1 00:00:13,514 --> 00:00:15,891 {\an8}செய்ன்ட் லூக்ஸ் பாய்ஸ் ஹோம் 2 00:00:32,991 --> 00:00:35,911 எவ்வளவு தடவை செய்வ? அதனுடன் விளையாடுவதை நிறுத்து. 3 00:00:36,411 --> 00:00:37,496 என்னை மன்னிச்சிடுங்க, சிஸ்டர். 4 00:00:41,875 --> 00:00:45,963 என்னிக்காவது ஒரு நாள், உன் துருதுருப்பே உன்னை ஆபத்துல தள்ளப் போகுது. 5 00:00:55,639 --> 00:00:58,642 "ஒரு வினாடியில நள்ளிரவில் இறப்பான். 6 00:00:59,810 --> 00:01:05,399 அவன் மனிதர்களின் நடத்தையை கவனிப்பான். அவர்களின் ஒவ்வொரு அசைவையும் பார்க்கிறான்." 7 00:01:07,442 --> 00:01:11,572 காலம் தவறுவது ஒரு குறை, கெல்வின் ஏவன்ஸ். 8 00:01:13,866 --> 00:01:16,201 இப்போ, நாம எங்கே நிறுத்தினோம்? 9 00:01:16,201 --> 00:01:17,744 "தீமை செய்பவர்களை, 10 00:01:17,744 --> 00:01:20,831 எந்த நிழலும், கரும் இருட்டாலும் மறைக்க முடியாது. 11 00:01:20,831 --> 00:01:21,915 பைபிள் ஸ்டடீஸ் 12 00:01:21,915 --> 00:01:23,917 "அவர் முன் தீர்ப்புக்கு வந்து நின்ற பிறகு..." 13 00:01:23,917 --> 00:01:24,835 த கெமிஸ்ட்ரி லீஃப்லெட் 14 00:01:24,835 --> 00:01:26,753 "...மனிதர்களை ஆராய்ச்சி செய்யும் அவசியமே இறைவனுக்கு இல்லை." 15 00:01:27,796 --> 00:01:29,423 தயவுசெய்து, கரும்பலகையைப் பார்க்கவும். 16 00:01:29,423 --> 00:01:33,969 "இறைவனே அனைவரையும் படைத்தவர்" என்று அதில் எழுதியுள்ளது. 17 00:01:34,553 --> 00:01:36,263 சிஸ்டர் பெத் ஆன், தடங்கலுக்கு மன்னிக்கணும். 18 00:01:37,097 --> 00:01:38,098 குழந்தைகளே. 19 00:01:38,098 --> 00:01:40,601 நாங்கள் இப்போதுதான் பிஷப்பை சந்திச்சோம். 20 00:01:40,601 --> 00:01:42,978 திரு. மற்றும் திருமதி. ஸ்மித் அவனை வீட்டிற்கு அழைத்துச் செல்லத் தயாராக உள்ளனர். 21 00:01:42,978 --> 00:01:43,937 ஜெரெமையா, 22 00:01:43,937 --> 00:01:47,816 சில விசேஷமானவர்கள், உன்னைப் பார்க்க மீண்டும் வந்துள்ளனர். 23 00:01:52,487 --> 00:01:53,530 அவர்களை சந்திக்க வா. 24 00:01:53,530 --> 00:01:56,491 ஜெரெமையா. ஹை. வெளியே நடக்கலாம் வா. 25 00:01:56,491 --> 00:01:57,576 - நன்றி. - இறை அருள். 26 00:02:00,245 --> 00:02:01,830 உங்கள் கட்டுரைகளை பார்ப்போம். 27 00:02:08,628 --> 00:02:11,840 "இறைவனே அனைவரையும் படைத்தவர்." 28 00:03:11,316 --> 00:03:13,652 போன்னி கார்மஸின் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது 29 00:03:27,583 --> 00:03:28,625 பில்லர்ஸ் ஆஃப் ஹோப் பிரார்த்தனை மெழுகுவர்த்திகள் 30 00:03:28,625 --> 00:03:30,043 சரிதான், பசங்களே. மேலே ஏத்துங்க. 31 00:03:34,965 --> 00:03:36,383 அடுத்த வாரத்துக்கும் அதே ஆர்டரா? 32 00:03:36,383 --> 00:03:38,886 உங்களால் இரண்டு மடங்குக் கொடுக்க முடிந்தால், நான் உங்களுக்கு நல்ல லாபம் தருவேன். 33 00:03:38,886 --> 00:03:39,928 மிக்க நன்றி. 34 00:03:40,846 --> 00:03:43,724 ஜாக்கிரதை. சாராயத்தை சிந்தாதீங்க. பிஷப் நம்மை தண்டிப்பார். 35 00:03:45,517 --> 00:03:47,477 - ஹே, காலி இருந்தா, தா. - சரி. 36 00:03:48,395 --> 00:03:49,396 இதை வச்சு வடிகட்டு. 37 00:03:50,272 --> 00:03:51,732 நிரம்பிய பாட்டில்களை அங்கே வை. 38 00:03:54,693 --> 00:03:57,196 ஓ, கெல்வின். நீ இங்கே இருக்கியா. 39 00:03:57,696 --> 00:04:00,532 நீ இங்கே செய்யற வேலையைப் பார்த்து எல்லோரும் ரொம்ப ஆச்சரியப்படறாங்க. 40 00:04:01,283 --> 00:04:03,327 இப்போ நம்ம உற்பத்தியை அதிகரிக்கும் நேரம் வந்துடுச்சுன்னு நினைக்கிறேன். 41 00:04:03,327 --> 00:04:04,494 அது வெப்பத்தை காட்டும் கேஜ்-ஆ? 42 00:04:04,494 --> 00:04:05,829 ஆம், நீ சொன்னதுதான். 43 00:04:06,496 --> 00:04:07,497 ரொம்ப நல்லது. 44 00:04:08,415 --> 00:04:10,125 இப்போ, உனக்கு வேற என்ன தேவை? 45 00:04:13,545 --> 00:04:15,255 அதை அங்கே வை. ஜாக்கிரதையா இரு. 46 00:04:17,089 --> 00:04:18,634 உன் கையில அதை வச்சுக்காதே. 47 00:04:44,910 --> 00:04:46,578 அதை அந்த இரண்டாவது அடுப்புல வை. 48 00:04:53,836 --> 00:04:56,463 - நமக்கு இடம் பத்தல. - ஆம், நமக்கு இன்னும் கிரேட்டுகள் தேவை. 49 00:05:02,511 --> 00:05:04,930 - அடக் கடவுளே, அது ஒரு லீமோ! - கெட்ட வார்த்தை பேசாதே. 50 00:05:08,350 --> 00:05:09,476 அது ஒரு கேடிலாக்! 51 00:05:10,269 --> 00:05:13,605 நிச்சயமா அவர் ஒரு பேஸ்பால் விளையாட்டு வீரர் இல்ல திரைப்பட நடிகரா இருக்கணும். 52 00:05:30,706 --> 00:05:31,999 அவர் எதுக்காக இங்கே வந்திருக்கார்னு நினைக்கிற? 53 00:05:32,583 --> 00:05:35,127 உன்னை ஏமாத்திக்காதே. அவர் என்னைக் கொண்டு போகத்தான் வந்திருக்கார். 54 00:05:35,127 --> 00:05:36,461 கனவு காணாதே. 55 00:06:16,084 --> 00:06:17,085 கெல்வின். 56 00:06:21,507 --> 00:06:25,594 கெல்வின், உன் எதிர்காலத்தைப் பத்தி கொஞ்சம் பேசணும். 57 00:06:25,594 --> 00:06:28,847 நீ எனக்கு ரொம்ப அத்தியாவசியமாயிட்ட, அதுக்காக நான் உனக்குப் பரிசு கொடுக்கணும். 58 00:06:29,389 --> 00:06:32,851 அதனாலதான் உனக்கு தினமும் பணியிலிருந்து விலக்குக் கொடுத்திருக்கிறேன். 59 00:06:35,896 --> 00:06:36,897 ஏதாவது நடந்துடுச்சா? 60 00:06:40,025 --> 00:06:41,777 இன்னிக்கு வந்த அந்த மனிதர் யார்? 61 00:06:42,861 --> 00:06:47,115 அவர் எனக்காகத்தான் இங்கே வந்தார்னு எனக்குத் தோணுது. 62 00:06:48,992 --> 00:06:51,745 அவர் உன்னாலதான் இங்கே வந்தார். 63 00:06:51,745 --> 00:06:55,374 தெரியும். அவர்தான் என் தந்தை, இல்ல? 64 00:06:55,374 --> 00:06:56,458 கெல்வின், என்னை மன்னிச்சிடு. 65 00:06:58,168 --> 00:07:01,129 உன்னைப் பத்தி எல்லாத்தையும் சொன்னேன், அவரும் உன்னைப் பார்த்தார். 66 00:07:03,257 --> 00:07:04,466 ஆனால் அவர் உன்னை எடுத்துக்க விரும்பல. 67 00:07:06,844 --> 00:07:08,011 என்னை மன்னிச்சிடு, கெல்வின். 68 00:07:09,721 --> 00:07:12,558 ஆனால் நான் அவருடன் பேசிப் பார்க்கிறேனே. 69 00:07:12,558 --> 00:07:13,725 - அப்போ அவருக்குப் புரியும்... - வேண்டாம். 70 00:07:14,643 --> 00:07:17,354 பாரு, அதுபோன்ற வெறுக்கத்தக்க, சுயநலக்காரங்க கிட்ட உன்னை அனுப்புறதுக்கு 71 00:07:18,021 --> 00:07:23,110 நான் உன் மேல ரொம்ப அக்கறையா இருக்கேன். 72 00:07:25,028 --> 00:07:28,740 அவங்களுடைய இயலாமைக்காக நீ கஷ்டப்படுவதே ரொம்ப அதிகம். 73 00:07:29,700 --> 00:07:30,826 நீ எவ்வளவு நல்லவனா இருந்தாலும், 74 00:07:30,826 --> 00:07:33,912 எவ்வளவு கஷ்டப்பட்டு முயற்சி செய்தாலும், நீ அந்தச் சுமையை சுமந்தே ஆகணும். 75 00:07:48,177 --> 00:07:49,845 {\an8}இயல்பாக நாகரீகமா இருக்க முயற்சி செய்யுங்க. 76 00:07:49,845 --> 00:07:51,597 இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்? 77 00:07:51,597 --> 00:07:53,140 லேப் முழுவதையும் காட்டுவது போல ஒண்ணு எடுத்தால் நல்லாயிருக்குமா? 78 00:07:53,140 --> 00:07:55,767 அந்த திமிர் பிடிச்ச ஜேபிஎல்காரங்களுக்கு எதிரா 79 00:07:55,767 --> 00:07:58,312 இன்னொரு டென்னிஸ் விருதை வாங்கிக் கொடுக்க நீ கவலைப்படற. 80 00:07:59,021 --> 00:08:01,190 - டாக்டர் ஏவன்ஸ் அவருடைய வெற்றியை அனுபவிக்கட்டும். - நிச்சயமாக, சார். 81 00:08:01,190 --> 00:08:03,942 அந்த எலெக்ட்ரோஃபோரீசிஸ் கேபிள்கள் எல்லாம் தலைகீழா இருக்கு. 82 00:08:03,942 --> 00:08:05,360 இல்லை. நான் அப்படி நினைக்கல... 83 00:08:05,360 --> 00:08:07,821 டாக்டர் ஏவன்ஸ், கொஞ்சம் இடது பக்கமா நகருங்க. நிழல் அடிக்குது. 84 00:08:07,821 --> 00:08:09,198 நான் அதை சரிபார்த்தேன்னு நிச்சயமா தெரியும். 85 00:08:09,198 --> 00:08:10,282 அடச் சே! 86 00:08:12,910 --> 00:08:16,121 இந்த சாம்பிள்கள் எல்லாம் பயனற்றவை. இப்படி எல்லாம் வேலை செய்யக்கூடாது. 87 00:08:16,121 --> 00:08:19,833 இங்கே ரொம்ப அதிகம் பேரும், அதிகமான சத்தமும், அதிகமான திசைத்திருப்பல்களும் இருக்கு. 88 00:08:19,833 --> 00:08:22,044 - டாக்டர் ஏவன்ஸ், உறுதியா சொல்றேன்... - நீங்க சொல்வது முற்றிலும் சரி. 89 00:08:22,878 --> 00:08:23,879 உங்களுக்கு என்ன வேண்டும், சொல்லுங்க. 90 00:08:23,879 --> 00:08:26,256 எனக்குன்னு தனி இடம் வேண்டும். கெமிஸ்டுகள் வேண்டாம், லேப் டெக்குகளும் வேண்டாம். 91 00:08:26,256 --> 00:08:30,010 எனக்கு இந்த கவனிப்பு எல்லாம் வேண்டாம். எனக்கு அமைதி மட்டும்தான் வேண்டும். 92 00:08:30,010 --> 00:08:32,763 நீங்க பாஸ்டனிலிருந்து திரும்பி வருவதுக்குள்ள, எல்லாம் சரியாகும். 93 00:08:33,388 --> 00:08:34,640 ராபர்ட், நீ அதை கவனிச்சுக்கணும். 94 00:08:34,640 --> 00:08:35,682 சரி, சார். 95 00:08:36,183 --> 00:08:39,269 ஹேஸ்டிங்க்ஸுக்குப் பெருமை சேர்க்கணும். பிறகு உடனே வந்துடு. 96 00:08:39,269 --> 00:08:42,438 நாம அவங்களுக்கு ஏதாவது எழுத விஷயம் கொடுக்குறவரைதான் புகழ் நிலைக்கும். 97 00:08:46,693 --> 00:08:49,863 எனவே, நீங்களே பார்க்குறீங்க, நம்ம உலகத்துல வாழுற எல்லாமே, 98 00:08:49,863 --> 00:08:54,451 புற்பூண்டிலிருந்து ஹார்வர்டு மாணவர்கள்வரை, 99 00:08:54,952 --> 00:08:59,331 எல்லாவற்றுக்கும் தேவையான புரோட்டீன்கள் அதே 20 செட் அமினோ ஆசிடிலிருந்துதான் வருது. 100 00:09:00,415 --> 00:09:04,294 {\an8}ஆர்என்ஏ மற்றும் டிஎன்ஏ வெறும் நாலு நியூக்ளியோடைடுகளால் மட்டும் ஆகியிருக்கலாம், 101 00:09:04,294 --> 00:09:11,218 குறிப்பில்லா, அளவில்லா சேர்க்கையாலதான், உயிர் உருவாகிறது, திடத்தன்மையாலோ, 102 00:09:11,218 --> 00:09:16,348 ஆற்றலோ உள்ள அமினோ செலெக்ஷனாலோ இல்லை, அதன் குழப்பமான செயல்முறை இதைத்தான் காட்டுது. 103 00:09:21,436 --> 00:09:22,437 மிக்க நன்றி. 104 00:09:28,861 --> 00:09:29,862 மிக்க நன்றி. 105 00:09:30,445 --> 00:09:31,446 நன்றி. 106 00:09:54,052 --> 00:09:57,097 அன்புள்ள டாக்டர் ஏவன்ஸ், எனக்கு கெமிஸ்ட்ரியைப் பத்தி எதுவும் தெரியாது. 107 00:09:57,097 --> 00:10:00,392 {\an8}இருந்தாலும், உங்கள் உரையைக் கேட்ட பிறகு, உங்களுக்கு நான் எழுத உறுதி கொண்டேன். 108 00:10:00,392 --> 00:10:01,393 {\an8}கர்டிஸ் வேக்லி டாக்டர் கெல்வின் ஏவன்ஸ் 109 00:10:01,393 --> 00:10:05,272 {\an8}உங்க ஆராய்ச்சி என்னை வியக்க வைக்கிறது. சொல்லப் போனால் ஆச்சரியப்படுகிறேன். 110 00:10:06,023 --> 00:10:08,942 ஆனால் உங்கள் ஆராய்ச்சி, இறையருளின் சில மர்மங்களை கணக்கில் 111 00:10:08,942 --> 00:10:10,027 கொள்ளவில்லை என நினைக்கிறேன். 112 00:10:13,030 --> 00:10:16,533 கடவுள் என்பது தான்தோன்றியாக ஏன் இருக்கக் கூடாது? 113 00:10:16,533 --> 00:10:20,412 நியூக்ளியோடைடுகளுக்கும் ஆரம்ப நிலை உயிர்-வடிவங்களுக்கும் உள்ள, அறியப்படாத தொடர்பை 114 00:10:20,412 --> 00:10:24,625 அறிவியலால் மட்டுமே விளக்க முடியாத விஷயமாக ஏன் இருக்கக் கூடாது? 115 00:10:25,209 --> 00:10:28,545 நானும் உங்களை போலவே சாதாரணமாக நம்பப்படும் விஷயங்களை பற்றி கேள்வி கேட்பவன்தான். 116 00:10:28,545 --> 00:10:30,547 மரியாதையுடன், கர்டிஸ் வேக்லி. 117 00:10:30,547 --> 00:10:32,925 அதை அந்த மூலையில் உள்ள மேஜை மீது வைக்கலாம். நன்றி. 118 00:10:42,601 --> 00:10:45,229 அன்புள்ள திரு. வேக்லி, ரெவரெண்ட் வேக்லியா? 119 00:10:45,229 --> 00:10:46,146 ஹார்வர்டு டிவினிட்டி ஸ்கூல் 120 00:10:46,146 --> 00:10:48,273 அந்தப் பட்டம் எப்போது வழங்கப்படுகிறது என்று எனக்குச் சரியாக விளங்கவில்லை. 121 00:10:48,273 --> 00:10:51,318 நான் கடவுள் இல்லை என திடமாக நம்புபவன் என்று சொல்லத் தேவை இல்லை என நினைக்கிறேன். 122 00:10:52,027 --> 00:10:56,156 ஆனால் சொந்த விருப்புகளை கடந்து பார்த்தாலும், ஒரு நேர்மையற்ற அறிவாளி மட்டும்தான் 123 00:10:56,156 --> 00:10:59,868 மெட்டாஃபேஸில் உள்ள ஒரு குரோமோசோம், பிரிவதைப் பார்த்துவிட்டு 124 00:10:59,868 --> 00:11:02,496 எங்கோ வானத்தில் உட்கார்ந்துகொண்டு ஒரு தாடி வைத்த மனிதர் அது அப்படித்தான் இருக்க வேண்டும் என 125 00:11:02,496 --> 00:11:04,373 உருவாக்கியுள்ளார், என்பதை நம்ப முடியும். 126 00:11:05,958 --> 00:11:08,085 ஆனால் பிளீஸ், நான் நம்புவது சரியில்லை என என்னை நீங்கள் நம்ப வையுங்கள். 127 00:11:08,085 --> 00:11:10,420 ஒரு நல்ல விவாதத்தை யாரும் வேண்டாம் என மறுக்கப் போவதில்லை. 128 00:11:11,004 --> 00:11:12,548 உங்கள், கெல்வின் ஏவன்ஸ். 129 00:11:15,467 --> 00:11:18,679 அன்புள்ள டாக்டர் ஏவன்ஸ், உங்கள் பதிலுக்கு நன்றி. 130 00:11:19,304 --> 00:11:22,015 மெட்டாஃபேஸில் உள்ள ஒரு குரோமோசோம் பிரிவதைப் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததில்லை, 131 00:11:22,015 --> 00:11:24,059 எனவே என் பாரபட்சத்தன்மையை நான் ஒத்துக்கொள்கிறேன். 132 00:11:26,812 --> 00:11:28,730 ஆனாலும், புரியாத மாயா சக்தியும், இயற்கையும் 133 00:11:28,730 --> 00:11:31,775 அடிப்படையில் எதிரான சக்திகள் இல்லை, என்றே நான் நம்புகிறேன். 134 00:11:32,651 --> 00:11:38,407 என்னுடைய பார்வையில், ஒரே விஷயத்தை, அறிவியல் எப்படி என்றும், மதம் ஏன் என்றும் விளக்குகிறது. 135 00:11:47,332 --> 00:11:48,959 இது பற்றி உங்களுடன் விவாதம் செய்வதைவிட, 136 00:11:48,959 --> 00:11:51,670 அறிவியலே எப்படி, ஏன் என்றும் விளக்குகிறது, என நிரூபித்த 137 00:11:51,670 --> 00:11:54,756 சார்ல்ஸ் டார்வினிடம் அதை விடுவதுதான் நல்லது என நினைத்தேன். 138 00:11:54,756 --> 00:11:55,841 த ஒரிஜின் ஆஃப் ஸ்பீஸிஸ் மற்றும் த டிசென்ட் ஆஃப் மேன் 139 00:11:59,887 --> 00:12:02,306 உங்களுக்கு அது கேட்குதா? அங்கு ஒலிப்பது சார்லி பார்க்கரா? 140 00:12:02,306 --> 00:12:06,393 ஆ, ஆம். என் பரம எதிரி. உன் வாழ்க்கையில் உள்ள மற்றொரு சார்லி. 141 00:12:06,393 --> 00:12:08,812 அட அன்பே. இது போட்டியில்ல. 142 00:12:10,856 --> 00:12:12,357 இந்த மக்களுக்கு ரசனை உள்ளது. 143 00:12:17,696 --> 00:12:19,114 அந்த இசையை மீறி எதுவும் கேட்காதோ. 144 00:12:27,873 --> 00:12:29,791 ஹேர், நாம திரும்பிப் போகலாம். 145 00:12:29,791 --> 00:12:30,876 உளறாதீங்க. 146 00:12:30,876 --> 00:12:32,336 இல்லை, இவர் ஒரு வெள்ளையர். 147 00:12:33,378 --> 00:12:35,631 நான் வெள்ளையன் தான். எப்படி உதவலாம்? 148 00:12:36,715 --> 00:12:38,425 ஷுகர் ஹில்லுக்கு வரவேற்கிறோம், அண்டை வீட்டவரே. 149 00:12:41,053 --> 00:12:42,054 நன்றி. 150 00:12:44,306 --> 00:12:45,307 உள்ளே வாங்க. 151 00:12:53,774 --> 00:12:55,817 - இதோ இந்தாங்க. - மிக்க நன்றி. 152 00:12:58,111 --> 00:12:59,112 எனவே... 153 00:13:02,115 --> 00:13:03,617 நான் இப்போ கேட்டது பார்க்கரா? 154 00:13:04,201 --> 00:13:07,329 ஓ, ஆமாம், நீங்க கண்டுபிடிச்சுட்டீங்களே. உண்மையில, அது இரண்டாம் பக்கம். 155 00:13:08,080 --> 00:13:12,459 டான் பையஸின் தனிப் பதிவு. இந்தாங்க. எடுத்துகிட்டு அதைக் கேட்டுப் பாருங்க. 156 00:13:13,544 --> 00:13:14,753 முடியாது. 157 00:13:14,753 --> 00:13:16,880 அவள் ஒன்றை நிச்சயமாக செய்யப் போகும் போதுதான் அப்படிச் சொல்வாள். 158 00:13:18,924 --> 00:13:23,887 நான் மூக்கை நுழைக்க விரும்பவில்லை, ஆனால், நீங்க இந்த வட்டாரத்துக்கு எப்படி வந்து சேர்ந்தீங்க? 159 00:13:24,638 --> 00:13:27,933 நான் ஓடும்போது ஒரு நாள் அந்த இடத்தைப் பார்த்தேன். 160 00:13:28,851 --> 00:13:29,935 எது போன்ற ஓட்டம்? 161 00:13:31,478 --> 00:13:36,024 சும்மா ஜாகிங் மாதிரி. அதாவது உடற் பயிற்சி. 162 00:13:38,068 --> 00:13:39,778 அது வெள்ளையினத்தவங்க இன்புறுவதா இருக்கும். 163 00:13:41,405 --> 00:13:44,867 நான் வேலை செய்யும் இடத்திலிருந்து 5.2 மைல்கள் கணக்கில் தான் இருக்கிறோம், எனவே... 164 00:13:44,867 --> 00:13:48,704 உங்க 5.2 மைல் தள்ளி உள்ள வேலை ஹேஸ்டிங்க்ஸ் லேப்ரடோரியிலா? 165 00:13:48,704 --> 00:13:50,414 ஆம். நான் அங்கே ஒரு கெமிஸ்டாக இருக்கேன். 166 00:13:51,623 --> 00:13:53,792 நீங்க என்ன செய்யறீங்க? 167 00:13:53,792 --> 00:13:55,752 நான் கைசர் ஹாஸ்பிடல்ல ஒரு ரெசிடெண்ட் இன்டெர்னா இருக்கேன். 168 00:13:56,837 --> 00:13:57,838 ஹம். சரி. 169 00:14:00,007 --> 00:14:03,594 நான் ஹால்லிஸ், மாரிஸ்சன் அன்ட் டக்லஸ் அலுவலகத்தில லீகல் உதவியாளராக இருக்கேன். 170 00:14:05,679 --> 00:14:07,264 அது ரொம்ப நல்ல விஷயமாச்சே. 171 00:14:07,264 --> 00:14:11,143 அது அற்புதம். நான்... ஆம். அதாவது, நான்... 172 00:14:11,727 --> 00:14:15,230 என்னைப் பத்தி பத்திரிகையில எழுதினாங்க, அதிலிருந்து, 173 00:14:15,230 --> 00:14:17,065 எனக்கு பலதரப்பட்ட தபால்களும் வந்துள்ளன. 174 00:14:17,065 --> 00:14:20,944 அதாவது, மத சம்மந்தமான மிரட்டல்கள், திருமணம் செய்துக்கொள்ள ஆவல்கள். 175 00:14:20,944 --> 00:14:25,032 என் பெற்றோர்கள் இறந்துவிட்டார்கள் என்றாலும், என் குடும்பம்னு சொல்லிக்கொள்ளும் மக்கள். 176 00:14:25,949 --> 00:14:30,454 கெமிஸ்ட்டா இருப்பதுக்கும், ராகெஃபெல்லருக்கும் வித்தியாசம் தெரியலை. 177 00:14:31,538 --> 00:14:34,583 என்ன... நீங்க... தெரியல. இந்த விஷயத்துல நீங்க எனக்கு உதவ முடியுமா? 178 00:14:34,583 --> 00:14:37,169 சரி, முதல்ல, நான் சட்ட உதவியாளர் ஆனால் வக்கீல் இல்லை. 179 00:14:37,169 --> 00:14:39,171 நீங்க சந்திக்கக்கூடிய சிறந்த வக்கீல். 180 00:14:40,088 --> 00:14:42,799 ஆனால் என்னுடைய ஆலோசனை என்னன்னா, 181 00:14:44,051 --> 00:14:47,304 ஆம், நாம தனித்தனியா அவங்களுக்கு சீஸ் அன்ட் டெஸிஸ்ட் நோட்டீஸ் அனுப்பலாம். 182 00:14:48,180 --> 00:14:49,097 ஆம்! 183 00:14:49,598 --> 00:14:53,810 நான் அவர்கள் நிறுத்துவதையும் பின் அப்படிச் செய்யாமல் இருப்பதையும் விரும்புவேன். 184 00:14:55,395 --> 00:14:56,396 சரி. 185 00:14:57,648 --> 00:14:59,608 என் புதிய செக்ரெட்டரியைச் சந்திக்கணும்... 186 00:14:59,608 --> 00:15:01,693 - சரி, அனைவருக்கும் வணக்கம். - ஹை, கிரேசி. 187 00:15:03,612 --> 00:15:06,657 ஆகவே நீதான் ஹேரி மார்டன் விரும்பும் அந்தப் பெண். 188 00:15:07,658 --> 00:15:09,243 கிரேசி, இது ஹேரியின் செக்ரெட்டரி. 189 00:15:09,826 --> 00:15:12,204 நிஜமாவா? சரி, அவன் பின்னாடி போக, முட்டாளா இருக்கணும். 190 00:15:12,204 --> 00:15:13,288 இவள் இன்னும் அழகா இருக்கா. 191 00:15:25,175 --> 00:15:26,969 - இப்போ இது நிஜமா? - அவங்க உன்னுடன் ஒரு வாரமா 192 00:15:26,969 --> 00:15:27,886 பேசலயே, 193 00:15:27,886 --> 00:15:29,638 நீ இறந்துட்டன்னு நினைச்சிருப்பாங்க. 194 00:15:30,430 --> 00:15:32,140 அந்த மனுஷிக்கு அவ்வளவுதான் தெரியும். 195 00:15:32,140 --> 00:15:35,477 நான் தயாரா இருக்கிறபோது அவங்களை கூப்பிடறேன். மன்னிக்கணும். 196 00:15:35,477 --> 00:15:36,520 எங்கிட்ட பதில் இருக்கு. 197 00:15:36,520 --> 00:15:38,564 - எங்கிட்ட பதில் இருக்கு. - எங்கிட்டேயும். 198 00:15:41,149 --> 00:15:42,150 என்னிடம் பதில் இருக்கு. 199 00:15:42,150 --> 00:15:44,236 டாக்டரைக் கூப்பிட்டா போதும். 200 00:15:44,736 --> 00:15:47,239 பாருங்க. இல்ல! 201 00:15:54,705 --> 00:15:57,457 அன்புள்ள டாக்டர் ஏவன்ஸ், உங்கள் பரிசுக்கு நன்றி. 202 00:15:58,166 --> 00:15:59,293 நான் அதைப் படித்து மகிழ்ந்தேன், 203 00:15:59,293 --> 00:16:02,754 என் மகளும் அதை என்னிடமிருந்து எடுத்துக் கொண்டு, பறவைகளின் படங்களுக்கு வண்ணம் தீட்டுகிறாள். 204 00:16:04,047 --> 00:16:07,092 நிச்சயமாக டார்வின் தன் மிக முக்கியமான ஆராய்ச்சிப் புத்தகம் 205 00:16:07,092 --> 00:16:09,428 ஒரு வண்ணம் தீட்டும் புத்தகமாக பயன்படுவதை எண்ணியிருக்க மாட்டார், 206 00:16:09,428 --> 00:16:11,597 இருந்தாலும், குடும்பத்தினர் அனைவரும் அதைப் பயன்படுத்துவது, மகிழ்ச்சியைத் தருகிறது. 207 00:16:12,931 --> 00:16:14,850 உங்களுக்கு குழந்தைகள் இருக்கிறார்களா? 208 00:16:14,850 --> 00:16:18,187 அவ்வப்போது கலாட்டா செய்வது, மற்றும் பொருட்களைச் சேதப்படுத்துவதையும் விட்டால், 209 00:16:18,187 --> 00:16:19,104 நான் ஒரு பெரிய வக்கீல். 210 00:16:20,022 --> 00:16:21,315 உங்க கேள்விக்கு பதில், 211 00:16:21,315 --> 00:16:25,235 எனக்கு மனைவியோ, மக்களோ, பொறுப்புகளோ கிடையாது. 212 00:16:25,235 --> 00:16:27,863 நான் என் வேலையை மணந்துள்ளேன், அதைத்தான் விரும்புகிறேன். 213 00:16:29,990 --> 00:16:32,367 நானும் டார்வினும் ஒத்துக்கொள்ளும் ஒரு விஷயம், 214 00:16:32,367 --> 00:16:34,703 மனிதன் தனிமையில் இருக்கப் படைக்கப்படவில்லை. 215 00:16:35,204 --> 00:16:37,623 உங்களுக்குத் தெரியுமா, த டிசென்ட் ஆஃப் மேன் புத்தகத்தில் 216 00:16:37,623 --> 00:16:39,666 அவர் அதை 95 முறை கூறியுள்ளாரே? 217 00:16:39,666 --> 00:16:40,667 ம்ம்-ஹம். 218 00:16:40,667 --> 00:16:43,629 உங்கள் வாழ்க்கை என்ற சோதனையை வெளிப்புற மாறிகளுக்கு உட்படுத்தினால் 219 00:16:43,629 --> 00:16:47,257 அது ஒருவேளை அதிசயங்களையும் ஆனந்தங்களையும் தரலாம். 220 00:16:48,759 --> 00:16:54,181 எனவே, நான் உங்களே கெஞ்சிக் கேட்கிறேன், எதையும் அல்லது யாரையும் நிராகரித்து விடாதீர்கள். 221 00:16:55,224 --> 00:16:56,225 யோசியுங்கள், என் நண்பரே. 222 00:16:57,935 --> 00:16:59,394 தாமதத்திற்கு மன்னிக்கவும். 223 00:16:59,895 --> 00:17:04,358 நான் கழிப்பறையில் ஒரு சக ஊழியரை சந்தித்தேன். ஒரு வேடிக்கையான தற்செயல். 224 00:17:04,358 --> 00:17:05,817 வேடிக்கையான தற்செயலா? 225 00:17:06,652 --> 00:17:09,238 அதாவது, சில சமயம், இது ஒரு சிறிய உலகம் எனத் தோன்றுகிறது. 226 00:17:09,905 --> 00:17:13,450 நான் அவரைப் பார்ப்பது, இன்றிரவு நானும் நீங்களும் சந்திப்பது. 227 00:17:13,450 --> 00:17:17,496 இது ஆச்சரியமற்ற ஒரு புள்ளிவிவரமாகவும் இருக்கலாம், இல்லையா? 228 00:17:17,496 --> 00:17:19,330 அதாவது, பெரும்பாலானவர்கள் மாலை 229 00:17:19,330 --> 00:17:21,250 ஆறு மணியிலிருந்து எட்டு மணிக்குள் டின்னர் சாப்பிடுவதோடு, 230 00:17:21,250 --> 00:17:23,669 இந்த வட்டாரத்தில் நான்கு உணவகங்கள்தான் உள்ளன. 231 00:17:23,669 --> 00:17:26,003 நீங்களும் உங்க நண்பரும் அருகில் வசித்தால், அப்போ 232 00:17:26,588 --> 00:17:29,383 நீங்க ரெண்டு பேரும் சந்திக்கும் வாய்ப்புகள் ரொம்ப அதிகம்தானே. 233 00:17:29,383 --> 00:17:32,636 அதனால நீங்க இன்னிக்கு அவரைச் சந்தித்தது, உலகம் சிறியதாக இருப்பதால் இல்லை, 234 00:17:32,636 --> 00:17:33,971 ஆனால் அதுக்கான சாத்தியம் இருந்ததால். 235 00:17:34,972 --> 00:17:35,973 சரிதான். 236 00:17:36,682 --> 00:17:38,433 மன்னிக்கணும். நான் கடுமையாகப் பேசுகிறேன் போலும். 237 00:17:38,433 --> 00:17:40,727 இல்லை, பரவாயில்லை. 238 00:17:44,565 --> 00:17:47,234 ஒருவழியாக நீங்க அழைத்தபோது எனக்கு ரொம்ப உற்சாகமா இருந்தது. 239 00:17:48,026 --> 00:17:50,153 நான் சரியான உடையைத்தான் தேர்வு செய்தேன், 240 00:17:50,153 --> 00:17:52,698 ஆனால் அது மேல் எல்லாம் நகப்பூச்சு சிந்திடுச்சு. 241 00:17:53,657 --> 00:17:55,909 அதனால நான் இந்த பழயைதை உடுத்தி வந்தேன். 242 00:17:56,493 --> 00:17:58,704 இந்த ஆடையில் அசிடேட் இருக்கா? 243 00:18:00,581 --> 00:18:01,540 எனக்குத் தெரியாதே. 244 00:18:01,540 --> 00:18:03,834 ஏன்னா, அப்படியிருந்தால், அசிடோனையும் நீரையும் கலக்கக் கூடாது. 245 00:18:03,834 --> 00:18:06,336 அது ஆடையைக் குலைத்துவிடும். எப்போதும் ஒரு பங்கு தேங்காய் எண்ணையுடன் 246 00:18:06,336 --> 00:18:08,005 ஒரு பங்கு கலவையைச் சேர்த்தே உபயோகிக்கணும். 247 00:18:10,215 --> 00:18:11,425 அது ரொம்ப நல்லத் தகவல். 248 00:18:12,676 --> 00:18:14,595 இந்த வட்டாரத்தில் ஐந்து உணவகங்கள் இருக்கலாம். 249 00:18:17,514 --> 00:18:20,684 வெளிப்புற மாறிகளுக்கு உட்படுத்தவது என் வாழ்க்கை சோதனைக்குப் பொருந்தவில்லை என 250 00:18:20,684 --> 00:18:23,353 என் சொந்த வரலாறு சொல்கிறது, 251 00:18:24,354 --> 00:18:27,524 ஆகவே, அதன் விளைவுகளும் எதிர்பார்த்தது போல, மோசமாகவே வந்துள்ளன. 252 00:18:29,276 --> 00:18:31,403 நான் உடைந்து போனவன் என ஒரு முறை யாரோ ஒருவர் என்னிடம் கூறினார். 253 00:18:31,987 --> 00:18:34,823 அவர்கள் சொன்னது சரியாக இருக்கலாம். நான் தனியாக இருப்பதே சிறந்ததாக இருக்கலாம். 254 00:18:38,202 --> 00:18:39,953 காகிதமானாலும், உங்கள் குரலில் 255 00:18:39,953 --> 00:18:41,121 உள்ள வலி, எனக்குக் கேட்கிறது. 256 00:18:41,121 --> 00:18:43,373 உங்களிடம் யாரோ அப்படிச் சொன்னது எனக்கு வருத்ததைத் தருகிறது. 257 00:18:43,373 --> 00:18:44,374 நான் அதை ஏற்கவில்லை. 258 00:18:45,042 --> 00:18:48,253 அன்பு என்ற ஒன்றுக்கு நாம் அதை வரவேற்பதை... இழப்பதை, 259 00:18:48,253 --> 00:18:52,049 அதில் குறையிருப்பது... சந்தேகம் இல்லாமல், இவை நம்மை காயப்படுத்தக்கூடியவையே. 260 00:18:52,049 --> 00:18:52,966 அப்பா. 261 00:18:52,966 --> 00:18:54,843 வழக்கமாக, அதலெல்லாம் தேவையானதுதான் என்று நான் விவாதித்திருப்பேன். 262 00:18:54,843 --> 00:18:58,305 ஆனால் இந்தத் தருணத்தில் மற்றவருக்கு நம்பிக்கயைப் பற்றி பாடம் புகட்டும் நிலையில் நான் இல்லை. 263 00:18:58,305 --> 00:19:00,891 உங்க ஜாக்கெட்டைப் போட்டுக்கொள்ளும்படி டாக்டர் சொல்லியிருக்கார். 264 00:19:00,891 --> 00:19:02,226 ஆம். 265 00:19:02,226 --> 00:19:04,102 என் தந்தைக்கு கல்லீரலில் புற்று நோய் உள்ளது 266 00:19:04,102 --> 00:19:05,145 அவர் சிகிச்சைப் பெற மறுக்கிறார், 267 00:19:05,771 --> 00:19:08,941 பதிலாக அவர் உடலிலிருந்து நோயை அகற்ற பிரார்த்தனையை தேர்வு செய்துள்ளார். 268 00:19:09,608 --> 00:19:12,861 நான் இப்படிக் கூறுவதை வெறுக்கிறேன், ஆனால் கடவுளின் மீது எனக்குக் கோபம். 269 00:19:13,529 --> 00:19:17,282 நம்மில் மிகவும் தூயவர்களை அவர் எப்படி திண்டாட விட முடியும்? 270 00:19:17,282 --> 00:19:19,618 ...அவருடைய வெகுளித்தனம், அவர் கடவுளை கேள்வி கேட்கிறார்... 271 00:19:25,624 --> 00:19:28,752 உங்கள் தந்தையைப் பற்றி அறிந்து நான் உண்மையாகவே வருத்தமடைந்தேன். 272 00:19:29,795 --> 00:19:31,964 ஏல் ஸ்கூல் ஆஃப் மெடிசினில் ஆராய்ச்சியில் ஒரு ரசாயன ஏஜென்டினால் 273 00:19:31,964 --> 00:19:35,175 ஹாட்ஜ்கின்ஸ் நோயில், ஒரு சில நோயாளிகளுக்குத் 274 00:19:35,175 --> 00:19:37,302 தற்காலிக பின்னடைவு ஏற்பட்டதை காட்டும் ஆய்வின் ஆணவங்களை இத்துடன் அனுப்பியுள்ளேன். 275 00:19:40,931 --> 00:19:42,599 நான் அதிகமாக இடையூறு செய்திருந்தால் மன்னிக்கவும். 276 00:19:46,103 --> 00:19:47,771 உங்கள் அன்பிற்கு நன்றி. 277 00:19:48,522 --> 00:19:53,861 ஒன்றைச் சொல்ல வேண்டும், என் சந்தேகங்கள் எதுவானாலும், உங்களுடைய மத எதிர்ப்புகள் எதுவாயினும், 278 00:19:54,945 --> 00:19:57,948 நமது நட்பில் தெய்வீகக் குறுக்கீடின் நிரூபணத்தை என்னால் கவனிக்காமல் இருக்க முடியவில்லை. 279 00:19:59,575 --> 00:20:05,497 இது போன்ற சம்மந்தமே இல்லாத ஒரு தொடர்பு எப்படி கடைக்கும்? அதுதான் இறைவன். 280 00:20:07,541 --> 00:20:10,961 நீங்கள் இந்த அறியப்படாத மாறிகளை தொடர்ந்து எதிர்கொள்வீர்கள் என நம்புகிறேன், 281 00:20:11,879 --> 00:20:13,130 ஏனென்றால், கெல்வின், 282 00:20:13,130 --> 00:20:14,923 தனியாக சிறப்பானவர்கள் என்று யாரும் இல்லை. 283 00:20:32,608 --> 00:20:35,068 கர்டிஸ், உண்மையாக, 284 00:20:35,068 --> 00:20:37,487 நீங்கள் சொன்னதை நான் இதுவரை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. 285 00:20:39,573 --> 00:20:40,908 நான் உங்களுடன் சேர்ந்துகொள்ளலாமா? 286 00:20:42,159 --> 00:20:43,243 சேர்ந்துகொள்ளலாமே. 287 00:20:44,286 --> 00:20:46,121 நான் ஒருவரைச் சந்தித்துள்ளேன். 288 00:20:46,830 --> 00:20:50,250 மிகவும் எதிர்பாராத விதமாகவும் 289 00:20:53,462 --> 00:20:57,216 நான் வாழ்வில் இதுவரை பின்தொடர்ந்த எதுவும் அவளுடைய சந்தோஷத்தைவிட முக்கியமில்லை எனத் தோன்றுகிறது. 290 00:21:05,349 --> 00:21:07,726 நா... நான்... அனைத்தையும் அவளுக்குக் கொடுக்க நினைக்கிறேன். 291 00:21:07,726 --> 00:21:09,770 அவளுடைய எல்லாமாகவும் நான் இருக்க விரும்புகிறேன். 292 00:21:13,941 --> 00:21:17,402 அவள்தான் நான் எதை, எப்படிச் செய்கிறேன் என்பதற்கு காரணம். 293 00:21:23,158 --> 00:21:25,869 கெல்வின், இதைக் கேட்டு நான் அளவற்ற சந்தோஷம் அடைகிறேன், 294 00:21:26,537 --> 00:21:29,081 அதோடு, அதில் எனக்கும் கொஞ்சம் பங்குள்ளது எனக் கூறிக்கொள்ள வெக்கப்படவும் இல்லை. 295 00:21:29,873 --> 00:21:32,584 நானும் ஒன்றை உங்களுக்குச் சொல்ல வேண்டும், ஒரு நல்ல விஷயத்தைப் பகிரப் போகிறேன். 296 00:21:33,210 --> 00:21:35,462 என் தந்தை சிகிச்சை செய்துகொள்ள சம்மதித்துவிட்டார். 297 00:21:41,301 --> 00:21:43,762 உங்கள் இனியவருக்கும், உங்களுக்கும், இந்த விடுமுறை நாட்கள் இனிமையாக இருக்கட்டும். 298 00:21:53,438 --> 00:21:54,898 உங்கள் தேடலில் நான் இன்று உதவி செய்யலாமா, சார்? 299 00:21:55,899 --> 00:21:58,610 எனக்குத் தெரியல. நான் இப்படி நடந்துப் போனேன். 300 00:22:00,404 --> 00:22:02,614 சரி, எங்கே ஆரம்பிக்கன்னு எனக்குத் தெரியலை. நிஜமா. 301 00:22:02,614 --> 00:22:04,074 சரி, உங்கள் காதலி எப்படி இருப்பார்? 302 00:22:04,658 --> 00:22:09,621 அவங்க என் காதலி இல்லை. அவங்க, முற்றிலும் வேற மாதிரி. 303 00:22:10,747 --> 00:22:13,125 சரி. அப்போ இதை எடுத்துக்கொள்ளுங்க. 304 00:22:19,381 --> 00:22:22,259 இப்போ, இதுதான் பெண்களுக்குப் பிடித்தமானது. என்னை நம்புங்க. 305 00:22:26,263 --> 00:22:29,016 இல்ல, எலிசபெத்துக்கு மற்றவர்கள் விரும்புவது அவளுக்குப் பிடிக்காது. 306 00:22:29,016 --> 00:22:33,145 அவங்களுக்குத் திருமணத்துல நம்பிக்கை இல்லை. அல்லது இருக்கல. 307 00:22:33,145 --> 00:22:34,229 ஆனால் அது முன்னாடி. 308 00:22:34,229 --> 00:22:36,565 என்னன்னா, இப்போ கொஞ்சம் வேற மாதிரி இருக்கு. 309 00:22:36,565 --> 00:22:38,483 நாங்க சந்திச்சதுக்கு அப்புறம் எல்லாமே மாறிடுச்சு. 310 00:22:42,863 --> 00:22:45,407 மன்னிக்கணும். நான் இதையெல்லாம் பழக்கமற்றவரிடம் சொல்லக்கூடாது. 311 00:22:45,407 --> 00:22:47,159 இல்லை, அதெல்லாம் பரவாயில்லை. 312 00:22:47,784 --> 00:22:51,205 இங்கு வரும் பெரும்பாலான ஆண்கள், எது விலைக் குறைவு, இல்ல, எது விலை அதிகம்னுதான் கேட்பாங்க. 313 00:22:51,205 --> 00:22:53,207 உங்களைப் பொறுத்தவரை அப்படியில்லைன்னு தோணுது. 314 00:22:56,293 --> 00:22:57,669 அவள் எளிமையானவள். 315 00:22:59,004 --> 00:23:00,923 இல்ல, நான் என்ன சொல்கிறேன்? அவள் எளிமையானவள் இல்ல. 316 00:23:00,923 --> 00:23:05,844 அவள் எளிமையை, நடைமுறைக்கு உகந்ததை மதிப்பவள். 317 00:23:07,221 --> 00:23:09,348 வழக்கமாக நகைகளை அணிவதில்லை. 318 00:23:09,348 --> 00:23:14,394 ஆனால், ஒருவேளை அணிந்தாலும் அது சிறந்ததாக, ஆனால் தெளிவாக இருக்கும். 319 00:23:24,696 --> 00:23:26,114 அது பெரிய கல் இல்லை, 320 00:23:26,114 --> 00:23:29,284 ஆனால் இப்போது கடையில் உள்ள மிகத் களங்கமில்லாத வைரம் இதுதான். 321 00:23:29,284 --> 00:23:30,702 இதற்குத்தான் அதிக முகங்களும் உள்ளன. 322 00:23:31,203 --> 00:23:33,956 அதைச் சுழற்றி, ஒளியை எப்படிப் பளிச்சுன்னு காட்டுது பாருங்க. 323 00:23:36,208 --> 00:23:37,209 ஆமாம். 324 00:23:40,671 --> 00:23:41,755 ஆமாம், இது அவளைப் போல உள்ளது. 325 00:23:50,639 --> 00:23:52,558 கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் தொடங்கிடுச்சா? 326 00:24:00,315 --> 00:24:01,441 நீங்க அதை... 327 00:24:02,860 --> 00:24:06,029 நீங்க பயந்துட்டீங்களா? இன்னிக்கு என்னவோ வினோதமா நடந்துக்குறீங்க. 328 00:24:06,029 --> 00:24:10,576 நான் வினோதமா நடந்துக்கறேன்னு நீ சொல்வதுதான் வினோதமா இருக்கு. 329 00:24:10,576 --> 00:24:14,580 சரி, விநோதமான, விநோத மனிதா. 330 00:24:15,581 --> 00:24:17,207 வாங்க, வாங்க, கருமிகளே. 331 00:24:17,207 --> 00:24:20,586 நீங்க மதியம் கரோல் பாடல்களின்போது கலந்துக்காம போனா, என்ன செய்வேன்னு தெரியாது. 332 00:24:24,047 --> 00:24:26,258 - இதோ வரோம். - கோழை. 333 00:24:39,354 --> 00:24:42,608 சிக்ஸ் தர்ட்டி உங்களுக்கு ஓடும் நண்பனா இருக்கலாம்னு நினைச்சேன். 334 00:24:43,108 --> 00:24:44,902 ஏன்னா நான் உங்களுடன் ஓட மாட்டேன்னு எனக்கு நிச்சயமா தெரியும். 335 00:24:48,822 --> 00:24:50,032 ஒ. ரொம்பப் பொருத்தமா இருக்கு. 336 00:24:54,828 --> 00:24:58,332 இன்னும் ஒண்ணு இருக்கு. அது சிறியது. 337 00:25:07,049 --> 00:25:09,134 நீ என்னுடனேயே சேர்ந்து தங்கிடு. 338 00:25:23,774 --> 00:25:25,859 - ஹலோ? - ஒரு வினாடி. 339 00:25:25,859 --> 00:25:27,027 நான் என் சாவியை உபயோகிச்சேன். 340 00:25:31,657 --> 00:25:34,868 - நீங்க என்ன செய்யறீங்க? - சும்மா, சுத்தம் செய்யறேன். 341 00:25:35,827 --> 00:25:40,707 - சுத்தம் செய்யறீங்களா? ஏதாவது விசேஷமா? - ஒருவர் கொஞ்ச நாட்கள் சேர்ந்து இருக்கப் போகிறார். 342 00:25:40,707 --> 00:25:41,917 கொஞ்ச நாட்களுக்கா? 343 00:25:41,917 --> 00:25:44,336 நான் உன்னைத் தூக்கிக்கிட்டு வாசற்படியை கடக்கணுமா? 344 00:25:44,336 --> 00:25:46,255 வேண்டாம், அது திருமணத்துக்குத்தான். 345 00:25:47,631 --> 00:25:49,675 நான் ஃபோர்க்குகள் வாங்கிட்டு வந்தேன். 346 00:25:50,384 --> 00:25:52,219 அடப் பரவாயில்லயே. எவ்வளவு வாங்கினீங்க? 347 00:25:52,219 --> 00:25:54,263 ரெண்டு பேர் சேர்ந்துச் சாப்பிடப் போதுமானது. 348 00:25:54,263 --> 00:25:56,098 - ஆகவே, ரெண்டு. - ரெண்டு. 349 00:25:56,932 --> 00:25:58,350 நீங்க ஸ்பூன்களையும், கத்திகளையும் வாங்கினீங்களா? 350 00:25:59,852 --> 00:26:00,853 ச்சே. 351 00:26:02,604 --> 00:26:04,606 நம்ம நூலகத்தை விரிவுப்படுத்துவதுல சந்தோஷப் படறேன். 352 00:26:05,691 --> 00:26:08,318 எவ்வளவு முறைதான் ஒருவர் கிரேட் எக்ஸ்பெக்டேஷன்ஸ் புத்தகத்தைப் படிக்க முடியும்? 353 00:26:08,318 --> 00:26:12,281 நீ அதே லாசான்யா டிஷ்சை, 79 முறை செய்திருக்க. 354 00:26:12,281 --> 00:26:13,740 அது நியாயமான ஒப்பீடே இல்லை. 355 00:26:13,740 --> 00:26:16,451 - ஒவ்வொரு முறையும் ஒரு வித்தியாசம் இருக்கும். - அப்படித்தான் ஒரு சிறந்த புத்தகமும். 356 00:26:16,451 --> 00:26:19,246 - அது எப்படி சாத்தியம்? - ஏன்னா, சிறந்த புத்தகம் அப்படியேதான் இருக்கும், 357 00:26:19,246 --> 00:26:20,163 ஆனால் நாம அப்படியே இருப்பதில்லையே. 358 00:26:21,290 --> 00:26:23,834 சரி, அது ஒரு மந்திர சக்தியுள்ள புத்தகம்னு நீங்க சொல்லவேயில்லையே. 359 00:26:23,834 --> 00:26:26,962 - உன் ரகசியங்களைச் எனக்குச் சொல், மந்திர புத்தகமே. - இல்லை, அது எங்கிட்ட மட்டும்தான் பேசும். 360 00:26:26,962 --> 00:26:28,547 அது என் புத்தகம். 361 00:26:30,507 --> 00:26:32,718 உனக்கு ஒரு புதிய வகை கேள்வி. 362 00:26:33,385 --> 00:26:36,054 உனக்கு என்னிடம் கேட்க எப்படி தைரியம் வந்தது? 363 00:26:36,054 --> 00:26:39,683 வாழ்க்கையில, எந்த ஒரு விஷயத்தைப் பத்தியும் இவ்வளவு உறுதியா நான் இருந்ததில்லை, 364 00:26:39,683 --> 00:26:43,228 இருந்தாலும், அதைச் சொல்லணும்னு நினைக்கிறபோது, பயம் என்னை செயலிழக்கச் செய்யுது. 365 00:26:43,228 --> 00:26:46,023 என் வாழ்க்கைத் துணையா இரு என்று கேட்டவுடன், அந்த நல்லுறவு உடைந்து போய்டும் 366 00:26:46,023 --> 00:26:49,026 அதோடு, நான் அவளுக்குத் தகுதியானவள் இல்லைன்னு அவள் உணர்ந்துவிடுவாள், என்கிற பயம் 367 00:26:49,026 --> 00:26:50,611 என்னை எதுவும் செய்யவிடாமல், ஸ்தம்பிக்கச் செய்கிறது. 368 00:26:50,611 --> 00:26:51,695 பிரேக்ஃபாஸ்ட்டா? 369 00:26:53,405 --> 00:26:57,409 ஒருவேளை, நான் நினைத்ததைவிட, சர்ச் என்னுள் இருக்கும் அன்பையும் பயத்தையும் பத்தி 370 00:26:57,409 --> 00:26:58,577 அதிகம் பேச வைத்திருக்கலாம். 371 00:26:59,536 --> 00:27:03,457 அன்புள்ள கெல்வின், அதைப் பத்தி ரொம்ப யோசிக்க வேண்டாம் என்பதே என் அறிவுரை. 372 00:27:03,957 --> 00:27:06,543 தாராளமாக நேசிப்பதும், அதே போல பதிலுக்கு நாம் நேசிக்கப்படுவோம் 373 00:27:06,543 --> 00:27:08,879 என்பவற்றைதான் நாம் இந்த பூமியில் செய்யக்கூடியவை. 374 00:27:08,879 --> 00:27:09,880 நம்மில் யாரும் உத்தமம் இல்லை. 375 00:27:09,880 --> 00:27:14,051 திருமண வாக்குறுதிகளில் "நல்லவையோ கெட்டவையோ" என்ற சொற்களை, அதனால்தான் சேர்த்துள்ளனர். 376 00:27:14,593 --> 00:27:17,971 பைபிள் நமக்குச் சொல்கிறது "எல்லாத்தையும்விட, ஒருவரையொருவர் ஆழமாக நேசியுங்கள், 377 00:27:17,971 --> 00:27:20,766 ஏனெனில் பெருமளவு பாவங்களை அன்பு சரிசெய்கிறது," என்கிறது. 378 00:27:21,308 --> 00:27:23,060 ஆனால் அது எதையோ தவரவிட்டிருக்கலாம். 379 00:27:23,060 --> 00:27:28,649 உண்மையாக ஒருவரை நேசிக்கவும், நேசிக்கபடவும், அவர்களின் கசப்பான உண்மைகளையும் சேர்த்தே, 380 00:27:29,650 --> 00:27:35,531 முழுவதுமாகத்தான் நாம் நேசிக்க வேண்டும். குறிப்பாக அந்தக் கசப்பான உண்மைகளை நேசிக்கணும். 381 00:27:35,531 --> 00:27:36,657 நீ போதிக்க தயாராகிறாயா? 382 00:27:38,659 --> 00:27:41,954 இது ஒருவருக்கான போதனை. நான் ஒரு நண்பருக்கு கடிதம் எழுதுகிறேன். 383 00:27:43,413 --> 00:27:47,668 நான் யூகிக்கிறேன். அந்த கடவுள் நம்பிக்கையில்லாத விஞ்ஞானிக்குத்தானே? 384 00:27:48,210 --> 00:27:50,295 எவர் எனக்குக் கீமோவை, "வழித் தவறிச் சென்றுவிட்ட செல்களிடமிருந்து 385 00:27:51,213 --> 00:27:55,509 இறைவனின் அசலான படைப்புகளை மீண்டும் பெறுவதற்கான இறைவனின் வழி தான் அது, ஆகவே அதைச் 386 00:27:55,509 --> 00:27:57,427 - செய்யலாம்" என்று யோசனையைச் சொன்னவர். -"வழித் தவறியச் செல்களா." அதே தான். 387 00:28:03,433 --> 00:28:04,768 தற்செயலான சம்பவம்... 388 00:28:06,979 --> 00:28:09,106 இந்த நட்பின் காலம். 389 00:28:10,023 --> 00:28:11,984 சரி, "தற்செயல் சம்பவங்கள நடக்க ஆரம்பிக்கும்போது, 390 00:28:11,984 --> 00:28:15,195 அவை பல விசேஷமான முறைகளில் தொடர்ந்து நடந்துகிட்டே இருக்கும்." 391 00:28:15,904 --> 00:28:17,155 அதை நீங்கள் சொந்தமாகச் சொன்னீர்களா? 392 00:28:17,155 --> 00:28:20,325 இல்லை, அதைச் சொன்னது அகாத்தா கிறிஸ்டீயின் சொற்களை. 393 00:28:20,325 --> 00:28:22,661 மகனே, நீ அதை வடணும். 394 00:28:25,247 --> 00:28:26,415 அன்புள்ள கர்டிஸ், 395 00:28:26,999 --> 00:28:31,545 எல்லாத்தையும் அன்பே சரிசெய்துவிடும் என்பதை நம்புவது அழகான யோசனைத்தான். 396 00:28:31,545 --> 00:28:32,921 நானும் அதை ஒத்துக்கறேன். 397 00:28:34,298 --> 00:28:37,634 துரதிர்ஷ்டவசமாக, நான் எனக்காக பயப்படுகிறேன். அது வித்தியாசப்படுகிறது. 398 00:28:39,344 --> 00:28:42,848 என்னுள் இருக்கும் களங்களை மறைப்பதிலேயே என் வாழ்நாளை கழித்துவிட்டேன். 399 00:28:44,266 --> 00:28:47,728 என் குறைகளை யாராவது கண்டால் என்ன ஆகும் என்று எண்ண பயமாக உள்ளது. 400 00:28:47,728 --> 00:28:48,645 {\an8}ஏவரி பார்க்கர் 401 00:28:48,645 --> 00:28:49,605 {\an8}ஹேஸ்டிங்க்ஸ் ஆய்வு லேப் C/O கெல்வின் ஏவன்ஸ் 402 00:28:49,605 --> 00:28:51,315 {\an8}குறிப்பாக நான் மிகவும் அக்கறை கொண்ட ஒருவர். 403 00:29:02,367 --> 00:29:03,535 கேஸ் அடைச்சிட்டு இருக்கு. 404 00:29:04,077 --> 00:29:05,412 நான் மேயின்டனென்ஸை அழைக்கவா? 405 00:29:05,412 --> 00:29:08,165 இது போன்ற சூழல்ல நாம ரெம்சன் உதவித்தொகை தேர்வுக்கு தயாரா இருக்கணும்னு நினைக்கிறாங்ளா? 406 00:29:08,916 --> 00:29:10,417 ரொம்ப வேடிக்கைதான். 407 00:29:12,419 --> 00:29:13,337 மிக்க நன்றி. 408 00:29:15,422 --> 00:29:16,673 எவ்வளவு முறை? 409 00:29:17,382 --> 00:29:20,010 இந்தத் தபால்களை எல்லாம் முக்கியமா நான் என் வக்கீலிடம் அனுப்பியிருக்கேன். 410 00:29:20,010 --> 00:29:26,141 இப்படி நிற்காத வெள்ளம் போல பொய் தபால்கள் வந்துட்டே இருந்தா என்னால வேலையே செய்ய முடியாது. 411 00:29:26,141 --> 00:29:27,351 என்னை மன்னிச்சிடுங்க, டாக்டர் ஏவன்ஸ். 412 00:29:27,351 --> 00:29:30,979 - எனக்கு இந்தத் தபால்களை பிரிக்க உத்தரவில்லை... - ஏத்துக்கவே முடியாது! உங்க மேற்பார்வையாளர் யார்? 413 00:29:30,979 --> 00:29:32,064 கெல்வின். 414 00:29:32,648 --> 00:29:33,815 மிக்க நன்றி. 415 00:29:36,985 --> 00:29:37,986 ஏன் அப்படி செய்தீங்க? 416 00:29:37,986 --> 00:29:39,571 அவை எல்லாம் நிற்கணும். 417 00:29:41,865 --> 00:29:44,952 நான் இங்கே சிரமப்படுவதை யாருமே புரிஞ்சுக்காத மாதிரி இருக்கு. 418 00:29:49,122 --> 00:29:52,376 ஆம். சரி, நீங்க திரும்பவும் உங்க முக்கயமான வேலையை கவனிக்கலாம். 419 00:30:32,374 --> 00:30:33,876 நீ இங்கே இருப்பன்னு நினைக்கல. 420 00:30:35,210 --> 00:30:36,211 நிச்சயமா இங்கேதான் இருப்பேன். 421 00:30:41,800 --> 00:30:43,552 இன்னும் என்னுடன் இருக்க விரும்புறயா? 422 00:30:44,428 --> 00:30:45,596 ஆமாம், விரும்புறேன். 423 00:30:46,555 --> 00:30:47,639 நான் கோபப்பட்டேனே. 424 00:30:48,849 --> 00:30:53,687 எல்லோருக்கும் கோபம் வருவதுண்டு. அது ஏன் வந்ததுன்னு தெரிஞ்சுக்க விரும்புறேன். 425 00:31:00,444 --> 00:31:03,280 கெல்வின், நீங்க உங்க மோசமான குணங்களை எங்கிட்ட காட்டாதது போல நடந்துக்காதீங்க. 426 00:31:04,698 --> 00:31:06,450 அதுக்காக உன்னை எனக்குப் பிடிக்கலைன்னு ஆகாது. 427 00:31:08,243 --> 00:31:11,205 சரி, நானும் அதே போலதான் உங்களைப் பத்தி நினைக்கிறேன்னு சொல்லட்டுமா? 428 00:31:15,792 --> 00:31:16,793 சொல்லிப் பாரு. 429 00:31:19,046 --> 00:31:22,090 எல்லாம் ஒரு நாள் தெரியத்தான் போகுது. நாம விரும்பினாலும் விரும்பாவிட்டாலும். 430 00:31:32,643 --> 00:31:34,102 வேண்டாம்... எங்கே ஆரம்பிப்பதுன்னு தெரியல. 431 00:31:36,730 --> 00:31:39,858 மெதுவா ஆரம்பியுங்க. இன்னிக்கு என்ன ஆச்சுன்னு சொல்லுங்க. 432 00:31:52,955 --> 00:31:57,376 அவங்க இறக்கும் முன்பே, என் பெற்றோர்கள் என்னை அனாதை ஆக்கிட்டாங்க. 433 00:32:02,047 --> 00:32:07,803 என்னைப் பத்தி அக்கறை இருப்பது போல வரும் கடிதங்கள், அவங்க என் குடும்பம்னு வேற சொல்லிக்கிறாங்க. 434 00:32:11,348 --> 00:32:15,352 அதெல்லாம் அடிபட்ட இடத்துல உப்பை தடவுறதுப் போல இருக்கு. 435 00:32:20,858 --> 00:32:22,609 என் பெற்றோர்கள் இறந்துட்டாங்கன்னு நான் சந்தோஷமா இருக்கேன். 436 00:32:28,740 --> 00:32:31,034 இதையெல்லாம் கடந்து போக, அப்படி இருப்பதுதான் நல்லது. 437 00:32:36,957 --> 00:32:41,211 நமக்குள்ளேயே சொல்ல கூசுவதை, வெளியே வாய்விட்டுச் சொல்லவே முடியாது. 438 00:32:48,385 --> 00:32:50,429 ரொம்ப மெதுவாதான் ஆரம்பிச்சேன், போ. 439 00:33:34,139 --> 00:33:35,140 அன்புள்ள வேக்லி, 440 00:33:35,807 --> 00:33:38,185 நான் எழுத தாமதமானதுக்கு மன்னிக்கவும். 441 00:33:41,563 --> 00:33:44,858 கடந்த முறை நான் கடிதம் எழுதிய பின் பல ஜென்மங்கள் ஆகிவிட்டதுப் போல் உள்ளது. 442 00:33:45,776 --> 00:33:47,694 இடது கை, வலதுக்கு மேலே இருக்கணும். 443 00:33:48,654 --> 00:33:52,407 எப்போதும் வலதுக்கு மேலே இடது. எப்படி? நல்லாயிருக்குப் பாரு. அப்படி. 444 00:33:52,407 --> 00:33:54,785 இயல்பா, நம்ம கட்டை விரல்களை கடைசியில வைப்போம். 445 00:33:57,412 --> 00:33:59,039 அது ஏன்னு தெரியுமா? ஆம். 446 00:34:02,167 --> 00:34:03,043 ஃபிரெட்டீ. 447 00:34:03,043 --> 00:34:06,630 ஹை. அன்னிக்கு நான் மோசமா நடந்துகிட்டதுக்கு மன்னிப்பு கேட்க விரும்புறேன். 448 00:34:09,382 --> 00:34:10,384 திரும்பவும், மன்னிச்சிடு. 449 00:34:13,762 --> 00:34:17,266 எனக்குத் திருமணத்துல ஆர்வம் இல்லை, எனக்கு குழந்தைகள் பெறுவதிலும் விருப்பமில்லை. 450 00:34:18,016 --> 00:34:21,478 சொன்னதுக்கு நன்றி. இப்போ எனக்குப் புரியுது. 451 00:34:22,813 --> 00:34:23,813 என்ன புரியுது? 452 00:34:26,149 --> 00:34:27,150 உன் தேவை என்னன்னு. 453 00:34:30,279 --> 00:34:34,241 எனக்கு நீ என்னுடன் நீ சந்தோஷமா இருந்தா, அது எனக்குப் போதும். 454 00:34:42,958 --> 00:34:46,170 ஹே, நண்பா. நீ நடக்கத் தயாரா இருக்கியா? சரி. 455 00:34:49,547 --> 00:34:50,549 கிட்டத்தட்ட. 456 00:34:52,259 --> 00:34:53,802 இந்த தபால்தலையை எனக்காக நக்கறயா? 457 00:34:54,636 --> 00:34:55,929 சரிதான். 458 00:34:55,929 --> 00:34:57,431 கர்டிஸ் வேக்லி 204 எஸ் மெர்சண்ட் தெரு 459 00:34:57,431 --> 00:34:58,849 சூட் 5 கேம்ப்ரிஜ் மாஸ் 460 00:34:58,849 --> 00:35:00,475 சரி. வா போகலாம். வா போகலாம். 461 00:35:03,020 --> 00:35:05,397 உங்களுக்கே தெரியும், நான் திருமணத்தில் எனக்கு ஆர்வம் இல்லை. 462 00:35:05,397 --> 00:35:10,110 ஆனால் அதற்கு பின் நானே ஒரு நிச்சயதார்த்த மோதிரத்தை வாங்கினேன். 463 00:35:11,153 --> 00:35:12,487 - நான்நினைக்கிறேன்... - ரொம்ப பக்கத்துல. 464 00:35:12,487 --> 00:35:14,823 ...எனக்குள்ள உடைந்திருந்ததை நான் சரிசெய்துக் கொண்டு... 465 00:35:14,823 --> 00:35:17,367 - ஆம், நாம போறோம். - ...முழுமையாக அவளிடம் 466 00:35:17,367 --> 00:35:18,911 என்னைக் கொடுக்க முயற்சி செய்தேன், 467 00:35:19,536 --> 00:35:22,789 ஏனெனில் அவளுக்காக நான் மிக நல்லவனாக இருக்க விரும்பினேன். 468 00:35:28,420 --> 00:35:32,716 சரிதான், சிக்ஸ் தர்ட்டி. நீ ரெடியா? போகலாம். வா. 469 00:35:34,301 --> 00:35:36,887 ஆனால், எப்போதும் போலவே, அவள் என்னை ஆச்சரியப்படுத்தினாள். 470 00:35:37,471 --> 00:35:40,474 அவள் என்னுடைய மோசமான குணங்களை கண்டிருந்தாலும் என்னை நேசிக்கிறாள். 471 00:35:41,433 --> 00:35:44,228 திருமணம், மற்றும் அந்த கலாச்சார முறைகள், 472 00:35:45,229 --> 00:35:47,773 அவையெல்லாம் எங்களுக்கு சரிப்படவில்லை, ஆனாலும் நாங்கள் பிணைந்துள்ளோம். 473 00:36:02,120 --> 00:36:03,956 நாங்கள் ஒருவரோடு ஒருவர் பிணைந்துள்ளோம். 474 00:36:05,332 --> 00:36:07,960 அதுதானே இந்த அண்டத்தின் சாரம், அப்படித்தானே நீங்கள் சொல்வீர்கள்? 475 00:36:22,349 --> 00:36:23,433 அன்புள்ள கெல்வின், 476 00:36:24,351 --> 00:36:26,019 உங்களைப் போல் உறுதியாக இருக்கும் ஒருவருக்கு, உங்களைப் போலவே நேசிக்க ஒருவர் கிடைத்துள்ளபோது, 477 00:36:26,019 --> 00:36:30,440 உங்களுக்கு அற்புதங்களில் நம்பிக்கையில்லை என்று எவ்வாறு கூறுகிறீர்கள்? 478 00:36:31,149 --> 00:36:33,610 உங்களுடைய சித்தாந்தத்தை நீங்களை பொய் என நிரூபித்துவிட்டதுப் போல் எனக்குத் தோன்றுகிறது. 479 00:36:35,195 --> 00:36:36,697 எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. 480 00:36:37,781 --> 00:36:41,118 என் தந்தையுடன் கலிஃபோர்னியாவிற்கு திரும்பிப் போக என் குடும்பம் தயாராக உள்ளது, 481 00:36:41,118 --> 00:36:43,036 ஆதனால், ஒருவேளை நாம் நேரில் கொண்டாடலாம். 482 00:36:47,916 --> 00:36:49,877 வாப்பா. ஹே, வா. 483 00:36:51,003 --> 00:36:52,796 சிக்ஸ் தர்ட்டி, பரவாயில்லை. 484 00:36:53,505 --> 00:36:57,426 ஹே சிக்ஸ் தர்ட்டி, வா. ஹே, வா போகலாம். 485 00:37:18,447 --> 00:37:20,866 இப்போது டாக்டர் ஏவன்ஸுக்கு வந்த தபால்களை நான் என்ன செய்ய வேண்டும்? 486 00:37:35,255 --> 00:37:37,299 பேபி, உனக்கு ஏதோ வந்துள்ளது. 487 00:37:41,678 --> 00:37:46,141 அனுப்புனரிடம் மீண்டும் சேர்த்துவிடவும் 488 00:37:56,610 --> 00:37:58,612 அம்மா! அவர் வந்துட்டார்! அவர் வந்துட்டார்! 489 00:38:01,198 --> 00:38:02,658 - திரு. வேக்லி. - ஹலோ. 490 00:38:04,034 --> 00:38:07,204 நாங்கள் மோடெஸ்டோவில் உள்ள பாய்ஸ் விடுதியை அழைத்தோம், அடுத்த வாரம் அவர்களை காணச் செல்கிறோம். 491 00:38:07,204 --> 00:38:08,288 உங்களால் நம்ப முடிகிறதா? 492 00:38:09,706 --> 00:38:11,416 ஹலோ. உங்களை மீண்டும் சந்திப்பதில் சந்தோஷம். 493 00:38:12,000 --> 00:38:16,046 அடடே. நீங்கதான் கெல்வினின் எலிசபெத்ன்னு எனக்குத் தெரியாமப் போச்சு. 494 00:38:17,798 --> 00:38:21,760 நம்பவே முடியல. அவர் எனக்கு எழுதிய கடிதங்களை நான் கையோட கொண்டு வந்திருக்கேன். 495 00:38:21,760 --> 00:38:22,803 நன்றி. 496 00:38:23,929 --> 00:38:24,930 என்னுடன் வாங்க. 497 00:38:32,479 --> 00:38:34,565 எனவே, உங்கள் திட்டம் என்ன? 498 00:38:35,148 --> 00:38:38,318 உண்மையில், கெல்வினின் வரலாறு பத்திய இந்த விஷயமெல்லாம், 499 00:38:38,318 --> 00:38:40,195 அவருடைய கடந்தகாலத்தை துளைச்சு எடுத்து... 500 00:38:41,196 --> 00:38:42,990 மேட் கிட்டேர்ந்து நான் பதில்களை மறைக்கவே மாட்டேன், 501 00:38:42,990 --> 00:38:47,286 ஆனால் என்னால் நம்ப முடியாதவர்களை அவள் வாழ்க்கையில் அறிமுகப்படுத்த விரும்பல. 502 00:38:49,246 --> 00:38:52,457 எனக்குப் புரியுது. நீங்க அறியப்படாத மாறிகளைப் பத்தி பயப்படுறீங்க. 503 00:38:53,625 --> 00:38:56,211 கெல்வின் உங்களை வெகுவா பாதிச்சிருக்கார், இல்லையா? 504 00:38:56,211 --> 00:38:59,840 - அல்லது நான்தான் அவரை பாதிச்சேனோ. - இப்போ பலதும் புரியுது. 505 00:39:02,009 --> 00:39:05,304 உண்மையில், நாங்க இருவருமே, ஒருவரை ஒருவர் இன்னும் நல்லவங்களா மாத்தினோம். 506 00:39:08,473 --> 00:39:12,227 எனவே ஒரு பாதிரியாரும் ஒரு கெமிஸ்ட்டும். 507 00:39:12,853 --> 00:39:14,688 உங்க இருவரையும் எது ஒண்ணு சேர்த்துன்னு நினைக்கிறீங்க? 508 00:39:15,314 --> 00:39:16,690 நாம் அறிந்திருப்பது கொஞ்சம்தான்னு எங்க ரெண்டு பேருக்குமே தெரியும் 509 00:39:16,690 --> 00:39:18,483 மேலும், பதில் சொல்வதைவிட, நாங்க கேள்விகள் கேட்பதில் ஆர்வமா இருந்தோம். 510 00:39:20,110 --> 00:39:21,361 நீங்க ரெண்டு பேரும் எப்படி? 511 00:39:22,863 --> 00:39:26,783 நாங்க இருவரும் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வச்சோம்னு நினைக்கிறேன். 512 00:39:27,451 --> 00:39:29,494 உங்க வாயிலிருந்து அந்த வார்த்தை வருவது வேடிக்கையாதான் இருக்கு. 513 00:39:29,494 --> 00:39:30,537 ஏன் அப்படி? 514 00:39:31,538 --> 00:39:34,208 மதத்துக்கு அடிப்படையும் நம்பிக்கைதான்னு உங்களுக்குத் தெரியுமா? 515 00:39:34,208 --> 00:39:36,710 அதோடு, நம்பிக்கைக்கு மதம் அடிப்படையாக இருப்பதில்லைன்னு உங்களுக்குத் தெரியுமில்லையா? 516 00:39:39,171 --> 00:39:42,799 ஆம், நிச்சயமா. நீங்க இருவரும் கச்சிதமா ஒருவருக்கு ஒருவர் பொருத்தமா இருக்கீங்க. 517 00:39:47,054 --> 00:39:48,722 எனக்கு அவரைத் தெரிஞ்சது ரொம்ப குறுகிய காலத்துக்குத்தான். 518 00:39:50,599 --> 00:39:51,558 இல்லை, அப்படியில்லை. 519 00:39:58,690 --> 00:40:01,068 {\an8}செய்ன்ட் லூக்ஸ் பாய்ஸ் ஹோம் 520 00:40:03,445 --> 00:40:04,905 இறைவன் பார்த்துக்கொள்வார் 521 00:40:12,454 --> 00:40:15,040 நம் எதிர்பார்ப்புகளை குறைப்பதுன்னா என்னன்னு உங்களுக்குத் தெரியுமா? 522 00:40:15,040 --> 00:40:16,124 அவற்றை அளவிடுவது? 523 00:40:16,750 --> 00:40:21,672 கிட்டத்தட்ட. அதாவது, நாம வேண்டியது கிடைக்காம போனா, அதுக்காக குறைத்துக்கொள்வது. 524 00:40:21,672 --> 00:40:23,674 சரி, நான் குறைத்துக்கொள்கிறேன். 525 00:40:25,509 --> 00:40:29,972 இதிலிருந்து என்ன விளைவு வந்தாலும் சரி, நானும் உன் அப்பாவும் உன்னை நேசிக்கிறோம். 526 00:40:29,972 --> 00:40:32,182 அம்மா, நீங்க எப்போதும்தான் அதைச் சொல்றீங்க. 527 00:40:32,683 --> 00:40:35,269 ஆனால் அப்பா என்னை சந்திச்சதேயில்லயே, அவர் எப்படி என்னை நேசிக்க முடியும்? 528 00:40:36,103 --> 00:40:40,274 ஏன்னா, மேடலைன் ஏவன்ஸ் ஸாட், சில விஷயங்கள, புள்ளிவிவரத்துடன் நிரூபிக்க முடியாது. 529 00:40:49,449 --> 00:40:51,159 நான் எப்படி உங்களுக்கு உதவ முடியும், திருமதி. ஸாட்? 530 00:40:51,952 --> 00:40:56,415 மிஸ் ஸாட், திருமதி. ஸாட் இல்ல. என் தாயும் தந்தையும் திருமணம் செய்யவில்லை. 531 00:40:58,125 --> 00:41:00,252 இங்கே கெல்வின் ஏவன்ஸ்னு ஒரு பையன் இருந்தான். 532 00:41:01,670 --> 00:41:03,046 அவர்தான் என் தந்தை. 533 00:41:04,006 --> 00:41:07,384 உங்க அப்பாவிற்கு நீ இன்னிக்கு இங்கே வந்திருக்கன்னு தெரியுமா? 534 00:41:07,384 --> 00:41:08,927 அவர் காலமாகிவிட்டார். 535 00:41:10,804 --> 00:41:14,099 அப்படியா. சரி, அதைக் கேட்க ரொம்ப வருத்தமா இருக்கு. 536 00:41:14,850 --> 00:41:16,768 இந்த ஸ்தாபனத்திலிருந்து கிடைத்த அவருடைய சொந்த பொருட்களில் 537 00:41:16,768 --> 00:41:19,646 என் மகள் பல குறைகளை கண்டாள். 538 00:41:26,695 --> 00:41:28,280 அந்தப் பெயர் எனக்கு நினைவில்லையே. 539 00:41:29,198 --> 00:41:34,161 இங்கே ஏதாவது செயல்முறை இருக்கணுமே. நீங்கள் மேற்கோள் காட்ட, பதிவுகளோ, கோப்புகளோ. 540 00:41:34,161 --> 00:41:37,039 தேடிப் பார்க்கிறேன். உன் அப்பா இங்கே எந்த வருடம் இருந்தார்னு சொன்ன? 541 00:41:37,664 --> 00:41:42,211 கிட்டத்தட்ட 1921-ல் இருந்து 1939 வரை, சில வருடங்கள் முன்னப்பின்ன இருக்கலாம். 542 00:41:44,421 --> 00:41:45,714 தீ சம்பவத்துக்கு முன்னாடி. 543 00:41:46,924 --> 00:41:52,471 எங்களுடைய மிகப் பழமையான பதிவுகள் எல்லாம் எரிஞ்சுப் போச்சு, மன்னிக்கணும். 544 00:41:53,430 --> 00:41:55,349 உங்களுக்கு அவரை உறுதியா நினைவில்லையா? 545 00:41:56,099 --> 00:42:00,270 அவருக்கு அறிவியலும் புத்தகங்களும் விருப்பம். புத்திசாலி, மற்றும் வேகமாக ஓடுவார். 546 00:42:00,270 --> 00:42:04,274 நான் ஒன்று சொல்லலாமா நீங்க தேடுவதைக் கிடைக்கக் கோரி 547 00:42:04,858 --> 00:42:06,985 பரலோகப் பிதாவிடம் மன்றாடுங்களேன்? 548 00:42:09,446 --> 00:42:13,200 மேட். என்னை மன்னிச்சிடு, பன்னி. 549 00:42:13,200 --> 00:42:18,372 - பன்னி, இது ரொம்ப வருத்தமாதான் இருக்கு... - எனக்கு இது புரியல! அவர் சொல்வது பொய்! 550 00:42:18,372 --> 00:42:19,456 மேட். 551 00:42:50,362 --> 00:42:51,363 பன்னி. 552 00:42:52,322 --> 00:42:53,991 இன்னொரு முட்டுக்கட்டையை என்னால் தாங்க முடியாது. 553 00:42:54,867 --> 00:42:56,994 - மன்னிச்சிடு, பன்னி. நான்... - அவர் இங்கே தான் இருந்தார்னு எனக்குத் தெரியும். 554 00:42:56,994 --> 00:42:58,704 ஏதாவது ஆதாரம் இருக்கணும். 555 00:43:00,372 --> 00:43:01,915 சரிதான். நான் உனக்கு உதவறேன். 556 00:43:28,817 --> 00:43:29,818 அம்மா, பாருங்க. 557 00:43:33,655 --> 00:43:35,991 சார்ல்ஸ் டிக்கன்ஸ் தலைப்பு "கிரேட் எக்ஸ்பெக்டேஷன்ஸ்" 558 00:43:35,991 --> 00:43:37,492 இரவல் எடுத்தவரின் பெயர் கெல்வின் ஏவன்ஸ் 559 00:43:43,874 --> 00:43:47,336 {\an8}இந்த புத்தகத்தை நன்கொடையாகக் கொடுத்தது த ரெம்சன் ஃபௌண்டேஷன் 560 00:43:49,463 --> 00:43:50,422 அது என்னது? 561 00:43:51,798 --> 00:43:54,927 ஒரு துப்பு. நீ சொல்வது சரிதான். 562 00:43:55,928 --> 00:44:00,557 {\an8}ரெம்சன் ஃபௌண்டேஷன் 563 00:44:05,312 --> 00:44:07,272 - நான் வெளியே போறேன். - அப்போ, குட் நைட். 564 00:44:07,272 --> 00:44:09,066 - ரொம்ப தாமதாமா இருக்காதே. - சரி. 565 00:44:11,109 --> 00:44:17,074 ஸயன்டிஃபிக் அமெரிக்கன் 566 00:45:13,005 --> 00:45:15,007 தமிழாக்கம் அகிலா குமார்