1
00:00:06,048 --> 00:00:07,758
இப்படைப்பு, தீவிர வன்முறை, சிறுவர்களது
போதை காட்சிகள் அடங்கியது.
2
00:00:07,758 --> 00:00:09,301
நீங்கள் போதைப் பொருட்களால்
பாதிக்கப்பட்டிருந்து, உதவி தேவை எனில்,
3
00:00:09,301 --> 00:00:10,845
நார்காடிக் அனானிமஸ் போன்ற
உள்ளூர் ஆதரவு அமைப்புகளை நாடவும்.
4
00:00:12,012 --> 00:00:13,097
இது உண்மைச் சம்பவங்களை தழுவிய தொடர்.
5
00:00:13,097 --> 00:00:14,306
சில பாத்திர, காட்சி, உரையாடல்,
கதைப்போக்கு செறிவு மேம்பாடுகளுடன்,
6
00:00:14,306 --> 00:00:15,474
சுவாரசியமான வகையில் உருவாக்கப் பட்டது.
7
00:00:15,474 --> 00:00:16,726
கற்பனைக் கதாபாத்திரங்களுக்கும்,
உண்மை நபர்களுக்கும்
8
00:00:16,726 --> 00:00:17,935
தோன்றும் ஒற்றுமை தற்செயலே.
9
00:00:23,524 --> 00:00:27,403
தயவு செய்து அனைவரும் கொஞ்சம்
என்னை செவி மடுத்து கேட்க கோருகிறேனே?
10
00:00:27,403 --> 00:00:31,198
அனைவருக்கும் மாலை வணக்கம்.
11
00:00:31,198 --> 00:00:36,328
இதோ, என் அன்பு கணவர், ஆளுநர் அவர்கள்.
12
00:00:36,328 --> 00:00:37,830
வாருங்கள், அன்பே.
13
00:00:39,749 --> 00:00:40,750
என் அன்பே.
14
00:00:40,750 --> 00:00:45,588
நீங்க அனைவரும் இன்றிரவு வந்திருப்பதில்
நாங்களிருவரும் மகிழ்ச்சி கொள்கிறோம்.
15
00:00:46,464 --> 00:00:50,760
ஆனால் நாங்க குறிப்பா நன்றி
சொல்ல விரும்புவது ஒருவருக்குதான்.
16
00:00:50,760 --> 00:00:54,513
இந்த இனிய பெண், விவியேனுக்கு.
17
00:00:54,513 --> 00:00:59,643
- ஹலோ! நன்றி.
- விவி, இங்கே வாங்க. நீண்ட கரவொலி கொடுங்க.
18
00:00:59,643 --> 00:01:00,853
நன்றி.
19
00:01:01,937 --> 00:01:04,648
விவியேன் ரொம்ப சிறப்பானவர்!
20
00:01:04,648 --> 00:01:07,985
இதோ இந்தப் பெண், தன்
வாழ்க்கையையே புரட்டிப் போட்டவர்.
21
00:01:07,985 --> 00:01:11,447
இன்றிரவு நம் ஒவ்வொருவருக்குமே
ஒரு உதாரணமாக திகழ்கிறார்.
22
00:01:11,447 --> 00:01:12,990
- நானே சொல்றேனே.
- சொல்லுக.
23
00:01:12,990 --> 00:01:18,245
விவியை நமது முகங்களை, நம் இளைய
வாக்காளர்களை பிரதிநிதித்துவப் படுத்தும்
24
00:01:18,245 --> 00:01:20,915
குரலாக தேர்ந்தெடுத்தோம்.
25
00:01:20,915 --> 00:01:23,834
எனவே, அவருக்கு நீண்ட கரோகோஷம் எழுப்புங்க!
26
00:01:25,377 --> 00:01:30,925
- வந்ததற்கு நன்றி, கண்ணே.
- எல்லோருக்கும் நன்றி.
27
00:01:31,884 --> 00:01:33,969
என்னைப் பற்றி தெரியாதவங்களுக்கு,
28
00:01:33,969 --> 00:01:37,431
எனது கதை பலரது கவனத்தை ஈர்த்தது.
29
00:01:37,431 --> 00:01:41,352
இளையோர், என் ப்ளாக் பக்கத்தில்,
நான் அவர்களுக்கு ஊக்கமா இருப்பது
30
00:01:41,352 --> 00:01:46,190
பற்றியும், எவ்ளோ மாற விரும்புகிறார்கள்
என்பது பற்றியும் தினமும் பேசுவர்.
31
00:01:46,941 --> 00:01:48,692
நான் ஒரு புத்தகமும் எழுதணும்.
32
00:01:48,692 --> 00:01:50,069
- பிரமாதம்!
- இதெப்படி!
33
00:01:50,069 --> 00:01:53,781
நீங்க அனைவரும் அறியும்படியாக என்
கதையின் ஒவ்வொரு அம்சத்தையும்
34
00:01:53,781 --> 00:01:56,033
உங்களுக்கெல்லாம் சொல்ல விரும்பறேன்.
35
00:01:56,033 --> 00:02:00,955
அதற்கு இங்குள்ளோர் அனைவரது
ஆதரவை சார்ந்திருக்கிறேன்.
36
00:02:01,497 --> 00:02:03,666
- நிச்சயமா.
- உங்க நம்பிக்கைக்கு நன்றி.
37
00:02:03,666 --> 00:02:09,338
நாங்களும், நீங்க இளைய சமுதாயத்துக்கு
உங்க அறிவுரையை சொல்வதை சார்ந்திருக்கிறோம்.
38
00:02:09,338 --> 00:02:11,507
ஆளுநரை பாராட்டி அருந்துவோம்!
39
00:02:11,507 --> 00:02:12,800
சியர்ஸ்!
40
00:02:12,800 --> 00:02:15,219
ரியோ டி ஜெனிரோவை பாராட்டி அருந்துவோம்!
41
00:02:15,219 --> 00:02:17,721
ரியோ டி ஜெனிரோ!
42
00:02:17,721 --> 00:02:19,974
அல்டோ, என்ன நடக்குதுப்பா?
43
00:02:20,850 --> 00:02:22,476
- என்ன நடக்குது?
- பொறுமை.
44
00:02:22,476 --> 00:02:26,355
நல்லபடியா ஆகுது, ஆளுநரே.
இதை நாம் மாத்தி அமைப்போம்.
45
00:02:26,355 --> 00:02:27,565
மண்ணாங்கட்டி!
46
00:02:28,315 --> 00:02:29,733
இதைக் கேள், அல்டோ.
47
00:02:30,526 --> 00:02:34,530
ஒரு குண்டன் போலீசை முட்டாளாக்க, உன்னை
இந்த எழவு பதவியில் அமர்த்தல.
48
00:02:34,530 --> 00:02:36,073
கொலிப்ரி செத்தான்.
49
00:02:36,073 --> 00:02:37,700
கும்பல் பலம் இழக்கும்.
50
00:02:37,700 --> 00:02:41,912
ஒவ்வொரு மூலையிலும் போலீசை
நிற்க வைத்து நாம் நம் பேட்டையை மீட்போம்.
51
00:02:43,914 --> 00:02:48,210
ஒண்ணு, நீ பெட்ரோ டாமின்
தலையை கொண்டு வரணும்,
52
00:02:49,670 --> 00:02:51,589
இல்ல உன் தலையை எடுப்பேன்.
53
00:02:55,718 --> 00:03:01,557
உண்மை சம்பவங்களை
தழுவியது
54
00:03:51,315 --> 00:03:53,275
லிகோ! என்னிடம் பேசு, ஐயோ!
55
00:04:02,076 --> 00:04:05,621
ரொஸின்ஹாவின் தலைவனா,
நீ எப்படி சமாளிப்பேன்னு பார்க்கணும்.
56
00:04:32,815 --> 00:04:36,860
டோம்
57
00:04:41,281 --> 00:04:45,369
மாரே வளாகம்
58
00:04:52,710 --> 00:04:54,503
உலகிலேயே இவை 10 மட்டும்தான்.
59
00:04:54,503 --> 00:04:55,713
நேத்துதான் வந்தது.
60
00:04:58,173 --> 00:05:00,509
ரொஸின்ஹா தலைவனுக்கு ஒரு சின்ன பரிசு.
61
00:05:34,626 --> 00:05:36,754
உங்க பேரத்தைப் பத்தி யோசித்தேன்.
62
00:05:39,423 --> 00:05:41,008
வாய்ப்பே இல்லப்பா. நீங்க
63
00:05:41,008 --> 00:05:43,302
ரொஸின்ஹாவை இழக்கும் ஆபத்து இருக்கு.
64
00:05:43,969 --> 00:05:47,097
நான் அதற்கு ஆளல்ல. நான் தலைவனல்ல.
65
00:05:48,182 --> 00:05:49,349
என்ன சொல்ல வர்றே?
66
00:05:50,350 --> 00:05:52,019
- அப்போ என்னதான் நீ?
- திருடன்.
67
00:05:53,145 --> 00:05:54,188
போதை அடிமை.
68
00:05:55,272 --> 00:05:58,400
எதுக்கும் தலைவனாக முடியாது.
என்னால நல்லதைவிட கேடுதான்.
69
00:05:59,151 --> 00:06:00,736
நீ என்ன வாத்தியாரா, பையா?
70
00:06:02,154 --> 00:06:04,198
இப்பதான் வந்தே, எனக்கே கத்து தர்றியா?
71
00:06:04,198 --> 00:06:07,201
அதுக்கு மாறானது! எனக்கு
எதுவுமே தெரியாதுன்னேன்.
72
00:06:08,619 --> 00:06:10,037
ஒண்ணு சொல்றேன் கேளு.
73
00:06:11,205 --> 00:06:13,248
காரணமில்லாம உன்னை இங்கே கூப்பிடல.
74
00:06:14,708 --> 00:06:17,211
இது ஒரு கோரமான சண்டை. உன்னை மீறியது.
75
00:06:19,088 --> 00:06:20,798
நீங்க கேட்கும் எதையும் செய்வேன்.
76
00:06:22,341 --> 00:06:25,928
நான் ரியோவிலே இழிபெயரெடுத்த திருடன்.
வேணும்னா எதையும் திருடுவேன்.
77
00:06:25,928 --> 00:06:28,388
எனக்கு தேவையானதை நான் திருட வேணாம்.
78
00:06:29,139 --> 00:06:30,390
என் வீட்டைப் பார்.
79
00:06:31,058 --> 00:06:32,351
என் லாபங்களைப் பார்.
80
00:06:33,310 --> 00:06:35,813
இந்த நகரில் இன்னொரு திருடன் எனக்கு வேணாம்.
81
00:06:37,189 --> 00:06:39,900
விற்கப்பட முடியாத
ஒண்ணு உங்களுக்கு தேவை போல.
82
00:06:50,327 --> 00:06:51,453
ஆம், ஒண்ணு இருக்கு.
83
00:06:55,624 --> 00:06:57,126
ஆனா செய்வாயானு தெரியலயே.
84
00:07:02,005 --> 00:07:03,173
சும்மா சொல்லுங்க.
85
00:07:04,842 --> 00:07:06,176
நான் எதையும் செய்வேன்.
86
00:07:08,428 --> 00:07:09,888
இது என் வாக்குறுதி.
87
00:07:11,849 --> 00:07:13,851
ஆனா, நீங்களும் வாக்குறுதி தரணும்.
88
00:07:15,435 --> 00:07:17,604
செய்து முடித்ததுமே, என்னை போக விடணும்.
89
00:07:22,943 --> 00:07:24,695
விடுதலை வேணும், அதானே, பையா?
90
00:07:27,447 --> 00:07:28,907
நமக்குள் ஒரு பேரம்.
91
00:07:30,659 --> 00:07:33,954
அந்த நாய்களுக்கு ரியோ யார்
கட்டுப்பாட்டில்னு காட்டுவேன்.
92
00:07:36,123 --> 00:07:40,294
என்ன செய்றதுன்னு தெரியல, அர்காஞ்சோ,
பெட்ரோ டாமை கொல்லப் போறாங்க.
93
00:07:46,175 --> 00:07:47,217
அதே.
94
00:07:52,681 --> 00:07:55,017
மட்டோ கிராஸ்ஸோவின்
ஒரு சிறு நகரம் ரிசரேஸாவோ.
95
00:07:55,851 --> 00:07:57,186
எல்லைக்கு அருகே. அங்கே
96
00:07:57,853 --> 00:08:00,189
என் குடும்பதின் ஆளரவமற்ற வீடு இருக்கு.
97
00:08:01,815 --> 00:08:03,692
பெட்ரோ டாமின் கடைசி புகலிடமாகலாம்.
98
00:08:04,902 --> 00:08:07,613
ஆம். இப்போ எல்லாமே மாறிடிச்சு.
99
00:08:07,613 --> 00:08:11,533
போலீஸ் மறக்கலாம்,
ஆனா, இந்த சிடிசி கும்பல், ஆளுநர்
100
00:08:11,533 --> 00:08:14,286
ரொஸின்ஹாவை மீட்டெடுக்க விட மாட்டாங்க.
101
00:08:18,081 --> 00:08:19,208
அவனை விட மாட்டாங்க.
102
00:08:22,586 --> 00:08:24,504
பெட்ரோ டாமை கண்டுபிடிக்கவே முடியாது.
103
00:08:26,465 --> 00:08:29,593
உடனே விரையணும்.
இதோ நடந்துடும்.
104
00:08:39,603 --> 00:08:40,854
- போவோம், சகோதரா.
- போவோம்.
105
00:09:34,366 --> 00:09:35,534
அம்மா.
106
00:09:40,998 --> 00:09:42,124
ரொம்ப நாளாச்சு.
107
00:09:50,966 --> 00:09:51,967
மெலிஞ்சுட்டியே.
108
00:09:53,051 --> 00:09:54,303
நல்லாவே இருக்கேன்.
109
00:09:57,806 --> 00:09:58,849
ரொம்ப அழகானவ.
110
00:10:00,434 --> 00:10:01,810
அப்படியா?
111
00:10:05,314 --> 00:10:07,107
சந்திப்பை அதிசயமா சாதிச்சீங்களே?
112
00:10:08,525 --> 00:10:10,861
அம்மான்னா பாதி துறவி, பாதி சூனியக்காரி.
113
00:10:13,530 --> 00:10:14,573
ஆகட்டும்.
114
00:10:15,574 --> 00:10:16,658
சீக்கிரம்.
115
00:10:20,412 --> 00:10:21,496
நன்றி.
116
00:11:12,714 --> 00:11:13,882
எடுத்துக்கலாமா?
117
00:11:28,021 --> 00:11:29,523
என் இளவரசியே.
118
00:11:31,691 --> 00:11:33,151
நான் உன் அப்பா.
119
00:11:34,945 --> 00:11:36,530
ஆம். உன் அப்பா.
120
00:11:37,406 --> 00:11:39,324
உன்னை பார்க்க துடித்தேன்.
121
00:11:44,204 --> 00:11:46,331
உங்கப்பா கிறுக்குத்தனமா நிறைய செய்வான்.
122
00:11:47,290 --> 00:11:48,792
உன் அப்பா கிறுக்கன்.
123
00:11:50,585 --> 00:11:51,586
அப்படியா?
124
00:11:52,170 --> 00:11:53,213
ஆமாம்.
125
00:11:55,757 --> 00:11:56,800
ஆனால்...
126
00:11:57,676 --> 00:12:00,804
கண்டிப்பா உன்னை விட்டு
இனி தூரமா போக மாட்டேன். உங்க
127
00:12:05,559 --> 00:12:06,685
இருவரிடமிருந்தும்.
128
00:12:13,650 --> 00:12:15,902
என்னை மன்னிச்சுடு, எல்லாத்துக்கும்.
129
00:12:20,407 --> 00:12:22,075
நான் கிளம்பணும்.
130
00:12:24,244 --> 00:12:26,538
- இல்லனா எனக்கு சிக்கலாகும்.
- தெரியும்.
131
00:12:27,789 --> 00:12:28,999
அதோட என் பயம், நான்...
132
00:12:30,667 --> 00:12:32,836
எப்ப வேணும்னாலும் கைதாகலாம், இவளை
133
00:12:34,754 --> 00:12:36,465
என்னிடமிருந்து பிடுங்கிடுவாங்க.
134
00:12:40,343 --> 00:12:41,470
நானிருக்கேன். உங்க
135
00:12:44,306 --> 00:12:45,849
இருவரையும் பார்த்துக்குவேன்.
136
00:12:46,808 --> 00:12:49,060
அவளை உன் பெயரில்லாம பதிவு செய்தேன்.
137
00:12:50,103 --> 00:12:51,438
அது ரொம்ப ஆபத்தானது.
138
00:12:55,150 --> 00:12:56,359
எடுத்துக்கோ.
139
00:13:02,532 --> 00:13:03,533
என்ன இது?
140
00:13:04,743 --> 00:13:06,328
எழுந்துக்கோ, பெட்ரோ.
141
00:13:06,328 --> 00:13:08,079
- போதும்!
- ஜாஸ்மின்.
142
00:13:09,581 --> 00:13:12,250
நான் சந்திச்சதிலேயே
நீதான் நம்பற்கரிய பெண்.
143
00:13:15,712 --> 00:13:16,796
நிஜமாத்தான்.
144
00:13:17,672 --> 00:13:19,299
எவ்ளோ அற்புதம் நீ!
145
00:13:20,550 --> 00:13:21,635
அற்புதம்!
146
00:13:22,802 --> 00:13:28,225
குற்றத்திலிருந்து விடுபட்டே, போதையை
நிறுத்தினே, நம் குழந்தையை தானா வளார்க்கறே.
147
00:13:29,100 --> 00:13:30,393
உன்னை ஆராதிக்கிறேன்.
148
00:13:33,730 --> 00:13:36,566
நான் கூட இனி உனக்குத் தேவை இல்ல.
149
00:13:41,613 --> 00:13:43,490
ஆனா நான் நீ இல்லாம இருக்க முடியாது.
150
00:13:45,033 --> 00:13:46,618
என்னால முடியாது. நிஜமா.
151
00:13:51,081 --> 00:13:52,624
நான் உங்க ரெண்டு பேரையும்
152
00:13:53,500 --> 00:13:55,377
நினைக்காம ஒரு நாளும் இருந்ததில்ல.
153
00:14:17,691 --> 00:14:19,359
நீ என் வாழ்வின் நேசம்.
154
00:14:30,579 --> 00:14:34,291
- நிஜமாவா?
- நிஜம்மாதான்.
155
00:14:48,221 --> 00:14:51,433
முன்பே எத்தனையோ முறை உன்னை
கேட்டிருக்கேன்தான், ஆனா...
156
00:14:53,101 --> 00:14:55,937
- இதுதான் கடைசி முறை, சத்தியம்.
- என்னது?
157
00:14:56,813 --> 00:14:58,106
இங்க என் வாழ்வை ஆரம்பிக்க
158
00:14:59,149 --> 00:15:00,775
அவகாசம் வேணும், அவ்ளோதான்.
159
00:15:01,651 --> 00:15:04,529
நான் இன்னும் ஒரு வாரத்தில் திரும்பலன்னா,
160
00:15:05,780 --> 00:15:07,032
கண்டிப்பா உங்களை
161
00:15:07,949 --> 00:15:09,576
மறுபடி தேடி வரவேமாட்டேன்.
162
00:15:24,090 --> 00:15:26,593
இதோ பாருடா, ராமால்ஹோ!
163
00:15:26,593 --> 00:15:28,178
ரியோ பாதுக்காப்பாகணும்
அல்டோவுக்கு வாக்களியுங்கள்
164
00:15:28,178 --> 00:15:30,388
- செயலாளரே?
- உட்கார்.
165
00:15:32,682 --> 00:15:35,769
நல்ல செய்தியா சொல்லேன்?
என்ன, மாட்டிடுவானா?
166
00:15:37,562 --> 00:15:40,899
கொலிப்ரியின் பாதுகாப்பில்லாம,
டாம் ஒழிஞ்சான்.
167
00:15:43,318 --> 00:15:44,986
ஆனா நமக்கு நேரம் குறைவு.
168
00:15:44,986 --> 00:15:48,073
ஒரு நொடி.
எலைன், நாங்க தனியா பேசணுமே.
169
00:15:53,745 --> 00:15:56,706
நாங்க அவனை மாரேலருந்து வெளியே
கொண்டுவர வழி தேடறோம்.
170
00:15:57,957 --> 00:15:59,125
"நாங்க"ன்னா?
171
00:16:01,795 --> 00:16:04,631
உனக்கு இந்த கதையின்
கதாநாயகன் யாருன்னு தெரியாதா?
172
00:16:06,466 --> 00:16:07,592
நீங்களா, அடச்சே!
173
00:16:08,635 --> 00:16:11,137
ரியோலயே ஆபத்தான குற்றவாளியை
கைது செய்வீங்க.
174
00:16:11,846 --> 00:16:13,723
அந்த தைரியம்
யாரிடமிருக்கு, ராமால்ஹோ?
175
00:16:13,723 --> 00:16:15,183
நல்லா கவனி...
176
00:16:15,892 --> 00:16:18,103
மாரேயை, ரொஸின்ஹாவை
என்னிடம் விடுங்க.
177
00:16:19,979 --> 00:16:21,106
நான் ஜெயித்தால்,
178
00:16:22,649 --> 00:16:24,567
செயலாளர் பதவி காலியாகும்.
179
00:16:25,402 --> 00:16:27,362
நானும் ஜெயிப்பேன் நீயும் ஜெயிப்பாய்.
180
00:16:37,956 --> 00:16:39,499
எனக்கு பைத்தியமே பிடிக்கும்.
181
00:16:40,834 --> 00:16:42,544
எனக்கு காத்திருக்கவே முடியல.
182
00:16:45,380 --> 00:16:46,965
கடைசியா அங்கே போயாகணும்.
183
00:16:48,007 --> 00:16:49,426
என்ன செய்ய திட்டம் போட்டே?
184
00:16:50,760 --> 00:16:53,596
இது உன்னையும்
பெட்ரோவையும் மீறியது, விக்டர்.
185
00:16:53,596 --> 00:16:55,932
இது பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து.
186
00:16:55,932 --> 00:16:59,018
இந்த பலப் பரீட்சையில்,
உன் மகன் ஒரு பகடைக்காய்தான்.
187
00:17:00,353 --> 00:17:04,274
அவனை ரியோவிலிருந்து வெளியேத்தணும்.
பெட்ரோவிடம் பேசணும், அவ்ளோதான்.
188
00:17:07,152 --> 00:17:08,236
எனக்கு பயமாகுது.
189
00:17:09,612 --> 00:17:12,991
கண்ணா, இப்பதான் நாம்
நம்பிக்கையோட இருக்கணும்.
190
00:17:14,242 --> 00:17:17,662
உன் மகனோட உன் பிணைப்பை நினைச்சு பார்.
அது அவ்ளோ வலுவானது.
191
00:17:26,087 --> 00:17:28,298
- ஹலோ?
- இது பிட்ஸா கடை.
192
00:17:28,298 --> 00:17:31,801
- பிட்ஸாவா? நான் ஆர்டர் பண்ணலயே.
- டாமின் பிட்ஸா.
193
00:17:53,573 --> 00:17:55,784
{\an8}அப்பா, உங்களை பார்க்கணும்!
தயாராகுங்க, யாரையாவது அனுப்பறேன்
194
00:17:55,784 --> 00:17:57,869
{\an8}ஸ்டேஷன் 6ல் நாளை விடியற்காலையில்
வந்து அழைத்து வருவாங்க.
195
00:17:57,869 --> 00:17:59,537
{\an8}இப்பவும் 4 சீஸ் துண்டு பிட்ஸாதானே
உங்களுக்கு பிடித்தது?
196
00:18:09,672 --> 00:18:10,715
விக்டரா?
197
00:18:39,494 --> 00:18:42,997
எங்கே போறதா நினைப்பு, ஜல்சா பையா?
198
00:18:43,623 --> 00:18:46,167
என்ன விஷயம்பா?
இவர் பெட்ரோ டாமின் அப்பா.
199
00:18:46,751 --> 00:18:47,919
ஹெல்மெட்டை கழட்டுங்க.
200
00:18:54,384 --> 00:18:55,510
உங்க மகன் ஒரு தெய்வம்.
201
00:18:57,220 --> 00:18:58,429
இவர் போகட்டும், பாரா.
202
00:20:15,423 --> 00:20:16,591
அப்பா.
203
00:20:28,144 --> 00:20:30,521
பெட்ரோ. நான் சொல்றதை கவனி, பையா.
204
00:20:31,773 --> 00:20:34,025
- ஓரிடம் பார்த்திருக்கேன்...
- மெதுவா.
205
00:20:35,234 --> 00:20:36,486
பொறுமையா பேசுவோமே.
206
00:20:38,154 --> 00:20:39,197
எப்படி இருக்கீங்க?
207
00:20:42,408 --> 00:20:43,451
நல்லா இருக்கேன்.
208
00:20:46,120 --> 00:20:48,289
லாலா அதைப் பத்தி சொன்னா.
209
00:20:49,582 --> 00:20:50,667
புற்று நோய் பத்தி.
210
00:20:51,709 --> 00:20:52,752
கொடுமை அது.
211
00:20:54,295 --> 00:20:55,546
ஒண்ணுமில்ல, பெட்ரோ.
212
00:20:56,214 --> 00:20:59,509
- சிகிச்சையை ஆரம்பித்தேன். பரவாயில்ல.
- புகைப்பதை விட்டீங்களா?
213
00:21:07,934 --> 00:21:10,311
உனக்கு என்னதான் வந்தது, பையா?
மோசம்!
214
00:21:16,526 --> 00:21:17,694
என் மகளை பார்த்தேன்.
215
00:21:20,405 --> 00:21:22,073
உங்க பேத்தி ரொம்ப அழகானவ.
216
00:21:23,574 --> 00:21:26,536
சொல்லவா? அவ அப்பா மாதிரி.
217
00:21:28,955 --> 00:21:29,998
ஒண்ணு சொல்றேனே.
218
00:21:32,000 --> 00:21:34,669
நீங்க செய்ததெல்லாம்
எனக்கு புரிய ஆரம்பிக்குது.
219
00:21:38,172 --> 00:21:39,382
அப்பாவா இருப்பது கஷ்டம்.
220
00:21:46,014 --> 00:21:47,056
ஆமாம்.
221
00:21:49,559 --> 00:21:52,979
உன் வயது 23தான், உன்
முழு வாழ்க்கையே இனிதான் ஆரம்பிக்குது.
222
00:21:55,356 --> 00:21:59,444
உனக்கு நான் பார்த்திருக்கும் இடம்,
கண்காணாத இடத்தில், எல்லைக்கு அருகே.
223
00:21:59,444 --> 00:22:03,448
நீ அங்கே போகணும். ஒளிஞ்சிருக்கணும்.
யாரும் கண்டுபிடிக்க முடியாது.
224
00:22:03,448 --> 00:22:04,907
அங்கே வாழ்க்கை தொடங்கு.
225
00:22:05,950 --> 00:22:07,618
ஆனால், கொக்கைன், போதை,
226
00:22:09,162 --> 00:22:13,041
ஆட்கள் எல்லாமிருந்தும்
உன் தொடர்பை துண்டிச்சுக்கணும்.
227
00:22:14,542 --> 00:22:15,793
நான் உட்பட.
228
00:22:17,462 --> 00:22:19,172
இந்த வாழ்க்கையை விட்டுடணும்.
229
00:22:21,090 --> 00:22:22,759
உலகிலிருந்து தனித்துப் போகணும்.
230
00:22:27,263 --> 00:22:28,431
சொல்றது சரி, அப்பா.
231
00:22:30,725 --> 00:22:33,853
எனக்கும் அதுதான் வேணும்,
எல்லாத்தையும் விட்டுப் போவது.
232
00:22:33,853 --> 00:22:35,021
துல்லியமா அதுதான்.
233
00:22:38,232 --> 00:22:41,069
நான், ஜாஸ்மின், எங்க மகள் மட்டும்.
234
00:22:41,069 --> 00:22:42,779
கண்டிப்பா! கண்டிப்பா!
235
00:22:42,779 --> 00:22:45,114
- ஆனா, இப்பவே!
- என்னால் இப்போ முடியாது.
236
00:22:45,114 --> 00:22:48,159
- என்னோடு வந்துடு.
- கடைசியா ஒரு விஷயம் முடிக்கணும்.
237
00:22:50,620 --> 00:22:51,913
இப்போ முடியாதுப்பா.
238
00:23:00,421 --> 00:23:01,714
அப்போ உன்னோட தங்கறேனே.
239
00:23:02,507 --> 00:23:05,051
- இல்ல நீங்க தங்கக் கூடாது.
- ஆம், தங்குவேன்.
240
00:23:05,051 --> 00:23:06,344
இல்ல, கூடாது, அப்பா.
241
00:23:11,099 --> 00:23:13,226
இதை சரிப் படுத்தறேன், சத்தியமா.
242
00:23:15,103 --> 00:23:17,605
இதோ சில நாட்களில் தெரியப் படுத்தறேன்.
243
00:23:18,898 --> 00:23:20,691
வந்து உங்க கதவை தட்டுவேன்.
244
00:23:22,610 --> 00:23:23,694
விலகுவதற்கு தயாராக.
245
00:23:28,741 --> 00:23:29,826
காத்திருப்பேன்.
246
00:23:33,663 --> 00:23:34,747
இங்கே.
247
00:23:35,957 --> 00:23:37,375
செய்வேன்னு தெரியுதில்ல.
248
00:23:40,378 --> 00:23:42,630
- இது என்ன?
- என் அதிர்ஷ்ட நாணயம்.
249
00:23:43,297 --> 00:23:45,508
- அதில் என்ன?
- வெச்சுக்குங்க.
250
00:23:45,508 --> 00:23:48,761
- இல்ல. நீயே வெச்சுக்கோ.
- வெச்சுக்குங்க. என் ஆசை.
251
00:23:50,138 --> 00:23:51,347
பிடிவாதம் வேணாம்.
252
00:23:51,931 --> 00:23:53,850
சரி, ஆனா, ஒரு நிபந்தனை.
253
00:23:53,850 --> 00:23:56,394
இங்கருந்து விலகினதும்
உன்னிடம் திருப்புவேன்.
254
00:23:56,394 --> 00:23:59,689
தூரமா, விடுதலை பெற்று வரும்போது.
அதுதான் என் நிபந்தனை.
255
00:24:00,857 --> 00:24:01,983
சரி.
256
00:24:19,709 --> 00:24:20,835
இ லவ் யு, அப்பா.
257
00:24:22,753 --> 00:24:25,089
- இ லவ் யு, மகனே.
- உடம்பை பார்த்துக்குங்க.
258
00:24:26,132 --> 00:24:27,842
- போகணும்.
- காத்திருப்பேன்.
259
00:25:35,493 --> 00:25:39,413
நாளைக்கு அங்கே வாங்க.
இது சரிப்படும், அப்பா!
260
00:25:44,919 --> 00:25:46,045
போச்சுடா!
261
00:25:47,588 --> 00:25:49,090
ஆளுநர் நல்லாவே வாழறார்.
262
00:25:52,843 --> 00:25:54,303
கடைசில ஓடிட மாட்டியே?
263
00:25:56,138 --> 00:25:57,723
என்னை பத்தி தெரியாதா பையா?
264
00:25:58,724 --> 00:26:00,810
உன் வேலையை நீ செய், எனதை நான் செய்வேன்.
265
00:26:12,488 --> 00:26:15,324
ஐயோ! ஒண்ணும் ஆகலியேப்பா?
266
00:26:17,868 --> 00:26:20,663
உன்னைத்தான்! ஒண்ணும் ஆகலியே?
267
00:26:20,663 --> 00:26:22,915
ஆம்புலன்ஸ் வேணுமா?
268
00:26:22,915 --> 00:26:25,001
அடி பட்டுதா?
269
00:26:25,001 --> 00:26:27,628
- நல்லாதானே இருக்கே?
- எழுந்துக்க உதவுங்க.
270
00:26:28,296 --> 00:26:30,006
மெதுவா, போச்சுடா!
271
00:26:30,006 --> 00:26:33,217
- மருத்துவ மனைக்குப் போகணும்.
- வேணாம், வேணாம்!
272
00:26:34,010 --> 00:26:36,012
- வேணாம், நன்றி.
- அப்படியா?
273
00:26:36,012 --> 00:26:37,930
நன்றி, சர்.
274
00:26:39,181 --> 00:26:40,808
போவோம். சீக்கிரம்!
275
00:29:33,105 --> 00:29:34,190
பெலீன்யா.
276
00:29:35,524 --> 00:29:36,609
பெலீன்யா.
277
00:29:43,282 --> 00:29:44,325
பெலீன்யா!
278
00:29:46,285 --> 00:29:47,411
பெலீன்யா!
279
00:29:49,997 --> 00:29:51,165
பெலீன்யா!
280
00:30:06,013 --> 00:30:08,474
உங்களால பெரிய மாற்றம், நமது...
281
00:30:09,016 --> 00:30:10,809
இருங்க.
282
00:30:12,645 --> 00:30:13,646
- ஐயோ!
- என்ன இது?
283
00:30:13,646 --> 00:30:14,605
சிடிசி என்றால் பயங்கரம்
284
00:30:14,605 --> 00:30:16,023
என்ன எழவு இது?
285
00:30:16,023 --> 00:30:17,775
என்ன இது கண்ணு?
286
00:30:19,068 --> 00:30:20,486
இன்னும் ஈரமா இருக்கு.
287
00:30:20,486 --> 00:30:23,030
- நீங்க என்ன செய்தீங்க?
- பொறுமை.
288
00:30:23,030 --> 00:30:25,032
- என்ன செய்தீங்க?
- எதையும் செய்யல!
289
00:30:25,032 --> 00:30:27,326
- என்ன செய்தீங்க?
- நான் எதையும் செய்யல!
290
00:30:27,326 --> 00:30:29,787
- யாரோட பிரச்சினை? அப்பவே...
- வாயை மூடு!
291
00:30:29,787 --> 00:30:31,622
- சொன்னே...
- வாயை மூடு. போதும்!
292
00:30:34,833 --> 00:30:36,919
எங்கே போய்த் தொலைஞ்சீங்க, நாய்களே?
293
00:30:36,919 --> 00:30:38,462
என்ன நடக்குது?
294
00:30:54,353 --> 00:30:55,688
அமைதியாக இரு.
295
00:31:07,825 --> 00:31:10,369
தலைவரே! அதோ இருக்கான்.
296
00:31:12,955 --> 00:31:14,331
நாய்ப் பயலே!
297
00:31:20,963 --> 00:31:24,049
என்ன இது அல்டோ?
உனக்கு என்னாச்சு?
298
00:31:24,049 --> 00:31:26,176
அவன் என் வீட்டிலேயே புகுந்தான்.
299
00:31:27,344 --> 00:31:29,972
என்ன? அவன் என் வீட்டு சுவரில்
300
00:31:29,972 --> 00:31:33,767
கிறுக்கியதற்கு சாட்சியா
உனக்கு படம் எடுத்து தரணுமா?
301
00:31:34,351 --> 00:31:36,854
அல்டோ, கவனி, சகோதரா. கதை முடிந்தது.
302
00:31:36,854 --> 00:31:40,733
கும்பலோட பேச்சு
வார்த்தையை ஆரம்பிப்போம், ஐயோ!
303
00:32:03,505 --> 00:32:06,258
இந்தா, இதோ.
304
00:32:07,009 --> 00:32:08,260
பார்த்தாயா?
305
00:32:09,261 --> 00:32:12,306
இப்போ, ஆளுநர் என் பேச்சை கேட்பான்.
306
00:32:13,515 --> 00:32:15,309
விசுவாசம் பரிசு பெறும், பையா.
307
00:32:17,645 --> 00:32:19,730
நான் பார்த்ததிலேயே சமர்த்து நீதான்.
308
00:32:22,024 --> 00:32:23,817
ரொம்ப மந்தமானவனும் நீதான்.
309
00:32:25,569 --> 00:32:26,945
பேரம் முடிஞ்சுது.
310
00:32:28,530 --> 00:32:30,074
விட்டு போகணும்ன்றதே குறியா?
311
00:32:35,371 --> 00:32:36,455
நான் போகலாமா?
312
00:32:56,266 --> 00:32:59,019
அப்பா, விடுதலையானேன்.
313
00:35:06,730 --> 00:35:08,023
ஐயோ! படுங்க!
314
00:35:08,023 --> 00:35:09,608
பார்த்து, ஐயோ!
315
00:35:26,208 --> 00:35:27,334
சுடுங்க அவனை!
316
00:35:28,961 --> 00:35:29,962
போ, போ!
317
00:35:38,762 --> 00:35:40,180
வந்துடுங்க, போவோம்!
318
00:35:41,849 --> 00:35:43,183
போய்த் தொலைவோம்!
319
00:35:43,725 --> 00:35:44,852
போ, போ!
320
00:36:34,401 --> 00:36:37,154
போங்க! அவன் ஓடறான்! அங்கே போங்க!
321
00:40:12,828 --> 00:40:16,289
...லகோவா கட்டிடம் ஒன்றில்
இன்று காலை பெட்ரோ டாமை பிடித்தனர்.
322
00:40:16,289 --> 00:40:18,708
பெட்ரோ டாம் எனும் குற்றவாளி இறந்தான்.
323
00:40:18,708 --> 00:40:21,711
ஒரு உளவு நடவடிக்கை
காரணமாக அவன் மாட்டினான்...
324
00:40:21,711 --> 00:40:24,923
அல்டோ, அதைப் பத்தி
மேலும் செய்திகள் ஏதும் உண்டா?
325
00:40:24,923 --> 00:40:29,636
எங்கள் பணி, பொதுமக்களின்
பாதுகாப்பு கருதி மேற்கொள்ளப் பட்டது.
326
00:40:30,303 --> 00:40:35,934
பெரும் நிர்தாட்சண்யத்தோடு,
அமைதி நிலைநாட்டப் பட்டது.
327
00:40:36,768 --> 00:40:39,062
இது மிகத் தீவிரமான பணி...
328
00:40:39,062 --> 00:40:41,064
பெட்ரோ! பெட்ரோ டாம்!
329
00:42:23,625 --> 00:42:27,671
பெட்ரோ டாம் போலீசுடனான
துப்பாக்கி சூட்டில் கொல்லப் பட்டான்
330
00:42:52,737 --> 00:42:55,073
ரோட்ரிகோ டே ஃப்ரைடாஸ் லாகூனில் ஒரு சொகுசு
331
00:42:55,198 --> 00:42:57,951
கட்டடத்தில், பெட்ரோ லோம்பா நீடோ
என்ற பெட்ரோ டாம்
332
00:42:57,951 --> 00:42:59,911
துரத்தப் பட்டதன் அடையாளம் ஆனது.
333
00:42:59,911 --> 00:43:01,788
கைதை தவிர்க்க போராடிய பின்,
334
00:43:01,788 --> 00:43:04,916
ஒரு குப்பைத் தொட்டி பக்கத்தில்
ஒளியும்போது கொன்றனர்.
335
00:43:04,916 --> 00:43:08,628
ஒரு ஃபோன் பேச்சு கசிவுக்கு பின்,
விடியற்காலையில் பெட்ரோ டாம்
336
00:43:08,628 --> 00:43:11,131
வரப்போவதை அறிந்து அங்கு சுற்றி வளைத்தனர்.
337
00:43:11,131 --> 00:43:15,885
பெட்ரோ டாம் வீசிய குண்டினால்,
மூன்று அதிகாரிகள் காயமடைந்தனர்...
338
00:45:07,414 --> 00:45:10,708
என் மகனின் நெஞ்சில் ஒரு துளை.
339
00:45:11,835 --> 00:45:15,130
அவனைக் கொன்ற குண்டு இங்கே சுடப் பட்டது.
340
00:45:15,380 --> 00:45:16,714
விக்டர் லோம்பா
பெட்ரோ டாமின் தந்தை
341
00:45:16,714 --> 00:45:18,550
அறிக்கை என்னிடம் இருக்கு.
342
00:45:19,509 --> 00:45:21,761
அது இங்கே புகுந்து இங்கே வெளிப்பட்டது.
343
00:45:21,761 --> 00:45:24,055
அதாவது அவன் முட்டி போட்டிருந்தான்.
344
00:45:24,055 --> 00:45:27,100
மேலிருந்து சுடப் பட்ட
குண்டு, கீழே பாய்ந்து,
345
00:45:27,100 --> 00:45:28,268
முதுகை துளைத்தது.
346
00:45:31,646 --> 00:45:34,232
விக்டர் லோம்பா தன் கதையை
347
00:45:34,232 --> 00:45:39,362
சொல்வதற்காக பல ஆண்டுகள் போராடினார்.
348
00:45:49,247 --> 00:45:51,124
பிள்ளையின் பிரிவை விட
349
00:45:52,625 --> 00:45:54,586
பெரிய வேதனை ஏதும் இல்லை.
350
00:46:06,431 --> 00:46:09,142
அவர் நுரையீரல் புற்று நோயால்
2018ல் இறந்தார்,
351
00:46:09,142 --> 00:46:15,190
அதாவது இந்த தொடர் எழுதப் படும்போது.
352
00:46:16,566 --> 00:46:22,238
இது எவரும் போதையை நாடுவதை தடுக்குமா
அல்லது அரசுகளின் அபத்தமான கொள்கைகளை
353
00:46:22,238 --> 00:46:27,035
மாற்றுமா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது.
354
00:46:27,035 --> 00:46:29,579
இல்லை. அது மாற்றும்னு நினைக்கல.
355
00:46:29,579 --> 00:46:32,832
ஆனால், போதையால் பிள்ளைகளை
பிரிந்த பெற்றோரின்
356
00:46:32,832 --> 00:46:34,834
மனங்களுக்கு ஆறுதலாக இருக்கும்.
357
00:46:36,503 --> 00:46:37,545
என்னைப் போல.
358
00:47:53,746 --> 00:47:56,291
பெட்ரோ டாம் 2005ல் இறந்தான்
359
00:47:56,291 --> 00:48:00,086
அப்போது அவன் வயது 23.
360
00:49:49,612 --> 00:49:51,614
வசனங்கள் மொழிபெயர்ப்பு கைனூர் சத்யன்
361
00:49:51,614 --> 00:49:53,700
படைப்பு மேற்பார்வையாளர்
தீபிகா ராவ்