1 00:01:00,185 --> 00:01:02,187 இனி என்னால் இதைக் கையாள முடியாது. 2 00:01:04,605 --> 00:01:06,275 இனி என்னால் இதைக் கையாள முடியாது. 3 00:01:09,486 --> 00:01:11,238 இனி என்னால் இதைக் கையாள முடியாது. 4 00:01:13,782 --> 00:01:15,617 இனி என்னால் இதைக் கையாள முடியாது. 5 00:01:18,954 --> 00:01:20,873 இனி என்னால் இதைக் கையாள முடியாது. 6 00:01:23,876 --> 00:01:25,752 இனி என்னால் இதைக் கையாள முடியாது. 7 00:01:27,004 --> 00:01:28,212 அடச்சே. 8 00:01:28,213 --> 00:01:30,548 அந்தச் சிறுவன் அப்படியே உன்னைப் போலவே பேசுகிறான். 9 00:01:30,549 --> 00:01:32,759 ஆமாம், எனக்கும் அது தெரிகிறது. 10 00:01:35,179 --> 00:01:41,976 ஆக, இவன் ஒரு நிலையற்ற, ஆத்திரமும் பயமும் நிறைந்த ஒரு கலை மேதை, டச்சு மொழி பேசுபவன் 11 00:01:41,977 --> 00:01:44,896 மற்றும் ஈலை போலவும் அப்படியே பேசுகிறான். 12 00:01:44,897 --> 00:01:47,524 வேறு என்ன? அவன் தனது காதை அறுத்துக்கொண்டானா? 13 00:01:49,026 --> 00:01:51,235 சரி, என்ன நடக்கிறது என நினைக்கிறாய்? 14 00:01:51,236 --> 00:01:52,988 எனக்கு ஒன்றும் புரியவில்லை. 15 00:01:54,031 --> 00:01:56,157 தெரியவில்லை. ஒருவேளை நான் இதில் அதிகமாக மூழ்கிவிட்டேன் போல. 16 00:01:56,158 --> 00:01:58,076 இதில் நான் எதையோ கவனிக்கத் தவறுவது போலத் தோன்றுகிறது. 17 00:01:58,660 --> 00:02:00,995 ஒரு விதமான செய்தி. அதாவது, என்னை நன்றாகத் தெரிந்தவன் போல, 18 00:02:00,996 --> 00:02:02,872 என்னைப் பற்றி ஏதோ தெரிந்தது போல நடந்துகொள்கிறான். 19 00:02:02,873 --> 00:02:03,957 அதுசரி. 20 00:02:04,458 --> 00:02:05,959 லின்னிடம் இருந்து செய்தி வருவது போல. 21 00:02:08,211 --> 00:02:10,506 - நான் அப்படிச் சொல்லவில்லை. - ஏன் இருக்கக் கூடாது? 22 00:02:11,298 --> 00:02:14,550 உன் மனைவி இறந்துவிட்டாள், அவளிடம் இருந்து நீ ஏதோ செய்தியை எதிர்பார்ப்பது போல 23 00:02:14,551 --> 00:02:17,679 - இருப்பது சரிதான். - இதற்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை. 24 00:02:18,180 --> 00:02:19,681 இச்சிறுவன் மோசமான நிலையில் இருக்கிறான், 25 00:02:20,265 --> 00:02:22,433 இங்கு என்ன நடக்கிறது என்பதற்கான அறிவியல் ரீதியான விளக்கத்தைத்தான் 26 00:02:22,434 --> 00:02:23,976 நான் எதிர்பார்க்கிறேன், ஜாக்சன். 27 00:02:23,977 --> 00:02:26,354 ஆதாரத்துடனான ஒரு காரணம். 28 00:02:26,355 --> 00:02:27,980 எல்லாமே உண்மையைச் சார்ந்தது இல்லை. 29 00:02:27,981 --> 00:02:29,608 உண்மையாக இருக்கும் விஷயங்கள் மட்டும்தான். 30 00:02:30,442 --> 00:02:35,029 உன்னுடைய முக்கிய பலமும் பலவீனமும் நீ கண்ணைக் கட்டிக்கொண்டு யோசிப்பதுதான் என்று 31 00:02:35,030 --> 00:02:36,740 லின் அடிக்கடி சொல்வாள். 32 00:02:38,242 --> 00:02:39,367 எப்போது? 33 00:02:39,368 --> 00:02:40,451 என்ன எப்போது? 34 00:02:40,452 --> 00:02:42,037 என்னைப் பற்றி எப்போது இப்படி சொன்னாள்? 35 00:02:42,996 --> 00:02:44,414 எப்போதுமே, நாண்பா. 36 00:02:45,082 --> 00:02:46,291 எப்போதுமே. 37 00:02:48,669 --> 00:02:49,670 என்ன? 38 00:02:51,129 --> 00:02:53,882 - ஹேய், கேள்... - இல்லை... உன்னால் இல்லை. 39 00:02:56,426 --> 00:02:57,803 நான் அவள் பிரிவால் வாடுகிறேன். 40 00:03:03,225 --> 00:03:04,226 எனக்குத் தெரியும். 41 00:03:57,112 --> 00:03:58,238 லேரி? 42 00:04:00,157 --> 00:04:01,200 என்ன, குட்டி? 43 00:05:19,194 --> 00:05:22,948 சரி, உன்னையும் டெடியையும் தூங்க வைக்கலாம். 44 00:05:25,325 --> 00:05:26,577 உனக்கு ஒன்றுமில்லையே? 45 00:05:27,661 --> 00:05:29,121 அடக் கடவுளே. 46 00:05:29,621 --> 00:05:31,206 நீ நடுங்குகிறாய். 47 00:05:33,917 --> 00:05:36,253 ஒன்றுமில்லை. உனக்கு ஒன்றும் ஆகாது. சரியா? 48 00:05:37,337 --> 00:05:40,591 நீ நன்றாகத் தூங்கு, காலையில் முதல் வேலையாக உன்னை வந்து பார்க்கிறேன். 49 00:05:48,265 --> 00:05:50,267 எனக்கு ஏன் பரிசோதனைகள் செய்தார்கள்? 50 00:05:52,144 --> 00:05:55,355 உனக்கு ஒன்றுமில்லை என்று உறுதிசெய்ய, அதோடு உனக்கு ஒன்றுமில்லை. 51 00:05:56,481 --> 00:05:59,151 நாங்கள் சில விஷயங்களைக் கண்டறிய வேண்டும், அதை நிச்சயம் அறிந்துகொள்வோம். 52 00:06:01,778 --> 00:06:06,200 ஹே, கிளம்புவதற்கு முன் ஒரு தாலாட்டு பாடவா? 53 00:06:11,288 --> 00:06:13,916 வா. நாம் கட்டிப்பிடித்துக்கொள்ளலாம். 54 00:06:16,835 --> 00:06:19,880 இதோ இப்படி. இதோ இப்படி. 55 00:06:22,966 --> 00:06:28,847 நீதான் என் பிரகாசமான ஒளி 56 00:06:29,681 --> 00:06:32,309 என் ஒரே பிரகாசமான ஒளி 57 00:06:33,268 --> 00:06:38,690 எதுவும் சரியாக இல்லாத நேரத்தில் நீ எனக்கு சந்தோஷமளிக்கிறாய் 58 00:06:40,234 --> 00:06:46,406 நான் உன்னை எவ்வளவு நேசிக்கிறேன் என உனக்குத் தெரியவே தெரியாது 59 00:06:47,824 --> 00:06:52,621 தயவுசெய்து என் ஒளியை எடுத்துச் சென்றுவிடாதே 60 00:07:08,679 --> 00:07:10,930 உணர்வு நிலை: நோவா பதட்டம், பயம் மற்றும் 61 00:07:10,931 --> 00:07:13,559 உணர்ச்சிக் கோளாறு ஆகியவற்றின் அறிகுறிகளை வெளிப்படுத்துகிறான். 62 00:07:29,324 --> 00:07:31,034 நோவா 63 00:07:36,039 --> 00:07:38,541 சில சமயம் பேச்சின்மை வன்முறை - பயங்கள் - பயங்கரம் 64 00:07:38,542 --> 00:07:39,585 பிடிஎஸ்டி? 65 00:07:41,920 --> 00:07:43,588 {\an8}புத்திகூர்மை - கலையியல் திறன்கள் 66 00:07:43,589 --> 00:07:46,675 {\an8}முதற்கட்ட ஆய்வறிக்கை - டிஐடி டிசோசியேடிவ் ஐடென்டிடி டிஸ்ஆர்டர் 67 00:09:40,998 --> 00:09:46,085 நான் ஒருவர் மீதுள்ள உணர்வை மற்றொருவர் மீது திசைதிருப்புகிறேன் போலிருக்கிறது. 68 00:09:46,086 --> 00:09:48,629 அது அப்படியே என் கனவுகளில் பரவுவது போலுள்ளது. 69 00:09:48,630 --> 00:09:51,257 - ஆக, நீங்கள் சரியாக தூங்கவில்லை. - என் கருத்து உங்களுக்குப் புரியவில்லை. 70 00:09:51,258 --> 00:09:54,136 நோவாவின் வழக்கு மிகவும் தனித்துவமானது என்பதுதான் உங்கள் கருத்து. 71 00:09:54,636 --> 00:09:56,722 தீர்வு காண வேண்டிய ஒரு வினோதமான புதிர். 72 00:09:57,556 --> 00:09:59,390 நீங்கள் ஓய்வு பெற்றுவிட்டீர்கள் என்று நினைத்தேன். 73 00:09:59,391 --> 00:10:01,851 போன முறை நீங்கள் இங்கு வந்தபோது, பணி ஓய்வு பெறுவது பற்றி பேசினீர்கள். 74 00:10:01,852 --> 00:10:03,060 ஆமாம். 75 00:10:03,061 --> 00:10:04,605 என் வழக்குகளை கைமாற்றுகிறேன். 76 00:10:05,314 --> 00:10:07,733 இந்த கடைசி வழக்கை மட்டும் தீர்த்துவிட்டு, பிறகு விலகிவிடுவேன். 77 00:10:09,234 --> 00:10:10,651 வங்கிக் கொள்ளையன் போல. 78 00:10:10,652 --> 00:10:12,905 - இறுதி முயற்சி. - ஆமாம். 79 00:10:14,573 --> 00:10:15,908 ஒரு இறுதி வாய்ப்பு. 80 00:10:16,575 --> 00:10:19,994 மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடையே இந்தளவுக்கு உணர்வுகள் பரிமாறப்படும்போது, 81 00:10:19,995 --> 00:10:23,039 அந்த நோயாளியை வேறு ஒருவரிடம் அனுப்புவதுதானே வழக்கம்? 82 00:10:23,040 --> 00:10:24,833 ஆமாம். வழக்கமாக அப்படித்தான் நடக்கும். 83 00:10:25,667 --> 00:10:27,211 ஆனால், இந்த வழக்கு ரொம்ப வித்தியாசமானது, 84 00:10:27,711 --> 00:10:31,422 அதை நான் தொடராமல் இருந்தால், உண்மையில் அது என் அலட்சியமாக இருக்கலாம் என நினைக்கிறேன். 85 00:10:31,423 --> 00:10:32,590 சரி. 86 00:10:32,591 --> 00:10:36,552 அல்லது மிகவும் வித்தியாசமாகத் தெரியும் 87 00:10:36,553 --> 00:10:41,599 இந்த வழக்கானது, நீங்கள் நிஜத்தை ஏற்காதபடி இருப்பதற்காக 88 00:10:41,600 --> 00:10:45,187 உங்கள் மனம் அப்படி நினைத்துக்கொள்வதால் மிகவும் தனித்துவமாகத் தெரியலாம். 89 00:10:45,687 --> 00:10:47,105 எதை ஏற்க மறுக்கிறேன்? 90 00:10:50,484 --> 00:10:51,485 சும்மா சொன்னேன். 91 00:10:53,820 --> 00:10:56,030 ஈலை, உண்மையாகவே நான் உங்களுக்கு உதவத்தான் விரும்புகிறேன். 92 00:10:56,031 --> 00:10:58,115 ஆனால், நான் அதை விரைவிலோ அல்லது பிற்பாடோ செய்வதற்கு 93 00:10:58,116 --> 00:11:00,953 லின்னைப் பற்றி நீங்கள் என்னிடம் பேசத் துவங்க வேண்டும். 94 00:11:04,915 --> 00:11:05,916 எனக்குத் தெரியும். 95 00:11:08,252 --> 00:11:09,670 தெரியும், எனக்கு... 96 00:11:13,090 --> 00:11:14,841 எனக்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் தேவை. 97 00:11:14,842 --> 00:11:17,719 சரி. எதற்காக இந்த அவகாசம்? 98 00:11:22,015 --> 00:11:24,017 எப்படி விளக்குவது என்பதை அறிவதற்கான அவகாசம்... 99 00:11:26,186 --> 00:11:27,354 எதை விளக்க? 100 00:11:33,110 --> 00:11:34,528 என்ன சொல்கிறீர்கள்? 101 00:11:46,582 --> 00:11:47,791 இதோ. 102 00:12:00,053 --> 00:12:01,470 ரொம்ப நல்லது. 103 00:12:01,471 --> 00:12:05,309 சரி, கேளு, இன்று உனக்கு ஒரு விளையாட்டை வைத்திருக்கிறேன். 104 00:12:06,393 --> 00:12:09,478 அது மேட் கேம் அல்ல. எனவே காய்கள் இருக்காது. இது சத்தியம். 105 00:12:09,479 --> 00:12:13,358 சொல்லப் போனால், நீ எதுவுமே செய்ய வேண்டியதில்லை. 106 00:12:14,610 --> 00:12:20,657 உன் கண்களால் என் விரல் போகும் திசையில் பார்த்தால் மட்டும் போதும். 107 00:12:24,870 --> 00:12:27,664 தலையை அசைக்காதே, கண்களை மட்டும் அசை. 108 00:12:28,790 --> 00:12:31,168 வலது மற்றும் இடது. 109 00:12:32,211 --> 00:12:33,503 இது எளிமையாக இருக்கு. 110 00:12:33,504 --> 00:12:35,631 அற்புதம். அப்படித்தான். 111 00:12:41,345 --> 00:12:46,600 வலது மற்றும் இடது. 112 00:12:49,353 --> 00:12:52,523 இப்போது உன் நினைவிற்கு வரும் கடந்த கால விஷயத்தை நீ மீண்டும் நினைக்க வேண்டும். 113 00:12:55,359 --> 00:12:59,571 உன் ஞாபகத்திற்கு வரும் முதல் விஷயம். நீ சிறுவனாக இருந்தபோது உனக்கு இருந்த... 114 00:13:02,157 --> 00:13:05,827 ஒரு உணர்வை, ஒரு வலுவான உணர்வை நினைவுகூர முயற்சி செய். 115 00:13:07,246 --> 00:13:10,666 அது கோபமாகவோ, பயமாகவோ இருக்கலாம். 116 00:13:14,336 --> 00:13:15,712 நீ அதைப் பற்றி நினைக்கிறாயா? 117 00:13:16,380 --> 00:13:17,381 நல்லது. 118 00:13:18,924 --> 00:13:19,967 சரி. 119 00:13:28,350 --> 00:13:31,562 இப்போது அதை உன் மனதில் படமாக்கு. 120 00:13:37,109 --> 00:13:38,735 நீ அங்கு இருப்பது போல கற்பனை செய். 121 00:13:48,537 --> 00:13:52,624 நீ பார்ப்பதை, கேட்பதை, உணர்வதைப் பற்றி யோசி. 122 00:13:58,297 --> 00:13:59,506 நோவா? 123 00:14:00,799 --> 00:14:01,800 நோவா? 124 00:14:07,848 --> 00:14:09,474 அதை இப்போது வரை, நோவா. 125 00:14:10,058 --> 00:14:11,977 நீ பார்ப்பதை வரை. என்னிடம் காட்டு. 126 00:14:17,441 --> 00:14:18,734 அருமை, நோவா. 127 00:14:20,235 --> 00:14:21,278 வரைந்துகொண்டே இரு, நோவா. 128 00:14:39,671 --> 00:14:41,173 நான் அவனை காயப்படுத்திவிட்டேன். 129 00:14:42,591 --> 00:14:43,926 ஆனால், அவனுக்கு ஒன்றும் ஆகவில்லை. 130 00:14:44,593 --> 00:14:46,720 அதை எதற்காக செய்தாய் என ஞாபகமிருக்கா? 131 00:14:48,472 --> 00:14:51,183 - என்னிடம் ஏதோ பிரச்சினை இருக்கு. - அது என்னது? 132 00:14:54,561 --> 00:14:55,604 நோவா? 133 00:15:00,150 --> 00:15:01,193 குளிர்கிறது. 134 00:15:01,985 --> 00:15:03,736 குளிர்கிறது. 135 00:15:03,737 --> 00:15:05,447 ஒன்றுமில்லை. ஒன்றுமில்லை. 136 00:15:08,575 --> 00:15:09,576 சரி. 137 00:15:11,912 --> 00:15:12,955 ஒன்றுமில்லை. 138 00:15:14,873 --> 00:15:15,874 சரி. 139 00:15:40,148 --> 00:15:42,024 சரி, உணர்வுகள் பரிமாறப்படுதல், 140 00:15:42,025 --> 00:15:45,194 குறிப்பிட்ட விதமான மிமிக்ரி மற்றும் சில சமயம் பேச்சின்மை பிரச்சினை உள்ளது. 141 00:15:45,195 --> 00:15:49,532 மற்றும் சூழ்நிலை மறதியுடன் தொடர்புடைய தொடர் மூர்க்கமும் உள்ளன. 142 00:15:49,533 --> 00:15:52,702 அதோடு எவ்வித விளக்கமும் இல்லாத முறையில், வேறு மொழியும் தெரிந்திருக்கு. 143 00:15:52,703 --> 00:15:54,537 அற்புதம். சரி. 144 00:15:54,538 --> 00:15:59,083 கடந்த ஆறு வருடங்களாக உள்ள உங்களின் பரிந்துரைகள் மற்றும் நோயாளிகளின் பட்டியலைப் பார்த்தேன், 145 00:15:59,084 --> 00:16:01,085 அதோடு நான் பார்த்த வரையில், 146 00:16:01,086 --> 00:16:04,381 நீங்கள் இந்தச் சிறுவனை தொழில் ரீதியாகவே அணுகவில்லை. 147 00:16:06,091 --> 00:16:08,050 எனக்குத் தெரியாது. ஒருவேளை அவனை வெளியே எங்காவது பார்த்திருக்கலாம். 148 00:16:08,051 --> 00:16:11,220 நிச்சயமாக. மூத்த குடிமக்கள்/மழலையர் பள்ளி மிக்ஸரில் பார்த்திருப்பேன். 149 00:16:11,221 --> 00:16:12,597 கேட்கவே ஜாலியாக இருக்கு. 150 00:16:12,598 --> 00:16:13,849 அனைவருக்கும் குழந்தைகளுக்கான உணவுதானா? 151 00:16:14,683 --> 00:16:15,726 ஆம். 152 00:16:17,895 --> 00:16:19,353 நீங்கள் அதை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். 153 00:16:19,354 --> 00:16:21,606 நான் ஒரு டாக்டர், நானே பரிசோதித்துவிட்டேன். 154 00:16:21,607 --> 00:16:23,233 ம்-ம். நிச்சயமாக செய்திருப்பீர்கள். 155 00:16:26,028 --> 00:16:27,487 சரி, நான் சென்று தட்டச்சு செய்வதே மேல். 156 00:16:32,117 --> 00:16:33,160 சற்று பொறு. 157 00:16:35,329 --> 00:16:37,163 நீ இதைப் பற்றி விசாரிக்க வேண்டும். 158 00:16:37,164 --> 00:16:38,874 அது எந்த இடம் என அறிய முடிகிறதா என்று பாரு. 159 00:16:39,666 --> 00:16:41,502 சரி, நான் முயற்சிக்கிறேன். 160 00:16:42,044 --> 00:16:43,420 யார் பிடபிள்யு? 161 00:16:44,671 --> 00:16:45,755 சரியாகத் தெரியவில்லை. 162 00:16:45,756 --> 00:16:47,049 அது கேஸிற்காகவா? 163 00:16:49,092 --> 00:16:50,511 உண்மையைச் சொல்லணும் என்றால், எனக்குத் தெரியாது. 164 00:16:52,888 --> 00:16:53,971 ஹாய். 165 00:16:53,972 --> 00:16:55,556 நீங்கள் வந்துவிட்டீர்களே. 166 00:16:55,557 --> 00:16:59,436 ஆம். தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும். வேலை இருந்தது. 167 00:17:02,272 --> 00:17:03,981 - ஹாய். - ஹாய். 168 00:17:03,982 --> 00:17:05,651 பாட்டியை அழைத்து வந்தீர்களா? 169 00:17:06,443 --> 00:17:08,403 ஓ, இல்லை, அன்பே. 170 00:17:10,781 --> 00:17:11,990 பாட்டி இறந்துட்டாங்க. 171 00:17:12,907 --> 00:17:13,992 நினைவிருக்கா? 172 00:17:14,952 --> 00:17:17,663 எனவே, அவங்களால் இவருடன் வர முடியாது. 173 00:17:18,789 --> 00:17:24,376 ஆனால், அவங்க சொர்க்கத்திலும், நம்மைச் சுற்றியும்தான் இருக்காங்க. 174 00:17:24,377 --> 00:17:26,295 ஹேய், சோஃபி. உனக்கு என்ன கொண்டு வந்திருக்கிறேன் என பார். 175 00:17:26,296 --> 00:17:27,381 சில்லறை காசுகள். 176 00:17:28,089 --> 00:17:29,091 நன்றி. 177 00:17:32,219 --> 00:17:33,512 கொஞ்ச நேரத்தில் உன்னைப் பார்க்கிறேன். 178 00:17:36,598 --> 00:17:39,600 “பாட்டி சொர்க்கத்திலும் நம்மைச் சுற்றியும்தான் இருக்காங்க.” 179 00:17:39,601 --> 00:17:42,603 பாட்டி ஒரு மாயாஜால யுனிகார்னாக மாறிவிட்டதாகவே நீ சொல்லியிருக்கலாமே? 180 00:17:42,604 --> 00:17:45,148 நான் என்னதான் சொல்லணும் என விரும்புகிறீங்க, அப்பா? 181 00:17:45,649 --> 00:17:47,567 என் பாட்டி இறந்தபோது, சாவு என்பது 182 00:17:47,568 --> 00:17:50,319 நம்முடைய பேட்டரி தீர்ந்து போவது மற்றும் அதை மாற்ற இயலாது என்று நானும் 183 00:17:50,320 --> 00:17:51,529 உங்களைப் போல சொல்ல வேண்டுமா? 184 00:17:51,530 --> 00:17:52,655 நான் அப்படி சொல்லவே இல்லை. 185 00:17:52,656 --> 00:17:54,867 என் தரப்பில் பார்த்தால், அது கற்றலுக்கான நேரம். 186 00:17:55,742 --> 00:17:58,703 என் குழந்தைப் பருவமே கற்றலுக்கான நேரம்தான். 187 00:17:58,704 --> 00:18:00,621 ஓ, உண்மையாகவா? நாம் அந்தளவுக்கு பின்னோக்கிப் போகப் போகிறோமா? 188 00:18:00,622 --> 00:18:02,791 ஏனென்றால் இந்த டின்னருக்காக நான் ஒரு மணிநேரம் மட்டுமே ஒதுக்கியுள்ளேன். 189 00:18:03,292 --> 00:18:04,501 நகைச்சுவைக்கு நேரம் ஒதுக்குவது. 190 00:18:05,127 --> 00:18:06,210 வேடிக்கையாக உள்ளது. 191 00:18:06,211 --> 00:18:07,670 நீ இன்னமும் என் மீது கோபமாக இருக்கிறாய். 192 00:18:07,671 --> 00:18:09,672 சரி, நான் எதற்காக உங்கள் மீது கோபப்படப் போகிறேன்? 193 00:18:09,673 --> 00:18:11,757 பாரு, நான் சொன்னது போல, என் ஃபோனில் சார்ஜ் இல்லை, 194 00:18:11,758 --> 00:18:14,219 எனக்கு அது தெரியாது, அது வந்து... 195 00:18:15,846 --> 00:18:19,056 நான் மன்னிப்புதான் கேட்க முயற்சிக்கிறேன். 196 00:18:19,057 --> 00:18:21,143 இதோ சொல்லிவிட்டீர்கள். அது அவ்வளவு கடினமாக இருந்ததா? 197 00:18:21,727 --> 00:18:22,978 உங்கள் மன்னிப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன். 198 00:18:24,146 --> 00:18:26,148 - உங்கள் கேக்கையும். - அது ஆப்பிள் சுவை. 199 00:18:26,648 --> 00:18:27,691 அப்படியே இருக்கட்டும். 200 00:18:30,611 --> 00:18:32,904 நீங்கள் வீட்டை விற்க தயாராக உள்ளீர்கள் என்று சூ ஆன் சொன்னாள். 201 00:18:32,905 --> 00:18:35,823 இல்லை. உன்னை அழைத்து பேசும்படிதான் நான் அவளிடம் சொன்னேன். 202 00:18:35,824 --> 00:18:39,869 அருமை. நீங்கள் வாழ்வதற்கு தகுந்த சில சூழ்நிலைகளை நான் ஏற்கனவே பார்த்துவிட்டேன். 203 00:18:39,870 --> 00:18:41,579 நாம் முன்கூட்டியே திட்டமிட வேண்டாம், சரியா? 204 00:18:41,580 --> 00:18:46,585 இப்போதைக்கு வீட்டுமனை சந்தை, கணிக்க முடியாத சந்தையாக உள்ளது எனவே இது கொஞ்ச காலம் எடுக்கலாம். 205 00:18:47,961 --> 00:18:50,797 இப்போது நீ என்னை அனுமதித்தால், நான் இயற்கையின் அழைப்பை ஏற்க வேண்டும். 206 00:19:14,571 --> 00:19:17,324 இதோ ஒரு மாயாஜால யுனிகார்ன் போல இங்கு வந்திருக்கிறேன். 207 00:19:17,824 --> 00:19:19,451 தயவுசெய்து நிறுத்துகிறாயா? 208 00:19:25,791 --> 00:19:26,917 அப்பா? 209 00:19:28,669 --> 00:19:30,587 எதை நிறுத்த வேண்டும்? யாரிடம் பேசுகிறீர்கள்? 210 00:19:50,524 --> 00:19:52,191 நான் உங்களை உளவு பார்க்கவில்லை. 211 00:19:52,192 --> 00:19:54,819 நீங்கள் உங்களிடம் பேசிக்கொண்டிருந்தது தற்செயலாக என் காதில் விழுந்தது. 212 00:19:54,820 --> 00:19:57,071 நான் என்னிடம் பேசிக்கொண்டிருக்கவில்லை. 213 00:19:57,072 --> 00:19:59,157 அப்படியென்றால் யாரிடம் பேசிக்கொண்டிருந்தீர்கள்? 214 00:20:01,118 --> 00:20:03,035 பார்த்தீர்களா? இதைப் பற்றித்தான் நான் பேசுகிறேன். 215 00:20:03,036 --> 00:20:06,497 இந்த உணர்வுகளை எல்லாம் நீங்கள் உங்களுக்குள் அடக்கி வைத்தது போல இருக்கு. 216 00:20:06,498 --> 00:20:08,749 கேளு, நாம் அனைவரும் நம்முடைய வழியில் இதைக் கையாளுகிறோம். 217 00:20:08,750 --> 00:20:11,837 அப்படியா? ஏனென்றால் இதை நாம் கையாளவே இல்லை என்பது போலத் தோன்றுகிறது. 218 00:20:12,462 --> 00:20:13,588 எனக்கு எது வேண்டாம் என தெரியுமா? 219 00:20:13,589 --> 00:20:17,216 என் ஒவ்வொரு நகர்வையும் நீ ஆராய்ச்சி செய்ய வேண்டியதில்லை. 220 00:20:17,217 --> 00:20:20,803 தன் கட்டுப்பாட்டை இழந்த ஒரு பைத்தியக்காரன் போல நீ என்னை உணர வைக்கிறாய். 221 00:20:20,804 --> 00:20:22,013 எனக்கு எது வேண்டாம் என உங்களுக்குத் தெரியுமா? 222 00:20:22,014 --> 00:20:24,223 அது நடக்கவில்லை என்பது போல நீங்கள் காட்டிக்கொள்வது எனக்கு வேண்டாம். 223 00:20:24,224 --> 00:20:28,103 அது நடந்துவிட்டது, சரியா? அவங்க போயிட்டாங்க, திரும்ப வரவும் மாட்டாங்க. 224 00:20:29,521 --> 00:20:30,771 அம்மா. 225 00:20:30,772 --> 00:20:33,609 ஹேய், சோஃபி. 226 00:20:34,234 --> 00:20:36,653 - ஹேய், அது யாருக்காக? - பாட்டிக்கு. 227 00:20:37,654 --> 00:20:40,866 தன் பாட்டிக்காக ஒரு மெழுகுவர்த்தி கிடைக்குமா என முன்னமே சோஃபி கேட்டாள். 228 00:20:41,783 --> 00:20:43,076 அது சரியா? 229 00:20:45,370 --> 00:20:48,665 நிச்சயமாக சரி. ஏன் அது சரியாக இருக்காது? 230 00:20:49,708 --> 00:20:50,751 நன்றி, செல்லம். 231 00:21:35,587 --> 00:21:36,713 பரவாயில்லை, அப்பா. 232 00:21:38,173 --> 00:21:39,758 உங்களை நீங்களே நொந்துகொள்கிறீர்கள் என்று தெரியும், 233 00:21:40,717 --> 00:21:42,845 ஆனால் உங்களால் எதுவும் செய்திருக்க முடியாது. 234 00:21:44,638 --> 00:21:46,557 நீங்கள் உங்களிடமே கடினமாக நடந்துகொள்ளக் கூடாது. 235 00:21:47,724 --> 00:21:48,851 ப்ளீஸ். 236 00:21:56,942 --> 00:22:00,194 - ட-டா. ஹேய். - யேய். 237 00:22:00,195 --> 00:22:01,446 இதோ. 238 00:22:07,452 --> 00:22:08,537 அவை என் வேலை சம்பந்தப்பட்டது. 239 00:22:09,621 --> 00:22:10,664 சரி. 240 00:22:11,915 --> 00:22:13,208 பரவாயில்லை. நான் எடுக்கிறேன். 241 00:22:15,711 --> 00:22:18,004 அவன் கழுத்தில் உள்ள கெட்ட விஷயத்தைத்தான் இவன் குத்துகிறான். 242 00:22:18,005 --> 00:22:19,548 இல்லை, அவன்... 243 00:22:23,343 --> 00:22:24,386 பார்த்தீர்களா? 244 00:22:27,639 --> 00:22:28,723 அடக் கடவுளே. 245 00:22:28,724 --> 00:22:29,933 அப்பா? 246 00:22:30,934 --> 00:22:32,518 - நான் கிளம்பணும். - என்ன விஷயம்? 247 00:22:32,519 --> 00:22:35,189 நான் கிளம்பணும். 248 00:22:42,487 --> 00:22:44,614 - ஒன்றுமில்லை. அவன் நலமாக இருக்கிறான். - என்ன? 249 00:22:44,615 --> 00:22:46,032 என்ன நடந்தது? 250 00:22:46,033 --> 00:22:48,409 அவன் ஏறக்குறைய மூழ்கியிருப்பான். 251 00:22:48,410 --> 00:22:49,578 என்ன? 252 00:22:51,455 --> 00:22:53,623 - நீ எங்கே இருந்தாய்? - ஷிஃப்ட் மாறிவிட்டது. 253 00:22:53,624 --> 00:22:55,249 அவன் நீர் அருகே சென்றானா? அதாவது, என்ன நீர்? 254 00:22:55,250 --> 00:22:56,959 அவனது மேசையில் ஒரு கப் இருந்தது. 255 00:22:56,960 --> 00:22:58,628 என்ன உளறுகிறாய்? 256 00:22:58,629 --> 00:23:00,338 ஒரு கப் நீரில் அவனால் மூழ்க முடியாது. 257 00:23:00,339 --> 00:23:03,633 எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவனது நுரையீரலில் நீர் நிறைந்திருந்தது. 258 00:23:03,634 --> 00:23:06,886 இது குழந்தைகளுக்கான மனநல பிரிவு. ஒரு குழந்தை தனது படுக்கையில் கிட்டத்தட்ட மூழ்கக் கூடாது. 259 00:23:06,887 --> 00:23:08,180 சரி. என்னுடன் வாருங்கள். 260 00:23:08,680 --> 00:23:10,848 - நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். - அது நடந்திருக்கக் கூடாது. 261 00:23:10,849 --> 00:23:12,559 புரிகிறது, ஆனால் அது நடந்துவிட்டது. 262 00:23:13,310 --> 00:23:16,062 அவனை இடம் மாற்றப் போகிறார்கள். அவனை நீண்ட கால தீவிர சிகிச்சையில் வைக்கப் போகிறார்கள். 263 00:23:16,063 --> 00:23:17,939 சற்றுப் பொறு. இன்னமும் நான் அவனுக்கு சிகிச்சையளிக்கிறேன். 264 00:23:17,940 --> 00:23:20,274 அவர்கள் இதை தற்கொலை முயற்சியாக கருதுகிறார்கள், ஈலை. 265 00:23:20,275 --> 00:23:21,484 அது என்னவென்று உங்களுக்கே தெரியும். 266 00:23:21,485 --> 00:23:23,611 உயர் பாதுகாப்பு பிரிவுக்கு அவன் மாற்றப்பட வேண்டும். 267 00:23:23,612 --> 00:23:26,365 - அவனை நாளை மாற்றுகிறார்கள். - இல்லை. அவனை நான் கூட்டிச் செல்கிறேன். 268 00:23:27,741 --> 00:23:28,908 அது சரியல்ல என உங்களுக்கே தெரியும். 269 00:23:28,909 --> 00:23:30,451 அவனுக்கு இங்கே பாதுகாப்பு இல்லை, கெய்ல். 270 00:23:30,452 --> 00:23:32,703 அவனுக்கு எதுவும் நடக்க நான் விட மாட்டேன். 271 00:23:32,704 --> 00:23:34,456 நான் அவனை சாக விட மாட்டேன். 272 00:23:35,082 --> 00:23:38,668 ஈலை, உங்கள் மனைவிக்கு நடந்ததை நினைத்து வருந்துகிறேன். 273 00:23:38,669 --> 00:23:41,128 அது உங்களுக்கு எப்படி இருந்திருக்கும் என என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. 274 00:23:41,129 --> 00:23:43,506 கவனச்சிதறலுக்கு வேலை ஒரு நல்ல விஷயமாக இருக்கும் என நினைத்தேன். 275 00:23:43,507 --> 00:23:45,383 நீங்கள் தயாராக இருப்பதாக நினைத்தது என் தவறுதான். 276 00:23:45,384 --> 00:23:50,138 - கெய்ல், ப்ளீஸ்... - இல்லை, இப்போது நீங்கள் நீங்களாகவே இல்லை, ஈலை. 277 00:23:51,598 --> 00:23:53,058 நான் என் நோயாளியைப் பார்க்க வேண்டும். 278 00:24:02,776 --> 00:24:06,697 டாக்டர் வெப்ஸ்டர் அட்மிட்டிங் இடத்திற்கு வரவும். 279 00:24:15,247 --> 00:24:16,248 நோவா? 280 00:24:21,962 --> 00:24:24,840 நோவா, நீ அந்தப் பையனை காயப்படுத்த நினைக்கவில்லை என்று எனக்குத் தெரியும். 281 00:24:25,966 --> 00:24:27,758 நீ அவனை காப்பாற்ற முயற்சி செய்தாய், இல்லையா? 282 00:24:27,759 --> 00:24:30,262 அவன் கழுத்தை சுற்றி இருந்த பொருளிலிருந்து காப்பாற்ற. 283 00:24:36,852 --> 00:24:38,187 அது என்ன பொருள்? 284 00:24:41,148 --> 00:24:42,524 பாரு, நீ பயந்திருக்கிறாய் எனப் புரிகிறது, 285 00:24:44,151 --> 00:24:47,404 நீ பயப்படும்படி உனக்கு ஏதோ நடந்திருக்கலாம் என நினைக்கிறேன். 286 00:24:50,240 --> 00:24:51,491 யாராவது உன்னைக் காயப்படுத்தினார்களா? 287 00:24:52,492 --> 00:24:53,869 நீ என்னிடம் சொல்லலாம். 288 00:24:57,414 --> 00:24:58,664 நீங்கள் கோபப்பட மாட்டீர்களே? 289 00:24:58,665 --> 00:25:00,542 சத்தியமாக மாட்டேன். 290 00:25:03,545 --> 00:25:04,963 உன்னை காயப்படுத்தியது யார்? 291 00:25:09,551 --> 00:25:10,677 நீங்கள்தான். 292 00:25:49,967 --> 00:25:52,678 நான் நானாக இல்லை என்று குற்றம் சாட்டப்பட்டேன். 293 00:25:54,304 --> 00:25:57,307 அது உண்மை என நினைக்கிறீர்களா? நீங்கள் நீங்களாக இல்லை என்பது? 294 00:25:58,100 --> 00:25:59,517 இருக்கலாம். 295 00:25:59,518 --> 00:26:02,855 எனக்கு எல்லாவற்றிற்கும் விடை தெரியும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன், தெரியுமா? 296 00:26:05,482 --> 00:26:06,692 ஆனால் இப்போது... 297 00:26:08,527 --> 00:26:10,821 இப்போது, எனக்கு எதுவும் தெரியாது என்று தோன்றுகிறது. 298 00:26:12,990 --> 00:26:16,368 எப்போது இந்த உணர்வு மாறியது என்பது உங்களுக்குத் தெரியுமா? 299 00:26:19,329 --> 00:26:20,581 நிச்சயமாக. 300 00:26:23,584 --> 00:26:24,960 என் மனைவி இறந்த நாளன்று. 301 00:26:28,463 --> 00:26:29,548 சரி. 302 00:26:30,632 --> 00:26:31,925 நாம் அதைப் பற்றி பேசுவோம். 303 00:26:37,681 --> 00:26:39,057 அது ஒரு சாதாரண நாள். 304 00:26:42,186 --> 00:26:43,687 கொஞ்ச காலமாக அவளுக்கு உடம்பு சரியில்லை. 305 00:26:46,607 --> 00:26:47,691 புற்றுநோய். 306 00:26:49,902 --> 00:26:51,195 ஆனால், அவள் அதை எதிர்த்துப் போராடினாள். 307 00:26:52,321 --> 00:26:54,489 இருவரும் சேர்ந்து அதை எதிர்த்துப் போராடுவதாக தீர்மானித்தோம். 308 00:27:00,996 --> 00:27:02,915 அவள் உற்சாகமாக உணர்ந்தாள், எனவே... 309 00:27:05,501 --> 00:27:06,793 நான் வெளியே போக முடிவு செய்தேன். 310 00:27:10,839 --> 00:27:12,090 நில்லுங்கள். 311 00:27:13,509 --> 00:27:14,635 கிளம்புறீங்களா? 312 00:27:15,135 --> 00:27:17,721 சீக்கிரமே திரும்பிவிடுவேன். உனக்கு சைனீஸ் உணவு வாங்கி வருகிறேன். 313 00:27:22,976 --> 00:27:24,269 முட்டை கொத்து கஞ்சி. 314 00:27:25,521 --> 00:27:27,314 அவள் எப்போதுமே விரும்பி சாப்பிடும் உணவு அதுதான். 315 00:27:30,526 --> 00:27:31,944 நான் நீச்சல் குளத்திற்குச் சென்றேன்... 316 00:27:50,879 --> 00:27:52,548 பிறகு மிஸ்டர் சாங்’ஸ் உணவகத்திற்கு சென்றேன். 317 00:28:00,681 --> 00:28:01,890 அதன் பின்பு வீட்டிற்கு வந்தேன். 318 00:28:04,226 --> 00:28:08,814 நான் ரொம்ப நேரத்திற்கு வெளியே இருக்கவில்லை. ஒன்றரை மணிநேரம் இருக்கும். 319 00:28:14,528 --> 00:28:15,571 நான் வந்துவிட்டேன். 320 00:28:17,239 --> 00:28:18,240 லின்? 321 00:28:31,253 --> 00:28:32,588 அவள் பதிலளிக்கவில்லை. 322 00:29:16,215 --> 00:29:17,924 முதலில், அது அவள் இல்லை என்றுதான் நினைத்தேன், சரியா? 323 00:29:17,925 --> 00:29:19,718 அதாவது, அது அவள்தான் என்று தெரிந்திருந்தாலும், 324 00:29:21,220 --> 00:29:23,305 அது வேறு யாரோ என்பது போல எனக்குத் தோன்றியது. 325 00:30:04,972 --> 00:30:06,139 இதுதான் நடந்தது. 326 00:30:10,102 --> 00:30:14,815 நான் வெளியே போனேன், திரும்ப வீட்டிற்கு வந்தேன், அவள் இறந்து கிடந்தாள். 327 00:30:19,486 --> 00:30:20,529 என்ன? 328 00:30:21,864 --> 00:30:23,699 நீங்கள் என்னிடம் இன்னும் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா? 329 00:30:28,245 --> 00:30:29,246 இல்லை. 330 00:30:32,416 --> 00:30:33,500 அவ்வளவுதான். 331 00:30:35,627 --> 00:30:37,004 நிச்சயமாகவா? 332 00:30:42,384 --> 00:30:43,551 நான் கிளம்பணும். 333 00:30:43,552 --> 00:30:45,928 - இல்லை, ஈலை, பொறுங்கள். இது முக்கியமான வேலை. - இல்லை. நான் கிளம்பணும். 334 00:30:45,929 --> 00:30:47,346 - இல்லை. பொறுங்கள். - உங்களுக்குப் புரியாது. 335 00:30:47,347 --> 00:30:49,224 என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவள் தற்கொலை செய்துகொண்டாள். 336 00:30:49,850 --> 00:30:51,018 பொய்யன். 337 00:32:31,618 --> 00:32:33,620 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்