும்பங்களில் இருந்திருக்கிறான். 182 00:20:42,659 --> 00:20:44,160 அவனுக்கு வேறு வழியே இல்லை. 183 00:20:44,161 --> 00:20:47,288 கவுண்டி மதிப்பீடு இவனை நேராக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் போகிறது. 184 00:20:47,289 --> 00:20:50,042 ஆனால், இப்பவும் அவனுக்கு உதவ முடியும் என்றால்? 185 00:20:51,793 --> 00:20:53,712 அவனுக்கு இன்னும் அவகாசம் இருந்தால்? 186 00:20:56,840 --> 00:20:59,051 ஆக, நீங்கள் இதைச் செய்வீர்களா? 187 00:21:01,845 --> 00:21:03,763 {\an8}நான் உன்னிடம் பேசலாம் என்று உன் வளர்ப்புத் தாய் சொன்னாங்க. 188 00:21:03,764 --> 00:21:04,847 {\an8}புதிய பதிவு 189 00:21:04,848 --> 00:21:07,434 எனவே, நாம பேசலாமா? 190 00:21:10,896 --> 00:21:12,731 ஹேய், ஒரு மாயாஜால விஷயத்தைப் பார்க்க விரும்புகிறாயா? 191 00:21:14,107 --> 00:21:16,692 இது இந்தக் கையில் இருக்கு. இப்போது இந்தக் கையில் இருக்கு. 192 00:21:16,693 --> 00:21:19,655 இப்போது, அது எங்கே போனது? 193 00:21:22,699 --> 00:21:25,577 எனக்குத் தெரிகிறது. அது எங்கே? இதோ இங்கே இருக்கு. 194 00:21:32,376 --> 00:21:33,377 உனக்கு ரயில்கள் பிடிக்குமா? 195 00:21:35,170 --> 00:21:36,171 எனக்கும் பிடிக்கும். 196 00:21:37,130 --> 00:21:38,882 உன் வீட்டில் ரயில்கள் உள்ளனவா? 197 00:21:43,512 --> 00:21:47,266 நோவா, நீ என் வீட்டிற்கு வந்துகொண்டே இருக்கிறாய். 198 00:21:48,225 --> 00:21:49,852 எதற்காக என்று உனக்கு ஏதாவது தெரியுமா? 199 00:21:50,727 --> 00:21:52,479 ஏதோவொரு வழியில் உனக்கு இந்த இடம் பரிச்சயமாக இருக்கா? 200 00:21:53,647 --> 00:21:55,566 இந்த இடம் உனக்கு எதையாவது நினைவுப்படுத்துகிறதா? 201 00:22:00,487 --> 00:22:02,197 அந்தப் புத்தகத்தை என் மனைவிதான் எழுதினாள். 202 00:22:03,282 --> 00:22:04,741 அவள் ஒரு கலைஞர். 203 00:22:05,617 --> 00:22:09,288 கலைஞராக இருந்தாள். உன்னைப் போலவே. 204 00:22:16,461 --> 00:22:17,462 என்ன ஆச்சு? 205 00:22:19,464 --> 00:22:20,757 நோவா, என்ன ஆச்சு? 206 00:22:25,721 --> 00:22:27,014 நோவா, என்ன விஷயம்? 207 00:22:29,099 --> 00:22:29,933 நோவா. 208 00:22:36,773 --> 00:22:38,192 நோவா, என்ன நடக்கிறது? 209 00:23:16,647 --> 00:23:18,397 நோவா, என்ன ஆச்சு? 210 00:23:18,398 --> 00:23:20,650 என்ன ஆச்சு? ஒன்றுமில்லை. நான் இங்குதான் இருக்கிறேன். 211 00:23:20,651 --> 00:23:22,276 என்ன நடக்கிறது? என்ன நடக்கிறது? 212 00:23:22,277 --> 00:23:24,570 - அவனை என்ன செய்தீர்கள்? - ஏதோ அவனைத் தூண்டிவிட்டது. 213 00:23:24,571 --> 00:23:26,489 - பரவாயில்லை. நான் பார்த்துக்கொள்கிறேன்! - சரி. 214 00:23:26,490 --> 00:23:29,868 செல்லம், இங்கே வா. என்னைப் பாரு. ஆழமாக சுவாசி. 215 00:23:32,955 --> 00:23:34,790 பரவாயில்லையா? உனக்கு ஒன்றுமில்லை. 216 00:24:05,863 --> 00:24:07,781 அதைக் கட்டுப்படுத்துங்கள், ஈலை. 217 00:24:10,576 --> 00:24:11,743 லின். 218 00:24:20,210 --> 00:24:21,962 இனி என்னால் இதைக் கையாள முடியாது. 219 00:24:27,009 --> 00:24:30,887 “நிறமற்ற பச்சை யோசனைகள் ஆவேசமாக தூங்குகின்றன.” 220 00:24:30,888 --> 00:24:35,392 இங்கு மொழி செயலாக்கத்தில் இரண்டு வெவ்வேறு நிலைகள் உள்ளன. 221 00:24:43,525 --> 00:24:45,985 - ஹாய். - ஈலை, எதற்காக இங்கு வந்தாய்? 222 00:24:45,986 --> 00:24:47,153 - சரி. - நீ நன்றாக இருக்கிறாயா? 223 00:24:47,154 --> 00:24:50,073 ஆம். டிரேக், நீ இதைக் கேட்க விரும்புகிறேன். 224 00:24:53,952 --> 00:24:54,952 நான் எதைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்? 225 00:24:54,953 --> 00:24:58,623 ஒரு எட்டு வயது சிறுவனுடனான என்னுடைய செஷனின் ஒலிப்பதிவு இது. 226 00:24:58,624 --> 00:25:00,334 அவன் என்ன சொல்கிறான் என்பதை நீ கண்டுபிடிக்க வேண்டும். 227 00:25:02,586 --> 00:25:05,546 அதைத்தான் நீ சொல்கிறாய் என்றால், அது எனக்குத் தெரிந்த மொழி கிடையாது. 228 00:25:05,547 --> 00:25:07,715 - ஆனால், அது மொழியாக இருக்கலாம்தானே? - அப்படித்தான் நினைக்கிறேன். 229 00:25:07,716 --> 00:25:08,841 அதை நான் எப்படி கண்டுபிடிப்பது? 230 00:25:08,842 --> 00:25:12,678 ஒரு சிறப்பு மொழிபெயர்ப்பாளரை நீ தொடர்புகொண்டாலே போதும். 231 00:25:12,679 --> 00:25:14,889 - அற்புதம். எனக்காக அதை ஏற்பாடு செய்வாயா? - முயற்சி செய்கிறேன். 232 00:25:14,890 --> 00:25:16,350 - நன்றி. - சரி. 233 00:25:18,227 --> 00:25:19,894 அது எட்டு வயது பையனா? 234 00:25:19,895 --> 00:25:23,022 ஆமாம், அவன் என்னிடம் எதையோ சொல்ல முயற்சிக்கிறான் என்று உனக்குத் தோன்றவில்லையா? 235 00:25:23,023 --> 00:25:25,066 அந்தச் சிறுவனுக்கு ஸ்வாஹிலி போன்ற மொழி தெரிந்திருக்கலாம். 236 00:25:25,067 --> 00:25:26,567 நான் மொழியியல் நிபுணர் அல்ல. 237 00:25:26,568 --> 00:25:29,279 அவனுக்கு ஸ்வாஹிலி தெரியாது. அவன் ஒரு எட்டு வயது சிறுவன். 238 00:25:29,988 --> 00:25:32,366 எனக்குப் புரியவில்லை. நீ ஆர்வமாக இருப்பாயே. 239 00:25:32,950 --> 00:25:37,329 - உனக்குத்தான் இது போன்ற விஷயங்கள் பிடிக்குமே. - ஆமாம், ஆனால், இது... 240 00:25:38,830 --> 00:25:39,915 என்ன? 241 00:25:40,874 --> 00:25:44,378 கல்லூரியில் காப்கிராஸ் நோய்க்குறி பற்றி நான் எழுதிய கட்டுரை உனக்கு நினைவிருக்கா? 242 00:25:44,962 --> 00:25:47,338 இந்தக் கோளாறால் நமக்கு ரொம்பவே நெருக்கமானவர்கள் அனைவரும் 243 00:25:47,339 --> 00:25:50,091 ஆள்மாறாட்டம் செய்பவர்களால் மாற்றப்பட்டதாகத் தோன்றும். 244 00:25:50,092 --> 00:25:52,135 ஆனால், உண்மையில் அது நாம்தான். 245 00:25:52,845 --> 00:25:53,971 நாம்தான் ஆள்மாறாட்டக்காரனாக இருப்போம். 246 00:25:54,805 --> 00:25:57,014 இது ஒரு வகையான அடையாள கோளாறு. 247 00:25:57,015 --> 00:25:58,766 யதார்த்தத்திற்கு நாம் அதிர்ச்சியடைந்து, 248 00:25:58,767 --> 00:26:02,104 திடீரென, நாம் விலக்கப்பட்டதாக உணர்வோம். 249 00:26:03,230 --> 00:26:04,398 அப்புறம், அது நான்தான். 250 00:26:06,024 --> 00:26:07,276 நான்தான் அந்த ஆள்மாறாட்டக்காரன். 251 00:26:08,569 --> 00:26:09,987 எனக்குப் புரியவில்லை. 252 00:26:11,697 --> 00:26:16,535 என் சொந்த மனைவிக்கே என்னால் உதவ முடியவில்லை என்றால் நான் எப்படி பிறருக்கு உதவுவேன்? 253 00:26:18,245 --> 00:26:22,457 ஈலை, நீ இன்னும் அந்த நிலையில் இருக்கிறாய். 254 00:26:23,250 --> 00:26:26,920 நீ எதிர்மறை சிந்தனைகளை ஒழிக்க ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். 255 00:27:18,514 --> 00:27:20,014 - யார்? - என்ன யார்? 256 00:27:20,015 --> 00:27:21,099 உங்களைத் தள்ளியது யார்? 257 00:27:21,808 --> 00:27:23,351 எனக்குத் தெரியாது. எனக்கு எந்த முகமும் தெரியவில்லை. 258 00:27:23,352 --> 00:27:25,144 ஆனால், அது யாரென உங்களுக்குத் தெரியும்தானே? 259 00:27:25,145 --> 00:27:27,104 அதை விடுங்கள். அது வெறும் கனவு. 260 00:27:27,105 --> 00:27:29,106 அது வெறும் கனவு என்று எனக்குக் கொஞ்சம் கூடத் தோன்றவில்லை. 261 00:27:29,107 --> 00:27:32,402 இந்த அறையில் நீங்கள் என்னிடம் சொன்ன, மிகவும் வெளிப்படுத்தும் விஷயங்களுள் இதுவும் ஒன்று. 262 00:27:33,028 --> 00:27:35,405 உண்மையாகவா? ஏன் அப்படி? 263 00:27:37,032 --> 00:27:40,118 நீங்கள் தொடர்ந்து காணும் இந்தக் கனவில், நீங்கள் இறக்கவில்லை. 264 00:27:40,827 --> 00:27:45,748 நீங்கள் நகராதபடிக்கு உங்கள் ஒவ்வொரு எலும்புகளையும் உடைத்துக் கொண்டிருக்கிறீர்கள். 265 00:27:45,749 --> 00:27:50,045 நீங்கள் சிக்கிக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் ஒரு உடைந்த, நொறுங்கிப் போன மனிதர். 266 00:27:52,548 --> 00:27:56,384 மேலும், லின்னின் தற்கொலையைக் குறித்து நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை 267 00:27:56,385 --> 00:28:00,055 ஏற்க மறுப்பதுதான் அதற்குக் காரணம் என்று நான் நினைக்கிறேன். 268 00:28:02,516 --> 00:28:04,351 அதை உணரக் கூட நீங்கள் பயப்படுகிறீர்கள் என நினைக்கிறேன். 269 00:28:22,452 --> 00:28:27,415 அடச்சே. லேரி! 270 00:28:27,416 --> 00:28:28,541 ஐயோ... அடச்சே! 271 00:28:28,542 --> 00:28:31,378 நாய் ஜாலியாக இருக்கும். கடவுளே, சரியான உதவாக்கரை. 272 00:28:32,045 --> 00:28:33,463 அடச்சே. ஐயோ. 273 00:31:49,701 --> 00:31:52,871 வாழ்த்துகள். மற்றும் உன்னை கவனித்துக்கொள், சரியா? 274 00:31:54,373 --> 00:31:55,206 {\an8}எங்களின் தனியுரிமை என்ஜின் 275 00:31:55,207 --> 00:31:56,708 {\an8}7,000-க்கும் மேற்பட்ட மொழிகளை குறிவிளக்கம் செய்ய பயனர்களுக்கு உதவுகிறது 276 00:32:00,379 --> 00:32:02,172 மொழியைக் கண்டறி 277 00:32:05,300 --> 00:32:07,469 ஆராய்கிறது... 278 00:32:15,769 --> 00:32:17,563 மொழி: டச்சு தொன்மையான 17ஆம் நூற்றாண்டு 279 00:32:24,069 --> 00:32:25,737 ஆடியோ மொழிபெயர்ப்பை ஒலிக்கவும் 280 00:32:27,573 --> 00:32:31,535 எனக்கு பயமாக இருக்கு. காப்பாற்றுங்கள். தயவுசெய்து என்னைக் காப்பாற்றுங்கள். 281 00:32:32,744 --> 00:32:36,582 எனக்கு பயமாக இருக்கு. காப்பாற்றுங்கள். தயவுசெய்து என்னைக் காப்பாற்றுங்கள். 282 00:32:37,457 --> 00:32:38,667 எனக்கு பயமாக இருக்கு. 283 00:32:42,296 --> 00:32:43,589 நான் நோவாவிடம் பேச வேண்டும். 284 00:32:49,011 --> 00:32:51,138 நான் ஒரு நோயாளியைப் பார்க்க வந்திருக்கிறேன். நோவா ஸாயர். 285 00:32:54,057 --> 00:32:56,851 - அவன் எங்கே இருக்கிறான்? - ஒரு நிமிடத்திற்கு முன்புதான் அவனைப் பார்த்தேன். 286 00:32:56,852 --> 00:32:58,020 அடச்சே. 287 00:32:58,729 --> 00:32:59,813 நோவா? 288 00:33:08,655 --> 00:33:09,656 நோவா? 289 00:33:18,373 --> 00:33:19,458 நோவா. 290 00:33:20,584 --> 00:33:21,959 ஒன்றுமில்லை. 291 00:33:21,960 --> 00:33:23,504 நீ இப்போது பாதுகாப்பாக இருக்கிறாய். 292 00:33:27,257 --> 00:33:29,259 “நான் உனக்கு உதவுவேன்.” 293 00:33:30,511 --> 00:33:31,428 “...உனக்கு உதவுவேன்.” 294 00:33:49,988 --> 00:33:52,448 நோவா, நீ எதைப் பார்த்து இப்படி பயப்படுகிறாய்? 295 00:33:52,449 --> 00:33:53,909 உனக்குத் தெரியுமா? 296 00:34:20,811 --> 00:34:22,020 அடச்சே. 297 00:35:42,100 --> 00:35:44,102 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்