1 00:00:07,841 --> 00:00:11,261 மிஸ் யூனிவெர்ஸ் நிகழ்ச்சி நடந்து ஒரு மாதம் ஆகியிருந்திருந்தது, 2 00:00:11,345 --> 00:00:14,515 நானும் ஜூலியாவும் எங்கள் வாழ்க்கையை வாழ ஆரம்பித்தோம். 3 00:00:14,598 --> 00:00:18,435 வாழ்கையில் முதல் முறையாக, நான் உண்மையான சமநிலையை உணர்ந்தேன். 4 00:00:18,519 --> 00:00:22,272 இது வினோதமாக இருக்கலாம், ஆனால் வாழ்க்கை ஒரு நடனம் போல இருந்தது. 5 00:00:22,356 --> 00:00:25,067 ஹோட்டல் மறுபடியும் தன் முதலிடத்தை நோக்கி வந்துகொண்டிருந்தது 6 00:00:25,150 --> 00:00:27,152 மற்றும் ஜூலியாவின் ஆடையால் மிஸ் கொலம்பியாவுக்கு 7 00:00:27,236 --> 00:00:31,323 கிடைத்த வெற்றியால் ஜூலியாவின் வியாபாரம் வளர்ச்சி அடைய ஆரம்பித்தது. 8 00:00:31,406 --> 00:00:34,493 நாங்கள் சேர்ந்து உண்டாக்கிய வாழ்க்கை நீடிப்பது போலத் தோன்றியது. 9 00:00:34,993 --> 00:00:36,995 இன்னும் எதுவும் தேவை என்று எனக்குத் தோன்றவில்லை. 10 00:00:37,746 --> 00:00:40,832 ஆக, நான் அதற்கு எப்படி திரும்பி போவது? 11 00:00:40,916 --> 00:00:42,960 நான் இதற்கு பதில் சொல்லணுமா? 12 00:00:43,544 --> 00:00:46,296 ஒரு 14 வயது பையன் மீது அதிகம் சுமை போடுறீங்க. 13 00:00:46,380 --> 00:00:48,298 பதினாலா? உண்மையாகவா? 14 00:00:49,383 --> 00:00:50,843 உன் பாஸ்போர்ட்டைக் காட்டு பார்க்கலாம். 15 00:00:50,926 --> 00:00:55,389 பாருங்க மாமா, ஜூலியா பற்றிய விஷயங்கள் நிச்சயம் நீங்கள் சொல்லும் அளவுக்கு மோசமாக இருக்காது. 16 00:00:55,472 --> 00:00:58,851 ஹியூகோ, என்னை நம்பு. ஜூலியா என்னோடு எந்த சம்பந்தமும் வைத்துகொள்ள விரும்பலை. 17 00:00:58,934 --> 00:01:01,645 அவள் வாழ்க்கையில் இருந்து என்னை நிரந்தரமாக நீக்க விரும்புவது போலத் தோன்றியது. 18 00:01:03,021 --> 00:01:06,066 புத்தம் புதிய லாஸ் கொலினாஸ் திறக்கப்பட்டிருக்கிறது என்பதை 19 00:01:06,149 --> 00:01:09,945 அறிவிக்க எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது… 20 00:01:19,663 --> 00:01:21,957 அது மோசம். நீங்க என்ன பண்ணீங்க? 21 00:01:22,708 --> 00:01:24,543 நான் என்ன பண்ணலன்னு கேளு, அதுதான் சரியா இருக்கும். 22 00:01:25,502 --> 00:01:28,005 உனக்கு உண்மையிலேயே புரியணும்னா, 23 00:01:28,088 --> 00:01:30,632 நான் உனக்கு இன்னொரு கதை சொல்லணும். 24 00:01:30,716 --> 00:01:34,094 அதாவது, சுவரோவியத்தை திறக்க இன்னும் கொஞ்சம் நேரம் இருப்பதால், 25 00:01:34,178 --> 00:01:35,596 நமக்கு கதைக்கு நேரம் இருக்கு. 26 00:01:36,180 --> 00:01:38,599 என் கதைகளை கேட்க ஏங்கினாய்னு ஒப்புக்கொள். 27 00:01:38,682 --> 00:01:39,975 ஆமா. 28 00:01:40,767 --> 00:01:43,270 அது ஒரு சாதாரண நாளாகத்தான் துவங்கியது. 29 00:01:43,353 --> 00:01:44,354 நிர்வாகத் தலைவர் 30 00:01:44,438 --> 00:01:46,982 ஒருவழியாக என் நாற்காலியில் பெருமையோடு உட்கார, வேலைக்குச் சென்றேன். 31 00:01:47,065 --> 00:01:48,984 என் நாற்காலி பற்றிய மொத்த விஷயத்தையும் நீ தவறவிட்டுட்ட. 32 00:01:49,067 --> 00:01:51,570 ஆனால், அதில் ஏற்கனவே யாரோ அமர்ந்திருந்தார்கள். 33 00:01:52,070 --> 00:01:55,115 ஓ, திரு. வேரா. நமக்கு ஏதாவது மீட்டிங் இருக்கிறதா… 34 00:01:58,368 --> 00:01:59,578 நீங்கள் திரு. வேரா இல்லை. 35 00:01:59,661 --> 00:02:01,580 அதாவது நான் நினைக்கும் திரு. வேரா இல்லை. 36 00:02:03,248 --> 00:02:04,499 தவறாகச் சொல்லிவிட்டேன். 37 00:02:04,583 --> 00:02:08,836 அவர் உங்களைவிட முக்கியமானவர் இல்லை. நீங்கள்தான் உண்மையான வேரா. 38 00:02:08,920 --> 00:02:10,130 கிளாசிக் வேரா. 39 00:02:10,214 --> 00:02:12,132 பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது, மேக்ஸிமோ. 40 00:02:12,216 --> 00:02:14,301 நீ மறந்திருக்கலாம், ரிக்கார்டோ வேரா 41 00:02:14,384 --> 00:02:17,763 அலெஹான்ட்ரோ வேராவின் தம்பி மற்றும் ஹோட்டலின் இணை உரிமையாளர். 42 00:02:17,846 --> 00:02:20,891 திரு. வேரா. லாஸ் கொலினாஸுக்கு உங்களை வரவேற்கிறேன். 43 00:02:20,974 --> 00:02:23,268 இந்த இடத்தை நீங்கள் மாற்றியிருக்கும் விதம் எனக்கு பிடிச்சிருக்கு. 44 00:02:24,019 --> 00:02:25,020 அதனால்தான் இங்கே வந்திருக்கேன். 45 00:02:25,103 --> 00:02:27,189 உங்களுக்காக ஒரு திட்டம் வைத்திருக்கிறேன். 46 00:02:27,272 --> 00:02:30,067 என் ஹோட்டல் வியாபாரத்தை உலகளவுக்கு எடுத்துப் போகப் போகிறேன். 47 00:02:30,609 --> 00:02:33,612 என்னுடைய புதிய முதன்மை ரிசார்ட்டைத் தொடங்கச் சிறந்த செயல்முறை தலைவராக 48 00:02:33,695 --> 00:02:36,615 வேறு யாரையும் யோசிக்க முடியவில்லை. 49 00:02:36,698 --> 00:02:37,699 உண்மையாகவா? 50 00:02:39,701 --> 00:02:41,828 அந்த மற்றொரு வேராவுக்கு இது பற்றி தெரியுமா? 51 00:02:42,412 --> 00:02:43,622 இப்போது அவனுக்கு தெரியும். 52 00:02:44,414 --> 00:02:48,168 ரிக்கார்டோ, என் சிறந்த ஊழியரை நீ திருடப் பார்க்கிறாயா? 53 00:02:48,252 --> 00:02:50,504 அது என்ன “முதன்மை ரிசார்ட்?” 54 00:02:50,587 --> 00:02:52,714 நாம் எல்லாவற்றிலும் கூட்டாளிகளாக இருக்க ஒப்புக்கொண்டோமே. 55 00:02:54,842 --> 00:02:58,220 இரண்டு வேராக்களும் ஒருவரோடு ஒருவர் வாக்குவாதம் செய்தபோது, 56 00:02:58,303 --> 00:03:00,347 அவர்கள் தலை முடி கலையாமல் இருந்தது, 57 00:03:00,430 --> 00:03:03,892 அந்தக் காட்சி மொத்தமும் டிவி நாடகத்தில் வருவது போல இருந்தது. 58 00:03:03,976 --> 00:03:07,688 உன் சொந்த சகோதரனை இந்த வியாபாரத்திலிருந்து நீக்குவாய் என நம்ப முடியலை. 59 00:03:07,771 --> 00:03:09,815 நம்முடைய வியாபாரம்! 60 00:03:09,898 --> 00:03:14,236 ஹுவான் அலெஹான்ட்ரோ, பல ஆண்டுகளாக நான்தான் உன்னைத் தாங்கி வருகிறேன் என நமக்கே தெரியும்! 61 00:03:14,778 --> 00:03:18,323 அதற்கும் மேல், நீ என் மேக்ஸிமோவை திருட பார்க்கிறாய்! 62 00:03:20,534 --> 00:03:23,120 இது என் மனைவியை திருடுவதைவிட 63 00:03:23,620 --> 00:03:25,122 நல்லதுதான்! 64 00:03:30,460 --> 00:03:32,754 அலீஸியா குவாடாலூபேவிற்கு அன்பு என்றாலென்ன என்று… 65 00:03:32,838 --> 00:03:34,464 யாரோ ஒருவர் காட்ட வேண்டியிருந்தது! 66 00:03:37,634 --> 00:03:40,762 நம் பாட்டியின் இறுதிச் சடங்கு நடக்கும் நாளிலா? 67 00:03:47,686 --> 00:03:49,813 நிறுத்துங்கள், கனவான்களே! உங்களைக் கெஞ்சி கேட்கிறேன்! 68 00:03:54,484 --> 00:03:56,195 உதவி! 69 00:03:56,278 --> 00:03:58,739 இவர்களைச் சாத்தான் பிடித்துவிட்டது! 70 00:03:58,822 --> 00:04:00,741 டூல்ஸே கன்னியாஸ்திரியாகவா? 71 00:04:00,824 --> 00:04:03,619 அட, மாமா! அப்படி நடக்கலைன்னு நம் இருவருக்கும் தெரியும். 72 00:04:03,702 --> 00:04:04,953 உண்மையான கதையைச் சொல்லுங்கள். 73 00:04:05,037 --> 00:04:06,371 சரி, சரி. 74 00:04:07,247 --> 00:04:11,793 கன்னியாஸ்திரியையும், சட்டையை கிழித்ததையும் தவிர்த்துவிடு, அது நாடகத்தனமானது. 75 00:04:11,877 --> 00:04:13,629 நீ நம்பிக்கை துரோகம் செய்தாய், ரிக்கார்டோ. 76 00:04:13,712 --> 00:04:15,797 தனக்கு எது சரி என்று மேக்ஸிமோவுக்கு தெரியும் என நம்புகிறேன். 77 00:04:16,380 --> 00:04:18,216 அது லாஸ் கொலினாஸில் இருப்பது என்பது. 78 00:04:18,300 --> 00:04:21,220 மேக்ஸிமோ தன் சொந்த முடிவுகளை எடுப்பான். உண்மைதான். 79 00:04:21,303 --> 00:04:22,971 நீ என்ன சொல்கிறாய், டான் மேக்ஸிமோ? 80 00:04:23,847 --> 00:04:26,183 இந்த ஆஃபரை உனக்கு ஒரு முறைதான் கொடுப்பேன். 81 00:04:28,143 --> 00:04:29,811 வேரா குடும்பத்தினர் எப்போதும் பேரம் பேச மாட்டார்கள். 82 00:04:35,609 --> 00:04:37,277 ஹெக்டரின் முதல் நாவல் 83 00:04:37,361 --> 00:04:39,279 ஹோட்டலில் அடுக்கடுக்காக விற்பனையானதாலும், 84 00:04:39,363 --> 00:04:43,033 மிஸ் யூனிவெர்ஸ் நிகழ்ச்சியில் டையன் சிறப்பு பெற்றதாலும், அவர்களுக்கு கொண்டாட நிறைய இருந்தது. 85 00:04:43,116 --> 00:04:45,160 உங்கள் அடுத்த அத்தியாயத்திற்கு, என் ராணியே! 86 00:04:45,244 --> 00:04:50,040 முதலில், டேடைம் எம்மீஸின் தொகுப்பாளராக நான் பிரம்மாண்டமாக திரும்பி வந்தது பற்றி. 87 00:04:50,123 --> 00:04:52,626 இது சூசன் லூசியின் வருடம் என்று நினைக்கிறேன்! 88 00:04:52,709 --> 00:04:54,878 எல்லோரின் பார்வையும் உங்கள் மீதுதான் இருக்கப் போகிறது என்று நினைக்கிறேன். 89 00:04:56,630 --> 00:04:58,549 சரி, ஹெக்டரின் ஓய்வு நாளுக்கான திட்டம் என்ன? 90 00:05:00,133 --> 00:05:01,593 நம் மூவருக்குமா? 91 00:05:01,677 --> 00:05:03,554 பனானா படகு சவாரி, 92 00:05:03,637 --> 00:05:05,597 பிறகு நீச்சல் குளத்திற்கு அருகில் கொஞ்சம் பிங்கோ விளையாடி, 93 00:05:05,681 --> 00:05:08,100 நம் இரவு ஆடைகள் அணிந்து போர்க்கி’ஸ் பார்க்கலாம். 94 00:05:08,934 --> 00:05:10,602 சாட், நீ நலமா? 95 00:05:10,686 --> 00:05:12,396 நீ கொஞ்சம் பதட்டமாக இருப்பது போலத் தோணுது. 96 00:05:12,479 --> 00:05:13,522 என்ன? இல்லை. 97 00:05:13,605 --> 00:05:15,399 நல்லா இருக்கேன்! ரொம்ப நல்லாவே இருக்கேன். 98 00:05:15,482 --> 00:05:18,986 நானும் குளோரியாவும் பிரிந்துவிட்டதாலும், இறுதி வரை தனியாக இருக்கப் போகிறேன் என்பதாலும், 99 00:05:19,069 --> 00:05:20,279 நான் “கார்பல்” டியெம் என்று இருக்கிறேன்! 100 00:05:22,197 --> 00:05:24,074 நீ திரும்ப மீண்டு வந்ததில் சந்தோஷம். 101 00:05:25,075 --> 00:05:27,703 நீ போய் அந்த பனானா படகு பற்றி விசாரிக்கிறாயா? 102 00:05:27,786 --> 00:05:29,162 ஓ, நல்ல யோசனை. 103 00:05:33,959 --> 00:05:35,878 - நமக்கு ஒரு சாட் பிரச்சினை வந்திருக்கிறது. - தெரியும்! 104 00:05:35,961 --> 00:05:38,088 இனி நாம தனியாக இருக்கவே முடியாது போலிருக்கு. 105 00:05:38,172 --> 00:05:41,717 மூணு பெரியவங்க கடற்கரையில் சூரிய அஸ்தமன நேரத்தில் கைகோர்த்து நடப்பது வினோதம்தான். 106 00:05:41,800 --> 00:05:43,969 அவன் கையை உதறப் பார்த்தேன் ஆனால் அவனுக்குப் புரியலை. 107 00:05:45,804 --> 00:05:47,347 அவனைப் பற்றி கவலையா இருக்கு, அன்பே. 108 00:05:48,432 --> 00:05:52,019 எனக்கு முன்பாக ஒரு பெரிய சாகசம் இருக்கிறது மற்றும்… 109 00:05:53,020 --> 00:05:55,439 என் மகன் மூழ்கிக்கொண்டிருக்கும்போது அதை எப்படி செய்வது? 110 00:05:55,522 --> 00:05:59,151 சாடும் குளோரியாவும் சமாதானம் ஆக ஏதாவதொரு வழி இருக்க வேண்டும். 111 00:05:59,234 --> 00:06:00,777 ஆமாம், ஆனால் எப்படி? 112 00:06:00,861 --> 00:06:02,529 குளோரியா சாடைப் பார்க்க மறுக்கிறாள், 113 00:06:02,613 --> 00:06:05,490 அவளுக்கு அவன் பல, பல, பல, பல சோகமான வாய்ஸ் மெசேஜுகள் அனுப்பியிருக்கிறான். 114 00:06:05,574 --> 00:06:08,619 அதில் 12 செய்திகளை நான் கேட்டேன். அதில் ஒன்றில் அவனது விசும்பல் மட்டும் இருந்தது. 115 00:06:08,702 --> 00:06:10,662 - ஓ, ஆமாம், அவன் அப்படி செய்வான். - அட… 116 00:06:12,372 --> 00:06:14,541 அவர்கள் சந்திக்க ஒப்புக்கொள்ளாவிட்டால்… 117 00:06:16,919 --> 00:06:19,755 நாம் அவர்களை திருட்டுத்தனமாக சந்திக்க வைக்கணும். 118 00:06:20,964 --> 00:06:23,133 அது பிரபலமான திரைப்படமான 119 00:06:23,217 --> 00:06:24,551 “த பேரண்ட் டிராப்” போலத் தோணுது. 120 00:06:24,635 --> 00:06:28,222 அல்லது கொடூரமான விக் அணிந்த இரட்டையர்கள் பற்றிய அமெரிக்க திரைப்படம் போல. 121 00:06:28,305 --> 00:06:30,682 அது பற்றி எனக்குத் தெரியாது. 122 00:06:36,605 --> 00:06:41,068 லாஸ் கொலினாஸில் நான் கஷ்டப்பட்டு உழைத்த எல்லாவற்றையும் பார்த்தபோது, 123 00:06:41,151 --> 00:06:43,487 ஒரு பெரிய முடிவு எடுக்க வேண்டி இருந்தது. 124 00:06:43,570 --> 00:06:46,073 மெமோ, நாம் கொஞ்சம் பேசலாமா? 125 00:06:46,156 --> 00:06:49,034 ஓ, மேக்ஸிமோ. ஹாய்! 126 00:06:49,117 --> 00:06:52,120 மன்னிச்சிடு. இந்த அன்னப் பறவைகள் புறாக்களைப் போல இருப்பது தெரியும். 127 00:06:52,204 --> 00:06:55,415 இரவு முழுவதும் என்னையும் லொரெனாவையும் குழந்தை தூங்கவே விடலை. 128 00:06:55,499 --> 00:06:56,792 ஆனால் என்ன தெரியுமா? 129 00:06:58,210 --> 00:07:01,922 பலவீனமானவங்களுக்குத்தான் தூக்கம் தேவை, என்னால் வேலை செய்ய முடியும். 130 00:07:04,716 --> 00:07:07,177 சரி, நீ இப்போ காற்றை மடிக்குற. 131 00:07:07,261 --> 00:07:11,139 பரவாயில்ல. ஒரு பெரிய முடிவெடுக்க எனக்கு உன் உதவி தேவை. 132 00:07:15,060 --> 00:07:16,937 நான் ஜூலியாவிடம் ப்ரொப்போஸ் செய்யப் போறேன். 133 00:07:18,313 --> 00:07:19,439 அடடா! 134 00:07:19,523 --> 00:07:21,608 அடக் கடவுளே! உண்மையாகவா? 135 00:07:21,692 --> 00:07:24,236 என் வாழ்க்கையில இதைவிட உறுதியா எதிலுமே இருந்ததில்ல. 136 00:07:24,319 --> 00:07:26,029 இதை சாதிக்க நீ எனக்கு உதவணும். 137 00:07:26,113 --> 00:07:27,656 கண்டிப்பா செய்யறேன்! 138 00:07:27,739 --> 00:07:29,616 ஓ, ஓ, ஓ. பொறுங்க. 139 00:07:29,700 --> 00:07:32,035 ரிக்கார்டோ வேரா கொடுத்த ஆஃபரைப் பற்றி நீங்க மெமோவிடம் சொல்லலையா? 140 00:07:32,119 --> 00:07:35,038 அதுதான் நீங்க எடுக்க வேண்டிய பெரிய முடிவுன்னு நினைத்தேனே? 141 00:07:35,122 --> 00:07:37,583 எனக்கு நல்ல திருப்புமுனை பிடிக்கும், ஹியூகோ. 142 00:07:37,666 --> 00:07:42,462 நான் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கிறேன் என்பதைத்தான் அந்த வேலை வாய்ப்பு நிரூபித்தது. 143 00:07:43,255 --> 00:07:45,966 ரிக்கார்டோவிடம் மறுத்துவிட்டேன். 144 00:07:47,551 --> 00:07:50,012 “அடுத்த பெரிய விஷயத்தை” துரத்துவதை நிறுத்திவிட்டு 145 00:07:50,095 --> 00:07:52,806 ஜூலியாவோடு அகபுல்கோவில் வாழும் வாழ்க்கையை உறுதிசெய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. 146 00:07:54,099 --> 00:07:56,018 நான் அங்கேயே தங்கியிருந்தபோது, 147 00:07:56,101 --> 00:07:59,354 என் குடும்பத்தார் சாராவுக்கு விடை கொடுக்கத் தயாராகிக்கொண்டிருந்தார்கள். 148 00:08:06,987 --> 00:08:08,155 நோரா? 149 00:08:08,238 --> 00:08:10,449 இது என்ன விண்வெளி இயந்திரம்? 150 00:08:10,532 --> 00:08:13,118 இது ஒரு நார்டிக் டிராக், அன்பே! 151 00:08:14,036 --> 00:08:16,288 என் பாஸ் புது மாடல் வாங்கிட்டாங்க, 152 00:08:16,371 --> 00:08:18,665 அவங்களோட தோட்டக் காரருக்கு ஒரே ஒரு கால் இருப்பதால், 153 00:08:18,749 --> 00:08:20,834 எனக்கு இதைக் கொடுத்துட்டாங்க! 154 00:08:20,918 --> 00:08:23,837 சாராவின் அறையை அப்படியே வச்சுட்டு, 155 00:08:23,921 --> 00:08:25,964 அவளை நினைத்து ஏங்கும்போது, 156 00:08:26,048 --> 00:08:27,716 அவளோட படுக்கையில் படுத்து நீ அழ விரும்புவதாக நினைத்தேன். 157 00:08:27,799 --> 00:08:29,009 கண்டிப்பாக அதுதான் என் திட்டம். 158 00:08:29,092 --> 00:08:31,887 ஆனால் இங்கு ஏதாவது செய்யலாம்னு சாராதான் சொன்னாள். 159 00:08:31,970 --> 00:08:33,847 அதனால் இதை நம் உடற்பயிற்சி அறையாக மாற்றுகிறேன்! 160 00:08:33,931 --> 00:08:35,474 சரி, எல்லாம் நல்லதே. 161 00:08:35,557 --> 00:08:39,311 குழந்தைகளின் அறைகளைப் பெற்றோர்கள் கவனித்துகொள்வது திகிலானதுன்னு எப்பவும் நினைத்தேன். 162 00:08:39,394 --> 00:08:44,650 தங்களின் மோசமான வருட நினைவுகளைப் பற்றிய ஞாபகப்படுத்தலை யார்தான் விரும்புவாங்க? 163 00:08:44,733 --> 00:08:46,360 மேலும், எஸ்டெபன், 164 00:08:46,443 --> 00:08:48,570 நான் வீட்டுக்கு வரும்போது சோஃபாவில் கூட படுத்து தூங்குவேன். 165 00:08:48,654 --> 00:08:51,240 மோசமாக சொல்லலை, 166 00:08:51,323 --> 00:08:53,742 ஆனால் டோனா ரொசிட்டா நிரந்தரமாக வாழப் போவதில்லை. 167 00:08:53,825 --> 00:08:55,244 ஆனாலும் அவங்க முயற்சி செய்தாங்க. 168 00:08:55,327 --> 00:08:56,954 டோனா ரொசிட்டா 106 வயது வரை வாழ்ந்தாங்க. 169 00:08:57,037 --> 00:08:59,665 அன்பே. நீங்க நிறைய உடற்பயிற்சி செய்யணும்னு டாக்டர் சொன்னார். 170 00:08:59,748 --> 00:09:02,167 ஒவ்வொரு நாளும் உங்க அம்மா கொடுக்கும் உணவைப் பார்த்தால், 171 00:09:02,251 --> 00:09:04,127 புதுசாக எதையாவது முயற்சி செய்யணும். 172 00:09:04,211 --> 00:09:05,879 பன்றி மாமிசத்தில் அதிக புரதச்சத்து உண்டு. 173 00:09:05,963 --> 00:09:07,673 மேலும், என் ஒரு ஸ்பூன் வறுத்த பீன்ஸைவிட, அது ரெண்டு மடங்கு அதிகம். 174 00:09:07,756 --> 00:09:11,051 அன்பே, நீங்க இப்ப சொன்ன எதுவும் ஆரோக்கியமானது இல்ல. 175 00:09:11,134 --> 00:09:13,637 பாருங்க! டாக்டரின் கட்டளை. முயற்சித்துப் பாருங்க. 176 00:09:13,720 --> 00:09:16,640 நான் அதன்மீது ஏற மாட்டேன். அதைக் கொண்டுப் போயிடு! 177 00:09:16,723 --> 00:09:18,308 அது ஜாலியா இருக்கும்! முயற்சியுங்க! 178 00:09:18,392 --> 00:09:21,103 இல்ல, இல்ல. நோரா. நோரா, ப்ளீஸ். எனக்கு அழுத்தம் கொடுக்காதே, சரியா? 179 00:09:23,438 --> 00:09:24,648 நான் என்ன தவறாக சொன்னேன்? 180 00:09:27,442 --> 00:09:29,444 அடுத்த நாள், நானும் ஊழியர்களும் 181 00:09:29,528 --> 00:09:33,156 முக்கிய ப்ரொபோசலுக்கு தயாராகியபோது, டையன் வேறொரு தம்பதிக்கு உதவ முயற்சித்தார். 182 00:09:33,240 --> 00:09:36,577 குளோரியாவும் சாடும் தங்கள் உறவை ரகசியமாக வைத்திருந்ததால், 183 00:09:36,660 --> 00:09:38,495 அவங்க யாரென்று குளோரியாவுக்கு தெரியவில்லை. 184 00:09:38,579 --> 00:09:41,832 நீங்கள் ஒரு கடற்கரை நிகழ்ச்சியைத் திட்டமிடுவது எனக்கு மகிழ்ச்சி, மில்ட்ரெட். 185 00:09:41,915 --> 00:09:45,544 ஓ, செல்லம், எனக்குதான் மிகுந்த மகிழ்ச்சி. என்னை நம்பு. 186 00:09:45,627 --> 00:09:49,798 திருமண உறுதிமொழி புதுப்பிக்கும் விழாவிற்கு நானும் என் கணவரும் ரொம்ப நாளாக காத்திருக்கிறோம். 187 00:09:49,882 --> 00:09:51,842 உங்களுக்கு கல்யாணமாகி எவ்வளவு நாட்கள் ஆகிறது? 188 00:09:51,925 --> 00:09:54,344 பன்னிரண்டு வருடங்கள். நாங்கள் ஒரு கடற்கரையில் சந்தித்தோம். 189 00:09:54,428 --> 00:09:58,307 என் கணவர் பயன்படுத்திக் கொண்டிருந்த மெட்டல் டிடக்டரில் என் கால்விரல் மோதிரம் மாட்டிக் கொண்டது. 190 00:09:58,390 --> 00:10:00,684 அவர் புதையலைத் தேடி, அதைக் கண்டுபிடித்துவிட்டார்! 191 00:10:01,852 --> 00:10:03,854 சரி, அது ரொம்ப சுவாரசியமானதுதான்… 192 00:10:03,937 --> 00:10:05,063 சரி, அவர் பெயர் என்ன? 193 00:10:06,023 --> 00:10:08,817 டையன் எல்லாவற்றையும் யோசித்திருந்தார். ஆனால்… 194 00:10:10,068 --> 00:10:11,069 சாட். 195 00:10:13,947 --> 00:10:15,115 இதற்கிடையில், 196 00:10:15,199 --> 00:10:18,911 ஹெக்டர் சாட்டுக்கு ஒரு “புதையல் வேட்டை” ஏற்பாடு செய்திருந்தான், 197 00:10:18,994 --> 00:10:22,247 அதே இடத்திற்கு சென்று சேர வைத்தான், அது கொஞ்சம்… 198 00:10:22,331 --> 00:10:24,917 இது குழந்தைக்காக வடிவமைக்கப்பட்டது போல, ரொம்ப சுலபமாக இருக்கு. 199 00:10:25,000 --> 00:10:26,460 நான் வளர்ந்தவன். 200 00:10:26,543 --> 00:10:27,669 ஓ, லாலிபாப்! 201 00:10:31,715 --> 00:10:34,051 “கவலைப்படாதே, கிட்டத்தட்ட வந்துவிட்டாய். 202 00:10:34,134 --> 00:10:37,513 அவள் சுருட்டை முடியைப் பார்க்கும்போது நீ ‘எக்ஸை’ கண்டுபிடிப்பாய்.” 203 00:10:38,472 --> 00:10:40,224 “சுருட்டை முடியா?” இந்த வெப்பத்திலா? 204 00:10:40,891 --> 00:10:42,893 ஹெக்டர், இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்கிறாயா? 205 00:10:45,062 --> 00:10:47,439 இரு. குளோரியாதான் “எக்ஸா”? 206 00:10:50,150 --> 00:10:51,902 மூன்று வகை செவிச்சே இருக்கிறதா? 207 00:10:51,985 --> 00:10:54,488 ஆமாம், கண்டிப்பாக. மற்றும்… 208 00:10:54,571 --> 00:10:56,406 சாட்? நீ இங்க என்ன செய்யுற? 209 00:10:56,490 --> 00:10:58,158 அம்மா, நீங்களும் ஹெக்டரும் எங்களை “பேரண்ட் டிராப்” செஞ்சீங்களா? 210 00:10:58,242 --> 00:10:59,993 இதெல்லாமே என் யோசனைதான். 211 00:11:00,077 --> 00:11:01,703 ஓ, ப்ளீஸ், அவன் மீது கோபப்படாதே. 212 00:11:01,787 --> 00:11:03,664 நான் அவனுடைய அம்மா. டையன். 213 00:11:04,998 --> 00:11:07,709 உங்க குடும்பத்துக்கே என்னதான் பிரச்சினை? 214 00:11:07,793 --> 00:11:09,419 உங்களால வேற பெயர்களை யோசிக்கவே முடியாதா? 215 00:11:09,503 --> 00:11:13,340 பால், டேவ், ரமோன், ஆண்ட்ரூ என்பது போல… 216 00:11:13,423 --> 00:11:15,759 நீங்கள் பொய் சொல்வதில் மோசம். 217 00:11:15,843 --> 00:11:18,512 ஏமாற்றுவதிலும் கூட! உன் புது காதலியோடு நீ இன்பச்சுற்றுலா போகாம இருப்பது ஆச்சரியம்தான். 218 00:11:18,595 --> 00:11:19,805 நீ எதை பத்தி பேசுற? 219 00:11:19,888 --> 00:11:22,891 மிஸ் யூனிவெர்ஸில் இருந்த அந்த அழகு ராணி. நீங்க ரெண்டு பேரும் கட்டிப்பிடிப்பதைப் பார்த்தேன். 220 00:11:22,975 --> 00:11:25,310 ஓ, ஒண்ணுமில்ல! மிஸ் டர்க்ஸ் அண்ட் கைக்கோஸோடு ஹெக்டர் என்னை உறவாட வைக்க பார்த்தான், 221 00:11:25,394 --> 00:11:27,229 நான் முழு நேரமும் உன்னைப் பத்தித்தான் பேசினேன். 222 00:11:27,312 --> 00:11:28,480 ஆக, ரெண்டு பெண்கள் இருந்தாங்களா? 223 00:11:29,273 --> 00:11:31,233 நீங்க ஒருவருக்கு ஒருத்தர் பொருத்தமானவங்க. 224 00:11:32,317 --> 00:11:34,820 குளோரியா, நீ வருத்தமா இருப்பது புரியுது. 225 00:11:34,903 --> 00:11:37,072 ஆனால் நீ ஹோட்டலுக்கு வந்திருக்கிறாய் என்பதால் 226 00:11:37,155 --> 00:11:39,491 என் மகன் மீது ஏதோ கொஞ்சம் காதல் இருக்கென்று அர்த்தம். 227 00:11:39,575 --> 00:11:41,243 நான் வர விரும்பலை, 228 00:11:41,326 --> 00:11:45,914 ஆனால் ஹுவான்காவின் “கொரீடாவை” நான் இதுவரை கேட்டதிலேயே மிக மோசமான ஸ்பானிஷில் 229 00:11:45,998 --> 00:11:47,791 அவன் பாடியதை என் ஆன்சரிங் மிஷினில் கேட்டு… 230 00:11:47,875 --> 00:11:53,046 தெரியலை. அவன் சொல்வதைக் கேட்கணும்னு தோணுச்சு. எனவே… 231 00:11:55,632 --> 00:11:57,134 புரொப்போசலுக்கான 232 00:11:57,217 --> 00:11:59,803 என் திட்டத்தை மிகவும் துல்லியமாக யோசித்திருந்தேன். 233 00:11:59,887 --> 00:12:01,138 கிட்டத்தட்ட அந்த நேரம் வந்துவிட்டது. 234 00:12:01,221 --> 00:12:04,308 உனக்கு நல்லவற்றை கொண்டு வந்திருக்கேன். கொஞ்சம் சிறப்பாக்க அதை நன்றாக குலுக்கினேன். 235 00:12:04,391 --> 00:12:06,727 என்ன? இல்லை… அதை அப்படிச் செய்யக்கூடாது… 236 00:12:06,810 --> 00:12:08,896 பரவாயில்லை. சிறப்பு. நன்றி. 237 00:12:09,855 --> 00:12:11,398 ஹே, நீ என் வீடியோவை மறைக்கிறாய்! 238 00:12:11,481 --> 00:12:13,984 மேக்ஸிமோ! மரியாச்சீஸை வந்துட்டாங்க! 239 00:12:14,067 --> 00:12:15,569 நல்லா இருக்கு, மெமோ! 240 00:12:15,652 --> 00:12:18,071 - ஜூலியா வந்துட்டே இருக்கா! - உங்கள் இடங்களுக்கு போங்கள். 241 00:12:18,155 --> 00:12:23,202 இப்பவும் அவள் உனக்கு பொருத்தமில்லைன்னுதான் தோணுது, இருந்தாலும் வாழ்த்துகள். 242 00:12:23,285 --> 00:12:24,286 நன்றி. 243 00:12:24,369 --> 00:12:26,455 அவள் வருகிறாள்! போங்க, போங்க, போங்க! போங்க! 244 00:12:37,883 --> 00:12:38,884 ஹே. 245 00:12:41,386 --> 00:12:42,846 நீ என்னைத் தேடுவதாக லூபெ சொன்னாங்களே? 246 00:12:42,930 --> 00:12:46,058 ஓ, ஆமாம். பெரிய விஷயமில்லை. உன்னிடம் ஒண்ணு சொல்ல விரும்பினேன். 247 00:12:46,141 --> 00:12:50,103 சரி. அது பெரிய விஷயம் இல்லைன்னா, முதலில் நான் என்னுடைய செய்தியை சொல்லட்டுமா? 248 00:12:50,187 --> 00:12:51,188 சரி. 249 00:12:51,271 --> 00:12:55,234 இன்று காலை எனக்கு ஒரு அழைப்பு வந்ததே? அது ஹவுஸ் ஆஃப் டியோரில் இருந்து வந்தது. 250 00:12:56,610 --> 00:12:58,570 “டோர்” என்பதை ஏன் வினோதமாக சொல்கிறாய்? 251 00:12:58,654 --> 00:13:01,573 அன்பே, அது ஐரோப்பாவின் மிகவும் புகழ்பெற்ற ஃபேஷன் நிறுவனம். 252 00:13:01,657 --> 00:13:03,742 நான் என்ன சொல்கிறேன்? இந்த உலகத்திலேயே! 253 00:13:03,825 --> 00:13:05,661 அடக் கடவுளே. அது அற்புதம்! 254 00:13:05,744 --> 00:13:09,790 எனக்கு அவங்க அப்ரெண்டிஸ் பதவி கொடுத்திருக்காங்க! பாரிஸில்! 255 00:13:10,624 --> 00:13:13,377 - என்னது? - ஆமா! எல்லாம் சீக்கிரமாக நடக்குது. 256 00:13:13,460 --> 00:13:17,130 ஐஃபில் டவரை பார்க்கும் வசதி கொண்ட ஒரு வீட்டை எனக்கு வாடகைக்குக் கொடுத்திருக்காங்க. 257 00:13:17,214 --> 00:13:19,424 ஆனால் அடுத்த வாரமே வேலையில் சேர நிர்பந்திக்குறாங்க! 258 00:13:19,508 --> 00:13:20,509 நீ என்ன நினைக்கிற? 259 00:13:21,301 --> 00:13:25,180 நீ பாரிஸுக்குப் போவதைப் பத்தி நான் என்ன நினைக்கிறேனா? 260 00:13:28,934 --> 00:13:30,310 ஜூலியா, நம் வாழ்க்கை இங்கேதான். 261 00:13:30,394 --> 00:13:33,689 தெரியும், செல்லம், ஆனால் இப்படிப்பட்ட விஷயங்கள், எப்போதும் நடப்பதில்லை. 262 00:13:34,481 --> 00:13:36,942 பாரு, ஆரம்பத்துல நீ வந்து என்னோடு இருக்கலாம். 263 00:13:37,526 --> 00:13:40,821 அல்லது பாரிஸில் ஒரு ஆடம்பர ஹோட்டலில் நீ வேலை தேடலாம். 264 00:13:40,904 --> 00:13:43,156 - ஊ லா லா! - “ஊ லா லா” வேண்டாம்! 265 00:13:43,240 --> 00:13:44,616 நமக்கென்று ஒரு திட்டம் இருந்தது. 266 00:13:44,700 --> 00:13:46,869 அது இங்கே அகபுல்கோவில்தான். 267 00:13:46,952 --> 00:13:49,872 சில சமயங்களில் திட்டங்கள் மாறும். 268 00:13:49,955 --> 00:13:52,666 “பெரிதாக கனவு காணு” என்று நீதானே எப்பவும் சொல்லுவ? 269 00:13:52,749 --> 00:13:55,085 ஆனால் நான் கஷ்டப்பட்டு உழைத்து உருவாக்கிய எல்லாமே இங்கதான் இருக்கு! 270 00:13:55,169 --> 00:13:58,714 ஒரு வெளிநாட்டு நகரத்திற்கு போய் திரும்பவும் முதல்ல இருந்து நான் தொடங்கணும்னு விரும்புறியா? 271 00:13:59,840 --> 00:14:01,175 நீ அவர்களிடம் “வேண்டாம்” என சொல்லணும். 272 00:14:01,258 --> 00:14:04,178 இது எனக்கான மிகப் பெரிய வாய்ப்பு! 273 00:14:04,887 --> 00:14:07,639 அதை நீ கருத்தில் கூட கொள்ளலை என்பது என்னால் நம்பவே முடியலை. 274 00:14:07,723 --> 00:14:09,224 நீ இவ்வளவு சுயநலமாக இருப்பதை என்னாலும் நம்ப முடியலை. 275 00:14:09,308 --> 00:14:10,475 என்னது? 276 00:14:10,559 --> 00:14:12,728 எனக்கும் புது வேலை கிடைத்தது, ஆனால் அதை மறுத்துவிட்டேன்! 277 00:14:12,811 --> 00:14:15,522 நம்மைப் பற்றி ஒரு கனவு கண்டிருக்கேன், ஜூலியா! 278 00:14:15,606 --> 00:14:17,274 ஒரு திட்டம்! 279 00:14:17,357 --> 00:14:19,026 திடீரென நீ அதையெல்லாம் தூக்கி எறியணும் என்கிறாய்! 280 00:14:19,109 --> 00:14:21,195 நான் எதையும் தூக்கி எறியலை. 281 00:14:22,154 --> 00:14:23,947 இது சரிவர நடக்க நாம முயற்சி செய்யலாம்! 282 00:14:25,657 --> 00:14:26,825 ஒருவேளை, உனக்கு சரிபட்டு வரலாம். 283 00:14:27,492 --> 00:14:28,660 ஆனால் எனக்கு கிடையாது. 284 00:14:31,205 --> 00:14:34,875 இப்போ நீ என்னிடம் இப்படி பேசுவதை என்னால் நம்பவே முடியலை, மேக்ஸிமோ. 285 00:14:41,381 --> 00:14:43,967 நான் நினைத்த ஆண் நீ இல்லை. 286 00:14:46,803 --> 00:14:49,348 அல்லது நான் என்னோடு இருக்க விரும்பும் ஆண். 287 00:14:49,431 --> 00:14:52,935 இல்லை. அந்த ஆணின் பெயர் ஃபிரான்சுவா. 288 00:14:53,018 --> 00:14:55,145 அவன் இப்போது சேம்ப்ஸ்-எலீஸீஸுடன் நத்தைகள் சாப்பிடுகிறான்! 289 00:14:55,229 --> 00:14:57,189 சேம்ப்ஸ்-எலீஸீஸ் என்பது ஒரு தெரு! 290 00:15:01,068 --> 00:15:02,152 ஒண்ணு சொல்லவா? 291 00:15:03,570 --> 00:15:05,614 எனக்கு இந்த முடிவை இவ்வளவு சுலபமாக்கியதற்கு நன்றி. 292 00:15:08,534 --> 00:15:10,661 உடனே என்னால் பாரீஸ் போக முடியாது. 293 00:15:24,967 --> 00:15:26,176 மெமோ, என்ன ஆச்சு? 294 00:15:26,260 --> 00:15:28,637 அந்தத் தருணத்தை என் மனதில் நினைத்துக்கொண்டே இருக்கிறேன். 295 00:15:29,221 --> 00:15:31,849 எனக்கு வேண்டியது எல்லாம் என் முன்னால் இருந்தது. 296 00:15:32,933 --> 00:15:35,143 எங்கள் எதிர்காலத்தை என் கண் முன்னால் காண முடிந்தது. 297 00:15:36,562 --> 00:15:42,276 ஒரு கனவுத் திருமணம், லாஸ் ப்ரிஸாஸில் மலைகளை நோக்கி ஒரு வீடு, மூன்று குழந்தைகள். 298 00:15:42,359 --> 00:15:46,071 எலியாநோரா, மார்த்தா, டியேகோ. 299 00:15:47,406 --> 00:15:49,575 திட்டம் அவ்வளவு கச்சிதமாக இருந்தது… 300 00:15:50,701 --> 00:15:51,743 ஐயோ, கடவுளே. 301 00:15:52,452 --> 00:15:53,745 அவ்வளவுதான். 302 00:15:53,829 --> 00:15:55,581 என்ன ஆச்சு? 303 00:15:55,664 --> 00:15:57,332 ஒரு முறையாவது புதிர் போடாமல் இருக்க மாட்டீங்களா? 304 00:15:57,416 --> 00:16:00,335 இங்கு என்னால் ரொம்ப நேரம் இருக்க முடியாது. திங்களன்று பள்ளிக்கு நான் திரும்பணும். 305 00:16:00,419 --> 00:16:01,545 பிறகு விளக்குகிறேன். 306 00:16:01,628 --> 00:16:04,423 போய் ஜூலியாவை கண்டுபிடிச்சு, எங்க இடத்தில் என்னை சந்திக்க வரச் சொல். 307 00:16:04,506 --> 00:16:05,966 குப்பை கொட்டும் இடத்தில் இல்லை. மற்றொரு இடம். 308 00:16:06,049 --> 00:16:07,926 அல்லது நீங்களே அவங்களை கூட்டிட்டு போகலாம். 309 00:16:08,010 --> 00:16:10,637 உன்னால் முடியும், ஹியூகோ. நான் உன்னை நம்புகிறேன். 310 00:16:12,973 --> 00:16:17,644 ஜுவனிதா எஸ்கூப்ஸ்! எங்கள் கடைத் திறப்புக்கு உதவியதற்கு நன்றி. 311 00:16:17,728 --> 00:16:20,147 இந்த ஹோட்டலுக்கு உங்கள் அப்பா பல ஆண்டுகள் சந்தோஷத்தை கொண்டு வந்திருக்கிறார். 312 00:16:21,732 --> 00:16:23,317 இப்போது, எனக்கு வேறு என்ன வேணும்… 313 00:16:25,319 --> 00:16:26,820 ஸ்ப்ரிங்கிள்ஸுடன் ஒரு சாக்லேட் சிப்ஸ் கொடுங்க. 314 00:16:26,904 --> 00:16:28,488 இதோ தரேன்! 315 00:16:28,572 --> 00:16:29,740 அது. 316 00:16:56,099 --> 00:16:58,310 ஜூலியா, ஒரு நொடி பேசலாமா? 317 00:16:58,393 --> 00:16:59,394 பழைய காலம் ஐஸ் கிரீம் 318 00:16:59,478 --> 00:17:00,938 ஆம், பேசலாமே. 319 00:17:01,021 --> 00:17:03,482 என் மாமாவை உங்கள் வழக்கமான இடத்தில் சந்திக்க முடியுமா? 320 00:17:04,273 --> 00:17:05,483 குப்பை கொட்டும் இடத்திலா? 321 00:17:05,567 --> 00:17:06,652 மற்றொரு இடம். 322 00:17:06,734 --> 00:17:08,069 உண்மையாகவா? இப்போதா? 323 00:17:08,153 --> 00:17:09,905 அவர் என்னை ஏன் அங்கு சந்திக்க விரும்புகிறார்? 324 00:17:10,571 --> 00:17:11,990 உண்மையில், எனக்கு உறுதியாகத் தெரியாது. 325 00:17:12,074 --> 00:17:15,618 உங்களுக்குள் எப்படி சண்டை வந்தது என்று என்னிடம் ஒரு கதை சொல்லிக்கொண்டிருந்தார், 326 00:17:15,702 --> 00:17:18,163 - 1986-ல். - ஓ, ஆமாம். அந்த நாள். 327 00:17:18,247 --> 00:17:21,208 ஆம். உன் மாமா எவ்வளவு பிடிவாதமாக இருந்தார் என்பதை என்னால் மறக்கவே முடியலை. 328 00:17:21,290 --> 00:17:24,627 வந்து, அவர் புரொப்போஸ் செய்யும் வேளையில் தயாரில்லாமல் திடீரென பிடிபட்டார் என தோணுது. 329 00:17:25,878 --> 00:17:27,089 பொறு, என்னது? 330 00:17:28,298 --> 00:17:29,675 ஓ, உங்களுக்குத் தெரியாதா? 331 00:17:31,260 --> 00:17:32,427 அவர் புரொப்போஸ் செய்யவிருந்தாரா? 332 00:17:34,638 --> 00:17:36,807 சரி. இங்கே பாருங்க, 333 00:17:36,890 --> 00:17:40,269 - என் மாமா மிகச்சிறந்தவர் கிடையாதுதான், ஜூலியா. - ஆம், சரிதான்… 334 00:17:40,352 --> 00:17:44,314 ஆனால் உங்களைப் பற்றித்தான் அவர் என்னிடம் அதிக நேரம் பேசுவார். 335 00:17:45,315 --> 00:17:47,067 நான் அதை உணர்ந்திருக்கேன், ஜூலியா. 336 00:17:47,693 --> 00:17:50,654 உங்கள் மீது அவருக்கு இருக்கும் அன்பு, அது உண்மையானது. 337 00:17:51,697 --> 00:17:54,575 அதைப் பற்றி யோசியுங்கள், சரியா? நீங்கள் வழக்கமாக சந்திக்கும் இடத்திற்கு அவர் வருவார். 338 00:17:56,660 --> 00:17:58,328 இதோ உன் ஐஸ் கிரீம்! 339 00:17:58,829 --> 00:18:01,665 ஓ, ஸ்ப்ரிங்கிள்ஸை மறந்துவிட்டேன். 340 00:18:03,000 --> 00:18:04,042 சரி. 341 00:18:04,960 --> 00:18:06,044 மினுமினுப்புகள். 342 00:18:13,844 --> 00:18:17,055 மாமா, உங்கள் புரொப்போசலைப் பற்றி நீங்க ஏன் ஜூலியாவிடம் சொல்லவே இல்ல? 343 00:18:18,223 --> 00:18:19,683 நீ அவளிடம் சொல்லிட்டியா? 344 00:18:19,766 --> 00:18:21,727 அவளுக்குத் தெரியக் கூடாது என நினைத்தேன். 345 00:18:22,519 --> 00:18:25,355 குறிப்பாக அன்று நான் அவ்வளவு மோசமாக நடந்துகொண்டதற்குப் பிறகு. 346 00:18:28,108 --> 00:18:29,276 அவள் வருவாள் என நினைக்கிறாயா? 347 00:18:29,359 --> 00:18:31,570 ஜுவனிதா எஸ்கூப்ஸ் அவங்களுக்கு ஐஸ் கிரீம் செய்து கொடுத்தாங்க, 348 00:18:31,653 --> 00:18:34,239 எனவே இன்னும் ஓரிரண்டு மணிநேரம் ஆகும். 349 00:18:35,365 --> 00:18:38,702 1986-ல் நடந்த மீதி கதையைப் பற்றி பேசி நாம் நம் கவனத்தை சிதறடிக்கலாம். 350 00:18:39,286 --> 00:18:40,913 அது என்னைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தும். 351 00:18:41,413 --> 00:18:43,665 விளையாடுறீங்களா? இங்கும் நான் பதட்டமாக இருக்கேன். 352 00:18:44,249 --> 00:18:45,417 இங்கிருந்து என்னைக் கொண்டு போங்கள். 353 00:18:49,463 --> 00:18:50,839 என்னை மன்னிச்சிடு, குளோரியா. 354 00:18:50,923 --> 00:18:52,716 நான் பொய் சொல்வதில் படுமோசம், சரியா? 355 00:18:52,799 --> 00:18:54,426 அதனாலதான் உலக அழகி விஷயத்துல சறுக்கிட்டேன். 356 00:18:54,510 --> 00:18:56,553 நான் ஏதும் சொல்ல விரும்பலை. நீ என்னை நம்பணும். 357 00:18:56,637 --> 00:19:00,057 சரி, அப்படி இருக்கலாம், ஆனால் நீ அப்படித்தான் செய்தாய். அது என்னை ரொம்ப பாதித்தது. 358 00:19:00,140 --> 00:19:02,976 இனியும் உன்னை நம்ப முடியுமான்னு எனக்குத் தெரியலை. 359 00:19:03,060 --> 00:19:05,229 புரியுது. நானும் என்னை நம்ப மாட்டேன். 360 00:19:06,063 --> 00:19:10,776 உண்மையாகச் சொல்லணும்னா… உண்மையில், நான் என்ன செய்யறேன்னே எனக்குத் தெரியலை. 361 00:19:10,859 --> 00:19:12,110 திகைப்பு. 362 00:19:12,194 --> 00:19:15,072 சீரியஸா சொல்றேன். டேட்டிங் விஷயங்களில், வந்து, 363 00:19:15,155 --> 00:19:16,532 நீ… 364 00:19:17,699 --> 00:19:18,700 நான் தொலைந்துவிடுகிறேன். 365 00:19:20,452 --> 00:19:22,079 வந்து, அப்பா இல்லாமல் வளர்ந்து, 366 00:19:22,955 --> 00:19:25,916 வந்து, ஒரு உண்மையான உறவு எப்படி இருக்கும்னே… எனக்குத் தெரியாது. 367 00:19:25,999 --> 00:19:27,626 வந்து, என் அம்மா தனியாக என்னை நன்றாகப் பார்த்துக்கொண்டாங்க, 368 00:19:27,709 --> 00:19:31,004 ஆனால், காதல் விஷயத்தில், நான்… 369 00:19:31,797 --> 00:19:35,551 நான் எதுவும் புரியாத ஒரு குழந்தை போலத்தான் இன்னும் இருக்கேன். 370 00:19:38,637 --> 00:19:40,222 உனக்காக நான் வளர விரும்புறேன், குளோரியா. 371 00:19:43,433 --> 00:19:45,018 இருந்தும் ரொம்ப இல்லை. 372 00:19:46,144 --> 00:19:48,689 எனக்கு என்ன கவலைன்னா, நாம திருட்டுத்தனமான இவ்வளவு சுத்தியும், 373 00:19:48,772 --> 00:19:50,858 ஒரு உண்மையான முதல் டேட்டிங்னு ஒண்ணு நமக்கு நிகழவே இல்ல. 374 00:19:50,941 --> 00:19:55,320 திரும்பத் தொடங்கினால் எப்படி இருக்கும்? இப்போதே? 375 00:19:56,780 --> 00:19:59,366 இந்த இனிய உணவை வீணாக்குவதும் அவமானம்தான். 376 00:20:03,328 --> 00:20:04,663 அவர்கள் சீக்கிரம் வளர்ந்துவிடுகிறார்கள். 377 00:20:06,415 --> 00:20:08,750 இப்போது, அவனுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியும் உண்டு. 378 00:20:09,626 --> 00:20:12,713 உன்னில், என் அரசே. 379 00:20:19,887 --> 00:20:21,013 ஹலோ. 380 00:20:21,096 --> 00:20:25,017 கடைசி நேரத்தில் கொஞ்சம் ஷாப்பிங் செஞ்சோம், என்ன வாங்கி வந்திருக்கோம்னு பாருங்க! 381 00:20:25,851 --> 00:20:26,852 பாருங்க. 382 00:20:27,603 --> 00:20:28,979 குளியலறையில் பொருட்கள் வைக்கும் 383 00:20:29,897 --> 00:20:31,231 ஒரு கூடை வாங்கியிருக்கேன். 384 00:20:31,315 --> 00:20:33,233 கல்லூரியில், அவள் விடுதிக்கு! 385 00:20:33,317 --> 00:20:36,403 நமக்கும் இரண்டு வாங்கி வந்தேன். 386 00:20:36,486 --> 00:20:38,989 என் ஷாம்பூவையும் உங்க ஷாம்பூவையும் நீங்க குழப்பிக்கக் கூடாது என்பதற்கு. 387 00:20:40,032 --> 00:20:41,033 நன்றி. 388 00:20:43,243 --> 00:20:45,954 நான் அனைத்தையும் அடுக்கி வைக்க வேண்டும். 389 00:20:46,038 --> 00:20:47,039 நன்றி. 390 00:20:48,040 --> 00:20:49,750 என்ன ஆச்சு? 391 00:20:50,334 --> 00:20:53,086 நார்டிக்டிராக் நடைபழக்கும் இயந்திரத்தை விட்டுவிட விரும்புறீங்கன்னு தெரியும், 392 00:20:53,170 --> 00:20:57,132 ஆனா, நீங்க ஆரோக்கியமா இருக்க நான் முயற்சி செய்யறேன். 393 00:20:57,216 --> 00:20:58,675 தெரியும். 394 00:20:58,759 --> 00:21:01,386 சாராவின் அறை அப்படி இருப்பதைப் பார்க்கக் கஷ்டமா இருக்கு. 395 00:21:03,222 --> 00:21:05,265 அவளுக்கு விடைகொடுக்க நான் இன்னும் தயாராகலை. 396 00:21:07,309 --> 00:21:09,811 ஓ, என் அன்பே… 397 00:21:11,563 --> 00:21:13,565 நானும்தான் தயாராக இல்லை. 398 00:21:14,066 --> 00:21:18,987 அவள் அறையை உடற்பயிற்சி அறையாக மாற்றுவது என் கவனதைத் திசைதிருப்ப ஒரு வழி. 399 00:21:19,571 --> 00:21:20,572 புரியுது. 400 00:21:21,782 --> 00:21:25,160 என் குழந்தைகளை உங்க குழந்தைகளைப் போல நீங்க கவனித்துக்கொள்வதில் 401 00:21:25,244 --> 00:21:26,870 எனக்கு ரொம்ப சந்தோஷம். 402 00:21:30,040 --> 00:21:31,041 வந்து… 403 00:21:31,792 --> 00:21:33,627 இதில் இருக்கும் நல்ல விஷயம், 404 00:21:33,710 --> 00:21:36,380 நமக்கென்று நிறைய நேரம் இருக்கும். 405 00:21:36,463 --> 00:21:38,173 நிச்சயம். 406 00:21:38,257 --> 00:21:40,300 இருவரும் பேசுவதை நிறுத்துறீங்களா? 407 00:21:41,051 --> 00:21:43,011 நான் ஏஎல்எஃப் பார்க்க நினைக்கிறேன்! 408 00:21:55,649 --> 00:21:57,651 ஜூலியாவுடன் சண்டை போட்ட பின், 409 00:21:57,734 --> 00:21:59,611 அவள் வீட்டிற்கு வந்து, பொருட்களை பேக் செய்தாள். 410 00:22:00,404 --> 00:22:02,406 நான் அங்கு செல்லும் முன்பே, அவள் போய்விட்டாள். 411 00:22:03,156 --> 00:22:07,327 அன்று காலையில் பாரிஸுக்கு விமானம் ஏறும் முன், லொரெனா வீட்டில் தங்க முடிவு செய்தாள். 412 00:22:09,746 --> 00:22:10,873 ஆட்டம் முடிந்தது. 413 00:22:12,332 --> 00:22:17,462 முரண் என்னவென்றால், இன்னொரு உணர்வுப்பூர்வமான பிரிவுக்கு நான் தயாரானேன். 414 00:22:22,384 --> 00:22:24,011 ஏன் கவலையாக இருக்க, மேக்ஸிமோ? 415 00:22:24,094 --> 00:22:27,181 உன் மெனுடோ டேப்ஸை விமான பயணத்துக்காக எடுத்துக்கிட்டேன் என்று கோபமா? 416 00:22:28,056 --> 00:22:29,516 இல்ல, அது பரவாயில்லை… 417 00:22:30,642 --> 00:22:31,727 பொறு, என்ன? 418 00:22:32,728 --> 00:22:34,396 உனக்கு மெனுடோ பிடிக்காதுன்னு நினைத்தேன். 419 00:22:35,105 --> 00:22:36,356 வந்து… 420 00:22:38,525 --> 00:22:40,569 நீ எவ்வளவு எரிச்சலூட்டுவாய்னு அவை எனக்கு நினைவூட்டும். 421 00:22:43,071 --> 00:22:45,282 சாராபெ, உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன். 422 00:22:45,365 --> 00:22:47,284 நீ நியூ யார்க்கில் பெரிய ஆளாக வருவாய். 423 00:22:49,536 --> 00:22:51,413 நீ என்னைவிட தைரியமானவள். 424 00:22:51,955 --> 00:22:53,707 ஏன்? பறப்பதற்காகவா? 425 00:22:53,790 --> 00:22:56,376 எனக்கு எந்தப் பிரச்சினையும் வராது. இலவச வேர்க்கடலை கொடுப்பாங்கன்னு சொன்னாங்க. 426 00:22:57,169 --> 00:23:00,547 இல்ல. சாராவை வெளிநாட்டிற்கு அனுப்பிப் படிக்க வைப்பதற்கு. 427 00:23:00,631 --> 00:23:03,759 எஸ்டெபனை மிக இறுக்கமாகப் பிடித்து வைத்துவிட்டேன். 428 00:23:03,842 --> 00:23:07,221 நீ அந்தத் தவறைச் செய்யலை. 429 00:23:08,722 --> 00:23:10,140 நன்றி. 430 00:23:10,224 --> 00:23:11,892 ஆனால், இப்போது இந்த பேச்சு வந்ததால் சொல்கிறேன், 431 00:23:11,975 --> 00:23:14,686 விமானங்கள் கடவுளுக்குச் செய்யும் அவமரியாதை. 432 00:23:14,770 --> 00:23:16,897 அதனால்தான் அவை நொறுங்குகின்றன. 433 00:23:16,980 --> 00:23:21,276 நாம் சொர்க்கத்திற்கு அவருடைய விதிமுறைப்படி போகணும், நம்ம விதிமுறைப்படி இல்ல. 434 00:23:23,028 --> 00:23:25,989 - சரி, இதுதான் கடைசி. - ஹே. 435 00:23:27,115 --> 00:23:29,076 என்.ஒய்.யூ-விற்கு போக நீ தயார்! 436 00:23:30,077 --> 00:23:31,537 அமெரிக்காவில். 437 00:23:32,913 --> 00:23:34,623 இது விடைபெறுவது என நினைக்கிறேன்… 438 00:23:34,706 --> 00:23:35,707 எஸ்டெபன். 439 00:23:36,458 --> 00:23:37,835 - இது “விடைபெறுவது” கிடையாது. - அது உண்மைதான். 440 00:23:37,918 --> 00:23:42,256 விடைபெறுவதற்கு முடிவு உண்டு என்று பொதுவாக கருதப்படுகிறது, ஆனால் அது தர்கரீதியாக இயலாதது. 441 00:23:42,339 --> 00:23:44,591 ஒன்றின் முடிவு, மற்றொன்றின் ஆரம்பமாக இருக்கும். 442 00:23:44,675 --> 00:23:48,428 சில கலாச்சாரங்களில் விடைபெறுவதற்கும், வரவேற்பதற்கும் ஒரே வார்த்தை உண்டு. 443 00:23:48,512 --> 00:23:53,725 இறந்தபின் என்ன நடக்கும் என்று எதுவும் தெரியாத நமக்கு, அது… 444 00:23:59,356 --> 00:24:01,900 நீங்கள் மட்டும் இல்லையென்றால், நான் இந்த விமானத்தில் ஏறி இருக்கவே மாட்டேன். 445 00:24:06,280 --> 00:24:07,823 நன்றி, எஸ்டெபனேட்டர். 446 00:24:19,585 --> 00:24:20,586 எனக்கு அதை எடுத்து தர்றீங்களா? 447 00:24:20,669 --> 00:24:21,712 இந்தா, இந்தா, இந்தா. 448 00:24:23,046 --> 00:24:25,048 உனக்கு ஒன்றுமில்லையே? 449 00:24:25,591 --> 00:24:28,719 அம்மாவின் பெரிய பயணத்திற்கு முன், அவங்களிடம் ஜூலியா பற்றிச் சொல்ல விரும்பலை. 450 00:24:28,802 --> 00:24:32,306 ஓ, ஆமா. நீங்க இருவரும் போவதைப் பார்க்க கொஞ்ச கஷ்டமாக இருக்கு. 451 00:24:35,893 --> 00:24:39,146 என்னிடம் சொல்ல இஷ்டம் இல்லன்னா பரவாயில்லை. 452 00:24:39,229 --> 00:24:44,151 ஆனா, எது எப்படி இருந்தாலும், எப்போதும் நீ ஏதாவதொரு வழியைக் கண்டுபிடிப்பாய். 453 00:24:46,486 --> 00:24:48,572 அதை மறந்துவிடாதே. எனக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும். 454 00:24:52,701 --> 00:24:58,707 இப்போது பாரிஸ் செல்லும் விமானம் 410, பயணிகள் ஏறத் தயாராக உள்ளது. 455 00:25:36,828 --> 00:25:38,705 எனக்கு வேண்டியதன் பின்னெல்லாம் 456 00:25:38,789 --> 00:25:40,207 நான் எப்போதும் சென்றிருந்தாலும், 457 00:25:41,250 --> 00:25:42,417 அந்தத் தருணத்தில், 458 00:25:43,126 --> 00:25:47,297 அவளுக்கு வேண்டியதன் பின்னால் அவள் செல்வதை என்னால் தடுக்க முடியவில்லை. 459 00:26:10,445 --> 00:26:12,239 ஹே, மக்களே. ஹே, மக்களே. 460 00:26:12,322 --> 00:26:15,826 சூப்பரா பாடுனீங்க, ஆனால் சோகம் கம்மியாக இருக்கும் பாடலைப் பாட முடியுமா? 461 00:26:15,909 --> 00:26:18,704 ஓ, ஏர் சப்ளையின் “ஆல் அவுட் ஆஃப் லவ்” பாடலாம். 462 00:26:19,288 --> 00:26:20,914 அல்லது ஜர்னியின் “செபரெட் வேஸ்.” 463 00:26:21,790 --> 00:26:22,791 யோசிச்சிட்டே இருங்க. 464 00:26:23,584 --> 00:26:24,585 இல்ல, தெரியும். 465 00:26:25,794 --> 00:26:27,838 திரு. வேரா. நீங்கள் இன்னும் இங்குதான் இருக்கிறீர்களா? 466 00:26:27,921 --> 00:26:29,673 மேக்ஸிமோ, உட்கார். 467 00:26:31,341 --> 00:26:33,635 வேரா குடும்பத்தினர் எப்போதும் பேரம் பேச மாட்டார்கள் என்று சொன்னேன், 468 00:26:33,719 --> 00:26:35,888 ஆனால், இந்த ஒருமுறை மட்டும் அதற்கு விதிவிலக்கு தரேன். 469 00:26:36,847 --> 00:26:43,270 30% சம்பளவுயர்வுக்கு லாஸ் கொலினாஸை விட்டுப் போவதைப் பற்றி யோசிப்பாயா? 470 00:26:45,022 --> 00:26:48,108 ஜூலியா போன பின்பு, நான் இழக்க எதுவும் இல்லை. 471 00:26:51,945 --> 00:26:54,031 புது ரிசார்ட்டில் 20% உரிமை கொடுத்தால்… 472 00:26:55,365 --> 00:27:00,287 நான் அதைப் பற்றி யோசிக்கிறேன். 473 00:27:01,788 --> 00:27:03,373 உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது. 474 00:27:03,874 --> 00:27:05,375 மூன்று சதவீதம். 475 00:27:05,459 --> 00:27:07,127 ஐந்து சதவீதம். 476 00:27:08,879 --> 00:27:10,881 என் குழுவை நானே கொண்டு வருவேன். 477 00:27:17,012 --> 00:27:18,180 கவலைப்படாதீங்க, பாஸ். 478 00:27:18,263 --> 00:27:20,557 அவன் போய்விட்டால், நான் உங்கள் புது நிர்வாகத் தலைவராக இருப்பேன். 479 00:27:22,851 --> 00:27:23,852 சரி. 480 00:27:24,353 --> 00:27:26,605 உன் விண்ணப்பம் நிச்சயமாக வரவேற்கப்படும். 481 00:27:29,525 --> 00:27:31,860 அன்றுதான் எல்லாமே மாறியது, ஹியூகோ, 482 00:27:33,070 --> 00:27:35,072 ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியது. 483 00:27:37,407 --> 00:27:39,409 உங்க கதையைப் பகிர்ந்ததுக்கு நன்றி, மாமா. 484 00:27:40,160 --> 00:27:42,412 ஜூலியா விஷயத்திற்கு நான் வருந்துகிறேன், ஆனால் நாம்… 485 00:27:42,496 --> 00:27:43,622 இதோ வந்துவிட்டாள்! 486 00:27:43,705 --> 00:27:44,915 போய்விடு! போய்விடு! 487 00:27:44,998 --> 00:27:47,417 - போய்விடு, போய்விடு, போய்விடு, போய்விடு! - சரிதான், நல்லது. ஐயோ. 488 00:27:53,382 --> 00:27:54,508 நீ வந்துட்ட. 489 00:27:54,591 --> 00:27:55,884 நான் வருவதாக இல்லை… 490 00:27:57,052 --> 00:27:59,012 ஹியூகோ உன் புரொப்போசலைப் பத்தி சொல்லும் வரை. 491 00:28:01,098 --> 00:28:04,017 நீ ஏன் என்னிடம் சொல்லவே இல்ல? 492 00:28:04,685 --> 00:28:07,145 ஏன்னா, அன்று எல்லாமே தவறாகப் போனது, ஜூலியா. 493 00:28:08,438 --> 00:28:11,316 நான் பல விஷயங்களைச் சொல்லியிருக்கலாமே என நினைத்தேன். 494 00:28:12,150 --> 00:28:13,235 பேசி முடித்திருக்கலாம். 495 00:28:14,194 --> 00:28:17,489 ஆனால் அப்போது, 496 00:28:17,573 --> 00:28:21,702 நான் என் சந்தோஷ உலகில் ரொம்பவே மூழ்கி இருந்தேன்… 497 00:28:25,789 --> 00:28:27,916 நீ இல்லாமல் நமக்கான திட்டங்கள் போட்டுக் கொண்டிருந்தேன். 498 00:28:28,542 --> 00:28:29,626 எப்போதும் போல. 499 00:28:30,502 --> 00:28:31,503 ஜூலியா. 500 00:28:32,963 --> 00:28:34,173 நான் சொல்வதைக் கேள். 501 00:28:35,090 --> 00:28:37,718 உனக்கென்று கனவுகள் இருந்தன, 502 00:28:39,261 --> 00:28:44,474 ஆனால், நான் கவனமாக வகுத்த திட்டங்களில் அவை பொருந்தவில்லை. 503 00:28:48,562 --> 00:28:50,439 அன்று நான்தான் ரொம்ப சுயநலமாக யோசித்தேன். 504 00:28:51,607 --> 00:28:52,608 நீ இல்லை. 505 00:28:53,483 --> 00:28:54,484 என்னை மன்னிச்சிடு. 506 00:29:01,491 --> 00:29:02,993 என்னிடமிருந்து உன்னை விலக்கிவிட்டேன், ஜூலியா. 507 00:29:04,286 --> 00:29:06,288 நீ பிரிந்து போனது சரிதான். 508 00:29:08,081 --> 00:29:09,416 ஆனால் உனக்குத் தெரிய வேண்டும்… 509 00:29:11,251 --> 00:29:13,795 “என் இதயம் முழுவதும் நீதான் இருக்க. 510 00:29:15,506 --> 00:29:19,593 அது உன்னுடையது; அது உன்னிடமே இருக்கும், 511 00:29:20,969 --> 00:29:24,056 இப்போதும், எப்போதும், 512 00:29:25,140 --> 00:29:26,683 விதி என் மீதி வாழ்க்கையை நாடுகடத்தியது…” 513 00:29:30,145 --> 00:29:31,146 ஜேன் அயர். 514 00:29:38,654 --> 00:29:41,323 உன்னால் இன்னும் அதிலிருந்து மேற்கோள் காட்ட முடிவது வியப்பாக இருக்கு. 515 00:29:41,406 --> 00:29:43,784 அல்லது கிட்டத்தட்ட மேற்கோள் காட்டுவது. 516 00:29:45,244 --> 00:29:47,663 அது “பிரசன்ட்” இல்லை, “பிரசன்ஸ்.” 517 00:29:49,164 --> 00:29:51,208 - பிரசன்ஸ். மிகச் சரி. - ஆம். 518 00:29:51,291 --> 00:29:52,876 நான் இன்னும் ஆங்கிலம் கத்துக்கிட்டேதான் இருக்கேன். 519 00:29:52,960 --> 00:29:54,253 சரிதான். 520 00:29:55,629 --> 00:29:56,630 ஜூலியா. 521 00:29:57,381 --> 00:29:59,091 நான் சொல்வதை தயவுசெய்து கேள். 522 00:30:01,009 --> 00:30:02,678 பொறு. பார். 523 00:30:04,012 --> 00:30:07,599 நான் புத்தம் புதிய, மிகவும் விளக்கமான திட்டம் ஒன்றை தீட்டி இருக்கேன். 524 00:30:07,683 --> 00:30:09,810 உனக்காக. எனக்காக. 525 00:30:10,435 --> 00:30:11,645 நம் எதிர்காலத்திற்காக. 526 00:30:11,728 --> 00:30:13,522 - சீரியஸாகவா? - ஆமாம். 527 00:30:14,314 --> 00:30:15,440 ரொம்பவே சீரியஸாக. 528 00:30:17,526 --> 00:30:18,527 இதுதான். 529 00:30:28,203 --> 00:30:29,288 இதில் எதுவுமே எழுதலையே. 530 00:30:29,371 --> 00:30:31,164 அதேதான். 531 00:30:32,416 --> 00:30:34,459 ஏன் தெரியுமா? 532 00:30:35,210 --> 00:30:36,378 ஏன்? 533 00:30:36,962 --> 00:30:37,963 திட்டமென்று எதுவுமே இல்லை. 534 00:30:41,341 --> 00:30:43,385 நீ சரியென்றால், 535 00:30:43,468 --> 00:30:45,220 நான் ஒரு திறந்த புத்தகமாக இருப்பேன். 536 00:30:45,804 --> 00:30:49,516 நாம் ஒன்றாகச் சேர்ந்து நம் கனவுகளைப் பின்தொடரலாம், அல்லது தனியாக! 537 00:30:49,600 --> 00:30:52,269 அல்லது கனவுகளே இல்லாமல் இருக்கலாம். 538 00:30:54,938 --> 00:30:59,443 அந்தக் கால மக்கள் போல, 539 00:31:01,361 --> 00:31:03,197 மேஜையில் அமர்ந்து, முறுக்கு சாப்பிடலாம்… 540 00:31:05,324 --> 00:31:06,783 இதெல்லாம் மிகவும் இனிமையாக இருக்கு. 541 00:31:07,826 --> 00:31:08,827 ஆனால்… 542 00:31:09,953 --> 00:31:12,206 நீ நாடகத்தனமாக பெரிதும் எதுவும் செய்யாதது, 543 00:31:12,289 --> 00:31:14,416 எனக்கு அதிர்ச்சியாக இருக்கு… 544 00:31:14,499 --> 00:31:15,667 இல்லை. 545 00:31:16,168 --> 00:31:18,462 இந்த முறை நாடகம் ஏதும் இல்லை. 546 00:31:18,545 --> 00:31:19,796 என் பாடங்கள் எனக்குப் புரிந்துவிட்டன. 547 00:31:21,215 --> 00:31:25,010 உனக்கு ஒரு வெள்ளைக் காகிதம்தான் கிடைக்கும்… 548 00:31:28,222 --> 00:31:31,975 நம் கதையை நாம் இணைந்து எழுதுவோம். 549 00:31:37,439 --> 00:31:41,860 ஓ, இல்லை. இது திறப்பு விழாவிற்காக. இல்லை, இல்லை. 550 00:31:41,944 --> 00:31:44,029 இசையை நிறுத்துங்கள்! 551 00:31:45,531 --> 00:31:48,200 இது பிரம்மாண்டமான விஷயம் இல்லை. 552 00:31:48,283 --> 00:31:51,912 அதுவும் இல்லை. 553 00:31:51,995 --> 00:31:54,164 திறப்பு விழாவுக்கு வைத்திருந்த ஆச்சரியம் அது! 554 00:32:10,430 --> 00:32:13,892 நான் எதிர்பார்த்து காத்திருந்த, உண்மையான கொண்டாட்டம் இதுதான். 555 00:32:16,061 --> 00:32:19,147 என் பழைய நண்பர்களுடனும், குடும்பத்துடனும் ஒரு சாதாரண உணவு. 556 00:32:22,401 --> 00:32:26,947 இங்கு இருப்பது எப்போதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், அமைதியையும் தந்திருக்கிறது. 557 00:32:28,740 --> 00:32:33,036 லாஸ் கொலினாஸை மீண்டும் உயிர்ப்பிக்க, நாம் செய்ததை நினைத்து பெருமைப்படுகிறேன். 558 00:32:34,371 --> 00:32:35,706 அதனால், சியர்ஸ். 559 00:32:35,789 --> 00:32:38,917 சியர்ஸ். 560 00:32:40,085 --> 00:32:44,590 ஆனால் இந்த இடத்தை எதிர்காலத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய நேரம் இது. 561 00:32:44,673 --> 00:32:49,928 புதிய நினைவுகளும், பேரப்பிள்ளைகளும் நிறைந்த ஒரு எதிர்காலமாக அது இருக்கும் என்று நம்புவோம். 562 00:32:50,721 --> 00:32:52,639 அது ஒரு குறிப்பு, பலோமா. 563 00:32:52,723 --> 00:32:53,765 ரொம்ப அவசரப்படாதீங்க, அப்பா. 564 00:32:53,849 --> 00:32:56,268 இனி என்னை நீங்கள் டோனா பலோமா என அழைக்கலாம். 565 00:32:57,519 --> 00:32:58,604 டோனா பலோமா. 566 00:32:58,687 --> 00:33:02,274 கேட்க மிகவும் நன்றாக உள்ளது. வலிமை கொண்ட பெண்களை எனக்குப் பிடிக்கும். 567 00:33:03,817 --> 00:33:04,818 ஹே, மேக்ஸிமோ. 568 00:33:04,902 --> 00:33:07,571 உன் பேச்சை ஆர்வமாகக் கேட்கும் பார்வையாளர்கள் இருக்கிறார்கள். எங்களுக்கு ஒரு கதை சொல். 569 00:33:07,654 --> 00:33:08,655 இல்லை, இல்லை, இல்லை. 570 00:33:10,240 --> 00:33:13,619 அந்த டென்னிஸ் விளையாட்டு வீரரோட விக் உருவப்பட்ட கதை போன்று. 571 00:33:13,702 --> 00:33:15,704 அல்லது அந்த பிணத்தை நீங்கள் ஒளித்து வைத்த கதை. 572 00:33:17,080 --> 00:33:19,249 அல்லது, நீ என்னிடம் கிட்டத்தட்ட புரொப்போஸ் செய்ய வந்து, 573 00:33:19,333 --> 00:33:21,335 அதை என் அருமை நண்பர்கள் என்னிடம் சொல்லாத கதை போன்று. 574 00:33:21,418 --> 00:33:23,462 சாகும் வரை வெளியே சொல்லக்கூடாது என எங்களிடம் சத்தியம் வாங்கிவிட்டான். 575 00:33:23,545 --> 00:33:25,672 மெமிட்டோ அல்லது லூபிட்டாவிடம் கூட நான் சொல்லவில்லை. 576 00:33:25,756 --> 00:33:26,757 ஆமாம், அப்பா. 577 00:33:29,551 --> 00:33:31,136 ஒண்ணு சொல்லவா, மெமோ… 578 00:33:31,678 --> 00:33:35,682 நான் வேறு யாருடைய கதையையாவது கேட்க விரும்புகிறேன். 579 00:33:35,766 --> 00:33:37,100 ஒரு மாற்றத்திற்காக. 580 00:35:40,057 --> 00:35:42,059 தமிழாக்கம் மேனகா மணிகண்டன்