1 00:00:15,307 --> 00:00:16,350 - ஹே, பேபி. - ஹை. 2 00:00:34,034 --> 00:00:36,453 எனக்கு இன்னும் 23 வினாடிகள் இருக்கே! 3 00:00:39,373 --> 00:00:40,707 தொடங்கு தற்காலிக நிறுத்தம் 4 00:00:51,093 --> 00:00:52,302 ஒரு வினாடி, சைமன்! 5 00:01:03,146 --> 00:01:04,647 அற்புதம். 6 00:01:04,647 --> 00:01:06,275 - சரி. - ஒரு நிமிடம்! 7 00:01:09,069 --> 00:01:10,529 ஐந்து நிமிஷம் ஆயிடுச்சு. வெளியே வா. 8 00:01:13,240 --> 00:01:14,867 இரு. இரு. 9 00:01:15,409 --> 00:01:17,327 சரி. இரு. 10 00:01:18,829 --> 00:01:20,247 அடக் கடவுளே. சரி, நல்லாயிருக்கு. 11 00:01:21,039 --> 00:01:23,542 இந்தா. நாம கொஞ்சம்... கலைச்சு விடலாம். 12 00:01:23,542 --> 00:01:26,044 சீக்கிரம், சீக்கிரம். சீக்கிரம், கீக்கிரம். சீக்கிரம் கீக்கிரம். 13 00:01:27,296 --> 00:01:29,798 - சரி. கிளம்பலாம். - உனக்கு இது தேவையா? 14 00:01:29,798 --> 00:01:31,550 - இன்னிக்கு அந்த வீட்டைத் திரும்பி பார்க்கிறேன். - சரி. 15 00:01:31,550 --> 00:01:32,843 அந்த ஐந்து பாத்ரூம் இருக்கிற வீடா? 16 00:01:32,843 --> 00:01:34,970 இந்த குடும்பத்துல இருக்கிற ஒவ்வொருவருக்கும் ஒண்ணு இருக்குமே. 17 00:01:34,970 --> 00:01:36,054 யோசிச்சுப் பாரு? அதாவது, 18 00:01:36,054 --> 00:01:37,723 அது பெரிய விஷயமா நான் நினைக்கல. அது ஒரு கோட்டை மாதிரி இருக்கு. 19 00:01:37,723 --> 00:01:39,433 நம்ம தேவைக்கு அதிகமாவே பாத்ரூம்கள் இருக்கு. 20 00:01:39,433 --> 00:01:40,767 உங்களுக்கு என்ன கவலை? நீங்க தான் வேலையிடத்திலேயே ஷிட் பண்ணி முடிச்சுடுறீங்களே. 21 00:01:40,767 --> 00:01:42,436 - நாம அதை "ஷிட்"னு சொல்றதில்லை. - சரியாச் சொல்றீங்க. மன்னிக்கணும். 22 00:01:42,436 --> 00:01:45,647 சரி, என்ன தெரியுமா? நாம வீடு மாறிய பின், நான் வீட்டுலேயே ராஜா மாதிரி ஷிட் செய்வேன். 23 00:01:45,647 --> 00:01:46,857 ஷிட், ஷிட், ஷிட். 24 00:01:46,857 --> 00:01:48,942 - "ஷிட்"னு சொல்லாதீங்க. - பேகெட் எங்கே? 25 00:01:48,942 --> 00:01:50,444 - என்ன? எந்த பேகெட்? - எனக்கு ஒரு பேகெட்டும் 26 00:01:50,444 --> 00:01:51,945 ஒரு பெரேட்டும் தேவை என் ஃபிரெஞ்ச் வகுப்புக்கு. அதெல்லாம் எங்கே? 27 00:01:51,945 --> 00:01:54,656 என்ன? நான்... இப்போ தான் முதல் முறையா பேகெட்டைப் பத்தியோ, பெரேட்டைப் பத்தியோ கேட்குறேன். 28 00:01:54,656 --> 00:01:56,033 - அடக் கடவுளே. அம்மா. - என்ன? எனக்கு கிடைக்கல... 29 00:01:56,033 --> 00:01:58,619 திருமதி. லாரென் எனக்கு மெயில் எதுவும் அனுப்பல. உங்களுக்குத் தெரியுமா அந்த பேகேட்டுகளைப் பத்தி? 30 00:01:58,619 --> 00:02:00,120 - மன்னிக்கணும், எனக்கும் வரல. நான் போகணும். - அல்லது பெரேட்டைப் பத்தி? 31 00:02:00,120 --> 00:02:01,205 - சரி. சந்திப்போம். - குட் லக். 32 00:02:01,205 --> 00:02:02,831 - உன்னால அதை மூட முடியாததுக்குக் காரணம்... - நான் தோத்து விடுவேன்! 33 00:02:02,831 --> 00:02:04,208 - அந்த பொம்மையை எடுத்துடு. - அப்போ சரி, நண்பா. 34 00:02:04,208 --> 00:02:07,544 - நான் அதை வச்சுக்கப் போறேன். எனக்கு வேணும்! - சரி. ஆனால் பையை மூட முடியாது. 35 00:02:22,643 --> 00:02:23,477 பெக்மேன் ஸ்கூல் 36 00:02:23,477 --> 00:02:26,688 - சரி, வில்லுடன் இரவு எப்படி போச்சு? - சற்று நேரம் நல்லாயிருந்தது, 30 வினாடிகளுக்கு. 37 00:02:26,688 --> 00:02:28,649 அதுக்கு அப்புறம், திரும்பவும் ஒரு பெரிய கலாட்டாவா மாறிடுச்சு. 38 00:02:28,649 --> 00:02:30,943 நாங்க விடியற்காலை 1:00 மணிக்கு, ஒரு தெரு ஓரமா நின்னுகிட்டு, 39 00:02:30,943 --> 00:02:32,611 ஒருவர் மீது மற்றவர் அப்படி பலமா கத்திகிட்டு இருந்தோம். 40 00:02:32,611 --> 00:02:37,658 அடக் கடவுளே. அதை கேட்குறதே நான் 20 வருஷத்துல இவ்வளவு உயிரோட்டத்துடன் உணர்ந்ததே இல்லை. 41 00:02:37,658 --> 00:02:39,451 நான் இன்னும் கத்த ஆரம்பிக்கணும்னு நினைக்கிறேன். 42 00:02:39,451 --> 00:02:40,869 - கத்துறது ரொம்ப பிடிக்கும். - எனக்குத் தெரியும். 43 00:02:40,869 --> 00:02:41,995 தொந்தரவு செய்யறது பிடிக்காது. 44 00:02:41,995 --> 00:02:44,289 இல்ல, நான் பொய் சொல்ல போறதில்லை, ரொம்ப நல்ல இரவா இருந்தது. 45 00:02:44,289 --> 00:02:46,542 ஆனால், என்னால... உண்மையா முடியல, 46 00:02:46,542 --> 00:02:48,877 எனக்கு என் வாழ்க்கையில இந்த வேண்டாத பிரச்சினைகளுக்கு நேரம் இல்லை. 47 00:02:48,877 --> 00:02:51,755 உண்மையான பிரச்சினைகளே நிறைய இருக்கு. இதைப் போல. 48 00:02:51,755 --> 00:02:55,509 நான் மூணாவது முறையா அந்த என்சினோவில இருக்குற வீட்டை இன்னிக்குப் போய் பார்க்கணும். 49 00:02:55,509 --> 00:02:58,011 நான் சத்தியம் செய்யறேன், நான் அதை வாங்கப் போறதில்லை, அவள் எனக்கு இனி வீடு காட்ட மாட்டா. 50 00:02:58,011 --> 00:02:59,847 அப்போவே டையேன்னை 51 00:02:59,847 --> 00:03:01,390 - உன் வீட்டு புரோக்கரா எடுத்துக்காதன்னேன். - தெரியும், எனக்குத் தெரியும். 52 00:03:01,390 --> 00:03:03,517 அவள் ஒரு அலுவலக அம்மா. நம்ம அணியில சேர்த்தியில்ல. 53 00:03:03,517 --> 00:03:05,310 அவ என்ன பிளேசர் போட்டிருக்கா. 54 00:03:05,310 --> 00:03:06,728 - புரியுது. நீயும் அலுவலகத்துல வேலைப் பார்க்கற. - ஆமாம். 55 00:03:06,728 --> 00:03:08,897 நாம சிலர் மட்டும், இன்னும் வீட்டு வேலையிலேயே மாட்டிக்கிட்டு இருக்கோம். 56 00:03:08,897 --> 00:03:11,859 நான் ஸ்வெட்பேன்டுகள் போட்டிருப்பதால, எனக்கு உண்மையான வேலை இல்லன்னு ஆகாது. 57 00:03:11,859 --> 00:03:13,777 - அவள் ரொம்ப அலட்டிக்கிறா. எனக்கு தெரிந்தவரை. - ஆமாம். 58 00:03:13,777 --> 00:03:16,655 எனக்கு அது தெரியும். நாம இருவரும் பெற்றோர்களா இங்கே இல்லைன்னா, 59 00:03:16,655 --> 00:03:19,116 அவ எனக்கு வீடு காட்டுவான்னு எதிர்பார்க்கவே முடியாது. 60 00:03:19,116 --> 00:03:21,076 - ஒருபோதும் மாட்டா. - ஹை! 61 00:03:21,076 --> 00:03:23,453 - டையேன்! - அவளை காப்பியடிக்காதே அவ முகத்தை, வேண்டாம். 62 00:03:24,663 --> 00:03:25,998 - ஹை, சில்வியா. - ஹை. 63 00:03:26,999 --> 00:03:29,459 என்ன உற்சாகமான தினம். நாங்க ஒரு வீட்டை காட்டப் போறோம். 64 00:03:29,459 --> 00:03:33,005 அது தான். இன்றைய தினம் நிச்சயமா ஒரு வீட்டை விலை கொடுத்து வாங்குவதைப் பத்தி தான். 65 00:03:33,005 --> 00:03:34,840 ஏன்னா, இவ என்னை அவ்வளவு கஷ்டப்படுத்தியிருக்கா, வீட்டை தேர்ந்தெடுக்குறதுக்கு. 66 00:03:34,840 --> 00:03:36,133 - குற்றம் தான்! - நாங்க இந்த வருஷம் மட்டும் 67 00:03:36,133 --> 00:03:38,051 40க்கும் மேல் வீடுகளை பார்த்திருக்கோம். 68 00:03:38,051 --> 00:03:39,845 - இல்ல. - நான் எலெனுக்கும் போர்ஷியாவுக்கும் அவங்க வீட்டை 69 00:03:39,845 --> 00:03:40,929 ஒரே நாள்ல முடிச்சுக் கொடுத்தேன். 70 00:03:41,430 --> 00:03:43,765 - நான் எலெனைப் பத்தி நல்லதா கேட்டேனே. - நானும் தான்! 71 00:03:43,765 --> 00:03:45,642 நான் அவளிடம், "இதுக்கு குறுக்கு வழியெல்லாம் இல்லை. 72 00:03:45,642 --> 00:03:48,187 பெரிய சதுர அடியும் இருந்து, புத்தம் புதுசாவும் இருந்து 73 00:03:48,187 --> 00:03:49,730 லொக்கேஷனும் அற்புதமா இருந்து, அதுவும் நாம் கேட்குற விலையில கிடைக்காது"னு சொல்லிட்டேன். 74 00:03:49,730 --> 00:03:51,982 தெரியும். நீ சொன்னது சரிதான். சொன்னது சரிதான். நான்தான் தவறு செய்தேன். 75 00:03:51,982 --> 00:03:55,319 அவளுக்கு புதுபிக்கக் கூடிய அற்புதமான ஒரு இடம் கிடைச்சது. 76 00:03:55,319 --> 00:03:57,070 - அது... - அது ஒரு புராஜெக்ட் தான், நிச்சயமா. 77 00:03:57,070 --> 00:04:00,657 ஆனால் இப்போ தான் அவளுடையக் குட்டியை கின்டர்கார்டன்ல போட்டாச்சே, இது தான் அடுத்த கனவு. 78 00:04:00,657 --> 00:04:02,826 எனக்கு கடைசியில இப்போ அதைச் செய்ய நேரமும் இருக்கு. 79 00:04:02,826 --> 00:04:04,995 எப்படியானாலும், பெண்களே, பாருங்க. எனக்கு லேட் ஆகுது. 80 00:04:04,995 --> 00:04:07,789 ஒரு கடற்கரை வீட்டைக் காட்ட நான் மாலிபூ போகணும். 81 00:04:07,789 --> 00:04:11,168 யாருக்குன்னு சொல்ல முடியாது, ஆனால் அவர் பேரு ஷ்கிமின் லைசெல் மாதிரி ஒலிக்கும். 82 00:04:11,960 --> 00:04:14,713 ஆனால் நான் உன்னைப் சந்திக்க அப்புறமா சான் ஃபெர்னான்டோ வேலி வந்திடுவேன். 83 00:04:14,713 --> 00:04:16,507 - நன்றி, டையேன். நீ தான் சிறந்தவள். - பை-பை. 84 00:04:16,507 --> 00:04:18,550 உன் கடும் உழைப்புக்கும், பொறுமைக்கும் ரொம்ப நன்றி. 85 00:04:18,550 --> 00:04:19,927 - குட் லக். - இதுல என்ன கிறுக்குத் தனம் தெரியுமா? 86 00:04:19,927 --> 00:04:21,178 அடக் கடவுளே. 87 00:04:21,178 --> 00:04:24,014 எஸ்டோனியாவில் இருந்த என் கொள்ளு தாத்தாவின் பெயர் தான் ஷ்கிமின் லைசெல். 88 00:04:24,014 --> 00:04:26,558 - இல்ல. இல்ல. - பாபி ஷ்கிமின். 89 00:04:27,726 --> 00:04:31,146 ஷ்கிமின் லைசெல் தான் வோன் டிராப் குடும்பத்துல ஐந்தாவது குழந்தைன்னு நினைச்சேன். 90 00:04:31,146 --> 00:04:32,981 - ஓ, நானும் அதை கேட்டிருக்கேன். ஆம். - ஷ்கிமின்னீ. ஷ்கிமின்னீ. 91 00:04:34,066 --> 00:04:35,067 ஓ, அடடா. 92 00:04:36,026 --> 00:04:37,694 முட்டாள் மொபைல் 93 00:04:38,487 --> 00:04:41,615 சரி, வேற என்ன நடக்குது? இன்னிக்கு உற்சாகமா எதுவும் செய்யறோமா? 94 00:04:41,615 --> 00:04:43,951 - அடக் கடவுளே. ஒரு முக்கிய விஷயம். - அப்படியா. என்னிடம் சொல்லு. 95 00:04:43,951 --> 00:04:46,328 சாமுடைய வாக்சினேஷன் ரெக்கார்டுகளை எடுத்துக்கப் போறேன். 96 00:04:46,328 --> 00:04:48,580 முதல்ல ஒரு குட்டித் தூக்கம். ஆம்மாம், ரொம்ப உற்சாகமான விஷயம் தான். ஆமாம். 97 00:04:48,580 --> 00:04:50,832 - இது மாதிரி நாட்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். - அட, நீ சராசரி தினத்தை சொல்றயா? 98 00:04:50,832 --> 00:04:52,125 அட, ஆமாம்ப்பா. 99 00:05:01,301 --> 00:05:03,220 முட்டாள் குரல் அஞ்சல் 100 00:05:03,846 --> 00:05:07,349 ஹலோ, சில்வியா. நான் தான் வில். இது ரொம்ப அவரசம். 101 00:05:07,349 --> 00:05:08,642 நீ என்னைக் கூப்பிடணும். 102 00:05:13,814 --> 00:05:14,857 அவசரத்துக்கு என்ன நடந்தது? 103 00:05:16,066 --> 00:05:18,151 உண்மையில அவசரம் எல்லாம் எதுவும் இல்ல. நான் வெறுமனே ஜோக் அடிக்கிறேன். 104 00:05:18,151 --> 00:05:19,319 நீ எப்படி இருக்க? 105 00:05:19,319 --> 00:05:21,029 சரி. என்ன உனக்கு என்ன வேணும்? 106 00:05:21,029 --> 00:05:22,698 நாம சாட் செய்வோம். நீ என்ன செய்திட்டு இருக்க? 107 00:05:23,490 --> 00:05:24,616 என்ன நடக்குது? 108 00:05:24,616 --> 00:05:28,954 சரி, நல்லது. என்ன நடக்குதுன்னு சொல்றேன். நீ, கிரெடிட் கார்டை என் பார்ல விட்டுட்ட. 109 00:05:29,538 --> 00:05:31,707 - அட. ச்சே. - திரும்பவும் என் கூட சுத்த விரும்புற என்கிறதுக்காக 110 00:05:31,707 --> 00:05:33,166 இது மாதிரி இத்யாதிகளை எல்லாம் விட்டுட்டுப் போக வேண்டாம். 111 00:05:33,166 --> 00:05:36,128 - நீ என்னை மதிய உணவுக்குக் கூப்பிட்டிருக்கலாம். - நிஜமா... எனக்கு இதுக்கெல்லாம் நேரம் கிடையாது. 112 00:05:36,128 --> 00:05:37,462 - ஆகவே மதிய உணவு முடியுமா? - முடியாது. 113 00:05:37,462 --> 00:05:38,505 - பிரன்ச்சு? - முடியாது. 114 00:05:38,505 --> 00:05:41,466 போகுது போயேன்? அது தான் என் இறுதி ஆஃப்பர். உனக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம். 115 00:05:41,466 --> 00:05:42,593 போ. குட்பை. வில். 116 00:05:42,593 --> 00:05:45,429 பாரு. இரு. இரு. உன் கிரெடிட் கார்டு திரும்பி வேணுமா வேண்டாமா? 117 00:05:45,429 --> 00:05:48,599 நீ தெருவில வச்சு என்னை நடு ராத்திரியில கத்தியிருக்க. 118 00:05:48,599 --> 00:05:51,894 என் வாழ்க்கையில, யாருமே என்னை அப்படி நடத்தினதே இல்ல, என் மூணு பசங்களைத் தவிற. 119 00:05:51,894 --> 00:05:54,396 நீயும் தான் என்னை கத்தின. நாம எல்லோரும் கத்துறோம். மக்களும் கத்துவாங்க. 120 00:05:54,396 --> 00:05:57,482 அதுக்கு அப்புறம் நான் டெக்ஸ்ட் செய்துகிட்டோமே. அதெல்லாம் பரவாயில்ல, பரவாயில்ல. சரியா போச்சு. 121 00:05:57,482 --> 00:05:58,817 அதெல்லாம் முடிஞ்சிடுச்சு. மறந்துடு. 122 00:05:58,817 --> 00:05:59,902 நீ மறந்துடு. 123 00:06:04,865 --> 00:06:07,409 சரி, தண்ணீர் மேல வருது, எனக்கு அதை மீண்டும் ஃபளஷ் செய்ய பயமா இருக்கு. 124 00:06:07,993 --> 00:06:10,537 தெரியல. அதை இழுத்துவிட்டா சரியாகலாம், இல்ல மோசமாவும் போகலாம். 125 00:06:10,537 --> 00:06:12,623 ஓ, அப்படியா? நீ ஒரு ஹோம் ரிப்பேர் ஷோ நடத்தலாம். 126 00:06:13,123 --> 00:06:14,625 நான் இந்த வீட்டை விட்டுப் போக தயாரா இருக்கேன். 127 00:06:14,625 --> 00:06:16,710 - இதை புரிஞ்சுக்கோ! - அடக் கடவுளே. இப்போ ஓவர்ஃபுளோ ஆகுது. 128 00:06:16,710 --> 00:06:18,378 - நீ என்ன செய்த? - எதுவும் செய்யல. நான் வெறுமனே பார்த்தேன். 129 00:06:18,378 --> 00:06:21,882 அடடா, அடடா! எல்லா இடத்துலேயும் வந்திடுச்சு. ஓ! வாழ்க்கையே இப்படி ஆகிடுச்சே? 130 00:06:22,758 --> 00:06:24,384 நான் வீட்டுக்கு வரணுமா? 131 00:06:24,384 --> 00:06:26,428 - பை. - பை. உன்னை நேசிக்கிறேன், கண்ணே. 132 00:06:26,428 --> 00:06:27,846 கழிப்பறை! 133 00:06:27,846 --> 00:06:30,307 ச்சே. மோசம், மோசம். இல்ல! இல்ல! 134 00:06:37,397 --> 00:06:38,315 ச்சே. 135 00:06:39,733 --> 00:06:40,734 வரேன்! 136 00:06:42,903 --> 00:06:44,112 நீ இங்கே என்ன செய்யற? 137 00:06:44,112 --> 00:06:46,907 - "ஹீரோவைக் கூப்பிடுவது" என்பார்கள் இதை. - எனக்கு இதுக்கு நேரமில்லை. 138 00:06:46,907 --> 00:06:49,618 நான் பெரிய மனிதன். என்னைப் புகழ்ந்து பாட்டெல்லாம் எழுதுவாங்க. 139 00:06:49,618 --> 00:06:51,995 - நீ என்ன செய்யற? - உன் உதவி தேவை. இங்கே உள்ள வரயா? 140 00:06:51,995 --> 00:06:54,540 இந்த அவகாடோஸை நான் கொஞ்சம் எடுத்துக்கவா? 141 00:06:57,167 --> 00:06:59,086 அடக் கடவுளே. அடக் கடவுளே. 142 00:06:59,086 --> 00:07:00,754 சத்தியமா இது வெறும் தண்ணீர் தான். 143 00:07:00,754 --> 00:07:02,422 - அட அப்படியா? சரி. - அது வருவதை நிறுத்து. 144 00:07:02,422 --> 00:07:03,966 அதை எப்படி நிறுத்தணும்னு எனக்குத் தெரியல. 145 00:07:04,550 --> 00:07:05,968 அது நல்லதில்ல. 146 00:07:07,052 --> 00:07:08,762 நீயா இதை செய்த? நீயா? 147 00:07:08,762 --> 00:07:10,138 - உன்னால அதை சரிசெய்ய முடிஞ்சுதா? - ஆமாம். 148 00:07:11,139 --> 00:07:12,432 இப்போ பாரேன். 149 00:07:12,432 --> 00:07:15,519 - நன்றி. நன்றி. ரொம்ப நன்றி. - இதோ பாரு. உன் மாப் எங்கே? 150 00:07:16,103 --> 00:07:18,814 அது சமையலறையில இருக்கு. ஆனால் நீ அதெல்லாம் செய்ய வேண்டாம். 151 00:07:19,481 --> 00:07:22,943 அது பரவாயில்ல. பார்ல என் வேலையில 60 சதவீதம் துடைப்பது தான். 152 00:07:22,943 --> 00:07:24,403 நன்றி. நீ அதைச் செய்யும் அவசியம் இல்ல. 153 00:07:24,403 --> 00:07:26,113 உன் வீடு ரொம்ப நல்லாயிருக்கே. ரொம்ப களையா இருக்கு. 154 00:07:26,113 --> 00:07:27,322 அதாவது சின்னதுன்னு சொல்ற. 155 00:07:27,322 --> 00:07:28,824 இல்ல, நான் ரொம்ப களையா இருக்குன்னு சொன்னேன். 156 00:07:29,908 --> 00:07:31,577 அடக் கடவுளே. அவனுடைய ஐபேட். 157 00:07:33,370 --> 00:07:36,415 சீக்ரெட் ஐபேட். யாரோ பலானது பார்க்கறாங்களா? 158 00:07:36,415 --> 00:07:37,916 - அவனுக்கு எட்டு வயசு தான் ஆகுது. - அதனால? 159 00:07:38,458 --> 00:07:40,752 எனக்கு எட்டு வயசா இருந்தபோது, நான் வெறுக்குற மாதிரி இருந்தேன். 160 00:07:42,254 --> 00:07:44,256 - அதை அங்கே வைக்காதே. அது நல்லாயில்ல. - ஏன்? 161 00:07:44,256 --> 00:07:46,425 - ஏன் அது நல்லாயில்ல? - ஏன்னா மக்கள் அதுல படுத்துக்குவாங்க. 162 00:07:46,425 --> 00:07:48,844 - ஒண்ணுமில்ல. கழிப்பறையில நீரைக் குடிக்க முடியும். - நீ நிறைய விஷயங்களைச் செய்ய விரும்பலாம். 163 00:07:48,844 --> 00:07:50,345 - அதே தான். தாகமா இருக்கா? - பிளீஸ் அதோ எடு... 164 00:07:50,345 --> 00:07:52,723 நீ அந்த நீரைக் குடிக்கிறயா? 165 00:07:53,849 --> 00:07:56,560 இதுக்கு அப்புறம் என்ன செய்யப் போற? கடற்கரைக்குப் போகலாமா? 166 00:07:56,560 --> 00:07:58,896 சில ஆயிஸ்டர்களை வாங்கலாம்? படம் பார்க்க விரும்புறயா? 167 00:07:58,896 --> 00:08:03,275 என்னால முடியாது. எனக்கு வேலை இருக்கு. னான் இந்த வீட்டை விற்க போறேன், உண்மையா. 168 00:08:03,275 --> 00:08:05,110 ஆமாம். நான் கடைசி முறையா வீட்டைப் பார்த்துட்டு அப்புறமா. 169 00:08:05,110 --> 00:08:06,987 நல்லது. இந்த இடத்துக்கு என்ன குறை? 170 00:08:06,987 --> 00:08:09,114 நாங்க அதுக்கு மீறி வளர்ந்துட்டோம். நாங்க அஞ்சு பேரையும் கொள்ளுவது கஷ்டமா இருக்கு. 171 00:08:09,114 --> 00:08:11,575 ஒரே ஒரு பாத்ரூம் தான். அதுவும்... தண்ணீர் பொங்கி வழியுது. 172 00:08:11,575 --> 00:08:13,160 - இந்த புது இடத்தைப் பத்தி சொல்லு. - அது சிறப்பானது! 173 00:08:13,160 --> 00:08:16,163 அது, உனக்குத் தெரியுமா, ஒரு நல்லா ஆக்கக்கூடிய இடம். கொஞ்சம் வேலை இருக்கு. 174 00:08:16,872 --> 00:08:18,582 - நானும் உன்னுடன் வீடு பார்க்க வரலாமா? பிளீஸ். - வேண்டாம். 175 00:08:18,582 --> 00:08:20,292 பிளீஸ். நான் இந்த புதுபித்தல் வேலையை நல்லா செய்வேன். 176 00:08:20,292 --> 00:08:22,252 - எப்போதிலிருந்து? - பாரை நாதான் பெரும்பாலும் மாத்தி அமைச்சேன். 177 00:08:22,252 --> 00:08:23,170 நிஜமாவா? 178 00:08:23,170 --> 00:08:25,172 ஆமாம். நாங்க வாங்கினபோது, அது கோழிக்குஞ்சுகளின் கசாப்புக் கடை மாதிரி இருந்தது. 179 00:08:25,172 --> 00:08:26,757 - வெளிய போ. - சரி. 180 00:08:26,757 --> 00:08:29,218 - அடடா. - இன்னும் இறகுகளும், மூக்குகளும் கிடைக்கும். 181 00:08:29,718 --> 00:08:33,054 தெரியும். சீரியஸா, கேட்குறேன். நானும் வரலாமா? நான் உதவியா இருப்பேன், சத்தியமா. 182 00:08:34,181 --> 00:08:36,265 சரி. ஆனால் பேசாதே. 183 00:08:36,265 --> 00:08:37,518 - மாட்டேன். - வேண்டாம்... 184 00:08:37,518 --> 00:08:39,394 என்னுடனோ, இல்ல வேறு யாருடனோ பேசாதே. 185 00:08:39,394 --> 00:08:41,647 - பேசவே மாட்டேன். பெர்ஃபெக்ட். - கூடாது. 186 00:08:41,647 --> 00:08:43,857 எனவே, நீ அடிக்கடி ஆட்ரியைப் பார்ப்பாயா? 187 00:08:46,151 --> 00:08:47,194 தெரியல. சில வாரங்களுக்கு ஒரு முறை. 188 00:08:47,194 --> 00:08:50,739 நான், அந்த வீட்டிலிருந்து இன்னும் எடுத்துட்டு வர வேண்டிய சில பொருட்கள் இருக்கு. 189 00:08:50,739 --> 00:08:53,951 அதனால, அவ்வப்போது போய் கொஞ்சம் பொருட்களை எடுத்துட்டு வந்துட்டு இருக்கேன். 190 00:08:53,951 --> 00:08:55,244 என்னது? ஏன்? 191 00:08:55,869 --> 00:08:58,080 வந்து... மாறுவதுக்கு நிறைய நாள் ஆகும். 192 00:08:58,080 --> 00:08:59,414 ஒரே நாள்ல முடிக்கலாம். 193 00:09:00,082 --> 00:09:02,084 அது வெறும் பொருட்கள் மாத்திரம் இல்ல, தெரியுமா. கென்டால்ஃபும் அங்கே தான் இருக்கு. 194 00:09:03,126 --> 00:09:05,087 - கென்டால்ஃப் ஆட்ரிகிட்ட இருக்கா? - ஆமாம். 195 00:09:05,087 --> 00:09:07,756 ஆனால் இதுக்கு முன்னாடி உன்னுடையது தானே அது. உனக்குதான் அந்த ஓணான்னா உயிராச்சே. 196 00:09:07,756 --> 00:09:10,926 எனக்கு இன்னும் கென்டால்ஃப் உயிர் தான். அது வந்து... அதை வச்சக்கணும்னு அவள் அடம் பிடிச்சா 197 00:09:10,926 --> 00:09:14,137 ஏன்னா அதை அக்கறையா பார்த்துக்க, எனக்கு பொறுப்பு பத்தாதுன்னு அவள் நினைக்கிறா. 198 00:09:14,137 --> 00:09:15,973 சரி, அது நல்ல வேடிக்கைதான். 199 00:09:16,473 --> 00:09:19,643 அது ஓணான் வடிவத்துல இருக்கிற உன் மகன். அதைப் பார்த்துக்கும் பொறுப்பு உனக்கு தான் கிடைக்கணும். 200 00:09:19,643 --> 00:09:22,771 ஒண்ணா சேர்ந்து பார்த்துக்கும் பொறுப்பு இருக்கு, ஏன்னா நான் அடிக்கடி அதை பார்க்கப் போவேன். 201 00:09:24,231 --> 00:09:25,357 என்ன? 202 00:09:25,357 --> 00:09:27,985 - என்ன? நீ எங்கிட்ட சொல்லலாம். சொல்லு. - ஒண்ணுமில்ல. நான் வந்து... தெரியலை. 203 00:09:27,985 --> 00:09:31,822 வாழ்க்கை இன்னும் பிணைஞ்சு இருந்தா, விவாகரத்திலிருந்து மீண்டு வருவது கஷ்டம். 204 00:09:31,822 --> 00:09:34,950 ஆம், விவாகரத்து ஒரு சிக்கலான விவகாரம் தான், ஒரு நாள் கல்யாணம் பண்ணினோமா, 205 00:09:34,950 --> 00:09:36,910 அடுத்த நாள் பிரிஞ்சோமா, இனி முகத்துலயே முழிக்க மாட்டேன் என்கிறது மாதிரி இல்ல. 206 00:09:37,953 --> 00:09:41,081 நீ உன் பொருட்களை அங்கே விட்டுட்டுப் போய், கென்டால்ஃபையும் அவ வச்சுகிட்டா 207 00:09:41,081 --> 00:09:44,209 நீங்க இருவரும் தொடர்புல இருந்து, இந்த நாடகத்தை எல்லாம் அப்படியே 208 00:09:44,209 --> 00:09:48,255 நீட்டிக்கிட்டே போகலாம்னு, நீ எப்போவாவது யோசிச்சு இருக்கியா? 209 00:09:48,255 --> 00:09:53,093 ஆமாம், நீ சொன்னதுக்கு அப்புறம் தான் யோசிக்கிறேன், எங்களுக்குள்ள வாக்குவாதங்கள் சுவாரசியமா இரு்ககும். 210 00:09:54,261 --> 00:09:58,056 பெரும்பாலும் நாங்க அப்புறம் புணர்வோம். 211 00:09:58,056 --> 00:09:59,641 பார்த்தயா. அதுக்கு தான் இதெல்லாம். 212 00:09:59,641 --> 00:10:01,143 ரொம்ப கிளுகிளுப்பான விஷயம். 213 00:10:01,143 --> 00:10:02,436 வேண்டாம், நன்றி. 214 00:10:02,436 --> 00:10:05,397 - நாம தீவிர சண்டையைப் பத்திப் பேசறோம். - வேண்டாம், நன்றி. 215 00:10:05,397 --> 00:10:07,399 - கண்டிப்பா வேண்டாம். இல்ல. - அது உனக்கு அவ்வளவு அசிங்கமா இருக்கா? 216 00:10:07,399 --> 00:10:10,694 - நான் ஆஹான்னு சொல்வது உனக்கு, "சீச்சீ"னு இருக்கா! - ஐயோ! போதும். 217 00:10:12,571 --> 00:10:16,033 எனவே, இந்த வீட்டைப் பத்தி சொல்லு. இது என்ன மாதிரியான வீடு? 218 00:10:16,658 --> 00:10:19,494 - அதுக்கு நல்ல கட்டுமானம் இருக்கு. - சரி. 219 00:10:19,494 --> 00:10:21,997 இன்னும் பெரிய வீடு, அதிக சதுரடி இடம். ஒரு நீச்சல் குளம் இருக்கு. 220 00:10:21,997 --> 00:10:24,249 ரொம்ப நல்லது. அது என்ன, மொத்தமும் இடிச்சு கட்டணுமா? 221 00:10:24,249 --> 00:10:27,336 வந்து, அதாவது, ரெனோவேஷன் செய்தால் போசதுமா, எப்படிப்பட்டது? 222 00:10:27,336 --> 00:10:30,964 இது மொத்தமுன் இடிச்சுக் கட்டவோ, இல்ல மாத்தவோ வேண்டாம். 223 00:10:32,216 --> 00:10:33,842 இது ஒரு... 224 00:10:33,842 --> 00:10:36,637 இது முன்னாளில் இயலாத முதியோர்களுக்காக இருந்த இடம். 225 00:10:42,726 --> 00:10:44,019 கோவிடுக்கு அப்புறம் மூடிட்டாங்க. 226 00:10:45,979 --> 00:10:47,981 - நிச்சயமா மூடியிருப்பாங்க. - ச்சே. ச்சே, போ. 227 00:10:47,981 --> 00:10:49,066 ம்ம்-ஹம்ம். 228 00:10:50,359 --> 00:10:51,276 {\an8}கார்டன் வேலி அசிஸ்டெட் லிவிங் 229 00:10:51,276 --> 00:10:53,737 {\an8}- கொஞ்சம் தான் வித்தியாசம். சரியா? ஆம். - சுவாரசியமா இருக்கு. பார்க்க ஆவலா இருக்கேன். 230 00:10:53,737 --> 00:10:56,114 - ஹை. - ஹை. 231 00:10:56,114 --> 00:11:00,077 - நீ வந்துட்டயா. ரொம்ப சந்தோஷம். - ஹை. உன்னைப் பார்க்க சந்தோஷமா இருக்கு. 232 00:11:00,077 --> 00:11:01,703 நீங்க தான் சார்லியா இருக்கணும். ஒருவழியா. 233 00:11:01,703 --> 00:11:03,580 - ஹை. - கடைசியா உங்கள பார்த்ததுல சந்தோஷம். 234 00:11:03,580 --> 00:11:04,957 - இல்ல, இல்ல. - ஹை. இல்ல. 235 00:11:04,957 --> 00:11:07,751 - இவர் தான் வில். இவர் என் கான்டிராக்டர். - நான் தான் வில். ஆம் நான் ஒரு கான்டிராக்டர். 236 00:11:07,751 --> 00:11:10,295 - நல்லது. நீங்க வந்து பார்க்க நினைச்சது நல்லது. - புரொஃபெஷனல் கான்டிராக்டர். 237 00:11:10,295 --> 00:11:13,674 "வீ பீ ஜாமின்'" என்கிற நிக்கலோடியன் டிவி ஷோவையும் இவர் தான் தொகுத்து வழங்குகிறார். 238 00:11:13,674 --> 00:11:15,092 - ம்ம்-ஹம்ம். - அட, அப்படியா. 239 00:11:15,092 --> 00:11:18,053 அதோட, ரெக்கியை எப்படி பயமில்லாம உபயோகிக்கலாம்னு நாங்க பசங்களுக்குக் கத்துத்தரோம். 240 00:11:18,637 --> 00:11:20,472 நான் அதை கேள்விப்பட்டதே இல்லை. அதைப் பார்க்கணும். 241 00:11:20,472 --> 00:11:22,891 இன்னிக்கு சார்லியால வரமுடியல. இன்னிக்கு அலுவலகத்துல ரொம்ப வேலை. 242 00:11:22,891 --> 00:11:25,686 - ஆகவே... ஆம். - இந்த வீடு ரொம்ப அழகா இருக்கு. 243 00:11:25,686 --> 00:11:26,770 - அற்புதம். - ஆம். 244 00:11:26,770 --> 00:11:29,022 - அந்த "துணைத் தூண்கள்." அந்த... எல்லாமே. - ஆம். 245 00:11:29,022 --> 00:11:30,858 இந்த... வேலைபாடுகள். 246 00:11:30,858 --> 00:11:32,651 இது... என்ன... 1926ல கட்டியதா, தெரியுதே? 247 00:11:32,651 --> 00:11:33,986 - 1986ல. - அதைத் தான் சொல்ல வந்தேன். 248 00:11:33,986 --> 00:11:36,029 - கிட்டத்தட்ட. நெருக்கம். - அதுக்கு 50-வருட சுழற்சி உண்டு. தெரியுமா... 249 00:11:36,029 --> 00:11:37,739 ஆகவே, இந்த வீட்டின் இன்டீரியர்... 250 00:11:37,739 --> 00:11:40,617 - 6000 சதுர அடிகள், இருக்குமா? - அது 3,500 சதுர அடிகள். 251 00:11:40,617 --> 00:11:42,244 - எனக்கு, எனக்கு அதைப் பத்தித் தெரியாது. - ஆனால்... 252 00:11:42,244 --> 00:11:43,787 - உறுதியா? - ஓ, ஆமாம். 253 00:11:43,787 --> 00:11:45,163 நாம ஏன் அதைப் பார்க்கக்கூடாது? எனக்குக் குத்துமதிப்பா தெரியும். 254 00:11:45,163 --> 00:11:46,832 - ஆம். இது மொத்தம் 6,000. - ஆம், நாம மதிப்பிடுவோம். 255 00:11:46,832 --> 00:11:49,209 ஆகவே, இதெல்லாம் சேர்த்து 6 ஆயிரம் இருக்கு. 256 00:11:49,209 --> 00:11:51,253 உள்ளே வந்து பாருங்க. நாங்க இதையும் சேர்த்து நாலாவது மறையா 257 00:11:51,253 --> 00:11:53,213 சுத்தி பார்ப்போம், இதுவே கடைசின்னு நம்பறேன். 258 00:11:54,298 --> 00:11:55,632 - வாங்க! - ஜாவுக்கே புகழ். 259 00:11:55,632 --> 00:11:57,593 - இதைப் பாரு. - ஆம். 260 00:11:57,593 --> 00:12:00,929 இங்கே ஏழு செஸ் போர்டுகள் இருக்கு, அதெல்லாம் பார்க்கறதே கஷ்டம். இப்பக் கூட. 261 00:12:00,929 --> 00:12:04,683 ஆகவே, உன் புத்தியைத் தெளிவா வச்சுக்கோ, இது தான் மொத்தமா ரீமாடல் செய்ய வேண்டிய இடம். 262 00:12:04,683 --> 00:12:05,684 அருமை. 263 00:12:05,684 --> 00:12:08,061 ஆம். ஆம். இது வெராண்டா மாதிரி ஆகலாம், இல்ல... 264 00:12:08,061 --> 00:12:10,230 ஆமாம். நல்ல உயர்ந்த மேற்கூரைகள். 265 00:12:10,230 --> 00:12:11,899 ரொம்ப உயரம் தான், நிறைய இடம்... 266 00:12:11,899 --> 00:12:13,942 - என்னால தொடதான் முடியுது. - ...நல்ல சவுண்டு கேட்குது. 267 00:12:13,942 --> 00:12:15,611 - ஆமாம், சவுண்டு சிறப்பா கேட்குது. - ஆமாம். ம்ம்-ஹம்ம். 268 00:12:15,611 --> 00:12:19,114 அதோட, இங்கே ஒரு ஸ்கூல் மாதிரி தான் இங்கே. 269 00:12:19,781 --> 00:12:22,701 நிறைய கைப்பிடிகளும், சாய்ந்த நடைப் பலகைகளும் இருக்கு, பாதுகாப்பிற்காக. 270 00:12:22,701 --> 00:12:24,578 - இதைப் பாரு. இது வேலை செய்யுதா? - ஆமாம், அதோட... 271 00:12:27,664 --> 00:12:29,791 அட, ஆமாம்! வேலை செய்யுதே. 272 00:12:33,629 --> 00:12:36,715 நீங்க, தயவுசெய்து, அதை ஆரம்ப நிலைக்கேத் திருப்பி கொண்டு வர்றீங்களா? 273 00:12:50,145 --> 00:12:51,563 நன்றி. மிக்க நன்றி. 274 00:12:51,563 --> 00:12:52,689 இது என்ன? 275 00:12:52,689 --> 00:12:56,735 மெடிக். மெடிக். மெடிக்... 276 00:12:56,735 --> 00:12:58,320 கடவுளே. ஓஹோ. 277 00:12:59,321 --> 00:13:00,864 எல்லோருக்கும் அந்த பட்டனைப் பிடிக்கும். 278 00:13:02,241 --> 00:13:04,284 ஆனால், என்ன தெரியுமா? நல்ல விஷயம் என்னன்னா, 279 00:13:04,284 --> 00:13:07,371 இதுக்கு வயரிங் மேல இருப்பதால, நீங்க அதை ஒரு சவுண்டு சிஸ்டத்துடன் பொருத்திடலாம்... 280 00:13:07,371 --> 00:13:08,705 - அட, ஆமாம். - ...மொத்த இடத்துக்கும்... 281 00:13:08,705 --> 00:13:10,123 - அது நல்ல யோசனை. - இல்ல, வேண்டாம்... 282 00:13:10,123 --> 00:13:11,041 ஆம், 283 00:13:11,041 --> 00:13:12,960 - இந்த பொருளை எல்லாம் அப்புறப்படுத்தணும். - ஆமாம், அது வேலை செய்யுது. 284 00:13:12,960 --> 00:13:15,963 - ஆம் சரிதான். அடக் கடவு... - உனக்கு ரொம்பப் பொருத்தம். 285 00:13:16,797 --> 00:13:18,465 - நான் இதுல... - நான் அதுல உட்கார மாட்டேன். 286 00:13:18,465 --> 00:13:20,050 - வேண்டாம்... - ஜாக்கிரதை. பார்த்து... 287 00:13:20,050 --> 00:13:23,345 - ஓ, இல்ல, இல்ல. நான் அதை செய்ய மாட்டேன். என்ன... - நல்லாயிருக்கு. சின்ன ஊஞ்சல் மாதிரி. 288 00:13:23,345 --> 00:13:26,056 - ஆகவே, நீங்க தான் கான்டிராக்டரா? - சரியா சொன்னீங்க. 289 00:13:26,056 --> 00:13:29,351 ஆம், சுமார் பத்து வருஷத்துக்கும் மேலா, நான் "கான்டிராக்டிங்" தொழிலை செய்துட்டு வரேன். 290 00:13:29,351 --> 00:13:31,728 இருந்தும் இத்தனை காலமா நாம சந்திக்கவே இல்ல. 291 00:13:32,229 --> 00:13:34,314 நாம சந்திச்சிருக்கோம்னு நினைக்கிறேன். உங்களுக்கு என்னை ஞாபகம் இல்ல. 292 00:13:34,314 --> 00:13:36,483 - சந்திச்சிருந்தா எனக்கு ஞாபகம் இருக்கும். - இல்ல. 293 00:13:36,483 --> 00:13:38,318 ஆம். ம்ம்-ஹம்ம். 294 00:13:40,070 --> 00:13:43,490 - ஆமாம், எனவே, இது தான் எனக்கு பிடிச்ச அறை. - அருமை. 295 00:13:43,490 --> 00:13:45,742 இது நிஜமான ஈஸ்ட் கோஸ்ட் உணர்வைத் தருது. 296 00:13:45,742 --> 00:13:49,246 ஆமாம், ஒரு வித கோலோனிய காப்பகம் மாதிரி, கேப் காட் மார்சுவரியைப் போல. 297 00:13:49,246 --> 00:13:52,457 ஆமாம், நான் அந்த சுவத்தை இடிச்சு, இதை ஒரு பெரிய டைனிங்க அறையா ஆக்கப் போறேன் 298 00:13:52,457 --> 00:13:55,002 - அதுல விருந்தினரை வரவேற்க முடியறது... போல. - நல்லது. ரொம்ப நல்லாயிருக்கு. நல்லாயிருக்கு. 299 00:13:55,002 --> 00:13:57,254 இந்த அறையில யாரோ இறந்தது போல தோணல? 300 00:13:57,254 --> 00:13:59,089 ஏன்னா இங்கே யாரோ இறந்து போனது போல தான் இருக்கு. 301 00:13:59,089 --> 00:14:01,425 - அது ஒரு பொருட்டே இல்ல. - இந்த அறையில இல்ல. என்ன. 302 00:14:01,425 --> 00:14:03,427 சரி தான். இந்த பொருட்கள் எல்லாம் வீட்டோட வருதா, 303 00:14:03,427 --> 00:14:06,805 அல்லது இதோட உரிமையாளர்கள், அவற்றை அடுத்த உலகத்துக்கு அவங்களுடன் எடுத்துட்டுப் போறாங்களா? 304 00:14:06,805 --> 00:14:10,601 போதும், கொஞ்சம் நிறுத்துறயா? பிளீஸ், நிறுத்து. நீ வேடிக்கைக்கு தான் சொல்ற, இருந்தாலும் நான்... 305 00:14:10,601 --> 00:14:11,768 - போதும். - சரி, என்னை மன்னிச்சிடு. 306 00:14:11,768 --> 00:14:14,062 நீ சரியா தான் சொல்ற. ரொம்ப அதிகமாயிடுச்சு. சரிதான். 307 00:14:14,062 --> 00:14:16,481 - நன்றி. நன்றி. - மன்னிப்பு கேட்கிறேன். அந்த மரம் நல்லாயிருக்கு. 308 00:14:16,481 --> 00:14:18,734 - அது உண்மையான மரம் இல்லை. - சரி, நல்லது. 309 00:14:19,234 --> 00:14:22,487 இது சைமனின் அறையா இருக்கலாம். 310 00:14:22,988 --> 00:14:24,198 அதுல ஒரு சின்ன சமையல் அறையும் இருக்கு. 311 00:14:26,033 --> 00:14:27,326 ஒவ்வொரு பைனுக்கும் அது தான் கனவு. 312 00:14:32,998 --> 00:14:34,458 நன்றி. 313 00:14:34,458 --> 00:14:38,212 - அது ஃபிரான்ஸிஸுடைய அறை. - இதுல ஒரு முழுஅளவு ஃபிரிட்ஜ் இருக்கு. 314 00:14:41,131 --> 00:14:42,674 இதுக்குள்ள பற்களும், ரத்தமும் இருக்கு. 315 00:14:42,674 --> 00:14:48,180 ஆனால், என்னால அதையெல்லாம் இந்த இடத்திலிருந்து உடனே அப்புறப்படுத்த முடியும். 316 00:14:48,180 --> 00:14:50,849 - ஆம், அதெல்லாம் சுலபம். - ஆமாம். 317 00:14:52,893 --> 00:14:56,688 - இது மேவ்வின் அறையா இருக்கலாம். - இன்னொரு குட்டி சமையலறை. 318 00:14:58,690 --> 00:14:59,858 என்ன கண்ராவி? 319 00:15:01,485 --> 00:15:04,446 - நீ அதைப் பார்த்தாயா? நீங்க பார்த்தீங்களா? - காத்து. வெறுமனே காத்து தான். 320 00:15:04,446 --> 00:15:05,781 அது தான் முன்னாடியும் நடந்ததா? 321 00:15:05,781 --> 00:15:07,324 நாம அந்த பார்லரைப் பார்த்துட்டு வரலாம். 322 00:15:07,908 --> 00:15:09,743 அது காத்தால நடக்கல்ல. 323 00:15:09,743 --> 00:15:11,495 அதாவது, குழந்தைங்க அதை ரொம்ப விரும்புவாங்க. 324 00:15:11,495 --> 00:15:12,538 எதை விரும்புவார்கள்? 325 00:15:14,164 --> 00:15:15,749 நீ எதைப் பத்தி பேசற? 326 00:15:15,749 --> 00:15:18,210 இது தான் எங்க பெட்ரூமா இருக்கும். 327 00:15:18,710 --> 00:15:20,087 பெரிய பெட்ரூம். 328 00:15:20,087 --> 00:15:21,255 ஆம், நிச்சயமா, 329 00:15:21,255 --> 00:15:23,382 கழிப்பறைக்கும் படுக்கை அறைக்கும் நடுவே ஒரு சுவரை எழுப்புவோம். 330 00:15:23,382 --> 00:15:26,385 நாங்க அந்த கிச்சனெட்டையும் ஐவி ராக்கையும், 331 00:15:26,385 --> 00:15:28,512 அந்த ரப்பர் திரை, ரப்பர் திரை ராக்கு, 332 00:15:28,512 --> 00:15:31,098 அந்த கைப்பிடிகள், பாதுகாப்பு பார்கள், அப்புறம்... 333 00:15:31,098 --> 00:15:33,100 ஆம், அப்புறம் இந்த இடத்துல சில புதிய ஜன்னல்கள பொருத்தி... 334 00:15:33,100 --> 00:15:34,101 - ஓ, சரி. - ...எப்படியோ, பார்க்கலாம். 335 00:15:34,101 --> 00:15:36,353 அது சுலபம். பலமா அந்த சுவத்துக்கு நடுவிலே உடைச்சா போதும். 336 00:15:36,353 --> 00:15:38,105 அது வெளியில இருக்குற சுவர் இல்லை. 337 00:15:38,856 --> 00:15:39,773 இதைப் பாரு. 338 00:15:39,773 --> 00:15:41,984 - மெடிக். மெடிக். - யேசுவே! சாரி. சாரி. 339 00:15:41,984 --> 00:15:43,819 - மெடிக். மெடிக். மெடிக். - ரெண்டு முறை அழுத்தணும். 340 00:15:43,819 --> 00:15:46,530 - மெடிக். மெடிக். மெ... - ரெண்டு முறை அழுத்தணும். அது... 341 00:15:47,865 --> 00:15:49,658 - அந்த பட்டனிலிருந்து வித்தியாசப் படுகிறது. - ஆம். 342 00:15:50,868 --> 00:15:51,869 நல்லாயிருக்கு. 343 00:15:52,411 --> 00:15:53,495 ஒரு கழிப்பு நாற்காலியும் இருக்கு. 344 00:15:54,037 --> 00:15:55,038 ஆம். 345 00:15:55,622 --> 00:15:56,623 - சேர்ந்து வருது. ஆம். - அப்படியா. 346 00:15:56,623 --> 00:15:57,958 - சரிதான். - ஆம், நான் வந்து... 347 00:15:58,667 --> 00:15:59,668 சரி செய்துடுங்க. 348 00:16:04,715 --> 00:16:06,592 - தயவுசெய்து அதுல் உட்காராத. - நிஜமா, எனக்கு உட்காரந்து பார்க்கணும். 349 00:16:06,592 --> 00:16:08,594 - பிளீஸ். நான் கெஞ்சி கேட்கிறேன். - எனக்கு நிஜமா, நிஜமா உட்கார்ந்து பார்க்கணும். 350 00:16:08,594 --> 00:16:09,970 அடடா. 351 00:16:10,762 --> 00:16:13,098 சாா்லி இந்த இடத்தைப் பத்தி என்ன நினைக்கிறார்? 352 00:16:13,098 --> 00:16:14,349 - அவருக்கு ரொம்ப பிடிக்கும். - அப்படியா. 353 00:16:14,349 --> 00:16:17,311 இந்த கட்டத்துல, எங்க வீட்டை விட பெரிசாவும், பட்ஜெட்டுக்குள்ளேயும் வரும் எந்த வீடும் பிடிக்கும். 354 00:16:17,311 --> 00:16:19,104 அவர் யாராவது விட்டுட்டுப் போன புளாக்பஸ்டருக்குள்ள கூட மாற தயாரா இருக்கார். 355 00:16:19,104 --> 00:16:21,273 என்ன செய்ய, இப்போதான் அதெல்லாம் ஜிஎன்சி நிறுவனத்துடையது ஆகிடுச்சே. 356 00:16:22,316 --> 00:16:24,568 ஆனால், உண்மையா பேசட்டுமா? 357 00:16:24,568 --> 00:16:26,820 வேண்டாம், பிளீஸ், உன் வழக்கமான இனிமையுடன் பேசினா போதும். 358 00:16:26,820 --> 00:16:29,531 சரி, இந்த இடம், சுத்தமா நல்லாயில்ல. 359 00:16:29,531 --> 00:16:31,742 அதோட, இதனுடைய பயங்கரமான நிலையில் இருந்து 360 00:16:31,742 --> 00:16:35,787 இதை சுமாரா ஆக்க, ரொம்ப அதிகமா செலவும் செய்தாகணும். 361 00:16:35,787 --> 00:16:37,998 இன்னும் எல்லாமே ரெடியா இருக்கிறது போல ஒரு இடத்துக்கு ஏன் நீங்க போகக்கூடாது? 362 00:16:37,998 --> 00:16:39,416 சார்லி ஒரு வக்கீல் தானே? 363 00:16:39,416 --> 00:16:42,044 ஆமாம், ஆனால் எங்களுக்கு மூணு குழந்தைங்க, ஒரே வருமானம். 364 00:16:42,044 --> 00:16:44,713 அதோட நாங்க அமெரிக்காவிலேயே ரெண்டாவது விலை உயர்ந்த நகரத்துல குடியிருக்கோம். 365 00:16:44,713 --> 00:16:46,465 அதனால தான், அழறதை நிறுத்திட்டு, வேலையைத் தேடிக்கணும். 366 00:16:46,465 --> 00:16:49,259 என் குழந்தைகளை வளர்த்துட்டு இருக்கேன், வேலையிலிருந்து விலகி 13 வருஷமாகுது. 367 00:16:49,259 --> 00:16:50,802 "வேலையை தேடிக்கொள்வது" எல்லாம் முடியாது. 368 00:16:50,802 --> 00:16:53,347 உன் பெயரை ஜிப்ரெக்ரூட்டர்ல சேர்க்கிறேன், என்ன? 369 00:16:53,347 --> 00:16:56,975 பூமியில சில மூளையே இல்லாதவங்களுக்கு எல்லாம் வேலை கிடைக்குது. உனக்கு நிச்சயமா கிடைக்கும். 370 00:16:56,975 --> 00:17:00,395 பாரு, எங்களுக்கு இன்னும் பெரிய வீடு வேணும்னா, இதை தான் எங்களால வாங்க முடியும். 371 00:17:00,395 --> 00:17:05,150 அதனால, நான் இதுக்கு வேண்டியதை செய்து காரியத்தை முடிக்கப் போறேன். 372 00:17:05,150 --> 00:17:07,944 ஒரு சில வருஷங்கள் ஆகும், அப்புறம் எல்லாம் பழகிப் போகும். 373 00:17:07,944 --> 00:17:09,946 ஆமாம், சில வருடங்கள், சில சிலுவைகளும். 374 00:17:09,946 --> 00:17:12,532 பாரு, நாம ரொம்ப வித்தியாசமான உலகத்துல வாழறோம், வில். அது தான் உண்மை, சரியா? 375 00:17:12,532 --> 00:17:14,701 நீ என்ன வேணும்னாலும் செய்யலாம், உன் பைத்தியக்கார தொப்பியையும் போட்டுகிட்டு 376 00:17:14,701 --> 00:17:17,454 எங்கே வேணும்னாலும் போகலாம். 377 00:17:17,454 --> 00:17:21,208 ஒரு தாயா இருக்கணும்னா, நமக்குப் பிடிக்காத பல வேலைகளை செய்து தான் ஆகணும். 378 00:17:21,208 --> 00:17:23,126 நீ ஒரு ரோபோட் மாதிரி பேசற, சரியா? 379 00:17:23,126 --> 00:17:25,628 அதெல்லாம் எழுதப்பட்ட விதிகள் இல்ல. இந்த திருடன் கிட்ட வேண்டாம்னு சொல்லிடு. 380 00:17:25,628 --> 00:17:26,964 - என்ன? - ஆமாம். 381 00:17:26,964 --> 00:17:28,423 சார்லி வீட்டை மாத்த தயாரா இருக்கார். 382 00:17:28,423 --> 00:17:31,051 குழந்தைங்களுக்கு இன்னும் வயசாயிகிட்டே போகுது, அவங்களுக்கு இன்னும் இடம் தேவை. 383 00:17:31,051 --> 00:17:32,177 உனக்கு இங்கே வாழ பிடிச்சிருக்கா? 384 00:17:32,177 --> 00:17:34,930 கண்டிப்பா எனக்கு இந்த கண்ராவி இடத்துல வாழப் பிடிக்கல. நீ என்ன பேசற நீ? 385 00:17:34,930 --> 00:17:37,641 - இல்ல. - எனக்குப் பிடிக்கல. இந்த... ஒரு பூத் பங்களா. 386 00:17:37,641 --> 00:17:42,020 சரி, அப்போ நாம ஏன் இங்கிருந்து வெளியேறி, ஞான ஸ்நானம் செய்துக்கக்கூடாது, 387 00:17:42,020 --> 00:17:44,398 அதோட சார்லியிடமும், நீங்க இங்கே குடி வரப் போறதில்லைன்னு சொல்லலாமே? 388 00:17:45,858 --> 00:17:50,362 நான் சார்லிகிட்ட அப்படி சொல்றேன், ஆனால் நீ ஆட்ரியுடைய வீட்டிலேர்ந்து உன் பொருட்களை 389 00:17:51,280 --> 00:17:52,531 எல்லாம் எடுத்துட்டு வந்து, மொத்தமா உறவை முறிச்சிடணும். 390 00:17:52,531 --> 00:17:54,992 இது எமோஷனல் பிளாக்மெயில். 391 00:17:54,992 --> 00:17:57,536 நான் உன் மேல அக்கறை வச்சிருக்கேன், அதுக்காக எனக்கு விருப்பமில்லாத விஷயத்தை செய்ய 392 00:17:57,536 --> 00:17:59,288 - நீ என்னை கட்டாயப்படுத்துவயா? - எனக்கு உன் மேல இன்னும் அதிக அக்கறை இருக்கு. 393 00:17:59,288 --> 00:18:00,581 - அதைப் பத்தி எனக்குத் தெரியலை. - நீ அந்த உறவை முறிச்சிட்டு 394 00:18:00,581 --> 00:18:02,332 - வந்துடணும். - எனக்கு அதைப் பத்தித் தெரியாது. 395 00:18:02,332 --> 00:18:04,626 - நீ அந்த பெண்ணுடைய வீட்டிலிருந்து வெளியேறணும். - என்ன தெரியுமா? 396 00:18:05,127 --> 00:18:07,546 நீ எங்கிட்ட சவால் விடற. என்னை நீ உசுப்பிப் பார்க்கிற. 397 00:18:07,546 --> 00:18:09,006 - நிஜமாவா? ஓஹோ. - நான் செய்துடுவேன். ஆமாம், பார்த்துக்கோ. 398 00:18:09,006 --> 00:18:10,883 - இப்போவே, போய் வேண்டாம்னு சொல்லு. - நிஜமாவா? 399 00:18:11,800 --> 00:18:13,427 அந்த பயங்கர பொம்பளைகிட்ட உனக்கு இந்த இடம் விருப்பம் இல்லன்னு சொல்லு. 400 00:18:13,427 --> 00:18:15,846 - ஆக நான் இப்போ அதை செய்யணுமா? - ஆமாம், செய்யணும், உடனே. வாங்க வர்றாங்க பாரு. 401 00:18:15,846 --> 00:18:17,806 - நாம ஒத்துக்கிட்டோம். டீல் போட்டோம். - நான் எப்படி அவங்ககிட்ட... 402 00:18:17,806 --> 00:18:19,308 - போ. போய் சொல்லு. சும்மா போ. - எனக்கு பயமா இருக்கு. 403 00:18:19,308 --> 00:18:20,601 - சொல்லு. - நீ சொல்றயா? 404 00:18:20,601 --> 00:18:22,060 சரிதான் மக்களே. 405 00:18:22,060 --> 00:18:24,354 இப்போ ஆவணங்களைப் பார்க்கும் நேரம். 406 00:18:24,354 --> 00:18:28,233 தெரியும், தெரியும், யாருக்கும் பிடிக்காத வேலை. ஆனால் அதை சுருக்கமா, சுவாரசியமா முடிக்கிறேன். 407 00:18:28,233 --> 00:18:30,944 உன் பெயரை மட்டும் இதுல சரியா போடணும்... 408 00:18:30,944 --> 00:18:33,572 மன்னிக்கணும், நான் வந்து... எனக்கு இது பிடிக்கல. 409 00:18:33,572 --> 00:18:35,407 - நீ விளையாடறயா. - நான் வந்து... நான்... 410 00:18:35,407 --> 00:18:38,160 எனக்கு இனி வீடு காட்ட மாட்ட, நிச்சயமா மாட்ட. எனக்குத் தெரியும். 411 00:18:38,160 --> 00:18:39,995 உண்மையா பேசுவோம். இந்த இடம் ரொம்ப மோசம், சரியா? 412 00:18:40,662 --> 00:18:43,916 அதாவது, இது நிஜமாவே ரொம்ப மோசமான இடம். 413 00:18:44,708 --> 00:18:46,043 இது எங்க அப்பாவுடைய இடம். 414 00:18:47,461 --> 00:18:48,754 ரொம்ப வருத்தமா இருக்கு. 415 00:18:51,715 --> 00:18:53,133 அடக் கடவுளே! ஊஊ! 416 00:18:55,552 --> 00:18:56,970 அப்பாடி, இப்ப எவ்வளவோ நல்லாயிருக்கு. 417 00:18:56,970 --> 00:18:59,431 நான் என் சவாலை செய்ய முடியாது. அதைச் செய்ய வேண்டாம். எனக்குச் செய்ய வேண்டாம். 418 00:18:59,431 --> 00:19:00,933 - அதுக்கு பதிலா ஐஸ் கிரீம் சாப்பிடலாம், சரியா? - இல்ல. 419 00:19:00,933 --> 00:19:02,976 - நான் உனக்கு ஐஸ் கிரீம் வாங்கித் தரேன். - நாம உன் விஷயத்தை செய்யத் தான் போறோம். 420 00:19:02,976 --> 00:19:04,394 - எனக்குச் செய்ய விருப்பமில்லை. வேண்டாம். - இல்ல. முடியவே முடியாது. 421 00:19:04,394 --> 00:19:06,104 - பாரு, பிளீஸ். பிளீஸ். - முடியவே முடியாது. 422 00:19:06,104 --> 00:19:07,773 - நாம போறோம். நாம இப்ப போறோம். - இது தான் கடைசி. 423 00:19:07,773 --> 00:19:10,526 ஒரு தடவை நான் எல்லாத்தையும் எடுத்துட்டா, நான் இனிமே அவ வீட்டுல காலே வக்க முடியாது, 424 00:19:10,526 --> 00:19:13,237 - ஆனால் அந்த நினைப்பையே நான் வெறுக்கிறேன். - வில், நாம போறோம். 425 00:19:13,237 --> 00:19:14,655 நாம செய்யறோம். நீ குஷியா உணர்வே. 426 00:19:14,655 --> 00:19:16,198 - அடச் சே. - அது நல்லா இருக்கப் போகுது. ஊஊ! 427 00:19:26,667 --> 00:19:28,585 அவ வீட்டுல இல்ல. பார்த்தா இப்படி நடக்கணும்னு விதிக்கப் படல போலும். நாம போகலாம். 428 00:19:28,585 --> 00:19:30,295 நாம சைடுல போய் பார்க்கலாம். வா. 429 00:19:34,007 --> 00:19:35,008 ஹலோ? 430 00:19:44,059 --> 00:19:45,060 அடக் கடவுளே. 431 00:19:45,686 --> 00:19:46,854 அதோ கென்டால்ஃப். 432 00:19:48,355 --> 00:19:49,481 - அவனைப் பாரு. - அவனைப் பார்த்தா பாவமா இருக்கு. 433 00:19:49,481 --> 00:19:52,150 - ரொம்ப சோகமா இருக்கான். துக்கமா இருக்கான். - ஆம். உன்னை பார்க்கிறான். 434 00:19:52,150 --> 00:19:54,778 - ஹை. - பார்க்கிறான். பாரு. ஹை. 435 00:19:54,778 --> 00:19:56,280 - ஹை. - அவன் முகத்துல ஒளி வந்துடுச்சு. 436 00:19:56,822 --> 00:19:58,615 - அவன் எவ்வளவு... - அவனுடைய உடல் தோற்றமே மாறிடுச்சு. 437 00:19:59,408 --> 00:20:01,076 - ஹை. - விளக்கு மாதிரி ஒளி வீசறான். 438 00:20:01,827 --> 00:20:03,453 - ஹை, குட்டி நண்பா. - அவ வீட்டுல இல்ல. 439 00:20:03,453 --> 00:20:05,622 அவளைக் கூப்பிட்டு உன் பொருட்களை எடுத்துக்க ஒரு நேரத்தை குறிச்சிடு. 440 00:20:05,622 --> 00:20:07,249 - சரியா? போகலாம். - இல்ல, இல்ல. நாம இப்பவே அதை செய்யணும். 441 00:20:07,249 --> 00:20:09,168 எனக்கு தைரியம் இருக்காது. ஆதரவு தர நீ கூட இருக்கணும். 442 00:20:09,168 --> 00:20:11,753 - இப்பவே செய்திடலாம், சரியா? - சரிதான், எப்படி? 443 00:20:11,753 --> 00:20:13,755 நீ முட்டிப் போட்டு, நாய் கதவு வழியா உள்ளே போ. 444 00:20:13,755 --> 00:20:15,132 - என்ன? மாட்டேன். - நீ போகணும். 445 00:20:15,132 --> 00:20:16,717 - அது தான் ஒரே வழி. - நீ பண்ணு. 446 00:20:16,717 --> 00:20:18,343 - நான் உள்ள நுழைய முடியாது. நம்பு. - பாரு. 447 00:20:18,343 --> 00:20:23,765 நீ ரொம்ப ரொம்ப மெல்லிசா இருந்து திடமாவும், வளையும் தன்மையுடன் இருக்கணும். 448 00:20:23,765 --> 00:20:27,644 மொத்தத்துல, சின்ன நீண்ட உருவம், நீள கால்கள். 449 00:20:27,644 --> 00:20:30,105 - நீ என்ன செய்யணும்னு தெரியும். - ரொம்ப குறுகலா இருக்கு. 450 00:20:30,105 --> 00:20:33,233 - அட, எனக்குப் பிடிச்சிருக்கு. சரி. - நல்லது. அந்த நாய் கதவு வழியா உள்ளே போ. 451 00:20:33,233 --> 00:20:35,027 சரி தான். என்னால இதை செய்ய முடியும். 452 00:20:35,027 --> 00:20:36,028 சீக்கிரம். சீக்கிரம். 453 00:20:36,028 --> 00:20:39,489 நீ மயங்கி விழணும்னா மட்டும் என் பின் பாகத்தைப் பாரு. 454 00:20:39,489 --> 00:20:40,908 மரியாதையுடன் சொல்றேன், நான் பார்க்கல. 455 00:20:40,908 --> 00:20:42,451 உள்ளே போ. ஆகட்டும். 456 00:20:46,622 --> 00:20:48,248 - ரொம்ப நளினம். நல்லாயிருக்கு. - ஆமாம். 457 00:20:48,248 --> 00:20:51,084 - அட, அங்கப் பாரு. ஊஊ! - பண்ணிட்ட. சரி. நல்லது. நல்லது. 458 00:20:51,084 --> 00:20:53,545 நல்லது, இப்போ கதவைத் திற. கதவுக்கு வா. கதவைத் திற. 459 00:20:55,047 --> 00:20:57,508 - நல்லது. நல்ல வேலை செய்த. இதோ. - ஆமாம். வா. 460 00:20:58,008 --> 00:20:59,760 - இந்த வழியா. - ஆமாம். 461 00:21:11,772 --> 00:21:14,483 வில், என்ன செய்யற? 462 00:21:14,483 --> 00:21:15,984 ஆட்ரி, நீ வீட்டுலயா இருக்க. 463 00:21:15,984 --> 00:21:19,821 வில், நீ சொன்ன இது உன் வீடுன்னு. நீ என்ன செய்யற? 464 00:21:19,821 --> 00:21:21,490 - என்ன செய்யற? - சில்வி... 465 00:21:21,490 --> 00:21:23,992 - இல்ல, நான் சொல்லலை. என்... - சில்வியா, எதுவும் தெரியாத மாதிரி நடிக்காதே. 466 00:21:23,992 --> 00:21:26,161 நீ அந்த நாய் கதவு வழியா உள்ள தவழ்ந்து வர்றதை நான் செக்யூரிட்டி கேமரா வழியா பார்த்தேன். 467 00:21:26,161 --> 00:21:28,372 ஒரு செக்யூரிட்டி கேமரா இருக்குன்னே நீ எனக்குச் சொல்லலையே. 468 00:21:28,372 --> 00:21:30,415 எங்க கிட்ட இருக்குன்னு தெரிஞ்சிருந்தா நீ அதை செய்திருக்கவே மாட்ட. 469 00:21:30,415 --> 00:21:33,377 நான்... பாரு, அவன் வாதம் என்னன்னா, அவன் வந்து அவனுடைய பொருட்களை எடுக்க வந்தான் 470 00:21:33,377 --> 00:21:35,754 - உன்னுடன் உறவை முறிக்க நினைச்சான். அது தான். - உன் பொருட்கள் எல்லாம் உனக்கு கிடைக்காது. 471 00:21:35,754 --> 00:21:37,714 - என் பொருட்கள் வேணும். - உனக்கு அவை கிடைக்காது 472 00:21:37,714 --> 00:21:39,842 ஏன்னா, நிச்சயமா உனக்கு ஒரு பழைய சீப்பும் 473 00:21:39,842 --> 00:21:43,220 ஒரு செல் ஃபோன் சார்ஜரும் எங்கேயும் கிடைக்கும், அந்த கேவலமான சாக்கை வச்சுகிட்டு 474 00:21:43,220 --> 00:21:46,640 - இங்கே வந்து என்னை வேவு பார்க்க வேண்டாம். - அட, நான் உன்னை வேவு பார்க்கிறேனா? 475 00:21:46,640 --> 00:21:47,724 என்னவோ. 476 00:21:47,724 --> 00:21:50,352 என்ன எழவு, சில்வியா? நீ இங்கே எதுக்காக வந்த? 477 00:21:50,352 --> 00:21:52,229 உனக்கு குழந்தைங்க, குடும்பம் எல்லாம் இல்லையா? 478 00:21:52,229 --> 00:21:54,648 இருக்கு. உனக்கு... அட, உனக்கு நினைப்பு இருக்கா. எனக்கு குடும்பம் இருக்கு, சரி. 479 00:21:54,648 --> 00:21:56,441 சரி, நிஜமாவே உனக்கு வில்லைப் பத்தி அக்கறை இருந்தால், 480 00:21:56,441 --> 00:21:58,652 நீ உங்க கடந்த கால கண்ராவியை வச்சுட்டு திரும்பி அவனை 481 00:21:58,652 --> 00:22:00,612 - இதுல இழுத்து விட பார்க்க மாட்ட. - சரி. 482 00:22:00,612 --> 00:22:03,490 நீ குறுக்குத்தனமான அந்த பதின்ம வயசு பெண்கள் வச்சுக்குறது போல கிறுக்குத் தனமான பேர்களையும் 483 00:22:03,490 --> 00:22:05,450 அடைமொழிகலையும், ரகசிய ஜோக்குகளையும் வச்சுட்டு இருக்கீங்க. 484 00:22:05,450 --> 00:22:07,578 விடியற்காலை நாலு மணி வரை எப்போதும் ஃபோன்ல பேசிகிட்டு இருக்க வேண்டியது. 485 00:22:07,578 --> 00:22:10,706 நான் ஒரு வயத்து வலி இருக்குற குழந்தையுடன் இருப்பேன். வேற யாருடன் நான் பேச முடியும்? 486 00:22:10,706 --> 00:22:13,166 - உன் கணவன். - அவர் தூங்கிடுவார். ஒரு சிஸ்டம் இருந்தது. 487 00:22:13,166 --> 00:22:15,544 சரி, எனவே நான் இரவுகள் பார்த்துப்பேன் அவர் காலையில பார்த்துப்பார். 488 00:22:15,544 --> 00:22:16,837 எனவே நான், தாய்ப்பால் கொடுத்துட்டு... 489 00:22:16,837 --> 00:22:18,338 எனக்கு அதைப் பத்தியெல்லாம் கவலையில்லை. 490 00:22:18,338 --> 00:22:22,009 உங்க விஷயம் எல்லாமே விசித்திரமாவும் நாசம் செய்வதாகவும் இருக்கு. 491 00:22:22,009 --> 00:22:24,303 எங்க டேட் இரவுகளுக்கு எல்லாம் இவன் உன்னையும் கூப்பிடுவான். 492 00:22:24,303 --> 00:22:26,138 நீ அவனுக்கு எடுத்துக் கொடுத்த ஆடைகளை போட்டுக்கொள்வான். 493 00:22:26,138 --> 00:22:28,182 நான் என்ன செய்யணும்? ஒரு வரையறை வேண்டாமா எல்லாத்துக்கும்? 494 00:22:28,182 --> 00:22:29,183 அது அவனுக்கு நல்லதில்ல. 495 00:22:29,183 --> 00:22:30,726 என்ன தெரியுமா? இப்போ எங்களுக்குள்ள உறவு உடைஞ்சிடுச்சு இல்ல, 496 00:22:30,726 --> 00:22:34,229 உன்னுடைய கண்ராவி உபதேச பேச்சுக்களை எல்லாம் நான் இனி கேட்க வேண்டிய அவசியமில்ல, சரியா? 497 00:22:34,229 --> 00:22:35,439 உண்மையில, நீ கேட்டு தான் ஆகணும் 498 00:22:35,439 --> 00:22:37,399 ஏன்னா நீ என் டைனிங் அறையில நிற்கிற 499 00:22:37,399 --> 00:22:40,485 அதுவும், கேவலமா, ஒரு நாயைப் போல அந்த நாய் கதவு வழியா தவழ்ந்து வேற உள்ள வந்திருக்க. 500 00:22:41,320 --> 00:22:43,280 - நாம புணரலாமா? - ஒழிஞ்சு போறயா இல்லயா! 501 00:22:43,280 --> 00:22:44,448 வெளியே போ! 502 00:22:44,448 --> 00:22:45,741 நான் உன் கழிப்பறையை உபயோகப் படுத்தலாமா? 503 00:22:45,741 --> 00:22:47,868 - கேட்கறதுக்கு மன்னிக்கணும். - சரி, வெளியே போ. 504 00:22:47,868 --> 00:22:49,203 நன்றி. 505 00:22:51,330 --> 00:22:53,248 அட, அவ என்னை பைத்தியமாக்குறா. 506 00:22:53,832 --> 00:22:54,958 - நீ நல்லா செய்த. - அப்படியா? 507 00:22:54,958 --> 00:22:57,878 ஆமாம், அவகூட புணர அவகிட்ட கெஞ்சியது மட்டும் நல்லாயில்ல, மற்றது பரவாயில்ல. 508 00:22:57,878 --> 00:23:01,590 ஆமாம், அது யோசிச்சுப் பார்த்தா, அது கொஞ்சம் பரிதாபம் தான். 509 00:23:01,590 --> 00:23:03,050 - ஆம். - நான் மட்டும்... 510 00:23:03,050 --> 00:23:04,468 அவ ஒரு மாதிரி அப்படியும் இப்படியும் சிக்னல் கொடுத்தாள், இல்ல? 511 00:23:05,177 --> 00:23:06,386 - எனக்கு அப்படி தெரியலையே. - நிஜமாவா? 512 00:23:06,386 --> 00:23:08,138 - இல்ல. - நாம ஒரே அறையில இருக்கலையோ? 513 00:23:08,138 --> 00:23:09,765 உன்னை குஷிப்படுத்த ஒண்ணு கொண்டு வந்திருக்கேன். 514 00:23:12,643 --> 00:23:15,938 - இது கென்டால்ஃபா. - ஆமாம். 515 00:23:15,938 --> 00:23:18,607 ஹே. 516 00:23:18,607 --> 00:23:20,150 - பாரு, நீ தான் அவனைக் காப்பாத்திட்ட. - ஆம். 517 00:23:20,150 --> 00:23:22,778 - ஏற்கனவே அவன் சந்தோஷமாகிட்டான். தெரியுது. - பூரிச்சு போயிட்டான். 518 00:23:22,778 --> 00:23:24,112 இன்னும் பத்து வருஷம் இளையவனாகிட்டான். 519 00:23:25,155 --> 00:23:26,657 நன்றி. ஹலோ, பேபி. 520 00:23:26,657 --> 00:23:28,200 - ஆம். - ரொம்ப இனிமையானவன். 521 00:23:28,200 --> 00:23:30,035 வேண்டாம். வேண்டாம். இல்ல... வேண்டாம். 522 00:23:30,035 --> 00:23:32,079 பின்னாடி போ! எனக்குப் பிடிக்கல. 523 00:23:33,038 --> 00:23:34,456 - பாரு அவனை. - நாம இங்கிருந்து வெளியே போகணும். 524 00:23:34,456 --> 00:23:36,083 நாம நாச வேலை செய்யறோம்னு சொன்னாளே, உன்னால நம்ப முடியுதா? 525 00:23:36,083 --> 00:23:38,502 இல்ல. நாம நேர் எதிர். 526 00:23:38,502 --> 00:23:40,879 - நாம ஆக்கப்பூர்வமா இருக்கோம். உருவாக்குறோம். - நாம உருவாக்குறோம். 527 00:23:44,550 --> 00:23:45,926 என்ன ஆச்சு? 528 00:23:47,678 --> 00:23:50,639 - நல்லது! ஆமாம்! அப்படிதான்! - அடப் பாவமே. 529 00:23:51,139 --> 00:23:52,474 மன்னிச்சிடு, ஆட்ரி. 530 00:23:52,474 --> 00:23:55,143 கென்டால்ஃப் இந்த சூழல்ல உற்சாகமா இருக்கான். 531 00:23:55,143 --> 00:23:56,395 ஓ. இனிய மாலை. 532 00:24:04,486 --> 00:24:05,612 சரி. 533 00:24:06,530 --> 00:24:09,241 சரி தான். வந்தாச்சு. இது தான் சரி. 534 00:24:09,241 --> 00:24:11,535 - ஆகவே இங்கே தான் நீ இருக்கயா, ஹாம்? - இங்கே தான் இருக்கேன். 535 00:24:11,535 --> 00:24:13,579 - இது தான் சுத்துவட்டாரம். நல்லது. - இது தான், ஆமாம். 536 00:24:13,579 --> 00:24:16,748 பகலில் நல்லா இருக்கும். இரவுல கொஞ்சம் விசித்திரமா இருக்கும். 537 00:24:16,748 --> 00:24:19,877 நிறைய நாய்கள் குரைக்கும், மனிதர்கள் அலறுவாங்க. 538 00:24:19,877 --> 00:24:21,587 அவ்வப்போது பலமான மோதல்கள் 539 00:24:21,587 --> 00:24:23,797 ஆனால் அதைப் பத்தியெல்லாம் நாம அதிகமா கேள்வி கேட்கக்கூடாது. 540 00:24:23,797 --> 00:24:24,923 - நான் சொல்றது உனக்குப் புரியுதா? - சரி... 541 00:24:24,923 --> 00:24:26,508 - ஆம், ஆனால் எனக்கு பிடிச்சிருக்கு. - அது சுவாரசியமா இருக்கு. 542 00:24:26,508 --> 00:24:27,843 - அப்படியா. - ஆம். 543 00:24:33,599 --> 00:24:35,809 சரி, இன்னிக்கு வந்ததுக்கு நன்றி. 544 00:24:35,809 --> 00:24:38,187 உன் கருத்தை மட்டும் கேட்கலைன்னா, அந்த குப்பையை வேண்டாம்னு சொல்ல 545 00:24:38,187 --> 00:24:41,565 எனக்கு தைரியம் வந்திருக்காது. அதனால, அதுக்காக நன்றி. 546 00:24:42,065 --> 00:24:47,571 சரி, நன்றி, வந்து, ஒருவழியா ஆட்ரியுடன் என் உறவை முறிச்சதுக்கும், 547 00:24:47,571 --> 00:24:49,489 அதன் வலி தெரியறதுக்கு முன்னாடி அதை முடிச்சதுக்கும், நன்றி. 548 00:24:49,489 --> 00:24:53,952 நிச்சயமா நான் இனிமேல் அவளைப் பார்க்கவே போறதில்லை, நன்றி. 549 00:24:56,622 --> 00:24:57,623 அதோட... 550 00:24:58,749 --> 00:25:00,000 - அதோட? - அதோட... 551 00:25:01,460 --> 00:25:03,587 - அந்த மோசமான சூழ்நிலையிலிருந்து... - ஆம், வரவேற்கிறேன். 552 00:25:03,587 --> 00:25:06,089 - ...கென்டால்ஃபை காப்பாத்தியதுக்கு நன்றி. - இருக்கட்டும். 553 00:25:06,089 --> 00:25:07,591 அவனும் உனக்கு நன்றி சொல்றான். 554 00:25:07,591 --> 00:25:08,842 அவன் எவ்வளவு குஷியா இருக்கான் பாரு. 555 00:25:08,842 --> 00:25:11,136 ஆம். அங்கே பாரு. 556 00:25:11,637 --> 00:25:13,430 - நிஜமா மதிக்கிறேன். - பரவாயில்லை, இருக்கட்டும். 557 00:25:14,932 --> 00:25:17,809 என்ன விஷயம்னா, நான் உண்மையா சொல்றேன், 558 00:25:17,809 --> 00:25:20,521 என்னால கென்டால்ஃபை பார்த்துக்க முடியாது. 559 00:25:21,688 --> 00:25:23,357 உன்னால ஒரு ஓணானைப் பார்த்துக்க முடியாதா? 560 00:25:23,357 --> 00:25:26,568 உண்மையில என்னால எதையுமே பார்த்துக்க முடியாது, என்னையும் சேர்த்து தான். 561 00:25:26,568 --> 00:25:28,779 நானும் ஆட்ரியும் விவாகரத்து செய்துகிட்டதுக்கு முக்கிய காரணமே அதுதான். 562 00:25:28,779 --> 00:25:31,573 - நீ அவனை பார்த்துக்குறயா? பிளீஸ், அவனை வச்சுக்கோ. - முடியவே முடியாது. நிச்சயமா முடியாது. 563 00:25:31,573 --> 00:25:34,284 உனக்கு அவனைக் காப்பாத்துற துடிப்பு இருக்கு. அதை உங்கிட்ட பார்த்தேன். 564 00:25:34,284 --> 00:25:37,037 எந்த சூழ்நிலையிலும் நான் அந்த ஓணானை எடுத்துட்டுப் போக மாட்டேன். 565 00:25:37,037 --> 00:25:38,872 ஆகவே, நீ வீட்டுக்கு டிரைவ் செய்து திரும்பி வந்திட்டு இருந்த, 566 00:25:38,872 --> 00:25:41,250 அப்போ உனக்கு இந்த தாடியுள்ள ஓணான் நம்ம குடும்பத்துக்கு வேணும்னு தோணுச்சா? 567 00:25:42,084 --> 00:25:44,753 ஆமாம், அது இந்த ஓணானை தத்து எடுத்துக்குற 568 00:25:44,753 --> 00:25:46,004 நிகழ்ச்சி ஏதோ ரோடு பக்கம் நடந்துட்டு இருந்தது. 569 00:25:46,004 --> 00:25:47,506 அப்போ என்... மனசே உடைஞ்சு போச்சு. 570 00:25:47,506 --> 00:25:49,508 நிஜமாவா? ஏன்னா, இதுக்கு முன்னாடி நீ பெட்டே வேண்டாம் என்பாயே. 571 00:25:49,508 --> 00:25:51,093 இது குழந்தைங்களுக்காக. 572 00:25:51,093 --> 00:25:53,178 - பெரும்பாலும் நாய்களை வளர்ப்பாங்க. - நாய்கள்னா வேலை அதிகம். 573 00:25:53,762 --> 00:25:55,013 அப்போ உனக்கு உறுதியா அந்த வீடு வேண்டாமா? 574 00:25:55,013 --> 00:25:57,307 நீ இன்னொரு முறை போய், கடைசியா பார்த்துட்டு வர விரும்பலயா? 575 00:25:57,307 --> 00:26:01,979 வேண்டாம், அந்த வீடு ரொம்ப பிரச்சினை. அதோட வில்லும் ஒத்துக்கிட்டான். அவனும் பார்த்தான். 576 00:26:02,813 --> 00:26:04,189 அட, வில் அங்கே வந்திருந்தானா? 577 00:26:04,690 --> 00:26:07,025 ஆம், அவன் சும்மா கூட வந்தான். புதுசா ஒருத்தர் பார்த்துச் சொல்ல. 578 00:26:09,236 --> 00:26:11,697 நீ அதை எப்படி அழைக்கப் போற? நான் யோசிச்சேன்... 579 00:26:13,282 --> 00:26:15,409 - கென்டால்ஃப். - வேண்டாம், எனக்கு அது பிடிக்கல. 580 00:26:15,409 --> 00:26:16,451 - அது விசித்திரமா இருக்கு. - அப்படியா? 581 00:26:16,451 --> 00:26:17,953 ஜெஸிப்பா எப்படி இருக்கு? 582 00:26:18,495 --> 00:26:19,621 அதாவது ஜெஸிக்காவா? 583 00:26:19,621 --> 00:26:20,914 இல்ல, ஜெஸிப்பா. 584 00:26:20,914 --> 00:26:22,916 - அவள்... - உனக்கு ஓணான்களைப் பிடிக்குமா, என்ன? 585 00:26:23,792 --> 00:26:25,377 அட, ஆமாம், ரொம்ப பிடிக்கும். 586 00:26:26,587 --> 00:26:27,671 ரொம்ப பிடிக்கும். 587 00:26:33,260 --> 00:26:34,386 அவள் முகத்தைப் பாருங்க. 588 00:26:34,970 --> 00:26:36,847 - இங்கே அவளுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. - ஆமாம். 589 00:26:36,847 --> 00:26:38,182 எனக்கு ஜெஸிப்பாவை பிடிச்சிருக்கு. 590 00:27:37,366 --> 00:27:39,368 தமிழாக்கம் அகிலா குமார்