1 00:00:25,192 --> 00:00:28,195 சரி, எந்த பைத்தியக்காரன் இந்த மீனின் கண்ணைச் சாப்பிடப் போகிறான்? 2 00:00:29,655 --> 00:00:33,492 சரி, சொல்லு, குஸ்டாவோ, உன் வாழ்வாதாரம் என்ன? 3 00:00:33,575 --> 00:00:36,203 நீங்கள் அப்பாவாக இருக்கும் காலத்தை கடந்துவிட்டீர்கள். 4 00:00:36,286 --> 00:00:37,538 எங்களுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. 5 00:00:37,621 --> 00:00:39,289 சும்மா பேச முயற்சிக்கிறேன். 6 00:00:39,873 --> 00:00:42,709 பரவாயில்லை, அன்பே. இதை நான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். 7 00:00:44,795 --> 00:00:45,879 நான் ஒரு ஓவியன். 8 00:00:46,547 --> 00:00:48,465 அது அவருடைய ஓவியங்களுள் ஒன்று. 9 00:00:49,633 --> 00:00:50,676 அவன்தான் அதை வரைந்தானா? 10 00:00:50,759 --> 00:00:51,760 அற்புதம். 11 00:00:52,970 --> 00:00:55,097 நீங்கள் என்னிடம் சொல்ல மறந்த, 12 00:00:55,180 --> 00:00:58,475 என் பேரப் பிள்ளையின் விரலால் தீட்டிய ஓவியம் என நினைத்தேன். 13 00:00:59,017 --> 00:01:00,894 நான் ஒரு சமூக அமைப்பாளரும் கூட. 14 00:01:00,978 --> 00:01:02,354 அதில் என்ன வருமானம் வரும்? 15 00:01:02,938 --> 00:01:04,815 20 டாலர் தந்தால், நான் அந்தக் கண்களைச் சாப்பிடுவேன். 16 00:01:04,897 --> 00:01:07,860 சரி. உங்களைப் பொறுத்த வரை, அது வெறும் பணம். 17 00:01:07,943 --> 00:01:10,571 ஆனால் எங்களைப் போன்ற சிலருக்கு, அது உணர்வுப்பூர்வமான ஒரு மனநிறைவு. 18 00:01:10,654 --> 00:01:13,657 வினோதமாக இருக்கு, ஏனென்றால் நீங்கள் வாழும் இந்த வீட்டை, 19 00:01:14,366 --> 00:01:17,119 நான் பணத்தைக் கொடுத்து வாங்கினேன், உணர்வுகளைக் கொடுத்து அல்ல. 20 00:01:17,202 --> 00:01:18,745 சரி, நாம் நல்ல விதமாக நடந்துகொள்வோம். 21 00:01:19,329 --> 00:01:20,330 பாரு. 22 00:01:20,956 --> 00:01:25,043 பலோமா உன்னிடம் என்ன சொல்லியிருக்கிறாள் என்று தெரியாது, ஆனால் நான் அப்படிப்பட்டவன் கிடையாது. 23 00:01:25,127 --> 00:01:28,338 குறைந்தபட்சம், ஆரம்பத்தில் நான் அப்படி இல்லை. 24 00:01:28,422 --> 00:01:30,424 சரி. அப்படியானால், என்ன நடந்தது? 25 00:01:31,008 --> 00:01:32,301 - நீங்களாகவே அதை கேட்டுட்டீங்களே. - குஸ்டாவோ. 26 00:01:32,384 --> 00:01:33,886 சரி, நீ கேட்டதால் சொல்கிறேன், 27 00:01:33,969 --> 00:01:37,764 இந்த இடத்தை அடைவதற்கு நான் என்ன செய்தேன் என்று உனக்குச் சொல்கிறேன். 28 00:01:38,265 --> 00:01:43,228 ஆக, துணை நிர்வாகத் தலைவனாக நான் பொறுப்பை துவங்கியபோது, 29 00:01:43,979 --> 00:01:46,773 ஜூலியா தனது புதிய துணிக் கடையில் வேலை செய்யத் தொடங்கினாள். 30 00:01:47,608 --> 00:01:50,277 இனி அவள் வரவேற்பறையில் வேலை செய்யத் தேவையில்லை. 31 00:01:50,360 --> 00:01:52,779 எப்போதும் உன்னை சாதாரண சீருடையில் பார்த்ததில்லை, 32 00:01:52,863 --> 00:01:54,489 இப்போது அதில் எப்படி இருக்க தெரியுமா? 33 00:01:54,990 --> 00:01:57,409 - அட்டகாசம். அழகாக இருக்க. - நன்றி, அன்பே. 34 00:01:57,492 --> 00:02:00,329 இரவெல்லாம் தூங்கவே இல்லை, நல்லவேளை அழகாக இருக்கிறேன் என சொன்னாய். 35 00:02:00,412 --> 00:02:02,080 என் தையல் இயந்திரம் பழுதாகிவிட்டது, 36 00:02:02,164 --> 00:02:04,333 மற்றும் எனது பட்டாடையை தைக்க முடியாமல் போய்விட்டது. 37 00:02:04,416 --> 00:02:06,835 அது அவ்வளவு பெரியதாக இருந்ததா? 38 00:02:06,919 --> 00:02:07,920 சிறிதாகவா? 39 00:02:08,002 --> 00:02:09,630 “பெரிது” என்றே வைத்துக்கொள்கிறேன். 40 00:02:09,713 --> 00:02:13,425 ஹே! நீ என் வீட்டிற்குச் சென்று என் அம்மாவின் தையல் இயந்திரத்தை பயன்படுத்தலாமே? 41 00:02:13,509 --> 00:02:16,303 ஓ, நன்றி, ஆனால் நான் யாருக்கும் கஷ்டம் தர விரும்பவில்லை. 42 00:02:16,386 --> 00:02:18,680 அதோடு, உன் அம்மாவிற்கு என்னைப் பிடிக்குமா என்று கூட தெரியலை. 43 00:02:18,764 --> 00:02:19,932 அவங்களுக்கு உன்னைப் பிடிக்கும். 44 00:02:20,015 --> 00:02:22,309 அடடா. அவங்களுக்கு என்னைப் பிடிக்காது என இப்போது தோன்றுகிறது. 45 00:02:22,392 --> 00:02:24,353 இல்லை, என் அம்மாவிற்கு உன்னைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது. 46 00:02:24,436 --> 00:02:26,980 எங்களோடு நீ ஆலயத்திற்கு வர மறுப்பதைத் தவிர்த்து ஏதும் தெரியாது. 47 00:02:27,064 --> 00:02:29,024 அவங்களைப் போல எனக்கு பக்தியெல்லாம் இல்லை. 48 00:02:29,107 --> 00:02:31,068 இயேசுவே அவங்க அளவிற்கு பக்தியாக இருக்க மாட்டார். 49 00:02:31,151 --> 00:02:32,194 மன்னித்து விடுங்கள், இயேசுவே. 50 00:02:33,820 --> 00:02:34,988 ஆனால், இது நல்லவிதமாக அமையலாம். 51 00:02:35,072 --> 00:02:38,742 நீ அங்கு வந்தால் அம்மா சந்தோஷப்படுவாங்க. அவங்களோடு பந்தம் ஏற்பட உனக்கு வாய்ப்பு கிடைக்கலாம். 52 00:02:39,243 --> 00:02:41,411 யாருக்குத் தெரியும்? சரி, நான் அங்குப் போகிறேன். 53 00:02:41,912 --> 00:02:43,247 நன்றி, அன்பே. 54 00:02:43,330 --> 00:02:45,249 - யார் மிகவும் அன்பான காதலன்… - கட்டிப்பிடிக்க வேண்டாம்! 55 00:02:46,166 --> 00:02:47,125 மன்னிக்கவும், வந்து, 56 00:02:47,209 --> 00:02:49,211 சாட் திரும்ப வந்ததிலிருந்து, அவன் நம்மை ஒன்றாகப் பார்க்கவில்லை. 57 00:02:49,294 --> 00:02:50,838 இதை எப்படி எடுத்துக்கொள்வான் என்று தெரியலை. 58 00:02:50,921 --> 00:02:51,964 ஆமாம், நீ சொல்வதும் சரிதான். 59 00:02:52,047 --> 00:02:54,007 சாட் எப்போது என்ன நினைப்பான் என்றே தெரியாது. 60 00:02:54,091 --> 00:02:55,551 ஜூலியா! மேக்ஸிமோ! 61 00:02:58,554 --> 00:03:00,347 யாரும் இதை எதிர்பார்த்திருக்கவே மாட்டாங்க. 62 00:03:00,430 --> 00:03:02,683 பார்ப்பதற்கு ஸ்காண்டிநேவிய இயேசுவைப் போல இருக்கிறான். 63 00:03:02,766 --> 00:03:03,767 மீண்டும் மன்னித்துவிடுங்கள், இயேசுவே. 64 00:03:04,601 --> 00:03:06,728 சாட், என் “ஹெர்மிகோ”! 65 00:03:11,817 --> 00:03:14,027 - ஜூலியா, நீயும் வா. - சரி. 66 00:03:14,695 --> 00:03:17,030 எனக்குத் தெரியும் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். 67 00:03:17,781 --> 00:03:19,449 பெருவின் மலைகள் என்னிடம் சொன்னது. 68 00:03:20,534 --> 00:03:21,535 அப்புறம், என் அம்மாவும் சொன்னாங்க. 69 00:03:22,077 --> 00:03:25,414 ஆனால், இந்த உறவை நான் ஆசீர்வதிக்கிறேன். 70 00:03:26,290 --> 00:03:27,541 அற்புதம். நன்றி. 71 00:03:27,624 --> 00:03:31,295 ஆம், உனக்கு ஞானம் வந்துவிட்டது, சாட். 72 00:03:31,378 --> 00:03:32,629 இல்லை, இல்லை… இன்னும் முடியவில்லை. 73 00:03:33,672 --> 00:03:39,052 என் பயணத்தின்போது, பிறரை மகிழ்வித்து அதில் சந்தோஷம் அடையக் கற்றுக்கொண்டேன். 74 00:03:39,136 --> 00:03:44,057 மற்றும் நீங்கள் இருவரும் வாழ்க்கை முழுவதும் அன்பாக இருந்து, நீங்கள் விரும்பினால்… 75 00:03:44,141 --> 00:03:48,395 என்னை அங்கிள் என… அழைக்கும் அழகான குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன். 76 00:03:49,229 --> 00:03:51,523 எங்கள் காதலுக்கு சாட் இந்தளவுக்கு 77 00:03:51,607 --> 00:03:53,317 ஒப்புதல் தெரிவித்தது எனக்கு நிம்மதியாக இருந்தது, 78 00:03:53,400 --> 00:03:56,612 இப்போது நான் என் வழக்கமான வேலையைப் பார்க்கலாம். 79 00:03:56,695 --> 00:04:00,490 சரி, மக்களே, இந்த வார இறுதிக்கு 100% முன்பதிவு உள்ளது. 80 00:04:00,574 --> 00:04:03,202 எனவே, 110%க்கு விருந்தினர்களை கவனித்துக்கொள்வோம்! 81 00:04:05,454 --> 00:04:07,789 நல்ல யோசனை! அந்தக் கூடுதல் சதவீதத்தை விருந்தினர்களுக்காக சேமிப்போம்! 82 00:04:07,873 --> 00:04:09,208 இப்போது அறிவுப்புகளுக்கான நேரம். 83 00:04:09,291 --> 00:04:11,752 முதலில், ஜூலியா துணிக் கடையை திறக்கையில், 84 00:04:11,835 --> 00:04:15,255 லொரெனா சலவை அறையிலிருந்து வரவேற்பறைக்கு பதவி உயர்வு பெற்றுள்ளாள். 85 00:04:18,966 --> 00:04:21,512 இந்த வாய்ப்பிற்காக உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. 86 00:04:22,721 --> 00:04:24,556 வரவேற்பறையில் இப்படித்தான் பேசுவேன். 87 00:04:25,224 --> 00:04:28,393 முட்டாள் போல சிரித்து ஓய்ந்த பின் எனக்குச் சொல். 88 00:04:29,645 --> 00:04:32,648 மிஸ் டேவிஸ், உங்களிடமும் ஒரு முக்கியமான அறிவிப்பு இருப்பதாக நம்புகிறேன். 89 00:04:32,731 --> 00:04:33,732 ஆமாம். 90 00:04:33,815 --> 00:04:36,527 அனைவரும் இந்த அதிர்ச்சிக்குத் தயாராக இருங்கள், 91 00:04:36,610 --> 00:04:43,283 ஏனென்றால் என் கூட்டுக் களவாணி மற்றும் வலது கையான என் மகன் சாட், திரும்ப வந்துவிட்டான்! 92 00:04:45,661 --> 00:04:50,707 ஓ, சிறிய இன்பச் சுற்றுலாவிலிருந்து வந்துவிட்டான், இப்போது எல்லாம் பழைய நிலைக்கு திரும்புகின்றன. 93 00:04:52,584 --> 00:04:56,046 எல்லோருக்கும் வணக்கம். அது ஒரு சாதாரண இன்பச் சுற்றுலா அல்ல என்பதை பதிவு செய்துகொள்கிறேன். 94 00:04:58,090 --> 00:04:59,758 எனக்கு ஒரு மிகப் பெரிய ஆன்மீக எழுப்புதல் கிடைத்தது, 95 00:04:59,842 --> 00:05:03,053 எல்லாம் பழைய நிலைக்குச் செல்லக் கூடாது என்பதுதான் அதன் முக்கிய விஷயமே. 96 00:05:05,264 --> 00:05:06,682 நமஸ்தே. 97 00:05:09,142 --> 00:05:14,940 அடுத்ததாக, நீச்சல் குளமருகே உள்ள அற்புதமான புதிய கண்டுபிடிப்பை பற்றி பார்ப்போம். 98 00:05:19,611 --> 00:05:21,029 சரி, மக்களே. 99 00:05:21,113 --> 00:05:24,950 ஒரு புதிய விஷயத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்த நாங்கள் ஆவலாக இருக்கிறோம்… 100 00:05:25,033 --> 00:05:26,660 ஒன்று, இரண்டு, மூன்று! 101 00:05:26,743 --> 00:05:28,871 - கிட்ஸ் கிளப். - கிட்ஸ் கிளப்! 102 00:05:29,705 --> 00:05:31,039 என்ன? 103 00:05:32,124 --> 00:05:33,125 அதில் இரண்டு “கி” வரும், 104 00:05:33,208 --> 00:05:35,878 அதன் மூலம் நாங்கள் இங்கு ஜாலியாக இருப்போம் என்று உங்களுக்கே புரியும். 105 00:05:36,461 --> 00:05:39,548 எந்த விருந்தினராவது குழந்தையோடு வந்தால், அவர்களை எங்களிடம் அழைத்து வரச் சொல்லுங்கள். 106 00:05:42,009 --> 00:05:44,595 நாம் இதை பலமுறை பயிற்சி செய்தோமே. முதலில் கைகள் பிறகு வார்த்தைகள், ஞாபகமிருக்கா? 107 00:05:44,678 --> 00:05:46,013 அதைத்தான் செய்தேன். 108 00:05:46,597 --> 00:05:48,473 சரி, நிகழ்ச்சி நிரலில் உள்ளபடி அடுத்தது… 109 00:05:48,557 --> 00:05:50,350 குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். 110 00:05:50,434 --> 00:05:52,477 நீ இப்போதே என்னுடன் வர வேண்டும், மேக்ஸிமோ. 111 00:05:53,187 --> 00:05:54,271 கண்டிப்பாக, வரேன்! 112 00:05:54,354 --> 00:05:55,606 நான் ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்கணும். 113 00:05:55,689 --> 00:05:57,399 என்னை ஏன் திருமணத்திற்கு அழைக்கவில்லை? 114 00:05:57,482 --> 00:05:58,734 என்னது? 115 00:05:58,817 --> 00:06:00,068 நான் மோசமாக நடனமாடுவேன் என்பதாலா? 116 00:06:00,652 --> 00:06:03,780 எப்போதுமே டிஸ்கோ டான்ஸில், நான்தான் முன்னிலையில் இருக்க வேண்டும் என்றில்லையே. 117 00:06:03,864 --> 00:06:05,490 அந்த விஷயம் உங்களை ரொம்பவும் கடுப்பேற்றுகிறதா? 118 00:06:05,574 --> 00:06:09,119 அதாவது, என் ஒரே மகள், தன் வாழ்க்கையிலே மிக முக்கியமான நாளுக்கு 119 00:06:09,203 --> 00:06:11,580 என்னை எப்படி அழைக்காமல் இருக்கலாம்? 120 00:06:11,663 --> 00:06:14,082 உண்மையில், அன்றுதான் சியாபாஸில் உள்ள ஒரு மில்லியன் வீடுகளுக்கு 121 00:06:14,166 --> 00:06:17,586 சுத்தமான தண்ணீரை வழங்குவதற்கான மானியத்தைப் பெற்றேன், ஆனால் பரவாயில்லை. 122 00:06:18,879 --> 00:06:19,963 பொறு. 123 00:06:20,464 --> 00:06:22,633 உன் அம்மாவிற்கும் எனக்கும் ஏன் ஒத்துப் போகவில்லை என 124 00:06:22,716 --> 00:06:23,717 இன்னமும் நீ கோபமாக இருந்தால்… 125 00:06:23,800 --> 00:06:25,719 - அப்படி இல்லை. - …என்னை மன்னித்துவிடு. சரி, அப்புறம் என்ன? 126 00:06:25,802 --> 00:06:28,055 உங்களை என் திருமணத்திற்கு அழைக்காததன் காரணம்… 127 00:06:31,350 --> 00:06:33,977 ஏதோவொரு தொழில் விஷயத்திற்காக, பல வருடங்களாக டின்னர், 128 00:06:34,061 --> 00:06:37,814 பிறந்தநாள் கொண்டாட்டம், ஒரு ஃபேஸ்டைமிற்கு கூட வராமல் போனதுதான், 129 00:06:39,399 --> 00:06:41,735 திரும்பவும் நான் ஏமாற்றம் அடைய விரும்பவில்லை. 130 00:06:46,031 --> 00:06:49,368 அது எதுவுமே எனக்குப் புரியவில்லை, ஆனால் அது கேட்பதற்கு வேதனையாக இருக்கிறது. 131 00:06:49,451 --> 00:06:50,452 இங்கே பாரு. 132 00:06:51,119 --> 00:06:52,913 உன்னை ஏமாற்றம் அடையச் செய்கிறேன் என தெரியும், பலோமா. 133 00:06:53,622 --> 00:06:55,916 அதனால்தான் இந்தக் கதையை சொல்கிறேன் என நினைக்கிறேன். 134 00:06:55,999 --> 00:06:59,545 சாக்கு சொல்வதற்காக இல்லை, நான் எப்படி மாறினேன் என்பதை நீ புரிந்துகொள்வதற்காக. 135 00:07:02,714 --> 00:07:06,677 ஒரு முக்கிய வேலைக்காக டான் பாப்லோ என்னை அழைத்த நாளன்று தான் இது எல்லாமே துவங்கியது. 136 00:07:07,469 --> 00:07:10,889 என்னால் முடிந்த அளவிற்கு அதை ப்ரொஃபெஷனலாகக் கையாண்டேன். 137 00:07:10,973 --> 00:07:12,808 ஆமாம்! இதற்காகத்தான் நான் காத்திருந்தேன். 138 00:07:12,891 --> 00:07:16,144 ஹோட்டல் தொழிலைப் பற்றி நடந்துகொண்டே பேசுவது. 139 00:07:16,228 --> 00:07:17,646 கொஞ்சம் பேசியே என்னால் காரியத்தை சாதிக்க முடியும். 140 00:07:18,146 --> 00:07:19,398 மன்னியுங்கள், நான் உற்சாகமாக இருக்கிறேன். 141 00:07:19,481 --> 00:07:21,567 ஒருவழியாக திரைக்குப் பின்னே என்ன உள்ளது என்பதைப் பார்க்க முடிந்தது. 142 00:07:21,650 --> 00:07:23,360 அல்லது யார் இருக்கிறார்கள் என்பதைப் பார்க்க முடிந்தது. 143 00:07:23,443 --> 00:07:25,904 சரியா தவறா என்று சொல்லுங்கள்: லயோனல் ரிச்சியா? 144 00:07:25,988 --> 00:07:28,240 நான் ரொம்ப ஆவலாக இருக்க மாட்டேன், மேக்ஸிமோ. 145 00:07:28,323 --> 00:07:30,868 உன்னுடைய பயிற்சி சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது. 146 00:07:33,120 --> 00:07:34,663 வருந்துகிறேன், செனோரா. 147 00:07:34,746 --> 00:07:36,206 இதை நாங்கள் பார்த்துக்கொள்வோம். 148 00:07:36,999 --> 00:07:38,500 அவங்களுக்கு ஒன்றுமில்லையே? 149 00:07:38,584 --> 00:07:39,585 என்ன நடந்தது? 150 00:07:41,420 --> 00:07:42,421 அய்யைய்யோ. 151 00:07:43,130 --> 00:07:44,715 அடக் கடவுளே. இந்த நபர்… 152 00:07:44,798 --> 00:07:48,135 ஆமாம், இறந்துவிட்டார். இன்று இங்குள்ள அனைத்து குடும்பங்களுக்கும் தெரியாமல் 153 00:07:48,218 --> 00:07:51,680 இந்த உடலை முடிந்த வரை ரகசியமாக வெளியேற்ற வேண்டும். 154 00:07:51,763 --> 00:07:54,725 நாமா? என்ன? இது மருத்துவ பணியாளர்களின் வேலை அல்லவா? 155 00:07:54,808 --> 00:07:57,728 மேக்ஸிமோ. நாம் சொகுசான விஷயங்களை வழங்குகிறோம். 156 00:07:57,811 --> 00:08:02,274 நமது விருந்தினர்கள் ஆம்புலன்ஸ், போலீஸ் வண்டி மற்றும் பிணத்தை பார்க்க விரும்ப மாட்டாங்க. 157 00:08:02,357 --> 00:08:05,569 100% இந்த நபர் உயிருடன் இல்லையா? 158 00:08:10,908 --> 00:08:12,701 ஆம், இவர் இறந்துவிட்டார். 159 00:08:12,784 --> 00:08:15,454 நான் பார்த்த உயிருடன் இருக்கும் முதல் நபர். அதாவது இறந்த நபர். 160 00:08:15,537 --> 00:08:19,333 சரி, இவர் இறந்துவிட்டார் என சொல்லிவிட்டாய், எனவே, நாம் சீக்கிரமாக உடலை அகற்றிவிட வேண்டும். 161 00:08:21,710 --> 00:08:24,838 கண்டிப்பாக, நாம் விருந்தினர்களின் லிஃப்டில் போக முடியாது, 162 00:08:24,922 --> 00:08:27,549 எனவே, சர்வீஸ் லிஃப்டிற்கு எடுத்துச் சென்று, 163 00:08:27,633 --> 00:08:29,843 பணியாளர்களின் நுழைவு வாயில் வழியாக நாம் வெளியே வருவோம். 164 00:08:29,927 --> 00:08:31,553 அவர்கள் நமக்காக அங்கு காத்திருப்பார்கள். 165 00:08:31,637 --> 00:08:34,640 யாரும் பார்க்காதவாறு எப்படி இந்த உடலை அங்கு எடுத்துச் செல்லப் போகிறோம்? 166 00:08:44,650 --> 00:08:46,401 நான் நினைப்பதைத்தான் நீயும் நினைக்கிறாயா? 167 00:08:46,485 --> 00:08:48,320 ஆமாம், லூபெயால் பாட முடிகிறதே. 168 00:08:49,446 --> 00:08:50,989 ஓ, அந்த வண்டியைச் சொன்னீங்க! சரி! 169 00:08:51,615 --> 00:08:54,910 வாழ்க்கை காலம் முடிந்த ஒரு விருந்தாளியின் உடலை அகற்ற 170 00:08:54,993 --> 00:08:56,787 நான் உதவ இருப்பது போல, மெமோவும் ஹெக்டரும் 171 00:08:56,870 --> 00:08:59,665 இப்போதுதான் வாழ்க்கையைத் துவங்கிய சில விருந்தினர்களை உபசரிக்கப் போகின்றனர். 172 00:08:59,748 --> 00:09:01,625 இதற்கெல்லாம் நான் ஒரு வழியைக் கண்டுபிடித்துவிட்டேன். 173 00:09:01,708 --> 00:09:03,877 இரண்டு சிறுவர்கள் இருந்தால், நாம் மட்டாடெனா விளையாடுவோம். 174 00:09:03,961 --> 00:09:06,380 நான்கு சிறுவர்கள் இருந்தால், மணற்கோட்டைகளைக் கட்டுவோம். 175 00:09:06,463 --> 00:09:10,300 மற்றும் ஆறு சிறுவர்கள் இருந்தால், இந்தப் பந்தை வைத்து டாட்ஜ்பால் ஆடுவோம். 176 00:09:14,930 --> 00:09:16,181 நமக்கு நிறைய பந்துகள் தேவைப்படும். 177 00:09:18,851 --> 00:09:19,893 ஓ, என் பந்து! 178 00:09:19,977 --> 00:09:23,438 பொறு, அந்த கத்தரிக்கோல் எங்கிருந்து கிடைத்தது? மற்றும்… அதை எடுத்துக்கொண்டு ஓடாதே! 179 00:09:23,939 --> 00:09:25,524 இதை நீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது போலத் தெரிகிறதே. 180 00:09:26,108 --> 00:09:28,569 - ஓ, ஓ! எங்கு போகிறாய்? - என்ன கேள்வி இது? 181 00:09:28,652 --> 00:09:31,530 நீ குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதும், பிடித்தம் போக மீதமுள்ள வருமானம் மற்றும் 182 00:09:31,613 --> 00:09:33,740 ஓய்வு நேரத்தில் நான் பெற்றோர்களை பார்த்துக்கொள்வதும் தானே திட்டம். 183 00:09:33,824 --> 00:09:36,451 ஆம், ஆனால் நிறைய குழந்தைகள் இருக்கிறார்களே. எனக்கு உன் உதவி வேண்டும். 184 00:09:36,535 --> 00:09:38,787 கபானா 5- ல் உள்ள ஜான்சன்ஸுக்கும் தான். 185 00:09:38,871 --> 00:09:41,748 திரு. ஃப்ராங்க், பூனைகள் இங்கே இல்லை, ஆமாம்! 186 00:09:45,335 --> 00:09:46,587 உனக்கு அவன் உதவி தேவையில்லை. 187 00:09:46,670 --> 00:09:47,880 உன்னால் இதைச் சமாளிக்க முடியும். 188 00:09:48,505 --> 00:09:51,383 நீதான் மெமோ ரேயஸ் ஆயிற்றே. உன்னால் எதையும் செய்ய முடியும். 189 00:09:52,593 --> 00:09:53,635 உனக்கு பலம் உள்ளது. 190 00:09:54,261 --> 00:09:55,345 உன்னிடம் அதிகாரம் உள்ளது. 191 00:09:55,429 --> 00:09:56,513 உன்னிடம்… 192 00:09:59,308 --> 00:10:00,309 குழந்தைகள் இல்லை. 193 00:10:01,101 --> 00:10:02,269 உன்னிடம் குழந்தைகள் இல்லை. 194 00:10:02,853 --> 00:10:04,688 பசங்களா, எங்கே போயிட்டீங்க? 195 00:10:07,900 --> 00:10:11,361 எஸ்டெபன் வீட்டு வேலைகளைப் பார்த்துக்கொள்வதால், 196 00:10:11,445 --> 00:10:15,199 என் அம்மா தனது ஓய்வு நேரத்தைக் கழிக்க, தனக்குப் பிடித்த விஷயத்தைச் செய்யப் பார்க்கிறாங்க. 197 00:10:17,701 --> 00:10:20,871 எதிர்பாராதவிதமாக, அந்த விஷயம் பிடித்தது போல இல்லை. 198 00:10:26,502 --> 00:10:28,754 - ஹாய். - ஜூலியா! நீ இங்கே என்ன செய்கிறாய்? 199 00:10:28,837 --> 00:10:30,756 ஓ, மேக்ஸிமோ உங்களை அழைக்கவில்லையா? 200 00:10:31,507 --> 00:10:33,300 தொந்தரவுக்கு மன்னிக்கவும், டோனா நோரா, 201 00:10:33,383 --> 00:10:35,761 உங்கள் தையல் மெஷினை நான் பயன்படுத்திக்கொள்ளலாமா? 202 00:10:35,844 --> 00:10:37,095 என்னுடையது உடைந்துவிட்டது, அதோடு நான்… 203 00:10:37,179 --> 00:10:39,014 கண்டிப்பாக! நீ பயன்படுத்திக்கொள்ளலாம். 204 00:10:39,097 --> 00:10:40,516 - நிச்சயமாகவா? - உள்ளே வா. பிரச்சனையே இல்லை! 205 00:10:40,599 --> 00:10:43,393 எரிந்துகொண்டிருக்கும் ஒரு சோளக்காட்டு பொம்மையை வரைந்து கொண்டிருக்கும்போது… 206 00:10:44,353 --> 00:10:45,771 அதைத் தடுத்து நிறுத்த நான் விரும்பவில்லை. 207 00:10:46,271 --> 00:10:48,815 இல்லை! என்னைத் தடுத்து நிறுத்து! தடுத்து நிறுத்து! 208 00:10:49,399 --> 00:10:51,109 சொல்லப் போனால், நான் உனக்கு உதவ விரும்புகிறேன். 209 00:10:51,193 --> 00:10:52,236 என்னை உதவ விடு. 210 00:10:53,195 --> 00:10:55,197 அப்புறம், நான் வரைந்தது கன்னி மரியாள். 211 00:10:56,657 --> 00:10:58,742 ஓ, ஆம்! இப்போது புரிகிறது. 212 00:10:58,825 --> 00:11:00,160 ஆனால், அவங்க எதற்காக எரிந்துகொண்டிருக்கிறாங்க? 213 00:11:00,911 --> 00:11:01,912 அது தீ அல்ல. 214 00:11:02,454 --> 00:11:03,539 அது அவங்களுடைய புனிதம். 215 00:11:04,373 --> 00:11:05,499 அவங்களுடைய மகிமையின் ஒளி. 216 00:11:07,417 --> 00:11:09,253 ஓ, இது அற்புதமாக உள்ளது. 217 00:11:16,677 --> 00:11:17,845 இன்று நிறைய டவல்கள் உள்ளன. 218 00:11:17,928 --> 00:11:19,471 புதியவை அதிக எடை கொண்டவை. 219 00:11:20,764 --> 00:11:23,433 மன்னித்துவிடுங்கள். இதற்கு முன்பு நான் இப்படி செய்ததில்லை. நீங்கள் எப்படி? 220 00:11:23,934 --> 00:11:26,186 இதையெல்லாம் சந்திக்க வேண்டியிருக்கும், மேக்ஸிமோ. 221 00:11:27,104 --> 00:11:28,522 கவ்பாய் திருமணம் நினைவிருக்கிறதா? 222 00:11:29,481 --> 00:11:30,482 இரண்டு பிணங்கள். 223 00:11:31,024 --> 00:11:32,192 அந்த நேரத்தில் உங்களுக்கு யார் உதவினார்கள்? 224 00:11:32,276 --> 00:11:34,194 இல்லை, என்னிடம் சொல்ல வேண்டாம்! எனக்கு ஏற்கனவே அதிகமாக தெரியும். 225 00:11:35,279 --> 00:11:37,281 பணியாளர் லிஃப்ட் 226 00:11:43,620 --> 00:11:45,455 ஐயோ! இது நின்றுவிட்டதா? 227 00:11:45,539 --> 00:11:46,623 வித்தியாசமாக உள்ளதே. 228 00:11:49,668 --> 00:11:51,503 இது சரியாகும் வரை நாம் இங்கு காத்திருக்கணுமா? 229 00:11:51,587 --> 00:11:55,591 சரி. இந்த அலார சத்தத்தோடு இங்கேயே இந்த சடலத்தோடு காத்திருப்போம். 230 00:11:55,674 --> 00:11:58,343 இவரை படிக்கட்டு வழியாக நம்மால் கூட்டிச் செல்ல முடியாது. நாம் என்ன செய்வது? 231 00:11:59,678 --> 00:12:01,430 நம்மால் முடிந்த ஒரே விஷயம்… 232 00:12:02,514 --> 00:12:04,141 விருந்தினர்களின் லிஃப்டில் செல்வதுதான். 233 00:12:11,481 --> 00:12:13,192 விருந்தினர்களின் லிஃப்ட். 234 00:12:23,410 --> 00:12:26,288 டோனா நோரா, இந்த நுட்பம் இன்னும் அதிக ஆற்றலோடு வேலை செய்யும். 235 00:12:26,371 --> 00:12:27,748 நீங்கள் ஒரு பெரிய தையல்காரர்தான். 236 00:12:27,831 --> 00:12:28,999 நன்றி, அன்பே. 237 00:12:30,375 --> 00:12:32,711 என் கணவரை இழந்தபோது நான் படைப்பாற்றல் பெற வேண்டியிருந்தது. 238 00:12:32,794 --> 00:12:35,506 நான் தைத்து எம்ப்ராய்டரி செய்த பொருட்களை கடற்கரையில் விற்பனை செய்வேன். 239 00:12:35,589 --> 00:12:39,134 ஆனால், என்னை பிஸியாக வைத்திருந்தது, இந்த சேட்டை பிடித்த குட்டி மேக்ஸிமோ தான். 240 00:12:39,218 --> 00:12:41,637 ஏடாகுடமாக எதையாவது செய்வான். நான் நிறைய ஓட்டைகளை தைக்க வேண்டியிருந்தது. 241 00:12:41,720 --> 00:12:43,722 அவன் இப்போதும் அப்படிதான் இருக்கிறான். 242 00:12:43,805 --> 00:12:46,767 தன் கால்சட்டைத் தடுக்கி அவன் கீழே விழுந்தான், எப்போதென்றால்… 243 00:12:49,228 --> 00:12:50,521 நாங்கள் நிறைய கால்சட்டைகளை வாங்கியபோது. 244 00:12:52,397 --> 00:12:54,066 நீ அவனை ஷாப்பிங் அழைத்துச் சென்றதில் சந்தோஷம். 245 00:12:54,149 --> 00:12:56,443 மேக்ஸிமோவின் ரசனை மட்டமாக இருக்கும். 246 00:12:57,110 --> 00:12:58,820 ஆனால், பெண்கள் விஷயத்தில் அப்படி இல்லை. 247 00:12:59,446 --> 00:13:01,240 இது தயார். நான் முடித்துவிட்டேன். 248 00:13:01,323 --> 00:13:03,867 ஓ, அற்புதம்! இந்த வேகத்தில் போனால், சீக்கிரமே முடித்துவிடுவோம். 249 00:13:12,751 --> 00:13:13,752 நீ என்ன நினைக்கிறாய்? 250 00:13:16,213 --> 00:13:18,549 நீங்கள் சில மாற்றங்களை செய்துள்ளீர்களா? 251 00:13:18,632 --> 00:13:20,467 ஆமாம், சரியாக இருக்கும் என நம்புகிறேன். 252 00:13:20,551 --> 00:13:21,927 ஒருவேளை உனக்கு தெரியாமல் இருக்கலாம், 253 00:13:22,010 --> 00:13:25,764 ஆனால் இந்த ஆடையை தைத்துக்கொண்டிருக்கும் போதுதான் கவனித்தேன், இது எப்படியிருக்கு என்றால்… 254 00:13:27,015 --> 00:13:28,684 ஒரு வேசியின் உடை போல. 255 00:13:29,351 --> 00:13:32,062 அதோடு, “தனது வாடிக்கையாளர்கள் பாபிலோனின் வேசியைப் போலத் தெரிவதை 256 00:13:32,145 --> 00:13:34,064 ஜூலியா விரும்ப மாட்டாள்” என நினைத்தேன். 257 00:13:34,147 --> 00:13:37,526 - யாரு? - வெளிப்படுத்தின விசேஷம், அதிகாரம் 17, வசனம் 5? 258 00:13:39,361 --> 00:13:42,698 நான் ஒரு சிறிய மாற்றத்தைச் செய்தேன். 259 00:13:42,781 --> 00:13:44,992 ஆனால், அது நன்றாக வந்துள்ளது, இல்லையா? 260 00:13:45,617 --> 00:13:46,827 அவ்வளவு மோசமில்லை. 261 00:13:46,910 --> 00:13:48,412 - நான் அடுத்ததைத் தைக்க ஆரம்பிக்கவா? - வேண்டாம்! 262 00:13:50,747 --> 00:13:52,374 ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள், டோனா நோரா. 263 00:13:53,041 --> 00:13:54,042 உங்களுக்கு ஓய்வு வேண்டும். 264 00:13:54,126 --> 00:13:55,252 நன்றி. 265 00:13:58,964 --> 00:14:00,132 நான் அவ்வளவு களைப்பாக இல்லை. 266 00:14:01,633 --> 00:14:04,344 விடுதியில், விஷயங்கள் எல்லாம் பழைய நிலைக்கு 267 00:14:04,428 --> 00:14:07,973 திரும்புவதில் தனக்கு விருப்பமில்லை என சாட் சொன்னதை டையன் கேட்டுட்டாங்க. 268 00:14:08,473 --> 00:14:09,474 அதனால், அவங்க அவனுக்கு கொடுத்தது… 269 00:14:09,558 --> 00:14:10,559 பதவி உயர்வு! 270 00:14:10,642 --> 00:14:11,810 சாட் டேவிஸ் மேலாண்மை நிர்வாகி 271 00:14:11,894 --> 00:14:14,229 உன் சொந்த அலுவலகத்துடன். உன் பெயர் கண்ணாடியில் உள்ளது. 272 00:14:15,272 --> 00:14:16,899 “மேலாண்மை நிர்வாகி.” 273 00:14:17,691 --> 00:14:18,692 அதற்கு என்ன அர்த்தம்? 274 00:14:18,775 --> 00:14:21,278 அது… புதிய பெயரோடிருக்கும் என் பழைய வேலையா? 275 00:14:21,361 --> 00:14:22,779 நிச்சயமாக இல்லை. 276 00:14:22,863 --> 00:14:25,657 ஜெனரல் மேனேஜர் என்றால் எல்லாவற்றையும் பொதுவாக நிர்வகிப்பதாகும். 277 00:14:25,741 --> 00:14:29,870 இது நிர்வகிக்கும் நிலையில் இருந்து விஷயங்களைச் செயல்படுத்துவது பற்றியது. 278 00:14:29,953 --> 00:14:31,330 ஒரு பெரிய உயர்வு. 279 00:14:31,413 --> 00:14:34,458 மற்றும் இதைக் கொண்டாட நான் இருவருக்கான ஃபேஷியல் ஏற்பாடு செய்துள்ளேன். 280 00:14:35,792 --> 00:14:37,544 இல்லை, என்னால்… இதைச் செய்ய முடியாது. 281 00:14:37,628 --> 00:14:40,047 ஓ, செல்லமே, கவலைப்படாதே. டான்யா உன் தாடியைச் சரிசெய்ய முடியும். 282 00:14:40,130 --> 00:14:42,299 இல்லை, நிச்சயமாக அவளால் முடியும். அவள் அதில் சிறந்தவள். நான்… 283 00:14:42,382 --> 00:14:43,800 என்னால் இது முடியாது என்று சொல்கிறேன். 284 00:14:43,884 --> 00:14:45,844 எடுத்த உடனே நம்மால் கோவிலின் கோபுரத்தை எழுப்பிவிட முடியாது. 285 00:14:45,928 --> 00:14:49,056 அஸ்திவாரத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும். அதைத்தான் நான் மாச்சோ போஞ்சோவில் கற்றுக்கொண்டேன். 286 00:14:49,139 --> 00:14:50,849 அது “மாச்சு” என நினைக்கிறேன்… 287 00:14:51,850 --> 00:14:53,185 - சம்மதம் சொல்லு, அன்பே. - பாருங்க, நான்… 288 00:14:53,268 --> 00:14:55,187 என் கடனைத்தான் செலுத்தப் பார்க்கிறேன். 289 00:14:55,270 --> 00:14:56,271 ஆரம்பத்தில் இருந்து துவங்கி, 290 00:14:56,355 --> 00:14:59,566 பிறகு லாஸ் கொலினாஸ் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தையும் கற்றுக்கொள்ளப் போகிறேன். 291 00:14:59,650 --> 00:15:00,901 போதுமான அளவிற்கு சம்பாதிக்கப் போகிறேன். 292 00:15:01,485 --> 00:15:02,486 புரிகிறது. 293 00:15:04,363 --> 00:15:05,989 இது பயங்கரமான யோசனை என நினைக்கிறேன். 294 00:15:06,073 --> 00:15:09,243 இது எவ்வளவு காலம் நீடித்தாலும் பரவாயில்லை, நான் உன்னை ஆதரிப்பேன். 295 00:15:09,826 --> 00:15:10,869 நன்றி. 296 00:15:11,495 --> 00:15:12,996 மற்றும் கடைசியாக ஒரு விஷயம். 297 00:15:13,080 --> 00:15:16,583 இனிமேல் ஹோட்டலில் நான் உங்களை டையன் என்று அழைக்கவே விரும்புகிறேன். 298 00:15:19,962 --> 00:15:21,755 நான் செத்தால்தான் அது நடக்கும். 299 00:15:31,515 --> 00:15:35,769 விருந்தினர்கள் இல்லாத லிஃப்ட் கிடைக்க நானும் டான் பாப்லோவும் காத்திருந்தோம். 300 00:15:41,900 --> 00:15:43,527 அதுவும் ஒரே ஒரு தளம் வரைக்கும்தான் நீடித்தது. 301 00:15:47,114 --> 00:15:48,407 ஹாய். 302 00:15:48,490 --> 00:15:49,700 ஹே, கிர்க்மன் குடும்பம்! 303 00:15:49,783 --> 00:15:51,368 - ஹாய். - மதிய வணக்கம். 304 00:15:51,451 --> 00:15:53,036 - ஹாய். - ஹலோ. 305 00:15:53,704 --> 00:15:55,539 விடுதி முழுவதும் லாவா இருக்கிறது. 306 00:15:55,622 --> 00:15:57,374 இந்தக் கயிறை விட்டுவிட்டால், இறந்திடுவீங்க. 307 00:15:57,457 --> 00:16:00,002 வாங்க, கிட்ஸ் கிளப். நாம் போவோம். 308 00:16:01,420 --> 00:16:04,298 ஃப்ரெஷ் டவல்கள். போனமுறை நாங்கள் நீச்சல் குளத்திற்குப் போனபோது அங்கு எதுவுமே இல்லை. 309 00:16:04,381 --> 00:16:06,425 ஜேசன், செலெஸ்ட், ஹெய்லி, ஒரு டவலை எடுத்துக்கொள்ளுங்கள். 310 00:16:07,426 --> 00:16:08,510 ஆம், இன்னொன்றை எடுத்துக்கொள்ளுங்கள். 311 00:16:08,594 --> 00:16:10,179 ராப், நீங்கள் மூன்று எடுத்துக்கொள்ளுங்கள், அன்பே. 312 00:16:10,262 --> 00:16:11,972 கடவுள் சத்தியமாக, இது காயவே காயாது. 313 00:16:27,738 --> 00:16:31,116 அந்த நேரத்தில், வண்டியில் டவல்கள் குறைந்து, அவர் வெளியே தெரிய ஆரம்பித்துவிட்டார். 314 00:16:31,200 --> 00:16:32,492 நான் ஏதாவது செய்தாக வேண்டியிருந்தது. 315 00:16:32,576 --> 00:16:33,577 கூடாது! 316 00:16:36,079 --> 00:16:41,043 மன்னிக்கவும். குளத்தில் உள்ள டவல்கள் இதைவிட இரண்டரை அங்குலங்கள் நீளமாக இருக்கும். 317 00:16:41,126 --> 00:16:43,962 நீங்கள் ஓய்வெடுக்க விரும்பினால், அது சிறப்பானத் தேர்வாக இருக்கும். 318 00:16:44,755 --> 00:16:45,923 சரி. 319 00:16:56,892 --> 00:16:58,018 கிட்டத்தட்ட மாட்டியிருப்பீங்க! 320 00:16:58,101 --> 00:17:00,395 மன்னிக்கவும், ஆனால் இந்தக் கதை உணர்வுப்பூர்வமாக உள்ளது. 321 00:17:00,479 --> 00:17:02,648 என் இதயம் பலமாகத் துடிப்பதை என்னால் உணர முடிகிறது. 322 00:17:03,190 --> 00:17:05,317 எல்லோரும், கேளுங்களேன். அவர்கள் காலைப் பார்த்திருப்பார்கள்! 323 00:17:05,400 --> 00:17:06,652 - ஆமாம். - அருமை. 324 00:17:06,734 --> 00:17:10,239 என் அன்பு கணவரான, நீயும் கூட, இவருடைய அழகான சிறிய கதைகளைக் கேட்டு மயங்கிவிட்டாய். 325 00:17:10,321 --> 00:17:12,741 ஓ, அவை அழகாக உள்ளதாக நினைக்கிறாயா? 326 00:17:12,824 --> 00:17:15,493 திருமணத்தைப் பற்றி நீங்கள் புலம்புவதை விட இது நன்றாகத்தான் இருக்கு. 327 00:17:15,577 --> 00:17:17,788 - தொடர்ந்து சொல்லுங்கள், கிழவா. - சரி. 328 00:17:17,871 --> 00:17:19,122 ஆக… 329 00:17:19,790 --> 00:17:22,000 இவர் உடலை எடுத்துச் செல்ல இன்னும் மூன்று நிமிடங்களில் வந்துவிடுவர். 330 00:17:22,084 --> 00:17:26,128 ஹாய், டான் பாப்லோ. ஹாய், மேக்ஸிமோ. உங்கள் இருவரிடமும் ஒரு கேள்வி கேட்கலாமா? 331 00:17:26,213 --> 00:17:29,007 சிறுபிள்ளைதனமாக இருந்தால் என்னை மன்னிக்கவும். அலுவலகத்தில் இதுதான் என் முதல் நாள். 332 00:17:29,091 --> 00:17:31,301 நிச்சயமாக. கேளு, லொரெனா. 333 00:17:31,385 --> 00:17:34,012 சரி, அதோ அங்கிருக்கும் விருந்தினரைப் பாருங்கள். 334 00:17:34,096 --> 00:17:35,931 நாள் முழுவதும் நீச்சல் குளத்தில் ஓய்வு எடுக்கிறாங்க. 335 00:17:36,014 --> 00:17:37,766 பத்திரிக்கைகளைப் படித்து நேரத்தை போக்கிக் கொண்டிருக்கிறாங்க. 336 00:17:37,850 --> 00:17:41,228 அவங்களுக்கு ஜாதகம் பற்றி படிக்கப் பிடிக்கும். அவங்க மகர ராசிக்காரர். 337 00:17:41,311 --> 00:17:43,981 நிறைய புதிய சாகசங்களைக் காண்பார் என அவங்க ராசி பலனில் போட்டிருக்கு. 338 00:17:44,064 --> 00:17:46,066 அவங்களுக்கு அணில்களை சுத்தமாகப் பிடிக்காது. 339 00:17:46,149 --> 00:17:48,235 குட்டி கிட்டார்களை விற்கும் அவங்களுடைய மாமா குவாடலஹாராவில் இருக்கிறார். 340 00:17:48,318 --> 00:17:50,028 அவங்களுக்கு வேர்க்கடலை சுத்தமாக ஒத்துக்கொள்ளாது. 341 00:17:50,112 --> 00:17:51,280 அனைவருக்கும் ஃப்லான் கொடுத்தாங்க. 342 00:17:52,239 --> 00:17:54,533 எனவே, இதற்கு இடையில் அவங்க தனது சாவியை தொலைத்துவிட்டாங்க. 343 00:17:55,033 --> 00:17:56,451 அவங்களுக்கு நான் புதிய சாவியைத் தரலாமா? 344 00:17:58,078 --> 00:17:59,079 மன்னிக்கவும். 345 00:17:59,162 --> 00:18:01,874 அவங்களுக்கு இன்னொரு சாவியைக் கொடுக்கலாமா என்பது மட்டும் தான் உன் கேள்வியா? 346 00:18:01,957 --> 00:18:03,041 ஆமாம். 347 00:18:03,125 --> 00:18:04,501 ரொம்ப அவசரம் என சொல்றாங்க. எனவே… 348 00:18:07,754 --> 00:18:09,840 சரி. வேறு சாவியைக் கொடு. 349 00:18:09,923 --> 00:18:11,675 ஆனால், முதலில், அவங்களுடைய பிரச்சினைக்காக 350 00:18:11,758 --> 00:18:16,638 இலவச மதுபானம், மாட்டிறைச்சி மற்றும் கடல் நண்டுகளைச் சாப்பிட அவங்களை பாருக்கு அனுப்பு. 351 00:18:16,722 --> 00:18:18,807 சரி. நன்றி. 352 00:18:19,433 --> 00:18:23,228 பொறுங்கள். இப்போதிலிருந்து சாவியைத் தொலைத்தால் மாட்டிறைச்சி மற்றும் கடல் நண்டுகளைக் கொடுக்கலாமா? 353 00:18:23,312 --> 00:18:25,063 எது முக்கியமோ அதில் கவனம் செலுத்து. 354 00:18:25,147 --> 00:18:26,148 இதைத் தள்ளு! 355 00:18:27,149 --> 00:18:30,777 சரி, எல்லோரும் வாங்க. நாம் கிட்ஸ் கிளப்பிற்கு திரும்பச் செல்வோம். 356 00:18:30,861 --> 00:18:32,196 ஹே! இல்லை, இல்லை, இல்லை, இல்லை! 357 00:18:32,279 --> 00:18:34,615 நதானியேல், வேண்டாம்… இப்போது உட்காரக் கூடாது. எழுந்திரு. 358 00:18:34,698 --> 00:18:36,408 நாம்… ஒன்று சொல்லட்டுமா? 359 00:18:37,117 --> 00:18:40,871 சரி. பரவாயில்லை. எல்லோரும், கெட்டியாக பிடித்துக்கொள்ளுங்கள்! 360 00:18:40,954 --> 00:18:41,955 நாம் இதைச் செய்வோம். 361 00:19:11,318 --> 00:19:12,361 நன்றி. 362 00:19:12,861 --> 00:19:16,156 இதோ! ஹெக்டரின் நெக்டர். 363 00:19:16,240 --> 00:19:17,699 நன்றி, ஹெக்டர். 364 00:19:17,783 --> 00:19:20,953 நாள் முழுவதும் என் பிள்ளை நீரில் குதிப்பதை பார்க்கமால் இருப்பது மனதிற்கு இதமாக உள்ளது. 365 00:19:21,453 --> 00:19:23,872 உங்களுக்கு என்ன வேண்டுமோ அதைச் செய்யத்தான் நான் இருக்கிறேன். 366 00:19:23,956 --> 00:19:27,167 ஐஸ் போட்ட, காக்டெயில், சட்டையின்றி கூட பரிமாறுவேன். 367 00:19:27,251 --> 00:19:29,586 ஹாய், மெமோ, என் நண்பா. 368 00:19:29,670 --> 00:19:31,463 ஆஹா. உன்னைப் பாரேன். 369 00:19:31,547 --> 00:19:33,298 பிள்ளைகளை எளிமையாக மேய்க்கிறாய் போலயே. 370 00:19:33,382 --> 00:19:35,175 அப்படியா தெரிகிறது, ஹெக்டர்? நானா? 371 00:19:35,259 --> 00:19:36,552 செர்ரிகளை கீழே வை. 372 00:19:37,719 --> 00:19:40,222 சரி, நீ இவர்களை ஒரு பத்து நிமிடங்களுக்கு பார்த்துக்கொள், 373 00:19:40,305 --> 00:19:41,473 நான் ஸ்டெஃபனியைத் தேடுகிறேன். 374 00:19:41,974 --> 00:19:44,351 மேலும் அது எளிதாக இருக்காது. அவள் ரொம்ப குறும்புக்காரி. 375 00:19:44,434 --> 00:19:45,477 செய்யத்தான் ஆசை. 376 00:19:45,561 --> 00:19:49,273 ஆனால், 43வது நாற்காலியில் இருக்கும் நான்சி தனது பீனாவை குடித்து முடிக்கப் போறாங்க, 377 00:19:49,356 --> 00:19:51,525 - அதோடு அவங்களுக்கு கால் மசாஜும் வேண்டுமாம். - ஹெக்டர்! 378 00:19:52,192 --> 00:19:55,070 நீ மறந்திருந்தால் ஞாபகப்படுத்துகிறேன், இதில் நீ என் கூட்டாளி. 379 00:19:55,153 --> 00:19:56,613 மற்றும் நான்தான் உன் மேலாளர். 380 00:19:56,697 --> 00:19:59,449 எனவே நீ இப்போது இந்தக் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள வேண்டும். 381 00:19:59,533 --> 00:20:03,287 மற்றும் உனக்குப் பிடிக்கவில்லை என்றால் அப்படியே நடையைக் கட்டலாம். 382 00:20:04,162 --> 00:20:05,747 ஸ்டெஃபனி எனக்கு சொல்லித் தந்தாள். 383 00:20:05,831 --> 00:20:09,209 சரி. சரி! அதை இவ்வளவு மோசமாக சொல்ல வேண்டிய அவசியமில்லை. 384 00:20:19,887 --> 00:20:21,430 சரக்கு ஏற்றும் இடம் - லாஸ் கொலினாஸ் 385 00:20:24,892 --> 00:20:27,686 டான் பாப்லோவும் நானும் பிரச்சினையிலிருந்து தப்பிவிட்டோம். 386 00:20:28,187 --> 00:20:30,063 ஆனால், ஏதோ சரியில்லை. 387 00:20:30,147 --> 00:20:32,858 என்ன செய்றீங்க? ஆம்புலன்ஸிற்கு இந்தப் பக்கம் தானே போகணும்? 388 00:20:32,941 --> 00:20:35,319 - இங்கிருந்து நான் பார்த்துகொள்கிறேன். - வேண்டாம். மன்னிக்கவும், சார்! 389 00:20:35,402 --> 00:20:37,571 இவை விலை உயர்ந்த டவல்கள். 390 00:20:37,654 --> 00:20:39,281 - நான் பார்த்துக்கொள்கிறேன். - வேண்டாம். 391 00:20:39,364 --> 00:20:40,741 மேக்ஸிமோ. 392 00:20:41,366 --> 00:20:42,659 அவர் இந்த வண்டியை எடுத்துச் செல்லட்டும். 393 00:20:42,743 --> 00:20:44,620 செனெட்டரை நான் வில்லாவிற்கு அழைத்துப் போகிறேன். 394 00:20:44,703 --> 00:20:46,330 எப்போதும் போல, நன்றி, டான் பாப்லோ. 395 00:20:49,458 --> 00:20:50,459 இருங்கள். 396 00:20:51,043 --> 00:20:52,461 இவ்வளவு நேரமாக அதில் இருந்தது செனெட்டரா? 397 00:20:53,295 --> 00:20:54,129 ஆமாம். 398 00:20:54,213 --> 00:20:56,006 திரும்ப வில்லாவிற்குக் கூட்டிப் போவதாகச் சொல்கிறாரா, ஏன்? 399 00:20:56,089 --> 00:20:57,925 நாம் அவரை அறையிலிருந்து தானே கூட்டி வந்தோம்? 400 00:20:58,008 --> 00:21:00,093 அவரது மனைவி ஹாலில் அழுதுகொண்டு இருந்தாங்களே. 401 00:21:00,677 --> 00:21:04,223 அவரது மனைவி இறைச்சியும், கடல் நண்டையும் ருசித்து சாப்பிட்டுக்கொண்டிருக்காங்க. 402 00:21:06,266 --> 00:21:08,227 தன் மனைவியை ஏமாற்றும் ஒரு கேடுகெட்ட 403 00:21:08,310 --> 00:21:11,188 அரசியல்வாதிக்காக நாம் ஒரு பிணத்தை இடம் மாற்றினோம் என்று சொல்றீங்களா? 404 00:21:11,271 --> 00:21:12,272 என்னிடம் பொய் சொன்னீங்களா? 405 00:21:12,356 --> 00:21:13,690 இல்லை, நான் பொய் சொல்லவில்லை. 406 00:21:13,774 --> 00:21:16,652 வேலையை முடிக்க உனக்கு என்ன தெரிய வேண்டுமோ அதை மட்டும்தான் உன்னிடம் சொன்னேன். 407 00:21:16,735 --> 00:21:18,278 அது தவறாக இருந்தாலுமா? 408 00:21:18,904 --> 00:21:21,657 - உங்களால் எப்படி ஒரு அநியாயதை செய்ய முடிந்தது? - மேக்ஸிமோ! 409 00:21:22,241 --> 00:21:25,994 ஒரு நிர்வாகத் தலைவனாக, இதுபோன்ற சில முடிவுகளை நீ எடுக்க வேண்டும். 410 00:21:26,620 --> 00:21:30,916 உன்னால் வேலைப் பளுவைத் தாங்க முடியவில்லை என்றால், உடனே என்னிடம் சொல். 411 00:21:33,460 --> 00:21:37,047 முதல் முறையாக, நான் கெட்ட விஷயத்திற்குத் துணை போனபோது 412 00:21:37,673 --> 00:21:39,758 ஜூலியா ஒளிவட்டத்தின் விளிம்பில் இருந்தாள். 413 00:21:39,842 --> 00:21:43,095 ஓ, டொனா நோரா, உங்கள் உதவியை மிகவும் மெச்சுகிறேன், 414 00:21:43,178 --> 00:21:45,389 ஆனால், நீங்கள் என் உடைகளை என் இஷ்டப்படித்தான் தைக்க வேண்டும். 415 00:21:45,472 --> 00:21:48,725 இவை ஜூலியா கொன்சாலெஸ் தயாரிக்கும் உடைகளே தவிர, நோரா ராமோஸ் தயாரிப்பவை அல்ல. 416 00:21:51,603 --> 00:21:55,065 இத்துடன், உங்கள் வாழ்க்கையில் இருந்து நான் விலகிக்கொள்கிறேன். முழுவதுமாக. 417 00:21:56,483 --> 00:21:58,735 மதத்தைக் கொண்டு நோரா தனது டிசைனை 418 00:21:58,819 --> 00:22:02,614 நியாயப்படுத்துவார் என்றால், ஜூலியாவும் அதையே செய்ய முயற்சிக்கலாம். 419 00:22:02,698 --> 00:22:05,325 அறியவியலாமை கொள்கை உடையவர்களால் அவள் வளர்க்கப்பட்டிருந்தாலும், 420 00:22:05,409 --> 00:22:07,995 பள்ளியில் அவள் இறை ஆர்வம் கொண்ட ஒரு பையனுடன் பழகினாள். 421 00:22:09,872 --> 00:22:11,331 டோனா நோரா. 422 00:22:11,999 --> 00:22:16,795 நீங்கள் பாபிலோனின் வேசிகளை முன்பு குறிப்பிட்டது வேடிக்கையாக இருக்கிறது. 423 00:22:17,504 --> 00:22:23,010 ஏனென்றால் அந்த உடை எனக்குப் பிடித்த புனிதரின் வார்த்தைகளால் உந்தப்பட்டு உருவானது, 424 00:22:23,594 --> 00:22:30,225 அதாவது, “நான் கடவுளுக்காக சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பது போலவே, 425 00:22:31,143 --> 00:22:37,232 என் கரங்களும், தோளும் அவ்வாறே ஆடை இன்றி கடவுளுக்காக சுதந்திரமாக இருக்கட்டும்.” 426 00:22:38,859 --> 00:22:40,944 ஓ, அருமை. 427 00:22:41,695 --> 00:22:43,113 அந்த புனிதர் யார்? 428 00:22:43,989 --> 00:22:44,907 க்யூ ஃபன் - டினா 429 00:22:44,990 --> 00:22:46,200 புனிதர் டினா. 430 00:22:47,326 --> 00:22:48,327 கிறிஸ்டினா. 431 00:22:48,869 --> 00:22:51,955 தனிப்பட்ட இடத்தில் ஆடும் பிரபலமற்ற புனிதர். 432 00:22:53,040 --> 00:22:56,376 தனியார் ஆட்டக்காரர்களுக்கு துணை நிற்கும் புனிதர் இருக்கிறார் என்பதே எனக்குத் தெரியாது. 433 00:22:56,460 --> 00:22:58,795 - அனைத்திற்கும் ஆதரவு தரும் புனிதர் இருக்கிறார். - ஆமாம், மேடம். 434 00:22:58,879 --> 00:23:00,923 பைபிளில் எனக்குப் பிடித்த புனிதர் இவர்தான். 435 00:23:01,590 --> 00:23:03,258 ஆனால், பைபிளில் புனிதர் யாரும் இல்லையே. 436 00:23:04,843 --> 00:23:10,682 புனிதர் கிறிஸ்டினா இருந்தாலும் அவருக்குப் புனிதர் பட்டம் ரொம்ப காலம் கழித்தே வழங்கப்பட்டது அல்லவா? 437 00:23:13,227 --> 00:23:15,896 - நான் ஒரு பைபிளை எடுத்து உனக்குக் காண்பி… - ஓ, இல்லை. வேண்டாம். வேண்டாம். 438 00:23:15,979 --> 00:23:17,272 கொண்டுவர வேண்டாம். 439 00:23:19,316 --> 00:23:21,151 நான் உங்களிடம் பொய் சொல்லிவிட்டேன், டோனா நோரா. 440 00:23:22,402 --> 00:23:23,862 நான் மதத்தைப் பின்பற்றுபவள் இல்லை. 441 00:23:24,655 --> 00:23:27,407 அந்த ஆடையின் டிசைன் எனக்குப் பிடிக்கவில்லை என்பதுதான் உண்மை. 442 00:23:29,993 --> 00:23:31,161 நீ ஏன் என்னிடம் சொல்லவில்லை? 443 00:23:31,245 --> 00:23:33,747 நாம் இப்போதுதான் நெருங்கிப் பழகினோம். 444 00:23:34,248 --> 00:23:37,334 மேக்ஸிமோ எனக்கு மிகவும் முக்கியமானவன், 445 00:23:37,417 --> 00:23:40,379 எனவே நமக்குள் நல்ல உறவு இருக்கவே நான் விரும்புகிறேன். 446 00:23:41,296 --> 00:23:43,298 ஆனால், எனக்கு இதுவும் மிகவும் முக்கியம். 447 00:23:43,382 --> 00:23:47,261 நான் எப்போதும் இதைப் பற்றித்தான் கனவு கண்டிருக்கிறேன், 448 00:23:47,344 --> 00:23:50,764 என் கனவை என் உடைகளில் நான் காண வேண்டும். 449 00:23:52,975 --> 00:23:53,976 அட. 450 00:23:55,477 --> 00:23:57,020 எனக்கு நன்றாகவே புரிகிறது. 451 00:23:57,104 --> 00:23:58,146 நிஜமாகவா? 452 00:24:00,315 --> 00:24:02,860 உன் உற்சாகமும், ஆர்வமும், என்னைக் கவர்ந்துவிட்டது. 453 00:24:03,735 --> 00:24:05,863 உண்மையில், உன்னை நான் மதிக்கிறேன். 454 00:24:05,946 --> 00:24:07,447 - நிஜமாகவா? - ஆமாம்! 455 00:24:08,240 --> 00:24:11,493 இப்போது இங்கு எனக்கு நிறைய நேரம் கிடைக்கிறது என்பதால், 456 00:24:11,577 --> 00:24:14,454 எனக்கு உண்மையாகவே என்ன பிடிக்கும் என்பதைக் கண்டுபிடிக்க நான் முயல்கிறேன். 457 00:24:15,122 --> 00:24:18,500 உண்மையைச் சொல்ல வேண்டுமானால், ஓவியம் வரைவது எனக்குப் பிடித்த விஷயமே அல்ல. 458 00:24:19,209 --> 00:24:20,210 இல்லை. 459 00:24:20,294 --> 00:24:23,630 ஓ, டோனா நோரா, உங்களுக்குப் பிடித்த விஷயத்தை நீங்க கண்டுபிடிப்பீங்க. 460 00:24:23,714 --> 00:24:24,882 நிச்சயம் கண்டுபிடிப்பீங்க. 461 00:24:24,965 --> 00:24:27,426 நீ இங்கு வந்ததில் சந்தோஷம், ஜூலியா. 462 00:24:28,635 --> 00:24:29,761 நன்றி. 463 00:24:30,470 --> 00:24:32,222 ஆனால் நீ மேக்ஸிமோவை டேட் செய்யப் போவதானால், 464 00:24:32,306 --> 00:24:35,309 நீ பைபிளை படிக்கவாவது முயற்சிக்க வேண்டும், சரியா? 465 00:24:35,392 --> 00:24:36,393 சம்மதம். 466 00:24:39,313 --> 00:24:42,816 அந்த நாளில் நான் செய்த விஷயத்தினால் நான் தடுமாறி இருந்தேன். 467 00:24:43,317 --> 00:24:46,570 திரைக்கு மறைவில் நடப்பவைகளைக் காண்பது இப்படித்தான் இருக்கும் என்றால், 468 00:24:46,653 --> 00:24:50,115 எனக்கு டான் மேக்ஸிமோவாக பிடிக்கவில்லை. 469 00:24:51,325 --> 00:24:53,160 மிகவும் சித்திரவதை செய்யப்பட்டது போல இருக்காதே. 470 00:24:53,243 --> 00:24:55,621 இது போன்றவை எப்போதும் நடக்கின்றன. 471 00:24:55,704 --> 00:24:56,872 என்ன நடந்ததென உங்களுகுத் தெரியுமா? 472 00:24:56,955 --> 00:24:59,583 நிச்சயமாகத் தெரியும். நான் ரொம்ப காலமாக இங்கு வேலை செய்கிறேன். 473 00:24:59,666 --> 00:25:00,918 நான் அனைத்தையும் பார்த்திருக்கிறேன். 474 00:25:01,001 --> 00:25:03,837 டான் பாப்லோ என்னை ஏமாற்றி இப்படி ஒரு மோசமான விஷயத்தை செய்ய வைத்ததை நம்பவே முடியவில்லை. 475 00:25:04,421 --> 00:25:06,507 அவரின் பாவப்பட்ட மனைவிக்கு உண்மையை எப்போதும் தெரியப் போவதில்லை. 476 00:25:07,841 --> 00:25:10,677 தெரிந்துகொண்டால், அவள் நிம்மதியாகவா இருக்கப் போகிறாள்? 477 00:25:10,761 --> 00:25:14,431 பல சமயங்களில், சில விஷயங்கள் எனக்குத் தெரியாமலேயே இருந்திருக்கலாம் என்று தோன்றும். 478 00:25:14,932 --> 00:25:17,518 அதாவது, என் அம்மா என் அப்பாவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக விஷம் கொடுத்து 479 00:25:18,602 --> 00:25:20,771 “பிளேட் ரன்னர்” படம் போல அது முடிந்தது. 480 00:25:21,730 --> 00:25:23,732 புரிகிறது, ஆனால், எனக்குக் கோபம் வருகிறது. 481 00:25:25,567 --> 00:25:26,777 ஏன்? 482 00:25:27,611 --> 00:25:32,241 நீ தவறு செய்தாய் என்றா அல்லது டான் பாப்லோ உன்னிடம் சொல்லவில்லை என்றா? 483 00:25:39,748 --> 00:25:42,459 நீ கவனிக்கப்பட வேண்டிய எதிரிதான், ஸ்டெஃபனி. 484 00:25:42,543 --> 00:25:44,753 நீ உன் திறமைகளை நல்லவற்றிற்குப் பயன்படுத்த வேண்டும் அவ்வளவுதான். 485 00:25:45,379 --> 00:25:46,505 நடையைக் கட்டு. 486 00:25:47,965 --> 00:25:53,220 கடைசியாக அவன் கோட்டையை அடைந்தபோது, வீரமான அழகிய ஹெக்டர் 487 00:25:53,303 --> 00:25:58,141 மிகமிகக் கொடூரமான பூதம் மெமோவால் நிறுத்தப்பட்டான். 488 00:26:01,061 --> 00:26:02,145 அட என்ன இது! 489 00:26:02,229 --> 00:26:06,525 நான் சொல்வது போல் நீ செய்ய வேண்டும் ஏனென்றால் நான்தான், பூதங்களின் தலைவன் மெமோ. 490 00:26:06,608 --> 00:26:07,985 உன் முடியைக் கொடு. 491 00:26:08,068 --> 00:26:09,695 அது ரொம்ப அழகாக இருக்கு. 492 00:26:10,863 --> 00:26:13,949 நீ என் அழகான தலை முடியைத் தொடவே கூடாது. 493 00:26:14,032 --> 00:26:16,952 நான் சாகும் வரை உன்னோடு போராடுவேன். பாதுகாப்போம்! 494 00:26:18,704 --> 00:26:20,455 இந்தா வாங்கிக்கொள்! வாங்கிக்கொள், பூதமே! 495 00:26:21,915 --> 00:26:23,792 ஓ, நீ மிகவும் வலுவாக இருக்கிறாய், ஹெக்டர்! 496 00:26:24,376 --> 00:26:27,129 ஆம், நான் மிக மிக மிக மிக வலுவானவன். 497 00:26:27,629 --> 00:26:28,714 அதனால்... 498 00:26:29,214 --> 00:26:34,094 பிங்க் கோட்டையிலிருந்து அந்த அழகிய ராணியைக் காப்பாற்றிய பிறகு... 499 00:26:36,388 --> 00:26:39,099 ஹெக்டர் மெமோவிற்குக் கருணை காட்டினான். 500 00:26:40,058 --> 00:26:42,144 எழுந்திரு, மெமோ! 501 00:26:43,061 --> 00:26:47,941 அவன் எங்கிருந்து வந்தானோ, அந்தச் சிறிய, அழுக்கான பாலத்திற்கு 502 00:26:48,025 --> 00:26:49,943 கீழேயே தவழ்ந்து சென்றுவிட்டான். 503 00:26:55,115 --> 00:26:56,950 உனக்குப் பிடித்ததா? 504 00:26:58,118 --> 00:27:00,329 எங்களுக்கு மார்கரீட்டா கொடுத்துவிட்டு, குழந்தைகளையும் மகிழ்விக்கிறாயா? 505 00:27:00,412 --> 00:27:02,664 - ஆமாம். - இதோ இதை வைத்துக்கொள். 506 00:27:03,498 --> 00:27:06,168 மிக்க நன்றி. உண்மையில், இவர்கள் குட்டி தேவதைகள். 507 00:27:08,128 --> 00:27:09,838 இங்கு என்ன செய்கிறாய்? 508 00:27:13,091 --> 00:27:14,092 உனக்குப் பிடிச்சிருக்கா? 509 00:27:19,598 --> 00:27:20,641 மேக்ஸிமோ. 510 00:27:21,308 --> 00:27:22,851 நீ இங்கு வந்ததில் சந்தோஷம். 511 00:27:23,435 --> 00:27:24,728 இங்கே பார். 512 00:27:24,811 --> 00:27:27,606 - நீ சோகமாக இருப்பது புரிகிறது. - நான் சோகமாகத்தான் இருக்கிறேன். 513 00:27:28,524 --> 00:27:29,983 ஆனால் உண்மையில், 514 00:27:30,901 --> 00:27:33,403 நீங்கள் என்னிடம் மறைத்ததால்தான் இன்னும் அதிக சோகமாக இருக்கிறேன். 515 00:27:34,488 --> 00:27:36,323 உண்மையிலேயே எனக்கு பயிற்சி தர நீங்கள் விரும்பினால், 516 00:27:36,406 --> 00:27:38,659 இங்கு நடக்கும் அனைத்து விஷயங்களும் எனக்குத் தெரிய வேண்டும். 517 00:27:40,160 --> 00:27:41,203 நீ சொல்வது சரிதான். 518 00:27:41,787 --> 00:27:44,248 உன்னிடம் அனைத்தையும் சொல்லாதது என் தவறுதான். 519 00:27:46,291 --> 00:27:47,584 உனக்கு இதற்குத் தகுதி இருக்கிறது. 520 00:27:52,047 --> 00:27:55,425 உன்னிடம் நான் சிலவற்றைச் சொல்ல வேண்டும். கதவை மூடு. 521 00:28:14,069 --> 00:28:15,404 இது செனெட்டர் பற்றியா? 522 00:28:15,487 --> 00:28:18,532 நம்முடைய பெரிய இடத்து விருந்தாளிகளைப் பற்றியது. 523 00:28:19,449 --> 00:28:24,246 இந்த குறிப்பேட்டில் மிக முக்கிய தனிப்பட்ட விஷயங்களை எழுதியே என் காலத்தை ஓட்டியுள்ளேன். 524 00:28:26,707 --> 00:28:29,084 அவர்கள் தேவைகளைக் கவனித்தால் நமக்கு சாதகமே. 525 00:28:29,168 --> 00:28:30,627 இதில் விவரங்கள் எல்லாம் துல்லியமாக உள்ளன. 526 00:28:32,212 --> 00:28:34,131 இங்கு பல பிரபலங்கள் உள்ளார்கள். 527 00:28:35,549 --> 00:28:36,925 ஹுயி லூயிஸ் அப்படிச் செய்தாரா? 528 00:28:38,552 --> 00:28:40,470 - அப்புறம் த நியூஸ்? - த நியூஸும் தான். 529 00:28:40,554 --> 00:28:41,805 நிறைய தகவல்கள் உள்ளன. 530 00:28:41,889 --> 00:28:47,060 அதோடு, தேவைப்பட்டால் மட்டுமே அனுகூலமாகப் பயன்படுத்தலாம். 531 00:28:48,353 --> 00:28:50,689 அதாவது… மிரட்டுவது போலவா? 532 00:28:51,315 --> 00:28:54,818 விடுதிக்கு எது உகந்ததோ அதைச் செய்ய வேண்டும். 533 00:28:54,902 --> 00:28:57,237 இது கிளுகிளுப்பாக உள்ளது! 534 00:28:57,321 --> 00:28:58,989 ஆனால் பயமுறுத்துவதாகவும் உள்ளது. இது... 535 00:29:00,490 --> 00:29:02,159 ரகசியங்களின் புத்தகம்! 536 00:29:03,076 --> 00:29:05,204 இல்லை. இது வெறும் குறிப்பேடுதான். 537 00:29:06,955 --> 00:29:08,123 இந்தா உன் சாவி. 538 00:29:08,790 --> 00:29:10,918 இதை வைத்திருக்கும் அலமாரியின் சாவி. 539 00:29:11,793 --> 00:29:13,003 இதை நீ பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். 540 00:29:13,086 --> 00:29:15,923 ரகசியங்களின் புத்தம் என்ற புதிரின் சாவி! 541 00:29:16,006 --> 00:29:17,090 மேக்ஸிமோ. 542 00:29:17,174 --> 00:29:19,843 இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதே, சரியா? 543 00:29:20,469 --> 00:29:23,639 இது நம்மிருவருக்குமான ரகசியமாக இருக்க வேண்டும். 544 00:29:24,306 --> 00:29:26,308 அன்றுதான் நான், உண்மை என்பது, 545 00:29:26,391 --> 00:29:29,561 வலிமையானதாகவும் ஆபத்தானதாகவும் இருக்க முடியும் என்பதை உணர்ந்தேன். 546 00:29:30,187 --> 00:29:33,106 சில சமயம், உண்மை நம்மை திரும்பத் தொடங்க உந்தும். 547 00:29:33,857 --> 00:29:35,359 சரியாக இருக்கு! 548 00:29:37,819 --> 00:29:40,072 நான் உன்னைத் துவைத்து கிழிக்கப் போகிறேன், பிளாண்டி. 549 00:29:42,074 --> 00:29:43,575 உங்களுக்கும்தான். 550 00:29:43,659 --> 00:29:47,496 உண்மை நம்மை புதிய பரிமாணத்திற்கும் கொண்டு செல்லும். 551 00:29:49,498 --> 00:29:51,250 இப்படியா அல்லது இன்னும் கவர்ச்சியாகவா? 552 00:29:51,333 --> 00:29:53,752 இது சரியான அளவு கவர்ச்சியில் இருக்கு. 553 00:29:54,878 --> 00:29:56,755 - ஹலோ. - ஹாய், அன்பே. 554 00:29:56,839 --> 00:29:58,882 பைபிளில் கெய்ன் மற்றும் ஏபெல்லின் பகுதியை படிக்க ஆரம்பித்திருக்கிறேன். 555 00:29:58,966 --> 00:30:00,342 இது டெலிநோவெலா போல இருக்கு! 556 00:30:01,093 --> 00:30:02,845 சீரியஸாக சொல்கிறேன்! 557 00:30:04,346 --> 00:30:06,515 என்னைப் போன்ற பிடிவாதமான வயதானவனுக்கு கூட, 558 00:30:06,598 --> 00:30:08,934 உண்மையை ஒப்புக்கொள்வது கடினமானதாக இருக்கும். 559 00:30:09,601 --> 00:30:14,773 நாம் அனைத்தையும் விட்டுவிட்டோம் என்பதை நினைத்து நான் வருந்துகிறேன் என்பதே என்னுடைய உண்மை. 560 00:30:17,276 --> 00:30:18,277 அடச்சே. 561 00:30:18,360 --> 00:30:21,613 என் தவறை ஒப்புக்கொள்கிறேன். அவரைத் திருமணத்திற்கு அழைத்திருக்கலாமோ என இப்போது தோன்றுகிறது. 562 00:30:24,741 --> 00:30:28,328 பலோமா, இதற்கு நான் அருகதை அற்றவன்தான், 563 00:30:28,412 --> 00:30:32,499 டான் பாப்லோ நினைவஞ்சலிக்கு நீ வந்தால் நன்றாக இருக்கும். 564 00:30:33,333 --> 00:30:35,377 நான் எங்கிருந்து உருவானேன் என்பதை உனக்குக் காண்பிக்க விரும்புகிறேன். 565 00:30:36,128 --> 00:30:37,671 நல்ல விஷயம்தான், அப்பா. 566 00:30:38,505 --> 00:30:40,841 ஆனால், லாஸ் கொலினாஸிலுள்ள அனைவரும் உங்களை வெறுக்கிறார்கள் அல்லவா? 567 00:30:40,924 --> 00:30:42,885 அதனால்தான் நீ அங்கு வர வேண்டும். 568 00:30:43,844 --> 00:30:44,845 நீ என்ன சொல்கிறாய்? 569 00:30:47,014 --> 00:30:48,765 அதைப் பற்றி யோசிக்கிறேன். 570 00:30:48,849 --> 00:30:50,893 ஜூலியாவும் நினைவஞ்சலிக்கு வருவாள் என்று நினைக்கிறீர்களா? 571 00:30:50,976 --> 00:30:52,436 தெரியாது, ஆனால் வருவாள் என்றே நினைக்கிறேன். 572 00:30:52,519 --> 00:30:55,230 வந்து, பலோமா தன் அம்மாவை அழைத்துக் கேட்கலாம் அல்லவா? 573 00:30:55,314 --> 00:30:56,940 - அவளது அம்மாவையா? - அப்பா! 574 00:30:58,066 --> 00:30:59,067 சரி. 575 00:30:59,776 --> 00:31:03,530 நான் ஒரு சிறு விவரத்தை சொல்ல தவறிவிட்டேன். 576 00:31:04,990 --> 00:31:07,159 பலோமாவின் அம்மா ஜூலியா கிடையாது. 577 00:31:07,910 --> 00:31:09,119 என்ன? 578 00:32:09,596 --> 00:32:11,598 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்